உலகில் கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடெரிக் எங்கெல்ஸிற்கு முன்பும் பல தத்துவவாதிகள் இருந்தனர். ஆனால், மார்க்சிய தத்துவம் மற்ற தத்துவங்களில் இருந்து இரு முக்கிய அம்சங்களால் முற்றிலும் வேறுபடுகிறது:
- உலகை மாற்றுவதற்கான தத்துவம்: கார்ல்
மார்க்ஸ் தனது புகழ்பெற்ற ஃபாயர்பாக் பற்றிய 11-வது
ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியபடி, "தத்துவவாதிகள்
இதுவரை உலகை வெவ்வேறு வழிகளில் விளக்கியுள்ளனர்; ஆனால் விஷயம்
என்னவென்றால், அதை மாற்றுவதுதான்." மார்க்சியம்
உலகை வெறும் வேடிக்கை பார்க்கவில்லை; அதை மாற்றுவதற்கான களப் போராட்டத்தை முன்வைக்கிறது.
- உழைக்கும் வர்க்கத்தின் ஆயுதம்: மார்க்சிய
தத்துவம் முதலாளிகளுக்கானது அல்ல; அது ஒடுக்கப்பட்ட, சுரண்டப்படும்
பெருவாரியான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் விடுதலைக்கான தத்துவம்.
...
தத்துவம் அறிமுகம்
நாம் வாழும் இன்றைய சமூகத்தில் ஆம் வர்க்க சமூகத்தில் தத்துவம் என்பது இரண்டு வகையாக உள்ளது ஒன்று ஆளும் வர்க்கத்தின் தத்துவம் மற்றொன்று ஆளப்படும் வர்க்கத்தின் தத்துவம் அதாவது சுரண்டும் வர்க்கத்தின் தத்துவம் சுரண்டப்படும் வர்க்கத்தின் தத்துவம். ஆக வர்க்கங்கள் இரண்டாக உள்ளது போலவே தத்துவம் இரண்டாக தான் இருக்கும் அதாவது ஆளும் வரும் தங்களை நிரூபித்துக் கொள்வதற்காக தங்களின் நடைமுறைகளில் தங்களின் ஒவ்வொரு செயலையும் சரியானது என்று காட்டிக் கொள்வதற்காக செயல் படும்போது அவர்களுக்கான தத்துவம் இன்றுள்ள ஒட்டுமொத்த சமூகத்திற்கான தத்துவமாக உள்ளது. ஆனால் பட்டினி பசி மற்றும் பல்வேறு இன்னல்களுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகும் சுரண்டப்படும் வர்க்கம் வாழ்வதற்கு வழி இல்லாத பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் இந்த சமூகத்தில் தான் வாழ்கின்றனர் அவர்கள் வாழும் அவசியமான நிலையில் மிகக் கொடூரங்களை சந்திக்கும் பொழுது இதிலிருந்து விடுதலை பெறுவதற்கான தத்துவம் தான் உழைக்கும் மக்களின் தத்துவமாய் மார்க்சியம் முன்னுக்கு வருகிறது. அதாவது இங்குள்ள இன்னல்களுக்கு காரணம் எந்த தனிநபர்களோ அல்லது சில தவறானவர்களினால் உருவாவதல்ல என்பதனையும் இதில் யாரெல்லாம் எதிரிகள் ஏன் எதிரிகள் இந்த கொடுமைகளிலிருந்து விடுதலை எப்படி பெறுவது என்பதனை மார்க்சியம் வழிகாட்டுகிறது இந்த சுரண்டல் அமைப்பை ஒட்டுமொத்தமாக ஒரு புரட்சியின் மூலம் துடைதெறிவதன் மூலம் மட்டுமே சாத்தியம் என்பதனை நம் முன் வைத்துள்ள அடிப்படையான தத்துவம் மார்க்சியம். ஒவ்வொன்றாகப் விரிவாக அதனைப் பற்றி பேசுவது தான் நமக்கான இந்த தத்துவ போர் இதில் பற்றி விரிவாக பேசவோம்.
தத்துவத்தின் தொடக்கம்
மனிதன் பிறந்த நாளிலிருந்தே அவனைச் சுற்றிய உலகைப் பற்றி கேள்விகள் எழுப்பத் தொடங்கினான்.
“இந்த உலகம் எப்படி தோன்றியது?”,
“மனித வாழ்க்கையின் நோக்கம் என்ன?”,
“உண்மை என்றால் என்ன?”,
“நல்லது–கெட்டது என்றால் என்ன?”,
“கடவுள் இருக்கிறாரா?”,
“மனிதன் ஏன் சமமற்ற சமூகத்தில் வாழ்கிறான்?”
இப்படிப்பட்ட கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் மனித அறிவின் ஆழமான முயற்சியே தத்துவம் ஆகும்.
தத்துவம் என்பது வெறும் புத்தக அறிவோ அல்லது சிந்தனையோ அல்ல; அது உலகையும் மனித வாழ்க்கையையும் முழுமையாகப் புரிந்துகொள்ளும் அறிவுசார் முயற்சி. மனிதன் இயற்கையுடனும் சமூகத்துடனும் கொண்ட உறவுகளை ஆராய்ந்து, வாழ்க்கையின் உண்மைகளை விளக்க முயலும் அறிவியல் சார்ந்த சிந்தனை முறையாக தத்துவம் விளங்குகிறது.
இனி இன்றைய நமது உறையாடலை தொடங்குவதற்கு முன் பொதுவாக உலகில் உள்ள தத்துவ அதனை பற்றி மேலோட்டமாக பார்ப்போம்.
தத்துவம் பற்றி குறிப்பானவற்றை பார்ப்போம்:-
- தத்துவத்தின் அடிப்படை
- கருத்துமுதல்வாதம் vs பொருள்முதல்வாதம்
- இயக்கவியல் பொருள்முதல்வாதம்
- வரலாற்றுப் பொருள்முதல்வாதம்
- மார்க்ஸ்–எங்கல்ஸ்–லெனின்
- அறிவியல் தத்துவம்
- அரசியல் தத்துவம்
- ஒழுக்கவியல்
- அழகியல்
போன்ற பகுதிகள் மார்க்சியம் கற்கத் தொடங்கும் மாணவர்களுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளன.
மேலும் “மார்க்சிய தத்துவத்தின் அடிப்படை” கற்கும் மாணவர் வகுப்புக்கான விரிவான பாடத்திட்டம் கீழ் கொண்டு வந்து ஆராய வேண்டும்.
தத்துவத்தின் அவசியம் ஒரு புரிதலுக்கே! சமூக மாற்றம் என்பது தற்செயலாகவோ அல்லது இயற்கையில் ஏற்படும் பருவகால மாற்றங்களைப் போலத் தானாகவோ நிகழ்ந்துவிடுவதில்லை. "இயற்கையில் ஏற்படும் மாற்றம் போல சூழ்நிலைகள் சாதகமாக இருந்தால் தானாகவே சமூகம் மாறிவிடாது. சமூக மாற்றம் பற்றிய விதிகளைப் புரிந்துகொண்டு மனிதர்கள் செயல்படுவதன் மூலமே சமூக மாற்றம் ஏற்படும்" என்ற கூற்று, வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் (Historical Materialism) மிக முக்கிய தத்துவார்த்த அடிப்படையை நமக்கு உணர்த்துகிறது.
சூழ்நிலைகள் என்பவை புரட்சிக்கான அல்லது மாற்றத்திற்கான புறநிலைக் காரணிகள் (Objective Conditions) மட்டுமே; ஆனால், அந்தச் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி மாற்றத்தை நிகழ்த்துவது மனிதர்களின் உணர்வுபூர்வமான அகநிலைக் காரணியாகும் (Subjective Factor). இக்கருத்தை மார்க்சிய-லெனினிய இயக்கவியல் பார்வையில் விரிவாக ஆராய்வதே இந்த தொடர் விவாதம்.
இனி கடந்த கால தத்துவங்களின் வரலாறு (History of Past Philosophies)
- கடந்த கால வரலாற்றை நாம் உற்றுநோக்கினால், அனைத்து தத்துவங்களும் ஏதோ ஒரு வகையில் "சுரண்டும் வர்க்கங்களின்" (Exploiting Classes) கண்ணோட்டத்தையே பிரதிபலித்தன.
- சமூகத்தை யார் பொருளாதார ரீதியாக ஆளுகிறார்களோ, அவர்களே தத்துவ ரீதியாகவும் ஆளுகிறார்கள். அரசர்கள், நிலப்பிரபுக்கள், முதலாளிகள் போன்ற சமூகத்தின் "தலைவர்கள்" தான் தங்கள் கருத்துக்களைப் பரப்ப தத்துவங்களைக் கட்டமைத்தார்கள்.
- இந்த நிலைமை எப்போது மாறத் தொடங்கியது என்றால், முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் "நவீன பாட்டாளி வர்க்கம்" (Working Class) தோன்றி, தங்களுக்கான தத்துவத்தை (மார்க்சிய தத்துவத்தை) உருவாக்கத் தொடங்கிய போதுதான்.
அதிகாரத்தில் இருக்கும் சுரண்டும் வர்க்கம் தங்களின் சுரண்டலை நியாயப்படுத்த ஒரு தத்துவத்தை உருவாக்குகிறது. அதற்கு எதிராக உழைக்கும் வர்க்கம் தங்களின் விடுதலைக்காக ஒரு தத்துவத்தை (இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை) ஆயுதமாக ஏந்த வேண்டும். நடுநிலைமை என்பது தத்துவத்தில் சாத்தியமே இல்லை.
இதிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வர முடியும் என்றால் பாட்டாளி வர்க்கம் இன்று சமூகத்தின் தலைமையை தன்வசம் எடுத்துக் கொள்ள முற்படுமேயானால் தனது சொந்த வர்க்கத்தின் கண்ணோட்டத்தை தத்துவார்த்த வடிவத்தில் வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. சுரண்டுபவர்களின் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தி அவர்களின் நலன்களைப் பாதுகாக்கின்ற தத்துவங்களுக்கு எதிராக இந்தத் தத்துவத்தை முன்நிறுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.
மார்க்சும் எங்கெல்சும் பாட்டாளி வர்க்கத்திற்காக புரிந்த சேவைகளை ஒரு சில சொற்களில் இவ்வாறு வெளிப்படுத்தலாம் என்று லெனின் எழுதினார். தன்னைத் தானே அறிந்து கொள்வதற்கும் தன்னைப் பற்றிய உணர்வு பெறுவதற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு அவர்கள் கற்றுக் கொடுத்ததுடன் கனவுகளுக்கு மாற்றாக அறிவியலை முன் வைத்தார்கள்.
முதலாளித்துவம் தகர்ந்து வீழ்வதன் தவிர்க்க இயலாமையையும் மனிதனை மனிதன் மேற்கொண்டும் சுரண்டுவது என்பது இல்லாமலே போய்விடுகின்ற கம்யூனிசத்திற்கு அது மாறி செல்லும் என்பதையும் அறிவியல் பூர்வமான பகுத்தாய்வுகளின் மூலமாக நிரூபித்தார்கள் என்பதும் அனைத்து நாடுகளின் பாட்டாளி வர்க்கங்களுக்கும் அவர்களுடைய பாத்திரம், கடமை, குறிக்கோள் ஆகியவற்றை உதாரணமாக இந்தப் போராட்டத்தில் அனைத்து உழைப்பாளிகளையும் சுரண்டப்படுவோரையும் தம்மைச் சுற்றி அணைதிரட்டிக் கொள்வதில் முதலில் நிற்பவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டினார்கள் என்பதில்தான் மார்க்ஸ் எங்கெல்சின் மகத்துவமும் வரலாற்றியல் பூர்வமான தனிச்சிறப்பும் இருக்கிறது.
பாட்டாளி வர்க்கத்துக்கு தன்னைத்தானே அறிந்து கொள்வதற்கும் தன்னைத் தானே உணர்ந்து கொள்வதற்கும் எல்லா உழைப்பாளிகளையும் சுரண்டப்படுவோரையும் தன்னைச் சுற்றி அணிதிரட்டி கொள்வதற்கும் கற்றுத் தந்த மார்க்சும் எங்கெல்சும் பாட்டாளி வர்க்கப் போராட்டத்திற்கான புரட்சிகர தத்துவத்திற்கு அடித்தளமிட்டு நிறுவினார்கள். அந்த தத்துவம் முதலாளித்துவ சுரண்டலை பாட்டாளி வர்க்கம் தூக்கி எறிவதற்கும், மக்கள்திரள் அனைத்திற்குமான தலைமையை எடுத்துக் கொள்வதற்கும் அதன் மூலமாக எல்லாவிதமான ஒடுக்குமுறைக்கும், மனிதனால் மனிதன் சுரண்டப்படுவதற்கும் என்றென்றைக்குமாக முடிவு கட்டுவதற்கான பாதைக்கு வெளிச்சம் பாய்ச்சுகிறது.
முதலாளித்துவம் இன்னும் ஏற்றம் பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் சக்திகள் முதன் முதலாக அணிதிரட்டப்பட்டுக் கொண்டும், ஸ்தாபனப்படுத்தப்பட்டு கொண்டும் அதாவது அமைப்பாக்கப்பட்டுக்கொண்டும் இருந்த காலகட்டத்தில் மார்க்சும் எங்கெல்சும் எழுதி வந்தார்கள். முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவம் அல்லது ஏகாதிபத்திய கட்டத்தை எட்டிய பொழுதும் பாட்டாளி சோசலிசப் புரட்சி துவங்கிய பொழுதும் அவர்களுடைய தத்துவம் லெனினால் மேற்கொண்டு வளர்த்து முன்னெடுத்துச் செல்லப்பட்டது. அதற்குப் பின்னர் ஸ்டாலின் அந்தப் பணியை மேலும் முன்னெடுத்துச் சென்றார்.
தனக்கென்று சொந்தமான ஒரு கட்சி இல்லாமல் முதலாளித்துவத்தின் மீதான வெற்றியை பாட்டாளி வர்க்கத்தினால் நிச்சயமாக வென்றெடுக்க முடியாது. முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டிவிட்டு சோசலிசத்தை நிறுவுவதற்கு ஒட்டுமொத்த சமூகத்தையும் வழிநடத்திச் செல்ல இயலாது என்பதை மார்க்சும் எஙகெல்சும் கற்றுத் தந்தார்கள். எல்லா முதலாளித்துவ கட்சிகளிலிருந்தும் சுதந்திரமாக பாட்டாளி வர்க்கம் தனக்கென்று சொந்தமாக கட்சியைக் கொண்டிருக்க வேண்டும். கட்சியைப் பற்றிய மார்க்சியப் போதனைகளை லெனின் மேலும் வளர்த்தெடுத்தார். கட்சியானது தன் வர்க்கத்தின் முன்னணிப் படையாக, வர்க்கத்தின் மிக உயர்ந்த உணர்வு கொண்ட பிரிவாகச் செயல்பட வேண்டும், அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கும் அந்த அதிகாரத்தைச் செயல்படுத்துவதற்குமான கருவி அதுதான் என்பதை அவர் காட்டினார். (மாரிஸ் கான்போர்த், இயக்கவியல் பொருள்முதல்வாதத் தத்துவம், பக்கம் 16 முதல் 18 வரை).
- பாட்டாளி வர்க்கம் இந்தச் சமூகத்தை வழிநடத்த வேண்டுமானால், அதற்கு தனக்கென்று ஒரு சொந்தத் தத்துவம் (Ideology) தேவை.
- முதலாளித்துவக் கருத்துக்களுக்கு எதிராக, உழைப்பாளர்களின் கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கும் ஒரு தத்துவத்தை முன்வைக்க வேண்டியது அவசியம். இந்தக் கடமையை இடதுசாரித் தலைவர்கள் செய்யவேண்டியது அவசியமாகும்.
மார்க்சும் எங்கெல்சும் உழைக்கும் வர்க்கத்திற்குச் செய்த ஆகப்பெரும் பங்களிப்பை லெனினின் வரிகளை மேற்கோள் காட்டி இப்பதிவு விளக்குகிறது:
- கனவுக்கு மாற்றாக அறிவியல்: கம்யூனிசம் என்பது வெறும் கற்பனையோ அல்லது ஒரு பகற்கனவோ அல்ல; அது ஒரு அறிவியல் பூர்வமான பகுப்பாய்வு என்பதை அவர்கள் நிரூபித்தார்கள்.
- மாற்றத்தின் தவிர்க்கவியலாமை: முதலாளித்துவம் ஒரு கட்டத்தில் தானாகவே வீழும் என்பதையும், மனிதனை மனிதன் சுரண்டாத கம்யூனிச சமூகமாக அது மாறுவது வரலாற்று ரீதியாகத் தவிர்க்க முடியாதது என்பதையும் காட்டினார்கள்.
அதனால் தத்த்துவம் என்றால் என்ன? இன்று நம்மிடையே உள்ள பல்வேறு போக்குகளை முதலில் தொகுத்துக் காண்போம் பின்னர் நமக்கான வழிமுறை நமக்கான தத்துவத்தை பயில்வதும் நடைமுறைக்கான பணியாக நாம் நமக்கான தத்துவத்தை எப்படி கையாளப்போகிறோம் அதனையும் முழுமையாக ஆராய்வோம்.
முக்கியத் தலைப்பு 2
விஞ்ஞானக் கோட்பாடுகளை நினைவில்
கொள்ள வேண்டும். அத்தகைய கோட்பாடுகளை நாம் தொகுத்துக்கொள்ள சிறு முயற்சிதான்.
1. தத்துவம் மக்களிடம்
கொண்டுசெல்லப்பட்டால் அது பொருள்வகை சக்தியாக மாறும்.
2. ஒவ்வொரு மனிதனின்
சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் ஒரு வர்க்கத் தத்துவக் கண்ணோட்டம் உள்ளது.
3. தத்துவம்
இரண்டுவகையானது. ஒன்று விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றது விஞ்ஞானத்தை
மறுக்கும் தத்துவமாகும்.
4. வர்க்க சமுதாயத்தில்
அனைத்து மக்களுக்கும் பொதுவான தத்துவம் எதுவும் இல்லை. மாறாக தத்துவமானது வர்க்க
சார்புள்ளதே. அதாவது ஒன்று உழைக்கும் வர்க்கத் தத்துவம் மற்றது சுரண்டும் முதலாளி
வர்க்க தத்துவம்.
5. பொதுவான ஜனநாயகம்
என்பது உலகில் எங்கும் இல்லை. மாறாக ஒன்று பாட்டாளி வர்க்க ஜனநாயகம், மற்றது முதலாளித்துவ
ஜனநாயகம்.
6. பொதுவான அனைத்து
மக்களுக்குமான அரசியல் கட்சி உலகில் எங்கும் இல்லை. ஒன்று முதலாளித்துவ அரசியல்
கட்சி மற்றது உழைக்கும் மக்களுக்கான அரசியல் கட்சி.
7. முதலாளித்துவ அரசியல்
கட்சிகளின் ஆட்சியில் மக்களுக்கு சில சலுகைகள் கொடுக்கும் அதனால் அந்தக் கட்சியும்
ஆட்சியும் உழைக்கும் வர்க்கத்திற்கானதாக மாறிவிடாது. உழைக்கும் மக்களை ஏமாற்றி
முதலாளித்து சுரண்டலை பாதுகாப்பதுதான் முதலாளித்துவ கட்சிகளின் இலட்சியம் ஆகும்.
அதனை மூடிமறைக்கவே உழைக்கும் மக்களுக்கு இலவசம் என்ற சலுகையை வழங்கி
ஏமாற்றுவார்கள்.
8. உலகில் எங்கும் பொதுவான
சர்வாதிகாரம் என்பது இல்லை. ஹிட்டலர் கூட முதலாத்துவ சர்வாதிகாரிதான். அதேபோல
ஜோசப்.ஸ்டாலினும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரி ஆவார். ஆகவே உலகில் ஒன்று
முதலாளித்துவ சர்வாதிகாரம் மற்றது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்.
9. சமூகத்தில் மனிதர்கள்
பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தப் பிரச்சனைகள் ஒவ்வொன்றும்
ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது. ஆகவே ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக தீர்க்க
இயலாது. அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு பாடுபடுபவரால் மட்டுமே ஒரு
தனிப்பட்ட பிரச்சனையையும் தீர்க்க முடியும்.
10. மனிதசமூகம் சந்திக்கும்
பிரச்சனைகளை ஒரு கடவுளாலும் சரி, ஒரு தனிப்பட்ட தலைவனாலும் சரி, ஒரு கட்சியினாலும்
தீர்க்க முடியாது. மாறாக பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதிரியை சரியாக
அடையாளம் கண்டு அதனை எதிர்த்துப் போராடுவதன் மூலமே பிரச்சனைகள் தீரும்.
11. மக்களின் பிரச்சனையை
ஒரு தலைவன் தீர்ப்பான் என்று நம்புவது முட்டாள்தனமாகும். இத்தகைய தலைமை வழிபாட்டை
எதிர்த்துப் போராட வேண்டும். மாபெரும் தலைவர் லெனின் கூட தனியாகப் போராடி சாதனை
புரியவில்லை. உழைக்கும் மக்களை ஒன்றுதிரட்டி போராடியே சாதனை புரிந்தார். 12. உழைக்கும் மக்களின்
வறுமைக்கு காரணம் உழைக்கும் மக்களின் உழைப்பு சுரண்டப்படுவதால்தான் அவர்கள்
வறுமைக்குள் தள்ளப்படுகிறார்கள். ஆகவே சமூகத்தில் சுரண்டலை ஒழிக்காமல் உழைக்கும்
மக்களின் வறுமையை ஒழிக்க முடியாது.
13. உலகிலுள்ள ஒவ்வொரு
வர்க்கமும் சில பிரச்சனைகளை சந்திக்கும். முதலாளிவர்க்கம் அவர்கள் சந்திக்கும்
பிரச்சனைகளை உதாரணமாக ஒடுக்கப்படும் தேசிய இனப் பிரச்சனையை உழைக்கும் வர்க்கத்தின்
பிரச்சனையாகக் காட்டி உழைக்கும் வர்க்கத்தை அணிதிரட்டும்.
14. தொழிலாளி வர்க்கம்
ஒடுக்கப்பட்ட முதலாளி வர்க்கத்தோடு கூட்டுசேரவேண்டிய அவசியம் ஏற்படும் போது
உழைக்கம் வர்க்கமானது தனக்கு சாதகமான நிபந்தனையோடுதான் கூட்டுசேர வேண்டும்.
15. உழைக்கும் வர்க்கம் முதலாளி வர்க்கத்தோடு கூட்டணி அமைக்கும் முன்பாக தனது அரசியல், தத்துவ, மக்கள் சக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும். பலமில்லாத உழைக்கும் வர்க்கம் முதலாளிகளோடு கூட்டுசேர்ந்தால் முதலாளிகளோடு கரைந்துவிடும்.
மார்க்சிய தத்துவம் பற்றிய
குறிப்புகள்.
1. தத்துவத்தை
அறிவாளிகளால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்.
2. இயக்கவியல்
பொருள்முதல்வாத தத்துவத்தை நாம் கற்றுக்கொண்டு உள்வாங்குவதன் மூலமே மார்க்சிய
அரசியல் மற்றும் பொருளாதாரத்தை புரிந்துகொண்டு சமூக மாற்றத்திற்கு நாம் பங்காற்ற
முடியும்.
3. நடைமுறை என்றால் என்ன, தத்துவம் என்றால் என்ன
என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
4. பிரச்சனைகளை
புரிந்துகொள்ள நமக்கு ஒரு ஆய்வுமுறை தேவைப்படுகிறது. விவாதிப்பதற்கும் அது தேவை.
5. தத்துவவாதிகளுக்கு
முன்னால் உள்ள பிரச்சனை 1. பொருள், 2. கருத்து இதில் எது முதலில்
6. உழைக்கும் வர்க்கத்தின்
அடிமைத்தனத்தை போக்கி அவர்களை சுதந்திர மனிதர்களாக மாற்றுவதற்கான தத்துவம்தான்
மார்க்சியம்.
7. தத்துவத்தில் இரண்டுவகை
1.
விஞ்ஞானத்தை
அடிப்படையில் ஏற்றுக்கொண்டது. 2. விஞ்ஞானத்தை அடிப்படையில் மறுப்பது.
8. சமுதாயம் மாறிக்கொண்டே
இருக்கிறது இந்த மாறுதல்களைப் புரிந்துகொண்டு அதனை தீர்ப்பதற்கு ஏற்ற கொள்கைதான்
நமக்குத் தேவை. ஏகாதிபத்தியம்
9. தத்துவமும்
நடைமுறையையும் இணைக்க வேண்டும். ஒரு சரியான கருத்து எங்கிருந்து வருகிறது.
10. இயக்கவியல்
பொருள்முதல்வாதத்தை மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்று முதலாளி வர்க்கம்
விரும்புகிறது.
11. ஒரு பொருள் இன்னொன்றாக
மாறுவது பற்றிய விஞ்ஞானம்தான் முரண்பாடு பற்றிய விதி. முட்டை கோழியாக மாறுவது.
12. ஒரு கம்யூனிஸ்ட் தான்
கற்ற தத்துவ அரசியலை பிறருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் அதுவும் ஒரு ஆசிரியர் பணி
என்ற நடைமுறையாகும்.
13. இயற்கையில் ஏற்படும்
மாற்றம் போல சூழ்நிலைகள் சாதகமாக இருந்தால் தானாகவே சமூகம் மாறிவிடாது. சமூக
மாற்றம் பற்றிய விதிகளைப் புரிந்துகொண்டு மனிதர்கள் செயல்படுவதன் மூலமே சமூக
மாற்றம் ஏற்படும்.
14. மக்கள் மொழியில் பேசி
மார்க்சியத்தை மக்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அது ஒரு சிரமமான பணியாகும்.
15. தத்துவத்தின் நோக்கம்
உலகம், சமூகம்
மற்றும் சிந்தனையைப் பற்றி விளக்குவதோடு உலகை மாற்றுவதற்கு வழிகாட்ட வேண்டும்.
16. தத்துவமானது பொதுவான
கோட்பாடுகளைத்தான் முன்வைக்கிறது. இந்த பொதுவான விதியை குறிப்பான பிரச்சனையில்
பொருத்தி குறிப்பான பிரச்சனையை நாம் புரிந்துகொள்ள வேண்டும் இழிவுபடுத்துவது?
17. விஞ்ஞானத்துக்கும் தத்துவத்துக்கும் இடையிலான உறவு.
இந்த தொடரின் முதல் பகுதியில், நாம் மார்க்சிய
தத்துவத்தின் இரு கண்களான அடிப்படைக் கோட்பாடுகளை அறிமுக வடிவில்
கற்கவிருக்கிறோம்:
- பொருள்முதல்வாதம் (Materialism): இந்த உலகம்
கடவுளாலோ அல்லது ஏதோ ஒரு பிரபஞ்ச சக்தியாலோ (Idea) படைக்கப்படவில்லை.
உலகம் என்பது பருப்பொருட்களால் (Matter) ஆனது. மனிதனின் உணர்வு என்பது அவனது மூளை என்ற
பருப்பொருளின் செயல்பாடே தவிர வேறல்ல. அதாவது, பொருள்தான்
முதன்மையானது, கருத்து என்பது அதன் பிரதிபலிப்பே.
- இயக்கவியல் (Dialectics): இயற்கையும்
சமூகமும் தேங்கி நிற்பவை அல்ல. அவை தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கின்றன.
இந்த மாற்றங்கள் தற்செயலானவை அல்ல; அவற்றுக்குள் முரண்பாடுகள் (Contradictions)
இருப்பதாலேயே மாற்றங்கள் நிகழ்கின்றன. பழையவை அழிந்து புதியவை தோன்றுவது
இயற்கையின் விதி.
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக