அரசும் புரட்சியும் -லெனின் -1

 இந்தப்பகுதி முழுமையாக அரசும் புரட்சியும் நூல் அதாவது லெனின் நூல் திரட்டு 2 ன் முன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோ -1977வெளியிட்டுள்ள அந்த நூலின்  அடிப்படையில்  பக்கங்கள் குறிபிடப்படுள்ளன. விவாதம் என்பது  வார்த்தை விளையாட்டு அல்ல மார்க்சிய லெனினிய தெளிவிற்கே. மடாதிபதிகளும் மடங்களும் தங்களின் புனிதத்தை காக்க எந்த நிலையிலும் தங்கள் நிலையை காக்க போரிடுவோர் மெய்விவரங்களிலிருந்து தர்க்க ரீதியான உண்மையான விவாதப்போர் புரிய திறன் அற்றவர்கள் சொல்விளையாட்டில் கிளிப்பிள்ளை போல் பேசுவோர் தய கூர்ந்து விவாதத்தில் கலந்துக் கொள்ளாதீர். மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டு விவாதித்து வளர்ச்சியடைய கற்றுக் கொள்ள விருப்பம் உள்ளோர் கலந்துக் கொள்ளுங்கள் தோழர்களே.


மார்க்ஸ்‌  கூறியதாவது:: (நூலின் பக்கம் 331

முதலாளித்துவ சமுதாயத்துக்கும்‌ கம்யூனிச சமுதாயத்துக்கும்‌ இடையில்‌ ஒன்று மற்றொன்றாய்ப்‌ புரட்சிகர மாற்றமடையும்‌ கட்டம்‌ உள்ளது. இதற்கு இணையாய்‌ அரசியல்‌ இடைக்கால கட்டமும்‌ ஒன்று உள்ளது. இந்த இடைக்காலத்தில்‌ அரசு பாட்டாளி வர்க்கத்தின்‌ புரட்சிகரச்‌ சர்வாதிகாரமாகவே அன்றி வேறு எதுவாகவும்‌ இருக்க முடியாது...

ற்கால முதலாளித்துவ சமுதாயத்தில்‌ பாட்டாளி வர்க்‌கம்‌ ஆற்றும்‌ பாத்திரத்தைப்‌ பற்றிய பகுத்தாய்வின்‌ அடிப்‌படையிலும்‌, இந்த சமுதாயத்தின்‌ வளர்ச்சி சம்பந்தமான விவரங்களின்‌ அடிப்படையிலும்‌, பாட்டாளி வர்க்கத்துக்கும்‌ முதலாளித்துவ வர்க்கத்துக்குமுள்ள ஒன்றுக்கொன்று பகைமையான நலன்களிடையே இணக்கம்‌ காண முடியாத நிலையின்‌ அடிப்படையிலும்‌ மார்க்ஸ்‌ இம்முடிவை வந்தடைகிறார்‌.

ன்முன்‌ இப்பிரச்சினை பின்வருமாறு கூறப்பட்டது: பாட்டாளி வர்க்கம்‌ தனது விடுதலையைப்‌ பெறும்‌ பொருட்டு முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்தி, அரசியல்‌ அதிகாரம்‌ வென்று தனது புரட்சிகரச்‌ சர்வாதிகாரத்கை நிறுவியாக வேண்டும்‌.

பாட்டாளி வர்க்கத்தை ஆளும்‌ வர்க்கத்தின்‌ நிலைக்கு உயர்த்துவது, “ஐனநாயகத்துக்கான போராட்டத்தில்‌ வெற்றி பெறுவது என்று இரு கருத்தோட்டங்களையும்‌ கம்யூனிஸ்டு அறிக்கை ஒருங்கே குறிப்பிடுவதுடன்‌ நின்றுவிடுவதை நாம்‌ ஏற்கனவே கண்டோம்‌. முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்துக்கு மாறிச்செல்கையில்‌, மேலே கூறப்பட்டவையாவற்றின்‌ அடிப்படையிலும்‌ ஜனநாயகம்‌ எப்படி மாற்றமடைகிறது என்பதை மேலும்‌ துல்லியமாய்‌ நிர்ணயிக்கலாம்‌.

முதலாளித்துவ சமுதாயத்தில்‌, மிகவும்‌ சாதகமான நிலைமைகளில்‌ அது வளர்வதாய்க்‌ கொள்வோமாயின்‌, ஜனநாயகக்‌ குடியரசில்‌ ஓரளவு முழுமையான ஜனதாயகம்‌ இருக்‌கக்‌ காண்கிறோம்‌. அனால்‌ இந்த ஜனநாயகம்‌ எப்பொழுதும்‌ முதலாளித்துவச்‌ சுரண்டலால்‌ எழுப்பப்படும்‌ குறுகலான வரம்புகளால்‌ இறுக்கப்பட்டுள்ளது. ஆகவே இது நடைமுறையில்‌ எப்பொழுதும்‌ சிறுபான்மையோருக்கான ஜனநாயகமாகத்தான்‌, சொத்துடைத்க வர்க்கங்களுக்கு மட்டுமேயான, செல்வந்தர்களுக்கு மட்டுமேயான ஐனநாயகமாகத்‌தான்‌ இருக்கிறது. முதலாளித்துவ சமுதாயத்தில்‌ சுதந்திரமானது பண்டைச்‌ கிரேக்கக்‌ குடியரசுகளில்‌ இருந்தகே ஏறத்‌தாழ அதேபோல அடிமையுடையாளர்களுக்கான சுதந்திரமாகத்தான்‌ எப்பொழுதுமே இருந்து வருகிறது. முதலாளித்‌துவச்‌ சுரண்டலின்‌ நிலைமைகள்‌ காரணமாய்‌ தற்காலக்‌ கூலி அடிமைகள்‌ பட்டினியாலும்‌ வறுமையாலும்‌ நசுக்கப்‌ பட்டு ஜனநாயகம்‌ குறித்துத்‌ தொல்லைப்பட முடியாதபடி,

அரசியல்‌ குறித்துத்‌ தொல்லைப்பட முடியாதபடி அவல நிலையில்‌ இருக்கப்பட்டிருக்கிறார்கள்‌. நிகழ்ச்சிகள்‌ சாதாரணமாய்‌, சமாதான வழியில்‌ ஓடிக்‌ கொண்டிருக்கையில்‌ பெரும்பான்மையான மக்கள்‌ பொது வாழ்விலும்‌ அரசியல்‌ வாழ்விலும்‌ ஈடுபட முடியாதவாறு தடுக்கப்பட்டுவிடுகிறார்‌கள்‌.

இப்படிச்‌ சொல்வது முற்றிலும்‌ சரியே என்பதை வேறு எதையும்விட ஜெர்மனி மிகவும்‌ தெளிவாய்‌ ஊர்ஜிதம்‌ செய்‌கிறது எனலாம்‌. (இதுவரை அதேநூல் பக்கங்கள் 332-333).

தவிர்க்க முடியாதவாறு குறுகலாகவும்‌, ஏழைகளைத்‌ திருட்டுத்தனமாய்‌ ஒதுக்கித்‌ தள்ளிவிடுவதாகவும்‌, ஆகவே கபடமாகவும்‌ முழுக்க முழுக்க பொய்க்‌ கூற்றாகவும்‌ இருக்கும்‌ இந்த முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து முன்னோக்கிச்‌ செல்வதற்குரிய வளர்ச்சி, மிதவாதப்‌ பேராசிரியர்களும்‌ குட்டிமுதலாளித்துவச்‌ சந்தர்ப்பவாதிகளும்‌ நம்மை நம்பவைக்க விரும்புவது போல, எளிய முறையிலும்‌ நேரடியாகவும்‌ ஒழுங்காகவும்‌ மேலும்‌ மேலும்‌ கூடுதலான ஜனநாயகத்தை நோக்கி நடைபெறுவதில்லை. இல்லை, முன்‌னோக்கிச்‌ செல்கிற வளர்ச்சியானது, அதாவது கம்யூனிசத்துக்‌கான வளர்ச்சியானது பாட்டாளி வர்க்கச்‌ சர்வாதிகாரத்தின்‌வாயிலாகவே நடைபெறுகிறது, வேறு எவ்வழியிலும்‌ அல்ல. ஏனெனில்‌ முதலாளித்துவச்‌ சுரண்டலாளர்களின்‌ எதிர்ப்பை வேறு யாராலும்‌ அல்லது வேறு எந்த வழியிலும்‌ தகர்த்திட முடியாது. (இதே நூல் பக்கங்கள் 334-335).

பாட்டாளி வர்க்கச்‌ சர்வாதிகாரமானது, அதாவது ஒடுக்கு முறையாளர்களை அடக்குவதற்காக ஓடுக்கப்பட்டவர்களுடைய முன்னணிப்‌ படை ஆளும்‌ வர்க்கமாய்‌ அமையும்‌ ஒழுங்‌கமைப்பானது ஜனநாயகத்தை விரிவாக்குவதோடு மட்டும்‌ நின்றுவிடக்‌ கூடியதல்ல. ஜனநாயகத்தை பிரம்மாண்டமான அளவில்‌ விரிவாக்குவதுடன்‌, பணமூட்டைகளுக்கான ஐனநாயகமாய்‌ இராது முதன்முதலாய்‌ ஏமழைக்களுக்கான ஜனநாயகமாய்‌, மக்களுக்கான ஜனநாயகமாய்‌ ஆக்குவதுடன்‌ கூடவே ஓடுக்குமுறையாளர்களும்‌ சுரண்டலாளர்களும்‌ முதலாளிகளுமாலோரின்‌ சுதந்திரத்துக்குப்‌ பாட்டாளி வர்க்கச்‌ சர்வாதிகாரம்‌ வரிசையாகப்‌ பல கட்டுகளை விதித்திடுகிறது. மனித குலத்தைக்‌ கூலி அடிமை முறையிலிருந்து விடுவிக்கும்‌ பொருட்டு இவர்களை நாம்‌ அடக்கியாக வேண்டும்‌, இவர்களுடைய எதிர்ப்பை வன்முறை கொண்டு நசுக்கியாக வேண்டும்‌. அடக்கியாளுதல்‌ இருக்கும்வரை, பலாத்காரம்‌ இருக்கும்‌ வரை சுதந்திரத்துக்கோ ஜனநாயகத்துக்கோ இடமில்லை என்பது தெளிவு.

பெபெலுக்கு எழுதிய கடிதத்தில்‌ எங்கெல்ஸ்‌ இதனை மிகச்‌ சிறப்பான முறையில்‌ எடுத்துரைத்தார்‌. பாட்டாளி வர்க்கத்துக்கு அரசு தேவைப்படுவது தனது எதிராளிகளை அடக்கி இருத்துவதற்காகவே அன்றி சுதந்திரத்தின்‌ நலன்‌களுக்காக அல்ல; சுதந்திரம்‌ குறித்துப்‌ பேசுவது சாத்தியமாகியதும்‌ அரசு அரசாய்‌ இருப்பதற்கு முடிவு ஏற்படுகிறது என்று இக்கடி.கத்தில்‌ எங்கெல்ஸ்‌ கூறியது வாசகர்களுக்கு நினைவிருக்கும்‌.

மிகப்‌ பெருவாரியான மக்களுக்கு ஜனநாயகம்‌, சுரண்டலாளர்களையும்‌ மக்களின்‌ ஒடுக்குமுறையாளர்களையும்‌ வன்‌முறை கொண்டு அடுக்குதல்‌, அதாவது ஜனநாயகத்திலிருந்து விலக்கி ஒதுக்குதல்‌ முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்‌துக்கு மாறிச்செல்லுகையில்‌ இதுவே ஜனநாயகத்தில்‌ ஏற்‌படும்‌ மாறுதல்‌. (பக்கம் 335)

கம்யூனிச சமுகாயத்தில்கான்‌ -- முதலாளிகளுடைய எதிர்ப்பு அடியோடு நசுக்கப்பட்டு, முதலாளிகள்‌ மறைந்துபோய்‌, வர்க்கங்கள்‌ இல்லாமற்‌ போய்விடும்‌ (அதாவது, சமுதாயத்தின்‌ உறுப்பினர்களிடையே சமுதாய உற்பத்திச்‌ சாதனங்களுடன்‌ அவர்களுக்குள்ள உறவு சம்பந்தமாய்‌ எந்தப்‌ பாகுபாடும்‌ இல்லாமற்‌ போய்விடும்‌) அப்பொழுது மட்டும்‌தான்‌ அரசு... இருப்பதற்கு முடிவு ஏற்படுகிறது', “சுதந்திரம்‌ குறித்துப்‌ பேசுவது சாத்துயமாகறது''. அப்பொழுதுதான்‌ மெய்யாகவே முழுநிறைவான ஜனநாயகம்‌, விதிவிலக்கு எதுவுமில்லாத ஜனநாயகம்‌ சாத்தியமாகிக்‌ கைவரப்‌ பெறுகிறது. அப்பொழுதுதான்‌ ஜனநாயகம்‌ உலர்ந்து உதிரத்‌ தொடங்கும்‌. முதலாளித்துவ அடிமை வாழ்விலிருந்தும்‌ முதலாளித்துவச்‌ சுரண்டலின்‌ சகிக்கவொண்ணாத கொடுமைகளிலிருந்தும்‌ மிருகத்தனத்திலிருந்தும்‌ அபத்தங்களிலிருந்தும்‌ இழுக்குகளிலிருந்தும்‌ மக்கள்‌ விடுபட்டு, பல நூறு ஆண்டுகளாய்‌ அறிந்துள்ள ஆயிரக்‌ கணக்கான ஆண்டுகளாய்‌ அறிச்‌சுவடி. நீதிவிளக்கங்களில்‌ எல்லாம்‌ மீண்டும்‌ மீண்டும்‌ கூறப்‌பட்டு வந்துள்ள சமுதாய ஒட்டுறவின்‌ சர்வசாதாரண விதிகளைப்‌ பற்றியொழுகச்‌ சிறிது சிறிதாய்ப்‌ பழகிக்‌ கொள்‌வ ர்கள்‌, பலாத்காரம்‌ இல்லாமலே, பலவந்தம்‌ இல்‌லாமலே, கீழ்ப்படிதல்‌ இல்லாமலே, பலவந்குத்துக்கான அரசு எனப்படும்‌ தனிவகை இயந்திரம்‌ இல்லாமலே அவர்கள்‌ இவ்விதிகளைப்‌ பற்றியொழுகப்‌ பழகிக்கொள்வார்‌கள்‌. (நூலின் பக்கம் 336)

பக்கம் 336- 337 தொடர்ச்சியாக

அரசு உலர்ந்து உதிர்‌கிறது என்னும்‌ தொடர்‌ நன்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில்‌ இத்தொடர்‌ இந்‌நிகழ்ச்சிப்போக்கின்‌ படிப்படியாய்‌ நடந்தேறும்‌ ன்மை, ன்னியல்பாய்த்‌ தானே நடந்தேறும்‌ன்மை ஆகிய இரண்‌டையும்‌ குறிப்பிடுவதாய்‌ உள்ளது. பழக்கத்தால்‌ மட்டுமே இது போன்ற விளைவு ஏற்பட முடியும்‌, ஐயப்பாட்டுக்கு இட மின்றி நிச்சயம்‌ ஏற்படவும்‌ செய்யும்‌. ஏனெனில்‌ சுரண்டல்‌ இல்லாத போது, ஆத்திரம்‌ உண்டாக்கக்கூடியதும்‌ கண்டனத்தையும்‌ கலகத்தையும்‌ எழச்‌ செய்து அடக்க வேண்டியதற்‌கான தேவையைத்‌ தோற்றுவிப்பதும்‌ இல்லாதபோது, மக்கள்‌ எப்படித்‌ தயக்கமின்றி சமுதாய ஓட்டுறவுக்கு அவசியமான விதிகளை பற்றியொழுகப்‌ பழகிக்‌ கொண்டுவிடுகிறார்கள்‌ என்‌பதற்கு லட்சோப லட்சக்‌ கணக்கான எடுத்துக்காட்டுகளை நம்மைச்‌ சுற்றிலும்‌ காண்கிறோம்‌.

இவ்வாறாக, முதலாளித்துவ சமுதாயத்தில்‌ இருக்கும்‌ ஜனநாயகம்‌ வெட்டிக்‌ குறுக்கப்பட்ட, அலங்கோலமான, பொய்யான ஜனநாயகம்‌; செல்வந்தர்களுக்கு மட்டுமேயான, சிறுபான்மையோருக்கான ஜனநாயகம்‌. கம்யூனிசத்துக்கு     மாறிச்செல்லும்‌ காலத்துக்குரிய பாட்டாளி வர்க்கச்‌ சர்வாதிகாரம்‌ முதன்முதலாய்‌ மக்களுக்கான, பெரும்பான்மையோருக்கான ஓனநாயகத்தகைத்‌ தோற்றுவிக்றெது; அதனுடன்‌ கூடவே சுரண்டலாளர்களான சிறுபான்மையோரைகத்‌ தேவையான அளவுக்கு அடக்கவும்‌ செய்கிறது. மெய்யாகவே முழுநிறைவான ஜனநாயகத்தைத்‌ தோற்றுவிக்க வல்லது கம்யூனிசம்‌ ஒன்று மட்டுமே. எவ்வளவுக்கு எவ்வளவு இது முழு நிறைவானதாய்‌ இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு சீக்‌கிரமாய்‌ அது தேவையற்றதாகி தானாகவே உலர்ந்து உதிர்‌கிறது.

வேறு விதமாய்க்‌ கூறினால்‌, முதலாளித்துவத்தில்‌ அரசெனும்‌ சொல்லின்‌ முறையான அர்த்தத்தைக்‌ குறிக்கும்‌, அதாவது ஒரு வர்க்கம்‌ பிறிதொன்றை, அதுவும்‌ சிறுபான்மையோர்‌ பெரும்பான்மையோரை அடக்குவதற்கான தனிவகைப்‌ பொறியமைவான அரசு இருக்கிறது. சுரண்டப்படும்‌ பெரும்பான்மையோரைச்‌ சுரண்டும்‌ சிறுபான்மையோர்‌ முறையாக அடக்குவகென்னும்‌ இத்தகைய செயல்‌ வெற்றி பெற இயற்கையாகவே, அடக்கியொடுக்கும்‌ பணியில்‌ அளவு கடந்த மூர்க்கமும்‌ மிருகத்தனமும்‌ அவசியமாகி விடுகிறது; இரத்த வெள்ளம்‌ பெருக்கெடுத்து ஓட வேண்டியதா விடுகிறது. இந்த வெள்ளத்தில்‌ நடந்துதான்‌ மனிதகுலம்‌ அடிமை முறை, பண்ணையடிமை அமைப்பு, கூலியுழைப்பு ஆகியவற்‌றின்‌ வழியே சென்று கொண்டிருக்கிறது.

.. மேலும்‌, முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்துக்கு மாறிச்செல்கையிலும்‌ அடக்க வேண்டியது இன்னும்‌ தேவையாகவே இருக்கிறது. அனால்‌ இப்பொழுது அது சுரண்டப்பட்ட (தொடர்ச்சியாக பக்கம் 338) பெரும்பான்மையோர்‌ சுரண்டும்‌ சிறுபான்மையோரை அடக்குவதாகிறது. அடக்குவதற்கான ஒரு தனிவகை இயந்திரம்‌, ஒரு தனிவகைப்‌ பொறியமைவு, “அரசு'' இன்னமும்‌ தேவையாகவே இருக்கிறது, ஆனால்‌ இப்பொழுது அது மாறிச்‌ செல்லும்‌ கட்டத்துக்குரிய அரசாய்‌ அமைகிறது. அரசென்‌னும்‌ சொல்லின்‌ சரியான பொருளில்‌ இனி அது அரசாய்‌ இல்லை. ஏனெனில்‌ சிறுபான்மையோரான சுரண்டலாளர்களை நேற்றைய கூலி அடிமைகளான பெரும்பான்மையோர்‌ அடக்குவது ஓப்பளவில்‌ மிகச்‌ சாதாரணமான, எளிதான, இயற்கையான பணி ஆகுமாதலால்‌, அடிமைகள்‌ அல்லது பண்ணையடிமைகள்‌ அல்லது கூலி உழைப்பாளர்களின்‌ எழுச்சிகளை அடக்குவதற்கு வேண்டியிருந்ததைப்‌ போலல்லாது மிகச்‌ சொற்ப அளவே இரத்தம்‌ சிந்தும்படி இருக்கும்‌, மனித குலத்துக்கு மிகச்‌ சொற்ப சேதமே உண்டாகும்‌. ஜனநாயகத்தை மிகவும்‌ விரிவாக்கி மக்களில்‌ மிகப்‌ பிரம்மாண்டமான பெரும்பான்மையோருக்குக்‌ இட்டச்‌ செய்வது இப்பணிக்கு ஒவ்வாததல்ல ஆதலால்‌, அடக்குவகற்கான ஒரு தனிவகைப்‌ பொறியமைவின்‌ தேவை மறையத்‌ தொடங்கிவிடும்‌. இயல்‌பாகவே சுரண்டலாளர்களால்‌ மிகச்‌ சிக்கலான பொறியமைவு ஒன்று இல்லாமல்‌ மக்களை அடக்க முடியவில்லை. ஆனால்‌ மக்களால்‌ மிக எளிய **பொறியமைவு”” கொண்டே, சுரண்டலாளர்களை அடக்கிவிட முடியும்‌; பெருமளவுக்குப்‌ பொறியமைவு”” இல்லாமலே, ஒரு னிவகை இயந்திரம்‌ இன்றியே, சாதாரண ஏற்பாடான ஆயுதமேந்திய மக்களின்‌ ஒழுங்‌கமைப்பைக்‌ கொண்டே (தொழிலாளர்கள்‌, படையாட்கள்‌  பிரதிநிதிகளது சோவியத்துகளைப்‌ போன்ற ஓழுங்கமைப்பு  என்று முன்னோடிச்‌ சென்று வரப்போவகைக்‌ குறிப்பிடலாம்‌), இப்பணியைச்‌ செய்துவிடலாம்‌.


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்