இலக்கு 82 வரவுள்ளது அதன் கட்டுரையே

 "இதுவரை வந்த தத்துவங்கள் எல்லாம் உலகைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் விளக்கியதுஆனால் சமூகத்தை விளக்கினால் மட்டும் போதாதுசமூகத்தை மாற்றவேண்டும் என்பதே முதன்மையானதாகும் -மார்க்ஸ்


இலக்கு இணைய இதழ் 82 பி.டி.எப் வடிவில் இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே


கம்யூனிஸ்ட் கட்சிகளும் குழுக்களும் செய்ய மறந்தவை மறுப்பவைவும் புரட்சியை நேசிப்போர் புரிந்துக் கொள்ள வேண்டியவையும்.

"இதுவரை வந்த தத்துவங்கள் எல்லாம் உலகைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் விளக்கியது, ஆனால் சமூகத்தை விளக்கினால் மட்டும் போதாது, சமூகத்தை மாற்றவேண்டும் என்பதே முதன்மையானதாகும் என்று மார்க்சிய ஆசான்கள் எடுத்துச் சொல்லி சமூகத்தை மாற்றுவதற்காக நமக்கு வழிகாட்டினார்கள். ஆகவே இங்கு நிலவுகின்ற பல பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழி என்ன? என்பதைத்தான் நாம் முதன்மையாகப் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் சந்திக்கும் பிரச்சனையை தீர்ப்பதற்கு மக்கள் என்ன செய்கிறார்கள்? நீதிமன்றத்தையோ, காவல்துறை யையோ, மாவட்ட ஆட்சித்தலைவரையோ, அமைச்சர்களையோ அணுகுவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம். எந்தப் பிரச்சனை என்றாலும் அரசாங்கம் (அமைச்சர்கள்) அல்லது அரசு (அரசு அதிகாரிகள்- நீதிமன்றம்) இவற்றின் மூலமாகவே பிரச்சனைகளை தீர்க்க நாம் முயற்சி செய்கிறோம். அரசு என்ன செய்கிறது? முதலாளிகளுக்கு சாதகமாகவும் (பணம்படைத்த கூட்டதிற்கு) உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கு விரோதமாகவும் செயல்படுகிறது ஏன்? ஏனென்றால் இந்த அரசு பணம் படைத்த சொத்துடைய முதலாளிகள் நலனுக்கானதே ஆக உழைக்கும் மக்களின் நலனுக்கான அரசு வேண்டும் அல்லவா? அவை எப்படி இருக்கும் என்பதனையும் நடைமுறையில் ரசிய சீனபுரட்சியின் ஊடாக புரட்சிக்கான கட்சி அதற்கான நடைமுறைகளை நம்முன் வைத்துள்ளனர். அவர்கள் காட்டியுள்ள வழிமுறையில் நடைபோடுவதுதான் இந்த கொடூரங்களுக்கு விடிவு கிடைக்கும். அதனை செய்ய வேண்டியவர்கள் என்ன செய்துக் கொண்டுள்ளனர் சற்று விளக்குவீர்களா தோழர்களே. பாராளுமன்ற கட்சிகளாக சீரழிந்துபோன ஓட்டரசியல் சி.பி.ஐ. சி.பி.எம் மற்றும் லிபரேசன் இத்தியாதிகளும் ஓட்டரசியலை மறுத்து ஓட்டரசியல் கட்சிகளுக்கு ஜால்ரா தட்டும் புரட்சி பேசி ஏமாற்றுவோரும் இதனையெல்லாம் மறுத்து தாங்கள் புரட்சியாளர்கள் என்பவர்களும் மக்கள் மத்தியில் ஏன் காணாமல் போய்விட்டனர் எப்பொழுதாவது பரிசீலித்தது உண்டா?

இடதுசாரி கட்சிகளும் புரட்சி பேசும் குழுக்களும் மார்க்சிய லெனினியம் எனும் புரட்சிக்கான ஆயுதத்தை கைவிட்டுவிட்டு சமயதிற்கேற்ற வகையில் மக்களை குழப்பிக் கொண்டுள்ளனர். அவர்கள் யாரும் புரட்சிக்கான பணியாற்றாமல் எதிர்புரட்சிக்கான பணியில் உள்ளனர் என்பதுதான் நாம் காணும் உண்மை நிலவரமாக உள்ளது. இதனை களைந்திட வேண்டாமா? 

லெனின் கூறுகிறார், "புரட்சி பற்றிய நி. சுஹானவின் குறிப்புகளை அண்மையில் படித்துப் பார்த்தேன். நமது குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் எல்லோரும் இரண்டாவது அகிலத்தின் வீரர்கள் எல்லோரும் உரியதாயிருக்கும் பகட்டு புலமைதான் யாவற்றையும் விட எடுப்பாக தெரிகிறது. இவர்கள் எல்லோருமே துணிவு சிறிதும் இல்லாதவர்கள். ஜெர்மன் முன் மாதிரியிலிருந்து இம்மியும் விலகி செல்வதென்றாலும் இவர்களுக்கு  மிகச் சிறந்தோரும் கூட வரம்பிட்டு அரண்கள் அமைத்துக் கொள்கிறார்கள் என்பது ஒருபுறமிருக்க, குட்டி முதலாளித்துவ ஜனநாயக வாதிகள் எல்லோருமே பொதுவானதாக அமைந்து புரட்சிக் காலம் முழுவதும் இவர்கள் வெகுவாக வெளிப்படுத்தி காட்டி இருக்கும் இந்த குணாதிசயம். ஒரு புறம் இருக்க மிகவும் எடுப்பாக தெரிவது என்னவென்றால் கடந்த காலத்தை அப்படியே காப்பி அடிக்கும் இவர்கள் அடிமை புத்தி தான்". "இவர்கள் எல்லோரும் தம்மை மார்க்சியவாதிகளாக அழைத்துக் கொண்ட போதிலும் மார்க்சியம் குறித்து இவர்களுக்குள்ள கருத்தோட்டம் முழுக்க முழுக்க பகட்டும் புலமையின் பாணியிலேயே தான் இருக்கிறது". அவரே, "மார்க்சியத்தில் தீர்மானமாக இருப்பது எதுவோ அதை அதாவது மார்க்சியத்தின் புரட்சிகர இயக்கவியலை புரிந்து கொள்ள இவர்கள் அறவே தவறிவிடுகின்றனர்". அவரே கூறுகிறார், (லெனின் நூல் திரட்டு 45 பக்கங்கள் 378 382. ஜனவரி 17, 1923.).

 இந்திய வரலாற்றில் விடுதலைக்கான போராட்டத்தில் ஆரம்பகால கம்யூனிஸ்டுகளின் தன்னலம் கருதாத போராட்டம் தியாகம் மற்றவர்களின் எல்லாப் போராட்டங்களை விட மேலானது, உயர்வானதாகும்.

தோழர் லெனின் 1899 வாக்கில், நமது வேலை திட்டம் என்ற கட்டுரையில் கீழ்கண்டவாறு முன் வைத்துள்ளார். தற்போது சர்வதேச சமூக - ஜனநாயகம் சித்தாந்த ஊசலாட்டத்தால் பீடிக்கப்பட்ட ஒரு நிலையில் இருக்கிறது. இதுகாறும் மார்க்ஸ், எங்கெல்சின் போதனைகள் புரட்சித் தத்துவத்துக்குரிய உறுதி வாய்ந்த அடித்தளமாய்க் கருதப்பட்டு வந்தன; ஆனால் இப்பொழுது இந்தப் போதனைகள் குறைபாடானவை என்றும் பழமைப்பட்டுவிட்டவை என்றும் பறைசாற்றும் குரல்கள் நாற்புறமிருந்தும் எழுப்பப்படுகின்றன. சமூக-ஜனநாயகவாதியாய்த் தம்மை அறிவித்துக் கொண்டு, சமூக - ஜனநாயகக் கொள்கை முழக்க ஏடு ஒன்றை வெளியிட முன்வரும் எவரும், ஜெர்மன் சமூக - ஜனநாயகவாதிகளின் கவனத்தையும் அவர்கள் மட்டுமின்றி ஏனைய பலரின் கவனத்தையும் ஆட்கொண்டு வரும் ஒரு பிரச்சினை குறித்துத் தமது போக்கு என்ன என்பதைத் துல்லியமாய் வரையறுத்துக் கூறியாக வேண்டும்.நாம் முற்றிலும் மார்க்சியத் தத்துவார்த்த நிலையையே எமது அடிநிலையாய்க் கொண்டு நிற்கிறோம்: மார்க்ஸியம் தான் முதன் முதல் சோஷலிசத்தைக் கற்பனாவாதத்திலிருந்து விஞ்ஞானமாய் மாற்றியமைத்துத் தந்தது; இந்த விஞ்ஞானத்துக்கு உறுதியான அடித்தளத்தை நிறுவிக் கொடுத்தது; இதை இதன் எல்லாக் கூறுகளிலும் மேலும் வளர்த்தும் விவரமாய் விரித்தமைத்தும் செல்வதற்குப் பின்பற்ற வேண்டிய பாதையைச் சுட்டிக் காட்டிற்று. தொழிலாளியை வேலைக்கு அமர்த்திக் கொள்வதானது, அதாவது உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவதானது. சொத்துடைமையற்ற இலட்சோப இலட்சக்கணக்கானோரை நிலம், ஆலைகள், சுரங்கங்கள் முதலானவற்றின் உடைமையாளர்களாகிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில முதலாளிகள் அடிமை செய்து விடுவது என்பதை விளக்கியதன் மூலம், நவீன கால முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தன்மையை அது வெளிப்படுத்திக் காட்டிற்று. நவீன கால முதலாளித்துவ வளர்ச்சி அனைத்துமே, பெருமளவான பொருளுற்பத்தியானது சிற்றளவான பொருளுற்பத்தியைக் கழித்துக் கட்டிவிடும் போக்கினை வெளிப்படுத்திச் செல்வதையும், சோஷலிச சமுதாய அமைப்பை சாத்தியமும் அத்தியாவசியமும் ஆக்கும் நிலமைகளைத் தோற்றுவிப்பதையும் அது தெளிவுபடுத்திக் காட்டிற்று. வேர்விட்டு வளர்ந்துள்ள பழக்க வழக்கங்கள் அரசியல் சூழ்ச்சிகள், புரியாப் புதிர்களான சட்டங்கள், கடுஞ்சிக்கலான தத்துவங்கள் ஆகியவற்றின் புகை மூட்டத்தினுள் மறைந்திருக்கும் வர்க்க போராட்டத்தை, பல்வேறு வகைப்பட்ட சொத்துடைத்த வர்க்கங்களுக்கும் சொத்துடைமையற்றோர் அனைவரின் தலைமையில் நிற்கும் சொத்தில்லாப் பெருந்திரளாகிய பாட்டாளி வர்க்கத்துக்குமிடையே நடைபெறும் இந்தப் போராட்டத்தை எப்படிக் கண்டறிந்து கொள்வதென்று அது நமக்குக் கற்றுக் கொடுத்தது. புரட்சிகர சோஷலிஸ்டுக் கட்சியின் முன்னுள்ள மெய்யான பணியை அது தெளிவுபடுத்திற்று: சமுதாயத்தைத் திருத்தியமைப்பதற்குத் திட்டங்கள் வரைவதல்ல, தொழிலாளர்களுடைய நிலைமையை மேம்படச் செய்வது குறித்து முதலாளிகளுக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும் அறிவுரை அளிப்பதல்ல, சதிகள் புரிந்திடுவதல்ல இப்பணி, பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கமைப்பு செய்வதும், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரம் வெல்வதையும், சோஷலிசச் சமுதாயம் ஒழுங்கமைக்கப்படுவதையும் இறுதிக் குறிக்கோளாய்க் கொண்ட இந்த வர்க்கப் போராட்டத்துக்குத் தலைமை தாங்குவதுமே இப்பணி என்று அது தெளிவுபடுத்திற்று என்று முன் வைத்துள்ளார் ஆசான் லெனின்.

புரட்சி என்பது என்ன என்று தெளிவு பெற்றுக் கொண்டு, பொதுவுடமையை நோக்கிய சோசலிச புரட்சியின் அனுபவங்களும் மற்ற புரட்சியின் அனுபவங்களும் நமக்கு தரும் பாடங்களிலிருந்து தற்போதைய கம்யூனிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் செயல்பாட்டை நாம் பரிசீலிக்க வேண்டும். அன்றைய செயலில் புரட்சிக்காக அர்பணிப்புடன் செயல்பட்ட கட்சியின் பின் உழைக்கும் மக்களும் பல்வேறு பிரிவினரும் அணி திரண்டனர். பலர் தியாகிகளாகவும் தயங்கவில்லை, தன்னுடைய உயிரை துச்சமாக மதித்து நேர்மையாக செயல்பட்டார்கள். அவர்களின் செயல்பாட்டால் மக்கள் மத்தியில் கம்யூனிஸ்டுகள் மதிக்கப்பட்டனர். அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர்கள் தங்களின் சொத்துகளை கைவிட்டு உழைக்கும் மக்களின் விடுதலைக்காக களத்தில் இறங்கி போராடி உழைக்கும் ஏழை எளிய மக்களின் உற்ற துணைவர்களாக வாழ்ந்து காட்டினர். இன்றோ கட்சியில் பொறுப்பு பெறுவது, தன் குடும்பம், தனது சொத்து சேர்க்க என்றாகிவிட்டது. பொதுநலம் போய் சுயநலம் மேலோங்கியுள்ளது. சிலர் ஆட்சி அதிகாரதிற்கு வந்து முதலாளிகளாகவும் துடிக்கும் பொழுது அன்றைய கம்யூனிஸ்டுகளும் இன்றைய கம்யூனிஸ்டுகளும் ஒன்றல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதேபோல் அன்று புரட்சிக்காக உயிர் நீத்த தியாகிகளின் பெயரில் வாழும் குழுக்களும் இன்று தங்களின் மூதாதையரின் பெயரை உச்சரித்து உயிர்வாழ துடிக்கின்றனர். ஆனால் புரட்சியின் உயிர்நாடியான புரட்சிகான கட்சியை கட்டாமல் குழுவாகவே இருக்க முயற்சிக்கின்றனர். இவர்களின் குறுங்குழுவாதம் புரட்சிகானவை அல்ல எதிர்புரட்சிக்குதான் பயனளிக்கும். இதனை இவர்கள் உணராமல் இங்கு எந்த மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

இன்றைய இன்நிலையை நாம் புரிந்துக் கொள்ள, மார்க்சிய ஆசான் லெனினிடம் செல்வோம், முதலாளி வர்க்கத்தின் ஒன்று படுத்தப்பட்ட மற்றும் மையப்படுத்தப்பட்ட சக்திக்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட மற்றும் மையப்படுத்தப்பட்டதொரு சக்தியாக மாற்றாக மக்கள் நிறுத்தப்பட வேண்டும்”- என்று மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் வழிகாட்டியது. ஆனால் அதுபோன்ற ஒரு நிலை இங்கில்லை. சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் குருசேவின் வழிகாட்டுதலை ஏற்றுள்ள எல்லா கம்யூனிஸ்ட் கட்சிகளும் முதலாளித்துவ கட்சிகளிடம் சமாதானமுறையில் இணக்கமாக செயல்பட்டு தொழிலாளி உழைக்கும் வர்க்கதிற்கு துரோகம் செய்கிறது. அதேபணியை வேறு பாணியில் புரட்சி பேசுபவர்களும் உழைக்கும் மக்களை ஏமாற்றுகின்றனர். இங்குள்ள எல்லா குழுக்களும் மார்க்சியம் கூறியுள்ள சமூக மாற்றத்தில், வெகுசனங்களின் பங்களிப்பை புறக்கணித்துவிட்டு, ஒருசிலருக்கான கட்சியாக; தாங்கள் மட்டும்தான் கட்சி; தாங்கள் மட்டும்தான் புரட்சிக்கானவர்கள் என்று மார்தட்டுகின்றனர். உண்மையில் புரட்சிக்கு முன்னணியில் இருக்க வேண்டியவர்களை தவிர்த்து இவர்கள் என்ன சாதித்தனர்? என்பது வேதனையாக உள்ளது! பிளவுகளும் பின்னடைவுகளும் தவிர வேறோன்றுமில்லைதானே? அதாவது ரசியா மற்றும் சீனப் படிப்பினைகள் பெற்று புரட்சிகான பணியினை ஏற்று நடக்கும் கட்சி இங்கில்லை! அப்படி ஒரு கட்சி இல்லாத பொழுது புரட்சியை நேசிப்போர் பொதுவெளியில் பேசுவது எழுதுவது குற்றமா? இங்கு புரட்சிக்கான கட்சியே இல்லாத பொழுது குறுங்குழுவாதத்தில் வீழ்ந்துள்ள பொழுது? எந்த கட்சி இணைவது என்ன அடிப்படையில் இணைந்து செயல்படுவது? குறுங்குழுவாதிகள் தங்களின் குழுக்களில் செயல்படாதவர்களை அவதூறு படுத்துவது கேவலப்படுத்துவது தொடர் பணியாக உள்ளது. அவர்கள் தங்களின் தவறிலிருந்து பாடம் கற்று சுயவிமர்சனமாக முன் வரதவரை எவ்வித்ச் வளர்ச்சிக்கும் பங்களிக்காது. குறுங்குழுவாதிகள் முதலில் சுயவிமர்சனமாக தங்களின் தவறுகளிலிருந்து வெளிவரட்டும் பின்னர் உண்மையில் மார்க்சிய ஆசான்களின் வழிநின்று புரட்சிக்கான பணியில் பயணித்தால் எங்களை போன்றோர் இணைவதில் எந்த பிரச்சினையும் இருக்காது. அதற்கு தங்களின் பணியினை சரிசெய்ய வேண்டும் ஆசான்களின் வழியில் நின்று. இதுவரை புரட்சிக்கான பணி செய்யாத கம்யூனிஸ்ட் கட்சிகளையும் குழுக்களையும் பற்றி பார்த்தோம். இனி புரட்சியை மறுக்கும் எதிர்க்கும் போக்குகளை ஆராய்வோம்.

உலக வரலாற்றை காணும்போது ஏகாதிபத்தியம் மார்க்சியத்தை இரண்டு விதங்களில் எதிர்கொண்டது. ஒன்று வெளிப்படையாகவே எதிர்ப்பது, இரண்டாவது மார்க்சியத்தைத் திரித்து, குழப்பி, அதன் சாரத்தை உறிஞ்சி எடுத்து அதைப் புரட்டுவது. இந்த இரண்டாம் வகையின் வடிவங்களாகவே நவீன மார்க்சியம் (New Marxism), புதிய இடது (New Left) என்பவை உள்ளன. மார்க்சியத்தை தத்துவத் துறையில் குழப்பும் நோக்கம் கொண்டுள்ள இவை மார்க்சியத்தை நோக்கி வரும் இளைஞர்களைச் சலிப்படையச் செய்வதிலும் தவறாக வழிகாட்டுதலிலும் கை சுடாத புரட்சி நடைமுறையில் ஈடுபடுதலிலும் முடிகின்றது. 1960 இல் ஏற்பட்ட சர்வதேச நெருக்கடியினால் மார்க்சியத்தின் தாக்கம் அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அதிகமாயிற்று. இதிலிருந்து தப்புவிக்க, மார்க்சியத்தை தத்துவ ரீதியில் குழப்பும் பணி அமெரிக்காவில் முதலில் தொடங்கியது. ஹெர்பர்ட், மார்க்யூஸ், ரைட்மில்ஸ், எரிபிக்ரம் போன்றோர் இதைத் தொடங்கினர். சார்த்தர், ஆல்பெர்ட் காம்யூ, லூசியன், கோல்டுமென், ஹைடன் போன்ற ஐரோப்பிய அறிஞர்களும் மார்க்சியத்தை "விமர்சன ரீதியில்" அணுகுவதாகக் கூறி, அதை குழப்பமாக்கினர். இவர்கள் அனைவரது கருத்துக்களின் தொகுப்பான புதிய இடது சர்வதேச அளவில் புரட்சித்திசையை நோக்கிய மக்களை திசை திருப்புவதாக அமைந்தது. இந்த அடிப்படையில் மார்க்சியத்தை கேள்விக்கு உள்ளாக்கும் நூல்களை திருதல்வாத கட்சிகளாய் போன சி.பி.ஐ மற்றும் சி.பி.எம் வெளியிடுகிறது என்றால் அதன் அடிவொற்றி பாராளுமன்றமே இறுதி இலட்சியமாக கொண்டு செயல்படும் புரட்சி பேசும் கட்சி குழுக்களும் மார்க்சியத்தை விட முதலாளித்துவ கருத்துகளுக்கு முதலிடம் தரும் பொழுது அவர்கள் எந்த வர்க்கத்தின் கட்சிகள் நீங்களே புரிந்துக் கொள்ளுங்கள். திறந்தநிலை மார்க்சியம் என்ற நூலை திறனாய்வு செய்த நாங்கள் அதில் உள்ள குறைபாடுகளும் மார்க்சியத்தையே மறுப்பதும் குழப்புவதும் அந்த நூலின் நோக்கமாக உள்ள பொழுது. அதனை வெளியிட்ட கட்சி எந்த நோக்கத்தில் வெளியிட்டது அவையே பதில்சொல்ல கடமைபட்டது. சமூகமாற்றத்துக்கான என்ன தீர்வை இந்த நூல் முன்வைத்துள்ளது? எந்த மார்க்சிய கேள்விகளுக்கு இது மறு விசாரணையை கோருகிறது. மார்க்சிய-லெனினியத்தை மறுத்து அதன் மீது கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பிவிட்டு பிறகு மார்க்சிய வேசம் எதற்கு? எந்த வழியில் நின்று தீர்வு காணப்போகிறீர்கள்?. இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை தேடினாலும் இந்த நூலில் மார்க்சியத்தை வளர்தெடுப்பதன் பெயரில் மார்க்சியத்தையே குழப்புவதுதான் இதன் அடிப்படையாக உள்ளது. இதுபோன்ற நூல்கள் அறிந்தோ அறியாமலோ முதலாளித்துவமுறைகளை ஏற்று மார்க்சியத்தின் பெயரில் மார்க்சியத்தை குழப்புவதில் முதலாளித்துவ சேவை செய்யவே இந்த எழுத்து பணிகள் உள்ளன.

சரி இதே நிலைப்பாட்டை கொண்டிருந்தவர்களை லெனின் விமர்சனம் செய்தார் ஏன் தெரியுமா? நீங்கள் வைக்கும் இதே விமர்சனத்தை அன்று வைத்தவர்களை பார்த்து அவர்களின் நிலைபாடு என்னவென்பதனை லெனின் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இன்று பின்நவீனத்துவவாதிகளும், காண்ட் ஹெகைல வாசிக்க அழைக்கும் திறந்த நிலை மார்க்சியம் பேசுவோரின் நிலைக்கு எதிராக அவர்களின் நிலைப்பாடு மார்க்சியம் அல்ல என்பதனை விவரிக்க நமது ஆசானின் லெனின் கட்டுரை பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் பகுதியிலிருந்து எடுத்து கையாளுகிறேன்.

சரி திறந்த நிலை மார்க்சியம் தொகுதி-1 இயக்கவியலும் வரலாறும் என்ன சொல்கிறது பார்ப்போம். பளப்பளக்கும் பதிப்புரையில் என்னென்னவோ இட்டுகட்டும் பதிப்பாசிரியர் நேர்மையாக இந்த நூல் மார்க்சியத்தின் எந்த பணியை செழுமை படுத்தப் போகிறது என்பதைச் சொல்லவே இல்லை.

கீன்ஸியம், பிந்தைய மார்க்சியம், கட்டமைப்புவாதம்,பின்நவீனத்துவம் இப்படியான மார்க்சியம் அல்லாத புதைசேற்றில் மார்க்சியத்தை தள்ளியவர்களின் மூலமாகவே மார்க்சியத்தை மீட்க புறப்பட்டுள்ளனர் என்பதனை இவர்களின் ஒப்புதல் தெளிவாக முன் வைக்கிறது.

மார்க்சிய ஆசான்களின் தத்துவத்தை பேச முன்வராத இவர்கள் மார்க்சியத்தை மறுத்து முதலாளித்துவ அறிஞர்கள் முன் வைத்துள்ள கருத்துகளை முறியடிக்க மார்க்சியதிற்கு முந்தைய காண்டிடமும், ஹெகலிடமும் மார்க்சிய இயக்கவியலை மீட்டெடுக்க போக செல்லும் இவர்கள் ஏன் மார்க்சிய ஆசான் லெனின் போதித்துள்ள ‘பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்றோரு நூல் வெளிவந்து இதுபோல் குறைபேசி அன்று எழுதியவர்களுக்கு அளித்துள்ள பதில் இவர்களுக்கு போதவில்லையா? அன்று மார்க்சியத்தை மறுத்தவர்களின் கண்டுபிடிப்பைவிட இவர்கள் புதிய கண்டு பிடிப்பு என்னவென்றால் சில பெயர்கள் மாற்றம் தானே தவிர அதேவார்த்தைகள்தான் மீண்டும் வெளிகாட்டுகிறது, அதாவது “பழைய கள்ளு புதிய மொந்தை” என்பர் அதே சரக்குதான் பெயர் மாறியுள்ளது அவ்வளவே. திறந்தநிலை மார்க்சியம் வைக்கும் கேள்விகளும் அதன் நோக்கங்களும் இடதுசாரிகளின் வளர்ச்சிக்குதானா?

லெனின் (பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் என்ற அவரது நூலில் 323 ஆம் பக்கம் பார்க்க). ஆகவே இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது புறநிலையில் அதாவது நமது விருப்பங்களுக்கும், நமது சிந்தனைகளுக்கும் வெளியில் பொருள்கள் உள்ளது என்பதுதான் பொருள்முதல்வாதிகளின் கருத்தாகும். உதாரணமாக நமக்கு முன்னே ஒரு மேஜை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், நாம் சிந்திப்பதால்தான் மேஜை அங்கு இருக்கிறதா? இல்லை, நாம் சிந்திக்காவிட்டாலும் அங்கு மேஜை இருக்கும் என்பதுதானே உண்மை. நாம் சிந்திக்காவிட்டால் அல்லது அங்கு மேஜை இல்லை என்று கருதினால் அங்கு மேஜை இல்லாமல் போய்விடுமா? அங்கு மேஜை இல்லாமல் போய்விடாதல்லவா? இந்த எளிமையான உண்மையைக் கூட கருத்துமுதல்வாதிகள் ஏற்க மறுக்கிறார்கள். ஆகவேதான் கருத்துமுதல்வாதிகளில் ஒரு பிரிவினர் உண்மை என்பது எங்குமே கிடையாது என்றும் நாம் காண்பதெல்லாம் மாயையே என்று சொல்லி உழைக்கும் மக்கள் படும் துன்பங்களையே மூடிமறைத்து அந்தத் துன்பங்களிலிருந்து உழைக்கும் மக்கள் தங்களின் விடுதலைக்காகப் போராடுவதிலிருந்து திசைதிருப்புகிறார்கள். இந்த வகையில்தான் கருத்துமுதல்வாதமானது உழைக்கும் மக்களுக்கு எதிரான தத்துவமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதன் ஒரு[அகுதிதான் நேர்காட்சி வாதம், அதாவது மாறாநிலையை சிந்தனைதான் எல்லாம் எனும் நிலையை திறந்தநிலை மார்க்சியவாதிகள் போதிக்கின்றனர்.

ஆகவேதான் பொருள்கள் எல்லாம் மனது என்ற ஒன்று இல்லாமலேயே இருக்க முடியும் என்றும் பொருள்கள் இருப்பதற்கு மனது என்று ஒன்று தேவையே இல்லை என்றும் அடித்துச் சொல்கிறார்கள். இந்த சமூகமானது பகைமையான வர்க்கங்களைக் கொண்ட வர்க்க சமூகமாக இருப்பதால் சுரண்டும் வர்க்கங்கள் ஏழை உழைக்கும் வர்க்கங்களை சுரண்டுவதற்கு பலாத்காரமான ஒடுக்குமுறையோடு கூடவே உழைக்கும் மக்களிடம் தத்துவ குழப்பத்தை ஏற்படுத்தும் கருத்தியல் ஒடுக்குமுறையையும் கையாளுகிறார்கள். இத்தகைய கருத்துக் குழப்பத்தை மக்களிடம் ஏற்படுத்துவதன் மூலம் மக்கள் தங்களது வறுமைக்கும் துன்பங்களுக்கும் காரணமான உண்மைகளை அறிந்துகொண்டு தங்களது விடுதலைக்காகப் போராட முன்வந்துவிடக் கூடாது என்று ஆளும் வர்க்கங்களும் அவர்களுக்கு துணைபோகும் துரோகிகளும் கருதுகிறார்கள். அந்த நோக்கத்தை நிறைவேற்றவே கருத்துமுதல்வாதக் கருத்துக்களையும் சிந்தனை முறையையும் மக்களிடம் பரப்புகிறார்கள். ஆகவே கம்யூனிஸ்டுகள் இதற்கு எதிராக இயக்கவியல் பொருள்முதல்வாத சிந்தனை முறையை மக்களிடம் பரப்ப வேண்டும். புறநிலையில் யதார்த்தமாக இருக்கும் தன்மை நமது மனதுக்கு வெளியே இருக்கும் தன்மை, என்று பொருளுக்கு ஒரு குணாம்சத்தை அங்கீகரிப்பதோடு மெய்ஞான ரீதியான பொருள்முதல்வாதம் சம்பந்தப்பட்டிருக்கிறது எனலாம்” என்று லெனின் சொல்லியிருக்கிறார். (அதே நூல் பக்கம் 317).

ஆனால் இங்கே திறந்த நிலை மார்க்சியம் பேசுவோர் இதனை எப்படி தவறாக பேசி என்னென்ன செய்துக் கொண்டுள்ளனர்.

ஹெகலையும் காண்டையும் உயிர்பிக்கும் இவர்கள் அதே 1700 பெர்கிளிப் பாதிரியாரையும் துணைக்கழைகின்றனர் ஆனால் அவர்களிடமிருந்து முன்னேறிய அவர்களை புறம்தள்ளி வளர்ந்து ஒரு புரட்சியை சாதித்து முதலாளித்துவம் என்ற மூலதன ஆதிகத்திற்கு சாவு மணி அடித்து சோசலிசம் என்ற பொதுவுடமையை நோக்கிச் செல்லும் பணியை மார்க்சிய ஆசான்கள் நிறுவினர். அதற்கு சான்றுகளாக ரசிய மற்றும் சீனா உள்ளிட்ட உலக பல நாடுகளில் நடந்தேறிய சோசலிசம் நோக்கிய அவர்களின் பயணம் அந்த பயணத்தில் தற்காலிக முட்டுக்கட்டை அதன் தலைமையின் துரோகத்தால் அந்த நாட்டின் புரட்சி வீழ்ச்சி அடைந்து எதிர்புரட்சிக்கு வித்திட்டு இருக்கலாம், அதற்கு காரணம் மார்க்சியத்தின் தோல்வி அல்ல மார்க்சியத்தை பயன்படுத்தியோர் செய்த தவறே. அந்த படிப்பினையிலிருந்து விடுபட்டு முன்னேற மார்க்சியம் மட்டுமே வழிகாட்டி மார்க்சிய விரோதிகளின் எழுத்துக்கள் எவ்வகையிலும் பயனளிக்காது என்று உறுதியாக கூறுகிறோம்.

திறந்த நிலை மார்க்சியம் என்ற இந்த நூல் மார்க்சியத்தை வளர்க்க நிச்சயமாக இல்லை என்பேன். ஆனால் இவை ஆளும் வர்க்கதிற்கு சேவை செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்டதே என்று ஆணிதரமாக விளக்க முடியும். இன்னும் சில போக்குகளை பார்ப்போம்.

கரூரில் நடிகர் விஜயின் சட்டமன்ற நாற்காலி மோகதிற்கு 41 உயிர் பலிக்கு பின்னர் பலரும் பல்வேறுவகையான அரசியல் பேசுகின்றனர். தவறியும் மாற்றரசியல் பேசவில்லை.  ஆனால் அவர்கள் என்னவகையான அரசியல் பேசுகின்றனர் என்பதிலிருந்துதான் இவர்களின் உண்மையான முகவிலாசம் அறியமுடிகிறது.

சீர்திருத்தவாதிகளும், திருத்தல்வாதிகளும் இந்த அமைப்புமுறையை மாற்றாமல் இதனை அழகுபடுத்திக் கொள்ளவும், இதில் உள்ள அழுக்குகளை குறைகளை சட்டபூர்வமாக சரி செய்துக் கொள்ள முடியும் என்று நம்பிக்கையூட்டுகின்றனர்
. உண்மையாலுமே இந்த அமைப்புமுறை எந்த வர்க்க நலனுகானது என்று இவர்களுக்கு தெரியாதா? தெரிந்தே இளைஞர்களை புரட்சி போராட்டம் என்று போய்விடாமல் தடுக்க அம்பேத்கர் பெரியார் பின்னால் அணிதிரட்டிடும் நோக்கம் என்ன?தற்போது புரட்சி சத்தியம் இல்லை எனவே திமுக வின் SOCIAL DEMOCRATIC அரசியலே போதும் என்றும், புரட்சி போராட்டங்களை மறுத்து ஆளும் வர்க்கத்தின் பின் அணிதிரளவைக்கும் உத்தியை! புரட்சிக்கு பதில் ஆளும் வர்க்கதின் பின்னர் இளைஞர்களை அணிவகுத்து சீரழித்து கொண்டிருபதும் தற்போது பண்பாட்டு புரட்சியே போதும் அதற்கு மார்க்சியம் தேவையில்லை அம்பேத்கர் பெரியார் கருத்துகளே போதும் எனும் புரட்சி பேசும் ஏமாற்று பேர்வழிகளை என்னசொல்ல?மார்க்சியத்தை மறுத்து அம்பேத்கர் பெரியார் கருத்துகளே போதும் எனும் கம்யூனிச போர்வையில் ஏய்ப்போர் யாருக்கான அரசியல் செய்கின்றனர்? நாம் அவசியம் பரிசீலிக்க வேண்டியுள்ளது. இவர்களின் பணி யாருக்கானதுஎன்பதே?

இந்திய வரலாற்றில் விடுதலைக்கான போராட்டத்தில் ஆரம்பகால கம்யூனிஸ்டுகளின் தன்னலம் கருதாத போராட்டம் தியாகம் மற்றவர்களின் எல்லாப் போராட்டங்களை விட மேலானது, உயர்வானதாகும்
.

புரட்சி என்பது என்ன என்று தெளிவு பெற்றுக் கொண்டு, பொதுவுடமையை நோக்கிய சோசலிச புரட்சியின் அனுபவங்களும் மற்ற புரட்சியின் அனுபவங்களும் நமக்கு தரும் பாடங்களிலிருந்து தற்போதைய கம்யூனிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் செயல்பாட்டை நாம் பரிசீலிக்க வேண்டும். 

அன்றைய செயலில் புரட்சிக்காக அர்பணிப்புடன் செயல்பட்ட கட்சியின் பின் உழைக்கும் மக்களும் பல்வேறு பிரிவினரும் அணி திரண்டனர். பலர் தியாகிகளாகவும் தயங்கவில்லை, தன்னுடைய உயிரை துச்சமாக மதித்து நேர்மையாக செயல்பட்டார்கள். அவர்களின் செயல்பாட்டால் மக்கள் மத்தியில் கம்யூனிஸ்டுகள் மதிக்கப்பட்டனர். அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர்கள் தங்களின் சொத்துகளை கைவிட்டு உழைக்கும் மக்களின் விடுதலைக்காக களத்தில் இறங்கி போராடி உழைக்கும் ஏழை எளிய மக்களின் உற்ற துணைவர்களாக வாழ்ந்து காட்டினர். அதில் இன்று சாதியாக பார்க்கும் பார்பனர்களும் அடங்கும். அதேவேளையில் அன்று சாதியால் கடைநிலையில் இருந்த சிலர் இந்த அரசின் செல்வாக்கில் பதவியும் பட்டமும் பெற்றும் ஒடுக்கும் அரசின் கருவியாக வாழ்ந்து அரசின் சேவகர்களாக வாழ்ந்தவர்கள். இன்று அவர்கள் உழைக்கும் மக்களின் உற்ற உறவினர்கள் போன்ற பிம்பம் எதற்கு ஆளும் வர்க்கம் தன் சுரண்டலை தொடரத்தானே! ஆனால் அன்றிருந்த தியாகிகள் அன்றைய போராட்ட வரலாற்றில் கம்யூனீஸ்டுகளின் பாத்திரத்தையும் இன்றுள்ளோருடன் சற்று பொறுத்தி பாருங்கள்-இன்றோ கட்சியில் பொறுப்பு பெறுவது, தன் குடும்பம், தனது சொத்து சேர்க்க என்றாகிவிட்டது. பொதுநலம் போய் சுயநலம் மேலோங்கியுள்ளது. இன்றைய நிலையை நாம் புரிந்துக் கொள்ள, மார்க்சிய ஆசான் லெனினிடம் செல்வோம், “முதலாளி வர்க்கத்தின் ஒன்று படுத்தப்பட்ட மற்றும் மையப்படுத்தப்பட்ட சக்திக்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட மற்றும் மையப்படுத்தப்பட்டதொரு சக்தியாக மாற்றாக மக்கள் நிறுத்தப்பட வேண்டும்”- என்று மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் வழிகாட்டியது.


ஆனால் அதுபோன்ற ஒரு நிலை இங்கில்லை. சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் குருசேவின் வழிகாட்டுதலை ஏற்றுள்ள எல்லா கம்யூனிஸ்ட் கட்சிகளும் முதலாளித்துவ கட்சிகளிடம் சமாதானமுறையில் இணக்கமாக செயல்பட்டு தொழிலாளி உழைக்கும் வர்க்கதிற்கு துரோகம் செய்கிறது. அதேபணியைதான் புரட்சி பேசுபவர்களும் ஏமாற்றுகின்றனர். இங்குள்ள எல்லா குழுக்களும் மார்க்சியம் கூறியுள்ள சமூக மாற்றத்திற்கு, வெகுசனங்களின் பங்களிப்பை புறக்கணித்துவிட்டு ஒருசிலருக்கான கட்சியாக தாங்கள் மட்டும்தான் கட்சி; தாங்கள் மட்டும்தான் புரட்சிக்கானவர்கள் என்று மார்தட்டுகின்றனர்
.


இங்கு புரட்சிக்கான கட்சியே இல்லாத பொழுது குறுங்குழுவாதத்தில் வீழ்ந்துள்ள பொழுது? எவை கட்சி எதில் இணைந்து செயல்படுவது? குறுங்குழுவாதிகள் தங்களின் குழுக்களில் செயல்படாதவர்களை அவதூறு படுத்துவது கேவலப்படுத்துவது எந்த வளர்ச்சிக்கும் பங்களிக்காது. குறுங்குழுவாதிகள் முதலில் சுயவிமர்சனமாக தங்களின் தவறுகளிலிருந்து வெளிவரட்டும் ....
.உண்மையில் மார்க்சிய ஆசான்களின் வழி நின்று செயல்பட்டால் ஒழிய வேற்று பாதையில்லை இவர்கள் நீடிக்க!


மார்க்சியத்தை மறுக்கும் இன்னும் சில போக்குகள் மார்க்சியவாதிகள் இடையில் தோன்றியுள்ளது.

NGOகளின் பணி

ஏகாதிபத்தியங்களும்ஃபோர்டு பவுண்டேஷன்களும்கிருத்துவ திருச்சபைகளும்பின்நவீனத்துவ பின்புலமும் கொண்ட தலித் இயக்கங்களின் வரலாறு ஒரு கிரைம் த்ரில்லர் கதைக்கு ஒப்பானதாகும்.

ஃபோர்டுபவுண்டேசனும் - தலித்தியமும் ஓர்அங்கமாகபுரிதலுக்காக:-       அமெரிக்காவின் மாபெரும் கார்ப்பரேட் நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் ‘சமூக சேவைக்கென'தொடங்கிய தன்னார்வத் தொண்டு நிறுவனம்தான் ஃபோர்டு பவுண்டேசன்இது முதன் முதலாக கால்பதித்த வெளிநாடு இந்தியாதான். 1950களின் தொடக்கத்தில் இவ்வாறு இந்தியாவுக்குவந்தபோதுபவுண்டேசனின் தலைவர் பால்ஹர்ப்மேன் ‘சீனாவை இழந்து விட்டோம்இந்தியாவை இழக்கமாட்டோம்எனவெளிப்படையாக அறிவித்தார்.

அப்போது சீனா கம்யூனிச நாடாக மாறியிருந்ததுஇந்தியாவில் வீரம் செரிந்த தெலுங்கானப் போராட்டம் நசுக்கப்பட்டிருந்தாலும் கம்யூனிசம் வளருவதற்கான கூறுகள் நிறைந்திருந்ததுஇந்தியாவின் சமூகச் சூழல்களை ஆய்வு செய்த பவுண்டேசன் தலித்துகள்,பெண்கள்,பழங்குடியினங்கள் ஆகிய பிரிவினரிடையே கம்யூனிசம் எளிதாக காலூன்றும் என அனுமானித்தது.  ஆளும் வர்க்கத்தை தூக்கியெறியும் கம்யூனிசத்துக்கு மாறாகஇவர்களிடையே ஆளும் வர்க்கத்துக்குசேவைபுரியும் சீர்த்திருத்த அரசியலையும், அதற்கான இயக்கங்களையும் கொண்டு சேர்க்க முடிவு செய்தது.

இதற்காக ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் அறிவுஜீவிகளை உருவாக்கும் பணி முதன்மையாக்கப்பட்டதுஇந்தியப் பல்கலைகழகங்கள் அமெரிக்கப் பல்கலைகழகங்களோடு இணைக்கப்பட்டனஃபோர்டு பவுண்டேசனின் தயவில் ஏராளமான இந்திய மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களுக்கு படிக்க அனுப்பி வைக்கப்பட்டனர்அவர்களில் பலர் தலித் மாணவர்களாவர்வேறு வழியில்லாத இவர்கள் இந்த உதவிகளை ஏற்றுக் கொண்டனர் என்று அருந்ததிராய் எழுதுகிறார்இம்மாணவர்களில் பலரும் பின்பு எவாஞ்சலிக்கல் திருச்சபை உதவியால் முன்னிறுத்தப்பட்ட தலித் அரசியலின்பின் நவீனத்துவ அரசியலின் மையமாக மாறினர்.1980-களில் பவுண்டேசன் தனது பணியை மாற்றியமைத்துக் கொண்டதுநேரடியாக இல்லாமல் தொண்டு நிறுவனங்களை நிறுவி அவைகளுக்கு ஏராளமாக நிதியுதவிகள் செய்ததுதொண்டு நிறுவனங்கள் தங்களை தனி அமைப்புகளாகஅரசுசாரா நிறுவனங்களாக காட்டிக் கொண்டனஇது குறித்து இஜாஸ் அகமது தனது 'ஆன் போஸ்ட்மார்டனிசம்என்ற நூலில்இந்தியாவில் பின்நவீனத்துவம் சமூக இயக்கங்கள்சிவில் சொஸைட்டி அமைப்புகள்பணம் பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகிய வடிவங்களில் இயங்கியதுஅரசியல் என்ற சொல்லுக்குப் பதிலாக சமூகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதுபெரும்பாலும் இவை அனைத்தும் தங்களை அரசு சாரா நிறுவனங்கள் என அழைத்துக் கொண்டனஃபோர்டு பவுண்டேசன் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இவை நிதி உதவிகள் பெற்றன’ எனத் தெளிவாக கூறுகிறார்.

அடுத்து ஃபோர்டு பவுண்டேசனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள ஓர் அமைப்பு தமிழ்நாடு தியாலாஜிகல் செமினரி (Tamilnadu Theological Seminary TTS) ஆகும்இந்த எவாஞ்சலிக்கல் கிருத்துவ நிறுவனம்தலித் ஆதார மையங்களை உருவாக்கியது. 1989-ல் மதுரையில் அரசரடியில் ஒரு தலித் ஆதார மையம் உருவாக்கப்பட்டது

தலித் ஆதார மையத்திற்கு பவுண்டேசன்வாரிவழங்கும் நிதியினை அறிந்து கொள்ள Ford Foundation என இணையத்தில் தொடர்பு கொண்டால் போதும்முடிவில்லா நீண்ட பட்டியல் படையெடுத்து நம்மை மிரட்டும்இப்படி கிருத்துவதிருச்சபையால் உருவாக்கப்பட்ட ஒரு போலி புரட்சிகர இயக்கம்தான் பாதர் சேவியர் அருள்ராஜ் நடத்திய உழைக்கும் மக்கள் இயக்கமாகும்என்.ஜி.ஒவான இந்த அமைப்பு தன்னை ஒரு அரசியல் கட்சி போலக் காட்டிக் கொண்டது.

தலித் ஆதாரமையத்தைப் போலவே World Vision என்ற N.G.O. அமைப்பும் தலித் மக்களை குறி வைத்து செயல்பட்டு வருகிறதுஇது அமெரிக்க உளவுத்துறை C.I.A-வுக்காக வியத்நாமில் செயல்பட்டதை தாமே ஒத்துக் கொண்டுள்ளது. C.I.A-வுக்கும் ஃபோர்டு பவுண்டேசனுக்கும் உள்ள நெருங்கிய உறவை ஜேம்ஸ் பெட்ராஸ் என்ற அமெரிக்க எழுத்தாளர் ஆதாரத்துடன் ஏராளமாக எழுதியுள்ளார்.

இன்றைய உலக மயமாக்கல் உலகே ஒரே குடையின் கீழ் சுருங்கியுள்ள நிலையில் கருத்து ஊடுருவல் என்பது ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கடத்தப் படுவதும் ஏகாதிபத்திய சிந்தனைகளை மூன்றாம் உலக நாடுகள் மீது திணிப்பதை தவிர்க்க தடுக்க முடியாதவையே அதனை அறிந்து அதன் தவறுகளை விமர்ச்சிக்கும் அளவு வளர்ச்சி பெற்றால் மட்டுமே இதனை எதிர்த்து போராட திறன் பெற்றவர்களாக வளர முடியும்.

அதற்கு மார்க்சிய லெனினிய  தத்துவ அரசியலை புரிந்திருப்பதோடு இன்றைய உலகில் ஏகாதிபத்திய சுரண்டலை மூடிமறைக்க உழைக்கும் மக்களை போராட்டத்திலுந்து திசைத் திருப்ப அந்த உழைக்கும் மக்களுக்காக போராடுவோரையே இன்று வென்றெடுத்துள்ள பெருமை இன்றை ஏகாதிபத்தியங்களுக்குண்டு. இதனை புரிந்துக்கொள்ளாத புரட்சி பேசும் பலரும் தங்களுக்கான பணி செய்யாமல் எதிரிவர்க்க தேவைக்கான பணியை செய்துக் கொண்டுள்ளனர்.

உண்மையில் இன்றைய காலகட்டத்தில் செய்ய வேண்டிய பணி தன் அணிகளுக்கும் மக்களுக்கும் மார்க்சிய தத்துவ அரசியலை கசடர கற்பிக்க வேண்டும். புரட்சி எழுச்சிக்கு தயாரிக்க வேண்டிய பணி அல்லவா? அதனை விடுத்து தான் மட்டுமே சரியானவன் என்று கூறி மற்றவர்களை ஏற்காமை விவாதிக்காமை விவாதிக்க திறன் இல்லாமை எவ்வகையிலும் பலன் இல்லை. 

சமூக மாற்றம் விரும்பும் ஒவ்வொருவரும் இங்குள்ள பிற்போக்கு முந்தைய சமூக முடைநாற்றம் பிடித்த குப்பைகளை இல்லாது ஒழிக்க பாடுபடவேண்டுமென்றால் மார்க்சிய லெனினிய தத்துவத்தின் அடிப்படையில் நடைபெறும் புரட்சியால் மட்டுமே சாத்தியம் என்பது தானை ஏற்பதும், மார்க்சிய லெனினிய தத்துவத்தின் கண்ணோட்டத்தின் அடிப்படையில் நடைமுறை காணுவது தான் ஆகும். அதனை உண்மையாலுமே புரட்சி நேசிப்போரின் பணியாக இருந்தால் மட்டுமே இங்குள்ள கசடுகளை களைந்தெறிய முடியும். நமது கண்ணோட்டம் மார்க்சிய தத்துவ அடிப்படையில் இருந்தால் மட்டுமே விவாதம் சரியான பாதையில் செல்லும்.

மார்க்சிய லெனினிய தத்துவ அடிப்படையில் செய்யாததன் விளைவு தான் இங்கு நம் இடையே காணப்படும் பல்வேறு விதமான போக்குகள் உள்ளன ....

விவாதம் தொடரும்






No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்