இந்த இதழில் பேசப்பட்டுள்ளவை
1). புரட்சிகர தோழர் லெனினின் இன்றைய நமக்கான வழிகாட்டி
2). திருத்தல்வாதம். செங்யென்-சி. பாகம் 1.
3). அரசு பற்றி லெனின் பாகம் 5.
4). கம்யூனுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையிலான வேறுபாடு குறித்து மார்க்சியம்.
5). இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் மீளாய்வு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்படுவதற்கு முன்பே ரஷ்யாவில கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்டு புரட்சிகான கட்சியாகவும் நடைமுறைக்கான வழிகாட்டியாகவும் புரட்சியை நடத்தி ஆம் மார்க்சிய தத்துவத்தை நடைமுறை படுத்தி உலகிற்கு ஓர் புதிய வழியை வெளிச்சமிட்டு காட்டியிருந்தது. அவை புரட்சிக்கான கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதோடு புரட்சி நடத்துவதற்கான வழிமுறைகளை உலக கம்யூனிச இயக்கங்களுக்கு தெள்ளத்தெளிவாக வெளிச்சமிட்டு காட்டியது.
1919இல் லெனின் உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு அவரவர் நாட்டில் உள்ள நிலைமைகளுக்கு ஏற்ப புரட்சியை நடத்தி உழைக்கும் வர்க்கம் சுரண்டலில் இருந்து விடுதலை அடைவதற்கான வழிமுறையை கூறியது. அதில் பல நாடுகள் தன்னுடைய நிலைகளை புரிந்து கொள்வதிலும் எதிரியை எதிர்த்த போராட்டத்தில் சுரண்டப்பட்டும் அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் கிடக்கும் மக்களை ஒன்றிணைப்பதிலும் முழுமையாக வெற்றி பெறாமல் போய்விட்டது. ரஷ்ய சீன புரட்சி போல் இந்தியாவும் ஒரு புரட்சியை சாதித்திருக்க வேண்டும் ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூன்றாம் அகிலத்தின் வழிகாட்டுதலை ஏற்றிருந்தால். இந்தியா போன்ற காலனி நாடுகளுக்கு தெளிவாக எதிரியான ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கு அவசியமான கூட்டணிகளை அமைத்தல் மற்றும் எதிரியை தோற்கடிப்பது அவசியம் என்றார். நம் நாட்டில் நடந்தேறிய வரலாற்றுக் காலங்களை நீங்கள் கணக்கில் கொண்டால் இதற்கான பதில் கிடைக்கும்.
இந்தியாவோ காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது, அதே நேரத்தில் பல்வேறு குறு சிறு மன்னர்கள் திவான்கள் இதுபோன்ற பல்வேறு பிரிவுகள் அதிகாரத்திலும் இருந்தார்கள். அன்றைய ஆட்சியாளர்களான காலணி ஆதிக்கத்தையும் அதேபோல தனது பிரச்சனைக்கான பகுதி அதிகாரத்தை எதிர்த்து மக்கள் தன்னியல்பாக போராடிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆங்கிலேய காலனி ஆதிக்கவாதிகள் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்குவதற்கு முன்னாலேயே பெஷவார் சதி வழக்கு, கான்பூர் வழக்கு என்ற வழக்குகளை பல்வேறு சதி வழக்குகளை போட்டு கம்யூனிஸ்ட் கட்சியை முடக்கப்பார்த்தனர். இருந்தும் அன்றைய பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த பல்வேறு சக்திகளுக்கு 1917-ல் நடந்த ரஷ்யப் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் வெற்றியானது, புதிய பார்வையையும் புதிய நம்பிக்கையையும் அளித்தது.
அன்றைய பிரிட்டிஷ் காலனியாட்சியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல கம்யூனிசக் குழுக்கள் இரகசியமாக இயங்கி வந்தன. வங்கத்தில் அனுசீலன் சமிதி, ஜுகந்தர், முசாபர் அகமது குழு முதலான குழுக்களும், மும்பையில் டாங்கே தலைமையிலான குழுவும், சென்னையில் சிங்காரவேலர் தலைமையிலான குழுவும், ஐக்கிய மாகாணத்தில் சௌகத் உஸ்மானி தலைமையிலான குழுவும், பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தில் குலாம் உசைன் தலைமையிலான குழுவும் இயங்கி வந்தன. அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசானது எல்லா வகையான கம்யூனிசக் குழுக்களையும் முற்றாகத் தடை செய்ததோடு, குறிப்பாக, லெனின் தலைமையிலான “போல்ஷ்விக்” சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட் குழுக்களைத்தான் மிகத் தீவிரமாக ஒடுக்கியது.
ஆங்கிலேய காலனி ஆதிக்க காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் பல்வேறுவகைப்பட்ட போராட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது பல்வேறு பகுதி வாரியாக பிரச்சனையின் அடிப்படையில் மக்களை திரட்டி போராடியது. அந்தப் போராட்டங்களில் சில வெற்றிகளையும் பெற்றது, உழைக்கும் மக்களிடையே ஒற்றுமைக்கு பெரும் பாடுபட்டது. இருந்தும் ரசிய சீன கட்சிகளின் படிப்பினைகளை பெற்றதாக இங்கில்லை. உயரிய அர்பணிப்பும் தியாக உணர்வும் கொண்டோர்களின் செயலால் கம்யூனிஸ்ட் கட்சி மக்களிடையே குறிப்பாக அடக்கப்படும் ஒடுக்கப்பட்டும் இருந்த மக்களிடையே வளர்ந்தது ஆனால் அதற்குமேலான வழிகாட்டுதலை கட்சி வழங்கவில்லை அதனால் அவை குறிப்பிட்ட எல்லைகுள் சுருங்கிவிட்டது. அவை விடுதலைகான போராட்டமாக வளரவேயில்லை.
லெனினால் உருவாக்கப்பட்டது போன்ற போல்ஷ்விக் பாணியிலான கட்சியானது இங்கு கட்டப்படவே இல்லை. அதேபோல் சீன காலனி நாட்டில் ஏகாதிபத்திய எதிர்ப்பு கூட்டணி பற்றியும் புரிதல் இவர்களுக்கு இல்லை.
லெனின் வழிகாட்டுதலை இவர்கள் பின்பற்றாமல் சந்தர்ப்பவாத, சீர்திருத்தவாத, திருத்தல்வாத, சட்டவாத சகதிக்குள் வீழ்ந்து விட்டனர். உள்ள அமைப்பு முறையில் சட்ட ரீதியாகவும் - சட்ட விரோதமாகவும் செயல்படுவதற்கு திறன் படைத்த அணியை உருவாக்கி மக்களை தயார் படுத்துவதும் நிலைக்கு கட்சித் தலைமை செயல்படவில்லை. தலைமையின் தத்துவ போதாமை வரலாற்று நெடுகிலும் காணக்கிடக்கிறது. தலைமையானது தலைமைக்கான பாத்திரம் ஆற்றாமையால் எதிரிக்கு எதிராக போராடுவதற்கு பதில் எதிரியுடனே கூட்டணி வைத்துள்ளனர். இவை உழைக்கும் வர்க்கத்தை விடுவிப்பதற்கு பதில் எதிரியிடம் சரணடைய செய்துள்ளது. விடுதலைக்கு பதில் சரணாகதி பாதையை போதித்து நடைமுறையில் உள்ளது.
உழைக்கும் மக்களின் விடுதலைக்கான பாத்திரம் என்பது சுரண்டலையும் அடக்கு முறையையும் ஒடுக்குமுறையையும் கையில் எடுத்துள்ள வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் எதிரியை வீழ்த்தி, உழைக்கும் வர்க்கத்திற்கான அரசை அமைப்பது தான். அதற்குப் பல்வேறு வகையில் பிரிந்து கிடக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கான பிரிவுகளை, கட்சி மற்றும் குழுக்களை ஒன்றிணைந்து மார்க்சிய லெனியத்தின் அடிப்படையில் புரட்சிக்கான வழிமுறையில் செயல்படாமல் வேறு பாதை இல்லை என்பதுதான்.
திருத்தல்வாதி பெர்ன்ஸ்டைன் கூறியது போல், “இயக்கம்தான் எல்லாமே, இறுதி இலக்கு ஒன்றுமில்லை" என்ற சந்தர்ப்பவாத முழக்கம், இதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டத்தை நிராகரித்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட வேண்டும் என்று வாதிட்டார். போலி சோசலிச சொற்றொடர்களின் மறைவின் கீழ், திருத்தல்வாதிகள் மார்க்சியத்திற்கு எதிராக, பாட்டாளி வர்க்க புரட்சியின் கோட்பாட்டிற்கு எதிராக, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு எதிராக மற்றும் சோசலிசத்தின் வெற்றிக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டுள்ளனர். ஆளும் வர்க்கத்தின் பின் ஓடுவதை மட்டுமே தொழிலாய் கொண்டுள்ள குழுக்களும் இடதுசாரி என்பவர்களும் தவறியும் உழைக்கும் வர்க்கதின் விடுதலைக்கான பாதையை பற்றியோ அடைவதற்கான தத்துவ நடைமுறை பற்றியோ தவறியும் பேசுவதில்லை. ஆனால் ஆளும் வர்க்க ஒவ்வொரு செயல்களை விமர்சித்து வாய்வீச்சில் வாழ்ந்துக் கொண்டுள்ளனர்.
உழைக்கும் வர்க்கத்தின் விடுதலை என்பது இந்த முடைநாற்றம் பிடித்த சமூக அமைப்பை தூக்கியெறிந்து; உழைக்கும் மக்கள் தங்களை தாங்களே ஆள தகுதி படைத்த சமூக அமைப்பை உருவாக்கினால் மட்டுமே... இந்த இழிநிலையிலிருந்து விடுபட முடுயும். அவைதான் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையாகும். அதற்கான படிபினைகளை மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதல்களில் கற்று தெளிவடைய வேண்டும்.
மார்க்சிய லெனினிய தத்துவத்தை கற்றறிவோம் சுரண்டல் அற்ற சமூகம் படைப்போம் தோழர்களே. ஏகாதிபத்திய மற்றும் நிலப்பிரபுத்துவ சித்தாந்தம் மற்றும் சிந்தனைமுறையை எதிர்த்துப் போராட வேண்டும் .
உழைக்கும் மக்களின் விடுதலையே உன்னதமானது அதற்கான பணியே உயர்வானது. மார்க்சிய ஆசான்களின் அடியொற்றி செயல்படுவோம் தோழர்களே.
மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் நடைமுறைகளையும் தத்துவத்தையும் இணைத்து செயல்படும் திறன் கொண்டவர்களாக வளர்வதும் மற்றவர்களை வளர்ப்பதும் நமக்கான பணி
இலக்கு 83 இணைய இதழ் இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் pdf வடிவில் தோழர்களே
No comments:
Post a Comment