நமது புரட்சி (நி. சுஹானவின் குறிப்புகளை பற்றி) லெனின்

  நமது புரட்சி. (நி. சுஹானவின் குறிப்புகளை பற்றி) லெனின் 

புரட்சி பற்றிய நி. சுஹானவின் குறிப்புகளை அண்மையில் படித்துப் பார்த்தேன். நமது குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் எல்லோரும் இரண்டாவது அகிலத்தின் வீரர்கள் எல்லோரும் உரியதாயிருக்கும் பகட்டு புலமைதான் யாவற்றையும் விட எடுப்பாக தெரிகிறது. இவர்கள் எல்லோருமே துணிவு சிறிதும் இல்லாதவர்கள். ஜெர்மன் முன் மாதிரியிலிருந்து இம்மியும் விலகி செல்வதென்றாலும் இவர்களுக்கு  மிகச் சிறந்தோரும் கூட வரம்பிட்டு அரண்கள் அமைத்துக் கொள்கிறார்கள் என்பது ஒருபுறமிருக்க, குட்டி முதலாளித்துவ ஜனநாயக வாதிகள் எல்லோருமே பொதுவானதாக அமைந்து புரட்சிக் காலம் முழுவதும் இவர்கள் வெகுவாக வெளிப்படுத்தி காட்டி இருக்கும் இந்த குணாதிசயம். ஒரு புறம் இருக்க மிகவும் எடுப்பாக தெரிவது என்னவென்றால் கடந்த காலத்தை அப்படியே காப்பி அடிக்கும் இவர்கள் அடிமை புத்தி தான். 

இவர்கள் எல்லோரும் தம்மை மார்க்சியவாதிகளாக அழைத்துக் கொண்ட போதிலும் மார்க்சியம் குறித்து இவர்களுக்குள்ள கருத்தோட்டம் முழுக்க முழுக்க பகட்டும் புலமையின் பாணியிலேயே தான் இருக்கிறது. 

மார்க்சியத்தில் தீர்மானமாக இருப்பது எதுவோ அதை அதாவது மார்க்சியத்தின் புரட்சிகர இயக்கவியலை புரிந்து கொள்ள இவர்கள் அறவே தவறிவிடுகின்றனர்.

 புரட்சி காலங்களில் உச்ச அளவுக்கு வளைந்து கொடுக்கும் படியான நெகிழ்ச்சியான போக்கு தேவைப்படுகிறது என்று மார்க்ஸ் வெளிப்படையாகவே கூறிவற்றையும் கூட இவர்கள் புரிந்து கொள்ள அறவே தவறி விடுகின்றனர். உதாரணமாக ஜெர்மனியில் புரட்சிகர நிலைமையை தோற் றுவிக்கக் கூடிய விவசாயப் போர் ஒன்று தொழிலாளி வர்க்க இயக்கத்துடன் இணைந்து நடைபெற செய்யலாம் என்ற நம்பிக்கை தெரிவித்து மார்க்ஸ் தமது கடிதங்களில் 1856 ல் என்று நினைக்கிறேன் எழுதியவற்றையும் கூட இவர்கள் கவனிக்க தவறிவிடுகின்றனர். வெளிப்படையான இந்த கருத்துரையும் கூட நெருங்கிவராமல் சூடான பால் சட்டியை சுற்றிக்கொண்டிருக்கும் பூனையைப் போல தொலைவில் இருந்தபடி வட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

முதலாளி வர்க்கத்திடம் இருந்து முறித்துக்கொள்வது போகட்டும் அவர்களிடமிருந்து சற்று தடம்புரளவதற்குக் கூட துணிவில்லாத கோழைத்தமான சீர்திருத்தவாதிகள் நாங்கள் என்று தம்மைத் தாமே தம் நடத்தையின் மூலம் அம்பலப்படுத்திக் கொள்கின்றனர். அதேபோது அடா பிடியான வாய்வீச்சையும் வீம்பு பேச்சை கொண்டு தமது போலித்தனத்தை மூடி மறைத்துக் கொள்கிறார்கள். ஆனால் முற்றிலும் தத்துவார்த்த கண்ணோட்டத்திலும் கூட இவர்கள் எல்லோரும் பின்வரும் மார்க்சிய ஆய்வு நிலைகளில் புரிந்துகொள்ள சிறிதும் இயலாதவர்களாக இருப்பது எடுப்பாக. தெரிகிறது. இதுகாறும் முதலாளித்துவம், முதலாளித்துவ ஜனநாயகம் மேலைய ஐரோப்பாவில் குறிப்பிட்டதொரு வளர்ச்சிப் பாதையில்  சென்றுள்ளதை இவர்கள் கண்டிருக்கிறார்கள். இந்த பாதையை சிற்சில திருத்தங்களுடன் மட்டும் தான்( உலக வரலாற்றின் போதுமான வளர்ச்சி என்ற கண்ணோட்டத்தில் சிறிதும் குறிப்பிடத்தக்கவை அல்லாத சில திருத்தங்களுடன் மட்டும் தான்) ஒரு முன்மாதிரியாக கொள்ள முடியும் என்பது இவர்களுடைய சிந்தனைக்கு எட்டாத ஒன்றாக இருக்கிறது.
 முதலாவதாக ஏகாதிபத்திய முதலாவது உலகப் போர்வுடன் இணைந்த புரட்சி. இத்தகைய ஒரு புரட்சி இந்தப் போரின் விளைவாக எழும் புதிய  இயல்புகளை அல்லது உருத்திரிபுகளை வெளிக்காட்டவே செய்யும். ஏனெனில் உலகம் இத்தகைய ஒரு போரை இத்தகைய ஒரு சூழ்நிலையில் ஒருபோதும் கண்டதில்லை. இப்போருக்கும் பிறகு மிகவும் செல்வந்த நாடுகளின் முதலாளி வர்க்கத்தார் இதுநாள் வரை "முறையான" முதலாளித்துவ உறவுகளை மீட்டமைக்க முடியாதவர்களாக இருப்பதைக் காண்கிறோம். ஆயினும் நமது சீர்திருத்தவாதிகள் புரட்சிக்காரர்களாக வேடம் பூண்டுள்ள குட்டி முதலாளிகள்- முறையான முதலாளித்துவ உறவுகளே இறுதி வரம்பென்று (இவ்வளவுதான், இதற்குமேல் ஓர் அடியும் போகலாகாது) நம்பினர், இனியும் நம்பி வருகின்றனர். "முறையான" உறவுகளைப் பற்றி இவர்களுடைய கருத்தோட்டம் கூட அளவு மீறி ஒரே மாதிரியான வார்ப் பாகவும் அளவு மீறி குறுகியதாகவும் இருக்கிறது.

 இரண்டாவதாக- ஒட்டு மொத்தமாக உலக வரலாற்றின் வளர்ச்சியானது பொது விதிகளுக்கு ஏற்பவே நடைபெறுகிறது என்றாலும் வளர்ச்சியின் குறிப்பிட்ட சில கால கட்டங்களில் இந்த வளர்ச்சி அதன் வடிவத்திலோ வரிசை கிரமத்திலோ சில தனி இயல்புகளை வெளிப்படுத்துவது எவ்வகையிலும்  தடுக்கப்பட்டு விடவில்லை, மாறாக எதிர்பார்க்கக் கூடியதே என்னும் கருத்து. இவர்களுக்கு முற்றிலும் அன்னியமானதாக இருக்கிறது. உதாரணமாக ரசிய நாகரிக நாடுகளுக்கும் இந்தப் போரால் முதன்முதல் நாகரிகத்தின் செயல் வடிவத்திலும் திட்டவட்டமாக கொண்டுவரப்பட்டிருக்கும் நாடுகளுக்கும். அதாவது ஐரோப்பிய நாடுகள் அல்லாத எல்லா கிழக்கு நாடுகளுக்கும் எல்லைக்கோட்டில் அமைந்திருப்பதால் அது சிற் சில தனி இயல்புகளை வெளிப்படுத்தக் கூடும். நிச்சயம் வெளிப்படுத்தவும் செய்யும் என்பது குறித்து இவர்கள் நினைத்து பார்ப்பதில்லை. இந்த தனி இயல்புகள் உலக வளர்ச்சியின் பொது வழிக்கு ஒப்பவே அமைந்திருப்பினும் கூட. இவை ரசியாவின் புரட்சியை மேற்கு ஐரோப்பியாவில் எல்லா நாடுகளிலும் நடைபெற்றவிலிருந்து வேறுப்படுத்தி காட்டுகின்றன. புரட்சியானது கிழக்கு நாடுகளை நோக்கி நகர்ந்து செல்கின்ற பொழுது குறிப்பிட்ட சில அரைகுறை புது முறைகளை புகுத்துகின்றன. 

இவர்களதுவாதம், சிறிதும் மாற்றமின்றியும் அளவு கடந்து ஒரு மாதிரியாக அமைந்த வார்ப்பதாகவே இருக்கிறது. உதாரணமாக. இன்னும் நாம் சோசலிசத்துக்கு பக்குவம் அடைந்ததாகவில்லை என்பது இவர்களிடையே உள்ள "மெத்தப் படித்த" கனவான்கள் சிலர் சொல்லிவரும் சொற்களில் கூறுவதெனில், சோசலிசத்திற்கு வேண்டிய புறநிலைப் பொருளாதார முன் தேவைகள் நம் நாட்டில் இருக்கவில்லை என்கிற வாதம். மேற்கு ஐரோப்பிய சமூக ஜனநாயகத்தின். வளர்ச்சியின்போது இவர்கள் புரியாமலே மனப்பாடம் செய்து கொண்ட வாதம் இது. முதலாவது ஏகாதிபத்திய போரின்போது உருவானது போன்ற ஒரு புரட்சிகர நிலையில் உள்ள மக்கள் வேறு வழியேதும் இல்லாத தமது இந்த நிலைமையால் உந்தப்பட்டு நாகரீகம் மேலும் வளர்ச்சியை அடைவதற்குரிய நிலைமைகளை ஓரளவு அசாதாரணமான நிலைமைங்களை உள்ளடக்கிக்  கொள்ள சிறிதேனும் வாய்ப்பளித்திருப்பதாக இருக்கும். ஒரு போராட்டத்தில் குதிக்கலாம் அல்லவா?- இப்படி ஒரு கேள்வி இவர்களில் யாருடைய சிந்தனையும் எழுவதே இல்லை. 

"ருசியாவில் உற்பத்தி சக்திகளது வளர்ச்சி சோசலிசத்தை சாத்தியமாக்கும் படியான உயர் நிலையை அடைந்ததாகவில்லை". இரண்டாவதாகத்தின் எல்லா வீரர்களும் -சுகுணாவும் உட்படவே. இந்த முடிவினை எடுத்து வைத்து முழக்கமிடுருக்கிறார்கள். மறுக்க முடியாது இந்த முடிவினை வித விதமான 1000 வழிகளில் ஓயாமல் தம்பட்டம் அடிக்கின்றனர். நமது புரட்சியில் இதுதான் தீர்மானகரமான உரைகள் என்பதாக நினைக்கின்றனர். 

ஆனால் அதிகமாகவோ குறைவாகவோ செல்வாக்குடைய மேற்கு ஐரோப்பிய நாடு ஒவ்வொன்றும் ஈடுபட்டிருக்கும் படியான ஏகாதிபத்திய உலகப் போரில் ரஷ்யாவை இழுத்துவிட்ட அந்த சூழ்நிலை மற்றும் கிழக்குலகில் முற்றி வந்த அல்லது ஏற்கென ஓரளவுக்கு தொடங்கிவிட்ட புரட்சிகள் அது முன்னறிவிப்பை ருசியா கண்டு கொள்ளும்படி செய்து அந்த சூழ்நிலை விவசாயப் போரொன்றை தொழிலாளி வர்க்க இயக்கத்துடன் இணைத்துக் கொள்ளும் சாத்தியப்பாடு ருசியாவுக்கு கைவரப் பெறலாம் என்று மாபெரும். மார்க்சியவாதியான மார்ச்சு 1856 ஆலோசனை கூறிய அதே இணைப்பை நாம் சாதித்து கொள்ளும்படியான ஒரு  வளர்ச்சியும் கொண்டுவந்த நிலைமைகளைத் தோற்றுவிக்கும் ஆயின் என்ன செய்யலாம்? என்ன செய்வதாம்?

 வேறு வழி ஏதும் இல்லாத அந்த திக்கற்ற சூழ்நிலை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு சக்திகளை 10 மடங்காக உயரும் படி தூண்டிவிட்டு நாகரிகத்துக்கு வேண்டிய அடிப்படை முன் தேவைகளை மேற்கு ஐரோப்பிய நாடுகளின் வழியிலிருந்து மாறான வழியில் தோற்றுவித்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு அளிக்குமாயின் என்ன செய்வதாம்? உலக வரலாற்று வளர்ச்சியின் பொதுவான நெறி இதனால் மாற்றப்பட்டு விட்டதா என்ன? உலக வரலாற்றின் பொதுவான வளர்ச்சிப்போக்குள் ஈர்க்கப்பட்டும் அல்லது ஏற்கனவே ஈர்க்கப்பட்டுள்ள எல்லா நாடுகளின் அடிப்படை வர்க்கங்களுக்கு இடையிலான அடிப்படை உறவுகள். இதனால் மாற்றப்பட்டு விட்டதா என்ன? 

சோசலிசத்தை நிர்மாணிப்பதற்குக் குறிப்பிட்ட கலாச்சார நிலை நிலை தேவையெனில் (ஆனால் அந்த குறிப்பிட்ட கலாச்சார நிலை என்ன என்பதை யாராலும் கூற முடியவில்லை; ஏனென்றால் மேற்கு ஐரோப்பிய நாடு ஒவ்வொன்றிலும் இது வேறுவிதமாக இருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட கலாச்சார நிலை அவசியமான முன் தேவைகளை. ஏன் நாம் புரட்சிகர வழியில் முதற்கண் சாதித்துக்கொள்ள முற்படும் முற்பட்டு பிற்பாடு தொழிலாளர்கள் விவசாயிகளது ஆட்சி அதிகாரத்தின் துணைக்கொண்டும் சோவியத் அமைப்பின் துணை கொண்டும் ஏனைய நாடுகளை எட்டிப் பிடித்து தொடங்கக்  கூடாது?

 பிரதானமாக நாம் வெற்றி ஈட்டியுள்ளது என்பது இப்பொழுது சந்தேகமும் இருக்க முடியாது. வேறு எவ்வழியிலும் புரட்சிகள் நடத்த முடியாது என்பது நம் அது சுகுனோகளுக்கும் இன்னும் வலது புறத்திலிருக்கும் சமூக ஜனநாயக வாதிகளை பற்றி சொல்லவே வேண்டாம். கனவிலும் கூட கருத முடியாத ஒன்று. எல்லா உலக நாடுகளில் மக்கள் தொகையில் இன்னும் மிகப்பெரிய சமூக நிலைமைகளில் மேலும் பெரிய அளவுக்கு பல்வேறுபட்ட நாடுகளில் இனி நடைபெறப் போகும் புரட்சி ருஷ்யப் புரட்சியை காட்டிலும் இன்னும் கூட அதிகமாய் தன் இயல்புகளை நிச்சயம் வெளிப்படுத்தி காட்டும் என்பது நம்  ஐரோப்பிய அற்பவாத சிறுமதியினருக்கு கனவிலும் கருத முடியாத ஒன்று. 

காவுத்ஸ்கி பாணியில் எழுத பாடபுத்தகம் அதன் காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பது கூறத் தேவையில்லை. எவ்வளவு தான் அது பயன் உடையதாக இருப்பினும் அதற்கு பிற்பட்ட உலக வரலாற்றின் வளர்ச்சினுடைய எல்லா வடிவங்களையும் அது முன்னறிந்து கூறிவிட்டதாக கொள்ளும் கருத்தை கைவிடப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. இப்படி அது முன்னறிந்து கூறி விட்டதாக நினைப்பவர்கள் கடைந்தெடுத்த முட்டாள்கள் என்று சொல்வது காலத்துக்கு உகந்ததாக இருக்கும்.

லெனின் நூல் திரட்டு 45 பக்கங்கள் 378 382. ஜனவரி 17, 1923..

விவாதத்திற்கே








No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்