தத்துவம் பயில்வோம்
மார்க்சிய தத்துவம் பயில்வோம்
அறிமுகம்
இன்றைய அறிவியல்-தொழில்நுட்பப்
புரட்சி மனிதகுலத்தின் ஆற்றலைப் பிரமாண்டமாக வளர்த்தெடுத்துள்ளது. புற உலகையும்
இயற்கையையும் மாற்றி அமைக்கும் தகுதி மனிதனுக்குக் கிடைத்துள்ளது. எனினும், நாம் வாழும் காலத்தின்
சமூக, பொருளாதார
சிக்கல்களை ஆழமாகப் புரிந்துகொள்ளவும், சமூகத்தை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்கவும் ஒரு சரியான
தத்துவக் கண்ணோட்டம் இன்றியமையாதது. அத்தகைய அறிவியல் பூர்வமான உலகக் கண்ணோட்டமே
மார்க்சிய-லெனினிய தத்துவமாகும்.
ஆனால், மார்க்சியம் அதன்
தொடக்க காலத்திலிருந்தே முதலாளித்துவ தத்துவங்களுக்கு எதிராகவும், அதற்குள்ளேயே ஊடுருவும்
திரிபுவாத சக்திகளுக்கு எதிராகவும் இடைவிடாத போராட்டங்களை நடத்தியே வளர்ந்து
வந்துள்ளது. இன்று நமது இயக்கங்களுக்குள்ளும், கட்சி அணிகளுக்குள்ளும் ஊடுருவி
மார்க்சியத்தைக் குழப்பிக் கொண்டிருக்கும் மார்க்சிய விரோதப் போக்குகளை அடையாளம்
கண்டு முறியடிப்பதே இன்றைய முதன்மையான தத்துவக் கடமையாகும்.
1. தத்துவத்தின்
அடிப்படைப் பிரச்சினையும் மார்க்சியத்தின் தனித்துவமும்
சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட
தத்துவ வரலாற்றில், ஆக அடிப்படையான இருத்தலியல் கேள்வி ஒன்றுதான்: "பொருளா சிந்தனையா? எது முதன்மையானது?"
- பொருள்முதல்வாதம் (Materialism): பொருளே
முதன்மையானது; மனித சிந்தனை அல்லது உணர்வு என்பது பருண்மையான
மூளையின் செயல்பாடே (பிரதிபலிப்பே) தவிர வேறல்ல என்கிறது.
- கருத்துமுதல்வாதம் (Idealism): உணர்வோ, ஆன்மாவோ
அல்லது பிரபஞ்சப் பேராற்றலோ (Absolute Idea) தான் முதன்மையானது
என்று கூறி, பொருள் உலகத்தை அதன் வெளிப்பாடாகவோ அல்லது வெறும்
மாயையாகவோ (அகநிலை/புறநிலை கருத்துமுதல்வாதம்) சித்தரிக்கிறது.
மார்க்சியம் என்பது இந்த
விவாதத்தில் வெற்று தர்க்கமாக இல்லாமல், உலகை இயக்கவியல் பொருள்முதல்வாத (Dialectical
Materialism) கண்ணோட்டத்தோடு அணுகுகிறது. முந்தைய தத்துவவாதிகள் உலகைப் பல வழிகளில்
விளக்குவதோடு நின்றுவிட்டனர்; ஆனால், மார்க்சியம் மட்டுமே "உலகை மாற்றி அமைப்பதற்கான" புரட்சிகர ஆயுதத்தை
பாட்டாளி வர்க்கத்திற்கு வழங்குகிறது.
2. மார்க்சிய விரோதப்
போக்குகள் மற்றும் திருத்தல்வாதம் (Revisionism)
மார்க்சிய தத்துவத்தின் கூர்மையைக்
குறைப்பதற்காக, முதலாளித்துவ
முகாமும் அதன் கைக்கூலிகளும் தொடர்ந்து மார்க்சியத்தைத் திரிக்கும் வேலைகளில்
ஈடுபட்டு வருகின்றனர். தோழர் லெனின் தனது "மார்க்சியமும்
திருத்தல்வாதமும்" என்ற கட்டுரையில் விளக்குவது போல, மார்க்சியத்தை அதன் அடிப்படைகளிலிருந்து நீர்த்துப் போகச்
செய்யும் போக்குகளே 'திருத்தல்வாதம்' அல்லது 'மார்க்சிய விரோதப் போக்குகள்' எனப்படுகின்றன.
அ) தத்துவத்தையும்
நடைமுறையையும் இயந்திரத்தனமாகப் பிரித்தல்:
மார்க்சியத்தை வெறும் ஏட்டுச்
சுரைக்காயாக, நூலகங்களில்
விவாதிக்கும் தத்துவமாக மட்டும் சுருக்குவது முதல் விரோதப் போக்காகும்.
தத்துவத்தையும் நடைமுறையையும் பிரித்து வைப்பது மார்க்சிய இயங்கியலுக்கு எதிரானது.
தோழர் மாவோவின்
வழிகாட்டுதல்: > "மார்க்சிய-லெனினியம் என்பது அம்பு
போன்றது. ஆனால், அது ஒவ்வொரு நாட்டினதும் ஸ்தூலமான புரட்சிகர நடைமுறை என்ற
இலக்கை நோக்கி எய்யப்படவேண்டும். நாம் இலக்கின்றிச் சும்மா எய்தால், அம்பு சும்மா
பறக்குமேயன்றி இலக்கை அடையாது. அதே வேளையில், அம்பு இல்லாமல், இலக்கையும் தாக்க
முடியாது."
ஆ) வர்க்கப்
போராட்டத்தைக் கைவிடுதல் மற்றும் சமரசம்:
முதலாளித்துவ வர்க்கத்துடன் சமரசம்
செய்து கொண்டு, பாராளுமன்றப்
பாதையே இறுதியானது என்றும், வர்க்கப் போராட்டங்கள் இன்றி அமைதியான முறையில் சோசலிசம்
வந்துவிடும் என்றும் போதிப்பது மார்க்சிய விரோதப் போக்காகும். ரசியப் புரட்சியின்
போது மென்ஷெவிக்குகள் இத்தகைய சமரசக் கொள்கையையே கடைப்பிடித்தனர்.
3. லெனினியப்
படிப்பினைகளும் 'புதிய ரகக் கட்சி'யின் அவசியமும்
மார்க்சிய விரோதப் போக்குகளை
தத்துவார்த்த ரீதியாக முறியடித்த தோழர் லெனின், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான
மாபெரும் ஆயுதமாக "புதிய ரகக் கட்சி" (New Type of
Party) என்ற
கோட்பாட்டை உருவாக்கினார். லெனின் வெறும் தத்துவ நிபுணர் மட்டுமல்ல, அவர் ஒரு களச்
செயல்வீரர்.
அவர் உருவாக்கிய போல்ஷ்விக் கட்சி, அக்டோபர் புரட்சியை
வழிநடத்தியதற்கு முக்கியக் காரணங்கள்:
- உருக்குப் போன்ற கட்டுப்பாடு: சந்தர்ப்பவாதக்
கருத்துக்களுக்குக் கட்சியில் இடமில்லை.
- ஜனநாயக மத்தியத்துவம் (Democratic
Centralism): கட்சிக்குள் ஜனநாயக ரீதியான விவாதங்கள், ஆனால்
எடுக்கப்பட்ட முடிவை அனைவரும் ஒற்றை மனதாகச் செயல்படுத்துதல்.
- சுயவிமர்சனம்: தவறுகளை
ஒளிக்காமல் சுயவிமர்சனம் செய்து, மக்கள் மத்தியில் தங்களைத் திருத்திக் கொள்ளுதல்.
1905-ல் லெனின் எழுதிய "ஜனநாயகப் புரட்சியில்
சமூக ஜனநாயகவாதிகளின் இரண்டு செயல் தந்திரங்கள்" என்ற அறிக்கை, எதேச்சாதிகாரத்தை
எதிர்த்து சமரசமற்ற ஆயுதமேந்திய போராட்டத்தை முன்வைத்து, மார்க்சியத்தின்
புரட்சிகரத் தன்மையைக் காத்தது.
4. மார்க்சிய விரோதப்
போக்குகளை முறியடிப்பது எப்படி?
இன்று நமது இயக்கங்களுக்குள்
புகுந்துள்ள தத்துவக் குழப்பங்களை நீக்க நாம் லெனினிடமிருந்தே கற்க வேண்டும்:
- ஆசான்களின் நூல்களை வாசித்தல்: மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகிய
தத்துவ ஆசான்களின் மூல நூல்களைத் தீவிரமாக வாசிக்க வேண்டும்.
- எதிரிகளின் விமர்சனங்களையும் கற்றல்: லெனின்
மார்க்ஸின் எழுத்துக்களை மட்டும் படிக்கவில்லை; முதலாளித்துவ
முகாமில் உள்ள அவரது எதிரிகள் மார்க்சியத்தை எப்படித் தாக்குகிறார்கள்
என்பதையும் படித்து, அதற்கு அறிவியல் பூர்வமாகப் பதிலடி கொடுத்தார்.
- குருட்டுப்பாடத்தைத் தவிர்த்தல்: லெனின்
கூறியது போல, "பொதுவுடைமை முறையை
ஏதோ குருட்டுப் பாடமெனக் கற்கக் கூடாது; மாறாக அது
நீங்களாகவே யோசித்து, நிகழ்காலக் கல்வியின் கண்ணோட்டத்திலிருந்து
பார்க்கும்போது தவிர்க்க முடியாதபடி பெறப்பட்ட முடிவுகளை உட்கொண்ட ஒன்றாக
இருக்க வேண்டும்."
முடிவுரை
சோசலிசக் குடியரசை அமைத்து உலகிற்கே
கலங்கரை விளக்காய் விளங்கிய தோழர் லெனினின் வழிகாட்டுதலில், நாம் சரியான அடிப்படை
மார்க்சியப் புரிதலுக்கு வந்தடைய வேண்டும். இன்றைய முதலாளித்துவ உலகம், வர்க்க முரண்பாடுகளை
மறைக்க 'கார்ப்பரேட்
யோகா', 'பிரீமியம்
தியானம்' போன்ற
கருத்துமுதல்வாதக் கூறுகளைப் புது வடிவில் சந்தைப்படுத்துகிறது.
இத்தகைய தத்துவார்த்தப் போலித்தனங்களைத் துடைத்தெறிந்து, நம்மைச் சுற்றியுள்ள புறவயமான யதார்த்தத்தை (Objective Reality) அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுவோம். தத்துவத்தையும் புரட்சிகர நடைமுறையையும் இணைத்து, நமது "இலக்கு" நோக்கிய தத்துவப் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம் தோழர்களே!...
மார்க்சிய தத்துவமும் மார்க்சிய விரோத போக்குகளும்
மார்க்சிய விரோத போக்குகள் இன்று கட்சிக்குள்ளே ஊடுருவி மார்க்சியத்தை குழப்பிக் கொண்டுள்ளது அதற்கு மார்க்சிய ஆயுதமான மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை ஆசான்களின் நூல்களை வாசிப்பது மற்றும் அதன் வழியாக நமக்கான படிப்பினை பெறுவது என்பதனை எங்களின் இதழ் வாயிலாக முயன்றுக் கொண்டுதான் உள்ளோம்.
மாவோ சொன்னது போல, “மார்க்சிய-லெனினியம் என்பது அம்பு போன்றது. ஆனால், அது ஒவ்வொரு நாட்டினதும் ஸ்தூலமான புரட்சிகர நடைமுறை என்ற இலக்கை நோக்கி எய்யப்படவேண்டும். நாம் இலக்கின்றிச் சும்மா எய்தால், அம்பு சும்மா பறக்குமேயன்றி இலக்கை அடையாது. அதே வேளையில், அம்பு இல்லாமல், இலக்கையும் தாக்க முடியாது”.
ஆகவே, தத்துவத்தையும் நடைமுறையையும் இயந்திரம் போல பிரித்து வைக்கக் கூடாது.
மேலும் லெனின் ஒரு தத்துவ நிபுணர் மாத்திரமல்ல. அவர் ஒரு செயல் வீரனும் கூட, மார்க்சியக் களஞ்சியத்துக்கு அவர் வழங்கிய மிகப் பெரும் சாதனைகளில் ஒன்று யாதெனில் புதிய ரகக் கட்சி யொன்றை அமைப்பது பற்றிய அவருடைய தத்துவமாகும். இதன் பிரகாரம் அவர் உருவாக்கிய போல்ஷ்விக் கட்சி, அக்டோபர் புரட்சியை நடத்தும் ஆயுதமாகச் சேவை செய்தது, இது உருக்குப்போன்ற கட்டுப்பாடுடைய, புரட்சிகர மார்க்சிய உண்மைகளால் ஆயுதபாணியாகிய, சந்தர்ப்ப வாதத்திலிருந்து விடுதலை பெற்ற, ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடுகளால் வழி நடத்தப்படுகின்ற, சுயவிமர்சனத்தை ஆயுதமாகக் கொண்ட பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புகளை உடைய ஒரு புரட்சிகரக் கட்சியாகும்.
முதலாளித்துவ சமுத்திரத்தால் சூழப்பட்ட ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவி, பாதுகாப்பது சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டார். முன்நிகழ்ச்சி ஒன்றும் இல்லாத முதல் முயற்சியின் போக்கில் எழுந்த பல பிரச்சினைக்குத் தீர்வுகாண அவர் போதிய காலம் வாழவில்லை. இருந்தும், அவர் மார்ச்சியத்தை ஒரு புதிய மட்டத்திற்கு உயர்த்தி விட்டார். அது முதல், மார்க்சியம் என்பது மார்க்சிய-லெனினியம் என அழைக்கப்படுகிறது.உலகின் முதல் சோசலிசக் குடியரசை அமைத்த பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் மறைந்து இத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன,நாம் லெனினிடம் கற்க நிறையவே உள்ளது லெனின் வழிகாட்டுதலில் சரியான அடிப்படை மார்க்சிய புரிதலுக்கு வந்தடைய வேண்டும் என்பதே நமது தேடுதல். ரசியாவில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கியெறிந்ததோடு முதலாளித்துவ சுரண்டலையும் துடைத்தெறிந்து பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிறுவினார் தோழர் லெனின் இதன் மூலம் உலகிற்க்கு கலங்கரை விளக்காக நின்று வழிகாட்டினார்.
மார்க்சிய சித்தாந்தத்தை ரசிய நிலைமைகளுக்கு ஏற்றவாறு பருண்மையாகப் பிரயோகித்து புரட்சியை சாதித்தது மட்டுமல்லாது, ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை இயங்கியல் பூர்வமாக அன்றைய நிலைமைகளை யொட்டி வரையறுத்தவர் தோழர் லெனின்.1905, ஜூன் - ஜூலை மாதங்களில் “ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகவாதிகளின் இரண்டு செயல் தந்திரங்கள்” என்ற அறிக்கையை லெனின் எழுதினார். இதில் அவர் முதலாளிகளுடன் சமரசம் செய்து கொள்ளும் கொள்கையைக் கடைப்பிடித்த மென்ஷெவிக்குகளின் செயல்தந்திரத்துக்கு எதிராக, எதேச்சாதிகாரத்தை எதிர்த்துத் திட்டமான,விட்டுக் கொடுக்காத போராட்டத்தை நடத்து மாறும், அவசிய மேற்பட்டால் ஆயுதமேந்தியும் போரிடுமாறும், அறைகூவி அழைத்த போல்ஷெவிக்குகளின் செயல் தந்திரத்தை முன்வைத்தார்.
“மனிதகுலத்தின் அறிவு அனைத்தையும் பெற வேண்டும். இவ்வாறு பெறும்போது பொது உடைமை முறையை ஏதோ குருட்டுப் பாடமெனக் கற்கக் கூடாது; மாறாக அது நீங்களாகவே யோசித்த ஒன்றாக இருக்க வேண்டும்; நிகழ்காலக் கல்வியின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது தவிர்க்க முடியாதபடி பெறப்பட்ட முடிவுகளை உட்கொண்ட ஒன்றாக இருக்க வேண்டும். இத்தகைய திறமையைப் பெறுவது அவசியம்” என்று லெனின் கூறினார்.
மார்க்ஸ் எழுதியவற்றை மட்டும் லெனின் படிக்கவில்லை. முதலாளித்துவ முகாமிலுள்ள அவரது எதிரிகள் மார்க்ஸைப் பற்றியும் மார்க்சியத்தைப் பற்றியும் எழுதியவற்றையும் படித்தார். மார்க்சியத்தை திருத்தும் பல்வேறு போக்குகளை புரிந்துக் கொள்ள வேண்டுமானால், மார்க்சியம்–அதுஉருவான காலத்திலிருந்தே அதை எதிர்க்கும் கோட்பாடுகளோடு மட்டுமின்றி, அதை திரித்து புரட்டும் சக்திகளோடும் தொடர்ந்த போராட்டங்களின் மூலமாகவே தனது உயிர்த்துடிப்பான பொருத்தப்பாட்டை நிரூபித்து வருகிறது.ரசியாவில் 1905 புரட்சிக்குப் பிந்தைய நிலைமையில், மார்க்சியத்தை திரித்து புரட்டும் முயற்சிகளை முறியடிக்கவும், அன்றைய அரசியல், பொருளாதார சூழலை ஆய்வு செய்யவும் மார்க்சிய கோட்பாடுகளை எப்படி சரியாக பிரயோகிப்பது என்பது குறித்து லெனின் மார்க்சியமும் திருத்தல்வாதமும் என்ற கட்டுரைகளில் விளக்குகிறார்.
தொடர்ச்சியாக தத்துவம் பற்றி தெளிவாக அறிவோம் தோழர்களே...தத்துவம் என்பது என்ன?, அது எவ்வாறு தோன்றி வளர்ந்தது தத்துவம் என்பது, நம்மைச் சுற்றி நிலவும் யதார்த்தம் பற்றி முழுமையாகவும் மனிதனால் அது அறியப்படுதல் பற்றியும் உள்ள கருத்துக்களின் தொகுப்பாக விளங்குகிறது. பல்வேறு சமூக வார்க்கங்கள், குழுக்களின் நலன்களைத் தத்துவம் வெளியிடுகிறது. பிரபஞ்சம் முழுவதற்கும் அடிப்படையாக இருப்பது எது என்பதை விளக்கவும், மனிதனது இயல்பையே புரிந்துகொள்ளவும், சமூகத்தில் மனிதன் வகிக்கும் இடம்யாது, பிரபஞ்சத்தின் இரகசியங்களை உட்புகுந்து தெரிந்துகொள்ளவும் இயற்கையின் பெருவிறல் வாய்ந்த சக்திகளைப் புரிந்துகொண்டு மக்களின் நன்மைக்காக அவற்றைப் பயன்படுத்தவும் மனிதனது அறிவால் முடியுமா என்பவற்றைக் தீர்மானிக்கவும் தத்துவம் தான் தோன்றிய கணம் முதலேமுயன்று வந்திருக்கிறது. இவ்வாறாகத் தத்துவம் மிகவும் பொதுப்படையான, அதே சமயம் மிகவும் முக்கியமான அடிப்படைப் பிரச்சினைகளைக் கிளப்புகிறது. வாழ்க் கை, அறிவு, இவற்றின் மிக மிகப் பல்வகைப்பட்ட துறைகள் பால் மனிதனது அணுகுமுறையை நிர்ணயிப்பவை இவை. இந்தப் பிரச்சினைகளுக்கு மிகமிக -வெவ்வேறான, சில சந்தர்ப்பங்களில் ஒன்றை ஒன்று நிராகரித்து விளகுகிற விடைகளைத் தத்துவவாதிகள் அளிக்துவதந்திருக்கிறார்கள். தத்துவம் சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக நிலவிவருகிறது. ஒன்றுக்கொன்று எதிரான கருத்தோட்டங்களுக்கிடையே போராட்டம் அதில் இந்தக் காலமெல்லாம் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. இந்தப் போராட்டம் தற்போதும் நின்றபாடில்லை. ஏன் இந்தப் போராட்டம் நடக்கறது? அதன் காரணங்கள் யாவை? தத்துவக் கருத்தோட்டங்களின் மோதுதலில் மைய இடம் வகிப்பது உணர்வுக்கும் இருத்தலுக்கும் இடையே நிலவும் உறவு பற்றிய பிரச்சினை, வேறு வார்த்தைகளில் சொல்வதானால் கருத்தியலானதற்கும் பொருளியலானதற்கும் இடையே நிலவும் உறவு பற்றிய பிரச்சனை. உணர்வு கருத்தியலானது என்று சொல்லுகையில் நமது எண்ணங்கள், அனுபவங்கள், உணர்வுகள் ஆகியவற்றையே நாம் மனத்தில் கொள்ளுகிறோம் என்பதை இங்கே குறிப்பிட்டுவிட வேண்டும். இருத்தல், பொருளியலானது என்னும்போது புறநிலையில், நமது உணர்வுக்குச் சார்பு இன்றி நிலவுபவை அனைத்தும், அதாவது, வெளியுலகின் பொருள்களும் பண்டங்களும், இயற்கையிலும் சமூகத்திலும் நடைபெறும் நிகழ்ச்சிகளும் செயல்முறைகளும் குறிக்கப்படுகின்றன. தத்துவ அர்த்தத்தில் கருத்தியலானது (உணர்வு), பொருளியலானது (இருத்தல்) என்பவை மிக விரிவான விஞ்ஞானக் கருதுகோள்கள் (வகைப்பிரிவுகள்) ஆக விளங்குகின்றன. பிரபஞ்சப் பொருள்கள், நிகழ்ச்சிகள், செயல்முறைகள் ஆகியவற்றின் மிக மிகப் பொதுமை வாய்ந்த, அதே சமயம் எதிரெதிரான பண்புகளை அவை பிரதிபலிக்கின்றன.
தத்துவத்தின் அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்கையில் விஞ்ஞானிகள் இருபெரும் முகாம்களாகப் பிரிவுபட்டிருக்கிறார்கள். பொருளை, இருத்தலை, இயற்கையை முதன்மை யானது என்றும் உணர்வை, சிந்தனைத் திறமையை, ஆன்மாவை இரண்டாவது என்றும் ஏற்றுக்கொள்ளும் தத்துவ அறிஞர்கள் பொருள்முதல்வாதம் எனப்படும் தத்துவப் போக்கின் பிரதிநிதிகள் ஆவர். விஞ்ஞான விவரங்களையும் மக்களின் பல்வகைப்பட்ட நடைமுறைச் செயல்கள் யாவற்றையும் ஆதாரமாகக் கொண்டு பொருள்முதல்வாதித் தத்துவ அறிஞர்கள் பிரபஞ்சம் யாராலும் படைக்கப்படவில்லை என்றும், அது என்றுமுள்ளது என்றும் எல்லையின்றிப் பல்விதப்பட்டது என்றும் நிரூபிக்கிறார்கள். பொருளியலான பிரபஞ்சத்தின் நம்மைச் சூழ்ந்துள்ள வஸ்துக்களும் தோற்றங்களும் நம்மீது சார்பு இல்லாமலே நிலவிவருகின்றன. எந்த உணர்வையும் சாராத பெருந்தொகையான பல்வேறு நிகழ்முறைகள் புறநிலைப் பிரபஞ்சத்தில் எப்போதும் நடந்துவந்துள்ளன, என்றென்றும் நடந்துவரும். பொருளியலானது கருத்தியலானதற்கு முன்பே நிலவியது. மனிதனது சிந்தனைத்திறன் பொருளியலானது இன்றி நிலவமுடியாது. இப்படிப் பொருள்முதல்வாதித் தத்துவ அறிஞர்கள் கருதுகிறார்கள். சித்தனை என்பது மூளையின் விளைபொருள். எனவே மூளை சிந்தனை உறுப்பாக விளங்குகிறது. சிந்தனைத் திறன் கருத்தியலானது என்பது புறநிலைப் பிரபஞ்சத்தைப் பிரதிபலிப்பதற்கு மூளைக்கு உள்ள திறனே ஆகும். ஆதலால் கருத்தியலானது, அதாவது உணர்வ, புறநிலைப் பிரபஞ்சத்தின்மீது சார்பு இல்லா மல் முற்றிலும் தன்னிச்சையாக நிலவ முடியாது. இவ்வாறு பொருள்முதல்வாதித் தத்துவ அறிஞர்கள் சொல்கிறார்கள்.
பொருள்முதல்வாதத்துக்கு எதிர்நிலையான கருத்துமுதல் வாதப் போக்கு தத்துவத்தில் நிலவுகிறது. நிலவுவது அனைத்திற்கும் தொடக்கமாக விளங்குவது உணர்வே, சிந்தனைத்திறனே, ஆன்மாவே, அதாவது கருத்தியலானதே எனக் கருத்துமுதல் வாதத் தத்துவ அறிஞர்கள் ஏற்கிறார்கள். கருத்துமுதல்வாகப் போக்கு இரு அடிப்படை வகைகள் கொண்டது. அகநிலைக் கருத்துமுதல்வாதம், புறநிலைக் கருத்து முதல்வாதம் என்பன அவை. சிந்தனை செய்யும் அகநிலைப்பொருள் ஆகிய மனிதனது தனிப்பட்ட உணர்வே முதன்மையானது என்று ஒப்புக்கொள்ளும் தத்துவக் கருத்துமுதல்வாதத்தின் பிரதிநிதி கள் அகநிலைக் கருத்துமுதல்வாதிகள்ஆவர். பொருள்கள் எதார்த்தத்தில் நிலவுகின்றன, அவை நமக்கு வெளியே நிலவுகின்றன என்று நமக்கு வெறுமே தோன்ற மட்டுமே செய்கிறது. அவற்றை நாம் பார்க்கிறோம், கேட்கிறோம், தொடுகிறோம் என்பதே இதன் காரணம். உண்மையிலோ காணல், தொடுதல், கேட்டல் என்பவை புலனுணர்ச்சிகளே ஆகும். இவ்வாறு அவர்கள் சொல்கிறார்கள். பிரபஞ்சம் முழுவதும் சிந்தனை செய்யும் அகத்தினால், அசுநிலைப்பொருளின் தன்னுணர்வால் படைக்கப்பட்டிருக்கிறது என்றோ, அல்லது நிலவும் பொருள்கள், வஸ்துக்கள், தோற்றங்கள் ஆகியவை அனைத்தும் நமது உணர்ச்சிகள், அனுபவங்கள் ஆகியவற்றின் மொத்தமே, தொகுதியே ஆகும் என்றோ நிரூ பிக்க அவர்கள் முயல்கிரார்கள். திரிபான தத்துவவகைப்பட்ட இந்தப் பிரபஞ்ச அறிவு மனிதனுடைய உணர்வைப் பொருளியலான பிரபஞ்சத்துக்கு எதிர்நிறுத்துகிறது. மனிதனுக்கு இயல்பாக வழங்கப்பட்டிருப்பவை அவனுடைய அறிவின் விளைபொ ருள்களான கருத்துக்களும் உணர்ச்சிகளும் மட்டுமே என்று அகநிலைக் கருத்து முதல்வாதிகள் கூறுகிறார்கள். மனித உணர்வே தொடக்கப் புள்ளி என்றும் பின்பு அதிலிருந்து இயற்கை வெளிப்படுகிறது என்றும் அவர்கள் வாதித்து, இந்த வாதத்தின், அடிப்படையில் பொருள்களும் பிரபஞ்சம் முழுவதுமே புறநிலை யாக நிலவுவதையும் அதன் வளர்ச்சியின் ஓழுங்குழுறையையும் ஒருவகையில் அல்லது மறுவகையில் மறுக்கிறார்கள். புறநிலைக் கருத்துமுதல்வாதிகள் மனித சிந்தனைகள்,கருத்துக்கள் ஆகியவையும், இயற்கையுமே கூட, பரம கருத்து, பிரபஞ்ச வியாபகமான அறிவு, பொருளியலானதற்கு அப்பாற்பட்ட எதார்த்தம் ஒன்றின் துணுக்கு மட்டுமே எனக் கருதுகிறார்கள்.
மனிதன்மீது சார்பு அற்ற பிரபஞ்சம் நிலவுவது சாத்தியமே எனப் புறநிலைக் கருத்துமுதல்வாதிகள் ஒப்புக்கொள்கிறார்கள். அகநிலைக் கருத்துமுதல்வாதிகள் போன்று அகநிலைப்பொருளின் தன்னுர்வையோ, மனிதனது உணர்ச்சிகளையோ அவர்கள் முதன்மையாக ஏற்றுக்கொள்வதில்லை. தானேயான கருத்து, அதாவது '“பிரபஞ்சக் கருத்துதான் முதன்மையானது என் றும், இந்தக் கருத்தியலானதிலிருந்கே, ஆன்மீகமான திலிருந்தே இயற்கை, வெளிப் பிரபஞ்சம், நிலவுபவை அனைத்தும் தோன்றின என்றும் அவார்கள் முடிவு கட்டுகிறார்கள். இவ்வாறாக, புறதிலைக் கருத்துமுதல்வாதமும் அகநிலைக் கருத்துமுதல்வாதமும் கருத்துமுதல்வாதத் தத்துவத்தின் வகைகள் ஆகும். ஆனால் முக்கியமான, அடிப்படையான விஷயத்தில் அவை ஒன்றுக்கொன்று
வேறுபட்டவை அல்ல. இரண்டு மே கருத்தியல் தொடக்கத்தை அடிப்படையாக வைத்துக்கொள்கின்றன. கருத்து, ஆன்மா, அதாவது உணர்வு முதன்மையானது என்றும் யதார்த்தப் பிரபஞ்சம், அதாவது இயற்கை இரண்டாவது என்றும் இரண்டுமே ஒப்புக்கொள்கின்றன.
சரி நாம் தத்துவத்தை ஏன் பயில வேண்டும் எப்படி பயில வேண்டும் தொடர்ந்து பார்ப்போம்.
இன்றைய விஞ்ஞான- தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனுடைய ஆற்றலை அளவிட இயலாதவாறு அதிகப் படுத்தியுள்ளது.
மிகப் பெரிய பெரிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தொழில்நுணுக்கச் சாதனைகளும், பூமி கோளத்தின் முழுமையையும் தன் தேவைக்காக மாற்றிவிட்ட துடிக்கும் பிரமாண்டமான இயற்கை உருமாற்றங்களும், சமூக வாழ்வின் எல்லாப் பகுதிகள் மீதும் ஏற்படுத்தும் பாதிப்பு விளைத்துள்ள புரட்சிகரமான மாறுதல்களும் நிகழ்ந்திருப்பகனால் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது நமது காலம்.
நடக்கும் நிகழ்ச்சிகளின் பொருளைப் புரிந்தகொள்ள வேண்டும், சென்ற காலத்தையும் நிகழ்காலத்தையும் சரியாகத் தெரிந்தகொள்ள வேண்டும், வருங்காலத்தில் பார்வையைச் செலுத்த வேண்டும் என்னும் விருப்பம் இயல்பாகவே ஓவ்வொரு மனிதனுக்கும் உண்டாகிறது. தற்கால வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள மாபெரும் மாற்றங்களை அதிக ஆழத்தில் புகுந்து காண்பதற்கு விஞ்ஞானக் கண்ணோட்டம் இன்றியமையாதது. இத்தகைய கண்ணோட்டமாக விளங்குகிறது மார்க்ஸீய-லெனினீய தத்துவ பொருளாதார சமூக-அரசியல் கருத்துக்களின் முரணின்றிப் பொருந்திய தொகுப்பு மார்க்சிய லெனின்ய தத்துவம் அதனை சற்று பயிலுவோம் தோழர்களே.
மார்க்ஸீய-லெனினீயத் தத்துவம் உலகை அறிதல் புரட்சி கரமாக மாற்றி அமைத்தல் ஆகியவற்றுக்குரிய பொதுச்சித்தாந்கக் கோட்பாடுகளை ஆதாரபூர்வமாக நிலை நாட்டுகிறது, இயற்கை, சமூகம் ஆகியவற்றின் வளர்ச்சி பற்றிய மிக மிகப் பொதுவான விதிகளைத் தெளிவுபடுத்துகிறது, சோஷலிஸ அமைப்பின் மேம்பாட்டையும் கம்யூனிஸ சமூக உறவுகள் உருவாவதன் சாத்தியக்கூற்றையும் புலப்படுத்துகிறது. மார்க்ஸீய-லெனினீயத் தத்துவக் கல்வி மக்களுக்குக் கொள்கை பற்றிய ஆழ்ந்த திட நம்பிக்கை ஏற்படுத்துகிறது. அறிவும் செயலும் ஒன்றாயிருத்தல், கம்யூனிஸக் குறிக்கோள்கள் பற்றிய தெளிந்த உணர்வு, அவற்றைச் செயல்படுத்துவதற்கான தீவிரப் போராட்டம் ஆகியவற்றில் இந்தத் திட நம்பிக்கை வெளிப்படுகிறது. வாழ்க்கைப் போக்குடன் இணைந்து முன்செல்ல விரும்பும் எல்லோருக்கும் மார்க்ஸீய-லெனினீயக் தத்துவ அறிவு இன்றியமையாதது ஆகும். யாவற்றிலும் சிக்கலான இடையூறுகளையும் கஷ்டங்களையும் சமாளிப்பதற்கு வேண்டிய வலிமையையும் தன்னம்பிக்கையையும் அது மனிதனுக்குத் தருகிறது. அவன் செயலாக்கமும் லட்சியத்தை நோக்கிய முன்னேற்றமும் வாய்ந்தவன் ஆவதற்கு உதவுகிறது. ஆவேசம் பொங்கும், உண்மைத் தேட்டங்களும் படைப்புத் துணிவும் நிறைந்த இளமைப் பருவத்திலும் சரி, ஆழ்ந்த சிந்தனையும், அனுபவங்களையும் உண்மை நிலவரங்களையும் நிகழ்ச்சிகளையும் நிதானமாகப் பகுத்தாயும் பான்மையும் வாய்ந்த, பயன்பாடுள்ள படைப்புக்கள் புரியும் முதிர்ந்த பருவத்திலும் சரி, தத்துவம் மனிதனது நம்பகமான வழித்துணை ஆகும்.
தத்துவம் என்பது, நம்மைச் சுற்றி நிலவும் யதார்த்தம் பற்றி முழுமையாகவும் மனிதனால் அது அறியப்படுதல் பற்றி யும் உள்ள கருத்துக்களின் தொகுப்பாக விளங்குகிறது. பல் வேறு சமூக வார்க்கங்கள், குழுக்களின் நலன்களைத் தத்துவம் வெளியிடுகிறது.
துத்துவத்தின் அடிப்படைப் பிரச்சினையை ஆராய்கையில் அதன் இரு அம்சங்களை வேறு பிரித்துக் காண்பது மிக முக்கிய மானது ஆகும். முதன்மையானது எது -கருத்தியலானதா அல்லது பொருளியலானதா--- என்ற கேள்விக்கு விடை. காண்பது முதல் அம்சம். முதன்மையானதாக இருப்பது என்றால் இரண்டாவதகற்கு முன்னர் நிலவுவது, அதற்கு முந்தியிருப்பது, முடிவில் அதை நிர்ணயிப்பது என அர்த்தம். ஆகவே இந்தக் கேள்விக்கு அளிக்கப்படும் ஒரு அல்லது வேறொரு விடைதத்துவத்தில் எவ்வளவு பெருத்த பங்கு ஆற்றுகிறது என்பது தெளிவாகிவிடுகிறது.
தத்துவத்தின் அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வு காண் கையில் விஞ்ஞானிகள் இரு பெரும் முகாம்களாகப் பிரிவுபட் டிருக்கிறார்கள். பொருளை, இருத்தலை, இயற்கையை முதன்மை யானது என்றும் உணர்வை, சிந்தனைத் திறமையை, ஆன்மாவை இரண்டாவது என்றும் ஏற்றுக்கொள்ளும் தத்துவ அறிஞர்கள் பொருள்முதல்வாதம் எனப்படும் தத்துவப் போக்கின் பிரதிநிதிகள் ஆவர். விஞ்ஞான விவரங்களையும் மக்களின் பல்வகைப்பட்ட நடை மூறைச் செயல்கள் யாவற்றையும் ஆதாரமாகக் கொண்டு பொருள்முதல்வாதித் தத்துவ அறிஞர்கள் பிரபஞ்சம் யாரா லும் படைக்கப்படவில்லை என்றும், அது என்றுமுள்ளது என் றும் எல்லையின்றிப் பல்விதப்பட்டது என்றும் நிரூபிக்கிறார்கள். பொருளியலான பிரபஞ்சத்தின் நம்மைச் சூழ்ந்துள்ள வஸ்துக் களும் தோற்றங்களும் நம்மீது சார்பு இல்லாமலே திலவிவரு கின்றன. எந்த உணர்வையும் சாராத பெருந்தொகையான பல்வேறு நிகழ்முறைகள் புறநிலைப் பிரபஞ்சத்தில் எப்போதும் நடந்துவந்துள்ளன, என்றென்றும் நடந்துவரும். பொருளிய லானது கருத்தியலானதற்கு முன்பே நிலவியது. மனிதனது As குனைத்திறன் பொருளியலானது இன்றி நிலவ முடியாது. இப் படிப் பொருள்முதல்வாதித் தத்துவ அறிஞர்கள் கருதுகிறார் கள். சித்தனை என்பது மூலாயின் விளைபொருள். எனவே மூளை சிந்தனை உறுப்பாக விளங்குகிறது. சிந்தனைக் இறன், கருத்திய லானது என்பது, புறநிலைப் பிரபஞ்சத்தைப் விரதுபலிப்பதற்கு மூளைக்கு உள்ள இறனே ஆகும். ஆதலால் கருத்தியலானது, அதாவது உணர்வ, புறநிலைப் பிரபஞ்சத்தின்மீது சார்பு இல்லா மல் முற்றிலும் தன்னிச்சையாக நிலவ முடியாது. இவ்வாறு பொருள்முதல்வாதித் தத்துவ அறிஞர்கள் சொல்கிறார்கள்.
பொருள்முதல்வாதத்துக்கு எதிர்நிலையான கருத்துமுதல் வாதப் போக்கு தத்துவத்தில் நிலவுகிறது. நிலவுவது அனைத்திற் கும் கொடக்கமாக விளங்குவது உணர்வே, சிந்தனைத்திறனே, அன்மாவே, அதாவது கருத்தியலானதே எனக் கருத்துமுதல் வாதித் கத்துவ அறிஞர்கள் ஏற்கிறார்கள். கருத்துமுதல்வாகப் போக்கு இரு அடிப்படை வகைகள் கொண்டது. அகநிலைக் கருத்துமுதல்வாதம், புறநிலைக் கருத்து மூதல்வாகம் என்பன அவை. தந்தனை செய்யும் அகதிலைப்பொருள் ஆகிய மனிதனது தனிப்பட்ட உணர்வே முதன்மையானது என்று ஒப்புக்கொள்ளும் தத்துவக் கருத்துமுதல்வாதத்தின் பிரதிதிதிகள் அகநிலைக் கருத்து முதல்வாதிகள்ஆவர். பொருள்கள் எதார்த் தத்தில் நிலவுகின்றன, அவை நமக்கு வெளியே நிலவுகின்றன என்று நமக்கு வெறுமே தோன்ற மட்டுமே செய்கிறது. அவற் றை நாம் பார்க்கிறோம், கேட்கிறோம், தொடுகிறோம் என்பதே இதன் காரணம். உண்மையிலோ காணல், தொடுதல், கேட்டல் என்பவை புலனுணர்ச்சிகளே ஆகும். இவ்வாறு அவர்கள் சொல்வார்கள். பிரபஞ்சம் முழுவதும் சிந்தனை செய்யும் அகத்தினால், அசுநிலைப்பொருளின் தன்னுணர்வால் படைக்கப்பட்டிருக்கிறது என்றோ, அல்லது நிலவும் பொருள்கள், வஸ்துக்கள், தோற்றங்கள் ஆகியவை அனைத்தும் நமது உணர்ச்சிகள், அனுபவங்கள் ஆகியவற்றின் மொத்தமே, தொகுதியே ஆகும் என்றோ நிரூபிக்க அவர்கள் முயல்கிரார்கள். திரிபான தத்துவவகைப்பட்ட இந்தப் பிரபஞ்ச அறிவு மனிதனுடைய உணர்வைப் பொருளியலான பிரபஞ்சத்துக்கு எதிர்நிறுத்துகிறது.
மனிதனுக்கு இயல்பாக வழங்கப்பட்டிருப்பவை அவனுடைய அறிவின் விளயபொ ருள்களான கருத்துக்களும் உணர்ச்சிகளும் மட்டுமே என்று அகநிலைக் கருத்துமுதல்வாதிகள் கூறுகிறார்கள். மனித உணர் வே தொடக்கப் புள்ளி என்றும் பின்பு அதிலிருந்து இயற்கை வெளிப்படுகிறது என்றும் அவர்கள் வாதித்து, இந்த வாதத்தின் , அடிப்படையில் பொருள்களும் பிரபஞ்சம் முழுவதுமே புறநிலை யாச நிலவுவதையும் அகுன் வளர்ச்சியின் ஓழுங்குழுறையையும் ஒரு வகையில் அல்லது மறு வகையில் மறுக்கிறார்கள். புறநிலைக் கருத்துமுதல்வாதிகள் மனித இிந்தனைகள்,கருத்துக் கள் ஆகியவையும், இயற்கையுமே கூட, பரம கருத்து, பிரபஞ்ச வியாபகமான அறிவு, பொருளியலானதற்கு அப்பாற்பட்ட எதார்த்தம் ஒன்றின் துணுக்கு மட்டுமே எனக் கருதுகிறார்கள்.
மனிதன்மீது சார்பு அற்ற பிரபஞ்சம் நிலவுவது சாத்தியமே எனப் புறநிலைக் கருத்துமுதல்வாதிகள் ஒப்புக்கொள்கிறார்கள். அகநிலைக் கருத்துமுதல்வாதிகள் போன்று அகநிலைப்பொருளின் குன்னுணாவையோ, மனிகனது உணர்ச்சிகளையோ அவர்கள் முதன்மையாக ஏற்றுக்கொள்வதில்லை. தானேயான கருத்து, அதாவது '“பிரபஞ்சக் கருத்து தான் முதன்மையானது என் றும், இந்தக் கருத்தியலானதிலிருந்கே, ஆன்மீகமான திலிருந்தே இயற்கை, வெளிப் பிரபஞ்சம், நிலவுபவை அனைத்தும் தோன் றின என்றும் அவார்கள் முடிவுகட்டுகிறார்கள். இவ்வாறாக, புறதிலைக் கருத்துமுதல்வாதமும் அகநிலைக் கருத்துமுதல்வாதமும் கருத்துமுதல்வாதத் தத்துவத்தின் வகைகள் ஆகும். ஆனால் முக்கியமான, அடிப்படையான விஷயத் தில் அவை ஒன்றுக்கொன்று வேறுபட்டவை அல்ல. இரண்டு மே கருத்தியல் தொடக்கத்தை அடிப்படையாக வைத்துக்கொள் கின்றன. கருத்து, அன்மா, அதாவது உணர்வு முதன்மையானது என்றும் யதார்த்தப் பிரபஞ்சம், அதாவது இயற்கை இரண்டா வது என்றும் இரண்டுமே ஒப்புக்கொள்கின்றன. இங்கே ஒரு விஷயத்கைக் குறிப்பிடுவது அவசியம்:
--------------------------------------------------------------------------------
1. வி. இ. லெனின். முழு நூல்திரட்டு, தொகுதி 47, பக்கம் 927,
2.வி. இ. லெனின். முழு நூல்திரட்டு, தொகுதி 24, பக்கம் 264,
மார்க்ஸீய-லெனினீயத் தத்துவ விஞ்ஞானம் அகுற்கு முன்பு இருந்த தத்துவம், தற்கால பூர்ஷ்வாத் தத்துவம் ஆகியவை எல்லாவற்றிலுமிருந்து பண்பளவில் வேறுபட்டது ஆகும். கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ், இருவராலும் உருவாக்கப் பட்டு விளாதீமிர் இல்யீச் லெனினால் விரிவுபடுத்தப்பட்ட இந்தத் தத்துவம் பொருள்முதல்வாதத்தையும் இயக்க இயல் வாதத்தையும் இணையுறுப்புக்களாகப் பொருந்துகிறது. இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றுக்கு உரிய நிகழ்ச்சிகளை அறிவதற்கு, ஒன்றான இயக்க இயல்-பொருள்முதல்வாதச் சித்தாந்ததுமும் முறையும் இதில் கையாளப்பட்டன. முழுமையான, செப்பமாக அமைந்த விஞ்ஞான ரீதியான இந்தக் தத்துவக் கண்ணோட்டம் தொழிலாளி வர்க்கத்தினதும் உழைப்பாளி மக்கள் அனைவரதும் புரட்சிப் போராட்டத்தின் நோக்கங்களுக்கு வரலாற்றில் முதன் முறையாகத் தொண்டாற்றலாயிற்று. மார்க்ஸீயம் சென்ற(19)நூற்றாண்டின் 40க்களில் ஜெர்மனியில் உதயமாயிற்று. விஞ்ஞானம், சமூக-வரலாற்று நடைமுறை ஆகியவை அனைத்தினுடையவும் வளர்ச்சியின் விதிமுறைக்கு ஏற்ற விளைவாக விளங்கியது அது. அந்தக் காலத்திற்குள் பூர்ஷ் வற்க்க சமூகத்தில் முதலாளித்துவ உற்பத்திமுறையின் ஆழ்ந்த முரண்பாடுகள் வெளிப்பட்டுவிட்டன. அதே சமயம் பாட்டாளி வர்க்கத்தைச் சுறண்டலிலிருந்து விடுவிப்பதற்கான எதார்த்தச் சூழ்நிலமைகள் உருவாகியிருந்தன. பாட்டாளி வர்க்கத்துக்கும் பூர்ஷ்வா வர்க்கத்துக்கும் இடையே வர்க்கப் போராட்டம் இந்த அடிப்படையில் வளர்ந்து தீவிரம் அடைந்தது. அதன் நோக்கங்கள் போதிய தெளிவுடன் நிச்சயிக்கப்பட்டன. தொழிலாளி வர்க்கம் தனது பொருளாதார அரசியல் உரிமைகளுக்காக ஊக்கத்துடன் போராடியது. லியோன் நகரில் பிரெஞ்சுத் தொழிலாளர்களின் கிளர்ச்சி (18871, 1884), ஜெர்மனியில் ஸைலேஷிய நெசவாலைத் தொழிலாளர்களின் கிளர்ச்சி (1844), இங்கிலாந்தில் சார்ட்டிஸ்டுகளின் இயக்கம் (7880-7840) ஆகியன இதற்குச் சான்று பகிர்கின்றன. பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கச் சுதந்திரப் போக்கு, பூர்ஷ்வாச் சமூகத்தின் சமுதாய வாழ்க்கை நியமங்களை ஒழிப்பதுபற்றிய அதனுடைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்கள் காட்டின. புரட்சிகரத் தொழிலாளி இயக்கத்துக்குத் தேவையாக இருந்தவை உழைப்பாளி மக்களது போராட்டத்தின் குறிக்கோள்கள் கடமைகள் ஆகியவற்றுக்கு உரிய விஞ்ஞான அடி.ப் படையை நிறுவுவதும் முதலாளித்துவ அமைப்பை ஒழித்துப் புதிய சமூகத்தை நிறுவுவதற்கு ஏற்ற வழிகளையும் சாதனங்களையும் நிச்சயிப்பதுமே நவீனச் சமூகத்தின் மிகப் புரட்சிகரமானதும் எல்லா உழைப்பாளி மக்களின் நலன்களுக்காகவும் ஒத்தியைந்த முறையில் போராடுவதுமான பாட்டாளி வர்க்கத்தின் மூலாதார நலன்களின் சித்தாந்த வெளியீடாக விளங்கிறது மார்க்ஸீயம். மார்க்ஸீயக் கண்ணோட்டத்தின் உதயம் அதற்கு முந்திய விஞ்ஞானச் சாதனைகளுக்கு மறுப்பாக அர்த்தப்படவில்லை. சாஸ்திரீய ஜெர்மானியத் தத்துவமும் (இ. கான்ட், கி. ஹெகல், ௮. பாயர்பாக்)), ஆங்கில அரசியல் பொருளாதாரமும் [ஆதம் ஸ்மித் (448௩ 21/1), டேவிட் ரிக்கார்டோ (David Ricardo) ], பிரெஞ்சுக் கற்பனா சோஷலிஸமும் [அன்ரீ ஸான்-ஸிமோன் Henri Saint-Simon), பூரியே (Charles Fourier)] மார்க்ஸீயத்தின் சித்தாந்த ஊற்றுக்கண்கள்1 என வி. இ. லெனின் குறிப்பிட்டுள்ளார். தனக்கு முந்திய வரலாற்று வளர்ச்சிக் காலம் முழுவதிலும் முற்போக்குச் சமூகச் சிந்தனையால் உருவாக்கப்பட்ட சிறந்தவற்றை எல்லாம் மார்க்ஸீயம் தன்னுள் நிறைத்துக் கொண்டது. “மார்க்ஸீயம் பூர்ஷ்வாச் சகாப்தத்தில் பெறப்பட்ட மதிப்பு மிக்க சாதனைகளைச் சற்றும் நிராகரித்து ஒதுக்கவில்லை. மாறாக, மனிதச்சிந்தனை பண்பாடு ஆகியவற்றின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வளர்ச்சியில் இருந்த விலைமதிப்புள்ள அம்சங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு சீர்படுத்திக் கொண்டது. புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் கொள்கைவாதம் என்ற முறையில் மார்க்ஸீயம் உலக வரலாற்று முக்கியத்துவம் பெற்றதற்குக் காரணம் இதுவே”: இவ்வாறு எழுதினார் லெனின். இயக்க இயல், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் உருவாக் கப்பட்டது மார்க்ஸீயத்தின் வேறு இரண்டு உள்ளுறுப்புக்களான மார்க்ஸீயப் பொருளாதாரப் போதனை, விஞ்ஞான சோஷலிஸத்தின் சித்தாந்தம் ஆகியவை உருவாக்கப்பட்டதுடன் தணிக்க முடியாதவாறு தொடர்பு கொண்டிருந்தது. “அரசியல் பொருளாதாரம் அனைத்தையும் அதன் அடிப்படையிலிருந்து தொடங்கிச் செப்பம் செய்வதற்கும் வரலாற்றுக்கும் இயற்கை விஞ்ஞானத்துக்கும் தத்துவத்துக்கும் தொழிலாளி வர்க்கத்தின் அரசியலுக்கும் செயல்முறைக்கும் பொருள்முதல்வாத இயக்கஇயலைப் பயன்படுத்துவதுதான் மார்க்ஸுக்கும் எங்கெல்ஸாக்கும் எல்லாவற்றையும் விட அதிக அக்கறைக்கு உரியனவாக விளங்குகின்றன. அவர்கள் உட்புகுத்திய யாவற்விலும் முக்கியமான யாவற்றிலும் புதிய அம்சங்கள் இவையே. புரட்சிகரச் சிந்தனையின் வரலாற்றில் அவா்களது மேதை வாய்ந்த முன்னடிவைப்பு இவற்றிலேயே உள்ளது” என்று எழுதினார் வி. இ. லெனின். வரலாறு இயக்கவியல்-பொருள்முதல்வாதமுறையில் புறிந்து கொள்ளப்பட்டது,
முதலாளித்துவத்தின் ஆழ்ந்த முரண்பாடுகளும் அதன் வளர்ச்சிக்குரிய விதிமுறைகளும் திறந்து காட்டப் பட்டது, இவற்றின் விளைவாக முதலாளித்துவம் தவிர்க்க இயலாது மடிந்து ஒழியும், அடுத்துவரும் சோஷலிஸப் புரட்சியில் அது அழிக்கப்படுவது வரலாற்று ரீதியில் இன்றியமையாகுது என்ற முடிவு முன் ஒருபோதும் இல்லாத அளவு தெளிவாகிவிட்டது. மார்க்ஸும் எங்கெல்ஸும் மிகச் செயலூக்கத்துடன் பங்கு கொண்ட தொழிலாளி வர்க்கப் போராட்டம் அவர்களது தத்துவத்துக்குப் புரட்சிகர உள்ளடக்கத்தைத் தந்தது. கம்யூனிஸ உலகக் கண்ணோட்டத்தின் பொதுச் சித்தாந்த அடிப்படையாகத் தங்கள் தத்துவ முறையை உருவாக்கியதன் வாயிலாக மார்க்சும் எங்கெல்சும் கருத்துமுதல்வாத, இயக்கவியல், மாறாநிலைவாதப் பொருள்முதல்வாதம் ஆகியவற்றின் கோளாறுகளையும் குறைகளையும் அகற்றுவதிலும் முந்திய தத்துவத்தில் இயக்கவியலிலும் பொருள் முதல்வாதத்துக்கும் இடையே நிலவிய பிளவை நீக்குவதிலும் மிகப் பெரிய தொண்டு ஆற்றினார்கள்.
மார்க்ஸீயத்துக்கு முந்தைய பொருள்முதல்வாதம் இயக்வியலும் தொடர்பு அற்றதாக, வரலாற்றுக் தொடர்பு அற்றதாக இருந்தது.
--------------------------------------------------------------------------------
1. வி. இ. லெனின். முழு நூல்திரட்டு, தொகுதி 47, பக்கம் 927,
2.வி. இ. லெனின். முழு நூல்திரட்டு, தொகுதி 24, பக்கம் 264,
பொருள்முதல்வாததிற்கும் இயக்வியலுக்கும் தொடர்பு அற்றதாக, வரலாற்றுக் தொடர்பு அற்றதாக இருந்தது.
வளர்ச்சியை அது மிக எளிய வகையில் புரிந்துகொண்ட.து. வளர்ச்சி பற்றிய போதனை பிரதானமாக ஹெகலின் இயக்கவியலிலிருந்து உருவாக்கப்பட்டது, ஆனால் அது கருத்துமுகல்வாத கண்ணோட்டத்தை கொண்டிருந்தது. எங்கெல்ஸ் குறிப்பிட்டது போல, “ஹெகலின் இயக்கவியலில் இருந்த திரிபின் அடிப்படை என்னவென்றால், ஹெகலின் கருத்துப்படி அது கருத்தின் சுயவளர்ச்சியாக' இருக்க வேண்டும் என்பதே. இதன்படி, பொருள்களின் இயக்கம் கருத்தின் பிரதிபலிப்பே ஆகும். உண்மையிலோ, நமது மூளையில் தோன்றும் இயக்கவியல், இயற்கைப் பிரபஞ்சத்திலும் மனித சமூகத்திலும் ஏற்படுவதும் இயக்கவியல் வடிவுக்கு உட்பட்டதுமான எதார்த்த வளர்ச்சி யின் பிரதஇிபிம்பமே.”1 மார்க்ஸீயத்தின் ஸ்தாபகர்கள் ஹெகலின் கருத்துமுதல்வாத இயக்கவியல் வாதத்தின் மீது விமர்சனரீதியில் மீண்டும் சிந்தனை செலுத்தி பொருள்முதல்வாத இயக்கவியலை உருவாக்கினார்கள். இது பண்பளவில் புதிய இயக்கவியல் வாதமுறையாகும். “எனது இயக்கவியல் வாத முறை தன் அடிப்படையில் ஹெகலின் முறையிலிருந்து வேறானது மட்டும் அல்ல, அதன் நேர் எதிர்நிலை ஆகவும் விளங்குகிறது” 2 என்று எழுதினார் மார்க்ஸ்.
பொருள்முதல்வாத இயக்கவியலைச் செவ்வையாக உருவாக்குகையில் மார்க்ஸும் எங்கெல்ஸும் 19ம் நூற்றாண்டின் மிகப் பெரிய இயற்கைவிஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை ஆதாரமாக எடுத்துக் கொண்டார்கள். அங்கஜீவிகளின் உயிரணுக் கட்டமைப்பு பற்றிய சித்தாந்தம், ஆற்றலின் அழியாமையையும் மாற்றத்தையும் பற்றிய விதி, விலங்கினங்கள், தாவரஇனங்கள் ஆகியவற்றின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் குறித்த டார்வினது போதனை, இவற்றை அவர்கள் முதன்மையாக ஆதாரமாக எடுத்துக்கொண்டார்கள். பொருளியல் பிரபஞ்சம் ஏதோ சதாசர்வ காலத்திற்கும் நிலைத்திருப்பது என்றும் மாறுதல் அற்றது என்றும் கருதிய மாறாநிலைவாகக் கண்ணோட்டத்தை இந்தக் கண்டுபிடிப்புக்கள் அதாரத்துடன் மறுத்து விட்டன. பிரபஞ்சத்தின் பொருள்களும் நிகழ்ச்சிகளும் மாறுதலும் வளர்ச்சியும் கொண்டவை. ஒன்றானவை, பரஸ்பரத் தொடர்பு உள்ளவை என்ற இயக்க இயலின் அடிப்படைக் கோட்பாடுகளை இவை உறுதிப்படுத்தின். இந்தக் கண்டுபிடிப்புக் களின் தத்துவ முக்கியத்துவம் முதன்மையாக இவ்விஷயத்தில் தான் அடங்கியுள்ளது. மார்க்ஸீயகத் தத்துவப் பொருள்முதல்வாகமும் பழைய பொருள்முதல்வாதத்தின் மறு உயிர்ப்பாக மட்டுமே இருந்து விடவில்லை. 19ம் நூற்றாண்டின் இயற்கை விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்களைப் பயன்படுத்திக்கொண்டு மார்க்ஸும் எங்கெல்ஸும் பழைய மாறாநிலைவாதப் பொருள்முதல்வாகத்தை அடியோடு மாற்றிச் சீரமைத்தார்கள். பொருள்முகல்வாதத்தை இயக்கவியலையும் ஒன்றிணைத்து இயக்கவியல் பொருள் முதல்வாதத்தை அவர்கள் உருவாக்கினார்கள். பிரபஞ்சத்தை மாற்றி அமைப்பதற்கான சித்தாந்தக் கருவி என்ற வகையில் இயக்க இயல் பொருள்முதல்வாதம் உருவாக்கப்பட்டது தத்துவச் சிந்தனை தோன்றிய காலம் முதற்கொண்டு அதன் வரலாறு முழுவதிலும் அதனுடைய மிகப் பெரும் நிறைவேற்றமாகவும் தத்துவத்தில் புரட்சிகர மாற்றமாகவும் திகழ்த்தது.
பழைய பொருள்முதல்வாதத்தின் வரையறுத்த இயல்பு மாறாநிலைவாதத் தன்மை கொண்டிருந்ததில் மட்டுமே அடங்கியிருக்கவில்லை. அது கடைசிவரை ஒத்தியைந்ததாகவும் இருக்கவில்லை, ஏனெனில் மார்க்ஸீயத்துக்கு முந்திய பொருள்முதல் வாதிகள் அதைச் சமூக நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தச் செய்யத் திறனற்றவர்களாக இருந்தார்கள். மார்க்ஸும் எங்கெல்ஸும் பொருள்முதல்வாதக்தகை உச்சிவரை “நிறுவிப் பூர்த்தி செய்தார்கள்”. அவர்கள் வரலாற்று ரீதியான பொருள்முதல் வாதத்தை உருவாக்கினார்கள். சமூக வளர்ச்சிக்குரிய மிகப் பொதுவான விதிகள் பற்றிய விஞ்ஞானம் இது. தத்துவத்தில் அவர்கள் நிகழ்த்திய புரட்சிகரமான மாறுதலின் வெளியீடாக இதுவும் விளங்கியது..
.
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக