ஜனநாயகப் புரட்சியில் சமூக - ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள். லெனின். பாகம் – 5

 4. முடியரசை ஒழித்தல். குடியரசு தீர்மானத்தின் அடுத்த பகுதியைப் பார்ப்போம்:“இரண்டு வழக்குகளிலும் இப்படிப்பட்ட வெற்றி புரட்சி சகாப்தத்தில் ஒரு புதிய கட்டத்தை துவக்கி வைக்கும்.அரசியல்ரீதியிலே விடுதலைபெற்ற முதலாளித்துவச் சமுதாயத்தின் பகுதிகளிடையே நடக்கும் பரஸ்பரப் போராட்டத்தின் நிகழ்வுப் போக்கிலே அவற்றின் சமுதாய நலன்களை நிறைவாக்குவதற்கும் நேரடியாக அரசதிகாரத்தைப் பெறுவதற்கும் சமுதாயப் படிநிலைகளைக்கொண்டுள்ள முடியரசு அமைப்பு முறை முழுவதையும் இறுதியாக ஒழித்தல் சமுதாயவளர்ச்சியின் புறநிலைமைகள் தன்னியல்பாகத் தோற்றுவிக்கும் இந்தப் புதிய கட்டத்தில் உள்ள பணி இதுவே.“ஆகவே வரலாற்றுத் தன்மையில் முதலாளித்துவ வழிப்பட்ட இந்தப் புரட்சியின் பணிகளை நிறைவேற்ற முன்வரும் ஒரு தற்காலிக அரசாங்கம் விடுதலைபெறும் போக்கிலுள்ள ஒரு தேசத்தைச் சேர்ந்த பகைமையான வர்க்கங்களுக்கிடையே நடக்கும் பரஸ்பரப் போராட்டத்தைஒழுங்கு முறைப்படுத்தி, புரட்சிகரமான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்பதுமட்டுமல்ல, அந்த வளர்ச்சியில் முதலாளித்துவ அமைப்பு முறையின் அடித்தளங்களைஅச்சுறுத்தும்காரணிகளை எதிர்த்தும் போராட வேண்டும்”. தீர்மானத்தில் ஒரு சுதந்திரமான பகுதியாக இருக்கும் இப்பிரிவைப் பரிசீலிப்போம்.மேலேமேற்கோள் காட்டிய வாதங்களில் உள்ள அடிப்படை கருத்து காங்கிரஸ் தீர்மானத்தின்மூன்றாம் பிரிவுக் கூற்றில் விவரிக்கப்பட்டுள்ள தோடு பொருந்துகிறது.என்றபோதிலும்,இரண்டு தீர்மானங்களின் இந்தப் பகுதிகளை விபரமாகஒப்புநோக்கினால் அவற்றிடை யே பின்வரும் அடிப்படையான வேற்றுமை இருக்கிறதை உடனே காட்டிவிடும்.புரட்சியின் சமுதாய பொருளாதார அடிப்படையைச் சுருக்கமாக வர்ணிக்கும் காங்கிரஸ் தீர்மானம் திட்டவட்டமான ஆதாயங்களுக்காக வர்க்கங்கள் நடத்தும் நன்கு வரையறுக்கப்பட்ட போராட்டத்தின் மீதே கவனம் முழுவதையும் செலுத்திப் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டப் பணிகளை முன்னணியில் நிறுத்துகிறது. புரட்சியின் சமுதாய - பொருளாதார அடிப்படையைப் பற்றி ஒரு நீளமான, உருத்தெளிவில்லாத, குழப்பமான வர்ணணனையைக் கொண்டிருக்கும் மாநாட்டுத் தீர்மானம் திட்டவட்டமான ஆதாயங்களுக்குரிய போராட்டத்தைப் பற்றி பிடிகொடுக்காமல் பேசுகிறது,பாட்டாளி வர்க்கத்தின் போராட்டப் பணிகளை அப்படியே பின்னணியில் விட்டு வைக்கிறது. சமுதாயத்தின் பல்வேறு பகுதிகளிடையே பரஸ்பரப் போராட்டம் நிகழ்ந்து வரும் போக்கில் பழைய அமைப்பு முறையை ஒழிப்பதைப் பற்றி மாநாட்டுத் தீர்மானம் பேசுகிறது.பாட்டாளி வர்க்கக்கட்சியாகிய நாம் இந்த ஒழிப்புப் பணியை செய்து முடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தீர்மானம் சொல்லுகிறது; ஜனநாயகக் குடியரசு நிறுவுவது ஒன்றுதான் உண்மையாகவே பழைய அமைப்பு முறையை ஒழிப்பதைக் குறிக்கிறது என்றும் சொல்கிறது; அந்த குடியரசைநாம் வென்று தீரவேண்டும் என்றும் சொல்கிறது; அதற்காகவும் முழுமையான சுதந்திரத்துக்காகவும் நாம் போராடுவோம், எதேச்சிகார முறையை எதிர்த்து மட்டுமல்ல,நம் ஆதாயங்களை நம்மிடமிருந்து முதலாளித்துவ வர்க்கம் பறிக்க முயற்சிக்கும் போதும்(நிச்சயமாகப் பறிக்கத்தான் முயற்சிக்கும்)அதையும் எதிர்த்துப் போராடுவோம் என்றும் சொல்கிறது. காங்கிரஸ் தீர்மானம் சரிநுட்பமாக வரையறுத்த உடனடிக் குறிக்கோளுக்காக ஒரு திட்டவட்டமான வர்க்கத்தைப் போராட்டத்திற்கு அறைகூவி அழைக்கிறது. மாநாட்டுத் தீர்மானமோ பல்வேறு சக்திகளின் பரஸ்பரப் போராட்டத்தைப் பற்றி நீட்டிப் பேசுகிறது.ஒரு தீர்மானம் செயலூக்கமுள்ள போராட்டத்துக்குரிய மனநிலையை வெளியிடுகிறது,மற்ற தீர்மானம் செயலற்ற பார்வையாளரின் மனநிலையை வெளியிடுகிறது;ஒன்று உயிர்ப்புள்ள செயலுக்கு அழைக்கும் அறைகூவலை முழங்குகிறது, மற்றது உயிரற்ற ஏட்டறிவுவாதத்தில் ஊறிப்போயிருக்கிறது. இன்றையப் புரட்சி நம் முதற்படி மட்டுந்தான்,அதைத் தொடர்ந்து இரண்டாவது படி வரும் என்று இரு தீர்மானங்களும் கூறுகின்றன;எனினும் இதிலிருந்து ஒரு தீர்மானம் நாம் இந்த முதற்படியை முடிந்தவரை விரைவிலேயே கடந்து,முடிந்தவரை விரைவிலே ஒழித்து,குடியரசை வென்று,ஈவிரக்கமின்றி எதிர்ப்புரட்சியை நசுக்கி, இரண்டாவது படிக்கு தயார் செய்ய வேண்டும் எனும் முடிவுக்கு வருகிறது. ஆனால் மற்ற தீர்மானம் முதற்படியைப் பற்றிய சொற்பெருக்குள்ள வர்ணணனை களைக் கொட்டுகிறது, அதைப் பற்றி அசைபோட்டவாறு இருக்கிறது (நயமற்ற சொல்லுக்கு மன்னிக்க). பழையதாக இருப்பினும் எக்காலத்துக்கும் புதுமைப் பொலிவுடன் விளங்கும் மார்க்சியத்தின் கருத்துக்களை (ஜனநாயகப் புரட்சியின் முதலாளித்துவத் தன்மையை)ஒரு முன்னுரையாக அல்லது முதல் மெய்க்கோளாகக் காங்கிரஸ் தீர்மானம் எடுத்துக் கொள்கிறது;ஜனநாயகப் புரட்சிக்காகவும்சோசலிசப்புரட்சிக்காகவும் ஒருங்கே போராடும் முற்போக்கான வர்க்கத்தின்முற்போக்கான பணிகளைப் பற்றி அதிலிருந்து முடிவுகளை எடுக்கிறது. மாநாட்டுத் தீர்மானம் அந்த முன்னுரையைத் தாண்டிப் போகவில்லை அதை வாயில் வைத்து அசை போட்டவாறு இருக்கிறது, அதைக் கொண்டு தனது கெட்டிக்காரத் தனத்தைக் காட்டிக் கொள்ளவும் முயல்கிறது.

இதே வேறுபாடுதான் வெகு காலமாக ரஷ்ய மார்க்சியவாதிகளை இரு பிரிவுகளாகப் பிரித்திருக்கிறது: “சட்டப் பூர்வமான மார்க்சியம்”(குறிப்பு- “சட்டப் பூர்வமான மார்க்ஸியம்” --1890 களில் ரஷ்யாவின் முதலாளித்துவ-மிதவாதப் படிப்பாளிப் பகுதியினரிடையே இருந்த சமுதாய-அரசியல் இயக்கம்.மார்க்சியத்தின் ஆதரவாளர்கள் என்று பிரகடனம் செய்துகொண்டு சட்டப்பூர்வமான மார்க்சியவாதிகள்நிலப்பிரபுத்துவ அமைப்பு முறைக்குப் பதிலாக முதலாளித்துவ அமைப்பு முறை வருவதின் தவிர்க்க முடியாதத் தன்மையைப் பற்றியதத்துவத்தை மட்டும் மார்க்சியப் போதனையிலிருந்து எடுத்துக் கொண்டார்கள்;முதலாளித்துவ வீழ்ச்சியின்,சோசலிசப் புரட்சியின் தவிர்க்க முடியாதத் தன்மை பற்றிய போதனை,சோசலிசத்துக்கு மாறிச் செல்வது பற்றிய போதனை எனும்படியான மார்க்சியத்தின் புரட்சிகரஆன்மாவைஅவர்கள் முற்றாக நிராகரித்தனர்.பிற்காலத்தில் அவர்கள் மார்க்சியத்திற்குபகைவர்கள் ஆயினர்.முதலாளித்துவக் காடேட்டுக் கட்சியின் உறுப்பினர்கள் ஆயினர்.)நிலவிய பழைய நாட்களில் ஏட்டறிவுவாதப் பிரிவு என்றும் போர்த்துடிப்புள்ள பிரிவு என்றும்இருந்தன, துவக்க நிலையிலிருந்த மக்கள் திரளின் இயக்கக் காலத்தில் பொருளாதாரப் பிரிவு என்றும் அரசியல் பிரிவு என்றும் இருந்தன.பொதுவாக வர்க்கப் போராட்டத்துக்கும் குறிப்பாகஅரசியல் போராட்டத்துக்கும் உள்ள ஆழமான பொருளாதார வேர்கள் சம்பந்தப்பட்ட சரியானமார்க்சிய மெய்கோளிலிருந்து நாம் அரசியல் போராட்டத்தின் பால் முதுகைத் திருப்பிக் கொண்டு அதன் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்றும் அதன் செயல் பரப்பைக் குறுக்க வேண்டும் என்றும் அதன் குறிக்கோள்களைத் தாழ்த்த வேண்டுமென்றும்பொருளாதாரவாதிகள்வேடிக்கையான முடிவுக்கு வந்தனர்.அதற்கு மாறாக அரசியல்பிரிவினர் இதே மெய்கோள்களிலிருந்து வேறொரு முடிவுக்கு வந்தனர்:அதாவது,இன்றைய நம் போராட்டத்தின் வேர்கள் எவ்வளவுக்குகெவ்வளவு ஆழமாக உள்ளனவோ அவ்வளவுக்கவ்வளவு விரிவாகவும் துணிவுடனும் மன உறுதியுடனும் அதிகமுன்முயற்சியுடனும் இந்தப் போராட்டத்தை நாம் நடத்த வேண்டும் என்று. இதே சர்ச்சைதான் இப்போதும் நம்முன் உள்ளது,ஆனால் நிலைமைகளும் வடிவமும் மட்டும்தான் மாறியுள்ளன.

ஜனநாயகப் புரட்சி என்பது சோசலிசப் புரட்சியிலிருந்து மிகவும் வேறுபட்டது, ஜனநாயகப்புரட்சியில் அக்கறை”; கொண்டவர்கள் ஏழைகள் மட்டுமல்ல, முதலாளித்துவச் சமுதாயம்முழுவதின் தவிர்க்க முடியாத அவசியமான தேவைகளில்ஆழமாக வேரூண்டியிருக் கிறது எனும் இந்த மெய்கோள்களிலிருந்து நாம் எடுக்கும் முடிவு இதுதான்: முன்னணியிலுள்ளவர்க்கம் தன்னுடைய ஜனநாயகக் குறிக்கோள்களை மேலும் தைரியமாக வகுத்துக் கொள்ளவேண்டும், அவற்றை மேலும் கூராகவும் முழுமையாகவும் வெளியிட வேண்டும், குடியரசு வேண்டும் எனும் உடனடியான கோஷத்தை முன்வைக்க வேண்டும், ஒரு தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தை நிறுவுவது தேவை, எதிர்ப்புரட்சியை ஈவிரக்கமின்றி நசுக்குவது தேவை எனும் கருத்தை மக்களிடையே பரப்ப வேண்டும், என்று. ஆனால்,நம் எதிர்ப்பாளர்களாகிய புதியஇஸ்க்ரா குழுவினர் இதே மெய்க்கோள்களிலிருந்து எடுக்கும் முடிவு இவ்வாறு:ஜனநாயக முடிவுகளை முழுமையாக வெளியிடக்கூடாது,நடைமுறை கோஷங்களிலிருந்து குடியரசுவேண்டும் எனும் கோஷத்தை விலக்கிவிடலாம், தற்காலிகப் புரட்சி அரசாங்கம் தேவை எனும் கருத்தை மக்களிடையே நாம் பரப்பாமல் இருந்துவிட முடியும்,அரசியல் நிர்ணய சபையைக் கூட்டுவது எனும் வெறும் முடிவையே ஒரு நிர்ணயமான வெற்றியாகச் சொல்ல முடியும்,எதிர்புரட்சியை எதிர்த்துப் போராடும் பணியை நம்முடைய செயலுக்குரிய குறிக்கோளாக முன்நிறுத்தத் தேவையில்லை, இதனால் பரஸ்பரப் போராட்டத்தின் நிகழ்வுப் போக்குஎனும் ஓர் உருத்தெளிவற்ற (தவறாக வரையறுக்கப்பட்டது என்பதையும் கீழே பார்க்கப் போகிறோம்) சுட்டுக்குறிப்பில் அதை அமிழ்த்துவிடலாம், என்று. இது அரசியல் தலைவர்கள் பேசும் மொழியல்ல, ஆயப்புரையில் அடைந்து கிடக்கும் பழைய பேர்வழிகள் பேசும் மொழி.

புதிய இஸ்க்ரா குழுவினரின் தீர்மானத்திலுள்ள பல்வேறு வரையறுப்பு களை எவ்வளவுக்கெவ்வளவு நெருங்கிப் பரிசீலிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு தெளிவாக மேலேசொன்ன அதன் அடிப்படையான முனைப்புக் கூறுகள் தெரிகின்றன.எடுத்துக்காட்டாக,”அரசியல் ரீதியிலே விடுதலை பெற்ற முதலாளித்துவச் சமுதாயத்தின் பகுதிகளிடையேநடக்கும் பரஸ்பர போராட்டத்தின் நிகழ்வுப் போக்குஎன்று சொல்கிறார்கள். இந்தத்தீர்மானம் எடுத்துக் கவனிக்கும் (தற்காலிகப் புரட்சி அரசாங்கம் எனும்) விஷயப் பொருளை நினைவில் கொண்டு பரஸ்பரப் போராட்டத்தின் நிகழ்வுப் போக்கை நீங்கள் குறிப்பிடு கிறதாயிருந்தால் அரசியல் ரீதியிலே முதலாளித்துவச் சமுதாயத்தை அடிமைப்படுத்துகிற பகுதிகளைப் பற்றி எப்படி நீங்கள் மௌனம் சாதிக்கமுடியும்? புரட்சி வெற்றி பெறும் என்று மாநாட்டுக்காரர்கள் அனுமானித்துக் கொண்டிருப்பதால் இப்பகுதிகள் ஏற்கனவே மறைந்து போய்விட்டதாக உண்மையாகவே நினைக்கிறார்களா? என்று வியப்புடன் வினவுகிறோம். பொதுவாகச் சொன்னால் இப்படிப்பட்ட கருத்து அபத்தமானது, குறிப்பாகச் சொன்னால் அது மாபெரும் அரசியல் வெகுளித்தனமும் அரசியல் கிட்டப் பார்வையும் வெளியிடுவதாகும். எதிர்ப்புரட்சியை எதிர்த்துப் புரட்சி வெற்றிபெற்ற பின் எதிர்புரட்சி மறைந்துவிடாது; மாறாக, தவிர்க்க முடியாதபடி அது ஒரு புதிய, மேலும் கடுமையான போராட்டத்தைத் தொடங்கும். புரட்சி வெற்றிபெறும் போது நம்முன் எழும் பணிகளை ஆராய்வதே நம்முடைய தீர்மானத்தின் நோக்கம், எனவே எதிர்ப்புரட்சித் தாக்குதல்களை முறியடிப்பதற்கான பணிகளில் (காங்கிரஸ் தீர்மானத்தில் செய்துள்ளது போல்) மாபெரும் கவனம் செலுத்துவது நம் கடமையாகும்; இன்றையப் புரட்சிக் காலப் பகுதிக்குப்பின் என்ன நடக்கும்,அல்லது அரசியல் ரீதியிலே விடுதலை பெற்ற சமுதாயம்ஏற்கனவே இருக்கையில் என்ன நடக்கும் என்பதைப் பற்றிய பொதுப்படையான விவாதங்களிலே போர்த்துடிப்புள்ள கட்சியின் இந்த உடனடியான, அவசரமான, உயிர்நிலையான அரசியல் பணிகளை மூழ்கடிப்பதல்ல நம் கடமையாகும். பொருளாதாரத்துக்குக் கீழ்படுத்தப்பட்டதே அரசியல் எனும் பொது உண்மையைத் திருப்பிச்சொல்வதின்வழியே பொருளாதாரவாதிகள்அவசரமான அரசியல் பணிகளைப் புரிந்து கொள்ளத் தமக்குத் திறமையில்லாததை மூடிமறைத்தார் களோ அதுபோல்,அரசியல் ரீதியிலே விடுதலை பெற்ற சமுதாயத்தில் போராட்டங்கள் நடக்கும் எனும் பொது உண்மையைத் திருப்பிச் சொல்வதின் வழியே புதிய இஸ்க்ரா குழுவினர் அந்த சமுதாயத்தின் அரசியல் விடுதலை பற்றிய அவசரமான புரட்சிப் பணிகளை புரிந்துகொள்ளத் தமக்கு திறமை இல்லாததை மூடிமறைக்கிறார்கள்.

சமுதாயப் படிநிலைகளைக் கொண்டுள்ள முடியரசு அமைப்பு முறை முழுவதையும் இறுதியாக ஒழித்தல்எனும் சொற்றொடரை வேண்டுமெனில், எடுத்துக் கொள்ளுங்கள். முடியரசு அமைப்பு முறையை இறுதியாக ஒழித்தல் என்பதற்கு பொருள் ஒரு ஜனநாயகக் குடியரசை அமைப்பது என்பதாகும். ஆனால் நல்லவரான நம்முடைய மார்தீனவும் அவரை மெச்சிப் போற்று கின்றவர்களும் இந்தச் சொற்றொடர் மிதமிஞ்சிய தெளிவும் எளிமையும் கொண்டுள்ளது என்று கருதுகிறார்கள். அதை மேலும் பொருளாழ முள்ளதாகஆக்கவேண்டும்,மேலும்கெட்டிக்காரத்தனமாகச்சொல்ல வேண்டும் என்று மிகவும்விரும்புகிறார்கள். அதன் விளைவாக அறிவாழமிக்கவர் களாகக் காட்டிக்கொள்ள முயலும் கேலிக்கிடமான வீண்முயற்சிகள் ஒருபுறம் கிடைக்கின்றன; மறுபுறம் கோஷத்துக்குப் பதிலாக வர்ணணனையும், முன்னேறுமாறு அழைக்கும் கிளர்ச்சியூட்டும் அறைகூவலுக்குப் பதிலாக ஒருவிதமான வாட்டத்தோடு பின்னோக்கிச் சிந்திக்கும் போக்கும் கிடைக்கிறது. இன்றே இப்பொழுதே குடியரசிற்காகப் போராட ஆர்வம் காட்டும் உயிர்ப்புள்ள மனிதர்களைப் பார்ப்பதாக நமக்குப் படவில்லை, Sub Specie aeternitatis* plusquamperfectum** எனும் பார்வை நிலையிலிருந்து பிரச்சனையைக் கவனிக்கும் வதங்கிய பிணங்கள் போலத்தான்அத்தன பேரும் நமக்குப் படுகின்றனர்.மேலே போவோம்:  “…முதலாளித்துவ வழிப்பட்ட இந்தப் புரட்சியின் பணிகளை நிறைவேற்ற முன்வரும் ஒரு தற்காலிக அரசாங்கம் …”

--------------------

* காலமுடிவற்ற பார்வை நிலையிலிருந்து (லத்தீன்) -- -ர்.

** நெடு நாளைக்கு முன் சென்ற காலம் (ஜெர்மன்) --- -ர்.

--------------------

பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் தலைவர்களை எதிர்நோக்கியுள்ள ஒரு ஸ்தூலமானபிரச்சனையை நம்முடைய மாநாட்டுக்காரர்கள் பார்க்கத் தவறியிருப்பதன் விளைவைஇங்கே உடனே பார்க்கிறோம், பொதுவாக முதலாளித்துவப் புரட்சியின் குறிக்கோள்களை நிறைவேற்றவிருக்கும் எதிர்கால அரசாங்கங்களின் வரிசைத் தொடர் பற்றிய பிரச்சனையானது அவர்களின் பார்வைப் புலத்திலிருந்து தற்காலிகப் புரட்சி அரசாங்கம் பற்றிய ஸ்தூலமான பிரச்சனையை மறைக்கிறது. “வரலாற்று வழியில்நீங்கள் பிரச்சனையைப் பார்க்க விரும்பினால், “தற்காலிகமானவையாகஅறவே இல்லாதஅரசாங்கங்களின் வரிசைத் தொடர்தான் முதலாளித்துவப் புரட்சியின் வரலாற்றுரீதியான குறிக்கோள்களை நிறைவேற்றியுள்ளதையும்,புரட்சியை முறியடித்த அரசாங்கங்களுங்கூடஅப்படி முறியடிக்கப்பட்ட புரட்சியின் வரலாற்று ரீதியான குறிக்கோள்களைக் கட்டாயத்தின் பேரில் நிறைவேற்ற வேண்டியிருந்ததையும் எந்த ஐரோப்பிய நாட்டின் எடுத்துக்காட்டும்உங்களுக்குப் புலப்படுத்தும். ஆனால் நீங்கள் குறிப்பிடுவதைத் தற்காலிகப் புரட்சி அரசாங்கம்என்று அழைக்கிறதில்லை. அது புரட்சி சகாப்தத்தின் அரசாங்கத்துக்கு,தூக்கியெறியப்பட்ட அரசாங்கத்தின் இடத்தில் அமர்ந்து மக்களின் புரட்சியெழுச்சியின் அடிப்படையில் செயல்படுகிற அரசாங்கத்துக்கு கொடுக்கப்படுகிற பெயராகும்;இந்த அரசாங்கம் மக்களிடமிருந்து தோன்றிய ஏதோவொரு வகையான பிரதிநிதித்துவ நிறுவனத்தின் மீது ஆதாரப்பட்டிருப்பதல்ல. தற்காலிகப் புரட்சி அரசாங்கம் என்பது புரட்சியின் உடனடியான வெற்றிக்காகவும் எதிர்ப்புரட்சி முயற்சிகளை உடனடியாக முறியடிப்பதற்காகவும் இருக்கிற போராட்ட உறுப்பாகும், பொதுப்படையாக முதலாளித்துவப் புரட்சியின் வரலாற்று ரீதியான குறிக்கோள்களை நிறைவேற்று வதற்குரிய உறுப்பு அல்லவே அல்ல.நாமோ வேறெதாவோர் அரசாங்கமோ முதலாளித்துவப் புரட்சிக்குரிய பணிகளில் என்னென்னவற்றை நிறைவேற்றி யுள்ளோம் என்று சரிநுட்பமாக நிர்ணயிப்பதை ஒரு எதிர்காலத்திய ரூஸ்கயா ஸ்தரீனாவின்21எதிர்கால வரலாற்றாசிரியர்களிடம் விட்டு விடுவோம்.அடுத்த முப்பதாண்டுகளுக்குப் பின் அதைச் செய்வதற்குப் போதிய நேரம் இருக்கிறது,தற்சமயம் குடியரசுக்கான போராட்டத்துக்கும் அந்தப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் மிகத் தீவிரமாகக் கலந்து கொள்வதற்கும் நாம் கோஷங்களை முன்வைக்க வேண்டும்,நடைமுறைக்குரிய வழிகாட்டிக் கட்டளைகள் கொடுக்க வேண்டும். மேலே சொன்ன காரணங்களுக்காக,தீர்மானத்தின் மேலே மேற்கோள் காட்டிய பகுதியிலுள்ள இறுதியான கருத்துரைகளும் திருப்திகரமாயில்லை.பகையான வர்க்கங்களுக்கிடையே நடக்கும் பரஸ்பரப் போராட்டத்தைத் தற்காலிக அரசாங்கம் ஒழுங்குமுறைப்படுத்தவேண்டியிருக்கும் எனும் சொற்றொடர் மிகவும் பொருத்தமற்றது, அல்லது எப்படிப் பார்த்தாலும் தடுமாற்றமுள்ள வகையில் சொல்லப்படுகிறது. இவ்விதமான மிதவாத,ஒஸ்வபஷ்தேனியே வழிப்பட்ட சூத்திரங்களை மார்க்சியவாதிகள் பயன்படுத்தக்கூடாது; வர்க்கப் போராட்டத்திற்க்குரிய உறுப்பாகச் செயல்படாமல்அதை ஒழுங்குமுறைப் படுத்தும் சாதனமாகச்செயல்படுகிற அரசாங்கங்கள் இருப்பது சாத்தியமே என்றுஅச்சூத்திரங்கள் நம்மை நம்பச் செய்யப் பார்க்கின்றன...அரசாங்கமானது புரட்சிகரமான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்பது மட்டுமல்ல,அந்த வளர்ச்சியில் முதலாளித்துவ அமைப்பு முறையின் அடித்தளங்களை அச்சுறுத்தும் காரணிகளை எதிர்த்தும் போராட வேண்டும்”.ஆனால்,பாட்டாளி வர்க்கமல்லவா (இதன் பெயரில்தான் தீர்மானம் பேசுகிறது)இந்தக் காரணியாகஇருக்கிறதுதற்காலத்தில் எப்படிப் பாட்டாளி வர்க்கம் புரட்சிகரமான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும்”(அரசியல் சட்டவாத முதலாளி வர்க்கத்தினர் முன்னேற்ற வேண்டு மென்று காட்டும் விருப்பத்தைவிட வெகுதூரத்துக்கு முன்னேற்ற வேண்டும்) என்று சுட்டிக் காட்டுவதற்குப் பதிலாக,புரட்சியின் ஆதாயங்களுக்கு எதிராக முதலாளி வர்க்கம் திரும்புகிறபோது அதை எதிர்த்துப் போராடுவதற்குத் திட்டவட்டமான தயாரிப்புகளைப் பற்றி அறிவுரை அளிப்பதற்குப் பதிலாக,தொடர் நிகழ்வுப் போக்கு பற்றிய பொதுவான வர்ணணனை நம்முடைய நடவடிக்கையின் ஸ்தூலமான குறிக்கோள்களைப் பற்றி ஒன்றும் சொல்லாத ஒரு வர்ணணனை -- நமக்குத் தரப்படுகிறது, புதிய - இஸ்க்ரா பாணியில் தன்னுடைய கருத்துக்களைச் சொல்வது, இயக்க இயலின் கருத்துக்களுக்குப் புறம்பான பழைய பொருள்முதல் வாதத்தைப் பற்றி மார்க்ஸ் (ஃபாயர்பார்க் பற்றியதமதுபுகழ்பெற்ற  ஆய்வுரைகளில்”) கூறிய கருத்தை நினைவூட்டுகிறது. தத்துவஞானிகள் உலகத்தைப் பற்றிப் பல்வேறு வழிகளில் வியாக்கியானந்தான் செய்தார்கள், ஆனால் அந்த உலகத்தை மாற்ற வேண்டும் என்பதுதான் விஷயம் என்று கூறினார் மார்க்ஸ்.22 அதுபோல் புதிய இஸ்க்ரா குழுவினருக்குத் தங்கள் கண்ணெதிரே நிகழும் போராட்ட நிகழ்வுப் போக்கைப் பற்றி பரவாயில்லை என்று சொல்லத்தக்க ஒரு வர்ணணனையும் விளக்கமும் கொடுக்க முடியும்,ஆனால் இந்தப் போராட்டத்துக்கு ஒரு சரியான கோஷம் அளிக்கும் திறமை அவர்களுக்குச்சிறிதேனும் கிடையாது. அவர்கள் நல்ல வழிநடைக்காரர்கள்தாம், ஆனால் மோசமான தலைவர்கள்; புரட்சியின் பொருளாதாய முன்தேவைகளைப் பற்றி உணர்ந்து கொண்டுமுற்போக்கான வர்க்கங்களுக்கு தலைமை தாங்கும் நிலை எடுத்துக் கொண்டுள்ள கட்சிகள் வரலாற்றில் வகிக்க முடிகிற, வகித்துத் தீரவேண்டிய,செயல்பூர்வமானதும் தலைமையானதும் வழிகாட்டுந்தன்மை யுள்ளதுமான பாத்திரத்தைப் புறக்கணிப்பதின் வழியே அவர்கள் வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தை இழிவுபடுத்துகின்றனர்.

நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை.

1. ரஷ்யாவில் செயல்பட்ட கம்யூனிச அமைப்புகளில் முக்கியமாக இரண்டு பிரிவினர் இருந்தனர். ஒன்று மென்ஷ்விக்குகள் மற்றொரு அமைப்பு போல்ஷ்விக்குகள்.


2.இவ்விரு பிரிவினரும் ரஷ்யாவில் நடைபெற வேண்டிய முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை ஆதரித்தாலும், அந்தப் புரட்சி பற்றிய செயல்தந்திரத்தில் வேறுபட்டு இருந்தனர்.

அந்த வேறுபாடுகளைப் பற்றியே லெனின் இந்த நூலில் விளக்குகிறார்.


3.ரஷ்யாவில்நிலவிய மார்க்சியவாதி களில் ஒரு பிரிவினர் சட்டப்பூர்வ மார்க்சியவாதிகள் ஆவார்கள். இவர்கள் நிலப்பிரபுத்துவத்திலிருந்துமுதலாளித்துவ சமூகமாக மாறும் என்பதை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் முதலாளித்துவ சமூகம் ஒழிக்கப்பட்டு சோசலிச சமூகமாக மாறும் என்பதையோ, அத்தகைய மாற்றம் அவசியம் என்பதையோ இவர்கள் ஏற்க மறுத்தார்கள். அதற்காகப் பாடுபடுவதற்கு இவர்கள் தயாரில்லை.4.இப்போதும் இங்குள்ள கம்யூனிஸ்டுக் கட்சித்தலைவர்கள் இந்தியாவில் சோசலிசசமூகமாகஇந்த சமூகம் மாறும் என்பதையோ அத்தகைய மாற்றத்திற்கு மக்கள் என்ன செய்யவேண்டும் என்பதையோ எடுத்துச் சொல்லி மக்களை அணிதிரட்ட எவ்விதமான முயற்சியும் எடுக்க மாட்டார்கள்.

5. புரட்சியின் சமுதாயப் பொருளாதாரப் பிரச்சனைகளை எடுத்து முன்வைத்து, திட்டவட்டமான ஆதாயங்களை முன்நிறுத்திப் போராட்டங்களை நாம் நடத்திட வேண்டும் என்று போல்ஷ்விக்குகள் போதித்தார்கள்.இதற்கு மாறாக மென்ஷ்விக்குகள் சமுதாயப் பொருளாதாரப் பிரச்சனைகளைப் பற்றி குழப்பமான முறையில் விளக்கிவிட்டு அதாவது நீண்ட கதையடித்துவிட்டு திட்டவட்டமான ஆதாயங்களை முன்நிறுத்தாமல் மக்களை போராட்டங்களிலிருந்து விலக்கி வைக்கிறது அல்லது திசைதிருப்புகிறது.


6.தற்போது நமது நாட்டிலும் ரஷ்ய மென்ஷ்விக் போன்றவர்களும் தொண்டு நிறுவனங்களும் அதாவது NGOக்களும் சமுதாயப் பொருளாதாரம் குறித்து நீண்ட கதையடிப்பார்கள்,அல்லது சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளை மூடிமறைத்துவிட்டு சமூகத்திலுள்ள பிற பிரச்சனைகளைப் பற்றி கதையடிப்பார்கள்.மக்களுக்குத்தேவையான திட்டவட்டமான ஆதாயங்களை முன்நிறுத்த மாட்டார்கள். மாறாக அற்பமான பிரச்சனைகளை முன்நிறுத்தி விட்டு மிகவும் முக்கியமான பிரச்சனைகளை மூடிமறைப்பார்கள்.இதன் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகப் போராட வேண்டிய போராட்டத்திலிருந்து மக்களை திசைதிருப்புவார்கள்.


7.சமுதாயத்தில் பல்வேறுபட்டவர்களுக்கு இடையே போராட்டங்கள் நடைபெறுவதை போல்ஷ்விக்குகளும்,மென்ஷ்விக்குகளும் ஏற்றுக்கொண்டனர்.பழைய அரசமைப்பை அகற்றிட வேண்டும் என்று இருதரப்பாரும் ஏற்றுக்கொண்டனர்.ஆனால் குறிப்பிட்ட உடனடிக்கடமையை நிறைவேற்றுவதற்கு தகுதியானவர்க்கங்களை போல்ஷ்விக்கு கள்அறைகூவி அழைத்தார்கள்.ஆனால் மென்ஷ்விக்குகள்செயலற்ற பார்வை யாளரின் மனநிலையை வெளியிட்டார்கள்.


8.இந்தியாவிலும்பல்வேறுபட்டவர்களுக்கு இடையிலான போராட்டங்களைப் பற்றி உண்மையானகம்யூனிஸ்டுகள் பேசுகிறார் கள்.கம்யூனிசத்திற்கு எதிரானவர்கள் சாதி அடிப்படையில் குறிப்பிட்ட சில பிரிவினர்க்கு இடையில் நடைபெறும் போராட்டங்களைப்பற்றிமட்டும் பேசுகிறார் கள்.அதாவது சமுதாயத்தில் நடைபெறும் ஒரு பிரச்சனையை மட்டும் முன்வைத்துப் பேசுகிறார்கள்.அதாவது ஒவ்வொரு பிரச்சனையும்தனித்தனியாகப் பிரித்துப் பார்கள்.இந்தப்பிரச்சனைகள்ஒவ்வொன்றும்ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று பார்ப்பதில்லை.ஆகவே ஒவ்வொரு பிரச்சனையையும்தனித்தனியாகத் தீர்வு காண வேண்டும் என்கிறார்கள்.


9.இந்தியாவில் நிலவுகின்ற அரசமைப்பு முற்றிலும் தகர்த்துவிட்டு ஒரு புதியவகைப்பட்டஅரசமைப்பை உருவாக்க வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் பிரச்சாரம் செய்கிறார்கள்.ஆனால் நிலவுகின்ற சமூக அமைப்பை தகர்க்காமலேயே பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று கம்யூனிச விரோதிகள் பேசுகிறார்கள்.


10.உடனடிப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு திட்டவட்டமானமுழக்கங்களை முன் வைத்துகம்யூனிஸ்டுகள் போராடுகிறார் கள்.ஆனால் கம்யூனிச எதிரிகள் சந்தர்ப்பவாதமுழக்கங்களை முன் வைத்துப் போராடுகிறார்கள். உதாரணமாக நீட் தேர்வின் காரணமாகவே ஏழைகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று சொல்லி நீட் தேர்வுமுறையை நீக்கவேண்டும் என்று சொல்லிசீர்திருத்தவாதிகள்போராடுகிறார் கள்ஆனால் நீட் தேர்வுமுறை இல்லை என்றாலும் கல்வி தனியார்மயம் ஆகிவிட்டதால்பணம் இல்லாதவர்களுக்கு எந்தக் கல்வியும் கிடைக்காத நிலை உள்ளதை சுட்டிக்காட்டி,கல்வியை அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமை என்பதை வலியுறுத்தி உண்மையான கம்யூனிஸ்டுகள்மட்டுமே போராடுகிறார்கள்.ஆனால் சீர்திருத்தவாதிகள் இத்தகையபோராட்டங்களை நடத்து வதில்லை.காரணம் இப்பிரச்சனையில் சீர்திருத்தவாதிகள் ஆளும் முதலாளி வர்க்கத்திடம் சமரசம் செய்துகொள்ளவே விரும்புகிறார்கள். இவர்கள் சந்தர்ப்பவாதி களாகவே இருக்கிறார்கள்.

11. சட்டப்பூர்வமான மார்க்சியவாதிகள் நிலப்பிரபுவத்திற்கு எதிராக முதலாளித்து வத்திற்கான போராட்டத்தோடு தங்களை கட்டுப்படுத்திக்கொள்கிறார்கள்.அதைத்தாண்டி சோசலிசத்திற்கானப் போராட்டத்தை அவர்கள் வலியுறுத் துவதில்லை.


12. சட்டப்பூர்வமான மார்க்சியவாதிகளுக்கு மாற்றாகஉண்மையான மார்க்சியவாதிகள் முதலாளித்துவத்தின் வீழ்ச்சியையும் சோசலிசத்தின் தோற்றமும் தவிர்க்க முடியாதது என்றுசொல்லி மார்க்சியத்தின் புரட்சிகரமான ஆன்மாவை மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

 13.பொருளாதாரவாதிகள் அரசியல் போராட்டத்தின் அவசியத்தை தவிர்துவிட்டு அதன் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்றும் அதன் செயல்பரப்பை குறைக்க வேண்டும் என்றுவாதிட்டார்கள்.

14.மார்க்சியவாதிகள் இந்த அரசியல் போராட்டத்தை ஆழமாகவும் விரிவாகவும் நடத்திடவேண்டும் என்று வாதிட்டார்கள்.

15.முன்னணியிலுள்ள வர்க்கம் தன்னுடையஜனநாயகக் குறிக்கோள்களை மேலும்தைரியமாக வகுத்துக் கொள்ள வேண்டும், அவற்றை மேலும் கூராகவும் முழுமையாகவும்வெளியிட வேண்டும், குடியரசு வேண்டும் எனும் உடனடியான கோஷத்தை முன்வைக்கவேண்டும்,ஒரு தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தை நிறுவுவது தேவை,எதிர்ப்புரட்சியை ஈவிரக்கமின்றி நசுக்குவது தேவை எனும் கருத்தை மக்களிடையே பரப்ப வேண்டும்என்றார்கள் மார்க்சியவாதிகள்.

16.ஜனநாயகக் குறிக்கோளுக்காகவும்,சோசலிச நோக்கத்திற்காகவும் தனது திட்டத்தைமார்க்சியவாதிகள் தெளிவாக வகுத்துக்கொள்ள வேண்டும்,அதனை துணிவுடன் மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும்.எத்தகைய வகையான புரட்சிகர அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்பதையும் எதிர்ப்புரட்சிகர சக்திகளை நசுக்க வேண்டிய அவசியத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லி,மக்களை தயாரிக்க வேண்டியது மார்க்சியவாதி களின் கடமையாகும்.

12. எதிர்ப்புரட்சியை எதிர்த்துப் புரட்சி வெற்றிபெற்ற பின் எதிர்புரட்சி மறைந்துவிடாது;மாறாக, தவிர்க்க முடியாதபடி அது ஒரு புதிய, மேலும் கடுமையான போராட்டத்தைத்தொடங்கும். அதாவது உழைக்கும் மக்கள் ஒரு புரட்சியின் மூலம் தனக்கான ஆட்சியை உருவாக்கிவிட்டாலும் வீழ்த்தப்பட்ட முதலாளி வர்க்கமானது முன்னிலும் கடுமையாக உழைக்கும் வர்க்கத்தை எதிர்த்துப் போராடி இழந்த அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றும்.

13. இழந்த அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக முதலாளி வர்க்கம் கடுமையாகப் போராடும்என்றால் தற்போது அரசியல் அதிகாரத்தை தனது பிடிக்குள் வைத்திருக்கும் முதலாளி வர்க்கமானது அமைதியான முறையில்தனது அதிகாரத்தை உழைக்கும் வர்க்கத்திடம் விட்டுவிடுமா ?நிச்சயமாக விடாது.ஆகவேதான் உழைக்கும் வர்க்கமானது முதலாளிகளிடமிருந்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்று வதற்கும்,அதனை கைப்பற்றியபின்பு அரசியல் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கும் உழைக்கும் வர்க்கத்திற்குப் பலாத்காரம் அவசியமாகிறது.இதன் காரணமாகவே பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற கருத்தை மார்க்சியவாதிகள் தங்களது கொள்கையாக அறிவிக்கிறார்கள்.

14.பொருளாதாரத்துக்குக் கீழ்படுத்தப் பட்டதே அரசியல் எனும் பொது உண்மையைத்திருப்பிச் சொல்வதின் வழியே பொருளாதாரவாதிகள்அவசரமான அரசியல் பணிகளைப் புரிந்து கொள்ளத் தமக்குத் திறமையில்லாததை மூடிமறைத்தார்கள்.அதாவது பொருளாதாரப் போராட்டம் எவ்வளவு அவசியமானதோ அதற்கும் குறையாத அவசியமான போராட்டமே அரசியல் போராட்டம்  ஆகும்.

தேன்மொழி

++++++++++++++++++++++++++++++++++++++

"சமூதாயத் தீமைகளை கண்டு உழைக்கும் மக்கள் கிளர்ந்தெழுத்தான் செய்கிறார்கள், ஒரேஒரு மாபெரும் வெள்ளமாக இணைக்கப் படவேண்டிய மக்கள் சீற்றத்தின் துளிகள் சிற்றாறுகள் அனைத்தையும் திரட்டி ஒரு முனையில் குவிப்பதற்கு நாம் தான் திறனற்று இருக்கிறோம்" லெனின்.

உலகத்தின் அசைக்க முடியாத வல்லரசு எனக் கருதப்பட்ட அமெரிக்கா வியட்நாம் மக்களிடம் படுதோல்வியைச் சந்தித்தது. 30 லட்சம் மக்களின் உயிர்த் தியாகத்தில் வியட்நாம் வெற்றியை ஈட்டியது. அமெரிக்காவின் படையில் 58000 பேர் கொல்லப் பட்டனர். வியட்நாம் மக்கள் ஆக்கிரமிப்புக்கெதிரான போரைத் தீரமுடன் நடத்தினர். விடுதலைக்கான சுதந்திரப்போரை கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையில் ஒன்றிணைந்து போராட்டத்தை வீச்சாகக் கொண்டு சென்றனர்.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்