முக்கிய செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முக்கிய செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புரட்சியாளர் காரல் மார்க்சின் வாழ்க்கை சுருக்கம்-லெனின்

 புரட்சியாளர் காரல் மார்க்சின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது தத்துவப் பங்களிப்புகளைப் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது. இதில் மார்க்சின் இளமைக்காலம், கல்வி, மற்றும் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் உடனான அவரது பிரிக்க முடியாத நட்பு ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. வறுமை மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அவர் மூலதனம் மற்றும் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை போன்ற உலகையே மாற்றியமைத்த படைப்புகளை உருவாக்கிய விதம் இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சிக்காக அவர் முன்னெடுத்த சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் சமூக மாற்றத்திற்கான அவரது போராட்ட முறைகள் இதில் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளன. இறுதியாக, மார்க்சியம் எவ்வாறு இன்றும் இளைய தலைமுறைக்கு ஒரு வழிகாட்டும் கருத்தியலாகத் திகழ்கிறது என்ப...

புரட்சியாளர் காரல் மார்க்சின் வாழ்க்கை சுருக்கம்-லெனின்


ஆசான் காரல் மார்க்ஸ் அவர்களின்  208 வது பிறந்தநாள் இன்று! முன் எப்போதுமில்லாத அளவிற்கு இன்று அவரையும் அவர் படைத்த  மார்க்சியம் எனும் தத்துவ ஆயுதத்தையும் கையில் ஏந்தி, சமுதாய மாற்றத்தை முன்னெடுத்துச் செல்ல   வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம்.  அவர் உதித்த இந்த நாளில், அவர்தம் புரட்சிகர வாழ்க்கை சுருக்கத்தையும், மார்க்சியத்தின் சாரத்தையும் தொடர்ச்சியாக இளம் தலைமுறையினரிடம் அறிமுகப்படுத்த வேண்டியது இன்றைய தேவை ஆகும். அந்த வகையில், யுகப்புரட்சியாளர் தோழர் லெனின் அவர்கள் எழுதிய,"காரல் மார்க்ஸின் வாழ்க்கைச் சுருக்கம்" பகுதியிலிருந்தே கீழ் வருபவை.  

காரல் மார்க்ஸ் ரைனிஷ் பிரஷ்யாவிலுள்ள டிரியர் நகரில் 1818ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதியன்று வசதியான குடும்பத்தில் வழக்குரைஞரின் மகனாகப் பிறந்தார். டிரியரில் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த பிறகு சட்டவியலைப் படிக்க மார்க்ஸ் முதலில் பான் பல்கலைக்கழகத்திலும் பிறகு பெர்லின் பல்கலைக்கழகத்திலும் சேர்ந்தார். ஆனால் முக்கியமாக வரலாறும், தத்துவஞானமும் பயின்றார்.

1841ம் ஆண்டில் படிப்பை முடித்து, எபிக்யூரஸ் தத்துவஞானத்தைப் பற்றி பல்கலைக்கழகப் பட்டத்திற்கு வேண்டிய தமது ஆராய்ச்சியுரையைச் சமர்ப்பித்தார். அந்தக் காலத்தில் தமது கருத்துப் போக்குகளில் மார்க்ஸ்,  ஹெகல் வகைப்பட்ட கருத்துமுதல்வாதியாக இருந்தார். “இடதுசாரி ஹெகலியவாதிகளின்’’ குழுவில் மார்க்சும், பெர்லினில் இருந்தபோது சேர்ந்திருந்தார். ஹெகலுடைய தத்துவஞானத்திலிருந்து நாத்திக முடிவுகளுக்கும், புரட்சிகரமான முடிவுகளுக்கும் வர இந்தக் குழுவினர் முயன்று வந்தார்கள்.

பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு மார்க்ஸ் பான் நகருக்குச் சென்றார். பேராசிரியராய்ப் பணியாற்றலாம் என்று நினைத்துத்தான் அவர் அங்குச் சென்றார். ஆனால், ஜெர்மன் அரசாங்கத்தின் பிற்போக்கான கொள்கையின் காரணமாக, மார்க்ஸ் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றலாம் என்ற கருத்தைக் கைவிட வேண்டியதாயிற்று. அந்தக் காலத்தில் இடதுசாரி ஹெகல்வாதக் கருத்துக்கள் ஜெர்மனியில் வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருந்தன. குறிப்பாக, 1836ம் ஆண்டுக்குப் பின் லுட்விக் ஃபாயர்பாஹ் இறையியலை விமர்சிக்கவும், பொருள்முதல்வாதத்தின் பக்கம் திரும்பவும் தொடங்கினார்.

1841ல் அவரிடம் பொருள்முதல்வாதம் மேலோங்கி விட்டது. எதிர்காலத் தத்துவஞானத்தின் கோட்பாடுகள் என்று தலைப்பிட்ட அவருடைய நூல் 1843ல் வெளியாயிற்று. இந்த நூல்களைப் பற்றி ஏங் கெல்ஸ் பின்னால் எழுதும் போது, “இவை தளை அறுத்து விடுவிப்பனவாய் இருந்ததை அவரவர் தாமே அனுபவித்து உணர வேண்டிய ஒன்றாகும்” என்று எழுதினார். “நாங்கள் எல்லோரும் (அதாவது, மார்க்ஸ் உள்ளிட்ட இடதுசாரி ஹெகல்வாதிகள்) உடனே ஃபாயர்பாஹ்வாதிகளானோம்” என்கிறார் ஏங்கெல்ஸ்.

அந்தக் காலத்தில் இடதுசாரி ஹெகலியவாதிகளுடன் சில விஷயங்களில் நெருங்கியிருந்த தீவிரவாத ரைனிஷ் முதலாளித்துவ வர்க்கத்தினர் (பூர்ஷ்வாக்கள்) கொலோன் நகரில் ஓர் எதிர்க்கட்சி “ரைனிஷ்’’ பத்திரிகையை நிறுவினர். அதில் முக்கிய விஷயதானம் அளிப்பவர்களாக இருக்கும்படி மார்க்சும், புரூனோ பௌவரும் அழைக்கப்பட்டார்கள். 1842 அக்டோபர் மாதத்தில் மார்க்ஸ் அதன் தலைமை ஆசிரியராகி பான் நகரிலிருந்து கொலோன் நகருக்குப் போனார்.

மார்க்ஸ் ஆசிரியராய் இருந்த போது அந்தப் பத்திரிகையின் புரட்சிகரமான -ஜனநாயகப் போக்கு மேலும் வெளிப்படையாயிற்று. அரசாங்கம் அந்தப் பத்திரிகையை இரட்டைத் தணிக்கைக்கும், மும்முறைத் தணிக்கைக்கும் முதலில் உட்படுத்தி, பிறகு 1843 ஜனவரி 1ம் தேதியன்று அதை அடியோடு தடை செய்து விடுவதென்று முடிவு செய்தது. அந்தத் தேதிக்கு முன்பே மார்க்ஸ் தமது ஆசிரியர் பதவியை விட்டு விலக வேண்டியதாயிற்று.

1843ம் ஆண்டில் கிரைட்ஸ்நாக் நகரில் ஜென்னியை  மார்க்ஸ் மணம் புரிந்தார். குழந்தை பருவ காலத்திலிருந்தே இருவரும் நணபர்களாக இருந்தனர்.1843 இலையுதிர் காலத்தில் மார்க்ஸ் பாரிஸ் நகருக்குச் சென்றார். அர்னோல்டு ரூகே என்பவருடன் சேர்ந்து தீவிரப் போக்குள்ள ஒரு சஞ்சிகையை வெளிநாட்டில் வெளியிடுவதற்காகத்தான் மார்க்ஸ் பாரிசுக்குப் போனார். அந்த ஜெர்மன்-பிரெஞ்சு சஞ்சிகையின் முதல் இதழ் மட்டும்தான் வெளியாயிற்று.

ஜெர்மனியில் இரகசியமாக அந்தச் சஞ்சிகையை வினியோகம் செய்வதிலிருந்த காரணமாகவும், ரூகேயுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டதின் காரணமாகவும் அந்தச் சஞ்சிகை நிறுத்தப்பட்டது. அதில் மார்க்ஸ் வரைந்த கட்டுரைகள் அவர் ஏற்கனவே ஒரு புரட்சியாளராக இருந்தார் என்பதைக் காட்டின.

“போராட்டம் மூலம் விமர்சனம்” செய்ய வேண்டும், “நடப்பில் இருந்து வருகிற எல்லாவற்றையும் ஈவிரக்கமின்றி விமர்சனம் செய்ய வேண்டும்” என்று அவர் வாதிட்டார்; பாட்டாளி வர்க்கத்துக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

1844 செப்டம்பர் மாதத்தில் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் பாரிசுக்கு வந்தார். அன்றிலிருந்து அவர் மார்க்சின் உயிருக்குயிரான நண்பரானார். பாரிசில் இருந்த புரட்சிகரக் குழுக்களின் கொந்தளிப்பான அன்றைய வாழ்வில் இருவரும் மிகத் தீவிரமாகப் பங்கு கொண்டார்கள். அந்நாளில் புரூதோனின் போதனை சிறப்பான முக்கியத்துவம் பெற்றிருந்தது; 1847ல் வெளிவந்த “மெய்யறிவின் வறுமை” என்ற தமது நூலிலே மார்க்ஸ் இதைத் தகர்த்தெறிந்தார்.  

குட்டி முதலாளித்துவ சோஷலிசத்தின் பல்வேறு போதனைகளைத் தீவிரமாக எதிர்த்துப் போர் புரிந்தபடியே அவர்கள் புரட்சிகரமான பாட்டாளி வர்க்க சோஷலிசத்தின் அல்லது கம்யூனிசத்தின் (மார்க்சியத்தின்) தத்துவத்தையும் போர்த்தந்திரங்களையும் உருவாக்கினார்கள். பிரஷ்ய அரசாங்கத்தின் விடாப்பிடியான கோரிக்கையின் பேரில் மார்க்ஸ் ஓர் ஆபத்தான புரட்சியாளர் என்று 1845ல் பாரிஸ் நகரிலிருந்து நாடுகடத்தப்பட்டார். அவர் பிரஸ்ஸெல்ஸ் நகரம் போய்ச் சேர்ந்தார்.

1847 வசந்த காலத்தில் மார்க்சும், ஏங்கெல்சும் “கம்யூனிஸ்ட் லீக்” என்ற இரகசியமான பிரச்சார சங்கத்தில் சேர்ந்தார்கள். லண்டன் மாநகரில் 1847 நவம்பர் மாதத்தில் நடந்த அச்சங்கத்தின் இரண்டாம் பேராயத்தில் இருவரும் மிக முக்கியமான பங்கு கொண்டு, அச்சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் புகழ்பெற்ற கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையை எழுதி முடித்தனர். அது 1848 பிப்ரவரி மாதத்தில் வெளியாயிற்று.

இந்த நூல் மாமேதைக்குரிய தெளிவுடனும், பெருந்திறமையுடனும் ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை விவரிக்கிறது; சமுதாய வாழ்வுத் துறையை அணைத்து நிற்கும் முரணற்ற பொருள்முதல் வாதம், வளர்ச்சியைப் பற்றிய மிகவும் முழுமையான ஆழ்ந்த போதனையான இயக்கவியல், வர்க்கப் போராட்டத்தைப் பற்றியும், புதிய, கம்யூனிச சமுதாயத்தின் படைப்பாளி என்கிற வகையில் பாட்டாளி வர்க்கத்தின் உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, புரட்சிகரமான பாத்திரத்தைப் பற்றியும் அமைந்த ஒரு தத்துவம் ஆகியவை இந்த உலகக் கண்ணோட்டத்தில் அடங்கும்.

1848 பிப்ரவரி புரட்சி மூண்ட போது மார்க்ஸ் பெல்ஜியத்திலிருந்து நாடுகடத்தப்பட்டார். அவர் பாரிசுக்குத் திரும்பி வந்து, மார்ச் மாதப் புரட்சிக்குப் பிறகு அங்கிருந்து ஜெர்மனியின் கொலோன் நகருக்குப் போனார். அங்கே 1848 ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து 1849 மே 19ஆம் தேதிவரை ‘‘புதிய ரைனிஷ் பத்திரிகை” என்ற பத்திரிகை வெளியாகியது. மார்க்ஸ்தான் அதன் தலைமை ஆசிரியர்.

1848-49ஆம் ஆண்டுகளில் நடந்த புரட்சி நிகழ்ச்சிகளின் போக்கு இப்புதிய தத்துவத்தை மிகச் சிறந்த முறையில் நிரூபித்து உறுதிப்படுத்தியது. அது போல் அக்காலம் முதல் உலக நாடுகளனைத்திலும் நிகழ்ந்த பாட்டாளி வர்க்க, ஜனநாயக இயக்கங்கள் எல்லாம் அதை மெய்ப்பித்து உறுதிப்படுத்தியுள்ளன. வெற்றி பெற்ற எதிர்ப்புரட்சியாளர்கள் முதலில் மார்க்ஸ் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் தூண்டிவிட்டார்கள். பிறகு அவர் ஜெர்மனியிலிருந்து 1849 மே 16ம் தேதியன்று நாடுகடத்தப்பட்டார். மார்க்ஸ் முதலில் பாரிசுக்குச் சென்றார். அங்கே 1849 ஜூன் 13ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னால் மீண்டும் நாடுகடத்தப்பட்டார். பிறகு அவர் லண்டன் நகருக்கு வந்தார். மறைவெய்தும் நாள்வரை அவர் லண்டனிலேயே வாழ்ந்து வந்தார்.

அரசியலுக்காக நாடுகடத்தப்பட்டு அவர் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் கடுமையானது. 1913ல் வெளியான மார்க்ஸ், ஏங்கெல்ஸ் கடிதப் போக்குவரத்து இதைத் தெளிவாகக் காட்டுகிறது. மார்க்சும் அவர் குடும்பத்தினரும் கொடிய வறுமையில் சிக்கித் சிக்கித் துன்பப்பட்டார்கள். ஏங்கெல்ஸ் மட்டும் தன்னலமறுப்புடன் எப்போதும் பண உதவி செய்து கொண்டே இருந்திராவிட்டால் மார்க்ஸ் மூலதனம் என்ற நூலை எழுதி முடித்திருக்க முடியாது என்பது மட்டுமல்ல, ஒருவேளை அவர் வறுமையால் மடிந்திருப்பார். மேலும் குட்டி முதலாளித்துவப் போக்குடைய சோசலிசத்தின், பொதுவாகவே பாட்டாளி வர்க்கச் சார்பற்ற சோஷலிசத்தின் போதனைகளும், தத்துவப் போக்குகளும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலைமையில் மார்க்ஸ் ஓர் இடையறாத, ஈவிரக்கமற்ற போரை நடத்திக் கொண்டிருக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்; சில சமயங்களில் தமக்கெதிரான மிகவும் காட்டுமிராண்டித்தனமான, வெறித்தனமான தனிப்பட்ட முறையிலான தாக்குதல்களையும் அவர் முறியடிக்க வேண்டியிருந்தது. அரசியலுக்காக நாடு கடத்தப்பட்டுள்ளவர்களின் வட்டாரங்களிலிருந்து ஒதுங்கி இருந்து கொண்டு மார்க்ஸ் தமது பொருள்முதல்வாதத் தத்துவத்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல நூல்களில் விவரித்தார்; அரசியல் பொருளாதாரத்தை ஆராய்ந்து அறிவதில் முதன்மையாகத் தமது முயற்சிகளை ஈடுபடுத்தி வந்தார். இந்த விஞ்ஞானத்தை மார்க்ஸ் புரட்சிகரமானதாக்கினார். அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனவுரைக்குச் செலுத்தும் ஒரு பங்களிப்பு (1859) என்ற நூல் வாயிலாகவும், மூலதனம் (முதல் தொகுதி, 1867) என்ற நூல் வாயிலாகவும் இதைச் செய்தார்.

1850-60 வருடங்களின் இறுதிக் கட்டமும் 1860-70க்கும் இடைப்பட்ட காலகட்டமும் ஜனநாயக இயக்கங்கள் புத்தெழுச்சி பெற்ற ஆண்டுகளாகும். அவை மார்க்சை மறுபடியும் நடைமுறை இயக்க வேலைகளில் ஈடுபடும்படி செய்தன.

1864ல் செப்டம்பர் 28ம் தேதி லண்டன் நகரில் “சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு” (இதுதான் முதலாவது அகிலம் என்று பரவலாக அறியப்பட்ட அமைப்பு) மார்க்ஸ் இச்சங்கத்தின் இதயமாகவும், ஆன்மாவாகவும் விளங்கினார். அதன் முதல் அறிக்கையையும் எண்ணற்ற தீர்மானங்களையும், பிரகடனங்களையும், கொள்கையறிக்கைகளையும் அவர்தான் வரைந்தார். பல்வேறு நாடுகளின் தொழிலாளர் இயக்கத்தை ஒன்றுபடுத்தியும், பாட்டாளி வர்க்க ரீதியில் அமையாத, மார்க்சுக்கு முந்திய சோஷலிசத்தின் பல்வேறு வடிவங்களைக் கூட்டு நடவடிக்கைப் பாதையில் செயல்வழிப்படுத்த முயற்சித்தும், இந்தப் பிரிவுகள், போக்குகள் ஆகிய யாவற்றின் தத்துவங்களை எதிர்த்துப் போராடியும், பல்வேறு நாடுகளிலும் உள்ள பாட்டாளி வர்க்க போராட்டத்திற்குரிய ஒரே மாதிரியான போர்த்தந்திரங்களை மார்க்ஸ் உருவாக்கினார்.

பாரிஸ் கம்யூன் வீழ்ச்சியுற்றதை (1871) அடுத்தும் -இக்கம்யூனைப் பற்றி மார்க்ஸ் 1871ல் வெளிவந்த பிரான்சில் உள்நாட்டுப் போர் என்ற நூலில் மிகவும் ஆழமாகவும், தெட்டத் தெளிவாகவும், ஒப்பற்றவகையிலும், பயன்மிக்கதான புரட்சிகரப் பகுத்தாராய்வை அளித்தார். பக்கூனின் முதலாவது அகிலத்தைப் பிளவுபடுத்தியதை அடுத்தும் இச்சங்கம் ஐரோப்பாவில் இருப்பது சாத்தியமில்லாமற்போயிற்று.

1872ல் ஹேக் நகரில் நடந்த அதன் காங்கிரசுக்குப் பிறகு மார்க்ஸ் அதன் பொதுக் குழுவை நியூயார்க் நகருக்கு மாற்ற ஏற்பாடு செய்தார். முதலாவது அகிலம் தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை நிறைவேற்றிவிட்டது. உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் தொழிலாளர் இயக்கம் அளவிடற்கரிய முறையில் மாபெரும் வளர்ச்சி பெறுவதற்கான காலப்பகுதிக்கு அது வழிகோலிவிட்டது. இந்தக் காலப்பகுதி உண்மையிலேயே தொழிலாளர் இயக்கம் விரிவடைந்து வளர்ந்த காலப்பகுதியாகும்; தனித்தனி தேசிய அரசுப் பகுதிகளில் திரளான சோஷலிச தொழிலாளர் கட்சிகள் நிறுவப்பட்ட காலப்பகுதியாகும்.

அகிலத்தில் மார்க்ஸ் ஆற்றிய கடுமையான பணியும், அதைவிடக் கடுமையாக அவர் தத்துவத் துறையில் ஆற்றிய பணிகளும் அவருடைய உடல்நிலையை அடியோடு பலவீனப் படுத்திவிட்டன. அவர் அரசியல் பொருளாதாரத்துக்குப் புத்துரு அளித்திடும் பணியையும், மூலதனம் நூலை எழுதி முடிக்கும் பணியையும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இவற்றுக்காக ஏராளமான புதிய விவரங்களைச் சேகரித்தார். பல மொழிகளைப் பயின்று வந்தார். ஆனால், அவரது மோசமான உடல்நிலை மூலதனம் நூலை முழுமை செய்ய முடியாதபடி தடுத்துவிட்டது. எனினும் ஏங்கல்சின் முயற்சியால் அவை தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

1881ம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதியன்று அவருடைய மனைவியார் காலமானார். 1883 மார்ச் 14ஆம் தேதியன்று நாற்காலியில் சாய்ந்தவாறே  மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். லண்டனிலுள்ள ஹைகேட் இடுகாட்டில் அவர் தம் மனைவியின் கல்லறைக்கருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மார்க்ஸ் தனது சிந்தனையை நிறுத்திக் கொண்டாலும், அவரது தத்துவம் வர்க்கப் போராட்டத்தின் மூலம்  உலகை மாற்றி அமைப்பதற்கான பேராயுதமாகத் திகழ்ந்து வருகிறது.  


முக்கியத் தலைப்பு 2

விவரங்களை இங்கே இடவும்.


தொடர்புடைய கட்டுரைகள்:

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

இந்திய பாராளுமன்றமுறையும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கொடையும்-01

வரலாற்று வழியில் இந்திய பாராளுமன்றம் பற்றி அறிந்துக் கொள்வோம்..

இந்தியாவில் பாராளுமன்ற நடைமுறை பிரிட்டிஷ் ஆட்சியின் சட்டங்களின் மூலம் படிப்படியாக வளர்ந்தது.

இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்ற நடைமுறை படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டது. 1773 முதல் 1947 வரை பல்வேறு சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவில் சட்டமன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

ஆண்டுசட்டம் / சீர்திருத்தம்முக்கிய அம்சங்கள்
1773Regulating Actகவர்னர்-ஜெனரல் பதவி உருவாக்கப்பட்டது; கல்கத்தாவில் முதல் “Supreme Council” அமைக்கப்பட்டது.
1784Pitt’s India Actஇந்திய நிர்வாகம் பிரிட்டிஷ் அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
1833Charter Actஇந்தியாவை ஒரே நிர்வாக அலகாக அறிவித்தது; சட்டமன்ற அதிகாரம் கவர்னர்-ஜெனரலுக்கு வழங்கப்பட்டது.
1853Charter Actஇந்திய சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்டனர்; சட்டமன்றம் தனித்துவம் பெற்றது.
1861Indian Councils Actசட்டமன்றத்தில் இந்தியர்களுக்கு இடம் வழங்கப்பட்டது; “Legislative Councils” உருவாக்கப்பட்டது.
1892Indian Councils Actஇந்தியர்களுக்கு சட்டமன்றத்தில் கேள்வி கேட்கும் உரிமை; சில உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1909Morley–Minto Reformsஇந்தியர்களுக்கு சட்டமன்றத்தில் அதிக இடம்; முஸ்லிம்களுக்கு தனி தேர்தல் தொகுதி (Separate Electorates).
1919Montagu–Chelmsford Reforms (Government of India Act)இரட்டை நிர்வாகம் (Dyarchy) மாநிலங்களில்; மத்திய சட்டமன்றத்தில் இரு அவைகள் (Legislative Assembly & Council of States).
1935Government of India Actமாகாணங்களுக்கு முழு பொறுப்பு அரசு; மத்திய சட்டமன்றம் இரு அவைகளுடன்; இந்திய அரசியலமைப்பின் அடித்தளம்.
1947Indian Independence Actஇந்தியா சுதந்திரம் பெற்றது; பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடைமுறை அடிப்படையில் இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.


1935 சட்டம் இந்திய அரசியலமைப்பின் அடித்தளமாக அமைந்தது.

1947 சுதந்திரம் பெற்றபின், இந்தியா 1950 அரசியலமைப்பின் மூலம் முழுமையான பாராளுமன்ற முறையை ஏற்றுக்கொண்டது.

இந்தியாவில் பாராளுமன்ற முறை 26 ஜனவரி 1950 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. அந்த நாளில் இந்திய அரசியலமைப்பு அமலுக்கு வந்தது, இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டது, மேலும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை மக்களவைக்கு பொறுப்பான பாராளுமன்ற முறையை ஏற்றுக்கொண்டது.

🏛️ முக்கிய அம்சங்கள்

  • 1946–1949: அரசியல் நிர்ணய சபை (Constituent Assembly) அரசியலமைப்பை வடிவமைத்தது.

  • 26 ஜனவரி 1950: அரசியலமைப்பு அமலுக்கு வந்தது; இந்தியா குடியரசாகவும், பாராளுமன்ற முறையுடனும் இயங்கத் தொடங்கியது.

  • இரு அவைகள்:

    • மக்களவை (Lok Sabha) – மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும்.

    • மாநிலங்களவை (Rajya Sabha) – மாநில சட்டப்பேரவைகள் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்கள் + குடியரசுத் தலைவர் நியமிக்கும் உறுப்பினர்கள்.

Today
இந்தியாவில் பாராளுமன்ற முறை தொடங்கியது எப்பொழுது?
இந்தியாவில் பாராளுமன்ற முறை தொடங்கியது எப்பொழுது?

இந்தியாவில் பாராளுமன்ற முறை அதிகாரப்பூர்வமாக 26 ஜனவரி 1950 அன்று, இந்திய அரசியலமைப்பு அமலுக்கு வந்தபோது தொடங்கியது. அதற்கு முன், 1946-இல் உருவாக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை அரசியலமைப்பை வடிவமைத்தது.

📜 முக்கிய தகவல்கள்

  • தொடக்க தேதி: 26 ஜனவரி 1950

  • அடிப்படை: இந்திய அரசியலமைப்பு

  • அமைப்பு: இரு அவைகள் கொண்ட பாராளுமன்றம்

    • மாநிலங்களவை (Rajya Sabha) – மாநில சட்டப்பேரவைகள் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்கள் + குடியரசுத் தலைவர் நியமிக்கும் உறுப்பினர்கள்

    • மக்களவை (Lok Sabha) – மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள்

🏛️ பாராளுமன்ற முறையின் தனிச்சிறப்புகள்

  • அமைச்சரவை பொறுப்பு: அமைச்சரவை மக்களவைக்கு பொறுப்பானது.

  • செயல் அதிகாரம்: பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவை.

  • நாடாளுமன்றம்: சட்டங்களை இயற்றும், அரசை கண்காணிக்கும், மக்களின் பிரதிநிதித்துவம் வழங்கும்.

📅 வரலாற்றுப் பின்னணி

  • 1946: அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தின் கீழ் அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது.

  • 1946–1949: அரசியலமைப்பு வடிவமைப்பு நடைபெற்றது.

  • 26 ஜனவரி 1950: அரசியலமைப்பு அமலுக்கு வந்தது; இந்தியா குடியரசாகவும், பாராளுமன்ற முறையுடனும் இயங்கத் தொடங்கியது.

🔑 சுருக்கமாக

  • இந்தியாவில் பாராளுமன்ற முறை 1950 ஜனவரி 26 அன்று தொடங்கியது.

  • இது பிரதமர் தலைமையிலான அமைச்சரவை மற்றும் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளின் அடிப்படையில் இயங்குகிறது.

  • மக்களாட்சி, பொறுப்புணர்வு, மற்றும் சட்டமன்றத்தின் மேன்மை ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.

நீங்கள் விரும்பினால், நான் இந்திய பாராளுமன்றத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடு பற்றிய விரிவான விளக்கப்படம் (diagram) காட்டி புரிந்துகொள்ள எளிதாக்கலாம். அதை பார்க்க விரும்புகிறீர்களா?

பிரிட்டிஷ் ஆட்சியில் கொண்டுவர்ப்பட்ட நாடாளுமன்ற நடைமுறை என்னென்ன அவை பற்றி சற்று விரிவான விளக்கமும் அதற்கான தகவல்களை தொகுத்தும் ஒரு கட்டுரை மாணவ்ர்களுக்கு விளக்குவதற்கு வேண்டும் உங்களால் தொகுத்து தர முடியுமா? அவை அரசியல் ஆவணமாக நான் அவர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன் அவை காலவரிசைபடி இருக்க வேண்டும்

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்ற நடைமுறை படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டது. 1773 முதல் 1947 வரை பல்வேறு சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவில் சட்டமன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

📜 காலவரிசைபடி முக்கிய நாடாளுமன்ற நடைமுறைகள்

ஆண்டுசட்டம் / சீர்திருத்தம்முக்கிய அம்சங்கள்
1773Regulating Actகவர்னர்-ஜெனரல் பதவி உருவாக்கப்பட்டது; கல்கத்தாவில் முதல் “Supreme Council” அமைக்கப்பட்டது.
1784Pitt’s India Actஇந்திய நிர்வாகம் பிரிட்டிஷ் அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
1833Charter Actஇந்தியாவை ஒரே நிர்வாக அலகாக அறிவித்தது; சட்டமன்ற அதிகாரம் கவர்னர்-ஜெனரலுக்கு வழங்கப்பட்டது.
1853Charter Actஇந்திய சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்டனர்; சட்டமன்றம் தனித்துவம் பெற்றது.
1861Indian Councils Actசட்டமன்றத்தில் இந்தியர்களுக்கு இடம் வழங்கப்பட்டது; “Legislative Councils” உருவாக்கப்பட்டது.
1892Indian Councils Actஇந்தியர்களுக்கு சட்டமன்றத்தில் கேள்வி கேட்கும் உரிமை; சில உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1909Morley–Minto Reformsஇந்தியர்களுக்கு சட்டமன்றத்தில் அதிக இடம்; முஸ்லிம்களுக்கு தனி தேர்தல் தொகுதி (Separate Electorates).
1919Montagu–Chelmsford Reforms (Government of India Act)இரட்டை நிர்வாகம் (Dyarchy) மாநிலங்களில்; மத்திய சட்டமன்றத்தில் இரு அவைகள் (Legislative Assembly & Council of States).
1935Government of India Actமாகாணங்களுக்கு முழு பொறுப்பு அரசு; மத்திய சட்டமன்றம் இரு அவைகளுடன்; இந்திய அரசியலமைப்பின் அடித்தளம்.
1947Indian Independence Actஇந்தியா சுதந்திரம் பெற்றது; பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடைமுறை அடிப்படையில் இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.

🏛️ விளக்கம்

  • ஆரம்ப காலம் (1773–1853): பிரிட்டிஷ் கம்பெனி ஆட்சியை கட்டுப்படுத்தும் சட்டங்கள்; கவர்னர்-ஜெனரல் மற்றும் சட்டமன்றம் உருவாக்கப்பட்டது.

  • மத்திய காலம் (1861–1919): இந்தியர்களுக்கு சட்டமன்றத்தில் இடம்; தேர்தல் முறையின் தொடக்கம்; பிரிவினை அரசியல் (Separate Electorates).

  • இறுதி காலம் (1935–1947): மாகாணங்களுக்கு பொறுப்பு அரசு; இரு அவைகள் கொண்ட மத்திய சட்டமன்றம்; சுதந்திரத்திற்கு அடித்தளம்.


📜 1950–1970

  • 1950: Representation of the People Act – தேர்தல் முறையை அமைத்தது.

  • 1951: First Amendment – சொல்முறை சுதந்திரத்தில் கட்டுப்பாடுகள்; நில உரிமை சீர்திருத்தம்.

  • 1955: Citizenship Act – குடியுரிமை விதிகள்.

  • 1961: Dowry Prohibition Act – வரதட்சணைத் தடுப்பு.

  • 1969: Banking Companies (Acquisition and Transfer) Act – வங்கிகள் தேசியமயமாக்கல்.

📜 1970–1990

  • 1971: 24வது, 25வது, 26வது திருத்தங்கள் – அரசியலமைப்பின் திருத்த அதிகாரம்; பிரிவினை அரசியல் முடிவு; அரச குடும்ப சலுகைகள் நீக்கம்.

  • 1975–76: 42வது திருத்தம் – “Mini Constitution”; அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டது.

  • 1985: Anti-Defection Law – கட்சித் தாவல் தடுப்பு.

  • 1989: Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act.

📜 1990–2010

  • 1991: Economic Liberalisation Policies – சட்டங்கள் மூலம் திறந்த பொருளாதாரம்.

  • 2002: Right to Education Act – 6–14 வயது குழந்தைகளுக்கு இலவச கல்வி.

  • 2005: Right to Information Act – தகவல் அறியும் உரிமை.

  • 2006: Forest Rights Act – பழங்குடியினருக்கு நில உரிமை.

  • 2009: National Green Tribunal Act – சுற்றுச்சூழல் நீதிமன்றம்.

📜 2010–2026

  • 2016: Goods and Services Tax (GST) Act – ஒருங்கிணைந்த வரி முறை.

  • 2019: Citizenship Amendment Act – குடியுரிமை வழங்கும் விதிகள் மாற்றம்.

  • 2020: Farm Laws (பின்னர் ரத்து) – வேளாண் சந்தை சீர்திருத்தம்.

  • 2021: Information Technology (Intermediary Guidelines) Rules – சமூக ஊடக கட்டுப்பாடு.

  • 2023: Women’s Reservation Bill – மக்களவையில் 33% இடஒதுக்கீடு.

  • 2025: Disaster Management Act (திருத்தம்), Banking Laws (திருத்தம்), National Sports Governance Act போன்றவை.

🎯 takeaway

  • 1950–1970: அடிப்படை சட்டங்கள் – தேர்தல், குடியுரிமை, வங்கிகள்.

  • 1970–1990: அரசியலமைப்பு திருத்தங்கள், சமூக நீதி.

  • 1990–2010: கல்வி, தகவல், சுற்றுச்சூழல்.

  • 2010–2026: பொருளாதார சீர்திருத்தம், குடியுரிமை, பெண்கள் உரிமை.

முக்கிய பொதுமக்கள் எதிர்ப்பு சட்டங்கள் (Timeline)

  • 1951 – First Amendment Act → சொல்முறை சுதந்திரத்தில் கட்டுப்பாடுகள்.

  • 1975–76 – 42வது திருத்தம் (Emergency) → அடிப்படை உரிமைகள் குறைக்கப்பட்டதால் கடும் எதிர்ப்பு.

  • 2016 – GST Act → வணிகர்கள், சிறு தொழிலாளர்கள் எதிர்ப்பு.

  • 2019 – Citizenship Amendment Act (CAA) → நாடு முழுவதும் போராட்டங்கள்.

  • 2020 – Farm Laws → விவசாயிகள் போராட்டம்; பின்னர் ரத்து.

  • 2021 – IT Rules → சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் மக்கள் எதிர்ப்பு.

  • 2023 – Women’s Reservation Bill → சில அரசியல் வட்டாரங்களில் எதிர்ப்பு, ஆனால் பெரும்பாலும் ஆதரவு.

இந்திய மாநில சட்டமன்றங்கள்: உருவாக்கமும் அதிகார வரம்புகளும்

📜 உருவாக்கம்

  • 1935 இந்திய அரசுச் சட்டம்: முதன்முதலில் மாநிலங்களுக்கு தனித்த சட்டமன்றங்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் மாகாணங்களுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டது.

  • 1950 இந்திய அரசியலமைப்பு: சுதந்திரத்திற்குப் பிறகு, மாநிலங்களுக்கு தனித்த சட்டமன்றங்கள் (Legislative Assemblies) அமைக்கப்பட்டன. சில மாநிலங்களில் இரு அவைகள் (Legislative Assembly + Legislative Council) இருந்தன.

  • மாநில சட்டமன்றம்: மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் கொண்ட அவை.

  • மாநில சட்டமன்ற பேரவை (Legislative Council): சில மாநிலங்களில் மட்டுமே உள்ளது; உறுப்பினர்கள் பகுதி தேர்தல், பகுதி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

⚖️ அதிகார வரம்புகள்

  • சட்ட இயற்றும் அதிகாரம்: மாநில சட்டமன்றம் மாநில பட்டியலில் உள்ள (State List) விஷயங்களில் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றுள்ளது.

  • பொருளாதார அதிகாரம்: மாநில வரிகள், நில வரி, விற்பனை வரி, மதுபான வரி போன்றவற்றை நிர்ணயிக்கும் அதிகாரம்.

  • சமூக அதிகாரம்: கல்வி, சுகாதாரம், வேளாண்மை, உள்ளூர் நிர்வாகம் போன்ற துறைகளில் சட்டம் இயற்றும் அதிகாரம்.

  • அரசியல் அதிகாரம்: மாநில அரசை உருவாக்கும் அதிகாரம்; முதல்வர் மற்றும் அமைச்சரவை சட்டமன்றத்திற்கு பொறுப்பானது.

🏛️ முக்கிய அம்சங்கள்

  • மாநில சட்டமன்றம்: மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள்.

  • மாநில சட்டமன்ற பேரவை: சில மாநிலங்களில் மட்டுமே உள்ளது; ஆலோசனை மற்றும் திருத்த அதிகாரம்.

  • முதல்வர்: மாநில அரசின் தலைமை; சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றவர்.

  • ஆளுநர்: மாநிலத்தின் அரசியல் தலைமை; சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவார்.

🎯 சுருக்கம்

  • மாநில சட்டமன்றங்கள் 1935 சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு, 1950 அரசியலமைப்பின் மூலம் முழுமையான அதிகாரம் பெற்றன.

  • அவை மாநில பட்டியலில் உள்ள விஷயங்களில் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றுள்ளன.

  • மாநில அரசின் பொறுப்பு, கல்வி, சுகாதாரம், வேளாண்மை, உள்ளூர் நிர்வாகம் போன்ற துறைகளில் மாநில சட்டமன்றங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இலக்கு 90 இணைய இதழ் pdf மற்றும் ஒலி வடிவில்

 இந்த இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள்

1. சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? லியோஷோசி பாகம் 12

2. திருத்தல்வாதம் செங்யென்சீ பாகம் 6. பகுதி 2.

3. இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும் வர்க்கங்களும். - சுனிதிகுமார் கோஷ் பாகம்- 6

4. ரஷ்ய கம்யூனிஸ்டு இயக்கம், இந்திய கம்யூனிஸ்டு இயக்கம் ஒரு ஒப்பீடு- தேன்மொழி


இந்த ஆதாரங்கள் இலக்கு என்ற மார்க்சிய-லெனினிய இணைய இதழின் கருத்துக்களைத் தொகுத்து வழங்குகின்றன. ஒரு சிறந்த கம்யூனிசப் பண்பாளர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும், தனிப்பட்ட நலன்களை விட கட்சியின் நலன்களுக்கே முதலிடம் அளிக்க வேண்டும் என்பதையும் இவை வலியுறுத்துகின்றன. தற்கால இந்திய இடதுசாரி இயக்கங்களில் மலிந்துள்ள திருத்தல்வாதம் மற்றும் குழு மனப்பான்மையைக் கடுமையாகச் சாடும் இவ்விதழ், லெனின் காட்டிய வழியில் புரட்சிகரமான புதிய கட்சியைக் கட்டியமைக்க வேண்டியதன் அவசியத்தை விளக்குகிறது. பாட்டாளி வர்க்க விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் உன்னதமான தலைவர்களை உருவாக்குவதே சமூக மாற்றத்திற்கான முதற்படி என்று இது போதிக்கிறது. மேலும், ஆளும் வர்க்கங்கள் மார்க்சியத்தின் புரட்சிகர ஆன்மாவைச் சிதைத்து, அதை வெறும் அடையாளமாக மாற்றும் முயற்சியை எதிர்த்துப் போராட இந்த ஆதாரங்கள் அழைக்கின்றன. இறுதியாக, மார்க்சிய-லெனினியக் கல்வி மற்றும் சித்தாந்தப் பணிகள் மூலமே உண்மையான மக்கள் புரட்சியை முன்னெடுக்க முடியும் என்பதை இந்தத் தொகுப்பு உறுதிப்படுத்துகிறது.

இந்தியாவில் ஒரு வலுவான கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதில் உள்ள சவால்கள் யாவை?

ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் பின்பற்ற வேண்டிய பண்புகள் மற்றும் ஒழுக்கங்கள் எவை?

இந்தியாவின் தேசிய இனச் சிக்கல்கள் மற்றும் முதலாளித்துவ வர்க்கங்களுக்கிடையிலான முரண்பாடுகள் என்ன?


இதழ் 90 pdf வடிவில் இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே


இதழை ஒலி வடிவில் சுருக்கமாக கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

மதம் பற்றி மார்க்ஸ் எங்கெல்ஸ்-1

முன்னுரை

இந்தத் தொகுப்பில், மார்க்சும் எங்கெல்சும் மதத்தின் சாராம்சம் மற்றும் தோற்றம் குறித்தும், வர்க்கச் சமூகத்தில் அதன் பங்கு குறித்தும் தங்கள் கருத்துக்களை விளக்கும் படைப்புகள் இடம்பெற்றுள்ளன; இந்தப் படைப்புகள் பாட்டாளி வர்க்க, மார்க்சிய நாத்திகவாதத்திற்குத் தத்துவார்த்த அடித்தளங்களை அமைக்கின்றன. மார்க்சும் எங்கெல்சும் நிறுவிய உலகக் கண்ணோட்டம், இயற்கை மற்றும் சமூக வளர்ச்சியின் புறநிலை விதிகளின் அடிப்படையில் அமைந்தது. இது அறிவியலால் வழங்கப்பட்ட உண்மைகளைச் சார்ந்துள்ளது மற்றும் மதத்திற்கு முற்றிலும் முரணானது.

இந்தத் தொகுப்பு தொடங்கும், மார்க்சின் முனைவர் பட்ட ஆய்வேடான 'டெமோக்ரிட்டஸ் மற்றும் எபிகூரஸின் இயற்கை தத்துவங்களுக்கு இடையிலான வேறுபாடு' என்பதன் முன்னுரையில், எபிகூரஸின் பொருள்முதல்வாதத் தத்துவத்திற்கும் மதத்திற்கும் இடையிலான பொருந்தாமையை மார்க்ஸ் வலியுறுத்துகிறார். இந்தத் தொகுப்பில் இருந்து சில பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ள 'புனிதக் குடும்பம், அல்லது விமர்சன விமர்சனத்தின் மீதான ஒரு திறனாய்வு' என்ற நூலில், பிற்போக்கு நிலப்பிரபுத்துவ மற்றும் மதக் கண்ணோட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 18-ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு பொருள்முதல்வாதிகளின் பெரும் பங்கை மார்க்சும் எங்கெல்சும் எடுத்துக்காட்டுகிறார்கள். மேலும், ஒருபுறம் நாத்திகப் பிரச்சாரத்திற்கும், மறுபுறம் பொருள்முதல்வாதத் தத்துவத்தின் வளர்ச்சிக்கும் இயற்கை அறிவியலின் சாதனைகளுக்கும் இடையிலான உறவையும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். நாத்திகம் முற்போக்கு வர்க்கங்களின் ஒரு சிறப்பியல்பு என்றும், ஆங்கில மற்றும் பிரெஞ்சு பொருள்முதல்வாத நாத்திகர்கள் வளர்ந்து வரும் முதலாளித்துவ வர்க்கத்தின் சித்தாந்திகளாக இருந்தனர் என்றும் மார்க்சும் எங்கெல்சும் எடுத்துக்காட்டுகிறார்கள். ஆனால், முதலாளித்துவ வர்க்கம் ஆதிக்கத்தை அடைந்தவுடனும், பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையிலான வர்க்க முரண்பாடுகள் தீவிரமடைந்தவுடனும், முதலாளித்துவ வர்க்கம் தனது முந்தைய சுதந்திரச் சிந்தனையைக் கைவிட்டு, மதத்தை மக்கள் திரளுக்கு ஒரு போதைப்பொருளாகப் பயன்படுத்தத் தொடங்கியது. எங்கெல்ஸ் இதை 'சோசலிசம்: கற்பனாவாத மற்றும் விஞ்ஞானபூர்வமானது' என்ற நூலின் ஆங்கிலப் பதிப்பின் முன்னுரையில் உறுதியான மற்றும் தெளிவான விளக்கத்துடன் அளித்துள்ளார்; அதுவும் இந்தத் தொகுப்பில் காணப்படுகிறது. 

முந்தைய பொருள்முதல்வாத மற்றும் நாத்திகப் பிரச்சாரத்தின் சேவைகளை (17- மற்றும் 18-ஆம் நூற்றாண்டுகளின் ஆங்கில மற்றும் பிரெஞ்சு பொருள்முதல்வாதிகள், ஃபாயர்பாக் மற்றும் பிறர்) வலியுறுத்தும் அதே வேளையில், மார்க்சியத்தின் நிறுவனர்கள், முதலாளித்துவ நாத்திகத்தின் அரைமனப்பான்மை, முரண்பாடு மற்றும் வர்க்க வரம்பு, அதன் செயலற்ற தன்மை மற்றும் சிந்தனைவாதம், மதத்தின் சமூக வேர்களை அம்பலப்படுத்த இயலாமை ஆகியவற்றையும் விமர்சித்தனர்.

மதம் என்பது "மனிதர்களின் அன்றாட வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும் புறச் சக்திகளின் மனித மனங்களில் ஏற்படும் ஒரு கற்பனையான பிரதிபலிப்பு, அந்தப் பிரதிபலிப்பில் பூமிக்குரிய சக்திகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளின் வடிவத்தை எடுக்கின்றன" என்பதை நிரூபிப்பதன் மூலம், மார்க்சியத்தால் மட்டுமே மதத்தின் சாராம்சத்தை முழுமையாக வெளிப்படுத்த முடிந்தது. (இந்தத் தொகுப்பின் பக்கம் 128-ஐப் பார்க்கவும்.)

'மூலதனம்', 'டூரிங் மறுப்பு', 'லுட்விக் ஃபாயர்பாக்' மற்றும் பிற படைப்புகளில் மார்க்ஸும் எங்கெல்ஸும் மதத்தின் வேர்களை வெளிப்படுத்துகிறார்கள். மனித வளர்ச்சியின் ஆரம்பக் கட்டங்களில், இயற்கையின் சக்திகளுடனான போராட்டத்தில் ஆதி மனிதனின் இயலாமையிலிருந்து மத நம்பிக்கை தோன்றியது என்றும், ஆனால் முரண்பட்ட வர்க்கச் சமூகத்தில், உழைக்கும் மக்களின் சமூக ஒடுக்குமுறையும், அவர்களைச் சுரண்டுபவர்களுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களின் வெளிப்படையான இயலாமையும் மதத்திற்குப் பிறப்பளித்து, அதை வளர்க்கின்றன என்றும், அதுவே பூமியில் படும் துன்பங்களுக்குப் பிறகு கிடைக்கும் ஒரு சிறந்த வாழ்க்கை பற்றிய நம்பிக்கை, அதாவது ஒரு கற்பனையான வெகுமதி என்றும் அவர்கள் நிரூபிக்கிறார்கள்.

மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் படைப்புகளான 'ஜெர்மன் சித்தாந்தம்', 'ரைனிஷர் பியோபாப்டர்' பத்திரிகையின் கம்யூனிசம் மற்றும் 'கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை' ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள், மதத்தை சமூக உணர்வின் ஒரு வடிவமாகவும், வர்க்கச் சமூகத்தில் மேற்கட்டுமானத்தின் கூறுகளில் ஒன்றாகவும் விவரிக்கின்றன. மார்க்சியத்தின் நிறுவனர்கள், மதம் எவ்வாறு சமூக உறவுகளின் வளர்ச்சியையும், சமூகத்தின் வர்க்கக் கட்டமைப்பையும் சார்ந்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறார்கள்; பொது மக்களைக் குருடாக்குவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு கருவியாக மதத்தை வளர்ப்பதில் சுரண்டும் வர்க்கங்களுக்கு உள்ள ஆர்வத்தையும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

"மதம் என்பது மக்களின் அபின்," என்று மார்க்ஸ் 1844-ல் எழுதினார். இந்த வாசகம், மதம் குறித்த முழு மார்க்சிய கண்ணோட்டத்திற்கும் மூலக்கல்லாக மாறியுள்ளது.

எங்கெல்ஸின் 'புருனோ பாயர் மற்றும் ஆரம்பகால கிறிஸ்தவம்', 'வெளிப்படுத்தல் புத்தகம்' மற்றும் 'ஆரம்பகால கிறிஸ்தவத்தின் வரலாறு குறித்தவை' ஆகிய நூல்கள், ரோமானியப் பேரரசின் வீழ்ச்சியின் போது நிலவிய சமூக, அரசியல் மற்றும் சித்தாந்தப் போராட்டத்தின் வரலாற்று நிலைமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன; இந்த நிலைமைகளே கிறிஸ்தவத்தின் தோற்றத்தைத் தீர்மானித்தன. ரோமானியப் பேரரசின் நுகத்தடிக்கு எதிராக அடிமைகள், ஏழைகள் மற்றும் அடிமைப்படுத்தப்பட்ட தேசிய இனங்கள் நடத்திய எண்ணற்ற கிளர்ச்சிகள் இரத்தத்தில் மூழ்கடிக்கப்பட்ட பிறகு, முற்றிலும் நம்பிக்கையிழந்த மக்களின் கண்ணோட்டமாகவே கிறிஸ்தவம் தோன்றியது என்பதை இந்த கட்டுரைகள் தெளிவாகவும் உறுதியாகவும் காட்டுகின்றன.

'இயற்கையின் இயக்கவியல்' நூலின் அத்தியாயங்களிலும் அதன் பகுதிகளிலும் எங்கெல்ஸ், அறிவியல் மற்றும் மதக் கண்ணோட்டங்களுக்கு இடையிலான இடைவிடாத போராட்டத்தை உறுதியாக வெளிப்படுத்துகிறார்; மதம் எவ்வாறு அறிவியலின் முன்னேற்றத்தைத் தடுத்தது என்பதையும் காட்டுகிறார்; மதத்தின் வரலாறு என்பது அறிவியல் சிந்தனையின் வளர்ச்சிக்கு எதிரான போராட்டத்தின் வரலாறே ஆகும். திருச்சபை மாபெரும் விஞ்ஞானிகளை குருட்டுத்தனமான கொடுமையுடன் துன்புறுத்தியது, அவர்களை சித்திரவதை செய்தது, கழுமரத்தில் வைத்து எரித்தது, அவர்களின் படைப்புகளைத் தடை செய்தது அல்லது அழித்தது. விசாரணை மன்றத்தை தனது கருவியாகக் கொண்டிருந்த கத்தோலிக்க திருச்சபை, இந்த விஷயத்தில் குறிப்பாக தீவிரமாக இருந்தது. பல நூற்றாண்டுகளாக திருச்சபை ஒரு தீவிர பிற்போக்குத்தனமான பாத்திரத்தை வகித்ததுடன், உலகின் அறிவியல் கருத்துக்கும், ஜனநாயக மற்றும் சோசலிச இயக்கத்திற்கும் எதிராக இரக்கமின்றிப் போராடியது. ஆனால் இயற்கை அறிவியலின் வளர்ச்சி, மத மற்றும் இலட்சியவாதக் கண்ணோட்டத்தில் தவிர்க்க முடியாமல் மேலும் மேலும் பிளவுகளை ஏற்படுத்தியது. அதனால்தான் மார்க்சியத்தின் நிறுவனர்கள், அறிவியல் மற்றும் பொருள்முதல்வாதப் பிரச்சாரத்தை மதத்திற்கு எதிரான போராட்டத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாகக் கருதினர்.

அராஜகவாதிகள் மற்றும் பிளாங்கிஸ்டுகள், டூரிங் மற்றும் பிறர் மதத்திற்கு எதிராக வன்முறை முறைகளைப் பயன்படுத்திய முயற்சிகளை மார்க்ஸும் எங்கெல்ஸும் மிகவும் உறுதியாகக் கண்டித்தனர் (ஆண்டி-டூரிங் மற்றும் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் ஆகியவற்றைக் காண்க, இந்தத் தொகுப்பில் அவற்றின் பகுதிகள் உள்ளன).

மதத்தைத் தடை செய்வதும் துன்புறுத்துவதும் மத உணர்வை மட்டுமே தீவிரப்படுத்தும் என்பதை அவர்கள் நிரூபித்தனர். மறுபுறம், அதன் அருவமான சித்தாந்தப் பிரச்சாரம் மற்றும் குறுகிய கலாச்சாரவாதத்துடன் கூடிய முதலாளித்துவ நாத்திகத்திற்கு மாறாக, மார்க்சியம், மதத்தை வளர்க்கும் சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் ஒழிக்கப்படும் வரை மதத்தை அகற்ற முடியாது என்று காட்டுகிறது. தங்களின் பொருளாதார மற்றும் அரசியல் விடுதலைக்கான புரட்சிகரப் போராட்டத்தில் உழைக்கும் மக்கள் மதக் கருத்துக்களிலிருந்தும் மூடநம்பிக்கைகளிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள். பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் அவர்களுக்குக் கல்வி கற்பிப்பதன் மூலம் இது ஊக்குவிக்கப்படுகிறது. மார்க்சியத்தின் நிறுவனர்கள், பாட்டாளி வர்க்கக் கட்சித் தலைவர்களை, பொருள்முதல்வாத இலக்கியத்தின் சிறந்த படைப்புகளையும், இயற்கை மற்றும் சமூக அறிவியலின் சாதனைகளையும் தொழிலாளர்களிடையே பரப்பும்படி அழைப்பு விடுத்தனர்.

* * *

இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துப் பகுதிகளும் காலவரிசைப்படி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதியின் இறுதியில் நாங்கள் பதிப்பாசிரியர் குறிப்புகள், ஒரு பெயர் அட்டவணை, விவிலிய மற்றும் புராணப் பெயர்களுக்கான அட்டவணை மற்றும் ஒரு சுருக்கமான பொருளடக்க அட்டவணை ஆகியவற்றை வழங்கியுள்ளோம்.

சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் மார்க்சியம்-லெனினியம் நிறுவனம்.


டெமோக்ரிட்டஸ் மற்றும் எபிகூரஸின் இயற்கை தத்துவங்களுக்கு இடையிலான வேறுபாடு-கா.மார்க்ஸ் (முனைவர் பட்டதிற்கான ஆய்வுரை)

இந்த ஆய்வுக் கட்டுரையின் முதன்மை நோக்கம் ஒரு முனைவர் பட்ட ஆய்வேடாக இருந்திருக்காவிட்டால், இதன் வடிவம் ஒருபுறம் இன்னும் கடுமையாக அறிவியல் பூர்வமாகவும், மறுபுறம் அதன் பல வாதங்களில் அவ்வளவு பாண்டித்தியம் நிறைந்ததாக இல்லாமலும் இருந்திருக்கும். இருப்பினும், சில புறக்காரணங்களால் இதை இந்த வடிவத்திலேயே அச்சுக்கு அனுப்ப நான் நிர்பந்திக்கப்பட்டுள்ளேன். மேலும், கிரேக்கத் தத்துவ வரலாற்றில் இதுவரை தீர்க்கப்படாத ஒரு சிக்கலை இதில் நான் தீர்த்துள்ளேன் என்று நம்புகிறேன்.

இந்த ஆய்வுக் கட்டுரையின் பொருளைப் பற்றி, சிறிதளவேனும் பயன்படக்கூடிய எந்தவொரு முந்தைய ஆய்வுகளும் இல்லை என்பது நிபுணர்களுக்குத் தெரியும். சிசரோவும் புளூடார்க்கும் உளறியதையே, அவர்களுக்குப் பிறகு இன்றுவரை அனைவரும் உளறி வருகின்றனர். திருச்சபையின் தந்தையர்களும், பகுத்தறிவற்ற காலம் என்று அறியப்பட்ட முழு மத்திய காலமும் எபிகூரஸ் மீது விதித்திருந்த தடையிலிருந்து அவரை விடுவித்த காசெண்டி, தனது விளக்கங்களில் ஒரே ஒரு சுவாரஸ்யமான கூறினை மட்டுமே முன்வைக்கிறார். அவர் தனது கத்தோலிக்க மனசாட்சியை தனது புறச்சமய அறிவிற்கும், எபிகூரஸைத் திருச்சபைக்கும் இணக்கப்படுத்த முயல்கிறார்; இது நிச்சயமாக வீணான முயற்சிதான். இது, கிரேக்க லைஸின் பிரகாசமான மற்றும் செழிப்பான உடலின் மீது ஒரு கிறிஸ்தவ கன்னியாஸ்திரியின் உடையை அணிவிக்க விரும்புவது போன்றது. காசெண்டி எபிகூரஸிடமிருந்து தத்துவத்தைக் கற்றுக்கொள்கிறாரே தவிர, எபிகூரஸின் தத்துவத்தைப் பற்றி அவர் நமக்குக் கற்பிக்கவில்லை.

இந்த ஆய்வுக் கட்டுரை ஒரு பெரிய படைப்பிற்கான முன்னுரையாக மட்டுமே கருதப்பட வேண்டும். அந்தப் படைப்பில், கிரேக்க ஊகங்களின் முழுமைக்கும் உள்ள தொடர்பில், எபிகூரஸ், ஸ்டோயிக் மற்றும் ஸ்கெப்டிக் தத்துவங்களின் சுழற்சியை நான் விரிவாக முன்வைப்பேன். இந்த ஆய்வுக் கட்டுரையின் வடிவம் மற்றும் அதுபோன்ற குறைகள் அந்தப் பிற்காலப் படைப்பில் நீக்கப்படும்.

நிச்சயமாக, ஹெகல் மேற்கூறிய அமைப்புகளின் பொதுவான அம்சங்களை ஒட்டுமொத்தமாகச் சரியாக வரையறுத்துள்ளார். ஆனால், அவரது தத்துவ வரலாற்றின் வியக்கத்தக்க மகத்தான மற்றும் துணிச்சலான திட்டத்தில், அதிலிருந்து மட்டுமே தத்துவ வரலாற்றை பொதுவாகக் கணக்கிட முடியும், ஒருபுறம் விவரங்களுக்குள் செல்வது சாத்தியமற்றதாக இருந்தது, மறுபுறம், அந்த மாபெரும் சிந்தனையாளர், அவர் 'சிறந்த ஊகச் சிந்தனை' என்று அழைத்ததைப் பற்றிய தனது பார்வையால், இந்த அமைப்புகளின் முக்கியத்துவத்தை கிரேக்க தத்துவ வரலாற்றிற்கும், பொதுவாக கிரேக்க மனதிற்கும் அங்கீகரிப்பதில் தடைபட்டார். இந்த அமைப்புகளே கிரேக்க தத்துவத்தின் உண்மையான வரலாற்றிற்கான திறவுகோல். கிரேக்க வாழ்க்கையுடனான அவற்றின் தொடர்பு பற்றிய ஆழமான குறிப்பை எனது நண்பர் கோப்பனின் 'ஃபிரெட்ரிக் தி கிரேட் மற்றும் அவரது எதிரிகள்' என்ற கட்டுரையில் காணலாம்.

ப்ளூடார்க்கின் எபிகூரஸின் இறையியலுக்கு எதிரான வாதம் ஒரு பிற்சேர்க்கையாகச் சேர்க்கப்பட்டிருந்தால், அதற்குக் காரணம், அந்த வாதம் தனித்த ஒன்றல்ல, மாறாக ஒரு குறிப்பிட்ட வகையின் பிரதிநிதியாக இருக்கிறது என்பதே. ஏனெனில், அது இறையியல் நோக்குடைய அறிவிற்கும் தத்துவத்திற்கும் இடையிலான உறவை மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் வெளிப்படுத்துகிறது.

அந்த விமர்சனம், மற்ற விஷயங்களுக்கிடையில், ப்ளூடார்ச் தத்துவத்தை மதத்தின் மன்றத்தின் முன் நிறுத்தும் போது அவர் எடுக்கும் நிலைப்பாட்டின் பொதுவான தவறுகளைப் பற்றிப் பேசவில்லை. இந்த விஷயத்தில், அனைத்து வாதங்களுக்கும் பதிலாக, டேவிட் ஹியூமின் ஒரு பத்தியை மேற்கோள் காட்டுவதே போதுமானது:

“... எங்கும் அதன் இறையாண்மை அதிகாரம் அங்கீகரிக்கப்பட வேண்டிய தத்துவத்தை, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதன் முடிவுகளுக்கு மன்னிப்புக் கேட்கவும், அதனால் புண்படக்கூடிய ஒவ்வொரு குறிப்பிட்ட கலை மற்றும் அறிவியலிடமும் தன்னை நியாயப்படுத்திக்கொள்ளவும் கட்டாயப்படுத்துவது, நிச்சயமாக தத்துவத்திற்கு ஒரு வகையான அவமதிப்பாகும். இது தன் குடிமக்களுக்கு எதிராக தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு அரசனை நினைவூட்டுகிறது.” 3

தத்துவத்தின் உலகை வெல்லும் மற்றும் முற்றிலும் சுதந்திரமான இதயத்தில் ஒரு துளி இரத்தம் துடிக்கும் வரை, அது தனது எதிரிகளுக்கு எபிகூரஸின் முழக்கத்துடன் பதிலளிப்பதில் ஒருபோதும் சோர்வடையாது: இதுவே அதன் சொந்த ஒப்புதல் வாக்குமூலம், மனித சுய உணர்வை மிக உயர்ந்த தெய்வீகமாக அங்கீகரிக்காத அனைத்து வானுலக மற்றும் பூவுலக தெய்வங்களுக்கும் எதிரான அதன் சொந்த பொன்மொழி. அது தன்னைத் தவிர வேறு எதையும் ஏற்றுக்கொள்ளாது.

ஆனால், தத்துவத்தின் வெளிப்படையாக மோசமடைந்த சமூக நிலையைக் கண்டு மகிழும் அந்தப் பரிதாபகரமான மார்ச் மாத முயல்களுக்கு, அது மீண்டும், தெய்வங்களின் தூதனான ஹெர்ம்ஸுக்கு புரோமிதியஸ் பதிலளித்ததைப் போலவே பதிலளிக்கிறது:

தொடரும் அடுத்த பகுதியில்----

பாரதியும் இந்திய தேசிய விடுதலைப் போரும் (ந. தெய்வ சுந்தரம்)

 பாரதியும் இந்திய தேசிய விடுதலைப் போரும்

(ந. தெய்வ சுந்தரம்)

 

0. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய மக்களின் தேசிய விடுதலைப்போரில் பாரதி ஆற்றிய பங்குபற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

0.1. இந்திய தேசிய விடுதலைப்போர்குறித்துப் பாரதி கூறியுள்ள கருத்துகளையும்அப்போரில் பாரதியின் நேரடிப் பங்கையும் ஒருங்கே பார்த்துஇறுதியில் பாரதியின் பங்கை வரையறுக்க இக்கட்டுரை முயலுகிறது.

0.2. பாரதியின் பங்கைச் சரியாகப் புரிந்துகொண்டு மதிப்பிடஇந்திய தேசிய விடுதலைப்போரின் வரலாறு மிக அவசியமாக அமைகிறதுஎனவே பாரதி காலம் வரை அமைந்த விடுதலைப்போரின் வரலாற்றைச் சுருக்கமாகக் கட்டுரையின் முதற்பகுதி கூறுகிறதுஇரண்டாவது பகுதி பாரதியின் பங்கை அந்த வரலாற்றுச் சூழ்நிலையில் இணைத்து மதிப்பிட முயலுகிறது.

 

1.0. ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சி நிறுவப்படுதல்

1.1. கி.பி.17- ஆம் நூற்றாண்டில் தொடக்கத்திலே இந்தியாவிற்குள் ஐரோப்பிய வணிகக் கம்பெனிகள் ஊடுருவத் தொடங்கினபோர்த்துகீசியடச்சுபிரெஞ்சுஆங்கிலேய வணிகக் கம்பெனிகள் இந்தியாவில் நிறுவப்பட்டனஆனால் 16- ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் (1702) ஆங்கிலேயக் கம்பெனிகள் இணைந்துகிழந்திந்தியக் கம்பெனியாக  ஆதிக்கம் புரியத் தொடங்கின.

1.2. வணிகக் கம்பெனியாக இருந்த கிழக்கிந்தியக் கம்பெனி 1759 – ஆம் ஆண்டு பிளாஸி யுத்தத்திற்குப்பின் வங்களாத்தில் இந்திய மண்மீது ஆட்சியாளராக மாறத் தொடங்கியதுஅதன்மூலம் வணிகத்திற்கும் கொள்ளைக்கும் வேறுபாடு இல்லாத வகையில் இந்தியச் செல்வங்களைக் கொள்ளையடிக்கத் தொடங்கியது. 1765 -ஆம் ஆண்டில் நடைபெற்ற பக்ஸர் யுத்தத்தில் வெற்றி பெற்ற ஆங்கிலேயக் கம்பெனியர் வங்காளம்பீஹார்ஒரிஸ்ஸா ஆகிய மூன்று பகுதிகளிலும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிஅரசு புரியத் தொடங்கினர்.

 

1.3. இந்தியாவில் அரசாட்சியை மேற்கொண்ட ஆங்கிலேயர் மூன்று எதிரிகளைச் சந்திக்க வேண்டியதிருந்ததுஅவை: (1) பிற ஐரோப்பிய வணிகக் கம்பெனிகள் (2) ஆங்கிலேயர் ஆதிக்கத்தை ஏற்க மறுத்த இந்திய மன்னர்கள் (3) ஆங்கிலேயர்களின் கொள்கைகளுக்கு எதிராகப் போராடிய இந்திய உழவர்கள்.

1.4. ஆங்கிலேயர் மேற்கொண்ட மூன்று எதிரிகளையும் வெல்வதற்குத் தமது ராணுவ பலத்தை மட்டும் ஆதாரமாகக் கொள்ளமால்தனது எதிரிகளுக்கிடையே இருந்த முரண்பாடுகளையும் பயன்படுத்திக் கொண்டனர்உழவர்களுக்கும் நிலப்பிரபுத்துவ மன்னர்களுக்கும் இடையில் இருந்த முரண்பாடுஅம்மன்னர்களுக்கும் பிற ஐரோப்பியக் கம்பெனிகளுக்கும் இருந்த முரண்பாடு ஆகியவற்றைப் பயன்படுத்திஅரசியல் தந்திரத்தோடு தமது குறிக்கோளை நிறைவேற்றிக் கொண்டனர்.

1.5. தாங்கள் இந்தியாவில் நுழைந்ததிலிருந்து சுமார் நூறாண்டுக்குள் ஆங்கிலேயர் மேற்கூறிய மூன்று சக்திகளையும் வென்றுதங்களது ஆட்சியை இந்தியாவில் உறுதிப்படுத்திக் கொண்டனர்.

 

2.0.ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சியின் மூன்று காலகட்டங்கள்

ஆங்கிலேயக் காலனித்துவ அரசு இந்திய மன்னர்களைச் சுரண்டிய வழிமுறைகளின் அடிப்படையில் அதன் இந்திய ஆட்சிக்காலத்தை மூன்றாகப் பிரிக்கலாம்.

 

2.1. முதல் காலகட்டம் (1700- 1813)

இக்கட்டத்தில் ஆங்கிலேய நாட்டில் தொழில் உற்பத்திவளர்ச்சி அடையவில்லைவணிக முதலாளித்துவமே ஆதிக்கம் வகித்ததுஎனவே இக்கால கட்டத்தில் இந்தியாவிலும் ஆங்கிலேயக் கம்பெனி வணிகச் சுரண்டலையேப் பிரதானமாகக் கொண்டிருந்தது.

 

2.1.1. ஐரோப்பிய வணிகக் கம்பெனிகள் இந்தியாவில் நுழையத் தொடங்கிய காலகட்டத்தில் இந்தியாவின் விவசாய உற்பத்தியும் பொருள் உற்பத்தியும் நல்ல வளர்ச்சி நிலையில் சென்று கொண்டிருந்தனஎனவேஅந்நியக் கம்பெனிகள் இந்தியப் பொருட்களை ஏற்றுமதி செய்துஇந்தியாவைக் கொள்ளையடித்தனஇந்தியா ஒரு ஏற்றுமதி நாடாக விளங்கியது.

2.1.2. இக்காலகட்டத்தில் ஆங்கிலேயர் வணிகத்தின் மூலம் மட்டுமின்றிவரிகள்நேரடிக் கொள்ளைகள்மூலமும் இந்தியாவைக் கொள்ளையடித்தனர்இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட செல்வங்கள் இங்கிலாந்தில் தொழிற்புரட்சிக்கு – ஆலை முதலாளித்துவ வளர்ச்சிக்கு – அவசியமான மூலதனத் தேவையைப் பூர்த்தி செய்வதில் ஒரு முக்கியப் பங்கை வகித்தன.

2.1.3. மேலும் இக்காலகட்டத்தில் ஆங்கிலேய ஆட்சி தனது காலனி அடித்தளத்தைத் திடப்படுத்திக்கொள்வதற்காகஏகாதிப்பத்தியத்தின் வருங்காலத்துடன் தங்கள் நலனை இணைத்துக் கொண்ட ஒரு புதிய நிலப்பிரபுத்துவ வர்க்கத்தைத் தோற்றுவித்தது.1 1793 ஆம் ஆண்டில் காரன்வாலிஸ் பிரபு கொண்டுவந்த நிலத்தீர்வை முறைகள் – ஜமீன்தாரி ரயத்துவாரிமகல்வாரி முறைகள் – அதற்கு வழிமுறையாக அமைந்தன.

 

2.2. இரண்டாவது காலகட்டம் (1813-1900)

2.2.1. இக்காலகட்டத்தில் ஆங்கிலேய நாடு தொழிற்புரட்சியைக் கண்டதுஆலை முதலாளித்துவம் (Industrial Capitalism) வளர்ச்சியடைந்ததுஇதன் விளைவாய்இந்தியாவில் ஆங்கிலேயர்களின் சுரண்டல் முறையும் மாறுபட்டதுஏற்றுமதியின்மூலம் தாம் இதுவரை செய்துவந்த கொள்ளைமுறையை மாற்றி தங்கள் பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்வது மூலம் கொள்ளையடிக்க அவர்கள் முற்பட்டனர்.

 

2.2.2. ஆங்கிலேய ஆலை முதலாளித்துவ வளர்ச்சிஇன்னொரு மாற்றத்தையும் ஏற்படுத்தியதுஇந்தியாவைக் கொள்ளையடிப்பதற்கான உரிமைகிழக்கிந்தியக் கம்பெனிக்கு மட்டுமல்லாமல்எல்லா ஆங்கிலேய முதலாளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதுஇதனையே ஆடம்ஸ்மித்வில்லியம் பெட்டிடேவிட் ரிகார்டோ போன்ற முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் முன்வைத்தனர்இதன் விளைவாய், 1813 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியா சட்டம் கொண்டு வரப்பட்டுஇந்தியா எல்லா ஆங்கிலேய முதலாளிகளின் கொள்ளைக்குத் திறந்துவிடப்பட்டது.

2.2.3. மேலும் ஆங்கிலேய ஆலை முதலாளித்துவம் தனது நலனுக்கேற்ப இந்தியாவின் பொருளாதார அடிப்படையை மாற்றி அமைக்கத் தொடங்கியதுஇரயில்வேசாலைவழிப் போக்குவரத்துகள்தபால்தந்திநீர்ப்பாசனத் திட்டம் ஆகிய வசதிகளை ஏற்படுத்திஇந்தியக் கிராமப் பொருளதாரத்தை நகர்ப்புறச்சந்தையுடன் இணைத்ததுபணப்பொருளாதார முறை வளர்க்கப்பட்டதுவிவசாயத்தில் அந்நியர் மூலதனம் ஊடுருவியது.

2.2.4. உணவு உற்பத்தியைப் பிரதானமாகக் கொண்டிருந்த இந்திய விவசாயம்ஆங்கிலேய ஆலை முதலாளித்துவத்தின் தேவைக்கேற்ப பணப்பொருட்கள் (Cash Crops) உற்பத்தியை நோக்கித் திருப்பிவிடப்பட்டதுஇதன் விளைவாக அதுவரை உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்துவந்த இந்தியா இறக்குமதி செய்யும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டது.

2.2.5. இந்தியக் கைத்தொழில்கள் நசுக்கப்பட்டனதங்களது பொருள்களுக்குச் சந்தையை விரிவுப்படுத்துவதற்காகஇந்தியப் பொருள்கள்மீதும்பிற அந்திய நாட்டுப் பொருள்கள்மீதும் பல தடைவரிகளை ஆங்கியேர் விதித்தனர்.

2.2.6. இந்திய மூலப்பொருட்களின் விலைகள் பலவந்தமாகக் குறைக்கப்பட்டுஆங்கிலேயர்களின் தேவைகளுக்காக ஏற்றுமதி செய்யப்பட்டது.

 

2.2.7. மேற்கூறிய நடவடிக்கைகளின் விளைவாக இந்தியாவில் பல பயங்கரப் பஞ்சங்கள் ஏற்பட்டனஏழைநிலமற்ற விவசாயிகளின் எண்ணிக்கை உயர்ந்தது.

 

2.3. மூன்றாவது காலகட்டம் (1900-1947)

2.3.1. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டனில் ஆலை முதலாளித்துவம் அடுத்த உயர்நிலை அடைந்ததுமூலதனங்கள் ஒரு சில பெரிய முதலாளிகளின் கைகளில் குவிந்தனஉற்பத்திச் சாதனங்களும்உற்பத்தியும் மையப்படுத்தப்பட்டனஇதுவரை ஒரு பொருளின் பல பாகங்களைப் பல்வேறு இடங்களின் பல முதலாளிகள் உற்பத்தி செய்துவந்த நிலைமாறிஅனைத்துப் பாகங்களும் ஓரே இடத்தில் பெரிய முதலாளிகளால் உற்பத்தி செய்யப்படுகின்ற நிலை தோன்றுகிறது.

2.3.2. மேற்கூறிய வளர்ச்சியின் விளைவாக இதுவரை சுதந்திரமாகப் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்த ஆலை முதலாளிகளிடையே சிண்டிகேட்கார்டல் போன்ற கூட்டு நிறுவனங்கள் தோன்றினசிறுமுதலாளிகள் வீழ்ச்சி அடைந்தனர்பெருமுதலாளிகள் ஏகபோக முதலாளிகளாக வளர்ச்சியடைந்தனர்இதனையே பொருளாதார ஆசிரியர்கள் போட்டி முதலாளித்துவம்  ஏகபோக  முதலாளித்துவமாக மாறியது என்பர்மேலும் ஆலை முதலாளித்துவகளுக்கு நிதி உதவ அளிக்கும் பெரிய பங்கு நிறுவனங்கள் தோன்றிஆலைகளில் அவற்றின் மூலதன ஆதிக்கம் வளரத் தொடங்கியதுஅதாவது ஆலை மூலதனமும்பங்கு மூலதனமும் இணைந்து நிதி மூலதன ஆதிக்கத்தை உற்பத்தியில் ஏற்படுத்தின.

2.3.3. மேற்கூறிய வளர்ச்சிஇந்தியாவின் ‘ஆங்கிலேயரின் சுரண்டல் முறையில் மாற்றம் கொண்டுவந்ததுஇதுவரை இந்தியாவுக்குப் பொருட்களையே ஏற்றுமதி செய்து வந்த ஆங்கிலேய முதலாளிகள்அதற்குப் பதிலாக நிதி மூலதனத்தையே ஏற்றுமதி செய்துஇந்தியாவிலேயே தொழில் உற்பத்தியை மேற்கொள்ள ஆரம்பித்தனர்குறைந்த விலையில் மூலப் பொருட்களும்குறைந்த கூலியில் தொழிலாளிகளும் இந்தியாவில் கிடைத்ததால்மேற்கூறிய நிலையை மேற்கொள்ள ஆங்கிலேயர்களுக்கு வசதியாக இருந்ததுஆனால் ஒருநாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படைத் தொழில்களை ஏற்படுத்தாமல்இந்திய மக்களின் அன்றாடத் தேவைக்கான பொருடகளை (Consumer Goods) உற்பத்தி செய்யும் ஆலைகளை ஆங்கிலேயர் ஏற்படுத்தினர்மேலும் தற்காப்புக்கான ஆயுதங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து கொள்ளும் நிலையும் ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்டதுமேலும் இந்தியாவில் தொடர்ந்து அடித்த கொள்ளைகளையே மறுமுதலீடாக ஆங்கிலேயர் இட்டனர்.

2.3.4. பிரிட்டன் போன்ற பிற ஐரோப்பிய நாடுகளும் மேற்கூறிய ஏகபோக முதலாளித்துவ வளர்ச்சியை அடைந்தனஇதன் விளைவாய் காலனிநாடுகளைப் பங்குபோடுவதில் அவற்றிற்குள் தீவிரப் போட்டிகள் தோன்றினஇதன் விளைவுகளே முதல்இரண்டாம் உலக யுத்தங்கள்.

2.3.5. ஆங்கிலேயர் ஆட்சியின் இம்மூன்றாவது காலகட்டத்தில் இன்னொரு முக்கியக் கூறு,  ஆங்கிலேயர் கூட்டம் இந்திய வியாபாரிகள்நிலப்பிரபுக்களிடையே இருந்து தங்களுக்கு விசுவாசமான ஒரு முதலாளிக் கூட்டத்தை உருவாக்கினர். (முதல் கட்டத்தில் தங்களுக்கு விசுவாசமான ஒரு புதிய நிலப்பிரபு வர்க்கத்தை ஆங்கிலேயர் உருவாக்கினர் என்று முன்பே பார்த்தோம்). இவர்களைப் பொதுவாகத் தரகு முதலாளிகள் என்று அழைக்கலாம்இவர்கள் தங்களது வளர்ச்சிக்கு அந்நியர்களையே சார்ந்து நிற்பவர்கள் ஆவர்சுருக்கமாகக் கூறினால்அந்நியர்கள் இந்தியாவைச் சுரண்டுவதற்கு இடைத்தரகர்களாக நிற்பவர்கள் இவர்களாவர்இவர்கள் உதவியினால் ஆங்கிலேயர் தங்களது பொருட்களுக்கு இந்திய முலாம் பூசி இந்திய மக்களின் அந்நிய எதிர்ப்பு உணர்வைத் தணிக்க முயற்சித்தனர்.

 

3.0. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான இந்திய மக்களின் போராட்டங்கள்

3.1 ஆங்கிலேயர் தங்களது ஆட்சியை இந்திய மக்கள் மீது எதிர்ப்பின்றித் திணிக்கமுடியவில்லைஇந்திய மக்கள் கோழைகளாக இருந்து விடவில்லைஏகாதிபத்தியவாதிகள் செய்த மனிததன்மையற்ற கொள்ளைகள்சூறையாடுதல்அழிவுசதிகள்மோசடிகள்காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல்கள் ஆகியவற்றால் கோபமுற்று ஆத்திரமடைந்த இந்திய மக்கள் கலகப்பாதையை மேற்கொண்டார்கள்பல வீரமிக்க சண்டைகளைச் செய்தார்கள்எதிரிக்குப் பல வன்மையான அடிகளைக் கொடுத்தார்கள்கி.பி.1757ஆம் ஆண்டிலிருந்து 1857வரை நூற்றாண்டு காலமானது உழவர்களும் பழங்குடிகளும் நடத்திய கலகங்களும் ஆயுதந் தாங்கிய எழுச்சிகளும் நிறைந்த நூற்றாண்டாகவே இருந்ததுபிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடத்திய சண்டைகளும் போராட்டங்களும் நாட்டு மக்களுடன் மட்டும் நின்று விடவில்லைஏகாதிபத்தியப் படையிலிருந்த இந்தியப் படைவீரர்களும் அவர்களை எதிர்த்துப் பல கலகங்களிலும் சண்டைகளிலும் ஈடுபட்டனர்.

3.2 இந்நூற்றாண்டில் நடைபெற்ற பல தனித்தனியான தொடர்பற்ற ஆயுதமேந்திய கலகங்கள்எழுச்சிகள் ஆகியவை அனைத்தும் சங்கமித்த ஒரு உணர்ச்சிமிக்க போராட்டமாகவே 1857- இல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போர் அமைந்தது.

3.2.1 இத்தகையதொரு பரவலான ஆயுதந்தாங்கிய எழுச்சி இந்திய வரலாற்றில் ஒரு புதிய போக்காகும்இதற்குமுன் நடைபெற்ற ஆயுதந் தாங்கிய மோதல்கள் அனைத்தும் தனித்தனியான சம்பவங்களாகவே இருந்தனஅவை ஒரு ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியின் தன்மையை அடையவில்லைஇப்போரில் நேர்முகமாகவோஅல்லது மறைமுகமாகவோ ஈடுபடாத பகுதிகள் இந்தியாவில் இல்லை.

3.2.2 ஏகாதிபத்தியப் பீரங்கிகளை எதிர்த்து மக்கள் ஓராண்டு காலம் போராடினார்கள்இப்போரில் அவர்கள் வெளிப்படையான சண்டைகளையும் நடத்தினார்கள்கொரில்லாப் போர் முறையையும் மேற்கொண்டார்கள்.

3.2.3 புரட்சியைப்பற்றிய ஒரு தொலைநோக்குப் பார்வையை அவர்கள் கொண்டிராததினாலும்பலவீனமான ஊசலாடும் தன்மையுடைய ஒரு தலைமையாக அதன் தலைமை இருந்ததினாலும் நன்கு ஒழுங்கமைப்படாத இயல்புடையதாய் அப்போர் இருந்தமையினாலும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அப்போர் வெற்றிபெற இயலவில்லைஇருப்பினும் அப்போர் ஒரு புத்துணர்வுபெற்ற ஒரு புதிய நாட்டை நமக்கு அளித்துச் சென்றது.2

3.3 ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சியாளர்களுக்குச் சமூக அடிப்படையாக நிலப்பிரபுத்துவ வர்க்கம் இருந்த காரணத்தால்இந்திய மக்கள் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போரிலும் ஈடுபட வேண்டியத்திருந்ததுஈடுபடவும் செய்தனர்.

3.3.1 இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சியாளருக்கும்நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினரும் தடையாக அமைந்தனர்எனவே இந்த இரண்டு வர்க்கங்களுக்கும் எதிரான போராட்டமாகவே இந்திய மக்களின் விடுதலைப்போர் அமைந்ததுமக்கள் ஆங்காங்கே நடத்திய நிலப்பிரபுத்தவ எதிர்ப்புப் போராட்டங்களே நாடு தழுவிய ஆங்கிலேய ஆட்சியாளருக்கு எதிரான தேசிய விடுதலைப் போராக வளர்ச்சியடைந்தன.

3.4. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வஹாபி புரட்சி அமைப்பு ஒன்று இந்தியாவில் தோன்றியதுஆங்கிலேய ஆட்சியை ஆயுதப் போராட்டத்தின் மூலம் அடியோடு தகர்த்தெறிவதும் இந்தியப் பிற்பொக்குச் சமூக அமைப்பை மாற்றி ஒரு புதிய சமூக அமைப்பை உருவாக்குவதும் அதன் நோக்கிங்களாக இருந்தனஇந்த அமைப்பு ஆங்கிலேயர்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் எதிராகப் பல்வேறு மக்கள் போராட்டங்கள் நடத்தியது. 1857- ஆம் ஆண்டுப் போரிலும் அது முக்கியப் பங்கு வகிக்கிறதுஇப்போரின் தோல்விக்குப்பிறகு அகில இந்திய அடிபடையிலும் ஒரு ஆயுதந்தாங்கிய எழுச்சியை நடத்த இந்த அமைப்பு திட்டம் இட்டிருந்ததுஆனால் தெளிவில்லாத காரணத்தாலும்புரட்சிபற்றிய தொலைநோக்குப் பார்வை இல்லாத காரணத்தாலும் இத்திட்டம் வெற்றிபெற இயலவில்லை.

3.5. 1849- ஆம் ஆண்டிலிருந்து 1890- ஆம் ஆண்டு வரையிலுள்ள இடைப்பட்ட காலத்தில் 42 ஆயுதத்தாங்கிய எழுச்சிகளை உழவர்களும்பழங்குடியினரும் நடத்தியுள்ளனர் என்றும்அதன் விளைவாக பிரிட்டன் படையைச் சேர்ந்தவர்கள் 2173 பேர்கள் உயிரிழந்தனர் என்றும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

 

3.6. 1913 – ஆம் ஆண்டில் அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்த இந்தியர்கள் கேதர் கட்சி (Chadar Party) என்னும் பெயரில் ஒரு புரட்சி அமைப்பை உருவாக்கினார்கள்பிரிட்டன் ஏகாதிபத்திய ஆட்சியை ஆயுதப் புரட்சி மூலம் இந்தியாவிலிருந்து தூக்கியறிவதே தனது நோக்கமென அது பிரகடனப்படுத்தியது.

3.6.1. 1914- ஆம் ஆண்டில் அக்கட்சி தனது புரட்சி வீரர்களை இந்தியாவுக்குள் அனுப்ப முடிவெடுத்ததுசுமார் 3000 வீரர்கள்  பல்வேறு மார்க்கங்களில் இந்தியாவுக்குள் நுழைந்தனர்புரட்சிக்கான தேதியாக 1916- ஆம் ஆண்டு பிப்ரவரி 21- ஆம் நாள் குறிப்பிடப்பட்டதுஆனால் முன்கூட்டியே எதிரிக்குத் தகவல் கிடைத்துவிட்டதால்புரட்சியாளர்கள் பெரும்பாலோர் பிடிப்பட்டனர்கோமகட்டா மாறா என்ற ஜப்பானியக் கப்பல்மூலமாக வந்த புரட்சியாளர்கள் சுற்றி வளைக்கப்பட்டுபெரும்பாலோர் கொல்லப்பட்டனர்எஞ்சியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

     3.7. 1921-ஆம் ஆண்டு நடைபெற்ற கேரளாவில் மலபாரைச் சேர்ந்த மாப்ளா விவசாயிகள் போராட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதுவிவசாயிகள் பிரிட்டன் ராணுவத்தைச் சுற்றிபலத்த சேதம் ஏற்படுத்தினர்ஏரநாடுவள்ளுவநாடு என்ற இரு தாலுக்காக்களையேக் கைப்பற்றிச் சுந்ததிரப்பிரகடனம் செய்தனர்சுமார் 6 மாதகாலத்திற்கு மலபாரின் தென்பகுதி முழுவதும் மாப்ளா விவசாயிகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததுகடுமையான இராணுவ நடவடிக்கைகளுக்குப்பிறகுஉள்நாட்டு துரோகிகளின் உதவியுடன் பிரிட்டன் ராணுவம் தன் ஆதிக்கத்தை மீண்டும் அங்கே நிலைநாட்டியது.

3.8. மேலும்பஞ்சாபில் கூகா மக்களின் ஆயுதப் போராட்டம்மஹாராஷ்டிராகுஜராத்ஹைதராபாத் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற விவசாயிகளின் ஆயுதப் போராட்டங்கள் ஆங்கிலேயரை நடுங்க வைத்தனபீஹாரில் நடைபெற்ற சந்தால் ஆயுதப் போராட்டமும் இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.

3.9. மேற்கூறிய விவசாயிகள் போராட்டங்களுடன் தொழிலாளிகளின் போராட்டங்களும் நாடெங்கும் வெடிக்கத் தொடங்கினசென்னைபம்பாய்கல்கத்தா தொழிலாளிகள் பல்வேறு வேலை நிறுத்தங்களில் ஈடுப்பட்டனர். 1905- ஆம் ஆண்டு பம்பாய் போராட்டம் 1906 ஆம் ஆண்டு வங்காளத்தில் பொது வேலைநிறுத்தம், 1907 ஆம் ஆண்டு பஞ்சாப் ரயில்வேத் தொழிலாளிகள் போராட்டம் ஆகியவை இந்திய ஆட்சியாளரை நடுங்க வைத்தன.

3.9.1. 20 நூற்றாண்டின் தொடக்க காலத்தில் மத்தியதர படித்த வர்க்கத்தினரிடையே இருந்து சில புரட்சிக்குழுக்கள் தோன்றினஇக்குழுக்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம்முதல் வகையினர் தனிப்பட்ட ஆங்கிலேயே அதிகாரிகளைக் கொல்வது மூலம் அந்நிய ஆட்சியினரை அதிரச் செய்யலாம் என்ற கொள்கையுடையவர்கள்இரண்டாவது வகையினர் இராணுவம் அமைத்து பிறநாடுகளின் ராணுவ உதவியுடன் ஆங்கிலேய ஆட்சியைத் தகர்க்கலாம் என்ற கொள்கையுடையவர்கள்பகத்சிங்குருதேவ்வாஞ்சிநாதன் போன்றோர் முதல் வகையினரைச் சேர்ந்தவர்கள்காதர் கட்சியினர் வங்காளத்தில் அமைத்த அனுசிலன் சமிதியைச் சேர்ந்த அமைப்பினர் இரண்டாவது வகையினரைச் சேர்ந்தவர்கள்.

3.9.2 பஞ்சாப்ராஜஸ்தான்உத்திரப்பிரதேசம்மத்தியப்பிரதேசம்மஹாராஷ்டிரம்மைசூர்ஒரிசாசென்னை ஆகிய இடங்களிலும் மேற்கூறிய புரட்சி அமைப்புகள் செயல்பட்டன. 1912-இல் வைஸ்ராயாக இருந்த ஹார்டிங்மீது பஞ்சாப் புரட்சியாளர்கள் வெடிகுண்டு வீசினர்வங்காள அனுசிலன் சமிதியினர் 1907- 17க்குள் 64 ஆங்கிலேய அதிகாரிகளைச் சுட்டுக் கொன்றனர்திருநெல்வேலியில் ஆஷ்துரை என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டான்மேற்கூறிய புரட்சியாளர்கள் மீது நாசிக் சதிவழக்குஅலிப்பூர் சதிவழக்கு ஆகியவை போடப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டனர்.

3.9.3 மேற்கூறிய ஆயுதப் போராட்டங்கள் அனைத்தும் இந்திய மக்களின் வீரஞ் செறிந்த விடுதலை உணர்வைப் படம் பிடித்துக் காட்டுகின்றனமேலும் இது இந்திய விடுதலைப் போர் கத்தியின்றிரத்தமின்றி நடத்தப்பட்டது என்ற புரட்டல் வாதத்தை  அம்பலப்படுத்துகிறதுஇருப்பினும் புரட்சியைப்பற்றி ஒரு தொலை நோக்குப்பார்வை இல்லாததன் காரணமாகவும்ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான புரட்சிகர அமைப்பும் தலைமையும் இல்லாததன் காரணமாகவும்ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான புரட்சிகர அமைப்பும் தலைமையும் இல்லாததன் காரணமாகவும்வர்க்கங்களைப்பற்றிய தெளிவின்மை காரணமாகவும் போராட்டங்கள் வெற்றிபெறவில்லை.

 

4.0. ஆங்கிலேயரின் சூழ்ச்சி

4.1. ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இந்திய மக்களின் போராட்டங்களை இருவழிகளில் அடக்க முயற்சித்தனஒன்று நேரடி பலாத்கார அடக்குமுறைமற்றொன்று கருத்துரீதியான மக்களைச் செயலற்றவர்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைநேரடி அடக்குமுறைக்கு ஜாலியன் வாலாபக் படுகொலை போன்ற பல வரலாறுகள் உள்ளனகருத்துரீதியாக அடக்குவதற்கு மதத்தலைவர்கள் பயன்பட்டனர்சமூகச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மதத் தலைவர்கள்மக்களை அந்நியருக்கு எதிரான போராட்டத்திலிருந்து திசை  திருப்ப முயற்சித்தனர்நாட்டு விடுதலைக்குப் பதில் ஆன்மீக விடுதலையை முன்வைத்தனர்இராஜாராம் மோகன் ராயின் பிரம சமாஜம்தயானந்த சரஸ்வதியின் ஆரிய சமாஜம் போன்றவை மேற்கூறிய பணிகளையே செய்தன.

4.2. அடுத்துஆங்கிலேய ஆட்சியாளர்கள் தங்களுக்கு எதிரான இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கமதஜாதிப் பிரச்சினைகளைத் தூண்டிவிட்டனர்இந்து – முஸ்லீம் பகைமையை வளர்த்தனர்பிரித்து ஆள்வது (Divide and Policy) என்ற கொள்கையைக் கடைப்பிடித்தனர்இதன் உச்சகட்ட நடவடிக்கையாக 1905- ஆம் ஆண்டு அரசியல் சட்டங்கள் வகுப்புவாரி பிரநிதித்துவம் என்ற சலுகை அளிப்பதாகக் கூறிஇந்துமுஸ்லீம் ஒற்றுமையைத் தகர்க்கவே முயற்சித்தன.

 

4.3. மேலும்ஆங்கிலேய ஆட்சியாளர் இந்திய மக்களுக்கு எதிரான தமது அடக்குமுறைக்கு ஆதரவையும் உதவியையும்தாம் உருவாக்கிய நிலப்பிரபுத்துவ வர்க்கத்திடமிருந்தும்தரகு முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்தும் பெற்றனர். 1858-ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணி செய்த ஏகாதிபத்திய முடியாட்சியின் பிரகடனத்தின்மூலம் மன்னர்களுக்கும் நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களுக்கும்முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

4.4. 1361, 1891, 1909, 1919- ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட சில அரசியல் சட்டச் சீர்திருத்தங்கள் மூலம் தரகு முதலாளித்துவக் கூட்டத்தினருக்கு வர்த்தகம்நிர்வாகம்கல்வி முதலியவற்றில் சில சலுகைகள் வழங்கப்பட்டன.

4.5. சுருங்க கூறின் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒருபுறம் படையைப் பலப்படுத்துவதும்மறுபுறம் அரசியல்சட்டநிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதும் ஆகிய இரட்டைத் தந்திரத்தை மேற்கொண்டுதன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக நிஜ தோட்டாக்களையும்தேன் தடவிய தோட்டாக்களையும் தேவைக்கேற்றவாறு பயன்படுத்தத்தொடங்கியது.4

 

5.0. காங்கிரஸ் கட்சியின் தோற்றம்

5.1. காங்கிரஸ் கட்சியின் தோற்றம்பற்றி ஆராய்ந்த திரு.மா.பொ.சிஅவர்கள், 1857 சிப்பாய் கலகத்திற்கும் 1885- இல் காங்கிரஸ் தோற்றத்திற்கும் இடைப்பட்ட காலத்தைப்பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்.

இடைப்பட்ட இருபத்தேழாண்டுகளில் நாட்டில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குஎதிரான கிளர்ச்சிகளும்முயற்சிகளும் அங்குமிங்குமாக நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தனஆனால்அவை சரித்திராசிரியர்களால் சரியாகப்  போற்றப்படவில்லை.

நானாதோப்பேலட்சுமிபாய் ஆகிய வீரத்திலங்கள் நடத்திய விடுதலைப் போர் வெளிப்படையாகத் தோற்றுவிட்டது என்றாலும்உரிமைக் கனல் உள்ளங்களிலே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டுதானிருந்ததுதிரும்பவும் முன்னைவிடவும் வலுவான முறையில் மக்கள் புரட்சி தோன்றக்கூடுமென்ற அச்சம் ஆங்கிலேயருக்கு இருந்து வந்ததுஅப்படி ஒரு புரட்சி எழுமாயின்அது முன்போல வெறும் மதரீதியானதாக அல்லாமல்முற்றிலும் அரசியல் பொருளியல் ரீதியானதாக இருக்கக்கூடுமென்று கருதுவதற்கான அறிகுறிகளும் வெளிப்படலாயின5

5.2. காங்கிரஸ் கட்சியின் தோற்றத்தின் அவசியத்தை டாக்டர் பட்டாபி சீதாராமய்யரின் கூற்றுமூலம் ம.பொ.சிநமக்கு தெளிவுப்படுத்துகிறார்அவர் கூறுவதாவதுதங்கள் கோரிக்கைகளுக்கு அரசுசிறிதும் செவிசாய்க்காமல் இருப்பது கண்டு இந்திய மக்களில் அறிவாளிகளானோர் கடுங்கோபம் கொண்டனர்ஜனநாயக முறையில் இயங்காத ஆங்கில அரசை வீழ்த்திடத் திரும்பவும் நாடு முழுவதும் பல இடங்களில் சதிச் செயல்கள் நடக்கலாயினஅரசின்பால் மக்களுக்கிருந்த வெறுப்பு மனப்பான்மையும் விரோதப் போக்கும்பம்பாய்தட்சிண விவசாயிகள் கலகத்தின் வாயிலாக வெளிப்பட்டனஇந்த நிலையில்தான் ஆக்டோலியன் ஹ்யூம் என்பவர் இந்நாட்டினரின் துயர்களை அவ்வப்போது அரசுக்கு எடுத்துரைத்துப் பரிகாரங்கள் காண்பதற்கென இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை நிறுவினார். (காங்கிரஸ் மகாசபை வரலாறு பக்கம் 5)6.

 

பின்.பொ.சிபின்வருமாறு கூறுகிறார்.

அந்நியருக்கு அடிமைபட்ட நாடுகளிலே வேறு எந்த ஒரு நாட்டிலும்அடிமைப்படுத்திய அந்நியரால் விடுதலைப் புரட்சியோகிளர்ச்சியோ தோற்றுவிக்கப்பட்டதாக உலக வரலாறு கூறவில்லைஇந்திய நாட்டிலும் ஹ்யும் துரை காங்கிரஸ் மகாசபையை நிறுவ முன்வந்தது இந்தியாவை ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக அல்லபிற்காலத்தில் இப்படி ஒரு தவறான எண்ணம் இந்திய விடுதலை வீரர்களுக்கேகூட ஏற்பட்டுவிட்டதுஅது ஹ்யூம் துரைமகனாரின் அதிர்ஷ்டம் போலும்ஆங்கிலேயர் ஆட்சியை இந்தியாவில் உறுதிப்படுத்துவதற்காகவே ஹ்யூம் காங்கிரஸ் மஹாசபை நிறுவினார் என்று கருதுவதற்கு இடம் இருக்கிறதுஅது எப்படியாயினும்இந்தியாவில் நிலவிய ஆங்கிலேயக் கொடுங்கோலாட்சியைச் செங்கோலாட்சியாக மாற்றும் நன்னோக்கம் அவருக்கு இருந்தது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்அந்தவகையில் இந்திய மக்களுக்கு உத்தியோகம் தேடித்தரும் (எம்பிளாய்மெண்டு எக்சேஞ்அமைப்பாக காங்கிரஸ் மகாசபையை ஹ்யூம் தோற்றுவித்தார்.7

5.3. மேலும்.பொ.சிஹ்யூம் யார் என்பதைப்பற்றி ஆராய்ந்து பின்வருமாறு கூறுகிறார்.

அரசு அலுவலிருந்தபோது, 1857- இல் நடந்த சிப்பாய் புரட்சியின்போது வங்காளத்தில் எட்டாவா மாவட்டத்தில் துணை மாஜிஸ்திரேட்டாகவும் துணைக் கலெக்டராகவும் இருந்து பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பணிபுரிந்தார்அப்போதுஅனந்தராம் என்ற சிற்றூரில் புரட்சியாளருக்கும் இவருக்கும் நேரடி மோதல் ஏற்பட்டதுஅந்நேரத்தில் இந்தியர்களாலேயே இவர் காப்பாற்றப் பட்டார்இதுபற்றிய விவரம் எட்டாவா மாவட்ட அரசிதழில் இடம் பெற்றுள்ளதுபுரட்சியை ஒடுக்கத் துணிவுடன் தொண்டாற்றியதற்காக அரசு இவருக்கு ‘.பி.’ என்ற பட்டத்தை வழங்கியது.

இவர் அரசு அலுவலிலிருந்து ஓய்வுபெற்றதும் 1847 புரட்சிபற்றி ஆய்வு நடத்தும் வேலையைத் தாமாகவே மேற்கொண்டார்அரசு இவர் கோரும் ஆவணங்களையெல்லாம் கொடுத்து ஒத்துழைத்ததுஇந்த ஆய்வின் விளைவாக, 1857- இல் ஏற்பட்டது போன்ற ஒரு பயங்கரமான வன்முறைப் புரட்சி திரும்பவும் எந்த நேரத்திலும் தோன்றக் கூடும் என்று கூறிஅரசை எச்சரித்தார்இதனைப் புரட்சியின்போது தமக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டும் கூறினார்.8

 

5.4. காங்கிரஸை ஹ்யூம் ஏன் தோற்றுவித்தார் என்பதை ஆராய்ந்து ம.பொ.சிபின்வருமாறு கூறுகிறார்.

புதிதாகத் தோன்றியிருந்த பட்டதாரி சாதியினர் தேசிய எழுச்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டு வருதை இவர் கூர்ந்து கவனித்திருக்கிறார். ... படித்தவர்களிடையே அபாயத்தில் அறிகுறியாக ஹ்யூம் மதிப்பிட்டிருக்க வேண்டும்.... பட்டதாரிகள் நிலை ஒரு புறமிருக்கசாதாரணத் தொழிலாளிகள் உழவர்கள் ஆகியோரிடையிலும் பொருளியல் வர்க்கரீதியான போராட்ட உணர்வு ஏற்பட்டு வருவதையும் ஹ்யூம் தெளிவாக உணர்ந்தார்... இப்படிபடித்த பட்டதாரிகள்மாணவர்கள்உழவர்கள்தொழிலாளர்கள் ஆகிய பல்வேறு பகுதியினரும் பிரிட்டிஷ் அரசின்பால் வெறுப்புற்றிருப்பதால்எந்த நேரத்திலும் அவர்களனைவரும் ஒன்றுபட்டு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் ஈடுபடுவது சாத்தியம் என்பதைத் தமது மதிநலத்தால் முன்கூட்டியே ஹ்யூம் அறிந்தார்.... இந்த நிலையில் பட்டதாரிகளின் உத்தியோக நலன்களுக்காக நடத்தப்படும் தேசியக் கிளர்ச்சியை ஏற்றுக்கொண்டுசமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள சாதாரண மக்களை அந்தப் படித்தவர்கள் தலைமையில் கீழ்கொண்டு வருவதே 1857- இல் ஏற்பட்டது போன்ற ஒரு பயங்கரப் புரட்சி தோன்றுவதை அடியோடு தவிர்க்கும் என்று தீர்க்கதரிசனத்தால் அறிந்து கொண்டார்....... காங்கிரஸ் மகாசபை தொடங்குவதற்கு முன்பு ஹ்யூம் அவர்கள்கவர்னர் ஜெனரல் டிப்ரின் என்பவரைப் பார்த்துப் பேசினார்முதலில் சமூக சீர்திருத்தக் குறிக்கோளுடையதாகவே காங்கிரசை ஏற்படுத்த அவர் விரும்பினார்அவரை அரசியலுக்குத் திருப்பிவிட்டவர் டிப்ரின் பிரபுதான்.... ஹ்யூம்கவர்னர் ஜெனரல் டிப்ரின் பிரபுவைக் கலந்து ஆலோசித்துஅவர் விரும்பியபடி சமூக சீர்திருத்த அமைப்பாக மட்டுமல்லாமல்படித்தவர்களுக்குபட்டதாரிகளுக்கு உத்தியோகம் தேடித்தரும் அரசியல் அமைப்பாகவும் காங்கிரஸ் மகாசபையைத் துவக்க முற்பட்டார்.9

.பொ.சிஅவர்கள் தனது கருத்துக்குச் சாதகமாக முன்னாள் அமெரிக்க தூதுவர் செஸ்டர் பௌல்ஸும்மேற்கு ஜெர்மனி வரலாற்றுப் பேராசிரியர் டைட்மேயர் பிரதர்மண்ட் என்பவரும் கூறியுள்ள கருத்துகளை எடுத்துக் காட்டுகிறார்.10

5.5. காங்கிரசின் தோற்றம் பற்றிய ம.பொ.சிகருத்து மிகச் சரியாகவே உள்ளதுஆனால் காங்கிரசின் தலைமை படித்த மத்திய தரவர்க்கத்தினரின் தலைமை என்ற அவரது கூற்று விவாதத்திற்குரியதுஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் வளர்க்கப்பட்ட வடஇந்தியத் தரகு முதலாளித்துவக் கூட்டமே காங்கிரஸ் தலைமையில் அடிப்படைச் சக்தியாக அமைந்ததுஅந்த வர்க்கத்தின் நலன்களையும் நிலப்பிரபுத்துவ வர்கத்தின் நலன்களையும் பிரதிபலித்த ஆங்கிலேயக் கல்விபெற்ற கோகலேதாதாபாய் நவுரோஜி போன்றவர்களே காங்கிரஸ் தலைமையில் அமர்ந்தனர்.

காங்கிரசின் தோற்றத்தை மேற்கண்டவாறு ஆராயும்போதுமக்களின் விடுதலைப் போராட்டத் தீயை அணைக்கும் ஏகாதிபத்தியவாதிகளின் தீயணைப்புப் படையாகவே செயல்பட்டது11 என்பது தெளிவாகிறது.

 

6.0. காங்கிரஸ் போராட்ட வடிவம்

6.1. வருடத்திற்கு ஒருமுறை கூடிஆங்கிலேய அரசுக்குத் தனது விசுவாசத்தை தெரிவிக்கும் தீர்மானத்துடன் தொடங்கிதான் பிரதிபலித்த வர்க்கங்களின் நலன்களுக்குத் தேவையான சில சீர்திருத்தங்களைப்பற்றி முடிவு செய்வதும்அவற்றை நிறைவேற்றித் தரும்படி ஆங்கிலேய அரசிடம் மனுகொடுத்து வேண்டுவதும் காங்கிரசின் போராட்ட வடிவமாக 1905 வரை இருந்துவந்ததுஇக்காங்கிரசுக்கு ஆங்கிலேய அரசே தனது பிரதிநிதிகளை அனுப்பிவைத்ததுஇந்தியக் கவர்னர் ஜெனரல்களும் வாழ்த்துச் செய்தி அனுப்புவது உண்டு.

6.2 1905ஆம் ஆண்டு இந்து-முஸ்லீம் ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்காகக் கவர்ஸன் பிரபுவால் வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபிறகுஅதனால் ஆத்திரமடைந்த சில நடுத்தர வர்க்கத்தினர் – இந்தியக் கல்வி பெற்றவர்கள் – காங்கிரசில் இணைந்து செயல்படத் தொடங்கினர்பாலகங்காதர திலகர்விபினசந்திரபாலர்லாலா லஜபதிராய் போன்றவர்கள் மேற்கூறிய வகையினரைச் சேர்ந்தவர்களே வர்இவர்கள் குட்டி முதலாளித்துவ மதிப்புடன் ஆங்கிலேயர்களிடம் தங்களது உரிமைகளைப் பெறவேண்டும் என்று நினைத்தனர்இதுவரை காங்கிரஸ் லண்டன் சென்றுஆங்கிலேய அரசிடம் மனு கொடுத்து பிச்சை எடுப்பதை  நிறுத்த வேண்டும் என்று இவர்கள் கூறினர்.  மேலும்இந்திய மக்களைத் திரட்டி அதன்மூலம் ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடிக் கொடுத்து உரிமைகளைப் பெற வேண்டும் என்று இவர்கள் கூறினர்முதல் வகையினர் மிதவாதிகள் என்றும்இரண்டாவது வகையினர் தீவிரவாதிகள் எனவும் அழைக்கப்பட்டனர்.

6.3. காங்கிரஸின் வரலாற்றைப் பார்க்கும்போது, 1906- ஆம் ஆண்டுவரை அது இந்திய சுதந்திரம்பற்றிப் பேசியதே கிடையாது என்பது தெரியவருகிறது. 1905- ஆம் ஆண்டில்தான் இந்தியச் சுதந்திரத்திற்கான உண்மையான போராட்டங்களிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்காககாங்கிரஸ் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆளுகைக்குள் ஒரு பொறுப்பாட்சியை நிறுவுதற்கான கோஷங்களை முன்வைத்ததுஇதில் மிதவாதிகள்தீவிரவாதிகள் இருவருக்குமிடையில் வேறுபாடு கிடையாது.12 போராட்ட வடிவத்தில்தான் இருவருக்குமிடையே வேறுபாடு நிலவியதுமிதவாதிகள் வருடக் காங்கிரஸ் மகாநாட்டில் தீர்மானங்கள் போட்டுஆங்கிலேய அரசுக்கு மனு அனுப்பி வேண்டிக்கொள்ளவேண்டும் என்று கூறினர்தீவிரவாதிகளோ காங்கிரசை வருடம் முழுவதும் செயல்படும் மக்கள் இயக்கமாக மாற்றிமக்கள் போராட்டங்களின் மூலம் (சட்டத்தின் உட்பட்ட போராட்டங்கள்தான்இந்தியர்கள் உரிமைகள் பெறுதல் வேண்டும் என்று கூறினர்.

6.4. வங்கப் பிரிவினையை எதிர்த்த இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்ட தீவிரவாதக் காங்கிரஸ் தலைவர்கள் பகிஷ்கரிப்புசுதேசியம்பிரிட்டனின் ஆட்சிக்கு உட்பட்ட சுயராஜ்ஜியம்தேசியக் கல்வி என்ற நான்கு கோஷங்களின் அடிப்படையில் இந்திய மக்களை அணிதிரட்டிஆங்கிலேய அரசைப் பணிய வைக்கவேண்டும் என்று கூறினர்மிதவாதிகளோ சுதேசியம்சுயராஜ்ஜியம் என்ற இரு கோஷங்களும் அவர்களது இராஜவிசுவாசத்திற்குத் தடையாக அமையாது என்பதேயாகும். 20- ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ஆங்கிலேயர்களுக்குக் கடுமையான போட்டியாக அமைந்த பிற ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களை இந்தியாவிங் நுழையவிடாமல் தடுக்கஇக்கோஷம் பயன்படுவதாக அமைந்ததுஆனால் தேசியக் கல்வியும்ஆங்கிலேயப் பொருள்களைப் பகிஷ்கரிப்பதும் தங்களது எஜமான விசுவாசத்துக்குத் தடையாக அமையும் என்று மிதவாதிகள் எண்ணினர்மேலும்தீவிரவாதிகள் மேற்கூறிய நான்கு கோஷங்களையும் மக்களைத் தட்டியெழுப்பும் அரசியல் கருவியாகப் பயன்படுத்த விரும்பினர்ஆனால் மிதவாதிகளோ தற்காலிகமான பொருளாதார நடவடிக்கையாகச் சுதேசியத்தைப் பார்த்தனர்இப்பிரச்சினையில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் 1905- ஏற்பட்ட மோதல், 1907-ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டத்தில் கலகத்தை ஏற்படுத்தி காங்கிரசை இரண்டாக உடைய வைத்தது.

6.5. காங்கிரசின் தலைமையில் இருந்த ஆங்கிலேய அரசின் விசுவாசிகளான வட இந்தியத் தரகு முதலாளிகளை – காங்கிரசின் மிதவாதிகளை – எதிர்த்துதிலகர் போன்ற குட்டி முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்தவர்களால் வெற்றி பெற இயலவில்லைஆங்கிலேய அரசும் தீவிரவாதிகள் மீது கடுமையான அடக்குமுறையை மேற்கொண்டன. 1907 ஆம் ஆண்டு சூரத் காங்கிரசில் மிதவாதிகள் ஆங்கிலேயப் போலீசின் உதவியால் தீவிரவாதத் தலைவர்களைத் தாக்கினர்திலகர் 1907- ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்லஜபதிராயும்விபன் சந்திரபாலரும் சுய தீவாந்திர வாழ்க்கையைமேற்கொண்டனர்அரவிந்தர் பாண்டிச்சேரி சென்று துறவை மேற்கொண்டனர்.

1907-ஆம் ஆண்டிலிருந்து 1914 வரை காங்கிரஸ் இயக்கம் மொத்தத்தில் செயலற்றுக் கிடந்தது. 1915-இல் அன்னிபெஸண்ட் அம்மையார் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே ஒற்றுமையை’’ ஏற்படுத்தி காங்கிரசை மறுபடியும் ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளின் மக்களின் போராட்டத் தீயை அணைக்கும் தீயணைப்புப்படையாகச் செயல்படவைக்க முயற்சி எடுத்தார்திலகரும் அதற்கு இணங்கினார்.

6.7. இதுவே 1921 ஆம் ஆண்டுவரை நிலவிய காங்கிரசின் நிலையாகும்இக்காலகட்டத்தில் சொல்லளவில்கூட உழவர்கள்தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் அடிப்படையான பிரச்சினைகளைக் காங்கிரஸ் ஏற்கவில்லைஇந்தியாவிற்கு முழு சுதந்திரம் என்பதும் வைக்கப்படவில்லை.

6.8. மாறாக மிதவாதிகளுடன் இணைந்து திலகர் போன்ற தீவிரவாதிகளும்ஆயுதந்தாங்கிய விடுதலைப் போரை அடிப்படையாகக் கொண்டுஇந்தியாவுக்கு முழு விடுதலை பெறவேண்டும் என்று கூறிச் செயல்பட்ட சில உண்மையான புரட்சி அமைப்புகளைக் கண்டித்தனர்.13

6.9. மேலும்திலகர்விபினசந்திரபாலர்லஜபதிராய் போன்றவர்கள் இந்துமத வெறியுடன் செயல்பட்டுஇந்து – முஸ்லீம் வேறுபாடு தீவிமடையக் காரணமாகவும் அமைந்தனர்இந்து ஸ்வராஜ்யமே அவர்கள் நோக்கமாக அமைந்திருந்தது.

 

7.0. பாரதியின் காலகட்ட அரசியல் சூழ்நிலை

7.1. பாரதியின் காலகட்டம்ஆங்கிலேயரின் சுரண்டல் ஏகாதிபத்தியச் சுரண்டலாக வளர்ச்சியடைந்திருந்த காலகட்டமாகும்இக்காலகட்டத்தில்தான் 1885 முதல் 1904 வரை காங்கிரஸில் நீடித்துவந்த வடநாட்டுத் தரகு முதலாளித்துவத் தலைமையைதிலகர் போன்ற குட்டி முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சிலர் எதிர்க்கத் தொடங்கினர்காங்கிரஸின் பழைய நடைமுறைகளை அவர்கள் எதிர்த்தனர்மக்களைச் சார்ந்த இயக்கமாகக் காங்கிரசை மாற்ற அவர்கள் எண்ணினர்பகிஷ்கரிப்புசுதேசியம்சுயராஜ்ஜியம்தேசியக் கல்வி என்ற நான்கு முழக்கங்களை முன்வைத்துஅரசியல் இயக்கத்தை முன்கொண்டு செல்ல அவர்கள் முயற்சித்தனர்.

7.2. ஆங்கிலேயர் அரசாரும் இக்காலகட்டத்தில் சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்இந்து – முஸ்லீம் ஒற்றுமையைச் சீர்குலைக்கவங்காளப் பிரிவினையை 1905- இல் ஏற்படுத்தினர்காங்கிரஸ் தீவிரவாதிகளை அவர்கள் வேட்டையாடினர். 1900 – 1919 ஆம் ஆண்டுகளில் மிண்டோ – மார்லின் சீர்திருத்தம் மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தம் ஆகிய சட்டங்கள்மூலம் இந்திய மக்களை ஏமாற்ற அவர்கள் முயற்சி எடுத்தனர்போலித்தன்மை கொண்ட தேர்தல்மக்கள் சபை ஆகியவற்றை இந்தியாவுக்கு அவர்கள் அறிமுகப்படுத்தத் தொடங்கினர்.

7.3. காங்கிரசின் மிதவாததீவிரவாதத் தலைவர்களுக்கு இடையே நீடித்த தகராறு முற்றி, 1907- இல் காங்கிரஸ் இயக்கம் தேக்கமுற்று இருந்ததுபின் அன்னிபெஸண்டின் முயற்சியால் மிதவாத – தீவிரவாதித் தலைவர்களிடையே ஒற்றுமை ஏற்பட்டுஹோம்ரூல் இயக்கம் தோன்றியது.

 

8.0. பாரதியின் அரசியல் வாழ்க்கை

8.1. 1904- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுதேசமித்திரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியில் அமர்ந்ததுடன்பாரதியின் அரசியல் வாழ்க்கை தொடங்குகிறது என்று கூறலாம்உலக அரசியல் செய்திகளை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துஅப்பத்திரிக்கையில் எழுதத் தொடங்கிய காரணத்தால்அவருடைய அரசியல் அறிவு வளர்ச்சியடைந்தது.

8.2. 1905 ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினைக்கு எதிரான திலகர்விபினசந்திரபாலர் ஆகியோரின் போராட்டம்பாரதியைக் காங்கிரஸ் அரசியலுக்கு இழுத்துச்சென்றதுஅப்போராட்டத்தால் உந்தப்பட்டுஅவர் காங்கிரஸ் இயக்கத்தில் செயல்படத் தொடங்கினார்திலகரின் தீவிரவாதக் குழுவுடன் இணைந்து செயல்பட்டார்.

அந்த ஆண்டு பாரதி காசிக் காங்கிரசுக்குச் சென்று பங்கேற்றார்சென்னை திரும்புகையில் விவேகானந்தரின் சிஷ்யை நிந்தித்தா தேவியைச் சந்தித்தார்,

சுதேசமித்திரன்’ பத்திரிகை மிதவாதத் தலைவரான ஜிசுப்பிரமண்ய அய்யரின் பத்திரிகையாதலால்அவரால் தனது தீவிரவாதக் கருத்துகளை அதில் எழுதமுடியவில்லைஇந்நேரத்தில் அவருக்குத் தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடைய சுரேந்திரநாத் ஆர்யாசர்க்கரைச் செட்டியார்வக்கீல் துரைசாமி அய்யர்ஹரிசர்வோத்தமராவ்..சிஆகியோரின் நட்பு கிடைத்ததுஅவர்களுடைய உதவியுடன் அவர் இந்தியா பத்திரிகைப் பொறுப்பாசிரியராக அமர்ந்தார்தனது கருத்துகளை வெளிப்படையாக எழுதினார்இப்பத்திரிக்கைதான் தமிழ்நாட்டின் தீவிரவாதிகளின் ரே தமிழ்ப் பத்திரிகையாக இருந்ததுபின் பாலபாரதா என்ற ஆங்கிலப் பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார்.

8.3. 1906ஆம் ஆண்டில்தான் விபினசந்திரபாலரைச் சென்னைக்கு வரவழைத்துசொற்பொழிவு செய்யப் பாரதியார் ஏற்பாடு செய்தார்.

8.4. 1907 ஆம் ஆண்டு டிசம்பரில் சூரத் காங்கிரசுக்குச் சென்றார்தன்னுடன் ..சி., மண்டபம் ஸ்ரீநிவாஸாச்சாரி ஆகியோரைக் கொண்ட சென்னைத் தீவிர இளைஞர் குழுவை அழைத்துச் சென்றார்காங்கிரசில் தீவிரவாதக் குழுவை ஆதரித்தார்இந்நேரத்தில்தான் அவர் திலகர்லஜபதிராய் ஆகியோரை நேரடியாகச் சந்தித்தார்..சியின் சுதேசியக் கம்பெனிக்கு நிதி வசூல் செய்து அளித்து உதவினார்இதே ஆண்டில்தான் அவருடைய ‘சுதேசி கீதங்கள்’ வெளிவரத் தொடங்கினஅரசியல் உலகில் இருந்துகொண்டுஇலக்கிய உலகிலும் செயல்படத் தொடங்கினார்.

8.5. 1908- ஆம் ஆண்டில் சென்னையில் சுயராஜ்ஜியத் தினம் கொண்டாடினர்..சிசுப்பரமணிய சிவாசுதேசி பத்மநாப அய்யங்கார் ஆகிய மூவரும் அந்நேரத்தில் கைது செய்யப்பட்டனர்இவ்வழக்கின் பாரதி சாட்சியம் அளித்தார்இந்த ஆண்டில்தான் அவரே தனது சுதேசி கீதங்கள் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டார்.

8.6 இந்தியா பத்திரிகை மீது ஆங்கிலேய அரசு நடவடிக்கை எடுத்ததுஅதன் சட்டப்பூர்வமான ஆசிரியர் கைது செய்யப்பட்டார்இந்நிலையில் பாரதி பாண்டிச்சேரிக்குத் தலைமறைவாகச் சென்றார்அங்கே இருந்துகொண்டு 1908-1910 ஆண்டுகளில் இந்தியா பத்திரிக்கையைத் தொடர்ந்து நடத்தினார்ஆனால் அப்பத்திரிகையை இந்தியாவில் நுழையவிடாதபடி ஆங்கிலேய அரசு தடுத்து நிறுத்தியதுஇதன் விளைவாக அது நின்றுபோகிறது.

அதன்பின் அரவிந்தர்.வே.சுஅய்யர் தொடர்பு பாரதிக்குக் கிடைத்ததுகவிதைகள் படைப்பதிலும்தத்துவ ஆராய்ச்சியிலும் முழுமையாக ஈடுபடத் தொடங்கினார்.

8.7. 1918- ஆம் ஆண்டு பாண்டிச்சேரியைவிட்டுத் தமிழகம் திரும்பினார்ஆனால் திரும்பும் வழியிலேயே கடலூரில் கைது செய்யப்பட்டார்பின் அன்னிபெஸண்ட் அம்மையார், ‘சுதேச மித்திரன்’ சுப்பிரமணிய அய்யர் போன்றோரின் உதவியுடன் ஆங்கிலேய அரசுக்குச் சில உறுதிமொழிகளைக் கொடுத்ததன் மூலம் விடுதலை செய்யப்பட்டார். 24 நாட்கள் சிறையில் இருந்தார்.

8.8. 1919 இல் மீண்டும் சென்னைக்கு வந்தார்ராஜாஜி வீட்டில் காந்தியைச் சந்தித்தார். 1920- இல் மீண்டும் ‘சுதேசமித்திரனில்’ இணைந்துகட்டுரைகளை எழுதத் தொடங்கினார்.

8.9. பாரதியின் அரசியல் வாழ்க்கை 1905 லிருந்து 1910 வரை தீவிரமாக அமைந்தது. 1908 – இல் திலகர் குழுவைச் சேர்ந்தவர்கள் பாதிப்புக்கு உட்பட்டுசின்னாபின்னமாக்கப்பட்டவுடன்பாரதியின் அரசியல் வாழ்விலும் மாற்றம் ஏற்பட்டதுதான் சார்ந்திருந்த காங்கிரஸ் இயக்கம் தோல்வி அடைந்ததாகக் கூறிப் பாண்டிச்சேரி சென்றார்.14 பாண்டிச்சேரியிலும் 1910 வரை பாரதியின் வாழ்க்கை தீவிர அரசியலிலிருந்து விலகி நிற்கத் தொடங்கியது. 10 ஆண்டுகள் பாண்டிச்சேரியில் அகதி வாழ்வை மேற்கொண்ட பாரதிதளர்ச்சியடைந்து சென்னை திரும்ப நினைத்தார்தன் மீது எவ்வித ராஜத் துரோக வழக்குக்கும் வாய்ப்பில்லை என்பதை ஆங்கிலேய அரசுக்குத் தெரிவித்துசென்னை திரும்ப ஏற்பாடுகள் செய்தார்.15

கடலூரில் கைதுசெய்யப்பட்ட பின்னர்அவருடைய விடுதலைக்குச் சென்னையில் அன்னிபெஸண்ட்டை சேர்ந்த குழுவினர் முயற்சி எடுத்தனர்போலீஸ் அதிகாரிகளைச் சந்தித்துப் பாரதிக்கும் தீவிரவாத அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்று பாரதியின் நடத்தைக்கு உத்திரவாதம் அளித்தனர்இருப்பினும் போலீஸ் அதிகாரியின் தாங்கள் நேரடியாகவே பாரதியிடம் உறுதிமொழி பெற முடிவெடுத்தனர்பாரதியைச் சிதம்பரத்தில் சந்தித்து உறுதிமொழி பெற்றனர்இனித் தீவிர அரசியிலிருந்து விலகி விடுவதாகவும்இனித் தான் எழுதும் படைப்புகளை ஆங்கிலேய அரசின் தணிக்கைக்கு உட்பட்டு வெளியிடுவதாகவும் பாரதி உறுதிமொழி அளித்தார்.16

அத்துடன் பாரதிதான் விரும்பி ஏற்ற தீவிரக் காங்கிரஸ் நடைமுறையில் ஒதுங்கிவிட்டார்.17

8.10. விடுதலைப் போரில் பாரதியின் பங்கு 1904- இல் தொடங்கி 1907,1908- இல் உச்சகட்ட வளர்ச்சியடைந்து. 1910 இல் பின்னடைவுக்கு உட்படுகிறது. 1918- இல் அவர் ஆங்கிலேய அரசுக்கு அவர் அளித்த உறுதிமொழிகள் அவருடைய அரசியல் வீழ்ச்சியைக் காட்டுகின்றன.

பாரதியின் அரசியல் வீழ்ச்சிக்குக் காரணம் அவர் சார்ந்திருந்த தீவிரக் காங்கிரஸ் இயக்கத்தின் தோல்வியேயாகும்இதனைக் கட்டுரையின் இறுதியில் தெளிவாக ஆராயலாம்.

 

9.0. விடுதலைப் போர் குறித்துப் பாரதியின் கருத்துகள்

முழு விடுதலை

9.1. பாரதி காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து செயல்படத் தொடங்கிய காலத்தில் காங்கிரஸ் கட்சியானது இந்தியாவிற்கு முழுவிடுதலை என்ற கோரிக்கையை முன்வைக்கவே இல்லைதனது தோற்றத்திலிருந்து 1915 வரை இருபதாண்டு காலமாக சீர்திருத்தக் கட்சியாகவே இருந்த காங்கிரஸ்மக்களின் வளர்ந்து வருகின்ற விடுதலை உணர்வைக் கண்டுதனது கொள்கையில் மாற்றம் செய்யத் தொடங்கியதுசுயராஜ்ஜியம் என்ற கொள்கையை முன்வைத்துஆனால் இந்த சுயராஜ்ஜியமானது ஆங்கிலேய அரசுக்கு உட்பட்ட சுய ஆட்சி அரசாங்கமே என்று காங்கிரஸ் தலைவர்களான தாதாபாய் நவரோஜியும்கோபாலகிருஷ்ண கோகலேயும் திரும்பத் திரும்பக் கூறிவந்தனர்தீவிரவாதக் குழுவின் தலைவராகத் திலகரும் அதையே தான் ஏற்றுக் கொண்டிருந்தார்.18

ஆனால் பாரதியார் முழு விடுதலை என்ற கொள்கையைத் தான் கொண்டிருந்தார்ஆங்கிலேய ஆட்சிக்குட்பட்ட சுய ஆட்சி அரசாங்கம் என்பது நாடகத்தில் வரும் ராஜாவை உண்மையான ராஜா என்று நினைப்பதற்குச் சமமானது என்று கூறுகிறார்.19 இக்கருத்தை அவர் தனது கட்டுரையிலும் கவிதைகளிலும் பல இடங்களில் கூறியுள்ளார்.20

ஆனால் பாரதியின் இக்கொள்கையில் அவருடைய அரசியல் வீழ்ச்சிக் காலக்கட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிகிறதுஆங்கிலேயச் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டும் யோசனை எங்களுக்கில்லை21 என்று அவர் கூறுகிறார்.

 

9.2.போராட்ட வடிவம்

செய்கை எதிர்ப்புமானசீக எதிர்ப்பு என்ற இரண்டு போராட்ட முறைகளைக் கூறிமுதல் வகையானது பலாத்கார வழி என்றும் இரண்டாவது வகையானது சாத்வீக வழி என்றும் பாரதி கூறுகிறார்தான் இரண்டாவது வழியையே ஏற்றுக்கொள்ள விரும்புவதாகத் தெளிவாகக் கூறுகிறார்.22

சமாதானமாகவே சட்டத்துக்கு இணங்கிய முறைகளாகத்தான் சுயராஜ்ஜியம் பெறத் தான் விரும்புவதாகக் கூறுகிறார்.23 தான் சட்டரீதியாகச் சட்டத்திற்கு உட்பட்டுப் போராட விரும்புபவன்தான் என்பதை ஆங்கிலேய அரசுக்கும் தெரியப்படுத்த விரும்பினார்.24 தான் பலாத்கார வழிமுறைகளுக்கு எதிரானவன் என்பதைப் பல நேரங்களில் தெளிவுபடுத்தினார்.25

காங்கிரஸ் மிதவாதத் தலைமை ஆங்கிலேய அரசிடம் சுயராஜ்ஜியத்திற்காக விண்ணப்பிக்கும் போராட்ட முறையைக் கடுமையாகப் பாரதி கண்டிக்கிறார்இது பிச்சைக்காரத்தனம் என்று கூறுகிறார்.

இதே பாரதி தனது அரசியல் வீழ்ச்சிக் காலகட்டத்தில் விடுதலைக்காக ஆங்கிலேய அரசிடம் பிராத்திக்கிறார்விண்ணப்பிக்கிறார்.26

பிரிட்டிஷ் பொருட்களைப் புறக்கணிப்பதுமூலமும் ஆங்கிலேய நாட்டுப் பொருள்களை வாங்குவது மூலமும் ஆங்கிலேய ஆட்சியாளரைப் பணியவைக்க முடியுமெனப் பாரதி கருதினார்.27

 

9.3.காங்கிரஸ் மிதவாதத் தலைமை பற்றி

1885- லிருந்து 1905வரை காங்கிரஸ் சட்டசீர்திருத்தங்களைத்தான் விரும்பியதேதவிரஆங்கிலேய அரசைத் தாக்க விரும்பவில்லை என்று பாரதி குற்றம் சாட்டுகிறார்.28

மிதவாதக் காங்கிரஸ் தலைமை ஆங்கிலேய அரசிடம் தேவையற்ற ‘நம்பிக்கையை’ – அதாவது அவர்களாகவே ஆட்சியை விட்டுக்கொடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை வைத்துக்கொண்டிருந்ததாகவும்அது  நடக்க முடியாத ஒன்று என்றும் பாரதி கூறுகிறார்.29

மிதவாதக் காங்கிரசில் பெரும்பாலோர் சில பதவி உயர்வுகளுக்காகத்தான் செயல்படுகின்றனர் என்று கூறிஅவர்களைப் பாரதி வன்மையாகக் கண்டிக்கிறார்.30

காங்கிரஸ் கட்சி ஆங்கிலம் கற்ற பெரியவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறதே ஒழியமக்கள் கட்சியாக இல்லை என்று பாரதி குற்றம் சாட்டுகறார்.31

மக்களைத் தட்டி எழுப்பிமக்களைச் சார்ந்த கட்சியாகக் காங்கிரஸ் மாற வேண்டும் என்று விரும்புகிறார்மக்களே உண்மையான சக்திகள் என்று கூறிஅவர்களைச் சார்ந்த தலைமையாகக் காங்கிரஸ் தலைமை மாறவேண்டுமென்று அவர் கூறுகிறார்.32

வருடத்திற்கு ஒருமுறை கூடித் தீர்மானம் போடும் அமைப்பாக இல்லாமல்வருடம் முழுவதும் செயல்படும் அமைப்பாகக் காங்கிரஸ் மாறவேண்டும் என்று கூறுகிறார்.33

காங்கிரசில் ஆங்கிலேயர்களுக்கு அதிகப் பாத்திரமும் முக்கியத்துவமும் அளிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டிஅந்நியர்களுக்குக் காங்கிரஸில் என்ன வேலை என்று கேட்டுஅந்நிலை மாறவேண்டும் என்று அவர் கூறுகிறார்.34

வருடந்தோறும் மனுக்கள் தயார் செய்து கொண்டுலண்டன் சென்று ஆங்கில அரசிடம் பிச்சை கேட்கும் வழிமுறையைக் காங்கிரஸ் கைவிட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.35

காங்கிரசில் குறுகியவாதப்போக்குடன் செயல்பட்ட பம்பாய் மேதா கட்சியினரைப் பாரதி கடுமையாகச் சாடுகிறார்.36

 

9.4.அந்நியருக்கு எதிரான கூட்டணி

திலகர்விபினசந்திரபாலர்லஜபதிராய் போன்றோர் இந்து மதத் தீவிர ஆதரவாளர்களாகச் செயல்பட்டுஇந்து – முஸ்லீம் ஒற்றுமைக்குப் பங்கம் வரும் வகையில் செயல்பட்டனர்.

ஆனால் பாரதியாரோ இந்து முஸ்லீம் ஒற்றுமை விடுதலைப் போரில் மிக அவசியமான தேவை என்று உணர்ந்தார்தான் ஒரு இந்துவாக இருந்தபோதிலும்முஸ்லீம்களை அவர் எதிர்க்கவில்லைமாறாக இந்தியாவில் பிறந்த எல்லா மதத்தினரும் ஒன்றே என்று கூறுகிறார்.37 மேலும் மக்களைத் திரட்டுவதற்காகத் திலகர் போன்றோர் சிவாஜிகணபதி பண்டிகைகளைக் கொண்டாட ஏற்காடு செய்தனர்ஆனால் பாரதியோ அந்த விழாக்களுடன் அக்பர் விழா போன்ற பண்டிகைகளும் இந்திய மக்களால் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறுகிறார்.38

அடுத்து இந்து மக்களிடையே ஒற்றுமைக்கு ஜாதி அடிப்படைகள் தடையாக அமைந்திருந்ததைக் கண்டு பாரதி அதைக் கடுமையாகக் கண்டனம் செய்கிறார்.

திலகர் விதவைகள் திருமணத்தையும்எல்லா ஜாதியினரும் சமம் என்பதையும் ஏற்றுக்கொள்ளவில்லைஎனவே அவரை அரசியலில் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று ஆசாரத் திருத்தக் கட்சியினர் கூறியபோது,  ‘அது வேறுராஜாங்க விஷயம் வேறு’ என்றும்மேற்கூறிய காரணத்தால் ராஜாங்க விஷயத்தில் திலகருடன் ஒன்றுபடக்கூடாது என்று கூறுவது தவறென்று பாரதி கூறினார்.39

 

10.0. பாரதியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

10.1. முழுவிடுதலை என்ற கொள்கையைக் கொண்ட பாரதிதன் அரசியல் வாழ்வில் 1905 முதல் 1910 வரைதான் வளர்ச்சியைப் பெற்றிருந்தார்அதன்பின் அவர் அரசியல் வாழ்வில் வீழ்ச்சியே ஏற்பட்டதுமுழு விடுதலைதான் தேவை என்ற பாரதிபின்னால் ஆங்கிலேயரை விலக்குவது கிடையாது என்று கூறுவதும், காங்கிரஸ் மிதவாதத் தலைமை ஆங்கில அரசிடம் மனுகொடுத்துக் கோரிக்கை கேட்பதைக் கடுமையாகவே சாடிய பாரதிதானே பின்னால் ஆங்கிலேய அரசுக்கு விடுதலைக்காகப் பிரார்த்திப்பதும் விண்ணப்பிப்பதும் அவரது வீழ்ச்சியைக் காட்டுகின்றன,

10.2. பாண்டிச்சேரியில் அவர் வாழ்ந்த காலத்தில் சென்னைக் கவர்னருக்குத் தான் எவ்வித ராஜத்துரோகமும் செய்யவில்லையென்றும்தன்மீது போலீசார் வீணாகப் பழி சுமத்துகிறார்கள் என்றும்தன்னைப் பற்றி கவர்னர் யாரிடமும் அதுபற்றி விசாரித்துக் கொள்ளலாம் என்று கூறுவதும் அவரது வீழ்ச்சியைச் சுட்டி காட்டுகின்றன.40 இங்கிலாந்து தொழிற்கட்சித் தலைவர் ராம்சே மக்னால்டுக்கு அவர் எழுதிய கடிதத்தில் இது தெளிவாக வெளிப்படுகிறது.41

10.3. கடலூரில் கைது செய்யப்பட்டுப் பின்னர் உறுதிமொழி கொடுத்து விடுதலை பெறுவதும் அவரது அரசியல் தளர்ச்சியையே காட்டுகிறது.

10.4. தனது நூல்களை வெளியிட வேண்டும் என்பதற்காக அவர் எட்டயபுரம் மகாராஜாவுக்குக் கடிதம் எழுதும் போது தன்மீது தற்போது ஆங்கிலேய அரசு நல்லெண்ணம் கொண்டிருப்பதாகக் கூறுவது அவரது பலவீனத்தையே காட்டுகின்றது.42

 

11.0. பாரதியின் அரசியல் வீழ்ச்சிக்கு அடிப்படை

11.1. பாரதியின் வீழ்ச்சிக்கு அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியே காரணமாகும்முழுவிடுதலைமக்கள் இயக்கம் போன்ற முற்போக்குக் கொள்கையை உடைய பாரதிக்குஆங்கிலேய அரசுக்கு உட்பட்ட சுயராஜ்ஜியம்விண்ணப்பிக்கும் முறைஇராஜவிசுவாசம் போன்ற கொள்கைகளைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி எவ்வாறு பொருத்தமாக அமையமுடியும்ஓரளவுக்கு அவரது கொள்கைகளை ஏற்றுக்கொண்ட திலகர் கூட்டமும் காங்கிரஸ் தரகு முதலாளித்துவத் தலைமையின் சூழ்ச்சியினாலும்ஆங்கிலேயர் அடக்குமுறையாலும் சிதறடிக்கப்பட்டதுகாங்கிரஸ் மிதவாதத் தலைமைகூட 1910- ஆம் ஆண்டிலிருந்து பல ஆண்டுகள்வரை தேக்க நிலையிலேதான்  இருந்தது.

11.2. பாரதியின் கொள்கைக்கு ஏற்ற இயக்கம் காங்கிரஸ் அல்லாத புரட்சிகர அமைப்புகளேஅவைதான் ஆங்கிலேயரை அடியோடு தவிர்க்க விரும்பியதுஆனால் பாரதியின் கிம்சா வழி போராட்ட முறைஅவரை அப்புரட்சிகர அமைப்புகளுடன் இணையத் தடுத்துவிட்டதுமேலும் அப்புரட்சிகர அமைப்புகளும்கூடத் தெளிவான பார்வையும்நாடு தழுவிய ஒரு அமைப்பும் தொழிலாளி வர்க்கத் தலையையும் இல்லாத காரணத்தால் தோல்வியையே தழுவின என்று முன்பே கண்டோம்.

11.3. எனவே பாரதியின் அரசியல் வீழ்ச்சிக்கு அவர் வாழ்ந்த காலகட்டச் சமூக அரசியல் சூழ்நிலையே அடிப்படைக் காரணமாகும்பாரதியின் ஆன்மீகப்  பிடிப்பும்தெளிவான வர்க்கக் கண்ணோட்டம் இல்லாமையும் பிற காரணங்களாக அமைகின்றன.

11.4. விடுதலைப் போரில் பாரதியின் பங்கை வரையறுக்க முயற்சிக்கும் போதுகீழ்க்கண்ட முடிவுகளே கிடைக்கின்றன.

1.  பாரதி உண்மையாகவே விடுதலை விரும்பியவர்

2.  அதற்காகச் செயல்பட முன்வந்தவர்

3.  அந்நியருக்கு எதிரான போராட்டமே இந்திய மக்களின் அன்றைய அடிப்படை பிரச்சினை என்று எடுத்துக் காட்டிஅந்நியருக்கு எதிரான இந்திய மக்களின் ‘ஒற்றுமை தொடர்ந்து வலியுறுத்தியவர்.

4.  திலகர் போன்றவர்களின் இந்துமத வெறிக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்ளாதவர்.

5.  ஆன்மீகப் பிடிப்பின் காரணமாகவும் தெளிவான வர்க்கக் கண்ணோட்டம் இல்லாமையாலும் எது சரியானஉண்மையான இயக்கம் என்று பார்க்கத் தவறியவர்.

6.  அதன் விளைவாகத் தவறான இயக்கத்துடன் இணைத்துச் செயல்பட்டுதோல்வி கண்டுதளர்ச்சியடைந்தவர்.

 

 

அடிக்குறிப்புகள்

1.  இந்தியப் பாராளுமன்றம்சமரன்இதழ் 11, அக்டோபர், 1979,.4.

2.  Ibid P.5-6

3.  Saraf (1976),P.300- 301.

4.  இந்தியப்பாராளுமன்றம் சமரன்அக்டோபர், 1979.

5.  சிவஞானம்.பொ.(1974), ப.109

6.  Ibid P.109

7.  Ibid P.110

8.  Ibid P.120

9.  Ibid P.121-124

10.  Ibid P.126-127

11.  இந்தியப் பாராளுமன்றம் சமரன்அக்டோபர், 1979. . 8.

12.  Tara Chand (1972)P.143&P.342

13.  Ibid P.145

14.  பத்மநாபன் ரா..

15.  Ibid P.40

16.  Ibid P.57

17.  ரகுநாதன் (1966)..26.

18.  Tara chand (1972). P.109

19.  தூரன்பெ. (1979)..109.

20.  இளசை மணியன் (1979)..129

21.  மகாகவி பாரதியார் கட்டுரைகள்வானதி பதிப்பகம், (1981),.378

22.  பாரதிதரிசனம்பாகம் 11, .82

23.  தூரன்பெ., (1979)..82,

24.  பத்மநாபன்,ரா...40

25.  ஆஷ்துரை கொலைபம்பாயில் ஆங்கிலேய நீதிபதியின் மீது வெடிகுண்டு வீச்சு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றபோது கூறினார்.

26.  பாரதி தரிசனம்பாகம் 1, , 113.

27.  Ibid. Part- I, P.148

28.  தூரன்பெ., (1979), .129

29.  பாரதி தரிசனம்பாகம்.1,,48; பாகம் 2,.27.113

30.  Ibid. Part- Il, P.9,24

31.  Ibid. Part- Il, P.47

32.  Ibid. Part- Il, P.47

33.  Ibid. Part- Il, P.15

34.  Ibid. Part- I, P.19

35.  Ibid. Part- I, P.115

36.  Ibid. Part- I, P

37.  Ibid. Part- I, P.191-92,131

38.  Ibid. Part- I

39.  Ibid. Part- I, P,191-92,131

40.  Ibid. Part- I

41.  Ibid. Part- Il, P.44

42.  பத்மநாபன்ரா.. 40

43.  Ibid. P- 40,

44.  Ibid. P.89

 

 

உதவிய நூல்கள்

 

1.

கைலாசபதி, (1962)

‘’இருமகாகவிகள்’’ என்.ஸி.பி.எச்சென்னை

 

2.

சிவஞானம்.பொ (1974)

‘’காந்தியடிகளுக்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப்போர்’’ இன்ப நிலையும் சென்னை.

 

3.

தூரன்பெ. (1979)

 

‘’பாரதியும் பாரதத் தேசமும்’’, வானதி பதிப்பகம்சென்னை

 

4.

பத்மநாபன்ரா

 

‘’பாரதியின் கடிதங்கள்’’

 

5.

ரகுநாதன்,தொ.மு.சி

(1966)

‘’கங்கையும் காவிரியும்’’, ஸ்டார் பிரசுரமும்சென்னை.

 

6.

-------------------------------------

‘’பாரதி தரிசனம்’’, பாகம் 1,2, (தொஇளசை மணியன்எஸ்ஸிபி.எச்சென்னை.

 

7.

----------------------------------------(1981)

 

‘’மகாகவி பாரதியார் கட்டுரைகள்’’, வானதிப் பதிப்பகம்சென்னை

 

8.

Majumdar, R.C.,(1975)

 

 

‘’History of the Freedom Movement In India’’ Vol.III. Firmer K.L.Mukhopathyay. Calcutta.

 

9.

Saraf, R.P.(1979),

 

‘’The Indian Society’’, Delhi

10.

Tara Chand, Dr.(1972).

 

‘’History of the Freedom Movement in India’’, Vol,III. Publications Division, Ministry of information and Broadcasting, Government of India

 

 

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்