இலக்கு எல்லா இணைய இதழ்களும் ஓரிடத்தில்

 


இலக்கு இணைய இதழ் 01 ஜீன் 2022 அன்று தொடங்கினோம். இதுவரை  7 இணைய இதழ்களை வெளியிட்டுள்ளோம். 

இலக்கு எல்லா இணைய இதழ்களும் ஓரிடத்தில் தேவைப்படும் தோழர்கள் அந்த குறிப்பிட்ட இதழ் எண்ணை தொட்டால் பிடிஎப் வடிவில் நுல் பதிவிறக்கம் ஆகிவிடும்  தோழர்களே.

இதுவரை வெளியிட்ட "இலக்கு இணைய இதழ்கள்" அனைத்தும் ஓர்யிடத்தில் தொழர்கள் கீழ்காணும் இதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து வாசித்து கருத்துரையுங்கள். எங்களின் பணி சரியானவைதான இன்னும் செழுமை படுத்த வேண்டுமா என்பதனை உங்களின் கருத்துகள் மூலம் அறிந்துக் கொள்வதோடு சரியான வற்றை கொண்டு வர முயற்சிப்போம் தோழர்களே.


இலக்கு இணைய இதழ்-1

இலக்கு இணைய இதழ் -2

இலக்கு இணைய இதழ் -3

இலக்கு இணைய இதழ் - 4

இலக்கு இணைய இதழ் - 5

இலக்கு இணைய இதழ் - 6

இலக்கு இணைய இதழ் - 7

இலக்கு இணைய இதழின்  நோக்கம்:- 

இதில் முதற்கண் புரட்சிகர அறிவு ஜீவிகளோடு விவாதிப்பதும்,சரியான மார்க்சிய அறிவியலை எல்லோரும் ஏற்க்கும் வகையில் புரிய வைப்பதுமேயாகும்.

"இலக்கு” இதழில் தங்களது விமர்சனங்களை விவாதங்களை மார்க்சிய- லெனினிய முறையில் வைக்கும் படி அழைக்கும் அதே நேரத்தில் தங்களின் நிலையை  சரிப்படுத்துவதோடு மற்ற தோழர்களின் அறிவு மேலும் செழுமைப்படுத்தப் படுவதுடன் புரட்சிகர சக்திகளின் மீதான விமர்சனத்தின் அவசியம் தவறுகளில்  இருந்து விடுபட்டு மீண்டும் தவறுகள் வராத முறையில் இருப்பதற்காகவே  ஆகும்அதாவது “மருத்துவர் ஒருவர் நோய்க்கு சிகிச்சை அளித்தல் என்பது;  நோயாளியைக் காப்பாற்றுவதே அன்றி அவர் இறப்பதற்கு சிகிச்சை அளிப்பதல்ல”.

பாட்டாளி வர்க்கத்தின் அரசியல்பொருளாதாரம்தத்துவம் ஆகிய துறைகளில்  மார்க்சிய லெனினிய வாதிகளை வளர்க்க முயற்சிப்போம்சமூக நிகழ்வுகளையும் மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் விவாதித்து சரியான வழிமுறையை  முன்வைத்து பேசுவோம்.

விவாதிக்க வாருங்கள் சரியான கோணத்தில் நீங்களும் வாதித்தால் எமது தவறுகளை களைந்து சரியானவற்றை புரிந்துக் கொள்ள உதவும் என்பதே எமது வாதம் தோழர்களே.

விமர்சனம் என்பது நோயை குணப்படுத்துவதாக இருக்கவேண்டுமே ஒழிய நோயாளியை கொள்வதாக இருக்கக்கூடாது என்றும் விமர்சனம் சுயவிமர்சனம் மூலம் கட்சியில் உள்ள தவறுகளை களைய போராட வேண்டும் என்றும் அடிக்கடி பேசப்படுகிறது. ஆனால் எவ்வளவு தூரம் உணரப்பட்டுள்ளது ? தவறிழைக்கும் தோழர்கள் விஷயத்தில் அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்கள் தவறுகளை திருத்திக்கொள்ள உதவி செய்வதில் முதன்மையானது,  பெரும் தவறுகளை இழைத்தபின்னும் வழிகாட்டலை ஏற்க மறுத்து திருத்திக் கொள்ளாதவர்கள் விஷயத்திலேயே அம்பலப்படுத்தும் விதத்திலான போராட்ட முறை கைக்கொள்ள வேண்டும் இத்தகைய பொறுமையின்றி எடுத்த எடுப்பிலே ஒருவரை "சந்தர்ப்பவாதி திரிப்பு வாதி எதிர் புரட்சியாளர்" என முத்திரை குத்தி விடுவதும் போராட அறைகூவல் விடுவதும் குறுங்குழுவாத போக்கின் விளைவேயாகும் . விமர்சனம் சுய விமர்சனம்   மூலம் மாற்றி அமைப்பதற்க்கான வழிமுறை க்கு  எதிரானதாகும் .

விமர்சனம் சுயவிமர்சனம் என்பது என்ன? நாம் வழக்கமாக விமர்சனம் சுய விமர்சனம் என்று கருதி செய்வது தவறுகளை சுட்டிக் காட்டுவதும் தவறுகளை ஏற்றுக் கொள்வது மாக உள்ளன உண்மையில் விமர்சனம் என்பது ஒரு குறிப்பிட்ட தவறு ஏன் நிகழ்ந்தது அதற்கான தத்துவார்த்த வர்க்க வர்க்க பின்னனி என்ன அதைக் களைவதற்கான சிந்தனை செயல்முறை என்ன என்பதை உள்ளடக்கி ஆக்க பூர்வமானதாக இருக்க வேண்டும் .

ஒரு குறிப்பிட்ட தவறை எதிர்த்துப் போரிடும் போது அத்தகைய தவறு வருங்காலத்தில் நிகழாமல் அல்லது பாதிக்காமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு நாம் எவ்வாறு நமது வேலை முறையை மாற்றிக் கொள்வது என்பதும் சேர்த்து உணரப்பட வேண்டும். ஆக பாட்டாளி வர்க்கம் பிறரை இடையறாது மாற்றியமைத்துக் கொண்டே தன்னையும் மாற்றி அமைத்துக் கொள்கிறது .விமர்சனம் சுயவிமர்சனம் இரண்டில் ஒவ்வொரு நேரங்களில் ஒவ்வொன்றும் முதன்மையாக இருக்கும் எனினும் கட்சி என்ற விதத்தில் புரட்சியின் அக சக்தி என்ற விதத்தில் சுயவிமர்சனம் முதன்மையானது .இதுவே மாற்றி அமைப்பது பற்றிய உட்கட்சி இயங்கியல் அணுகுமுறை. 

ஆக இங்கு உள்ள நிலையைப் பற்றி இயங்கியல் அணுகுமுறையை பார்ப்போம்.

1).கட்சியின் உள் முரண்பாடுகளும் மாற்றுக்கருத்துக்கள் அல்லது வழிகளும் நிலவும் ; அவை ஒன்றுபட்டு நிற்கிற நேரத்தில் தம்முள் போராடிக் கொண்டிக்கொண்டுமிருக்கும் என்ற பொருள் முதல்வாத இயங்கியல் கண்ணோட்டத்தில் அங்கீகரிக்க மறுக்கின்ற தூய கட்சி வாதம் பிளவுகளும் அழிவுவாதத்திற்கும் வழிவகுக்கின்றது.

2) . ஒரு அரசியல் வழி அல்லது அமைப்பு வழியில் நின்று கொண்டு தவறான சிந்தனை மற்றும் செயல்முறைகளை எதிர்த்து போரிடுவதற்கு உட்படுத்தி தனிநபரின் நல்ல அல்லது தவறான பண்புகளை அணுகுவதற்கும் பதில் தனிநபரின் பண்புகளில் இருந்து உட்கட்சிப் போராட்டத்தை தொடங்குவது கோஷ்டி வாதத்தையும் அதிகார வர்க்கப் போக்கையும் தோற்றுவிக்கிறது.

3). சுய விமர்சனம், விமர்சனம் மூலம் தன்னைத் திருத்திக் கொண்டு பிறரையும் திருத்துவதன் மூலம் கட்சியை இடையறாது மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கின்ற நிகழ்ச்சி போக்கே கட்சியின் வளர்ச்சி விதியாகும் . 

மேல் கூறிய மூன்று விதிகளும் எந்த ஒரு பொருள் அல்லது நிகழ்வின் எந்த ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்திலும் நிலவுகின்ற முரண்பாட்டின் இருத்தல் கையாளுதல் தீர்வு என்ற மூன்று நிலைகள் பற்றி வையாகும் .

இத்தகைய பாட்டாளி வர்க்க அரசியல் மற்றும் அமைப்பு வழியில்லாததால் தான் பல்வேறு மாலெ குழுகள் பல துண்டுகளாக உடைந்தது அதேபோல இத்தகைய தவறான போக்கை வெவ்வேறு அளவில் எதிர்த்தாலும் கூட சரியான பாட்டாளிவர்க்க வழியில் போராட தெரியாததுதான் பிளவுகளை தடுத்து நிறுத்த முடியவில்லை .

ஐக்கியம் ஐக்கியம்  என உரக்கக் கூறிக் கொண்டே தனது  தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல் பிற குழுக்களை ஜீரணிக்கும் முயற்சிகளாக அமைந்தன. 

உட்கட்சி முரண்பாடுகளை எவ்வாறு இயங்கியல் நோக்கில் தீர்ப்பது என்ற விஷயம் இவ்வாறு உள்ளது. கட்சியின் இயங்கியல் பார்வை பற்றிப் பேசும்போது இதே அளவு முக்கியத்துவம் உடைய வேறு இரு விஷயங்கள் உள்ளன. ஒன்று கட்சிக்கு வெளியில் நிகழும் மாற்றங்கள் பற்றியது மற்றது கட்சிக்குள் நிகழும் மாற்றங்கள் பற்றியது .

புறவுலகானது மனிதர்களது விருப்பத்திற்கப்பாற்பட்டு மாறிக்கொண்டே இருக்கிறது. அடிப்படை சமூக மாற்றமானது புரட்சிக்கு தலைமை தாங்க முன்வரும் கட்சி அடிப்படை சமூக அமைப்பு மாறாமல் இருக்கும் போது சூழ்நிலைகள் மாறி வருவதை கணக்கில் எடுத்துக்கொண்டு அவ்வப்போதைய குறிப்பான கடமையை நிர்ணயித்துக் கொள்ளவேண்டும் பொருளானது எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கின்றது என்ற விதத்தில் புரிந்து கொள்வதே சரியான பொருள் முதல் வாத கண்ணோட்டமாகும். 

என்றால் இவர்கள் பார்வையற்ற மாறா நிலையில் இருந்து பொருளை பரிசீலிக்கும் போது நாம் புற பொருளையும் சரியாக புரிந்து கொள்வதுடன் புறவய விதிகளிருந்தல்லாமல் நமது அகவய விருப்பங்களில் இருந்து கட்சியை கட்டுவது முதல் கடமைகளை வகுத்துக் கொள்வது வரை நடக்கின்றன இது தத்துவத் துறையில் கருத்துமுதல் வாதத்திற்கு இடம் கொடுக்கிறது .

கட்சி ஒன்றுபடுதல் சரியான அணுகுமுறை பிரிவிற்கான காரணங்கள். (சிறப்பு கூட்ட அறிக்கை 1988. நூல் பக்கம் 46-48).

கடந்த கால படிப்பினைகள் என்ன சொல்கின்றது  யுத்த தந்திர கோட்பாடுகளையும் செயல் தந்திர கோட்பாடுகளையும் கிரகித்து புரட்சியாளர்கள் மத்தியில் சிந்தனை ரீதியாக ஊட்டவில்லை, இதனால் புரட்சியாளர்கள் தன்னியல்பு வகைப்பட்ட சிந்தனையிலிருந்து கோட்பாட்டு ரீதியில் முறித்துக் கொள்ளவில்லை . (அதாவது முன்னர் இருந்த கட்சியின் சித்தாந்தத்தை சொல்லுகிறார்) . பின்னர் தலைமை பொருளாதார வாதத்திற்கு மாற்றாக பயங்கரவாதத்தையும் இடது சகாசவாதத்தையும்  ஏற்படுத்தியது முடிந்தது .தத்துவ அரசியல் பணிகளின் முக்கியத்துவத்தை குறைத்து இயக்கத்தில் சித்தாந்த ஒற்றுமையை பலவீனப்படுத்தி விடுகிறது.

‌தன்னியல்பான நடைமுறைக்கு ஏற்ப அமைப்பு துறையில் கற்றுக்குட்டி தனமும் அதிகாரவர்க்க மனப்பாங்கும் இடம்பெற்றன .

‌ஆக தத்துவ பணியாற்றிய விதம் மார்க்சிய லெனினிய கோட்பாடுகளை கிரகித்துக் கொள்ளாமை, இடதுசாரி சாகாச வாதத்தில் தன் இயல்பு வழி  இவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்சி கட்டுதல். இக்காரணங்களால் புரட்சியாளர்களை ஒன்றுபடுத்த இயலாததுடன் சிதறுண்ட இயக்கத்தையும் உருவாக்கியது. எனவே தவறான சித்தாந்தங்களும் தாராளமாக கட்சியில் மேலிருந்து கீழ் வரை நுழைகின்றன. தவறான சித்தாந்தங்களை எதிர்த்து சரியான பாட்டாளி வர்க்க சித்தாந்தங்களுக்குகான போராட்டம் இல்லை. எனவே இந்திய பாட்டாளி வர்க்கம் தனது சித்தாந்த தலைமையை உருவாக்கி கொள்ளவோ வளர்த்துக் கொள்ளவோ இல்லை  . (அதே நூல் பாரா 5, பக்கம் 47). 

‌பிளவுபட்ட குழுக்கள் தன்னியல்பாகவே வெவ்வேறு நடைமுறைகளில் வகுத்துக் கொண்டு தனித்தனியாக பயணிக்கின்றன. சில குழுக்கள் தத்துவத் துறையில் கவனம் செலுத்தி வேலை திட்டத்தில் சில மாற்றங்கள் அடைகின்றன சில மறு சேர்க்கைகளும் பிளவுகளும் நிகழ்கின்றன.

‌சர்வதேச அளவில் சீன ரஷ்ய திரிபுவாதம் மேலோங்கி முதலாளித்துவ மீட்சி யானது புரட்சிகர கட்சியில் பல்வேறு புதிய முரண்பாடுகளை தோற்றிவைத்தது. குழப்பங்கள் விலகள்களும் பிளவுகளும் எங்கும் பாதிக்கப்பட்டுள்ளன. 

‌இவை இந்திய மார்க்சிய லெனினிய குழுக்களை பிளவுபடுத்தி உள்ளது மேலும் சில குழுக்கள் மார்க்சிய நிலைக்கு அப்பால் தள்ளி உள்ளது புரட்சிக்கு எதிர்நிலையிலும் போயுள்ளது.  

ஒற்றுமைக்கு முதல்படி

‌குறுங்குழு வாதத்தைத் தூக்கி எறியாமல்  ஒற்றுமைக்கு சாத்தியமல்ல. அதற்காக குழுக்களை கலைத்து விடுவதனால் குறுங்குழு வாதம் ஒழிந்து விடாது .

‌சர்வதேசம் உள்ளிட்டு தத்துவத் துறை அரசியல் துறை அமைப்புகள் ஆகிய மூன்று துறைகளிலும் தெளிவான எல்லைக்கோட்டை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

‌திரிப்பு வாதமே முதன்மையாக எதிர்க்கப்பட வேண்டும் .இடது தீவிரவாதம் வரட்டு வாதம் அனுபவவாதம் களையப்பட வேண்டும். 

இந்தியாவில் பாட்டாளி வர்க்க கட்சி என எதுவும் இன்றி பாட்டாளிவர்க்க  புரட்சியாளர்கள் ஒன்று அல்லது பல துறைகளிலும் வேறுபட்டு பல்வேறு மையங்களில் தனித்தனியாக அமைப்புகளாக இயங்கி வருவது எதார்த்தம்.

இன்றைய உலகமயமாதல் சூழலிலே மார்க்சியம் தனது ஒட்டுமொத்த வளர்ச்சியின் ஊடே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து முன்னேறிச் செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர்நோக்கி நிற்கின்றது. நமது நாட்டில் அக்கடமைக்குரிய பங்கையும் பங்களிப்பையும் வழங்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு.

இந்திய பொருளாதாரம் -ப. செங்கனல்

 


1948இல் தனியார் துறையில் 265 கோடி ரூபாய் மூலதனம் இருந்தது. இத்தொகை 1965ல் 830 கோடி ஆகி 1967இல் 980 கோடி ஆனது .

முதலீடு இரு வகையானது.

1). புதிய மூலதனம் 40% மட்டுமே வருகிறது

2).லாபத்தை மீண்டும் முதலீடு செய்வது 60% உள்நாட்டு லாபம் மூலதனம் ஆகிறது

1960-64 இல் தோன்றிய 79 புதிய உள்நாட்டாருடன் ஒன்றிணைந்த பிறநாட்டு கம்பெனிகளை மட்டும் ஆராய்ந்த பொழுது 49 கம்பெனிகள் தொழில்நுட்ப உதவி என்ற பெயரில் உள்நாட்டில் பங்கு பெற்று மூலதனமாக்கின. (தொழில் நுட்ப உதவிக்கு மூலதனப் பங்கு வழங்கப்பட்டது ).பிற நாடுகளுடன் ஒன்றிணைந்த கம்பெனிகள் 1,2,3 திட்ட ஆண்டுகளில் முறையே 42 ,100 ,164 ஆக வளர்ந்ததே அன்றி குறையவில்லை. அதாவது 16,36,41 சதவீதமாக உயர்ந்தன. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு இவை எவ்வித துணைபுரிந்தது என்று கூறுவதற்கில்லை.( பொருளாதாரம் வளர்ந்து இருப்பின் பிறநாட்டார் உதவி குறைந்து இருக்கும், ஆனால் நிலைமை அப்படி மாறவில்லை என்பதுதானே உண்மை).

1956 -65 ஆண்டுகளில் தொழில்நுட்ப உதவியுடன் ஒன்றிணைந்த கம்பெனிகள் தொகை : 2524 ( பிரிட்டன் 32% அமெரிக்கா 20% மேற்கு ஜெர்மனி 15% ஜப்பான் 7% ). உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய தேர்மாப்ளாஸ்க், உதட்டு சாம், பல்பொடி, பவுடர் , அழகு சாதனங்கள், உள்ளாடைகள் ஏன் ஐஸ் கிரீம், பிஸ்கட், பேட்டரி மற்றும் தைத்த ஆடைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்காக தொழில்நுட்ப உதவி வெளிநாடுகளிலிருந்து அனுமதிக் கப்பட்டது. இதில் குறிப்பாக வெளிநாட்டு விற்பனை பெயர்களை பயன்படுத்துவதே நோக்கமாக இருந்தது இவற்றோடோ விற்பனை விலை நிர்ணயம் விளம்பரம் யாவையும் வெளிநாட்டவர்களே நேரடியாக நிர்வகித்தனர். ஏனெனில் இந்திய மேட்டுகுடிகளை அவர்களை கவர்ந்திழுக்கும் வண்ணமாக அவ் வர்க்கத்தினருக்காக உருவாகும் பொருட்களாக அவையாக இருந்தது என்றால் மிகையல்ல.

இரண்டாம் திட்ட காலத்தில் வெளிநாட்டார் பெற்ற லாபம் ரூபாய் 165 கோடி அக்காலத்தில் வந்த மூலதனம் ரூபாய் 150 கோடி. மூன்றாம் திட்ட காலத்தில் வெளியேறிய லாபம் ரூபாய் 237 கோடி வந்த மூலதனம் 160 கோடி.

இதனால் தனியார் வெளிநாட்டு உதவி என்பது நாட்டின் லாபத்தை கொள்ளை அடிக்க மட்டுமேதான் நம் நாட்டின் மூலதனம் அதிகரிக்கப் பயன்படவில்லை என்பது கண்கூடாக காணப்படுகிறது.

அரசு பெற்ற வெளிநாட்டு கடனுக்காக ஆண்டுதோறும் வட்டி மட்டும் ரூபாய் 500 கோடி செழுத்திக் கொண்டுள்ளது. இது ஏற்றுமதி வருமானத்தில் 30 சதவீதம் ஆகும்.(1980ல் எழுதப்பட்ட கட்டுரை)*.

இந்தியா இன்று 75 ஆம் ஆண்டு சுதந்திரம் தினம் கொண்டாடுகிறது. இன்றும் கல்வியானது எல்லோருக்கும் மானதாக இல்லை. உயர் கல்வி பெற்றவர்கள் வெளிநாடுகளுக்கு உழைக்க செல்கின்றனர். உள்நாட்டிலோ தொழில் நுட்ப கல்வி பெற்றவர்கள் கூட வேலையின்றி அலைகின்றனர். வெளிநாட்டு தொழில்நுட்பம் இன்னும் வரவேற்கப் படுகிறது; அவை 4G யோ 5G ஆகட்டும், மருத்துவ உபகரண மாகட்டும் இன்னும் இன்றைய அதிநவீன தொழில்துறை சார்ந்த கருவிகளாகட்டும் அவை வெளிநாட்டின் உதவியாக உள்ளது.

உலக மக்கள் தொகையில் 8% ஆன அமெரிக்கா, உலக மூலவளங்களை 40 சதவீதம் அபகரிக்கிறது . இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் அனைத்தும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளால் சுரண்டப்படுகின்றன.

வெளிநாட்டு உதவி சர்வதேச கம்பெனியில் கூட்டு உற்பத்தி என்பவை யாவும் வெறும் பொய்மையே, ஏமாற்றுவதே ஆகும். தன்னம்பிக்கை அற்ற ஆட்சியாளர்கள் தமது சமூகத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே அடிப்படையில் சமூக மாற்றம் அவசியமானது ஆகும்.(ஆதாரம் *பழைய கட்டுரைதான் இன்றைய தேவை கருதி அப்படியே வெளியிட்டுள்ளேன். இக்கட்டுரை kk சுப்பிரமணியம் எழுதிய 'மூலதனம் தொழில்நுட்ப இறக்குமதி இந்தியக் கொள்கை தொழில் வெளிநாட்டு உறவு கூட்டுறவு' என்ற நூலில் இருந்து எடுக்கப் பட்டவை ).சில சேர்க்கை திருத்தம் என்னுடையவையே.

இன்று இந்திய பொருளாதாரம் பற்றி பல வரையரை கொடுத்தாலும் இதனை ஊண்றி கவனித்தால் இதன் இளமைகாலம் பிரிடிஷ் ஆட்சியாளர்களின் பல சூழ்ச்சியோடு இயைந்தே காணப்படுவதை அறியலாம்.

முந்தைய பகுதின் தொடர்ச்சியாக கைவினைஞர்களின் தொழிலும் வணிகமும் நில உடைமை முறைக்கு கட்டுண்டு கிடந்தனர். அவை கீழ்திசை கொடுங்கோன்மை வணிகத்திலும் கைவினை நுட்பத்திலும் ஏற்படவிருந்த மேன்மையை கட்டுப்படுத்தியது .

பிபி மிஸ்ராவின் கூற்றுப்படி இந்திய வணிகர்கள் தம் வளர்ச்சிக்கு அரண்மனை அதிகாரிகளையும் மாகாண ஆளுநர்களை சார்ந்திருக்க வேண்டி இருந்தது இதைப்போன்ற தொழிலும் அரசு சார்பாக இருக்க வேண்டியிருந்தது.

இன்னும் இந்திய சமூகத்தின் நிலவுடைமை அதிகாரத்துக்கு வணிக முதலாளியும் தீர்க்கமான முறையில் கட்டுண்டு கிடக்கிறது. சுருக்கமாக சொன்னால் சிதைந்து கொண்டிருந்த நிலவுடமை சக்திகள் பண்பாட்டு மறுமலர்ச்சிக்கான அடித்தளத்தை வழங்கவில்லை, இந்தியாவை நீண்ட காலத்துக்கு தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலவில்லை, ஐரோப்பிய வணிகர்களை விட குறிப்பாக ஆங்கிலேயர் வணிக நிறுவனத்தை விட தீர்க்கமான முறையில் மேலோங்குவதற்க்கு அந்த நேரத்தில் இயலவில்லை .

இந்திய கைவினைஞர்களும் வணிகர்களும் வளராமைக்குரிய காரணமாக ஐரோப்பிய வணிகர்களின் போட்டியும் இருந்தது .

பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் இந்திய நாட்டின் பெரும்பகுதி தெற்கில் சில பிரதேசம் தவிர, மாபெரும் முகலாயப் பேரரசில் அடங்கியிருந்தது. பிரதேச ரீதியாக அனேகமாக ஐரோப்பா முழுமைக்கும் சமமாக இருந்த இந்தப் பரந்த பேரரசின் வளர்ச்சியில் சிறப்பு கூறுகள் இருந்தன . அந்த வளர்ச்சியின் வடிவங்கள் எவ்வளவு அதிகமாக வேறுபட்டிருந்தாலும் இந்தியாவில் பொருளாதார கட்டமைப்பை மொத்தமாக முடிவு செய்வதற்கும் உதவுகிறது.

இந்திய பொருளாதாரத்தில் விவசாயம் ஒரு முக்கியமான துறையாக இருந்தது.

பண்டைய காலத்தில் இருந்தே இந்தியாவில் இருந்திருக்கும் அரசு நிலவுடமை , விவசாய உறவுகள் , அந்த சமயத்தில் இருந்து மொத்த பொருளாதார கட்டமைப்பு ஆகியவற்றின் மீதான தீர்மானம் முக்கியமான காரணியாகத் தாக்கம் செலுத்தியது.எல்லா நிலமும் பெரிய நீர்ப்பாசனக் அமைப்புகளும் அரசின் உடைமையாக இருந்தன . நிதித்துறை அதிகாரிகள் எல்லாம் நிலங்களைப் பற்றிய அடங்கள் என்ற பதிவேடு வைத்திருந்தார்கள். அவற்றுக்காக வசூலிக்கப்பட வேண்டிய வரியை நிர்ணயித்தார்கள். அரசின் பங்கு வழக்கமாக விளைச்சலில் ஆறில் ஒரு பங்குக்கு அதிகமாக இருப்பதில்லை .வரி வசூல் செய்வதற்கு நிலப்பிரபுத்துவ ஜமீன்தார்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது . நாட்டில் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒரு ஜமீன்தார் பொறுப்பாக இருந்தார். வசூலிக்கப்பட்ட வரிகளில் குறிப்பிட்ட சதவீதத்தை அவர்கள் தனக்கு வைத்துக்கொண்டனர். இந்த அமைப்பின் மூலம் நிலபிரபுத்துவ சமூக தன் வருமானத்துக்கு தோற்றம் ஏற்படுத்தி கொண்டது.

நிலம் அரசின் உடைமையாக இருந்தபடியே பெரும்பாலும் ஒன்றாகவே இருந்தது . அரசு நேரடியாக வாரம் அல்லது வரிகள் வடிவத்தில் விவசாயிகளின் கூலி கொடுக்கப்படாத உபரி உழைப்பின் முக்கியமான வடிவமாக அது இருந்தது.

இந்தியாவின் பொருளாதாரம் பற்றி என் எழுத்தில் மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒன்று ஏனென்றால் இந்திய நிலை என்பது அன்று நமது ஆசான் மார்க்ஸ் கூறியது போல் நிலவுடமை சமூகத்திற்கும் முதலாளியை சமூகத்திற்கும் இடைப்பட்ட ஒரு மேலோங்கிய கட்டமே என்பார் அதுபோல் இங்கு உள்ள நில உடைமை என்பது பற்றி ஒரு தெளிவான கண்ணோட்டத்திற்கு நாம் வரவேண்டும்.

நிலம் அரசின் உடைமையாக இருந்தது படிப்படியாக மறைந்து தனிப்பட்ட நிலப்பிரபுத்துவ உடமையாக மாறியது. கிராம சமூகம் தன்னுடைய சுய பூர்த்தியை தந்தை வழி முறையில் இழந்தது . பலமான வெகுஜன இயக்கங்கள் முகலாய பேரரசு சிதறிப் போவதைத் துரிதப்படுத்தின. ஆனால் இந்த நிகழ்வுப் போக்குகள் பூர்த்தி அடையாமல் இருப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் இந்தியாவில் நடத்திய காலனிய போர்களும் அதன் குறுக்கீடுகளும் இந்த வளர்ச்சிப் போக்கை தடுத்து நிறுத்தியது எனலாம். கிராம சமூகத்தின் தனிப்பட்ட உறுப்பினர்களுக்கு இடையிலும், நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலும் குண ரீதியில் புதிய உறவுகள் தோன்றின . இதன் தொடர்பாக இந்தியாவில் நகரங்களில் பொருளாதார வளர்ச்சி மிகவும் அக்கறையை தூண்டுவதாக அமைந்தன.

கிராம சமூகத்தின் உச்சியில் இருந்த கிராம தலைவர் போலீஸ் மற்றும் நிதித்துறை பணிகளை நிறைவேற்றினார். அந்த சமூகத்திற்கு என்று தனியாக எழுத்தர், புரோகிதர் ஆசிரியர் காவலாளி ஜோதிடர் மற்றும் இதரர்கள் இருந்தனர். இந்தக் கடமைகள் பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாக வந்தன, அவற்றை நிறைவேற்றியவர்கள் அந்த சமூகத்தை ஆட்சி புரிந்த குழுவாக இருந்தனர், அவர்கள் செய்த வேலைக்கு ஊதியம் உணவு தானியங்களாகவோ அல்லது பண்டமாக வழங்கப்பட்டது, சில இடங்களில் அந்த அளவிற்கு வரி இல்லாத நிலங்கள் அல்லது குறைவான வரிக் கொண்ட நிலங்கள் தரப்பட்டன.

இந்த சமூகத்தில் இரு பிரிவினர் இருந்தனர் ஒருவர் முழு உரிமையும் கொண்ட உறுப்பினர் மற்றொருவர் குறைந்தபட்ச உரிமைகளை கொண்ட உறுப்பினர்கள் பண்டைய கால இந்தியாவில் உபயோகிக்கப்படாத நிலம் அதிகமாக இருந்தபடியால் கிராம சமூகங்கள் அன்னியர்களை வரவேற்றனர்.

கிராம சமூகத்தின் முழு உறுப்பினர்கள் தங்களுடைய நிலத்தை தங்களுடைய வாரிசுகளிடம் கொடுத்தார்கள். தரிசு நிலம் மேச்சல் நிலம் பசும்புல் நிலம் ஆகியவை கூட்டுமையாக இருந்தன அவற்றுக்கு வரி கிடையாது, விவசாயிகளின் பொருளாதார நடவடிக்கைகளை அரசு கட்டுப்படுத்த வில்லை நிலத்தை உழுது பயிரிட்டு நிலத்திற்கு வாரம் கட்டவேண்டும் என்ற கடமைகளை மட்டுமே அரசு வற்புறுத்தியது. விவசாயம் செய்வதும் அரசுப் பணியாக இருந்தது அதிகாரிகள் பிரதானமான வருமான அளவுகள் என்ற முறையில்தான் கிராம சமூகத்தின் மேல் அக்கறை கொண்டிருந்தனர் எனவே அவற்றைத் தக்க வைப்பதில் அவர்கள் அக்கறை காட்டினார்கள். ஏனென்றால் தன்னுடைய எல்லா உறுப்பினர்களுக்கும் பொறுப்பாக இருந்த கிராம சமூக வரிகள் வசூல் செய்யப்படுவதை உறுதிப்படுத்தியது.

இந்தியாவில் கைத்தொழில்களுக்கும் விவசாய வேலைக்கும் இடையில் உழைப்புப் பிரிவினை குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் செய்யப் படவில்லை சமூகத்தின் உறுப்பினர்களுக்கு இடையில் செய்யப் பட்டிருந்தது,

சமூகத்தின் உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் முற்றிலும் விவசாய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர், மற்றவர்கள் கைவினைஞர்களாக இருந்தார்கள்,

கைவினைஞர்களுக்கு அறுவடையில் குறிப்பிட்ட ஒரு பகுதி கொடுக்கப்பட்டது, அவர்கள் சமூகத்தின் உறுப்பினர்களுக்கு தங்களுடைய கைத்தொழில் உற்பத்திப் பொருளை கொடுத்தனர், உழைப்பின் இத்தகைய அமைப்பு முறை கிராம சமூகத்தில் பலமான உறவுகளை பேணி வளர்ந்தது.

நாட்டின் பொருளாதார பிரிவினையை நிரந்தர படுத்தி நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையில் உழைப்புப் பிரிவினையை தடைசெய்தது உள்நாட்டு சந்தையில் உருவாக்கத்தையும் பண்ட பண உறவுகளின் வளர்ச்சியின் தாமதப்படுத்தியது, இந்தியாவில் நிலவும் ஜாதி முறை சமூகங்களுக்கு உள்ளே குறுகிய ஆனால் நிலையான அக உறவுகளை வளர்ப்பதற்கு முற்பட்டது ஏனென்றால் இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த விவசாயி அதில் நிரந்தர உறுப்பினராக இருப்பதையும் அவன் செய்ய வேண்டிய வேலை முன்கூட்டி விதித்தது, மதத்தை ஆதரவாக கொண்ட ஜாதி முறை இந்தியாவில் கிராம சமூகங்களை சேர்ந்த ஒவ்வொரு நபரும் பொது உழைப்பில் பங்கெடுக்கும் ஸ்தூலமான வடிவங்களை வகுத்துக் கொடுத்து கிராம சமூகங்களில் உழைப்புப் பிரிவினை சட்டமாக்கியது, பண்டப் பரிவர்த்தனை முதலில் பக்கத்தில் இருக்கும் சமூகங்களுக்கு இடையிலும் அதற்குப்பிறகு சமூகத்துக்கு உள்ளேயும் தொடங்கி சமூகத்தின் உறுப்பினர்களின் உடைமை மற்றும் வர்க்க ரீதியான வகைப்படுத்தலை வளர்த்தது , சமூகத்தின் தலைமையில் இருந்த சிலர் பொது நிலத்தை எடுத்துக் கொண்டு அதை தங்களுடைய தனி உடைமையாக மாற்றுவதற்கு தொடங்கினார்கள் இந்த குழுவினர் இடையில் இருந்தே நிலப் பிரபுத்துவ வர்க்கம் தோன்றியது, கிராம சமூகத்தில் ஏற்பட்ட படிநிலை நிகழ்வுப் போக்கு பெரும்பான்மையான உறுப்பினர் நிலைமையும் பாதித்தது, சமூகத்தில் இவர்கள் நிலத்தின் மீதான தங்களுடைய பரம்பரை உரிமையை வலுப்படுத்திக் கொண்டனர், ஒருபுறம் ஏகபோகமாக நிலத்தை சேர்க்கும் ஒரு கூட்டம் நிலவுடைமையாளர்கள் ஆகவும் இன்னொரு பக்கம் நிலமற்ற அடிமைகளாகவும் சுரண்டலுக்கு வழிவகை செய்தன இவை, மன்னர்களும் அவர்களை சார்ந்த இராணுவம் மற்றும் அவர் பிரிவுகள் மட்டுமே நிரந்தரமாக நகரங்களில் வசித்தனர் இது நகரத்தின் பொருளாதார அமைப்பின் மீது நாட்டின் வளர்ச்சியில் அவற்றின் பாத்திரத்தின் மீது கணிசமான தாக்கத்தைக் கொண்டிருந்தது, நிலப் பிரபுக்கள் கைவினைஞர்கள் மீது ஏராளமான அதிகாரத்தைக் கொண்டு இருந்தார்கள், அவர்களை அனேகமாகப் பண்ணையாட்கள் போலவே நடத்தினார்கள் , கைத்தொழிலுக்கு பிரதானமான அரசர் மற்றும் நிலப்பிரபுக்களின் தேவைகளுக் காகவே தயாரிக்கப்பட்டன, அவர்கள் இப்பொருட்களின் மீதான உற்பத்தி செலவு பற்றி சிறிதும் கவலைப்படாமல் பெரும்பாலும் விலை கொடுக்காமல் எடுத்துக் கொண்டார்கள், இந்திய நிலப் பிரபுக்களும் சக்கரவர்த்தி தருகின்ற சம்பளத்தை தவிர வேறு வருமானம் இல்லாத படியால் அவர்கள் கைவினைஞர்கள் மட்டுமல்லாமல் வர்த்தகளிடமும் கொள்ளையடித்தார்கள், இத்தகைய நிலைமை நகர கைத்தொழில்களில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தாமதப்படுத்தியது இயற்கையே. ஏனென்றால் நகர கைவினைஞர்கள் தமது உற்பத்தியைப் பெருக்குவதில் அக்கறை காட்டவில்லை, இது வெவ்வேறு பிரதேசங்களுக்கு இடையில் வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சியை பாதித்தது .

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் பிரதானமாக பிரிட்டிஷ் நிதி மூலதனத்தின் சுரண்டலுக்கும் இந்தியா ஏற்கனவே இலக்காயிருந்தது. அளவு ரீதியாக தலைமை நாட்டுக்கு சாதகமாக இந்தியாவின் தேசிய வருமானத்தில் இருந்து நேரடியாக எடுகப்பப்படுகின்ற எந்த வடிவத்திலும் திருப்பி கொடுக்காத தொகையை அதிக படுத்துவதிலும் இது வெளிப்பட்டது.

அந்நிய வர்த்தகம் இந்தியாவின் தேசிய செல்வத்தை கொள்ளையடிக்கின்ற முக்கிய கருவியாயிற்று தொழில்துறை முதலாளிவர்க்கம் ஆதிக்கம் செலுத்துகின்ற காலத்தில் கூட பிரிட்டிஷ் சரக்குகள் பெரிய அளவில் இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் பிரிட்டனில் நடைபெற்ற வர்த்தகத்தில் இந்தியாவுக்கு உபரி இருந்தது, 1830களில் அது இரண்டு மில்லியன் பவுண்டுகள் ஆக இருந்தது இந்த வர்த்தக உபரி நாட்டின் தேசிய செல்வம் வெளியே போவதை பிரதிபலித்தது.

நிதி மூலதனம் இந்தியாவில் ஆதிக்கத்துக்கு வந்தபொழுது வர்த்தக உபரி அந்நிய நாணயத்தின் முக்கியமான தோற்றுவாய் இருந்தது அது முழுவதுமே காலனியாதிக்கத்தின் வரிகளை செலுத்தவே பயன்பட்டது.

ஏகாதிபத்திய சகாப்தத்தில் இந்தியாவை சுரண்டி இரத்தத்தை உறிஞ்சிக் கொள்ளையடிக்கின்ற தன்மை நேரடியான கொள்ளையில் பல வடிவங்களை வைத்துக் கொண்டிருந்தாலும் சில புதிய கூறுகளையும் அடைந்தது. வர்த்தக கொள்ளை நாட்டின் ஏழ்மைக்கும் அழிவுக்கும் வழிவகுத்தது. சரக்குகளின் ஏற்றுமதி இந்தியாவின் பொருளாதார அமைப்பின் அடிப்படைகளை அழித்து ஒழித்தது, மூலதனத்தின் ஏற்றுமதி அதன் கடுஞ்சுரண்டல் தன்மை ஒரு புறம் இருந்தாலும் நாட்டின் உள்நாட்டு செல்வங்களை ஏதாவது ஒரு வகையில் சுரண்டுவதையே குறிப்பிட்டாக வேண்டும். பிரிட்டிஷ் மூலதன ஏற்றுமதி ஏகாதிபத்திய தலைமை நாட்டின் தேவைகளுக்கு ஏற்றபடி தன்னுடைய பொருளாதாரத்தை தகவமைத்து கொள்கிற பாதையை இந்தியாவில் உந்தித் தள்ளியது. தொடரும்..........

அரசு நிறுவனங்களில் முதன்மையான நிறுவனம் ஆயுதம் தாங்கிய தனி வகையான படையே-தேன்மொழி

 அரசு நிறுவனங்களில் முதன்மையான நிறுவனம் ஆயுதம் தாங்கிய தனி வகையான படையே தற்போது உலகம் முழுவதிலும் போலீஸ் மற்றும் இராணுவ நிறுவனங்கள் ஆயுதம் தாங்கிய நிலையில் இருப்பதை நாம் காண்கிறோம். இந்த நிறுவனங்களுக்குத்தான் ஆயுதம் தாங்கும் உரிமையும் அதிகாரமும் இருக்கிறது. நாடுகளிலுள்ள பிற மக்களுக்கு ஆயுதம் வைத்துக்கொள்ளும் உரிமை சட்டப்படி கிடையாது. விதிவிலக்காக சில வசதி படைத்த செல்வந்தர்களுக்கு காவல்துறை அனுமதியுடன் ஆயுதம் வைத்துக் கொள்வதற்கு உரிமை உண்டு. அதாவது அந்த செல்வந்தர்களை யாராவது தாக்கினால் அந்த தாக்குதலிருந்து அவர்களை பாதுகாத்துக்கொள்ள, அவர்கள் ஆயுதம் வைத்துக்கொள்ளலாம் என்று காவல்துறை அனுமதி அளிக்கிறது. அதே வேளையில் ஏழை, எளிய உழைக்கும் மக்கள் அவர்களை பாதுகாத்துக்கொள்ள, அவர்கள் ஆயுதம் வைத்துக்கொள்ள அரசு அனுமதிப்பதில்லை.

ஒரு காலத்தில், அதாவது மனிதர்கள் வர்க்கங்களாக பிளவுபடாத காலத்தில், மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த காலத்தில், மனிதர்களின் வாழ்க்கைக்காக வேட்டையாடுவதை தொழிலாகக் கொண்டிருந்த காலத்தில், மனிதர்கள் கூட்டாக சென்று வேட்டையாடினார்கள். வேட்டையாடி கொண்டுவந்த மிருகங்களை கூட்டாக பகிர்ந்து உண்டனர். அவர்கள் வேட்டையாடுவதற்கு வில்லும், அம்பும் கண்டுபிடித்து பயன்படுத்தினார்கள். காடுகளில் கிடைக்கும் கிழங்கு வகைகளையும் பழங்களையும் சேகரித்து அதனை உணவாக பயன்படுத்தினார்கள். இவ்வாறு பழங்குடி மக்களாலால் பயன்படுத்தப்பட்ட கருவிகள் அவர்களின் உற்பத்திக் கருவிகளாகவும் பிற மனித கூட்டங்களோடு போர்புரிவதற்கான படைக்கல ஆயுதங்களாகவும், பயன்பட்டன. அந்த கூட்டத்தில் மனிதர்களுக்கு இடையே உடமை உள்ளவன், உடமை அற்றவன் என்ற வேறுபாடுகள் இல்லை. அது சாராம்சத்தில் ஆதிகால பொதுவுடமை சமூகமாகவே இருந்தது. அந்த சமூகத்தில் மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தும் அனைத்து மக்களுக்கும் பொதுவான சொத்துக்களாக இருந்தது. அதாவது அனைத்து மக்களுக்கும் ஆயுதம் ஏந்தும் உரிமை இருந்தது.

வேட்டையாடி வாழ்ந்த மக்கள் பிற்காலத்தில் ஆடு, மாடு, கோழி போன்றவைகளை  வீட்டு விலங்குகளாக வளர்ப்பதற்கு கற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஆண்கள் காட்டிற்கு சென்று வேட்டையாடி வருவதும், பெண்கள் வீடுகளில் ஆடு, மாடு, கோழிகளை வளர்ப்பதும் செய்து வந்தனர். அதன் பின்பு பின்தங்கிய உழவுக் கருவிகளைக் கொண்டு விவசாயம் செய்வதற்கு கற்றுக்கொண்டனர். அப்போதுதான் மனிதர்கள் அலைந்து திரிவதை கைவிட்டுவிட்டு ஆற்றுப்படுகை ஓரம் நிரந்தரமாக குடியிருந்து வாழக் கற்றுக்கொண்டனர். அதே வேளையில் உழு கருவிகளில் புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டு வேளாண்மையின் மூலம் மனிதர்களின் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்தனர். அந்த உபரி உற்பத்தியை சில மனிதர்கள் கைப்பற்றிக் கொண்டு தனிவுடமையாக சொந்தமாக்கிக் கொண்டனர். அப்போதுதான் மனித குலத்தில் பொதுவுடமை தகர்ந்து தனிவுடமை உருவானது.

இத்தகைய தனிவுடமை உருவாவதற்கு முன்பு ஒரு கூட்டம் பிற கூட்டத்தைச் சேர்ந்தவர்களால் வளர்க்கப்படும் ஆடு, மாடுகளை களவாடிச் செல்வதற்காக கூட்டங்களுக்கு இடையே போர் நடந்தது. ஆனால் தனிவுடமை உருவான பின்பு ஆடு, மாடுகள் மட்டுமல்லாமல் நிலங்கள்தான் முதன்மையான தனிவுடமை சொத்தாக மாறிவிட்டதால், இந்த நிலங்களை அபகரிக்க போர்கள் நடத்தப்பட்டது. நிலங்கள் ஒன்றிணைக்கப்பட்டதால் விரிவான நிலப் பிரதேசங்கள் உருவானது. ஆகவே குறுகிய கூட்டங்களாக வாழ்ந்த மனிதர்கள் விரிவான நிலப் பகுதிகளில் ஒரு பிரதேசமாக வாழும் நிலை ஏற்பட்டது. அதன் விளைவாக கூட்டங்கள் தகர்ந்து போயிற்று. இவ்வாறு பிரதேசங்களில் வாழ்ந்த மனிதர்களிடையே உருவான வர்க்க வேறுபாடுகள் காரணமாக உடமை வர்க்கங்களுக்கும் உடமையற்ற வர்க்கங்களுக்கும்இடையிலான போர்களை தவிர்ப்பதற்காக உடமையற்ற வர்க்கங்களிடமிருந்து ஆயுதங்களை பறித்துவிட்டு, உடமை வர்க்கங்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசின் கட்டுப்பாட்டில் அமைந்த தனிவகைப்பட்ட படைப்பிரிவினருக்கு மட்டுமே ஆயுதம் ஏந்தும் உரிமை வழங்கப்பட்டு உடமையற்ற வர்க்கங்களை அடக்குவதற்கான அரசு உருவாகிற்று. இந்த அரசின் முதன்மையான நிறுவனம் இந்த தனிவகைப்பட்ட ஆயுதம் தாங்கிய படையே ஆகும். இந்த ஆயுதம் தாங்கிய தனிவகைப்பட்ட ஆயுதப் படையின் மூலமாகவே உடமை வர்க்கங்கள் உடமையற்ற வர்க்கங்களை காலம்காலமாக சுரண்டிக்கொண்டும் ஒடுக்கிக்கொண்டும் இருக்கின்றன.

சமுதாயத்தின் புராதனக் குடி, அல்லது குல வழியிலான ஒழுங்கமைப்பு என்பது புராதனக் கம்யூன் அமைப்பாகும். இதுதான் வரலாற்றில் முதலாவது சமூக-பொருளாதார அமைப்பாகும். குலக்கம்யூனானது பொருளாதார சமூக பிணைப்புகளால் இணைக்கப்பட்ட இரத்த உறவினர்களதுகூட்டமைப்பாகும். இந்த சமூகத்தின் ஒழுங்கமைப்பானது இரத்த உறவுகளைக் கொண்ட ஒழுங்கமைப்பாகும். இந்த சமூகத்தில் இரத்த உறவே ஆதிக்கத்தில் இருந்தது.

புராதன கம்யூன் அமைப்பில் உற்பத்தி உறவுகள், உற்பத்திச் சாதனங்களின் சமூக உடமையும் எல்லாப் பொருள்களின் சரிசமத்துவ வினியோகத்தையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது.இதற்கு காரணம் அக்காலத்திய உற்பத்தி சக்திகளின் தாழ்ந்த வளர்ச்சி நிலையே ஆகும்.

உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடைந்தபோது இரத்த உறவு சமூகம் சிதைந்து வர்க்க சமூகம் உருவாகிறது. இந்த வர்க்க சமூகத்திற்கு அதற்கு முன்பு இருந்த குல அமைப்பு முறையிலிருந்த சமூக ஒழுங்கமைப்பு பொருந்தாததாகிவிடுகிறது. இந்த வர்க்க சமூகத்திற்கு பொருத்தமான சமூக ஒழுங்கமைப்பு உருவாகிறது.

வர்க்க சமூகத்தில் அரசு தோன்றுகிறது. இந்த அரசானது முன்பு இருந்த புராதன மக்களின்(குலங்கள்அல்லது கணங்களின்) ஒழுங்கமைப்புக்கு மாறாக மக்களை பிரதேச ரீதியாகப் பிரிக்கிறது என்றார்.

எங்கெல்ஸ். இத்தகைய பிரதேசரீதியான பிரிவினை என்பது இயல்பானதுஎன்று தற்போதைய சூழலில் நமக்குத் தோன்றலாம். ஆனால் தலைமுறை தலைமுறையாக இருந்துவந்த குலங்களின் வழிப்பட்ட ஒழுங்கமைப்பை தகர்ப்பதற்கு நீண்டகால போராட்டங்கள்மனிதகுல வரலாற்றில் நடந்துள்ளது. (பிரதேசத்திற்கு உதாரணம் சேரன், சோழன், பாண்டியமன்னர்களின் ஆட்சியில் கீழிருந்த பிரதேசங்கள்) குல சமுதாயத்தில் மக்கள் அனைவரும் தங்களை ஆயுதம் ஏந்தியரவர்களாக ஒழுங்கமைத்துவாழ்ந்து வந்தனர். ஆனால் வர்க்க சமூகம் உருவானதும், மக்களின் ஆயுதம் ஏந்தும்ஒழுங்கமைப்புக்கு முடிவு கட்டது. பழைய ஒழுங்கமைப்புக்கு மாறாக பொது அதிகாரம் நிறுவப்பட்டது. சமூகம் வர்க்கங்களாக பிளவு பட்டவுடன், இந்த வர்க்க சமூகத்தை பாதுகாக்க தானாகஇயங்கும் மக்களின் ஆயுதம் ஏந்திய ஒழுங்கமைப்பு தடையாக மாறிவிட்டது. ஆகவே இந்த பழைய ஒழுங்கமைப்பை ஒழித்துவிட்டு புதிய ஒழுங்கமைப்பான ஆயுதம் ஏந்திய தனிவகைப்பட்டபடையைக் கொண்ட பொது அதிகாரம் உருவாகிற்று. இந்த பொது அதிகாரம் ஒவ்வொருஅரசிலும் இருந்துவருகிறது. இது ஆயுதம் ஏந்திய படைகளை மட்டுமின்றி புராதன (குல)சமூதாயம் அறிந்திராத பொருளாதாய துணைச் சாதனங்களையும் சிறைக்கூடங்களையும் எல்லாவகையான பலாத்கார ஏற்பாடுகளையும் கொண்டதாகும்.

அரசு எனப்படும் சக்தி சமுதாயத்திலிருந்து உதித்தெழுந்தது,அதாவது சமுதாயத்திலுள்ள மக்கள்பிரிவினரில் சிலர்தான் அரசு உறுப்பினர்களாக ஆகிறார்கள். ஆனால் அது சமுதாயத்திற்கு மேலானதாய்த் தன்னை இருத்திக் கொள்கிறது மேலும் தன்னை மேலும் மேலும் அயலானாக்கிக்கொள்கிறது என்ற கருத்தை எங்கெல்ஸ் முன்வைத்தார். சமுகத்திலுள்ள உழைக்கும் மக்களில் ஒரு பிரிவினர் அரசு உறுப்பினர்களாக மாறி அந்த உழைக்கும் மக்களைவிட தன்னை உயர்ந்தவர்களாக கருதிக்கொண்டு உழைக்கும் மக்களிடமிருந்து பிரிந்து, அயலானாகப் போவதை நாம் காணலாம். இந்த அரசு என்ற சக்தி எவற்றால் ஆனது? சிறைக்கூடங்களையும்,இன்ன பிறவற்றையும், தமது ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஆயுதமேந்திய ஆட்க்களைக் கொண்டதனிவகைப் படைகளால் ஆனது என்று எங்கெல்ஸ் விளக்கினார்.

அரசு என்பது ஆயுதமேந்திய ஆட்களைக் கொண்ட தனிவகைப் படைகள் என்று கம்யூனிஸ்டுகள்கருதுவதில் நியாயம் இருக்கிறது. ஏனென்றால் அரசு ஒவ்வொன்றுக்கும் உரியதான இந்தப் பொதுஅதிகாரம் இதற்கு முன்பு இருந்த ஆயுதம் தாங்கிய மக்களுக்கு, அவர்களது தானே இயங்கும் ஆயுதமேந்திய ஒழுங்கமைப்புக்கு நேரடியாக ஒத்ததாயில்லை.

தற்போது ஆதிக்கம் புரியும் அற்பவாத கண்ணோட்டத்தின்படி,(சந்தர்ப்பவாதிகளின் கண்ணோட்டத்தின்படி) சிறிதும் கவனிக்க வேண்டிய தேவையில்லை என்றும், பழக்கப்பட்டுசாதாரணமாகிவிட்டது என்று கருதப்படும் ஒன்றை, அதாவது அரசு பற்றிய கருத்தை வேர்விட்டு ஆழப்பதிந்ததோடு, இறுகிக் கெட்டி பிடித்தவை என்று சொல்லத்தக்க தப்பெண்ணங்களால்,புனிதமானது என்று உயர்த்தி வைக்கடும் இதனை அதாவது அரசை, மாபெரும் புரட்சிகர சிந்தனையாளர்களைப் போலவே எங்கெல்சும் வர்க்க உணர்வு படைத்த தொழிலாளர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார். அதாவது அரசு என்பது, நிரந்தர இராணுவமும், போலிசும் தான்,இதுதான் அரசு அதிகாரத்தின் பிரதானமான கருவிகளாகும். இவ்வாறின்றி வேறு எப்படி இருக்கமுடியும். என்று எங்கல்ஸ் சொன்னார். அதுதான் உண்மை என்பதை நாம் நடைமுறை வாழ்வில்காணுகிறோம் அல்லவா?

ஆதி காலத்திலிருந்ததானாகவே இயங்கும் மக்களது ஆயுதமேந்திய ஒழுங்கமைப்பு  என்றால் என்னவென்பது பலருக்கும் தெரியாது மேலும் அதனை புரிந்துகொள்ளவும் முடியாது.

ஏனென்றால் அது ஏடறிந்த வரலாற்றுக் காலத்திற்கு முன்பு வாழ்ந்த மக்கள் கையாண்டஒழுங்கமைப்பாகும்.அந்த நிலை மாறி சமுதாயத்துக்கு மேலானதாய் நின்று மேலும் மேலும் அதற்குத் தம்மை அயலானாக்கிக் கொள்ளும் ஆயுதமேந்திய ஆட்க்களைக் கொண்ட தனிவகைப் படைகள் (போலீசும், இராணுவமும்) அவசியமாகியது ஏனென்று கம்யூனிஸ்டுகள் கேட்டால், அற்பவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும் மேலும் மேலும் சிக்கலாகிவரும் சமுதாய வாழ்வையும், பணிப் பிரிவிணையையும் பிறவற்றையும் காரணமாக நமக்கு காட்டுகிறார்கள். இந்த கருத்துவிஞ்ஞானப் பூர்வமானது போன்று தோன்றினாலும், பகையான வர்க்கங்களாக சமூகம் பிளவுபட்டு விட்டதையும், அதன் காரணமாகவே அரசு என்ற பலாத்கார நிறுவனம் உருவாகியது என்ற உண்மையை மூடி மறைத்து சாதாரண மணிதனை தூக்கத்தில் ஆழ்த்துவதற்கு இந்ததவறான கருத்து பயன் படுத்தப்படுகிறது.

சமுதாயம் பகை வர்க்கங்களாக பிளவுபடாமல் இருந்திருந்தாலும், உயர் தொழில் நுட்பவளர்ச்சியின் காரணமாக தானாகவே இயங்கும் மக்களது ஆயுதமேந்திய ஒழுங்கமைப்பு அதாவது தடிகள் ஏந்திய குரங்கு மந்தை அல்லது புராதன மனிதர்கள் அல்லது குலங்களாய் இணைந்த மனிதர்களின் புராதன ஒழுங்கமைப்பிலிருந்து மாறுபட்டிருக்கும் அல்லது வளர்ந்திருக்கும் என்று கருதுவது சரியானது போல் தோன்றினாலும். வளர்ச்சியடைந்த நிலையிலும் அதன் தன்மைதானாகவே இயங்கும் மக்களது ஆயுதமேந்திய ஒழுங்கமைப்பாகவே நீடித்திருக்கும். இதற்கு மாறாக ஆயுதமேந்திய ஆட்களைக்கொண்ட தனிவகையானபடைகளாகமாறியிருக்காது. பகையான வர்க்க சமூகமாக மக்கள் சமூகம் மாறிய பொழுதுதான் தானாகவே இயங்கும் மக்களது ஆயுதமேந்திய ஒழுங்கமைப்பு வரலாற்றில் முடிவிற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அரசு என்ற ஆயுதமேந்திய ஆட்களைக்கொண்ட தனிவகையான படைகள் உருவாகியது.

நாகரியச் சமுதாயம் பகை வர்க்கங்களாய், அதுவும் இணக்கம் காண முடியாத பகைவர்க்கங்களாய் பிளவுண்டதால்தான், அரசு தோன்றியது. அதுவரை அரசு என்பது இருந்ததே இல்லை. இத்தகைய வர்க்க சமூகத்தில், இவ்வர்க்கங்கள் தானாகவே இயங்கும் ஆயுதபாணிகளாய் இருந்தால், இந்த வர்க்கங்களுக்கு இடையே வர்க்கப் பகைமையின் காரணமாக ஆயுதமேந்திய போராட்டங்கள் மூண்டிருக்கும்.

ஆகவே இவ்வகையான ஆயுதமேந்திய போராட்டங்களை தவிர்ப்பதற்காகவே அரசு உதித்தெழுந்தது. தனிவகை சக்தி, ஆயுதமேந்திய ஆட்களைக் கொண்ட தனிவகைப் படைகள் அமைக்கப்பட்டன. ஆகவேதான் மனித சமூகம் சந்தித்த ஒவ்வொரு புரட்சியிலும் இந்த அரசு இயந்திரத்தை அழிப்பதன் மூலம்,புரட்சிகள் நடத்தப்பட்ட வரலாற்றிலிருந்து, வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆளும் வர்க்கம் (உடமை வர்க்கம்) தனக்குச் சேவை செய்யக்கூடியஆயுதமேந்திய ஆட்களைக் கொண்ட தனிவகைப் படைகளை மீட்டமைக்க எப்படியெல்லாம் முயல்கிறது என்பதையும், ஒடுக்கப்பட்ட (உடமையற்ற) வர்க்கம் ஒடுக்குவோருக்குப் பதிலாக ஒடுக்கப்பட்டோருக்கு அதாவது உடமையற்ற உழைக்கும் வர்க்கங்களுக்குச் சேவை புரியக்கூடியஇப்படிப்பட்ட ஒரு புதிய ஒழுங்கமைப்பை தோற்றுவித்துக்கொள்ள எப்படி முயன்றது என்பதையும் வர்க்கப் போராட்ட வரலாறு நமக்குத் தெளிவாய் காட்டுகிறது.

மாபெரும் புரட்சி ஒவ்வொன்றும் நடைமுறையில், திட்டவட்டமாகவும், இன்னும் முக்கியமாகவெகுஜன செயல் அளவிலும் நம்முன் எழுப்பும் அதே பிரச்சனையை, அதாவது ஆயுத மேந்திய ஆட்களைக் கொண்ட தனிவகைப் படைகளுக்கும்தானாகவே இயங்கும் மக்களதுஆயுதமேந்திய ஒழுங்கமைப்புக்கும் இடையிலான உறவு பற்றிய பிரச்சனையை மேற்கூறியமேற்கோள்களில் எங்கெல்ஸ் தத்துவார்த்த வழியில் எழுப்புகிறார். ஐரோப்பிய, ரஷ்யப்புரட்சிகளின் அனுபவம் இந்தப் பிரச்சனைக்கு எப்படி திட்டவட்டமான முறையில் பதிலளித்ததுஎன்பதை நாம் பார்க்க வேண்டும்.

சில சமயங்களில் - உதாரணமாய் வட அமெரிக்காவின் சில பகுதிகளில் - இந்தப் பொது அதிகாரம் பலவீனமாக இருப்பதை எங்கெல்ஸ் சுட்டிக் காட்டினார். (முதலாளித்துவ சமுதாயத்தில் அரியவிதிவிலக்காக இருந்த ஒன்றான, வட அமெரிக்காவில் ஏகாதிபத்திய காலக்கட்டத்துக்கு முன்புகட்டற்ற குடியேற்றக் குடியினர்பெருவாரியாய் இருந்த சில பகுதிகளை எங்கெல்ஸ் இங்கு சுட்டிக்காட்டுகிறார்).

ஆனால் பொதுவாய் கூறுமிடத்து இந்த பொது அதிகாரம் வளர்ந்து வலிமையுறும் என்று எங்கெல்ஸ் குறிப்பிட்டது போலவே வட அமெரிக்காவில் அரசும் தனிவகைப் படையும்வளர்ந்து வலிமைப்பட்டு அமெரிக்க அரசு ஏகாதிபத்திய அரசாக வளர்ந்ததுவிட்டதை நாம்அறிவோம்.அரசினுள் எந்தளவுக்கு வர்க்கப் பகைமைகள் மேலும் மேலும் கடுமையாகின்றனவோ, (அதாவதுசுரண்டும் வர்க்கங்களின் ஆட்சி அதிகாரத்தின் மூலம் உழைக்கும் மக்கள் மிகவும் கொடூரமாக சுரண்டப்படுவதனால், பாதிக்கப்பட்ட உழைக்கும் வர்க்கங்கள் இந்தச் சுரண்டல்களை எதிர்த்துப்போராட்டங்களை நடத்தும் போது இந்த வர்க்கங்களுக்கு இடையிலான பகைமைகள்கடுமையாகின்றன.) அக்கம் பக்கத்து அரசுகள் பெரிதாகி அவற்றின் மக்கள் தொகை பெருகுகின்றனவோ, அதே அளவுக்கு பொது அதிகாரம் வளர்ந்து வலிமையுறுகிறது.

ஐரோப்பாவின் வரலாற்றை கவனித்தால் இது தெளிவாகிவிடும். இங்கு பொது அதிகாரம் சமுதாயம் அனைத்தையும், ஏன் அரசையும்கூட விழுங்கிவிடும் என்ற அச்சத்தை தரக்கூடிய அளவுக்கு வர்க்கப் போராட்டமும், நாடு பிடிக்கும் போட்டா போட்டியும் அதனை தீவிரமாக வளரச் செய்திருக்கின்றன என்ற எங்கெல்சின் கூற்றுப்படி ஐரோப்பாவில் ஏகாதிபத்தியங்கள் உருவான வரலாற்றை நாம் பார்த்திருக்கிறோம்.

ஏகாதிபத்தியத்துக்கான மாற்றம் - டிரஸ்டுகளின் முழு ஆதிக்கத்துக்கும் பெரிய வங்கிகளின் சர்வ வல்லமைக்கும் மிகப் பெரிய அளவிலான காலனியாதிக்க கொள்ளைக்கும் இன்ன பிறவற்றுக்குமான மாற்றம் - அப்பொழுதுதான் பிரான்சில் ஆரம்பித்துக் கொண்டிருந்தது; வட அமெரிக்காவிலும், ஜெர்மனியிலும் இந்த மாற்றம் இன்னும்கூட பலவீனமாகவே இருந்தது.

எனினும் இதற்குப் பிற்பட்ட நாடு பிடிக்கும் போட்டா போட்டி பிரமாண்ட அளவுக்கு மும்முரமாகிவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டின் தொடக்கத்துக்குள் நாடு பிடிக்கும் போட்டியாளர்களுக்கு இடையே அதாவது கொள்ளைக்கார பேரரசுகளுக்கு இடையே உலகம் பூராவுமே பங்கிடப்பட்டுவிட்டதால் இந்தப் போட்டா போட்டி மேலும் கடுமையாகிவிட்டது. இதற்குப் பின்பு இராணுவ, கடற்படைப் போர்க் கருவிகள் நம்பமுடியாதபடி வளர்ந்துவிட்டன; பிரிட்டன் அல்லது ஜெர்மனி ஏகாதிபத்தியவாதிகள் உலகெங்கும் தங்களது ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்பதற்காக, பின்தங்கிய நாடுகளை கொள்ளையடிப் பதற்காக, பாகப் பிரிவினை செய்து கொள்வதற்காக 1914-1917ஆம் ஆண்டுகளில் இவர்கள் நடத்திய கொள்ளைக்கார யுத்தத்தைத் தொடர்ந்து சமுதாயத்தின் எல்லாசக்திகளையும் நாசகார அரசுஅதிகாரம் கபளீகரம் செய்வது படுபயங்கரமான அளவுக்கு வளர்ந்துவிட்டது. நாடு பிடிக்கும் போட்டாபோட்டி வல்லரசுகளுடைய அயல் நாட்டுக் கொள்கையின் மிகமுக்கியதனி இயல்புகளில் ஒன்றாகுமென்று 1891 லேயே எங்கெல்ஸ் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால்1914-1917ஆம் ஆண்டுகளில் இந்தப் போட்டாப் போட்டி பன்மடங்கு கடுமையாகி ஏகாதிபத்தியஉலக யுத்தத்தை மூண்டெழச் செய்தபோது சமூக தேசியவெறிக் கயவர்கள் தமது சொந்த முதலாளித்துவ வர்க்கத்தின் கொள்ளைக்கார நலன்களின் பாதுகாப்பை தாயகப் பாதுகாப்பு குடியரசின், புரட்சியின் பாதுகாப்பு என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றினார்கள்.இவ்வாறு நாடு பிடிப்பதற்காக ஏகாதிபத்தியவாதிகளால் 1914 ஆம் ஆண்டிலிருந்து துவக்கிவைக்கப்பட்ட போர்களை இன்றளவும் அவர்கள் நிறுத்தவில்லை. சமீபத்தில் ஆப்க்கான், மற்றும் ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும் நேட்டோ அமைப்பை சேர்ந்த ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளால் நடத்தப்பட்ட போர்கள், மற்றும் உக்ரேன் மீது ரஷ்ய ஏகாதிபத்தியவாதிகளால் நடத்தப்படும் போர்களும் ஏகாதிபத்தியவாதிகளின் கொள்ளைக்காவே நடத்தப்படுவதை நாம் பார்க்கலாம். இந்தப் போர்களினால் உலகத்தில் உள்ள எந்த நாட்டு மக்களுக்கும் கடுகளவும் பயனில்லை. மாறாக உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் ஏதோ ஒருவகையில் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றர்.

ஆகவே சமூகமானது வர்க்கங்களாக பிளவுபட்டதிலிருந்து உருவான அரசு, ஆயுதமேந்தியஆட்களைக் கொண்ட தனி வகைப்படையானது பிரமாண்டமாக வளர்க்கப்பட்டு நாடுகளை பிடிப்பதற்காக, பங்குபோடுவதற்காகயுத்தங்களை நடத்துவதன் மூலம் உலக மக்களுக்கு பேரழிவையும், படுகொலைகளையுமே வழங்கிவருகின்றனர். ஆகவே யுத்தமில்லாத சமாதானமான உலகை படைக்க வேண்டுமானால் இந்த மக்கள் விரோத கொள்ளைக்கார அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஆயுதமேந்திய ஆட்களைக்கொண்ட தனிவகைப்பட்ட படைகளுக்கு முடிவுகட்ட வேண்டும். அதற்கு உழைக்கும் மக்களின் நலன் காக்கும் அரசை உழைக்கும் மக்கள் போராடி உருவாக்க வேண்டும். அந்த அரசிலும் ஆயுதமேந்திய படை இருக்கும். அந்த படையானது தற்போதுள்ள படையைப் போல் அல்லாமல் இதற்கு முந்திய காலத்தில் இருந்ததானாகவே இயங்கும் மக்களது ஆயுத மேந்திய ஒழுங்கமைப்பாகவே இருக்கும். அதாவது உழைக்கும் மக்களையும் அதன் அரசையும் பாதுகாப்பதற்கான மக்கள் படையாகவே இருக்கும். சமூகமானது உழைக்கும் மக்களின் நலன்காக்கும் சோசலிச அரசால் ஆளப்படும் சமூகமாக மாறிவிட்டால். அந்த சமூகத்தில் இருப்பவர்களுக்கு பிறரை சுரண்டி வாழும் தேவை இருக்காது. ஆகவே பிற நாடுகளின் மீது போர் தொடுத்து பிற நாடுகளை அடிமைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. அதனால் உலகில் எங்கும் போர்கள் நடக்காது. மக்கள் அழிவுகளை சந்திக்க வேண்டும் என்ற நிலை ஏற்படாது.

போர்களற்ற சமாதானம் நிறைந்த சமத்துவ வாழ்வு உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும்கிடைக்கும். இத்தகைய சமூகத்தை படைப்பதற்காகப் பாடுபடுபவரே கம்யூனிஸ்டுகள் ஆவார்கள்.

இதற்கு மாறாக உடமை வர்க்க அரசை பாதுகாத்துக்கொண்டே, அரசின் தனிவகைப்பட்டஆயுதமேந்திய ஆட்களைக் கொண்ட படையின் கொடுமைகளை ஏற்றுக்கொண்டே சில்லரை சலுகைகளுக்காகப் பாடுபடுபவர்கள் ஒருபோதும் கம்யூனிஸ்டுகள் ஆக மாட்டார்கள்.

தேன்மொழி

இத்தாலி மற்றும் ஜெர்மனியில் பாசிசம்-பிரேம சந்திரன்

 


தோழா் டிமிட்ரோவ் பாசிசம் நிகழ்ச்சி நிரலுக்கு வருவது குறித்து கூறும் போது "முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாசிசத்திற்கு மாறிச்செல்லும் போக்கு முடிந்து போன, தவிர்க்கவியலாத ஒன்று எனக்கருதாமல் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஏகாதிபத்தியத்திலிருந்து பாசிச சா்வாதிகாரம் அவசியம் தோன்றியே தீரும் என்று கிடையாது. இங்கு நாம் சில நடைமுறை உதாரணங்களை காண்போம். உதாரணத்திற்கு இங்கிலாந்து பெரும் ஏகாதிபத்திய நாடு. அங்கு ஜனநாயகவகைப்பட்ட நாடாளுமன்ற அரசாங்கம் (இதிலும் கூட பிற்போக்கு அம்சங்கள் இல்லை எனக் கூறிவிட முடியாது.) உள்ளது. பிரான்சையும் அமெரிக்கைாவையும் எடுத்துக் கொள்வோம். இந்நாடுகளில் பாசிச வடிவில் சமூகத்தை உருவாக்கும் போக்கு உள்ளதை நீங்கள் காண்பீா்கள். ஆனால் இங்கே நாடாளுமன்ற வடிவங்கள் இன்னும் உள்ளன.

பாசிச வடிவிலான அரசாங்கத்தை நோக்கி செல்லும் போக்கு அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது என்றாலும் பாசிசம் எல்லா இடங்களிலும் வந்தே தீரும் என்று இதற்குபொருள் ஆகாது.”

மேலும் டிமிட்ரோவ் கூறுகிறார்:

பாசிசம் எத்தகைய ஒரு முகமூடியை (இனம், மதம், தேசம், மொழி......) அணிந்திருந்தாலும் எந்த வடிவத்தில் தன்னை அது காட்டிக்கொண்டாலும் எந்த வழிகளில் அது அதிகாரத்திற்கு வந்தாலும்:

1. பாசிசம் என்பது முதலாளித்துவமானது (நிதிமூலதனம்) உழைக்கும் மக்கள்(தொழிலாளர்கள், விவசாயிகள்) மீது மிகவும் கொடூரமாக, கோரமாக நடத்தும்தாக்குதல் ஆகும்.

2. பாசிசம் என்பது கடிவாளமில்லாத இனவெறியும், ஆதிக்கவெறியும் பிடித்தயுத்தமாகும்.

3. பாசிசம் என்பது வெறிபிடித்த பிற்போக்குதனமும் எதிர்ப்புரட்சியுமாகும்.

4. பாசிசம் என்பது தொழிலாளி வர்க்கத்தின் சகல உழைக்கும் மக்களின் கொடியவிரோதி ஆகும்.

5. பாசிசம் - ஒரு கொடிய ஆனால் ஒரு நிலையற்ற ஆட்சி அதிகாரம் ஆகும்.

6. முதலாளித்துவ வர்க்கத்தின் பாசிச சர்வாதிகாரம் ஒரு கொடிய ஆட்சி அதிகாரம் ஆகும்.

இத்தகைய பாசிச சா்வாதிகாரம்தான் அதன் மூலச்சிறப்பான வடிவத்தில் முதல் உலகயுத்தத்திற்கு பிறகு முதலில் இத்தாலியிலும் பின்னர் ஜொ்மனியிலும் அந்தந்த நாட்டுக்குரிய குறிப்பான வடிவங்களில் முதன்முதலாக கட்டியமைக்கப்பட்டன.

முதல் உலக யுத்தமும் பாசிசத்தின் தோற்றமும்.

முதல் உலகயுத்தம் 1914ல் துவங்கியது். அந்த யுத்தத்திற்கு முன்பே ஏகாதிபத்தியத்தின் பொருளியல் உறவுகளை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து லெனின்,ஏகாதிபத்தியமானது “முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்” என்றும் ஏகாதிபத்தியமானது தனது சந்தைகளுக்காக நிதிமூலதனத்தை ஏற்றுமதி செய்வதை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவம்” என்றும் ஏகாதிபத்தியங்களுக்கிடையே சந்தை களுக்கான போட்டியும் மற்றும் யுத்தமும் தவிர்க்க முடியாதது என்றார். உலக யுத்தத்தை ஏகாதிபத்தியங் களுக்கிடையேயான பொருளாதார நெருக்கடியிலிருந்து தோன்றுகின்ற யுத்தம் என்றார். மேலும் “ஏகாதிபத்திய நிதிமூலதனக் கும்பல்களுக்கிடையே 1900-க்குள்ளேயே ஆசிய,லத்தீன் அமெரிக்கா, மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள காலனிய நாடுகள் அனைத்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளால் பங்குபோடப்பட்டு விட்டன” என்று கூறினார். “மேலும் தற்போதைய யுத்தமானது ஏகாதிபத்திய வாதிகளின் சுரண்டலுக்காகவும் சந்தைக்காகவும் இந்த உலகத்தை மறுபங்கீடு செய்வதற்கே” என்றார். எனவே இந்த யுத்தம் உலகமக்களுக்கு எதிரானது. இது அநீதியான யுத்தம் என்றார். இது உலகமக்களை முன்னிலும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளும். இந்த நெருக்கடியான சூழலில் போரிடும் நாட்டிலுள்ள கம்யூனிஸ்டு கட்சிகளானது இந்த யுத்தத்தின் தீய நோக்கத்தை உழைக்கும் மக்கள்திரளிடம் அம்பலப்படுத்த வேண்டும்.

மேலும் இந்த யுத்தச் சூழலையும் பயன்படுத்தி தொழிலாளா் வா்க்கத்திற்கும் விவசாயவா்க்கத்திற்கும் புரட்சிகர உணா்வையூட்டி அவ்வா்க்கங்களை சோசலிச புரட்சியின் மூலம் தங்களது சொந்தநாட்டிலுள்ள முதலாளித்துவ ஆளும்வா்க்கத்தை தூக்கியெறிந்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றச் செய்ய வேண்டும் என்றார். அதாவது “உலகயுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக (புரட்சியாக) மாற்றவேண்டும்” என்றார் .

ஆனால் இரண்டாம் கம்யூனிச அகிலத்தை சோ்ந்த காவுட்ஸ்கி போன்ற சந்தா்ப்பவாத தலைவா்கள் லெனினின் புரட்சிகர கோட்பாட்டை மறுத்தனா்.

ஏகாதிபத்தியத்தின் நிதிமூலதனக் கோட்பாட்டை மறுத்தனா். “அதீத ஏகாதிபத்தியம்” என்றனா். அதாவது ஏகாதிபத்தியம் காலனிகளில் பொருளாதார வளா்ச்சியை ஏற்படுத்தும் என்றனா். மற்றும் காலனிகள் மீதான நிதிமூலதனக் கும்பலின் ஏகாதிபத்திய கொள்ளையையும் மறுத்தனா். ஏகாதிபத்திய சந்தையின் மறுபங்கீட்டுக்கான யுத்தத்தை “தேசபக்த யுத்தம்” எனவும், இந்த யுத்தத்தை நடத்தும் நாட்டின் ஆளும்வா்க்கத்தையும் அரசையும் உழைக்கும் வா்க்கமும் கம்யயூனிஸ்டு கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் எனவும், ”தாய்நாட்டை பாதுகாப்போம்” எனவும் “ஒவ்வொரு குடிமகனுக்கும் தேசபக்தி வேண்டும்” என்று பிரச்சாரம் செய்து உழைக்கும் வா்க்கத்திற்கும் மற்றும் புரட்சிக்கும் துரோகம் இழைத்தனா். ஏகாதிபத்திய யுத்தவெறியா்களுக்கு துணைபோயினா்.

அதே சமயத்தில் ரஷ்யாவில் லெனின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டு வந்த போல்ஸ்விக் கட்சியானது தொடா்ச்சியாக யுத்தத்திற்கெதிராக உழைக்கும் வா்க்கங் களிடையே ஏகாதிபத்தியவாதிகளின் யுத்தநோக்கத்தை ரஷ்ய தொழிலாளா் வா்க்கத்திடம் விவசாய வா்க்கத்திடம் அம்பலப்படுத்தி, ரஷ்ய ஜார் மன்னனின் ஏதேச்சதிகாரமானது ஏகாதிபத்தியங்களின் யுத்தவெறிக்கு துணைபோவதை சுட்டிகாட்டி அதற்கு எதிராக தொழிலாளா் மற்றும் விவசாய வா்க்கத்தை அதாவது உழைக்கும் வா்க்கத்தை திரட்டி 1917 பிப்ரவரியில் ஜாரின்எதேச்சாதிகாரத்தை தூக்கியெறிந்து ஜனநாயகப் புரட்சியையும், 1917 அக்டோபரில் யுத்தத்திற்கு துணைநின்ற அதாவதுபிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் நிதிமூலதன கும்பலுடன் கூடிக்குலாவிய ரஷ்யமுதலாளித்துவ வா்க்கத்தை அம்பலப்படுத்தி முதலாளித்துவ அரசுக்கு எதிராக,சோசலிச புரட்சியையும் செய்து முடித்தது. ரஷ்யாவில் உழைக்கும் வா்க்கம் அதிகாரத்தை கைப்பற்றியது. பின்னர் உலகயுத்ததிலிருந்து ரஷ்யா விலகியது மேலும் ரஷ்யா சுயேச்சையான சோசலிச வளா்ச்சிப்பாதையை நோக்கிச் சென்றது. லெனின் வழிகாட்டுதல் வென்றது.

முதல் உலக யுத்தத்திற்கு பிறகான காலக்கட்டத்தில் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள் பொருளதார நெருக்கடிக்குள் சிக்கித்திணறிண. ஆனால் சோவியத் ரஷ்யாவானது எந்தவிதமான ஏகாதிபத்தியத்தின் மூலதனத்தின் மற்றும் தொழில் நுட்பத்தின் உதவியில்லாமலேயே சொந்த நாட்டையும் வேறு எந்த நாட்டையும் சுரண்டலுக்கும் ஒடுக்கமுறைக்கும் உட்படுத்தாமலேயே சோவியத் மக்களின் உழைப்பை மட்டும் கொண்டே முதலாளித்துவ நாடுகளின் வளர்ச்சியை விட மிகுதியான பொருளாதார வளர்ச்சியை அடைந்தது. மேலும் உலகமே வியக்கும் அளவுக்கு சோசலிச அமைப்பு வெற்றிகரமாக கட்டியமைக்கப்பட்டது.

உலக யுத்தம் முடிந்தபிறகு லெனின் கூறியவாறே நிகழ்ந்தது. யுத்தத்தில் பங்கு கொண்ட அனைத்து ஏகாதிபத்தியங்களும் (அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை தவிர) மீளமுடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டன. அதிலும் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த நாடுகள் இத்தாலியும் ஜொ்மனியும் ஆகும். இந்த நாடுகளில்தான் 1920-களிலும் 1930-களிலும் பாசிச மற்றும் நாஜிச (பாசிச) அரசுகள் நிறுவப்பட்டன.பாசிசத்தின் பிரத்யேக வடிவங்கள் பற்றி டிமிட்ரோவ் மேலும் கூறுவதாவது: ‘பாசிசத்தைப் பற்றி பொதுவாக குணாம்சபடுத்திக் கூறினால் போதாது. அது எவ்வளவு சரியாக இருந்தாலும் போதாது. பாசிசத்தின் வளர்ச்சி பற்றிய விசேஷ அம்சங்களை தனிப்பட்ட பல நாடுகளில் அதன் பல்வேறு கட்டங்களில் பாசிச சர்வாதிகாரம் எடுக்கும் பல்வேறு வடிவங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு அவற்றை விவரமாக படித்தறிய வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தேசிய தனித்தன்மைகளை, பாசிசத்தின் குறிப்பிட்ட தேசிய அம்சங்களை ஆராய்ந்து படித்தறிந்து உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். அதற்குத்தக்கபடி பாசிசத்திற்கு எதிரான சரியான போராட்ட வடிவங்களையும், முறைகளையும் வகுத்துக்கொள்ள வேண்டும்.”

இத்தாலியில்பாசிசம்- (குறித்த வகையில்)

இத்தாலியானது யுத்தத்தில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுடன் சோ்ந்து முதல் உலக யுத்தத்தில் ஈடுபட்டது. யுத்தத்தில் .இத்தாலி வெற்றி பெற்ற அணியில் இடம் பெற்றிருந்தாலும் லெனின் கூறியவாறு அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டது. யுத்தக் கடன், உணவுபற்றாக்குறை, மோசமான அறுவடை, பணவீக்கம், விலைவாசி உயா்வு போன்றவைகள் அந்தநாட்டை பொருளாதார ரீதியான திவால் தன்மைக்கு கொண்டு சென்றது. ஆறு லட்சம் இத்தாலிய படைவீரா்கள் யுத்ததத்தில் பலியாயினா். பத்து லட்சம் இத்தாலியா்கள் காயமடைந்தனா். 5 லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தனா். யுத்தத்தில் கிடைத்த ஆதாயத்தை விட யுத்தச்செலவுகள் மிக அதிகமானது. மேலும் யுத்தத்தின் கூட்டாளி நாடுகளால் உரிய ஆதாயத்தை முறையாக பங்கிட்டு கொடுக்காமல் துரோகம் இழைக்கப்பட்டது.. யுத்தத்தினால் ஏற்பட்ட சீரழிவுகளையும் கொடுமைகளையும் எதிர்த்து உழைக்கும் விவசாய வா்க்கத்தின் மற்றும்தொழிலாளா் வா்க்கத்தினுடைய போராட்டம் உக்கிரமாக நடந்தது. இந்நேரத்தில் சரியான வழிகாட்டும் சித்தாந்த பலம்பெற்ற கம்யுனிஸ்டு கட்சி இல்லாததன் விளைவாக அப்போராட்டங்களை தொழிலாளா் விவசாய வா்க்கம் அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டமாக வளா்த்து செல்ல முடியவில்லை. ரஷ்யாவில் கம்யுனி்ஸ்டு கட்சி தலைமையில் சோசலிச அரசு அமைக்கப்பட்டதைகண்டு ஏகாதிபத்திய நிதமூலதனக் கும்பல் நடுங்கியது. இத்தாலிய நிதிமூலதனக்கும்பலின் நலனை  பிரதிநித்துவப்படுத்திய முசோலினியின் பாசிஸ்டா கட்சியானது குட்டிமுதலாளிய வா்க்கத்தையும் வெகுஜனங்களையும் தங்களது வாய்ச்சவடால் பாசிசப் பிரச்சாரத்தினால் பொய்யையும் புரட்டையும் பிரச்சாரம் செய்தது. “அதாவது பழைய ரோமப் பேரரசு நிலவிய போது நம்மிடம் இருந்த மிகுதியான “கத்தோலிக்க மத உணா்ச்சியோடு கூடிய இத்தாலிய தேசபற்று” மற்றும் “இத்தாலிய தேசிய பெருமிதம்” இல்லை. அதனால்தான் நாம் யுத்தத்தினால் ஆதாயம் அடைய முடியவில்லை. நமக்கு இத்தாலிய தேசபக்தி இல்லாததன் விளைவாகத்தான் நாம் நமது ரோம சாம்ராஜ்யத்தை இழந்தோம்” என்ற முசோலினியின் ஆக்கிரமிப்புத்தன்மை கொண்ட வாய்ச் சவடால் பிரச்சாரத்தின் மூலம் அப்பாவி வெகுஜனங்கள் மற்றும் நடுத்தரவா்க்கம் ஏமாற்றப்பட்டனர். மேலும் தோ்தல் மூலமாக முசோலினியின் பாசிஸ்டா கட்சியானது அதிகாரத்திற்கு வந்தது. 1922-ல் முசோலினி இத்தாலியின் பிரதமரானான். 1925-ல் இத்தாலியின் சர்வாதிகாரி என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்டான். தோ்தலில்தான் பெற்ற பெரும்பான்மையைக் கொண்டு கம்யூனி்ஸ்டு கட்சி, தொழிற்சங்கம் மற்றும் விவசாய சங்கம் உட்பட அனைத்து ஜனநாயக அமைப்புகள் கூடவே பாராளுமன்றத்தையும் எதேச்சதிகாரமாக கலைத்தான். ஜனநாயகமும் கம்யூனிசமும் தேசத்திற்கு ஆபத்து என்றான். அறிவும் அறிவியலும் சமுதாயத்திற்கு எதிரானது என்றான். தெய்வபக்திமிக்க மற்றும் கத்தோலிக்க தன்மை கொண்ட பழையரோமானியப் பேரரசை, அதாவது ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டத்தைச்சேர்ந்த ஏறக்குறைய 40 நாடுகளில் இத்தாலிய பேரரசை நிறுவுவதே தனது பாசிஸ்டுகட்சியின் லட்சியம் என்று பகிரங்கமாக அறிவித்தான். தன்னை எதிர்த்து போராடியவா்களை வீதியில் தூக்கில் தொங்கவிட்டான்.முன்னாள் ராணுவத்தினர், 14 வயது நிரம்பிய இளைஞர்கள் வேலையற்றோர்,உதிரிகள், கிரிமினல்கள், இத்தாலிய ஆதிக்க வெறி கொண்ட பழமைவாதிகள் மற்றும்கிறித்தவ பாதிரியார்களைக் கொண்டு ரோம சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்றான். அதற்காக கத்தோலிக்க மத உணர்ச்சியோடு கூடிய இத்தாலிய மொழி--தேசியஇனவெறி ஊட்டப்பட்ட “கருப்புச் சட்டை” என்ற ஆயுதம் தாங்கிய பாசிசப் படைப்பிரிவை அவன் உருவாக்கினான். அப்படைக்கு முறையான உடற்பயிற்சி பற்றிய போதனை, ”தேசபக்தி” ( முதல் உலக யுத்தக் காலககட்டத்தில் இரண்டாம் அகிலத்தில் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை மறுத்த காவுட்ஸ்கியினர் முன் வைத்த சமூகதேசியவெறி முழக்கம் ஆகும்.) என்ற பெயரில் இத்தாலியானது பிற தேசங்களை ஆக்கிரமிப்பது நியாயமானது என்ற போதனை, மற்றும் மிக முக்கியமாக ஒரு நபர்தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுவது என்ற மத்தியத்துவக் கொள்கை இவற்றுக்கான பயிற்சி தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டது. பழைய ரோம சாம்ராஜ்யத்தில் அடிமைப்படுத்தி வைக்கப்பட்ட 40 தேசங்களை படையெடுப்பின் மூலமாக மீட்டு புதிய ரோம சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும். இவற்றிற்கு முன்னிபந்தனையாக முதலில் நாட்டிற்குள் ஜனநாயகவாதிகள், கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், பகுத்தறிவாளர்கள்,பெண்விடுதலைக்கு குரல்கொடுப்பவர்கள் ,முற்போக்கு நபர்கள் மற்றும் நிறுவனங்கள் இவைகளை ஒழிக்கவேண்டும் என்ற பாசிச போதனையும் கொடுக்கப்பட்டது.

மேலும் இத்தாலிய பாசிசஆட்சியானது, நிலபிரபுத்துவத்திற்கு எதிராகப் போராடி முதலாளித்துவப் புரட்சியின் மூலமாக பெறப்பட்ட ஜனநாயகச் சட்டங்களை அதாவது பேச்சுரிமை, எழுத்துரிமை மற்றும் கூட்டம் கூடும் உரிமை போன்ற இன்ன பிறவற்றை தூக்கி யெறிந்துவிட்டு எதேச்சதிகாரமான சர்வாதிகார கொடூரச் சட்டங்களை உருவாக்கியது. போராடுபவர் களையும் குறிப்பாக கம்யூனிஸ்டுகளையும் ஜனநாயகசக்திகளையும், ஜனநாயக நிறுவனங்களையும் தொழிற்சங்கங்களையும் மிகக்கடுமையாக ஒடுக்கியது. சட்டப்பூர்வமான முதலாளித்துவக் குடியரசுகள் நிலவிய ஐரோப்பியச் சூழலில் சட்டபூர்வமான குடியரசு முறையைத் தூக்கியெறிந்து விட்டு வரலாற்றில் அப்பட்டமான கொடூரமான பாசிச சர்வாதிகார முறைக்கு மாறிய முதல் ஏகாதிபத்தியநாடு இத்தாலிதான். ஜெர்மனியில் பாசிசம்- (குறித்த வகையில்)

இருபதாம் நூற்றாண்டில் ஜொ்மனியானது மிகுதியான தொழில் வளா்ச்சி பெற்ற முதன்மை நிதிமூலதன ஏகாதிபத்தியமாக ஐரோப்பாவில் உருவானது. ஆனால் ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போல மிகுதியான காலனி நாடுகளை கொண்ட நாடாக இல்லை. ஆதலால் தனது நிதிமூலதனச் சந்தைக்கும் ஏகாதிபத்திய கொள்ளைக்கும் மற்றும் தனது பொருளாதார நெருக்கடிகளை தணிக்கவும் புதிய காலனிகள் தேவைப்பட்டன. அதற்காக காலனிகளை ஏற்கனவே பங்கு போட்டு வைத்திருந்த பிரிட்டன், பிரான்ஸ் , போன்ற நாடுகளோடு யுத்தம் செய்துதான் காலனிகளை பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தத்தின் காரணமாக ஆஸ்திரியா ஹங்கேரிய பேரரசுடனும் மற்றும் துருக்கி ஒட்டோமான் பேரரசுடனும் சோ்ந்து காலனிய பேராசையுடன் ஜெர்மானிய நிதிமூலதனக் கும்பல் யுத்தத்தை துவக்கியது. ஆனால் பேராசை பெரும் நஷ்டத்திற்கு இட்டுச்சென்றது. யுத்தத்தில் ஜொ்மனி அவமானகரமான தோல்வியை சந்தித்தது. ஏற்கனவே கைவசம் வைத்திருந்தகாலனிகளை பறிகொடுத்தது. கடுமையானபொருளாதார நெருக்கடியை சந்தித்தது.வெற்றிபெற்றஏகாதிபத்தியங்கள் யுத்தத்திற்கு முதன்மை காரணகா்த்தா ஜொ்மனி எனக்கூறி நான்கு ஆண்டு காலயுத்தச்செலவை ஜொ்மனிதான் ஏற்கவேண்டும் எனக் கூறி ”வொ்செய்ல்ஸ்“ ஒப்பந்தத்தைஜொ்மனி மீது திணித்தது. அந்த ஒப்பந்தப் பிரகாரம் ஜெர்மனியில் முடியாட்சி அகற்றப்பட்டது. இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை கலைக்கப்பட்டது. ஜொ்மனியின் பாதுகாப்பிற்கென ஒரு லட்சம் போ் மட்டும் கொண்ட படை மட்டும்அனுமதிக்கப்பட்டது. யுத்தச்செலவாக 40 பில்லியன் டாலா் நஷ்டஈடு கொடுக்கும்படிகட்டாயப் படுத்தப்பட்டது. ஜொ்மானிய பொருளாதாரம் வீழ்ந்தது. நாடுமுழுக்கதொழிலாளா் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்தது. அரசியல் நிலைமை மிகமோசமானதாக இருந்தது.

ஜொ்மானிய கம்யூனிஸ்டுகட்சி காவுட்ஸ்கிய சந்தா்ப்பவாதத்தில் மூழ்கியிருந்ததால் வெகுஜனங்களின் போராட்டத்திற்கு தலைமை ஏற்க முடியவில்லை.

ரஷ்யப் பாட்டாளிவா்க்க புரட்சியைத் தொடர்ந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நிதிமூலதனக் கும்பலை எதிர்த்து, ஆட்சியாளர்களை எதிர்த்து தொழிலாளர், விவசாயிகளின் போரட்டம் கடுமையாக நடந்தது. அந்நாடுகளில் அப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்க லெனினிஸ்டு வகைப்பட்ட கட்சி இல்லாததன் விளைவாக அரசின் கடுமையான அடக்கு முறையை எதிர்கொண்டது.இத்தாலியை மாதிரியாகக் கொண்டு ஜெர்மனியிலிலும் ஒரு பாசிச கட்சியைக் கட்டியமைப்பதற்கான வேலைகளை 1920-களிலேயே ஜெர்மானிய நிதிமூலதனக் கும்பலானது முற்பட்டது. 18ஆம் நூற்றாண்டு இறுதியில் காலனிய ஆதிக்கத்தை ஐரோப்பாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்கவும் நியாயப்படுத்த பிரிட்டனால் உருவாக்கப்பட்ட "ஆரிய மேலாண்மை” இனவியல் கோட்பாட்டைத்தான் ஹிட்லரின் நாஜி (பாசிச)இயக்கமானது சித்தாந்த அடிப்படையாகக் கொண்டது. “ஆரிய மேலாதிக்கம்”என்பதையே தனது கொள்கையாக அறிவித்தது. இந்த “ஆரியமேலாண்மை” சித்தாந்தமானது 19-ம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் குறிப்பாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தங்களது காலனியாதிக்கத்தை ஐரோப்பியா்கள் மத்தியில் நியாயப்படுத்தவும் மற்றும் காலனிய ஆதிக்கத்தை பாதுகாக்கவும் மற்றும் காலனிய நாட்டு மக்களை பிரித்து ஒடுக்கி ஆட்சிசெய்யும் நோக்கத்தில் ஜெர்மன், பிரிட்டன், பிரான்சு மற்றும் ஏனைய முதலாளித்துவ நாடுகளைச் சேர்ந்த இனவியலாளர்களைக் கொண்டு “இனவியல் ஆராய்ச்சி” என்ற அபத்தத்தின் பேரில் ஆரிய இனவியல் கோட்பாட்டை ஆதாவது ஆரிய மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கியிருந்தனர். இதன் மூலம் உலகிலேயே ”வெள்ளைத்தோல் ஆரிய இனம்தான் உயர்ந்த இனம்,”ஏனைய இனங்கள் அதற்கு கீழ்ப்பட்டவைதான் என்று வரலாற்றிற்கும் மற்றும்விஞ்ஞானத்திற்கும் புறம்பாக செயற்கையாக மனிதா்களை அவா்களது உடல்தோற்றத்தை வைத்து (மனிதா்களின் நிறம்,உயரம், அவா்களது மூக்கு, கண், காதுமற்றும் முடி இவற்றை வைத்து) வேறுபடுத்தும் இனரீதியான (Racial) பிரிவினைக்கு உட்படுத்தும் கோட்பாட்டை உருவாக்கியிருந்தனா். இதில் அதிக ஆர்வமும் அக்கறையும் எடுத்துக்கொண்டது பிரிட்டன்தான். காரணம், உலகத்தில் இந்தியா உட்படஅதிகமான காலனிகள் பிரிட்டனிடம்தான் இருந்தன. இந்த காலனிய (நிதிமூலதனகாலனியத்திற்கு முந்தைய) ஆதிக்கத்தை உலகம் முழுக்க நியாயப்படுத்த உருவாக்கியிருந்த இனவியல் கோட்பாட்டைத்தான் நிதிமூலதனக் காலக்கட்டத்தில் தனது பாசிச இயக்கத்திற்கான சித்ததாந்தமாக முன்வைத்தான் ஹிட்லா். அக் கொள்கையின்படி “ஆரிய இனமே உலகத்தில் உன்னதமான மற்றும் தூய்மையான இனம்”, ”உலகத்தை ஆளப்பிறந்த இனம்,” ”மற்ற இனங்கள் யாவும் அடிமையாக இருக்கத்தான் தகுதிபெற்ற இனம், “ஆரியர்களின் தாய்நாடு ஜெர்மனி”,“ஜெர்மனி, ஆரியருக்கு மட்டுமே சொந்தமானது”. ஏனைய இனங்களுடன் கலந்துவாழ்ந்ததன் விளைவாகத்தான் ஜொ்மனி முன்னேற முடியவில்லை. குறிப்பாக யூதர்கள் இந்த நாட்டில் குடியேறியதால்தான் நாடு சீர்குலைந்துபோய்விட்டது. ஐரோப்பியர்களால் குறிப்பாக பிரான்சால் நம் நாடு அடிமைப்படுத்தப்பட்டது. ஜெர்மனியிலிருந்து பலபகுதிகள் (பவேரியா) தனியாகப் பிரிந்து போனதற்குக் காரணமும் யூதர்கள்தான். அவர்கள் நாட்டின் சிறுபான்மையாக இருந்தாலும் நாட்டின் தலையெழுத்தையே தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். யூதர்கள் செய்த துரோகமே உலக யுத்தத்தில் ஜெர்மன் தோல்விக்கு காரணமாகும் ஆகையால் நம்நாட்டின் அத்தனை கேடுகளுக்கும் காரணமாண யூதர்களின் குடியுரிமையை பறிக்க வேண்டும். அவர்களை நாட்டைவிட்டுவிரட்ட வேண்டும் அல்லது கொன்றொழிக்க வேண்டும்” என்ற உண்மைக்கு புறம்பானமற்றும் ஈனத்தனமான கொள்கையை நாஜிக்கட்சியானது நாடு முழுவதும் பிரச்சாரம்செய்து வந்தது. அதேசமயத்தில் ஜெர்மானிய தேசியவெறியூட்டப்பட்ட “பழுப்புச்சட்டை” பாசிசப் பட்டாளத்தையும் உருவாக்கி வந்தது. நாஜிக்கட்சியில் 1921-ல் ஹிட்லர் உறுப்பினராக சேர்ந்தான். நாஜிக் கட்சியில் பொய் மற்றும் புரட்டு இவற்றை அடிப்படையாகக் கொண்ட இனறெியைத் தூண்டும் இவனது வாய்வீச்சு பேச்சாற்றலானது கட்சியில் முன்னணித் தலைவர்களுள் ஒருவனாக ஆக்கியது. நாஜிக் கட்சியின் தொடர் பாசிசப் பிரச்சாரம் மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டதன் விளைவாக கட்சியின் முதன்மைத் தலைவனானான்.. 1933 ம் ஆண்டு நடந்த ரைஸ்டாக் (பாராளுமன்றம்) தேர்தலில் நாஜிக்கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

ஆட்சியில் ஹிட்லர் அமர்ந்தவுடன் இத்தாலியின் முசோலினியைப் போலவே அனைத்து தொழிற்சங்கங்களையும் விவசாய சங்கங்களையும் கலைத்ததான்.

ஜனநாயகம் ஆபத்து என்றான். மக்களுக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை மற்றும் கூட்டம் கூடும் உரிமை மறுக்கப்பட்டது. பகுத்தறிவாளா்களும், அறிவுஜீவிகளும் விஞ்ஞானிகளும் மிரட்டப்பட்டு நாட்டை விட்டு துரத்தப்பட்டனா்.

 கம்யூனிஸ்டுகளும் கொடுமைகளை எதிர்த்து போராடும் ஜனநாயக சக்திகளும் படுகொலை செய்யப்பட்டனா். நாஜி அரசானது அரசு நிர்வாகம், இராணுவம், போலீஸ் போன்ற அனைத்து துறைகளிலும் யூதர்களை நீக்கியது. அனைத்து அரசு அமைப்புகளையும் நாஜிச மயமாக்கியது. யூதா்களுக்கு குடியுரிமையை மறுத்தது. 

 அவா்களைஇரண்டாம்தரகுடிமக்களாக்கியது. யூதர்களுக்கு அடையாளமாக தனிச் சின்னத்தை அவர்களது உடையில் கட்டாயமாக அணியவைத்தது. அவர்களின் சொத்துக்களை பதிவு செய்யக் கூறியது. பிறகு அவற்றைக் நாஜிகட்சியினரை கொண்டே கொள்ளையடித்தது. அதில் ஒரு பகுதியை நாஜிக் கட்சியினருக்கு பங்கு போட்டுக் கொடுத்துவிட்டு மீதியை அரசு தனது கஜானாவுக்கு கொண்டு சென்றது. யூதர்களை ஜெட்டோ என்ற தனி வெளிச்சிறையில் (வதைமுகாம்களில்) அடைத்துவைத்தது.குறிப்பிட்ட நேரத்தில் வெளியே செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பி வரவேண்டும் என்று கட்டளையிட்டது.. அவர்களது வியாபார நிறுவனங்கள் தொழில் நிலையங்களை கைப்பற்றியது. அவர்களின் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

ஹிட்லர் படையெடுத்த நாடுகளிலெல்லாம் இந்த நடைமுறையைக் கையாண்டான். பிரான்ஸ் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலுள்ள பெண்கள் மற்றம் சிறுகுழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான யூதர்களையும் இன்னபிற தேசிய இனங்களையும் “ஆரிய இனத்தைத் தூய்மைப் படுத்துகிறோம்” என்று கூறி போலந்திலுள்ள ஆஷ்டுவிஸ்ச் பகுதியிலுள்ள வெகுஜன கொலைக்களத்திற்கு கொண்டுசென்று ”ஹோலகாஸ்ட்” என்றழைக்கப்படுகிற கூட்டுப் படுகொலையை நிகழ்த்தினான். (2002ல் குஜராத்தில் R.S.S இந்துத்துவா மதவெறி பாசிஸ்டுகள் முதியோர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1000க் கணக்கில் முஸ்லிம்களை கொன்று குவித்ததை நினைவில் கொள்வோம்.)

முதலில் விஷவாயுவைச் செலுத்திக் கொல்வது, பிறகு பிணங்களை குவியலாக எரிப்பது, இவ்வாறு ஐரோப்பாவிலிருந்த யூதர்களில் 65 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் ஒரு கோடியே 10 லட்சம் யூதர்கள் பலதரப்பட்ட வகையில் சித்திரவதைக்கு உள்ளாயினர். இவைதான் ஹிட்லர், அவன் நாஜிக்கட்சி மற்றும் அவனது நாஜிச சர்வாதிகார ஆட்சி நடத்திய இனப்படுகொலைத் தாண்டவம்.

பாசிசத்தின் நடைமுறை இதுதான். இதன் பொருளாதார நோக்கம் ”ஜெர்மன் நிதிமுதலாளிகள் உலகத்தின் அனைத்து நாடுகளையும் ஆட்சிசெய்ய வேண்டும்” என்ற பேராதிக்க கொள்கையே ஆகும். அதாவது ஜொ்மானிய நிதி மூலதனக் கும்பலுக்கானபேரரசு விரிவாக்கமே.

ஜெர்மனியின் “ரைக்ஸ்டாக் பாராளுமன்றமானது உலகத்தை 1000ஆண்டுகாலம் ஆட்சி செய்யும்” என்று ஜெர்மானிய ஆதிக்கவெறியை வெளிப்படையாகவே தனது பாசிச திட்டத்தில் அறிவித்தான் ஹிட்லர்.

ஜெர்மனியில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாசிசமும் இத்தாலியைப் போன்று தேசியவெறியையும் பிற தேசங்களை ஆக்கிரமித்து ஜெர்மனிக்கு கீழ்படுத்த வேண்டும் என்ற தேசிய ஆக்கிரமிப்பு கொள்கையை முன்வைத்தது. அத்துடன் கூடவே சொந்த தேசத்திலேயே பலநூறு ஆண்டுகள் இரண்டறக் கலந்து வாழ்ந்து வந்த யூதஇனத்தை ஜெர்மானியர்களுக்கு செயற்கையாக எதிரியாக சித்தரித்து யூதமொழி தேசியஇனஅழிப்பை செயல்படுத்தியதுதான் ஜெர்மானிய பாசித்தின் குறித்த பண்பாகும்.

தொடரும்……..

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்