அரசும் புரட்சியும். 1848 - 51 ஆம் ஆண்டுகளின் அனுபவம்.அரசு பற்றிய மார்க்சிய போதனையும் அதனை பின்பற்ற வேண்டிய அவசியமும் பாகம் – 1 - தேன்மொழி.

 1. புரட்சி தொடங்கும் தறுவாயில்.

முதிர்ச்சியுற்ற மார்க்சியத்தின் முதலாவது நூல்களான மெய்யறிவின் வறுமையும், கம்யூனிஸ்டு அறிக்கையும் 1848 ஆம் ஆண்டுப் புரட்சி தொடங்கும் தறுவாயில் வெளிவந்தவை.

இக்காரணத்தால் அவை மார்க்சியத்தின் பொதுக் கோட்பாடுகளை எடுத்துரைப்பதோடு,ஸ்தூலமான அக்காலத்திய புரட்சிகரச் சூழ்நிலைகளையும் ஓரளவு பிரதிபலித்துக் காட்டின.

ஆகவே இந்நூல்களின் ஆசிரியர்கள் 1848 - 51 ஆம் ஆண்டுகளின் அனுபவத்திலிருந்து முடிவுகளை வந்தடைவதற்கு உடனடியாய் முன்னதாக அரசு குறித்து என்ன சொன்னார்கள்என்பதைப் பரிசீலிப்பது இன்னுங்கூட பயனுடையதாய் இருக்கும்.

மெய்யறிவின் வறுமையில் மார்க்ஸ் எழுதினார்:-

".... தொழிலாளி வர்க்கம் தனது வளர்ச்சிப் போக்கிலே பழைய முதலாளித்துவச் சமுதாயத் துக்குப் பதிலாக, எல்லா வர்க்கங்களையும் அவற்றின் பகைமையும் விலக்கிவிடும் ஒரு சங்கத்தை அமைக்கும், முறையாகச் சொல்லக்கூடிய அரசியல் அதிகாரம் இனி இராது,ஏனெனில் அரசியல் அதிகாரம் என்பது முதலாளித்துவச் சமுதாயத்திலுள்ள வர்க்கப்பகைமையின் அதிகாரப்பூர்வமான வெளிப் பாடாகும்."

வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டதும் அரசு மறைந்துவிடும் என்ற கருத்தின் இந்தப் பொது

விளக்கத்தை, இதற்குச் சில மாதங்களுக்குப் பிற்பாடு - துல்லியமாய்க் கூறுவதெனில் 1847 நவம்பரில் - மார்க்சும் எங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்டு அறிக்கையில் காணப்படும் விளக்கத்துடன் ஒப்பிடுதல் பயனுடையது.

"... பாட்டாளி வர்க்கத்தினது வளர்ச்சியின் மிகப் பொதுவான கட்டங்களை விவரித்த நாம்,

தற்கால சமுதாயத்தில் ஏறக்குறைய திரை மறைவில் நடைபெறும் உள்நாட்டுப் போரை, அது பகிரங்கப் புரட்சியாய் வெடித்து, முதலாளித்துவ வர்க்கம் பலாத்காரமாய் வீழ்த்தப்படுவதன்மூலம் பாட்டாளி வர்க்க ஆட்சி அதிகாரத்துக்கு அடித்தளம் இடப்படும் நிலை வரையில்உருவரை தீட்டிக் காட்டினோம்...."

"..... பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் நிலைக்கு உயரச் செய்வதுதான், ஜனநாயகத்துக்கான போரில் வெற்றி ஈட்டுவதுதான், தொழிலாளி வர்க்கம் நடத்தும்புரட்சியின் முதலாவதுபடி என்பதை மேலே கண்டோம்...."

".... பாட்டாளி வர்க்கம் தனது அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி முதலாளித் துவ வர்க்கத்திடம் இருந்து படிப்படியாய் மூலதனம் முழுவதையும் கைப்பற்றும்; உற்பத்திக் கருவிகள் யாவற்றையும் அரசின் கைகளில், அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒருசேர மையப்படுத்தும்; மற்றும் உற்பத்தி சக்திகளது ஒட்டுமொத்தத் தொகையைச் சாத்தியமான முழு வேகத்தில் அதிகமாக்கும்."

அரசு என்னும் பொருள் குறித்து மார்க்சியத்துக்குள்ள மிகச் சிறப்பான, மிக முக்கியக் கருத்துக்களில் ஒன்று, அதாவது "பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்" (பாரிஸ் கம்யூனுக்குப்பிற்பாடு மார்க்சும் எங்கெல்சும் இப்படித்தான் இதனை அழைக்கத் தொடங்கினர்.) என்னும் கருத்து, இங்கு வரையறுத்துக் கூறப்படுவதைக் காண்கிறோம். அதோடு அரசைப் பற்றிய மிகச் சுவையான ஒரு இலக்கணமும் - மார்க்சியத்தின் "மறக்கப்பட்ட உரைகளில்" இதுவும் ஒன்றாகிவிட்டது - இங்கு நமக்குத் தரப்படுகிறது: "அரசு, அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கம்."

அதிகாரப்பூர்வமான சமூக - ஜனநாயகக் கட்சிகளது தற்போதைய பிரச்சார, கிளர்ச்சிவெளியீடுகளில் இந்த இலக்கணம் விளக்கப்படுவதே இல்லை. அது மட்டுமல்ல, வேண்டுமென்றே இது ஒதுக்கித் தள்ளப் படுகிறது . காரணம் என்னவென்றால், இந்த இலக்கணம் சீர்திருத்தவாதத்துக்கச் சிறிதும் இணங்காதது ஆகும் "ஜனநாயகத்தின் சமாதான வழிப்பட்ட வளர்ச்சி" என்பதாய் சகஜமாய் நிலவும் சந்தர்ப்பவாதத் தப்பெண்ணங்களுக்கும் அற்பவாதக் குட்டிமுதலாளித்துவப் பிரமைகளுக்கும் இது முற்றிலும் புறம்பானதாகும்.

பாட்டாளி வர்க்கத்துக்கு அரசு வேண்டும். - எல்லாச் சந்தர்ப்பவாதிகளும் சமூக - தேசிய வெறியர்களும் காவுத்ஸ்கிவாதிகளும் இதைத் திரும்பத் திரும்பக் கூறுகிறார்கள். மார்க்ஸ் இதைத்தான் போதித்தார் என்று நம்மிடம் வலியுறுத்துகிறார்கள். ஆனால் இதோடுகூட கூறப்பட வேண்டியதை அவர்கள் கூற "மறந்துவிடுகிறார்கள்" முதலாவதாக, மார்க்சின் கருத்துப்படி, பாட்டாளி வர்க்கத்துக்கு வேண்டியது உலர்ந்து உதிர்ந்து கொண்டிருக்கும் அரசு மட்டுமேதான், அதாவது உடனடியாகவே உலர்ந்து உதிரத் தொடங்குவதாகவும், உலர்ந்து உதிர்வதாய் அன்றி வேறு விதமாய்இருக்கவொண்ணாததாகவும் அமைந்த ஓர் அரசு மட்டுமேதான். இரண்டாவதாக, உழைப்பாளி மக்களுக்கு வேண்டியது ஓர் "அரசு", "அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கம்".

அரசு என்பது பலத்தின் ஒரு தனிவகை ஒழுங்கமைப்பு; ஏதோவொரு வர்க்கத்தை அடக்குவதற்கான பலாத்கார ஒழுங்கமைப்பு. பாட்டாளி வர்க்கத்தால் அடக்கப்பட வேண்டிய வர்க்கம் எது? சுரண்டும் வர்க்கம்தான், அதாவது முதலாளித்துவ வர்க்கம்தான் என்பதே இக்கேள்விக்கு உரிய இயற்கையான பதில். சுரண்டுவோருடைய எதிர்ப்பை அடக்குவதற்கு மட்டுமே உழைப்பாளி மக்களுக்கு அரசு தேவைப்படுகிறது. பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே சுரண்டுவோருடைய எதிர்ப்பை அடக்கும் பணிக்குத் தலைமை தாங்க முடியும், அதனால் மட்டுமே இப்பணியைச் செய்து முடிக்க முடியும். ஏனென்றால், பாட்டாளி வர்க்கம்தான் முரணின்றி முற்றிலும் புரட்சிகரமான ஒரே வர்க்கம்; முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில், அவ்வர்க்கத்தை அறவே அகற்றிவிடுவதில், உழைப்பாளர் களும் சுரண்டப்படுவோருமான மக்கள் எல்லோரையும் ஒன்றுபடச் செய்யக் கூடிய ஒரே வர்க்கம்.

சுரண்டும் வர்க்கங்களுக்குச் சுரண்டலை நிலைநாட்டிக் கொள்வதற்காக, அதாவது மிகப் பெருவாரியான மக்களுக்கு விரோதமாய் மிகச் சொற்பமான சிறுபான்மையினரது சுயநலத் துக்காக, அரசியல் ஆட்சி தேவைப்படுகிறது. சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு, எல்லாவிதச் சுரண்டலையுமே அறவே ஒழிக்கும் பொருட்டு, அதாவது மிகப் பெருவாரியான மக்களது நலன்களுக்காக வேண்டி, நவீன கால அடிமை உடமையாளர்களாகிய நிலப்பிரபுக்களும் முதலாளிகளுமான மிகச் சொற்ப சிற்பான்மையினருக்கு எதிராய் அரசியல் ஆட்சி தேவைப்படுகிறது.

குட்டிமுதலாளித்துவ ஜனநாயகவாதிகள், வர்க்கப் போராட்டத்துக்குப் பதிலாய் வர்க்க இசைவு பற்றிய பகற்கனவுகளில் ஈடுபடும் இந்தப் போலி சோசலிஸ்டுகள், சோசலிச மாற்றத்தையுங்கூட கனவுலகப் பாணியில் சித்தரித்தனர். - சுரண்டும் வர்க்கத்தின் ஆதிக்கத்தை வீழ்த்துவதாய்ச் சித்தரிக்காமல், பெரும்பான்மையினர் தமது நோக்கங்களை உணர்ந்துகொண்டு விடுவதாகவும், சிறுபான்மையினர் சமாதானமாகவே அவர்களுக்கு கீழ்ப்படிந்து விடுவதாகவும் சித்தரிக்கின்றனர். இந்த குட்டி முதலாளித்துவக் கற்பனை, வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டது அரசு என்ற கருத்திலிருந்து பிரிக்க முடியாதது.

நடைமுறையில் இந்தக் கற்பனை உழைப்பாளி வர்க்கங்களுடைய நலன் களுக்குத்துரோகமிழைக்கவே செய்தது. உதாரணமாய், 1848, 1871 ஆம் ஆண்டுகளில் பிரெஞ்சுப் புரட்சிகளின் வரலாறும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, மற்றும் பல நாடுகளில் முதலாளித்துவ அமைச்சரவை களில் "சோசலிஸ்டுகள்" பங்கு கொண்டதன் அனுபவமும் இதைத் தெளிவுபடுத்தின.

தற்போது ரஷ்யாவில் சோசலிஸ்டு - புரட்சியாளர் கட்சியாலும் மென்ஷ்விக் கட்சியாலும் புத்துயிர் ஊட்டப்பட்டுள்ள இந்தக் குட்டிமுதலாளித்துவ சோசலிசத்தை எதிர்த்து மார்க்ஸ் தமது வாழ்நாள் முழுவதும் போராடினார். அவர் தமது வர்க்கப் போராட்டத் தத்துவத்தை அரசியல்ஆட்சியதிகாரம், அரசு பற்றிய தத்துவம் வரையிலும் முரணின்றி வளர்த்து வகுத்தார்.

முதலாளித்துவ ஆதிக்கத்தை வீழ்த்த வல்லது பாட்டாளி வர்க்கம் ஒன்றுதான். இந்த ஒரு வர்க்கம் மட்டும்தான் தனது வாழ்க்கையின் பொருளாதார நிலைமைகளால் இந்தப் பணிக்குத்தயார் செய்யப்படுகிறது, இந்தப் பணியைச் செய்து முடிப்பதற்குரிய சாத்தியப்பாடும் சக்தியும்அளிக்கப்படுகிறது. முதலாளித்துவ வர்க்கம் விவசாயிகளையும் எல்லாக் குட்டிமுதலாளித்துவப் பகுதிகளை யும் சிதைத்து சின்னாபின்னமாக்குகிறது; ஆனால் அது பாட்டாளி வர்க்கத்தை ஒருசேர இணைத்து ஒன்றுபடுத்துகிறது, நிறுவன வழியில் ஒழுங்கமைக்கிறது. பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் - பெருவீதப் பொருளுற்பத்தியில் அது ஆற்றும் பொருளாதாரப் பாத்திரம் காரணமாய் - உழைப்பாளர்களும் சுரண்டப்படுவோருமான மக்கள் எல்லோருக்கும் தலைவனாக வல்லது. ஒடுக்கப்பட்ட உழைப்பாளி மக்கள் அனைவரையும் முதலாளித்துவ வர்க்கம் ஒடுக்கி நசுக்கிய போதிலும், பாட்டாளி வர்க்கத்தினரைக் காட்டிலும் குறைவாக அல்ல பல சந்தர்ப்பங்களில் அதிகமாகவே ஒடுக்கி நசுக்கிய போதிலும், இவர்கள் தமது விடுதலைக்காக சுயேச்சையாய் போராடும் வல்லமை இல்லாதவர்கள்.

அரசு, சோசலிசப் புரட்சி இவற்றின் பிரச்சனையில் மார்க்ஸ் வர்க்கப் போராட்டத்தத்துவத்தைப் பிரயோகித்ததும், தவிர்க்கமுடியாதபடி அது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கத்தின், அதன் சர்வாதிகாரத்தின், அதாவது யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் நேரடியாய் மக்களுடைய ஆயுதப்பலத்தை ஆதாரமாய்க் கொண்ட ஆட்சியதிகாரத்தின் அங்கீகாரத் துக்கு இட்டுச் சென்றது. பாட்டாளி வர்க்கமானது முதலாளித்துவ வர்க்கத்தின் தவிர்க்க முடியாத ஆவேசமான எதிர்ப்பை நசுக்கவும், உழைப்பாளர்களும் சுரண்டப்படு வோருமான மக்கள் அனைவரையும் புதிய பொருளாதார அமைப்புக்காக ஒழுங்கமைக் கவும் வல்லமை படைத்த ஆளும் வர்க்கமாக மாறுவதனால் மட்டுமே முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்த முடியும்.

சுரண்டலாளர்களுடைய எதிர்ப்பை நசுக்குவ தற்கும் சோசலிசப் பொருளாதாரத்தை "ஒழுங்கமைப்பதில்" மாபெரும் திரள்களான மக்களுக்கு - விவசாயிகளும், குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினரும், அரைகுறைப் பாட்டாளி வர்க்கத்தினருமானோருக்கு - தலைமை தாங்குவதற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு அரசு அதிகாரம், பலத்தின் மத்தியத்துவ நிறுவன ஒழுங்கமைப்பு, பலாத்காரத்தின் நிறுவன ஒழுங்கமைப்பு தேவைப்படுகிறது.

மார்க்சியமானது தொழிலாளர் கட்சிக்குப் போதமளிப்பதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படைக்குப் போதமளிக்கிறது. ஆட்சியதிகாரம் ஏற்று அனைத்து மக்களுக்கும் தலைமை தாங்கி சோசலிசத்துக்கு அழைத்துச் செல்ல, புதிய அமைப்பை நெறிப்படுத்தி ஒழுங்கமைக்க, உழைப்பாளர்களும் சுரண்டப் படுவோருமான மக்கள் அனைவரும் முதலாளித்துவ வர்க்கம் இல்லாமலும் முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்தும் தமது சமுதாய வாழ்வினை ஒழுங்கமைத்துக் கொள்வதில் அவர்களுக்குப் போதகனாகவும் வழிகாட்டியாகவும் தலைவனாகவும் செயலாற்ற வல்லமை படைத்த இந்த முன்னணிப் படைக்கு போதமளிக்கிறது. தற்போது ஆதிக்கத்திலுள்ள சந்தர்ப்ப வாதமானது, இதற்கு மாறாய், தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களை உயர்ந்த சம்பளம் பெறும் தொழிலாளர்களுடைய பிரதிநிதி களாய்ச் செயல்படுவதற்கு - வெகுஜனங் களுடன் தொடர்பு இழந்து, முதலாளித் துவத்தில் எப்படியோ ஓரளவு "நல்லபடியாகவே" இருந்து, எச்சித் துண்டுக்காகத் தமது பிறப்புரிமையே விற்கும், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து மக்களது புரட்சிகரத் தலைவர்களாய்த் தாம் ஆற்ற வேண்டிய பாத்திரத்தைத் துறந்துவிடும்இத்தகைய பிரதிநிதிகளாய்ச் செயல் படுவதற்கு - பயிற்றுவிக்கிறது.

"அரசு, அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கம்" பற்றிய மார்க்சின் தத்துவம் வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்துக்குரிய புரட்சிப் பாத்திரம் குறித்த அவருடைய போதனை அனைத்துடன் இரண்டறக் கலந்ததாகும். இந்தப் பாத்திரத்தின் இறுதி நிலையே பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கம்.

ஆனால் பாட்டாளி வர்க்கத்துக்கு, முதலாளித்துவத்துக்கு எதிரான பலாத் காரத்தின் ஒழுங்கமைப்புக்குரிய தனிவகை வடிவமான அரசு தேவைப்படுவதால், பின்வரும் முடிவு தானாகவே எழுகிறது; முதலாளித்துவ வர்க்கத்தினர் தமக்கென உருவாக்கிக் கொண்ட அரசுப் பொறியமைவை முதலில் ஒழித்திடாமல், தகர்த்தெறியாமல் இத்தகைய ஒழுங்கமைப் பினை உருவாக்க முடியுமென நினைக்கலாமா? கம்யூனிஸ்டு அறிக்கை நேரடியாக இந்த முடிவுக்கே இட்டுச் செல்கிறது. 1848 - 51 ஆம் ஆண்டுகளின் அனுபவத்தை தொகுத்துக் கூறுகையில் மார்க்ஸ் இதே முடிவைத்தான் எடுத்துரைக்கிறார்.

எமது விளக்கம்.

மார்க்சும் எங்கெல்சும் ஆரம்ப காலங்களில் மார்க்சியத்தின் அடிப்படையான கோட்பாடுகளை அன்றைய காலத்தில் நிலவிய ஸ்தூலமான சூழ்நிலைகளிலிந்து அவர்களது கருத்துக்களைதகுந்த ஆதாரத்தோடு எடுத்து விளக்கினார்கள். இந்த அடிப்படை கோட்பாடு களையும் மார்க்சால் விளக்கப்பட்ட வரலாற்று ஆதாரங்களையும் நாம் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் தற்போது மாறி வந்துள்ள சூழல்களை மதிப்பிட்டு பகுத்து அறியவும் மார்க்சின் கண்ணோட்டத்திலிருந்து அதாவது மார்க்ஸ் தற்போது உயிருடன் இருந்தால் தற்போதைய சூழலை எவ்வாறு மதிப்பிட்டு இந்தச் சூழலை மாற்றுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை எடுப்பாரோ அதே முடிவை நாம் எடுக்க முடியும். இந்த வகையில் அரசு என்றால் என்ன? அதன் தோற்றம், வளர்ச்சி மற்றும் இறுதியில் அதன் மறைவு குறித்து மார்க்ஸ் என்ன சொன்னார் என்பதை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் படித்துப் புரிந்துகொள்ள வேண்டியது முதன்மையான கடமைகளுள் ஒன்றாகும்.

அரசியல் அதிகாரம் என்பது முதலாளித்துவ சமுதாயத்திலுள் வர்க்கப் பகைமையை பாதுகாத்து, தொழிலாளி மற்றும் நடுத்தர வர்க்கங்களை சுரண்டுவதற்கான பலாத்கார அமைப்பாகும். இந்த அரசியல் அதிகாரமானது சமூகத்திலுள்ள உழைக்கும் மக்களுக்கு தேவையற்ற நிறுவனமாகும். ஆகவே இந்த தேவையற்ற பலாத்கார நிறுவனத்தை ஒழித்துக்கட்டிவிட்டு, வர்க்கங்களற்ற அதாவது வர்க்கப் பகைமைகளற்ற சமூகத்தை உருவாக்க இந்த அரசு அமைப்பின் தேவை இல்லாத ஒரு நிலையை அடைவதற்கான ஒரு சங்கத்தை பாட்டாளி வர்க்கம் அமைத்திட வேண்டும் என்கிறார் காரல்மார்க்ஸ். அதாவது பாட்டாளி வர்க்கம் உள்ளிட்ட ஒடுக்குமுறைக் குள்ளாகும் வர்க்கங்களின் விருப்பம் என்ன? மனிதர்களுக்கு இடையே வர்க்க வேறுபாடுகள் கூடாது, அது ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அனைத்து மனிதர்களும் சமத்துவத்துடன் மகிழ்ச்சியாக கூட்டாக வாழ வேண்டும் என்றேவிரும்புகின்றனர். அத்தகைய முறையில் மனிதர்களால் வாழ முடியும் என்ற நம்பிக்கை ஊட்டும் கருத்தையே மார்க்ஸ் முன்வைத்தார். அதனை அடைவதற்குத் தேவையான கருத்துக்களை விஞ்ஞானப்பூர்வமான வழிமுறைகளை வைத்ததில்தான் மார்க்சின் சிறப்பு உள்ளது. இங்கே மார்க்சால் சொல்லப்படும் சங்கம் என்பது, கம்யூனிஸ்டுக் கட்சி என்ற அமைப்பாகவும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்ற சோசலிச சோவியத்து அரசாகவும் இருக்கலாம். இந்த இரண்டு வகையான நிறுவனங்களும் பாட்டாளி வர்க்கத்திற்குத் தேவையாகும். ஆகவே இந்த இரண்டு வகையான நிறுவனங்களைப் பற்றி நமது மார்க்சிய ஆசான்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை ஆழமாகப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

தற்கால சமுதாயத்தில் திரைமறைவில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருக்கிறது. ஆளும் முதலாளி வர்க்கத்துக்கும், ஒடுக்கப் படும் வர்க்கங்களுக்கும் இடையிலேயும், ஆளும் முதலாளி வர்க்கங்களுக்கு இடையிலும் போர் நடந்துகொண்டு இருக்கிறது. சமூகத்திலுள்ள வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகள்தான் இந்தப் போர்களுக்கான காரணமாகும்.

இந்த முரண்பாடுகள் கூர்மையடையும் போது இந்தப் போரானது பகிரங்கமாக நடத்தப்பட்டு முதலாளித்துவ வர்க்கங்களின் அரசானது பலாத்காரமாக வீழ்த்தப்படும் என்பது மார்க்சின் போதனைகளில் ஒன்றாகும். இவ்வாறான போர் உடனடியாக நடக்காது ஆனால் மக்களை நேசிக்கும் புரட்சிகரமான கம்யூனிசத் தலைவர்கள் மார்க்சின் இந்தப் போதனைகளை சரியாகப் புரிந்துகொண்டு நம்பிக்கையோடு மக்களுக்கு எடுத்துச் சொல்லி மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி அவர்களை அணிதிரட்டி தொடர்ந்து போராடினால் சிறுகச் சிறுக அதாவது அளவு மாற்றம் பண்பு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற விஞ்ஞான விதிகளுக்கு ஏற்பவும், சிறுதுளி பெரும் வெள்ளமாக மாறும் என்ற பழமொழிக்கு ஏற்பவும் மக்கள் தமது சொந்த முயற்சியிலிருந்தும் தலைவர்களின் வழிகாட்டலிருந்தும் தங்களது சொந்த அனுபவங்களிலிருந்தும் நம்பிக்கைபெற்று ஒரு நாள் மார்க்ஸ் குறிப்பிட்டது போல நிலவுகின்ற முதலாளித்துவ அரசை தூக்கி எறிந்த்து உழைக்கும் வர்க்கத்திற்கான அரசை உருவாக்குவார்கள். ஆனால் கம்யூனிஸ்டுத் தலைவர்கள் மார்க்சின் போதனைகளை மக்களிடம் கொண்டு செல்லாமல், மக்களுக்கு நம்பிக்கை ஊட்டாமல் மக்களை அணிதிரட்டாமல் இருந்தால் மார்க்ஸ் சொன்னது நடக்காது.

அதற்கு காரணம் மக்கள் இல்லை, மாறாக கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களே காரணமாகும்.பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கமாக மாற்றுவதும், ஜனநாயகத்துக்கான போரில்உழைக்கும் வர்க்கம் வெற்றிபெறுவதுதான் பாட்டாளி வர்க்கமும் அதன் அரசியல் கட்சியான கம்யூனிஸ்டுக் கட்சியின் முதன்மையான கடமையாகும். இந்தக் கடமையை ரஷ்யா, சீனா போன்ற நாடுகளிலுள்ள உழைக்கும் வர்க்கங்களும் கம்யூனிஸ்டு கட்சியும் சிறப்பாகப் செயல்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் இதற்கான போராட்டங்களை இந்திய கம்யூனிஸ்டுகள் இங்கே நடத்துவதில் இதுவரை வெற்றி பெறவில்லை. அதற்கு என்ன காரணம்? என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அதனை சாதிப்பதில் நாம் வெற்றி பெறாமல் போனதற்கு நாம் செய்த தவறுகள் என்ன? பகுத்து ஆராய வேண்டும். நாம் செய்த தவறுகளை புரிந்துகொண்டு மாற்றியமைக் கவில்லை என்றால் இந்த சமுதாயம் முதலாளிகளின் அடிமைச் சமூகமாகவே நீடிக்கும். அதற்கு நாம்தான் காரணமாக இருப்போம்.

பாட்டாளி வர்க்கமானது ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் வெற்றி பெற்று, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆளும் வர்க்க மாக மாறியவுடன், உடனடியாக மாற்றங்கள் நிகழ்ந்துவிடாது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி முதலாளி வர்க்கத்திடமிருந்து படிப்படியாக மூலதனத்தைக்கைப்பற்றி அதனை சமூக உடமையாக மாற்றிடும். சமூகத்தைமுதலில் சோசலிச சமூகமாக ஒழுங்கமைக்கும், முதலாளித்துவ சமூகத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட மக்களி டமுள்ள குறைகளை களைவதற்குப் பாடுபடும். சிறுகச் சிறுக சோசலிச சமூக அமைப்பின் பலன் எவ்வளவு சிறந்தது என்ற உண்மையை மக்களின் சொந்த அனுபவங்களிலிருந்து மக்கள் புரிந்துகொள்வதற்கான போதனை களையும் பயிற்சியையும் மக்களுக்கு வழங்கும். இத்தகைய போதனையும், பயிற்சியும் அதன் அடிப்படையிலான நடைமுறை வாழ்க்கையும் சிறிது சிறிதாக வளர்ந்து அதாவது அளவு மாற்றமானது ஒரு பண்பு மாற்றத்திற்கு அதாவது சமூகம் சோசலிச சமூகத்திலிருந்து கம்யூனிச சமூகமாக மாற்றம் அடையும் என்பதுதான் மார்க்சின் போதனையாகும். இந்த போதனையின் மீது ரஷ்ய போல்ஷ்விக்குகள் நம்பிக்கை கொண்டு செயல்பட்டுத்தான் மக்களையும் இந்த போதனையின் மீது நம்பிக்கை பெற வைத்துத்தான் அவர்கள் ரஷ்யாவில் மாபெரும் சாதனைகள் புரிந்தார்கள். ஆனால் இங்கே மார்க்சின் இந்த போதனைகளின் மீது நம்பிக்கை இல்லாத தலைவர் களையே நாம் பார்க்கிறோம். மக்களுக்கும் இதன் மேல் நம்பிக்கை ஊட்டப்படவில்லை என்றே நாம் பார்க்கிறோம். இந்த நிலையில் மாற்றங்கள் தேவையாகும்.

அரசு பற்றிய மார்க்சிய போதனைகளில் ஒன்றான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றபோதனைதான் முதன்மையானதாகும். அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கம் என்ற கருத்தியல்தான் மார்க்சின் போதனையாகும். பாட்டாளி வர்க்கமானது புதிய வகையிலான ஆளும் வர்க்கமாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்று கூறி ஒழுங்கமைப்பின் அவசியத்தை இங்கே மார்க்ஸ் வலியுறுத்துகிறார். இங்கே பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்று குறிப்பிடும்போது முதலாளி வர்க்கச் சர்வாதிகாரமும் பாட்டாளி வர்க்ச் சர்வாதிகாரமும் ஒன்றுபோலப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆகவே பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்திற்கும் முதலாளி வர்க்கச் சர்வாதிகாரத்திற்குமான வேறுபாடு களை நாம் துல்லியமாக புரிந்துகொண்டு வரையறுக்க வேண்டும். இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் கம்யூனிஸ் டுகள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார அரசை அமைத்துச் செயல்பட்டாலும் அந்த அரசே முதலாளித்துவ சர்வாதிகார அரசாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித்தான் ரஷ்யாவிலும் சீனாவிலும் உருவான பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார அரசுகளை முதலாளித்துவ சர்வாதிகார அரசுகளாக முதலாளித்துவ வர்க்கப் பிரிவினர் மாற்றிவிட்டனர். இந்த அனுபவங்களி லிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். பாரிஸ் கம்யூன் மற்றும் சோவியத்துகளின் அனுபவங்களிலிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்கிறோம். இது போலவே வரும் காலத்திலும் நாம் செய்யும் தவறுகளிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது. இத்தகைய பாடங்களின் மூலமே அதனை நாம் பகுத்து ஆராய்ந்து தவறுகளை கண்டுபிடித்து மாற்று வழிகள் பற்றிய முடிவெடுத்துச் செயல்பட்டு முன்னேறியுள்ளோம் என்ற வரலாற்றையும் நாம் மறந்துவிடக் கூடாது. இதைப் பற்றியும் மார்க்ஸ் நமக்கு போதித்துள்ளார். அதனையும் நாம் படித்து புரிந்துகொள்ள வேண்டும்.

கம்யூனிஸ்டுகள் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்களில் பெரும்பாலோர் அரசு பற்றிய மார்க்சிய போதனைகளைப் பற்றிப் பேசுவதே இல்லை. மேலும் இவர்கள் அரசு பற்றிய மார்க்சிய போதனைகளை இருட்டடிப்பு செய்வதோடு மார்க்சுக்கு எதிரான கருத்துக்களையே மார்க்சின் கருத்தாகச் சொல்லி திரித்துப் புரட்டுகிறார்கள். இது போன்றே மார்க்சிய ஆசான்கள் வாழ்ந்த காலத்திலும் நடந்தது. இவ்வாறு இவர்கள் மார்க்சியத்துக்கு எதிராகப் பேசுவதற்கான வர்க்க அடிப்படைகளை நமது ஆசான்கள் விளக்கியுள்ளார்கள். சமூகத்தி லுள்ள அற்பவாத குட்டிமுதலாளித்துவப் பிரிவினரால் மார்க்சின் இந்த புரட்சிக போதனைகளை ஏற்க முடியாது.

ஏனென்றால் இந்த குட்டி முதலாளித்துப் பிரிவினர் ஆலைத் தொழிலாளி வர்க்கம் போல் புரட்சிகரமான வர்க்கங்கள் இல்லை. ஆலைப் பாட்டாளி வர்க்கமானது வளர்ச்சியடைந்ததொழில் நிறுவனங்களில் முதலாளிகளின் ஒடுக்குமுறைகளையும் சந்தித்துக்கொண்டு வேலை செய்வதால், இந்த ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டுவதற்கு அந்த ஆலையை அதாவது அந்த உற்பத்திச் சாதனத்தை தனிப்பட்ட முதலாளியிடமிருந்து பறித்து சமூக உடமை ஆக்கிட வேண்டும் என்ற சோசலிசக் கொள்கையில் ஆர்வமுடையதாக இருக்கிறது.

அதன் காரணமாகவே மார்க்சின் சோசலிசக் கொள்கையில் நம்பிக்கை கொண்டு அதற்காகப் போராட வேண்டும் என்பதில்உறுதியாக உள்ளது. இந்த நடைமுறை உண்மையிலிருந்துதான் மார்க்சியமானது சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஆலைப் பாட்டாளி வர்க்கம் மட்டுமே தலைமை அளித்து அதாவது பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்கும் என்று போதனை செய்தார்கள். இதற்கு மாறாக குட்டிமுதலாளித்துவ வர்க்கம் சிறிய அளவில் உடமையைப் பெற்றிருப்பதால் அது சிலசமயம் உடமை வர்க்க நிலையிலிருந்து முதலாளித்துவச் சுரண்டலை ஆதரிக்கிறது. வேறு சமயம் அதாவது முதலாளி வர்க்கத்தால் சுரண்டப்பட்டு அது உடமையற்ற வர்க்கமாக மாற்றப்படும் நிலையில் அது தொழிலாளி வர்க்கத்தின் நிலையை அது ஆதரிக்கிறது. ஆகவே குட்டிமுதலாளித்துவ வர்க்கமானது முதலாளி வர்க்கத்தின் ஆட்சியை முற்றிலுமாக தூக்கியெறிய தயங்குகிறது. இந்த முதலாளி வர்க்க ஆட்சி முறைக்குள்ளேயே தனது நிலையைப் பாதுகாத்துக்கொள்ள விரும்புகிறது என்ற உண்மையை விளக்கி சோசலிசப் புரட்சிக்கு ஆலைப் பாட்டாளிகளே தலைமை தாங்க முடியும் என்று மார்க்சிய ஆசான்கள் நமக்குப் போதித்தார்கள்.

மார்க்சின் இந்த போதனைகளை தொழிலாளி வர்க்கத் தலைவர்களில் பலர் புரிந்துகொள்ள வில்லை. மாறாக முதலாளி வர்க்கமும், முதலாளி வர்க்க அரசியல் கட்சித் தலைவர்களும் நன்கு புரிந்துகொண்டு, முதலாளிகளின் சுரண்டலைப் பாதுகாக்கவும்,முதலாளித்துவ அமைப்பை பாதுகாக்கவும் சரியாக தந்திரம் வகுத்து இன்றளவும் செயல் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆலைப் பாட்டாளி வர்க்கம்தான் சோசலிசப் புரட்சிக்கு தலைமை தாங்கும் என்ற மார்க்சின் போதனையை புரிந்துகொண்ட முதலாளித் துவவாதிகள், ஆலைப் பாட்டாளி வர்க்கத்திற்கு ஏற்படும் சோசலிச உணர்வுகளை மழுங்கடிப் பதற்கான தந்திரத்தை வகுத்து செயல்படுத்தி னார்கள். அன்றை காலத்தில் பிரிட்டீஷ் ஏகாதிபத்திய வாதிகள்தான் உலகில் பல நாடுகளை அடிமைப்படுத்தி காலனிகளை வைத்திருந்தார்கள். இந்த காலனி நாடுகளி லிருந்து ஏராளமாக செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றனர். அந்தக் கொள்ளையில் ஒரு சிறு பகுதியை இங்கிலாந்தில் வாழும் தொழிலாளர்களுக்கு லஞ்சமாக அதாவது அவர்களது சம்பளத்தை கூட்டிக்கொடுப்பது, தொழிலாளர்களின் தலைவர்களுக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலமும், தொழிலாளர்கள் நிலவுகின்ற சூழலிலேயே தங்களது வாழ்க்கையை திறம்பட அமைத்துக்கொள்ள முடியும் என்றஉணர்வை அதாவது தொழிலாளர்களிடம் குட்டிமுதலாளித்துவஉணர்வை ஏற்படுத் தினார்கள். மேலும் தொழிலாளி வர்க்கத் தலைவர்களும் தொழிலாளர்களிடம் சோசலிச உணர்வை ஏற்படுத்தாமல் குட்டி முதலாளித்துவ உணர்வு நிலையிலேயே தொழிலாளர்களை வைத்துக்கொள்லும்படி பார்த்துக்கொண்டார்கள்.

அன்று பிரிட்டீஷ் காலனி ஆதிக்கவாதி களால் பின்பற்றிய கொள்கைகளையே அனைத்து ஏகாதிபத்தியவாதிகளும் உலகம் முழுவதிலும் பின்பற்றி தற்போது உலகம் முழுவதிலுமுள்ள ஆலைப் பாட்டாளி வர்க்கத்தை குட்டிமுதலாளித்துவ உணர்வுள் ளவர்களாக மாற்றிவிட்டனர்.

மேலும் உழைக்கும் வர்க்கக் கட்சித் தலைவர்களை பாட்டாளி வர்க்கத் தலைவர்கள் என்ற நிலையை கைவிட்டு குட்டிமுதலாளித்துவ தலைவர்களாக மாற்றி கம்யூனிஸ்டு அமைப்புகளையே குட்டிமுதலா ளித்துவ அமைப்புகளாக மாற்றுவதில் ஏகாதிபத்தியவாதிகள் வெற்றிபெற்றுள் ளனர். இது போன்று ஏகாதிபத்தியவாதிகள் கம்யூனிச அமைப்புகளுக்குள் பிளவுகள் ஏற்படுத்துகிறார்கள் என்று ஏகாதிபத்தி யத்தை பகுப்பாய்வு செய்த லெனின் ஏகாதிபத்தியமும் சோசலிசத்தில் பிளவும் என்ற கட்டுரையில் விளக்கியுள்ளார். அதனை இந்த கம்யூனிஸ்டுத் தலைவர்கள் படித்துப் புரிந்துகொண்டு தங்களது கடமையை ஆற்றத் தவறினார்கள். ஆனால் மார்க்சின் போதனைகளை கற்றுத் தேர்ந்த முதலாளிகள் தெளிவாக திட்டமிட்டு செயல்பட்டு தொழிலாளி வர்க்கத்தை வீழ்த்தியுள்ளார்கள். ஆகவே நாம் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். அது எப்படி என்பது நம்முன் உள்ள கேள்வி.

தற்போது இந்தியாவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கைகளை ஆளும் முதலாளித்துவ வர்க்கம் 1990 ஆம் ஆண்டுகளிலிருந்து நடைமுறைப் படுத்தி வருகிறது. இந்திய அரசானது சர்வதேசிய ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களான உலகவங்கி, ஐ.எம்.எப், போன்ற வற்றிடமிருந்து கடன் பெற்று அவர்கள் போடும் அநியாயமான நிபந்தனைகளை ஏற்றுச் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. அதனால் அரசின் செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையை செயல்படுத்துவதால், அரசுத் துறைகளில் புதிதாக வேலைக்கு ஆட்க்களை எடுப்பதில்லை. அப்படியே சிறிய அளவுக்குவேலைக்கு ஆட்களை நியமித்தாலும் அவர்களை கொத்தடிமை நிலையிலேயே வைத்துள்ளது. அரசே கொத்தடிமைத்தனத்தைசெயல்படுத்தும் போது கார்ப்பரேட் முதலாளி களும் தொழிலாளர்களின் உரிமைகளை பறித்துவிட்டு கொத்தடிமை முறைகளை புகுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் சமீப காலங்களில் குட்டிமுதலாளித்துவ வாழ்க்கை வாழ்ந்த ஆலைப் பாட்டாளிகள் உடமையற்றவர்களாக மட்டுமல்லாது பிச்சைக் காரர்களாக மாறிக்கொண்டு இருக்கின்றனர்.

மேலும் சிலர் தற்கொலை செய்து செத்துக் கொண்டு இருக்கின்றனர். இதே போலவே சிறுவுடமை வர்க்கத்தினரான சிறு வியாபாரிகள், சிறு தொழில் முதலாளிகள், விவசாய உடமையாளர்கள் போன்ற உடமை வர்க்கங்களும் சிறிது சிறிதாக உடமைகளை இழந்து உடமையற்றவர்களாக மாறிக் கொண்டு இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் கூலித் தொழிலாளியாக மாறிக்கொண்டு இருக்கின்றனர் என்று சிலர் கருதுகிறார்கள்.

அதில் பாதிதான் உண்மையாகும். இதில் பலபேர் எவ்விதமான வேலை வாய்ப்பும் இல்லாமல் பிச்சையெடுக்கும் நிலையைத் தான் சந்திக்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் என்பது இந்திய மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய கொடுமையாக மாறிக்கொண்டு இருக்கிறது. இன்றைய இந்திய உற்பத்தி முறையானது உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தியைக் குறைத்துக் கொண்டு இருக்கிறது என்பதுதான் எதார்த்தமாகும். அதன் விளைவாகவே கார்ப்பரேட் முதலாளிகள் உற்பத்தி செய்த பொருள்களை விற்க முடியாமல் சந்தையில் ஒரு தேக்கத்தை சந்திக்கின்றனர். ஆகவே நாம் சோசலிசம் பற்றிய மார்க்சிய போதனைகளை இவ்வாறு நெருக்கடிகளை சந்திக்கின்ற வர்க்கப் பிரிவைச் சேர்ந்த இளைஞர்களிடம் கொண்டுபோவது நமது முதல் கடமையாகக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். உழைப்பு என்றால் உடல் உழைப்பு மட்டுமல்லாமல், மூளை உழைப்பும்தான் என்பதையும் இளைஞர் களுக்கு சொல்லி புரியவைக்க வேண்டும். இந்த உழைப்பை மூலதனமானது அடிமைப்படுத்தி வைத்துள்ளது என்றும் அதற்கு அடிப்படை உற்பத்திச் சாதனங் களாகிய தொழிற்சாலை போன்றவை தனிப்பட்ட முதலாளிகளுக்குச் சொந்தமாக இருப்பதை பயன்படுத்தியே நம்மை அடிமைப் படுத்துகிறார்கள் என்பதைச் சொல்லி, இந்த மூலதனமானது உழைக்கும் மக்களால்உருவாக்கப்பட்டதை முதலாளிகள் பறித்துக் கொண்டு அதனை அவர்களது சொத்தாக மாற்றினார்கள் என்ற வரலாற்றைச் சொல்லி, நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட அந்த மூலதனத்தை அந்த முதலாளிகளிடமிருந்து பறித்து அதனை சமூகத்தின் சொத்தாக மாற்ற வேண்டியது உழைக்கும் வர்க்கத்தின் கடமை என்பதே மார்க்சின் போதனையாகும். இந்த போதனை நியாயமானது என்பதை உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்வது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.

முதலாளி வர்க்கங்களிடமிருந்து உற்பத்திச் சாதனங்களை அதாவது தொழிற்சாலை போன்றவற்றை பறிமுதல் செய்ய வேண்டு மானால் தொழிலாளர்களுக்கு அரசு தேவை என்று மார்க்ஸ் போதித்தார். இந்த போதனையை கம்யூனிச அமைப்புகளிலுள்ள சில சந்தர்ப்பவாதிகள் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். எனினும் தொழிலாளர் களின் அரசானது எத்தகையதாக இருக்க வேண்டும் என்ற மார்க்சின் போதனையை இவர்கள் பேசுவதில்லை.

தொழிலாளர்களின் அரசானது உலர்ந்து உதிரும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே மார்க்சின் போதனை யாகும். அதாவது இனிமேல் அரசு என்பதே தேவையில்லை என்றவகையான ஒரு சமூக அமைப்பை உருவாக்கும் தன்மை கொண்ட அரசு அதுதான் உலர்ந்து உதிரும் (இனிமேல் அரசு என்பதே தேவையில்லை) அரசுதான் தொழிலாளர்களின் அரசாகும் என்ற போதனையை மூடிமறைத்துவிட்டு. நிலவு கின்ற சமூக அமைப்பிற்குள்ளேயே, அதாவது முதலாளித்துவ சுரண்டல் அமைப்பிற் குள்ளேயே இந்த முதலாளித்துவ வாதிகளின் நலன்களுக்காகவே உருவாக்கப்பட்ட பாராளுமன்ற அமைப்பிற்குள்ளேயே மந்திரிகளாக ஆகி அந்த மந்திரி சபையே தொழிலாளர்களின் அரசு என்கிறார்களே இதுதான் மார்க்சின் போதனை என்கிறார்களே இது சரியா?. இந்த அரசு உலர்ந்து உதிரக்கூடியதா? முதலாளிகளின் உற்பத்திச் சாதனங்களை இந்த அரசால் பறிமுதல் செய்ய முடியுமா? தொழிலாளர்கள் போராடினால் தொழிலாளர்களுக்கு எதிராகச் செயல்படும் முதலாளிகளை இந்த அரசால் தண்டிக்க முடியுமா? மாறாக விவசாயிகளின் போராட்டத்தை இந்த அரசுகள் தொழிலாளர்களின் அரசு என்று சொல்லிக்கொண்டே ஒடுக்கியதுதான் வரலாறாகும். ஆகவே மார்க்சின் போதனைகளை திருத்தி விளக்கமளிக்கும்திருத்தல்வாதிகளை மார்க்சின்காலத்திலேயே கண்டிக்கப்பட்டு அவர்களின் திருத்தல்வாதக் கருத்துக்கள் முறியடிக்கப்பட்டதுஎனினும் இப்போதும் அத்தகைய திருத்தல்வாதக் கருத்துக்களை இவர்கள் கொண்டு வருவதற்குக் காரணம் உழைக்கும் மக்களிடமும், கம்யூனிஸ்டுகளிடமும் மார்க்சிய

போதனைகளை கொண்டுசெல்லாத நமது தவறுதான் காரணமாகும்.

மிகச் சிறுபான்மையினராகிய சுரண்டும் முதலாளி வர்க்கத்திற்கு மிகப்பெருவாரியான உழைக்கும் மக்களின் உழைப்புச் சக்தியை சுரண்டும் போது உழைக்கும் மக்களின் எதிர்ப்பை பலாத்காரம் கொண்டு ஒடுக்குவதற்கு அரசியல் அதிகாரமும் அதற்கான பலாத்காரக் கருவியான அரசும் தேவைப்படுகிறது. ஆனால் இந்த சுரண்டும் வர்க்கமாகிய முதலாளி வர்க்கத்தின் சுரண்டலை ஒழிக்கவும், அதனை எதிர்த்து முதலாளி வர்க்கம் போராடினால் அதனை ஒடுக்கவும் உழைக்கும் மக்களுக்கு அரசியல் அதிகாரமும் அதற்கான பலாத்காரக் கருவியான அரசும் தேவைப்படுகிறது. இங்கே இரண்டு வகையான வர்க்கங்களுக்கும் அரசு

தேவைப்படுகிறது. என்றாலும் அதன் நோக்கங்கள் வெவ்வேறானவையாகும். முதலாளி வர்க்கத்துக்கு தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கும், தொழிலாளர்களுக்கு இந்தச் சுரண்டலை ஒழிப்பதற்கும் அரசு தேவைப்படுகிறது. ஆகவே தொழிலாளி வர்க்கமானது உழைக்கும் மக்களைத் திரட்டி வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தி முதலாளிகளின் அரசை ஒரு புரட்சியின் மூலம் தூக்கியெறிய வேண்டும் என்பதே மார்க்சின் போதனையாகும்.

இதற்கு மாறாக குட்டிமுதலாளித்துவ சிந்தனையாளர்கள் வர்க்கப் போராட்டத்தை மறுத்துவிட்டு வர்க்க இசைவு பற்றி கனவு காண்கிறார்கள். சோசலிச சமூக மாற்றமானதுதானாக அமைதியான முறையில் நடந்துவிடும் என்கிறார்கள். அது தானாக நடக்காது தொழிலாளி வர்க்கத்தின் உணர்வுப்பூர்வமான செயல்பாட்டின் மூலம்தான் நடக்கும். என்ற போதிலும் அது அமைதியான முறையில் நடக்க வேண்டும் என்பதுதான் தொழிலாளர்கள் மற்றும் உண்மையான கம்யூனிஸ்டுகளின் விருப்பமாகும். ஆனால் சிறுபான்மையான முதலாளிகள் அவர்களின் அதிகாரத்தை அவர்களாக விட்டுக்கொடுத்து விடுவார்களா? என்ற கேள்விக்கு குட்டி முதலாளித்துவ சிந்தனையாளர்கள் அவர் களாக விட்டுவிடுவார்கள் என்று வாதிடுகிறார்கள். தற்போது நடக்கும்தேர்தல்களில் கூட இந்த முதலாளித்து வவாதிகள் மக்கள்பொரும்பான்மையினர் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களே ஆளட்டும் என்றுசெயல்படுகிறார்களா? இல்லையே பல்வேறுவிதமான தேர்தல் தில்லுமுள்ளுகளைச் செய்து தான் ஆட்சிக்கு வருவதற்கு எப்படியெல்லாம் செயல்படு கிறார்கள். மோசமான கலவரங்களை ஏற்படுத்தி பல மக்களை படுகொலை செய்வதையும் பார்க்கிறோம். இந்த பாராளுமன்ற ஆட்சியைக் கைப்பற்றி முதலாளிகளுக்கு எதிராக உழைக்கும் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்ய முடியாது. அப்படி இருந்தபோதும் இந்த ஆட்சிக்காக எவ்வளவு இழிவான செயல்களிலும் இறங்கும் இவர்கள்தான் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு அமைதியான முறையில் ஆட்சியை தொழிலாளர்களிடம் ஒப்படைத்துவிடுவார்களா? இவ்வாறான கற்பனைகளை குட்டிமுதலாளித்துவவாதி களும் திருத்தல்வாதிகளும் மக்களிடம் பரப்பி மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார் கள். இவர்களது துரோகப் பிரச்சாரத்தை முறியடிக்க மார்க்சின் போதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது நமது கடமையாகும்.

பாட்டாளி வர்க்கம்தான் சோசலிசப் புரட்சிக்குத் தலைமை தாங்கும் தகுதி படைத்தது என்று மார்க்ஸ் போதித்தார். பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் அதன் பொருளாதார நிலைமைகளின்காரணமாக சோசலிச உணர்வைப் பெற்று வளர்வதன் மூலம் சோசலிசப் புரட்சிக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ளும் வர்க்கமாக இருக்கிறது என்று மார்க்ஸ் போதித்தார். முதலாளி வர்க்கமானது குட்டிமுதலாளித்துவப் பகுதியினரை சிதைத்து சின்னாபின்ன மாக்குகிறது, ஆனால் அதே வேளையில் தொழிலாளி வர்க்கத்தை ஒன்று சேர்த்து ஒரு தொழிற்சாலைக்குள் ஒன்றுதிரட்டுகிறது. ஆகவே தொழிலாளர்களுக்கு இயல்பாகவே கூட்டுணர்வு ஏற்படுகிறது என்றும் இதன் காரணமாகவும் தொழிலாளி வர்க்கத்தால் சோசலிசப் புரட்சிக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ள முடிகிறது என்று மார்க்ஸ் போதித்தார். இந்த தொழிலாளர் வர்க்கத் தைக் காட்டிலும் மிகவும் கொடூரமாக சிறுவுடமை வர்க்கத்தினரை சுரண்டியும் ஒடுக்கினாலும், இந்த குட்டிமுதலாளியப் பிரிவினர் சுதந்திரமாகப் போராடும் வலிமை இல்லாதர்கள் என்று மார்க்ஸ் போதித்தார். ஆனாலும் குட்டிமுதலாளித்துவ வர்க்கமானதுதனது நிலையைத் தக்கவைக்க முடியாத நிலை வளர்ந்துவரும் சூழலில் இந்த வர்க்கங்களையும் தொழிலாளி வர்க்கம் அல்லது கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமையில் முதலாளித்துவவர்க்கத்தின் ஆட்சியதிகாரத்தை எதிர்த்துப் போராட அணிதிரட்ட வேண்டும் என்றே மார்க்ஸ் போதித்தார். அதாவது இந்த குட்டிமுதலாளி வர்க்கத்துக்கு தலைமை தாங்கும் வலிமை பாட்டாளி வர்க்கத்திற்கு மட்டுமே உண்டு என்றே மார்க்ஸ் போதித்தார்.

தொழிலாளர் வர்க்கக் கட்சிக்கு மார்க்சியத் தைப் போதிப்பதன் மூலம், தொழிலாளர் வர்க்கத்தின் முன்னணிப் படைக்கு மார்க்சியம் போதிக்கப்படுகிறது. மார்க்சிய அறிவொளி யைப் பெற்ற கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள் அதனை தொழிலாளர்கள் மற்றும் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் போதிப்பதன் மூலம் சமூகத்தைப் புரட்சிகரமாக மாற்றக் கூடிய சக்திகள் அனைத்தும் சமூக மாற்றத்திற்கான விஞ்ஞான வழியைப் புரிந்துகொண்டு செயல்பட முன்வருவார்கள். அதனை பயன்படுத்தி சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் வெற்றிபெற முடியும். அதோடு நமது பணி நின்றுவிடுவ தில்லை. கையில் கிடைத்த அரசியல் அதிகாரத்தையும் நாம் எப்படிப் பயன் படுத்துவது என்பதை இதுவரை நமக்கு கிடைத்த அனுபவத்திலிருந்து அதாவது நாம் செய்த தவறுகளை களைந்து புதிய வழியில் செயல்படுத்த வேண்டும். எனினும் புதிய வழியில் செயல்படும்போதும் தவறே வராது என்று நாம் கருதக் கூடாது. அந்தத் தவறுகளிலிருந்தும் பாடம் கற்றுக்கொண்டு மேலும் சிறப்பான பாதையை வகுத்துக் கொண்டு செயல்படுவதன் மூலமே நாம் நமது லட்சியத்தை நோக்கி முன்னேற முடியும். ஆகவே இதுவரை நமக்கு கிடைத்த தோல்விகளிலிருந்து துவளக்கூடாது. மார்க்சின் போதனைகளை ஆழமாகக் கற்றுக் கொண்டு புறநிலை எதார்த்தத்தை மார்க்சிய அடிப்படையில் பகுத்து ஆய்வு செய்து விடுதலைக்கான வழியை வகுத்துக்கொண்டு செயல்படுவோம். அத்தகைய செயல்பாட்டின் போது நமக்குத் தோல்வி கிடைத்தாலும் அதற்கான காரணத்தை அறிந்து தவறுகளை திருத்திக்கொண்டு முன்னேறுவோம். இத்தகைய முறையைக் கையாண்டே மனித சமூகம் இயற்கை பற்றிய விஞ்ஞான அறிவைப் பெற்று வளர்ந்திருக்கிறது. இதே முறையை கையாண்டு சமூக விஞ்ஞான அறிவையும் பெற்று வளர்வோம்....

தேன்மொழி.

பூர்ஷ்வா ஜனநாயகமும் சோஷலிச ஜனநாயகமும்-மதி

பூர்ஷ்வா சமூக பொருளாதார அமைப்பில் வாய்ப்பாக வாழும் சிறுபான்மையினர் மட்டும் பெறும் ஜனநாயக உரிமையே பூர்ஷ்வா ஜனநாயகமாகும். பரந்துபட்ட பெரும்பான்மை மக்கள் ஒடுக்கு முறைக்கு உள்ளாகி சமத்துவமற்று வாழும் நிலை. சோஷலிசத்தில் கிட்டும் ஜனநாயகம் பரந்துபட்ட மக்கள் பெறும் ஜனநாயக உரிமை யாகும். அங்கு சமத்துவமும் சமநீதியும் அனைவருக்கும் கிட்ட வழி வகுக்கப்படும்.

லெனின் அரசும் புரட்சியும் என்ற நூலில் இவ்வுண்மையை பின்வருமாறு_விளக்குவார்:
முதலாளித்துவ சமுதாயத்தில் கிட்டும் ஜனநாயகம் கட்டுப் படுத்தப்பட்ட, கொடுமையான, பொய்மையான, ஜனநாயகமாகும், சிறுபான்மையினரான பணக்காரருக்கே ஜனநாயகம், கம்யூனிசத்திற்கு செல்லும் இடைப்பட்ட காலகட்டத்தில் பாட்டாளியின் சர்வாதிகாரம் முதல் தடவையாக , பெரும் பான்மையான மக்களுக்கு ஜனநாயகம் கிட்டும் அவ்வேளை, சுரண்டும் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவர் (இதையே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பர்) . கம்யூனிசம் மட்டுமே முழுமையான ஜனநாயகத்தை மக்களுக்கு வழங்க முடியும்; முழுமையாக அனைவர்க்கும் ஜனநாயகம் கிட்டியதும் எவ்வித (பாட்டாளி சர்வதிகாரம்) அடக்குமுறைகள் தேவையற்று தானே உலர்ந்துவிடும் (ஏனெனில் வர்க்க சமூகம் மறைந்திருக்கும்).

லெனின் மேலும் பின்வருமாறு விளக்கிக் கூறினார்:
வேறு வார்த்தைகளில் கூறுவதாயின் முதலாளித்துவத்தில் 'அரசு" அதன் முழு அர்த்தத்திலும் நிலவுகிறது. ஒருவர்க்கம் மற்றொரு வர்க்கத்தை அடக்கி ஒடுக்க உள்ள விசேடயந்திரம் உள்ளது; சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கும் அரசுயந்திரம். இயல்பாகவே பெரும்பான்மையினரைச் சுரண்டும் சிறுபான்மையினர் அடக்கி ஒடுக்குவதற்கு வேண்டிய ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டி முறைகள் தேவைப்படுகின்றன. அடிமை, கொத்தடிமை, கூலிஅடிமை நிலைகளை நிலைநாட்ட இரத்த ஆறுதேவைப்படுகிறது.
மேலும், முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறும் காலகட்டத்திலும் ஒடுக்குமுறை தேவைப்படுகிறது; ஆனால் இத்தடவை சுரண்டப்பட்ட பெரும்பான்மையினர் சுரண்டிய சிறுபான்மையினர் மேல் காட்டும் அடக்குமுறையாகும்.
'அரசு’ என்று கூறும் அடக்குமுறை என்ற விசேட யந்திரம் இன்னும் தேவைப்படுகிறது. இது இடைப்பட்ட கால அரசு. முதலாளித்துவத்தில் அமையும் 'அரசு” யந்திரமல்ல. சுரண்டும் சிறுபான்மையினரை அடக்குவதற்கு, பெரும்பான்மையான கூலி அடிமையாக இருந்தவர்கள் அடக்குமுறையை கையாள்வது முந்திய நிலை யோடு ஒப்பிடும்போது எளிமையானதே. எழுச்சியுற்ற அடிமைகளையும் கொத்தடிமைகளையும் கூலி அடிமைகளையும் அடக்கி ஒடுக்குவதற்கு கொட்டப்பட்ட இரத்தத்திலும் மிகக் குறைவானதாகவே இது இருக்கும். அதற்கு இணைவாக குடித் தொகையில் பெரும் பான்மையானவர்கட்கு ஜனநாயகம் விரிவாக்கப்படுவதோடு ஒடுக்கு முறையான 'அரசு” யந்திரமும் காலப்போக்கில் மறைத்து போவதற்கும் வழிவகுக்கும்.
தொடரும் பின்னர்....

சமரசங்கள் குறித்து - லெனின். பகுதி - 1. பாண்டியன்

 என்னுடன் உரையாடுகையில் தோழர் லான்ஸ்பரி தொழிலாளர் இயக்கத்தில் பிரிட்டீஷ் சந்தர்ப்பவாதத் தலைவர்களுடைய பின்வரும் வாதத்தை விசேஷமாய் வலியுறுத்தினார்.

போல்ஷ்விக்குகள் முதலாளிகளுடன் சமரசம் செய்து கொள்கிறார்கள். உதாரணமாய், எஸ்தோனியாவுடனான சமாதான ஒப்பந்தத் தில் மரச் சலுகைகளுக்கு ஒத்துக்கொண்டனர். அப்படியானால், பிரிட்டீஷ் தொழிலாளர் இயக்கத்தின் மிதவாதத் தலைவர்கள் முதலாளிகளுடன் செய்துகொள்ளும் சமரசங் களும் இதே அளவுக்கு நியாயமானவையே.

பிரிட்டனில் பரவலாய் அடிபடும் இந்த வாதம் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தென்றும், இதைப்பரிசீலனை செய்வது அவசர அவசியமானதென்றும் தோழர் லான்ஸ்பரி கருதுகிறார்.

இந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்ய முயலுகிறேன்.

பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஆதரவாளர் முதலாளிகளுடனோ முதலாளித்துவ வர்க்கத் துடனோ சமரசங்கள் செய்துகொள்ளலாமா?

இதுதான் மேற்கூறிய வாதத்துக்கு அடிநிலையாய் இருக்கும் கேள்வி என்பது தெளிவு. ஆனால் இந்தப்பொதுப்படையான வழியில் இக்கேள்வியை எழுப்புவதானது கேட்ப்பவரின் அளவு கடந்த அரசியல் அனுபவமின்மையையும் அரசியல் உணர்வில் அவருடைய தாழ் நிலையையும் காட்டுவதாக வோ, வழிப்பறி, கொள்ளை, மற்றும் முதலாளித்துவ வன்முறையின் ஏனைய ஒவ்வொரு வகையும் நியாயமே என்கிற தமது நிலையை மூடிமறைப்பதற்காக குதர்க்க வாதத்தில் இறங்கும் அவருடைய கயமையைக் காட்டுவதாகவேத்தான் இருக்கிறது.

உண்மையில், பொதுப்படையான இந்தக் கேள்விக்கு எதிர்மறையில் பதிலளிப்பது அபத்தமே ஆகும். பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஆதரவாளர் முதலாளிகளுடன் சமரசங்கள் அல்லது ஒப்பந்தங்கள் செய்துகொள்ளலாம் தான். எல்லாம் எவ்வகையான ஒப்பந்தம் செய்துகொள்ளப்படுகிறது, எந்த நிலைமைகளில் செய்து கொள்ளப்படுகிறது என்பதையே பொறுத்திருக்கிறது. பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கண்ணோட்டத்தில் நியாயமான ஒப்பந்தத்துக்கும் (இதே கண்ணோட்டத்தில்) துரோகமான, வஞ்சக மான ஒப்பந்தத்துக்கும் இடையிலான வேறுபாட்டை இதில், இதில் மட்டுமே தான்காண முடியும், காணவும் வேண்டும்.

இதைத் தெளிவுபடுத்த முதலில் மார்க்சியத்தின் மூலவர்களுடைய வாதத்தி னை நினைவுபடுத்துகிறேன்; பிறகு தெட்டத் தெளிவான எளிய உதாரணங்கள் சிலவற்றைத் தருகிறேன்.

மார்க்சையும் எங்கெல்சையும் காரணமின்றி நாம் விஞ்ஞான சோசலிசத்தின் மூலவர்களாய் கருதவில்லை. எல்லா வாய்வீச்சுக்கும் அவர்கள் தீராப் பகைவர்களாய் இருந்தவர்கள். சோசலிசத்தின் பிரச்சனைகள் (சோசலிசப்போர்த்தந்திரப் பிரச்சனைகளும் அடங்கலாய்) விஞ்ஞான வழியிலேயேதான் எடுத்துரைக்கப்பட வேண்டுமென்று அவர் கள் போதித்தனர். கடந்த நூற்றாண்டின் எழுபதாம் ஆண்டுகளில் கம்யூனிலிருந்து வெளியே ஓடியவர்களான பிரெஞ்சுப் பிளாங்கியவாதிகளின் புரட்சிகர அறிக்கையைப் பகுத்தாய்ந்தபோது எங்கெல்ஸ் "சமரசங்கள் கூடவேகூடாது" என்று அவர்கள் பெருமையாய்ப் பிரகடனம் செய்தது வெற்றுப் பேச்சே ஆகுமென்று தெட்டத் தெளிவாய் அவர்களிடம் கூறினார். சமரசங்கள் செய்துகொள்ளும் கருத்தையே நிராகரித்து விடக் கூடாது. மிகவும் புரட்சிகரமான வர்க்கத்தின் மிகவும் புரட்சிகரமான கட்சியும்கூட சூழ்நிலைமையின் நிர்பந்தத் தால் சில சமயம் சமரசங்கள் செய்து கொள்வது அத்தியாவசியமாகிவிடுகிறது. எல்லா சமரசங்களுக்கு இடையிலும் புரட்சிகரப் போர்த்தந்திரத்தையும், நிறுவனத்தையும், தொழிலாளி வர்க்கத்தின், அதன் நிறுவன ஒழுங்கமைப்பு பெற்ற முன்னணிப் படையான கம்யூனிஸ்டுக் கட்சியின் புரட்சிகர உணர்வையும், வைராக்கியத்தையும், தயார் நிலையையும் பாதுகாத்துக் கொள்ளவும் பலப்படுத்தவும் உருக்கு உறுதியாக்கிக் கொள்ளவும் வளர்த்துச் செல்லவும் முடிகிறது என்பதே இங்குள்ள பிரச்சனையாகும்.

மார்க்சின் போதனைகளுடைய அடிப்படைக் கூறுகளை அறிந்த எவரும் இந்தப் போதனைகளின் முழுமொத்தத்திலிருந்து தவிர்க்க முடியாதபடி இந்த முடிவினைத்தான் வந்தடைந்தாக வேண்டும். ஆனால் பிரிட்டனில் வரலாற்றுக் காரணங்கள் பலவற்றின் விளைவாகவும் மார்க்சியமானது சார்ட்டிஸ்டு இயக்கத்துக்குப் பிற்பாடு (பல வழிகளிலும் இந்த இயக்கம் மார்க்சியத்துக் கான தயாரிப்பாகவும், மார்க்சியத்துக்கு முன்பு "இறுதி முடிவுக்கு ஒரு படி குறைவான" தாகவும் இருந்தது.) (குறிப்பு:- சார்ட்டிஸ்டு இயக்கம் - ஆங்கிலேயத்தொழிலாளர்களின்வெகுஜனப் புரட்சி இயக்கம்; மிகக் கடினமான பொருளாதார நிலைமைகள், அரசியல் உரிமை கள் இல்லாத நிலை இவற்றின் காரணமாய் எழுந்தது. மக்கள் உரிமைச் சாசனம் (சார்ட்டர்) கோரியதால் இந்த இயக்கம் இப்பெயரைப் பெறலாயிற்று. 1830 ஆம் ஆண்டுகளின் பிற்பாதியில் மாபெரும் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுடன் இந்த இயக்கம் ஆரம்பமாகி சிற்சில இடைவெளிகள் விட்டு 1850 ஆம் ஆண்டுகளின் ஆரம்பப் பகுதிவரை நடைபெற்றது முரணற்றப் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத் தலைமையும் தெளிவான வேலைத்திட்டமும் இல்லாததே சார்ட்டிஸ்டு இயக்கத்தின் தோல்விக்கான பிரதான காரணம்).தொழிற்சங்கங்கள், கூட்டுறவுகள் இவற்றின் சந்தர்ப்பவாத, அரை- முதலாளித் துவத் தலைவர்களால் பின்னிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதால், பரிசீலனையிலுள்ள கருத்தோட்டத்தின் மெய்பொருளை எல்லோ ரும் அறிந்த சர்வசாதாரண, அரசியல், பொருளாதார வாழ்க்கையின் உண்மைகளிலி ருந்து எடுக்கப்பட்ட பொருத்தமான எடுத்துக்காட்டுகளைக் கொண்டு விளக்க முயலுகிறேன்.

முன்னொருமுறை என்னுடைய பேச்சுக்களில் ஒன்றில் நான் கொடுத்த ஓர் உதாரணத்திலிருந்து தொடங்குகிறேன்.

(குறிப்பு:- லெனின் முன்னொருமுறை பேசிய பேச்சு - "சுதந்திரம் சமத்துவம் ஆகிய முழக்கங்களைக் கொண்டு மக்களை ஏமாற்றுதல்" என்னும் தலைப்பில் முதலாவது அனைத்து ரஷ்ய முதியோர் கல்விக் காங்கிரசில் நிகழ்த்திய சொற்பொழிவைப் பார்க்கவும் - லெனின் நூல்திரட்டு தொகுதி 38, பக்கங்கள் 341 - 42) ஆயுதங்கள் கொண்ட கொள்ளைக் கூட்டத்தினர் நீங்கள் செல்லும் காரைத் தாக்குவதாய் வைத்துக்கொள்வோம். உங்கள் பொட்டுக்கு நேராய் கைத்துப்பாக்கியை வைத்ததும் உங்கள் காரையும் பணத்தையும் ரிவால்வாரையும் நீங்கள் கொள்ளைக் கூட்டத்தினரிடம் ஒப்படைத்துவிடுவதாகவும், கொள்ளைக்காரர்கள் இந்தக் காரையும் பிறவற்றையும் உபயோகித்து மேலும் சில கொள்ளைகள் நடத்துவதாகவும் வைத்துக் கொள்வோம்.

இது வழிப்பறிக்காரர்களுடன் செய்து கொள்ளப்படும் ஒரு சமரசமே, அவர்களுட னான ஓர் ஒப்பந்தமே என்பதில் சந்தேகமில்லை; கையொப்பம் இடப்படாமல் மௌனமாமாய் செய்துகொள்ளப்பட்டது என்றாலும் திட்டவட்டமான ஒப்பந்தமே ஆகும். "கொள்ளைக்காரர்களே, என் காரையும் ஆயுதத்தையும் பணத்தையும் உங்களுக்குத் தருகிறேன், உங்களுடைய சகவாசத்திலிருந்துஎன்னை விட்டுவிடுங்கள்."

வழிப்பறிக்காரர்களுடன் இத்தகைய ஒப்பந்தம் செய்துகொண்ட ஆளைக் கொள்ளையில் உடந்தையாக இருந்தார், ஒப்பந்தம் செய்து கொண்டவரிடமிருந்து பெற்ற கார், பணம், ஆயுதம் இவற்றின் துணை கொண்டு கொள்ளைக் கூட்டத்தினர் மூன்றாவது ஆட்க்கள் மீது தாக்கி நடத்திய கொள்ளையில் உடந்தையாக இருந்தார் என்று சொல்வீர்களா?

இல்லை, சொல்லமாட்டீர்கள்.

சின்னஞ்சிறு விவரம் வரை முற்றிலும் தெளிவாகவும் சுலபமாகவும் விளங்கும் விவகாரம் இது.

வேறொரு வகை சூழ்நிலையில் கொள்ளைக்காரர்களிடம் காரையும் பணத்தையும் ஆயுதத்தையும் பேசாமல் ஒப்படைப்பதானது பகுத்தறிவுடைய எவராலும் கொள்ளையில் உடந்தையாய்க் கொள்ளப்படும் என்பதும் இதே போலத் தெளிவு.

முடிவு தெளிவாய் விளங்குகிறது; பொது வாகப் பேசுமிடத்து, கொள்ளைக்காரர் களுடன் சில சமயம் ஒப்பந்தங்கள் அவசிய மாகவும் அனுமதிக்கப்படக் கூடியவையா கவும் இருக்கலாம் என்ற கருத்தியலான நிர்ணயிப்பின் அடிப்படையில் கொள்ளை யில் ஒருவர் உடந்தையாய் இருந்திருக்க முடியாதென தீர்ப்பளிப்பது எவ்வளவு அபத்தமானதோ, அதே அளவுக்கு அபத்தமானதுதான் கொள்ளைக்காரர் களுடனான எல்லா ஒப்பந்தங்களையும் அல்லது சமரசங்களையும் நிராகரிப்பதும்.

இனி ஓர் அரசியல் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.... .(கையெழுத்துப் பிரதி இத்துடன் நின்றுவிடுகிறது.)

லெனின் - நூல் திரட்டு தொகுதி 40, 1920, மார்ச் - ஏப்ரலில் எழுதப்பட்டது.

எமது விளக்கம்

ரஷ்யப் புரட்சியை தலைமையேற்று நடத்திய போல்ஷ்விக் கம்யூனிஸ்டுக் கட்சியானது முதலாளித்து வர்க்கங்களுடன் அதாவது முதலாளித்துவ கட்சிகளுடன் பல சமயங்களில் சமரசங்கள் செய்துள்ளார்கள். ஆகவே பிற கம்யூனிஸ்டுக் கட்சிகளும் இது போன்ற சமரசங்கள் செய்துகொள்வது நியாயமானதே என்ற கேள்வி எழுந்த போது, அதற்கு லெனின் கொடுத்த பதில்தான் மேலேகண்ட இந்த கட்டுரையாகும்.

இந்தக் கேள்விக்கு பொதுப்படையாக பதில் கொடுப்பது சரியானது அல்ல என்றும்பொதுவாக சமரசங்கள் செய்துகொள்ள வேண்டியது தவறல்ல, அது அவசியமும் கூட என்றாலும், குறிப்பான பிரச்சனையில் ஒரு சமரசம் செய்துகொள்ள வேண்டியது அவசியம்தானா? என்பதை குறிப்பான சூழலிருந்தே முடிவு செய்ய வேண்டும் என்றும்,

அதாவது புரட்சிகர இயக்கத்தின் நிகழ்ச்சிப் போக்கில் அகச் சூழலையும் அதாவது கட்சி மற்றும் போராடும் வர்க்கங்களின் சூழலையும், புறச் சூழலையும் அதாவது எதிரிகள் மற்றும் எதிரிகளோடு தொடர்புள்ள பிற வர்க்கங்களின் சூழலையும் பகுத்து ஆராய்ந்து சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டும் என்றும், அப்படியே சமரசம் செய்ய வேண்டுமானால் என்னவகையான சமரசம் செய்ய வேண்டும் என்பதை குறிப்பாக முடிவு செய்ய வேண்டும் என்றும், இத்தகைய முடிவுகளை குறிப்பாக பிரச்சனைகளை எதிர்நோக்கும் தொழிலாளி வர்க்க கட்சியால் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்கிறார் லெனின். ஒரு கம்யூனிஸ்டுக் கட்சியானது இந்தப் பிரச்சனையில் சரியான முடிவெடுத்து செயல்பட்டால் வெற்றிபெறும். தவறாக முடிவெடுத்து செயல்பட்டால் தோல்வியடையும்.

முதலாளித்துவ வர்க்க கட்சிகளுடன் சமரசம் செய்துகொள்ளலாம் என்று லெனின் சொல்லியிருக்கிறார் என்று சொல்லி கண்ணைமூடிக்கொண்டு எவ்விதமான பகுப்பாய்வும் செய்யாமல் முதலாளித்துவ கட்சிகளுடன் சமரசம் செய்துகொள்ளும் கொள்கையை சிலர் பின்பற்றுகிறார்கள். அது தவறானது என்பதை லெனின் சொல்லியிருக் கிறார் என்பதை இவர்கள் பொருட்படுத்துவ தில்லை. பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கண்ணோட்டத்தில் நியாயமான சமரசங்களுக் கும், அதே பாட்டாளிவர்க்கப் புரட்சியின் கண்ணோட்டத்தில் துரோகமான மற்றும் வஞ்சகமான சமரசத்திற்கும் இடையிலான வேறுபாட்டை இவர்கள் காணத் தவறுகிறார்கள், அல்லது மூடிமறைக்கிறார் கள்.

மார்க்சிய ஆசான்களான மார்க்சும் எங்கெல்சும், சோசலிசம் பற்றிய பிரச்சனை யாக இருந்தாலும் சரி, நமது போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரப் பிரச்சனையாக இருந்தாலும் சரி, நாம் எப்போதும் விஞ்ஞானத்தின் துணைகொண்டே செயல்பட வேண்டும் என்று போதித்தார்கள். இடது தீவிரவாதிகளான பிளாங்கிஸ்டுகள் எந்த வகையான சமரத்திலும் கம்யூனிஸ்டுகள் ஈடுபடக் கூடாது என்று வாதம் செய்த போது அதனை எங்கெல்ஸ் மறுத்தார். சில சமயம் நிர்பந்தத்தின்காரணமாகவே கம்யூனிஸ்டுகள் சில சமரசங்கள் செய்துகொள்ள வேண்டியதுஅவசியமாகிவிடுகிறது என்றும் கம்யூனிஸ்டுக் கட்சியைப் பாதுகாக்கவும் உழைக்கும் மக்களைப் பாதுகாக்கவும், கட்சியின் திட்டவகைப்பட்ட போர்த்தந்திரங் களைப் பாதுகாக்கவும், மக்களின் உணர்வு நிலைகளைப் பாதுகாத்து உயர்த்தவும் மொத்தத்தில் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களிலிருந்து சமரசங்கள் செய்து கொள்வது, புரட்சிகரமான போராட்டங்களி லிருந்து பின்வாங்குவது போன்ற முடிவுகளை எடுத்து செயல்பட வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமை ஆகும் என்றார் எங்கெல்ஸ்.

உதாரணமாக தெலுங்கானாவில் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் விவசாயி களின் ஆயுதப் போராட்டங்கள் நடத்தப்பட்டு பல வெற்றிகளை அந்த விவசாயிகள் அடைந்தனர். அந்தப் போராட்டத்தை ஒடுக்க நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு இராணுவத்தை ஏவி போராட்டத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தபோது கம்யூனிஸ்டுகள் அந்தப் போராட்டத்திலிருந்து பின்வாங்கி நேரு அரசுடன் சமரசம் செய்துகொண்டார்கள் அது சரியானதே. ஆனால் இத்தகைய பின்வாங்குதலின் போது தனது லட்சியத்தை கைவிடாமல் பின்வாங்க வேண்டும் என்ற லெனினிய வழிகாட்டுதலை இந்திய கம்யூனிஸ்டுகள் பின்பற்றத் தவறி, போர்க்குணமிக்கப் போராட்டங்களை கைவிட்டுவிட்டு தேர்தல்களின் மூலமாகவே சோசலிசத்தை அடைந்துவிடலாம் என்ற முடிவெடுத்து முதலாளித்துவ கட்சிகளுடன் சமரசம் செய்துகொண்டு சமரசவாதி களாகவே மாறிவிட்டது, லெனினது வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் இது ஒரு துரோகமே, இது வஞ்சகமான சமரசமே. இதன் மூலம் இந்தியகம்யூனிஸ்டுக் கட்சியும் மார்க்ஸிஸ்டுக் கட்சியும் அரைமுதலாளித்துவ கட்சிகளாகவே மாறிவிட்டனர்.

ரஷ்யாவில் 1905 ஆம் ஆண்டு நடந்த முதல் முதலாளித்துவப் புரட்சி தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து ஸ்டோலிபியன் என்ற கொடியவனது கொடுங்கோல் நடவடிக்கை கள் அதாவது கம்யூனிஸ்டுகளை வேட்டையாடுவது, தொழிலாளர்களை கைதுசெய்து சிறையில் அடைப்பது போன்ற கொடிய நடவடிக்கையில் ஈடுபட்ட போது, ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சியிலுள்ள சிலர் புரட்சிகர கட்சியை கலைத்துவிட வேண்டும் என்றும் ஜார் ஆட்சிக்கு உகந்த முறையிலான நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்றும் வாதிட்டார்கள்.இவர்களை கலைப்புவாதிகள் என்று லெனின் மதிப்பிட்டு இவர்களது திட்டத்திற்கு மாறாக கட்சியை தலைமறைவுக் கட்சியாக மாற்றி சட்டப்பூர்வமான வழிகளில் மக்களைத் திரட்டிப் போராடி சட்டப்பூர்வமான போராட்டங்களையும்

சட்டத்தை மீறியப் போராட்டங்களையும் ஒன்றிணைத்தார் லெனின். அதன் தொடர்ச்சியாக 1917 ஆம் ஆண்டு ஜார் அரசாங்கத்தை மக்கள் தூக்கியெறிந்தார்கள். இத்தகைய லெனினிய முறைகளை பின்பற்றத் தவறி தற்போது மக்களின் செல்வாக்கையும் இழந்துவிட்டதற்கு இந்திய கம்யூனிஸ்டுகள் பின்பற்றிய சமரசவாதமே காரணம் ஆகும்.

இந்த வரலாற்று அனுபவத்திலிருந்தும் நாம் புரிந்துகொள்ள வேண்டியது புரட்சியின் நலனுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் கம்யூனிஸ்டுகள் சமரசங்கள் செய்து கொள்வது அவசியமே என்றாலும் சமரசவாத நிலையிலிருந்து புரட்சி மற்றும் மக்களின் நலன்களுக்கு எதிராக தனது சொந்த சுயநலத்தின்அடிப்படையில்துரோகத்தனமான

மற்றும் வஞ்சகமான சமரசங்களை கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் செய்து கொள்ளக் கூடாது.

தற்போது இந்தியாவில் பாசிச பா.ஜ.க.வின் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியை உழைக்கும் மக்களின் நலனிலிருந்து தூக்கியெறிய வேண்டியது அவசியமானதாகும். இதனை சாதிக்கக் கூடிய வலிமை தொழிலாளி வர்க்கத்திற்கு மட்டுமே உள்ளது. தொழிலாளி வர்க்கம் மட்டும்தான் இதற்காக எவ்விதமான சலனமும் இல்லாமல் உறுதியாகப் போராடும். ஆகவே தொழிலாளி வர்க்கத்துக்கு தலைமை கொடுத்து தொழிலாளர்களைத் திரட்டி வைத்துள்ள கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமையில் மட்டுமே இந்தப் பாசிசத்தை வீழ்த்த முடியும். அதன் பொருட்டு கம்யூனிஸ்டுகள் பாசிசமல்லாத பிற முதலாளித்துவ கட்சிகளோடு சமரசம் செய்துகொண்டு ஒரு ஐக்கியமுன்னணி அமைத்துப் போராட வேண்டும் என்பது பொதுவான உண்மைதான். எனினும் இந்த பொதுவான உண்மையின் அடிப்படையில் கண்மூடித்தனமாக செயல்படக் கூடாது என்று லெனின் எச்சரித்துள்ளார். குறிப்பாகதற்போதைய சூழலை பகுப்பாய்வு செய்து முடிவிற்கு வருவதுதான் விஞ்ஞான மாகும் என்பதுதான் லெனினது வழிகாட்டலா கும். தற்போது இந்தியாவில் அல்லது தமிழகத்தில் ஒரு ஒன்றுபட்ட பலம்வாய்ந்த புரட்சிகரமான கம்யூனிஸ்டுக் கட்சி இல்லை. சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற கட்சிகள் ஒப்பீட்டளவில் தொழிலாளர்களையும்விவசாயிகளையும் திரட்டிவைத்திருந்தாலும் இந்தக் கட்சித் தலைவர்கள் இங்குள்ள முதலாளித்துவ கட்சிகளுக்கு வாலாகவே செயல்படுகின்றனர். இவ்விரு கட்சிகளுக்கு இடையில் பெரிய அளவில் கொள்கை வேறுபாடுகள் இல்லை என்றாலும் இவ்விரு கட்சிகளையும் கூட ஒன்றுபடுத்துவதில் இந்தக் கட்சிகளின் தலைவர்களுக்கு ஆர்வம் இல்லை. காரணம் என்ன? ஒன்றுபட்ட கட்சிக்கு யார் தலைவர்கள் என்ற தலைமைக்கான போட்டிதான் இவர்களது பிரச்சனையாக இருக்கிறது. மக்களின் நலனுக்காக இவர்கள் ஒன்றுபட வேண்டும் என்பதில் இவர்களுக்கு அக்கறை இல்லை. இதற்கு காரணம் இவர்களிடத்திலுள்ள தனிவுடமையின் அடிப்படையிலான சுயநலனே காரணமாகும்.

இவர்களுக்கு அடுத்தபடியாக ஏராளமான எம்.எல்.குழுக்கள் உள்ளது. இந்தக் குழுக்களின் தலைவர்களிடம், தான் என்ற அகம்பாவமும், சுயநலனும், தான் சொல்வதை மற்றவர்கள் கேட்க்க வேண்டும் என்ற பிடிவாதமும் நிறைந்த குறுங்குழு வாதிகளாகவே இந்தக் குழுக்களின் தலைவர்கள் உள்ளனர். இத்தகைய தலைவர்களின் அதிகார வர்க்கப்போக்கு மற்றும் அராஜகத்தைப் பிடிக்காதவர்கள் சிலர் இந்தக் குழுக்களிலிருந்து வெளியேறி தனிக் குழுக்களை உருவாக்குகிறார்கள். அவர்களிடத்திலும் இதே தவறான போக்குகள்தான் நீடிக்கிறது. இந்தத் தவறுகளை இவர்கள் சுயவிமர்சனம் செய்து களைந்துகொள்ளத் தயாரில்லை. இவர்களும் அவர்கள் சொல்வதைத்தான் பிறர் கேட்க்க வேண்டும் என்றே கருதுகிறார்கள். அமைப்பிற்குள் உள்ள ஒவ்வொரு தோழர்களுக்கும் சுதந்திரமாகச்

சிந்திப்பதற்கும், செயல்படுவதற்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற ஜனநாயகத்தைக்கூட இவர்கள் புரிந்து கொண்டு அனுமதிக்கத் தயாரில்லை. பிறர் அவர்களது கருத்துக்களை சுதந்திரமாக வைப்பதற்கும் அவர்கள் சுதந்திரமாக செயல்பட்டு அவர்களின் சொந்த அனுபவங்களிலிருந்து புதிய கருத்துக்களை முன்வைப்பதற்கும் சுதந்திரம் கொடுப்பதன் மூலம் பல்வேறுவிதமான கருத்துகள் ஒன்றுக்கொன்று மோதி மிகவும் சரியான அனைவராலும் அல்லது பெரும்பான்மை யினரால் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பொதுக் கருத்திற்கு வருவதற்கான வாய்ப்புகளையே இவர்கள் மறுக்கிறார்கள். இதன் மூலம் சிறிய அளவில் திரட்டப்பட்ட இவர்களது உறுப்பினர்களுக்கு உள்ளேமட்டும் விவாதிப்பதும் அதனையே சரியான கருத்து என்று கருதி குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு வெளியே உள்ள அனைவரும் குறைஉள்ளவர்களாகக் கருதி இவர்களிடத் தில் குறையே இல்லாத புனிதமானவர்களாகத் தங்களைக்கருதிக்கொள்கின்றனர். முரண்பாடு அனைத்தும் தழுவியது என்ற முரண்பாடு பற்றிய விதியை இவர்கள் புரிந்து கொள்ளவும் இல்லை, அதன் அடிப்படையில் பிறரிடம் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும் என்று உணர்ந்து செயல்படவும் தயாரில்லை. தற்போது நிலவும் மாறுபட்ட கருத்துகளை எதிர்த்து கருத்து மோதல்களில்

ஈடுபட வேண்டியதுதான் அவசியமாகும். இதற்கு மாறாக மாறுபட்ட கருத்துக் கொண்டவர்கள் எல்லாம் எதிரிகளாக பாவித்து நபர்களின் மீது தாக்குதல் நடத்தும் மோசமான முறையை இவர்கள் கைவிட்டு ஆரோக்கிமானவிவாதங்களில் ஈடுபட்டு ஒரு ஒத்த கருத்திற்கு வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அத்தகைய முயற்சியில் ஈடுபடுபவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய எதார்த்த பலவீனமான சூழல் ஆகும்.

இவ்வாறு பலவீனமான சூழலில் கம்யூனிச அமைப்புகள் இருப்பதும், அவர்களிடத்தில் ஒற்றுமை இல்லாமல்பலவாறு பிளவுபட்டு சிதறி இருப்பதன் காரணமாக தொழிலாளர் மற்றும் விவசாய வர்க்கங்களும் பலவாறு பிளவுபட்டும் சிதறியும் ஒற்றுமையின்றி மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளனர். இந்த வர்க்கங்களுக்குஎவ்விதமான நம்பிக்கையும் ஆர்வமும் இல்லாத விரக்தி மனப்பாண்மையிலேயே உள்ளனர். இத்தகைய சூழலில்பாசிசத்தை எதிர்த்து ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்திட முடியுமா? நிச்சயமாக முடியாது. இப்படி நாம்சொல்வதால் பாசித்தை எதிர்த்துப் போராடவே முடியாது என்று நாம் சொல்வதாக யாரும் கருத வேண்டாம்.

பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதில் முதன்மையாக பங்கு வகிக்கும் தொழிலாளர் களையும் விவசாயிகளையும் ஒன்று சேர்ப்பதன் மூலமே பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை நடத்த முடியும் என்கிறோம். மேலும் அத்தகையஒற்றுமையை சாதிக்க வேண்டுமானால் கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட வேண்டும் என்ற நிபந்தனைக்கு தெளிவானமுடிவு காண வேண்டும் என்கிறோம். இத்தகைய கம்யூனிஸ்டுகளின் ஒற்றுமையை சாதிப்பதற்கு இரண்டு வழிகள்உள்ளன. ஒன்று அனைத்து கம்யூனிஸ்டுகளும் ஒன்றுகூடி தங்களுக்கு இடையிலுள்ள கருத்து வேறுபாடுகளை ஒரு சித்தாந்தப்போராட்டத்தை நடத்தி ஒரு ஒன்றுபட்ட திட்டம் மற்றும் போர்த்தந்திரம் மற்றும் அமைப்புக் கோட்பாடுகளை உருவாக்கி ஒரு ஒன்றுபட்ட கட்சியைக் கட்டலாம். அல்லது ஏதாவது ஒரு குழு தனது சொந்தத் திட்டத்தை மக்களைத் திரட்டிப் போராடி நிருபிப்பதன் மூலம் அந்தத் திட்டத்தை பிற அமைப்புகளும் ஏற்றுக் கொண்டு ஒன்றிணையலாம். இத்தகைய வெவ்வேறான முறைகளை கையாண்டாலும் கம்யூனிசஅமைப்புகளுக்கு இடையிலும் கம்யூனிஸ்டுகளுக்கு இடையிலும் ஆரோக்கிமான உறவை தொடர்ந்து நாம் கடைபிடிப்பதும் கருத்து வேறுபாடுகளை கருத்தியல் தளத்தில் விவாதித்து தீர்த்துக் கொள்ளும் முறையை கடைபிடிப்பதன் மூலம் நமக்கிடையே உள்ள முரண்பாடு பகைத் தன்மை அற்றது என்பதையும் அதனை பகையற்றமுறையில்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற பக்குவ நிலையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகும்.

இத்தகைய ஒற்றுமையை நமக்கிடையே சாதிக்காமல் முதலாளித்துவ கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி என்று பேசுவது தற்கொலைக்குச் சமமாகும். அன்று இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி செய்த தவறுகளிலி ருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே குறிக்கிறது. மேலும் இதுபோன்ற பலவீனமான சூழலில் முதலாளித்துவ கட்சிகளோடு கூட்டு சேர்ந்து ஐக்கிய முன்னணி என்பதால் முதலில் இந்த முதலாளித்துவ கட்சிகள் எதுவும் நம்மை குறிப்பாக ஒப்பீட்டளவில் பலமாக உள்ள சி.பி.எம். கட்சியையே அவர்கள் மதிப்பதில் லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. இந்தச் சூழலில் ஒரு சிலரை மட்டுமே திரட்டியுள்ள குழுக்களை இந்த முதலாளித்துவ கட்சிகள் எப்படிப் பார்ப்பார்கள்? மேலும் இந்த முதலாளித்துவ கட்சிகளோடு கூட்டு சேர்ந்தால் தற்போது கம்யூனிச குழுக்களி லுள்ள பலபேர் அந்த முதலாளித்துவ கட்சிகளுக்கே போய்விடுவார்கள் என்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

ஒருகாலத்தில் மதுரை நகரமானது கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக விளங்கியது. கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவரான தோழர் இராமமூர்த்தி அவர்கள் சிறையில் இருந்தவாறே மக்களை சந்திக்காமலேயே பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இன்று மதுரை நகரமானது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் கோட்டையாக மாறிவிட்டது அதற்குக் காரணம் என்ன? கம்யூனிஸ்டுகள்தி.மு.க.வுடனும், அ.தி.மு.க.வுடனும் மாறிமாறி தேர்தல் கூட்டணி வைத்து செயல்பட்டதால், குடும்பம் குடும்பமாக கம்யூனிஸ்டுக் கட்சியில் இருந்தவர்கள்குடும்பம் குடும்பமாக தி.மு.க, மற்றும் அ.தி.மு.க.வுக்கும் போய்விட்டார்கள். மேலும் தற்போது கம்யூனிஸ்டுக் கட்சியிலுள்ளவர்கள் பா.ஜ.க.வுக்கே கட்சி மாறிக்கொண்டி ருக்கின்ற நிலையைப் பார்க்கிறோம். ஆகவே கம்யூனிஸ்டுகள் தங்களுக்குள் ஒன்றுபட்டு தங்களைப் பலப்படுத்தாதவரையில் பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதற்கு நம்மால் முடியாது என்ற எதார்த்த நிலையை ஒவ்வொரு கம்யூனிஸ்டுகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

சீனாவில் ஒரு பலம்வாய்ந்த சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி இருந்தது, அந்தக் கட்சி தொழிலாளர்களையும் விவசாயிகளையும் திரட்டி வைத்திருந்தது, அதன் தலைமையில் ஒரு மக்கள் படை இருந்தது. இத்தகைய அகச் சூழல் நிலவியபோதுதான் முதலாளித்துவ கட்சியான கோமிங்டானுடன் ஜப்பானிய எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை கட்டிப் போராடியது. இத்தகைய பலம்வாய்ந்த அகநிலை சூழ்நிலை இல்லாத நிலையில் மேலும் அகம் பலவீனமாக இருக்கும் சூழலில் தி.மு.க.வோடும் காங்கிரசோடும் ஐக்கிய முன்னணி என்று பேசுவது ஒரு துரோகமே ஆகும்.

மேலும் சீனாவில் கோமிங்டான் கட்சியின் நோக்கமும் ஜப்பானிய எதிர்ப்பாகும், கம்யூனிஸ்டுகளின் கொள்கையும் அதோடு ஒத்துப் போனதால் அங்கே ஐக்கிய முன்னணி சாத்தியமாயிற்று. ஆனால் இங்கே தி.மு.க, காங்கிரஸ் போன்ற கட்சிகள் இந்த பாசிசத்திற்கு அடிப்படையான தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற கொள்கைகளை பா.ஜ.க.வைப்போலவே ஆதரிக்கின்றர். ஆனால் கம்யூனிஸ்டுகளுக்கு இதற்கு எதிரான கொள்கைக்காகப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே நேர் எதிரான கொள்கை உடைய கம்யூனிஸ்டுகளும் தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளோடு எந்தக் கொள்கையின் அடிப்படையில் ஒன்றுபடுவது? ஆகவே சீனாவோடு ஒப்பிடும் போது அங்கே கோமிங்டானோடு சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி சேர்ந்து ஐக்கியமுன்னணி கட்டியது போன்ற ஐக்கிய முன்னணியை ஆளும் முதலாளித்துவ கட்சிகளின் ஒரு பிரிவினரோடு இங்கே கட்டுவது தற்கொலைக்கு ஒப்பானதே ஆகும். இத்தகைய ஐக்கிய முன்னணியை கட்ட வேண்டும் என்று சொல்பவர்கள் சுயநலவாதிகளே. இந்த முதலாளித்துவகட்சிகளுக்கு காவடி தூக்குபவர்களே. அவர்களது கொள்கையானது மக்கள் விரோத கொள்கையே ஆகும்.

பிரிட்டனில் சார்ட்டீஸ் தொழிலாளர் இயக்கம் ஆரம்பத்தில் வளர்ச்சிபெற்று மக்களின் செல்வாக்கோடு வளர்ந்த போதும் அதற்கென்று புரட்சிகரமான திட்டம் மற்றும் போர்த்தந்திரம் இல்லாததால் அதன் வளர்ச்சி குன்றியது என்று இங்கே லெனின் குறிப்பிடுகிறார். அதே போலவே இங்குள்ள கம்யூனிஸ்டுகளிடத்திலும் இத்தகைய புரட்சிகரமான கொள்கை இல்லாததாலேயே அவர்களின் வளர்ச்சி தடைபட்டு கம்யூனிஸ்டுகள் மக்களின் செல்வாக்கை இழந்து நிற்கின்றனர். தன்னிடத்திலுள்ள குறைகளை சரியாகப் புரிந்துகொண்டு அந்த தவறுகளைகளையாத எந்தவொரு தனிமனிதனும் அவர்களது வாழ்க்கையில் முன்னேற முடியாது. இது ஒரு கட்சிக்கும் பொருந்தும். ஆகவே கம்யூனிஸ்டுகள் தங்களது பலவீனத்துக்கு காரணமான தவறுகளை களைவதன் மூலமே அவர்களால் மக்களுக்காகப் பணியாற்ற முடியும். பாசிசத்தையும் வீழ்த்த முடியும். ஆகவே வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு நாம் வாழும் இன்றைய சூழலை பகுப்பாய்வு செய்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி நமது ஆசான்களது கண்ணோட்டத்திலிருந்து முடிவு செய்து செயல்பட வேண்டும். இதற்கு மாறாக நமது மார்க்சிய ஆசான்கள் சொல்லியவற்றை வறட்டுத்தனமாகப் பின்பற்றி கண் மூடித்தனமாக செயல்படக்கூடாது.

மார்க்சியமானது நமது நடைமுறைக்கான வழிகாட்டிதான், அது நாம் கண்மூடித்தன மாகப் பின்பற்றும் வறட்டுத்தத்துவம் அல்ல என்று நமது மார்க்சிய ஆசான்கள் பலமுறை நம்மை எச்சரித்துள்ளார்கள். அந்த எச்சரிக்கையை நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு இன்றைய சூழலை பகுப்பாய்வு செய்து முடிவெடுத்து செயல்படுவோம். நாம் நமது கருத்து வேறுபாடுகளை தோழமையுடன் விவாதித்து ஒரு ஒன்றுபட்ட கருத்தை வந்தடைந்து ஒன்றுபடுவோம்.

பாசிசத்தை எதிர்த்துப் போராடி மூலதனத்தின் ஆட்சிக்கு முடிவுகட்டி சோசலிச சமூகத்தை படைக்கும் நமது பயணத்தில் முன்னேறுவோம்…

……….. தொடரும்.... பாண்டியன்.

பிரெஞ்சுப் புரட்சி பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியவை. சிபி

ஐரோப்பிய முடியாட்சிகளை முதன் முதலில் அதிர வைத்த சிறப்பு பிரெஞ்சுப் புரட்சிக்கே உரியது

1789ல் ஏற்பட்ட பிரெஞ்சுப் புட்சி உலக வலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். மன்னர்களின் எதேச்சதிகாரா ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களால் உருவாக்கப்படும் ஆட்சிக்கு வழிவகுத்தது.  மக்களாட்சி சகாப்தத்தின் ஆரம்பம் தான் பிரெஞ்ச் புட்சி. முடியாட்சிக்கு முடிவுகட்டி குடியாட்சிக்கு வழிவகுத்தது.

நிலப்பிரபுக்கள்மன்னர்கள் ஆதிக்கம் செலுத்திய அன்றைய பிரான்சில் எழுந்த மாபெரும் புரட்சிஅந்தப்  புரட்சியின் போது அனைத்து மக்களும் சமம்” என்றும் சமத்துவ இலட்சியத்தை மக்கள் முழங்கினர் “சுதந்திரம்சமத்துவம்சகோதரத்துவம்” என்ற முழக்கங்களை முன்வைத்து ஆளுகிற கூட்டத்தை மக்கள் புரட்சிகரமான முறையில் வீழ்த்தினர்.

குடியாட்சிக்குரிய சட்டசபைகளையும், தேர்தல் முறைகளையும் இப் புரட்சி புகுத்தியது. ஆயினும் இப்புரட்சி சிறு உடைமையாளர்கள், நடுத்தர விவசாயிகள் மூலம சிறு பண்ட உற்பத்தியாளரின் ஆதிக்கத்துக்கும் வழிவகுத்தது. இவ் வர்க்கத்தவரின் ஆதரவுடனேயே பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் நெப்போலியன் போன்ற தளபதி ஒருவன சர்வதிகாரியாக பிரெஞ்சில் தோன்ற வாய்ப்பளித்தது.

1789இல் நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சி  அடிமைத்தனமும் மூடத்தனமும் அநீதிகளும் நிலவிய அன்றைய சமூகத்தில் சுதந்திரம்,சமத்துவம்சகோதரத்துவம்”  என்ற இலட்சிய முழக்கங்கள் மிகப் பெரிய முன்னேற்றமாக திகழ்ந்தன.

இன்று உலக நாடுகளில் ஜனநாயக உணர்வும் ஜனநாயக உரிமைகளுக்கான இயக்கங்களும் வளர்ந்துள்ளன. வாக்குரிமை, கருத்துரிமை உள்ளிட்ட உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியல் சட்ட அமைப்புகள், ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றன.

ஜனநாயக சட்டங்கள் அரசாங்கங்களை வழிநடத்தும் நெறிமுறைகளாக மாறியுள்ளன. ஜனநாயக மீறல்கள் பல நடக்கிற போது மக்களின் எதிர்ப்பு இயக்கங்களும் நடக்கின்றன. இதற்கெல்லாம் அடித்தளமிட்டவை பிரெஞ்சுப் புரட்சியாகும். பிரெஞ்சுப் புரட்சி முறியடிக்கப்பட்டு தோல்வியில் முடிந்தாலும்,மானுட வரலாற்றை சமத்துவஜனநாயக இலக்குகளை நோக்கிச் செல்வதற்கான உந்துதலை பிரெஞ்சுப் புரட்சி அளித்துள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், வரலாற்றின் இயக்கம் அத்துடன் முடிவடையவில்லை."பிரெஞ்சுப் புரட்சி எட்டாத இலக்குகளை அடைய வேண்டிய தேவை இப்போதும் நீடிக்கின்றது" என்றார் தோழர் லெனின்.

இந்த பிரெஞ்சுப் புரட்சி முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ சுதந்திரத்திற்கு அடித்தளமிட்டது”.நிலப்பிரப்புக்கள், மன்னர்களின்ஆட்சியை பிரெஞ்சுப் புரட்சி முடிவுக்குகொண்டு வந்தது. எனினும் முதலாளித்துவம் அதிகாரத்தில் அரங்கேறும் நிலை ஏற்பட்டது. பெரும் சொத்து படைத்த சிறு கூட்டம்பெரும்பான்மை உழைக்கும் மக்களை சுரண்டுகிற சமூக அமைப்பாக உலகில் நிறுவப்பட்டது. எனவே பிரெஞ்சுப் புரட்சியின் சமத்துவ இலக்குகளை எட்டுகிற மாற்றங்கள் மானுடத் தேவையாக நீடிக்கின்றன. இதற்கு மார்க்சியம் சரியான தத்துவமாக பயன்படுகிறது. பிரெஞ்சுப் புரட்சியின் போது, 1791 இல் குடிமக்களின் உரிமைப் பிரகடனம் என்ற பிரசித்தி பெற்ற ஜனநாயக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனை புரிந்துக் கொள்ள பல நேரங்களில் பலரின் மூலம் அறிந்த தகவல்களை பேசுவோமே.
"மன்னர் மாளிகைக்கு முன்னே இது என்ன கூட்டம், கூச்சல்" என்று 16 ம் லூயியின் பட்டத்து ராணி மேரி அன்ரனெட் மன்னனைப் பார்த்துக் கேட்கிறாள்.
"சாப்பாட்டிற்கு ரொட்டியில்லையென்று கத்துகிறார்கள்" என்று மன்னன் பதிலளிக்கிறான்.
"ரொட்டியில்லா விட்டால் கேக்கைச் சாப்பிடும் படி சொல்லு வதுதானே" என்று நாடாளும் மன்னனின் ராணி கூறுகிறாள்.
1789ல் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் போது இப்படியான வேடிக்கையும் வேதனையும் மிக்க பல கதைகள், பேச்சுகள் பிரெஞ்சில் பேசப்பட்டன; எழுதப்பட்டன. அவற்றில் சிறப்பானது இதுவே.
மன்னராட்சியில் மக்களின் துன்பத்தை அறியாது அரசர்கள் ஆண்டனர் என்பதைப் பிரதிபலிப்பதே இக் கூற்றாகும்.
15வது லூயி மன்னன் யுத்தத்திலும் தன் சுகபோகத்திலும் ஈடுபட்டு பிரெஞ்சு நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்தான். 1774ல் 18வது லூயி மன்னனும் அதன் வழி தொடர்ந்தான்.
ஏழை மக்கள் மீது வரிகள் சுமத்தப்பட்டன. அதிகாரிகள் ஊழலில் மிதந்தனர். நிலப்பிரபுக்கள் மேலும் நிலமும் செல்வமும் சேர்த்தனர்வரிகொடுக்க முடியாதவர், அரசனை எதிர்த்தவர் கொடுமையில் உலகப் புகழ் பெற்றதாகக் கூறப்பட்ட பாஸ்டைலில் சிறையில் தள்ளப்பட்டனர்.
பிரெஞ்சு நாட்டின் முன்னோடி எழுத்தாளர்களான வால்டேரும் ருஸ்ஸோவும் நாட்டில் நடைபெற்ற கொடுமைகளை எதிர்த்து எழுதினர். பேசினர்.
இருவரது முயற்சிகளும் புத்திஜீவிகளையும் அறிஞர்களையும் தட்டி எழுப்பியது. அனைவரும் மன்னராட்சியை எதிர்த்து குரலெழுப்பினர். கைத்தொழில் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த முதலாளிகள் தமது தொழிலாளர்களையும் அணிதிரட்டி நிலப்பிரபுத்துவ ஆட்சியை, மன்னனின் அதிகாரத்தை எதிர்த்தனர்.
1789 ஜீலை 14ம் நாள் மக்கள் அணிதிரண்டு கொடும் சிறையான பாஸ்டையிலைத் தாக்கினர். சிறையில் துன்புற்ற மக்களை விடுவித்தனர்நாடெங்கும் மக்கள் புரட்சி பரவியது. மக்கள் கொதித்தெழுந்து மன்னராட்சியை எதிர்த்தனர். தேசிய மக்கள் சபை புதிய அரசியலமைப்பை ஏற்படுத்த, கூடியதாயிற்று,நிலப்பிரபுக்களும் அரசனைச் சார்ந்த செல்வந்தர்களும் நாட்டை விட்டு இங்கிலாந்திற்கும் பிற அண்டைநாடுகளுக்கும் ஓடினர்.
1791 ஜீன் மாதத்தில் 16வது லூயி மன்னன் தன் ராணியுடன் நாட்டை விட்டு ஒடமுயன்றன். மக்கள் தப்பி ஓடாது தடுத்து விட்டனர்.
இப் புரட்சி அண்டைநாட்டு அரசராட்சிகளுக்கெல்லாம் அச்ச மூட்டியது.
மேரி அன்ரனெட்டின் சகோதரன் ஒஸ்ரியாவின் பேரரசனாக இருந்தான், தன் தங்கையின் ஆட்சியை மீண்டும் நிலைநாட்ட முயன்றான். மக்கள் அமைத்த குடியரசுக் கட்சி தேசிய இன உணர்வுடன் ஒஸ்ரியாவை எதிர்த்து வெற்றி கண்டது.
1793 ஜனவரியில் பிரெஞ்சுக் குடியரசு நிறுவப்பட்டது. லூயி மன்னன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டான். 1793 ஜனவரி 21ம் தேதி சிரச்சேதம் செய்யப்பட்டான் அதைத் தொடர்ந்து அவனைச் சார்ந்து நிலப் பிரபுக்களும் செல்வர்களுமாக நூற்றுக்கணக்கானேர் கொல்லப்பட்டனர்.
1793 அக்டோபர் 16ம் நாள் மேரி அன்ரெனெட்டும் சிரச்சேதம் செய்யப்பட்டாள்; 1795 வரை அமைதியற்ற அரசியல் சூழலில் பலர் உயிரிழந்தனர். அவ்வாண்டு அக்டோபரின் பின்னர் அமைதி ஏற்பட்டது. 1789 ஜீலையில் ஆரம்பித்த பிரெஞ்சுப் புரட்சி 1795 அக்டோபரில் முடியுற்றது என வரலாற்றாசிரியர் கூறுவர். இப்புரட்சி நிலப்பிரபுக்களை ஒழித்து சிறு உடைமையாளரான நடுத்தர விவசாயிகளை பிரெஞ்சு நாட்டில் பரவலாக்கியது. இத்தகைய விசித்திர மாற்றம் இங்கிலாந்திலோ பிற ஐரோப்பிய நாடுகளிலோ முதலாளித்துவப் புரட்சியின் போது ஏற்பட்டதில்லை.
இச் சிறு நிலவுடைமையாளரின் ஆதரவுடனேயே பின்னர் நெப்போலியன் பிரெஞ்சு நாட்டின் ஆட்சியை யுத்தத்தின் மூலம் விரிவாக்க முயன்றான்.
பிரெஞ்சுப் புரட்சி ஒரு வன்முறைப் புரட்சியாகும்.பிரெஞ்சுப் புரட்சியின் போதே ' சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம்' என்ற குரல்கள் எழுப்பப்பட்டன. ஆதே நாடு பின்னர் ஏகாதிபத்திய நாடாக, உலகெங்கும் காலனி நாடுகளை ஆக்கிரமித்து அடக்கி ஆண்டது வேடிக்கையே?

பிரெஞ்சுப் புரட்சி ஒடுக்கப்பட்ட போதிலும் வரலாற்றை நுணுகிப் பயிலும் ஒவ்வொருவரும் அதை வெற்றிகரமான புரட்சி என்று ஏற்றுக் கொள்வார்கள்இந்த பிரெஞ்சுப் புரட்சி முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ சுதந்திரத்திற்கு அடித்தளமிட்டது”.

நிலப்பிரப்புக்கள்மன்னர்களின்ஆட்சியை பிரெஞ்சுப் புரட்சி முடிவுக்குகொண்டு வந்ததுஎனினும் முதலாளித்துவம் அதிகாரத்தில் அரங்கேறும் நிலை ஏற்பட்டது. பெரும் சொத்து படைத்த சிறு கூட்டம், பெரும்பான்மை உழைக்கும் மக்களை சுரண்டுகிற சமூக அமைப்பாக உலகில் நிறுவப்பட்டது

பிரெஞ்சுப் புரட்சியின் சமத்துவ இலக்குகளை எட்டுகிற மாற்றங்கள் மானுடத் தேவையாக தொடங்கியது அவையே பெரும்பான்மையோரை உழைக்கும் பாட்டளிகளை ஒடுக்கவும் முதலாளிகளின் நலன்காக்கவும் முதலாளித்துவ தேவைக்காக மாறிவிட்டது. இவைதான் சமூக நியதி சமூக வளர்ச்சி  இதனை பற்றி மிகச்சரியாக மார்க்சிய தத்துவமாக பயன்படுகிறது. பிரெஞ்சுப் புரட்சியின் போது, 1791 இல் குடிமக்களின் உரிமைப் பிரகடனம் என்ற பிரசித்தி பெற்ற ஜனநாயக அறிவிப்பு வெளியிடப்பட்டது ஆனால் அடுத்த கட்ட சமூக நகர்வில் அவர்கள் கூறிய ஜனநாயக உரிமைகளை அதே முதலாளித்துவ அரசு வழங்க மறுக்கிறது.

ஆக இறுதியாக ஒரு நிலவுடைமை சமூகத்திலிருந்து முதலாளித்துவ கட்டத்தில் நுழையும் பொழுது மிக உயர்வாக மதிக்கப்பட்ட ஜனநாயகம் சகோரத்துவம் என்ற கோசங்கள் சுரண்டும் அரசுக்கு சாதகமாக மாறும் பொழுது பெரும்பான்மை மக்களை ஒடுக்க அவை பயன்ப்டுகிறது.

சமூக வளர்ச்சியில் நமது புரிதலை சரியாக்குவோம் தோழர்களே...

வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் 



இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்