தத்துவமும் நடைமுறையும் என்ற இடத்தில் தத்துவத்தை நடைமுறையோடு உரசி பார்க்க வேண்டும் என்பதே நமது மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதல்.
இங்கே தத்துவம் இல்லாத எந்த நடைமுறையும் இல்லை அப்படியெனும் பொழுது பல போக்கில் ஏன் உள்ளனர் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
அப்படியெனும் பொழுது இங்கு நடைமுறையில் உள்ள தத்துவங்களும் இங்குள்ள கருத்துகளும் ஆளும் வர்க்கத்து தத்துவங்களே அது மக்களுக்கான விடுதலைக்கானவை அல்ல.
மேலும் இவை இங்குள்ள அமைப்பு முறையை கட்டி காப்பதற்கான வழிமுறையை போதிப்பதோடு சுரண்டப்படும் மக்களை ஒடுக்கவும் அடக்கவும் சில நேரங்களில் சில சலுகைகள் மூலம் மக்கள் கொந்தளிப்பை மட்டுபடுத்தவும் செய்யும் சீர்திருத்தம் சில சட்டங்கள் என்ற பெயரில் காட்டும் கரிசனம்தான்.
இவை மக்களுக்கு விடுதலை தவிர மற்ற எல்லா ஆன்மீகவாதிகளை போல போதனை தருகிறது இந்த அனைத்து முறைகளையும் அடங்கி ஒடுங்கி அவர்கள் கொடுக்கும் சன்மானம் பெற்றுக் கொண்டு வளமாக வாழ போதிக்கிறது. இதனைதான் நமது தோழர்கள் மேன்மையானது என்கின்றனர் அவைதான் அவர்களின் நடைமுறையாகவும் உள்ளது.
இந்த இடத்தில் மார்க்சியம் இந்த எல்லா ஒடுக்குமுறை சுரண்டல்முறைக்கு காரணமான சமூகத்தை சமூகத்தை மாற்றி அமைக்க சொல்கிறது அதற்கு தேவை புரட்சி அப்படியெனும் பொழுது புரட்சிக்கான திட்டமும் அதை நடைமுறைப்படுத்த கட்சியும் வேண்டும்.
அப்படியென்றால் இங்கு கட்சி இல்லையா என்பீர்?
இருக்கிறது அதன் செயல்பாடுகள் மார்க்சிய வகைபட்ட புரட்சியை நோக்கியதாக செயலில் உள்ளதா என்பதுதான் கேள்வியாக உள்ளது. பின்னர் விவாதிப்போம் தற்போது அந்த விவாதம் வேண்டாம்.
தத்துவம் நடைமுறை என்ற இடத்தில் இங்கு பலரும் நாங்கள் நடைமுறையில் உள்ளோம் என்கின்றனர்.
ஆனால் அவர்கள் எந்த தத்துவத்தின் அடிப்படையில் நடைமுறையில் உள்ளார்கள் அப்படி என்னும் பொழுது இதற்கான மூலத்தை அறிய வேண்டும் அல்லவா?
மார்க்சியத்திற்கு முந்தைய தத்துவங்கள் எல்லாம் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை பேசியது மார்க்சியம் மட்டும்தான் பிரச்சனைக்கான காரணத்தையும் பிரச்சனையை தீர்ப்பதற்கான வழிவகை கூறியது எல்லா தத்துவங்களும் உள்ள அமைப்பு முறையை அதை தக்கவைத்துக் கொள்ள விரும்பியது மார்க்சியம் இந்த அமைப்பு முறைதான் இந்த பிரச்சினைகளுக்கான காரணம் இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்றனர். அதற்கான வழிவகையை கூறினர் அதன் அடிவொற்றி ரசிய சீன புரட்சி நடந்தது உலக நாடுகளில் பல நாடுகளில் புரட்சி நடந்தேறியது இன்று அவை நமக்கான படிப்பினைகள்தான்...
அதனை பற்றி பார்க்கும் முன் நமது நாட்டில் நடந்த சில போராட்டங்கள் எப்படி சமூக மாற்றதிற்கான அடிதளத்தை இட்டது, இருந்தும் வெற்றி பெறாமைக்குள்ள காரணிகளை பேச வரவில்லை அவர்களின் பணி, பாணி மக்கள் மத்தியில் செயலாற்றியது மக்களை ஒன்றினைய செய்தது அல்லவா? அவை பற்றி சிறிது பார்ப்போம்.
தமிழகத்தில் தோன்றிய தஞ்சை விவசாயிகள் போராட்டமாகட்டும் அதற்கு பிறகான தெலுங்கான போராட்டமாகட்டும் ஏன் நக்சல்பாரி போராட்டம் இப்படி சில போராட்டங்களை கணக்கில் எடுத்துக் கொள்வோம்.
தஞ்சையில் நடந்த போராட்டமானது உழைக்கும் எல்லா குறிப்பாக கூலி விவசாயிகளை உள்ளடக்கி அன்றைய போராட்டமாக இருந்தது. அந்த உழைக்கும் மக்களின் கொடுமைக்கு காரணமானவர்களை அடையாளப் படுத்தியதோடு எதிரிக்கு எதிராக களம் கண்டது. அந்தப் போராட்டம் உழைக்கும் ஏழை எளிய மக்களை அவை ஒருங்கிணைக்க வழிவகை செய்தது மக்கள் அணி திரண்டார்கள்... அதன் வழிவந்த கட்சியானது அந்தப் போராட்ட வடிவத்தை கைவிட்டதன் அதன் பின் நடந்தேறியவை அறிந்ததே.
இன்று அந்தப் போராட்டத்தை சாதிய போராட்டமாக சித்தரிக்கப்படும் அளவு இங்குள்ளோர் சீர் கெட்டுவிட்டனர். இவற்றுக்கான வரலாறு பிறகு பார்ப்போம்.
அடுத்து தெலுங்கானா போராட்டம் அன்று கொடுங்கோன்மைக்கு எதிராக நிலமற்ற கூலி விவசாயிகள் பண்ணை அடிமைத்தனமும் பண்ணையார் களுக்கு எதிராக ஒன்று திரண்டு அந்தக் கட்டுதளைகளை உடைத்து விடுதலைக்கான பாதையை அமைத்து நடை போட தொடங்கினார்கள்.
அன்றைய வரலாறு நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். அன்று நிலைமற்ற கூலி விவசாயிகளுக்கு நிலம் பகிர்ந்து அளிக்கப்பட்டது, 1952 க்கு பின்னான வரலாறு தேவையில்லை... அதனை இன்றைய சில NGOகள் குறிப்பிடுகின்றனர் "சாதி போராட்டமாக சுருக்குகிறார்கள்" என்னே சொல்ல?
அடுத்து நக்சல்பாரி போராட்டத்தை எடுத்துக் கொள்வோம்.
அன்றைய நில உடமை சமூகத்தில் பண்ணையார்களின் மேலாதிக்கம் கூலி விவசாயிகளுக்கு எதிரான கொடூரங்களை எதிர்த்து பண்ணையார்களை அழிக்க ஒழிக்க தொடங்கி அவர்கள் போராட்டமானது மக்கள் மத்தியில் வீறு கொண்டு எழுந்தது அவை மக்களை ஒன்றினைக்க செய்தது. இருந்தும் அது குறிப்பிட்ட கட்டத்தில் செயலற்று போனது அதன் பின்புலத்தை மற்றதையும் பிறகு பார்ப்போம்.... அவர்களின் நோக்கமும் செயலும் சமூக மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது அதில் பல விமர்சனங்கள் இருந்தாலும் இன்று அதனை தனதாக்கிக் கொள்ள விரும்பும் பலரும் அவர்களை அன்று தாக்கியவர்கள் எதிர்த்து வந்தவர்கள் இன்று அவர்களின் வாரிசுகள் எங்கின்றனர் காலக் கொடுமை...
அப்படியெனும் பொழுது நடைமுறையில் ஏற்பட்ட சாதக பாதங்களை கணக்கில் கொள்வோம். அதே நேரத்தில் இந்த சமூகத்திலே விடுதலை காண நினைப்போர் விடுதலையை மறுத்து அடிமையாக வாழ சொல்லும் ஆளும் ஒடுக்கும் வர்க்க தத்துவத்தை ஆதரிப்போரே.
சமூக மாற்றமும் மக்களுக்கான விடுதலையா? அல்லது சீர்திருத்தம் என்றால் உள்ள அமைப்புமுறைகுள்ள சில சலுகைகள் பெற்று அடிமையாக வாழ்வதா?
இங்கேதான் நமது தத்துவத்தையும் நடைமுறையும் உரசி பார்க்க வேண்டிய இடம்...
நாம் வாழும் இந்த சமூகத்தில் எப்படியாவது சொத்து சேர்த்து நாமும் சுகபோகமாக வாழ்ந்து விடலாம் என்று எல்லோரும் ஓடிக் கொண்டுதான் உள்ளார்கள் அதுதான் இந்த சமூகத்தின் தத்துவமாக உள்ளது. ஆனால் எல்லோரும் முன்னேறி விடுகிறார்களா? ஏன் இல்லை? என்பதை நீங்களே தேடிக் கொள்ளுங்கள்!
ஆக பெரும்பான்மையான மக்களை ஏமாற்றி சிறுபான்மையான சொத்து சேர்பதற்கு உழைக்கும் மக்களை ஏய்பதற்காக உருவானது தான் இந்த தத்துவம் நாம் வாழும் சமூகத்தின் ஆளும் சுரண்டும் வர்க்கத்தின் தத்துவம்.
ஏதோ ஒரு வகையில் இதற்குள்ளே சுழன்று சுழன்று அடிமையாக வாழ வைப்பது தான் இந்த தத்துவத்தின் மகிமை.
இதைப் புரிந்து கொள்ளாமலே பெரும்பானமையிலான உழைக்கும் ஏழை எளிய மக்களும் ஓடிக்கொண்டுதான் உள்ளார்கள் எப்படியாது இதில் வாழ வேண்டும் என்று. ஆனால் அவர்களை ஒட்ட சுரண்டுவதுதான் இந்த தனிஉடமை சமூகத்தின் தத்துவம் என்பதனை அறியாமலே இதற்குள்ளே ஓடியோடி தேய்ந்து ஓய்ந்துப்போவதைதான் காண்பீர் இவையை நாமும் புரிய வைப்பதில் தூரமாகவே உள்ளோம். ஏனென்றால் நாம் கை கொள்ள வேண்டிய தத்துவம் மார்க்சிய தத்துவம், அவை தனி உடமையற்ற பொதுவுடமை நோக்கியதாக உள்ளது. அப்படி என்னும் போது இந்த சிறு உடைமை வர்க்கம் அதை விட்டு ஓடி வந்து விடுமா அவர்களை எப்படி நீங்கள் கரை சேர்க்கப் போகிறீர்கள்? அவர்கள் பின் ஓடப்போகிறீர்களா அல்லது அவர்களின் இந்த கொடூரமான சுரண்டல்முறைக்கான காரணத்தை விளக்கி இந்த அவலங்களுக்கு முற்று புள்ளி வைக்க போகிறீர்களா?
அதில் தான் அடங்கி உள்ளது உங்களது செயலும் பணியும் அதுதான் தத்துவம் நடைமுறையும் என்கிறேன்.அதனைதான் மார்க்சிய இயங்கியல் போதிக்கிறது.
தொடர்ந்து விவாதத்தின் நோக்கம் இங்கு சிலர் கூறுவது போல் நாங்கள் நடைமுறையில் உள்ளோம் என்பவர்கள் எந்த வகையான தத்துவத்தில் நடைமுறையில் உள்ளார்கள் என்பதை கேள்வி?
சாதாரண மக்கள் கூட பேசுகிறார்கள் "ஜான் ஏறினால் முலம் சறுக்குகிறோம்" என்பர். அவர்கள் வாழ நினைக்கும் வாழ்க்கையை பற்றி சலித்துக் கொள்கிறார்கள். உண்மையிலே அவர்களுடைய நோக்கம் தனி சொத்து உடைமையை பாதுகாக்க தன்னுடைய போராட்டம் தானே சொத்து சேர்க்க போராடும் முறை தானே அப்படி என்னும் பொழுது அவர்களுடைய நோக்கமானது இந்த தனி உடைமை சமூகத்தில் தானும் ஒரு இடம் தேடுவது தானே சமூகத்தில் உள்ள இந்த போக்கானது எல்லார் மத்தியிலும் ஏதோ ஒரு வகையில் பீடித்து உள்ளதுதானே?
சொத்துக்காக சேர்க்க தனியுடமை தத்துவம் கூறுவது போலவே தனது அமைப்பும் தனது கட்சி மட்டுமே உண்மையான தத்துவ தளத்தில் உள்ளதாக கூறுபவர்களும் செயல்படுகிறார்கள் ஆக மார்க்சிய தத்துவமானது தனி உடைமையின் விவரங்களை அம்பலப்படுத்துவதோடு அந்த தனி உடமையை உடைத்தெறிந்து பொதுவுடமையை நோக்கிய நமது பயணத்துக்கான வழிகாட்டி நிற்கிறது. ஆனால் நமது மார்க்சிய தத்துவப்புரிதலில் உள்ள கோளாறு தான் நமது செயல்பாடுகளை சீரழிக்கிறது என்பேன்.
ஒட்டுமொத்த சமூகமும் சுரண்டப்பட்டும் சூறையாடப்பட்டும் ஒடுக்கப்பட்டும் அடக்கப்பட்டும் கிடக்கும் பொழுது இதற்குள்ளே சிலரின் அல்லது சில முழக்கங்களின் அடிப்படையில் செயல்படுவது எவ்வகையான சமூக மாற்றத்திற்கு பயன்படும்.
ஆகவே மார்க்சிய தத்துவம் ஒட்டுமொத்த சமூகத்தில் உள்ள சீர்கேடுகளை அம்பலப்படுத்தி அதற்கு விடுதலைக்கான பாத்திரத்தை புரட்சிகர கட்சிக்கு வழங்குகிறது.
அந்த புரட்சிகர கட்சி ஆனது தனது செயல்பாட்டை மார்க்சியத்தின் துணை கொண்டு செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
அப்பொழுதுதான் மார்க்சிய தத்துவமானது நடைமுறையில் செயல்பட முடியும் ஆகவே தத்துவம் நடைமுறை என்பது மார்க்சிய தத்துவத்தை தான் கூறுகின்றோம்,
மார்க்சியமல்லாத பல்வேறு தத்துவங்களை பிடித்துக் கொண்டு அவை நடைமுறை ஆக்குவதால் உண்மையாலுமே சுரண்டப்பட்டும் அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருக்கும் மக்களுக்கு எவ்வித விடுதலைகளையும் தராது
மார்க்சியத்தின் உயிராதரமான தத்துவத்தை புரிந்து கொள்வதில் லெனில் மிகத் தெளிவாக செயல்பட்டார். மார்க்சியத்தை நிலை நாட்டுவதில்ஒரு புரட்சிகர கட்சியின் அவசியத்தையும்அந்தப் புரட்சிகர கட்சியின் செயலையும்அதே நேரத்தில் புரட்சிக்கு விரோதமானநிலையில் உள்ளவற்றையும் உள்ளவர்களையும் அம்பலப்படுத்தினார்.
அதே நேரத்தில் பறந்து கிடந்த தன் நாட்டில் பல்வேறு வகையான வர்க்கங்களை வர்க்க சக்திகளை இனம் கண்டு புரட்சிக்கானவர்களை ஒருங்கிணைத்தார் புரட்சிக்கு எதிரானவர்களை அம்பலப்படுத்தினார்.
அவ்வகையில் மக்கள் மத்தியில் தனது கட்சி ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய அவசியத்தை பறைசாற்றினார். அந்த நடைமுறையை தான் புரட்சி சாதித்தது. இதேபோன்று பின் தங்கிய நாடான சீனத்தில் தனது நாட்டின் நிலைமை கேட்ப ஒன்றுபட்ட கட்சியின் அவசியமும் பகுதி வாரியான செயல்பாடுகளையும் ஒரு கட்சி செய்ய வேண்டிய பணியையும் மிகத் தீவிரமாக மாவோ ஆராய்ந்தார் அதன் அடிப்படையில் ரஷ்ய புரட்சியில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் தனது நாட்டில் புரட்சியை நடத்துவதற்கான மார்க்சியத்தை உள்வாங்கி அந்த தத்துவத்தை நடைமுறை ஆக்கும் பணியை கட்சிக்கு விதித்தார். அவை தான் அந்த சீனாவில் இருந்த பிற்போக்குத்தனங்களை உடைத்தெறிந்து ஒரு புரட்சிகர சமூகத்தை படைத்தது. அதில் தான் மார்க்சிய தத்துவமும் நடைமுறையும் அடங்கி உள்ளது.
இங்குள்ள சிலர் சொல்லுவது போல் நடைமுறை எந்த தத்துவத்தின் அடிப்படையில் என்பதை தெளிவுபடுத்தாமல் ஏதோ ஒரு வகையில் ஓடிக்கொண்டு உள்ளார்கள் அவை தான் நடைமுறை என்று!.
உண்மையாலுமே நடைமுறை என்பது மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை ஆகவே தத்துவம் நடைமுறை என்பது ஒரு சமூக மாற்றத்திற்கான தத்துவமான மார்க்சிய வகைபட்டவையும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான பணியும் தான் என்பதை புரிந்து கொண்டு மேலும் தொடர்வோம்....
சமுகமாற்றத்தில், புரட்சியில் நம்பிக்கை கொண்டவர்கள் தத்துவத்தை கைவிடக்கூடாது என்ற பாடத்தை வரலாற்று அனுபவம் எடுத்துரைக்கிறது. தொழிலாளி மற்றும் உழைக்கும் வர்க்கங்களிடம் வர்க்க தத்துவப் பிரச்சாரத்தை செய்வதும்,முதலாளித்துவ தத்துவநிலைகள்,மதப்பழமைவாதங்களின் குரலாக ஒலிக்கிற உலகப் பார்வைகள் போன்றவற்றிற்கு எதிராக தத்துவப் போராட்டம் மேற்கொள்வதும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அவசியமனது என்று லெனினிய அறிவுரை.