சாதி பற்றிய பல்வேறு விளக்கங்கள் தேடல்- ஒலி வடிவில்

இந்த ஆதாரங்கள் பூமியின் பிறப்பு மற்றும் மனிதகுல பரிணாம வளர்ச்சி குறித்த அறிவியல் மற்றும் சமூகவியல் பார்வையை வழங்குகின்றன. பல
கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பூமி, எரியும் பந்திலிருந்து குளிர்ந்து உயிரினங்கள் வாழத்தகுந்த இடமாக மாறிய வரலாற்றை இவை விளக்குகின்றன. கடலில் தோன்றிய ஒரு செல் உயிரியிலிருந்து தொடங்கி,
டார்வினின் பரிணாமக் கொள்கை அடிப்படையில் மனிதன் எவ்வாறு உருவானான் என்பதை இக்கட்டுரை விவரிக்கிறது. ஆப்பிரிக்காவில் தோன்றிய ஹோமோசெபியன்ஸ் இனம் உலகம் முழுவதும் இடம்பெயர்ந்து பரவிய விதம் மற்றும் மனிதர்களிடையே

நிலவும் உடற்கூறியல் ஒற்றுமைகள் இதில் வலியுறுத்தப்படுகின்றன. இனம், மொழி மற்றும் சாதி கடந்து ஒட்டுமொத்த மனிதகுலமும் ஒரே தொப்புள்கொடி உறவு என்பதை ஆதாரங்களுடன் இப்பாடம் நிறுவுகிறது. இறுதியில், மனிதர்கள் தங்களின் அறிவுத்திறனால் விலங்குகளிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதையும், அவர்களின் இடம்பெயர்வு வரலாற்றையும் இத்தொகுப்பு தெளிவுபடுத்துகிறது.

ஒலி ஒளி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

...

பூமியின் தோற்றம் மற்றும் மனிதகுலப் பரிணாம வளர்ச்சி வரலாறு

நாம் நமது சமுகத்தைப் புரிந்துக் கொள்ள, நம் சமூகறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவை வெறும் யூகங்களாக

இப்பொழுதுள்ள ஆபிரிக்க நீக்ரோக்கள், ஐரோப்பிய வெள்ளையர்; வட சீனவிலுள்ள ‘மஞ்சள்’ நிற மக்கள், மற்றும் உலகெங்கும் சிதறுண்டுள்ள பல்வேறு வகையினர் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதை அறியக் கூடியவாறு அந்நகர்வுகள் பற்றி ஆராய்ந்தால் பல குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். அதனை இனங்கள் பற்றியப் பகுதியில் சற்று விளக்கப்பட்டுள்ளது. இன்று இனவாதம் பற்றி தெளிவடைய அப்பகுதி பயனுள்ளவையாக இருக்கும். ‘இனங்களும் இனக் கொள்கையும்’-பேராசிரியர் டாக்டர். மிஹயீல் நைஸ்தூர்ஹ் (02) மனித குலம் தோற்றதிலிருந்து வளர்ச்சிவரை விளக்கியுள்ளார்.

உயிரினங்களின் தோற்றம் பற்றி சார்லஸ் டார்வின்

  • “மனிதகுல வரலாற்றுப் பற்றி வருங்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தனது முடிவுகளை மேலும் தெளிவுபடுத்தும்”, என்றார். ஆனால் டார்வின் மனிதன் குரங்கிலிருந்துதான் பிறந்தான் எனக் கூறியதாக அவசொல் பெற்றார்.

பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டைத் தவறாக புரிந்து கொள்பவர்களே இதுபோல் அவர் மீது குற்றம் சுமத்துகின்றனர். நாம் குரங்கிலிருந்து பிறந்தவர்கள் அல்ல, குரங்கு நம் மூதாதையர் என்றால் ஏன் இன்னும் குரங்குகள் குரங்குகளாகவே இருக்கின்றன? அதாவது நாமும் நம் கொள்ளுப்பாட்டனும் எவ்வாறு சமகாலத்தவராக இருக்கமுடியும்? குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு தாத்தா, பேரன் உறவு அல்ல, அது பங்காளி உறவு. அதாவது சித்தப்பா மகன், பெரியப்பா மகன் உறவாகும். ஒரே வம்ச விருத்தியில் பல கிளைகளில் இரு கிளைகள் குரங்குகளும் ஆதி மனிதர்களும் ஆகும்”.(01)

என்று ”மூதாதையரைத் தேடி” என்ற நூலின் ஆசிரியர் ஜெயகரன் விளக்குகிறார். இதனை விரிவாக புரிந்துக் கொள்ள அண்மை ஆய்வுகள் பல கண்டுபிடிப்புகள் வெளி வந்துள்ளன. அதனை சிறிது பார்ப்போம்.

சிம்பன்சி இனத்தின் மரபணுவை (டி.என்.ஏ) எடுத்து ஆய்வு செய்ததில் அதன் பண்புகள் மனித இனத்துடன் 98% ஒத்து உள்ளதாம்! மனிதர்களின் மூதாதையர்கள் ஹோமோசேபியன் என்றழைக்கப் படுகின்றனர், இவர்கள் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றியவர்கள் ஆவர். பின்னர் உலகின் பிறப் பகுதிகளுக்கும் பரவினார்கள். இந்த மனித கூட்டம் சுமார் 7 முதல் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தங்களின் வாழ்வியல் தேவைக்காக கற்கருவிகளை பயன்படுத்தினர். அதன் அடிப்படையில் அந்த மனிதர்களின் காலங்களை கணிப்பதில் அக்கால கருவிகள் இன்றும் சாட்சியம் அளிக்கின்றன.

தொடக்ககால கற்கருவிகள் சேர்க்கை, ஓல்டோவான் தொழில்நுட்பம், கீழ் (Lower), இடை (Middle), மேல் (Upper) பழங்கற்கால (Palaeolithic) பண்பாடுகள் என்றும் இடைக்கற்காலப் (Mesolithic) பண்பாடுகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. மனித மூதாதையர்களால் உருவாக்கப்பட்டத் தொடக்ககாலக் கற்கருவிகள் கென்யாவின் லோமிக்குவி என்ற இடத்தில் கிடைத்துள்ளன. இவை 3.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. ஓல்டோவான் கருவிகள் ஆப்பிரிக்காவின் ஓல்டுவாய் பள்ளத்தாக்கில் கிடைத்துள்ளன. இவை 2 முதல் 2.6 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை. மனித மூதாதையர்களின் பண்பாடு கீழ்ப் பழங்காலப் பண்பாடு என்று குறிக்கப்படுகிறது. இவர்கள் பெரிய கற்களைச் செதில்களாகச் சீவி கைக்கோடரி உள்ளிட்ட பல வகைக் கருவிகளை வடிவமைத்தார்கள். இந்தக் கருவிகள் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவை சுமார் 1.8 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று கணக்கிடப் பட்டுள்ளன. வேளாண்மை, விலங்குகளைப் பழக்குதல் ஆகியவை புதிய கற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இது வரலாற்றில் ஒருமுக்கியமான கட்டமாகும்.

எகிப்து மற்றும் மெஸபடோமியா, சிந்துவெளி, கங்கை சமவெளி, சீனாவின் செழுமையான பகுதிகள் ஆகியனவற்றில்புதிய கற்காலத்துக்கான தொடக்க காலச் சான்றுகள் காணப்படுகின்றன. சுமார் கி.மு. (பொ.ஆ.மு.) 10,000 லிருந்து கி.மு. (பொ.ஆ.மு.) 5,000 குள் இப்பகுதிகளில் வேளாண்மை நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம், ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி பிறைநிலவின் வடிவத்தில் உள்ளது. இது பிறை நிலப்பகுதி (Fertile Crescent Region) எனப்படுகிறது. கற்கருவிகள் செய்வதற்கும்அவற்றை வழவழப்பாகவும் மெருகூட்டவும் புதிய நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதால் இது புதியகற்காலம் என்று அழைக்கப்படுகிறது. புதியகற்கால மக்கள், பழங்கற்காலச் செதுக்கப்பட்ட கற்கருவிளையும் பயன்படுத்தினர். இடைக் கற்காலம் வரையிலும் மக்கள் தாம் நிலைத்திருப்பதற்காக வேட்டையாடுவதையும் உணவு சேகரிப்பதையும்தான் நம்பியிருந்தார்கள். வேட்டையிலும் உணவு சேகரிப்பிலும் மிகவும் குறைந்த அளவு உணவுதான் கிடைத்தது. இதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் மிகச் சிறிய எண்ணிக்கையிலான மக்கள்தான் வாழ முடிந்தது.

பயிர் விளைவித்தலும். விலங்குகளைப் பழக்கப்படுத்துதலும் அறிமுகமானதற்கு பிறகு ஏராளமான அளவில் தானியம் உற்பத்திக்கும் மற்றும் விலங்குகளை வளர்க்கவும் உணவை உற்பத்தி செய்வதற்கும் இட்டுச் சென்றது. ஆறுகள் படியவைத்த வளமான வண்டல்மண், வேளாண்மையை அதிகரிக்க உதவியது. இது சிறந்த இயற்கைத் தகவமைப்பாக இருந்ததால், மக்கள் நதிக்கரைகளில் வாழ்வதை விரும்பினர். இப்புதிய செயல்பாடுகள் உணவு உபரிக்கு இட்டுச் சென்றது. இந்த உணவு உபரிதான் பண்டைய நாகரிகங்களின் உருவாக்கத்துக்கு ஒரு முக்கியமான கூறாகும். இக்காலத்தில் நிரந்தரமான வீடுகள் கட்டப்பட்டன. பெரிய ஊர்கள் உருவாகின. எனவே, இவை புதிய கற்காலப் புரட்சி என்றழைக்கப்படுகிறது.

நமது தேடலுக்கு இன்றைய விஞ்ஞான வளர்ச்சிப் பெரும் துணைப் புரிகின்றது. உயிரியல் பரிணாமம் குறித்து டார்வினின் இரண்டு நூல்கள் எழுதியுள்ளார் அவை."உயிரினங்களின் தோற்றம் குறித்து" (On the Origin of Species) என்ற நூலை 1859லும், "மனிதனின் தோற்றம்" (The Descent of Man)”(03) என்ற நூலை 1871லும் வெளியிட்டார்.

கடந்த காலத்தில் வாழ்ந்த விலங்குகள், தாவரங்களின் எச்சங்கள், தடங்கள், அடையாளங்கள் அப்படியே பாதுகாக்கப்பட்டிருப்பது புதைபடிவங்கள் (fossils) எனப்படும். கனிமமாக்கல் (Mineralization) காரணமாக விலங்கின் எலும்புகள் அப்படியே பாதுகாக்கப்பட்டுவிடும். புதைபடிவுகள் குறித்த ஆய்வு புதைபடிவ ஆய்வியல் (Palaeontology) என்று அழைக்கப்படுகிறது(03).

தொடக்ககால எழுத்துக்களை வாசிக்கத் தொடங்கியமை. பொ.ஆ.பி 1471-ல் இத்தாலியில் அமைக்கப்பட்ட கேபிடோலைன் அருங்காட்சியகம்தான் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. மிகப் பழமையான அருங்காட்சியமாக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் உள்ள ஆஷ்மோலியன் அருங்காட்சியகமே. இது பொ.ஆ.பி 1677- ல் உருவாக்கப்பட்டதாகும் இவை நமது சமூக அறிவை அறிவியல் பூர்வமாக அணுகப் பயன்படும். ஆகையால் ஒவ்வொரு அறிவுத்துறையையும் நாம் அறிந்து புரிந்து இங்கே கட்டப்பட்டுள்ள சமுக முடிச்சை அவிழ்க்க எளிதாக இருக்கும்.

சாதி வரலாற்று நூல்கள் இருபதாம் நூற்றாண்டில் மத்திய காலம் வரை தொடர்ந்தபடி இருந்தன. சாதிய வரலாற்று நூல்கள் எண்ணிறந்தவை அவை கண்ணில் படுபவை சில தான்(36).

இந்தியாவில் ஆட்சி புரிந்த முந்தைய சமூக அமைப்புகளில் சமூகக் குழுக்களின் மோதல்களை தீர்க்க அரசன் இருந்தான் அவனுக்கு தன் மக்களை பற்றி ஓரளவிலான வளமையும் தொடர்பும் தீர்ப்பளிப்பதற்கான அனுபவ ஆதாரங்களும் இருந்தன. ஆனால் காலனிய ஆட்சியில் அதிகாரம் முன் தொடர்ச்சியற்றதாகவும் இங்குள்ள முரண்களை புரிந்துக் கொள்ளும் வல்லமை அற்றதாக இருந்தது. அதன் காரணமாக நூல் ஆதாரங்களை சார்ந்து நிற்க வேண்டிய தேவை இருந்தது. அந்த நூல்கள் முழுமையாக சனாதன சமஸ்கிருத அடிப்படையிலானவையாகவும், அந்த சமூக ஒழுங்கின் முழுமையை புரிந்து கொள்ளாத, காலத்தால் பழமை வாய்ந்ததென, அந்தக் காலகட்டத்தின் சமூக அடையாளமாக சமூக உறவுகளாக சாதி அடையாளமாக அதன் அடிநாதமாக மதரீதியான தர்மநூல்களாக இவை காலனி ஆட்சியின் தூண்களாகளாயின. தங்களின் ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்து நடத்த அவர்கள் எதை எதையோ தேடி ஆவணப்படுத்தி இவைதான் இந்தியா என்று பிரகடணம் படுத்தியுள்ளனர்.

விசித்திரமான சாதி நிறுவனம் இந்தியாவில் இருந்த ஆங்கிலேயே அதிகாரிகள் தங்கள் ஆய்வுகளை முன் வைத்தனர். எலியாட், டால்டன் ஷெர்ரிங், நெஸ்பீல்டு போன்ற சில அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டி தரவுகளை சேகரித்து தமது விமர்சனங்களுடன் அவற்றையும் வெளியிட்டனர். சர் ஹெர்பெர்ட் ரைஸ்லின் வழிகாட்டுதலின் கீழ் 1901 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமை அடைந்தது. 1891 ஆம் ஆண்டின் வகைப்பாட்டை, "தற்காலத்தில் சமூக முன்னுரிமை உள்ளூர் பொதுக் கருத்தாக அங்கீகரிக்கப் பெற்றிருப்பது சில குறிப்பிட்ட சாதிகளை இந்து அமைப்பு முறையில் உள்ள பிற சாதிகளின் நவீன பிரதிநிதிகளாக மாற்றுவதில் வெளிப்படுத்தியுள்ளார்". என்கிறார் ஜி.எஸ்.குரியே (35).

இனவாதம் பற்றி ரிஸ்லேயின் நூலுடன் ஜி.எஸ். குரியேயையும் கணக்கில் கொண்டாலே இவர்கள் மக்களை எப்படி சாதி என்றசாக்கடையில் மக்கள் சமூத்திரத்தை மூழ்கடித்துள்ளனர் என்பதனை புரிந்துக் கொள்ள முடியும். ஆக அன்று இருந்த சாதிய அடையாளங்கள் காலத்தால் மறைந்திருக்கும் இவர்கள் சாதிகளாக பிரித்து அடையாளப்படுத்தாமல் இருந்திருந்தால் என்பதே அவர்களின் கூற்றும்.

சாதிய சமூகத்தில் ஒரு நபரிடம் அவர் சாதியை பற்றி வினவும் பொழுது அவர் தனது சாதி, உபசாதி, புறமணமுறை, அனலோமாகுழு ஆகியவற்றை கூறலாம். தமது சாதிப் பெயரை காட்டிலும் சிறந்த பட்ட பெயர்களை குறிப்பிடலாம். தனது தொழில் அல்லது தான் வாழும் பகுதி பெயரை குறிப்பிடலாம். இவ்வாறு குழப்பமான பதில் கிடைத்த போதிலும் ரிஸ்லி இந்த வழிமுறையை தேர்வு செய்து மக்களை சாதியாக பிரிவினை செய்த கோட்பாடாகும் அவரின் இனவியல் கோட்பாடாகும்.

அன்றைய சாதி கணக்கெடுப்பில் ஏதாவது ஒரு சாதியில் தன்னை அய்க்கியப்படுத்திக் கொள்ளவே சாதி கணக்கெடுப்பு வழிவகை செய்தது. பல்வேறு சாதிகளை சேர்ந்தவர்களும் தமது தகுதியை உயர்த்திக் கொள்ள இவ்வாய்ப்பை பயன்படுத்த முயன்றனர். தமது உறுப்பினர்களை திரட்டி மாநாடு நடத்தி அவர்களுக்கு கௌரவம் தரத்தக்க வகையில் தகுதியை உயர்த்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான குழுக்களை அமைத்தனர். எதிர்குற்றச்சாட்டுகளும் முழு வீச்சில் எழுந்தன. சாதி அடுக்கில் உயர்சாதியினை தவிர பிற சாதித் தலைவர்கள் மக்கள் தொகை கணக்கு எடுப்பை வாய்ப்பாக கருதி உயர்சாதியினரால் மறுக்கப்பட்டு வந்த சமூக அங்கீகாரத்தை பெறுவதற்கான ஒன்றாக அதை பயன்படுத்தினர். சென்னை மாகாண மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி 1911-ஆம் ஆண்டு இவ்வாறு எழுதினார் என்பதனை ஜி.எஸ்.குரியே குறிப்பிடுகிறார், "கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சில அம்சங்களில் சாதி உணர்வுகள் பெருமளவு மேலோங்கி வருவதை காண முடிகிறது. சாதிய சபைகள் உருவாகியுள்ளன ஒவ்வொன்றும் தமது சமூகக் குழுவில் ஏராளமான மரியாதையை உயர்த்தி பிடிப்பதில் கவனம் செலுத்துகின்றன". (35). இவ்வாறாக மக்கள் சாதி சங்கங்கள் பின் தமக்கான சாதியாக திரட்டப்பட்டனர்.

மேலும் குரியே குறிப்பிடுகிறார், “1872- ஆம் ஆண்டு முதல் அடுத்தடுத்து நடைபெற்று வந்த மக்கள் தொகை கணக்கெடுப்புகளில் சாதி உணர்வு மேலோங்கியதை இதன் ஒட்டுமொத்த விளைவுகளை காணலாம். பொதுசட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் சில நிர்வாக நடவடிக்கைகளின் மூலமும் சாதிகளுக்கு இடையில் நிலவிய சமத்துவமின்மை குறிப்பாக கீழ்சாதியினர் மீது காட்டப்பட்ட பாரபட்சமாக அகற்றப்பட்டன. இருந்தும் நாமெல்லாம் இந்துக்கள் என்று பேசிக் கொண்டாலும் கோயில்களில் இந்துக்கள் அனைவருக்குமான சமத்துவம் கொண்டு வரமுடியவில்லை இதில் அரசு நிதி அளிக்கும் கோயில்களும் விதிவிலக்கு அல்ல” (35).

சமத்துவ சட்டம் இயற்றப்பட்ட அரசாலே கடைநிலை சாதிகளின் உரிமைநிலைநாட்ட முற்படுகையில் அரசின் பாராமுகமாக உள்ளது. தனிநபர்கள் தாங்கள் இந்த சாதியை சேர்ந்தவர்கள் என்று பழைய உணர்வை குறைத்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நடைமுறைக்கு வரவில்லை. சாதிய பழக்கவழக்கங்களை மாற்ற அரசாங்கத்தால் இயலவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு போன்றவை சாதியக் குழுக்களின் ஒருங்கிணைப்புக்கு ஊக்கமளித்தது. தொழில் ரீதியாக சாதிகளை வகைப்படுத்துவதற்கு எதிராக பரந்தபட்டு கிளர்ச்சி ஏற்பட்டது. இச் சாதிகள் ஆங்கிலேய அரசாங்கத்தால் பெருமளவில் கட்டமைக்கப்பட்ட தனித்த சாதிகளாக போற்றிப் பாதுகாக்கப்பட்டன. நிலபத்திரங்கள் அரசு ஆவணங்கள் பழைய சாதி இறுக்கம் மேலும் கெட்டிபடுத்தும் விதத்தில் அமைந்திருந்தன(35).

“முன்னர் ஒருவரது உண்மையான சாதியை கண்டறிய இயலாத நிலையில் மரபுவழி தொழிலுடன் அவரை அடையாளப்படுத்தி சாதியை கண்டறிந்தோம். சாதிய முறையையும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளின் மீதான அதன் தாக்கத்தையும் நாம் கண்டிருக்கிறோம். அதே சமயம் நாம் கண்டிருக்கும் அமைப்பு முறைக்கு நாமே பெருமளவு பொறுப்பாவோம். நாம் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் சோனார் லோகார் போன்ற சாதியினர் காணாமல் போயிருப்பார்கள். அடையாளப் படுத்துவதிலும் வகைப்படுத்துவதிலும் அரசு காட்டிய ஆர்வம்சாதி முறையை உறுதிப்படுத்துவதற்கு இட்டுச் சென்றது(35)” என்கிறார். ஆங்கிலேயருக்கு முன் அவற்றில் பிரபத்துவ சாதிகளை தவிர மற்ற உறுதிப்படுத்தப்படாத நெகிழ்வுத் தன்மையில்தான் சாதிகள் இருந்தன. அரசாங்கம் சாதியை புறக்கணித்திருந்தால் கீழ்சாதியினரிடையே முற்றிலும் மாறுபட்ட வேறொன்று அவை படிப்படியாக மாற்றி இருக்கலாம்”(35) என்கிறார் ஜி.எஸ். குரியே.

இங்கு அரசின் அதிகாரத்தால் இந்த சாதிப்பிரிவினை இருக்கம் பெற்றது. சாதி அரசின் அவசியமான உறுப்பாக மாறியது அவை மக்களை பிரித்து வைக்க காலனிய ஆட்சியாளர்களுக்கு தேவையாக இருந்தது. இதற்கான முழு தேவையும் அரசின் வர்க்க ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் பயன்பட்டது. இதில் மத நிறுவனங்களையோ மத தலைவர்களையோ ஏன் மத பூசாரிகளையோ (பிராமணர்களை) மட்டுமே குறை கூறுவது ஒடுக்குமுறை கருவியான அரசின் பணியை தன்மையை புரிந்து கொள்ளாமையே. அரசின் வர்க்க தன்மையும் அதற்கான பணியில் மத நிறுவனங்களின் பங்களிப்பையும் கணக்கில் கொண்டாலே விளங்கிக் கொள்ளலாம்.

இன்னும் சில போக்குகள்-

ஆங்கில ஆட்சியில் அரசு அலுவலர்களும் சட்டமன்ற பதவிகளும் பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாதோர் என்ற சண்டைசச்சரவுகள் மேல்நிலை வர்க்கதினரின் (சாதி அல்ல என்பதனைக் கவனத்தில் கொள்க) இடையில் காலனிய அரசு அதிகார கட்டமைப்பில் தத்தமக்குரிய பங்கேற்புகோருவதற்கான

வழிமுறைதான். இதில் எந்த சாதியும் முழுமையான பங்குதாரர்கள் அல்ல (வர்க்க புரிதல் அவசியம்). ஆனால் சாதியின் உச்சாணியில் உள்ளவர்களுக்கானதாக அவை அமைந்தது. இது வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கையின் இன்னொரு பரிணாமம். இதில் அன்று முதல் பயனை உய்தவர்கள் பிராமணர்களாக இருந்ததில் வியப்பில்லை அவர்கள் கல்வியில் முன்னிலையிலிருந்தனர்.

“1860 முதல் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட நவீன கல்வி நவீன பொருளாதாரம் நவீன அரசியல் நிறுவனங்கள் ஆகியவற்றின்முதற்பயனை பிராமணர்களே நுகர்ந்தனர். இங்கு அதற்குமுன் பிராமண சிந்தனைபோக்கும், நிலப்பிரபுத்துவ ஆதிக்கமும் இருந்தது. இங்கே பிராமணக் குடும்பங்கள், வேளாளர் நிலப்பிரபுத்துவதுடன் முரண்பாடு கொண்டிருந்தனர். நவீன கல்வி பயில்வதில் பிராமணர்களுக்கு அடுத்தநிலையில் இருந்த வேளாளர்கள் விரைவாக நலன் பெற்றனர். அப்போது காலனிய அரசு அதிகாரத்தின் இளையபங்குதாரர்களாக வேளாளர்கள் ஆவதில் பிராமணர்களுடன் முரண்பட்டனர். பணப்பயிர் பொருளாதாரத்தின் விளைவாக கவுண்டர், நாயுடு, நாடார், வன்னியர், செட்டியார் ஆகிய சாதிகளில் இருந்த பணக்கார விவசாயிகள், வட்டிமுதலாளியாக, ஆலைமுதலாளியாக வளர்ந்தனர். இத்தோற்றமானது, அதுவரை பிராமணர்கள் மட்டுமே செய்து வந்த வட்டிமுதலாளி, தரகுவணிகர், ஆலைமுதலாளி ஆகிய வர்க்கங்கள் இந்த சாதிகளுக்குள்ளும் தோன்றின. அந்த சாதிக்குள் இருந்த சிறுபான்மை இவ்வாறு புதிய வர்க்கமாக உருவெடுத்தனர். எனினும் இந்த புதிய வர்க்கம் தத்தம் பழைய சாதி அடையாளத்தை இழந்து விடவில்லை. அதற்கு மாறாக சாதியில் உள்ள பெரும்பான்மையான மக்களின் பலத்துடன் புதிய சாதிய கோரிக்கைகளை முன் வைத்தனர்.

புதிய பொருளாதார தகுதியுடன் புதியகலாச்சார தகுதியும் கொண்டு இந்தப் புதிய வர்க்கங்கள் தோன்றின, எனவே இது காலனிய அரசு அதிகார கட்டமைப்பில், அரசியல் பொருளாதார நிலைகளில் பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் கீழ் உள்ள பிராமண, நிலப்பிரபுத்துவ, தரகுவணிக, வட்டிமுதலாளிகளின் ஆலை முதலாளிகளின் நலன்களை முன்னிறுத்தும் வேலையாகும். இருந்தும் பிராமணர், பிராமணர் அல்லாதோர் என்ற தொடர் எதிர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது பல்வேறு சாதிகளில் இருந்து தோன்றிய பணக்கார விவசாயிகளும், முதலாளிகளும், படைப்பாளிகளும் பிராமண ஆதிக்கத்தை எதிர்க்க முனைந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே இத்தகைய எதிர்ப்பை காலனி ஆதிக்க ஆதரவு என்ற பரந்துபட்ட அடைப்புக்குள் காண வேண்டும்(38).

.


தொடர்புடைய கட்டுரைகள்:

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்