புதிய கல்வி கொள்கை யாருக்கு?

 இங்கு கட்சிகளின் பெயர்கள்தான் வேறுவேறு செயல் அடிப்படையில் உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் கூட்டமே!

2020-இல் ஒன்றிய மோடி அரசு தேசிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தது.
2021 – சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, தனது முதல் பட்ஜெட்டில் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்கால குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கென தனித்துவமான “மாநிலக் கல்விக் கொள்கை” உருவாக்கப்படும் என்று அறிவித்தது. இதற்காக கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அறிவித்தது.
டெல்லி முன்னாள் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் பல்வேறு துறை சார்ந்தவர்களைக் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக பேராசிரியர் ஜவஹர் நேசன் நியமிக்கப்பட்டார். இந்தக் குழு அமைக்கப்பட்ட சில மாதங்களில், இக்குழு ஜனநாயகமற்ற முறையில் செயல்படுவதாகவும், தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை சேர்த்து மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க அதிகாரிகள் நிர்பந்திப்பதாகவும் குற்றஞ்சாட்டி ஜவஹர் நேசன் தனது ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்தார். இருந்தும் இக்குழுவானது 520 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை ஜூலை 1, 2024 அன்று ஒப்படைத்தது. இக்குழுவின் அறிக்கையை பொதுவெளியில் வெளியிட்டு மக்களிடம் கருத்து கேட்காமலும், அந்த அறிக்கையை வெறும் 80 பக்கத்திற்குச் சுருக்கி, மாநிலக் கல்விக் கொள்கை என்ற பெயரில் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி தி.மு.க. அரசு வெளியிட்டிருக்கிறது.
தேர்தல் நெருங்குகிறது என்பதற்காக அவசரக் கோலத்தில் மாநிலக் கல்விக் கொள்கை என்று பெயருக்கு இதை தி.மு.க. அரசு வெளியிட்டிருப்பதாகவே பார்க்க முடிகிறது.
அங்கோ விஜயன் என்ன சொல்கிறார் நீங்களே வாசியுங்கள்.... நடுவண் அரசின் PM SHRIதானே என்ன சொன்னாலும்.
வர்க்க ரீதியாக இவர்கள் ஒன்றே! கட்சிகள்தான் வேறுவேறு கொள்கை கோட்பாடு அடிப்படையில் ஏழை எளிய உழைக்கும் மக்களின் எதிரிகளே இவர்கள். இவர்கள் கம்யூனிஸ்டும் இல்லை
திராவிடமாடல் என்பது உழைக்கும் மக்கள் விரோத அரசே!
Venkatesan
வர்க்க அடிப்படை கொண்ட சமூக அமைப்பில் முதலாளித்துவக் கட்சிகளால் உழைக்கும் மக்கள் பயனடைந்தால், கார்பொரேட் நிறுவன முதலாளி வர்க்கம் எப்படி பயனடைய முடியும்?
Author
Palani Chinnasamy
Venkatesan உண்மைதான் அதற்கான பணிதான் நம்மிடம் உள்ளது அதனை நாம் எவ்வளவு செய்கிறோம் சொல்லுங்கள்?
தெய்வ சுந்தரம் நயினார்
// இங்கு கட்சிகளின் பெயர்கள்தான் வேறுவேறு செயல் அடிப்படையில் உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் கூட்டமே! //
//வர்க்க ரீதியாக இவர்கள் ஒன்றே! கட்சிகள்தான் வேறுவேறு கொள்கை கோட்பாடு அடிப்படையில் ஏழை எளிய உழைக்கும் மக்களின் எதிரிகளே இவர்கள்//
மக்கள் இதை எவ்வாறு, எப்போது புரிந்துகொள்வார்கள் என்பதே இன்றைய பிரச்சினை! மக்கள் மூளைக்குள் இந்த உண்மை நுழைந்துவிட்டால், அடுத்த நடவடிக்கைகள் விறுவிறுவென்று நடைபெறும்! மக்களாட்சி மலரும்!
  • Reply
  • Hide
  • Edited
Author
Palani Chinnasamy
தெய்வ சுந்தரம் நயினார் நன்றி தோழர். உங்களை போன்றோர் சிறந்த வழிகாட்டியாக செயல்பட வேண்டும் தோழர்











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் தோற்றமும் 1857 நெருக்கடியும்-25-09-2026

  மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தை உருவாக்குவதில் ஒரு தீர்மானமான கட்டம்   உழைப்புதான் எல்லா செல்வத்திற்கும் மதிப்பிற்கும் மூலாதாரம் என்னும் க...

செய்தியை சார்ந்த அலசல்