தத்துவம் பயில்வோம் மார்க்சிய தத்துவம் பயில்வோம்-02

1. ஏன் தத்துவம் பயில வேண்டும்?

ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமோ, அதைப்போல ஒரு புரட்சிகரமான இயக்கத்திற்கும், சமூக மாற்றத்தை விரும்புபவர்களுக்கும் தத்துவார்த்த தெளிவு என்பது மிக முக்கியம்.

  • தத்துவமற்ற அரசியல் ஆபத்தானது: தத்துவார்த்த அடித்தளம் இல்லாத அரசியல் என்பது, திசைகாட்டி இல்லாத கப்பலைப் போன்றது. நாம் ஏற்கனவே பகுப்பாய்வு செய்தது போல, தவெக போன்ற பாப்புலிச கட்சிகளின் தோற்றமும், "CJP" (Cockroach Janata Party) போன்ற இணையவழி தன்னிச்சையான உணர்ச்சி வடிகால்களும் மாற்றுப் பொருளாதார தத்துவத்தைக் கொண்டிருக்காததால், அவை கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் பாதுகாப்பு அரண்களாகவே முடிகின்றன.
  • மக்களைப் பிளக்கும் சித்தாந்தங்களை முறியடிக்க: ஆளும் வர்க்கம் தங்களின் அதிகாரத்தைத் தக்கவைக்க மதம், சாதி, இனம் மற்றும் அதிர்ஷ்டக் கோட்பாடுகளை (Fate) தத்துவங்களாகப் பரப்புகிறது. "ஏழை ஏழையாகத்தான் பிறக்க வேண்டும், அது அவனது விதி" என்ற பிற்போக்குத் தத்துவங்களை உடைத்தெறிய, உழைக்கும் மக்களுக்கு ஒரு அறிவியல் பூர்வமான தத்துவம் தேவைப்படுகிறது.

...

பல்வேறு தத்துவ கண்ணோட்டம்

சமூகம் வர்க்கங்களாக பிரிக்கப்பட்டுள்ள பொழுது புராதனப் பொதுவுடமை சமூகங்கள் மறைந்து போனதிலிருந்து அதாவது தத்துவத்தின் வரலாற்றுக்கான ஒட்டுமொத்த வரலாற்றியல் காலகட்டத்தினூடாக சமூகம் எப்போதுமே வர்க்கங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. அவ்வாறானால் சமூகத்தில் நடப்பில் இருக்கும் பல்வேறு கண்ணோட்டங்கள் பல்வேறு வர்க்கங்களின் கண்ணோட்டங்களை வெளிப்படுத்துகின்றன. ஆகையால், தத்துவவியலாளர்களின் பல்வேறு ஒழுங்குமுறைகளும் ஒரு வர்க்கத்தின் கண்ணோட்டத்தையே எப்போதும் வெளிப்படுத்துகின்றன. உண்மையில் அவையெல்லாம் ஒரு வர்க்கத்தினுடைய கண்ணோட்டம் திட்டவட்டமாக சீரமைக்கப்பட்டு கோட்பாடுகளாக உருவாக்கம் செய்யப்பட்டவை தானேயல்லாமல், வேறல்ல. அல்லது நீங்கள் விரும்பினால் திட்டவட்டமான வர்க்கங்களின் கோட்பாடுகள்.

தத்துவம் என்பது வர்க்கத்தின் தத்துவமாக இருக்கிறது, எப்போதுமே இருந்து வருகிறது. அது அவ்வாறு அல்ல என்று தத்துவவியலாளர்கள் பாசாங்கு செய்யக்கூடும். ஆனால் அது உண்மையை மாற்றி விட இயலாது.

ஏனென்றால் சமூகத்தில் இருந்து விலகி நின்று மக்கள் எவ்வாறு வாழ முடியாதோ, தனிமையில் செயல்பட முடியாதோ அதேபோல சிந்திக்கவும் முடியாது. ஆகையால் சமூகத்தில் ஊடுருவி இருக்கும் வர்க்க நலன்கள் வர்க்கப் போராட்டங்கள் ஆகியவற்றிலிருந்தும் விலகி இருக்க முடியாது. தத்துவம் என்பது ஓர் உலக கண்ணோட்டம். உலகத்தையும் உலகத்தில் மனித இனத்தின், மனிதனின் இடத்தைப் புரிந்து கொள்வதற்கான ஒரு முயற்சி. அத்தகைய ஒரு கண்ணோட்டம் ஒரு வர்க்கத்தின் கண்ணோட்டமாக அல்லாமல் வேறு எதுவாகவும் இருக்க முடியாது. தத்துவவியலாளர்கள் ஒரு வர்க்கத்தின் சிந்திக்கும் பிரதிநிதிகளாக செயல்படுகிறார்கள். அது வேறு விதமாக எவ்வாறு இருக்க முடியும் ?. தத்துவவியலாளர்கள் வேறு ஏதாவது ஒரு கோளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ இருந்து வரும் தர்க்க உறவுகள் வர்க்க உறவுகள் மற்றும் வர்க்க போராட்டங்களில் சம்பந்தப்பட்ட மக்களால் பூமியின் மீது இங்கே உருவாக்கப்படுகிறார்கள். ஆகவே தத்துவவியலாளர்கள் தம்மைப் பற்றி என்னதான் கூறிக் கொண்டாலும் ஒரு வர்க்கக் கண்ணோட்டம் உள்ளடங்கியிராத தத்துவம் என்று எதுவும் இல்லை. அல்லது வர்க்கப் போராட்டங்களைப் பொருத்தவரையிலும் ஒரு சார்பு நிலைக்கு எதிரான நடுநிலையான தத்துவம் என்பது எதுவும் கிடையாது. நாம் எவ்வளவுதான் தேடினாலும் ஒரு நடுநிலையான ஒரு சார்பற்ற வர்க்கம் அல்லாத தத்துவம் எதையும் நம்மால் கண்டுபிடிக்க முடியாது.

  • இதை மனதில் கொண்ட பின்னர் கடந்த கால தத்துவங்கள் அனைத்தும் இந்த வழியிலோ அல்லது மற்ற வழியிலோ "கற்றறிந்த" வர்க்கங்களின் அதாவது சுரண்டும் வர்க்கங்களில் கண்ணோட்டத்தையே வெளிப்படுத்தி வந்தன. பொதுவாக சமூகத்தின் "தலைவர்கள்" தான் திட்டவட்டமாகக் கட்டமைக்கப்பட்ட தத்துவங்களின் வடிவில் தம் கருத்துக்களைப் பரப்புகின்றவர்களாக இருக்கிறார்கள். முதலாளித்துவத்தின் தனித்துவமான உற்பத்திப் பொருளான நவீனபாட்டாளி வர்க்கம் தோன்றுகின்ற வரையிலும் இந்தத் தலைவர்கள்தான் எப்போதுமே சுரண்டும் வர்க்கங்களாக இருந்து வந்தார்கள். சமூகத்தின் மீது அவர்கள் மேலாதிக்கம் செலுத்தி வந்தது போலவே தத்துவத்தின் மீதும் அவர்களுடைய கண்ணோட்டம் ஆதிக்கம் செலுத்தி வந்தது. (மாரிஸ் கான்போர்த் - இயக்கவியல் பொருள்முதல்வாதம், பக்கம் 14, 15, 16). ஆக நமக்கான விரிவான தேடலுக்கு செல்வோம் தோழர்களே.

    தத்துவம் என்பது மனித சிந்தனை, உலகப் புரிதல் மற்றும் அறிவின் தேடல் பற்றிய ஆழமான ஆய்வு.

    பகுதி 1 — தத்துவத்தின் அடிப்படை

    அத்தியாயம் 1 — தத்துவம் என்றால் என்ன?

    • தத்துவத்தின் வரையறை
    • மனித சிந்தனையின் தோற்றம்
    • தத்துவமும் அறிவியலும்
    • தத்துவமும் மதமும்
    • தத்துவத்தின் சமூக பங்கு

    அத்தியாயம் 2 — மனித அறிவின் வளர்ச்சி

    • ஆரம்ப மனித சமூகம்
    • இயற்கை பயமும் கடவுள் கருத்தும்
    • உழைப்பும் சிந்தனையும்
    • மொழியின் உருவாக்கம்
    • சிந்தனை மற்றும் சமூக உறவுகள்

    பகுதி 2 — தத்துவத்தின் இரண்டு அடிப்படைப் போக்குகள்

    அத்தியாயம் 3 — கருத்துமுதல்வாதம் (Idealism)

    கருத்துமுதல்வாதத்தின் அடிப்படை:

    • சிந்தனையே முதன்மை
    • உலகம் மனதின் வெளிப்பாடு
    • கடவுள் மைய விளக்கங்கள்

    முக்கிய கருத்துமுதல்வாதிகள்:

    • Plato,George Berkeley, Georg Wilhelm Friedrich Hegel
    • விமர்சனம்: பொருள் உலகை மறுப்பு
    • அறிவியலுக்கு முரண்பாடு
    • சமூக உண்மைகளை மறைத்தல்

    அத்தியாயம் 4 — பொருள்முதல்வாதம் (Materialism)

    பொருள்முதல்வாதத்தின் அடிப்படை:

    • இயற்கை முதன்மை
    • சிந்தனை பொருளின் விளைவு
    • மனித மூளை = சிந்தனையின் கருவி

    பழங்கால பொருள்முதல்வாதிகள்:

    • Democritus, Epicurus
    • நவீன பொருள்முதல்வாதம்:-அறிவியல் வளர்ச்சி
    • தொழில்துறை புரட்சி
    • மார்க்சியமே மாற்றதிற்கானவை பகுதி 3 — இயக்கவியல் (Dialectics)

      அத்தியாயம் 5 — இயக்கவியல் என்றால் என்ன?

      • இயக்கவியல்:
      • உலகம் நிலையானது அல்ல; தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.
      • இயக்கவியலின் அடிப்படை:
      • அனைத்தும் இயக்கத்தில் உள்ளன
      • அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை
      • முரண்பாடுகள் வளர்ச்சியை உருவாக்குகின்றன

      அத்தியாயம் 6 — இயக்கவியலின் மூன்று முக்கிய விதிகள்

      1. முரண்பாடுகளின் ஒற்றுமையும் போராட்டமும்

      • ஒவ்வொரு பொருளிலும் முரண்பாடுகள் உள்ளன.
      • உதாரணம்:
      • முதலாளி ↔ தொழிலாளர்
      • பழைய சமூகம் ↔ புதிய சமூகம்
      • இந்த முரண்பாடுகளின் போராட்டமே மாற்றத்தை உருவாக்குகிறது.

      2. அளவு மாற்றம் → குண மாற்றம்

      • 100°C வரை வெப்பம் அதிகரிக்கும்போது நீர் திடீரென நீராவியாக மாறுகிறது.
      • அதாவது: சிறிய அளவு மாற்றங்கள் ஒரு கட்டத்தில் குண மாற்றத்தை உருவாக்குகின்றன
      • சமூகத்திலும் இதே நடைமுறை: சிறிய போராட்டங்கள்-பெரிய புரட்சியாக மாறுகின்றன

      3. நிலைமறுப்பின் நிலைமறுப்பு

      • ஒரு பழைய அமைப்பு புதிய அமைப்பால் மறுக்கப்படுகிறது.

      உதாரணம்:

      • நிலப்பிரபுத்துவம் → முதலாளித்துவம்
      • முதலாளித்துவம் → சோசலிசம்

      பகுதி 4 — மார்க்சிய தத்துவம்

      அத்தியாயம் 7 — மார்க்சிய தத்துவத்தின் தோற்றம்

      • மூன்று ஆதாரங்கள்:
      • ஜெர்மன் தத்துவம்
      • ஆங்கில அரசியல் பொருளாதாரம்
      • பிரெஞ்சு சோசலிசம்
      • காரல் மார்க்சின் புரட்சிகர பங்களிப்பு:
      • இயக்கவியல் + பொருள்முதல்வாதம்

      சமூக அறிவியலை விஞ்ஞானமாக மாற்றினார்.

      அத்தியாயம் 8 — இயக்கவியல் பொருள்முதல்வாதம்

      அடிப்படை கருத்து:- உலகம் பொருளால் ஆனது; அதன் இயக்க விதிகளை இயக்கவியல் விளக்குகிறது.

      முக்கிய அம்சங்கள்:

      • இயற்கை தொடர்ந்து மாறுகிறது
      • சிந்தனை பொருளின் பிரதிபலிப்பு
      • உண்மை மனித அனுபவத்தில் சோதிக்கப்படுகிறது பகுதி 5 — வரலாற்றுப் பொருள்முதல்வாதம்

        அத்தியாயம் 9 — வரலாறு எப்படி நகர்கிறது?

        வரலாற்றின் இயக்க சக்தி:

        • மனிதர்களின் சிந்தனை அல்ல
        • உற்பத்தி முறை

        சமூக வளர்ச்சி நிலைகள்:

        • முதன்மை பொதுவுடமை
        • அடிமை சமூகம்
        • நிலப்பிரபுத்துவம்
        • முதலாளித்துவம்
        • சோசலிசம்

        அத்தியாயம் 10 — வர்க்கப் போராட்டம்

        Karl Marx கூறியது:

        “இதுவரை உள்ள அனைத்து சமூகங்களின் வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே.”

        உதாரணங்கள்:

        • அடிமை ↔ அடிமை உரிமையாளர்
        • விவசாயி ↔ நிலப்பிரபு
        • தொழிலாளர் ↔ முதலாளி

        பகுதி 6 — Anti-Dühring

        அத்தியாயம் 11 — டூரிங்க் மறுப்பு: அறிமுகம்

        Eugen Dühring முன்வைத்த கருத்துக்களை Friedrich Engels விமர்சித்த நூல்.

        அத்தியாயம் 12 — டூரிங்கின் கருத்துக்களுக்கு எதிரான விமர்சனம்

        1. இயற்கை பற்றிய தவறான பார்வை

        டூரிங் இயற்கையை நிலையானதாகப் பார்த்தார்.

        எங்கல்ஸ்:

        • இயற்கை எப்போதும் இயக்கத்தில் உள்ளது
        • மாற்றம் இயற்கையின் அடிப்படை

        2. சமூகம் பற்றிய இயந்திர விளக்கம்

        • டூரிங்: மனித சிந்தனையே சமூக மாற்றத்தை உருவாக்கும்
        • எங்கல்ஸ்: பொருளாதார உறவுகளே சமூக மாற்றத்தின் அடிப்படை

        3. இயக்கவியலுக்கு எதிர்ப்பு

        • டூரிங்: முரண்பாடுகளை மறுத்தார்
        • எங்கல்ஸ்: முரண்பாடுகளே வளர்ச்சியின் சக்தி

        பகுதி 7 — அனுபவவாதம் மற்றும் அதன் விமர்சனம்

        அத்தியாயம் 13 — அனுபவவாதம் என்றால் என்ன?

        அனுபவவாதத்தின் அடிப்படை:- அறிவு முழுவதும் புலனுணர்விலிருந்து வருகிறது.

        • முக்கிய சிந்தனையாளர்கள்:-
        • John Locke
        • David Hume
        • Ernst Mach

அத்தியாயம் 14 — அனுபவவாதத்தின் வரம்புகள்

பிரச்சினைகள்:

  • பொருள் உலகின் சுய இருப்பை சந்தேகிக்கிறது
  • உண்மையை மன அனுபவமாக மட்டுப்படுத்துகிறது
  • அறிவியலை சார்பியல் நோக்கில் தள்ளுகிறது

பகுதி 8 — Materialism and Empirio-criticism

அத்தியாயம் 15 — லெனினின் தத்துவப் போராட்டம்

Vladimir Lenin அனுபவவாதத்திற்கு எதிராக எழுதிய முக்கிய நூல்.

லெனின் வலியுறுத்தியது:

  • பொருள் உலகம் மனித சிந்தனைக்கு வெளியே உள்ளது
  • சிந்தனை என்பது வெளி உலகின் பிரதிபலிப்பு
  • அறிவியல் உண்மையை அணுக முடியும்

அத்தியாயம் 16 — Machism மீது லெனினின் விமர்சனம்

  • Machism: உலகம் “உணர்வுகளின் தொகுப்பு”
  • லெனின்: இது மறைமுக கருத்துமுதல்வாதம்
  • அறிவியலுக்கு எதிரானது
  • பொருள்முதல்வாதத்தை தளர்த்தும்

பகுதி 9 — அறிவியல், சமூகம், புரட்சி

அத்தியாயம் 17 — அறிவியல் மற்றும் மார்க்சியம்

  • டார்வின் பரிணாம வளர்ச்சி
  • இயற்பியல் மாற்றங்கள்
  • சமூக அறிவியல்

மார்க்சியம் அறிவியலை சமூக மாற்றத்துடன் இணைக்கிறது.

அத்தியாயம் 18 — புரட்சியும் தத்துவமும்

புரட்சி ஏன்?

  • முரண்பாடுகள் தீவிரமடைகின்றன
  • பழைய அமைப்பு தடையாகிறது

தத்துவத்தின் பங்கு:

  • வர்க்க உணர்வை உருவாக்குதல்
  • சமூகத்தை அறிவியல் ரீதியாக புரிந்துகொள்ளுதல்

இறுதி பகுதி

அத்தியாயம் 19 — நவீன உலகில் மார்க்சிய தத்துவம்

  • இன்றைய சூழல்:
  • பெருநிறுவன ஆதிக்கம்
  • செயற்கை நுண்ணறிவு
  • வேலை இழப்பு
  • தனியார்மயமாக்கல்
  • சுற்றுச்சூழல் அழிவு

இவ்வளவு பிரிவுகளையும் உள்ளக்கங்களையும் கொண்டுள்ள தத்துவ வளர்ச்சி அதற்கான கண்ணோட்டங்களை கீழ் இவற்றை விளக்க முயலுவோம். நமக்கான நேரத்தில் கற்றல் நன்று..

முக்கியத் தலைப்பு 2

விவரங்களை இங்கே இடவும்.


தொடர்புடைய கட்டுரைகள்:

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்