சன் தொல்லைகாட்சியில் ராமயணம் ஒளிப்பரப்பு

 இராமயணம் TV யில் காட்டப்படுவதை பற்றி

++++++++++++++++++++++++++++++++++++
தேர்தல் நேரத்தில் காவடிதூக்கிய பலர் இந்த அயோக்கிய கூட்டத்தை ஒருப்பக்கம் தூற்றுகிறார்கள் என்றால் இன்னும் சிலர் அவர்களின் கொள்ளைகார கொள்கைகளை மூடிமறைக்க திராவிட முகமூடியை பார்பன எதிர்ப்பை ஆயுதமாக ஏமாற்ற நினைக்கின்றனர்.
உண்மையில் இராமயணம் TV யில் காட்டப்படுவதின் நோக்கம் ஆளும் வர்க்கதிற்கும் கார்ப்ரேட்டுகளும் பெரிய வேறுபாடு இல்லை என்பேன்.. இவன் மக்களின் கொந்தளிப்பை மட்டுபடுத்த மது போதை போல ஆன்மீக போதை தேவைப்படுகிறது அவனுக்கு நல்ல கல்லா கட்டும் கதை வேண்டும் அவை முன்னரே மக்களின் ஆன்மீக போதைதான் அதை தானே பிஜேபி செய்துக் கொண்டுள்ளது அதை திராவிடத்தின் பெயரில் இவர்கள் செய்வது என்ன தவறு என்று கேட்கவா வேண்டும்???
இவர்களின் நோக்கமும் செயலையும் புரிந்துக் கொள்ளாமல் இவர்களை புனித படுத்த கிளம்பியவர் கள்தான் புலம்ப வேண்டும் ஏனெனில் அந்த முற்போக்காளர்களின் பச்சோந்திதனம் அம்பலப்பட்டுள்ளது ஆக.
எல்லா ஆட்சியாளர்களும் உழைக்கும் மக்களின் எதிரிதான் அவன் நோக்கம் மூளை சலவையும் உழைப்பை சுரண்டுவதுதான் அவனை உழைக்கும் வர்க்க விரோதியாக புரிந்துக் கொள்ளாதவரை அவனின் அடிமைகள் ஏமாற்றிக் கொண்டேயிருப்பர்
புரிந்துக் கொள்ளாத வரை இவை நிகழ்ந்துக் கொண்டேயிருக்கும்...
May be a graphic of 2 people, television and text that says 'VIDY TV இராமயணம் TV யில் காட்டப்படுவதை பற்றி கார்பரேட்டுகளின் குகளின் நோ நோக்கமும் கார்ப்ரேட் செயலையும் புரிந்துக் கொள்ளாமல் அவர்களை புனித படுத்து கிளம்பியவர் கள்தான் புலம்ப வேண்டும் அவன் உழைக்கும் மக்களின் எதிரிதான் அவன் நோக்கம் மூளை சலவையும் உழைப்பை சுரண்டுவதுதான் அவனை உழைக்கும் வர்க்க விரோதியாக புரிந்துக் கொள்ளாதவரை அவனின் அடிமைகள் ஏமாற்றிக் கொண்டேயிருப்பர்'
நூலாகவும், செவிவழிக் கதையாகவும், வெகுமக்கள் பரப்பை எட்டிய ராமாயணம், தொலைக்காட்சி தொடராகவும் வெளிவந்துமக்களை மூடறாக்கியது
வர்க்கம் அறியாவிட்டால் இப்படிதான் போக வேண்டும்
ஆளும் வர்க்கதின் ஒரு பிரிவுடன் கூட்டணி வைத்தவர்களே...
பாசிசத்தை ஒழிக்க ஒன்று சேர்ந்தவர்களே...
இன்று அவர்கள் பின் அணி திரள்கிறார்கள் முதலாளிகள் உங்கள் பாயசம் என்னவாகிவிட்டது சொல்வீர்களா??

திராவிட அரசியல்

பகுத்தறிவு பாசறை

எப்படியெல்லாம் உழைக்கும் மக்களின் உதிரத்தை உறிஞ்சுவது இதுதான் முதலாளிகளின் நலன்... சுரண்ட பிறந்தவன் சுரண்டாமல் உயிர்வாழ முடியாது இவை நியதி இவர்களை ஒழித்துக் கட்டாமல் உழைக்கும் மக்களுக்கு விடுதலை இல்லை..
ராமயணம் அல்ல இங்கே பிரச்சினை

உழைக்கும் மக்களுக்கு வாழ்க்கை பிரச்சினை அதற்கு யாராவது பதில் சொல்வீர்களா???.

செய்தி அப்படியே கீழே

இந்நிலையில், தமிழின் முன்னணி தொலைக்காட்சியான சன் டிவியில் "இராமாயணம்" மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. "சீதையின் இதயநாயகன்.. இராமாயணம்.. விரைவில்" எனக் குறிப்பிட்டு ப்ரொமோ வீடியோ சன் டிவியின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் இந்த ஆண்டு பிப்ரவரியில் திறப்பு விழா கண்ட நிலையில், ராமர் பற்றிய பேச்சுகள் புழக்கத்தில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் மீண்டும் 'இராமாயணம்' இதிகாசத் தொடரை ஒளிபரப்பு செய்ய இருக்கிறது சன் தொலைக்காட்சி. முன்பு சன் டிவியில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் 'ராமாயணம்’ ஒளிபரப்பானது. இந்நிலையில், தற்போது ஒளிபரப்பாக உள்ள ராமாயணம் அதேதானா? அல்லது மீண்டும் எடுக்கப்பட்டதா என்பது அறிவிக்கப்படவில்லை.

மேலும், “இராமாயணம்” தொடர் எந்தெந்த நாட்களில் ஒளிபரப்பாகும், எப்போது முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது என்ற தகவல்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more at: https://tamil.oneindia.com/television/sun-tv-to-telecast-ramayanam-serial-soon-602151.html





இலக்கு 47 இணைய இதழ் pdf வடிவில்

                    இதழில் பேசப்பட்டுள்ள கட்டுரைகள்

1.ஆசிரியரிடமிருந்து

2. நமது படிப்பைச் சீர்செய்வோம். மாவோ

3. இந்தியாவில் தோன்றிய பொதுவுடமை கட்சிகள் பற்றி ஓர் தேடல்

4. சர்வதேச தொழிலாளர் தினம்-மே தினம்






இலக்கு 47 இணைய இதழ் PDF வடிவில் இந்த லிங்கை அழுத்தி பெற்றுக் கொள்ளவும் 

இலக்கு இணைய இதழ் தொடங்கி இரண்டாம் ஆண்டை நெருங்க போகிறோம் தோழர்களே.

 

இந்த நேரத்தில் எங்களின் பணி உண்மையிலே என்ன சலனத்தை மார்க்சியவாதிகளிடையே ஏற்படுத்தியுள்ளது என்று ஆய்வு செய்தால் இந்த இதழில் பேசப்பட்டுள்ள முக்கியமான பகுதியாகும்.

தத்துவத்தை நடைமுறையோடு இணைப்பது என்கின்றனர்- எந்த தத்துவத்தை நடைமுறையோடு இணைப்பது என்ற கேள்வி மட்டுமில்லாமல் விடையாக இங்கு தோன்றி பொதுவுடமை இயக்கங்களின் சுருக்கமான வரலாற்றோடு அவர்களின் நடைமுறை பணி என்ன? அவர்கள் நடைமுறை என்று என்ன செய்துக் கொண்டுள்ளனர் அவர்களின் தோல்விக்கு காரணம் மார்க்சிய ஆசான்கள் வழிக்காட்டிய தத்துவ நடைமுறையை புரிந்துக் கொள்ளாமை மற்றும் கட்சி பற்றிய ஆசான்களின் பாணியை கைவிட்டு மார்க்சியத்தை மறுத்து மார்க்சிய விரோத பாதையில் பயணித்தவையே என்று தெளிவுப்படுத்தியுள்ளோம்.

நமக்கான வழிகாட்டிகள் மார்க்சிய ஆசான்களே அவர்களின் பாதையை கைவிட்டு விட்டு பேசும் மற்றெல்லாம் மார்க்சியம் அல்லாத ஆளும் வர்க்கத்திடம் அண்டி பிழைக்கும் பாதையே

மார்க்சியத்தை கற்று தேறுவொம் நமது ஆசான்களிடமிருந்தே அதனை நம் நாட்டிற்கு ஏற்றவகையில் நடைமுறை படுத்துவோம் ஆசான்களின் வழியில் நின்று.

உலக தொழிலாளர்களின் உதிரத்தை உரிஞ்சி வாழும் கூட்டத்தை வேரறுக்காமல் சுரண்டலுக்கு முடிவில்லை.

மே நாள் தியாகிகளுக்கு செவ்வணக்கம்

அவர்களின் பணியை அவர்கள் விட்டு சென்ற பணியை முடிக்க சபதமேற்போம்

தோழமையுடன்

இலக்கு ஆசிரியர் குழு

கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளவர்கள்

 கம்யூனிஸ்ட் என்பவர்களே கம்யூனிசம் அல்லாதவை பேசும் பொழுது - கம்யூனிஸ்ட் கட்சிகளே கம்யூனிச விரோத கருத்துகளை பேசும் பொழுது பரப்பும் பொழுது

எப்படி கம்யூனிசத்தின் நோக்கத்தை இங்கே நிறைவேற்ற போகின்றீர்கள் தோழர்களே??????
1). அரசு பற்றி லெனின் சொன்னது தெரியாது!!!
2). புரட்சி பற்றி லெனின் சொன்னது தெரியாது!!!
3). வர்க்கம் பற்றி லெனின் சொன்னது தெரியாது!!!
4). தொழிற்சங்கத்தின் பணி பற்றி லெனின் சொன்னது தெரியாது!!!
5). பாராளுமன்றம் பற்றி லெனின் சொன்னது தெரியாது!
6). தோல்விக்கு பின் கட்சியை எப்படி முறைபடுத்துவது என்று லெனின் சொன்னது தெரியாது???
ஆனால் கட்சி மட்டும் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி???
சிலர் கூக்குரலிடுகிறார்கள் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இதை செய்து விடுவான் அதை செய்து விடுவான் என்று ஆனால் நீங்கள் மக்கள் சக்தியை ஒன்றிணைக்காமல் பல்வேறு போக்கில் மேயவிட்டுள்ள போது அவன் எல்லாம் செய்வான்...
உழைக்கும் மக்கள் அவர்களின் பிரச்சினையை தீர்க்க வழி சொல்லி எதிரியை காட்டுவதோடு எதிரியின் நோக்கம் பலம் என்னவென்பதனையும் எதிரியை இந்த அரங்கத்திலிருந்து விரட்டி அடிக்க வெறும் தேர்தலால் மட்டுமே சாத்தியம் இல்லை இந்த அரசியல் அதிகாரம் உழைக்கும் மக்களுக்கு வேண்டும் என்பதனை இதுவரை செயல்பாட்டில் இறங்கியுள்ளீர்களா?இதற்கான முயற்சியில் கட்சி இறங்கியுள்ளது நடைமுறை என்று சொல்லுபவை எதற்கான நடைமுறை சொல்ல முடியுமா?
கம்யூனிஸ்டுகளின் பணி இந்த ஒடுக்குமுறைக்கான வர்க்க சமூகத்தை தூக்கியெறிந்து உழைக்கும் மக்களுக்கான அதிகாரம் படைத்த அரசமைப்பை உருவாக்குவதுதான் என்றனர் நமது ஆசான்கள்- கம்யூனிஸ்ட் கட்சிகள் இங்கே என்ன செய்துக் கொண்டுள்ளது????
இப்படி பலக் கேள்வி விவாதிக்கலாமா தோழர்களே
May be an image of 8 people and overcoat
1 comment
Like
Comment
Share

சர்வதேச தொழிலாளர் தின-மே தின வரலாறு

 சர்வதேச தொழிலாளர் தினம்-மே தினம் 

ஜார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள்.இங்கும் 1895 -1899 இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள்நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் 1832ல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலைகோரிக்கையைமுன்வைத்துவேலைநிறுத்தம்செய்தனர்.அதேபோல்1835ல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்புஎன்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 11886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும்மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

சிக்காகோ பேரெழுச்சி

மே 3, 1886 அன்று மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது.இந்நேரத்தில்காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச்சூடுநடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 211886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டிஅந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.

நவம்பர்111887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல்ஆகியோர்தூக்கிலிடப்பட்டனர். நவம்பர்13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.

அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

1889 ஜூலை14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் சங்கம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள்இக்கூட்டத்தில்பங்கேற்றனர் . பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.

இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிக்க வழிவகுத்தது.

இந்தியாவில்சென்னைமாநகரில்1923-ம்ஆண்டில் மெரீனாகடற்கரை மற்றும் திருவான்மியூர்  பகுதிகளில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும், தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான .சிங்காரவேலர் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள மெரினா கடற்கரையில், இந்தியாவின் முதல் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.

+++++++++++++++++++++++++++++++++++++++++

உலக தொழிலாளர் தினம்

வாழ்த்துகள் தோழர்களே.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்