இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு பகுதி – 2.

இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு பகுதி – 2.

போல்ஷ்விக்குகளுடைய வெற்றிக்கு இன்றியமையாத ஒரு நிபந்தனை எங்களுடையகட்சியினல் மிகவும் கடுமையான, மெய்யாகவே உருக்கு உறுதி வாய்ந்த கட்டுப்பாடுஇல்லாமல், அல்லது தொழிலாளி வர்க்கத்தின் பெருந்திரளா னோர் அனைவரின் --அதாவது அதைச் சேர்ந்த சிந்தனையுடைய,நேர்மையானதன்னலங்கருதாததியாக உணர்வு கொண்ட,செல்வாக்கு படைத்த பகுதியோர் யாவரின்,பிற்பட்ட பகுதிகளுக்கு தலைமை தாங்கவோ,அவற்றைத் தம்முடன் அழைத்துச் செல்லவோ வல்லமை பெற்ற பகுதியோர் யாவரின்முழுநிறைவான தங்குதடையற்ற ஆதரவு இல்லாமல், போல்ஷ்விக்குகளால் இரண்டரை ஆண்டுகள் வேண்டாம், இரண்டரை மாதங்களுக்குக் கூட அதிகாரத்தில் நீடித்திருக்க முடியாது என்பது தற்போது அனேகமாய் எல்லோராலும் உணரப்படு கிறது என்று நினைக்கிறேன்.

பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பது புதிய வர்க்கம் தன்னைக் காட்டிலும் அதிக சக்திவாய்ந்த பகைவனான முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து நடத்தும் மிகமிக வைராக்கியமான, ஈவிரக்கமற்ற யுத்தத் தைக் குறிக்கிறது.முதலாளித்துவ வர்க்கம் கவிழ்க்கப் பட்டதால் (ஒரேயொரு நாட்டில் மட்டும்தான் என்றாலும் கூட) அதன் எதிர்ப்பு பத்து மடங்கு அதிகரித்து விட்டது. இதன் வலிமை சர்வதேச மூலதனத்தின் பலத்தில் மட்டுமின்றி,இதன் சர்வதேசத் தொடர்புகளின் பலத்திலும் தின்மையிலும் மட்டுமின்றி,பழக்கத்துக்குள்ள பிடிப்பின் வலிவுலும் சிறுவீத பொருளுற்பத்திக்குள்ள பலத்திலும் அடங்கியுள்ளது.துரதிருஷ்ட வசமாய் உலகில் சிறுவீதப் பொருளுற்பத்தி இன்னமும் மலிந்தே இருக்கிறது.இந்தச் சிறுவீதப் பொருளுற்பத்தி முதலாளித்து வத்தையும் முதலாளித்துவ வர்க்கத்தையும் இடையறாது நாள்தோறும் மணிதோறும் தன்னியல்பாகவும் பெருவீத அளவிலும் தோற்றுவிக்கிறது.இந்த எல்லாக் காரணங்களாலும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் இன்றியமையாததாகி விடுகிறது. நெஞ்சுறுதியும் கட்டுப்பாடும் அசைக்க முடியாத ஒருமித்த திடச்சித்தமும் தேவைப்படும் விடாப்பிடியான உக்கிரமான நீண்டதோர் ஜீவமரணப் போராட்டமின்றி,முதலாளித்துவ வர்க்கத்தின் மீது வெற்றி பெறுவது சாத்தியமன்று.

திரும்பவும் கூறுகிறேன்;பாட்டாளி வர்க்கத்திடம் முழுமையான மத்தியத்து வமும் கடுமையான கட்டுப்பாடும் இருக்க வேண்டியது முதலாளித்துவ வர்க்கத்தின் மீது வெற்றி பெறுவதற்கான இன்றியமையாத ஒரு நிபந்தனை ஆகும் என்பதை ரஷ்யாவில் வெற்றி கண்ட பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் அனுபவம்,சிந்தனை ஆற்றல் இல்லாதோருக்குங்கூடஅல்லது இதில் சிந்தனை செலுத்த வாய்ப்பு இல்லாமற் போனவர்களுக்குங்கூட தெளிவாகக் காட்டியுள்ளது.

அது அடிக்கடி எடுத்துரைக்கப் பட்டிருக்கிறது.ஆனால் இதன் பொருள் என்ன,எந்நிலைமைகளில் இது சாத்தியம் என்பதில் போதிய அளவு சிந்தனை செலுத்தப்படவில்லை.

சோவியத் ஆட்சியதிகாரத்துக்கும் போல்ஷ்விக்குகளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு கூட, இன்னும் அடிக்கடி புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்கு வேண்டிய கட்டுப்பாட்டை போல்ஷ்விக்கு களால் எப்படி நிறுவிக் கொள்ள முடிந்தது என்பதன் காரணங்கள் பற்றிய ஆழ்ந்த பகுத்தாராய்வும் செய்யப்படுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

அரசியல் சிந்தனைப் போக்காகவும் அரசியல் கட்சியாகவும் போல்ஷ்விசமானது 1903 முதலாய் இருந்து வந்திருக்கிறது.இது நிலவிய இக்கட்டம் முழுவதிலுமான போல்ஷ்விசத்தின் வரலாற்றினால் மட்டுமே,பாட்டாளி வர்க்க வெற்றிக்கு வேண்டிய உருக்கு உறுதி படைத்த கட்டுப்பாட்டை அதனால் எப்படி நிறுவ முடிந்தது,மிகக் கடினமான நிலைமைகளில் எப்படி அதைக் கட்டிக்காக்க முடிந்தது என்பதை திருப்திகரமாய் விளக்க முடியும்.

முதலாவதாக எழும் கேள்வி:பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சியின் கட்டுப்பாட்டைக் கட்டிக்காப்பது எப்படி? அது சோதிக்கப்படுவது எப்படி? அது மேலும் உறுதியூட்டப் பெறுவது எங்கனம்? முதலாவதாக,பாட்டாளிகளின் முன்னணிப் படையின் வர்க்க உணர்வாலும்,புரட்சியின் பால் அதற்குள்ள பற்றுறுதியாலும், தன்னலங்கருதாதத் தியாக உணர்வாலும், வீரத்தாலும் இரண்டாவதாக, உழைப்பாளி மக்கள் திரளின் மிகவும் விரிவான பகுதிகளுடனும்,முக்கியமாய் பாட்டாளி வர்க்கத்துடனும்,மற்றும் உழைப்பாளி மக்களின் பாட்டாளி வர்க்கமல்லாத பகுதிகளுடனும் இணைப்புக் கொள்ளவும்,மிக நெருங்கிய தொடர்பைக் கட்டிக்காக்கவும் ஓரளவுக்கு ஒன்று கலக்கவும் என்று கூடச் சொல்லலாம் அதற்குள்ளஆற்றலால்.மூன்றாவதாக இந்த முன்னணிப் படையால் வகிக்கப்படும் அரசியல் தலைமையின் பிழையற்ற தன்மையால்,அதன் அரசியல் ஆதார நெறிபோர்த்தந்திரம்இவற்றின் பிழையற்ற தன்மையால் வெகுஜனப் பகுதிகள் தமது சொந்தஅனுபவத்தின் வாயிலாகவே இவை சரியானவை என்பதைக் கண்டுகொண்டாக வேண்டும்.

முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்தி சமுதாயம் அனைத்தையும் மாற்றியமைத் திடுவதைப் பணியாகக் கொண்ட முன்னேற்றகரமான வர்க்கத்தின் கட்சியாக இருக்கும் மெய்யான தகுதியும் திறனும் கொண்ட புரட்சிகர கட்சியில்,இந்நிலைமைகள் இல்லையேல்கட்டுப் பாட்டைச் சாதிக்க இயலாது.இந்த நிலைமைகள் இல்லையேல்கட்டுப் பாட்டை நிறுவுவதற்கான எல்லா முயற்சிகளும் தவிர்க்க முடியாதவாறு விரயமாகி வெறும் வாய்வீச்சாகவும் கேலிக்கூத்தாகவுமே முடிவுறும்.

அதேபோதில், இந்த நிலைமைகள் யாவும் திடுதிப்பென்று தோன்றிவிடுவதில்லை. அவை நீடித்த முயற்சியாலும் அரும் பாடுபட்டுப் பெறும் அனுபவத்தாலுமேதான் தோற்றுவிக்கப் படுகின்றன. பிழையற்ற புரட்சிகரத் தத்துவம் இருக்குமாயின், இந்நிலைமைகள் தோற்றுவிக்கப்படுவதற்கு அது துணை புரிகிறது. இந்தப் புரட்சிகரத் தத்துவம் வறட்டுச் சூத்திரமாக அமைந்து விடாமல், மெய்யாகவே வெகுஜனத் தன்மையதான,மெய்யாகவே புரட்சிகரமான இயக்கத்தின் நடைமுறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டேஇறுதி வடிவம் பெறுகிறது.1917 - 20-ல் முன்பின் கண்டிராத மிகக் கடினமான நிலைமைகளில் போல்ஷ்வி  சமானதுமிகவும் கண்டிப்பான மத்தியத்து வத்தையும் உருக்கு உறுதி வாய்ந்த கட்டுப்பாட்டையும் நிறுவி அவற்றை வெற்றிகரமாக கட்டிக்காக்க முடிந்ததற்கு ரஷ்யாவின் வரலாற்றுச் சிறப்பியல்கள் பலவும்தான் காரணம். ஒரு புறத்தில், மார்க்சியத் தத்துவம் எனும் உறுதி மிக்க அடித்தளத்தின் மீது 1903-ல் போல்ஷ்விசம் உதித்தெழுந்தது. இந்தப் புரட்சிகரத் தத்துவம் பிழையற்றதாகும் என்பது, இது ஒன்றுமட்டும்தான் பிழையற்றதாகும் என்பது,பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுவதிலுமான உலக அனுபவத்தால் மட்டுமின்றி,இன்னும் முக்கியமாய் ரஷ்யாவில் புரட்சிகரச் சிந்தனையின் விசாரங்கள்,ஊசலாட்டங்கள்,தவறுகள்,ஏமாற்றங்கள் ஆகியவற்றின் இந்த அனுபவத்தாலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.ரஷ்யாவில் மிகவும் கொடிய,மிகவும் பிற்போக்கான ஜாரிசத்தால் ஒடுக்கப்பட்டு வந்த முற்போக்குச் சிந்தனை சுமார் அரை நூற்றாண்டாய் கடந்த நூற்றாண்டில் ஏறத்தாழ நாற்பதாம் ஆண்டுகளிலிருந்து தொண்ணூறாம் ஆண்டுகள் வரையில்பிழையற்ற புரட்சிகரத் தத்துவத்தை ஆவலுடன் தேடி வந்தது;இத்துறையில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இறுதி முடிவாகக்கருதக் கூடியவை ஒவ்வொன்றையும் கண்ணும் கருத்துமாய்,தளர்வில்லா ஊக்கத்துடன் கவனித்து வந்தது. ஈடிணையற்ற துன்பமும் தியாகமும், ஈடிணையற்ற புரட்சிகர வீரமும், நம்புதற்கரிய முனைப்பும், அயராத தேடலும், ஆராய்ச்சியும், நடைமுறைச் சோதனையும், ஏமாற்றமும்,சரிபார்த்தலும்,ஐரோப்பிய அனுபவத்துடனான ஒப்பிடலும் நிறைந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் அனுபவித்த வேதனையின் வாயிலாய் ரஷ்யாவானது,பிழையற்ற ஒரேயொரு புரட்சித் தத்துவமான மார்க்சியத்தை வந்தடைந்தது.ஜாரிசத்தால் அரசியலாளர் கள் நாடுகடத்தப்பட்டு வந்ததன் விளைவாய், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்புரட்சிகர ரஷ்யா, வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத அளவுக்கு வளமான சர்வதேசத் தொடர்புகளும், உலகப் புரட்சி இயக்கத்தின் வடிவங்களையும் தத்துவங் களையும் பற்றிய அருமையான தகவல் ஞானமும் பெறலாயிற்று.

தத்துவமெனும் இந்தக் கருங்கல் அடித்தளத்தின் மீது எழுந்த போல்ஷ்விச மானது,மறுபுறத்தில்,உலகில் வேறு எங்கும் ஒப்புவுமை காண இயலாத அனுபவச் செழுமை வாய்ந்தபதினைந்து ஆண்டுகால (1903 - 17) நடைமுறை வரலாற்றினைக் கடக்கலாயிற்று. அந்த பதினைந்து ஆண்டுகளின் போது இந்நாடு கண்ட புரட்சிகர அனுபவத்துக்கும், அதிவேகமாகவும் பல்வேறு வகைப்பட்ட தாகவும் வரிசையாக வந்த வெவ்வேறு இயக்க வகைகளுக்கும் -- சட்டப்பூர்வமான தும் சட்டவிரோதமானதும், அமைதியான தும் புயலின் மூர்க்கம் கொண்டதும், தலைமறைவானதும் பகிரங்கமானதும், சிறு குழுக்களின் அளவிலானதும் பரந்த வெகுஜனவீச்சு கொண்டதும், நாடாளுமன்ற வடிவிலானதும் பயங்கரவாத வடிவிலானதும் ஆகிய விதவிதமான இயக்க வகைகளுக்கும் -- ஏறத்தாழ ஒப்பானவற்றையுங்கூட வேறு எந்த நாடும்கண்டதில்லை. வேறு எந்த நாட்டிலும் நவீனச் சமுதாயத்தின் எல்லா வர்க்கங்களுக்குமுரிய போராட்டத்தின் இந்தனை விதமான வடிவங்களும் வகைகளும் முறைகளும் இவ்வளவு குறுகிய கால வரம்பினுள் ஒன்று குவிந்ததில்லை. இந்தப் போராட்டம் நாட்டின் பிற்பட்ட நிலை காரணமாகவும், வியக்கத்தக்க வேகத்தில் முதிர்ச்சியுற்று, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் அனுபவத்தின் இறுதி முடிவாகக்கருதக் கூடியவற்றுள் பொருத்தமானவற்றை மிகுந்த ஆவலுடனும், வெற்றிகரமாகவும் கிரகித்துக் கொண்டது போல்ஷ்விச வரலாற்றின் பிரதான கட்டங்கள்புரட்சியின் தயாரிப்புக்குரிய ஆண்டுகள் (1903 - 05), மாபெரும் புயல் நெருங்கி வந்ததை எங்கும் உணர முடிந்தது. எல்லா வர்க்கங்களும் கொந்தளிப்பான நிலைமையில் இருந்தன:தயாரிப்புகளில் முனைந்திருந்தன. நாடுகடத்தப்பட்ட அரசியளாளர்களின் பத்திரிக்கைகள் வெளிநாடுகளிலிருந்து, புரட்சியின் எல்லாப்

பிரச்சனைகளின் தத்துவார்த்தக் கூறுகள் குறித்தும் விவாதித்து வந்தன. பிரதான மூன்று வர்க்கங்களின், மிதவாத-முதலாளித்துவ, குட்டிமுதலாளித்துவ - ஜனநாயக (“சமூக - ஜனநாயகவாதி” “சோசலிஸ்டு - புரட்சியாளர்என்னும் பெயர்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டு இவை செயல்பட்டன), பாட்டாளி

வர்க்கப் புரட்சி ஆகிய முதன்மையான மூன்று அரசியல் போக்குகளின் பிரதிநிதிகள் வேலைத்திட்டம், போர்த்தந்திரம் இவற்றின் பிரச்சனைகள் குறித்து மிகக் கடுமையான போராட்டம் நடத்தி, நெருங்கி வந்த பகிரங்க வர்க்கப் போராட்டத்தை எதிர்பார்த்து, அதற்காகத் தயார் செய்து வந்தனர். 1905 - 07லும் 1917 - 20 லும் வெகுஜனப் பகுதிகள் ஆயுதமேந்திப் போராடிய எல்லாப் பிரச்சனைகளையும் அவற்றின் கரு வடிவில் இக்காலத்திய பத்திரிக்கைகளில் படித்தறிந்து கொள்ளலாம். (படித்தறிந்து கொள்ளவும் வேண்டும்). இந்தப் பிரதான மூன்று போக்குகளுக்கு மத்தியில் இடைநிலை யிலும் மாறிச்செல்லும் கட்டத்திலும் அரைகுறை நிலையிலுமான போக்குகள் ஏராளமாய் இருக்கத்தான் செய்தன. மெய்யான வர்க்கத் தன்மை கொண்ட அரசியல், சித்தாந்தப் போக்குகள், பத்திரிக்கைகளும் கட்சிகளும் பிரிவுகளும் குழுக்களும் நடத்திய போராட்டத்தில் தெளிவான உருவம் பெற்றன என்று சொன்னால் மேலும் பொருத்தமாயிருக்கும். நெருங்கி வந்து கொண்டிருந்த போர்களுக்குத் தேவையான அரசியல், சித்தாந்த ஆயுதங்களை இவ்வர்க்கங்கள் உருவாக்கி வந்தனபுரட்சி ஆண்டுகள் (1905 07), எல்லா வர்க்கங்களும் பகிரங்கமாய் வெளி வரலாயின.வேலைத்திட்டம், போர்த் தந்திரம் இவை குறித்த எல்லாக் கருத்துக்களும் வெகுஜனங்களது செயல் களால் சோதித்துப் பார்க்கப்பட்டனவேலைநிறுத்தப் போராட்டம் அதன் வீச்சிலும் தீவிரத்திலும் உலகில் எங்குமே இணையற்றதாய் விளங்கிற்று.பொருளாதார வேலைநிறுத்தம் அரசியல் வேலைநிறுத்தமாகவும், அரசியல் வேலைநிறுத்தம் ஆயுதமேந்திய எழுச்சியா கவும் வளர்ந்துவிட்டது. தலைவனாகச் செயல்பட்ட பாட்டாளி வர்க்கத்துக்கும்,தலைமை தாங்கி அழைத்துச் செல்லப்பட்ட ஊசலாட்டம் வாய்ந்த நிலையற்ற விவசாயிகளுக்கும் இடையிலான உறவுகள் செயலின் வாயிலாய்ச் சோதித்துப் பார்க்கப்பட்டன.போராட்டத்தின் தன்முனைப்பான வளர்ச்சியின் போது நிறுவனஒழுங்கமைப்புக்கான சோவியத் வடிவம் உதித்தெழுந்தது. சோவியத்துகளின் முக்கியத்துவம் குறித்து அக்காலத்தில் நடைபெற்ற சர்ச்சைகள் 1917 - 20 ஆம் ஆண்டுகளின் பெரும் போராட்டத்துக்கு முன்னேற்பாடாக அமைந்தன.மாறிமாறிக் கையாளப்பட்ட நாடாளுமன்றப்போராட்ட முறைகளும்,நாடாளுமன்றத்தை பகிஷ்காரம் செய்யும் போர்த்தந்திரமும் நாடாளுமன்றத்தில் பங்கு கொள்ளும் போர்த்தந்திரமும், சட்டப்பூர்வமான போராட்ட முறைகளும் சட்டத்துக்குப் புறம்பான போராட்ட முறைகளும் மற்றும் இவற்றுக்கிடையிலான உறவுகளும் தொடர்புகளும் அளவு கடந்த உள்ளடக்கப் பொருள் வளம் மிக்கதாய்த் திகழ்ந்தன.வெகுஜனங்களும் தலைவர்களும்அதேபோல் வர்க்கங்களும் கட்சிகளும் அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகளில் போதனை பெறுவதைப் பொறுத்தவரை, இந்தக் காலத்தின் ஒவ்வொரு மாதமும் "சமாதான பூர்வமான” “அரசியலமைப்புச் சட்டக் கட்டுக்கோப்புக்கு உட்பட்டதானவளர்ச்சிக்குரிய ஒரு முழு ஆண்டுக்கு ஈடானதாய் இருந்தது. 1905 ஆம் ஆண்டின் ஒத்திகைநடந்திருக்காவிட்டால், 1917 ஆம் ஆண்டில் அக்டோபர் புரட்சியின் வெற்றி சாத்தியமாய்இருந்திருக்காது.

பிற்போக்குஅரசோச்சியஆண்டுகள் (1907 - 10), ஜாரிசம் வெற்றி பெற்றுவிட்டதுபுரட்சிகரக்கட்சிகள், எதிர்க் கட்சிகள் யாவும் நொறுக்கப்பட்டன, தளர்வு, மனச்சோர்வு, பிளவுகள்,பூசல்கள், ஓடுகாலித்தனம், ஆபாசம் -- இவையே அரசியல் என்றாயிற்று. தத்துவயியல் கருத்துமுதல் வாதத்தை நோக்கி மேலும் சரிவு ஏற்பட்டது. மாயாவாதமானது எதிர்ப்புரட்சி உணர்ச்சிகளின் மூடுதிரையா கியது. ஆனால் அதேபோதில் இந்தப் பெருந்தோல்விதான் புரட்சிகர கட்சிகளுக்கும் புரட்சிகர வர்க்கத்துக்கும் மிகவும் பயனுள்ள மெய்யான பாடம் கற்பித்தது; வரலாற்றுத்துறை இயக்கவியல், அரசியல் போராட்டத்தைப் புரிந்துகொள் வதில்,அந்தப் போராட்டத்தை நடத்தும் கலையில் பாடம் கற்பித்தது.ஆபத்தான தருணங்களில்தான் யார் யார் தனது நண்பர்கள் என்பதை ஒருவர் தெரிந்து கொள்கிறார்.

தோல்வியுற்ற சேனைகள் நன்கு படிப்பினை பெறுகின்றன.வெற்றி பெற்ற ஜாரிசம் ரஷ்யாவில் முதலாளித்துவத்துக்கு முற்பட்டதான,தந்தைவழிச் சமுதாய வாழ்க்கை முறையின் மீதமிச்சங்களது அழிவைத் துரிதப்படுத்துமாறு நிர்பந்திக்கப்பட்டது.முதலாளித்துவ வழிகளில் நாட்டின் வளர்ச்சி மிக வேகமாக முன்னேறியது.வர்க்கப் பாகுபாடுகளுக்கு புறம்பான்மை யாகவும் மேம்பட்டவையா கவும் தோன்றிய பிரமைகள்,முதலாளித்துவத்தை தவிர்த்துக் கொள்வதற்குரிய சாத்தியப்பாடு குறித்த பிரமைகள்சிதறிக்கப்பட்டன.வர்க்கப் போராட்டம் மிகவும் புதுமையான,மேலும் எடுப்பான முறையில்வெளிப்படலாயிற்று.புரட்சிகரக் கட்சிகள் தமது கல்வி போதத்தை நிறைவுறச் செய்து கொள்ள வேண்டியிருந்தது.எப்படித் தாக்குதல் தொடுப்பது என்று இதுவரை அவை கற்று வந்தன. இப்பொழுது அவைஇந்த அறிவுடன் கூட,எப்படி ஒழுங்கு குலையாமல் பின்வாங்குவது என்ற அறிவைப் பெறுவதும் அவசியமென்பதை உணர வேண்டியதாயிற்று.ஒழுங்குடன் தாக்குவதற்கும் ஒழுங்குடன் பின்வாங்கு வதற்கும் தெரிந்து கொண்டாலொழிய வெற்றி பெற முடியாதென்பதை அவை உணர வேண்டியிருந்தது கடுமையான அனுபவத்தின் வாயிலாகவே புரட்சிகர வர்க்கம் இதனை உணரத் தெரிந்து கொள்கிறது.தோல்வியுற்ற புரட்சிகர கட்சிகள்,எதிர்க்கட்சிகள் யாவற்றிலும் போல்ஷ்விக்குகள்தான் மிகவும் கூடுதலானஒழுங்குடன்பின் வாங்குதலைச் செயல்படுத்திக் கொண்டனர்;தமது சேனைக்குமிகவும் குறைவான சேதத்தோடு,அதன் உட்க்கருவைப் பழுதின்றி பாதுகாத்துக் கொண்டு,மிகவும் குறைந்த அளவிலான பிளவுகளுடன் (ஆழத்தின் நிலையிலிருந்தும் தீராத்தன்மையின் நிலையிலிருந்தும்), மிகக் குறைவான மனச் சோர்வுடன், மிகவும் விரிவான அளவிலும் பிழையற்ற முறையிலும் விறுவிறுப்பாய் மீண்டும் பணி தொடங்குவதற்குச் சிறந்த நிலையில்இதனைச் செயல்படுத்திக் கொண்டனர்.பின்வாங்க வேண்டுமென்பதையும், எப்படிப் பின்வாங்குவதென்று தெரிந்திருக்க வேண்டும் என்பதையும், நாடாளுமன்றங்களில் மிகவும் பிற்போக்கானவற்றிலும்,தொழிற்சங்கங்களிலும் கூட்டுறவு சங்கங்களிலும் இன்ஷூரன்ஸ் கழகங்களிலும் இன்ன பிற நிறுவனங்களிலும் மிகவும் பிற்போக்கான வற்றிலும்சட்டப்பூர்வமான முறையில் வேலை செய்யத் தெரிந்திருக்க வேண்டும் என்பதையும்புரிந்துகொள்ள விரும்பாத புரட்சிகர வாய்வீச்சுக்காரர்களை போல்ஷ்விக்குகள் ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்தி விலக்கியதால்தான் அவர்களால் இதைச் செய்ய முடிந்ததுபுத்தெழுச்சிஆண்டுகள்(1910----14),  தொடக்கத்தில் முன்னேற்றம் சொல்ல முடியாத அளவுக்கு மிகமிக மந்தமாகவே இருந்து வந்தது. பிற்பாடு 1912 ஆம் ஆண்டின் லேனா நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஓரளவு துரிதமடையலாயிற்று. போல்ஷ்விக்குகள் இதன் முன் என்றும் கண்டிராத மிகப் பெரும் இன்னல்களைச் சமாளித்து மென்ஷ்விக்குகளைப் பின்நிலைக்குத் தள்ளினர்.

தொழிலாளி வர்க்க இயக்கத்தில் மென்ஷ்விக்குகள் முதலாளித்துவக் கையாட்களாக ஆற்றி வந்த பாத்திரத்தை 1905க்குப் பிற்பாடு முதலாளித்துவ வர்க்கம் அனைத்துமே தெளிவாக உணர்ந்து கொண்டு விட்டது.ஆகவே முதலாளித்துவ வர்க்கத்தினர் போல்ஷ்விக்குகளுக்கு எதிராய் ஆயிரம் வழிகளில் அவர்களுக்கு ஆதரவு அளித்தனர்.போல்ஷ்விக்குகள் சட்ட விரோதமான வேலைகளைச் செய்வதுடன் சட்டப்பூர்வமான வாய்ப்புகளைத்தவறாமல் பயன்படுத்திக் கொள்வதையும் இணைத்திடுவதென்ற பிழையற்ற போர்த்தந்திரத்தைப் பின்பற்றாவிடில்,மென்ஷ்விக்குகளைப் பின்னுக்குத் தள்ளுவதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது.பழுத்த பிற்போக்குவாத டூமாவில் போல்ஷ்விக் குகள் தொழிலாளர் தொகுதியின் முழு ஆதரவையும் வென்று கொண்டனர்.

முதல் ஏகாதிபத்திய உலகப் போர் (1914 - 17), கடைகோடியான பிற்போக்குவாதநாடாளுமன்றத்தைக்கொண்டு நடைபெற்ற சட்டப்பூர்வமான நாடாளுமன்றச் செயற்பாடானது,புரட்சிகரப் பாட்டாளி வர்க்கக் கட்சியினரான போல்ஷ்விக்குகளுக்கு மிகவும் பயனுள்ள பணியாற்றியது. போல்ஷ்விக் டூமாப் பிரதிநிதிகள் சைபீரியாவுக்குக் கடத்தப்பட்டனர். சமூக -ஏகாதிபத்தியம், சமூக - தேசியவெறி, சமூக தேசபக்தவாதம், முரண்பாடான சர்வதேசியம், முரணற்ற சர்வதேசியம்,சாத்வீகவாதம்சாத்வீகவாதப் பிரமைகளை நிராகரிக்கும் புரட்சிகரப் போக்கு ஆகியவற்றின் எல்லாச் சாயல்களும் நாடுகடத்தப்பட்டு வெளியிலிருந்து இயங்கிய ரஷ்யப் பத்திரிக்கைகளில் முழு அளவுக்கு வெளியாயின. ரஷ்ய சோசலிச இயக்கத்தினுள் உட்குழுக்கள்மலிந்துவிட்டது என்றும்,அவை தம்மிடையே கடுமையான போராட்டம் நடத்தினவென்றும் ஆணவமாகவும் அலட்சியமாகவும் முகத்தைச் சுளித்துக் கொண்டஇரண்டாவது அகிலத்தின் மெத்தப் படித்த முட்டாள்களும் பாட்டிமார்களும் வளர்ச்சி பெற்ற எல்லா நாடுகளிலும் மெச்சிப் புகழப்பட்ட சட்டப்பூர்வமான நிலையையுத்தமானது தட்டிப் பறித்துக் கொண்டதும் --- ரஷ்யப் புரட்சியாளர்கள் ஸ்விட்சர்லாந்திலும் மற்றும் சில நாடுகளிலும் செய்து வந்த அந்தத் தங்குதடையற்ற (சட்ட விரோதமான) கருத்துப்பரிமாற்றத்துக்கும், பிழையற்ற கருத்துக்களின் தங்குதடையற்ற (சட்டவிரோதமாக)மலர்ச்சிக்கும் சொற்ப அளவுகூட ஒப்பானது எதையும் ஏற்பாடு செய்து கொள்ளத் திராணியற்றவர் களாயினர். எனவேதான், எல்லா நாடுகளையும் சேர்ந்த பகிரங்கமான சமூக -தேசபக்திவாதிகளும் சரி, “காவுத்ஷ்கி வாதிகளும்சரி பாட்டாளி வர்க்கத்தின் படுமோசமான துரோகிகளாயினர். 1917 - 20-ல் போல்ஷ்விசம் வெற்றிவாகை சூட முடிந்ததின் பிரதான காரணங்களில் ஒன்று என்னவெனில், 1914 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்தே அது சமூக - தேசியவெறியின், “காவுத்ஸ்கிவாதத்தின்இழி நிலையையும் கயமையையும் நீசத்தனத்தையும் ஈவிரக்கமின்றி அம்பலப் படுத்தி வந்தது. (பிரான்சில் லொங்கேயி சமும், பிரிட்டனில் சுயேச்சைத் தொழிற்கட்சியின் தலைவர்கள், ஃபேபியன்கள் இவர்களது கருத்துக்களும்,இத்தாலியில் டுராட்டியின் கருத்துக்களும் இன்ன பிறவும்காவுத்ஸ்கிவாதத்தையேஒத்தவையாகும்). பிற்பாடு வெகுஜனங்கள் போல்ஷ்விக் குகளின்கருத்துக்களே சரியானவை என்று தமது சொந்த அனுபவத்தின் வாயிலாக மேலும் மேலும் ஐயமற உணர்ந்து கொண்டனர்.

ரஷ்யாவில் இரண்டாவது புரட்சி (1917 பிப்ரவரியிலிருந்து அக்டோபர் வரை), ஜாரிசத்தின் கிழடு தட்டிய நிலையும்,காலங் கழிந்த நிலையும் சேர்ந்து (மிகக் கொடூரமான போரில் கிடைத்த உதைகளும் அந்தப் போரால் விளைந்த கேடுகளும் துணை புரிய), ஜாரிசத்துக்கு எதிரான மிகக் கடுமையான நாசகார சக்தி ஒன்றைத் தோற்றுவித்தன.ஒரு சில நாட்க்களுக்குள் ரஷ்யாவானது ஜனநாயக முதலாளித்துவக் குடியரசாக,உலகின் வேறு எந்த நாட்டையும் விடயுத்த நிலைமைகளில் சுதந்திரத் தன்மை கொண்ட ஜனநாயகக் குடியரசாகமாற்றப்பட்டது. மிகக் கறாரான நாடாளுமன்றக்குடியரசுகளில் செய்யப்படுவது போலவே, இங்கும் புரட்சிகரக் கட்சிகளின்,எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அரசாங்கத்தை அமைக்கத் தொடங்கினர். நாடாளுமன்றத்தில் -- மிகவும்பிற்போக்கான நாடாளுமன்றம்தான்என்றாலுங்கூட -- ஒருவர் எதிர்க் கட்சி ஒன்றின் தலைவராய் இருந்தார் என்ற உண்மையானது,பிற்பாடு புரட்சியில் அவர் பங்காற்றுவதற்கு வசதியாக இருந்தது.

ஒரு சில வாரங்களுக்குள் மென்ஷ்விக்கு களும் சோசலிஸ்டு - புரட்சியாளர்களும், இரண்டாவது அகிலத்தின் ஐரோப்பிய தீரர்களுக்கும் அமைச்சரவைவாதிகளுக்கும் ஏனைய சந்தர்ப்பவாதக்கும்பல்களுக்கும் உரிய எல்லா முறைகளையும் பழக்க வழக்கங்களையும் வாதங்களையும் குயுத்திகளையும் திறமையுடன் கற்றுத் தேர்ந்து கொண்டு விட்டனர். ஷெய்டெமன்களையும் நோஸ்கேயையும் காவுத்ஸ்கியையும் ஹில்ஃபர்டிங்கையும் ரென்னரையும் ஆஸ்டர்லித்சையும் ஒட்டோபௌவரையும் ஆட்லெரையும் டுராட்டியையும் லொங்கேயையும் மற்றும் இங்கிலாந்தில் ஃபேபியன்களையும் சுயேச்சைத் தொழிற்கட்சித் தலைவர் களையும் பற்றி இப்பொழுது நாம் படிப்பவை எல்லாம்,ஏற்கனவே நாம் நன்கு அறிந்த பழைய பல்லவியையே சலிப்புத் தட்டும் முறையில் திருப்பிப் பாடுவதாக,ஒப்பிப்பதாக தோன்றுகிறது(உண்மையிலும் அப்படியேதான் இருக்கிறது) இவை யாவற்றையும் மென்ஷ்விக்குகளிடம் ஏற்கனவே கண்டிருக்கிறோம். வரலாற்றின் கைங்கரியத்தால்,பிற்பட்ட ஒரு நாட்டின் சந்தர்ப்பவாதிகள்,முன்னேறிய நாடுகள் பலவற்றின் சந்தர்ப்பவாதிகளுக்கு முன்னோடிகளாக அமைந்துவிட்டனர். 

இரண்டாவது அகிலத்தின் வீரர்கள் எல்லோரும் கையாலாகாதவர்களாகி விட்டனர் என்றால், சோவியத்துகளின்,சோவியத் ஆட்சியின் முக்கியத்துவத் தையும் பாத்திரத்தையும் பற்றிய பிரச்சனையில் தம்மைத் தாமே இழிவுபடுத்திக் கொண்டனர் என்றால்,இப்பொழுதுஇரண்டாவது அகிலத்தை விட்டு விலகிச் சென்றுவிட்ட மூன்று முக்கியக் கட்சிகளின்(அதாவது ஜெர்மன் சுயேச்ச சமூக ஜனநாயகக் கட்சி,பிரெஞ்சு லொங்கேயிஸ்டு கட்சி,பிரிட்டீஷ் சுயேச்சைத் தொழிற்கட்சி ஆகியவற்றின்)தலைவர்கள் இப்பிரச்சனையில் மிகவும் எடுப்பானமுறையில் தம்மை இழிவுபடுத்திக் கொண்டு இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டனர் என்றால்,இவர்கள் எல்லோருமே குட்டி முதலாளித்துவ ஜனநாயகத்தின் தப்பெண்ணங்களுக்கு (முற்றிலும் 1848ஆம் ஆண்டின் குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினருடைய,தம்மை சமூக ஜனநாயகவாதிகள்”;என்று அழைத்துக் கொண்ட இவர்களுடைய மனப்பாங்கிலே) தாம் அடிமைப்பட்டுவிட்டதைக் காட்டிக் கொண்டார்கள்என்றால், இவை யாவற்றையும் நாம் ஏற்கனவே மென்ஷ்விக்குகளுடைய விவகாரத்தில் கண்டிருக்கிறோம். வரலாற்றின் கைங்கரியத்தால், சோவியத்துக்கள் ரஷ்யாவில் 1905லேயே தோன்றிவிட்டன. 1917 பிப்ரவரியிலிருந்து அக்டோபர் வரையில் அவை மென்ஷ்விக்குகளால் தவறான வழியில் பிரயோகிக்கப்பட்டன.சோவியத்துக்களின் பாத்திரத்தையும் முக்கியத்துவத்தையும்மென்ஷ்விக்குகளால் புரிந்துகொள்ள முடியாத காரணத்தால் அவர்கள்கையாலாகாதவர்களாயினர்.இன்று சோவியத்துகளின் ஆட்சி என்னும் கருத்து உலகெங்கும்மலர்ந்து எல்லா நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தாரி டையிலும் அபார வேகத்தில் பரவி வருகிறது. எங்களுடைய மென்ஷ்விக்கு களைப் போலவே, இரண்டாவது அகிலத்தின் பழைய தீரர்கள் எல்லா இடங்களிலுமே கையாலாதவர்களாகி வருகிறார்கள்.சோவியத்துக்களுடைய பாத்திரத்தையும் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ள அவர்கள் ஆற்றலற்றவர் களாக இருப்பதே இதற்கு காரணம். பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மிக முக்கியமான சில பிரச்சனைகளில் எல்லா நாடுகளுமே, ரஷ்யா என்ன செய்துள்ளதோ,அதையே தவிர்க்க முடியாத வகையில் செய்ய வேண்டியிருக்கும் என்பதை அனுபவம் தெளிவு படுத்தியிருக்கிறது.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இப்போது அடிக்கடி காணக் கூடிய கருத்துக்களுக்கு மாறாய், போல்ஷ்விக்குகள் நாடாளுமன்ற (உண்மை நிலையில்)முதலாளித்துவ குடியரசுக்கும்மென்ஷ்விக்குகளுக்கு எதிரான தமது வெற்றிகரப் போராட்டத்தை மிகவும் எச்சரிக்கையான முறையில்தான் தொடங்கினர்;இதற்காக அவர்கள் செய்த தயாரிப்புகள் எவ்வகையிலும் சுலபமாய் இருக்கவில்லை.குறிப்பிட்ட இக்கட்டத்தின் தொடக்கத்தில்,நாங்கள் அரசாங்கத்தை வீழ்த்தும்படி அறைகூவல் விடுக்கவில்லை. முதலில் சோவியத்துகளின் அமைப்பையும்மனநிலையையும் மாற்றாமல், அரசாங்கத்தை வீழ்த்த முடியாதென விளக்கி வந்தோம்.முதலாளித்துவ நாடாளுமன்றமான அரசியல் நிர்ணய சபையைப் பகிஷ்கரிக்கும்படி நாங்கள் அறைகூவல் விடுக்கவில்லை; அதற்குப் பதில் -- எங்கள் கட்சியின் ஏப்ரல் (1917) மாநாட்டைத் தொடர்ந்து, கட்சியின் பெயரிலேயே அதிகாரப் பூர்வமாய் இதைக் கூற முற்பட்டோம் --அரசியல் நிர்ணய சபையைக் கொண்ட முதலாளித்துவக் குடியரசானது, அரசியல் நிர்ணய சபை இல்லாத முதலாளித்துவக் குடியரைச் காட்டிலும் சிறந்ததாய் இருக்கும் என்றும்,ஆனால் தொழிலாளர்கள்,விவசாயிகளதுசோவியத் குடியரசானது எந்த முதலாளித்துவ - ஜனநாயக,நாடாளுமன்றக் குடியரசைக் காட்டிலும் சிறப்பாய் இருக்கும் என்று கூறினோம். இது போன்ற முழுநிறையான, எச்சரிக்கை மிக்க, நீண்ட தயாரிப்புகள் இல்லாமல், எங்களால் 1917 அக்டோபரில் வெற்றி பெற்றிருக்கவோ,அந்த வெற்றியை உறுதிப்படுத்தி யிருக்கவோ முடிந்திருக்காது.

நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை ஒரு நாட்டில் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களின் தகுதி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை லெனின் இந்த கட்டுரையில் விளக்குகிறார்.

உருக்கு உறுதியான கட்சிக் கட்டுப்பாடு களை கடைபிடிப்பவராக இருக்க வேண்டும்.பிற்பட்ட மக்களுக்கு தலைமைதாங்கக் கூடியவராக இருக்க வேண்டும்.தன்னலம் கருதாதவராக இருக்க வேண்டும்.தியாக உணர்வு கொண்டவராக இருக்க வேண்டும்.உழைக்கும் மக்களை தம்முடன் அரவணைத்து அழைத்துச் செல்பவராக இருக்க வேண்டும்.உழைக்கும் மக்களின் ஆதரவை பெற்றவராக இருக்க வேண்டும்.

பலம்வாய்ந்த வர்க்கமான முதலாளி வர்க்கத்தினை எதிர்த்து வைராக்கியத்துடன் போராடும் குணம் படைத்தவராக இருக்க வேண்டும்.

முதலாளிகளின் தேசியத் தன்மையை மட்டுமல்லாது அதன் சர்வதேசத் தன்மையை ஆழமாகப் புரிந்து கொண்ட வராக இருக்க வேண்டும்.பழைய வகைப்பட்ட தீய பழக்கவழக்கங் களிலிருந்து விடுபட்டவராக இருக்க வேண்டும். குட்டிமுதலாளிய தீய பண்புள்ளவராக இருக்கக் கூடாது.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உக்கிரமான நீண்ட போராட்டத்தில் சோர்வடையாமல் போராடுபவராக இருக்க வேண்டும். கம்யூனிச அரசியல் சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பாட்டாளி வர்க்க உணர்வு கொண்டவராக இருக்க வேண்டும்.

தொழிலாளிவர்க்கப் புரட்சியின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு பற்றுறுதி மிக்க வராகஇருக்க வேண்டும்.

பாட்டாளி வர்க்கத்தையும் பிற ஒடுக்கப்படுகின்ற புரட்சிகர ஜனநாய மக்களையும் ஒருங்கிணைக்கும் தகுதியை வளர்த்துக்கொண்டவராக இருக்க வேண்டும்.

உழைக்கும் மக்களோடு நெருக்கமாக உறவு கொண்டு அவர்களோடு ஒன்று கலப்பவராகவும் இருக்க வேண்டும்.

சமூகத்தை மாற்றுவதற்கான விஞ்ஞானப் பூர்வமான செயல்திட்டத்தை உருவாக்கும் ஆற்றல்களை வளர்த்துக்கொள்வதில் ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும்.

விஞ்ஞானப்பூர்வமான செயல் திட்டத்தின் அடிப்படையில் மக்களைத் திரட்டி போராடவும், அதிலிருந்து கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையில் தனது செயல்பாடுகளை செழுமைப்படுத்துபவரா கவும் இருக்க வேண்டும்.

வெறும் வாய்வீச்சாளராக இருக்கக்கூடாது.

தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் தொடர்ச்சியாக போராடும் குணம் கொண்டவராக இருக்க வேண்டும்.

சரியான மற்றும் தவறான அனுபவத்தி லிருந்து பாடம் கற்றுக்கொண்டு அதனை வருங்காலத்தில் பயன்படுத்துபவராக இருக்க வேண்டும்.புரட்சிகரமான மார்க்சிய லெனினிய தத்துவத்தை பயின்று அதனை தனது நடவடிக்கையில் பயன்படுத்துபவராக இருக்க வேண்டும்.

வறட்டுத் தத்துவவாதியாக இருக்கக்கூடாது.

இத்தகைய புரட்சிகர கம்யூனிச பண்பு கொண்டவர்களைக் கொண்ட கட்சியாகவேரஷ்யாவில்லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கம்யூனிஸ்டுக் கட்சி இருந்தது.ஆகவேதான்அக்கட்சியால் ரஷ்யாவில் புரட்சியை நடத்தி முடித்து தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சியை நிறுவ முடிந்தது.

ஆனால் இந்தியாவில் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் ஆரம்ப காலங்களிலும், இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி மார்க்சிஸ்டு லெனினிஸ்டுக் கட்சியின் ஆரம்ப காலங்கலிலும் இத்தகைய கம்யூனிசப் பண்புள்ள தலைவர்களும் செயல்வீர்ர்களும் இருந்தனர். அவர்களின் தியாகத்தால் அந்தக் கட்சிகள் மக்களிடம் செல்வாக்கு பெற்று இருந்தது. ஆனால் தற்போது எந்த கம்யூனிஸ்டுக் கட்சியிலும் அல்லது மார்க்சிய லெனினியக் குழுக்களிலும் இத்தகைய கம்யூனிசப் பண்பு கொண்டவர்கள் மிகமிகக் குறைவானவர் களே உள்ளனர். ஆகவே இந்த கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு மக்களிடையே செல்வாக்கு இல்லை. இந்தகைய அமைப்புகளின் மீது நம்பிக்கை இல்லை.ஆகவேதான் இன்றைய இந்திய கம்யூனிச அமைப்புகள் மக்களின் செல்வாக்கை இழந்து பலமிழந்து பலவாறு பிளவுபட்டு இருக்கின்றனர். ஆகவே கம்யூனிசத்தை விரும்புபவர்கள் ஒவ்வொருவரும் லெனின் காட்டிய வழியில் கம்யூனிசப் பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்இதனை உடனடியாக சாதித்துவிட முடியாது.இதனை உணர்ந்து கம்யூனிச அமைப்புகளில் சேர்ந்து செயல்படும் உறுப்பினர்களும் தலைவர் களும் இதற்கான தொடர்ச்சியான பயிற்சியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ரஷ்யாவில் மார்க்சியத் தத்துவம் என்ற உறுதி மிக்க அடித்தளத்தின் மீதுதான் ரஷ்யபோல்ஷ்விக் கட்சி கட்டப்பட்டது.அதுபோன்ற கட்சியை இந்தியாவில் கட்டுவதற்கு நமது கம்யூனிச தலைவர்கள் தவறிவிட்டனர்.அந்தத் தவறை களைந்து ஒரு போல்ஷ்விக் பாணியிலான கம்யூனிஸ்டுக் கட்சி இர்தியாவில் கட்டப்பட வேண்டும்.

ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் சித்தாந்தத் தவறுகள், ஊசலாட்டங்கள், தவறுகள், ஏமாற்றங்கள் பல ஏற்பட்டது.அந்த அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு தவறுகளை களைந்துதான் ரஷ்ய போல்ஷ்விக்குகள் சாதனை படைத்தார்கள்.

ஆனால் இந்தியாவில் கம்யூனிஸ்டுக் கட்சிகள் சில சரியான போராட்டங்களை நடத்தி மக்களிடம் செல்வாக்கை வளர்த்திருந்த போதும், பல தவறுகளையும் கட்சியின் தலைமைகள் செய்தனர். இந்த தவறுகளை ரஷ்ய போல்ஷ்விக்குகளைப் போல் களைந்துகொள்ளாமல் தொடர்ந்து இந்தத் தவறுகளையே செய்துவந்த காரணத்தால் மக்களின் செல்வாக்கை தொடர்ந்து இழந்துகொண்டு வருகின்றனர். ஆகவே இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் அவர்கள் செய்த தவறுகளை களைய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ரஷ்யாவில் மிகக்கொடிய ஜார் ஆட்சி காலத்திலேயே மார்க்சிய நூல்களை ஒருவர் கையில்வைத்திருந்தால் அவர் கைதுசெய்யப்படுவார் என்ற மோசமான சூழலில் சுமார் ஐம்பது ஆண்டுகளாக அங்குள்ள மார்க்சிய அறிவுஜீவிகள் மார்க்சிய தத்துவத்தை ஆர்வமுடன் கற்றார்கள். தொழிலாளி வர்க்கத்திடம் மார்க்சிய கல்வியை போதித்தார்கள். அதன் பயனாக உழைக்கும் மக்கள் மார்க்சிய அறிவை வளர்த்துக்கொண்டார்கள்.

இது போன்ற முயற்சிகள் இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் செய்யவில்லை. அப்படியே செய்திருந்தாலும் அது போதுமானதாக இல்லை. இதன் காரணமாக கம்யூனிச அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களிடம் கூட அடிப்படை மார்க்சிய அறிவு இல்லை என்பதை நாம் தற்போது பார்க்கலாம்.கம்யூனிஸ்டுகள் மத்தியில் மார்க்சியத்தின் அடிப்படை அறிவின் தேவையை பலரும் உணர்ந்துகொள்ளவில்லை.அமைப்பின் தலைவர்களும் உறுப்பினர்களுக்கு இதன் அவசித்தை உணர்த்துவதில்லை.ஆகவே மார்க்சிய லெனினியத் தத்துவத்தின் அவசியத்தை உணர்ந்து நாம் அதனை கற்றுத்தேற வேண்டும்.

சட்டப்பூர்வமானதும்,சட்டவிரோதமானது மான போராட்டங்களை ரஷ்ய கம்யூனிஸ்டு கள் நடத்தினர். அமைதியான முறையிலும் போர்க்குணமிக்க முறையிலுமான போராட்டங்களை நடத்தினர். தலைமறை வான முறையிலும் வெளிப்படையான முறையிலும் அரசியல் இயக்கங்களை நடத்தினர். சிறு குழுக்களின் அளவிலான போராட்டங்களையும், பரந்த அளவிலான வெகுஜனப் போராட்டங்களையும் நடத்தினர். நாடாளுமன்றப் போராட்டங் களையும், பயங்கரவாதப் போராட்டங் களையும் நடத்தினர்.இவ்வாறு வெவ்வேறு வகையான போராட்டங்களையும் அரசியல் இயக்கங்களையும் ரஷ்யப் போல்ஷ்விக்கு கள் நடத்தித்தான் அங்கே புரட்சியில் வெற்றி பெற்றனர்.ஆனால் இந்தியால் ஒரு பிரிவினர் அமைதியான முறையில் நாடாளுமன்றப் பாதையிலேயே செயல் பட்டு வலது சந்தர்ப்பவாத சகதியில் மூழ்கினர். மற்றொரு பிரிவினர் ஆயுதப் போராட்டத்தை நடத்துகிறோம் என்ற பெயரில் இடது சாகசவாதிகளாக சீரழிந்தனர்.ஆகவே இந்திய பொதுவுடமை அமைப்புகள் செயல்படுத்திய வலது சந்தர்ப்பவாத்த்தையும் இடது சாகசவாத்த்தையும் எதிர்த்துப் போராடி ரஷ்ய போல்ஷ்விக்கின் அனுபவத்தை கிரகித்து சாத்தியமான அனைத்து வகையான போராட்டங்களையும் நடத்துவதன் மூலமே இந்தியாவில் ஒரு புரட்சிகரமான சமூக மாற்றத்தை இங்கே கம்யூனிஸ்டுகளால் ஏற்படுத்த முடியும். ரஷ்யாவில் மூன்றுவிதமான அரசியல் போக்குகள் நிலவியதாக லெனின் குறிப்பிடுகிறார். இத்தகைய அரசியல் போக்குகளுக்கு வர்க்க அடிப்படைகள் இருந்ததாக லெனின் குறிப்பிடுகிறார். இத்தகைய ஒவ்வொரு போக்குகளும் வெவ்வேறான வேலைத் திட்டம் மற்றும்

போர்த்தந்திரங்களைக் கொண்டிருந்தன என்கிறார் லெனின்.ஆகவே இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளைப் பற்றி ஆய்வு செய்து இந்தியாவிலுள்ள வெவ்வாறான அரசியல் போக்குகளையும் அதற்கான வர்க்க அடிப்படைகளையும் ஆய்வு செய்து புரிந்துகொண்டுமக்களிடம் விளக்க வேண்டியது கம்யூனிஸ்டு அமைப்புகளின் கடமையாகும்.

ரஷ்யாவில் புரட்சிக்கு தலைமைதாங்கிய பாட்டாளி வர்க்கத்திற்கும் ஊசலாடும் விவசாயிவர்க்கங்களுக்கும் இடையிலான உறவுகள் போராட்டங்களின் மூலம் சோதிக்கப்பட்டதுஎன்கிறார் லெனின். அதுபோலவே இந்தியாவில் போராட்டங் களின் மூலம் இங்குள்ளவர்க்கங்களைப் பற்றியும் வர்க்கங்களுக்கு இடையிலான உறவுகள் பற்றியும் கம்யூனிஸ்டுகள் சோதித்து அறிய வேண்டியது முக்கியமான கடமையாகும்.

இத்தகைய போராட்டங்களை நடத்தியதன் மூலம் ரஷ்யாவில் சோவியத்துகள் உருவானது. இந்த சோவியத்துகள்தான் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட தொழிலாளர் களின் அரசுக்கு அடிப்படையாக அமைந்தது.ஆகவே இந்தியாவில் சரியான போராட்டங்களிட் ஊடே சோவியத்துக்கள் உருவாக்கப்பட்டு அதனையே கம்யூஸ்டு களால் உருவாக்கப்படும் அரசு அமைப்புக்காக அதனை பயன்படுத்த வேணடும்.

1905 ஆண்டு ரஷ்யாவில் ஒரு புரட்சி நடந்தது. அந்தப் புரட்சி தோல்வியடைந்தது. ஆனால் 1917 ஆண்டில் நடைபெற்ற இரண்டு புரட்சிகளுக்கும் தேவையான அனுபவத்தை தோல்வியடைந்த 1905ஆம் ஆண்டு புரட்சி கொடுத்தது என்கிறார் லெனின்அதே போலவே இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டங் களின் அனுபவங்களை நாம் எடுத்துக்கொண்டு அதிலிருந்து படிப்பினைகளை புரிந்து கொண்டு செயல்பட்டால் இங்கும் ஒரு சமூகப் புரட்சியை கம்யூனிஸ்டுகளால் நடத்திட முடியும்.

1905 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சி தோல்வியடைந்தவுடன் 1907 லிருந்து 1910 வரைரஷ்யாவில் பிற்போக்கு அரசியல் செல்வாக்கு பெற்று புரட்சிகர ரஷ்ய கம்யூனிஸ்டுக்கட்சிக்குள்ளும் பிற்போக்கு அரசியலை சிலர் கொண்டுவர முயற்சித்தனர்.அதனை லெனின் முறியடித்தார்.அத்தகைய சூழலில்தான் ரஷ்ய மக்கள் தங்களின் உண்மையான நண்பர்களையும், எதிரிகளையும் இனம் கண்டார்கள்.ஆனால் இந்தியாவில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் ஆட்சி முடிவிற்கு வந்து காங்கிரசின் ஆட்சி உருவானபோது தெலுங்கானாவில் ஆயுதம் தாங்கிய விவசாயிகளின் போராட்டங்கள் வெற்றி பெற்ற நிலையில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசாங்கம் தெலுங்கானா போராட்டத்தை இராணுவத்தைக்கொண்டு நசுக்கியது. நேருவின் அடக்குமுறைக்கு அஞ்சி இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி வீரம்செறிந்த தெலுங்கானா போராட்டத்தை கைவிட்டுவிட்டு திருத்தல்வாத தேர்தல் பாதையை தேர்ந்தெடுத்தது. நெருக்கடி காலத்தில் ரஷ்ய போல்ஷ்விக்குகள் பின்பற்றிய கொள்கையான தங்களது கொள்கையை கைவிடாமல் பின்வாங்கி தனது சக்திகளை தலைமறைவு நடவடிக்கையின் மூலம் பலப்படுத்திக் கொண்டு மீண்டும் எதேச்சிகார ஜார் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடி ஜார் அரசாங்கத்தை வீழ்த்தியது போல் அல்லாமல் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள் புரட்சிகரமான போராட்டங் களை நடத்தி ஒரு மக்களுக்கான புரட்சிகரமான அரசை உருவாக்க முயற்சிக்காமல் தேர்தல்களில் பங்கு கொண்டு ஆட்சிக்கு வருவதற்கான திருத்தல்வாத முறைகளில் ஈடுபட்டு கம்யூனிஸ்டுக் கட்சியை ஒரு திருத்தல்வாதக் கட்சியாகவே மாற்றி விட்டார்கள்.

ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டுக் கட்சியானது மக்களின் எதிரிகளை எதிர்த்து மக்களைத் திரட்டி எப்படி போராடுவது என்பதை மட்டும் தெரிந்துகொண்டால் போதாது. எதிரிகள் கடுமையாக தாக்கும் போது எப்படி கட்சியானது ஒழுங்கு குலையாமல் பின்வாங்குவது எப்படி என்பதையும் தெரிந்து இருக்க வேண்டும்.

ஒழுங்கு முறையில் ஒரு கட்சி பின்வாங்குவது எப்படி என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் பிற்போக்கான தொழிற்சங்கங்களிலும் நாடாளுமன்றங்களிலும் எப்படி வேலை செய்வது என்பதையும் ஒரு புரட்சிகர கட்சி தெரிந்திருக்க வேண்டும் என்கிறார் லெனின். இந்த உண்மையை இந்தியாவில் செயல்பட்ட மார்க்சிய லெனினிய கட்சியை மற்றும் குழுக்களைச் சேர்ந்த தலைவர்கள் புரிந்துகொண்டு செயல்படத் தவறினார்கள்.

ரஷ்யாவில் மென்ஷ்விக்குகள் எப்படி திருத்தல்வாதிகளாக மாறி முதலாளிகளின்கையாட்களாக மாறினார்கள் என்பதை லெனின் இங்கே விளக்கியுள்ளார். மென்ஷ்விக்குகள் முதலாளித்துவ கையாட்களாக ஆற்றி வந்த பாத்திரத்தை 1905 ஆம் ஆண்டிற்குப் பிறகு ரஷ்யாவிலுள்ள முதலாளித்துவ வர்க்கம் சரியாக புரிந்துகொண்டு போல்ஷ்விக்கு களுக்கு எதிராக மென்ஷ்விக்குகளுக்கு ஆதரவு கொடுத்தது என்கிறார் லெனின். இதோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் திருத்தல்வாத கம்யூனிஸ்டுக் கட்சியானது முதலாளித்துவ கட்சிகளுக்கு வாலாகப் போய்விட்டதை புரிந்துகொண்ட இந்திய முதலாளி வர்க்கமானது இந்த திருத்தல்வாதிகளை ஆதரித்து மார்க்சிய லெனினியப் புரட்சியாளர்களுக்கு எதிராக செயல்பட்டதை இந்திய வரலாற்றில் நாம் பார்க்கலாம்.எனினும் மார்க்சிய லெனினிய கட்சித் தலைவர்கள் பின்பற்றிய இடது சந்தர்பவாத்த்தின் காரணமாக மார்க்சிய லெனினிய கட்சியானது ரஷ்ய போல்ஷ்விக்குகள் பின்பற்றிய சட்டப்பூர்வமான போராட்டங்களையும், சட்டவிரோதமான போராட்டங்களையும் நடத்தி போல்ஷ்விக்குகள் பின்பற்றிய பாதையைப் பின்பற்றாமல் சட்ட விரோதமான போராட்டங்களை மட்டுமே நடத்தி சட்டப்பூர்வமான போராட்டங்களை நடத்தத் தவறியதால் அவர்கள் மக்களின் செல்வாக்கை இழந்து மக்களிடமிருந்து தனிமைப்பட்டுப் போனார்கள்.ஆகவே இந்திய கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்ட வலது மற்றும் இடது சந்தர்ப்பவாத தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தமது தவறுகளை களையாமல் இந்தியாவில் கம்யூனிச இயக்கம் வளரமுடியாது என்பதை கம்யூனிஸ்டுகள் உணர வேண்டும்.

ரஷ்யாவில் இடது சந்தர்ப்பவாதத்தையும் வலது சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்து போல்ஷ்விக்குகள் தொடர்ந்து போராடி வெற்றிபெற்றதன் காரணமாகவே ரஷ்ய போல்ஷ்விக்குகள் தொடர்ந்து அவர்களது புரட்சிகரத் தன்மையை பாதுகாத்து வளர்த்துக்கொண்டதன் மூலமே அவர்களால் ரஷ்யாவில் ஒரு புரட்சியை நடத்த முடிந்தது.

ஆனால் இந்தியாவில் வலது சந்தர்ப்பவாதத்தையும் இடது சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்துப் போராடி போல்ஷ்விசத்தை கம்யூனிச இயக்கமானது இன்றுவரை பாதுகாக்கவில்லை. ஆகவேஇன்றைய கம்யூனிஸ்டுகளின் முதன்மையான பணியாக இத்தகைய மார்க்சிய லெனினியத்திற்கு எதிரான அன்னிய வர்க்கப் போக்குகளை எதிர்த்துப் போராடி ஒரு சிறந்த போல்ஷ்விக் பாணியிலான ஒன்றுபட்ட கம்யூஸ்டுக் கட்சியை கட்டிட நாம் பாடுபடவேண்டியது மிகவும் அவசியமாகும்.தேன்மொழி.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்