'ஊழல் எதிர்ப்பு இந்தியா'

அன்னா அசாரே தலைமையிலான 'ஊழல் எதிர்ப்பு இந்தியா' என்ற அமைப்பு, ஊழலை ஒழிக்க ஒரு வலுவான "ஜன் லோக்பால்"சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமென்ற இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வந்த அமைப்பு இப்பொழுது எங்கே ஒழிந்து கொண்டிருகின்றது.

மோடி என்ற பாசிஸ்ட்தான் பெரிய முகமூடி அணிந்து ஊழல் இல்லா நாட்டை கொண்டு வருவது போல் வார்த்தை ஜாலத்தால் மக்கள் ஏமாற்றி கொண்டிருகிறான். 

மோடி என்ற பாசிசக் கோமாளியின் மீது பந்தயம் கட்டியது முட்டாள்தனமோ?” என்று ஆளும் வர்க்கமே சிந்திக்கும் அளவுக்கு இந்த ஆட்சி சந்தி சிரித்துவிட்டது. மதவெறி அரசியல் மூலம் வாக்குகளைப் பெற முடியாது என்பதால், சப் கா சாத், சப் கா விகாஸ்” (அனைவருடனும் முன்னேற்றம், அனைவருக்குமான முன்னேற்றம்)என்றெல்லாம் மோசடி செய்து மக்களை நம்ப வைத்த மோடி மஸ்தானால் வாக்களித்த எதையும் வரவழைக்க முடியவில்லை.

பொருளாதாரம்,வேலைவாய்ப்புஉள்நாட்டு உற்பத்தி உள்ளிட்ட அனைத்திலும் தோல்வி. மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்டு அப் இந்தியா என்று புதுப்புது படங்களுக்குப் பூசை போடப்படுகிறதேயொழிய, ஒரு படமும் ரிலீஸ் ஆகவில்லை. ஒற்றைச்சாளர முறை, நான் தான் அனைத்தையும் முடிவு செய்வேன்என்பன போன்ற சவடால்களால், இந்த அரசுக் கட்டமைவுக்கு அப்பாற்பட்ட மாபெரும் சக்தி போலத் தன்னைக் காட்டிக் கொண்ட மோடியை நம்பி மக்கள் ஏமாந்து விட்டார்கள்.

   அப்பட்டமான மக்கள் விரோதக் கொள்கைகளால்  எல்லாத் தரப்பு மக்களின் வெறுப்பையும் ஈட்டியிருக்கிறார் திருவாளர் மோடிநான் விவசாயிகளின் எதிரி இல்லை,நான் தலித் மக்களின் எதிரி இல்லை,நான் கார்ப்பரேட் கையாள் இல்லைஎன்று ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டிற்குள் மக்களுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலைக்கு ஆளான கேடுகெட்ட ஒரு பிரதமரை மக்கள் முதன்முறையாகப் பார்க்கிறார்கள். சுவச் பாரத், யோகாசனம், மன் கி பாத்போன்ற சுயவிளம்பர கேலிக்கூத்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட வேகத்தில் பல்லிளிக்கின்றன.தான் 56அங்குல மார்பு கொண்ட ஆண்மகன் என்றும் மன்மோகன் சிங்கிடம் வாலாட்டுவதைப் போல பாகிஸ்தான் தன்னிடம் வாலாட்ட முடியாதென்றும் தேர்தல் பிரச்சாரத்தில் வெறியூட்டிய மோடி,நவாஸ் ஷெரிபைச் சந்தித்து விருந்துண்டு திரும்பிய சூட்டில், பதான்கோட்டில் தாக்குதல் நடக்கிறது. 56 அங்குல மோடி பிரதமரான பின்னர்தான் பாக். இராணுவம் 52 முறை எல்லை தாண்டி வந்திருக்கிறதுஎன்று மோடியைக் கேலி செய்கிறது ஆம் ஆத்மி கட்சி. எதிரில் இருப்பவர்கள் பேச மாட்டார்கள் என்ற உத்திரவாதம் இருக்கும் மேடைகளிலெல்லாம் பொளந்து கட்டும் மோடி,பத்திரிகையாளர்களையும் நாடாளுமன்றத்தையும் கண்டு நடுங்குகிறார்.

இந்த பாசிஸ்ட்தான் பெரிய முகமூடி அணிந்து கொண்டு தினம் தினம் புதிய புதிய பொய்களை தன் வார்த்தை ஜாலத்தால் மக்கள் ஏமாற்றி கொண்டிருகிறான்.குசராத் மாநில பெட்ரோலியக் கழகம் திட்டமிட்ட முறையில் கடன் ஏய்ப்பு செய்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அன்றைய குசராத் முதலமைச்சர் மோடிக்கு நெருக்கமான அதானி குழுமத்திற்கும்,மோசடி செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட பெயர்ப் பலகை நிறுவனங்களுக்கும் கிருஷ்ணா கோதாவரி படுகையில் பெட்ரோல் எடுப்பதற்கான துணைஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதுகுறித்த விரிவான விவரங்களை தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையை முன்வைத்து முன்னாள் அமைச்சர் ஜெயராம் ரமேஷ்  அம்பலப்படுத்தி வருகிறார். (காண்க: தி இந்து ஆங்கிலம், 2016-ஏப்ரல்-18, ஏப்ரல் 29, மே 13 இதழ்கள்)

ஒரு லிட்டர் பெட்ரோல் கூட கிடைக்காது என்று தெளிவாக அறிக்கை வெளியிட்ட பின்பும் மோசடி செய்வதற்கென்றே அரசு வங்கிகளில் ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளதை ஜெயராம் ரமேஷ் எடுத்துக்காட்டுகிறார். நரேந்திர மோடி போன்ற ஆட்சியாளர்களும், அரசியல் தலைவர்களும் பல்லாயிரம் கோடி ரூபாய் கையூட்டு பெறுவதற்கென்றே அரசு நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டு அரசு வங்கிகள் திவாலாக்கப்படுவதை இது எடுத்துக் காட்டுகிறது.

 

நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ ஊழலை எதிர்த்து மக்கள் இயக்கத்தைக் கட்டியமைப்போம்!!

 அன்னா அசாரே தலைமையிலான 'ஊழல் எதிர்ப்பு இந்தியா' என்ற அமைப்பு, ஊழலை ஒழிக்க ஒரு வலுவான "ஜன் லோக்பால்"சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமென்ற இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த இயக்கத்திற்கு நாடு முழுவதிலிமிருந்து நடுத்தர வர்க்க மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது. கடந்த ஆகஸ்டு 16 ஆம் தேதி டெல்லியில் நடந்த உண்ணா விரதத்தின்போது பல லட்சம் பேர் ஊழலுக்கு எதிராக அணிதிரண்டது, சோனியா-மன்மோகன் கும்பலின் மத்திய ஆட்சிக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது.

 வரலாறு காணாத மாபெரும் ஊழல்கள்

சோனியா-மன்மோகன் கும்பலின் தலைமையிலான .மு.கூட்டணி ஆட்சி, வரலாறு காணாத மாபெரும் ஊழல்களில் சிக்கியுள்ளது. 2ஜி அலைக்கற்றை ஊழலில் ரூ.1,76,000கோடி,  காமன் வெல்த் விளையாட்டு ஏற்பாட்டில் ரூ.70,000கோடி.பி.எல் கிரிக்கெட் ஊழல்ஆதர்ஷ் வீட்டுமனையில் ரூ.60,000கோடி ஊழல்பன்னாட்டு முதலாளிகளுக்கு விவசாயிகளிடமிருந்து மலிவான விலையில் நிலத்தைப் பிடுங்கி ரியல் எஸ்டேட் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பது என்ற பேரில் பல லட்சம் கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது

மேலும் நிலக்கரிஇரும்பு போன்ற கனிம வளங்களை உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளிடம் தாரை வார்த்ததிலும் பல லட்சம் கோடிகள் அரசின் கஜானாவிற்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறு ஊழல், ஊழல் எங்கெங்கு காண்கிலும் ஊழல் என சோனியா-மன்மோகன் கும்பல் ஊழலில் திளைத்து வருகிறது.

 

அன்னா அசாரே ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்குவதற்கு முன்பே, டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) என்ற அமைப்பும், உலகளாவிய நிதி ஒழுங்கமைப்பு (Global Financial Integrity - GFI) என்ற தொண்டு நிறுவனமும், மன்மோகன் கும்பலின் ஆட்சி ஆசியாவிலேயே மிகவும் ஊழல் மலிந்த ஆட்சி என்று அறிவித்தன. இதில் இரண்டாவதாக கூறப்பட்ட GFI என்ற நிறுவனம் அமெரிக்காவின் போர்டு பௌண்டேஷன் நிறுவனத்தால் நடத்தப்படுவதாகும். அன்னா அசாரே இயக்கத்தின் தலைமையிலுள்ள குழுவினரில் பலர் இந்த நிறுவனத்திடம் இருந்து நிதி உதவி பெற்றுதான் செயல்பட்டுவருகின்றனர்.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு, 2010ஆம் ஆண்டு நடத்திய ஊழல் பற்றிய உலகளாவிய மக்களின் கருத்துஎன்ற ஆய்வின்படி கடந்த மூன்று ஆண்டுகளில் ஊழல் கட்டுக்கடங்காமல் செழித்து வளர்கிறது என்று கூறப்பட்டுள்ளது. சட்டவிரோதமான நிதி 

பரிமாற்றங்கள்,புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளின் கீழ்,உலகமய தாராளமய தனியார்மயக் கொள்கைகளின்கீழ் பன்னாட்டுக் கம்பெனிகள்,உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் மற்றும் வர்த்தக சூதாட்டக்காரர்கள் பெருமளவில் சட்டவிரோதமான நடவடிக்கைகள் மூலம் பல லட்சம் கோடிகள் ஊழலில் ஈடுபடுகின்றனர் என்றும் அது கூறுகிறது. ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் அனுபவங்கள் காட்டுவது:கார்ப்ரேட் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், வங்கிகள் - சர்வதேச சட்டங்களையும், தேசிய சட்டங்களையும் புறக்கணித்தும்,இரகசிய வழிமுறைகளைக் கையாண்டும் சட்ட விரோதமான முறையில் ஆண்டொன்றுக்கு 1டிரில்லியன் டாலர்கள் நாடு கடந்து கடத்தப்படுகிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.


உலகளாவிய நிதி ஒழுங்கமைப்பு என்ற நிறுவனம் வரி ஏய்ப்பின் மூலமும், கிரிமினல் நடவடிக்கைகள் மூலமும்,சுதந்திர வர்த்தகம் என்ற பேரில் தவறான விலை நிர்ணயித்ததன் மூலமாகவும்,ஊழல் மூலமாகவும் இந்தியாவிலிருந்து 1948 முதல் 2008 வரையிலான காலத்தில் 21,300 கோடி அமெரிக்க டாலர்கள் பணம் (ரூ.9,58,500 கோடி) வெளி நாடுகளில் பதுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. இதில் 68 சதவீதம் அதாவது சுமார் 6,20,000 கோடி டாலர்கள் 1991-க்குப்பின் பொருளாதார சீர்திருத்தங்களுக்குப்பின் பதுக்கப்பட்டுள்ளது என்றும் அது கூறுகிறது.

எனவே ஊழலின் அளவு பிரம்மாண்டமாக பெருகிவருவதும், வெளி நாடுகளில் பதுக்கப்படுவது அதிகரித்து வருவதும் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் போன்ற புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் கொள்கைகளால் அதிகரித்துள்ளது என்பது தெளிவாகிவிட்டது.

ஏகாதிபத்திய ஆதரவு நிறுவனங்களின் ஆய்விலேயே இவ்வளவு என்றால் உண்மையான கருப்புப்பணத்தின் அளவு இதைவிட பன்மடங்கு அதிகமாகவே இருக்கும். நாட்டில் நடைபெற்றுவரும் மாபெரும் ஊழல்களுக்குக் காரணம் இந்திய அரசு கடைபிடித்து வரும் உலகமய, தாரளமய தனியார்மயக் கொள்கைகளாகும். 1991 -ஆம் ஆண்டு நரசிம்மராவ் காலத்திலிருந்து தொடங்கி பா..கட்சி உள்ளிட்ட அனைத்து ஆட்சிகளும் ஏகாதிபத்தியவாதிகளுடன் செய்து கொண்டுள்ள அரசியல் பொருளாதார உடன்படிக்கைகளும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் மன்மோகன்சிங் கும்பல் செய்து கொண்டுள்ள அணுசக்தி மற்றும் இராணுவ ஒப்பந்தங்கள் அனைத்தும் மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. அரைக்காலனிய,  அரைநிலப்பிரபுத்துவ நாடான இந்தியாவில் அரைகுறையான கட்டுப்பாடுகளும், பாதுகாப்பும் உலகமய தனியார்மயக் கொள்கைகளால் தகர்க்கப்பட்டு பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்காடாக இந்தியா மாற்றப்பட்டு வருகிறது. நீர், நிலம், ஆகாயம் அனைத்தும் ஏகாதிபத்தியவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. புதிய தாராளமயக் கொள்கைகள் நாட்டின் தொழிலையும்வேளாண்மையையும் அழித்து நாட்டை ஓட்டாண்டியாக்குவதுடன், நாட்டின் அரைகுறை சுதந்திரமும் ஒழிக்கப்பட்டு - நாட்டில் ஊழல் வெள்ளம் கரைபுரண்டோடுவதற்குக் காரணமாக உள்ளது. அதில் 80 சதவீத உழைக்கும் மக்கள் இந்தியாவில் தத்தளித்து நிற்கின்றனர்.

ஊழலுக்கு எதிரான உலகளாவிய மக்கள் இயக்கங்கள்

ஊழல் பிரச்சினை என்பது இந்தியாவிற்கு மட்டுமே உரித்ததன்று. மாறாக அது ஒரு உலகு தழுவிய பிரச்சினையாகும். இவ்வாண்டின் மத்தியில் மத்திய கிழக்கு நாடுகளில் தொடங்கியுள்ள "அரபு எழுச்சி"கள் துனுசியா, எகிப்து, பக்ரைன் முதல் தற்போது லிபியா மற்றும் சிரியா வரை ஏற்பட்டுள்ள மக்களின் எழுச்சிகள் அனைத்திலும், ஊழல் ஒழிப்பு என்பது மையமான கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது. இந்த இயக்கங்கள் அனைத்தும் ஊழலை மட்டுமே முன்வைத்து நடைபெறவில்லை. மாறாக அந்நாடுகளின் இராணுவ சர்வாதிகார ஆட்சியை தூக்கியெறிவதும்,
ஜனநாயகத்தைக் கொண்டுவருவதும் முக்கிய குறிக்கோளாக உள்ளன. ஆனால் இவ்வெழுச்சிகள் அனைத்தையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தலையிட்டு தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறது.

அந்நாடுகளில் இராணுவ ரீதியில் தலையிட்டு அவ்வாட்சிகளை ஒழித்துவிட்டு தமது அடிவருடிகளைக் கொண்டு பொம்மை ஆட்சியை நிறுவி வருகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் 2010ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு யுத்த தந்திரத் திட்டத்தை முன்வைத்து அந்நாட்டின் வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது:
ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாக்க அமெரிக்கா எந்த ஒரு நாட்டிலும் தலையிடும் என்றும் அதற்கு அரசுசாரா தொண்டு நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்வோம் என்றும் கூறினார். 2001 - இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு சர்வதேச பயங்கரவாதத்தை 
ஒழிப்பது, பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது எனும் பேரில் தமக்கு அடங்க மறுத்த நாடுகளை பொறுக்கி அரசுகள்என அறிவித்து அந்நாடுகளில் இராணுவத் தலையீடு செய்தது. ஆப்கன் மற்றும் ஈராக் மீது இராணுவத் தலையீடு செய்து அந்த நாடுகளின் ஆட்சிகளை தூக்கியெறிந்து பொம்மை ஆட்சிகளை நிறுவிக்கொண்டது. தற்போது அமெரிக்க ஏகாதிபத்தியம் தமது மேலாதிக்க நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஜனநாயகம், மனித உரிமை பேரால் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு, மக்களின் எழுச்சிகளைப் பயன்படுத்திக் கொண்டு தமது பொம்மை ஆட்சிகளை எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் உருவாக்கியுள்ளது.

மக்களின் எழுச்சி தற்போது அரபு நாடுகளில் மட்டுமல்லாது முதலாளித்துவ மைய நாடுகளிலேயே காட்டுத் தீ போல் பற்றிப் படர்கிறது. அமெரிக்காவின் "வால்ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம்",

``முதலாளித்துவம் ஒழிக" என்று அந்த அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் கிளர்ச்சி பரவியுள்ளது. அது ஐரோப்பா, ஜப்பான் என்று முதலாளித்துவ மைய நாடுகள் முழுவதும் 87 நாடுகளில் பற்றிப் படர்ந்து வருகிறது.

இவ்வாறு மக்கள் உலகம் முழுவதும் ஆட்சிக்கு எதிராக போர்க்கோலம் கொண்டு போராடுவதற்கான காரணம் என்ன?

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் நடைமுறைப்படுத்திவரும் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகள் முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியை உலகு தழுவியதாக மாற்றியுள்ளது. 2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியிலிருந்து இன்னமும் ஏகாதிபத்திய நாடுகள் மீளவில்லை. ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களின் எடுபிடிகளும் முதலாளித்துவ நெருக்கடிகளின் சுமைகள் முழுவதையும் மக்கள் மீது திணித்தார்கள். இதற்கு எதிராகத்தான் மக்கள் எதேச்சதிகார ஆட்சியை எதிர்த்தும், ஜனநாயகத்திற்காகவும், ஊழலை எதிர்த்தும் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர்.

இந்தியாவில் மன்மோகன் கும்பலின் ஆட்சி பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீது சுமத்துவதையும், மாபெரும் ஊழல்களில் ஈடுபடுவதை எதிர்த்தும் மக்கள் மத்தியில் கோபம் வெடிக்கின்ற ஒரு சூழலில், ஏகாதிபத்திய ஆய்வு நிறுவனங்கள் மன்மோகன் கும்பலின் ஊழலை எதிர்த்து அறிக்கைவிடும் ஒரு நிலைமையில்தான் அன்னா அசாரே இயக்கம் ஊழலை மட்டுமே முன்நிறுத்தி ஒரு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.

அன்னா அசாரே கொண்டுவர வேண்டும் என்கிற ஜன்லோக்பால்சட்டமோ, அல்லது அரசாங்கம் முன்வைக்கும் லோக்பால்சட்டமோ ஊழலை ஒழிக்க உதவுமா என்பதை பரிசீலிக்கும்முன் ஊழல் என்பதன் இலக்கணம் என்ன என்பதையும், அதற்கான அடிப்படைகளையும் பரிசீலிப்போம்.

ஊழலின் இலக்கணம்

எங்கெல்ஸ் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்:

 

 ஜனநாயகக் குடியரசுக்கு இனி சொத்துரிமையினால் ஏற்படும் சொத்துரிமை வேறுபாடுகளைப் பற்றி (குடிமக்கள் ஒருவருக் கொருவரிடையில் ஏற்படும் வேறுபாடுகளைப் பற்றி) அதிகாரப் பூர்வமாக எதுவும் தெரியாது. அதில் செல்வம் தன்னுடைய சக்தியை மறைமுகமாக (உபயோகிக்கின்றது) பயன்படுத்துகின்றது, ஆனால் (அவ்வாறு செய்கையில்) முன்னிலும் உறுதியாக, திட்டவட்டமாகத் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றது. ஒரு புறத்தில் அதிகாரிகளை நேரடியாக லஞ்சத்தால் தம் கைக்குள்ளடக்கும் வடிவத்தில் இதற்கு சீரியஉதாரணத்தை அமெரிக்கா தருகின்றது மறுபுறத்தில் அரசாங்கத்திற்கும் பங்குகள் பரிவர்த்தனை அரங்கிற்கும் (ஸ்டாக் எக்ஸ்சேஞ்சிற்கும்) ஒரு நேசக்கூட்டின் வடிவத்தில்... 


லெனின், “ஏகாதிபத்திய பொருளாதாரவாதமும் மார்க்சியம் பற்றிய ஒரு கேலிச்சித்திரமும்என்ற தன்னுடைய நூலில், எங்கெல்சால் மேலே முன் வைக்கப்பட்ட மேற்கோளை எடுத்துக்காட்டுகிறார்.

அவர் முதலாளித்துவ சமுதாயத்தில் ஊழலின் சாராம்சத்தை ஆய்வு செய்துவிட்டு, முதலாளித்துவம் ஏகாதிபத்தியக் கட்டத்தை அடையும் போது எவ்வாறு (ஊழல்) அது மாற்றமடைகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறார்.

 

 ஜனநாயகக் குடியரசு என்பது முறைப்படி, தர்க்கவியல் வகையில்முதலாளித்துவத்துக்கு முரண்பட்டது, (முதலாளித்துவத்தை மறுதலிக்கிறது) ஏனெனில் அது அதிகாரபூர்வமாகபணக்காரர்களையும் ஏழைகளையும் சரிசமமான நிலையில் வைக்கிறது. பொருளாதார அமைப்பிற்கும் அதன் மீது எழுப்பப்பட்டுள்ள அரசியலமைப்பிற்கு-மிடையேயுள்ள ஒரு முரண்பாடு அதுஏகாதிபத்தியத்திற்கும் குடியரசுக்குமிடையே அதே முரண்பாடு இருக்கிறது. சுதந்திர (தங்குதடையற்ற) போட்டியின்றி (முதலாளித்துவம்) ஏகபோகத்திற்கு மாற்றம் அடைவதினால் அரசியல் சுதந்திரங்களை அடைவது முன்னிலும் கடினமாகின்றதுஎன்பதால், என்ற எதார்த்ததினால், இந்த முரண்பாடு ஆழ்ந்ததாகின்றது அல்லது முற்றிவிடுகிறது.


அப்படியானால் முதலாளித்துவம் எவ்வாறு ஜனநாயகத்தை ஏற்று ஜனநாயகம் இருப்பதை அனுமதித்துக்கொண்டு நிற்கமுடிகின்றது? முதலாளித்துவத்தின் சர்வ வல்லமையை மறைமுகமாக செயல்படுத்துவதினால். (அது அவ்வாறு ஜனநாயகத்தை சகித்துக் கொண்டிருக்கிறது) அதற்கு இரு பொருளாதார வழிவகைகள் இருக்கின்றன.
1)நேரடியாகத் தரும் லஞ்சம்
2)அரசாங்கம், பங்குக்கள் பரிவர்த்தனை அங்காடி ஆகிய இவ்விரண்டின் நேசக்கூட்டு,
(நம்முடைய) தத்துவக் கூற்றுகளில் இது பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது பூர்ஷ்வா அமைப்பு முறையில் நிதிமூலதனம் தங்குதடையின்றி சுதந்திரமாக லஞ்சம் கொடுக்கலாம், எந்த அரசாங்கத்தையும் விலைக்கு வாங்கமுடியும்


விற்பனைப் பண்ட உற்பத்தி மேலோங்கி ஆதிக்கம் பெற்றுவிட்டதும், பூர்சுவா வர்க்கமானது ஆதிக்கதிற்கு வந்தவுடன் பணத்தின் பலம் ஓங்கிநின்றதும் லஞ்சம் தருவது, (நேராகவோ அல்லது பங்குகளின் பரிவர்த்தனை அங்காடி அரங்கின் மூலமோ) எந்தவிதமான அரசாங்கத்திலும்எந்தவிதமான ஜனநாயகத்திலும் லஞ்சம் தருவது என்பது – “அடையக்கூடியதாகின்றது. (அதாவது விற்பனைப் பண்ட பொருளுற்பத்தி ஆதிக்கம் செலுத்துகையில் லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்துக் கொள்வது எந்தவிதமான அரசாங்க வடிவத்திலும் சாத்தியமாகின்றது மொ-ர்)
முதலாளித்துவம் என்பது ஏகாதிபத்தியத்திற்குப் பீடத்தைத் தந்தவுடன், அதாவது முந்தையகால முதலாளித்துவத்திற்குப் பதில் ஏகபோக முதலாளித்துவம் வந்தவுடன் - (மேற்கூறிய) இந்த விசயத்தில் எது மாறுகின்றது? என்று கேட்கலாம்.

பங்கு மார்க்கெட்டின், பங்கு பரிவர்த்தனை அரங்கின் சக்தி அதிகரிக்கின்றது என்பதுதான் அந்த மாற்றம். ஏனென்றால் நிதிமூலதனம் என்பது, தொழிலியல் மூலதனமானது, அதன் உச்ச உயர்ந்த[ ] மட்டத்தில், ஏகபோகம் என்ற மட்டத்தில், வங்கி மூலதனத்துடன் ஒன்றாக சேர்ந்துவிட்ட 
தொழிலியல் மூலதனமாகும். பெரிய வங்கிகள் பங்குகள் பரிவர்த்தனை அரங்குடன் ஒன்றாக இணைந்து, அதை அப்படியே தம்முடன் சேர்த்துக்கொண்டு விடுகின்றன. (ஏகாதிபத்தியம் பற்றி வெளியாகியுள்ள நூல்களும் கட்டுரைகளும், பங்குகள் பரிவர்த்தனை அரங்கின் பாத்திரம் வரவரக் குறைந்து வருவதாகக் கூறுகின்றன. ஆனால் இராட்சச வங்கி ஒவ்வொன்றும் அதுவே ஒரு பங்குகள் பரிவர்த்தனை அரங்காகியுள்ளது என்ற பொருளில்தான்.)”

பழைய காலனிய முறைக்குப் பதிலாக புதிய காலனிய முறை ஏற்பட்டதும் சூழ்நிலை மிக மோசமான முரண்பாடுடையதாயிற்று என்பதை நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு புறம், காலனிய முறை மாற்றியமைக்கப்படுவதன் காரணமாகவும் மற்றும் அப்போதிருந்த சோசலிச அமைப்பு மிகப்பெறும் நன்மதிப்பை பெற்றிருந்ததன் காரணமாகவும் புதிய காலனிமுறை பழைய காலனி முறையைவிட மிகுந்த ஜனநாயக முறையைமேற்கொள்ள வேண்டியிருந்தது.

பூர்ஷ்வா ஜனநாயகமுறை, இப்போது எல்லா தேசங்களும் சமமானவை என்றும், ஆகையால் (எல்லா தேசங்களும் சமமானவை), எல்லா தேசமக்களும் சமமானவர்கள் என்றும் சமாதானப்படுத்த வேண்டியுள்ளது. அதே சமயம், சில தேசங்கள் மற்றெல்லா தேசங்களின் மீது ஆதிக்கம் செய்வதை அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்தியமுறை 

ஜனநாயக முகமூடியைத் தொடர்ந்து நிலைநிறுத்திக்கொண்டே, அத்தகைய ஆதிக்கத்தை அனுமதிப்பதற்கு சர்வதேச நிதியம் (IMF), உலகவங்கி (World Bank) போன்ற பிற சிறப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டன (Devised). மறுபுறம், அதேசமயம், புதிய காலனியத்தின் கீழ் நிதி மூலதனம் ஒன்றுகுவிதல் அதிகரித்தல் மற்றும் தொழிலின் மீது அவற்றின் கட்டுப்பாடு வரலாறு காணாத மட்டத்தை அடைந்தது. ஜனநாயக முகமூடியைத் தக்கவைத்துக்கொண்டே, கட்டமைப்பு சீர்திருத்தங்கள் (the Structural Programs) அதாவது ஏகாதிபத்திய வல்லரசுகளின் பொருளாதாரத் திட்டங்கள் புதிய காலனிய நாடுகளின் தொண்டைக்குள் திணிக்கப்பட்டன.

கீன்சிய கொள்கைகளுக்குப் பதிலாக புதிய தாராள பொருளாதாரக் கொள்கைகள் மேற்கொள்ளப்படுதல் மற்றும் உலகமயமாதலின் எழுச்சி - அதாவது தேசபடங்கள் (தேச விதிகள்) மரபுகள் ஆகியவற்றை மதிக்காமல் மூலதனம் தேச எல்லைக்குள் சுதந்திரமாக வந்து செல்வதற்கு அனுமதி அளிப்பதால் சூழ்நிலை மேலும் ஜனநாயகமற்றதாகிவிடுகிறது (undemocratic).

இந்த எல்லா மாறுதல்களுக்கு ஊடேயும் ஜனநாயக முகமூடி கலையாமல் பாதுகாக்க வேண்டும். பொருளாதாரத்தில் அதிகரித்துவரும் ஜனநாயகமற்ற தன்மைக்கும் அரசியல் அமைப்பின் ஜனநாயக கோட்பாடுகளுக்கும் இடையிலான முரண்பாட்டை எவ்வாறு இணக்கம் காணச் செய்வது (சம்மதம் செய்துகொள்ளச் செய்வது).

லெனின் சுட்டிக்காட்டிய அடிப்படையான முறைகளில் மாற்றமில்லை - அதிகாரிகளுக்கு பகிரங்கமாக லஞ்சம் அளித்தல் (2G அலைக்கற்றை ஊழல், வாட்டர் கேட் ஊழல் போல) மற்றும் பங்கு பரிவர்தனை அங்காடிக்கும் அரசாங்கத்திற்கு இடையிலான நெருக்கமான தொடர்பு (பன்னாட்டு கம்பெனிகள், பெரும் இந்திய கார்பரேட்டு நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இன்றுள்ள நெருக்கமான தொடர்புகள் போல).

இத்துடன் லெனின் காலத்தில் இல்லாத ஒன்று அதாவது மூன்றாவது நிகழ்வுப்போக்கு (phenomena) ஏற்கெனவே பெறப்பட்ட அடிப்படையான 
முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளையும் கூட குறைத்து விடுதல். இவ்வாறு சங்கம் அமைத்துக்கொள்ளும் உரிமை, எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை, சமூகப் பாதுக்காப்புக்கான உரிமை - இவையெல்லம் உலகமயமாதலின் கீழ் வெட்டி குறுக்கப்படுகிறது.

ஆகையால், ஊழலை உண்மையாகவே எதிர்த்துப் போராடவேண்டுமானால், நாம் இந்த முதலாளித்துவ அமைப்பையே எதிர்த்துப் போராடவேண்டும் என்பதைக் காணலாம்.

சுருங்கக் கூறின்:

1)முதலாளித்துவம் எந்தவிதமான அரசாங்கத்திலும் எந்த விதமான ஜனநாயகத்திலும் ஆதிக்கம் செலுத்த முடியும். அதற்கு இரு பொருளாதார வழிகள் இருக்கின்றன.

) நேரடியாக தரும் லஞ்சம்

) அரசாங்கம் பங்குகள் பரிவர்த்தனை அங்காடி ஆகிய இரண்டின் கூட்டு.

2)இன்றைய புதியகாலனியக் கட்டத்தில் நிதிமூலதனம் தன் சொந்த நாட்டில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வசப்படுத்துவதின் மூலம் அந்நாட்டு அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செய்ய முடிவதைப் போலவே, அந்நிய நாட்டில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வசப்படுத்துவதன் 
மூலம் அந்நாட்டின் அரசாங்கத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியும்;

தம் சொந்த நாட்டு அரசாங்கத்துக்கும் பங்கு பரிவர்த்தனை அங்காடிக்கும் இடையிலான கூட்டின் மீது ஆதிக்கம் செய்வதைப் போலவே, நிதிமூலதனம் அந்நிய நாட்டு அரசாங்கத்துக்கும் பங்கு சந்தை அங்காடிக்கும் இடையில் கூட்டு ஏற்படுத்துவதன் மூலம் அந்த நாட்டின் மீது ஆதிக்கத்தை ஏற்படுத்தமுடியும்.

3) முதலாளிகள் (மூலதனம்) அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களை வசப்படுத்தி அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து முறைகேடான அல்லது சட்டத்திற்கு புறம்பான முறையில் ஆதாயம் அடைவதும் ஆகிய இரண்டுமே ஊழல் ஆகும்.

முதலாளித்துவ ஊழலை அன்னா அசாரே கும்பல் எதிர்க்கவில்லை

அன்னா அசாரேவுக்கோ, அவரை முன்னிறுத்தி ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை நடத்தும் அரசுசாரா அமைப்புகளுக்கோ, நமது நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் உள்நாட்டு பெரும் தரகுமுதலாளிகள் மேற்கொள்ளும் இரு பொருளாதார வழிகள் அதாவது

) நேரடியாக தரும் லஞ்சம்

) அரசாங்கத்திற்கும் பங்குகள் பரிவர்த்தனை அங்காடிக்கும் இடையிலான கூட்டு ஆகிய இரண்டைப் பற்றி கவலை இல்லை.

முதலாளிகள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களை வசப்படுத்தி முறைகேடான அல்லது சட்டத்திற்கு புறம்பான முறையில் ஆதாயம் அடையும் ஊழலைப் பற்றியும் அன்னா அசாரே கும்பலுக்கு கவலையில்லை.

ஆட்சியிலுள்ள அரசியல்வாதிகள் மீது நெருப்பைக் கக்கும் அன்னா அசாரே கும்பல், பன்னாட்டுக் கம்பெனிகள், உள்நாட்டு பெரும் தரகுமுதலாளிகள், கார்ப்பரேட் குழுமங்கள் மற்றும் பிற ஆளும் வர்க்கப் பிரிவினர்களைப் பற்றி மௌனம் சாதிக்கிறது. ஆனால் மேற்கூறப்பட்ட முதலாளித்துவ 
கும்பல்கள்தான் ஊழல் மற்றும் நேர்மையான, அரசாங்கத்தின் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை அமூல்படுத்தல் ஆகிய இரண்டு முறைகளின் மூலம் பிரதானமாகப் பயனடைபவர்கள். மேலும் அரசாங்க மட்டத்திலான ஊழல் நடைமுறைகளில் தொடர்புடைய பெரிய தொழில் நிறுவனங்கள் மீதும் வர்த்தக நிறுவனங்கள் மீதும் அன்னா அசாரேயின் ஜன்லோக்பால் அமைப்பில் நடவடிக்கை எடுப்பதற்கான விதிகள் எதுவும் இல்லை.

ஜன்லோக்பால் மசோதா முழுவதுமாக நீக்க விரும்புவதாகக் கூறிக்கொள்ளும் பெரும் குற்றமான ஊழல்குறித்து அதற்குச் சொந்தமான ஒரு வரையறையை வகுத்துக்கொள்ளவில்லை என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகின்ற ஒரு செய்தியாகும்.

ஜன் லோக்பால் மசோதாவின் ஆசிரியர்கள், 1988ஆம் ஆண்டு குற்றத்தடுப்புச் சட்டத்தின் 2(4) பிரிவு ஊழல்குறித்து என்ன வரையறை செய்துள்ளதோ அதையே தமது ஜன்லோக்பால் மசோதாவிலும் ஊழல்குறித்த வரையறையாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆகையால் ஜன்லோக்பால் மசோதாவில் உள்ள ஊழல்குறித்த வரையறை அதற்குச் சொந்தமானது அல்ல. தற்பண்பு உடையதுமல்ல. அதற்கு மாறாக குற்றத் தடுப்பு சட்டத்திடமிருந்து கடனாகப் பெறப்பட்டது. ஆகையால் அது தாய் சட்டத்தின் எல்லா பிற்போக்கையும் வரித்துக்கொண்டதாகும்.

1988ஆம் ஆண்டு குற்றத் தடுப்புச் சட்டம் பொதுவான ஊழலை ஒழிப்பதற்கான ஒரு சட்டம் அல்ல. அதற்கு மாறாக, அதிகாரபூர்வமாக, சட்டப்படியாக செய்துகொடுக்கவேண்டிய ஒன்றை அவ்வாறு செய்துகொடுப்பதற்குப் பதிலாக, தவறான வழிகளில் செய்து கொடுப்பதற்கு பணம் அல்லது வெகுமதியாகக் கொடுக்கப்பட்ட பொருட்களை லஞ்சமாக (கையூட்டாக) பெற்றுக்கொண்டு ஊழல் நடைமுறையில் ஈடுபடும் அரசு ஊழியர்களை (public servants) தண்டிப்பதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.

ஜன் லோக்பால் மசோதாவும் அரசாங்கத்தின் 1988ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தைப் போலவே, ஊழலைப் பற்றிய தனது வரையறையில் ஊழல் என்பது அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து முறைகேடான அல்லது சட்டத்திற்கு புறம்பான முறையில் ஆதாயம் அடைவதை மட்டுமே ஊழல் என்று வரையறை செய்கிறது. முதலாளிகள் (பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகள்) அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களை வசப்படுத்தி அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செய்வதை ஊழல் என்று வரையறை செய்யவில்லை. முதலாளிகள் அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக நேரடியாக தரும் லஞ்சத்தை தனது ஊழலைப் பற்றிய வரையறையில் சேர்க்காததற்குக் காரணம் என்ன?

ஏகாதிபத்திய சேவையில் அரசுசாரா நிறுவனங்கள்

அன்னா அசாரேவை முன்னிறுத்தி ஜன்லோக்பால் மசோதாவுக்காக போராடும் India Against Corruption என்ற அமைப்பு ஒரு அரசுசாரா அமைப்புதான். அரசுசாரா அமைப்பு (NGO) என்பதே தவறாக சூட்டப்பட்ட பெயர்தான். அரசுசாரா அமைப்புகள் வெளிநாட்டு அரசுகளின் நிதிமூலதனத்தில் இயங்குகின்ற அரசு சார்ந்த நிறுவனங்களே. அரசுசாரா அமைப்புகள் அனைத்திற்கும் ஏகாதிபத்திய அரசாங்கங்கள், ஏகாதிபத்திய அமைப்புகள் (பன்னாட்டு நிறுவனங்கள்) மற்றும் தரகுமுதலாளித்துவ ஆட்சியினரால் நிதிவழங்கப்படுகின்றன. உலகவங்கி, சர்வதேச நிதிநிறுவனம், தனியார் வங்கிகள், ஆசிய வங்கி போன்ற நிதிமூலதன கும்பல்கள் அரசுசாரா நிறுவனங்களுக்கு நிதிவழங்குவது மட்டுமல்லாமல் அவற்றை நெறிப்படுத்தவும் செய்கின்றன.

அன்னா அசாரே தலைமையிலான ஊழலுக்கு எதிரான இந்தியாஎன்ற அமைப்பின் தலைமையில் இடம்பெற்றுள்ளவர்களில் பலர் அமெரிக்காவின் ஃபோர்டு பவுண்டேசன் அமைப்பின் நிதி உதவிப் பெற்றே செயல்படுகின்றனர். அரவிந்த் கேஜரிவால் தமது நண்பர் மனிஷ் சிசோடியா மூலம் (கபீர் என்ற அமைப்பு) அந்நிறுவனத்திடமிருந்து 3,97,000 டாலர்கள் பெற்றுள்ளார். இத்துடன் நீல்கேணீ (NLAEAR) 2,30,000 டாலர்களும், ஜவகர்லால் பல்கலைக்கழகம் 4,00,000 டாலர்களும், மாத்யூடைட்டன் (Sa-than) 9,10,000 டாலர்களும், சந்தீப் தீட்சித் (CBGA) 6,50,000 டாலர்களும், யோ கேந்திர யாதவ் (ICSSR) 3,50,000 டாலர்களும் பிரதாப் பானு (CPR) 6,87,000 டாலர்கள், பார்த்தீப் ஷா (CMAC) 2,50,000 டாலர்களும், அபித் பெவார் (NFI) 25,00,000 டாலர்களும், கிளாட்வின் ஜோசப் (ATREE) 13,19,391 டாலர்களும், சினுஸ்க் மீதர் (Winrock Intl) 18,00,000 டாலர்கள், இந்தியா ஜெய்சிங் (Laugher and Collective) 12,40,000 டாலர்களும், அகிலா சிவராசன் (CA & R) 5,00,000 டாலர்கள் என அனைவரும் பணம் பெற்றுள்ளனர். இவ்வாறு இக்கும்பல் அமெரிக்க ஏகாதிபத்திய நிதி உதவி பெற்று - ஏகாதிபத்தியத்தின் அடிமை சேவகர்களாக செயல்பட்டு வருகின்றனர். உள்ளூர் பிற்போக்கு அரசுகளின் தனிப்பட்ட துணை ஒப்பந்தக்காரர்களாகவும் இவ்வமைப்புகள் செயல்படுகின்றன. அரசுசாரா அமைப்புகள் அராசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் ஒரு தொடர்பு பாலமாக செயல்படுகின்றன.

சுரண்டல்வாதிகள் சிவில் சமூகத்தின் கருத்துக்களில் தாங்கள் விரும்பும் தாக்கங்களை ஏற்படுத்த இவ்வமைப்புகளை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர். அவர்கள் ஏகாதிபத்திய கையாட்கள் ஆவர். அனைத்து அரசுசாரா அமைப்புகளை கண்ணுக்குத் தெரியாத ஏகாதிபத்தியக் கைகளால், அந்த ஏகாதிபத்தியத்தின் நீண்டகாலக் குறிக்கோள்களை அடைவதற்காக ஆட்டுவிக்கப்படுகின்றனர் உலகவங்கி மற்றும் பிற .நா.அமைப்புகள் தாம் வழங்கும் நிதி யாவற்றையும் அரசுசாரா அமைப்புகள் மூலம் பயன்படுத்த வேண்டும் என்று வற்புறுத்துகின்றன. அதை அப்படியே ஏற்று பல்வேறு அரசாங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. வெவ்வேறு காலகட்டங்களிலும் அரசுசாரா அமைப்புகளின் செயல்பாடுகள் அப்போதைய ஏகாதிபத்தியவாதிகளின் தேவைகளை ஒட்டியே நிர்ணயிக்கப்பட்டன.

உலகமயமாக்கல் காலகட்டத்தில்,குறிப்பாக சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் திருத்தல்வாதிகளின் ஆட்சிகள் வீழ்ச்சியுற்ற பின்னர்,அரசுசாரா மற்றும் குடிமை சமுதாய அமைப்புகள் தாராளமயமாக்கலின் மோசமான விளைவுகளை ஈடுசெய்யும் பணியில்,ஏகாதிபத்தியவாதிகளால் முன்வைக்கப்படும் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதை தங்களது கடமையாக ஏற்றுச் செயல்படுகின்றன.

அவை ஏகாதிபத்திய அமைப்புகளாகிய உலகவங்கி, .எம்.எப்., உலக வர்த்தக கழகம் போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்களை சீர்திருத்தியமைக்க முடியும் என்ற மாயையை மக்களிடம் பரப்ப முயலுகின்றன. இவ்வாறு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்களின் கோபத்தை நீர்த்துப் போகச் செய்து,சீர்த்திருத்தக் கருத்தாக்கத்திற்கு மக்களைத் திருப்பியிழுத்துச் செல்கின்றன. இன்று ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக,குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகெங்கும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மக்களை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து திசைதிருப்பும் பணியில் அரசுசாரா அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. ஏகாதிபத்தியத்தையும் தரகுமுதலாளித்துவத்தையும் எதிர்த்தப் போராட்டத்தை திசைத் திருப்பவே அன்னா அசாரே கும்பல் ஜன் லோக்பால் மசோதா, அதிகாரிகளைத் தண்டிப்பதற்கான சட்டமாக குறுக்கிக்கொள்கிறது. ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பெனிகள்,தரகுமுதலாளிகளின் ஊழல் நடவடிக்கையை எதிர்த்துப் போராடும் சட்டமாக ஜன்லோக்பால் மசோதாவை அது உருவாக்க மறுக்கிறது

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்