இருவேறு இந்தியா-சிபி.

 இந்தியாவின் நிலைமைகளைப் பற்றியும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியா வின் அனைத்து பில்லினியர்களின் சொத்துக் களின் மதிப்பைக் கூட்டினால், அத்தொகை இந்திய அரசு போடும் ஆண்டு பட்ஜெட்டை விட அதிகமானது.

ஆக்ஸ்ஃபாம் அறிக்கையின் அடிப்படையிலே குறிப்புகள் எழுதப் பட்டுள்ளதால் இந்த ஆக்ஸ்ஃபாம் அறிக்கையின் குறிக்கோள் புரிந்தே நாம் செயலாற்ற வேண்டியுள்ளது. ஆக்ஸ்ஃபாம் அறிக்கை அரசின் உண்மை முகத்தை சுட்டுக்காட்டி உள்ளது அதே வேளையில் அவை மக்களின் இந்த ஏற்ற தாழ்வுக்கு அரசின் கொள்கைதான் என்கிறது. இந்த NGO அமைப்பின் பணியானது அரசை குற்றம் சுமத்தி அமைப்புமுறையை காக்கவே செய்கிறது. உண்மையில் இதற்க்கு காரண்மான அரசமைப்பை தூக்கி எறிய சொல்கிறது மார்க்சிய-லெனினியம் ஆனால் இங்குள்ள திருதல்வாதிகளோ இங்கே இந்த அமைப்பு முறையை பைய பைய சோசலிசமாக மாற்றி விடுவதாக பேசிக் கொண்டுள்ளனர். குறுங்குழுவாதிகளாகி போன புரட்சியாளர் களோ தனித்தனியாகி ஆளுக்கு ஒரு கட்சி என்றாகி; யாருமே இந்த பிரச்சினைக்கு தலைமை தாங்க திறனற்று கிடக்கின்றனர்..... சிந்திப்போம் சரியான மார்க்சிய வழியில் பயணிக்க...

அதே போல இந்தியாவின் சொத்துமதிப்பு வரிசைப் பட்டியலில் முன்னணியில் இருக்கும் 1% பணக்கார இந்தியர்களிடம் இருக்கும் சொத்து, இந்தியாவில் ஏழ்மை நிலையில் இருக்கும் 70% மக்களின் சொத்துக்களை விட 4 மடங்கு அதிகமாக இருக்கிறது.

அதாவது சராசரியாக 80 கோடி மக்களின் சொத்துக்களுக்கு நிகரான சொத்தை விட 4 மடங்கு அதிகமான சொத்தை 1.2 கோடி பேர் வைத்துள்ளனர். இந்த மிகப்பெரும் இடைவெளி, இந்தியாவில் நிலவும் மிகப்பெரிய ஏற்றத் தாழ்வையும், அடித்தட்டு மக்கள் சுரண்டப்படும் அளவையும் பகிரங்கமாக கோடிட்டுக் காட்டுகிறது.

மேலும், இந்திய பில்லினியர்களில் முதல் 63 பேரின் மொத்த சொத்து மதிப்பானது, மத்திய அரசின் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொகையாகிய ரூ. 24,42,200 கோடியை விட அதிகம்.

இத்தகைய புள்ளிவிவரங்களோடு, நாளுக்கு நாள் பெருகிவரும் பொருளாதார ஏற்றத் தாழ்வைக் குறித்தும் பேசுகிறது அந்த அறிக்கை.

ஒரு பெரும் கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியின் ஒரு வருடச் சம்பளத்தை, வீட்டு வேலை செய்யும் ஒருபெண் தொழிலாளர் சம்பாதிக்க 22,277 ஆண்டுகள் தேவைப்படும் என்கிறது இந்த அறிக்கை.

இந்த அறிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அம்பலப்படும் இத்தகைய பொருளாதார ஏற்றத் தாழ்வையும், சுரண்டலையும் கண்டு வெறும் வியப்போடும், குழப்பத்தோடும் கடந்து செல்கிறோம்.

பணம் என்பது வெறுமனே அச்சிடப்படும் ஒரு பொருள் அல்ல. அது சமூகத்திற்கான உற்பத்தியில் பங்கேற்கும் ஒவ்வொருவரின் உழைப்பும் உருவாக்கும் செல்வத்திற்கான ஒரு மாற்றீடு. ஓரிடத்தில் பணம் குவிகிறது என்றால், அது மற்றொரு இடத்தில் இருந்து சுரண்டப்படுகிறது என்றுதானே பொருள். 12 மணிநேரத்திலிருந்து 15 மணிநேரம் வரை சராசரியாக உழைக்கும் நம்மை விடக் குறைவாக உழைக்கும் வெகுசிலரிடம் மட்டும் செல்வம் குவிவது எப்படி ?

உருவாக்கப்படும் வளங்கள் எல்லாம், பெரும்பான்மை மக்களின் உழைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவையே. அவர்கள் தங்களின் உழைப்பிற்குக் கொடுக்கப்படும் சொற்பக் கூலியைப் பெற்று, உழைப்பின் வியர்வை காய்வதற்குள் அதனை ஜி.எஸ்.டி.யாகவும், பெட்ரோல் விலை உயர்வாகவும், பேருந்து கட்டண உயர் வாகவும் பிடுங்கி கார்ப்பரேட்டுகளின் வசம் வரிச்சலுகைகளாக, மானியங்களாக ஒப்படைக்கிறது இந்த அரசு.

இது ஒரு புறமிருக்க., குறைந்தபட்ச கூலி, வேலை நிரந்தரம் போன்ற அடிப்படை உரிமைகளை உழைக்கும் மக்களிடமிருந்து சட்டங்கள் போட்டு பிடுங்கி வருகிறது மோடி அரசு. விவசாயிகளைப் பொருத்த வரையில், விளைபொருளுக்கு உரிய விலையை நிர்ணயிக்காமல், கொள்முதலை முறைப் படுத்தாமல் அவர்களது கோமணத்தையும் உருவிவிடுகிறது அரசு. இப்படி நம்மிடமி ருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் திருடப்படும் இந்த வளங்கள் அனைத்தும் தான் இந்தப் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்புகளாக உயர்ந்து நிற்கின்றன. ஏழைகள் மற்றும் நடுத்தரவர்க்கத்தின் சொத்துக்களை பறிக்கும் வேலையைத்தான் முதலாளிகள் செய்கிறார்கள். இதனை புள்ளி விவரங்களோடு எடுத்துச் சொல்லி யிருப்பது கம்யூனிஸ்ட்டுகள் அல்ல, முதலாளித்துவத்தை சீரமைத்து பாதுகாக்க நினைக்கும், ஆக்ஸ்ஃபாம் போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களே. (மூலம்செய்திகளேமாற்றம்என்னுடையவை).

மோடி பல நாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கிறார் இந்த ஏழைகளின் நிலை உயர என்ன செய்துள்ளர் என்று நினைக்கும் போதுதான் என் நண்பர் ஒருவருடன் நடந்த விவாதம் ஞாபகத்திற்கு வந்தது, வாங்கும் சக்தியில்லாத இந்த ஏழைகள் நாட்டிற்க்கு தேவையில்லை என்று. ”மோடியும் அல்லும் பகலும் அயறது பாடுப்படுவது சில பெரும் முதலாளிகளுக்காகதான்”. அந்த பெரு முதலாளிகளும் ஏகாதியபத்தியங்களின் வருகையும் அந்த பணம் புழங்கும் இந்தியாவை நோக்கிதான், இங்கே பசி பட்டினியை ஒழிக்க அரசிடமும் திட்டம் இல்லை வரும் வெளி நாட்டு நிறுவனங்களோ கொள்ளையை மட்டுமே கொள்கையாக ஓடோடி வந்துகொண்டிருக்கின்றன. இப்படி பட்ட இந்தியாவை சிறிது அறிதல் அவசியம் அன்றோ?

இரண்டு எதிரெதிர் துருவங்களில் நசிந்து கொண்டிருக்கும் நாடு இந்தியா. வளர்ச்சி, சாதனை என்று எழுப்பப்படும் கூச்சல்களுக்கிடையே பிளாட்பாரத்தில் வசிக்கும் மக்கள் – அவதியில் இருக்கும் குழந்தைகள்… என முரண்பாடுகள். எளிதில் குணப்படுத்தக் கூடிய வயிற்றுப் போக்கு போன்ற காரணங்களால் நமது நாட்டில், ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் மரிக்கின்றன. உயிர் பிழைப்பவரில் பாதிக் குழந்தைகள் போதிய ஊட்டச் சத்து இல்லாது வளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பவர்கள். பள்ளிக்கூடப் படிப்பைப் பாதியில் விட்டு வெளியேறும் மாணவர்கள் 40% பேர்.

இப்படியான புள்ளிவிவரங்கள் காட்டாற்று வெள்ளம்போல் பாயும். இந்த இழிவான நிலைக்குமுன்னால் வேறு எந்த நாடும் போட்டிக்கு நிற்க முடியாது.

27 கோடி இந்தியர்கள் இரவுச் சாப்பாடு இல்லாமல் உறங்கச் செல்கின்றனர் என்று டாக்டர் மால்கம் ஆதிசேஷையா பல்லாண்டுகளுக்கு முன் வேதனையோடு குறிப்பிட்டிருந்தார். இன்றோ 14 கோடி பேர் இரண்டு வேளை உணவில்லாமல் வாழ்ந்து வருகின்றனர் நவீன தாராளமயம் உறக்கமற்ற இரவுகளை அதிகரித்து உதவுகிறது. அதுவும் இரண்டு இந்தியாவுக்கும் பொது. ஒரு பக்கம் லாப வேட்கையோடும், மூலதனத்தைப் பெருக்கும் வெறியோடும் கண்ணாடி தம்ளர்களில் திரவத்தின் மேற்பரப்பில் ஐஸ் கட்டி கிளிங் சத்தம் எழுப்ப இரவுகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. மறுபுறம் ஒதுங்க இடம் இன்றி, நிரம்பாத வயிறுகளோடு, எதிர்கால வாழ்வும் இருட்டிப் போன திசையில் வெறித்துப் பார்க்கும் கண்கள்.

கார்டியன் நாளேட்டில் ஜான் பில்கர் எனும்சிந்தனையாளர் எழுதி இருந்த கட்டுரை ஒன்று தி ஹிந்து ஆங்கில நாளேட்டில் வந்ததன் அடிப்படையில்(ஜனவரி 4-2017).

எந்த ஆட்சி வந்தாலும் ஏழை மக்களுக்கு விடிவுயில்லை ஏனெனில் இந்த ஆட்சி அமைப்பே வாங்கும் திறன் கொண்ட அல்லது நுகர்வுவெறி கொண்ட கூட்டத்தின் அடிப்படையில் (இன்றொரு இந்தியா) அதனை தன் கைக்குள் வைத்து கொள்ள பெரும் நிறுவனங்களும் அரசும் தன் முற்போக்கு முகமூடியுடன் உள்ளது, ஏழைகளை சோம்பேரிகள், உழைக்காமல் வாழும் கூட்டம் திருடர்கள் இப்படி என்னென்வோ சொல்லி அவர்களின் உழைப்பை மட்டும் மறக்காமல் சுரண்டி கொள்கின்றனர்.

இந்தியாவில் இன்றைக்கும் அதிக பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து வரும் விவசாயத்துறையை வளர்ப்பது பற்றி எந்த ஒரு வேலையையும் மோடி அரசு செய்யவில்லை.

அதே நேரம் மோடி இன்னும் ஆறுமாதத்தில் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு அதிகமாகும் எனக் கூறினார். ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த ஓராண்டில் (2015) மட்டும் இந்தியா முழுக்க 16000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதில் பா.ஜ.க 2014 இறுதியில் ஆட்சியைப் பிடித்த மகாராஷ்டிராவில் 4238 தற்கொலைகளுடன் முதலிடத்தில் உள்ளது.

அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம்:

* இந்தியாவில் வெறும் 2.8 கோடி பேர் அமைப்பு சார் (Organized Sector) துறைகளில் வேலை செய்கின்றனர். இதில் 1.75 கோடி பேர் அரசு துறையிலும், 1.14 கோடி பேர் தனியார் துறையிலும் உள்ளனர். இவர்களுக்கு மட்டும் தான் ஓரளவு பணி பாதுகாப்பு உண்டு. அதையும் தனியாருக்கு தூக்கி கொடுக்கும் மோடியின் மக்கள் விரோத போக்கு எந்த இந்தியாவின் தேவைக்கு நீங்களே புரிந்துக் கொள்ளுங்கள்.

* 43.7 கோடி பேர் அமைப்பு சாரா துறைகளில் (Unorganized Sector) வேலை செய்கின்றனர். இவர்களுக்கு பணி பாதுகாப்பும் இல்லை, அடுத்த நாள் வேலை என்பதும் நிரந்தரம் இல்லை.

இந்திய அரசு இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக மாற்ற முயற்சி செய்தும், புதிய வேலைவாய்ப்புகளை முற்றிலுமாக நிறுத்தியும் உள்ளது. அதே நேரம் தனியார்துறையும் புதிய வேலைவாய்ப் புகளை பெரிய அளவில் கடந்த சிலஆண்டுகளாக உருவாக்கவில்லை. இந்தியாவின் வளர்ச்சி கொள்கை என்பது முதலீடு அதிகம் சார்ந்து உள்ள தொழிற்சாலைகளை கொண்டுவருவதில் உள்ளதே தவிர, தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படும் தொழிற்சாலைகளை கொண்டு வருவதில் இல்லை. அதிக முதலீடு சார்ந்து வரும் தொழிற்சாலைகளால் உருவாகும் வேலைவாய்ப்பு என்பது மிகவும் சொற்ப அளவிலேயே உள்ளது.

புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுவது குறைந்து வரும் இந்த நேரத்தில் இருக்கும் வேலைவாய்ப்புகள் காப்பற்றப்பட வேண்டும்.

அதே நேரம் வளர்ந்து வரும் மோடி தலைமையிலான இந்திய அரசோ “பத்தாயிரத்திற்கும் அதிகமான நேரடி வேலைவாய்ப்பையும், மேலும் சில ஆயிரக்கணக்கான மறைமுக வேலைவாய்ப்பையும்” கொடுத்து வந்த நோக்கியா நிறுவனம் சென்னை ஆலையை மூடும் பொழுது அதை தடுக்க எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது. தொலைபேசி உருவாக்கப் பணிகளில் மட்டுமே திறமையான பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்று வேலையின்றி நடுத்தெருவில் நிற்கின்றனர். வேலையிழப்பு மட்டுமின்றி, நோக்கியா மத்திய, மாநில அரசுகளுக்கு கட்ட வேண்டிய பல நூறு கோடி வரியையும் ஏமாற்றிவிட்டு சென்றுள்ளது. மிகவும் வலிமையான பிரதமர் என‌ சொல்லப்படும் மோடி இதை கண்டும் காணாமல் இருந்தார்.

மே 2014லிருந்து மே 2015வரையிலான ஒரு ஆண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 48% (51,600 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது(16). மோடியின் நெருங்கிய நண்பர் அதானி. அவரது தனிப்பட்ட வானூர்தியில் (Charted Flight) தான் மோடி 2014 தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். ஆஸ்திரேலியாவில் மூடப்படும் நிலையில் இருந்த நிலக்கரி சுரங்கத்தை எடுத்து நடத்த இந்தியாவின் பொதுத்துறை வங்கி வரலாற்றிலேயே பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் அளிக்க ஒப்புக்கொண்ட‌தும் இவருக்கு தான். அதானி உள்ளிட்ட ஒரு சிலரின் வளர்ச்சியை ஒட்டு மொத்த நாட்டின் வளர்ச்சியாக காட்டுகின்றன இந்த புள்ளிவிவரங்கள், எப்படி என சொல்கின்றது பின்வரும் வரிகள்.

“மொத்த தேசிய உற்பத்தி(GDP) என்பது எப்படி ஏமாற்றும் தன்மை கொண்டது என்பது குறித்து நானும் க்ளேடினும் வெளிப்படையாக பேசிக் கொள்வோம். பெரும்பாலான மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கிஇருந்தாலும், ஒரே ஒருவர் லாபமடைந் தாலும் கூட நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வளர்சியடையக்கூடும். பணக்காரர் கள் மேலும் பணக்காரர்களாவார்கள், ஏழைகள் மேலும் எழைகளாவார்கள். ஆனால் புள்ளி விவரங்கள் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததாக காட்டும்”. – ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற நூலிலிருந்து (Confessions of a economic hit man – Book) இதை இன்னும் கூட விரிவாக பார்ப்போம். 2013-2014ஆம் ஆண்டில் இந்தியாவில் தனி நபர் வருமானம் (மொத்த தேசிய உற்பத்தியையும், மொத்த மக்கள் தொகை யையும் வகுத்து கிடைப்பது) 80,388 ரூபாய், இது 2014-2015ஆம் ஆண்டு 87,748 ரூபாய் . இந்த புள்ளிவிவரப்படி 9.2% வளர்ச்சி. அதாவது அதானி , அம்பானி சேர்ந்த இலட்சம் கோடி ரூபாய்கள் இங்கு 100 கோடி மக்கள் தொகையால் வகுக்கப்பட்டு வரும் தொகை எல்லோரது கணக்கிலும் சேர்த்து (காகிதத்தில்) எல்லோரும் வளர்ந்ததாக, இந்தியா வளர்ந்ததாக ஒரு கானல் நீரை காட்டுகின்றது இந்த‌ பொருளாதார புள்ளிவிவரங்கள்.

ஊழலே ஆட்சியாக

அதானியின் ஒரு இலட்சம் கோடி ரூபாய் பருப்பு விலை ஊழல். குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த பொழுது அதானி, அம்பானி நிறுவனங்களுக்கு இலாபம் சேர்க்கும் வகையில் 25,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது என மத்திய தணிக்கை குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. அதானி குழுமமும், எஸ்ஸார் குழுமமும் அதிக விலைக்கு மின்னுற்பத்தி பொருட்கள் வாங்கியதாக கூறப்படுபதில் 50,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் என தொடர்ந்து ஒவ்வொரு ஊழலாக வெளிவந்த வண்ணம் உள்ளன. இதில் மோடியின் நண்பர் அதானி நிறுவனம் தொடர்பான ஊழல்கள் அதிகம். ஊழல் என்பது தான் பலனடைவதற்காக திட்டம் தீட்டுவது மட்டுமல்ல, தன்னைச் சார்ந்தவர்கள் பயன டைவதற்காக திட்டம் தீட்டுவதும், செயல் படுவதும் கூட ஊழல் தான்.ஆனால் ஊடகங் களோ மோடியின் ஆட்சியில் ஊழலே இல்லை என சூடம் ஏற்றி சத்தியம் செய்கி ன்றன. தூங்குபவர்களை எழுப்பி விடலாம் தூங்குபவர்களைப் போல நடிப்பவர்களை நம்மால் எப்பொழுதும் எழுப்ப முடியாது.

ஒருபக்கம் வாழ வழியற்ற மக்கள் இன்னொருபுறம் தின்னு கொழுக்கும் கூட்டம்.

ஆதாரம்:-த இந்து ஆங்கில பத்திரிக்கை நற்றமிழன்.ப–இளந்தமிழகம் இயக்கம்

சர்வதேசகீதம்

 சர்வதேசகீதம்

===========

பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதருகின்ற மனிதர்காள்

பாரினிற் கடையரே எழுங்கள் வீறுகொண்டு தோழர்காள்

கொட்டுமுரசு கண்ட நம் முழக்கமெங்கும் குமுறிட

கொதித்தெழு புது உலக வாழ்வதில் திளைத்திட

பண்டையப் பழக்கமென்னும் சங்கிலி அறுந்தது

பாடுவீர் சுயேட்சை கீதம்

விடுதலை பிறந்தது

இன்று புதிய முறையிலே இப்புவனமும் அமைந்திடும்

இன்மை சிறுமைதீர நல் இளஞர் உலகமாகிடும்

தொன்றுதொட்டுழைத்த தொழிலாளி,விவசாயிகள் நாம்

தோழராகினோம் உழைப்போர் யாவரேனும் ஓர்குலம்

உண்டு நம் உழைப்பிலே உயர்ந்தவர்க்குச் சொல்லுவோம்

உழைப்பவர் யாவருக்கும் சொந்தமிந்த நிலமெல்லாம்

பார் அதோ மமதையின் சிகரத்திருமாந்துமே

பார்க்குறான் சுரங்க,மில்,நிலத்தின் முதலாளியே

கூறிடில் அன்னார் சரித்திரத்தில் ஒன்று கண்டதே

கொடுமை செய்து உழைப்பின் பலனைக் கொள்ளைகொண்டு நின்றதே

மக்களின் உழைப்பெலாம் மறைத்துவைத்து ஒருசிலர்

பொக்கிஷங்களில் கிடந்து புரளுகின்ற தறிகுவீர்

இக்கணமும் அதைத்திரும்பக் கேட்பதென்ன குற்றமோ?

இல்லை நாம் நமக்குரிய பங்கைக் காட்டிக் கேட்கின்றோம்

வேலை செய்யக் கூலியுண்டு வீணர்கட்கிங்கிடமில்லை

வேதம் ஓதி உடல் வளர்க்கும் காதகர்க்கும் இங்கிடமில்லை

நாளை எண்ணி வட்டிசேர்க்கும் ஞமலிகட்கும் இடமில்லை

நாமுணர்த்தும் நீதியை மறுப்பவர்க்கிங்கிடமில்லை

பாடுபட்டு ழைப்பவர் நிணத்தைத் தின்ற கழுகுகள்

பறந்தொழிந்து போதல் திண்ணம் பாரும் சில நாளதில்

காடுவெட்டி மலையுடைத்துக் கட்டிடங்கள் எழுப்புவோம்

கவலையற்ற போகவாழ்வை சகலருக்குண்டாக்குவோம்-

( பட்டினிக்)

(1871 மார்ச்26 ல் ஏற்பட்ட பாரிஸ் கம்யூன் புரட்சியின் போது பிரெஞ்சுத் தொழிலாளிக் கவிஞனால் பாடப்பட்டது.

பின்பு தென்னக ரயில்வேப் போராட்டத்தின்போது பழிவாங்கப்பட்ட ரயில்வே தொழிலாளியான தோழர் கவிஞர் நாகை சாமிநாதனால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது.)

பாராளுமன்றத்தை பாட்டாளி வர்க்க கட்சி கையாளுவதை பற்றிய ஒரு தேடுதல்-சிபி

 தேர்தலை பற்றிய மார்க்சிய ஆசான்களின் கருத்துகளை பார்ப்போம்.

1871 ஆம் ஆண்டில் பாரிஸ் கம்யூனில் பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ அமைப்பை அப்படியே பயன்படுத்தி கொள்ள முடியாது என்றும், பாட்டாளி வர்க்கம் தனக்கான பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவிக் கொள்வதே முதலாளித்துவ அரசதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர இயலும் என்றும் மார்க்ஸ் முடிவுக்கு வந்தார்.

“அனைவருக்கும் வாக்குரிமை என்பது நமது எண்ணிக்கையை ஒருமுறை கணக்கு பார்க்க அனுமதிக்கிறது என்பதைவிட வேறெந்த பலனும் இல்லை. மக்கள் அனைவர் முன்பும், நமது தாக்குதலை எதிர்த்துத் தமது கருத்துகளையும், செயல்களையும் தாங்கி தற்காத்து முன்வரும்படி எல்லா கட்சியையும் கட்டாயப் படுத்தியது. நமது எதிரிகளுடனும் அதற்க்கு வெளியே மக்களிடையும் பேசுவதற்கு ஒரு மேடையமைத்து தந்தது. பத்திரிக்கை மூலமோ கூட்டங்கள் மூலமோ கருத்து வெளியிடுவதை விடவும் முற்றிலும் வெறுபட்ட அதிகார பலத்தோடும், சுதந்திரமாயும் பேசுவதற்க்கு வகை செய்தது”-எங்கெல்ஸ் (பிரான்சில் வர்க்க போராட்டங்கள் 1848-1850 நூலுக்கான முன்னுரையில்). முதலாளித்துவ நிறுவனங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என எங்கெல்ஸ் கூறுவதைக் கொண்டு புரட்சியைக் கைவிட வேண்டும் என ஒருபோதும் அர்த்தப்படுத்தி கொள்ளக் கூடாது. அவர், புரட்சிதான் தொழிலாளி வர்க்கத்தின், ஒரே உண்மையான வரலாற்று உரிமை என்று கூறினார்.

பாராளுமன்றம் வரலாற்று வழியில் தோன்று வதாகும், முதலாளித்துவப் பாராளுமன் றத்தைக் கலைப்பதற்குப் போதுமான பலமுடையோராகும் வரை நம்மால் அதை அகற்றிவிட முடியாது. குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளில் முதலாளித்துவப் பாராளு மன்றத்தில் உறுப்பினராய் இருந்து கொண்டு தான் முதலாளித்துவ சமுதாயத்தையும் பாராளுமன்ற முறையையும் எதிர்த்துப போராட்டம் நடத்த முடிகிறது. போராட்டத்தில் முதலாளித்துவ வர்க்கம் கையாளும் அதே ஆயுதத்தைப் பாட்டாளி வர்க்கமும் - முற்றிலும் மாறான குறிக்கோள்களுக்காக என்பதைக் கூறத் தேவையில்லை - உபயோகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்வாறு இல்லை என்று உங்களால் சாதிக்க முடியாது. இதனை நீங்கள் நிராகரித்து வாதாட விரும்பினால், உலகின் புரட்சிகர நிகழ்ச்சிகள்அனைத்தின் அனுபவத்தையும் நீங்கள் விட்டொழிக்க வேண்டியிருக்கும்." (லெனின் பாராளுமன்ற முறை பற்றிய சொற்பொழிவு கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் நிகழ்த்தப் பெற்றது 1920, ஆகஸ்டு 2)

இந்திய பாராளுமன்றம் பற்றிய ஒரு கண்ணோட்டம்

இந்திய அரசானது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை முன்னிறுத்தி, அதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளை(?) தேர்ந்தெடுத்து ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்து வருகிறது. வெளித்தோற்றத்தில் பார்க்கும் பொழுது இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசமைப்பு போல் தோன்றினாலும், இங்கு மக்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மட்டுமே உரிமை உண்டு, அதற்குப் பிறகு தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் மக்களுக் கும் எந்தவித தொடர்பும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களுக்காக எந்த வேலையையும் செய்யவில்லை என்றாலோ, மக்கள் நலனுக்கு விரோதமான செயலில் இறங்கினாலோ, அவரை ஒன்றும் செய்ய இயலாது. தேர்ந்தெடுக்கப்பட மட்டுமே உரிமை, அவர்களை திருப்பி அழைக்க எந்த வித உரிமையும் இல்லை.

முதலாளித்துவ நலன்களை பிரதிநிதித்து வப்படுத்தும் கட்சிகள், மேம்போக்காக தொழிலாளர்கள், விவசாயிகள், இதர உழைக்கும் மக்களின் சில சீர்த்திருத்த நலன்கள் குறித்து பேசினாலும் கூட அவை ஆளும் வர்க்கங்களின் நலனுக்கு உட்பட்டே அதை செய்கின்றன. இந்த கட்சிகள் தற்போது நிலவி வரும் சமூக அமைப்பே (சுரண்டல் தன்மையுடைய) அத்தனை சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் என்றும், தனிச் சொத்துடைமையை பிரதிநிதித்துவப் படுத்தும் முதலாளித்துவ சமூகமே மக்களின் நலன் காக்கும் சமூகம் என்று பறைச்சாற்றி ஆளும் வர்க்கங்களை தாங்கி பிடிக்கின்றன.

வறுமை, வேலை இல்லாத நிலை, விலையேற்றம், ஊழல், இலஞ்சம், அரசின் அடக்குமுறை உள்ளிட்ட காரணங்களால் மக்களிடையே ஒரு எழுச்சிகரமான சூழல் உருவாகும் போது, சாதி, மத, இன, மொழி, வட்டார சிக்கல்களை முன்னுக்கு நிறுத்தி அடித்தட்டு மக்களிடையே பிளவுகளை உருவாக்குகிறது. மேலும் ஆட்சியில் இருக்கும் கட்சியின் அனுகுமுறை தான் சமூக சிக்கல்களுக்கு காரணம் என்று கூறிபுதிய கட்சிகளை (முதலாளித்துவ நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும்) முன்னுக்கு கொண்டு வந்து அவர்களை ஆட்சி பீடத்தில் ஏற்றி தன்னுடைய வர்க்க நலன்களை முதலாளித்துவ வர்க்கம் காப்பாற்றி கொள்கிறது. இதன் மூலம் முதலாளித்துவமானது தன் மீது இருக்கும் எதிர்ப்பை தற்காலிகமாக மட்டுப்படுத்தி, திசைதிருப்புகிறது. தன்னுடைய வீழ்ச்சியை, அழிவை தற்காலிகமாக தள்ளி வைக்கிறது.

இத்தகைய சூழலில், புரட்சிகர குழுக்கள் பாராளுமன்றத் தேர்தல்களில் பங்கு கொள்வதற்காக குழப்பமடைந்துள்ளன. தற்போது நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களில் பங்கு கொள்வதற்காக களம் இறங்கி யுள்ளன. பாராளுமன்றப் பாதையில் பங்கெடுத்துக் கொள்வது குறித்து புரட்சிகர கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன.

சிபிஐ, சிபிஎம் கட்சிகள் முழுக்க முழுக்க பாராளுமன்றப் பாதையிலேயே மூழ்கி விட்டன. பாரளுமன்றத் தேர்தலில் பங்கெடுத்து குரல் கொடுப்பது மட்டுமே பிரதான மற்றும் ஒரே பணியாக கொண்டுள்ளது. மக்களை சமூக மாற்றத்திற்கான அணி திரட்டும் பாதையில் பயணிப்பதற்கான எந்தத் திட்டமும் இந்தக் கட்சிகளிடம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கட்சியின் உயர்மட்டத் தலைவர்களே, அதாவது பொலிட்பீரோ உறுப்பினர்களே தேர்தல் களத்தில் நிற்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாட்டை கட்சி கட்டுப்படுத்த முடிவதில்லை.

கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும் பாராளுமன்ற, சட்டமன்ற நலன்களே தீர்மானிக்கின்றன. கட்சியும் பாராளுமன்றப் பாதையும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதபடி பிண்ணிப் பிணைந்துள்ளது. கட்சியின் அடிமட்டத்தில் இருக்கும் ஊழியர்களின் தன்னலங்கருதாத உழைப்பை மேல்மட்டத்தில் இருக்கும் கட்சிப் பொறுப்பாளர்களும், பாராளுமன்ற சட்டமன்றப் பிரதிநிதிகளும் தங்கள் நலனுக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வரும் நிர்வாகிகள் பெரும்பாலும் முதலாளித்துவ சிந்தனையாளர் களாகவே உள்ளனர். சில சீர்த்திருத்த நடவடிக்கைகள் மூலம் மக்கள் திரளை திரட்ட நினைப்பதும், பாராளுமன்றப் பாதை மூலமாகவே சோசலிசத்தை நோக்கி பயணிப்பது மார்க்சிய லெனினியம் அல்ல என்பதனை கீழே பேசுவோம். நமது தேடுதலில் இந்த குழப்பங்களுக்கு பதிலளிக்க முயற்சிப்போம். உலகெங்கிலும் உள்ள நவீன திருத்தல்வாதத்தை ரசிய திருத்தல்வாதி குருசேவ் தலைமையில் கொண்டுவரப் பட்ட தீர்மானமே அதனை எப்படி என்று பார்ப்போம்.

காவுட்ஸ்கியை விமர்சனம் செய்த லெனின் "பாட்டாளி வர்க்கம் ஏகாதிபத்திய முதலாளிகளை புரட்சிகரமான முறையில் தூக்கி எறிய போராடி வருகிறது ஆனால் கவுட்ஸ்கியோ ஏகாதிபத்தியத்துக்கு அடி பணிந்து கொண்டு அதை சீர்திருத்த முறையில் முன்னேற்றவும் அதற்கு ஒத்துப் போகவும் போராடுகிறார் ( லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 2 பக்கம் 95 ).

உழைக்கும் வர்க்கத்தையும் பறந்து பட்ட மக்களையும் புரட்சியில் வழிநடத்திச் செல்வதற்கு பாட்டாளி வர்க்க கட்சி போராட்டத்தின் அனைத்து வடிவங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும் வேறுபட்ட வடிவங் களை ஒன்றிணைக்கவும் போராட்டத்தின் நிலைமையில் மாறுவதற்கு ஏற்ப ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு விரைவாக மாற்றிக் கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும். அமைதியான மற்றும் ஆயுதம் தாங்கிய பகிரங்கமான மற்றும் ரகசியமான சட்டப்படியான மற்றும் சட்ட விரோதமான பாராளுமன்றமுறையிலான மற்றும் மக்கள் திரள் போராட்டமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச போராட்டமாக இவ்வாறு எல்லாவிதமான போராட்ட வடிவங்களிலும் தேர்ச்சி பெற்று இருந்தால் தான் அது எந்த சூழ்நிலையிலும் வெல்லப் பட முடியாத இருக்கும் என்று மார்க்சிய லெனினிய வாதிகளாய் நாம் எப்போதும் கூறுகிறோம்.

குறிப்பான தனித்தன்மைகளுக்கு ஏற்ப போராட்டத்தில் அனைத்து வடிவங்களிலும் முழுமையாகவும் திறமையாகவும் தேர்ச்சி பெற்றிருப்பதன் விளைவாக புரட்சி வெற்றியடைய முடியும்.

லெனின் தனது விமர்சனத்தை சரியாகவே சுட்டிக்காட்டிய படி காவுட்ஸ்கி போன்ற திருத்தல்வாதிகள் முதலாளித்துவ சட்டவாதத்தால் இழிவுக்கும் அவமதிப்பும் உள்ளாக்கப்பட்டார்கள் தற்போதைய போலீஸ் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு மொந்தை கூழுக்கு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி செய்யும் உரிமை விற்கப்பட்டு விட்டது ( லெனின் இரண்டாம் அகிலத்தின் தகர்வு தொகுதி 18 பக்கம் 314 ).

திரிப்புவாதிகள் பல்வேறு போராட்ட வடிவங்கள் குறித்து பேசினாலும் உண்மையில் அவர்கள் போராட்ட வடிவத்தை மாற்றுவது என்ற பெயரில் சட்டவாதத்தில் ஊன்றி நின்று பாட்டாளி வர்க்க புரட்சியின் குறிக்கோளையே கைவிட்டுவிடுகிறார்கள் இன்று லெனினியதிற்கு பதிலாக காவுட்ஸ்கியத்தை பின்பற்றுவது தான் இது காட்டுகிறது.

திருத்தல் வாதிகள் லெனினுடைய "இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவக் கோளாறு" எனும் மாபெரும் படைப்பினை தங்களின் தவறான பாதையை நியாயப்படுத்துவதற்காக பயன் படுத்தி மார்க்சிய லெனினியத்தை குறுக்கி பயன்படுத்தி வருகின்றனர்.

உண்மையில் "இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவ கோளாறு" என்ற நூலில் சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கத்தின் முதன்மையான எதிரி அந்த சமயத்தில் காவுட்ஸ்கிய வகைப் பட்ட சந்தர்ப்பவாதம் என்பதை குறிப்பிட்டு இருந்தார் லெனின். மேலும் அவர் திருத்தல் வாதத்திலிருந்து முழுமையாக முறியடித்துக் கொள்ளாத வரை புரட்சிகரப் போர் தந்திரங்கள் தேர்ச்சி பெறுவது எப்படி என்று பேச்சுக்கே இடம் இருக்க முடியாது என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்.

இன்னொறு போக்கு ட்ராட்ஸ்கியம், பல்வேறு பிரச்சனைகள பல்வேறு விதமாக வெளிப் படுகிறது ட்ராட்ஸ்கியம்; அது அடிக்கடி "தீவிர இடதுசாரி" முகமூடி அணிந்து கொள்கிறது ஆனால் அதன் சாரம் புரட்சியை எதிர்ப்பதும் புரட்சியை மறுப்பதுமேயாகும்.

பாட்டாளி வர்க்க புரட்சியையும் பட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் எதிர்ப்பது என்ற அடிப்படையில் ட்ராட்ஸ்கியம் இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதமும் உண்மையில் இரண்டும் ஒன்றாக இருக்கின்றன. அதனால்தான் ஸ்டாலின் திரும்பத் திரும்ப ட்ராட்ஸ்கியத்தை ஒருவகையில் மென்ஸ் விஸயம் என்றும் காவுட்ஸ்கியதியம் என்றும் சமூக ஜனநாயகம் என்றும் மேலும் எதிர் புரட்சிகர முதலாளிகளின் முன்னேறிய பிரிவு என்றும் கூறினார். திருத்தல்வாதம் சாரத்தில் புரட்சி எதிர்ப்பதாகவும் மறுப்பதாகவும் இருக்கிறது. திருத்தலவாதமும் காவுட்ஸ் கியமும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் என்பது மட்டுமல்ல; புரட்சி எதிர்ப்பதில் ட்ராட்ஸியத்தோடு ஒன்று சேர்கிறது என்பது தர்க்கரீதியான முடிவு .

ஓடுகாலி காவுட்ஸ்கி பற்றி தனது விமர்சினத்தில் லெனின் கூறினார் " 1870களில் மார்க்ஸ் இங்கிலாந்தில் அமெரிக்க போன்ற நாடுகளில் சோசலிசம் சமாதானம் மாற்றம் பற்றிய சாத்திபாட்டை ஏற்றுக் கொண்டார் என்ற குதர்க்க வாதமும் இன்னும் சொல்லப்போனால் பச்சையாக மேற்கோள் களையும் குறிப்புகளையும் வைத்துக் கொண்டு செப்பு வித்தை காட்டுகிற ஏமாற்றுப் பேர்வழிகளின் வேலையாகும் ,மார்க்ஸ்முதலாவதாக இந்த சாத்தியப்பாட்டை விதிவிலக்கு என்ற அளவில் தான் ஏற்றுக்கொண்டார் இரண்டாவதாக அப்பொழுது ஏகபோக முதலாளித்துவம் அதாவது ஏகாதிபத்தியம் இருக்கவில்லை மூன்றாவதாக அப்போது இங்கிலாந்து அமெரிக்க போன்ற நாடுகளில் இன்று வளர்ந்துள்ளது போல முதலாளித்து அரசு இயந்திரம் முதன்மையான கருவியாக பணிபுரியக்கூடிய ராணுவம் இருக்க வில்லை"( லெனின் நூல் திரட்டு 23 பக்கம் 233).

தனது அடிப்படை பொருளாதாரக் குணாம்சங்களின் காரணமாக ஏகாதிபத்தி யமானது சமாதானம் மற்றும் சுதந்திரத்தின் மீதான அதன் குறைவான பற்றுதலேனாலும் ராணுவ வல்லாட்ச்சி கொள்கையின் அனைத்தும் தெளிவு வளர்ச்சியின் மீதான அதன் அதிகபட்ச பற்றுதலினாலும் பிரித்தாளப்படுகிறது என்று லெனின் கூறினார். சமாதான முறை மாற்றமும் அல்லது பலாத்கார முறை மாற்றம் என்ற கேள்வி பற்றிய விவாதத்தில் இதை கவனிக்க தவறுவது என்பது முதலாளித் துவத்தின் ஒரு சாதாரண அல்லது தோட்டக் காரனை போன்று அடிவருடியின் நிலைக் குத் தாழ்ந்து விடுவதாகும்" ( லெனின் நூல் திரட்டு 23 பக்கம் 357 ).

1917 அக்டோபரில் லெனின் போல்ஷ்விக் கட்சியின் தொழிலாளர்கள் படைவீரர்கள் ஆயுதம் தாங்கிய எழுச்சிக்கு தீர்மானகரமாக தலைமை தாங்கி அரசு அதிகாரத்தை கைப்பற்றினார்கள். சிலர் கூறுவதைப் போல் புரட்சியில் ரத்தம் சிந்தாமல் மாற்றம் அதாவது புரட்சி கிட்டத்தட்ட சமாதான முறையில் சாதிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள் அவர்களுடைய கூற்றுகள் யாவும் வரலாற்று உண்மைகளுக்கு மாறுபட்டவையாகும் உலகத்தின் முதல் சோசலிச அரசின் உருவாக்குவதற்காக ரத்தம் சிந்திய புரட்சிகர தியாகிகளுக்கு இவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?.

உலக வரலாறு இதுவரை முதலாளித்து வத்தில் இருந்து சோசலிசம் சமாதான முறையில் மாற்றம் தானாகவே நடந்தேறியதாக எந்த முன்மாதிரியும் உருவாகவில்லை என்பது வரலாற்று உண்மை ...

ஆக தோழர்களே நாம் வாழும் சமூகத்தில் இரு வேறு வகைப்பட்ட சித்தாந்தங்களும் செயல்களும் உள்ளன அதில் ஏகாதிபத்திய முதலாளித்துவ போக்கானதும் பாட்டாளிவர்க்க சோசலிச கம்யூனிச போக்கானதும் இரு வேறு வகைபட்ட பாதைகளாக உள்ளன .

அக்டோபர் புரட்சியின் ஊடாக உலகிற்கு சோசலிசத்தின் நன்மைகள் கலங்கரை விளக்காக ரஷ்ய புரட்சி எடுத்துகாட்டியது. ரசிய புரட்சியை அடிவொற்றி உலகில் உள்ள பல்வேறு மார்க்சிய லெனினிய புரட்சியாளர் கள் தமது நாட்டில் புரட்சி நடத்தினார்கள்.

அதாவது சீனாவிலிருந்து கியூபா வரை எல்லா நாடுகளிலும் நடைபெற்ற புரட்சிகள் விதிவிலக்கின்றி ஆயுதம் தாங்கி போராட்டத்தின் மூலமே ஏகாதிபத்திய எதிர்ப்பு ராணுவ ஆக்கிரமிப்புக்கும் தலையிட்டுக்கும் எதிராக போராடியதன் மூலமாக வெற்றி அடைந்திருக்கின்றன ( மாபெரும் விவாதம் நூல் பக்கம் 695 புதுமை பதிப்பகம் வெளியீடு ).

சீன மக்கள் மூன்று வருட மக்கள் விடுதலை யுத்தம் உட்பட 22 வருடங்கள் புரட்சிகளை யுத்தத்தை நடத்திய பிறகு புரட்சியில் வெற்றி பெற்றனர். மக்கள் விடுதலை இயக்கத்தில் இறுதிவரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு பெற்ற சீயாங்கே ஷேக் ஆதிக்க வாதிகளை அவர்கள் முழுமையாக ஆயுதம் தாங்கிய போரட்டத்தின் மூலமே தோற்கடித் தனர். கொரிய மக்களும் ஜப்பான் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய ஆயுதப்படைக்கு எதிராக போராடி அதனைத் தோற்கடித்த பின்னரே புரட்சி உறுதியாக நிலை நிறுத்த முடிந்தது.

1945 ஆகஸ்டில் வியட்நாம் மக்கள் அரசியல் அதிகாரத்தை ஆயுதம் தாங்கி எழுச்சியின் மூலம் கைப்பற்றினர்.

1953 ல் கியூபா மக்கள் ஆயுதம் தாங்கி எழுச்சியை தொடங்கினார்கள் கியூபாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொம்மை ஆட்சியை அதன் ஆதரவாளர்களையும் தூக்கி எறிந்து புரட்சிகரமான ஆட்சி நிறுவினர்.

இவ்வாறாக இரண்டாம் உலகப் போருக்கு பிறகு பல நாடுகளில் ஆயுதப் போராட்டம் மூலமாக தான் சோசலிச நாடுகள் நிறுவப்பட்டன .

ஆக நமது படிப்பினைகளை சீர் செய்ய பாட்டாளி வர்க்க புரட்சி போர்களின் வெற்றியிலிருந்து நமக்கு கிடைப்பதை புரிந்து கொள்ளவே இந்த கட்டுரையின் நோக்கம்.

பாராளுமன்ற பாதைக்கு மறுப்பு

இரண்டாம் அகிலத்தின் திருத்தல்வாதிகளால் விளம்பரப்படுத்தப்பட்ட பாராளுமன்ற பாதை என்ற கருத்து லெனினால் முறியடிக்கப்பட்டது நீண்ட காலத்திற்கு முன்பே செல்லாக்காசாகி விட்டது. ( மேற்கண்ட அதே நூல் பக்கம் 682 ).

இன்று பாராளுமன்றத்தை தூக்கி நிறுத்துபவர்கள் குருசேவின் வாரிசுகளன்றி வேறல்ல.

சரி புரிந்து கொள்வோமா பாராளுமன்ற பாதை பற்றி...

முதலாளித்துவ அரசு இயந்திரத்தின் முதன்மையான உறுப்பு ராணுவமே ஒழிய பாராளுமன்றம் அல்ல என்பதனை இரண்டாம் உலகப் போருக்கு பின் நடைபெற்ற நிகழ்வுகள் நமக்கு மீண்டும் மீண்டும் நிரூபித்து உள்ளது. பாராளுமன்றம் என்பது முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு அலங்கார சின்னமாக ஒரு மூடுதிரையாக இருந்து வருகிறது பாராளுமன்றத்தை ஏற்றுக் கொள்வதும் அல்லது கைவிடுவதும் அல்லது பாராளுமன்றத்துக்கு அதிகமாக வோ குறைவாகவோ அதிகாரம் அளிப்பதும் வெவ்வேறு விதமான தேர்தல் முறையைக் கைகொள்வது ஆகிய இவற்றில் எதை தேர்ந்தெடுப்பது என்பது முதலாளித்துவ ஆட்சியின் தேவைக்கும் நலன்களுக்கும் ஏற்றார்போல் தான் எப்போதும் தீர்மானிக்கப் படுகிறது முதலாளிகள் ராணுவ அதிகார வர்க்க நிறுவனங்களை கட்டுப்படுத்தும் வரை தேர்தல் மூலம் பாட்டாளிகள் பாராளுமன்றத்தில் நிலையான பெரும் பான்மை பெறுவது என்பது சாத்தியமற்றது அல்லது அத்தகைய நிலையான பெரும்பான்மை நம்பப்பட முடியாது பாராளுமன்ற பாதை வழியாக சோசலிசத்தை அடைவது என்பது அறவே சாத்தியம் இல்லாததும் வெறும் ஏமாற்றுப் பேச்சும் ஆகும் .

முதலாளித்துவ நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் கிட்டத்தட்ட பாதி இன்னும் சட்டப்படி தடை செய்யப்பட்ட வையாக இருக்கின்றன இக்கட்சிகளுக்கு சட்ட உரிமை இல்லாததன் காரணமாக அவை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

கம்யூனிஸ்ட் கட்சிகள் சட்டபூர்வமானவை தேர்தலில் பங்கெடுக்கக்கூடிய நிலையில் இருக்கின்ற முதலாளித்துவ நாடுகளில் முதலாளித்துவத் தேர்தல் சட்டங்களால் திணிக்கப்பட்ட நேர்மையற்ற வரைமுறை களை வைத்துக்கொண்டு முதலாளித்துவ ஆட்சியின் கீழ் பெரும்பான்மை ஓட்டுகளை வெல்வது என்பது அவைகளுக்கு மிகக் கடினம் அப்படியே அவர்கள் பெரும்பான்மை ஓட்டுகளை பெற்றாலும் பாராளுமன்றத்தில் அவர்கள் பெரும்பான்மை இடங்களை பிடிப்பதை தேர்தல் சட்டங்களை திருத்துவது மூலமும் அல்லது தடுப்பதற்கு முதலாளிகளால் முடியும்.

உதாரணமாக இரண்டாம் உலகப் போருக்கு பிறகு பிரான்ஸ் ஏகபோக முதலாளிகள்இரண்டு தடவை தேர்தல் சட்டத்தை திருத்தினார்கள் .

கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றதாலோ அல்லது தேர்தலில் வெற்றி பெற்றதன் விளைவாக அரசியல் பங்கு கொண்டதாலோ பாராளுமன்றத்தின் முதலாளித்து தன்மைகளையோ அதன் பல்வேறு அம்சங்களையோ அதனால் மாற்ற இயலாது இந்நிலையில் பழைய அரசு நிறுவனங்களையும் அதிகார வர்க்கத்தையும் ஒழித்து புதியதை உருவாக்குவது என்பது நடக்கவே நடக்காது. அடிப்படை சமுதாய மாற்றத்தை முதலாளித்துவ பாராளுமன்றங்களையோ அரசுகளை சார்ந்திருப்பது மூலமாக கொண்டு வருவது என்பது முடியவே முடியாத காரியம் ஆகும். அதனை புரிந்துக் கொள்ள பல நாட்டு நிகழ்வுகள் சாட்சியாக உள்ளன.

1946 ல் சிலி கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் வெற்றி பெறுவதில் முதலாளித்துவ முற்போக்கு கட்சியை ஆதரித்தது கம்யூனிஸ்ட் பங்கேற்புடன் ஒரு கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டது அந்த சமயத்தில் முதலாளிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்த அந்த அரசை சிலி கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் "மக்கள் ஜனநாயக அரசாங்கம்" என்று வர்ணிக்கும் அளவுக்கு சென்றனர் ஆனால் ஒரு வருடத்திற்குள் முதலாளிகள் கம்யூனிஸ்டுகளை அரசியலில் இருந்து வெளியேற்றும் படி நிர்பந்தத்தினர் பிறகு கம்யூனிஸ்டுகளை ஒட்டுமொத்தமாக கூட்டாக கைது செய்தனர் கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்தனர் பின்னர் நடந்தவை நான் சொல்ல தேவையில்லை.

தொழிலாளர்களின் கட்சி முதலாளிகளின் கூலி கட்சியாக சீர் அழிந்து அவர்களுக்கு அடிபணிந்து இருக்கும்போது மட்டுமே முதலாளிகள் கட்சியை பெரும்பான்மை பெறவும் அரசு ஏற்று நடத்தும் அனுமதிப்பர் ஒரு சில நாடுகளில் முதலாளித்து சமூக ஜனநாயக கட்சியின் நிலை இதுதான். ஆனால் இத்தகைய செயல் முதலாளிகளின் சர்வாதி காரத்தை பாதுகாக்கவும் மேலும் வலுப்படுத் தும் பயன்பட்டுள்ளதே தவிர ஒடுக்கப்பட்ட சுரண்டப்படும் பாட்டாளிகளின் நிலைமையில் மாற்ற எந்த வகையிலும் பயன்படவில்லை பயன்படவும் முடியாது. இத்தகைய உண்மை கள் பாராளுமன்ற பாதையில் ஓட்டாண்டி தனத்தை கூடுதல் சான்றுகளாக விளங்கு கின்றன.

இரண்டாம் உலகப்போருக்கு பின் நடந்த நிகழ்வுகள் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராளுமன்ற பாதையை நம்பி பாராளுமன்றமாயை என்ற தீர்க்க முடியாத நோய்க்கு பலியாகி விட்டனர். அவர்கள் இயல்பாகவே எதையும்சாதிக்க முடியாது என்பதோடு தவிர்க்க முடியாத படி திருத்தல்வாத சகதியில் புதைந்து பாட்டாளி வர்க்க புரட்சி இலட்சியத்தை சீரழிப்பவர்கள் என்பதை தான் காட்டுகின்றன.

முதலாளித்துவ பாராளுமன்றத்தின்பால் கடைபிடிக்க வேண்டிய சரியான அணுகுமுறை குறித்து மார்க்சிய லெனினிய வாதிகளுக்கும் பிற சந்தர்ப்பவாதிகளுக்கும் மற்றும் திருத்தல்வாதிகளுக்கும் இடையே ஒரு அடிப்படை வேறுபாடு எப்போதும் இருக்கிறது.

முதலாளிகளின் பிற்போக்கு தன்மையை அம்பலப்படுத்தவும் மக்களுக்கு கற்றுக் கொடுக்கவும் புரட்சிகர வலிமையை சேகரித்துக் கொள்ளவும் உதவும் குறிப்பான சூழ்நிலைகளில் பாட்டாளி வர்க்கக் கட்சி பாராளுமன்ற போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்றும் பாராளுமன்ற மேடையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிய லெனினியவாதிகள் புரிந்து செயல்பட வேண்டும் தேவைப்படும்போது இந்த சட்டப்பூர்வமான போராட்டத்தை பயன் படுத்திக் கொள்ள மறுப்பது தவறாகும் ஆனால் பாட்டாளி வர்க்க கட்சி ஒருபோதும் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு மாற்றாக பாராளு மன்ற போராட்டத்தை கருதக்கூடாது அல்லது சோசலிசத்திற்கான மாற்றாக பாராளுமன்ற பாதை மூலம் சாதித்து விடலாம் என்று மாயையில் ஆழ்ந்து விடக்கூடாது அதாவது எல்லா சமயங்களிலும் வெகுஜன போராட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் .

லெனின் கூறினார் , "புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி மக்களை விழிப்படையச் செய்யும் பொருட்டு முதலாளித்துவ பாராளு மன்றத்தில் பங்கெடுக்க வேண்டும் தேர்த லின் போதும் பாராளுமன்றத்தில் கட்சி களுக்கு இடையில் நடக்கும் போராட்டங் களின் போதும் அவ்வாறு செய்ய முடியும் ஆனால் வர்க்கப் போராட்டத்தை பாராளு மன்ற போராட்டமாக குறுக்கி விடுவது பாராளுமன்ற போராட்டத்தை உயர்ந்த பட்ச தீர்மானகரமான வடிவமாக்கி அனைத்துப் போராட்ட வடிவங்களையும் இதற்கு உட்பட்டதாகவே ஆக்குவது உண்மையில் பாட்டாளி வர்க்கத்துக்கும் எதிராக முதலாளி வர்க்கதினத்தின் பக்கம் ஓடி விடுவதாகும்" (லெனின் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பக்கம் 36 ஆங்கில பதிப்பு மாஸ்கோ).

பாராளுமன்ற வாதத்தின் நிழலை பின்தொடர்ந்து சென்றதற்காகவும் அரசு அதிகாரத்தை கைப்பற்ற வேண்டிய புரட்சிகரகடமை கைவிட்டதற்காகவும் லெனின் இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதிகளை கண்டித்தார். அவர்கள் பாட்டாளி வர்க்க கட்சியை ஒரு தேர்தல் கட்சியாக ஒரு பாராளுமன்ற கட்சியாக முதலாளிகளின் தொங்கு சதையாக முதலாளித்துவ சர்வாதிகாரத்தை காக்கும் ஒரு கருவியாக மாற்றி விட்டார்கள் பாராளுமன்ற பாதையை ஆதரிப்பதன் மூலம் இரண்டாம் அகிலத்தின் திரிபுவாதிகள் அடைந்த கதியே அவரை பின்பற்றுபவர்களும் அடைவார்கள் .

இடது சந்தர்ப்பவாதத்தை எதிர்ப்பதன் பெயரில்

இடது சந்தர்ப்பவாதம் இடது துணிச்சல் வாதத்தை எதிர்கிறோம் என்று கூறி முழுமையான வர்க்க போராட்டத்தை கைவிட்டுவிட்டு முதலாளித்துவ நாடுகளில் உள்ள பாட்டாளிகள் ஜனநாய உரிமையும் பிறப் போராட்டங்களுக்காக போராடுவதாக கூறுவது எவ்வகையான பாட்டாளி வர்க்க புரட்சி முழக்கம். புரட்சியை எதிர்ப்பதும் மறுதலிப்பதும் தமது திருத்தல்வாதப் பாதையை மூடி மறைப்பதுதான் இடது சந்தர்ப்பவாதத்தை எதிர்பது என்று வலது சந்தர்ப்பவாதிகளை மேலும் தெரிந்துக் கொள்வோம்.

புரட்சி என்பது நமது விருப்பத்தின் பேரில் நடத்தப்பட முடியாதது என்றும் புறநிலையில் புரட்சிகரமான சூழ்நிலை நிலவினால் ஒழிய புரட்சி என்பது சாத்தியமில்லை என்றும் மார்சியவாதிகள் அறிந்தவைதான் அதே சமயத்தில் புரட்சி வெடித்தெழுவதும் வெற்றி பெறுவதும் புரட்சிகர சூழ்நிலை மட்டும் பொருத்தல்ல கூடவே அகநிலையில் புரட்சிகர சக்திகளின் தயாரிப்புகளையும் முயற்சிகளை யும் பொறுத்தது. பாட்டாளி வர்க்க கட்சி புரட்சி நடத்துவதற்கு தேவையான புறவய நிலைமை கள் மற்றும் அகநிலை சக்திகள் அது இரண்டையும் பற்றியும் துல்லியமாக மதிப்பிட வில்லை என்றாலும் நிலைமை கனிந்து வருவதற்கு முன்பே அவசரமாக ஒரு புரட்சி தொடுக்கும் முயன்றாலும் அது "இடது துணிச்சல் வாதம்" ஆகும் ஆனால் பாட்டாளி வர்க்க கட்சி புரட்சிக்கான சூழ்நிலை கனியும் முன்னே அதற்கான செயலூக்கம் உள்ள தயாரிப்புகளை செய்திருக்குமானால் அல்லது புரட்சிகரமான சூழ்நிலை நிலவும் போது நிலைமைகள் கனிந்திருக்கும் போது ஒரு புரட்சியை தலைமை தாங்கி வழிநடத்தி அரசு அதிகாரத்தை கைப்பற்ற துணியாமல் இருக்குமானால் அது வலது சந்தர்ப்பவாதம் அல்லது திரிபுவாதம் ஆகும். அரசு அதிகாரத் தை கைப்பற்றும் நேரம் வரும் வரை புரட்சிகர சக்தி ஒன்று திரட்டும் கடினமான பணியில்முழுமையாக கவனம் செலுத்துவது தான் ஒரு பாட்டாளி வர்க்க கட்சி மிக முக்கியமான அடிப்படை பணியாகும் அன்றாட போராட்டங் களில் அளிக்கப்படும் செயலூக்கம் உள்ள தலைமையானது புரட்சிகர சக்திகளை ஒன்று குவிப்பதையும் சூழ்நிலைகள் கனிந்து வரும்போது புரட்சியில் வெற்றி ஈட்டுவதற்கான தயாரிப்புகளை செய்வதும் தான் தனது மையக் கடமையாக கொள்ள வேண்டும் பாட்டாளி வர்க்க கட்சி பாட்டாளி வர்க்கம் மற்றும் மக்களின் அரசியல் விழிப்புணர்வு அதிகரிக்கவும் தனது சொந்த வர்க்க சக்தியை பயிற்றுவிக்கவும் அதன் போரிடும் தகுதிக்கு பக்குவப்படுத்தும் மேலும் புரட்சிக்கு சித்தாந்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஸ்தாபன ரீதியாக ஒரு இராணுவ ரீதியாகவும் தயாரிப்பதற்காகவும் அன்றாட போராட்டங்களின் பல்வேறு வடிவங்களை பயன்படுத்த வேண்டும் இவ்வாறு செயல்படுவதன் மூலம் மட்டுமே புரட்சிகர சூழ்நிலை கனித்திருக்கும் போதும் வெற்றி வாய்ப்புகளை தவறவிடாமல் இருக்க முடியும். இல்லையெனில் புரட்சிகர மான எதார்த்த நிலைகள் நிலவும் போது பாட்டாளி வர்க்க கட்சி புரட்சி நடத்தும் வாய்ப்பை வெறுமனே நழுவி செல்ல விட்டு விடும்.

புரட்சிகர சூழ்நிலை நிலவாத போது எந்த புரட்சியையும் நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் திருத்தல்வாதிகள் புரட்சிகர சூழ்நிலை உருவாவதற்கு முன் அன்றாட புரட்சிகர போராட்டங்களையும் புரட்சிகர சக்திகளையும் ஒன்று திரட்டுவதையும் ஒரு பாட்டாளி வர்க்க கட்சி எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை குறித்து எதுவும் சொல்வதில்லை உண்மையில் புரட்சிகர சூழ்நிலை இல்லாதிருக்கும் போது புரட்சிக் கான தயாரிப்பு செய்வது புரட்சிகர சக்தி களை ஒன்று குவிப்பது ஆகிய கடமைகளை புரட்சிகர சூழ்நிலைகள் இல்லை என்ற சாக்கில் ஒதுக்கி விடுவது மார்க்சிய லெனினியமல்ல திருத்தல்வாதமே.

லெனின் கூறியவைதான்,"புரட்சிகர நெருக்கடி தோன்றும்போது புரட்சிக்காரராக மாறுவதற்கு காவுட்ஸ்கி கூட தயாராக இருக்கிறார் ஆனால் அப்போது ஒவ்வொரு அயோக்கியனும் கூட புரட்சிவாதியாகதான் தன்னை அறிவித்துக் கொள்வான் என்பதை நாம் காண்போம்"," "வெகுஜனங்களின் புரட்சிகரப் போராட்ட முறைகளோடு இணைக்கப்படாத எந்த ஒரு சீர்திருத்தமும் பலன் தரக்கூடியதாக உண்மையானதாக நீடித்து இருக்கக்கூடியதாக இருக்க முடியாது தொழிலாளர் இயக்கத்தின் புரட்சிகரமுறையுடன் சீர்திருத்திற்கான போராட்டத்தை இணைக்காத ஒரு தொழிலாளர் கட்சி ஒரு குழுவாக மக்களிடமிருந்து துண்டிக்கப் பட்டதாக மாறிவிட கூடும் மேலும் இது உண்மையான புரட்சிகர சோசலிசத்தின் வெற்றிக்கு மிகப்பெரும் அபாயகரமாக இருக்கும்" ( லெனின் நூல் திருட்டு தொகுதி 21 பக்கம் 359 ).

லெனின் மேலும் சொல்லுகிறார் "ஒவ்வொரு ஜனநாயக கோரிக்கையும் வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளர்களை பொறுத்த வரையில் சோசலிசத்தின் மிக உயர்ந்த நலன்களுக்கு கீழ்ப்பட்டதே" மேலும் அரசும் புரட்சி என்ற நூலில் ஏங்கெல்சை மேற்கோள் காட்டி எழுதுகிறார்,"அன்றாட தற்காலிக நலன்களுக்கான மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிலைப்பாட்டை மறந்து விடுவதும் பின் விளைவுகளைப் பற்றி ஆராய்ந்து பார்க்காமல் அப்போதைய வெற்றிக்காக முயற்சிப்பதும் போராடுவதும் நிகழ்காலத்திற்காக இயக்கத்தின் எதிர்காலத்தை தியாகம் செய்வதும் சந்தர்ப்பவாதம் ஆகும் அதுவும் அபயகரமான சந்தர்ப்பவாதமாகும்". "குறிப்பாக இந்த அடிப்படையில் தான் சீர்திருத்தத்தை புகழ்வது ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு அடிபணிவது புரட்சியை பலிகொடுப்பது , கைவிடுவது ஆகியவற்றிர்காக காவுட்ஸ்கியை விமர்சனம் செய்தார் லெனின்". (லெனின் பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடு காலி காவுட்ஸ்கியும் தேர்வு நூல் தொகுதி 2 பக்கம் 95 ).

ஆக நாம் புரிந்துக் கொள்ள வேண்டியவை தேர்தலில் பல்லாயிரம் கோடி செலவழிக்கும் அரசியல் கட்சிகள் அடுத்த அய்ந்தாண்டுகளில் அந்த பணத்துடன் இன்னும் பல ஊழல்களுடன் பல கணக்கில்லா கோடிகளை சுருட்டுகின்றன, இதில் கார்ப்ரேட்கள் கொள்ளை வேறு அதாவது தேர்தலில் போட்டியிட கட்சிகளுக்கு கொடுத்த நிதியை வசூலிக்க நாட்டின் வாழ்வாதரங்களை சுரண்டுவது மட்டுமன்றி நாட்டின் வங்கி மற்றும் நிதிதுறைகளையும் சூறையாடி கொண்டுள்ளது [எ.கா மோடி ஆட்சி பிடிக்க உதவிய அதானி கார்ப்ரேட் இன்றைய அறுவடை பல லட்சம் கோடி] . இந்திய பாரளுமன்றம் வடிவம் மக்களை வாக்கு கூலிகளாகக்கி விட்டது ஆம் பணம் வாங்கி ஓட்டு போடும் நிலைக்கு தரம் தாழ்திவிட்டது. ஊழலில் சாதரண மக்களையும் பொருப்பாளியாக்கும் அல்லது பகிரும் நிலைக்கு வந்துள்ளது அரசு எந்திரம்.

சிபிஐ, சிபிஎம்மின் திருத்தல்வாதத்தை எதிர்த்து உருவான எம் எல் இயக்கமானது பல பிரிவுகளாக பிளவுண்டு, இன்று ஆங்காங்கே பிரதேசம் சார்ந்த - பகுதி சார்ந்த குழுக்களாக உள்ளது. ஒருபுறம் மார்க்சிய அரசியலை மக்களிடையே கொண்டு சென்று அவர்களை அணிதிரட்டுவதில் பின்னடைவை சந்தித்து வரும் வேளையில், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் புரட்சிகர குழுக்கள் பங்கேற்று, அங்கும் சட்டமன்ற- நாடாளுமன்ற அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்த வேண்டும் (ஆனால் அவை சாத்தியமானவையா என்றால் கேள்விகுறியே). சட்டமன்ற - நாடாளுமன்றங்களில் நடைபெறும் மக்கள் விரோத செயல்களை அனைத்து தளப் பிரதேசங்களுக்கும் (புரட்சிகர குழுக்கள் பலவீனமாக உள்ள மற்றும் தளப்பகுதிகள் நிறுவாத இடங்கள்) கொண்டுச் சென்று அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் ஆளும் வர்க்கங்களை அம்பலப்படுத்த வேண்டும். உழைக்கும் மக்கள் இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் வரையில், முதலாளித்துவ பாராளுமன்ற முறையில் பங்கெடுத்து அதனை அம்பலப்படுத்த வேண்டும் என்பது புரட்சிகர குழுக்களின் கடமையாகும். நடைமுறையில் இருக்கும் பாராளுமன்ற - சட்டமன்ற முறையானது பெரும்பான்மையாக இருக்கும் உழைக்கும் மக்களுக்கு எந்தவித தீர்வையும் தர இயலாது என்பதை மக்களிடம் பரப்புரை செய்வது தற்போதைய கடமையாகும்.

முடிவுரை:- சட்ட விரோதமான மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை இணைப்பதை செயல்தந்திரமாகக் கொண்டுள்ளதாக கூறிக் கொள்ளூம் மா-லெ அமைப்பு பாராளுமன்ற தேர்தலை புரட்சிகர அரசியல் பிரச்சாரத்திற்க்கு பயன்படுத்தி கொள்ளவதும், புரட்சிகர நட்பு சக்திகளை நேச அணிகளை, ஆளும் வர்க்க மற்றிடும் இதர வர்க்க அரசியல் கட்சிகளிடமிருந்து வென்றெடுக்கவும், பரந்த அரசியல் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடவும், புரட்சிகர சக்திகளை தக்கவைக்கவும், வர்க்க போராட்டத்தை வளர்தெடுக்கவும் இந்த தேர்தல் பிரச்சாரம் பயனலிக்கும், மற்றும் பாராளுமந்த்திற்கு வெளியிலான போராட்டங்களிலும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி புடம் போட்டு எடுக்கப் பட்ட தெளிவான அனுபவங்களைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் அவற்றை குறிப்பான சூழல்களுக்குத் தக்கவாறு இயங்கியல் ரீதியாக இணைக்க கற்று கொள்ள வேண்டும்.

இங்கே எழுத உதவிய நூல்கள்:-

(1). மாபெரும் விவாதம் சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் ஆவணங்கள்(1957-70)

(2). இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவ கோளாறு- லெனின்

(3). பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடுகாலி காவுட்ஸ்கியும் லெனின்

இலக்கு 17 இணைய இதழ் வெளியீடு

 

இலக்கு 17 இணைய இதழை இங்கே அழுத்தி PDF வடிவில் பெற்றுக் கொள்ளுங்கள்

இந்த இதழில் பெசப் பட்டுள்ள தலைப்புகள்

1. மார்க்சிய (இயக்கவியல் பொருள்முதல்வாத) தத்துவம் பயிலுவோம். பகுதி-2- தேன்மொழி

 2. அரசு உலர்ந்து உதிரும். என்றால் அதற்கு பலாத்காரப் புரட்சியின் அவசியம் ஏன்?- தேன்மொழி 

 3. டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு-சிபி 

 4. பாராளுமன்றத்தை பாட்டாளி வர்க்க கட்சி கையாளுவதை பற்றிய ஒரு தேடுதல்-சிபி 

 5. இருவேறு இந்தியா-சிபி. 

 6. மதவாதிகளின் சிம்மசொப்பனமாக விளங்கிய விஞ்ஞானி! - கலீலியோ கலிலி-சிபி.

அரசு உலர்ந்து உதிரும். என்றால் அதற்கு பலாத்காரப் புரட்சியின் அவசியம் ஏன்?- தேன்மொழி

 அரசு "உலர்ந்து உதிர்வது" பற்றி எங்கெல்ஸ் கூறிய சொற்கள் மிகவும் பிரபலமானவை; அடிக்கடி மேற்கோளாய் எடுத்தாளப்படுபவை; மார்க்சியத்தை சந்தர்ப்பவாதத்துக்கு இசைவானதாக ஆக்குவதற்காக வழக்கமாகச் செய்யப்படும் புரட்டின் சாரப் பொருளை மிகத்தெளிவாகப் புலப்படுத்து பவை. ஆகவே இவற்றை நாம் விவரமாகப் பரிசீலிக்க வேண்டும்..

இவை எங்கிருந்து எடுக்கப்பட்டனவோ அந்த வாக்குவாதம் முழுவதையுமே நாம் மேற்கோளாய்த் தந்தாக வேண்டும்.

"பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி உற்பத்திச் சாதனங்களை முதலில்அரசுடமை ஆக்குகின்றது. 

ஆனால் இதன் மூலம் அது, பாட்டாளி வர்க்கமாகத் தான் இருத்தலை ஒழித்துக் கொள்கிறது. எல்லா வர்க்க வேறுபாடுகளையும் வர்க்கப் பகைமைகளையும் ஒழித்திடுகிறது. அரசு அரசாக இருத்தலையும் ஒழித்திடுகிறது. இதுவரை சமுதாயம் வர்க்கப் பகைமைகளின் அடிப்படையில் அமைந்திருந்ததால் அதற்கு அரசு தேவைப்பட்டது; அதாவது, குறிப்பிட்ட சுரண்டும் வர்க்கத்துக்கான ஒழுங்கமைப்பு ஒன்று தேவைப்பட்டது. இந்த சுரண்டும் வர்க்கத்துக்குரிய பொருளுற்பத்திப் புறநிலைமைகளை நிலைநாட்டுவதற்காகவும், அதன்பொருட்டு இன்னும் முக்கியமாய், சுரண்டப்படும் வர்க்கத்தை அந்தந்தப் பொருளுற்பத்தி அமைப்பாலும் (அடிமைமுறை, பண்ணையடிமைமுறை, கூலிஉழைப்புமுறை) நிர்ணயிக்கப்படும் ஒடுக்குமுறை நிலைமைகளில் பலவந்தமாய் இருத்தி வைப்பதற்காகவும் இந்த சமுதாயத்திற்கு அரசு தேவைப்பட்டது. சமுதாயம் அனைத்தின் அதிகாரப்பூர்வமானபிரதிநிதியாக, கண்கூடான அதன் உருவகத் திரட்சியாக அரசு விளங்கிற்று. ஆனால் எந்தவர்க்கம் தன்னுடைய காலத்தில் சமுதாயம் முழுவதுக்கும் தானே பிரதிநிதியாக இருந்ததோ அந்த வர்க்கத்தின் அரசாய் இருந்த அரசுக்குக்குத்தான், அதாவது புராதன காலத்தில் அடிமையுடமைக் குடிகளின் அரசாகவும், இடைக்காலத்தில் பிரபுக்களின் அரசாகவும், நாம்வாழும் இக்காலத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசாகவும் இருந்த அளவுக்குத்தான், அரசால் இவ்வாறு விளங்க முடிந்தது. இறுதியில் அரசானது சமுதாயம் முழுமைக்கும் மெய்யான பிரதிநிதியாக ஆகிவிடும்போது, அது தன்னை தேவையற்றதாகஆக்கிக்கொள்கிறது. இனி கீழ்படுத்தி வைக்க வேண்டிய சமூக வர்க்கம் எதுவும் இல்லாமல் போனதும், வர்க்க ஆதிக்கமும் பொருள் உற்பத்தி முறையில் தற்போதுள்ள அராஜகத்தின் அடிப்படையில் நடைபெறும் தனியார் வாழ்வுப் போராட்டமும் இந்தப் போராட்டம் காரணமாய் எழும் மோதல்களும் மட்டுமீறிய செயல்களும் நீக்கப்பட்டதும், கீழ்ப்படுத்தி வைப்பதற்கு எதுவும் இல்லாமல்போகிறது, ஆதலால் தனிவகைப் பலவந்த சக்தியை - அரசினை - அவசியமாக்கும் எதுவும் இல்லாமல் போகிறது. அரசானது சமுதாயம் முழுமையின் பிரதிநிதியாக மெய்யாகவே முன்வந்து புரிந்திடும் முதலாவது செயல் - (அதாவது பொருளுற்பத்திச் சாதனங்களை சமுதாயத் தின் உடமையாக்கிக்கொள்ளும் இச் செயல்) அரசு என்ற முறையில் சுயேச்சையாய் அது புரிந்திடும் இறுதிச் செயலாகவும் அமைந்துவிடுகிறது. சமூக உறவுகளில் அரசின் தலையீடு ஒவ்வொரு துறை யிலுமாய்த் தேவையற்றதாகி, பிற்பாடு தானாகவே தணிந்து அணைந்து விடுகிறது. ஆட்களை ஆளும் அரசாங்கமானது பொருள்களது நிர்வகிப்பாய், பொருளுற் பத்தி வேலைகளது நடப்பாய் மாறி விடுகிறது. "அரசு ஒழிக்கப் படுவதில்லை" அது உலர்ந்து உதிர்ந்து விடுகிறது. "சுதந்திர மக்கள் அரசு" எனும் தொடர் எந்தளவுக்கு மதிக்கத்தக்கது என்பதையும் (கிளர்ச்சியை முன்னிட்டு சில நேரங்களில் எந்தளவுக்கு அதன்பிரயோகம் நியாயம் என்பதையும், முடிவில் விஞ்ஞான வடிவில் அது எவ்வளவு குறைபாடானது என்பதையும்) அராஜக வாதிகளுடைய கோரிக்கையாகச் சொல்லப் படும் ஒரே நொடியில் அரசுஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எந்தளவுக்கு மதிக்கத்தக்கது என்பதையும் மேற்கூறியது புலப்படுத்து கிறது "(விஞ்ஞானத்தில் திருவாளர் ஒய்கென் டூரிங்கின் புரட்சி [டூரிங்குக்கு மறுப்பு], பக்கங்கள் 301-303, மூன்றாவது ஜெர்மன் பதிப்பு). கருத்து வளத்தில் தலைசிறந்து விளங்கும் எங்கெல்சின் இந்த வாக்குவாதத்தில் ஒரேஒரு விவரம் மட்டும்தான் நவீனகால சோசலிஸ்டுக் கட்சிகளுடைய சோசலிச சிந்தனையில் இடம்பெறுகிற தெனத் திட்டமாய் கூறலாம். அரசு "ஒழிக்கப்பட வேண்டும்" என்னும் அராஜகவாதக் கோட்பாட்டுக்கு மாறாக, மார்க்சின் கருத்துப்படி அரசு "உலர்ந்து உதிர்ந்துவிடும்"என்கிற ஒரேஒரு விவரம் மட்டும்தான் ஏற்கப்பட்டுள்ளது. மார்க்சியத்தை இந்தளவுக்கு வெட்டிக் குறுக்குவதானது மார்க்சியத்தைச் சந்தர்ப்பவாதமாய்ச் சிறுமைப்படுத்துவதே அன்றி வேறல்ல. ஏனெனில் இந்த "வியாக்கியானம்" பாய்ச்சல்களும் சூறாவளிகளும் இல்லாமலே, புரட்சி இல்லாமலே, மெதுவாகவும், ஏன் பையப்பையவும்கூட நடந்தேறும் மாறுதல் என்கிற தெளிவற்ற கருத்தை மட்டும்தான் விட்டுவைக்கிறது. அரசு "உலர்ந்து உதிர்வது" பற்றி தற்போது பரவலாய் (பிரபலமாய் என்றுகூட சொல்லலாம்) நிலவும்கருத்தினை, புரட்சியை நிராகரிக்கும் கருத்தெனக் கொள்ளாவிடிலும், நிச்சயமாய் புரட்சியினைமுனை மழுங்கச் செய்யும் கருத்தெனக் கொள்ள வேண்டும்.

இது மார்க்சியத்தை அப்பட்டமாகத் திரித்துப் புரட்டும் வியாக்கியானமே ஆகும். முதலாளியவர்க்கத்துக்குத்தான் இதனால் அனுகூலம் அல்லது சாதகம் ஆகும். தத்துவத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கையில், உதாரணமா க மேலே நாம் முழுமையாக எடுத்து அளித்த எங்கெல்சின் "தொகுப்புரை" சுட்டிக்காட்டும் மிகவும் முக்கியமான நிலைமைகளையும் காரணக் கூறுகளையும் புறக்கணிப்பதையே இது அடிப்படையாகக் கொண்டுள்ளது..... லெனின், அரசும் புரட்சியும் லெனின் தொகுப்பு நால் 2, பக்கம் 228.... அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய மற்றும் அனைத்து மக்களின் நலன்களைப் பேணுகின்ற அரசு உருவானால், அது முதன்மையாகச் செய்யக் கூடிய காரியமானது அனைத்து உற்பத்திச் சாதனங்களையும் தனியாரிடமிருந்து பறித்தெடுத்து மக்களின் பொதுச்சொத்தாகமாற்றும், உழைக்கும் வர்க்கத்தை அடிமைப்பட்ட வர்க்கம் என்ற நிலையை மாற்றும், அனைத்துவகையான வர்க்க முரண்பாடுகளையும் ஒழித்துக்கட்டும். லாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முடிவுகட்டும், இறுதியில் அரசானது சமுதாயம் முழுமைக்கும் உண்மையான பிரதிநிதியாக மாறியவுடன் அரசு என்பது சமூகத்திற்கு தேவையில்லாததாக மாறி அரசானது உலர்ந்து உதிர்ந்துவிடுகிறது என்று எங்கெல்ஸ் கூறினார். இதன் மூலம் அரசானது ஒழிக்கப்பட முடியாது மாறாக அது தேவையற்றதாக மாறி உலர்ந்து உதிர்ந்துவிடும் என எங்கெல்ஸ் விளக்குகிறார். அதன் மூலம் அனைத்து மக்களின் உண்மையான பிரதிநிதியாகவுள்ள அரசின் தேவையையும் அத்தகைய அரசுஉருவாகி அரசின் அவசியம் தேவையில்லை என்ற சூழலை உருவாக்க வேண்டும் என்கிறார். அத்தகைய அரசை எப்படி உருவாக்குவது என்பதுதான் கேள்வியாகும். அனைத்து மக்களின் நலன்காக்கும் அரசை உருவாக்க எடுக்கப்படும் நடவடிக்கையை தற்போதைய ஆளும் வர்க்கம் அனுமதிக் குமா? நிச்சயம் அனுமதிக்காது, அத்தகைய நடவடிக்கையை தனது ஆயுத பலத்தால் பலாத்கார முறையிலேயே ஒடுக்குவதற்கு ஆளும்வர்க்கங்கள் முயற்சி செய்யும்.

ஆகவே அத்தகைய முயற்சியை ஒரு பலாத்காரமான புரட்சியின் மூலமாகவே ஆளும்வர்க்கங்களின் ஆட்சி அதிகாரத்தை வீழ்த்தி அனைத்து மக்களாலும் ஆதரிக்கப் படக் கூடியமக்களுக்கான அரசை நாம் உருவாக்க முடியும் என்பதே மார்க்சியம் காட்டும் வழியாகும்.

இதற்கு மாறாக அராஜகவாதிகள் அரசை ஒரேயடியாக ஒழிக்கவேண்டும் என்று வாதாடினார்கள். அவர்களுக்கு பதில் கொடுக்கும்போதுதான் எங்கெல்சின் மேலே கண்ட கருத்தை முன்வைத்து லெனின் அரசை ஒரேயடியாக ஒழிப்பது என்ற கருத்து மார்க்சியத்திற்கு எதிரானது என்றும். நிலவுகின்ற அரசை ஒரு புரட்சியின் மூலம் தூக்கியெறிந்து பாட்டாளிவர்க்கத்திற்கான அரசை உருவாக்க வேண்டும் என்ற பாட்டாளிவர்க்கத்தின் கடமையை அராஜக வாதிகள் புறக்கணிக்கிறார்கள் என்று லெனின் தெளிவுபடுத்தினார்.

ஆகவே அரசு உலர்ந்து உதிரும் என்ற போதிலும் நிலவுகின்ற அரசு உலர்ந்து உதிராது என்பதையும் சோசலிச அரசுதான் உலர்ந்து உதிரும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆகவே அரசின் தேவையில்லாத விஞ்ஞான கம்யூனிச சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டுமானால் உலர்ந்து உதிரக்கூடிய சோசலிச அரசை உழைக்கும் வர்க்கமானது ஒரு புரட்சியின் மூலம் உருவாக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு மாறாக பையபைய நிலவுகின்ற அரசானது சோசலிச அரசாக மாறிவிடும் என்று சொல்வது அரசு பற்றிய மார்க்சியக் கொள்கையை திருத்தும் திருத்தல் வாதமாகும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

முதலாவதாக, எங்கெல்ஸ் தமது உரையின் தொடக்கத்திலேயே, பாட்டாளிவர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் அது "அரசு அரசாய் இருத்தலை ஒழித்திடுகிறது"என்கிறார். இதன் பொருள் குறித்துசிந்திப்பது அவசியமெனக் கருதப்படுவ தில்லை. பொதுவாக இது சிறிதும் கவனியாது விடப்படுகிறது, அல்லது எங்கெல்சிடமிருந்த ஒருவகை "ஹெகலியப் பலவீனத்தின்" பாற்பட்டதாக இது கருதப்படுகிறது. ஆனால் உண்மை என்னவெனில், இச்சொற்கள் மாபெரும் பாட்டாளிவர்க்கப் புரட்சிகளில் ஒன்றான 1871ஆம் ஆண்டின் பாரீஸ்கம்யூனது அனுபவத்தைச் சுருக்கமாக எடுத்துரைக் கின்றன. இதுகுறித்து உரிய இடத்தில் நாம் விவரமாகப் பேசுவோம். உண்மை என்னவெனில், எங்கெல்ஸ் இங்கு பாட்டாளி வர்க்கப் புரட்சி முதலாளித்துவ அரசை "ஒழித்திடுவது" குறித்துப் பேசுகிறார். "அரசு உலர்ந்து உதிர்வது" பற்றிய சொற்கள் சோசலிசப் புரட்சிக்குப் பிற்பாடு பாட்டாளி வர்க்க அரசின் மிச்சங்களைக் குறிப்பன வாகும். எங்கெல்சின் கருத்துப்படி முதலாளித்துவ அரசு "உலர்ந்து உதிர்வதில்லை"புரட்சியின் மூலம் பாட்டாளி வர்க்கத்தால்"ஒழிக்கப்படுகிறது" இந்தப் புரட்சிக்குப் பிறகு உலர்ந்து உதிர்வது பாட்டாளிவர்க்க அரசு அல்லது அரை-அரசே ஆகும்.

இங்கே இரண்டுவகையான அரசுகளைப் பற்றி எங்கெல்ஸ் பேசுகிறார். ஒன்று சுரண்டும் வர்க்கத்திற்கான அரசு. அதாவது முதலாளித்துவ அரசு. இது சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட அரசாகும். இந்த அரசு உலர்ந்து உதிராது. மாறாக இந்த அரசை பாட்டாளிவர்க்கம் போராடி ஒழிக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு ஒழிக்கப்பட்ட அரசுக்குப் பதிலாக உருவாகும் அரசானது தொழிலாளர் வர்க்க அரசாகும். இந்த அரசில் முதலாளித்துவ சுரண்டல்கள் ஒழிக்கப்படும். இந்த அரசுதான் உலர்ந்து உதிரும் அரசாகும் என்று இந்த இரண்டு அரசுகளுக்கு இடையிலான வேறுபாட்டை எங்கெல்ஸ் விளக்கியுள்ளார்.

இரண்டாவதாக, அரசு என்பது "தனிவகைப் பட்ட பலவந்த சக்தி ஆகும்" தேர்ந்த தெளிவுடன் இங்கு எங்கெல்ஸ் இந்த அற்புதமான, ஆழ்ந்த பொருட்செறிவுள்ள இலக்கணத்தை வகுத்தளிக்கிறார். இதிலிருந்து பெறப்படுவது என்னவெனில், பாட்டாளி வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கம் அடக்குவதற்காக, கோடானகோடி உழைப்பாளி மக்களை ஒருசில செல்வந்தர்கள் ஒடுக்குவதற்காக அமைந்த "தனிவகைப்பட்ட பலவந்த சக்திக்குப்"பதிலாக, முதலாளித்துவ வர்க்கத்தைப் பாட்டாளிகள் அடக்குவதற்கான "தனிவகைப்பட்ட பலவந்த சக்தியை" (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை) அமைத்தாக வேண்டும். "அரசு அரசாய் இருத்தலை ஒழித்திடுவது"என்பதன் அர்த்தம் இதுவே ஆகும்.பொருளுற்பத்திச் சாதனங்களைச் சமுதாயத்தின் உடமையாக்கிக்கொள்ளும் "செயல்" இதுவேதான். ஒரு(முதலாளித்துவ) "தனிவகை சக்திக்குப்" பதிலாய் மற்றொரு (பாட்டாளி வர்க்க) "தனிவகை சக்தியை" இத்தகைய முறையில் அமைத்திடுவது "உலர்ந்து உதிரும்" வடிவில் நடைபெறுவது சாத்தியமில்லை. என்பது கூறாமலேயே விளங்கக் கூடியதாகும்.

"அரசு அரசாய் இருப்பதை ஒழிக்க வேண்டும்" என்று எங்கெல்ஸ் சொல்வதன் பொருள் என்ன?

உழைக்கும் மக்களை ஒருசில செல்வந்தர்கள் அடக்கி ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டபலவந்தமான சக்தியாகிய முதலாளித்துவ அரசுக்குப் பதிலாக கோடானுகோடி உழைக்கும் மக்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய செல்வந்தர் களை ஒடுக்குவதற்கான பலவந்தமான சக்தியை (பாட்டாளிவர்க்க அரசை) உருவாக்க வேண்டும் என்கிறார் எங்கெல்ஸ். அத்தகைய பலவந்தமான சக்தியான பாட்டாளி வர்க்க அரசுதான் "அரசு அரசாய் இருப்பதை ஒழிப்பதற்கான அரசு" என்று எங்கெல்ஸ் விளக்குகிறார். பொருளுற் பத்திச் சாதனங்களை சமுதாயத்தின் உடமையாக இந்த அரசு மாற்றுகிறது. அதன் காரணமாகவே இந்த அரசு உலர்ந்து உதிரும் அரசாக இருக்கிறது. இதற்கு மாற்றாக முதலாளித்துவ அரசில் பொருளுற்பத்திச் சாதனங்கள் சமுதாயத்தின் உடமையாக இருப்பதில்லை, மாறாக தனிப்பட்ட முதலாளிகளின் உடமையாக இருக்கின்ற காரணத்தால் இந்த முதலாளித்துவ அரசானது உலர்ந்து உதிராது, மாறாக இது ஒழிக்கப்பட வேண்டிய அரசாகவே இருக்கிறது என்பதை எங்கெல்ஸ் விளக்கியுள்ளார்.

மூன்றாவதாக, அரசு "உலர்ந்து உலர்வது" பற்றியும், இன்னும்கூட பளிச்சென விளங்கும் வண்ணம் கவர்ச்சிகரமாக அமைந்த "தானாகவே தணிந்து அணைந்து விடுவது" பற்றியும் பேசுகையில் எங்கெல்ஸ் "பொருளுற்பத்திச் சாதனங்களைச் சமுதாயம் அனைத்தின் உடமையாக்கிக் கொண்டதற்கு"பிற்பட்டக் காலத்தையே, அதாவது சோசலிசப் புரட்சிக்குப் பிற்பட்ட காலத்தையே மிகத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் குறிப்பிடுகிறார். இக்காலத்தில்"அரசின்"அரசியல் வடிவம் முழு அளவிலான முழு நிறைவான ஜனநாயகமாகும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆகவே எங்கெல்ஸ் இங்குஜனநாயகம் "தானாகவே தணிந்து அணைந்து விடுவது" அல்லது "உலர்ந்து உதிர்ந்து விடுவது" பற்றிப் பேசுகிறார்; வெட்க்கங்கெட்ட முறையில் மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டும் சந்தர்ப்பவாதிகள் யாருடைய மண்டையிலும் இது நுழைவதே இல்லை. முதல் பார்வைக்கு இது மிக்க வினோதமாகவேதோன்றுகிறது. ஆனால் ஜனநாயகம் என்பதும் ஓர் அரசே ஆகும், ஆதலால் அரசு மறையும்போது அதுவும் மறைந்தே ஆகவேண்டும் என்பது பற்றி ஆலோசிக்காதவர்களுக்குத்தான் இது "புரியாததாக" இருக்கும். புரட்சியால் மட்டுமேமுதலாளித்துவ அரசை" ஒழிக்க முடியும்". பொதுவாக அரசு எனப்படுவது, அதாவது முழுஅளவிலான, முழு நிறைவான ஜனநாயகம் எனப்படுவது "உலர்ந்து உதிரவே" முடியும்.

நெருப்பு தானாக எரிவதற்கான சூழலை ஒழித்துவிட்டால், நெருப்பானது தானாக தணிந்து அணைந்துவிடும் அல்லவா. அதுபோலவே அரசு அரசாக நீடிப்பதற்கு காரணமான முதலாளித்துவ சுரண்டலை ஒழித்துவிட்டால், எவர் ஒருவரும் பிறரை சுரண்டி வாழ முடியாத ஒரு சூழலை ஏற்படுத்திவிட்டால், ஒருவர் பிறரை சுரண்டித்தான் வாழ வேண்டும் என்ற நிலையை ஒழித்துவிட்டால், எவர் ஒருவரும் பிறரிடம் கூலி அடிமையாக இருந்துதான் வாழவேண்டும் என்ற சூழலை ஒழித்துவிட்டால், எவர் ஒருவரையும் அடக்கி ஆள வேண்டும் என்ற நிலை சமூகத்தில் ஒழிந்துவிடும். அப்போது பிறரை ஒடுக்கி ஆள்வதற்கான கருவியான அரசு என்பது சமூகத்திற்கு தேவையில்லாமல் போய்விடும். அரசானது அதன் தன்மையை இழந்துஇல்லாமல் போய்விடும் என்கிறார் எங்கெல்ஸ்.

நான்காவதாக "அரசு உலர்ந்து உதிர்கிறது" என்ற புகழ்பெற்ற தமது கோட்பாட்டை வகுத்தளித்ததும் எங்கெல்ஸ் இந்தக் கோட்பாடு சந்தர்ப்பவாதிகள், அராஜகவாதி கள் ஆகிய இரு சாராரின் கூற்றுக்கும் எதிரானது என்பதை திட்டவட்டமாய் உடனே விளக்குகிறார்.

இவ்வாறு விளக்குகையில், "அரசு உலர்ந்து உதிர்கிறது" என்ற நிர்ணயிப்பிலிருந்து பெறப்படுவதில் சந்தர்ப்பவாதிகளுக்கு விரோதமான முடிவை எங்கல்ஸ் முன்னணியிலேயே நிறுத்துகிறார்.

"அரசு உலர்ந்து உதிர்வது" பற்றி படித்தோ, கேட்டோ இருப்போரில் பத்தாயிரத்தில் 9990 பேர்எங்கெல்ஸ் எடுத்துரைத்த முடிவுகள் விரோதமாக இருந்தது அராஜகவாதிகளுக்கு மட்டுமல்ல என்பதைச் சிறிதும் உணராதவர்களாகவோ ஞாபகத்தில்வைத்திராதவர்களாகவோதான் இருப்பார் கள் என்று பந்தயம் கட்டலாம். எஞ்சியுள்ள பத்துப் பேரில், ஒன்பது பேர் "சுதந்திர மக்கள் அரசு" என்பதன் பொருள் தெரியாதவர் களாகவோ, இந்த முழக்கத்தைத் தாக்குவதுசந்தர்ப்பவாதிகளைத் தாக்குவதாக அமைவது ஏனென்று அறியாதவர்களா கத்தான் இருப்பார்கள். வரலாறு இவ்விதம்தான் எழுதப்படுகிறது! மாபெரும் புரட்சிப் போதனை இவ்விதம்தான் சன்னம் சன்னமாய் பொய்யாகத் திருத்திக் கூறப்பட்டு நடப்பிலுள்ள அற்பவாதத்துக்கு ஏற்றதாக்கப் படுகிறது. அராஜகவாதி களுக்கு விரோதமான முடிவு ஆயிரக்கணக்கான முறை திரும்பத் திரும்ப பறைசாற்றப்பட்டிருக்கிறது; கொச்சைப் படுத்தப்பட்டு படுமோசமான வடிவத்தில் மக்களுடைய மனதில் ஆழப் பதிக்கப்பட்டுதப்பெண்ணமாய் இறுகிவிடும்படி வளர்க்கப் பட்டிருக்கிறது. ஆனால் சந்தர்ப்பவாதி களுக்கு விரோதமான முடிவு மழுங்கடிக்கப்பட்டு"மறக்கப்பட்டுவிட்டது".

"அரசு உலர்ந்து உதிர்கிறது" என்ற புகழ்பெற்ற கோட்பாடு, அராஜகவாதி களுக்கு மட்டுமல்லசந்தர்ப்பவாதிகளுக்கும் எதிரான கோட்பாடாகும் என்று எங்கெல்ஸ் விளக்கினார்.அராஜகவாதிகள் அரசை ஒரேஅடியாக ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். சந்தர்ப்பவாதிகள் அரசை பையப்பைய ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் அரசானது முற்றிலும் தேவையில்லாத நிலை ஏற்படும் என்றும் அப்போது அது தானாகவே உலர்ந்து உதிர்ந்துவிடும் என்றார் எங்கெல்ஸ். அதே வேளையில் முதலாளித்துவ அரசைத்தான் உழைக்கும் மக்கள் ஒழிக்க வேண்டும் என்றும் அதனிடத்தில் உழைக்கும் மக்களுக்கான அரசை உருவாக்க வேண்டும் என்றார் எங்கெல்ஸ். அதாவது முதலாளித் துவ அரசை ஒழிப்பதன் மூலம் அரசே இல்லாத நிலையை ஏற்படுத்த முடியாது. அரசே இல்லாத நிலையை ஏற்படுத்து வதற்கு முன்பு உழைக்கும் மக்களுக்கான அரசை உருவாக்குவதோடு கூடவே உற்பத்திச் சாதனங்களை முதலாளிகளிட மிருந்து பறிமுதல் செய்து அதனை மக்களின் சொத்தாக மாற்றிட வேண்டும் என்ற முன்நிபந்தனையை எக்கெல்ஸ் வைக்கிறார்."சுதந்திர மக்கள் அரசு" என்பது 1870 - 80ஆம் ஆண்டுகளில் ஜெர்மன் சமூக-

ஜனநாயகவாதிகளது வேலைத்திட்டத்தில் குறிக்கப்பட்ட கோரிக்கையாக அமைந்து அவர்களிடையே பெருவழக்கமாகிவிட்டமுழக்கமாக இருந்தது. இந்த முழக்கம் ஜனநாயகம் என்னும் கருத்தோட்டத்தை ஆடம்பரமான அற்பவாதப் பாணியில் சித்தரிக்கிறது என்பதைத் தவிர வேறு அரசியல் உள்ளடக்கம் சிறிதும் இல்லாததே ஆகும். சட்டமுறையில் அனுமதிக்கப்பட்ட வழியில் சூசகமாக அது ஜனநாயகக் குடியரசை குறித்தவரை, கிளர்ச்சியை முன்னிட்டு "சில நேரங்களில்"அதை பிரயோகிப்பது "நியாயமே" என்பதை எங்கெல்ஸ் ஏற்றுக் கொண்டார். ஆனால் அது சந்தர்ப்பவாத முழக்கமே ஆகும். ஏனெனில் அது முதலாளித்துவ ஜனநாயகத்துக்கு மெருகிட்டு மினுக்கச் செய்வதுடன் நில்லாமல், பொதுவாக அரசு குறித்த சோசலிச விமர்சனத்தைப் புரிந்துகொள்ளவும் தவறிவிடுகிறது. ஜனநாயகக் குடியரசானது முதலாளித்துவத்தில் பாட்டாளி வர்க்கத்துக்கு மிகச் சிறந்த அரசு அமைப்பாகுமென நாமும் அதனை ஆதரிக்கிறோம். ஆனால் மிகவும் ஜனநாயகமான முதலாளித்துவ குடியரசிலுங்கூட கூலிஅடிமையிலேயேதான் மக்கள் உழல வேண்டிருக்கிறது என்பதை மறக்க நமக்கு உரிமை இல்லை. மேலும் ஒவ்வொரு அரசும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை அடக்கி ஆளுவதற்கான "தனிவகை" சக்தியே ஆகும். ஆகவே, எந்தவொரு அரசும் சுதந்திரமானதும் அல்ல, மக்கள்அரசும் அல்ல. மார்க்சும், எங்கெல்சும் 1870 - 80ஆம் ஆண்டுகளில் தமது கட்சித் தோழர்களுக்கு இதைத் திரும்பத் திரும்ப விளக்கிக் கூறினார்கள்.

ஜனநாயகம் என்பதும், ஜனநாயக அரசு என்பதும் அதற்கு முன்பு இருந்த அரசுகளைக் காட்டிலும் உயர்வானதே என்பதை எங்கெல்ஸ் ஏற்றுக்கொள்கிறார். எனினும் மிகச்சிறந்த ஜனநாயக அரசு என்றாலும், அந்த அரசிலும் உழைக்கும் மக்கள் கூலிஅடிமை முறையில்தான் வாழ வேண்டிய நிலையில் உள்ளார்கள் என்பதை எங்கெல்ஸ் எடுத்துக்காட்டுகிறார். ஆகவே உழைக்கும் மக்களை கூலி அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க வேண்டுமானால் இந்த முதலாளித்துவ ஜனநாயக அரசை ஒழித்துவிட்டு பாட்டாளி வர்க்க ஜனநாயக அரசை உருவாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதே எங்கெல்சின் வாதமாக உள்ளது. இந்தகருத்துக்களை மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ், அவர்களின் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களிடம் பிரச்சாரம் செய்துகொண்டே இருந்தனர். ஆனால் அவர்களின் கொள்கைகளை பின்பற்று வதாகச் சொல்லுகின்ற இன்றைய (போலி)கம்யூனிஸ்டுகள் அரசு பற்றிய மார்க்சியக்

கொள்கைகளைப் பற்றி உழைக்கும் மக்களிடம் பேசுவதே இல்லை. அதற்கு மாறாக அந்தக்கொள்கைகளை திருத்தி உழைக்கும் மக்களிடம் விளக்கம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆகவே உண்மை யான கம்யூனிஸ்டுகள் அரசு பற்றிய மார்க்சிய கொள்கைகளை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் இன்றைய சூழலுக்கு ஏற்ப போராடி உண்மையான உழைக்கும் மக்களுக்கான அரசை உருவாக்கி உற்பத்திச் சாதனங்களை பொதுவுடமை ஆக்க வேண்டும்.

ஐந்தாவதாக, அரசு உலர்ந்து உதிர்வது பற்றிய கருத்து (யாரும் மறக்காது நினைவில் கொண்டுள்ள இந்த கருத்து) காணப்படும் எங்கெல்சின் அதே நூலில், பலாத்காரப் புரட்சியின் முக்கியத்துவம் குறித்த கருத்தும் அடங்கியுள்ளது. பலாத்காரப் புரட்சியின் பாத்திரம் குறித்து

எங்கெல்ஸ் அளிக்கும் வரலாற்று வழிப்பட்ட பகுத்தாய்வு, பலாத்காரப் புரட்சியைப் போற்றும் மெய்யான புகழுரையாகி விடுகிறது. இது "யாருக்கும் நினைவில்லை" நவீனகால சோசலிஸ்டுக்

கட்சிகளில் இந்தக் கருத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசுவதும், ஏன் நினைப்பதும்கூட

தகாததாகிவிட்டது. இக்கட்சிகள் மக்களிடை யே நடத்தும் அன்றாடப் பிரச்சாரத்திலும் கிளர்ச்சியிலும் இக்கருத்துக்கு எவ்விதமான பங்கும் அளிக்கப்படுவதில்லை. ஆயினும் இக்கருத்து"அரசு உலர்ந்து உதிரும்" கருத்துடன் பிரிக்க முடியாதபடி இணைந்ததாகும்.

"அரசு உலர்ந்து உதிரும்" என்ற கருத்தை முன்வைத்த எங்கெல்ஸ், அதே வேளையில்உழைக்கும் மக்களின் பலாத்காரப் புரட்சியைப் பற்றியும் பேசுகிறார். ஒரு முதலாளித்துவ அரசை பையப்பைய அகற்ற முடியாது என்றும் அதனை பலாத்கார மாகவே அகற்ற முடியும் என்கிறார். ஏனென்றால் அமைதியான முறையில் ஒரு முதலாளித்துவ அரசை உழைக்கும் மக்கள் அகற்றுவதற்கு முயன்றால், நிலவுகின்ற முதலாளித்துவ அரசானது உழைக்கும் மக்களை அதற்கு அனுமதிக்காது. உதாரணமாக இந்தியாவில் கார்ப்பரேட் முதலாளிகள் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பிச் செலுத்த மறுப்பதை எதிர்த்து மக்கள் போராடினால் அந்த மக்களை தனது ஆயுத பலத்தால் ஒடுக்குவதை நாம் அன்றாடம் காணலாம். இவ்வாறுஇவ்வாறு கார்ப்பரேட் முதலாளிகளை எதிர்த்து உழைக்கும் மக்கள் போராடும் அன்றாடப்

போராட்டத்தையே அதனது ஆயுத பலத்தால் ஒடுக்கும் இந்த முதலாளித்துவ அரசானது இந்தமுதலாளித்துவ அரசை அகற்றுவதற் கான போராட்டத்தை எந்தளவுக்கு ஒடுக்கும் என்பதை நாம்புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே நிலவுகின்ற முதலாளித்துவ அரசை பலாத்காரமாகப் போராடித்தான் அகற்றிட வேண்டும் என்பது உழைக்கும் மக்களின் விருப்பம் இல்லை.

உழைக்கும் மக்கள் தங்களுக்கு எதிரான முதலாளித்துவ அரசை அமைதியான முறையிலேயே அகற்றுவதற்கு முயல்கிறார் கள். ஆனால் மக்களின் அமைதியான போராட்டங்களை எல்லாம் இரத்த வெள்ளத் தில் மூழ்கடித்ததுதான் இந்த முதலாளித்துவ அரசுகளின் வரலாறாக இருக்கிறது. இந்த வரலாற்று அனுபவத்திலிருந்தே மார்க்சும் எங்கெல்சும் பலாத்காரப் புரட்சியின் அவசியத்தை உழைக்கும் மக்களுக்கு தொடர்ந்து போதித்து வந்தனர்.

மார்க்சியத்தின் அரசு பற்றிய இந்தக் கருத்தை உழைக்கும் மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமை யாகும். இந்த கடமையைச் செய்ய மறுப்பவர்கள் கம்யூனிஸ்டாக இருக்கவே முடியாது. இந்தக் கருத்தை திருத்தி உழைக்கும் மக்களிடம் மார்க்சியத்திற்கு எதிரான கருத்தைப் பரப்புபவர்கள் திருத்தல்வாதிகள் மற்றும் கம்யூனிச இயக்கத்திற்குள் இருக்கும் முதலாளித்துவ பாதையாளர்கள் ஆவார்கள்.

இதோ இருக்கிறது எங்கெல்சின் கருத்து.

"....... ஆனால் வரலாற்றில், பலாத்காரம் இன்னொரு பாத்திரமும்"(பேய்த்தனமான சக்திக்குரியபாத்திரத்தை அன்னியில் இன்னொன்றும்)"ஆற்றுகிறது"புரட்சிப்பாத்திரமும் ஆற்றுகிறது.

மார்க்சின் சொற்களில் கூறுவதெனில், புதிய சமுதாயத்தைக் கருக்கொண்டுள்ள ஒவ்வொரு பழைய சமுதாயத்துக்கும் அந்தப் பலாத்காரம் மருத்துவத் தாதியாய் செயல்படுகிறது; சமூக இயக்கமானது செத்து மடிந்து இறுகிப்போய்விட்ட அரசியல் வடிவங்களைத் தகர்த்துக்கொண்டு பலவந்த மாய்த் தனக்கு பாதை வகுத்துக்கொள்ள உதவும் கருவியாய் செயல்படுகிறது. இவையெல்லாம் குறித்து திருவாளர் டூரிங் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதார முறையைக் கவிழ்க்கப் பலாத்காரம் ஒருவேளை அவசியம் ஆகிவிடலாம் என்ற ஏக்கத்தவிப்புக்கும்முனகலுக்கும் இடையே ஒருவாறு அவர் ஒத்துக்கொள்கிறார். - இது துரதிர்ஷ்டமே என்கிறார்,ஏனெனில் பலாத்காரத்தின் எவ்வகையான பிரயோகமும் அதைப் பிரயோகிப்பவரைச் சீரழிக்கச்செய்கிறதாம். வெற்றிகரமான ஒவ்வொரு புரட்சியும் அறநெறித் துறையிலும் ஆன்மீகத் துறையிலும் அளவுகடந்த ஆர்வமும் வேகமும் அளித்திடுவதைப் பொருட்படுத் தாமல் புறக்கணித்துவிட்டுக் கூறப்படுகிறது இது. அதுவும் ஜெர்மனியிலே, முப்பது ஆண்டுப் போரின் (முப்பது ஆண்டுப் போர் [1618 -48] முதலாவது பொது ஐரோப்பிய யுத்தம். ஐரோப்பிய அரசுகளது பல்வேறு கூட்டுகளுக்கும் இடையுயுள்ள முரண்பாடு கள் கடுமையாகியதால் இந்த யுத்தம் எழுந்தது. புரோட்டஸ்டென்டுகளுக்கும் கத்தோலிக்கர்களுக்குமான போராட்டத்தின் வடிவத்தில் இது வெளியாகியது. 

ஜெர்மனிதான் பிரதான போர் அரங்கும், இராணுவச் சூறையாடலுக்கும் கொள்ளைக் காரக் கோரிக்கைகளுக்குமான இலக்கும் ஆயிற்று. இந்த யுத்தம் வெஸ்ட்ஃபாலியா சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகியதுடன் முடிவுற்றது. ஜெர்மனி அரசியல் வழியில் சின்னாபின்னமாய்த் துண்டாடப்பட்டிருந் ததை இந்த ஒப்பந்தம் சட்டவடிவம் பெறச் செய்தது.) முப்பது ஆண்டுப் போரின் அவக்கேட்டைத் தொடர்ந்து தேச மனோபாவத்தில் ஊடுருவிவிட்ட அடிமை புத்தியானது பலாத்கார மோதலால் (மக்கள் இதில் இறங்கும்படியான நிர்பந்தம் ஏற்படுவது சாத்தியமே) ஒழித்துக்கட்டப்படும் என்ற அனுகூலமாவது கிட்டும் நிலையி லுள்ள ஜெர்மனியிலே, இது கூறப்படுகிறது. பாதிரியாருக்குரிய உப்புச் சப்பில்லாத, செயலிழந்த, கிழடுதட்டிய இந்தச் சிந்தனை இதுவரை வரலாறு கண்டறிந்த கட்சிகளில் மிகவும் புரட்சிகர கட்சியின் மீது தன்னை இருத்திக்கொண்டு விடலாமென நினைக்கிறது!"(பக்கம் 193, மூன்றாவது ஜெர்மன் பதிப்பு, பாகம்-2, அத்தியாயம்-4லின் முடிவில்) பலாத்காரப் புரட்சியைப் பேசும் இந்தப் புகழுரையை 1878க்கும் 1894க்கும் இடையில் (அதாவது அவர் இறக்கும் தருணம் வரையிலும்) ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகளின் கவனத்துக்கு ஓயாது கொண்டுவந்து கொண்டிருந்தார். இதனை யும் "அரசு உலர்ந்து உதிரும்" தத்துவத்தையும் இணைத்து ஒருமித்த ஒரே தத்துவமாக்குவது எப்படி?

எங்கெல்சின் சிறப்பு இதில்தான் அடங்கியுள்ளது. மக்களின் விடுதலைக்குஅவசியமான கருத்தை சரியாகப் புரிந்து கொண்டு அதனை கம்யூனிச அமைப்பைச் சேர்ந்த முன்னணிகளிடம் தொடர்ந்து விடாப்பிடியாகப் பிரச்சாரம் செய்தார். அவரது பிரச்சாரத்தை நாமும் தொடர்வதுதானே நாம் எங்கெல்சுக்கு கொடுக்கும் மரியாதையாகும்.

வழக்கமாய்க் கதம்பத் தேர்வுவாத வழியில், முதலில் ஒன்றும் பிற்பாடு மற்றொன்றுமாய்த்தான்தோன்றித்தனமாய் (ஆதிக்கம் செலுத்து வோர் மகிழும் பொருட்டு) கொள்கை கோட்பாடின்றி அல்லது குதற்கவாத முறையில் தேர்வு செய்யப்பட்டு இவை இரண்டும் இணைக்கப்படுகின்றன. நூற்றுக்கு தொன்னூற்றொன்பது சந்தர்ப்பங்களிலும் அதற்கும் கூடுதலாகவும் "உலர்ந்து உதிரும்" கருத்து முன்னணியிலே நிறுத்தப்படுகிறது. இயக்கவியல் கைவிடப்பட்டு அதற்குப் பதிலாய் கதம்பத் தேர்வுவாதம் கைக்கொள்ளப் படுகிறது. - மார்க்சியம் சம்பந்தமான அதிகாரப்பூர்வமான இன்றைய சமூக-ஜனநாயக வெளியீடுகளில் இதுவே மிகவும் பரவலாகக் காணப்படும் சர்வசாதாரண நடைமுறை ஆகும். இவ்வகையான மாறாட்டம்ஒன்றும் புதியதல்ல; முதுபெரும் கிரேக்கத் தத்துவியலின் வரலாற்றில்கூட காணப்பட்டது தான். சந்தர்ப்பவாத முறையில் மார்க்சியத்தைப் புரட்டிப் பொய்யாக்குவதில் இயக்கவியலுக்குப் பதிலாய்க் கதம்பத் தேர்வு வாதத்தை கைக்கொள்வதுதான் மக்களை ஏமாற்ற மிகவும் எளிய வழி. இது பிரமையான போலி மனநிறைவு அளிக்கிறது. நிகழ்ச்சிப் போக்கின் எல்லாத் தரப்புகளையும், வளர்ச்சியின் எல்லாப் போக்குகளையும், முரண்பட்டு மோதிக்கொள்ளும் எல்லாச் செயல்பாடுகளையும், இன்னபிறவற்றையும் இது கணக்கில் எடுத்துக் கொள்வதாய்த் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இது சமூக வளர்ச்சிப் போக்கைப் பற்றி முழுமையான ஒருமித்த புரட்சிகரக் கருத்தோட்டம் தருவதே இல்லை.

பலாத்காரப் புரட்சி தவிர்க்க முடியாது என்ற மார்க்ஸ், எங்கெல்சின் போதனை முதலாளித்துவ அரசை குறித்ததாகும் என்பதை நாம் ஏற்கனவே கூறியிருக்கிறோம். முதலாளித்துவ அரசை நீக்கி அதனிடத்தில் பாட்டாளி வர்க்க அரசை (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை) நிறுவுவது "உலர்ந்து உதிரும்" நிகழ்ச்சிப் போக்கின் வாயிலாய் நடந்தேற முடியாது; பொதுவிதிக்கு இணங்க இது பலாத்காரப் புரட்சியைப் போற்றும் எங்கெல்சின் புகழுரை மார்க்ஸ் திரும்பத் திரும்ப கூறியதற்கு முற்றிலும் இசைவானதே. (மெய்யறிவின் வறுமை, கம்யூனிஸ்டு அறிக்கை)இவற்றின் கடைசி வாசகங்கள் பலாத்காரப் புரட்சி தவிர்க்க முடியாது என்பதைப் பெருமிதத்தோடும் பகிரங்கமாகவும் பறைசாற்றுவதைப் பார்க்கவும்; இதன் பின் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்குப் பிற்பாடு, 1875ஆம் ஆண்டின் கோத்தா வேலைத் திட்டத்தை (கோத்தா வேலைத்திட்டம் - ஜெர்மனியின் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் கோத்தா காங்கிரஸ் 1875ல் ஏற்ற வேலைத்திட்டம். கோத்தா காங்கிரஸ் ஐசனாஹர்கள், லஸ்ஸாலியர்கள் ஆகிய இரு ஜெர்மன் சோசலிஸ்டுக் கட்சிகளையும் இணைத்தது. ஐசனாஹர்கள், ஔகுஸ்ட் பெபல், வில்ஹெல்ம் லீப்க்னெஹ்ட் தலைமையில் இருந்தனர்; இவர்கள் சித்தாந்த வழியில் மார்க்ஸ், எங்கெல்சின் செல்வாக்கு உட்பட்டவர்கள். கோத்தா வேலைத்திட்டம் கதம்பத் தேர்வு வாதத்தால் களங்கப்பட்டிருந்தது. ஐசனாஹர்கள் பிரதானப் பிரச்சனைகளில் லஸ்ஸாலியர் களுக்கு விட்டுக் கொடுத்து லஸ்ஸாலியர் களின் நிர்ணயிப்புகளை ஏற்றுக்கொண்டு விட்டதால் இந்த வேலைத்திட்டம் சந்தர்ப்பவாதத் தன்மை கொண்டிருந்தது.

1869ஆம் ஆண்டின் ஐசனாஹரின் வேலைத் திட்டத்துடன் ஒப்பிடுகையில் கோத்தா வேலைத்திட்டம் வெகுவாய்ப் பின்னோக்கிச் சென்றுவிட்டதென மார்க்சும், எங்கெல்சும்

கருதினர். மார்க்ஸ் அவருடைய கோத்தா வேலைத்திட்டம் பற்றிய விமர்சனத்திலும், எங்கெல்ஸ் 1875மார்ச் 18-28ல் பெபலுக்கு எழுதிய கடிதத்திலும் இந்த வேலைத்திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்து தாக்கினர்).

மார்க்ஸ் கோத்தா வேலைத்திட்டத்தை விமர்சனம் செய்கையில் அந்த வேலைத்திட்டத்தின் சந்தர்ப்பவாதத் தன்மையைத் தயவுதாட்சண்யமின்றி கண்டித்தார். எங்கெல்சின் இந்தப் புகழுரை வெறும் "உணர்ச்சி வேகமோ" உத்வேக முழக்கமோ, சண்டப் பிரசண்டமோ அல்ல. பலாத்காரப் புரட்சி பற்றிய திட்டவட்டமான இதே கருத்தோட்டத்தை முறையாய் வெகு ஜனங்களின் மனதில் ஆழப் பதியச் செய்வது அவசியம் என்பது மார்க்ஸ் எங்கெல்சின் போதனை அனைத்தின் ஆணிவேர் போன்றதாகும். இவர்களுடைய போதனைக்குத் தற்போது சமூக நடப் பிலுள்ள சமூக - தேசியவெறிப் போக்கும் காவுத்ஸ்கிவாதப் போக்கும் இழைத்துவரும்துரோகமானது, இந்தப் போக்குகள் இத்தகையப் பிரச்சாரத்தையும் கிளர்ச்சி யையும் கைவிட்டதில் மிகவும் எடுப்பாய் வெளிப்படுகிறது.வெறும் உணர்ச்சி வேகத்தின் காரணமாகவோ, உத்வேகமாக முழக்கமிட வேண்டும் என்பதற்காகவோ, சண்டப் பிரசண்டம் செய்ய வேண்டும் என்பதற் காகவோ மார்க்சும், எங்கெல்சும் பலாத்காரப் புரட்சி அவசியம் என்ற கருத்தை மக்களிடம் தொடர்ந்து பிரச்சாரம் செய்யவில்லை. மாறாக மனிதகுல வரலாற்றின் அனுபவத்தி லிருந்துதான் பலாத்காரப் புரட்சி என்ற கருத்தை மக்களிடம் முன்வைத்தார்கள். மன்னராட்சியிலிருந்து ஐரோப்பாவில் மாற்றம்ஏற்பட்டது ஒரு பலாத்காரப் புரட்சியின் மூலமாகத்தான். வரலாற்றில் பிரெஞ்சுப் புரட்சி என்று சொல்லப்படும் புகழ்பெற்ற முதலாளித்துவப் புரட்சியும் பலாத்காரத்தைப் பயன்படுத்தியே நடத்தப்பட்டது. அது போலவே முதலாளித்துவ அரசுகளுக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் நடத்தும் புரட்சியும் பலாத்காரத்தைப் பயன்படுத்தித்தான் நடைபெறும் என்று மார்க்சும் எங்கெல்சும் முடிவிற்கு வந்தது சமூக விஞ்ஞான அடிப்படையிலானதே ஆகும். மார்க்சினுடையகருத்துக்கு மாறாக சமூக தேசிய வெறியர்களும், காவுத்ஸ்கியவாதிகளும் மாறுபட்ட தவறான கருத்துக்களை முன் வைத்த போது மார்க்ஸ் அவர்களுடைய கருத்துக்களை எதிர்த்து விடாப்பிடியாகப் போராடினார். மார்க்சின் இந்தப் போராட்டமானது காவுத்ஸ்கி என்ற தனிநபரை எதிர்த்தப் போராட்டம் இல்லை. மாறாக காவுத்ஸ்கி கொண்டிருந்த மக்களுக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்தே மார்க்ஸ் போராடினார். மார்க்சைப் பின்பற்றும் கம்யூனிஸ்டுகளும் கம்யூனிச கொள்கை களுக்கு எதிராகவும் மக்களை ஏமாற்றும் மக்களுக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்து நாம் விடாப்பிடியாக மார்க்சியத்தை உயர்த்திப் பிடித்து போராட வேண்டும். நமது தோழர்களை எதிர்த்துப் பேசலாமா? என்று தயக்கம் காட்டக் கூடாது. தவறான கருத்துக்களை தயவுதாட்சண்யமின்றி உறுதியாக எதிர்த்துப்போராடுவதுதான் நாம் மார்க்ஸ் மற்றும் எங்கெல்சை மதிப்பது மற்றும் பின்பற்றுவதற் கான ஒரே அடையாளமாக இருக்கும்.

மார்க்ஸ் எங்கெல்சின் போதனைகளில் மிகவும் முதன்மையானது பலாத்காரப் புரட்சி பற்றிய இந்தப் போதனைதான். இந்தப் போதனையை தொடர்ந்து மக்களிடம் பிரச்சாரம் செய்பவர்கள்தான் உண்மையான கம்யூனிஸ்டுகள் என்று லெனின் நமக்கு வழிகாட்டுகிறார்.

மார்க்சியத்தின் இந்தப் போதனைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்யாதவர்களை நாம் கம்யூனிஸ்டுகள் என்று கருதக் கூடாது.இதனை பிரச்சாரம் செய்யாதவர்களையேகம்யூனிஸ்டாக கருத முடியாது என்றால் மார்க்சியத்தின் இந்த போதனைகளை திருத்தி மார்க்சியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களை என்னவென்று சொல்வது. அவர்களைத்தான் நாம் திருத்தல்வாதிகள் என்கிறோம்.

பலாத்காரப் புரட்சி இல்லாமல் முதலாளித் துவ அரசு பாட்டாளி வர்க்க அரசாய் மாற முடியாது.

பாட்டாளி வர்க்க அரசு, அதாவது பொதுவில் அரசு எனப்படுவது, "உலர்ந்து உதிரும்" நிகழ்ச்சிப் போக்கின் மூலமாகவே அன்றி வேறு எவ்வழியிலும் அகற்றப்பட முடியாது.

குறிப்பிட்ட புரட்சிகரச் சூழ்நிலை ஒவ்வொன் றையும் பரிசீலித்ததன் மூலமும், குறிப்பிட்ட புரட்சி ஒவ்வொன்றின் அனுபவத்தைப் பகுத்தாய்ந்ததன் மூலமும் மார்க்சும் எங்கெல்சும் இந்தக் கருத்துக்களை விவரமாகவும் ஸ்தூலமாகவும் விளக்கினார் கள். சந்தேகத்திற்கு இடமின்றி இதுவே அவர்களின் போதனையின் மிகவும் முக்கியமான பகுதியாகும். அரசை அராஜகவாதிகள் சொல்வதைப் போல ஒரேஅடியாக ஒழித்துவிட முடியாது.

சந்தர்ப்பவாதிகள் செல்வதுபோல பையப்பைய அரசை ஒழித்துவிட முடியாது என்பது மார்க்சியமாகும்.

மேலும் முதலாளித்து வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கும் முதலாளித்துவ அரசை உலர்ந்து உதிரும் முறையில் பாட்டாளி வர்க்க அரசாக மாற்ற முடியாது. மாறாக பலாத்காரத்தின் மூலமே, உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களின் மூலமே முதலாளித்துவ அரசை பாட்டாளி வர்க்க அரசாக மாற்ற முடியும்.

பாட்டாளி வர்க்க அரசானது முதலாளி வர்க்கங்களுக்குச் சொந்தமான பொருள் உற்பத்திச் சாதனங்களை பறிமுதல் செய்து உழைக்கும் மக்களின் உடமையாக மாற்றுவதன் மூலமே பாட்டாளிகளின் அரசை உலர்ந்து உதிரும் அரசாக மாற்ற முடியும்.

ஆகவே அரசே இல்லாத கம்யூனிச சமூகம் உருவாவதற்கு இடைக்கட்டமாக பாட்டாளிகளின் அரசான சோசலிச அரசை உருவாக்க வேண்டியது உழைக்கும் மக்களின் கடமையாகும்.

இதனை தேர்தல்களில் வெற்றி பெறுவதன் மூலம் உருவாக்க முடியாது. மாறாக பலாத்காரப்புரட்சி தவிர்க்க முடியாது என்ற போதனையே மார்க்சியத்தின் முதன்மை யான போதனை ஆகும்- தொடரும் தேன்மொழி

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்