லெனினியத்தை மறுக்கும் மார்க்சியவாதி துரோகளுகளுக்கானதே இந்தப்பகுதி லெனின் புரட்சிகான பணியில் லெனினியத்தை எப்படி வளர்தெடுத்தார்?
தோழர்களே, இந்தப்பகுதி லெனின் பற்றிய நினைவு குறிப்புகள் பகுதியிலிருந்து எடுத்து எழுதுகிறேன்.
லெனினின் சொந்த வாழ்க்கையில் சொந்த நோக்கங்கள் அவருக்கு இருந்ததாக எதிரிகள்கூட எழுதவில்லை. பாட்டாளி வர்க்க விடுதலை, உலகப் பாட்டாளி வர்க்க புரட்சிதான் அவரது மூச்சு.
1917-பிப்ரவரியில் புரட்சி நடந்து, முதலாளித்துவ அரசு பதவியேற்ற, அந்த நொடியிலிருந்து, அடுத்து சோசலிசப் புரட்சியை நோக்கி முன்னேற வேண்டும் என்று செயல்பட்டார். அப்போது வெளிநாட்டில் இருந்த அவர், ரஷ்யாவுக்கு திரும்புகிற போதும்கூட, பெண் போராளி கொலந்தாயிற்கு அனுப்பிய குறிப்பில் “அதிகமான புரட்சிகர திட்டங்கள், வியூகங்கள் தேவை!! அதிகமான புரட்சிப் பிரச்சாரம் தேவை!! சர்வதேச பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான கிளர்ச்சியும் போராட்டமும் தேவை!! அதற்கும் மேலாக, சோவியத்துகள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்!!” என்று குறிப்பிட்டிருந்தார்.
கேள்வியை இடையறாது எழுப்புவதும் அதற்கான விடையை காண்பதும் லெனின் தன் வாழ்நாள் பணியாக கொண்டிருந்தார்
லெனினது எழுத்துக்களை வாசித்து, சமகால பிரச்சனைகளோடு பொருத்தி பார்க்கும் நடைமுறையே ஒரு புரட்சிகரமான பணியாகும்.
லெனினுடைய எழுத்துக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிட வேண்டும் என்று காமனாவ் கூறியபோது, “முழுக்க முழுக்க தேவையற்ற வேலை’ என்று லெனின் குறிப்பிட்டார். ‘பழைய எழுத்துக்களை மீண்டும் பிரசுரித்தால் நாம் எவ்வளவு முட்டாள்தனமாக இருந்திருக்கிறோம் என்று வேண்டுமானால் தெரிந்து கொள்ளலாம்” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டு, அதனை மறுத்தார்.
பிறகு
அவரிடம் ‘உங்கள் எழுத்தை பிரசுரிக்காமல் இருந்தால் எதிரிகளுடைய எழுத்துக்களை
வருங்கால தலைமுறை படிப்பார்கள்” என்று சக தோழர்கள் பிடிவாதமாக இருந்ததால், அதனை ஏற்றுக்கொண்டார். அவர்கள் உறுதியாக இருந்ததனால்தான்
உலகிற்கு புரட்சிகர சிந்தனை பெட்டகம் கிடைத்தது. 45 தொகுதி நூல்கள் உள்ளன. ஒவ்வொன்றும், ஏறத்தாழ 650 பக்கங்கள் கொண்டவை.
இன்னமும் அவரது எழுத்துக்கள் ஏராளமாக வெளிவர வேண்டியுள்ளது.
ஒரு முறை விளாதிமீர் போன்ச் என்ற அலுவலர் அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்டு ரஷ்ய அதிபரான லெனினுடைய ஊதியத்தை 500 ரூபிளிலிருந்து, 800 ரூபிள் என்று உயர்த்தினார். இதற்காக அவர் மிக கடுமையாக கண்டிக்கப்பட்டார். தனக்கு ஊதிய உயர்வு கொடுத்ததற்காக ஒருவரை ஊதிய உயர்வு பெற்றவர் தண்டித்தது, வரலாற்றிலேயே முதல் தடவையாக நடந்தது.
லெனினுடைய வாழ்க்கையை வெறும் சம்பவங்களின் தொகுப்பாக வாசிப்பது பலன் தராது. கார்ல் மார்க்சின் பெயரால் அழைக்கப்படும் ஒரு தத்துவத்தை, ஒரு நாட்டில் புரட்சியை நிகழ்த்தும் நடைமுறையோடு இணைத்த மகத்தான வாழ்க்கை லெனினது வாழ்க்கை. ஒரு நாட்டில் நிகழ்ந்த புரட்சி அனுபவத்தில் உலகப் புரட்சிக்கான பொதுக் கோட்பாடுகளை உருவாக்கிய படைப்பாற்றலின் சிகரம் லெனினது வாழ்க்கை. இந்த வகையில் லெனின் வாசிப்பு நிகழ வேண்டும்.
மார்க்சியம் ஐரோப்பிய தத்துவமா? என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம் சர்வதேச கம்யூனிச இயக்கமானது மார்க்சிய லெனினிய தத்துவத்தை ஒவ்வொரு நாட்டின் நடைமுறையோடு பொருத்திப்பார்த்து ஒவ்வொருநாட்டின் பிரச்சனையையும் தீர்த்து வெற்றி கொள்ள முடியுமா? என்ற சவாலை எதிர்கொள்கிறது. இந்த சவாலை ரஷ்ய மற்றும் சீனக் கம்யூனிஸ்டுகள் எதிர்கொண்டு மார்க்சிய தத்துவத்தை அவர்களது நாட்டின் நடைமுறையோடு இணைத்து வெற்றி கொண்டார்கள். அவர்களைப் பின்பற்றி ஒவ்வொரு நாட்டு கம்யூனிஸ்டுகளும் இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு லெனினியம் வழிகாட்டுகிறது. அதற்கு லெனினது எழுத்துக்களை வாசித்து சமகால பிரச்சனைகளோடு பொருத்திப் பார்த்து விடை காணுவதற்கான பயிற்சியைப் பெறுவதும் ஒரு வகையான புரட்சிப் பணியாகும்.
தத்துவத்தின் பணி சமூகத்தை விளக்குவது மட்டும் அல்ல. அதை மாற்றியமைக்க வழிகாட்டுவதாக இருக்க வேண்டும் என்னும் மார்க்சின் கூற்றுப்படி மானுட விடுதலைக்கு வழிகாட்டும் தத்துவமாக விளங்குவது மார்க்சியத் தத்துவமே. மக்கள் அத்தத்துவத்தை இறுகப் பற்றிக் கொள்ளும்போது அது மாபெரும் பொருண்மைச் சக்தியாக மாறும், அதைத்தான் வரலாறு திரும்பத் திரும்ப மெய்ப்பித்து வருகிறது. மக்களை மாபெரும் சக்தியாக மாற்றுவதற்குப் புரட்சிகரமான மார்க்சியத்தைப் பரந்துபட்ட உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
தன்னுடைய
சக தோழர்களிடம் லெனின் கடுமையாக நடந்து கொள்வார் என்றும் எழுதுகிறார்கள். அவரோடு
கட்சிக் கொள்கைகள் விஷயத்தில் கடுமையாக முரண்பட்ட மார்ட்டாவ் எவ்வித நிபந்தனையும்
இல்லாமல் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அதேபோன்று டிராட்ஸ்கி, புகாரின், காமனாவ் போன்ற பலர் மீது அவர் கடும் கொள்கை வேறுபாடு கொண்டு, கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆனால் அவர்கள் அனைவருமே
சோஷலிச உருவாக்கத்தில் முழுமையாக ஈடுபட, அவர்களை முக்கிய பொறுப்புக்களில் அமர்த்தினார். லெனினுக்கு விருப்பு
வெறுப்புகளை விட சோஷலிச லட்சியமே பிரதானம்.
லெனினிடம்
தத்துவ அரசியல் தெளிவு இருந்த காரணத்தால் தவறு செய்தவர்களுக்கும் பொறுப்பு
கொடுத்தார். அவர்கள் செய்யும் தவறைகளை எதிர்த்துப் போராடும் வலிமை
லெனினிடமிருந்தது. அந்த தவறுகளிலிருந்து அமைப்பை காப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை
லெனினிடம் இருந்தது.
மார்க்சிய சித்தாந்தமானது மனித சமூகம் என்றால் என்ன? அது ஏன் மாறுகிறது? இதற்கு மேலும் என்னென்னமாற்றங்கள் மனிதகுலத்திற்கு ஏற்படப் போகிறது என்பதை தொடர்ந்து கண்டறிவதற்கு பயன்படும் சித்தாந்தமாகும். இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் தற்செயலானவையல்ல. அவை சில நுண்ணியவிதிகளின் அடிப்படையிலேயே மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை இயற்கை பற்றிய விஞ்ஞானங்கள் நமக்கு தெளிவுப்படுத்துகிறது. அது போலவே சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களும் சில நூண்ணிய விதிகளின் அடிப்படையிலேயே ஏற்படுகிறது என்றும் அந்த பொதுவான விதிகளை மார்க்சியம் கண்டறிந்து சமூகத்தை மாற்ற விரும்புபவர்களுக்கு முன்னால் வைத்துள்ளது. சமூக மாற்றத்திற்கான பொதுவான காரணம் என்ன? எந்த அடிப்படையில் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன என்ற பொதுஉண்மையை, பொதுவான வழிகாட்டு தலையை, பொதுவான கண்ணோட்டத்தை மார்க்சியம் வழங்குகிறது. இந்தபொதுவான கண்ணோட்டத்தை உள்வாங்கி அதன் அடிப்படையில் குறிப்பான சமூகத்தின் அல்லது குறிப்பான நாட்டின் சூழல்களை ஆய்வு செய்து குறிப்பாக சமூகமாற்றத்திற்கான கொள்கை திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று மார்க்சியம் வலியுறுத்துகிறது. ஆகவே மார்க்சியமானது நிரந்தரமான வறட்டுசூத்திரங்களை முன்வைக்கவில்லை மாறாக குறிப்பான பிரச்சனைகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கான பொதுவான வழிகாட்டுதலையும் கண்ணோட்டத்தையும் வழங்குகிறது. ஆகவே குறிப்பான சமூக மாற்றத்திற்கு தீர்வுகளை அறிந்திட அந்த நாட்டின் குறிப்பான சூழல்களை புறக்கணித்துவிட்டு மார்க்சியத்தை மட்டும் பேசிக்கொண்டிருப்பதோ அல்லது ரஷ்யா மற்றும் சீனாவில் நடந்த மாற்றங்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. அதே போல் மார்க்சியம் வழிகாட்டும் பொது உண்மையையும் கண்ணோட்டத்தையும் மறுத்து விட்டு மேலும் ரஷ்ய, சீனப் புரட்சிகளின் அனுபவத்தையும் புறக்கணித்து விட்டு சொந்த நாட்டு சூழல்களையும் அதன் அனுபவங்களை மட்டும் பார்த்து குறிப்பான சமூகத்தை மாற்றுவதற்கான விஞ்ஞானப் பூர்வமான முடிவை எடுக்க முடியாது.
மார்க்சியம் ஒவ்வொருவரின் தேவையைக் கொண்டு தனித்தனியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். அதாவது மார்க்சியத்தில் ரஷ்யா மார்க்சியம் சீனா மார்க்சியம் தமிழக மார்க்சியம் என்று நிறுவ நினைக்கின்றனர். மார்க்சியம் குறிப்பான சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டுமேயன்றி அதாவது சூழ்நிலை ஏற்ப ஒவ்வொரு நாட்டின் விடுதலைக்கான பாதைகள் மாறுமே தவிர ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாமார்க்சியம் என்பதில்லை. ரஷ்யாவின் குறிப்பான சூழலுக்கு ஏற்ப அங்கு ஆயுத ரீதியிலான குறுகிய கால பாதை மேற்கொள்ளப்பட்டது குடியேற்ற அரை குடியேற்ற நிலவுடமை தன்மை கொண்ட சீனாவில் நீண்ட மக்கள் பாதை மேற்கொள்ளப்பட்டது.
ஆகவே மார்க்சிய கண்ணோட்டத்தையும் குறிப்பிட்ட நாட்டின் சமூக இயக்கத்தையும் இணைத்து ஆய்வு செய்வதன் மூலம் மட்டுமே சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை நாம் விஞ்ஞானப்பூர்வமாக எடுக்க முடியும்
கல்வியாளர்கள், அறிவுஜீவிகள் என அறியப்படுகிற பலர், மார்க்சியம் பற்றி ஒரு கருத்தை தொடர்ந்து எழுதி வருகின்றனர். ‘மார்க்ஸ் ஐரோப்பிய நிலைமைகளில் எழுதிய கருத்துக்கள் எல்லாம் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தாது; அது மேலைநாட்டுத் தத்துவம்; கீழை நாடுகளுக்குப் பொருந்தாது’ என்ற கருத்துக்களை பல கோணங்களில் வாதிட்டு வருகின்றனர்.
மார்க்ஸ் ஆங்கிலேய தொழிற்சாலை உற்பத்தி முறைகளை ஆராய்ந்துதான் பல கண்டுபிடிப்புக்களை உருவாக்கினார் என்பது உண்மையே. ஆனால் பிரிட்டிஷ் நாட்டு தொழில் நிலைமைகளில் துவங்கி உலக முதலாளித்துவத்தின் வரலாற்று வளர்ச்சியையும், அது இயங்குகிற அடிப்படை விதிகளையும் உருவாக்கினார். குறிப்பான ஒரு நிகழ்விலிருந்து பொது விதிகளுக்கு வந்தடைந்த மார்க்சின் மேதைமையை மேலோட்டமான சிந்தனைக்கு ஆட்பட்ட அறிவுஜீவிகளால் உணர முடியாது.
ஒரு நாட்டில் சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை ஆய்வுசெய்து எடுக்க விரும்புபவர்கள், அந்தநாட்டின் மாவீரர்களையோ, அரசியல் தலைவர்களையோ அடிப்படையாகக் கொள்ளக் கூடாது, மேலும் அங்குள்ள மதங்களையோ, மதத்தலைவர்களையோ அடிப்படையாகக் கொள்ளக்கூடாது மாறாக அந்த நாட்டில் வாழும் மக்களையேதான் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் நமக்கு வழிகாட்டுகிறது. ஏனென்றால் இயற்கை மாற்றங்கள் சூழ்நிலை சாதகமாக இருந்தால் தானாகவே மாற்றம் ஏற்பட்டுவிடும், அதுபோல சமூக மாற்றங்கள் நடக்காது ,மாறாக சமூகத்தை மக்களின் முயற்சி மற்றும் செயல்பாடுகளின் மூலம்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதாவது சமூக மாற்றத்தில் மனிதர்களுக்கு முக்கியமான பங்கிருக்கிறது. ஆகவேதான் சமூகமாற்றத்திற்கான கொள்கை திட்டம் வகுப்பதற்கு மனிதர்களின் வாழ்நிலை உணர்வுநிலை, அவர்களின் தயார்நிலை போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்று மார்க்சியம் வழிகாட்டுகிறது.
மார்க்சியம் வரலாற்று வழியில் முதலாளியத்துக்குச் சவக்குழி தோண்டி, வர்க்கங்களும் மனிதனை மனிதன் சுரண்டும் நிலையும் இல்லாத கம்யூனிச சமுதாயத்தைக் கட்டுவது தான் சர்வதேசத் தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையென வரையறுத்துக் கூறிய மார்க்சும், ஏங்கெல்சும் பாட்டாளி வர்க்கம் தன்னை விடுதலை செய்வதற்குகந்த மிகச் சிறந்த வழியையும் சுட்டிக் காட்டினர். அதாவது, தொழிலாளி வர்க்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை ஏற்று, விவசாய வர்க்கத்துடன் நெருக்கமான கூட்டேற்படுத்திக் கொண்டு, முதலாளி வர்க்கத்தின் அரசியந்திரத்தை உடைத்து நொறுக்கப் புரட்சிகர வன்முறையைப் பயன்படுத்த வேண்டும்; பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவ வேண்டும்; பாட்டாளிய ஆட்சியைப் பாதுகாக்கவும் கம்யூனிச நெறிகளின் அடிப்படையில் சமுதாயத்தை மாற்றியமைக்கவும் இவ்வரசை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும்.
அதே போன்று, லெனின், ரஷிய நாட்டின் சமூகப் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து பல முடிவுகளுக்கு வந்தது உண்மைதான்.
மார்க்சியம்
கற்போம்
ஆசான்
லெனினிடம் கற்போம்
உழைக்கும்
மக்களின் விடுதலைக்கான வழியை
ஆசான்களின்
வழி நின்று கற்போம் சாதிப்போம்
தொடரும்....
No comments:
Post a Comment