பொது எதிரியை வீழ்த்துவதற்காக தனது சக்தியை திடப் படுத்திக் கொள்வதும் சிறு சக்தியைக் கூட பயன்படுத்திக் கொள்வதும் சிறு சக்தி கூட எதிரணியில் சேராமல் பார்த்துக் கொள்வதும் எவ்வித ஆத்திரமூட்டலுக்கும் இறையாகாமலும், அதேநேரம் பயந்து ஓடி ஒழியாமலும் எதிரிக்கு எதிரான அனைத்து சக்திகளையும். அரவணைத்துக்கொண்டு உலகில் ஜனநாயக மற்றும் சோசலிசத்தைக் காத்திட ஒரு சிறப்பான செயல் தந்திரமே பாசிச எதிர்ப்பு செயல் தந்திரம் முன்னணி செயல்தந்திரம்.
இரண்டாவது போர்முனை திறக்குமாறு அமெரிக்க பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் நாட்டு அரசுகளை வற்புறுத்தியது.
லண்டனில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளிகளின் பிரதிநிதி குழு சச்சிலிடும் மனு அளித்தது அதில் ஐரோப்பாவில் இரண்டு போர் முனைகளில் ஹிட்லரை இன்னும் விரைவாக நொறுக்க முடியும். இரண்டாவது போர்முனை திறப்பதற்கு தேவையான எல்லாத் தியாகங்களையும் மேற்கொள்ள நாங்கள் தயாராய் இருக்கிறோம். சோவியத் யூனியன் தனியே தியாகங்களை மேற்கொள்ளும்படி விடுவது சரியாக. உடனே செயல் புரிய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் என அந்த மனுவில் தொழிலாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். இப்படிப்பட்ட நடவடிக்கைகளை பாட்டாளி வர்க்கதின் சர்வதேச ஆதரவு ஆகும்.
1945 ஏப்ரல் 16 அதிகாலை சுபயோக சுபநோ ரஸ்தோகி தலைமையிலான மூன்று பெரும் படைகள் பெர்லின்த் தாக்கியதும். நாஜிக்கள் ஓட்டம் எடுத்தனர். ஏப்ரல் 30 ல் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். ஜெர்மன் நாடாளுமன்றத்தில் மே 1-ல் செங்கொடி ஏற்றப்பட்டது. ஜெர்மன் ராணுவ தலைமை தளபதி பீல்ட் மார்ஷல் வில்லியம் பீட்டர் சரணடைந்தார். இவ்வாறு பாசிசம் வீழ்த்தப்பட்டது. சோசலிசம் வென்றது பாசிசத்தை வீழ்த்தியதில் அகிலத்தின் பங்கு அளப்பரியது.
உலக யுத்தம் பற்றிய பொதுவான வரையறைகளை அகிலம் முன்வைத்திருந்தாலும், இரண்டாம் உலகப் போர் கட்டம் கட்டமாக வந்தது. முதல் கட்டத்தில் ஜெர்மனியில். பாசிசம் பலப்பட்டு யுத்த தயாரிப்புகளில் ஈடுபட்டு சில நாடுகளை ஆக்கிரமித்தல் இரண்டாம் கட்டத்தில் போலந்து மீதான இட்லரின் தாக்குதல் இரண்டாம் உலகப் போர் துவங்குதல். மூன்றாம் கட்டத்தில் சோவியத் யூனியன் மீதான ஹிட்லரின் தாக்குதல் என திருப்பங்கள். திருப்பங்களுடன் வந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் அகிலம் தன் நிலைப்பாடுகளை முன்வைத்தது. அகிலம் தனது நிலைப்பாடுங்களுக்கான ஆதாரங்களை லெனினியத்தில் இருந்து எடுத்துக்கொண்டது. சோவியத்தின் சோசலிச பலப்படுத்துவதிலும் பாசிசத்தை வீழ்த்தியதுலும் கம்யூனிஸ்ட் அகிலம் மற்றும் தோழர் ஸ்டாலின் பங்கு அளப்பறியது.
திட்டம் யுத்த தந்திரம் செயல்தந்திரம், புரட்சியின் தலைமைப் பற்றிய விஞ்ஞானம் என தோழர் ஸ்டாலின் கூறினார். இது பற்றிய அறிவும் படிப்பும் இல்லாதவர்கள் தான் அகிலத்தின் மீதும் ஸ்டாலின் மீதும் விமர்சனங்களை வைக்க முடியும். முதலாளித்துவம் மற்றும் ட்ராட்ஸ்கியத்தின் மீதான வெற்றியாக. லெனினியம் அமைந்தது என்றால் பாசிசத்தின் மீதான வெற்றியாக அகிலமும் ஸ்டாலினும் இருந்தனர்.
பொது எதிரியை வீழ்த்துவதற்காக தனது சக்தியை திடப் படுத்திக் கொள்வதும் சிறு சக்தியைக் கூட பயன்படுத்திக் கொள்வதும் சிறு சக்தி கூட எதிரணியில் சேராமல் பார்த்துக் கொள்வதும் எவ்வித ஆத்திரமூட்டலுக்கும் இறையாகாமலும், அதேநேரம் பயந்து ஓடி ஒழியாமலும் எதிரிக்கு எதிரான அனைத்து சக்திகளையும். அரவணைத்துக்கொண்டு உலகில் ஜனநாயக மற்றும் சோசலிசத்தைக் காத்திட ஒரு சிறப்பான செயல் தந்திரமே பாசிச எதிர்ப்பு செயல் தந்திரம் முன்னணி செயல்தந்திரம்.
அரசுக்கு எதிராக அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய பெரும் பேரணி நடந்து கொண்டிருந்த பொழுது ஊர்வலத்தில் சென்ற ஒருவர் ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு காவல்துறை மீது கல்லெறிந்து காவல்துறை ஊர்வலத்திதை தாக்க ஊர்வலத்தில் வந்தவர்களும் காவல்துறையைத் தாக்க அரசை எதிர்த்து நடந்த பேரணி களைந்து சின்னாபின்னமாகி. அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தோற்றுப் போனது இப்படி பட்ட சாத்தான்கள் மீது கல்லெறியும் வேலைகள். இது போன்ற புரட்சி மறுக்கும் புரட்சியாகத் தோன்றலாம். ஆனால் உண்மையான கம்யூனிஸ்டுகள் இலக்கை தாக்குவதையே குறிக்கோளாய்க் கொள்வார்கள்.
உள்நாட்டு யுத்தம் என்ற செயல் தந்திரம் கடைப்பிடிக்கப்பட்டு இருந்தால் மேற்கண்ட நிலை தான் நடந்திருக்கும். பாசிசத்தை வீழ்த்தி இருக்கவும் முடியாது. சோஷலிசம். மிகவும் பின்னடைந்து இருக்கும். எனவே தோழர் ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வதேசிய ராஜதந்திரத்தை கடைப்பிடித்து வெற்றி கண்டார். இது எந்த வகையிலும் முதலாளிய ராஜதந்திரம் அல்ல.
அகிலத்தின் தவறான வழிகாட்டுதல், தேசிய விடுதலை மற்றும் சோசலிச புரட்சியை காவு கொடுத்து விட்டது என்று சட்டவாதிகள் சொல்வதில் எள்ளளவும் உண்மை அல்ல. பாசிசத்துக்கு எதிரான வெற்றியின் பயனாய் ஏகாதிபத்திய அமைப்பில் புதிய பிளவுகள் உருவானது. பல நாடுகளில் மக்கள் ஜனநாயக புரட்சிகளும். சோசலிஷ புரட்சிகளும் நடந்தது. போலந்து செக்கோஸ்லோவியா, ஜெர்மன் ஜனநாயக குடியரசு, பல்கேரியா, அங்கேரியா ருமேனியா, யூகோஸ்லாவியா, அல்பேனியா, வியாட்நாம், வட கொரியா நாடுகளின் மக்கள் ஜனநாயக குடியரசுகளை அந்த நாடுகளின் உழைக்கும் மக்கள் நிறுவினர். 1849 ல் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டது. 1959-ல் கியூபாபுரட்சி வெற்றி அடைந்தது. லாவோஸ் கம்போடியா புரட்சி ஆட்சி வந்தது. ஏகாதிபத்திய உலகுக்கு எதியாக சோசலிச ஜனநாயக உலகம் பலம் பெற்று இருந்தது. அகிலும் தவறான வழிகாட்டுதலை அளித்திருந்தால் மேற்கண்ட நாடுகள் புரட்சியில் முன்னேறியிருக்காது. மேலும் மேற்கண்ட நாடுகளில் மாற்றம் நடக்கும் போது அகிலம் என்ற சர்வதேச அமைப்பு இல்லை.
இறுதியாக இந்த ட்ராட்ஸ்கியவாதிகள் அவர்கள் எந்த சூழ்நிலைகளிலும்யாக ஏகாதிபத்தியங்களுடன் கூட்டணி கிடையாது என்ற ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார்கள். மார்க்சிய லெனினியவாதிகள் யாரும் இப்படிப்பட்ட கருத்தை ஏற்க முடியாது. புரட்சியானது நெளிவு சுளிவாகவும் ஏற்ற இறக்கங்களுடன் அகநிலை மற்றும் புறநிலைப் பற்றிய வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்டது. பல திருப்பங்களையும் உள்ளடக்கியது. ஆனால் எந்த சூழ்நிலையிலும் கம்யூனிஸ்ட் கட்சி தனது தொலைநோக்கை கைவிடாமல் கட்சியை மக்களையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. எனவே நாம் நம்மை ஒரு கூண்டுக்குள் அடைத்துக் கொள்ள முடியாது. தோழர் மாவோ சொன்ன புரட்சிக்கான மூன்று மந்திரக் கோள்களில் 1). ஐக்கிய முன்னணி என்பதாகும். ஐக்கிய முன்னணி என்பது வெற்றியை எளிமைப்படுத்துவதற்கான ஒரு நடைமுறையே புரட்சி முடியும் வரை பல ஐக்கிய முன்னணிங்களை. கட்சி கையாள வேண்டியிருக்கும். புரட்சி பற்றியும், கட்சி பற்றியும் தன்னைப் பற்றியும் முட்டாள்தனமான அராஜகவாத கண்ணோட்டம் அவநம்பிக்கையுள்ள.ட்ராட்ஸ்கியவாதிகள் தான் எதிரியுடன் கூட்டணி கிடையாது என்ற பாதைக்கு செல்ல முடியும். இரண்டாம் உலகப்போரில் முதல் கட்டத்தில் பாசிச, ஜெர்மனியுடன் சோவியத் ரஷ்யா உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டது தோழர் ஸ்டாலின் அவர்கள் எதிரியுடன் ஒப்பந்தம் கண்டார் இதுவும் கூட ட்ராட்ஸ்கியவாதிக்கு தவறு என்றுப்படலாம். தோழர் ஸ்டாலின் அவர்கள் ஒரு அடி பின் வாங்கி ஓங்கி அடிக்க ஒப்பந்தம் கண்டார். இந்த விஷயம் கூட பிறகு நடந்த சர்வதேச மாநாடுகளில் விவாதப் பொருளாக இல்லை.
தொடரும்.......
No comments:
Post a Comment