மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள் வி. லெனின்

 மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில  சிறப்பியல்புகள் வி. லெனின்

கார்ல் மார்க்ஸ் போதனையின் முக்கிய சாரத்தை வெளிப்படுத்தி பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் இந்தப் போதனையின் விதியைக் காட்டுகின்றன. ‘மார்க்சின் போதனை மெய்யானது, அதனால் தான் அது எல்லாம் வல்ல தன்மை பெற்றிருக்கிறது. அது முழுமையான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஓர் ஒன்றிணைந்த உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது. எந்த வடிவத்திலுமமைந்த மூடநம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு ஆதரவோ இந்த உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது. ஜெர்மானியத் தத்துவஞானம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோசலிசம் என்ற வடிவத்தில் 19-ஆம் நூற்றாண்டில் மனித குலம் உருவாக்கித் தந்த தலைசிறந்த படைப்புகளின் உரிமை பெற்ற வாரிசுதான் மார்க்சியம்.

மார்க்சியத்தின் வெற்றிகள், இதனுடைய எதிரிகளை மார்க்சியப் போர்வைக்குள் புகுந்து கொள்ளுமாறும் மார்க்சின் போதனையைத்திரித்துக்கொச்சைப்படுத்துமாறும் நிர்ப்பந்திக்கின்றன என்று லெனின் தன் கட்டுரைகளில் காட்டுகின்றார், னால் இவை வீணான முயற்சிகள்; ஒவ்வொரு புதிய வரலாற்றுச்சகாப்தமும்,முரண்பாடுகளையும் கேடுகளையும் உடைய முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிச சமுதாயத்திற்கு மாறிச் செல்லும் பாதையை மனித குலத்திற்குக் காட்டும் தத்துவம் என்ற வகையில் மார்க்சியத்திற்கு மேன்மேலும் அதிக வெற்றியைக் கொண்டு வருகிறது.

முதலாவது காலப்பகுதி போர்த்தந்திரம் பற்றிய பிரச்சனைகளென்று வழக்கமாகக் குறிக்கப்படுகிறவற்றை மார்க்சியத்தின் முன்வரிசையில் கொண்டு வந்து நிறுத்தியது. இது ஏதோ தற்செயலாக நடக்கவில்லை;தேவையின்கட்டாயத்தால் ஏற்பட்டது. இந்தப் பிரச்சனைகள் குறித்துக் கிளம்பிய சர்ச்சைகளும் கருத்து வேற்றுமைகளும் அறிவுத் துறையினரிடையேநடக்கிறசர்ச்சைகள்தான் என்றும், ‘பக்குவமடையாத பாட்டாளி வர்க்கத்தின் மேல் செல்வாக்குப் பெறுவதற்காக நடக்கும் ஒரு போராட்டமேஎன்றும், ‘அறிவுத் துறையினர் தங்களைப் பாட்டாளி வர்க்கத்துக்குத்தகவமைத்துக்கொள்வதைக்குறிப்பவையே என்றும் பல்வேறு சாயல்களிலுமான வேஹி ஆதரவாளர்கள் நினைக்கிறார்கள்; இதைவிட தவறான கருத்து வேறென்றுமில்லை. இதற்கு நேர்மாறாக இந்தப் பாட்டாளி வர்க்கம், பக்குவம் பெற்று விட்டதனால் தான், அது ருஷ்யாவின் முதலாளித்துவ வளர்ச்சி பூராவிலும் காணப்படும் இவ்விரண்டுவேறுபட்டபோக்குகளிடையே நடக்கிற போர் குறித்து ஏனோதானே என்றிருக்க முடியவில்லை; ஆகவே இந்த வர்க்கத்தின் தத்துவாசிரியர்கள் வெவ்வேறானஇவ்விரு போக்குகளுக்கும் (நேர் முகமாகவோ மறைமுகமாகவோ, நேரான பிரதிபலிப்பாகவோ எதிரான பிரதிபலிப்பாகவோ) ஏற்ற வகையில் தத்துவ ரீதியான வரையறுப்புகளை வகுத்துத் தருவதைத் தவிர்க்க முடியவில்லை.

இரண்டாவதுகாலப்பகுதியிலேருஷ்யாவின் முதலாளித்துவ வளர்ச்சியின் வெவ்வேறான போக்குகளிடையிலான போர்நிகழ்ச்சிஅரங்கில்காணப்படவில்லை, ஏனெனில் இந்த இரண்டு போக்குகளுமே பழுத்தபிற்போக்கர்களால்நசுக்கப்பட்டுவிட்டன, பின்னுக்குத் தள்ளப்பட்டு உள்வாங்கிக்கொள்ளும்படிச்செய்யப்பட்டன, தற்காலிகமாக மூச்சொடுக்கப்பட்டன. மத்திய காலத்தியப் பழுத்த பிற்போக்கர்கள் முன்னணிக்கு வந்து நின்று கொண்டதோடல்லாமல் முதலாளித்துவச் சமுதாயத்தின் மிக விரிந்த ஜனப்பகுதிகளிடையே வேஹியின்உணர்ச்சிகளை,மனச்சோர்வையும், மறுதலித்துக் கைவிடும் மனோநிலையையும் மேலோங்கச் செய்தனர். இப்போது தலை தூக்கியது பழைய அமைப்பு முறையைச் சீர்திருத்த நிற்கும் இரண்டு வழிமுறைகள் இடையிலான போர் அல்ல; எந்த விதமான சீர்திருத்தங்களிலும் நம்பிக்கையின்மை, “அடிபணிந்துவிடும்”, “பாவ மன்னிப்பு நாடும்மனப்பாங்கு, சமூக விரோதப் போதனைகளின் மீது மோகம், இறை ஞானப் பித்து இத்தியாதியானவையே இப்போது தலை தூக்கின.ஆச்சரியப்படத்தக்க முறையில் திடுதிப்பென நிகழ்ந்த இந்த மாறுதல் தற்செயலானதல்ல, வெளிப்புறநிர்ப்பந்தத்தினால் மட்டும் ஏற்பட்ட விளைவல்ல. இதற்கு முந்திய காலப்பகுதி,தலைமுறைதலைமுறையாய், பல நூற்றாண்டுகளாய், அரசியல் பிரச்சனைகளிலிருந்து ஒதுங்கி நின்று வந்த, அரசியல் பிரச்சனைகளே இன்னதென்று அறியாமலே இருந்து வந்த ஜனப்பகுதிகளை ஆழ்ந்த முறையிலே உலுக்கி உசுப்பி விட்டது. ஆகவே எல்லா மதிப்புகளையும் திரும்ப மதிப்பிடலும்’,அடிப்படைப்பிரச்சனைகளைப் புதிதாய்ப் பயில்வதும், தத்துவத்தில் அடிப்படைக் கூறுகளில் அரசியல் அரிச்சுவடியில் புதிய அக்கறை காட்டுவதும் இயற்கையாகவும் தவிர்க்க முடியாத வகையிலும் மேலோங்கின. நெடுந்தூக்கத்திலிருந்து திடீரென்று எழுப்பிவிடப்பட்டு மிகவும் முக்கியமான பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியதாகிவிட்ட கோடிக்கணக்கான மக்கள் அதிக காலத்துக்கு இம்மட்டத்தில் இருந்து கொண்டிருக்க முடியாது. இடைவேளை ஓய்வு பெறாமலும், ஆரம்ப அடிநிலைப் பிரச்சனைகளுக்குத் திரும்பாமலும், இணையற்ற பொருள் வளம் செறிந்த படிப்பினைகளை ஜீரணிக்கஉதவுவதும், ஒப்பிட முடியாத அளவு அதிக விரிவான ஜனத்திரள் முன்னிலும் மிகுந்த உறுதியோடும், உணர்வோடும், நிச்சயத்தோடும், விடாமுயற்சியோடும் முன்னேறுவதைச் சாத்தியமாக்குவதுமான புதிய பயிற்சி பெறாமலும் அவர்களால் மேற்செல்ல முடியவில்லை.நாட்டின் வாழ்க்கையின் சகல துறைகளிலும் உடனடிச் சீர்திருத்தங்கள் செய்து முடிப்பதுதான் முதலாவது காலப் பகுதியின் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்தது. பெற்ற அனுபவத்தை விமர்சித்து ஆராய்வது, இன்னும் அதிக விரிவான ஜனப்பகுதிகள் அந்த அனுபவத்தை ஜீரணிப்பது, சொல்லப் போனால் அந்த அனுபவம் அடிமண்ணுக்குள் எனலாம், அதாவது பல்வேறு வர்க்கங்களைச் சேர்ந்த பிற்பட்ட அணிகளுக்குள் ஊடுருவிச் செல்வது-இவைதான் இரண்டாவது காலப்பகுதியின் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்தன. காரணம், சரித்திர வளர்ச்சியின் இயக்கவியல் அப்படி அமைந்திருந்தது.

மார்க்சியம் உயிரற்ற வறட்டுச் சூத்திரம் அல்ல; இறுதி முடிவாக்கப்பட்டுவிட்ட, முன்கூட்டியே தயார் செய்து வைக் கப்பட்டுவிட்ட,மாற்றத்துக்குஇடமில்லாது இறுகிவிட்ட போதனைஅல்ல அது. செயலுக்கான உயிருள்ள வழிகாட்டி அது; சமுதாய வாழ்க்கை நிலைமைகளில் ஆச்சரியப்படத்தக்கஅளவில் திடுதிப்பென நிகழ்ந்த மாறுதல்களை இக்காரணத்தால் நிச்சயமாய் மார்க்சியம் பிரதிபலித்துக் காட்டவே செய்யும். ஆழ்ந்த சிதைவிலும், ஒற்றுமையின்மையிலும்,பலவகைப்பட்ட ஊசலாட்டங்களிலும்,சுருங்கச்சொன்னால் மார்க்சியத்துக்கு உள்ளேயே ஒரு மிகத் தீவிரமான நெருக்கடியிலும் இந்த மாறுதல் பிரதிபலித்துக் காட்டப்பட்டது. இந்தச் சிதைவை எதிர்த்து மூர்க்கமாகப் போராட வேண்டிய தேவை, மார்க்சியத்தின் அடிப்படைகளுக்காக மூர்க்கமாக,விடாப்பிடியானபோராட்டத்தை நடத்த வேண்டிய தேவை, மறுபடியும் நிகழ்ச்சி நிரலுக்கு வந்தது. இதற்கு முந்திய காலப்பகுதியில் வர்க்கங்களின் மிகவும் விரிவான பகுதியோர் தமது குறிக்கோள்களை வகுத்துக் கொள்வதில் மார்க்சியத்தைத் தவிர்த்து விலக்க முடியாமற் போகவே, இந்தப் போதனையை அவர்கள் அளவுமீறி ஒருதலைப்பட்சமாகவும் திரித்துக் குலைக்கப்பட்ட பாணியிலும் கிரகித்துக் கொண்டனர். குருட்டுப் பாடமாய்ச் சிற்சில கோஷங்களையும் போர்த்தந்திரப் பிரச்சனைகளுக்கான சிற்சில விடைகளையும்-இந்த விடைகளுக்கான மார்க்சிய அடிநிலைக் கூறுகளைப் புரிந்து கொள்ளாமலே-நெட்டுருப் போட்டு வைத்திருந்தனர். சமுதாய வாழ்வின் பல்வேறு துறைகளிலும் எல்லாப் பண்பு மதிப்புகளையும் மறுபடியும் மதிப்பீடு செய்யநேர்ந்ததைத் தொடர்ந்து, மார்க்சியத்தின் மிகவும் கருத்தியலான. பொதுப் படையான தத்துவவியல் அடிப்படைகள் திருத்தப்பட்டுவிடும்ஒரு நிலைமை ஏற்பட்டது. பல்வேறுபட்ட கருத்துமுதல் வாதச் சாயல்களிலுமாகிய முதலாளித்துவத் தத்துவவியலின் செல்வாக்கு மார்க்சியவாதிகளிடையே கொள்ளை நோய் போலப் பரவிய மாகியக் கருத்துகளின் வாயிலாய் வெளியாயிற்று.புரிந்துகொள்ளப்படாமலும் சிந்தித்து கிரகிக்கப்படாமலும் போட்டு நெட்டுருச் செய்யப்பட்ட கோஷங்கள்திருப்பித் திருப்பிக் கூறப்பட்டதானது வெற்றுச்சொல்லடுக்குகளை வெகுவாய்ப் புழக்கத்துக்கு வரச் செய்தது. இதன் நடைமுறை விளைவு என்னவெனில், பகிரங்கமான அல்லது மறைமுகமான ஒத்சொவிசம்’ அல்லது மார்க்சியத்தின் சட்டபூர்வ உருவேஒத்சொவிசம் என்பதாய்க் கொள்வது போன்ற முற்றிலும் மார்க்சிய விரோத, குட்டி முதலாளித்துவப் போக்குகள் மலிந்து விட்டன.

இன்னொரு புறத்தில், வேஹி சஞ்சிகையின் மனப்பான்மை, கொள்கை துறந்து ஒடும் மனப்பான்மை முதலாளித்துவ வர்க்கத்தாரின் விரிவான பகுதிகளை ஆட்கொண்டு விட்டதுடன் நில்லாமல், மார்க்சியத் தத்துவத்தையும் நடைமுறையையும் நிதானமும் ஒழுங்கும் வழி வரம்புகளுக்குள் அடக்கி வைக்க முயற்சிக்கிற போக்குக்குள்ளும் புகுந்துவிட்டது.கடைசியாகமார்க்சியத்தில் மிஞ்சினதெல்லாம் படி வரிசை முறை’ (hierarchy), ‘தலைமைப் பாத்திரம்’ (hegemony) முதலான வற்றைப் பற்றிய, மிதவாதத்தில் முற்றிலும் ஊறிப்போன வாதங்களில் உபயோகிப்பதற்கேற்ற வெறும் சொற்களே.

இந்த எல்லா வாதங்களையும் பற்றிப் பரிசீலிப்பதுஇக்கட்டுரையின்நோக்கமல்ல. மார்க்சியம்அனுபவித்துவரும்நெருக்கடியின் ஆழத்தைப் பற்றியும், இந்தக் காலப்பகுதியில்நிலவும்ஒட்டுமொத்தமான சமுதாய பொருளாதார நிலைமைக்கும் அந்த நெருக்கடிக்கும் இடையேயுள்ள சம்பந்தத்தைப் பற்றியும் நாம் மேலே குறிப்பிட்டவற்றைத் தெளிவுப்படுத்த இந்த வாதங்களைக் குறிப்பிட்டாலே போதும். இந்த நெருக்கடி எழுப்பும் பிரச்சனைகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. வாய்ச்சவடால் அடித்து அவற்றை அகற்றிவிட நடக்கிற முயற்சிகள்போல் தீங்கிழைக்கும்படியான, கோட்பாடற்ற செய்கை வேறு எதுவும் இருக்க முடியாது. நெருக்கடியின் ஆழத்தையும் அதை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்திருக்கும்எல்லாமார்க்சியவாதிகளையும் மார்க்சியத்தின் தத்துவ அடிப்படைகளையும் ஆதார வரையறுப்புகளையும் பாதுகாப்பதற்காக அணி திரட்டுவதைக்காட்டிலும் முக்கியமானது எதுவும்இருக்க முடியாது; ஏனெனில்மார்க்சியத்தின் பலவகைப்பட்ட சகபிரயாணிகளிடையேமுதலாளித்துவச் செல்வாக்குபரவியுள்ளதால் எதிரெதிரான திசைகளிலிருந்து இவை திரித்துப் புரட்டப் படுகின்றன.

விரிவான ஜனப்பகுதிகளைச் சமுதாய வாழ்க்கையில் உணர்வு பூர்வமாகப் பங்கெடுத்துக் கொள்ளும்படி முதலாவது மூன்றாண்டுக் காலப்பகுதி விழிப்புறச் செய்தது. அவர்களில் பலர் இப்பொழுதுதான் முதல் தடவையாக உண்மையானமுறையிலே மார்க்சியத்தைத் தெரிந்துகொள்ளஆரம்பித்திருக்கிருர்கள். இது சம்பந்தமாக முதலாளித்துவப் பத்திரிகைகள் என்றையும் விட அதிகமாகப் பொய்யான கருத்துகளைச் சிருஷ்டித்தும், மிக விரிவாகப் பரப்பியும் வருகின்றன. இந்த நிலைமைகளிலே மார்க்சியவாதிகளின் அணிகளிலே ஏற்படும் சிதைவு மிகவும் ஆபத்தானது. தற்சமயம் இந்தச் சிதைவு தவிர்க்க முடியாதது என்பதற்குரிய காரணங்களைப் புரிந்து கொள்வதும், இந்தச் சிதைவை எதிர்த்து முன்னேறிப் 

போராடுவதற்காக அணிகளைத் திரட்டி ஒன்று சேர்ப்பதும், மார்க்சியவாதிகளுடைய இந்நாளைய கடமையாகும். இத்தொடரின் மிகவும் நேரடியான, துல்லியமான பொருளில் இந்நாளைய கடமையாகும்.1910 டிசம்ப ர் 23 தொகுதி 20  வி. லெனின் பக்கங்கள் 84-89.

மார்க்சியம் சில போக்குகள் அதில் "தமிழக மார்க்சியம்" குறித்த சில

 மார்க்சியம் சில போக்குகள் அதில் "தமிழக மார்க்சியம்" குறித்த சில

++++++++++++++++++++++++++++++++++++++++++

மார்க்சியம் தமிழகத்தில் பரவத் தொடங்கிய காலத்தில் இருந்தே மார்க்சியத்தை அதன் கோட்பாடுகளை கட்சியின் பிரதான பணியாக செயல்பட்டாலும் அவை முழுமையாக நாடு தழுவிய அளவில் செயல்பட வில்லைகட்சிஅணிகளுக்குமார்க்சியத்தின் அடிப்படைகளை பரப்புவது பிரதான பணியாகமேற்கொள்ளப்பட்டதுஇருந்தும்அவற்றின் வீச்சு இருக்க வேண்டிய அளவிற்கு இல்லை என்பேன்.

இவர்களைத் தவிர திராவிட இயக்கங்கள் காங்கிரஸ் இயக்கங்கள் அவர்கள் கண்ணோட்டத்தில் மார்க்சியத்தை பரப்பினர்கள்.மார்க்சியத்தைமுழுமையாக அவர்கள் உள்வாங்காமலேயே மேலோட்டமாக மார்க்சியத்தை அவர்கள் பரப்பினர்.மார்க்சியத்தின் பல கூறுகளில் ஏதாவது ஒன்றை வலியுறுத்தி மற்றவற்றை விட்டு விட்டுப் போகும் போக்கானது மேலை நாடுகளிலே வளர்ந்து வந்துள்ளது. அதனை தூக்கி பிடிக்கும் போக்கை புரிந்துக் கொள்ள...

இத்தாலிய மார்க்சியம், பிரான்ஸ் மார்க்சியம், பிரிட்டிஷ் மார்க்சியம், பிராங் பர்ட் மார்சியம் என்று சில கிளைகளை பரப்பி உள்ளது. அது போலவே தமிழகத்திலும் கோவை ஞானி, என் எஸ் நாகராஜன் எஸ்வி ராஜதுரை அ. மார்க்ஸ் இன்னும் சிலர் எழுதியுள்ளவை மார்க்சியத்திற்கு முரணானவிளக்கங்களையும் குழப்பமான படைப்புகளையும் ஆராய்ச்சி என்ற பெயரில் மார்க்சிய விரோதமாக 1980 களுக்கு பின்னர் ஜார்ஜ் லூக்காஸ் தொடங்கி அல்தூசர், வால்டர் பெஞ்சமின், சார்த்தர் என்று பல பெயர்கள் இதில் அடங்கும். ஜெர்மனியில் துவங்கி அமெரிக்காவில் வலுவாக இயங்கும் பிராங்க்பர்ட் குழுவை இதில் அடைக்கலாம். இவர்களின் எழுத்துகளை இங்கே கடை பரப்புவது என்ன நோக்கம் நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள்?

மார்க்சிய தத்துவத்தின் அடிப்படை இயங்கியல் பொருள் முதல் வாதம். இந்த அடிப்படையில் தான் மார்க்சியம் உலக நிகழ்ச்சிகள் அனைத்தையும் காண்கிறது. இதன் காரணமாக கருத்து முதல்வாதிகளுக்குஎதிராக மார்க்சியர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள்.கருத்து முதல்வாதிகள் மனமே பிரதானம் என்கின்றனர். மனிதன் அறிவுப்பெறும் வழியில் தான் உணர்வின் பங்கினை அதிகமாக வலியுறுத்துகின்றனர். எதார்த்தம் என்பது மனம் அல்லது உணர்வு தான் என்கின்றனர். இதன் வெளிப்பாடுதான் ஹெகலின் முழு முதற்கருத்து(Absolute idea) ஆதிசங்கரர் பரமாத்மா; ராமானுஜரின் பரபிரம்மம் ஆகியவை ஆகும்.

புதிய இடது (மார்க்சியவாதிகள்) மார்க்சியத்தில் இருந்து விலகி மனதிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். மேலேய(புதிய இடது) மார்க்சியவாதிகள் ஹெகலின் கருத்துகளில் அனுதாபம் உள்ளவர்கள் மார்க்சியத்தின் இயங்கியல் பொருள் முதல்வாதத்தை கடுமையாக விமர்சிப்பவர்கள்.

இதன் காரணமாகவே அவர்கள் மார்க்சிய அறிவு தோற்றக் கொள்கை புதிய இடது கொள்கையுடன் முரண்படுகிறது அவர்களால் இயங்கியல் பொருள் முதல் வாத கண்ணோட்டத்துடன் இயந்து போக முடியவில்லை.

ஹெகலின் கருத்துகளை மார்க்சின் பெயரால் புத்துயிர் ஊட்ட விரும்புகின்றனர். கிராம்ஸி, நீட்ஷே, சிம்மல்,டில்திஆகியோரின் கருத்துக்களை இணைத்துக் கொள்கின்றனர்.

மார்க்ஸ் வெபர் என்பவரின் சமூகவியல் கொள்கை, பிராய்டின் உளப்பகுப்பாய்வு கொள்கை, பின் நவீனத்துவக் கொள்கை இன்னும் சிலவற்றை மார்க்சியம் என்று மார்க்சியத்தில் கலக்கின்றனர்.

மார்க்சியம்முதலாளித்துவகருத்துக்களை விமர்சிக்கிறது. அதன் உடன்பாடான அம்சங்களைதன்வயப்படுத்திக்கொள்கிறது. இங்கே மார்க்சியம் பேசும் புதிய இடதுகள் அவ்வாறல்ல. புறசித்தாந்த கருத்துக்களைஏற்றுக்கொள்ளும் பொழுது மார்க்சியத்தின் அடிப்படையையே மாற்றி விடுகின்றனர். தமிழகத்தில் அ.மார்க்ஸ் பெரும்கதையாடல்என்றுமார்க்சியத்தையே மறுக்கிறார். அதற்கும் ஒருப்படி மேலே சென்று மார்க்சியம் அம்பேத்கரியம் பெரியாரியம் ஆகியவற்றை ஒன்றிணைத்து காண வேண்டும் என்று கூறுகிறார். இங்கேதான் இவர்களின் நிலைப்பாடு அடங்கியுள்ளது தோழர்களே. "ரஷ்ய மார்க்சியம் சீன மார்க்சியம் போன்று இந்திய மார்க்சியம் தமிழக மார்க்சியம் பாவம் இல்லை" என்பதே ஞானியின் அருள்வாக்கு. லெனினியம் ரசிய மார்க்சியம் என்றும் மாவோ சிந்தனை வெறும் சீன மார்க்சியம்  என்றும் குறிப்பிடும் வாதங்கள் எல்லாம் என்றோ பொய்யாய் பழங்கதையாய் போனது. இந்த விமர்சனங்கள் மார்க்சியத்தின் மீது வைக்கப்பட்டது. மார்க்ஸ் ஐரோப்பிய கால சூழலுக்கு மட்டுமே பொருந்தக் கூடியவர் என்று வெங்கட் சாமிநாதன் குறிப்பிட்ட கருத்துகள் எல்லாம் இன்று முனை மழுங்கி முறிந்து போயின. எனினும் இப்பொழுதுபுதியவெங்கடசுவாமிநாதன் புறப்பட்டு உள்ளனர்.

இவர்கள் எழுப்பும் பிரச்சினை பொதுத்தன்மைக்கும் குறிப்பான தன்மைக்கும் இடையிலான உறவு குறித்து தாகும். மார்சியம் என்பதே பொதுத்தன்மையை குறிப்பான தன்மையுடன் இணைப்பதாகும். அந்தந்த நாடுகளில் உள்ள குறிப்பான தன்மைக்கு ஏற்ப பொதுவான தன்மைகள் பொருத்தப்பட வேண்டுமே தவிர குறிப்பான தன்மைகளுக்கு முதன்மைகொடுத்துபொதுத்தன்மைகளை மறந்து விடக்கூடாது - மாவோ.

ஆனால் எஸ்சிஎஸ்,ஞானி போன்றோர் இந்த பொதுத்தன்மைகளை புறக்கணித்து விடுகின்றனர். தேசிய கலாச்சார சூழலில் இருந்து அந்தந்த தேசத்துக்குரிய மார்க்சிய இலக்கிய விமர்சனத்தை  உருவாக்க வேண்டும் என்கிறார். அனைத்தும் தழுவிய மார்க்சிய கோட்பாடுகளை தமிழ் கலை இலக்கியத்துக்குப்  பொருத்தி காணுவதன் மூலமே நாம் உண்மைகளை கண்டறிய முடியும் இதுவே பொது தன்மையை குறிப்பான தன்மையுடன்பொருத்திக்காணுவதாகும். இதை விடுத்து தமிழக சூழலுக்கு என்று தனித்த மார்க்சிய இலக்கிய விமர்சனக் கோட்பாடு என்றோ ஆந்திர சூழலுக்குஎன்று தனியான இன்னொரு கோட்பாடு என்றோ கிடையாது. ஆனால் எஸ்சிஎஸ் கருத்து இதற்கு வழிவகுக்கிறது.  ஞானியோ இலக்கிய விமர்சன கோட்பாடு மட்டுமல்லாமல் மார்க்சியமே ஒவ்வொரு தேசிய இனத்திற்கு என்று தனித்தனியாக இருக்க வேண்டும் என குறிப்பிடுகிறார். மார்க்சியத்தில் ரஷ்ய மார்க்சியம் சீன மார்க்சியம் தமிழக மார்க்சியம் என்று இல்லை. மார்க்சிய கோட்பாடுகளை அந்தந்த நாட்டின் பருண்மையான குறிப்பான சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயன்படுத்துவதலே நடைமுறையாகும். இந்தப் பருண்மையான குறிப்பான சூழ்நிலைக்களுக் கேற்பப் ஒவ்வொரு நாட்டின் விடுதலைக்கான பாதைகள் மாறுபடுமே தவிர ஒவ்வொரு நாட்டுக்கும்தனித்தனியான மார்க்சியம் என்பது இல்லை. ரஷ்யாவின் குறிப்பான சூழலுக்கு ஏற்ப அங்கு ஆயுத ரீதியிலான குறுகிய கால எழுச்சி பாதைமேற்கொள்ளப்பட்டது.  குடியேற்ற அறைகுடியேற்ற நிலஉடமை தன்மைகொண்ட சீனாவில் நீண்ட கால மக்கள் யுத்தபாதை மேற்கொள்ளப்பட்டது.இன்னும் சொல்லப்போனால் சமன்அற்ற வளர்ச்சி தன்மை கொண்டும் பல தேசிய இனங்களைக் கொண்டும் உள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டில் குறிப்பிட்ட வரலாற்று சூழல் கருதி தேசிய இனங்களின் குறிப்பான தன்மைக்கு ஏற்ப விடுதலைப் பாதைகள் மாறுபடலாமே தவிர ஒவ்வொரு தேசிய இனத்திற்கென தனித்தனியான மார்க்சியம் என ஆவது இல்லை. இவ்வாறாக ஞானி மார்க்சிய அரசியலின் பொதுத்தன்மையை மறுக்கின்றார்.

 

மூலதனத்தின் பிரதான சக்தி அதன் சொந்த பலத்தில் அதாவது அரசு இயந்திரத்தை தலையாய அங்கமாய் கொண்டு இருக்கிற அதன் ஒட்டுமொத்த அமைப்பின் பலத்தில் அடங்கியுள்ளது. அதுபோலவே உழைப்பின் சக்தியும் அந்த சொந்த பலத்திலேயே அதாவது பாட்டாளி வர்க்க கட்சியை தலையாய அங்கமாய் கொண்டுள்ள அதன் ஒட்டுமொத்த அமைப்பின் பலத்தில் அடங்கியுள்ளது.

மார்க்சிய தத்துவம் இதர தத்துவங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுகிறது மற்ற மார்க்சியமல்லாத தத்துவங்கள் எல்லாம் அரசியல் அதிகாரத்தில் உள்ள அறிவாளிகளுடன் ஒன்று கூடியுள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய மேட்டுக்குடி அறிவாளிகளோடு மட்டுமே சுருங்கிக் கொண்டுள்ளது. இவர்கள் தங்களது வர்க்க நலனை தொடர்ந்து வளர்த்துக் கொள்ளும் பொருட்டு தமது பிரஜைகள் மீது தமது தத்துவங்களை திணிப்பார்கள். ஆனால் மார்க்சிய தத்துவம் பரந்துபட்ட மக்களுடையது. உண்மையில் இந்த தத்துவமானது பெரும்பான்மையான உழைக்கும்ஒடுக்கப்பட்டமக்களினுடைய தத்துவ  கண்ணோட்டம் ஆகும்.

பாட்டாளி வர்க்க சித்தாந்தம் மக்கள் திரளை ஒன்றிணைப்பதும் இந்தத்துவத்தின் பால்  அவர்களை  கிரகித்து அவர்களை புரிய வைத்தலும். உழைக்கும் மக்கள் தமக்கு சொந்தமான தத்துவத்தை கிரகித்துக் கொண்டு அதன்படி நடக்கத் துணியும் போது தமது குருதியை உறிஞ்சி கொண்டிருக்கும் அட்டைகளையும் நச்சுக்கிருமிகளையும் மாபெரும் புயலென சீறி எழுந்து ஒரே அடியாகத்  துடைத்தொழிப்பர். மக்கள் தாமாகவே தமக்கு சொந்தமான தத்துவத்தை கிரகிக்க முடியாது. உழைக்கும் மக்களுக்கு அவர்களுடைய வர்க்கத்தின் நலனை பற்றி போதிப்பதும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பொருட்டு அவர்களை அமைப்பு ரீதியான திரட்டுவதுமான இந்த இமாலய பணியை மக்களுடைய பணிஎன்கின்றோம். மக்களிடையேலான பணியின் பாத்திரம் தத்துவார்த்த ரீதியில் நிலைநாட்டல் தான் நடைமுறை பிரச்சனை. இக்கடமையை ஒரு பொதுவுடைமை கட்சி நேர்மையான முறையில் கடமை ஆற்ற வேண்டியுள்ளது. அந்தக் கட்சியின் ஊழியர்களுடைய பணிதான் நடைமுறை.

ஆக மார்க்சியவாதிகள் இயக்க இயல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் தங்களது அணிகளுக்கு மட்டும் இன்றி பரந்த பட்ட திரளான மக்களுக்கு பிரசாரம் செய்ய வேண்டும் உழைக்கின்ற மக்கள் பெருந்திரளாக இந்த கண்ணோட்டத்தை கிரகித்து முதலாளித்துவ கண்ணோட்டத்தை நிராகரிக்காத வரையில் எதிரியை தோற்கடிப்பதுஎன்பது அசாத்தியமாகும்.

அதாவது மக்களிடையே நடைமுறை பிரச்சனை என்பது ...

மக்கள் என்பவர் யார்

மக்களிடையே கம்யூனிஸ்டுகள் கடைப்பிடிக்க வேண்டிய போக்கு எவ்வாறு இருக்க வேண்டும்?

மக்களைப் பயிற்றுவிப்பதிலும் அமைப்பு ரீதியாக திரட்டுவதில்  என்ன முறைகளை கையாள வேண்டும்?.

மக்கள்தான் உண்மையான இரும்பு கோட்டை இதை உலகில் எந்த சக்தியாலும் தகர்ப்பது சாத்தியமாகாது என்ற மாவோ கூற்றை புரிந்துகொண்டு இந்த இரும்பு கோட்டை உருவாக்கும் இரும்பு கற்கள் தனித்தனியாக ஒன்று சேர்க்கப்பட்டு பூசப்படாமல் உள்ளது. இந்த இரும்பு கற்களை அடுக்கி பூசி உலகில் உள்ள எந்த சக்தியாலும் நொறுக்கப்பட முடியாத அளவிற்கு ஒரு சக்தியாக வாய்ந்த இரும்புக்கோட்டையாக நிறுவ வேண்டும்.இவைதான் கம்யூனிஸ்டுகள் நடைமுறையில் செய்ய வேண்டிய பணியின் முக்கியமானதாகும்.

பின்னர் பார்ப்போம்-சிபி

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்