இலக்கு 15 இணைய இதழ் PDF வடிவில்

இலக்கு 15 இணைய இதழை இங்கே அழுத்தி PDF வடிவில் பெற்றுக் கொள்ளுங்கள் 


தோழர்களே ஒரு சரியான மார்க்சிய- லெனினிய முறையில் புரட்சியை நேசிப்போர் ஒன்றிணைய "இலக்கு” இதழில் தங்களது விமர்சனங்களை விவாதங்களை வைக்கும் படி அழைக்கிறோம். தங்களின் மேலான கருத்துகளை எழுதி அனுப்பும் படி கேட்டுக் கொள்கிறோம். என்ற இமெலுக்கும் அனுப்பி வைக்கலாம் தோழர்களே..... cpalani.cpalani@gmail.com

சமூகம் வர்க்கப் போராட்டத்தில் தான் இயங்குகிறது என்று மார்க்ஸ் கண்டு பிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பின் அடிப்படையில் சமூகத்தின் செல்வழியை முன்னறிந்து மார்க்சால் கூற முடிந்தது. அதன் வழியில் நடைமுறைப்படுத்தவும் அவரால் முடிந்தது.

சமூகம் வர்க்கமாகப் பிளவுபட்டுள்ளது என்று அறிந்த பின்பு, சமூகத்தில் தோன்றும் கருத்துக்களும் வர்க்க சார்பாகத் தான் இருக்கும். இதனைப் புரிந்து கொள்ளாதவரை ஏமாளிகாளகவும், முட்டாள்களாகவும் இருக்க வேண்டியது தான். நீதி, மதம், அரசியல், சமூகம் ஆகியவை பற்றிய கருத்துக்களில் வர்க்க சார்பு நிச்சயமாக இருக்கிறது. அதனால் கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை தொழிலாளர்களின் நலன் சார்ந்ததாகத் தான் இருக்க முடியும். முதலாளிகளின் நலனை ஆதரிக்கிற கருத்துமுதல்வாத போக்குகளுக்கு எதிரான, பொருள்முதல்வாத போக்கை தொழிலாளர்களும், கம்யூனிஸ்டுகளும் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். மதம் போன்ற பழைய கருத்துக்கள் எவ்வளவு அநாகரீகமாகத் தோன்றினாலும் எதாவது ஒரு ஆளும் வர்க்கத்தின் நலன்களை அது பிரதிபலிக்கவே செய்கிறது. அதனால் சுரண்டும் வர்க்கம் அதை நிலைநிறுத்துகிறது. சீர்திருத்தங்கள், மக்களின் மேம்பாடுகள் போன்றவற்றை முன்வைத்துப் போராடுபவர்கள், இதனை உணராத வரையில், பழைய அமைப்பு முறையின் ஆதரவாளர்கள் அவர்களை என்றைக்கும் முட்டாள்களாக்கிக் கொண்டே தான் இருப்பார்கள்.

மா சே – துங் (1893 – 1976)

 உலக வரலாற்றில், மாபெரும் புரட்சிகரத் தலைவர்களில் ஒருவர் மா சே துங். தமது மக்களை நாற்பது ஆண்டுகளுக்கும் அதிகமாகப் புரட்சிப் போராட்டத்தின் வழியாகத் தலைமை தாங்கி நடத்திச் சென்ற அவர், ஒரு மார்க்சியக் கோட்பாடு ஆசான். அவரது மாபெரும் புகழின் திறவுகோல் மக்களுடன் அவருக்கிருந்த நெருக்கமான உறவில் பொதிந்துள்ளது.

“உலகில் உள்ள எல்லாவற்றிலும் மக்களே மிகவும் மதிப்பு மிகுந்தவர்கள். கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடைபோடுகிற மக்கள் இருக்கிற வரையில் எல்லா வகையான அதிசயங்களையும் நிகழ்த்த முடியும்.”

1927ஆம் ஆண்டு செம்படை உருவாக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, சிறியதாகவும் பலமற்றும் இருந்த அப்படையை, கோமிண்டாங் சுற்றி வளைத்தது. செம்படையை ஒழித்துக்கட்ட, கோமிண்டாங் ‘இரும்புக் கோட்டைகள்’ என்று அழைக்கப்பட்ட, தடுப்புப் பாசறைகள் கொண்ட ஒரு சுற்றிவளைப்பை உருவாக்கியது.

“தோழர்களே! அவை உண்மையிலேயே இரும்புக் கோட்டைகளா? இல்லவே இல்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த பிரபுத்துவப் பேரரசர்களின் அரண்மனைகளை நினைத்துப் பாருங்கள்,கொத்தங்களுக்குள்ளும்அகழிகளுக்குள்ளும் அவர்கள் அதிகாரம் மிக்கவர்களாக விளங்கினார்கள் அல்லவா? ஆயினும் மக்கள் எழுச்சியுற்றவுடனேயே அவர்கள் ஒருவர் பின் ஒருவராக நொறுங்கி வீழ்ந்தனர். பாட்டாளிகளும் உழவர்களும் பொங்கி எழுந்தபோது, உலகின் கொடூரமான ஆட்சியாளர்களில் ஒருவனாக விளங்கிய ஜார் மன்னனிடம் ஏதாவது மிஞ்சினவா?. இல்லை, இல்லவே இல்லை. அவனது இரும்புக் கோட்டைகள்? அவை அனைத்தும் நொறுங்கி வீழ்ந்தன. தோழர்களே! இரும்புக் கோட்டைகள் எவை? மெய்யாகவும் உளப்பூர்வமாகவும் புரட்சிக்கு ஆதரவளித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளினரே இரும்புக் கோட்டைகள். வெல்லமுடியாத, அழிக்க முடியாத மக்களே மெய்யான இரும்புக் கோட்டைகள். எதிர்ப்புப் புரட்சியாளர்கள் நம்மை அழிக்க முடியாது; மாறாக அவர்களை நாம் அழித்தொழிப்போம். பல கோடிக்கணக்கான மக்களை அணி திரட்டி, அனைத்து எதிர்ப் புரட்சியாளர்களையும் துடைத்தெறிந்து, முழு சீனாவையும் வெற்றி கொள்ளுவோம்.”

பிறகு நெடும் பயணம் மேற்கொள்ளப்பட்டது,

“ஓர் ஆண்டாக, அன்றாடம் எண்ணற்ற போர் விமானங்களால் வானிலிருந்து கண்காணிக்கப்பட்டு, குண்டு வீச்சுக்கு ஆளானோம்; அதேவேளையில் மண்ணிலும் பல்லாயிரக் கணக்கான வீரர்களைக் கொண்ட பெரும் படை வழிமறித்து, சுற்றிவளைத்து, அலைக்கழித்து, வழி நெடுகவும் விவரிக்க முடியாத துன்பங்களையும், இடர்பாடுகளையும் எதிர்கொண்டோம்.  ஆயினும் பதினோரு மாகாணங்களின் குறுக்கும் நெடுக்குமாக இருபதாயிரம் ‘லி’க்கும் அதிகமான தூரத்தை நமது வெறுங் கால்களால் நடந்து கடந்தோம். இத்தைய நெடும் பயணத்துக்கு இணையானது ஒன்று வரலாற்றில் உள்ளதா? எனக் கேட்கிறோம்.”

தொடர்ந்து விடுதலைக்குப் பிறகு, மா சே துங் தலைமையில் சீன மக்கள் ஒரு புதிய பாதையில் – சோசலிச கட்டுமான உருவாக்கம் என்ற நெடும்பாதையில் – காலெடுத்து வைத்தனர். வெற்றி பெற்ற பொழுதிலும் விழிப்புணர்வுடன் விளங்கிய அவர், கட்சிக்கு மக்களுடன் இருந்த நெருக்கமான பிணைப்பைத் தொடர்ந்து பேணுமாறு கட்சியை எச்சரித்தார்:

“சீனப்புரட்சி மாபெரும் நிகழ்வு; ஆனால் புரட்சிக்குப் பிந்தைய பாதை மிக நீண்டது, புரட்சிக்குப் பிந்தைய பணி மிக நீண்டது, மிகக் கடினமானது. இதைக் கட்சிக்குள் இப்போது தெளிவு படுத்திவிட வேண்டும். தோழர்கள், தமது வேலை முறையில் அகந்தையிலிருந்தும் கண்மூடித்தனத் திலிருந்தும் விடுபட்டு அடக்கத்துடனும் விவேகத்துடனும் இருப்பதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்… நாம் பழைய உலகத்தை அழிப்பதில் மட்டும் கைதேர்ந்தவர்களல்ல, புதிய உலகை உருவாகுவதிலும் கைதேர்ந்தவர்கள்.”

இதைப்போலவே, முதலாளியத்தை மீட்டமைப்பதற்கான எதிர்ப்புரட்சி செயற்பாடுகளை தோற்கடித்த பண்பாட்டுப் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு, எச்சரிக்கை விடுத்தார்:

“நாம் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளோம். ஆனால் தோற்கடிக்கப்பட்ட வர்க்கம் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறது. அந்த வர்க்கம் தொடர்ந்து நிலவிக் கொண்டிருப்பதால் அந்த நபர்கள் இன்னும் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். எனவே இன்னும் பலபல பத்தாண்டுகள் வரை இறுதி வெற்றியைப் பற்றி நாம் ஒன்று சொல்லமுடியாது.”

இதற்கிடையே இந்த அணிவகுப்பில் மற்ற மக்களும் இணைந்தனர். உலகம் முழுவதிலும் உள்ள காலனியாதிக்கத்தின் ‘இரும்புக் கோட்டைகள்’ நொறுங்கி விழுந்து கொண்டிருக்கின்றன:

“ஒரு சிறிய நாட்டின் மக்கள், தமது நாட்டின் ஊழைத் தமது சொந்த கைகளில் எடுத்துக் கொண்டு, ஆயுதந் தாங்கி, போராட்டத்தில் குதித்துவிட்டால்; அவர்களால் ஒரு பெரிய நாட்டின் ஒடுக்குமுறையை உறுதியாகத் தோற்கடிக்க முடியும். இது ஒரு வரலாற்று ஒழுங்கு நியதி ஆகும்.”

மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு முற்றுப் புள்ளி வைத்து, மனித சமுதாயத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்வதற்கான வாய்ப்பு நமக்கு முன்னால் உள்ளது:

“இப்போதைய சமுதாய வளர்ச்சி வழியில் உலகைச் சரியான முறையில் புரிந்துகொள்ளவும், மாற்றியமைக்கவும் ஆன பொறுப்பை வரலாறு பாட்டாளிகளதும், அவர்களுடைய கட்சியினதும் தோள்களில் சுமத்தியுள்ளது. முறைசார்ந்த அறிவு முதன்மைபெறுகிற உலகை மாற்றியமைக்கும் நடைமுறை ஆகிய இந்தச் சமுதாய வளர்ச்சிப் போக்கு, உலகிலும் சீனாவிலும் ஏற்கனவே ஒரு வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. இது மானுட வரலாற்றில் முன்னுவமை இல்லாத ஒரு மகத்தான தருணம். முன்னெப்போதும் இல்லாத வகையில், உலகிலிருந்து இருளை முற்றிலும் அகற்றி, ஒளி நிறைந்த உலகமாக மாற்றியமைப்பதற்கான தருணம் ஆகும்.”

மனித குல எதிர்காலம் குறித்த நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கும் மாவோ, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய தலைமையில் நடந்த நெடும் பயணத்தின் போது மக்கள் திரள் மீது கொண்டிருந்த அதே எல்லையற்ற நம்பிக்கையை மீண்டும் வெளிப்படுத்துகிறார்:

செஞ்சேனை நெடும் பயணத்தில் எந்தத் துன்பங்களுக்கும் அஞ்சியதில்லை.

ஓராயிரம் மலைகளும் பத்தாயிரம் ஆறுகளும் ஒரு பொருட்டல்ல.

ஐந்து மலைத் தொடர்கள் நெளிநெளியான சிறு நீரலைகளே.

வூமெங் மலைச்சிகரங்கள் பள்ளத்தாக்கில் உருண்டு விழும் களிமண் உருண்டைகளே.

பொன்மணல் ஆற்றினால் கழுவி எடுக்கப்பட்ட, முகில் சூழ்ந்த சிகரங்கள் வெதுவெதுப்பானவை.

டாடு நதியின் குறுக்கே உள்ளே இரும்புச் சங்கிலிகள் குளிர்ந்துள்ளன.

மின்ஷான் மலைகளின் தூரத்துப் பனிக் குவியல் நமக்கு மகிழ்ச்சியை மட்டுமே கொண்டு வருகின்றது.

சேனை முன்னேறிச் செல்கிறது, நாம் அனைவரும் சிரித்து மகிழ்கிறோம்.

[China Policy Study Group நடத்திய Board Sheet 1976 நவம்பர் மாத இதழில் மா சேதுங் மறைவுக்காக தாம்சன் எழுதிய அஞ்சலிக் குறிப்பு. இதன் தமிழாக்கம் பிரக்ஞை இதழில் வெளிவந்தது. இந்த இதழ் “மரங்கள் சும்மாயிருக்க நினைத்தாலும்… : மாவோ பற்றிய ‘பிரக்ஞை’ கட்டுரைகள் ” என்ற தலைப்பிலான புத்தகமாக (2003. சென்னை: வ.உ.சி. நூலகம்) வெளிவந்துள்ளது. இப்போது திரும்பவும் ஆங்கிலத்துடன் ஒப்புநோக்கி திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.]

நன்றி ஊட்டாடம் இணையம்.

21ஆம் நூற்றாண்டின் முதலாளித்துவம்-சுகுமார் -ஆர்

 முந்தைய இதழின் தொடர்ச்சி

மூலதன இயக்கத்தின் மூன்று அம்சங்கள்

மூலதன இயக்கம் மூன்று உள்ளடக்கங்களை கொண்டிருக்கிறது ஒன்று உற்பத்தி சாதனங்களை பழைய தனி உடமை முறையில் இருந்து மூலதனத் தனியுடைய முறைக்கு மாற்றுவது இரண்டு உழைப்பை உற்பத்தி சாதனைகளி லிருந்தும் சமூக கட்டுப்பாடுகளிலிருந்து பிரித்து ஏதும் மற்ற உழைப்பாளிகளை படைப்பது. மூன்று பிழைப்பு சாதனங்களை பண்டங்களை பயன்படுத்துவதற்கு தடைகளை தகர்த்து அனைவரும் பயன்படுத்தும் படி மாற்றுவது. வேறு வார்த்தைகள் சொன்னால் உற்பத்தி சாதனங்களை மூலதன மயப்படுத்தி உழைப்பையும் உற்பத்தியையும் சமூகமயப் படுத்தியது. இந்த மூன்று மூலதன இயக்கத்தின் ஜனநாயக அம்சங்களாகும். முதலாளிதுவத்திற்கு முந்தைய சமுதாயத்தின் மூடத்தனங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஒடுக்கும் முறைகளுக்கும் எதிரான இயக்கங்களின் ஊற்றுகண்கள் ஆகும். இந்த மூன்று அம்சங்களும் ஜனநாயக இயக்கத்தில் மூலதனமயமாக்கல் மற்றும் சமூகமயமாக்கல் என்ற இரண்டு போக்குகளை படைத்தது. மூலதன இயக்கத்தில் மூலதனம் வளரும் போது உழைப்பும் உற்பத்தியும் சமூகமயமாவது தவிர்க்க முடியாது. அதை தலைகீழாக சொன்னால் உழைப்பும் உற்பத்தியும் சமூகமயமானால்தான் மூலதனம் வளர முடியும் இந்த சமூக மயமாதலே மானுட சமுதாயத்தின் முன்னோக்கிய வளர்ச்சி ஆகும்.ஆகவே தான் பேரறிஞர் மார்க்ஸ் மூலதனத்தை சமூக சக்தி என்று வலியுறுத்தினார்.ஆனால் மூலதன மயமாதல் என்பது தனி உடைமை முறையை நிலை நிறுத்துவதாகும். சுருங்கச் சொன்னால் முதலாளித்து வதிற்கு முந்தைய சமுதாயத்தின் அனைத்து உற்பத்தி உறவுகளையும் மாற்றி அமைத்து முதலாளித்துவ ஜனநாயக இயக்கம் தனி உடைமை உறவுகளை மட்டும் பாதுகாத்தது. மூலதன இயக்கத்தின் மூன்று அம்சங்கள் தனியார்மயமாதல்மற்றும் சமூகமயமாதல் என்ற இரண்டு போக்குகளை துல்லியமாக வெளிப்ப டுத்தியது.

முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும் சமூக ஜனநாயகத்திற்கும் இடையிலான மோதல் மாமனிதன் லெனின் தலைமையில் பின்தங்கிய ஒரு நாட்டின் மூலதனத்தின் மீது அதிகாரத்தை கைப்பற்றிய பாட்டாளி வர்க்க அமைப்பான கம்யூனிஸ்ட் கட்சி அன் நாட்டின் சமூகமயமாகும் இயக்கத்தை தீவிர படுத்தியது. உடமை முறையில் சமூக மயமாக்கும் இயக்கத்திற்கு அடிப்படையாக மூலதன தனியுடைமை முறைக்கு பதிலாக மூலதன அரச உடமைமுறையை அமுல்படுத்தியது. கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான புதிய பொருளாதாரக் கொள்கைகள் பின்தங்கிய முதலாளித்துவ நாட்டிற்கு மானிட வரலாறு கண்டிராத வளர்ச்சியை ஸ்திரத்தன்மையும் சாதித்தது. 1930 களில் முதலாளித்த உலகின் மூலதனம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த போது கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டில் இருந்த மூலதனம் நெருக்கடி ஏதுமில்லாமல் பண்ட சுழற்சியை பாதுகாத்தது. ஏகாதிபத்தியங்களாக வளர்ந்த முன்னேறிய முதலாளித்துவ நாடுகளுக்கு இடையிலான போட்டியி லிருந்து விலகி நின்றது. உலக யுத்தத்தில் பகை நாடாக இருந்து தோற்கடிக்கப்பட்ட ஜெர்மனியுடன் ஆக்கிரமிப்பு எதிராக உடன்படிக்கை செய்து கொண்டது. உலகம் முழுவதிலுமான ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் நன்னம்பிக்கை ஒளியாகவும் அமைப்பு ரீதியான துணைவனாகவும் வளர்ந்தது.

யுத்த சூழல் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்த நாட்டின் மீதும் யுத்தத்தை திணித்தது. தற்காப்பு நடவடிக்கையாக நாட்டின் உள்கட்டு மனத்தை ஆயுத உற்பத்தியானதாக மாற்றியது. உலகம் முழுவதும் பாசிஸ்ட்டுகளாலும் ஏகாதிபத்தியங்களாலும் ஒடுக்கப்பட்ட தேசங்களையும் காலனி மக்களையும் அணி திரட்டியது. உலக யுத்தத்தில் பாசிஸ்டிக்டுகளுக்கு எதிராக ஏகாதிபத்தியங்களோடு இணைந்து கொண்டது. இரண்டாம் உலக யுத்தத்தில்சோவியத் ரஷ்யா வலிமையான நாடாக வெளிப்பட்டது பாசிஸ்ட் ஜெர்மனி கைப்பற்றிய தேசங்களை வென்று விடுவித்தது. அதே தேசங்களின் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆட்சியில் அமர்த்தியது உலக யுத்தத்தில் வெல்லற் கரிய சக்தியாக வளர்ந்திருந்த ரசிய பாட்டாளி வர்க்க அமைப்பான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்து நாட்டின் மீது போர் தொடுத்த போது அந்நாட்டின் ராணுவ பலம் உலகை வியக்க செய்தது. ஆனால் மூலதன இயக்கத்தில் மாமனிதர் லெனின் காட்டிய வழியில் இருந்து அதாவது பண்ட சுழற்சி மூலதனத்தின் சமூகமயமாக்கும் பாத்திரத்தை பாதுகாப்பதற்கான புரட்சிகர பாதையில் இருந்து விலகியது. சோவியத் யூனியன் ராணுவ மேலாண்மை பாதுகாக்க நாட்டின் உற்பத்தி சக்திகளை ஆயுத உற்பத்தியில் குவித்தது பிழைப்பு சாதனங்களுக்கான உற்பத்தி இதர தேசங்களின் வசமானது. அமெரிக்காவின் ஆதிக்க முயற்சிக்கு எதிராக சோவியத் யூனியன் ஆதிகம் செய்தது. தேசிய இனங்களுக்கு இடையில் ஆன முரண்பாட்டில் அமெரிக்க ஒருபுறம் சோவியத் யூனியன் இன்னொறுபுறம் இருந்து மோதி கொண்டார்கள் .இந்த மோதலில் எண்ணற்ற தேசிய உணர்வு கொண்ட முண்ணணிகள் இருபுறத்திலும் கொல்லப்பட்டார்கள். நேட்டோ வார்ஷா யுத்த வியூகங்களுக்குள்ளே உலகம் சிக்கிக் கொண்டது.

அணு ஆயுதங்களும் ரசாயன ஆயுதங்களும் அதிகரித்தன யுத்த பயம் உலக மக்களின் ஒருங்கிணைந்த எதிர்ப்பை வளர்த்தது.முதலாளித்துவ ஜனநாயக போக்குக்கும் சமூக ஜனநாயக போக்குக்கும் இடையிலான மோதல்கள் நெருக்கடிக்கு உள்ளானது.

மூலதன தனி உடமை முறையின் வளர்ச்சிஆதியில் தொழில் மூலதனம் தனிநபர் அல்லது குடும்பத்தின் உடமையாக இருந்தது பின்னர் அது பங்குகளாக பிரிக்கப்பட்டு பங்குதாரர்களின் உடமையாக மாறியது பின்னர் பங்குகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு தனி பங்கின் மதிப்பு குறைக்கப்பட்டது பங்குதாரர்களின்எண்ணிக்கை அதிகமானது. இதனால் மூலதன உடைமையாளர்கள் எண்ணிக்கை அதிகமானது. ஆனால் உற்பத்தி சாதனங்களாகவும் உழைப்பு கூலிகளாக இருந்த மூலதனத்தின் மீது மூலதன உடமையாளர்கள் நேரடியாக உரிமை இழந்தார்கள் பின்னர் அந்தப் பங்குகளே விற்பனைக்கானதாக மாறியது. பங்கு சந்தை வியாபாரம் மூலதனத்தை குவித்த போதிலும் மூல தனத்தின் மீது உரிமையுள்ள தனிநபர்களின் எண்ணிக்கை அதிகப் படுத்தியது உற்பத்தி விநியோகத்தின் மீது மூலதனம் உடமையாளர்கள் தலையீட்டை குறைத்து நிர்வாகமயமாக்கியது. மூலதன இயக்கத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் பண்ட சுழற்சியை தேசிய அளவில் செம்மைப்படுத்தியது. மூலதனம் இருப்பதற்கும் வளர்ப்பதற்கும் பண்ட சுழற்சி உலகம் முழுவதும் விரிந்து பறந்து செல்வது தவிர்க்கப்பட முடியாத அவசியமாக இருந்தது. தேசிய உடமை முறை எதிரானதாக மாறியது உலகம் முழுவதும் பறந்து சென்ற தேசம் ஏகதிபத்தியமானது. ஏகதிபத்தியதிற்கு எதிரான தேசிய எழுச்சிகள் உலகை யுத்த நெருக்கடியில் சிக்க வைத்தது. ஏகாதிபத்தியம் தேசம் கடந்த உடமை முறையை அமல்படுத்து வதற்கான தந்திரங்களும் சதிகளும் அம்பலபட்டு எதிர்க்கப்பட்டன. இரண்டாம் உலகயுத்ததின் முடிவில் உருவான சர்வதேசிய உடமை முறைகளுக்கான கருத்துக்கள் வலிமை பெற்றன.அக் கருத்துக்களின் அமைப்பாக 1947 இல் இருந்த. காட் (GATT) 1995 இல் உலக வர்த்தக மையமாக(WTO) வளர்ந்தது. உலகம் முழுவதும் மூலதனத் தனி உடமை முறையை ஏற்றுக் கொள்வதற்கான இயக்கமாக உருப் பெற்றது. இறையாண்மை பெற்ற 194நாடுகளில் 157 நாடுகள் உலக வர்த்தக மையத்தின் கோட்பாடுகளை ஏற்று கட்டுப்பட்டன. மேலும் 16 நாடுகள் பார்வையா ளர்களாக இணைந்து கொண்டன . தேசிய உடமை முறையை சர்வதேச உடமை முறையாக மாற்றுவது யுத்தத்தை தவிர்க்கும் தேவையாக மாறியது . தேசிய அளவிலான உற்பத்தியும் விநியோகமும் அதற்குரிய முதலாளித்து உற்பத்தி உருவான தேசிய உடமை முறையும் மூலதனத்தில்உலகமயமாக்கும் இயக்கத்திற்கு தடையாக இருந்தது. மூலதன இயக்கத்தின் சமூகமயமாகும் போக்கிற்கு எதிராகவே மூலதன தேசியமயமாக்கம் இருந்தது. ஏகபோக தீர்வைகோரிய முதலாளித்துவ ஜனநாயக போக்கு பல வடிவங்களில் வெகு மக்களின் எதிர்ப்பை சந்தித்ததுஆகவே உலகமயமாகும் சர்வதேச பொருளாதார அடிக்கட்டுமானத்திற்கு ஏற்ப சர்வதேச மேல் கட்டுமானமும் உருவாகி உறுதிப்பட்டது சமூக ஜனநாயக போக்கில் அரசுடமை முறையும் தேசிய எல்லைக்குள் மூலதன இயக்கத்தை முடக்குவதாக இருந்தது. எனவே அதுவும் மூலதன சமூகமயமாக்கும் போக்கிற்கு எதிராக இருந்தது. சமூக ஜனநாயகத்திற்கும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும் இடையிலான பனி போர் உற்பத்தி சாதனங்களை உலகமயமாக்கி இருந்தது ஆனால் உழைப்பையும் உற்பத்தியும் சமூகமயமாக்கும் கடமைகளை நிறைவு செய்யவில்லை அதனால் இரண்டு போக்குகளில் இரண்டு வகையான தேசிய உடமை முறையும் உலகமயமாகும் மூலதன இயக்கத்திற்கும் பொருந்தி போகவில்லை. ஆகவே இரண்டு போக்கின் தலைமையாய் இருந்த நாடுகளின் அரசு வடிவமும் நெருக்கடிக்கு உள்ளாயின.

சர்வதேசிய மேல்கட்டுமானத்தில் தோற்றமும் வளர்ச்சியும் தேசிய இனங்கள் உருவானபோது அவை சிதறி கிடந்த மக்களை ஒருங்கிணைக்கும் சக்தியாக இருந்தது.மூலதனத்தின் சமூகமயமாகும் இயக்கத்திற்கு அது உந்து சக்தியாக இருந்தது. சிறுவீத பொருளாதாரத்தை பெருவீத பொருளாதாரமாக வளர்த்தது. உற்பத்தி சாதனங்களை விடுதலை செய்தது சுதந்திரமான உழைப்பாளிகளான பாட்டாளிகளை படைத்தது உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தியை உறுதி செய்தது உற்பத்தியை சமூகமயமாக்கியது வேலைவாய்ப்பை உறுதி செய்து உழைப்பை சமூகமயமாக்கியது.

ஆனால் முன்னேறிய தேசங்கள் ஏகாதிபத்தியமாக வளர்ந்த போது தேசிய இனங்கள் மத்தியில் இரண்டு போக்குகள் உண்டானது ஒன்று தேசங்கள் ஒன்றிடையும் போக்கு இன்னொன்றுதேசங்களை அழிக்கும் போக்கு. ஏகாதிபத்தியங்கள் அழித்தொழிக்கும் போக்கின் அம்சங்களாக மாறினார்கள். தேசங்களை ஒருங்கிணைக்கும் போக்கின் அம்சங்களாக தோன்றிய மாமனிதர்கள் ஒன்றுகூடி கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்கினார்கள். அந்த இயக்கத்தின் தலையாய மனிதர்களின் மாபெரும் முயற்சியில் பல்வேறு தேசிய இயக்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு முதல் அகிலம் உருவானது. இரு சர்வதேசிய மேற்கட்டுமானத்தின் முதல் வடிவமாக வெளிப்பட்டதுமாகும்.

முதல் உலக யுத்தம் இந்த அமைப்பை சிதைத்தது. தேசங்களை அழித்தொழிக்கும் போக்கு மேலாண்மை பெற்றது முதல் உலக யுத்தத்தின் பின் தேசங்களை ஒருங்கிணைக்கும் பாட்டாளி வர்க்க தலைமையிலான சமூக ஜனநாயக போக்கு தேசங்களை ஒருங்கிணைக்கும் அரசு வடிவமாக சோவியத் ஒன்றிய அரசை நிஜமாக்கியது. முதலாளித்துவ ஜனநாயக போக்காக தேசங்களுக்கு இடையில் சமரசம் செய்யும் அமைப்பாக தேசங்களின் குழுவை (LeaGue of nation) அமைத்தது சர்வதேச தொழிலாளர் அமைப்பும் (ILO) உருவானது.

சமூக ஜனநாயக போக்கின் முயற்சியால் மீண்டும் அகிலம் உண்டானது ஆனால் இரண்டு அமைப்புகளும் உலக யுத்தத்தை தடுக்கும் சக்தி கொண்டவள் இல்லை. இரண்டாவது உலக யுத்தத்திற்கு பின் யுத்தத்திற்கு எதிரான இயக்கம் வலிமை பெற்றது. தேசங்களுக்கு இடையிலான மோதல்களை தடுக்க கூடுதல்களின் வலிமை கொண்ட மையமாக ஐக்கிய நாடுகள் சபை (UNO) உருவானது. படிப்படியாக அது பலம் பெற்று சர்வதேசப்படை சர்வதேச சட்டம் சர்வதேச நீதிமன்றம் என சர்வதேச ரீதியில் மேல் கட்டுமானம் உருவாக்கியுள்ளது. சர்வதேச மேல் கட்டுமான அமைப்புகளாக, உணவு மற்றும் விவசாய அமைப்பு(FAO) சர்வதேச அணுசக்தி பேராயம் (IAEA) சர்வதேச குடியுரிமை அமைப்பு(ICAO) சர்வதேச வேளாண்மை வளர்ச்சி நிதி (IFAD) சர்வதேச தொழிலாளர் அமைப்பு(ILO) சர்வதேச நீர் வழி அமைப்பு (IMO)சர்வதேச நிதியம் (IMF) சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியம்(ITU)சர்வதேச கல்வி விஞ்ஞான பண்பாட்டு அமைப்பு (UNESCO) ஐக்கிய நாடுகள் தொழில் வளர்ச்சி அமைப்பு (UNIDO) ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா அமைப்பு (UNWTO) பிரபஞ்ச தபால் ஒன்றியம் (UPU) உலக வங்கி (WB)உலக உணவு திட்டம் (WFP) உலக சுகாதார அமைப்பு (WHO) உலக அறிவக சொத்துரிமை அமைப்பு (WIPO) ஆகிய இவை உலக நாடுகளை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

சமூக ஜனநாயக போக்கின் வீழ்ச்சி

முதலாளித்துவ ஜனநாயக இயக்கம் ஏகாதிபக்தியமாக சீரழிந்த போது தேசிய இனங்களுக்கு பாட்டாளி வர்க்க தலைமையிலான சமூக ஜனநாயக இயக்கம் தலைமை கொடுத்தது. முதல் உலக யுத்தத்தில் ஓட்டோமான் பேரரசையும் ருசிய பேரரசையும் வீழ்த்தி சுயநிர்ணய உரிமையோடு ஒருங்கிணைந்த தேசங்களின் அரசாக சோவியத் ஒன்றிய அரசை புதிதாக படைத்தது. இரண்டாவது உலக யுத்தத்தில் பாசிசமாக மாறிய தேசிய அரசை வீழ்த்தி ஐரோப்பியாவில் வீழ்த்தப்பட்ட தேசிய இனங்களின் சுதந்திர அரசுகளை நிறுவியது. இரண்டாவது உலக யுத்தத்திற்கு பின் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய தேசங்களுக்கும் காலனிய நாட்டு மக்களுக்கும் துணை நின்றது. முதலாளித்துவ ஜனநாயக போக்கை பலப்படுத்துவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தின் ஆயுத பெருக்கத்திற்கு போட்டியாக சமூக ஜனநாயக போக்கை பலப்படுத்துவதற்காக சோவியத் ஒன்றியம் ஆயுத உற்பத்தி பெருக்கிக் கொண்டது. இதனால் பிழைப்பு சாதனங்களுக்கான பண்ட உற்பத்தியில் பலவீனப்பட்டது. அமெரிக்கா போர் வியூங்களுக்கு எதிரான போர் வியூங்களுக்காக ஒடுக்கப்பட்ட தேசங்களின் பாதுகாவலனாக இருந்த சோவியத் ஒன்றிய அரசு இதன்பிறகு தேசங்களை ஒடுக்கும் அரசாக மாறியது. இதனால் தேசங்கள் மற்றும் உழைக்கும் மக்களின் எதிர்ப்பை சந்தித்தது . அணு ஆயுத தயாரிப்புக்கும் யுத்தத்திற்கும் எதிராக வேகுமக்கள் நிர்பந்தம் உருவானபோது சமூக ஜனநாயகப் போக்கு கடுமையான எதிர்ப்பை சந்தித்தது தேசங்களின் எதிர்ப்புணர்வை தணிக்க தேசங்களில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என சோவியத் ஒன்றியம் தீர்மானித்தும் குறிப்பாக வார்ஷா உடன்படிக்கை நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருந்ததும் சமூக ஜனநாயக போக்கின் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிகள் கவிழ காரணமானது. சோவியத் ஒன்றிம் தேசிய இனங்களை சார்ந்த கட்டமைத்திருந்த பொருளாதார கட்டுமாணம் சிதைந்தது. தொடரும் அடுத்த இதழில்

மார்க்சிய (இயக்கவியல் பொருள்முதல்வாத) தத்துவம் பயிலுவோம்-தேன்மொழி

 எல்லாம் அவன் செயல், அவனன்றி அணுவும் அசையாது என்பது ஒரு தத்துவக் கோட்பாடு.

இது ஒரு தத்துவக் கோட்பாடு என்பதை புரிந்துகொள்ளாமலேயே, பல மனிதர்கள் இந்தகோட்பாட்டை ஏற்று பின்பற்றுகிறார் கள். அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அவர்களால்தீர்க்க முடியாது ஏனென்றால் நடப்பதெல்லாம் அவன் செயல் அதாவது கடவுளின் செயல்என்று மக்கள் நம்புகிறார்கள். எனவே அவர்களது பிரச்சனைகளை கடவுள் கவனித்து தீர்த்துவைப்பார் என்று நம்புகிறார்கள். கடவுளின் செயலுக்கு மீறி யாரும் எதுவும் செய்ய முடியாதுஎன்றே மக்கள் நம்புகிறார்கள்.

எனினும் முதலாளிகள், பண்ணையார்கள், அரசியல் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள்போன்றோர்கள் மக்களுக்கு தொல்லை கொடுக்கும் போது நடைமுறையில் மக்கள் அவர்களை எதிர்த்தே போரிடுகிறார்கள். அப்போது எல்லாம் அவன் செயல் போன்ற ஆன்மீக,கருத்துமுதல்வாத தத்துவ கண்ணோட்டத்தை புறக்கணித்து விடுகிறார்கள். தங்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் என்பதை நடைமுறையில்புரிந்துகொண்டு அவர்களை எதிர்த்துப் போராடுகிறார்கள். அந்த வகையில் மக்கள் நடைமுறை பொருள்முதல்வாதியாக இருக்கிறார்கள். ஆகவே நாம் ஆழமாகப் பார்த்தால் மக்கள்பெரும்பாலும் ஆன்மீக கருத்துமுதல்வாதத்தை நம்புபவர்களாக இருந்தாலும் நடைமுறையில் பொருள் முதல்வாத அடிப்படையில் அவர்களது செயல்பாடுகளை அமைத்துக்கொள்வதை நாம் பார்க்கலாம்.

இவ்வாறு மக்கள் நடைமுறை பொருள்முதல்வாதியாக இருந்தாலும், அவர்கள் நடைமுறையில் அவர்களது எதிரிகளை எதிர்த்துப் போராடினாலும், அவர்களது போராட்டத்தில் தோல்வியடைந்துவிட்டால், அவர்களது எதிரிகளை எதிர்த்து தம்மால் போராட முடியாது என்று சோர்வடைந்து மீண்டும் எல்லாம் அவன் செயல் என்றகருத்துமுதல்வாத தத்துவக் கண்ணோட்டத் திற்கு வந்துவிடுகிறார்கள். இந்த சூழலில் மக்களின் எதிரிகளை மக்கள் தங்களது ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் வீழ்த்த முடியும் என்பதையும் தமது தோல்வி தற்காலியமானதுதான். மக்களின் எதிரிகள் தங்களது சொந்த முரண்பாடுகளாலேயே பலவீனமடைவார்கள் என்பதையும் அவர்களை மக்கள் போராடி வீழ்த்த முடியும் என்றநம்பிக்கையை ஊட்டினால், மக்கள் தொடர்ந்து போராடுவதற்கான தத்துவ வழிகாட்டல் இருந்தால் மக்கள் தொடர்ந்து போராடி அவர்களின் எதிரிகளை வீழ்த்துவார்கள். அந்த வகையில் உழைக்கும் மக்களுக்கு வழிகாட்டக் கூடிய தத்துவம்தான் இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆகும். அந்த தத்துவ கண்ணோட்டத்தை உழைக்கும் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டியது இலக்கின் முதன்மையான பணிகளில் ஒன்று என்று கருதியே இந்த கட்டுரையை இலக்கு வெளியிடுகிறது.

கம்யூனிஸ்டுகள் ஒவ்வொருவரும் கூலி என்றால் என்ன, லாபம் என்றால் என்ன, பொருளாதார நெருக்கடி என்றால் என்ன, என்பது போன்ற பொருளாதாரத்துறையைச் சேர்ந்த கேள்விகளுக்கும் மற்றும் ஜனநாயகம் என்றால் என்ன?, சர்வாதிகாரம் என்றால் என்ன?, வர்க்கங்கள், வர்க்கப் போராட்டங்கள் என்றால் என்ன?, என்ற அரசியல் துறை கேள்விகளுக்கும், மார்க்சியத்தை ஓரளவு கற்றுத் தேர்ந்த கம்யூனிஸ்டுகள் பதில் சொல்லிவிட முடிகிறது. ஆனால் இந்த பிரபஞ்சம் எப்படி எங்கிருந்து வந்தது?, இதனை யாராவது உருவாக்கினார்களா?, அறம், மறம், பண்பு என்பவை என்ன? மெய் அதாவது உண்மை என்பது எது? பொய் என்பது எது? சிந்தனைகள், தத்துவங்கள் என்பவை என்ன? தத்துவங்கள் எப்படி தோன்றுகின்றன? தத்துவங்கள் எல்லாம் என்னென்றும் ஒரே மாதிரியுள்ளனவா? அல்லது மாறிக்கொண்டிருக்கும் தன்மைபெற்றனவா? அவை மாறுவதற்கு என்ன காரணம்? இப்படிப்பட்ட தத்துவ அறிவு சம்பந்தப்பட்ட தத்துவார்த்த அல்லது மெய்ஞானத் துறையைச் சேர்ந்தகேள்விகளுக்கு அவ்வளவு எளிதாக விடை சொல்ல முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். அதாவது சமூக மாற்றத்திற்கான அறிவை வளர்த்துக் கொள்ளாத நிலையிலேயே கம்யூனிஸ்டு கள் உள்ளனர். கம்யூனிஸ்டுகளுக்கே இந்த நிலை என்றால் கம்யூனிஸ்டுகளை பின்பற்றும் உழைக்கும் மக்களின் நிலை எப்படி இருக்கும்?. ஆகவே கம்யூனிஸ்டுகளும், அவர்களை பின்பற்றும் உழைக்கும் மக்களும் அறிவுஜீவிகளும் சமூக மாற்றத்திற்கானஅறிவியல் தத்துவமான மார்க்சிய தத்துவத்தை படித்து புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்த தத்துவத்தை எந்தளவுக்கு நாம் புரிந்துகொண்டு இருக்கிறமோ அந்தளவுக்கு நம்மிடம் கேட்க்கப்படும் கேள்விகளுக்கு மிகச் சரியான பதிலை அளிக்க முடியும்.

மேலும் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை நம்மால் கண்டுபிடிக்க முடியும். மேலும் அதனை நடைமுறைப் படுத்தி தவறுகளை விரைவில் திருத்திக்கொண்டு முன்னேற முடியும். ஆகவேதான் மார்க்சிய தத்துவத்தை இலக்கு தொடர் கட்டுரையாக கொண்டுவருகிறது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் இல்லாத நாடே கிடையாது. அப்படி மூலைக்கு மூலை அவர்கள் இருந்துகொண்டிருந்தாலும், அவர்கள்எதைப்பற்றி பேசினாலும், சொல்லிவைத்தாற்போல் ஒரே மாதிரி யாகப் பேசுகிறார்கள் என்று நல்லெண்ணம் படைத்தவர்கள் வியப்படைகிறார்கள். இதற்கு காரணம் மாஸ்கோவைகம்யூனிஸ்டுகள் பின் பற்றுகிறார்கள் என்று கெட்ட எண்ணம் கொண்டோர் பேசுகிறார்கள்.

ஆனால் கம்யூனிஸ்டுகள் தொழிலாளி வர்க்கத்தின்நலன்களுக்காக பாடு படுவதைலட்சியமாகக் கொண்டவர்கள். உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள் ஒரேவிதமான முதலாளித்துவ ஒடுக்கு முறையின் கீழ் வறுமையிலும் பசி பட்டிணியிலும் வாழ்ந்துகொண்டுஇருக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளும் உலகம் முழுவதிலும் ஒன்றுபோல் இருக்கிறது.

இத்தகைய தொழிலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளாக இருக்கின்ற கம்யூனிஸ்டுகளின் உணர்வுகளும் பேச்சும் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. மேலும் கம்யூனிஸ்டு களுக்கு ஒரு உலகப்பார்வை ஒன்று இருக்கிறது. அந்த உலகப்பார்வையின் அடிப்படையில் பிரச்சனைகளை புரிந்துகொள்வதால் உலகம் முழுவதிலு முள்ள கம்யூனிஸ்டுகள் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரே மாதிரியான தீர்வுகளை முன்வைத்து பேசுகிறார்கள். இவ்வாறு கம்யூனிஸ்டு களின் உலகப்பார்வையான மார்க்சியம் என்று சொல்லப்படும் இயக்கவியல் பொருள்முதல்வாதத் தத்துவ அறிவை பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒவ்வொரு

பிரச்சனையிலும் அதனை தீர்ப்பதிலும் ஒரு ஒன்றுபட்ட கருத்திற்கு வரமுடியும், வரலாற்றில் கம்யூனிஸ்டுகள் ஒரு ஒன்றுபட்ட கருத்திற்கு வந்துள்ளார்கள். . அவ்வாறு ஒன்றுபட்ட கருத்திற்கு வருபவர்கள் ஒருங்கிணைந்து ஒற்றுமையாகப் போராட முடியும், வரலாற்றில் அவ்வாறு ஒன்றுபட்டு போராடியிருக்கிறார்கள்.

இத்தகைய மார்க்சிய தத்துவக் கண்ணோட்டத்தை அரைகுறையாகப் பெற்றவர்களாலும்,முற்றிலும் மார்க்சிய தத்துவ அறிவு இல்லாதவர்களாலும் ஒவ்வொரு பிரச்சனையிலும் அதன் தீர்விலும் ஒன்றுபட்ட கருத்திற்கு வரமுடியாது.

ஆகவேதான் கம்யூனிஸ்டுகளிடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்கு கம்யூனிஸ்டு கள் ஒவ்வொருவரும் மார்க்சிய தத்துவ கண்ணோட்டத்தை பயில வேண்டும் என்கிறோம். மேலும்கம்யூனிச அமைப்புத் தலைவர்கள் மார்க்சியத் தத்துவத்தை அணிகளுக்கு போதிக்க வேண்டும் என்கிறோம்.

தத்துவத்தை மெய்ஞானம் என்றும் கூறுவார்கள். மெய் என்றால் உண்மை என்று பொருள்படும், ஞானம் என்றால் அறிவு என்று பொருள்படும்.ஆகவே மெய்ஞானம் என்ற சொல்லின் பெருள்உண்மையை அறிவதற்கான அறிவு என்று பொருள்படும்.

ஆகவே தத்துவகண்ணோட்டம், அல்லது தத்துவத்தின் நோக்கமே உண்மையை அறிந்து கொள்வதற்கான ஆயுதமாக இருக்கிறது என்பதுதான்.

எனினும் தத்துவத்தில் இரண்டுவகைகள் உள்ளது. ஒன்று தத்துவத்தின் நோக்கத்திற்கானதுஅதாவது உண்மையை அறிந்துகொள்வதற்கு நமக்கு வழிகாட்டக் கூடியது. மற்றொன்றுதத்துவத்தின் நோக்கத்திற்கு எதிரானது, அதாவது உண்மையை நாம் அறிந்துகொள்வதற்கு தடையானது அல்லது எதிரானதாகும்.

தத்துவத்தின் உண்மையான நோக்கமான உண்மையை அறிந்துகொள்ள நமக்கு உதவக்கூடிய தத்துவம் என்பது இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்றியல்பொருள்முதல்வாதமாகும். இவ்விரண்டையும் இணைத்ததையே மார்க்சிய தத்துவம்என்பார்கள். இந்த மார்க்சிய தத்துவத்தை ஆழமாகப் புரிந்துகொண்டவர்களால் உண்மையை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். மேலும் பொய்யையும் இனம்கண்டு புறக்கணிக்க முடியும்.உண்மைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்து உழைக்கும் மக்கள் வாழ்வதற்கு வழிகாட்டமுடியும்.

தத்துவத்தின் நோக்கத்திற்கு எதிரான பொய்யான தத்துவம்தான் ஆன்மீகவாதம் மற்றும்கருத்துமுதல்வாதமாகும். இந்த தத்துக் கண்ணோட்டம் கொண்டவர்களால் உண்மையைஒருபோதும் அறிந்துகொள்ள முடியாது. பொய்யானவற்றையே உண்மை என்று தலைகீழாக நம்புவார்கள், மற்றவர்களையும் நம்பவைத்து ஏமாற்றுவார்கள். இந்த தத்துமானது சுரண்டும் வர்க்கங்களை பாதுகாத்து உழைக்கும் மக்களை ஏமாற்றும் தத்துவமாகும். தத்துவத்தை நாம் ஏன் பயில வேண்டும்?எல்லாவற்றிற்கும் முதலும் மூலமும் பொருளே என்று ஒரு தத்துவம் கூறுகிறது. அதனையே பொருள்முதல்வாத தத்துவம் என்று அழைக்கப்படுகிறது. அந்த தத்துவத்தின் அடிப்படைகளை ஆரம்பக் கோட்பாடுகளை உழைக்கும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்தகட்டுரையின் நோக்கமாகும்.

ஒரு குறிப்பிட்ட தத்துவத்துடனும், ஒரு குறிப்பிட்ட ஆய்வு முறையுடனும் மார்க்சியமானது இறுகப் பிணைக்கப் பட்டுள்ளது. அதாவது மார்க்சியமானது இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற தத்துவத்துடனும், அதன் ஆய்வு முறையுடனும் பிணைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்ததத்துவத்தை நாம் அவசியமாக படித்தறிய வேண்டும். இதை நாம் கற்றுத் தேர்ந்தோமானால்நம்மால் மார்க்சியத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். முதலாளித்துவ சீர்திருத்தவாதம்,அடையாள அரசியல், பின்நவீனத்துவம், குறுங்குழுவாதம், திருத்தல்வாதம், கலைப்புவாதம் போன்ற மக்களுக்கு எதிரான தத்துவங்கள் கிளப்புகின்ற வாதங்களை நாம் முறியடிக்க முடியும்.

அதன் மூலம் நல்ல பயனளிக்கத்தக்க அரசியல் போராட்டத்தையும் நாம் நடத்திச் செல்ல முடியும். "ஒரு புரட்சிகரமான தத்துவம் இல்லாமல் புரட்சிகரமான இயக்கம் இருக்கவே முடியாது" என்று லெனின் சொல்லியிருக்கிறார். இதனை நாம் எப்போதும் மறக்கக்கூடாது.

இதன் பொருள் நடைமுறையுடன் தத்துவம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே ஆகும்.

நடைமுறை என்றால் என்ன? ஒரு விஷயத்தை அல்லது தத்துவத்தை, விஞ்ஞானத்தை யதார்த்தத்தில், வாழ்க்கை அனுபவத்தில் வெளியிடச் செய்யும் அல்லது செயல்படுத்தும் செய்கையைத்தான் நடைமுறை என்கிறோம். உதாரணமாக தொழிலும் விவசாயமும் என்ன செய்கின்றன? இரசாயனத்துறையோ அல்லது பௌதீகத் துறையோ அல்லது உயிரியல் துறையோ சேர்ந்த தத்துவ விஞ்ஞானங்களை அவை யதார்த்த அனுபவமாக செய்து தருகின்றன. அதாவது நடைமுறையில் விவசாயத்தில் ஈடுபட்ட மனிதர்களின் அனுபவத்திலிருந்து விவசாயம் தொடர்பான அறிவியல் உண்மைகள் அல்லது விதிகள் கண்டுபிடித்து பொதுவான விதிகள் உருவாக்கப்படுகின்றன. இந்தப் பொது விதிகளைபுரிந்துகொண்ட மனிதர்கள் தங்களது விவசாய நடவடிக்கையில் செயல்படுத்து கிறார்கள். அத்தகைய செய்கைகளே நடைமுறையாகும்.தத்துவம் என்றால் என்ன? எவற்றையெல்லாம் நடைமுறையில் மெய்ப்பித்து சாதிக்க விரும்புகிறோமா அவற்றைப் பற்றி நாம் பெற்றிருக்கும் அறிவுதான் தத்துவம் ஆகும்.

அவ்விதமான அறிவு எதுவும் இல்லாமலே ஒருவன் காரியம் பார்க்கலாம், ஆனால் அவன்செய்யும் காரியம், ஏற்கனவே செய்து பழகிப்போன போக்கிலே திரும்பத் திரும்பசெய்துகொண்டிருக்கிற காரியம்தான் (உதாரணமாக அரசியல் கட்சிகள் ஏற்கனவேசெய்து கொண்டிருக்கின்ற காரியமான, பிரசுரம் விநியோகிப்பது, போஸ்டர் ஒட்டுவது,ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்ற காரியங்களை சொல்லலாம்) அதற்குமேல் போகாமல், போகமுடியாமல் அவன் நின்றுவிட வேண்டியதுதான். அதே மாதிரி, இன்னொருவன் சும்மா தத்துவம்

பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால் அப்படி பேசிக்கொண்டே இருப்பவனின் சிந்தனைகளும் திட்டங்களும் யதார்த்தத்தில் சித்திபெற சக்தியில்லாமல் பெரும்பாலும் ஏட்டுச் சுரைக்காயாகவே நின்றுவிடுகின்றன. ஆகவே தத்துவமும் நடைமுறையும் இணைந்திருக்க வேண்டும். நமக்கு வேண்டியது என்ன தத்துவம், அது நடைமுறையுடன் எப்படி இணைந்திருக்க வேண்டும் என்பதுதான் நம்முன்னுள்ள பிரச்சனையாகும். ஒரு செயல்துணிவுள்ள ஊழியனோ, தொழிலாளியோ தவறு செய்யாமல் புரட்சிக்குரிய காரியங்களை செய்துகொண்டு போகவேண்டுமானால், அவருக்கு ஒன்று தேவைப்படுகிறது.

விஷயங்களைச் சரியாக ஆய்வு செய்து, புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் விவாதங்கள்நடத்தி முடிவிற்கு வருவதற்கு ஒரு சரியான ஆய்வுமுறை அவருக்கு இருக்க வேண்டும். சர்வரோக நிவாரணி மாதிரி எல்லாவிதமான பிரச்சனை களுக்கும் தயாராக தீர்வை வழங்கக்கூடிய ஒரு வறட்டுத் தத்துவமும், குருட்டுச் சூத்திரமும் அவருக்குத் தேவையில்லை.

பின் எப்படிப்பட்ட தத்துவம் தேவை?

என்றைக்கும் ஒரேமாதிரியாக இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கின்ற விஷயங் களையும்பார்த்து, அலசி, ஆராயும் ஒரு ஆய்வு முறைதான் தேவை. தத்துவத்தை நடைமுறையிலிருந்து என்றுமே பிரிக்காதஒரு ஆய்வுமுறை தர்க்கம்(விவாதம்) செய்யும் முறையை வாழ்விலிருந்து பிரிக்காத ஒரு ஆய்வுமுறை அதுதான் அவருக்கு வேண்டியதாகும். அப்படிப்பட்ட ஆய்வுமுறை இயக்கவியல் பொருள் முதல்வாதம் என்ற தத்துவத்தில் காணக்கிடக்கிறது.

ஆகவே இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்திலிருந்து விலகாமல், அதன்அடிப்படையில் உறுதியாக நின்றுகொண்டு மாறிக்கொண்டிருக்கின்ற பிரச்சனைகளைஉள்ளது உள்ளபடி பார்த்து ஆய்வு செய்து பின்பு தோழர்களுடன் விவாதித்து முடிவெடுத்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

இதற்கு மாறாக இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தை கைவிட்டுவிட்டு மாறிக்கொண்டிருக்கும் பிரச்சனைகளை மாறாமல் நிலையாக இருப்பதாகக் கருதிக்கொண்டு பார்த்து பிறரிடம் விவாதம் செய்யாமல் தனது அகநிலை விருப்பங்களிலிருந்து முடிவெடுத்து செயல்பட்டால் தோல்வியில் தான் முடியும்.

தத்துவத்தை கற்றுக்கொள்வது கடினமானதா?

உழைக்கும் தொழிலாளர்கள் தத்துவத்தை கற்றுக்கொள்வது மிகவும் கடினமானது என்றும், அதனை கற்றுக்கொள்ள தெளிவான மற்றும் சிறப்பான அறிவு தேவை என்றும் பலரும் கருதுகிறார்கள். அத்தோடு தத்துவம் பற்றி முதலாளித்துவ நூல்களில் எழுதப்படும் முறையைப் பார்த்தால் இப்படி தொழிலாளர்கள் நினைப்பது சரிதான் என்று நாம் எண்ணக்கூடியதாகஇருக்கிறது. இதனை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய தாகத்தான் இருக்கிறது.

முதலாளித்துவவாதிகளின் தத்துவ நூல்களைக் கண்டால் தொழிலாளர்கள் தத்துவத்தைபயிலுவதற்கே ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு விலகிப் போய்விடுகின்றனர்.

ஆனால் பொதுவாகவே எந்த ஒரு விஷயத்தைப் பயில்வதாக இருந்தாலும் நாம் பல சிரமங்களைசந்தித்துத்தான் ஆகவேண்டும். உதாரணமாக கொத்தனார்மற்றும் எலக்டீரிஷன் வேலையை கற்றுக்கொள்ள வேண்டுமானாலும் நாம் சில சிரமங்களை சந்திக்கத்தான் வேண்டியிருக்கும்.

ஆகவே தத்துவத்தை ஊன்றி பயில வேண்டுமானால் கட்டாயமாக நாம் சிரமப்பட்டே ஆக வேண்டும். அதனை நாம் கனவிலும் மறுக்கத் துணிய மாட்டோம் என்றபோதிலும் இந்தக் கஷ்டங்களை வெற்றிகரமாக தொழிலாளர்களால் சமாளிக்க முடியும். அது சிரமமாக இருப்பதற்கு காரணம் பல வாசகர்களுக்கு புதியதாக இருக்கின்ற விஷயங்களைப் பற்றி பேசுவதுதான். எனினும் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற தத்துவமானது உழைக்கும் மக்களின் வாழ்க்கையைப் பற்றி பேசுவதால் அது தொழிலாளி வர்க்கத்தின் தத்துவமாக

இருப்பதால், தொழிலாளர்களால் அதனை எளிதாக புரிந்துகொள்ள முடியும். எனினும் இந்த தத்துவத்தை தொழிலாளர்கள் புரிந்துகொள்வதற்கு அவர்களுக்கு ஒரு ஆசிரியர் தேவை. அத்தகைய ஆசிரியர்கள் கம்யூனிச அமைப்புகளின் உறுப்பினர் களாகவே இருக்க முடியும்.

சொல்வதை கணக்காகவும், நறுக்க தெறிக்கவும் சொல்ல வேண்டும் அல்லவா? எனவே இயக்கவியல் பொருள்முதல்வாத தத்துவத்தில் பயன்படுத்தப்படும் கலைச் சொற்களின்பதவுரைகளை நாம் முதலில் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த கலைச்சொற்களின்பதவுரையை பலரும் திரித்துக் கூறுவது வழக்கமாக உள்ளது.

தத்துவம் என்றால் என்ன?

தத்துவவாதி என்பவர் ஏதோ இந்த உலகத்தை மறந்துவிட்டு ஆகாயத்தில் பறக்கிறவன்என்றுதான் பலரும் எண்ணுகிறார்கள். அல்லது வல்லடி வழக்கு எதற்கும் போகாமல் எல்லாம் நன்மைக்கே என்றும் எதிலும் நல்ல அம்சத்தை மட்டும் பார்க்கிறவன் என்றுதான்எண்ணுகிறார்கள். அது தவறான சிந்தனை மற்றும் கருத்தாகும், உண்மைக்குநேர்எதிரானதாகும். சில கேள்விகளுக்குச் சரியாக கணக்காக விடையளிக்க விரும்புபவர்தான் தத்துவவாதி ஆவார்.இந்த உலகம் எங்கிருந்து வந்தது? நாம் எங்கே போகிறோம்? என்பது போன்ற பிரபஞ்சத்தின்பிரச்சனைகளுக்கு விளக்கம் தரவே தத்துவம் விரும்புகிறது என்பதை கொஞ்சம்நினைவுபடுத்திப் பாருங்கள், அப்படி பார்த்தால், அந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கப்புறப்பட்ட தத்துவவாதி பல விஷயங்களுடன் கட்டிப் புரள்வதை நீங்கள் பார்ப்பீர்கள். சிலர்சொல்வது போலல்லாமல், தத்துவவாதி என்பவர் ஏகப்பட்ட சந்தடி மற்றும் விவாதங்கள் செய்வதைப் பார்ப்பீர்கள்.

தத்துவத்தை எப்படி வரையறுத்து விளக்குவது? இயற்கையை, பிரபஞ்ஞத்தை அது விளக்கவிரும்புகிறது என்று நாம் கூறுகிறோம். சகல விஷயங்களிலும் ரெம்ப ரெம்ப பொதிந்திருக்கின்றபொதுவாயுள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து முடிவு கூறுவதை தத்துவம் என்கிறோம். அதைவிடகுறைந்த அளவிலுள்ள பொதுத்தன்மை பெற்ற விஷயங்களையும் பிரச்சனை களையும் பல விஞ்ஞானங்கள் ஆராய்கின்றன. ஆகவே அப்படிப்பட்ட பல விஞ்ஞானங்களின் விரிவான அம்சமே தத்துவம் ஆகும். அதாவது விஞ்ஞானங் களுக்கெல்லாம் விஞ்ஞானமே தத்துவம் ஆகும்.

இரசாயனம், பௌதீகம், உயிரியல் போன்ற விஞ்ஞானங்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையிலுள்ள பொதுத்தன்மைகளை ஆராய்வதற்கான விஞ்ஞானமாகும். ஆனால் தத்துவமானது அனைத்துப் பிரச்சனைகளையும் ஆராய்ந்து புரிந்து கொள்வதற்கு வழிகாட்டும் பொதுவான விஞ்ஞானம் ஆகும்.

பொருள்முதல்வாத தத்துவம் என்றால் என்ன?

பொருள்முதல்வாதம் அல்லது லோகாயதவாதம் என்ற சொல்லின் அர்த்தத்தைப் பற்றியும் ஒரு குழப்பம் இருக்கிறது. லோகாயதவாதி அல்லது பொருள்முதல்வாதி என்றாலே லௌகீக விஷயங்களில் மூழ்கித் திளைப்பதைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பவர் வேறுஎதைப்பற்றியும் சிந்திக்காதவர் என்றும் சுகவாசி, சிற்றின்பப் பிரியர் என்றும் சிலர் பலவாறு கருதுகிறார்கள். உலகிலுள்ள பொருள்களைப் பற்றியும் இந்தஉலகத்தைப் பற்றியும் இந்த தத்துவம் பேசுவதாலும் லோகாயதம் என்ற சொல் உலகம் சம்பந்தப்பட்டது என்ற பொருள் கொடுப்பதாலும், பொருள்முதல்வாத தத்துவத்திற்கு தவறான விளக்கத்தை முதலாளித்துவவாதிகளும், ஆன்மீக மற்றும் கருத்துமுதல்வாத தத்துவ வாதிகளும் கொடுக்கிறார்கள். பொருள்முதல்வாத தத்துவத்தை விரிவாக பார்க்கும் போது இதற்கான விளக்கத்தை நாம் விரிவாகப் பார்ப்போம். அதன் உண்மையான அர்த்தத்தை நாம் நிலை நாட்டுவோம். பொருள்முதல்வாதிக்கு லட்சியம் எதுவும் இருக்க முடியாது, லட்சியத்தின்வெற்றிக்காகப் போராடுவது என்பதும் இருக்க முடியாது என்று கருதுவதெல்லாம் தவறான கருத்து என்பதை நிலைநாட்டுவோம்.மிகவும் பொதுவான உலகப் பிரச்சனைகளுக்கு தத்துவமானது விளக்கம் தர விரும்புகிறது.

ஆனாலும் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் இந்த விளக்கங்கள் எல்லாம் ஒரே விதமாக இருந்திருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதிலாகும். காலம் செல்லச் செல்ல உலகத்தில்மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கிறது. ஆகவே அது பற்றிய விளக்கங்களும் மாறிக்கொண்டே இருக்கிறது.

ஆதி மனிதன் இயற்கைக்கும் பிரபஞ்சத்துக்கும் விளக்கம் தர முயற்சித்தான். ஆனால் அதில் அவன் தோல்வியடைந்தான். இதற்கு காரணம் என்ன? அப்போது விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. தற்போது விஞ்ஞானங்கள் இருப்பதால்தான் இந்த உலகையும் நம்மைச்சூழ்ந்திருக்கும் புறத்தோற்றங்களையும் இன்று நம்மால் விளக்க முடிந்திருக்கிறது. இப்போதும்இந்த விஞ்ஞான அறிவு இருப்பவர்களால் மட்டுமே இதனை சரியாக விளக்க முடியும். இப்போதும் இந்த விஞ்ஞான அறிவு இல்லாதவர்களால் இதனை விளக்க முடியாது, அல்லது அவர் கொடுக்கும் விளக்கமானது கற்பனையாகவே இருக்கும், உண்மை இருக்காது.இந்த விஞ்ஞானங்கள்ஆதிகாலத்தில் அதிகமாக வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. அந்த விஞ்ஞானங்கள் வளர்ந்துமுன்னேறுவதற்கு உதவிய கண்டுபிடிப்புகள் எல்லாம்பிற்காலத்தில்தான் கண்டுபிடிக்கப் பட்டன. ஆகவே ஆதி மனிதனின் அறியாமையே அவனதுமுயற்சிகளுக்குத் தடையாக இருந்தது. இதே அறியாமையின் காரணமாக வரலாற்று வளர்ச்சிப் போக்கிலேயே மதங்கள் தோன்றுவதையும் நாம் பார்க்கிறோம். அந்த மதங்களும் உலகைவிளக்க விரும்புகின்றன. ஆனால் அவை இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கொண்டு உலகை விளக்க விரும்புகின்றன. அவை விஞ்ஞானத்துக்கு விரோதமான விளக்கங்களைத்தருகின்றன. இப்படி அறியாமை நிலவிய போதிலும், பல நூற்றாண்டுகள் செல்லச் செல்ல சமூகத்திலுள்ள சிலர் விஞ்ஞான ஆர்வம் கொண்டு விஞ்ஞானத்தை வளர்த்தனர். விஞ்ஞானமும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. அது வளர வளர விஞ்ஞானப் பரிசோதனைகளிலிருந்து பௌதீக அல்லது பொருள் பற்றிய விபரங்கள் மேலும் மேலும் கிடைத்தன. அவற்றைக் கொண்டு மனிதர்கள் பிரபஞ்சத்தை விளக்க முயற்சி செய்தார்கள். எனவே விஞ்ஞான உண்மை களைக் கொண்டு உலக விஷயங்களை விளக்க வேண்டும் என்ற விருப்பத்தி லிருந்துதான் இயக்கவியல் பொருள்முதல் வாதத் தத்துவம் பிறக்கிறது.

பிரபஞ்சத்தைப் பற்றி விஞ்ஞான ரீதியான விளக்கத்தைத் தருவதே பொருள் முதல்வாதம் ஆகும், வேறொன்றுமில்லை. இதனை நாம் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பொருள்முதல்வாதம் தோன்றி வளர்ந்த வரலாற்றைப் படித்துப் பாருங்கள், அறியாமையைஎதிர்த்து அது எவ்வளவு கடுமையாக எவ்வளவு சிரமப்பட்டு போராட வேண்டியிருந்தது என்பதை அந்த வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அது மட்டுமா? அந்தப் போராட்டம்இன்றும் கூட முடிந்தபாடில்லை. பொருள்முதல் வாதத்தோடு அறியாமையும் ஒருபக்கம் நீடித்துவருவதுதான் இதற்கு காரணமாகும்.

இப்படி நீடித்து நடந்துகொண்டிருந்த போரில்தான் மார்க்சும், எங்கெல்சும் தலையிட்டார்கள்.

அவ்விருவரும் 19ஆம் நூற்றாண்டின்மகத்தான விஞ்ஞான கண்டுபிடிப்புகளின்முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருந் தார்கள். எனவே இந்தப் பிரபஞ்சத்தை விஞ்ஞான ரீதியாக விளக்குவதில் பொருள்முதல்வாதம் பிரமாதமாக முன்னேறும்படி அவர்கள் அதை வளர்த்தார்கள். அந்த வழியேதான் இயக்கவியல் பொருள்முதல்வாதம் பிறந்தது. அடுத்தபடியாக இவ்வுலகை இயக்கிவரும் விதிகளேதான் மனித சமுதாயத்தில் முன்னேற்றத்தையும் விளக்கி வைக்கின்றன என்பதை அவர்கள்தான் முதன் முதலில் உணர்ந்தார்கள். அந்த வழியேதான் வரலாற்று ரீதியான பொருள்முதல்வாதம் என்ற பிரசித்திபெற்ற தத்துவத்தை வரையறுத்து தந்தார்கள்.

பொருள்முதல்வாதத்துக்கும்மார்க்சியத்துக்கும் இடையேயுள்ள உறவு என்ன?

இவ்விரண்டுக்கும் இடையேயுள்ள உள்ள உறவுகளைப் பின்வருமாறு சுருங்கக் கூறலாம்.

1. பொருள்முதல்வாத விஞ்ஞானமே மார்க்சியத்துக்கு அடிப்படை.

2. பிரபஞ்சத்தின் பிரச்சனைகளுக்கு பொருள்முதல்வாதம் விஞ்ஞான ரீதியான விளக்கம் தர விரும்புகிறது. ஆகவே வரலாற்றுப் போக்கில் விஞ்ஞானம் வளர வளர அத்துடன் கூடவே பொருள்முதல் வாதமும் வளர்ந்து முன்னேறுகிறது. ஆகவே மார்க்சியம் பல விஞ்ஞானங் களிலிருந்து பிறந்தது; அவற்றை அடிப்படையாகக் கொண்டது; அவ்விஞ்ஞா னங்கள் வளர வளர அவற்றோடு கூடவே மார்க்சியமும் வளர்கிறது.

3. மார்க்சுக்கும், எங்கெல்சுக்கும் முன்பே பொருள்முதல்வாத தத்துவங்கள் பல இருந்து வந்துள்ளன. பல காலகட்டங்களில் பல்வேறு வடிவங்களில் இருந்து வந்துள்ளன என்ற போதிலும் 19ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானங்கள் வெகுதூரம் முன்னேறியதையொட்டி மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதத்தை புதிதாக உருவாக்கினர். அவர்கள் அதற்கு விஞ்ஞானங்களையே அடிப்படையாகக் கொண்டனர். நவீன கால பொருள் முதல்வாதத்தைநமக்குத் தந்தார்கள். அதன்பெயர்தான் இயக்கவியல் பொருள்முதல் வாதம் ஆகும். அந்த தத்துவம்தான் மார்க்சியத்துக்கு அடிப்படை.

இந்த விளக்கங்கள் எதைக் காட்டுகின்றன? சிலபேர் சொல்வதற்கு மாறாக பொருள் முதல்வாதத்துக்கு ஒரு வரலாறு உண்டு என்பதைத்தான் காட்டுகிறது. அதன் வரலாறு விஞ்ஞானங்களின் வரலாற்றுடன் இறுகப் பிணைந்துள்ளது. பொருள் முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்ட மார்க்சீயம் ஒரு தனிப்பட்ட மனிதனின் மூளையிலிருந்து உதிக்கவில்லை. பண்டையகாலப் பொருள்முதல்வாதத்தின் தொடர்ச்சி அது. பரிபூரணமான மலர்ச்சி அது. பண்டையகால பொருள்முதல்வாதம் தீதரோவின் துணைகொண்டு வெகுதூரம் முன்னேறி வளர்ந்திருந்தது. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அறிவுக்களஞ்சியக் குழுவினர் அதைவளர்த்தார்கள். (தீதரோ, தாலம்பேர் என்ற தத்துவவாதிகளின் தலைமையின் கீழ் செயல்பட்ட குழுதான் அறிவுக்களஞ்சியக் குழுவினர் ஆவார்கள். பௌதீக உலகைப் பற்றிய விஷயங்களையும், ஆன்மீக, அறிவு சம்பந்தப்பட்ட விஷயங்களையும் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத் திலிருந்து விமர்சித்து விளக்கிய இவர்கள், அறிவுக்களஞ்சியம் என்ற நூலை தயாரித்தார்கள்).

19ஆம் நூற்றாண்டின் மகத்தான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் அதைப் பெரிதும் வளப்படுத்தின. அப்படி வளர்ந்து வளம் பெற்றிருந்த பொருள்முதல் வாதத்தின் முழுமலர்ச்சிதான் மார்க்சியம் ஆகும். மார்க்சியம் ஒரு ஜீவனுள்ள தத்துவம். அது பிரச்சனைகளை எப்படிப்பார்க்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதற்காக எல்லோருக்கும் தெரிந்திருக்கும் வர்க்கப் போராட்டம் என்ற பிரச்சனையை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டு விளக்குவோம்.

வர்க்கப் போராட்டத்தைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

சோறு கிடைக்கப் போராடினால் போதும், அரசியல் போராட்டம் தேவையில்லை என்று சிலர் நினைக்கிறார்கள். புரட்சிகரமான தெருச்சண்டை நடத்தினால் போதும், நிறுவனம், கட்சி ஒன்றும் தேவையில்லைஎன்று சிலர் நினைக்கிறார்கள். அரசியல் போராட்டம் ஒன்றுதான் இந்த வர்க்கப்போர் பிரச்சனைக்குப் பரிகாரம் தொழிற்சங்க இயக்கம் முதலான மற்றவையெல்லாம் வேண்டியதில்லை என்று வேறு சிலர் எண்ணுகிறார்கள்.

ஆனால் ஒரு மார்க்சியவாதி இந்த வர்க்கப் போராட்டப் பிரச்சனையை எப்படி பார்க்கிறார்?

மூன்று அம்சங்களைக் கொண்ட ஒரே பிரச்சனையாகப் பார்க்கிறார். (1) பொருளாதாரப் போராட்டம், (2) அரசியல் போராட்டம், (3) தத்துவ அறிவுப் போராட்டம் என்று மூன்று அம்சங்களைக் கொண்டதுதான் வர்க்கப் போராட்டம் என்று மார்க்சியவாதி கருதுகிறார்.ஆகவே இந்த மூன்று அம்சங்களையும் ஏககாலத்தில் அதாவது ஒரே சமயத்தில் முன்னிறுத்தி வர்க்கப் போராட்டப் பிரச்சனையை நாம் பரிசீலிக்க வேண்டும். இதற்கு மாறாக இந்தப்போராட்டங்களில் ஒன்றைப் புறக்கணித்தாலும் அது முழுமையான வர்க்கப்போராட்டமாகாது. இந்திய கம்யூனிச அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த மூன்றுவகையான போராட்டங்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தவறிவிட்டனர். அதிலும் குறிப்பாகதத்துவ அறிவுப் போராட்டத்தை நடத்த தவறிவிட்டனர். தத்துவப் போராட்டத்தில் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் முட்டிமோதவேண்டிய நிலை ஏற்படும். இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள் மாற்று கருத்தை பரிசீலித்து தங்களது கருத்தை நிலைநாட்ட விவாதம் நடத்துவதை தவிர்க்கிறார்கள். தங்களது கருத்தே சரியானது என்றும் பிறரது கருத்து தவறானதுஎன்றும் கருதிக்கொண்டு பிறரது கருத்து எப்படி தவறானது என்று விளக்கம் தருவதற்கு முயற்சிப்பதும் இல்லை. விவாதத்தில் ஈடுபடுவதும் இல்லை. பொருளாதாரப் போராட்டங்களில் ஈடுபட்டாலும் தொழிற்சங்கவாதப் போராட்டங்களில்தான் ஈடுபடுகிறார்கள். லெனின் காட்டிய வழியில் பொருளாதாரப் போராட்டத்தை நடத்தாமல் பொருளாதாரவாதத்தினரின் வழியிலேயே பொருளாதாரப் போராட்டங் களை நடத்துகிறார்கள்.உழைக்கும் வர்க்கம்அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அரசியல் போராட்டத்தை இங்குள்ள கம்யூனிஸ்டுகள் நடத்து வதில்லை. மாறாக இந்த அரசியல் அமைப்பை தக்கவைத்துக்கொண்டே சில சீர்திருத்த கோரிக்கைகளை முன்வைத்தும் பாராளுமன்றத்தில் சில சீட்டுகளை பெறுவதற்கான அரசியல் போராட்டத்தையே நடத்துகின்றனர். தொகுத்துச் சொன்னால் மார்க்சிய லெனினிய முறையில் வர்க்கப் போராட்டத்தில் இவர்கள் ஈடுபடுவதில்லை. அதன் காரணமாகவே இங்குள்ள கம்யூனிஸ்டுகள் தோல்வியடைந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த தோல்விகளைப் பயன்படுத்தி கம்யூனிசத்திற்கு எதிரானவர்கள் இந்தியாவில் வர்க்கப் போராட்டம் வெற்றிபெறாது என்று பல்வேறு வகையான முதலாளித்துவ சீர்திருத்தப் போராட்டங்களே இங்கே வெற்றிபெறும் என்று கூறி உழைக்கும் மக்களின் போர்க்குணத்தை மழுங்கடித்துக்கொண்டும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை திசைதிருப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

அ) சுதந்திரத்திற்காகப் போராடாமல் (அதாவது தத்துவ அறிவுப் போராட்டம் நடத்தாமல்) சமாதானத்துக்காகப் போராடாமல் (அதாவது அரசியல் போராட்டம் இல்லாமல்) சோற்றுக்காகப் போராடுவது (அதாவது பொருளாதாரப் போராட்டம் நடத்துவது)சாத்தியமில்லை.

ஆ) அரசியல் போராட்டத்தைப் பற்றியும் அதேவிதமாகச் சொல்ல முடியும். மார்க்சுக்குப் பிறகு இந்த அரசியல் போராட்டமே ஒரு அசல் விஞ்ஞானமாகப் பரிணமித்துவிட்டிருக்கிறது. ஆகவே, அரசியல் போராட்டத்தைப் பற்றிப் பேசும்பொழுது பொருளாதார நிலையையும் தத்துவப்போக்குகளையும் கவனித்துக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இ) தத்துவப் போராட்டம் பிரச்சாரம் என்ற வடிவத்தில் நிலவுகிறது. ஆகவே இந்தத் தத்துப்போர் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் அது அரசியல் பொருளாதார நிலைமைகளைநிச்சயமாகக் கணக்கில் எடுத்துக்கொண்டாக வேண்டும்.

ஆகவே நாம் இங்கே பார்பது என்ன?இந்தப் பிரச்சனைகள் எல்லாம் ஒன்றோடொன்று இறுகப் பிணைந்து கிடைக்கின்றன என்பதைத்தான் பார்க்கிறோம். வர்க்கப் போராட்டம் என்பது ஒருமகத்தான பிரச்சனையாகும். அதன் ஒவ்வொரு தனி அம்சத்தையும் நாம் பார்க்க வேண்டும்.

அத்துடன் அதை முழுமையாகவும் பரிசீலிக்க வேண்டும். அப்படி பார்க்காமல் வர்க்கப்போராட்டத்தின் எந்த ஒரு தனி அம்சத்தைப் பற்றியும் நாம் முடிவுகட்ட முடியாது.

ஆகவே இந்த மூன்று முனைகளிலும் போராட்டத் திறமை பெற்றிருக்கிறவரால் தான் கம்யூனிச இயக்கத்திற்கு சிறந்த முறையில் தலைமை வகிக்க முடியும்.

ஆனால் யதார்த்தத்தில் இந்த மூன்று அம்சங்களிலும் ஒருசேர திறமை படைத்தவர்கள் அறிதாகவே இருக்கிறார்கள். எனினும் இந்த மூன்று அம்சங்களில் ஏதாவது ஒரு அம்சங்களில் ஆர்வமுள்ளவராகவும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் பலர் இருக்கிறார்கள். ஆகவே இந்த எதார்த்த சூழலை கணக்கிலெடுத்து அமைப்பிற்குள் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் விரிவாக அதாவது பொருளாதரத்தை ஆய்வு செய்வதற்கு ஒரு குழு, அரசியல் பிரச்சனைகளை ஆய்வு செய்வதற்கு மற்றொரு குழு தத்துவப் பிரச்சனைகளை ஆய்வு செய்து விவாதிப்பதற்கு ஒரு குழு என்று மூன்று குழுக்களை உருவாக்கி இந்த மூன்று குழுக்களால் முன்வைக்கப்படும் அறிக்கைகளை இந்த மூன்று குழுக்களையும் உள்ளடக்கிய மத்திய குழுவால் விவாதித்து இந்த மூன்று அம்சங்களிலும் கம்யூனிஸ்டு கட்சி செயல்படுத்த வேண்டிய நடைமுறையைத் தீர்மானித்து செயல்பட முடியும்.

வர்க்கப் போராட்டம் என்ற பிரச்சனையை ஒரு மார்க்சியவாதி இந்த மூன்று அம்சங்களின் இணைவின் அடிப்படையிலேயேதான் புரிந்துகொள்ள வேண்டும்.

தத்துவ அறிவுப் போராட்டத்தில் நாம் தினந்தோறும் ஈடுபட வேண்டியுள்ளது. அந்தப் போராட்டத்தின்போது சில சிரமமான பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டி நேரிடுகிறது.ஆன்மாவுக்கு ஆதியுமில்லை அந்தமும் இல்லை. அது அமரத்தன்மை வாய்ந்தது என்பதுஅப்படிப்பட்ட பிரச்சனைகளில் ஒன்று. பிறகு கடவுள் உண்டா இல்லையா என்று ஒரு பிரச்சனை. உலகம் எப்படித் தோன்றியது என்பது மற்றொரு பிரச்சனை, இவற்றை எல்லாம் நாம் சமாளிக்க வேண்டியுள்ளது.

இயக்கவியல் பொருள்முதல்வாதம் நமக்கு ஒரு ஆய்வுமுறையைத் தருகின்றது. அதைக்கொண்டு நாம் இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் விடையளிக்க வழி கிடைக்கிறது. மார்க்சிய தத்துவத்தை முழுமையாக்குகிறோம், புதுமை செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு மார்க்சியத்தை புரட்டிப் பொய்யாக்க முயற்சி செய்கின்றவர்களின் பிரச்சாரங்களை அம்பலப்படுத்தவும் வழி கிடைக்கின்றது.

ஆகவே மார்க்சிய தத்துவத்தை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு ஆழமாக கற்கிறோமோ அந்த அளவுக்கு நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விஞ்ஞான அடிப்படையில் புரிந்து கொள்ளவும், பிரச்சனைகளை தீர்ப்பதற்கான தீர்வுகளை காண முடியும். மேலும் உழைக்கும் மக்களை ஏமாற்றி பிழைப்பவர்களின் மக்களுக்கு எதிரான கருத்துகளையும் மார்க்சியத்திற்கு எதிரான கருத்துகளையும் எதிர்த்துப் போராடி அம்பலப்படுத்த முடியும்.

ஆகவே தோழர்களே இலக்கு இணையதளத்தோடு இணைந்து மார்க்சிய தத்துவத்தைபயிலுவோம் வாருங்கள் என்று இலக்கு உங்களை அழைக்கிறது.

மார்க்சியத்திற்கு எதிராக முதலாளி வர்க்கம் நடத்தும் பிரச்சாரம். மார்க்சியத்தைப் புரட்டிப் பொய்படுத்த நடக்கும் முயற்சிகள் பல்வேறு அடிப்படைகளிலிருந்து எழுகின்றன. மார்க்சுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த சோசலிஸ்டு ஆசிரியர்களை மார்க்சியத் திற்கு எதிராக சிலர் அணிதிரட்டப் பார்க்கிறார்கள். இப்படித்தான் "கற்பனாவாத சோசலிசத்தின்" போதகர்களை மார்க்சுக்கு எதிராக சிலர் ஏவி விடுகிறார்கள். வேறு சிலர் புருதானை உபயோகித்துக் கொள்கின்றனர். 1914ஆம் ஆண்டுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த தத்துவ மாரீசர்களை தங்களுக்குஊன்றுகோலாக கொள்கின்றனர்.(தங்களை மார்க்சியவாதிகள் என்று சொல்லிக்கொண்டே மார்க்சியத்தை படுமோசமாகத் திரித்துப் புரட்ட முன்வந்த காவுட்ஸ்கி, ஹில்பர்டிங், பெர்ன்ஸ்டைன், டுராடி முதலியவர்கள், 19ஆம் நூற்றாண்டின்முடிவிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் தோன்றிய இரண்டாவது அகிலத்தலைவர்களாக இருந்த இவர்கள், மார்சீயம், சோசலிசம் என்றெல்லாம் இவர்கள் பேசிய போதிலும் நடைமுறையில் ஐரோப்பிய சோசலிசப் புரட்சிகளை நசுக்கவும் நாஜியிசம், பாசிசம் வெற்றிபெறவும் இவர்கள் பணிபுரிந்தார்கள்) இந்தத் தத்துவ மாரீசர்களைத்தான் மிகத்திறமையாக லெனின் முறியடித்து துரத்திவிட்டார். இவர்களையெல்லாம் குறிப்பிடுவதற்கு மேலாக இன்னொன்றையும் வலியுறுத்திக் காட்டியாக வேண்டும். மார்க்சியத்தைப் பற்றி கட்டுப்பாடாக மௌனம் சாதிக்கும்படியான ஒரு இயக்கத்தை முதலாளிவர்க்கம் நடத்திவருவதைத்தான் நாம் அதிகமாக வலியுறுத்திக் காட்ட வேண்டியிருக்கிறது. குறிப்பாக மார்க்சிய வடிவம் தாங்கிய இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற தத்துவம் ஒன்று இருக்கிறது என்பதையே யாரும் தெரிந்துகொள்ளாதபடி தடுப்பதற்காக என்ன செய்யவேண்டுமோ அத்தனையும் செய்திருக்கிறார்கள்.....

தொடரும்... தேன்மொழி

லெனினியக் கண்ணோட்டத்தில் ஏகாதிபத்தியத்தை புரிந்துகொள்வோம்.-தேன்மொழி

 


1916ஆம் ஆண்டு ஏகாதிபத்தியம் பற்றி ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலை லெனின் எழுதினார். முதலாளித்துவ வளர்ச்சியில் மிகவும் உயர்ந்த ஒரு கட்டம்தான் ஏகாதிபத்தியம் என்ற உண்மையை தகுந்த ஆதாரங்களுடன் லெனின் நிறுவினார். சமூக வளர்ச்சியில் ஏகாதிபத்திய கால கட்டத்திற்குப் பிறகு சோசலிசக் கட்டமாகத்தான் சமூகம் மாறும் என்றும் அதற்கு இடையில் வேறு எந்தவொரு கட்டமும் இல்லை என்றும் லெனின் விளக்கியுள்ளார்.

ரஷ்யா மற்றும் சீனாவில் புரட்சிகள் நடந்து அங்கு சோசலிச சமூகம் உருவானது. அங்கு உருவான சோசலிசமும் வீழ்த்தப்பட்டது. அங்கு முதலாளிகளின் ஆட்சி வீழ்த்தப் பட்டாலும், முதலாளித்துவ வர்க்கங்கள் வீழ்த்தப்படவில்லை. முதலாளித்துவ கருத்துக்களின் செல்வாக்கிலிருந்து மக்கள் முழு மையாகவிடுவிக்கப்படாத நிலையில், சோசலிசத்தை கட்டியமைப் பதற்கு முன் அனுபவங்கள் இல்லாததாலும் அங்கு சோசலிசம் வீழ்த்தப்பட்டு முதலாளித்துவம் மீட்க்கப்பட்டது. ஆகவே தற்போது உலகில் எங்கும் சோசலிச ஆட்சி இல்லை. ஆகவே உலகெங்கிலும் ஏகாதிபத்திய முதலாளிகளின் ஆட்சியே நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஏகாதிபத் தியங்களின் ஆட்சியை வீழ்த்தி சோசலிச ஆட்சியைப் படைப்பதுதான் உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்டுகளின் கடமையாக உள்ளது. அந்த லட்சியத்தை கம்யூனிஸ்டுகள் அடைய வேண்டுமானால் ஏகாதிபத்தியம் பற்றி லெனின் சொன்ன கருத்துக்களை ஆழமாகப் படித்து புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஏகாதிபத்தியம் பற்றிய கருத்துக் களை லெனின் முன்வைத்து நூறு ஆண்டுகள் ஆகிவிட்டபடியாலும், இந்த நூறு ஆண்டுகளில் ஏகாதிபத்தியமானது பல்வேறு மாறுதலுக்கு உள்ளாகியுள்ளதுஎன்றும், ஆகவே இன்றைய சூழலுக்கு ஏகாதிபத்தியம் பற்றி லெனினால் வகுத்துக் கொடுத்த கோட்பாடுகள் பொருந்தாது என்றும் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக் கொள்கைகளை முழுமையாக சிலர் மறுக்கிறார்கள்.

இரண்டாவது வகையினர், ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக் கோட்பாடுகள் இன்றும் பொருந்தும் என்று ஏற்றுக் கொள்கிறார்கள். எனினும் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக் கருத்துக்களை திருத்தி லெனினுக்கு எதிரான கொள்கை களை லெனினது கொள்கை போல் சித்தரித்து லெனினியக் கொள்கை களை நரித்தந்திரமாக மறுக்கிறார் கள். லெனினைத் திருத்தும் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஏனென்றால் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக் கொள்கைகளை ஆதரிப்பதாக நடித்து லெனினியவாதிகளை இவர்கள் தந்திரமாக ஏமாற்றுகிறார்கள்.

மூன்றாவது பிரிவினர்தாம் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக் கொள்கைகளை உள்ளதுஉள்ளபடி பார்த்து தெளிவாக புரிந்துகொண்டு அவர்களின் அரசியல் கொள்கைக ளுக்கும் நடவடிக்கைகளுக்கு ஏகாதிபத்தியம் பற்றிய லெனினிய கொள்கைகளை உண்மையிலேயே லெனினுக்கு விசுவாசமாகப் பயன் படுத்துகிறார்கள்.

ஆகவே ஏகாதிபத்தியம் பற்றிய லெனினிய கொள்கைகளை அறிய ஏகாதிபத்தியம் பற்றி லெனின் எழுதியவற்றை படித்து நமக்கிடையே விவாதித்து தெளிவான முடிவிற்கு வருவது இன்றைய காலத்தில் அவசியமான பணிகளில் ஒன்றாகும். ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக் கொள்கைகளை மறுப்பவர்களும், லெனினை திருத்தி ஏமாற்று பவர்களும் உழைக்கும் மக்களின் எதிரிகள்தாம் என்ற உண்மையை புரிந்துகொள்ள இந்த படிப்பு மிகவும் அவசியமாகும்.

அதற்கான அறிமுகமாகவே இந்த கட்டுரையை இலக்கு கொண்டுவருகிறது. "ஏகாதிபத்தியக் காலகட்டம் சோசலிசப் புரட்சியின் தறுவாயாகும்" என்றார் லெனின்.

அதாவது ஏகாதிபத்திய காலகட்டத்தில் ஏற்படும் அரசியல், பொருளாதார மாற்றங்கள், பாட்டாளி வர்க்கமும் மற்ற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கு சோசலிசப் புரட்சியை நடத்துவதைத் தவிர தங்களது விமோசனத்திற்கு வேறு வழியில்லை என்று உணர்வதற்கான சூழலை ஏற்படுத்துகிறது. இந்தசூழலை நன்கு உணர்ந்த கம்யூனிஸ்டுகள் அதனை உழைக்கும் மக்களிடம் கொண்டு சென்று மக்களைத் திரட்டி சோசலிசப் புரட்சியை நடத்துவதற்கு பாடுபட வேண்டும். இவ்வாறு கம்யூனிஸ்டு கள் மக்களைத் திரட்டி போராடுவதன் மூலம் மட்டுமே சமூகம் சோசலிச சமூகமாக மாறும் என்றே லெனின் கூறுகிறார்.

"சமூக தேசிய வெறியானது (சொல்லில் சோசலிசமும், செயலில் தேசிய வெறியும்) சோசலிசத்திற்கு அறவே துரோகமிழைத்து முதலாளித்துவ வர்க்கத்தின் தரப்புக்கு முழுமையாகத் துறந்தோடி விடுவதாகும்" என்றார் லெனின். ஏகாதிபத்தியக் காலகட்டமானது சோசலிசத்தின் அவசியத்தை உணர்த்தக்கூடியதாக இருக்கும் அதே வேளையில் சோசலிசத்துக்கு அறவே துரோக மிழைக்கும் அரசியல் சக்திகள் உருவாவதற்கும் காரணமாக இருக்கிறது என்பதை லெனின் இங்கே நமக்கு நினைவூட்டுகிறார்.. முரண்பாடு அனைத்தும் தழுவியது என்ற பொருள்முதல்வாதக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே இங்கே இரண்டு எதிர்எதிரான சூழல்கள் ஏற்படுகிறது என்று லெனின் நமக்கு விளக்குகிறார்.

இந்த இரண்டு எதிர்மறைகளுக்கு இடையிலான போராட்டத்தில் சோசலிசத் திற்காகப் போராட விரும்பும் சக்திகள் வெற்றி பெற்றால் மட்டுமே இங்கே சோசலிசப் புரட்சி நடக்கும். ஆகவே நாம் இந்த எதிர்மறைகளில் சோசலிசத்திற்காக போராடும் சக்திகளையும், அதற்கான கொள்கைகளையும் அடையாளம் காணவேண்டும். அதற்கு நமக்கு லெனின் மட்டுமே வழிகாட்டுகிறார்.

தொழிலாளி வர்க்கத்திற்காக, சோசலிசத்திற்காகப் பாடுபடுபவர்கள் ஒருபுறமும், தொழிலாளி வர்க்கத்திற்கும், சோசலிசத்திற்கும் துரோகம் செய்து எதிரியாகமாறி முதலாளிகளுக்காகப் பாடுபடுபவர் களும் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்குள்ளேயே இரண்டு பிரிவாக பிளவுண்டு இருப்பதற்கு காரணமே இந்த ஏகாதிபத்திய முதலாளிகள்தான் என்று லெனின் கூறினார்.

தொழிலாளி வர்க்க இயக்கம் பல பிரிவுகளாக பிளவுண்டு இருப்பதற்கு இந்த ஏகாதிபத்தியம்தான் முக்கியமான காரணம் என்பதை இப்போதும் கம்யூனிச அமைப்பின் தலைவர்கள் புரிந்து கொள்ள வில்லை. ஆகவே ஏகாதிபத்தியத் தைப் பற்றி புரிந்துகொள்வதும் அதன் சதிச் செயல்களை புரிந்துகொண்டு உழைக்கும் மக்களிடம் அம்பலப் படுத்தி உழைக்கும் மக்களை எச்சரித்து பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.

ஏகாதிபத்திய காலத்தில் ஏகாதிபத்திய நாடுகள் பிற பின்தங்கிய நாடுகளின் மீது போர் தொடுத்து அந்த நாடுகளை கைப்பற்றுவது நடந்தது. அத்தகைய பிரதேசங்களை கைப்பற்றுதலை முதலாளிகளின் தரப்புக்கு ஓடிவிட்ட சில கம்யூனிஸ்டுகள் (போலி கம்யூனிஸ்டுகள்) வெட்க்கமில்லாமல் மூடிமறைத்து பல பொய்களைச் சொன்னார்கள்.

தற்போதும் ஏகாதிபத்திய நாடுகள் பின்தங்கிய நாடுகளின் மீது வெளிப்படையாக பொருளாதார ஆதிக்கத்தையும் இராணுவ ஆதிக்கத் தையும் செய்து வருகிறார்கள். மேலும் மறைமுகமாக அரசியல் ஆதிக்கம், இரகசியமான ஒப்பந்தங்கள் போடுவதன் மூலம் செய்து வருகிறார்கள்.

இவர்களால் போடப்படும் மூலதனத் தின் மூலம் நாடு தொழில்துறையில் முன்னேறும் என்ற பொய்யைச் சொல்லி ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்கத்தை மூடிமறைக்கும் போலி கம்யூனிஸ்டுகளை இப்போதும் நாம் பார்க்கலாம்.அடிப்படை பொருளாதாரப் பிரச்சனையை, அதாவது ஏகாதிபத்தியத்தின் பொருளாதார

சாராம்சத்தை பற்றி நாம் தெரிந்து கொள்வதற்காக லெனினால் எழுதப்பட்ட நூல்தான் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலாகும். எனினும் பொருளாதாரத்திற்கு தொடர்பான அரசியல், இராணுவம் போர் போன்ற பிரச்சனைகளையும் அந்த நூலில் லெனின் அலசி ஆராய்கிறார். இந்தப் பிரச்சனைகளை ஆராய்ந்து அறிந்து கொள்ளாமல், தற்கால யுத்தங்களை யும், தற்கால அரசியலை யும் நாம் புரிந்துகொள்ளவும் முடியாது, மதிப்பீடு செய்யவும்முடியாது என்று லெனின் விளக்கியுள்ளார். ஆகவே இந்தியத் துணைக்கண்டத்தின் பொருளாதாரம், அரசியல் போன்றவற்றை நாம் புரிந்துகொண்டு, மதிப்பீடு செய்து நாம் செல்ல வேண்டிய பாதையை தீர்மானித்து செயல்பட வேண்டு மானால் ஏகாதிபத்தியம் பற்றிய லெனிய கோட்பாடுகளை படித்து உள்வாங்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

மறுக்கமுடியாத முதலாளித்துவ புள்ளிவிவரச் சுருக்கத் தொகுப்பு களையும், எல்லா நாடுகளையும் சேர்ந்த முதலாளித்துவ அறிஞர் களாலும் ஒப்புக்கொள்ளப்படும் உண்மைகளையும் அடிப்படையாகக் கொண்டு, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், அதாவது முதல் உலக ஏகாதிபத்திய யுத்தத்தின் தறுவாயில், உலக முதலாளித்துவ அமைப்பை அதன் சர்வதேச உறவு முறைகளில் காட்டும் ஒரு தொகுப்புச் சித்திரத்தை லெனின் ஏகாதிபத்தியம் முதலாளித் துவத்தின் உச்சகட்டம் என்ற நூலில் வகுத்தளித்தார்.

இப்போதும் 21ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்திய முதலாளிகள் அவர்களின் அடிப்படை பண்புகளை மாற்றிக் கொள்ளவில்லை. மேலும் கொடூரமான முறையிலான ஆட்சிக்கு அதாவது பாசிசத்தை கட்டியமைக்கும் முறைக்குத் தான் மாறி இருக்கிறார் கள். அவர்களின் பொருளாதார நிலைமைகளும் அளவு ரீதியாக பிரமாண்டமாக வளர்ந்திருக்கிறார்கள் என்பதை முதலாளித்துவ புள்ளிவிவரங்களிலிருந்து லெனின் செய்தது போல் ஆய்வு செய்து இப்போதும் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினது கோட்பாடுகள் பொருந்தும் என்பதை நாம் நிருபிக்க வேண்டியது நமது கடமையாகும். ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான முரண்பாட்டை அவர்கள் எப்படி கையாளு கின்றார்கள் என்பது பற்றிய ஆய்வு முதன்மையாகும். அதனை தெரிந்துகொள்வதன் மூலமே நமது போர்த்தந்திர திட்டத்தை நாம் வகுக்க முடியும்.

உலகம் முழுவதிலும் ஏகாதிபத்திய மற்றும் ஏகாதிபத்திய சார்பு ஆட்சியாளர்களின் அநியாங்களை எதிர்த்துப் போராடும் உழைக்கும் மக்களையும் கம்யூனிஸ்டு களையும்கைதுசெய்வதும், அவர்களின் கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்த மறுத்து ஒடுக்குவதும்,எஞ்சியிருக்கும் அற்ப சொற்ப சட்டப்பூர்வ வாய்ப்புகளை மறுப்பதும் சமூக - அமைதிவாதிகளது கருத்தோட்டங் களும் "உலக ஜனநாயகம்" பற்றிய நம்பிக்கைகளும் இந்த ஏகாதிபத்தியக் காலகட்டத்தில் பொய்யா கிவிட்டது என்கிறார் லெனின்.

லெனினது கூற்று எவ்வளவு உண்மையானது என்பதை பிரிட்டீஷார் இந்தியாவை விட்டு வெளியேறிய பின்பு ஆட்சிக்கு வந்தவர்களின் கடந்தகால ஆட்சியின் நடைமுறையை நாம் பார்த்தே புரிந்துகொள்ளலாம். தற்போதைய மோடியின் ஆட்சி தெளிவாகவே இங்கே பெயரளவிலான ஜனநாயகத்தையும் ஒழித்துக்கட்டும் நடவடிக்கையைப் பார்க்கலாம்.

ஏகாதிபத்தியம் என்றாலே ஜனநாயக மறுப்புதான் என்ற லெனினது கோட்பாடு இன்றும் உண்மையாக இருப்பதை நாம் காணலாம். ஆகவே மக்களின் ஜனநாயக உரிமை களுக்காகப் பாடுபடுவது நமது கடமையாகும். 1914-1918 ஆம் ஆண்டுகளது முதல் உலக யுத்தமானது, ஏகாதிபத்தியவாதிகளது இருபிரிவின ருக்கு இடையில், பிரதேச கைப்பற்றல் களுக்கும்,சூரையாடலுக்குமானகொள்ளைக்கார யுத்தமாகும். அதாவது உலகைப் பாகப்பிரிவினை செய்துகொள்வதற்கும்,காலனிகள், நிதிமூலதனத்தின் "செல்வாக்கு மண்டலங்கள்" முதலியவற்றைப் பங்கீடும் மறுபங்கீடும் செய்துகொள்வதற்கான யுத்தமாகும் என்றார் லெனின். அதேபோலவே இரண்டாவது உலக யுத்தமும் உலகை மறுபங்கீடு செய்துகொள்வதற்கான யுத்தமாகவேநடத்தப்பட்டது. முதல் உலக யுத்தத்தின் விளைவாக ரஷ்யாவில் மக்கள் புரட்சி நடத்தி சோசலிச சோவியத்து அரசு உருவானது. இரண்டாவது உலக யுத்தத்தின் தொடர்ச்சியாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்டு களின் ஆட்சிகள் உருவானது, சீனாவிலும் கம்யூனிஸ்டுகளின்ஆட்சி உருவானது. இந்த அனுபவங்களை தொகுத்த ஏகாதிபத்தியவாதிகள் தங்களுக்கு இடையில் போர் நடத்தக்கூடாது என்று முடிவெடுத்து செயல்படுத்திக் கொண்டிருக் கிறார்கள். ஆனாலும் அவர்களது புதிய காலனிய நாடுகளுக்கு இடையே சண்டையை மூட்டிவிட்டு போர் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். உதாரணமாக இந்தியா- பாக்கிஸ்தான் போர், மற்றும்இந்தியா- சீனப் போர், மற்றும் ஈரான்- ஈராக் போர் போன்றவரற்றை நடத்தினார்கள். பின்புஏகாதிபத்திய வாதிகளின் கூட்டமைப்பான நேட்டோ நாடுகள் ஆப்கான் மற்றும் ஈராக்கின் மீது போர் தொடுத்தார்கள். அப்போதும் ஈராக்கை காப்பற்றுவோம் என்று சொல்லி நேட்டோவுக்கு எதிரான ஏகாதிபத்தியமான ரஷ்ய ஏகாதிபத்தியமானது நேட்டோவுக்கு எதிராக போர் தொடுக்கவில்லை. இங்கே இரண்டு ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையில் போர் நடக்கவில்லை எனினும் செல்வாக்கு மண்டலங்களுகான போரை நேட்டோ நாடுகள் நடத்தி ஆப்கானையும், ஈராக்கையும் கைப்பற்றி அங்கே அவர்களது பொம்மை ஆட்சியை நிறுவி புதியகாலனி ஆதிக்கம் செய்தனர். இன்றும் ஏகாதிபத்திய வாதிகள்செல்வாக்குமண்டலங்களுக் காக போர்களை நடத்துகிறார்கள் என்பதற்கு உதாரணமாகவே இந்தப் போர்கள் நடைபெற்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.தற்போதும் ரஷ்ய ஏகாதிபத்திய வாதிகள் உக்ரேன் மீது போர் தொடுத்துள்ளார்கள். நேட்டோநாடுகள் உக்ரேனுக்கு உதவிகள் செய்வதன் மூலம் ரஷ்யாவை தாக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள் என்றும், ரஷ்யர்களின் பாதுகாப்பு கருதி உக்ரேன் அரசானது நேட்டோவுடனான உறவை துண்டித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே ரஷ்ய ஏகாதிபத்திய வாதிகள் உக்ரேன் மீது போர் நடத்துகிறோம் என்று அவர்கள் நடத்தும் போரை நியாயப்படுத்து கிறார்கள். உக்ரேன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு போர் நடத்துகிறது என்றும் ஆகவே ரஷ்யாவை எதிர்த்துப் போராடும் உக்ரேனியர்களுக்கு ஆயுத உதவி செய்வதை நேட்டோ நாடுகள் நியாயப் படுத்துகின்றனர். எனினும் இரண்டு ஏகாதிபத்திய முகாமும் நேருக்கு நேர் போர் நடத்த தயாரில்லை. அதே வேளையில் உக்ரேனை தங்களது செல்வாக்கின் கீழ் கொண்டுவரவதற்கான முயற்சியையும் இவர்கள் கைவிட வில்லை.

இந்த சூழலை மதிப்பீடு செய்து கம்யூனிஸ்டுகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர் களில் ஒரு பிரிவினர் ரஷ்யர்களின் பக்கத்தில் நியாயம் இருப்பதாக கருதி அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் தலைமை யிலான நேட்டோவை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்று சொல்லி ரஷ்யாவுக்கு மறைமுகமாக ஆதரவை தெரிவிக் கிறார்கள். மற்றொரு பிரிவினர் ரஷ்ய ஏகாதிபத்திய வாதிகள்தான் உக்ரேனை ஆக்கிரமித்து போர் நடத்துகிறார்கள் என்றும் அதனால் உக்ரேன் மக்கள் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் ஆகவே ரஷ்ய ஆக்கிரமிப்புப் போரை நிறுத்த வேண்டியதுதான் உடனடிக் கடமை என்று ரஷ்ய ஏகாதிபத்தியமே போரை உடனடியாக நிறுத்து என்று முழங்குகிறார்கள். அதே வேளையில் நேட்டோ அமைப்பை கலைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.இவ்விரு பிரிவினரும் உக்ரேன் அரசைப் பற்றி விளக்கவில்லை. மேலும் உக்ரேன் மக்கள் என்ன செய்ய வேண்டும், ரஷ்ய மற்றும் அமெரிக்கா, நேட்டோ நாட்டு மக்கள் என்னசெய்ய வேண்டும் என்பதற்கான கல்வி போதனைகளில் இவர்கள் ஈடுபடவில்லை. ஏதோ இவர்கள் ஒரு பலம்வாய்ந்த கட்சியை கட்டிவிட்டது போலும் செயல்தந்திர முழக்கத்தை முன்வைத்து மக்களை செயலுக்கு கொண்டுவர முடியும் என்பது போலவும் செயல்தந்திர முழக்கத்தை முன் வைக்கிறார்கள். தற்போது கொள்கையை உருவாக்கும் நிலையில்தான் கம்யூனிஸ் டுகள் இருக்கிறார்கள் என்ற எதார்த்தத்தை இவர்கள் காண மறுக்கிறார்கள்.உக்ரேன் அரசு அந்த நாட்டு மக்களை பாதுகாப்பதற்காகவா போரிடுகிறது? இல்லை, உக்ரேனிய முதலாளித்துவ அரசானது நேட்டோ நாடுகளின் ஆதிக்கத்திற்காக ரஷ்ய ஆதிக்கத்திற்கு எதிராக போராடு கிறது. ஆனால் உக்ரேனிய மக்களுக்குத் தேவையான அரசு எது? எந்த ஏகாதிபத்தியத்தையும் அடிமைத்தனமாக சாராமல், அனைத்து நாடுகளுடனும் சம அந்தஸ்தோடு உறவு வைத்துக் கொள்ளும் ஒரு சுதந்திரமான அரசுதான் உக்ரேன் மக்களுக்குத் தேவை அதற்குஉக்ரேன் மக்கள் புதிய காலனி ஆதிக்கத்திற்கு எதிராக போராட வேண்டும். அதேபோல் ஏகாதிபத்திய நாடுகளான ரஷ்யா, சீனா, அமெரிக்கா, மற்றும் நேட்டோ நாடுகளைச் சேர்ந்த மக்கள் சொந்தநாட்டு ஏகாதிபத்திய அரசுகள் எந்தவொரு நாட்டின் மீதும் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்று முழக்கமிட்டு அவர்களது நாட்டு அரசுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

யுத்தத்தின் உண்மையான சமூக, அல்லது துல்லியமாகச் சொல்வ தெனில், மெய்யான வர்க்கஇயல்பின் நிரூபனமானது, யுத்தத்தின் ராஜதந்திர வரலாற்றில் அல்ல, போரிட்ட எல்லாநாடுகளிலும் ஆளும் வர்க்கங்களது எதார்த்த நிலையின் பகுத்தாய்வில்தான் இயற்கையாகவே காணக்கிடக்கிறது. இந்த எதார்த்த நிலையை சித்தரிப்பதற்கு உதாரணங் களையோ, தனிப்பட்ட புள்ளி விவரங்களையோ எடுத்துக்கொள்ளக் கூடாது. (சமூக வாழ்வின் நிகழ்வுகள் மிதமிஞ்சி சிக்கல் வாய்ந்தனவாய் இருப்பதன் காரணமாக உதாரணங்களையோ தனிப்பட்ட புள்ளி விவரங்களையோ எத்தனை வேண்டுமானாலும் தேர்வு செய்து எந்த வரையறுப்பையும் நிரூபிப்பது எப்போதும் சாத்தியமே); போரிட்ட எல்லா நாடுகளின், அனைத்து உலகின் பொருளாதார வாழ்வினது அடிப்படைகள் சம்பந்தப்பட்ட எல்லாப் புள்ளிவிவரங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். என்றார் லெனின். யுத்தத்தை நடத்தும் நாடுகளின் ஆட்சியாளர்களின் ராஜதந்திர நடவடிக்கையை வைத்துஅவர்களின் வர்க்க இயல்பை நாம் எடை போடக்கூடாது என்கிறார் லெனின். இதற்கு மாறாகஅவர்களின் எதார்த்த நிலைகளை நாம் பகுத்தாய்வு செய்துதான் முடிவுக்கு வரவேண்டும் ஏனென்றால் சமூக வாழ்வானது மிகவும் சிக்கல்வாய்ந்ததாக இருப்பதால் எந்த ஒரு உதாரணத்தை

வைத்தோ, தனிப்பட்ட புள்ளி விவரங்களை வைத்தோ நாம் பல்வேறான முடிவுகளுக்கு வர இயலும். ஆகவே எல்லா நாடுகளின் மற்றும் உலகின் பொருளாதார வாழ்வின் அடிப்படைகள்சம்பந்தப்பட்ட எல்லாப் புள்ளிவிவரங்களையும் எடுத்துக்கொண்டு நாம் ஆய்வு செய்து நாம்முடிவிற்கு வரவேண்டும் என்பதே லெனினது வழிகாட்டலாகும். இதனை நாம் சாதிப்பதற்கு கம்யூனிஸ்டு கட்சியானது பொருளாதார புள்ளிவிவரங்களை சேகரிப்பதற்கும், அதனை ஆய்வு செய்து முடிவுகளை கட்சிக்கு கொடுப்பதற்கும் கம்யூனிசத்தின் மீது பற்றுகொண்ட பொருளாதார வல்லுனர்கள் குழுவை உருவாக்க வேண்டும். லெனின் காலத்தில் இந்த ஆய்வை லெனின் செய்தார், ஆனால் தற்போது இந்தப் பணியை செய்வதற்கு ஒரு குழு தேவைப்படுகிறது.

கம்யூனிஸ்டு கட்சி நடத்தும் பத்திரிக்கைக்கு ஒரு ஆசிரியர் குழு இருப்பதைப் போல பொருளாதாரத்தை ஆய்வு செய்வதற்கு நமக்கு ஒரு குழு தேவையாகும்.

ரயில் பாதைகள்தான் நிலக்கரி, இரும்பு, எஃகு ஆகிய மிக முக்கிய முதலாளித்துவ தொழில்களின் ஒட்டுமொத்தமாகும்; உலகவாணிபத்தின், முதலாளித்துவ ஜனநாயக நாகரித்தின் வளர்ச்சி யானது ஒட்டுமொத்தமும் மிகவும் எடுப்பானகளையோ தனிப்பட்ட புள்ளி விவரங்களையோ எத்தனை வேண்டுமானாலும் தேர்வு செய்து எந்த வரையறுப்பையும் நிரூபிப்பது எப்போதும் சாத்தியமே); போரிட்ட எல்லா நாடுகளின், அனைத்து உலகின் பொருளாதார வாழ்வினது அடிப்படைகள் சம்பந்தப்பட்ட எல்லாப் புள்ளிவிவரங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். என்றார் லெனின். யுத்தத்தை நடத்தும் நாடுகளின் ஆட்சியாளர்களின் ராஜதந்திர நடவடிக்கையை வைத்துஅவர்களின் வர்க்க இயல்பை நாம் எடை போடக்கூடாது என்கிறார் லெனின். இதற்கு மாறாகஅவர்களின் எதார்த்த நிலைகளை நாம் பகுத்தாய்வு செய்துதான் முடிவுக்கு வரவேண்டும் ஏனென்றால் சமூக வாழ்வானது மிகவும் சிக்கல்வாய்ந்ததாக இருப்பதால் எந்த ஒரு உதாரணத்தை

வைத்தோ, தனிப்பட்ட புள்ளி விவரங்களை வைத்தோ நாம் பல்வேறான முடிவுகளுக்கு வர இயலும். ஆகவே எல்லா நாடுகளின் மற்றும் உலகின் பொருளாதார வாழ்வின் அடிப்படைகள்சம்பந்தப்பட்ட எல்லாப் புள்ளிவிவரங்களையும் எடுத்துக்கொண்டு நாம் ஆய்வு செய்து நாம்முடிவிற்கு வரவேண்டும் என்பதே லெனினது வழிகாட்டலாகும். இதனை நாம் சாதிப்பதற்கு கம்யூனிஸ்டு கட்சியானது பொருளாதார புள்ளிவிவரங்களை சேகரிப்பதற்கும், அதனை ஆய்வு செய்து முடிவுகளை கட்சிக்கு கொடுப்பதற்கும் கம்யூனிசத்தின் மீது பற்றுகொண்ட பொருளாதார வல்லுனர்கள் குழுவை உருவாக்க வேண்டும். லெனின் காலத்தில் இந்த ஆய்வை லெனின் செய்தார், ஆனால் தற்போது இந்தப் பணியை செய்வதற்கு ஒரு குழு தேவைப்படுகிறது.

கம்யூனிஸ்டு கட்சி நடத்தும் பத்திரிக்கைக்கு ஒரு ஆசிரியர் குழு இருப்பதைப் போல பொருளாதாரத்தை ஆய்வு செய்வதற்கு நமக்கு ஒரு குழு தேவையாகும்.

ரயில் பாதைகள்தான் நிலக்கரி, இரும்பு, எஃகு ஆகிய மிக முக்கிய முதலாளித்துவ தொழில்களின் ஒட்டுமொத்தமாகும்; உலகவாணிபத்தின், முதலாளித்துவ ஜனநாயக நாகரித்தின் வளர்ச்சி யானது ஒட்டுமொத்தமும் மிகவும் எடுப்பான களையோ தனிப்பட்ட புள்ளி விவரங்களையோ எத்தனை வேண்டுமானாலும் தேர்வு செய்து எந்த வரையறுப்பையும் நிரூபிப்பது எப்போதும் சாத்தியமே); போரிட்ட எல்லா நாடுகளின், அனைத்து உலகின் பொருளாதார வாழ்வினது அடிப்படைகள் சம்பந்தப்பட்ட எல்லாப் புள்ளிவிவரங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். என்றார் லெனின். யுத்தத்தை நடத்தும் நாடுகளின் ஆட்சியாளர்களின் ராஜதந்திர நடவடிக்கையை வைத்துஅவர்களின் வர்க்க இயல்பை நாம் எடை போடக்கூடாது என்கிறார் லெனின். இதற்கு மாறாகஅவர்களின் எதார்த்த நிலைகளை நாம் பகுத்தாய்வு செய்துதான் முடிவுக்கு வரவேண்டும் ஏனென்றால் சமூக வாழ்வானது மிகவும் சிக்கல்வாய்ந்ததாக இருப்பதால் எந்த ஒரு உதாரணத்தை

வைத்தோ, தனிப்பட்ட புள்ளி விவரங்களை வைத்தோ நாம் பல்வேறான முடிவுகளுக்கு வர இயலும். ஆகவே எல்லா நாடுகளின் மற்றும் உலகின் பொருளாதார வாழ்வின் அடிப்படைகள்சம்பந்தப்பட்ட எல்லாப் புள்ளிவிவரங்களையும் எடுத்துக்கொண்டு நாம் ஆய்வு செய்து நாம்முடிவிற்கு வரவேண்டும் என்பதே லெனினது வழிகாட்டலாகும். இதனை நாம் சாதிப்பதற்கு கம்யூனிஸ்டு கட்சியானது பொருளாதார புள்ளிவிவரங்களை சேகரிப்பதற்கும், அதனை ஆய்வு செய்து முடிவுகளை கட்சிக்கு கொடுப்பதற்கும் கம்யூனிசத்தின் மீது பற்றுகொண்ட பொருளாதார வல்லுனர்கள் குழுவை உருவாக்க வேண்டும். லெனின் காலத்தில் இந்த ஆய்வை லெனின் செய்தார், ஆனால் தற்போது இந்தப் பணியை செய்வதற்கு ஒரு குழு தேவைப்படுகிறது.

கம்யூனிஸ்டு கட்சி நடத்தும் பத்திரிக்கைக்கு ஒரு ஆசிரியர் குழு இருப்பதைப் போல பொருளாதாரத்தை ஆய்வு செய்வதற்கு நமக்கு ஒரு குழு தேவையாகும்.

ரயில் பாதைகள்தான் நிலக்கரி, இரும்பு, எஃகு ஆகிய மிக முக்கிய முதலாளித்துவ தொழில்களின் ஒட்டுமொத்தமாகும்; உலகவாணிபத்தின், முதலாளித்துவ ஜனநாயக நாகரித்தின் வளர்ச்சி யானது ஒட்டுமொத்தமும் மிகவும் எடுப்பானகுறியீடுமாகும்; ரயில் பாதைகள் பெருந்தொழில்களுடனும் ஏகபோகங் களுடனும் சிண்டிகேட்டு களுடனும் கார்ட்டல்களுடனும் டிரஸ்டுகளுடனும் நிதியாதிக்க கும்பல்களுடனும் எவ்வாறு இணைப்பு கொண்டுள்ளது என்பதை ஏகாதிபத் தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற நூலில் லெனின் விளக்கியுள்ளார். ரயில் பாதைகளின் ஏற்றத்தாழ்வான விநியோகம், அவற்றின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி - இது உலகு தழுவிய அளவில் தற்கால ஏகபோக முதலாளித்துவத்தின் தொகுப்புரையாக அமைகிறது எனலாம்.

இத்தகைய பொருளாதார அமைப்பில், உற்பத்திச் சாதனங்களில் தனியார் உடமை நீடிக்கும்வரைஏகாதிபத்திய யுத்தங்கள் கண்டிப்பாகத் தவிர்க்க முடியாதவை என்று லெனின் சொன்னார்.

ரயில் பாதைகளின் வளர்ச்சி மற்றும் நிலக்கரி, இரும்பு, எஃகு தொழில்கள், உலக வாணிபம்,ஆகிய அனைத்தும் சேர்ந்து முதலாளித்துவ - ஜனநாயக நாகரீகத்தின் குறியீடாக கருதப்ப டுகிறது.

ரயில் பாதையானது ஏகபோக நிறுவனங்களோடு இணைக்கப்பட்டு அவர்களது வாணிபத்திற்குசேவை செய்கிறது. இதன் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியானது ஏகாதிபத்தியத்தின் விதியாகஇருக்கிறது. இத்தகைய பொருளாதார அமைப்பில் உற்பத்திச் சாதனங்களில் தனியார் உடமை நீடிக்கும்வரை ஏகாதிபத்திய முதலாளிகளால் யுத்தம் நடத்துவதை தவிர்க்க முடியாது என்பதே யுத்தங்கள் பற்றிய லெனினியக் கருத்தாகும். இன்றும் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியும் ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களுக்கே முதன்மையாக சேவை செய்வதை நாம் காணலாம். யுத்தங்கள் நவீனமயமாகி யிருப்பதற்கும் அதனால் மக்களுக்கு மிகப்பெரிய சேதங்களை ஏற்படுத்து வதற்கும் இந்த ஏகாதிபத்திய முதலாளிகளே காரணமாகும். இந்த ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு மக்களின் மீது அக்கரை ஏதும் இல்லை. மக்களில் எவ்வளவு பேர் செத்தாலும் இவர்களுக்குகவலை இல்லை, இவர்களது லட்சியமே மேலும் மேலும் சொத்துக்களை பெருக்குவது தவிர வேறு ஏதும் இல்லை.ஆகவே இந்த ஏகாதிபத்திய முதலாளிகளை வீழ்த்தி உழைக்கும் மக்களுக்கான அரசை படைக்கும்வரை உலகில் போர்கள் இல்லாத சமாதானத்தை நாம் படைக்க முடியாது. இதுதான் ஏகாதிபத்திய காலகட்டம் பற்றிய லெனினது வழிகாட்டலாகும்.

ரயில் பாதைகள் போடுவது ஒரு சாதரணமான, இயற்கையான, ஜனநாயக, கலாச்சார நாகரிக வளர்ச்சிக்குரிய முயற்சியாகவே தோன்றுகிறது; முதலாளித்துவ அடிமை வாழ்வைக் கவர்ச்சியான வண்ணங்களில் தீட்டிக் காட்டுவதற்காகக் காசு கொடுத்து அமர்த்தப்பட்டிருக்கும் முதலாளித்துவப் பேராசிரியர்களின் கருத்துப்படியும், குட்டி முதலாளித்துவ அற்பர்களின் கருத்துப் படியும் அது இவ்வாறேதான் இருக்கிறது. ஆனால் உண்மையில், ஆயிரக்கணக்கான வெவ்வேறு குறுக்குப் பின்னல்களைக் கொண்டு உற்பத்திச் சாதனங்களிலான தனியார் உடமையுடன் இந்த முயற்சி களைப் பிணைத்துக் காட்டுகின்ற முதலாளித்துவ இழைகள், ஆயிரம்கோடி மக்களை (காலனிகளிலும், அரைக் காலனிகளிலும்) அதாவது ஏகாதிபத்திய சார்பு நாடுகளில் வாழும்பாதிக்கும் மேற்பட்ட உலக மக்கள் தொகையினரையும் "நாகரீக" நாடுகளில் கூலி அடிமைகளாக இருப்போரையும் நசுக்குவதற்கான கருவியாக ரயில் பாதை நிர்மானத்தை மாற்றிவிட்டன என்றார் லெனின்.லெனினது கண்ணோட்டத்திலிருந்து தற்போதைய ரயில் பாதைகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது கணினி தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவை நாகரீக சமூகத்தை வளர்ப்பதற்கான முயற்சிகள் போல் தோன்றுகிறது. இத்தகைய தொழில்நுட்ப வளர்சிகளை எல்லாம் சமூகத்தின் வளர்ச்சியாக, முதலாளிகளிடம் காசுக்கு விலைபோன முதலாளித்துவப் பேராசிரியர் களும், குட்டிமுதலாளித்துவ அற்ப்பர்களும், கம்யூனிச அமைப்பிற்குள் ஊடுருவி ஏகாதிபத்திய முதலாளிகளிடம் விலை போன குட்டிமுதலாளித்துவகுறுங்குழுவாதி களும் ஏகாதிபத்தி யத்திற்கு வர்ணம் தீட்டி அழகுபடுத்தி ஏகாதிபத்தியமானது முற்போக்கானது என்று காட்டுவதற்கு முயற்சி செய்கிறார்கள். ஆனால் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் பயனடைந் தவர்கள் இந்த ஏகாதிபத்திய முதலாளிகளும் அவர்களை சார்ந்து வாழ்பவர்களுமாகிய மிகச் சிலர்தான் பயனடைந்தார்கள். இந்த வளர்ச்சியால் பெரும்பான்மை மக்களுக்கு எவ்விதமான பயனும் கிடைக்கவில்லை. மாறாக பெரும்பான்மையான மக்கள் வேலை யின்றி வாழ வழியின்றி வறுமை யிலும் பட்டினியாலும்செத்துக்கொண்டுஇருக்கின்றனர். இந்த ஏகாதிபத்திய முதலாளி களால் பல வகைகளிலும் முதலாளித்துவ தனிவுடமை முறையானது இணைக்கப் பட்டு உலகம் முழுவதிலும் இவர்களின் கட்டுப்பாட்டிலும், இவர்களுக்குச் சொந்தமாக உள்ள ஏராளமான உற்பத்திச் சாதனங்கள் என்று சொல்லப்படும் தொழில் நிறுவனங்களின் மூலம் உலகம் முழுவதிலும் காலனி, (தற்போது புதிய காலனிய) நாடுகளிலுள்ள கோடிக் கணக்கான மக்களை சுரண்டி அவர்களின் வாழ்வை நசுக்கிக்கொண்டு இருக்கிறார் கள். மேலும் இவர்களது நாடுகளிலுள்ள பல கோடிக்கனக்கான கூலி அடிமைகளின் வாழ்வையும் நாசப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இத்தகையமுதலாளிகள் முற்போக்கானவர் களா? இல்லை இவர்கள் மிகவும் பிற்போக்கானவர்களே என்பது எதார்த்த உண்மையாகும். இவர்களை முற்போக்கு என்று கூறுபவர்கள் உண்மை யில் லெனினது மொழியில் சொல்ல வேண்டுமானால்,முதலாளிகளிடம் காசுக்கு விலைபோன முதலாளித்துவப் பேராசிரியர் கள் மற்றும் குட்டி முதலாளித்துவ அற்பர்கள் ஆவார்கள். ஆகவே கம்யூனிஸ்டுகள் இந்தகைய முதலாளித்துவ பேராசிரியர் களிடமும், குட்டிமுதலாளித்துவ அற்பர் களிடமும் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். சிறுவுடமையாளர்களது உழைப்பை அடிப்படையாகக் கொண்ட தனியார் உடமை, தடையில்லாப் போட்டி, ஜனநாயகம் - தொழிலாளிகளையும் விவசாயிகளையும்ஏமாற்றுவதற்காக முதலாளிகளும் அவர்களது பத்திரிக்கைகளும் கையாளு கின்ற இந்தக் கவர்ச்சித் தொடர்கள்எல்லாம் மிகப் பழங்காலத் துக்குரியவை ஆகிவிட்டன. உலகில் மிகப் பெரும் பகுதி மக்களைஒருசில "முன்னேறிய" நாடுகள் காலனி ஆதிக்க ஒடுக்குமுறைக்கும் நிதித்துறை நசுக்கலுக்கும்உள்ளாக்கும் உலக அமைப்பாக முதலாளித்துவம் வளர்ந்து விட்டது. இந்தக் "கொள்ளையை "அங்கம் அனைத்தும் ஆயுதம் தரித்த வலுமிக்க இரண்டு அல்லது மூன்று கொள்ளைக்காரர்கள்(அமெரிக்கா, கிரேட் பிரிட்டன், ஜப்பான்) தமக்கிடையே பங்கிட்டுக் கொள்கிறார்கள்; இவர்கள் தமது கொள்ளையைப் பாகப்பிரிவினை செய்து கொள்வதற்காக நடத்தும் தமது யுத்தத்தினுள் அனைத்து உலகையும் இழுத்துவிடுகிறார்கள். என்றார் லெனின்.

ஆரம்பகால முதலாளித்துவ அமைப்பை அதாவது தடையில்லாப் போட்டி, ஜனநாயகம் என்பதைப் பற்றி முதலாளித்துவவாதிகள் அவர்களது பத்திரிக்கைகளின் மூலம் கவர்ச்சியாக விளம்பரம் செய்த காலம் எல்லாம் கடந்துபோய்விட்டது. லெனின் வாழ்ந்த காலத்திலேயே ஒருசில முன்னேறிய நாடுகள் பின்தங்கிய நாடுகளை அடிமைப்படுத்தி காலனிகளாக ஒடுக்கிக் கொண்டிருக்கும் நிலை உலகில் ஏற்பட்டுவிட்டது, இதற்காக முன்னேறிய நாடுகள் நடத்தும் போரினால் உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பாதிக்கப் படுகிறார்கள். லெனின் காலத்திலிருந்த இந்த நிலையானது தற்போது வளர்ந்து மிகவும் கொடூரமான நிலை ஏற்பட்டுள்ளது. முன்னேறிய நாட்டு அரசுகள் முன்புபோல் பின்தங்கிய நாடுகளை கைப்பற்றி நேரடியாக ஆளவில்லை, என்றாலும் பின்தங்கிய நாடுகளில் தங்களுக்கு வேண்டியவர்களை பொம்மைகளாக வைத்துமறைமுகமாக ஆண்டுகொண்டு இருக்கிறார்கள். உண்மையில் ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களுக்கு தங்களை மறைமுகமாக இவர்கள்தான் ஆளுகின்றார்கள் என்ற உண்மையை உணரவிடாமல் தந்திரமாக, சதித்தனமாக இவர்கள் ஆட்சி செய்கிறார்கள். அதன் விளைவாக மறைமுகமானகாலனி நாடுகளில் வாழும்மக்கள் மிகவும் கொடூரமாக சுரண்டப்படுகிறார்கள். அவர்களின்வாழ்வு லெனின் காலத்தில் இருந்ததைவிட மிகமிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்த ஒடுக்குமுறையை சாதிப்பதற்கு முன்னேறி நாடுகளும் அவர்களின் சார்பு நாடுகளும் ஆயுதங்களைமேலும் மேலும் குவித்துக்கொண்டு இருக்கிறார்கள். தேசப்பற்றின் அடிப்படையில் தேசத்தைப் பாதுகாபதற்காகவே இராணுவத்தைப் பலப்படுத்துவதாக பொய் சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்………….. தொடரும்….. தேன்மொழி

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்