தத்துவம் பயில்வோம் மார்க்சிய தத்துவம் பயில்வோம்-07

இங்கே கட்டுரையின் அறிமுகத்தை எழுதவும்...

முக்கியத் தலைப்பு 1

கருத்தினத்தின் வளர்ச்சி

விஞ்ஞானமும் தத்துவஞான சிந்தனையும் வளர்ச்சியடைந்ததுடன் வெகு நெருக்கமாக வரலாற்று வழியில் தத்துவ ஞானத்தின் உள்ளடக்கமும் மாறுதலடைந்தது. "தத்துவஞானம்" எனும் தொடர் பண்டை கிரேக்கர்களால் உருவாக்கப்பட்டது. இது Phile பற்று மற்றும் Sophia அறிவு எனும் இரண்டு கிரேக்கச் சொற்களில் இருந்து ஆக்கப் பெற்றது. இவ்வாறாக இலக்கியப் பொருளில் தத்துவ ஞானம் என்பது அறிவின் மீதான பற்று என்பதாகும். கிரேக்க கணித நிபுணரான பிதகோரஸ் தம்மைத் தத்துவஞானி என்று தாமே வருணித்துக் கொண்ட முதல் நபராவார் என்று ஒரு கதை நிலவுகிறது. அறிவைப் பெறுவதற்குரிய தனது ஆற்றல் பற்றி எவரும் மிகையாக மதிப்பிடுதல் கூடாது, ஆனால் அறிவின் பாலான பற்றுதல் எந்த ஒரு பகுத்தறிவுள்ள ஜீவனுக்கும் பொருந்தும் என்று அவர் கூறினார்.

ஆனால் ஒரு சொல்லின் ஆக்கம் பற்றிய விளக்கம், அந்தச் சொல் வெளிப்படுத்தும் விஞ்ஞானக் கருத்தினத்தின் சாராம்சத்தை வெளியிடப் போதுமானதல்ல.

தத்துவஞானம் வரலாற்றின் தொடக்கத்திலேயே புராதன இந்தியாவில், சீனாவில் மற்றும் எகிப்தில் தோன்றியது, ஆனால் கிரீஸில்தான் அது முதன்முதலில் சாஸ்த்ரீயமான வடிவத்தைப் பெற்றது.

வரலாற்றில் தத்துவஞானத்திற்கு உடனடி முன்னோடியாக இருந்த ஆகத் தொன்மையான அல்லது மேலும் நுட்பமாகக் கூறிடில் புராணக் கட்டுக்கதை ஆகும். இது ஆதி மனிதனது உணர்வில் எழுந்ததான இயலுலகின் கற்பனையான பிரதிபிம்பம் ஆகும். அவன் சுற்றுமிருந்த இயற்கையில் அகவளர்ச்சி வாழ்க்கை இருப்பதாக நினைத்தான். கற்பனை ஆவிகள் கடவுட்கள் இவற்றில் நம்பிக்கை வைத்திருக்கும் புராணக் கட்டுக் கதைகளில் உலகின் தோற்றம் மற்றும் சாரம் குறித்த பிரச்சினைகளுக்கு மாபெரும் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. கட்டுக் கதைகளில் ஆழ்ந்து மூழ்கிக் கிடந்த சமய உணர்வை எதிர்த்த போராட்டத்தில், உலகைப் பற்றிய பகுத்தறிவான விளக்கம் தரும் ஒரு முயற்சியாகத் தத்துவஞானம் பிறந்தது.

தத்துவஞானத்தின் தோற்றம் விஞ்ஞான அறிவின் துவக்கத்தோடும், தத்துவார்த்த விசாரணையின் தேவையோடும் வரலாற்று முறையில் ஒத்திருந்தது. உண்மையிலேயே, தத்துவஞானம்தான் தத்துவார்த்த அறிவின் முதல் வரலாற்று வடிவம் ஆகும். ஆரம்பத்தில் உலகம் பற்றிய சமய-புராண கருத்து நோக்கால் ஏற்கனவே எழுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு விடையளிக்க முயன்றது தத்துவஞானம். ஆனால் இந்தக் கேள்விகளைச் சமாளிக்க தத்துவஞானம் வேறு மார்க்கத்தை மேற்கொண்டது. அது தர்க்க நெறி மற்றும் நடைமுறை அனுபவம் இவற்றுடன் பொருந்திய தத்துவார்த்தப் பகுப்பாய்வினை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

ஆரம்ப கால கிரேக்க சிந்தனையாளர்கள் (தேல்ஸ், அனக்சிமெனஸ், அனக்சிமாண்டர், பர்மனைடிஸ், ஹெராகிளிடஸ் மற்றும் பிறர்) இயற்கையின் பலவகையான புலப்பாடுகளின் தோற்றத்தைப் புரிந்து கொள்வதிலேயே முக்கியமாயும் அக்கறை கொண்டிருந்தார்கள். இயற்கையான தத்துவஞானம் (இயற்கை சம்பந்தப்பட்ட தத்துவஞான போதனை) தத்துவஞான சிந்தனையின் முதல் வரலாற்று வடிவமாகும்.

தனித்துறைச் சிறப்புமிகு விஞ்ஞான அறிவு சேகரிக்கப்பட்டு, சிந்தனையாளர்கள் பிரத்தியேக விசாரணை முறைகளை அபிவிருத்தி செய்யத் தொடங்கினர். பண்டை உலகிலுங்கூட தத்துவார்த்த மற்றும் பிரயோக அறிவில் பாகுபாட்டு நடைமுறை ஏற்பட்டது. கணிதம், மருத்துவம், வானியல் மற்றும் இதர துறைகள் பிரிந்து சென்று தனியான அறிவுத்துறைப் பிரிவுகளை நிறுவிக் கொண்டன. ஆனால் தத்துவஞானத்தால் ஆய்வு செய்யப்படும் பிரச்சினைகளின் அளவுவீச்சுக் குறைவற்றதோடு அதற்கு இணையான வளர்ச்சி ஏற்பட்டது. முற்றுமான தத்துவஞான கருத்துப் படிவங்கள் ஆழமும் செழுமையும் பெற்றன. வேறு தத்துவஞான, பல்தத்துவங்களும் தனிப் பாணிகளும் தோன்றின. ஜீவிகள் அல்லது உயிர்வாழும் அனைத்தின் சாரம் பற்றிப் பயிற்றுவிக்கும் (Ontology) உயிர் தத்துவ ஆராய்ச்சி; (Epistemology) அறிவாதார தத்துவம் (Logic) தர்க்கநெறி சரியான முரணில்லா வாத முக சிந்தனையின் அறிவியல்; வரலாற்றின் தத்துவ இயல்; அறநெறி மற்றும் அழகியல் தத்துவம் போன்ற தத்துவஞான துறைகளிலும் எழுந்தன.

மறுமலர்ச்சியுகம் குறிப்பாயும் 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகள் இந்தப் பாகுபாட்டு நடைமுறையைத் துரிதப்படுத்தின. பொறித்துறை, பௌதிகம், வேதியியல், உயிரியல், சட்ட இயல், அரசியல் பொருளாதாரம் இவை விஞ்ஞான அறிவின் சுயேச்சையான துறைகளாக மலர்ந்தன. விஞ்ஞான அறிவுத் துறையில் ஏற்பட்டதான இந்த முற்போக்கான பணிப் பிரிவினை அறிவுத் துறை அமைப்பில் தத்துவஞானம் வகிக்கும் பாத்திரம் மற்றும் இடம் சம்பந்தமாக ஒரு பண்பியலான மாற்றத்தைக் கொண்டுவந்தது. தனித்துறை விஞ்ஞானங்களுடனான அதன் உறவிலும் மாற்றம் விளைத்தது. பொறித்துறை, பௌதிகம், வானியல், வேதியியல், உயிரியல், சட்டம், வரலாறு இத்தியாதிகளின் விசேஷப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் பணியில் தத்துவஞானத்தால் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இயலவில்லை. மறுபுறம் பொதுவான அறிவியல் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு, உலகக் கண்ணோட்டம் பற்றிய பிரச்சினையைத் தாக்குப்புடிக்கத் தயார் செய்து கொண்டது. இதில் தனித்துறை விஞ்ஞானங்களின் உதவி தேவைப்பட்டது, இவற்றை அவற்றின் அதிகார வரம்பின் அகத்தேயோ அல்லது அவற்றின் பிரத்தியேக முறைகளைக் கொண்டோ மட்டும் சமாளிக்க இயலவில்லை.

தத்துவஞானத்துக்கும் தனித்துறை விஞ்ஞானங்களுக்கும் இடையிலான உள் உறவுகள் மிகவும் சிக்கலானதாயும் முரண்பட்டதாயும் இருக்கின்றன என்பதை நாம் வரலாற்றில் இருந்து அறிவோம்.

இயற்கை விஞ்ஞானத்துக்கு எதிராக இயற்கையின் தத்துவ இயலையும், வரலாற்று விஞ்ஞானத்துக்கு எதிராக வரலாற்றின் தத்துவ இயலையும், சட்ட விஞ்ஞானத்துக்கு எதிராகச் சட்டத் தத்துவ இயலையும், வைக்கும் எண்ணத்துடன் சில தத்துவ இயலாளர் கலைக்களஞ்சிய பாணி தத்துவஞான அமைப்புகளை உருவாக்கினார்கள். தத்துவஞானம் நிச்சயமாகவும் அனுபவத்தின் எல்லைக்கு அப்பால் செல்ல முடியும், "இயல்கடந்ததான" அறிவை வழங்க முடியும் என்று இந்தத் தத்துவ இயலாளர் வழக்கமாக அனுமானித்தனர். இத்தகைய பிரமைகள் தனித்துறை அறிவியலின் வளர்ச்சியால் அம்பலப்படுத்தப்பட்டன. மேலும் இவை பௌதிகப் பிரச்சினைகளைப் பௌதிகம் மூலமும், வேதியியல் பிரச்சினைகளை வேதியியல் மூலமும் மட்டுமே தீர்த்துக்கொள்ள முடியும் என்பதை மெய்ப்படுத்திக் காட்டின.

அதே சமயம் தத்துவஞானத்தைத் தனித்துறை விஞ்ஞானத்தின் தரத்துக்கு இறக்குவது, உலகக் கண்ணோட்டத்தின் மிகவும் பொதுவான பிரச்சினைகளை அசட்டை செய்வது எனும் எதிரான போக்கு பல தத்துவ இயல் போதனைகளில் காணப்பட்டது. தனித்துறை அறிவியல் களின் குறிப்பாயும் கணிதம் மற்றும் பொறித் துறையின் வெற்றிகள் இவற்றை அடைய ஏதுவாக இருந்த முறைகளை ஆராயுமாறு தத்துவ இயலாளர்களைத் தூண்டின. இந்த முறைகளைத் தத்துவ இயலில் பயன்படுத்த முடியுமா என்று அவர்கள் பரிசீலித்தார்கள்.

ஆயினும் அறிவியலின் பாகுபாடும் தனிப்பயிற்சியும், இந்தத் தனித்துறை அறிவின் கட்டுக்கோப்பில் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகள் உள்ளன என்பதையும், இவற்றை தத்துவஞானமும் விஞ்ஞானங்களும் சேர்ந்து சமாளிக்க வேண்டும் என்பதையும் நிதர்சனப்படுத்திக் காட்டின. உண்மையில் இத்தகைய பிரச்சினைகளுக்கு அவற்றின் கூட்டுமுயற்சி மூலமே தீர்வுகாண முடியும். தத்துவஞானத்தால் மட்டுமே தீர்வுகாணத் தக்கதான ஒரு சில பிரத்தியேகமான தத்துவ இயல் பிரச்சினைகளும் உள்ளன. இதிலும்கூட தத்துவஞானம் விஞ்ஞான விவரங்களின் ஒட்டு மொத்தத்தையும் கைவசமுள்ள முன்னேற்றமான சமுதாய நடைமுறையினையும் சார்ந்து நின்றால் மட்டுமே பரிகாரம் காண முடியும்.

### 2. தத்துவஞானத்தின் அடிப்படை விஷயம்

தத்துவ ஞான போதனைகள் எத்துணை வகையானதாக இருப்பினும் சரி, அவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தமது பிரிநிலையின் தத்துவார்த்த முடிவாக ஜீவனுக்கும் உணர்வுக்கும் ஆன்மீகத் தன்மைக்கும் பொருள்வயத் தன்மைக்கும் உற்ற உறவு பற்றிய பிரச்சினையையே எடுத்தாளுகின்றன. "அனைத்து தத்துவ ஞானத்தின் குறிப்பாயும் மிகவும் அண்மியதான தத்துவ ஞானத்தின் மாபெரும் அடிப்படைப் பிரச்சினை சிந்தனைக்கும் ஜீவிக்கும் இடையிலான உறவு சம்பந்தப்பட்ட விஷயமே."¹

தத்துவ ஞானத்தின் அடிப்படை விஷயம் நமது வாழ்க்கையின் அடியாதார மெய் விவரங்களில் காணக் கிடக்கிறது. ஆம், உதாரணமாகப் பொருள்வகைப் புலப்பாடுகள் பௌதிக மற்றும் வேதியியல் புலப்பாடுகள் உள்ளன. அதோடு அகவகையான உணர்வு சிந்தனை போன்ற மானசிகமான புலப்பாடுகளும் உள்ளன. சிந்தனைக்கும் ஜீவிக்கும் இடையிலான இந்த வேற்றுமை மானுட உணர்வு மற்றும் நடத்தையின் எல்லாச் செயல்களிலும் பிரவேசிக்கிறது. ஒவ்வொரு நபரும் தன்னைச் சுற்றிலும் உள்ளவற்றில் இருந்து தன்னைத் தனிப்பிரித்துக் கொள்கிறார். தான் மற்றவை எல்லாவற்றிலும் இருந்தும் வேறானவன் என்று தானே உணர்கிறான். நாம் எந்தப் புலப்பாட்டை எடுத்துக் கவனித்தாலும் சரி அது ஒன்றா, பொருள்வகை (புறநிலைத் தன்மையது) அல்லது அகவகை (தன்னிலைத் தன்மையது) துறையில் எப்போதும் வைக்கப்பட்டிருக்கும். இருப்பினும் புறநிலைக்கும் அகநிலைக்கும் இடையிலான வேறுபாடுகள் இருந்த போதிலும், அவற்றின் இடையே திட்டவட்டமான தொடர்பு இருக்கிறது. இதனை நெருக்கமாகப் பரிசீலித்தால் இது சார்பு நிலை உறவு என்பது தெரியவரும். இதனால் எழும் கேள்வி: எது எதைச் சார்ந்து நிற்கிறது? எது காரணம்? எது விளைவு? மேலும் பொதுப் படக் கூறினால் எது முதலாவது, எது இரண்டாவது, புறநிலையா அகநிலையா, பொருள் வகையினதா அக வளர்ச்சி வகையினதா, அகப்பொருளா புறப்பொருளா?

இவ்வாறு, அகவள வகைகைக்கும் பொருள் வகைகைக்கும், இடையே உணர்வுக்கும் உயிருக்கும் ஜீவிக்கும் இடையே அகநிலைக்கும் புறநிலைக்கும் இடையேயான உறவு பற்றிய விஷயம் நமது வாழ்க்கையின் அடிப்படைக் காரணிகளில் வேரூன்றி நிற்கிறது. பொருள் வகைப் புலப்பாடுகள் இயற்கைச் சேர்மங்கள் பௌதிக வேதியியல் நடப்புகள் நிலவுகின்றன. அவற்றோடு கூடவே, உணர்வு சிந்தனை இத்தியாதி அகவளர்ச்சி மானசிகப் புலப்பாடுகளும் உள்ளன. இதனால் தான் எங்கெல்ஸ், அகவளர்ச்சி வகை மற்றும் பொருள் வகைத் தன்மைகள் இடையிலான உறவுகள் பற்றிய விஷயம் என்று கூறுகிறார்.

மார்க்சுக்கு முந்திய சிந்தனையாளர் மத்தியில், பொருள் முதல்வாத தத்துவ இயலாளரான லுத்விக் ஃபாயர்பாக், அடிப்படை தத்துவ ஞானப் பிரச்சினையின் பொருளையும் முக்கியத்துவத்தையும் கிட்டத்தட்ட சரியாகப் புரிந்து கொண்டு அணுகினார் எனலாம். உலகம் இயல் கடந்த தெய்விக சக்திகளால், கடவுளால் படைக்கப்பட்டது எனும் சமய போதனையைக் கண்டன விமர்சனம் செய்த ஃபாயர்பாக், அகவள வகைத் தன்மையானது பொருள் வகைத் தன்மையில் இருந்தே எழுகிறது எனும் நேர் எதிரான கருத்தை வெளியிட்டார். தத்துவ ஞானத்தின் அடிப்படைப் பிரச்சினைக்கான சீரான விஞ்ஞான பூர்வமான தீர்வை மார்க்சியம் வழங்கியது. அது உணர்வை மிகவும் உயர்விதத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட பருப்பொருளின் பொதுப் பண்பாகக் கருதியதோடு நின்றுவிடவில்லை. அதற்கும் மேலே சென்று சமுதாய உணர்வைப் பரிசீலனை செய்தது, அதை சமூக ஜீவியின், சமுதாயத்தின் பொருளாயத வாழ்வின் பிரதிபலிப்பு என்று வரையறுத்தது.

எனவே, அகவளர்ச்சித் தன்மை பொருள் வகைத் தன்மையுடன் எவ்வாறு உறவு பூண்டிருக்கிறது, உணர்வு எவ்வாறு எதார்த்த உலகடன் உறவு கொண்டுள்ளது என்பதே அடிப்படை தத்துவ இயல் பிரச்சினையாகும். "இந்தக் கேள்விக்குத் தத்துவவியலாளர் அளித்த விடை அவர்களை இருமுகாம்களாகப் பிரித்து வைத்தது. அக வளர்ச்சித் தன்மை இயற்கைக்கு முன்னிலையானது என்று வலியுறுத்தி அதுவே இறுதியில் உலகை ஏதேனும் ஒரு வடிவில் படைத்தளித்தது என்று வாதிப்போர் கருத்து முதல் வாத முகாமைச் சேர்ந்தவர்களாயினர். இயற்கையே முதல் என்று கருதியவர்கள் பொருள்முதல் வாதத்தின் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்தவர்களாவர்." என்று எங்கெல்ஸ் எழுதினார்.

¹ பி. எங்கெல்ஸ், லுத்விக் ஃபாயர்பாக்கும் ஜெர்மன் தத்துவ இயலின் முடிவும். கா. மார்க்ஸ்-பி. எங்கெல்ஸ், தேர்வு நூல்கள், மூன்று தொகுதிகளில், தொகுதி 3, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1970 பக். 345.

.

முக்கியத் தலைப்பு 2

விவரங்களை இங்கே இடவும்.


தொடர்புடைய கட்டுரைகள்:

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்