இலக்கு 82 இணைய இதழ் பிடிஎப் வடிவில்

 நாம் வாழும் சமூகத்தில் பல்வேறு விதமான கண்ணோட்டங்களும் நடைமுறையும் உள்ளன. அவை தான் மக்கள் மத்தியில் பேசு பொருளாகவும் வழிகாட்டியாகவும் உள்ளது. இவையெல்லாம் சமூகத்தின் ஆளுவோரின் கருத்துகளே கண்ணோட்டங்களே. இதனைத் தான் மார்க்சியம் மிகத் தெளிவாக தனக்கான கண்ணோட்டத்தையும் அதற்கான நடைமுறையும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. அதனை நடைமுறைப்படுத்தியது ரஷ்யாவும் சீனாவும் இன்னும் சில சோசலிச நாடுகள் அதன் புரட்சியின் வழியில் சாதித்தனர். இதனைத் தான் லெனின் தன் நாட்டின் புரட்சியின் நான்காம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் தெளிவுபடுத்தி இருப்பார் .இதற்கு முன் உலகில் நடந்தேறியே பல்வேறு சமூக மாற்றங்கள் புரட்சிகள் பற்றி தெளிவுபடுத்தியும் அந்த நாடுகளில் அவர்கள் பழைய சமூகத்தின் பிற்போக்கான சமூக அம்சங்களை மிச்சங்களை அவர்கள் அழித்தொழிக்கவில்லை அதனால் ஆளும் வர்க்கத்தின் சுரண்டலைக் கட்டிக் காக்கும் நிலையை காணலாம். இதனை முழுமையாக துடைத்தெறிந்ததாக ரஷ்ய புரட்சி என்று லெனின் விளக்கி கூறுவார். ஆகவே சமூக மாற்றம் விரும்பும் ஒவ்வொருவரும் இங்குள்ள பிற்போக்கு முந்தைய சமூக முடைநாற்றம் பிடித்த குப்பைகளை இல்லாது ஒழிக்க மார்க்சிய லெனினிய தத்துவத்தின் அடிப்படையில் நடைபெறும் புரட்சியால் மட்டுமே சாத்தியம் என்பதும், மார்க்சிய லெனினிய தத்துவ  கண்ணோட்டத்தின் அடிப்படையில் நடைமுறை காணுவது தான் உண்மையாலுமே புரட்சி நேசிப்போரின் பணியாக இருக்கும். நமது கண்ணோட்டம் மார்க்சிய தத்துவ அடிப்படையில் இருந்தால் மட்டுமே விவாதம் சரியான பாதையில் செல்லும். மார்க்சிய லெனினிய தத்துவ அடிப்படையில் செய்யாததன் விளைவு தான் இங்கு நம் இடையே காணப்படும் பல்வேறு விதமான போக்குகள் உள்ளன. இவை மார்க்சிய லெனினிய தத்துவ  நடைமுறையா?


இந்த இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள்

1).புதிய இடது போக்குகள், மற்றும் தன்னார்வக் குழுக்கள் பற்றி தோழர் கோ.கேசவன்

2). சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி-8 லியோ ஷோகி

3).கம்யூனிஸ்ட் கட்சிகளும் குழுக்களும் செய்ய மறந்தவை மறுப்பவைவும் புரட்சியை நேசிப்போர் புரிந்துக் கொள்ள வேண்டியவையும்.

புதிய இடது போக்குகள், மற்றும் தன்னார்வக் குழுக்கள் பற்றி தோழர் கோ.கேசவன்

தோழர் கோ கேசவன் அவர்கள் மிகச்சிறந்த மார்க்சிய ஆய்வாளர் மார்க்சியத்தை பிறருக்கு கற்றுக் கொடுக்கும் சிறந்த ஆசிரியர் ஆவார். அவர் குறைவான காலங்களே வாழ்ந்தார் ஆனால் மிக நிறைவான மார்க்சிய அடிப்படையிலான ஆய்வுகளை அவர் செய்து அதை ஆவணமாக்கி வெளியிட்டுள்ளார். அவரது ஆய்வுகளை அவரது கருத்துக்களை அவர் சார்ந்து இருந்த ஒரு மார்க்சிய லெனினிய அமைப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை, அவரது கருத்துக்கள் அமைப்புக்குள் சென்றால் அமைப்பில் உள்ள தோழர்கள் தோழர் கேசவன் மீது மிகுந்த மரியாதை கொள்வார்கள், அதன் காரணமாக அந்த அமைப்பின் தலைவருக்கு சூட்டப்பட்டுள்ள கிரீடம் தகுதியற்று போய்விடும், தலைவருக்கு விரும்புகின்ற மரியாதை கிடைக்காது என்பதற்காகவே தோழர் கேசவன் அவர்களது எழுத்துக்கள் ஆய்வுகள் புறக்கணிக்கப்பட்டது. அவரது ஆய்வுகளில் புதிய இடது போக்குகள், தன்னார்வ குழுக்கள் அதாவது தொண்டு நிறுவனங்கள் பற்றி அவர் சிறப்பாக ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார். அந்தக் கட்டுரைகள் தற்போதும், நாம் படித்து புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இதனை உணர்ந்த இலக்கு பத்திரிக்கை ஆசிரியர் குழு அவரது கட்டுரையை மக்களுக்கு சமர்ப்பிக்கிறது.

புதிய இடது போக்குகள், நவீன மார்க்சியம், புதிய இடது என்ற பெயரில், மார்க்சியத்தை ஏகாதிபத்திய கலாச்சாரம் சிதைக்க முயல்கிறது.(இதனை முழுமையாக இதழில் வாசிக்க தோழர்களே).

2). சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? லியோஷோசி பாகம்- 8

மார்க்சும் எங்கெல்சும் இது தொடர்பாக கம்யூனிஸ்டுகளுக்கு பின்வருமாறு அறிவுறுத்தினர்

1. வெவ்வேறு நாடுகளிலும் தேச அளவில் பாட்டாளிகள் நடத்தும் போராட்டங்களில் அவர்களின் தேசிய நலன்களைக் கடந்து உலகப் பாட்டாளி வர்க்கம் அனைத்துக்கும் உரிய பொதுநலன்களை எடுத்துக்காட்டி முன்னிலைக்கு கொண்டு வருகிறார்கள்.

2. முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான தொழிலாளி வர்க்கம் கடந்து செல்ல வேண்டியிருக்கும் வெவ்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும் அவர்கள் எப்போதும் எங்கெங்கும் ஒட்டுமொத்த இயக்கத்துக்குமான நலன்களையே பிரதிநித்துவம் செய்கிறார்கள்.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாட்டாளி வர்க்கத்துக்கு உரியதான ஒரு கட்சியைக் கட்டுவதற்கான தனது போராட்டத்தின் போது லெனின் பின்வருமாறு கூறினார்.

பருண்மையான, எல்லாவற்றுக்கும் மேலாக அன்றாட நடப்பில் முக்கியமாக உள்ள அரசியல் விஷயங்களில் இருந்தும் நிகழ்ச்சிகளில் இருந்தும், மற்ற ஒவ்வொரு வர்க்கத்தையும் அதனதன் அறிவுத்துறை, பண்பாட்டுத்துறை, அரசியல் துறை வாழ்க்கையில் உள்ள எல்லா வெளிப்பாடுகளையும் வைத்து உற்றுக் கவனிக்க தொழிலாளர்கள் கற்றுக் கொள்ளாவிட்டால்; மக்கள் தொகையின் ஒவ்வொரு வர்க்கங்களின், பகுதிகளின், குழுக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட நடவடிக்கை தொடர்பான எல்லா அம்சங்களைப் பற்றிய பொருள்முதல்வாதப் பகுப்பாய்வையும் பொருள்முதல்வாத மதிப்பீட்டையும் நடைமுறையில் செயல்படுத்தக் கற்றுக் கொள்ளாவிட்டால் உழைக்கும் மக்கள் மற்றும் தொழிலாளர்களின் உணர்வு மெய்யான வர்க்க உணர்வாக இருக்க முடியாது(இதனை முழுமையாக இதழில் வாசிக்க தோழர்களே).

3. இந்திய வரலாற்றில் விடுதலைக்கான போராட்டத்தில் ஆரம்பகால கம்யூனிஸ்டுகளின் தன்னலம் கருதாத போராட்டம் தியாகம் மற்றவர்களின் எல்லாப் போராட்டங்களை விட மேலானது, உயர்வானதாகும்.

தோழர் லெனின் 1899 வாக்கில், நமது வேலை திட்டம் என்ற கட்டுரையில் கீழ்கண்டவாறு முன் வைத்துள்ளார். தற்போது சர்வதேச சமூக - ஜனநாயகம் சித்தாந்த ஊசலாட்டத்தால் பீடிக்கப்பட்ட ஒரு நிலையில் இருக்கிறது. இதுகாறும் மார்க்ஸ், எங்கெல்சின் போதனைகள் புரட்சித் தத்துவத்துக்குரிய உறுதி வாய்ந்த அடித்தளமாய்க் கருதப்பட்டு வந்தன; ஆனால் இப்பொழுது இந்தப் போதனைகள் குறைபாடானவை என்றும் பழமைப்பட்டுவிட்டவை என்றும் பறைசாற்றும் குரல்கள் நாற்புறமிருந்தும் எழுப்பப்படுகின்றன. சமூக-ஜனநாயகவாதியாய்த் தம்மை அறிவித்துக் கொண்டு, சமூக - ஜனநாயகக் கொள்கை முழக்க ஏடு ஒன்றை வெளியிட முன்வரும் எவரும், ஜெர்மன் சமூக - ஜனநாயகவாதிகளின் கவனத்தையும் அவர்கள் மட்டுமின்றி ஏனைய பலரின் கவனத்தையும் ஆட்கொண்டு வரும் ஒரு பிரச்சினை குறித்துத் தமது போக்கு என்ன என்பதைத் துல்லியமாய் வரையறுத்துக் கூறியாக வேண்டும்.நாம் முற்றிலும் மார்க்சியத் தத்துவார்த்த நிலையையே எமது அடிநிலையாய்க் கொண்டு நிற்கிறோம்: மார்க்ஸியம் தான் முதன் முதல் சோஷலிசத்தைக் கற்பனாவாதத்திலிருந்து விஞ்ஞானமாய் மாற்றியமைத்துத் தந்தது; இந்த விஞ்ஞானத்துக்கு உறுதியான அடித்தளத்தை நிறுவிக் கொடுத்தது; இதை இதன் எல்லாக் கூறுகளிலும் மேலும் வளர்த்தும் விவரமாய் விரித்தமைத்தும் செல்வதற்குப் பின்பற்ற வேண்டிய பாதையைச் சுட்டிக் காட்டிற்று. தொழிலாளியை வேலைக்கு அமர்த்திக் கொள்வதானது, அதாவது உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவதானது. சொத்துடைமையற்ற இலட்சோப இலட்சக்கணக்கானோரை நிலம், ஆலைகள், சுரங்கங்கள் முதலானவற்றின் உடைமையாளர்களாகிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில முதலாளிகள் அடிமை செய்து விடுவது என்பதை விளக்கியதன் மூலம், நவீன கால முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தன்மையை அது வெளிப்படுத்திக் காட்டிற்று. நவீன கால முதலாளித்துவ வளர்ச்சி அனைத்துமே, பெருமளவான பொருளுற்பத்தியானது சிற்றளவான பொருளுற்பத்தியைக் கழித்துக் கட்டிவிடும் போக்கினை வெளிப்படுத்திச் செல்வதையும், சோஷலிச சமுதாய அமைப்பை சாத்தியமும் அத்தியாவசியமும் ஆக்கும் நிலமைகளைத் தோற்றுவிப்பதையும் அது தெளிவுபடுத்திக் காட்டிற்று. வேர்விட்டு வளர்ந்துள்ள பழக்க வழக்கங்கள் அரசியல் சூழ்ச்சிகள், புரியாப் புதிர்களான சட்டங்கள், கடுஞ்சிக்கலான தத்துவங்கள் ஆகியவற்றின் புகை மூட்டத்தினுள் மறைந்திருக்கும் வர்க்க போராட்டத்தை, பல்வேறு வகைப்பட்ட சொத்துடைத்த வர்க்கங்களுக்கும் சொத்துடைமையற்றோர் அனைவரின் தலைமையில் நிற்கும் சொத்தில்லாப் பெருந்திரளாகிய பாட்டாளி வர்க்கத்துக்குமிடையே நடைபெறும் இந்தப் போராட்டத்தை எப்படிக் கண்டறிந்து கொள்வதென்று அது நமக்குக் கற்றுக் கொடுத்தது. புரட்சிகர சோஷலிஸ்டுக் கட்சியின் முன்னுள்ள மெய்யான பணியை அது தெளிவுபடுத்திற்று: சமுதாயத்தைத் திருத்தியமைப்பதற்குத் திட்டங்கள் வரைவதல்ல, தொழிலாளர்களுடைய நிலைமையை மேம்படச் செய்வது குறித்து முதலாளிகளுக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும் அறிவுரை அளிப்பதல்ல, சதிகள் புரிந்திடுவதல்ல இப்பணி, பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கமைப்பு செய்வதும், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரம் வெல்வதையும், சோஷலிசச் சமுதாயம் ஒழுங்கமைக்கப்படுவதையும் இறுதிக் குறிக்கோளாய்க் கொண்ட இந்த வர்க்கப் போராட்டத்துக்குத் தலைமை தாங்குவதுமே இப்பணி என்று அது தெளிவுபடுத்திற்று என்று முன் வைத்துள்ளார் ஆசான் லெனின். (முழுமையாக கீழ்காணும் இணைய இதழில் வாசிக்க தோழர்களே)



இலக்கு இணைய இதழ் 82 பி.டி.எப் வடிவில் உங்கள் முன் இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்