இந்தப்பகுதி முழுமையாக அரசும் புரட்சியும் நூல் அதாவது லெனின் நூல் திரட்டு 2 ன் முன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோ -1977வெளியிட்டுள்ள அந்த நூலின் அடிப்படையில் பக்கங்கள் குறிபிடப்படுள்ளன. விவாதம் என்பது வார்த்தை விளையாட்டு அல்ல மார்க்சிய லெனினிய தெளிவிற்கே. மடாதிபதிகளும் மடங்களும் தங்களின் புனிதத்தை காக்க எந்த நிலையிலும் தங்கள் நிலையை காக்க போரிடுவோர் மெய்விவரங்களிலிருந்து தர்க்க ரீதியான உண்மையான விவாதப்போர் புரிய திறன் அற்றவர்கள் சொல்விளையாட்டில் கிளிப்பிள்ளை போல் பேசுவோர் தய கூர்ந்து விவாதத்தில் கலந்துக் கொள்ளாதீர். மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டு விவாதித்து வளர்ச்சியடைய கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளோர் கலந்துக் கொள்ளுங்கள் தோழர்களே.
பெர்ன்ஷ்டைன் எழுதினார்: "இதன் அரசியல் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை” இந்த வேலைத்திட்டம் “இதன் சாராம்சக் கூறுகள் யாவற்றிலும் புருதோனின் கூட்டாட்சிக் கோட்பாட்டை மிகவும் ஒத்திருக்கிறது... மார்க்சுக்கும் 'குட்டிமுதலாளித்துவ” புருதோனுக்குமிடையே (சிலேடைப் பொருளில் தொனிக்க வேண்டுமென்று “குட்டிமுகலாளித்துவ” என்னும் சொல்லை பெர்ன்ஷ்டைன் மேற்கோள் குறிகளிட்டு உபயோகிக்கிறார்) ஏனைய யாவற்றிலும் எவ்வளவுகான் வேறு பாடு இருப்பினும், இந்த விவகாரங்களில், அவர்களுடைய வாதமுறைகள் மிகமிக நெருங்கி வந்துவிடுகன்றன””,
நகராண்மைக் கழகங்களுடைய முக்கியத்துவம் அதிகரித்து வருவது மெய்தான் என்று பெர்ன்ஸ்டைன் மேலும் தொடர்ந்து எழுதுகிறார். இருப்பினும் 'மார்க்சும் புருதோனும் நினைக்கிற மாதிரி தற்கால அரசுகளை இப்படி அடியோடு கலைத்து (Auflo-sung) அவற்றின் ஒழுங்கமைப்பை இப்படி முற்றிலும் மாற்று வதும் (Umwandlung) (கம்யூன்களால் அனுப்பப்பட்ட பிரதிநிதிகளாலான மாநில அல்லது மாவட்டச் சபைகளுடைய பிரதிநிதிகளைக் கொண்டு தேசிய சபை அமைக்கப்படும்படி) இதன் விளைவாய்த் தேசியப் பிரதிநிதித்துவத்துக்கான பழைய முறையை மறையச் செய்வதுமே ஜனநாயகத்தின் முதற்பணியாய் இருக்குமென்பது சந்தேகத்துக்குரியதாகவே எனக்குத் கோன்றுகிறது”?
(பெர்ன்ஷ்டைன், முதற்கோள்கள், ஜெர்மன் பதிப்பு, 1899, பக்கங்கள் 134, 136).
“புல்லுருவியாய் வளர்ந்து வேண்டாத தசைப் பிண்டமாய் அமைந்த அரசு அதிகாரத்தை ஒழிப்பது” பற்றிய மார்க்சின் கருத்தோட்டங்களைப் புருதோனின் கூட்டாட்சிக் கோட்பாட்டுடன். போட்டுக் குழப்புவது முழுக்க முழுக்க அபாண்டமேயாகும்! ஆனால் இந்தக் குழப்படி ஏதோ தற்செயலாய் நிகழ்வதல்ல. எனெனில் மத்தியத்துவத்துக்கு எதிராய்க் கூட்டாட்சிக் கோட்பாடு குறித்து இங்கு மார்க்ஸ் பேசவேயில்லை, எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் செயல்படும் பழைய, முதலாளித்துவ அரசுப் பொறியமைவை நொறுக்குவது பற்றியே பேசுகிறார் என்பது எந்தச் சந்தர்ப்பவாதிக்கும் புலப்படாதுதான்.
இந்தச் சந்தர்ப்பவாதிக்குப் புலப்படுவதெல்லாம் குட்டி முதலாளித்துவ அற்பத்தனமும் “சீர்திருத்தவாதச்” சகதியும் மலிந்துவிட்ட சூழலில் தன்னைச் சுற்றிலும் தான் காண்பதுதான், அதாவது “நகராண்மைக் கழகங்கள்தான்” பாட்டாளி வர்க்கப் புரட்சி குறித்துச் சிந்திக்கும் பழக்கத்தையே இந்தச் சந்தர்ப்பவாதி விட்டொழித்துவிட்டார்.
இது நகைக்கத்தக்ககே. அனால் இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவெனில் இந்த விவகாரத்தில் யாருமே பெர்ன்ஷ்டைனை எதிர்த்து வாதாடவில்லை. பலரும் பெர்ன்ஷ் டைனை எதிர்த்து வாதாடியிருக்கிறார்கள்- முக்கியமாய் ருஷ்ய வெளியீடுகளில் பிளெஹானவையும் ஐரோப்பிய வெளியீடுகளில் காவுத்ஸ்கியையும் குறிப்பிடலாம். ஆயினும் இந்த விவகாரத்தில் மார்க்சை பெர்ன்ஷ்டைன் திரித்துப் புரட்டியது குறித்து இவர்களில் எவரும் எதுவுமே கூறிய இல்லை.
இந்தச் சந்தர்ப்பவாதி புரட்சிகர வழியில் சிந்திக்கவும் புரட்சி குறித்து நினைக்கவும் அறவே மறந்துவிட்டதால், அவர் “கூட்டாட்சிக் கோட்பாட்டை” மார்க்சுக்குரியதாகக் கற்பித்துக் கூறுகிறார், அராஜகவாதத்தின் மூலவரான புரூதோனுடன் மார்க்சை இணைத்துக் குழப்புகிறார். மரபு வழுவாத மார்க்சியவாதிகள் என்றும் புரட்சிகர மார்க்சியத் தத்துவத்தின் காவலர்கள் என்றும் கூறிக் கொள்ளும் காவுத்ஸ்கியையும் பிளெஹானவையும் பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் அவர்கள் மெளனம் சாதித்துவிடுகின்றனர்! மார்க்சியத்துக்கும் அராஜகவாதத்துக்கும் இடையேயுள்ள வேறுபாடு குறித்து அளவு மீறிக் கொச்சையான கருத்துக்களை வெளியிடுவது காவுத்ஸ்கிவாதிகள், சந்தர்ப்பவாதிகள் ஆகிய இருசாராருக்குமுரிய குணாதிசயமாய் இருப்பதற்கான மூல காரணங்களில் ஒன்று இங்கு அடங்கியுள்ளது. இதை நாம் பிற்பாடு திரும்பவும் விவாதிப்போம்.
கம்யூனுடைய அனுபவம் குறித்து மார்க்ஸ் கூறும் மேற்கண்ட கருத்துரைகளில் கூட்டாட்சிக் கோட்பாட்டின் சாயல் சிறிதும் காணப்படவில்லை. சந்தர்ப்பவாதி பெர்ன்ஷ்டைன் காணத் தவறும் அதே விவரத்தில்தான் மார்க்ஸ் புரூதோனுடன் உடன்பாடு கொண்டிருந்தார். பெர்ன்ஷ்டைன் அவர்களிடையே ஒற்றுமை இருக்கக் கண்ட விவரத்தில் மார்க்ஸ் புருதோனுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்.
தற்கால அரசுப் பொறியமைவு “நொறுக்கபட வேண்டும்” என்பதே இருவருடைய நிலையும்--இதில் மார்க்ஸ் புருதோனுடன் உடன்பாடுகொண்டிருந்தார். இந்த விவரத்தில் மார்க்சியத்துக்கும் அராஜகவாகத்துக்கும் (புரூதோன், பக்கூனின் ஆகிய இருவரின் அராஜகவாதத்துக்கும்] இடையே கருத்து ஒற்றுமை இருப்பதைச் சந்தர்ப்பவாதிகளோ காவுத்ஸ்கிவாதிகளேோ காண விரும்பவில்லை. ஏனெனில் இங்கிருந்துதான் அவர்கள் மார்க்சியத்திடமிருந்து விலகி ஓடினர்.
கூட்டாட்சிக் கோட்பாடு பற்றிய பிரச்சினையில்தான் மார்க்ஸ் புருதோனுடனும் பக்கூனினுடனும் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார் (பாட்டாளி வர்க்கச் சார்வாதிகாரத் தைப் பற்றி சொல்லவே வேண்டாம்). கூட்டாட்சிக் கோட்பாடு அராஜகவாதத்தின் குட்டிமுதலாளித்துவக் கருத்துக்களிலிருந்து தர்க்க வழியில் இயல்பாய்ப் பெறப்படும் ஒன்று. மார்க்ஸ் மத்தியத்துவவாதி. மேலே தரப்பட்ட அவருடைய கருத்துரைகளில் மத்தியத்துவத்திலிருந்து எவ்விதத்திலும் அவர் விலகிச் சென்றுவிடவில்லை. அரசுபற்றிய அற்பத்தனமான “மூடபக்தியில்” மூழ்கிக் கிடப்போரே முதலாளித்துவ அரசுப் பொறியமைவை அழிப்பது மத்தியத்துவத்தை அழிப்பதாகுமென நினைத்துத் தவறிழைக்க முடியும்!
பாட்டாளி வர்க்கத்தினரும் ஏழை விவசாயிகளும் அரசு அதிகாரத்தைத் தாமே மேற்கொண்டு, முற்றிலும் சுதந்திர மாய்த் தம்மைக் கம்யூன்களில் ஒழுங்கமைத்துக் கொண்டு, மூலதனத்தை தாக்குவதிலும், முதலாளிகளின் எதிர்ப்பை அடக்குவதிலும், தனியார் உடைமைகளாயிருக்கும் ரயில் பாதைகளையும் ஆலைகளையும் நிலத்தையும் இன்ன பிறவற்றையும் தேசம் அனைத்தின், சமுதாயம் முழுமையின் உடைமைகளாய் மாற்றுவதிலும் எல்லாக் கம்யூன்களுடைய செயலையும் ஒன்றுபடுத்திக் கொண்டால், அது மத்தியத்துவம் இல்லாமல் பிறகு என்ன? சிறிதும் முரணில்லாத ஜனநாயக மத்தியத்துவக்தோடு, பாட்டாளி வர்க்க மத்தியத்துவமும் இல்லாமல் பிறகு என்ன?
மனமுவந்த முறையிலான மத்தியத்துவம், கம்யூன்கள்தாமே மனமுவந்து ஒரு தேசமாய் ஒன் றிணைவது, முதலாளித்துவ ஆதிக்கத்தையும் முதலாளித்துவ அரசுப் பொறியமைவையும் அழித்திடுவகற்காகப் பாட்டாளி வர்க்கக் கம்யூன்கள் மனமுவந்து ஒன்றாய் ஒன்றிவிடுவது சாத்தியமே என்பதை பெர்ன்ஷ்டைன் நினைத்துக்கூட பார்க்க இயலாகுவராய் இருக்கிறார். எல்லாக் குட்டிமுதலாளித்துவ அற்பவாதிகளையும் போல பெர்ன்ஷ்டைன் மத்தியத்துவத்கை முற்றிலும் மேலிருந்தே, முற்றிலும் அதிகாரிகளாலும் இராணுவக் கும்பலாலும் மட்டுமே பலவந்தமாய்த் திணிக்கப்பட்டு நிலைநிறுத்தப்படும் ஒன்றாகவே கற்பனை செய்துகொள்கிறார்.
மார்க்ஸ் தமது கருத்துக்கள் திரித்துப் புரட்டப்படுமென முன்னறிந்து வைத்திருந்தாற் போல, கம்யூனனது தேசிய ஒற்றுமையை அழிக்க விரும்பிற்று, மத்திய அதிகாரத்தை ஒழிக்க விரும்பிற்று என்னும் குற்றச்சாட்டு மனமறிந்து வேண்டுமென்றே செய்யப்படும் ஏமாற்றாகுமெனக் தெளிவுபட வலியுறுத்தினார். வேண்டுமென்றேதான் மார்க்ஸ் “தேசிய ஒற்றுமை... ஓழுங்கமைக்கப்படும்” என்று குறிப்பிட்டார். முதலாளித்துவ, இராணுவ, அதிகாரவர்க்க மத்தியத்துவத்கை எதிர்த்து உணர்வு பூர்வமான, ஜனநாயக வழிப்பட்ட, பாட்டாளி வர்க்க மத்தியத்துவத்தை வலியுறுத்தும் பொருட்டு இவ்வாறு குறிப்பிட்டார்.
ஆனால் கேட்க விரும்பாதவர்களைப் போன்ற டமாரச் செவிடர்கள் வேறு யாருமில்லை. அரசு அதிகாரம் அழிக்கப் பட வேண்டும், புல்லுருவியாய் வளர்ந்து வேண்டாக தசைப் பிண்டமாய் இருப்பதை வெட்டியெறிய வேண்டும் என்பது தான் தற்கால சமூக-ஜனநாயகத்தின் சந்தர்ப்பவாதிகள் கேட்க விரும்பாத உண்மையாகும்.
தொடரும் விவாத களம்...
No comments:
Post a Comment