அரசும் புரட்சியும் லெனின் நூலை கற்றல்-1

 அரசு அறவே உலர்ந்து உதிர முழு நிறைவான கம்யூனிசம்‌ அவசியமாகும்‌(பக்கம் 345)

அரசு இருக்கும்வரை சுதந்திரம்‌ இல்லை. சுதந்திரம்‌ வந்ததும்‌ அரசு இல்லாமற்‌ போய்விடும்‌. அரசு பூரணமாய்‌ உலர்ந்து உதிர்வதற்கு அடிப்படையாய்‌ அமைவது கம்யூனிசத்தின்‌ மிக உயர்ந்த வளர்ச்சிக்‌கட்டமாகும்‌.(பக்கம்346) 

புரட்சியானது முதலாளித்துவச்‌ சுரண்டலால்‌ விளைந்த எல்லா  இழுக்குகளையும்‌ அசிங்கங்களையும்‌ களைந்து சமுதாயத்தைச்‌ சுத்தம்‌ செய்து தூய்மையாக்கு வதற்கும்‌, மேலும்‌ தொடர்ந்து முன்னேறிச்‌ செல்வதற்கும்‌ இது அவசியமான ஒரு படியே அன்றி வேறல்ல.

முதலாளித்துவத்தின்‌ வளர்ச்சிதான்‌ மெய்யாகவே  "எல்லோரும்‌”  அரசு நிர்வாகத்தில்‌ பங்கு கொள்ளும்படி வகை செய்யும்‌ முன்னிபந்தனைகளைத்‌ தோற்றுவிக்கிறது. இந்த முன்னிபந்தனைகளில்‌ சில வருமாறு: அனைத்து மக்களும்‌ எழுத்தறிவு பெறுதல்‌, மிகவும்‌ முன்னேறிய முதலாளித்துவ நாடுகள்‌ பலவற்றிலும்‌ ஏற்‌கனவே இது சாதிக்கப்‌ பெற்றுவிட்டது; தபால்‌துறை, ரயில்‌வேக்கள்‌, பெரிய ஆலைகள்‌, பெருவீத வாணிபம்‌, வங்கித்‌துறை,  இன்ன பிறவற்றாலான சிக்கல்மிக்க, பிரம்மாண்டமான, சமூகமயமான இயந்திரத்தால்‌ கோடானுகோடியான தொழிலாளர்கள்‌ “பயிற்சியும்‌ கட்டுப்பாடும்‌'' உடையோராக்கப்படுதல்‌. இந்தப்‌ பொருளாதார முன்னிபந்தனைகள்‌ இருக்குமாயின்‌, முதலாளிகளும்‌ அதிகாரவர்க்கத்தினரும்‌ வீழ்த்தப்பட்டபின்‌, இவர்களுக்குப்‌ பதிலாய்‌ உற்பத்தியையும்‌ வினியோகத்தையும்‌ கண்காணிப்பதிலும்‌,  உழைப்பையும்‌ உற்பத்திப்‌ பொருட்களையும்‌ பற்றிய கணக்குப்‌ பதிவு வேலையிலும்‌ உடனடியாகவே, எடுத்தயெடுப்பிலே, ஆயுதமேந்திய தொழிலாளர்களையும்‌, ஆயுதமேந்திய மக்கள்‌ அனைவரையுமே ஈடுபடுத்துவதுமுற்றிலும்‌ சாத்தியமே..

இவ்வாறு லெனின் அரசும் புரட்சியும் நூலில் பல்வேறு விவாதங்களை நடத்தியுள்ளதை புரிந்துக் கொள்வது ஏதுவாக எந்தெந்த பக்கங்களில் லெனின் என்ன சொல்லியுள்ளார் புரிந்துக் கொள்ள சற்று முயலுங்கள். பகுதியை வெட்டிசுருக்கி குழப்பத்தை ஏற்படுத்த அல்ல குழப்பதிற்கு முடிவுகட்ட ஒரு முயற்சியே...

முதலாளிகளுடைய உடைமைகள்‌ பறிமுதல்‌ செய்யப்படுவதிலிருந்தும்‌ முதலாளிகள் மீது தொழிலாளர்‌களுடைய கண்காணிப்பு நிறுவப்படுவதிலிருந்தும்‌ ஆரம்பமாக வேண்டும்‌, தவிரவும்‌ இந்தக்‌ கண்காணிப்பு அதிகாரவர்க்‌கத்தினராலான அரசால்‌ அல்ல, ஆயுதமேந்திய தொழிலாளர்‌களாலான அரசால்‌ நடத்தப்பட வேண்டும்‌ என்கின்றனர்‌.(பக்கம் 348).

முதலாளித்துவ சித்தாந்தவாதிகள்‌ (மற்றும்‌ தெறெரெத்கேலிகள்‌, செர்னோவ்கள்‌ முதலானோரை த்த முதலாளித்‌துவ சித்தாந்தவாதிகளது பரிவாரத்தினரும்‌) தன்னலங்‌ கருதி முதலாளித்துவத்தைப்‌ பாதுகாப்பது எதில்‌ காணக்கிடக்கிறது என்றால்‌, இன்றைய அரசியலின்‌ ஜீவாதாரமான அவசர அவசியப்‌ பிரச்சினையை விட்டுவிட்டு, அதாவது முதலாளிகளுடைய உடைமைகளைப்‌ பறிமுதல்‌ செய்தல்‌, குடிமக்கள்‌ எல்‌லோரையும்‌ பிரம்மாண்டமான ஒரே  ''கூட்டமைவின்‌'— அனைத்து அரசின்‌ தொழிலாளர்களாகவும்‌ சிப்பந்திகளாகவும்‌ மாற்றுதல்‌, இந்தக்‌ கூட்டமைவின்‌ செயல்‌ அனைத்தையும்‌ மெய்யான ஜனநாயக அரசுக்கு, தொழிலாளர்‌, படையாட்‌கள்‌ பிரதிநிதிகளது சோவியத்துகளின்‌ அரசுக்கு முற்றிலும்‌ கீழ்ப்‌படியச்‌ செய்தல்‌ ஆகியவற்றை விட்டுவிட்டு, அதற்குப்‌பதிலாய்‌ நெடுந்தொலைவிலுள்ள எதிர்காலத்தைப்‌ பற்றிய வாக்குவாதத்தையும்‌ பேச்சையும்‌ மேற்கொள்கிறார்கள்‌.

புலமை வாய்ந்த பேராசிரியரும்‌, அவரைத்‌ தொடர்ந்து குட்டிமுதலாளித்துவ அற்பவாதியும்‌, இவரையும்‌ தொடர்ந்து கெஸெரெகத்தேலிகளும்‌ செர்னோவ்களும்‌ போல்ஷிவிக்குகளின்‌ அதீத கற்பனைகள்‌ என்றும்‌,வாய்ச்சவடால்‌ வாக்குறுதிகள்‌ என்றும்‌, சோஷலிசத்தைப்‌ புகுத்துவது சாத்தியமல்ல என்றும்‌ பேசுகையில்‌, இவர்கள்‌ கம்யூனிசத்தின்‌ உயர்‌ கட்டம்‌ அல்லது படியை மனதிற்‌ கொண்டிருக்கிறார்‌கள்‌.(பக்கம் 349)

தொழிலாளி வர்க்கத்துக்கு, தனது விடுதலைக்காக அது முதலாளித்துவக்தை எதிர்த்து நடத்தும்‌ போராட்டத்தில்‌, ஜனநாயகம்‌ அளவு கடந்து முக்கியதுவமுடையதாகும்‌. ஆயினும்‌ ஜனநாயகம்‌ தாண்டிச்‌ செல்லக்கூடாத ஓர்‌ எல்லைக்‌ கோடல்ல. பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்துக்கும்‌, முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்துக்கும்‌ செல்லும்‌ பாதையில்‌ அமைந்த கட்டங்களில்‌ ஒன்றே அது.(பக்கம் 351)

ஜனநாயகம்‌ சமத்துவத்தைக்‌ குறிக்கிறது. சமத்துவம்‌ என்றால்‌ வர்க்கங்கள்‌ ஒழிக்கப்படுகல்‌ என்று பிழையற்ற முறையில்‌ அர்த்தப்படுத்திக்‌ கொள்வோமாயின்‌, பாட்டாளி வர்க்கம்‌ சமத்துவத்துக்காக நடத்தும்‌ போராட்டத்தின்‌ மாபெரும்‌ முக்கியத்துவமும்‌, ஒரு முழக்கம்‌ என்ற முறையில்‌ சமத்துவத்தின்‌ மாபெரும்‌ முக்கியத்துவமும்‌ தெளிவாய்‌ விளங்கும்‌. ஆனால்‌ ஜனநாயகம்‌ பெயரளவிலான சமத்துவத்தையே குறிக்கிறது. சமுதாயத்தின்‌ எல்லா உறுப்பினர்‌களுக்கும்‌ உற்பத்திச்‌ சாதனங்களின்‌ உடைமை சம்பந்தமாய்‌ சமத்துவம்‌ சாதிக்கப்‌ பெற்றதும்‌, அதாவது உழைப்புக்கும்‌ சம்பளங்களுக்குமான சமத்துவம்‌ சாதிக்கப்‌ பெற்றதும்‌, மேலும்‌ தொடர்ந்து முன்னேறுவது எப்படி, பெயரளவிலான சமத்துவத்திலிருந்து நடைமுறை உண்மையான சமத்துவக்‌துக்கு, அதாவது ஓவ்வொருவரிடமிருந்தும்‌ அவருடைய ஆற்றலுக்கு ஏற்ப, ஒவ்வொருவருக்கும்‌ அவருடைய தேவைகளுக்கு ஏற்பஎன்னும்‌ விதி செயல்படும்‌ நிலைக்கு முன்னேறுவது எப்படி என்கிற பிரச்சினை தவிர்க்கமுடியாதபடி மனிதகுலக்தை எதிர்நோக்கும்‌. எந்தக்‌ கட்டங்களின்‌ வாயிலாய்‌, எந்த நடைமுறை நடவடிக்கைகளைக்‌ கொண்டு மனிதகுலம்‌ இந்தத்‌ தலைமையான குறிக்கோளைச்‌ சென்றடையும்‌ என்‌பதை நாம்‌ அறியோம்‌, அறியவும்‌ முடியாது. ஆனால்‌ சோஷலிசத்தை உயிரற்ற, இறுகிக்கெட்டியாக, என்றென்றுக்குமாய்‌ மாறாத ஓரே நிலையில்‌ இருத்தப்பட்ட ஒன்றாய்க்‌ கொள்‌ளும்‌ சாதாரண முதலாளித்துவக்‌ கருத்தோட்டம்‌ நம்ப முடியாத அளவுக்கு பொய்யானது என்பதையும்‌, உண்மையில்‌ சோஷலிசத்தில்‌ மட்டும்தான்‌ பொது வாழ்வு, தனியார்‌ வாழ்வு இவற்றின்‌ எல்லாத்‌ துறைகளிலுமே மிக வேகமான, மெய்யான, உண்மையிலேயே பிரம்மாண்டத்‌ திரளானோரைக்‌ கொண்ட, முதலில்‌ பெரும்பான்மையோரையும்‌ பிறகு மக்கள்‌ தொகை அனைவரையுமே கொண்ட, முன்னேற்றப்‌ பேரியக்கம்‌ தொடங்கும்‌ என்பதையும்‌ உணர்ந்து கொள்வது மிக முக்கியமாகும்‌.

ஜனநாயகம்‌ என்பது அரசின்‌ ஒரு வடிவமாகும்‌, அரசு வகைகளில்‌ ஒன்றாகும்‌. எனவே ஒவ்வொரு அரசையும்‌ போல ஜனநாயகமும்‌ ஒரு புறத்தில்‌ ஆட்களுக்கு எதிராய்‌ ஓழுங்கமைந்த, முறையான வன்முறைப்‌ பிரயோகத்தைக்‌ குறிக்‌கிறது. ஆனால்‌ அது மறுபுறத்தில்‌ குடிமக்களின்‌ சமத்துவம்‌, அதாவது அரசின்‌ கட்டமைப்பை நிர்ணயிப்பதிலும்‌ அரசை நிர்வகிப்பதிலும்‌ எல்லோருக்கும்‌ சம உரிமை உண்டென்‌பது பெயரளவில்‌ அங்கீகரிக்கப்படுவதையும்‌ குறிக்கிறது.(பக்கம் 352)

இதன்‌ விளைவு என்னவெனில்‌, ஜனநாயகம்‌ அதன்‌ வளர்ச்சியில்‌ குறிப்பிட்ட ஒரு கட்டத்தில்‌, முதலாளித்துவத்தை எதிர்த்‌துப்‌ புரட்சிகரப்‌ போராட்டம்‌ நடத்தும்‌ வர்க்கமான பாட்‌டாளி வர்க்கத்தை ஒன்றுதிரளச்‌ செய்கிறது; முதலாளித்துவ அரசுப்‌ யொறியமைவையும்‌ குடியரசு வடிவிலான முதலாளித்துவ அரசுப்‌ பொறியமைவையும்கூட நிரந்தரச்‌ சேனையையும்‌, போலீசையும்‌, அதிகாரவர்க்கத்தையும்‌ இந்தப்‌ பாட்டாளி வர்க்கம்‌ தகர்த்துத்‌ தவிடுபொடியாக்கி புவிப்‌ பரப்பிலிருந்தே துடைத்தெடுத்துவிட்டு, இவற்றுக்குப்‌ பதிலாய்‌ மேலும்‌ ஜனநாயகமான ஓர்‌ அரசுப்‌ பொறியமைவை அமைக்கக்‌ கூடியதாக்குகிறது. முன்னிலும்‌ அதிக ஜனநாயக முடைத்த அரசுப்‌ பொறியமைவு என்றாலுங்கூட இதுவும்‌ ஓர்‌ அரசுப்‌ பொறியமைவுதான்‌. அனைத்து மக்களும்‌ அடங்‌கிய காவலர்‌ படையை நிறுவ முற்படும்‌ ஆயுதமேந்திய தொழிலாளர்களின்‌ வடிவில்‌ அமைந்த அரசுப்‌ பொறியமைவு இது.

இங்கு "அளவு பண்பாய்‌ மாறுகிறது: ஜனநாயகம்‌ இந்த அளவுக்கு அதிகரிப்பதானது முதலாளித்துவ சமுதாயத்‌தின்‌ வரம்புகளைத்‌ தாண்டிச்‌ சென்று இச்சமுதாயத்தை சோஷலிச வழியில்‌ திருத்தியமைப்பதன்‌ துவக்கத்தைக்‌ குறிக்கிறது. மெய்யாகவே எல்லோரும்‌ அரசு நிர்வாகத்தில்‌ பங்கு கொள்வார்களாயின்‌ முதலாளித்துவத்தால்‌ தன்‌ பிடியை இருத்திக்‌ கொள்ள முடியாது. முதலாளித்துவத்தின்‌ வளர்ச்சிதான்‌ மெய்யாகவே '“எல்லோரும்‌'” அரசு நிர்வாகத்தில்‌ பங்கு கொள்ளும்படி வகை செய்யும்‌ முன்னிபந்தனைகளைத்‌ தோற்றுவிக்கிறது. இந்த முன்னிபந்தனைகளில்‌ சில வருமாறு: அனைத்து மக்களும்‌ எழுத்தறிவு பெறுதல்‌, மிகவும்‌ முன்னேறிய முதலாளித்துவ நாடுகள்‌ பலவற்றிலும்‌ ஏற்‌கனவே இது சாதிக்கப்‌ பெற்றுவிட்டது; தபால்‌துறை, ரயில்‌வேக்கள்‌, பெரிய ஆலைகள்‌, பெருவீத வாணிபம்‌, வங்கித்‌துறை, இன்ன பிறவற்றாலான சிக்கல்மிக்க, பிரம்மாண்டமான, சமூகமயமான இயந்திரத்தால்‌ கோடானுகோடியான தொழிலாளர்கள்‌ பயிற்சியும்‌ கட்டுப்பாடும்‌'' உடையோராக்கப்படுதல்‌. இந்தப்‌ பொருளாதார முன்னிபந்தனைகள்‌ இருக்குமாயின்‌, முதலாளிகளும்‌ அதிகாரவர்க்கத்தினரும்‌ வீழ்த்தப்பட்ட (பக்கம் 353) பின்‌, இவர்களுக்குப்‌ பதிலாய்‌ உற்பத்தியையும்‌ வினியோகத்தையும்‌ கண்காணிப்பதிலும்‌, உழைப்பையும்‌ உற்பத்திப்‌ பொருட்களையும்‌ பற்றிய கணக்குப்‌ பதிவு வேலையிலும்‌ உடனடியாகவே, எடுத்தயெடுப்பிலே, ஆயுதமேந்திய தொழிலாளர்களையும்‌, ஆயுதமேந்திய மக்கள்‌ அனைவரையுமே ஈடுபடுத்துவது முற்றிலும்‌ சாத்தியமே. (கண்காணிப்பும்‌ கணக்குப்‌ பதிவுமான இந்தப்‌ பிரச்சினையைப்‌ பொறியாளர்கள்‌, விவசாய நிபுணர்கள்‌ முதலான விஞ்ஞானப்‌ பயிற்சி பெற்ற ஊழியர்களைப்பற்றிய பிரச்சனையுடன்‌ போட்டுக்‌ குழப்பிக்‌ கொள்ளக்‌ கூடாது. இந்தக்‌ கனவான்கள்‌ இன்று முதலாளிகளுடைய விருப்பங்களுக்குப்‌ பணிந்து வேலை செய்கிறார்கள்‌, நாளைக்கு ஆயுதமேந்திய தொழிலாளர்களுடைய விருப்பங்‌களுக்குப்‌ பணிந்து இன்னுங்கூட திறம்பட வேலை செய்வார்‌கள்‌.

 கணக்கீடு கண்காணிப்பு கம்யூனிச சமுதாயத்தின்‌ முதற்‌கட்டம்‌ தடங்கலின்றி இயங்கவும்‌ சரிவரச்‌ செயற்படவும்‌ பிரதானமாய்த்‌ தேவைப்படுகிறவை இவையே. குடிமக்கள்‌ எல்‌லோரும்‌ அரசின்‌ சம்பளச்‌ சிப்பந்திகளாய்‌ மாற்றப்பட்டுவிடுகிறார்கள்‌; அரசு ஆயுதமேந்திய தொழிலாளர்களால்‌ ஆனது. குடிமக்கள்‌ எல்லோரும்‌ அரசினுடைய நாடு தழுவிய ஒரேயொரு ““கூட்டமைவின்‌' சிப்பந்திகளும்‌ தொழிலாளர்களும்‌ ஆகிவிடுகிறார்கள்‌. தேவைப்படுவது எல்லாம்‌ இவர்கள்‌ சமத்துவமாய்‌ வேலை செய்ய வேண்டும்‌, வேலையில்‌ தமக்கு உரிய பங்கைச்‌ செய்து சமத்துவ சம்பளம்‌ பெற வேண்டும்‌ என்பதே. இதற்கு வேண்டிய கணக்கீடும்‌ கண்காணிப்பும்‌ முதலாளித்துவத்தால்‌ வெகுவாய்‌ எளிமைப்‌ படுத்தப்பட்டு, எழுத்தறிவுடையவர்‌ எவரும்‌ செய்ய முடியும்படியான மேற்பார்வையிடல்‌, பதிவு செய்தல்‌, எண்‌ கணிதத்தின்‌ அடிப்படை விதிகளை அறிந்திருத்தல்‌, தக்க ரசீதுகளை எழுதிக்‌ கொடுத்தல்‌ போன்ற மிக மிக எளிய வேலைகளாய்க்‌ குறுகும்‌ படிச்‌ செய்யப்பட்டுவிட்டன.*

+++++++++++++++

* அரசின்‌ மிக முக்கிய பணிகள்‌ தொழிலாளர்கள்‌ தாமே செய்யத்தக்க கணக்கீடு, கண்காணிப்பு ஆகியவையாய்க்‌ குறுகும்படிச்‌ செய்யப்படுகையில்‌, அரசானது *அரசியல்‌ வழியிலான அரசாய்‌' இருக்கும்‌ நிலை முடிவுற்றுவிடும்‌; “பொதுப்‌பணிகள்‌ தமது அரசியல்‌ தன்மையை இழந்து, வெறும்‌ நிர்வாகப்‌ பணிகளாகிவிடும்‌' (பார்க்கவும்‌: மேலே, அத்தியாயம்‌ 4, §2, அராஐகவாதிகளுடன்‌ எங்கெல்‌சின்‌ வாக்குவாகும்‌],

++++++++++++++++++++++

 மக்களில்‌ பெரும்பான்மையோர்‌ தாமே சுயேச்சையாகவும்‌ எல்லாவிடத்தும்‌ இத்தகைய கணக்குப்‌ பதிவுகளைச்‌ செய்யவும்‌, (இப்பொழுது சிப்பந்திகளாய்‌ மாற்றப்பட்டுவிட்ட) முதலாளிகளையும்‌ தமது முதலாளித்துவப்‌ பழக்கங்களை விடாது வைத்துள்ள அறிவுக்‌ துறைக்‌ கனவான்களையும்‌ இவ்விதம்‌ கண்காணித்துக்‌ கொள்ளவும்‌ தொடங்குகையில்‌, இந்தக்‌ கண்காணிப்பு மெய்யாகவே சர்வவியாபகமானதாகவும்‌ பொதுவானதாகவும்‌ வெகுஜனத்தன்மையதாகவும்‌ ஆகிவிடும்‌, இதிலிருந்து தப்ப வழி இருக்காது, ஏனெனில்‌ போக்‌கிடம்எதுவும்‌ இருக்காது.

சமுதாயம்‌ முழுதும்‌ சமமான உழைப்புக்குச்‌ சமமான சமபளத்துடன்‌ ஒரே அலுவலகமும்‌, ஒரே ஆலையுமாகிவிடும்‌.

ஆனால்‌ பாட்டாளி வர்க்கம்‌ முதலாளிகளைத்‌ தோற்கடித்த பிற்பாடும்‌, சுரண்டலாளர்களை வீழ்த்திய பிற்பாடும்‌ சமுதாயம்‌ முழுவதுக்கும்‌ விரிவடையச்‌ செய்யும்‌ இந்த "ஆலைத்‌ துறைக்கட்டுப்பாடு எவ்வகையிலும்‌ நமது இலட்சியமோ, நமது இறுதிக்‌ குறிக்கோளோ அல்ல. முதலாளித்துவச்‌ சுரண்டலால்‌ விளைந்த எல்லா இழுக்குகளையும்‌ அசிங்கங்களையும்‌ களைந்து சமுதாயத்தைச்‌ சுத்தம்‌ செய்து தூய்மையாக்கு வதற்கும்‌, மேலும்‌ தொடர்ந்து முன்னேறிச்‌ செல்வதற்கும்‌ இது அவசியமான ஒரு படியே அன்றி வேறல்ல.

எத்தருணம்‌ முதல்‌ சமுதாயத்தின்‌ எல்லா உறுப்பினர்‌களும்‌- அல்லது குறைந்தது மிகப்‌ பெரும்பான்மையோர்‌ அரசைத்‌ தாமே நிர்வகிக்கக்‌ கற்றுக்‌ கொள்கிறார்களோ, இந்தப்‌ பணியை நேரில்‌ தாமே மேற்கொள்கிறார்களோ, மிகச்‌ சொற்ப தொகையினரே முதலாளித்துவச்‌ சிறுபான்‌மையோரையும்‌, தமது முதலாளித்துவப்‌ பழக்கங்களை விட்‌ டொழிக்க விரும்பாத கனவான்களையும்‌, முதலாளித்துவக்‌ (பக்கம்355) தால்‌ அறவே பாழ்படுத்தப்பட்டுவிட்ட தொழிலாளர்களையும்‌ கண்காணிக்க ““ஏற்பாடு செய்கிறார்களோ?” அத்தருணம்‌ முதலாய்‌ எவ்வகையான அரசாங்கத்துக்குமுள்ள தேவை அடியோடு மறையத்‌ தொடங்கிவிடும்‌. ஜனநாயகம்‌ எவ்வளவுக்கு எவ்வளவு பூரணமானதாகிறகேோ அவ்வளவுக்கு அவ்வளவு அது தேவையற்றதாகும்‌ தருணம்‌ அருகாமையில்‌ வந்துவிடுகிறது. ஆயுதமேந்திய கொழிலாளர்களாலான அரசு, “‘அரசெனும்‌ சொல்லின்‌ சரியான பொருளில்‌ அரசாயில்லாத இது, எவ்வளவுக்கு எவ்வளவு ஜனநாயகமுடைத்ததாய்‌ ஆகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அரசின்‌ ஓவ்‌வொரு வடிவமும்‌ வேகமாய்‌ உலர்ந்து உதிரத்‌ தொடங்குகிறது.

 ஏனென்றால்‌, எல்‌லோரும்‌ சமூகப்‌ பொருளுற்‌பத்தியை நிர்வகிக்கக்‌ கற்றுக்‌ கொண்டு சுயேச்சையாய்த்‌ தாமே நடைமுறையில்‌ நிர்வகிக்கும்போது, சுயேச்சையாய்த்‌ தாமே கணக்குகள்‌ பதிவு செய்து கொண்டு சோம்பேறிகளையும்‌ செல்வச்‌ சீமான்களது புதல்வர்களையும்‌ மோசடிக்காரர்களையும்‌ ஏனைய முதலாளித்துவ மரபுகளின்‌ காவலர்களையும்‌கண்காணிப்புச்‌ செய்யும்போது, இந்த வெகுஜன அளவிலான கணக்கீட்டிலிருந்தும்‌ கண்காணிப்பிலிருந்தும்‌ தப்புவது தவிர்க்கமுடியாத வகையில்‌ அவ்வளவு கடினமாகிவிடுமாதலால்‌, அவ்வளவு அரிதிலும்‌ அரிதான விதிவிலக்காகி விடுமாதலால்‌, மற்றும்‌ உடனுக்குடன்‌ கடுந்‌ தண்டனைக்கு உரியதாக்கப்படலாமாதலால்‌ (ஏனெனில்‌ ஆயுதமேந்திய தொழிலாளர்கள்‌ காரிய வழிப்பட்டவர்களே அன்றி உணர்ச்சிப்‌ பசப்பாளர்களான அறிவுத்‌ துறையினரல்ல, யாரும்‌ தம்மிடம்‌ வாலாட்ட இடத்தர மாட்டார்கள்‌), சமூக வாழ்க்கையின்‌ சாதாரண அடிப்படை விதிகளைப்‌ பற்றி யொழுக வேண்டிய அவசிமானது விரைவில்‌ நிலை யான ஒரு பழக்கமாகிவிடும்‌.

இனி கம்யூனிச சமுதாயத்தின்‌ முதற்கட்டத்திலிருந்து அதன்‌ உயர்‌ கட்டத்துக்கு மாறிச்‌ செல்லவும்‌, அதனுடன்‌ கூடவே அரசு பூரணமாய்‌ உலர்ந்து உதிரவும்‌ பாதை விரியத்‌ திறக்கப்பட்டுவிடும்‌.(பக்கம் 356)

 

 தொடர்ந்து விவாதிக்கவே...




No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்