இலக்கு 23 இணைய இதழ் PDF வடிவில்

தோழர்களே இலக்கு 23 இணைய இதழை இந்த லிங்கை அழுத்தி PDF வடிவில் நீங்கள் பதிவிறக்கம் செய்து வாசிக்கலாம் 

இந்த இதழில் பேசப்பட்டுள்ள கட்டுரைகள்


இந்திய விவசாயப் பிரச்சனைகள். பகுதி - 1 தேன்மொழி

நாட்டுப்புற ஏழை மக்களுக்கு - லெனின் ; சமூக  ஜனநாயகவாதி கள் எதை விரும்புகிறார்கள் என்பது பற்றி விவசாயிகளுக்கான விளக்கம் பகுதி  1.-தேன்மொழி

சமூக விஞ்ஞானம் -பாகம்– 2 தேன்மொழி.

முரண்பாடு பற்றி - மாவோ. பகுதி - 1- தேன்மொழி

மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம் பயிலுவோம். பகுதி - 4.    பொருள்முதல்வாதம்.- தேன்மொழி

சோவியத்து சோசலிச குடியரசும், இந்திய பிற்போக்கு அரசும்.

இந்திய இடதுசாரி இயக்கங்களின் மீதான ஒர் ஆய்வு- சிபி. 

மேதின வரலாறு

 


மே தின வரலாறு

 

முதலாளிய உற்பத்தியில் கடுமையான போட்டி நிலவியது தொடக்கத்தில் 14 மணிமுதல் 18 மணிநேரம் வரை தொழிலாளர்கள் உழைக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். இக்கொடிய உழைப்புச் சுரண்டலால் எண்ணற்ற தொழிலாளர்கள் தொழிற்சாலைகளிலேயே மடிந்தனர். உயிரையே உண்ணும் உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகத் தொழிலாளர்கள் அணிதிரண்டனர். தொழிற்சங்கம் அமைத்தனர். இதை எதிர்த்து அவ்வப்போது வேலை நிறுத்தங்களும் போராட்டங்களும் நடக்கும். குறிப்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற சாசன இயக்கம் இதில் பிரபலமானது. அதேபோல, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தில்தான் முதல்முறையாக 8 மணி நேர வேலை என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வரிசையில் 1886ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த தொழிலாளர் போராட்டமும் ஹேமார்க்கெட் படுகொலை சம்பவமும் தொழிலாளர் போராட்டங்களின் மைல் கற்கள்.1889ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி அன்று பாரிசில் நடந்த சர்வதேச தொழிலாளர் கூட்டத்தில், 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், 1890ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி அன்று உலகளாவிய தொழிலாளர்கள் நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலின் விளைவாகத்தான் ஆண்டுதோறும் மே 1 தொழிலாளர் நாள் கொண்டாடப்படுகிறது. 

தொழிலாளர் போராட்டம்

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக தொழிற்துறை வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத் தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists) ஆகும். சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கையாகும்.

ரஷ்யாவில் மே தினம்

ஜாரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 -1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலைநிறுத்தங்கள்நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில்லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில்

அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர்.அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்புஎன்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 11886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

சிக்காகோ பேரெழுச்சி

மே 3, 1886 அன்று மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 211886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. ந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டிஅந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கறுப்பு தினம்

நவம்பர் 111887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.

அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

அனைத்து நாடுகளிலும் மே தினம்

1889ஜூலை4 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் சங்கம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிக்க வழிவகுத்தது. 1890ஆம் ஆண்டு அய்ரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் மே நாள் கொண்டாடப்பட்டது.

1893-இல் இரண்டாம் அகிலத்தின் கூட்டம் ஜுரிச்சில் நடைபெற்றது. அம்மாநாட்டில், “உழைக்கும் வர்க்கத்தின் முதன்மையான நோக்கம் சமூக மாற்றத் தின் மூலம் வர்க்க வேறுபாடுகளை அழித்தொழிப்பது மற்றும் உலகம் முழுவதும் எல்லா மக்களுக்கும் அமைதியை ஏற்படுத்துவது ஆகும்.  இம்மாநாட்டில் எங்கெல்சு கலந்து கொண்டார், எனவே எங்கெல்சு வாழ்ந்த காலத்திலேயே மே நாள் என்பது உழைக்கும் மக்கள் அனைவரின் ஒட்டுமொத்த விடுதலைக்கான குறிக்கோளை அடைவதற்கான போராட்டத்தை உழைக்கும் வர்க்கம் சூளுரைக்கும் நாள் என்பது தெளிவாக்கப்பட்டது.

8 மணிநேர வேலை என்பதில் வெற்றி கண்ட பின், தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பான சூழ்நிலை, வீட்டு வசதி, தொழிற்சாலைகளில் நியாயமான விலையில் உணவு, மருத்துவ வசதி, போனஸ், வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் முதலான கோரிக்கைகளை முன்னிறுத் தித் தொடர்ந்து போராடின, 1917இல் இரஷ்யப் புரட்சி வெற்றி பெற்று சோசலிச சோவியத் நாடு அமைந்த பின், அங்கு தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம், ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பு வேகமாக உயர்ந்தது. உலகத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத் துக்கு இது உந்து விசையாக விளங்கியது.

இந்தியாவில் மே தினம்:- இந்தியாவில் சென்னை மாநகரில் 1923-ஆம் ஆண்டில் மெரீனா கடற்கரை மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் முதன் முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. 1922ஆம் ஆண்டு ஜூலை மாதம் மெட்ராஸ் அலுமினிய தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். இதை வழி நடத்தியவர் சிங்காரவேலர் என்ற கம்யூனிச சிந்தனை கொண்ட காங்கிரஸ்வாதி. இதற்கு முன்னதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் அருகே கடற்கரையில் அடிக்கடி தொழிலாளர்கள் கூட்டத்தை நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார் சிங்காரவேலர். இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த தொழிலாளர் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட நாள், இந்தியாவின் முதல் மே தினம், இந்தியாவின் முதல் முறையாக செங்கொடி பயன்படுத்தப்பட்ட நிகழ்வு ஆகிய மூன்று முக்கியத்துவத்தை 1923ஆம் ஆண்டு மே 1-ம் தேதி கொண்டிருந்தது.அதன் நினைவு சின்னம்தான் படத்தில் காணப்படுவது.

 

உலகளாவிய தொழிலாளர்களின் போராட்டங்களின் வாயிலாக 8 மணி நேர உழைப்பு மற்றய நேரம் தனது சமூக பணி செய்ய போராடி பெற்றததுதான் இந்த உலக தொழிளார் தினம் நமக்கு உணர்த்துகிறது.

இன்று இடதுசாரி இயக்கங்களின் மார்க்சியமற்ற வெறும் பொருளாதார போராட்டமானது அரசியலற்று சரணாகதி பாதைக்கு இட்டு சென்று விட்டது, அதன் நீட்சியே இன்று கொணரப்படும் பல்வேறு தொழிலாளர் விரோத சட்டங்கள். கருப்பு சட்டங்களை உடைத்தெறிய நமது முன்னோடிகளின் வழியில் ஒன்று திரளுவோம் தோழர்களே. இந்தியாவில் 1991-க்கு தாராளமய-தனியார்மயக் கொள்கை தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலாளிகள் தொழில்களைத் தொடங்குவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதற்காக, தொழிலாளர் நலச் சட்டங்களில் தொழிலாளர்களுக்குக் கேடு ஏற்படும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வரு கின்றன. தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைக்கு எதிராக அரசு களும் முதலாளிகளும் கூட்டு சேர்ந்து கொண்டு ஒடுக்கு முறைகளை ஏவிவருகின்றனர். கடுமையான போராட்டங்கள் மூலம் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்தனர். அதுபோல் இப்போது பறிக்கப்படும் உரிமைகளை மீட்டெடுக்கத் தொழிலாளர்கள் தொடர்ந்து  போராடுவதற்கு மே நாள் வரலாறு ஊக்கமளிக்கும் என்பது உறுதி.

தொழிலாளர்கள் கூட்டாகத் தங்கள் கோரிக்கைகளை எடுத்துக் கூறிப் பண மூட்டைகளுக்கு பணிய மறுக்கும்போது அவர்கள் அதற்கு மேலும் அடிமைகளாக இருப்பதில்லை; அவர்கள் மனிதர்களாக மாறுகிறார்கள். இதற்கு மேலும் தங்கள் உழைப்பு விரல் விட்டு எண்ணக் கூடிய சில சோம்பேறிகளை மேன்மேலும் பணக்காரர்களாக மாற்றுவதற்காக மட்டுமின்றி உழைப்பாளிகள் மனிதர்களைப் போல வாழவும் பயன்பட வேண்டுமெனக் கோரிக்கை வைக்கிறார்கள். அடிமைகள் எஜமானர்களாக மாற வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறார்கள். நிலபிரபுக்களும், முதலாளிகளும் இவர்கள் எவ்வாறு வேலை செய்து வாழ வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவ்வாறு இல்லாமல், உழைக்கும் மக்கள் தாங்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவ்வாறு வாழ விடக் கோருகிறார்கள். எனவே வேலைநிறுத்தங்கள் எப்போதுமே முதலாளிகளிடத்தில் பய உணர்வை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், அவை அவர்களின் மேலாதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

  ++++++++++++++++++++++++++++++++++++++++++

உங்கள் வலிமையான கரங்கள் விரும்புமானால் எல்லா இயந்திரங்களின் சக்கரங்களும் இக்கணமே நின்று போகும்.” என்று ஜெர்மன் தொழிலாளர்களின் பாடல் ஒன்று உழைக்கும் வர்க்கத்தின் வலிமையைப் பற்றிப் பாடுகிறது. இதுதான் உண்மை..நிலப்பிரபுக்களின் நிலங்களும், முதலாளிகளின் தொழிற்சாலைகளும், முதலாளிகளின் தொழிற்சாலைகளும், இயந்திரங்களும், இரயில் வண்டிகளும் இன்னும் இவை போன்ற எண்ணற்றவைகளும் ஒரு மிகப் பிரம்மாண்டமான இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள சக்கரங்களைப் போன்றபை. இந்த மாபெரும் இயந்திரம் பல்வேறு வகைப்பட்ட பொருட்களை உருக்கி, வார்த்து, உருவாக்கி அவை சேரவேண்டிய இடங்களுக்குக் கொண்டு சேர்ப்பிக்கின்றது. இந்த இயந்திரத்தின் அனைத்துப் பகுதிகளும், முழு இயந்திரமும் தொழிலாளியால் இயக்கப்படுகின்றது. இந்த தொழிலாளிதான் நிலத்தை உழுது பண்படுத்துகிறான்; தாதுப் பொருட்களை பிரித்தெடுக்கிறான்; தொழிற்சாலைகளில் பண்டங்களை உற்பத்தி செய்கிறான்; வீடுகளையும் பணிமனைகளையும் இரயில் பாதைகளையும் உண்டாக்குகிறான். இந்த தொழிலாளர்கள் வேலை செய்ய மறுக்கும் போது மொத்த இயந்திரமும் ஓடாது நிற்கும் நிலை ஏற்படுகிறது. இது முதலாளிகளைப் பயமுறுத்துகிறது. ஒவ்வொரு வேலை நிறுத்தமும் முதலாளிகளுக்கு உண்மையான எஜமானர்கள் தொழிலாளர்களே, தாங்கள் அல்ல என்பதை நினைவுறுத்துகிறது. தொழிலாளர்கள் மேன்மேலும் உரத்த குரலில் தங்கள் உரிமை முழுக்கத்தைப் பிரகடனப்படுத்துகின்றனர்.” -வேலை நிறுத்தங்கள் பற்றி, தோழர் லெனின் ( தொழிற்சங்கம் பற்றி நூலிலிருந்து, பக்கம் 69-70).நன்றி தோழர் கவின்மொழி முகநூல்பகுதியிலிருந்து.

 

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்