தத்துவமும் நடைமுறையும்-8

தத்துவமும் நடைமுறையும்-8

தத்துவமும் நடைமுறையும் என்ற இடத்தில் தத்துவத்தை நடைமுறையோடு உரசி பார்க்க வேண்டும் என்பதே நமது மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதல்.
இங்கே தத்துவம் இல்லாத எந்த நடைமுறையும் இல்லை அப்படியெனும் பொழுது பல போக்கில் ஏன் உள்ளனர் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
அப்படியெனும் பொழுது இங்கு நடைமுறையில் உள்ள தத்துவங்களும் இங்குள்ள கருத்துகளும் ஆளும் வர்க்கத்து தத்துவங்களே அது மக்களுக்கான விடுதலைக் காணவை அல்ல.
மேலும் இவை இங்குள்ள அமைப்பு முறையை கட்டி காப்பதற்கான வழிமுறையை போதிப்பதோடு சுரண்டப்படும் மக்களை ஒடுக்கவும் அடக்கவும் சில நேரங்களில் சில சலுகைகள் மூலம் மக்கள் கொந்தளிப்பை மட்டுபடுத்தவும் செய்யும் சீர்திருத்தம் சில சட்டங்கள் என்ற பெயரில் காட்டும் கரிசனம்தான்.
இவை மக்களுக்கு விடுதலை தவிர மற்ற எல்லா ஆன்மீகவாதிகளை போல போதனை தருகிறது இந்த அனைத்து முறைகளையும் அடங்கி ஒடுங்கி அவர்கள் கொடுக்கும் சன்மானம் பெற்றுக் கொண்டு வளமாக வாழ போதிக்கிறது. இதனைதான் நமது தோழர்கள் மேன்மையானது என்கின்றனர் அவைதான் அவர்களின் நடைமுறையாகவும் உள்ளது.
இந்த இடத்தில் மார்க்சியம் இந்த எல்லா ஒடுக்குமுறை சுரண்டல்முறைக்கு காரணமான சமூகத்தை சமூகத்தை மாற்றி அமைக்க சொல்கிறது அதற்கு தேவை புரட்சி அப்படியெனும் பொழுது புரட்சிக்கான திட்டமும் அதை நடைமுறைப்படுத்த கட்சியும் வேண்டும்.
அப்படியென்றால் இங்கு கட்சி இல்லையா என்பீர்?
இருக்கிறது அதன் செயல்பாடுகள் மார்க்சிய வகைபட்ட புரட்சியை நோக்கியதாக செயலில் உள்ளதா என்பதுதான் கேள்வியாக உள்ளது. பின்னர் விவாதிப்போம் தற்போது அந்த விவாதம் வேண்டாம்.
தத்துவம் நடைமுறை என்ற இடத்தில் இங்கு பலரும் நாங்கள் நடைமுறையில் உள்ளோம் என்கின்றனர்.
ஆனால் அவர்கள் எந்த தத்துவத்தின் அடிப்படையில் நடைமுறையில் உள்ளார்கள் அப்படி என்னும் பொழுது இதற்கான மூலத்தை அறிய வேண்டும் அல்லவா?
மார்க்சியத்திற்கு முந்தைய தத்துவங்கள் எல்லாம் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை பேசியது மார்க்சியம் மட்டும்தான் பிரச்சனைக்கான காரணத்தையும் பிரச்சனையை தீர்ப்பதற்கான வழிவகை கூறியது எல்லா தத்துவங்களும் உள்ள அமைப்பு முறையை அதை தக்கவைத்துக் கொள்ள விரும்பியது மார்க்சியம் இந்த அமைப்பு முறைதான் இந்த பிரச்சினைகளுக்கான காரணம் இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்றனர். அதற்கான வழிவகையை கூறினர் அதன் அடிவொற்றி ரசிய சீன புரட்சி நடந்தது உலக நாடுகளில் பல நாடுகளில் புரட்சி நடந்தேறியது இன்று அவை நமக்கான படிப்பினைகள்தான்...
அதனை பற்றி பார்க்கும் முன் நமது நாட்டில் நடந்த சில போராட்டங்கள் எப்படி சமூக மாற்றதிற்கான அடிதளத்தை இட்டது இருந்தும் வெற்றி பெறாமைக்குள்ள காரணிகளை பேச வரவில்லை அவர்களின் பணி பாணி மக்கள் மத்தியில் செயலாற்றியது மக்களை ஒன்றினைய செய்தது அல்லவா? அவை பற்றி சிறிது பார்ப்போம்.
தமிழகத்தில் தோன்றிய தஞ்சை விவசாயிகள் போராட்டமாகட்டும் அதற்கு பிறகான தெலுங்கான போராட்டமாகட்டும் ஏன் நக்சல் பாரி போராட்டம் இப்படி சில போராட்டங்களை கணக்கில் எடுத்துக் கொள்வோம்.
தஞ்சையில் நடந்த போராட்டமானது உழைக்கும் எல்லா விவசாயிகளையும் குறிப்பாக கூலி விவசாயிகளை உள்ளடக்கி அன்றைய போராட்டமாக இருந்தது. அந்த உழைக்கும் மக்களின் கொடுமைக்கு காரணமானவர்களை அடையாளப்படுத்தியதோடு அவர்களுக்கு எதிராக களம் கண்டது அந்தப் போராட்டம் உழைக்கும் ஏழைஎளிய மக்களை அன்று அவை ஒருங்கிணைக்க வழிவகை செய்தது மக்கள் அணி திரண்டார்கள்... அதன் வழிவந்த கட்சியானது அந்தப் போராட்ட வடிவத்தை கைவிட்டதன் அதன் பின் நடந்தேறியவை அறிந்ததே.
இன்று அந்தப் போராட்டத்தை ஜாதியபோராட்டமாக சித்தரிக்கப்படும் அளவு இங்குள்ளோர் சீர் கெட்டுவிட்டனர். இவற்றுக்கான வரலாறு பிறகு பார்ப்போம்.
அடுத்து தெலுங்கானா போராட்டம் அன்று கொடுங்கோன்மைக்கு எதிராக நிலமற்ற கூலி விவசாயிகள் பண்ணை அடிமைத்தனமும் பண்ணையார்களுக்கு எதிராக ஒன்று திரண்டு அந்தக் கட்டுதளைகளை உடைத்து விடுதலைக்கான பாதையை அமைத்து நடை போட தொடங்கினார்கள்.
அன்றைய வரலாறு நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் அன்று நிலைமற்ற கூலி விவசாயிகளுக்கு நிலம் பகிர்ந்து அளிக்கப்பட்டது 1952 க்கு பின்னான வரலாறு தேவையில்லை... அதனை இன்றைய சில NGOகள் குறிப்பிடுகின்றனர் "ஜாதி போராட்டமாக சுருக்குகிறார்கள்" என்னே சொல்ல?
அடுத்து நக்சல்பாரி போராட்டத்தை எடுத்துக் கொள்வோம்.
அன்றைய நில உடமை சமூகத்தில் பண்ணையார்களின் மேலாதிக்கம் கூலி விவசாயிகளுக்கு எதிரான கொடூரங்களை எதிர்த்து பண்ணையார்களை அழிக்க ஒழிக்க தொடங்கி அவர்கள் போராட்டமானது மக்கள் மத்தியில் வீறு கொண்டு எழுந்தது அவை மக்களை ஒன்றினைக்க செய்தது. இருந்தும் அது குறிப்பிட்ட கட்டத்தில் செயலற்று போனது அதன் பின்புலத்தை மற்றதையும் பிறகு பார்ப்போம்.... அவர்களின் நோக்கமும் செயலும் சமூக மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது அதில் பல விமர்சனங்கள் இருந்தாலும் இன்று அதனை தன தாக்கிக் கொள்ள விரும்பும் பலரும் அவர்களை அன்று தாக்கியவர்கள் எதிர்த்து வந்தவர்கள் இன்று அவர்களின் வாரிசுகள் எங்கின்றனர் காலக் கொடுமை...
அப்படியெனும் பொழுது நடைமுறையில் ஏற்பட்ட சாதக பாதங்களை கணக்கில் கொள்வோம் அதே நேரத்தில் இந்த சமூகத்திலே விடுதலை காண நினைப்போர் விடுதலையை மறுத்து அடிமையாக வாழ சொல்லும் ஆளும் ஒடுக்கும் வர்க்க தத்துவத்தை ஆதரிப்போரே
ஆக மிக சரியான கோடு வறைய வேண்டும்.
சமூக மாற்றமும் மக்களுக்கான விடுதலையா? அல்லது சீர்திருத்தம் என்றால் உள்ள அமைப்புமுறைகுள்ள சில சலுகைகள் பெற்று அடிமையாக வாழ்வதா?
இங்கேதான் நமது தத்துவத்தையும் நடைமுறையும் உரசி பார்க்க வேண்டிய இடம்...
தொடரும் தோழர்களே...

பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடுகாலி காவுத்ஸ்கியும்-4

 முதலாளித்துவ ஜனநாயகமும் பாட்டாளி வர்க்க ஜனநாயகமும்

இந்த பகுதி எழுதுவதன் நோக்கம் லெனின் தன்நாட்டில் புரட்சிக்கு முன் தத்துவார்த்த தளத்தில் புரட்சிக்கு எதிரான புரட்சியை காட்டிக் கொடுக்கும் திருத்தல்வாத போக்கை அம்பலப்படுத்தினார் இன்று நமது நாட்டில் அதே காவுத்ஸ்கியவாதம் மேலோங்கியுள்ளது அதனை விவரிக்க இந்த தொடர். ஜனநாயம் என்று பொதுவாக பேசுவதும் பாராளுமன்றம் மூலம் உழைக்கும் மக்களுக்கு ஏதோ செய்வதாக பேசுவதும் உண்மையில் மார்க்சிய வகைப்பட்டதா?

முந்தைய இதழின் தொடர்ச்சி. முதலாளித்துவ ஜனநாயகமும் பாட்டாளி வர்க்க ஜனநாயகமும்

காவுத்ஸ்கி மிகவும் வெட்கக்கேடான முறையில் குளறுபடி செய்துள்ள விஷயம் உண்மையில் பின் வருமாறு: .

நாம் பொது அறிவையும் வரலாற்றையும் கேலிக்கு ஆளாக்காதிருக்க வேண்டுமானால் பல்வேறு வர்க்கங்கள் நிலவுகின்ற வரையில் தூய ஜனநாயகம் பற்றிப் பேச முடியாது, ர்க்க ஜனநாயகம் மட்டுமே பேச முடியும் என்பது கண்கூடு. (தூய ஜனநாயகம் என்பது வர்க்கப் போராட்டம் மற்றும் அரசின் இயல்பு ஆகிய இரண்டை பற்றியும் அறிவில்லாத ஓர் அப்பாவித்தனமான தொடர் மட்டுமல்ல அதோடு உச்ச அளவிலான வெற்று தொடரும் ஆகும். காரணம் கம்யூனிஸ்ட் சமுதாயத்தில் ஜனநாயகம் மாற்ற மடையும் போக்கில் ஒரு பழக்கமாக மாறி உலர்ந்து உதிரும் ஆனால் என்றுமே தூய ஜனநாயகம் என்பது இருக்காது என்று இடைமுறிப்பாகச் சொல்லி வைப்போம்.)

தூய ஜனநாயகம் என்பது தொழிலாளர்களை ஏய்க்க விரும்பும் ஒரு மிதவாதியின் பொய்யான தொடராகும். நிலப் பிரபுத்துவ முறையின் இடத்தை எடுத்துக் கொள்ளும் முதலாளித்துவ ஜனநாயகத்தையும் முதலாளித்துவ ஜனநாயகத்தின்இடத்தை எடுத்துக் கொள்ளும் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தையும் வரலாறு அறியும்.

மத்திய கால நிலவரத்துடன் ஒப்பிடும்போது முதலாளித்துவஜனநாயகம்முற்போக்கானது எனவும் பாட்டாளி வர்க்கம் முதலாளித்து வர்க்கத்தை எதிர்த்த தனது போராட்டத்தில் அதைப் பயன்படுத்த தவறக் கூடாது எனவும் சாற்றும் உண்மையினை நிரூபிக்க காவுத்ஸ்கி டஜன் கணக்கான பக்கங்களை எழுதித் தள்ளுவது உண்மையில் தொழிலாளர்களை ஏமாற்றும் உத்தேசம் கொண்ட வெறும் மிதவாத பிதற்றலே.

காவுத்ஸ்கி  மார்க்சியத்தில் இருந்து மிதவாதிகளுக்கு முதலாளிகளுக்கு ஏற்புடையவற்றை எடுத்துக்கொள்கிறார். மார்க்சியத்தில் முதலாளிகளுக்கு ஏற்புடைய அல்லாதவற்றை அவர் நிராகரிக்கிறார்.

அவை குறித்து எதுவும் சொல்லாது மௌனமாகிறார் பூசி மெழுகுகிறார்.

தவிர்க்கவே முடியாத வகையில் முதலாளித்துவவர்க்கத்தின்அடிவருடியாகிறார். ( பக்கம் 28- 29 ).

 

மத்திய கால நிலையுடன் ஒப்பிடும்போது முதலாளித்துவ ஜனநாயகம் ஒரு மாபெரும் வரலாற்று முன்னேற்றமாக இருந்த போதிலும் அது எப்போதும் முதலாளித்துவத்தின் கீழ் கட்டாயமாகும் வரையறுக்கப்பட்ட மொட்டையான பொய்யான போலியான ஒன்றாகவும் செல்வந்தர்களுக்கு ஒரு சொர்க்கமாகவும் சுரண்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு ஒரு மாயப்பொறியாயும் மோசடியாகவும் நிலவும். மார்க்சின் போதனைகளில் மிகவும் முக்கியமான பகுதியாக விளங்கும் இந்த உண்மைனைத்தான் மார்க்சியவாதி காவுத்ஸ்கி புரிந்து கொள்ள தவறிவிட்டார்.(30)

புராதன மற்றும் நிலப்பரப்புத்துவ அரசுகள் மட்டுமின்றி நவீன பிரதிநிதித்துவ அரசும் மூலதன கூலிஉழைப்பைச் சுரண்டுவதற்கான ஒரு கருவியே (எங்கெல்ஸ் அரசு பற்றிய தமது நூலில்) விரோதிகளை பல பிரயோகம் மூலம் அடக்கி வைப்பதற்கு போராட்டத்தில் புரட்சியில் பயன்படுத்தப்படும் ஓர் இடைக்கால நிறுவனம் மட்டுமே அரசு. ஆகையால் சுதந்திரமான மக்கள் அரசு குறித்து பேசுவது மிகவும் முட்டாள் தனமானதாகும். பாட்டாளி வர்க்கத்துக்கு அரசு இன்னும் தேவைப்படுகிறது எனில் அது சுதந்திரத்தின் நலன்களுக்காக தேவைப்படுவதில்லை மாறாக அதன் விரோதிகளை அடக்கி வைப்பதன் பொருட்டே தேவைப்படுகிறது சுதந்திரம் குறித்து பேசுவது சாத்தியமானவுடன் அரசு என்பது இல்லாது போகிறது (எங்கெல்ஸ் 1875 மார்ச் 28 இல் பெபெலுக்கு எழுதிய கடிதத்தில்). உண்மையில் அரசு என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான ஒரு இயந்திரமே தவிர வேறு எதுவும் அல்ல. இது முடியரசில் போலவே சற்றும் குறையாத அளவில் ஜனநாயக குடியரசிலும் கண்கூடு (மார்க்ஸ் எழுதிய பிரான்சில் உள்நாட்டு போர் எனும்  நூலுக்கு எங்கெல்ஸ் எழுதிய முகவுரையில்).

 

காவுத்ஸ்கி வெட்கக்கேடான முறையில் முதலாளித்துவ ஜனநாயகத்தை அலங்காரம் செய்து காட்டுகிறார். அமெரிக்காவிலும் ஸ்விஸ்லாண்டிலும் ஆக ஜனநாயகவாதி களான குடியரசுவாத முதலாளித்து வர்க்கத்தினர் வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக எப்படி நடக்கிறார்கள் என்பதை குறிப்பிடாமல் விட்டு விடுகிறார். அறிவாளியும் படிப்பாளியுமான காவுத்ஸ்கி. இவற்றைப் பற்றி எல்லாம் மௌனம் சாதிக்கிறார்! இந்த விஷயத்தில் மௌனம் சாதிப்பது வெறுக்கத்தக்கது என்பது அந்த படிப்பாளி அரசியல்வாதி உணரவில்லை!.

என்ன அற்புதமான அறிவாழம் முதலாளித்துவ வர்க்கத்திடம் எத்தகைய நயநாகரிகமான அடிமைத்தனம் முதலாளிகள் முன்னால் எத்தகைய  தன்மதிப்பிழந்த எத்தகைய கெஞ்சி மன்றாடல்(33).

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதிர்த்து பிரசாரம் எழுதுதல் 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இருந்த விக்குகளையும் டோரிகளையும் குறித்து பேசுதல் ஜனநாயகம் என்பது சிறுபான்மை பாதுகாப்பது என்று அடித்துக் கூறி அதே சமயத்தில் ஜனநாயக குடியரசான அமெரிக்காவில் சர்வதேசிவாதிகளை எதிர்த்து நடக்கும் இனக்கொலைகள் குறித்து மௌனம் சாதித்தல் இவையெல்லாம் முதலாளித்துவ வர்க்கத்திற்கு செய்யப்படும்  அடிவருடி சேவைகள் அல்லவா?(33)

பாட்டாளி வர்க்க ஜனநாயகம் எந்த ஒரு முதலாளித்துவ ஜனநாயகத்தை விட மில்லியன் மடங்கு அதிக ஜனநாயகம் ஆனது;சோவியத் ஆட்சி அதிகாரம் ஆக ஜனநாயகமான முதலாளித்துவ குடியரசை விட மில்லியன் மடங்கு அதிக ஜனநாயகம் ஆனது.

இந்தப்பகுதி தேவைகருதி நிறுத்திக் கொள்கிறேன் அடுத்த இதழில் சுருண்டப் படுவோருக்கும் சுரண்டுவோருக்கும் இடையே சமத்துவம் இருக்கவே முடியாது. தொடரும் .. .. .. சிபி

++++++++++++++++++++++++++++++++++++++++++++

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்