தோழர்களே இன்றைய வாராந்திர வகுபிற்கு பதில் வேறு தலைப்பில் கிளப் அவுஸில் விவாதிக்க அழைக்கிறோம் வாருங்கள் இரவு 8 மணிக்கு வாசிப்பு அல்ல விவாதிக்க மட்டுமே.
கம்யூனிஸ்டுகளாகிய நாம் கம்யூனிச ஆசான்களான மார்க்ஸ் முதல் மாவோ வரை காட்டியுள்ள வழிமுறையில் நடக்கிறோமா?
ஏன் லெனின் உலகிற்கே முதன்முதலில் புரட்சிக்கான கட்சி என்பது எப்படி இருக்க வேண்டும்? புரட்சியை எப்படி சாதிக்க வேண்டும்? கம்யூனிஸ்ட் கட்சி எப்படி புரட்சியை சாதிக்கும் என்பதனை மார்க்சிய தத்துவத்தை நடைமுறையாக்கி உலகிற்கு வழிகாட்டினார். அதன் அடிப்படையில் புரட்சிக்கான கட்சியையும் அவர் காட்டிய வழியில் பயணித்து பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்டது புரட்சியும் சாதிக்கப்பட்டது!
ரஷ்யாவில் புரட்சி நடத்துவதற்கு லெனின் அங்குள்ள சமூக நிலைமைகளை மார்க்சிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஆழ்ந்த அறிந்து மார்க்சித் தத்துவத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது அதற்கான கட்சி எப்படி இருக்க வேண்டும் அதன் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் தனது இறுதி இலக்கான சுரண்டலை ஒழித்துக்கட்டி சோசலிசத்தையும் பின்னர் கம்யூனிசத்தை வளர்த்தெடுப்பதற்கான வழிமுறை என்ன என்பதை தீர்க்கமாக தனது புரட்சிக்கான கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதில் இருந்து தொடங்கினார். அந்தக் கட்சியின் தொடர் செயல்பாடு தான் நவம்பர் புரட்சியாக நம் முன் வரலாற்றுப் பக்கங்கள் கூறுகின்றது. இதனை சாதிப்பதற்கு லெனின் தன் நாட்டில் இருந்த பல்வேறு விதமான போக்குகளை அம்பலப்படுத்தியது மட்டும் அல்லாமல் அதனை முறியடித்து அடக்குமுறை ஒடுக்குமுறை சுரண்டலுக்கு ஆட்பட்டு கிடக்கும் பெருவாரியான மக்களின் உழைக்கும் மக்களின் விடுதலைக்கான வழிமுறை என்பது சிறுபான்மையிலான ஆளும் வர்க்கத்தின் பிரிவினரே, அவர்களுக்கு எதிரான போரில் சுரண்டலுக்கு ஆட்படும் எல்லோரும் ஒன்றிணைந்தால் மட்டும் தான் சாத்தியம் என்றார் அதேபோல் ஒன்றிணைத்து சாதித்தும் காட்டினார்.
நம்மவர்கள் என்ன சொல்லிக் கொண்டுள்ளனர்?
ஒரு பிரிவினர் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளவர்களே; லெனின் ரஷ்யாவிற்கு தான் வழி காட்டினார் நமக்கு இல்லை என்கின்றனர். இன்னொரு பிரிவினர் இங்கு ஜாதி தான் பிரச்சினை ஆக ஜாதி பிரச்சனை தீர்த்தல் மட்டும்தான் மேலே செல்ல முடியும் என்கின்றனர். இன்னும் சிலர் பெண் ஒடுக்கு முறையுள்ள ஆண் ஆதிக்கம் மேலோங்கி உள்ளதால் பெண் விடுதலை தான் முதலில் என்கின்றனர். இன்னும் சிலர் தேசிய இனங்கள் அடிமைப்பட்டுக் கிடக்கிறது ஆகவே தேசங்கள் விடுதலை தான் முதலில் என்கின்றனர்.
இங்குள்ள கம்யூனிஸ்டுகளானவர்களும் ஆளுக்கொரு ஏதாவது ஒன்றன்பின் ஓடிக் கொண்டுதான் உள்ளார்கள்.
ஆனால் உண்மையில் கம்யூனிஸ்டானவர் இந்த ஒவ்வொரு பிரச்சனையும் ஏற்பதோடு இவை நாம் வாழும் சமூகத்தின் பிரச்சினைதான் ஆகையால் பல்வேறு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை ஓரணியில் இணைத்து ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் காரணமான சமூக அமைப்பை அடியோடு மாற்றி அமைக்க சொல்கின்றனர். அதற்கான பணி செய்யாதவர்கள்....
நம் நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஏன் எல்லா புரட்சி பேசும் இயக்கங்களும் என்ன செய்துக் கொண்டுள்ளது உங்கள் முன் தானே?
லெனின் சொன்னவற்றை பின்பற்றும் எவரையும் காணோம்! ஆளும் வர்க்க கருத்துகளுக்கும் செயலுக்கும் வால்பிடித்து ஓடிக் கொண்டுள்ளனர். எதிரியை எதிர் கொள்வதற்கான கட்சியாக புரட்சிக்கான நடைமுறையை கொண்டோர் யாரையும் காணோம்....
ஆம்
1). விஜயின் கவர்ச்சி வாதத்தால் மாண்டு போன அப்பாவிகளுக்கு கூட ஒருங்கிணைந்த பார்வையில்லை!
2). NEP (தே.க.கொ) எதிர்க்கும் எல்லோரும் அரசியல் ரீதியாக யார் செயல்படுகின்றனர்?
3). நடுவண் அரசின் தேசிய கல்விக் கொள்கையை இம்மி பிசகாமல் அப்படியே நிறைவேற்றும் CPM மை CPI விமர்சிப்பதாகட்டும் தி.மு.க வை ஆரவணைக்கும் அல்லது மென்மையாக சாடும் போக்கு யாருக்காக?
4). தூய்மை பணியாளர் போராட்டம் இன்னும் தினம் முன்னுக்கு வரும் போராட்டங்களை எப்படி அரசியலாக்க போகின்றீர்கள் வரிசையாக இன்னும் சில கேள்வி முயலுவோம் விவாதிக்க தோழர்களே ....
5). மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான வேணுகோபால் ராவ் மகாராஷ்டிர முதலமைச்சர் ஃபட்னாவிஸ் முன்னிலையில் அக்டோபர் 14 அன்று சரணடைந்தார். மற்றும் இன்னும் சில செய்திகள்.
சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிடையே தீவிர முயற்சிகள் மூலம் பாஜகவை
அதிகாரத்திலிருந்து துடைத்தெறிய நான்கு அம்ச நோக்கத்தையும் சிபிஐ முன்வைத்தது. இந்தாண்டு செப்டம்பரில் சண்டிகரில் நடைபெற்ற சிபிஐயின் 25வது கட்சி மாநாட்டில்
பிரதிநிதிகள் மாநாட்டைத் தொடங்கி வைத்து, கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா எதிர்க்கட்சி தளத்தை விமர்சித்தார்.
தேசிய கல்விக் கொள்கையை
தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வரைவு மற்றும் நடுவண் அரசின் தேசிய கல்விக் கொள்கையை இம்மி பிசகாமல் அப்படியே நிறைவேற்றும் முயற்சியே தமிழ்நாடு அரசு, தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட முன் வரைவை தற்போதைய சட்ட சபை கூட்டத்தில் கொண்டுவந்தது. ஏற்கனவே தனியாருக்குப் பல்கலைக்கழகங்கள் திறக்க அனுமதி அளித்துவிட்டு, அதில் மேலும் சலுகைகள் வழங்கும் வரைவு திட்டம் இது. இது முற்றிலும் உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டமாகும். உயர்கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு தன்னை முற்றிலுமாக விடுவித்துக் கொள்ளும் நடவடிக்கையே இது. நடுவண் அரசின் தேசிய கல்விக் கொள்கையை இம்மி பிசகாமல் அப்படியே நிறைவேற்றும் முயற்சியே இது. இதன்படி தற்போது செயல்பட்டு வரும் எந்த ஒரு தனியார் கல்லூரியும் விருப்பப்பட்டால் பல்கலைக்கழகமாகத் தங்களை மாற்றிக் கொள்ளலாம். அப்படியாயின் அவர்கள் வைப்பது தான் சட்டம்.
தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற புதிய காலனிய சுரண்டலில் உள்நாட்டு பெரு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிதிமூலதன கும்பல்களின் நலனுக்காகவே நடைபெற்று வருகிறது. இந்த உற்பத்தி முறைக்குத் தேவையான, அதாவது ஏகாதிபத்திய புதியகாலனியாக்க உற்பத்திக்கான கூலி அடிமைகளை உருவாக்குதே தேசிய-மாநிலக் கொள்கையின் நோக்கம்.
நடிகர் விஜயின் சினிமா கவர்ச்சி அரசியலுக்கு இவ்வளவு பேர் பலியாகியிருக்கின்றனர் என்பதுதான் முதன்மையான அம்சமாகும்.
தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நிதி பங்கீட்டைத் தராமல், புயல் வெள்ளங்களால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டபோது பேரிடர் நிதியைக் கொடுக்காமல் தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்துவரும் பாசிச மோடி அரசு, கரூரில் இறந்தவர்களுக்கு மட்டும் நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவிக்கிறது. தேர்தல் நேரப் பிணங்கள் கணக்கில் கொண்டேதானே இதற்கு வேறெந்த காரணமும் இல்லை தானே?
தூய்மைப் பணியாளர்கள் என்பவர்கள் அராஜகமான முறையில் வளர்கின்ற நகரங்களின் ஆக அனைத்துக் கழிவுகளையும் அகற்றுபவர்களாகவும் சுகாதாரக் கட்டமைப்பின் பெரும் சுமையைத் தாங்குபவர்களாகவும் விளங்குகின்றனர்.
மக்கள்தொகை அதிகரித்தல், விவசாயத்தை விட்டு விவசாயிகள் வெளியேற்றப்படுதல், பழங்குடி மக்கள் காடுகளை விட்டு வெளியேற்றப்படுதல் ஆகியவற்றால் தீவிரமடைந்துவரும் நகரமயமாக்கல் என்பது அதன் இயல்பிலேயே அராஜகமான வளர்ச்சியைக் கொண்டுள்ளது. அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் முன்னரே மக்கள் குடியேற்றம் செய்யப்படுவது அதன் இயல்பாக அமைந்துள்ளது.குறைந்த கூலி என்ற வகையிலும் தூய்மைப் பணியில் பெண்களே அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றனர்..
அரசு என்பது வன்முறை கருவி அவை ஆளும் வர்க்க சேவை செய்வதே. ஒடுக்குபவர்களிடம் – வலிமை வாய்ந்தவர்களிடம் – ஆயுதங்கள், குண்டர்கள், போலீசு மற்றும் அரசு அதிகாரம்
இவற்றின் உதவியுடன் அவர்கள் சமூகத்தை ஒடுக்கப்பட்டு கிடக்கும் மக்கள் போராட முயற்சிப்பவர்களைத் தாக்குகின்றனர்; அவர்களைக் கொல்கின்றனர்; சிறையில் அடைக்கின்றனர். எனவே இந்த ஆயுதமேந்திய ஒடுக்குமுறையாளர்களை எதிர்த்துப் போராட
வேண்டுமென்றால் ஒடுக்கப்படும் வர்க்கம் பார்வையாளராக இருப்பதுதான் நடைமுறையில் உள்ளது இதனை எதிர்த்து மாவோஸ்டுகள் போராடிக் கொண்டுள்ளனர் அவர்கள் சரணடைவு அவ்வவ்பொழுது நடப்பதுதான் ஆனால் அரசியலில் சரணாகதி அடைந்து விட்டவர்களை என்ன சொல்ல?
இன்னொரு செய்தி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியிடமும் அதிக எண்ணிக்கையிலான ஆயுதங்கள் உள்ளன. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.விடம்தான் அதிக ஆயுதங்கள் உள்ளன. எனவே, மாவோயிஸ்ட் மட்டுமே ஆயுதம்
ஏந்தியுள்ளனர் என்பதோடு இருவேறு பிரிவுக்கும் யார் யாரை எதிர்த்து போரிடுகின்றனர் எதற்காக போரிடுகின்றனர் என்பதில்ருந்து அவர்களின் நோக்கம் எந்த பிரிவு மக்களுக்காக போராடுகின்றனர் ஆயுதம் தூக்கியுள்ளனர் என்பது தெளிவாகும்.
No comments:
Post a Comment