மார்க்சிய கண்ணோட்டமும் நம்மவர்கள் நிலையும்

நேற்று ஒரு தோழர் என்னிடம் சொன்னார் உங்கள் கண்ணோட்டம் வேற என் கண்ணோட்டம் வேற நாம் எப்படி ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்றார்? மார்க்சியவாதிகளுக்கு வெவ்வேறு கண்ணோட்டமா? மார்க்சியம் ஒன்றுதானே பின்னர் எப்படி இவர் சொல்கிறார்?

நம் நாட்டில் மார்க்சியத்தைவிட மார்க்சியம் அல்லாதவைதான் மார்க்சியம் பேசுவோர் இடையே நிலவுகிறது. ஏனெனில் மார்க்சிய தத்துவ கண்ணோட்டத்தை அந்த கட்சிகள் குழுக்கள் தன் அமைபிற்கு போதிக்கவில்லை போதிதத்தவையும் தவறான முதலாளித்துவ அறிஞர்களின் கருத்துகளே அவை மார்க்சியம் அல்ல என்பதனை அவர்களுக்கு யார் புரிய வைப்பர்? 

உண்மையில் அவரின் போதாமை என்பது அடிப்படையில் மார்க்சிய தத்துவ கண்ணோட்டம் இன்மையே. அவர் மார்க்சிய நூல்களை படித்துள்ளார் ஆனால் அதன் உண்மையான செயல்பரப்பை புரிந்துக் கொள்ள அவரால் முடியவில்லை ஏனெனில் அதில் சொல்ல பட்டவையின் சாரம் என்னவென்றே புரிந்துக் கொள்ளாமல் வாசித்துவிட்டு நானும் மார்க்சிய நூல்களை படுத்துள்ளேன் இந்த நூலில் இது உள்ளது அந்த நூலில் அதுவுள்ளது என்பரே தவிர மார்க்சிய போதனைதான் ஆம் கண்ணோட்டம்தான் என்ன அதனை இங்கே எப்படி சாதிக்க போகிறோம் என்பதற்கு மொட்டையாக ஏதாவது சாக்கு போக்கு சொல்லி உங்களுக்கு மார்க்சியம் புரியவில்லை இத்தியாதி இத்தியாதி மேலும் ML குழுக்களே புரட்சி பற்றிய நிலைபாடுகளை மாற்றிக் கொண்டுள்ளது நீங்கள் எதார்தத்தை புரிந்துக் கொள்ளவில்லை என்றுவேறு... 

மார்க்சியமும் சமூக அணுகுமுறையும் 

தோழர் ஒருவரின் எழுத்தின் சாரம் இவை:- இறைக் கோட்பாட்டாளர்களுக்கு பேய் என்பது நம்பத்தகுந்ததாக இருக்கும். தானாக ஒரு பொருளும் இல்லை அது கடவுளால் படைக்கப்பட்டது. முற்றுண்மை (absolute truth) பகுத்தறிவிற்கு எதிரான தர்க்கத்தையும் உருவாக்கிக் கொண்டது

நம் சமூகத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தினைலும் மத சடங்குகளும் மதநெறிமுறைகளும் ஆளுமை செலுத்துகின்றன. இதனுள் சிறந்த சிந்தனையாளர்கள், உயர்ந்த கல்வியாளர்கள் என்போரும் இதற்கு விதிவிலக்காக இல்லை. சமூகத்திற்கான வழிகாட்டல் என்பது கடவுளையும், மறுபிறப்பையும் சுற்றியதாக இருக்கின்றது

நாம் கடவுளின் அடிமைகள் கேள்வி கேட்கக் கூடாது என்று கட்டமைக்கப்படுகின்றது. மதம் போதிக்கும் அழுகிய, காலாவதியாகிய கருத்துகளை மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றார்கள். சிலருக்கு நல்ல பணம் கொழிக்கும் தொழிலாகவும் உள்ளது அரசுக்கு கேள்விகேட்கா அடிமைகளை பராமரிப்பதில் பிரச்சினை இல்லை.

இன்றைய காலத்தில் மதங்கள் உடைந்து போகாமல் இருக்க மக்களின் துன்பங்கள் துயரங்கள் தீர்ந்த பாடில்லை. இந்த அரசானது அவர்களை சுரண்டிக் கொண்டிருப்பதையும் ஒடுக்கி அடக்கி கொண்டிருப்பதையும் மத சமூக இருப்பில் மூடுமறைக்கிறது.

மார்க்சியமும் அதனை புரிந்துக் கொள்ளாத மாறாநிலைவாதிகளையும் புரிந்துக் கொள்ள முயலுவோம்

புராண இதிகாச நூல்கள் எடுத்துக்கூறுவது என்ன? அதாவது சில பொருட்களின் தோற்றம் முடிவு பற்றி நம்மால் அறிய இயலாது என்பது மத சித்தாந்த  மட்டுமன்று சிறந்த தமிழ் அறிஞர் எழுத்துகளிலும் பார்க்க முடிகிறது அதனை வேறொரு நேரத்தில் பார்ப்போம் ஆனால் தேவைகளை சுருக்கி பேசுவோம்.

அடிமுடி தேடுவதும் ஒரு பொருளில் காரண காரியத்தை அறிவு தொடர்புடையது. ஆகவே அடிமுடி(மத அடிப்படைகளை) தேடுவது என்பது காரண காரியத்தை அறியக் கூடாது என்பதாகும் மேலெழுந்தவாரியாக மத சித்தாந்திகளின் எழுத்தும் பணியுமாக உள்ளது. அந்த புராணங்களை கட்டுக்கதைகள் என்று பகுத்தறிவு பேரால் எள்ளி நகையாடும் பலர் புராணங்களில் காணும்  நம்பிக்கைக்கு பலியாக இருப்பதை நாம் காணலாம்(அந்த கடவுள்களை முன்நிறுத்தி விமர்சிக்கும் பொழுது அந்த பொய்மைகளுக்கு பகுத்தறிவாதிகளும் உயிர் கொடுக்கின்றனர்).

இது தனிப்பட்ட சிலருக்கு குறைபாடு என்று கூறுவதில் அர்த்தமில்லை அத்தகையோரை குறைகூறிப் பயனில்லை. நமது சமுதாயத்தில் ஆழப் பதிந்துள்ள ஒரு தத்துவத்தின் உலக பார்வையின் வெளிப்பாடு இது எனக் கொள்வது பொருத்தமாகும் ...

அத்தத்துவத்தின்  அடியையும் முடியையும் ஆராய்வதற்கு வழிபிறக்கும். ஒரு தனிப்பட்ட நபரின் திரிப்புணர்ச்சி அல்லது மருள்(delusion)  இரங்கத்தக்க தாயினும்  அதிகம் அஞ்ச வேண்டியதல்ல; ஆனால் ஒரு கூட்டத்தவரது அல்லது சமூகத்தினரது பொய்மை(Illusion) அச்சமூகத்தவருக்கு மாத்திரமல்லாது பிறருக்கும் பேராபத்து விளைவிக்கக் கூடியதாகும். எடுத்துக்காட்டாக ஜெர்மனில் நாஜீ சித்தாந்தம் இன்றைய ஆர்எஸ்எஸ் தன்னுடைய சித்தாந்தம் போல . தன் பொய்மையால் ஒட்டுமொத்த சமூகத்தையும் தன் நச்சு சிந்தனையால் சீரழித்துக் கொண்டுள்ளது இதன் ஆழத்தை புரிந்துக் கொள்ள வேண்டும்.

இத்தகைய அமைப்பில் உள்ள பேராபத்து யாதெனில் ஒத்துப்போதல் என்ற கொள்கையின் அடிப்படையில் எதிரான அல்லது மாறுபட்ட சிந்தனைகள் அடக்கி ஒடுக்கப்படுவதாகும். அமெரிக்காவில் பொதுவுடமைக் கட்சி சட்டவிரோதமாக்கப்பட்டது. இவ்வடிப்படையிலேதான். சில நம்பிக்கைகள் இடைவிடாத பிரசாரத்தின் மூலம் பொதுத்தன்மை ஆக்கப்படுகின்றன.  பகுத்தறிவின் அடிப்படையில் சமய சடங்குகளும் புராணச் செய்திகளும் மறுக்கப்படும் அதேவேளையில் அதனை வேறோருவகையில் மீளாக்கம் நடத்தப்படுகின்றன. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை . கருத்துக்களும் நம்பிக்கைகளும் ஒவ்வொரு கால சமூகத்தின் அடிப்படையில் பிறந்து நிலவுகின்றன. அவ்வச் சமுதாயத்துக்குப் பக்க பலமானவையும். அவற்றை மாற்றுவது இலகுவான காரியமல்ல. அடிப்படையான சமுதாய மாற்றம் ஏற்படும் பொழுது தான் அவற்றை மாற்றி அமைக்க கூடிய சூழ்நிலை உருவாகிறது. அங்கும் கூட அரசியல் பொருளாதார நிறுவனங்கள் மாற்றப்படும் வேகத்தை விட குறைந்த வேகத்தில் சில எண்ணங்கள் மறைகின்றன. எனவே தாம் பிறந்த சமுதாயத்தின் பௌதிக நிலைமை மாறிய பின்னரும் நீடித்து நிலைக்கும் ஆற்றல் கருத்துக்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் உண்டு. அதனால் தவறான கருத்துகளை சாடும் அதேவேளையில் கருத்துக்களை கருத்துக்களினால் மாத்திரம் வெல்ல முடியாது என்பதை மனங்கொள்ள வேண்டியதே. 

 ஆக நமது சமூகத்தைப் புரிந்து கொள்வதற்காக நமது கருத்துக்களும் எண்ணங்களும் பெறப்பட்ட புற சமூக நிலையிலிருந்து காணல் வேண்டும் .

நமது சமுதாயத்தில் பலரால் நம்பியும் நம்பாமலும் ஏற்றுக்கொள்ளப்படும் எண்ணம் ஒன்றின் குறியீடாகவே பல கருத்துகள் உள்ளது. நமது கலை இலக்கிய உலகில் காணும் பல குறைபாடுகளும் தயக்கம் மயக்கங்களும் இந்த எண்ணத்தினின்றும் தோன்றுவனவே அவ்வெண்ணத்தின் அடிப்படையும் அதன் வெளிப்பாடுகளை புரிந்துக் கொள்ள மார்க்சியமே வழிக்காட்டி.

விஞ்ஞான சிந்தனை முறையை ஜெர்மன் சித்தாந்தம் (லுத்விக்ப்ஃபாயர்க்) டூரிங்குக்கு மறுப்பு, மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள், முரண்பாடு பற்றி, நடைமுறைபற்றி போன்றவற்றில் மூலவர்கள் விண்ணுலகத்தில் இருந்து பெற்ற தத்துவங்கள் உருவாகியதாக கோட்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். “பொருளுற்பத்திக்கான நடவடிக்கையே மிகவும் அடிப்படையான நடைமுறைச் செயல், அதுதான் அவர்களுடைய பிறநடவடிக்கைகள் அனைத்தையும் தீர்மானிக்கும் செயல் என மூலவர்கள் நிரூபித்தனர். இந்தப் பகுதியில் புலனறிவின் ஊடாக பெறப்படும் அறிவு என்பது புறநிலையான பொருட்களின் உள்முரண்பாடுகளை விரிவாகவும், படிப்படியாகவும் அறிந்து கொள்வது, அதன் விதிகளையும், அதன் நிகழ்ச்சிப் போக்கிற்கும் மற்றொன்றிற்கும் இடையிலான உறவுகளை அறிந்து கொள்வதுமாகும்

கருத்துமுதல்வாத, பொருள்முதல்வாத சிந்தனையோட்டத்தைக் கொண்ட பதில்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த வித்தியாசங்களை இலகுவில் தீர்ப்பதோ அல்லது ஒன்றை ஒன்று மோதுவதோ இலகுவானது அல்ல. ஆனால் முதலில் குறிப்பிடப்படும் சிந்தனையானது பரந்த ஆதிக்கத்தில் இருக்கின்றது. அகநிலை சார்ந்த சிந்தனை ஆதிக்கத்தில் இருப்பதனால் பல பிரச்சனைகளை இலகுவாகத் தீர்க்க முடிவதில்லை. மாறாக பிரச்சனையானது வளர்ந்து பேரழிவிற்கே கொண்டு சென்று விடுகின்றது. இதுவே சமூகத்தின் அனைத்து அலகுகளிலும் காணப்படும் முக்கிய பிரச்சனையாகும். விஞ்ஞான ரீதியாக எல்லாவற்றையும் அணுகி ஆராய்கின்ற போது பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும். அவற்றை விடுத்து  அனுபவவாதம், போட்டி, பொறாமை, வஞ்சகம், சூது என்ற சமூக அடக்கத்திலும், தாம், தமது உறவு அல்லது சாதி என்ற வகுப்புவாதச் சகதிக்குள் எல்லா பிரச்சனைகளையும் அடக்கிவிடுவதனால் எந்தப் பிரச்சினைகளும் மறைந்து விடுவதில்லை. ஏனெனில் இவை விஞ்ஞானமற்ற போக்காகும். இந்தப் போக்கைப் பரந்துபட்ட மக்களிடத்தில் எதிர்பார்ப்பது சிரமமானதே.

சமூக வளர்ச்சிப் போக்கில் முன்னைய சிந்தனையில் இருந்து பெற்ற அறிவு முதிர்ச்சியை நமக்கு கற்றுத் தருகின்றது. மார்க்சியம் மனிதர் தன்னிலையை அறிந்து கொள்ளவும், இந்தச் சமூகத்தை எவ்வாறு மாற்ற முடியும் என்பதையும் கற்பிக்கின்றது. மற்றைய தத்துவங்கள் மனிதர்களின் மேல் ஏறி சவாரி செய்ய தினம் தினம் முயற்சிக்கின்றன. இதுவே மற்றைய தத்துவங்களுக்கும் மார்க்சியத்திற்கும் உள்ள வித்தியாசமாகும். நாம் ஒரு பிரச்சனைக்கான ஒரு தீர்வை முன்வைக்கும் போது அப்பிரச்சனை எங்கிருந்து தொடங்குகின்றது, அதன் தோற்றத்தின் மூலகாரணங்கள் என்ன என்பதை ஆய்வு செய்து அறிந்து, அப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கும் போது தான் அப்பிரச்சினையை சரியாகக் கையாள முடியும். அதனை விடுத்து மேலெழுந்த வாரியாக சமூகத்தின் மேற்கட்டுமானத்தில் ஏற்படுகின்ற நிகழ்வுகளைக் கொண்டு ஆத்திர, அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வருவது என்பது விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையாகாது. அந்த அணுகுமுறை வெறும் உணர்வுக்கு அடிமைப்பட்ட, கதம்பமான நிலையினைத் தான் தோற்றுவிக்கும்.

மனித வாழ்க்கையில் காணப்படுகின்ற பிரச்சனையைப் பல கோணங்களில் பார்க்க முடியும். எனினும் இரண்டு பெரும் பிரிவாகப் பிரித்துப் பார்க்க முடியும். அன்றாட வாழ்வியலில் காணப்படும் சிந்தனையைக் கொண்டு அதாவது நமது சமூக அமைப்பில் காணப்படுகின்ற தன்மைகளைக் கொண்டு அவற்றிற்கு விளக்கம் கொடுக்க முடியும். விஞ்ஞான ரீதியாக சிந்திக்கின்ற வழிமுறைகள் அறிவுப் பார்வை என்பதாகும். இந்தப் பார்வை என்பது அறிவு வளர்ச்சியின் மையப் புள்ளியாகும். புறநிலை சார்ந்த சிந்தனைப் போக்கில் அமைந்த சமூகப் பார்வையே இங்கே கூறப்படுகின்றது.

பல ஆய்வு முறைகள் இருக்கின்றன, அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சித்தாந்தத்திற்குச் சேவகம் செய்கின்றன. அதேபோல் மார்க்சியத்திற்கு ஆய்வுமுறை என்பது இருக்கின்றது. வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின்படி மெய்யான வாழ்க்கையின் உற்பத்தியும் புனருற்பத்தியுமே நிர்ணய சக்தியாகும். இவற்றின் மூலமாக சமூகப் பிரச்சினைகளை விளங்கிக்கொள்வதற்கும் சரியான பாதைக்கு வரவும் இவைகள் துணை செய்கின்றன. சமூகத்தின் பிரச்சனைகளை பொருளாதார உற்பத்தி முறைகளில் இருந்து புரிந்து கொள்ளும்படி வலியுறுத்துகின்றது. ஒவ்வொரு தனிமனிதர்களையும் சமூக அமைப்பிலிருந்து தான் பார்க்கக் கோருகின்றது. ஒரு குறிப்பிட்ட முடிவிலிருந்து அதனை பொதுமைப்படுத்துதலும் முடியாததாகும்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது ஒரு பழமொழியாகும். சமூகவியலுக்கு எவ்வகையிலும் பொருந்தாது. இது ஒரு குறிப்பிட்ட ஒரு தேற்றத்தில் இருந்து ஒரு கணக்கை தீர்ப்பதைப் போன்றதாகும். ஆனால் ஒரு தேற்றத்திலிருந்து ஒரு விடைபெற முயல்வது சமூக விஞ்ஞானத்திற்கு பொருந்தாது. புறத்திலிருந்து அகத்தை நோக்கிச் செல்லல் வேண்டுமே தவிர அகத்திலிருந்து புறத்தை நோக்கியல்ல என மார்க்சியம் கூறுகின்றது. சமூகம் எவ்வாறு உள்ளதோ, அதற்கு ஏற்றவாறாகவே தனிமனிதர்களும் உருவாக்கப்படுகின்றனர். மார்க்சிய ஆய்வாளர்களின் அணுகுமுறையானது புறவயத்தை அடிப்படையாகக் கொண்டே ஆய்வினை மேற்கொள்வதாகும், அதாவது பொதுமையான பொருளில் இருந்து ஆகும்.

நாம் மார்க்சியவாதிகள். நாம் ஒரு பிரச்சனைகளை அணுகும் போது, யதார்த்த உண்மையிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமேயன்றி, வெறும் வரைவிலக்கணங்களிலிருந்து அல்ல என்னும், இந்த உண்மைகளை ஆராய்வதன் மூலம் நமது வழிகாட்டும் கோட்பாடுகள், கொள்கைகள், வழிமுறைகள் ஆகியவற்றை வகுக்கவேண்டும் என்றும்  மார்க்சியம் போதிக்கின்றது.’’ (பக்கம் 301 மாவோ மேற்கோள்கள்)

இந்தச் சமூகத்தை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்பது பற்றிய போதனையை தனித்தே இயங்கியல் - வரலாற்று பொருள்முதல்வாதம் என்று கூறிவிட்டுப் போவதினால் நாம் எல்லாற்றையும் விளங்கி விட்டோம் என்றோ விளக்கம் கொடுத்து விட்டோம் என்றில்லை. அதனை முழுமையாக விளங்கிக் கொள்ள பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஆனால் அம்பேத்கர் பெரியார் ஆகியோரை பின்பற்றுவோரும்  அடையாள அரசியல் பேசுபவர்களும் மார்க்சியத்தில் போதாமை உள்ளதாக ஒப்பித்துக் கொண்டே இருக்கின்றார்கள். இதில் குறிப்பாக மதம், வரலாற்றில் பலாத்காரத்தின் பாத்திரம் போன்றவற்றை மார்க்சியர்கள் உள்வாங்கிய அளவிற்கு மற்றவர்கள் உள்வாங்கிவிடவில்லை. முரண்பாடுகள் அமைதியான வழியிலோ அல்லது பலாத்காரத்தின் வழியிலோ தீர்க்கப்படலாம். ஏனெனில் ஆளும் வர்க்கம் எதனையும் இயல்பான மாற்றத்திற்கு கொண்டு வந்து விடாது. இந்த நிலையில் சமூகக் கட்டத்திற்காக போராடுகின்றபோது மக்களையும், கட்சியையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்ற அப்போது, ஆயுதம் ஏந்துவது என்பது தவிர்க்கமுடியாததாக ஆகிவிடுகின்றது. எதனையும் யாரும் விரும்பி தேர்வு செய்வதில்லை. அது அந்த வரலாற்றுப் போக்கில் தீர்மானிக்கப்படுபவை ஆகும். சமூக பொருளாதார அடிப்படையை விளக்கும் மார்க்சியம் சமூக பொருளாதாரப் பகுப்பாய்வு முறைமையையும் வளர்த்து வந்துள்ளது. மார்க்சிய அணுகுமுறை என்பதை  தோழர் மாவோ “முரண்பாடு பற்றி”  என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வளர்த்துவிட்டுச் சென்றுள்ளார்சமூகப் புரட்சி பற்றி மார்க்சின் மேற்கோளில் மார்க்ஸ் எதனை எமக்கு கற்பிக்கின்றார் என்பதை  இங்கு சிறு விளக்கமாகத் தரப்படுகின்றது.

மார்க்சிய சித்தாந்தத்தை பற்றி “இப்போ புகழ்பெற்ற அடித்தளத்திற்கும் அதை விடக்குறையாத புகழ்பெற்ற மேல்கட்டுக்கோப்பிற்கும் இடையிலான உறவைக்குறித்து மார்க்சும் ஏங்கெஸ்சும் கொண்டிருந்த கருத்தைச் சுருக்கமாக வெளிப்படுத்த நாம் விரும்பினால் அது பின்வரும் விதத்திலிருக்கும்.

உற்பத்தி சக்திகளின் நிலை அது நிர்ணயிக்கும் பொருளாதார உறவுகள் குறிப்பிட்ட பொருளாதார “அடித்தளத்தில்” வளர்ச்சியுற்றிருக்கும் சமூக-அரசியல் அமைப்பு ஓரளவிற்கு நேரடியாகப் பொருளாதாரத்தாலும் ஓரளவிற்கு அதன் அடிப்படையில் எழுந்திருக்கும் சமூக-அரசியல் முறையாலும் நிர்ணயிக்கப்படும் சமூக மனிதனின் மனப்பாங்கு, அந்த மனப்பாங்கின் தன்மைகளைப் பிரதிபலிக்கும் பலவிதமான சித்தாந்தங்கள்.”

(பிளெஹனவ், பக். 109 மார்க்சியத்தின் அடிப்படைப் பிரச்சினைகள்)

புரட்சியை தீர்மானிப்பது அல்லது தூண்டுவது புறநிலையா அல்லது அகநிலையா என்று பார்ப்போம். சமூகத்தில் ஏற்படும் போராட்டங்கள் இரத்தம் சிந்தும், சிந்தாத போராட்டம் என்றிருக்கின்றது. அனைத்தையும் தீவிரவாதம் என்று கூறிவிட்டுச் சென்றுவிட முடியாது. ஒடுக்கப்பட்டவர்கள் தற்காப்பு யுத்தம் நடத்துகின்ற போது அவர்களின் பின்னால் நிற்க வேண்டும் என்பது அடிப்படை நிலைப்பாடு. இதுதான் புறநிலையில் இருந்து அணுகுவதாகும்.

குயில் முட்டையை காக்கை கூட்டில் இடும். குயில் தானாக அடைகாப்பதில்லை. குயில் சிறியதாக இருக்கின்ற போதே தன்னுடைய போட்டியாளர் என எண்ணி தன் போட்டியாளரை கூட்டில் இருந்து அகற்றும். இது மரபணு ரீதியாக கடத்தப்படுவதாகும். அதே போல மனிதர்களின் நிறங்கள் வெவ்வேறாக இருக்கின்றது. ஆபிரிக்காவில் வெளியேறிய மனிதர்கள் மூன்று வகை இனங்களாக (Race) வாழ்கின்றார்கள். பாவத்தின் காரணமாக கறுப்பாக பிறந்தவர்கள் என்றும் பாவத்தின் சம்பளம் தான் என்று மதங்கள் போதிக்கின்றன. நல்லது கெட்டது, பாவம், புண்ணியம் என்பது எல்லாம் அகநிலை, மதச் சிந்தனை வடிவம் என்பதை அரசியல் பொருளாதாரம் விடைகொடுக்கின்றது. ஏழையாக பிறப்பது தலைவிதி அல்ல. அதனை புறநிலையாக சிந்திக்கின்ற போதே அதற்கான பதிலை பெற முடியும். சுரண்டல் வடிவமும் தற்செயலானது அல்ல. தொழிலாளிகள் மென்மேலும் வறிய ஏழைகளாகவும், முதலாளிகள் தமது மூலதனத்தை மென்மேலும் பெருக்கிக் கொள்கின்றார்கள். இதற்கான விடைகளை மார்க்ஸ் கொடுத்துள்ளார்.

முதலாளியினது உபரி-மதிப்பு எங்கிருந்து வருகிறது” என்பதையும், “நிலவுடைமையாளரது உபரி-மதிப்பு எங்கிருந்து வருகிறது” என்பதையும் கூட தெரிந்து வைத்திருந்தனர். ஆனால், அவர்கள் “உபரி-மதிப்பை இலாபமாகவும் வாடகையாகவும் அது ஏற்கும் தனிச்சிறப்பான வடிவங்களிலிருந்து வேறுபடுத்தவில்லை; உபரி-மதிப்பு என்பதே தனியொரு கருத்தினமாக இருப்பதைப் பார்க்கவில்லை” (மூலதனம் பாகம் 2, பக்கம்14-15)

மாறாக, மார்க்சின் கோட்பாட்டில் உபரி-மதிப்பு என்பது, உற்பத்திச் சாதன உடமையார்கள் சமதையின்றி தமதாக்கிக் கொள்ளும் மதிப்புத் தொகையின் பொது வடிவத்தைக் குறிக்கிறது. இந்தப் பொது வடிவம் உருமாறி, தனிச்சிறப்பான விதிகளின்படி இலாபமாகவும் நில-வாடகையாகவும் தனித்தனியே பிரிகிறது. இந்த விதிகளை முதன்முதலில் கண்டு பிடித்தவர் மார்க்ஸ்”. (மூலதனம்  2, பக்கம் 15)

மார்க்சுக்கு முற்பட்ட தொல்சீர் பொருளாதார அறிஞர்கள் பிரதானமாய் ஆராய்ந்ததெல்லாம், உழைப்பின் உற்பத்திப்பொருள் தொழிலாளிக்கும் உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளருக்கும் இடையே எவ்விகிதத்தில் பிரித்துக் கொள்ளப்படுகிறது என்பதையே.” (மூ 2, 22)

கற்பனாவாத சோசலிஸ்டுகள் இந்தப் பாகப் பிரிவினை அநியாயம் என்று இந்த அநீதியை ஒழிப்பதற்கு கற்பனையான வழிகளைத் தேடினார்கள். அவர்கள் எல்லோருமே தமக்கு வந்து சேர்ந்த பொருளாதார கருத்தினங்களின் கைதிகளாகவே இருந்து வந்தார்கள்” (மூ 2, 22)

புறநிலை தீர்க்கரமானது அதன் தூண்டுதலால் உந்தப்பட்ட சமூகம் என்பது நடைமுறையில் இயங்க முற்படுகின்றது. இவற்றிற்கு அகநிலையில் முதலில் மாற்றம் கொள்ள வேண்டும் என்பது சாத்தியமற்றதாகும். அகநிலை (மேற்கட்டுமான) (அகவிருப்பு, மதம், சாதி, பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், பிரதேசவாதம், பேரினவாதம், சியோனிசம், இனவாதம் முதலியவை) சார்ந்தது. நிலமானியத்தின் எச்சங்களின் தொடர்ச்சியாகவும் அமைகின்றது. முதலாளித்துவ கட்டத்திலும் பேரினவாதச் சிந்தனை, மதத்தேசியவாதமும் எழும். தேசங்களின் எழுச்சி, அரச அதிகாரம் பற்றிய மார்க்சியப் போதனைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எந்த மாற்றங்களும் திடீரென்று மாறாது. இது புறநிலையோடு தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். அகநிலை முதன்மை என்றும், புறநிலையை மறுத்து நிற்பது அது அகநிலைக்கு முதன்மை கொடுப்பதை குறிக்கும். இது ஆன்மா பற்றிய தேடலுக்குமான சம்பந்தமாகும். அது மதவாதச் சக்திகள் கோருவது போன்றதாகும்.

மனிதர்களின் மேற்கட்டுமானத்தில் அமைந்த சிந்தனையை உடனடியாக வெற்றி கொள்ள முடியாது. மாற்றம் ஏற்படுவது புறநிலையின் நிபந்தனைக்கு உட்பட்டதாகும். அகநிலை மாற்றம் பல்வேறு தளங்களில் நடைபெறுகிறது. இதற்கு அடிப்படையாக பொருளாதாரப் போராட்டம், அரசியல் போராட்டம், அடிப்படையான கட்சி, தத்துவம், மக்கள் மயப்படுத்தல் என்பன ஒன்றிணைக்கப்பட வேண்டும். சாதியம் உற்பத்தியை தீர்மானிக்க முடியாத நிலைக்கு வந்தடைந்துள்ளது. சாதியம் அகநிலையில் தொடரும். மேற்கட்டுமானத்தில் மாற்றத்தினை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாது. இந்த அழுகிய சமூக அமைப்பில் மாற்றத்தைக் கோருவது நடைமுறைச் சாத்தியமில்லை. அழிக்க வேண்டிப்பதை அகற்றுவதற்கு பதில் காப்பதே சீர்திருத்தவாத நடைமுறையாகும்.

சிந்தனை முறையானது சமூக பொருளாதாரம் மாறுவதற்கு முன்னர் முழுமையாக மாற்றம் கொள்ள முடியாது. சாதியத்தை முன்னிறுத்தும் அகநிலைவாதம், தனிமனிதவாதம், தன்ணுணர்ச்சிவாதம், உதிரிக் கோட்பாடுகள் சமூகத்திற்கு எவ்வித முன்னேற்றம் வரப்போவதில்லை. இது ஜனநாயக மத்தியத்துவத்தை மறுத்து நிற்பது போன்றது பாதகமான போக்காகும். வரலாற்றில் அனார்க்கி (arnarchy- அராஜகவாதிகள்) குழுக்கள் இவ்வாறு ஒதுங்கியிருந்து சீரழிந்துள்ளது. இது ஐரோப்பாவெங்கும் பல நாடுகளில் நடைபெற்றுள்ளதுஇந்தச் சமூக வளர்ச்சியின் புறநிலை விதிகளை அறிந்து, அதனை ஆதாரமாகக் கொண்டு வரலாற்றின் திசைவழியைத் தெரிந்து, அதனடிப்படையில் தனது செயற்தந்திரத்தை அமைத்து கம்யூனிஸ்ட் இயக்கம் செயற்பட வரலாற்றியல் பொருள்முதல்வாதம் வழிகாட்டுகிறது.

மக்கள் எந்தச் செயற்பாட்டையும் உணர்வு பூர்வமாகவே தமது குறிக்கோளை அமைத்து, அதன்படியே செயற்படுத்துகின்றனர். இந்த உணர்வுபூர்வமான  செயற்பாட்டை தன்னிச்சையாக அவர்கள் அமைத்துக் கொள்வதில்லை. அரசியல் போராட்டத்தினை புறநிலை விதிகளின் தாக்கத்தின் விளைவாக உருவாக்கிக் கொள்கின்றனர். இவைகள் வர்க்கங்களின் நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது.

தனிமனிதர்கள் மாறினால் முழுமக்களும் மாறிவிடுவார்கள். மாற்றங்கள் என்பது தனிமனிதர்கள், குடும்பத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்கின்றார்கள். இந்த அகநிலை மாற்றம் என்பதை மதவாதிகள் கூறுவது போல் புரிந்து வைத்துள்ளார்கள். எதையும் கடவுளிடம் வேண்டினால் எல்லாம் சீராகிவிடும் என்பது போலாகும். பலர் உயர்ந்த சம்பளம் பெற்று உயர் அடுக்கில் வந்த பிறகும் அவர்களின் நிலையில் மாற்றம் இல்லையே ஏன்? பழைய உற்பத்தி முறை முழுமையாக மாற்றம் கொள்ளாத வரை முழுமையாக அகநிலை மாற்றமும் ஏற்படாது. சிந்தனையில் ஏற்படும் மாற்றம் பொருளாதார அமைப்புச் சார்ந்தது என்பதே.

இங்கு மக்களை அரசியல் மயப்படுத்தப்படுத்தலையும் சிந்தனை மாற்றத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பும் நிலையை அவதானிக்க முடிகின்றது. இவை இரண்டும் ஒன்றல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தச் சமூகத்தில் மாற்றம் என்று அனார்க்கிக் (anarchy) குழுக்களைப் போல் சமூகத்தில் இருந்து ஒதுங்கிவாழ்வது போல் இல்லை. இவர்களின் அகவுணர்வுத் திருப்தி என்பது மக்கள் மத்தியில் இருந்து செயற்பட்டு அவர்களை அணிதிரட்டும் முறைக்கும்  மாறுபாடுள்ளது.

புரட்சியின் முன்னரான காலத்தில் அகநிலை பற்றிய பிரச்சனைகளை முன்னெச்சரிக்கையாகப் புரிந்து வைத்திருப்பதும் பாடம் கற்பதும் அவசியமாகும். புரட்சியின் பின்னர் உருவாகிய புதிய உற்பத்தி உறவிற்கு ஏற்ப சமூக உறவுகளை கட்டியமைக்கும் நோக்குடன் வெளிப்பட்டதே கலாச்சாரப் புரட்சி. கலாச்சாரப் புரட்சியின் பின்னரான தாக்கத்தையும் தவறுகளையும் தோழர் நா. சண்முகதாசன் (கம்யூனிசப் போராளியின் நினைவுகள்) வில்லியம் கிண்டன் (சோசலிசத்தில் வர்க்கப் போராட்டம்- மாவோவின் பாத்திரம்) போன்ற வரலாற்று ஆவணங்களின் ஊடாக வெளிப்படுத்தி ஆய்வுமுடிவுகள் இயங்கியலுடன் இணைந்ததாக உள்ளது.

இவர்கள் உற்பத்தி சக்திக்கும், உற்பத்தி உறவிற்குமான உறவுகளில் இருந்து வெளிப்படுத்தும் ஆய்வுகள் சரியானதாக இருக்கின்றதுஉற்பத்தி சாதனங்களைக் கைப்பற்றுவதும், அதனை தொடர்ந்து பாதுகாப்பதற்கு உழைக்கும் மக்களுக்கான மாற்றுச் சிந்தனையை உருவாக்குவதற்கும் போராட்டம் அவசியமாகின்றது. உலகின் முதல் கம்யூன் புரட்சியின் அனுபவத்தின் பின்னர் பழைய நிறுவனங்களை தொடர்ந்து நிலைகொள்ள வைப்பது புரட்சிக்கு பாதகமானது என ஏங்கெல்ஸ், மார்க்ஸ் ஆகியோர் கருதினர். இதன் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இதனை அறிவுறுத்தியும் இருந்தனர். நாம் சிந்தனை மாற்றத்திற்கான போராட்டத்தினை ரசியப் புரட்சியின் பின்னரும், சீனப் புரட்சியின் பின்னர் நடந்த கலாச்சாரப் புரட்சி என்பன எம்முன்னால் உள்ள படிப்பினைகளாகும்.
இங்கு ஜனநாயக மத்தியத்துவம், அல்லது பாட்டாளிவர்க்கக் கலாச்சாரம் என்பதை நிலமானிய- முதலாளித்துவ எச்சத்தில் இருந்து வரையறுக்கப் போகின்றோமா அல்லது பயன்பாட்டுப் பெறுமதியை மையம் கொண்ட உறவல்லாது உழைப்பதும், உடலுழைப்பை வழங்குவதும், பரஸ்பர ஜனநாயக விழுமியங்களை மதிக்கின்ற புதிய பண்பாட்டை உருவாக்கப் போகின்றோமா? புதிய சமூக உறவு எவ்வகையான ஜனநாயக விழுமியங்களைக் கொண்டதாக இருக்க முடியும் என்பது ஆய்விற்கு உரியதாகும்.

எந்தவொரு சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை என மார்க்ஸ் கூறுகின்றார். இது மிகச் சரியானது. அது எப்படிப் படிப்படியான மாற்றம் அடைகிறதோ அதே போல் அகநிலையிலும் படிப்படியான மாற்றம் ஏற்படும், ஏற்படுத்த வேண்டும்.

பழைய உற்பத்தி முறை முழுமையாக மாற்றம் பெறாத வரையில் பழைய உற்பத்தி உறவு மறைவதில்லைஆனால் மறையும் என்று எண்ணிச் செயற்படுவது இயங்கியலாகாது. ஆனால் அகநிலையை முன்னிறுத்திய திறானாய்வு முமைமை என்று கொள்வது பிராங்பேட் மாக்சியர்கள் கூறுவது போலவே இருக்கும்.

அடித்தள மாற்றத்தை மட்டுமே வலியுறுத்திற்றோ அவ்வளவுக்கவ்வளவு மேற்கோப்பை வலியுறுத்தும் போக்கு இடதுசாரி சிந்தனையாளரிடையே தோன்றலாயிற்று. முப்பதுகளில் தோன்றி வளர்ந்த ஃபிராங்பர்ட் சிந்தனைப் பள்ளி இதற்கு ஒரு உதாரணமாகும்இவர்களெல்லாம் தங்களை மார்க்ஸீயவாதிகள் என்றே அழைத்துக் கொண்டார்கள். ஏற்கனவே கூறியபடி மேற்கோப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது என்று தொடங்கி அடித்தளமாற்றமே தேவையற்றது என்று கூறுமளவுக்கு இவர்கள் மார்க்ஸீய எதிரிகளாக மாறிப்போனார்ககள். (.14 வெ. கிருஸ்ணமூர்த்தி ஆய்வு வட்ட வெளியீடு 4)

சமூகப் புரட்சிப் பற்றி மார்க்ஸ் கூறுகிறார்:-

“...உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.

வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.

பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டுமானம் முழுவதையுமே சீக்கிரமாகவோ அல்லது சற்றுத் தாமதமாகவோ, மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கிற பொழுது உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம், அரசியல், மதம், கலைத் துறை அல்லது தத்துவஞானத் துறைகளில் - சுருக்கமாகச் சொல்வதென்றால் சித்தாந்தத் துறைகளில் - இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.

எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை, புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்கக் கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்தபட்சம் உருவாக்கிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகிறது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும்.” (முன்னுரை - அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு)

ஒவ்வொரு விடயங்களையும் புறநிலையில் இருந்து பகுப்பாய்வு செய்தல் வேண்டும். பொதுநிலையில் இருந்து குறிப்பிட்ட விடயங்களை நாம் ஆராய வேண்டுமானால் கட்டுமானங்களிடையே உள்ள உறவின் அடிப்படையில் இருந்து ஆராய்தல் வேண்டும். அகம் - புறம் என்ற விடயத்திலும் முரண்பாடு பற்றி மாவோ கூறுகின்ற அணுகுமுறை அவசியமானது. ஆய்வுகளும், முடிவுகளும் இந்த நிலையில் இருந்து மேற்கொள்வதற்கு பயன்படுகின்றது.

‘‘இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலாகவும் (மார்க்ஸ்) விரிவாக்கினார். மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் விஞ்ஞானச் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும் அரசியலையும் பற்றிய கருத்துகளில் குழப்பமும் தான்தோன்றித் தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவை போய், வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த முழுமையும் உள்ளடக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் மார்க்சினால் கொடுக்கப்பட்டது.” 

இன்றைய காலத்தில் மார்க்சியத்தினைப் புரிந்துகொள்வதே பெரும் போராட்டமாகவே இருக்கின்றது. பன்முகப் பார்வை என்று புதிய அணுகுமுறைக் கோட்பாடுகளை முன்வைப்பதையும் அதற்கான தெளிவுகளையும் சுயமாக வந்தடையும் வகையிலான அணுகுமுறையில் விளக்கப்பட்டுள்ளது. தனிமனிதர்கள் தத்தமது புரிதலின் அடிப்படையில் தன்முனைப்புக் கோட்பாடுகளை முன்வைக்கின்றனர். தனிமனிதர்களின் புரிதல்களை சமூகப் பொதுவுண்மையாகக் கொள்ள வேண்டியதில்லை. கூட்டுச் செயற்பாடும் முக்கியமானதாகும். கூட்டுப் படிப்பும் பன்முக வாசிப்பு முறையை வளர்த்துக் கொள்வதும் அவசியமானதாகும்.

மனித குல வரலாற்றின் அடிப்படையான வளர்ச்சிப் பாதையை கண்டவர் மார்க்ஸ். அறிவுக் கருவிக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்தார். அவர் சொன்னார் புறநிலை உலகின் விதிகளை விளங்கிக் கொண்டு அவற்றை பிறருக்கும் விளக்கி விவரிப்பதில் திறமை பெற்று இருப்பது பெருமைப்படத்தக்கதல்ல. அவ்விதிகள் பற்றிய அறிவை ஆயுதமாகக் கொண்டு ஊக்கத்துடன் உலகை மாற்றுவதற்கு அதனை பயன்படுத்துவது தான் மிக முக்கியமான சாதனை. அறிவியல் எனப்படும் விஞ்ஞானம்  பெருமளவுக்கு இவ்வடிப்படையிலேயே வளர்ந்து வந்துள்ளது.

நிலவுடைமையில் மகாபாரதம், இராமாயணம் போன்று யாவரும் அறிந்த இதிகாசக் கதைகள், கூத்து, கிராமிய இசை நாடக மரபில் நடித்துக் காட்டப்பட்டன. முதலாளித்துவத்தில் அவை தனிமனிதர் படிக்கத்தக்க நூல்களாக முதலாளித்துவம் அச்சிட்டு பரப்புகிறது. படிப்பவர் யாவரும் இராமன் என்ற தெய்வாம்சம் பொருந்திய மன்னனும் பாண்டவர்கள் என்ற கண்ணன் ஆதரவுபெற்ற அரசகுடும்பத்தவர்களும் அரக்கர்களையும் கொடியவர்களையும் எவ்வாறு எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றனர் என்ற கருத்தை நிலைநாட்டுகின்றன. இவற்றைப் படிப்போரும் பார்ப்போரும் மன்னர்களுக்காக இரக்கப் பட்டு மெய்மறந்து அவர்களது ஆட்சியை வாழ்த்துகின்றனர்.

இதிகாசக்களை வைத்துக் கொண்டு அன்றும் இன்றும் மனித உணர்வுகள் மாறாநிலை என்று பொது சமப்படுத்துவதன் மூலம் வர்க்க உணர்வு என்ற வரலாற்றுப் பொருள்முதல்வாத ஆய்வு முறையை மழுங்கச் செய்துவிடுகின்றனர். அன்றை ஒடுக்கிய மன்னனின் புகழ்பாடி இன்றைய ஒடுக்குவோர் ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்க சிறந்த கருவியாக இதனை பயன்படுத தவறுவதில்லை இதிலிருந்து வர்க்க அடிப்படையில் புரியவைக்க வேண்டிய கடமையில் உள்ளோர் அவசியம் செய்யவேண்டிய பணி இவை."பழமையைக் களைந்து புதியவை கொள்வோம்" என்று மாவோ பின்னர் கூறியது சோஷலிசக் கண்ணோட்டத்தை முன்வைத்து பழைமையைக்  களைவாகும். சோஷலிசக் கண்ணோட்டம் என்பது இயக்கவியல் பொருள்  முதல்வாத, வர்க்கப் போராட்டக் கண்ணோட்டமாகும். அதாவது சமுதாய அமைப்பு முரண்பாடுகளைக் கொண்டது; அவ்வமைப்பு தேங்கிகிட்பதல்ல; சமுதாயம் இயங்கிக் கொண்டிருப்பது; வர்க்க உணர்வின் எழுச்சியும்  போராட்டமும் தவிர்க்க முடியாதவை என்ற கோட்பாடுகளைக் கொண்டதாகும்.

ஆகவே, இக்கோட்பாட்டைக் கடைப்பிடிப்போர் பண்டைய கலை, இலக்கியங்கள் கண்மூடித் தனமாக ஆதிக்கம் பெறுவதை எதிர்க்கவே செய்வர்.

 வர்க்க உணர்வையும் போராட்டத்தையும் மறுத்து உணர்வுகள் நிரந்தரமானவை என்று நிலைநாட்ட முயல்வதை கண்டிக்கவே செய்வர் கலை, இலக்கியம் மாறும் சமுதாய இயக்கத்திற்கு உந்து சக்தியாக விளங்க வேண்டும். அவ்வவ்வேளைய கலைத் தேவையை ஒட்டி வர்க்க உணர்வையும் வர்க்கப் போராட்டத்தையும் பலப்படுத்துவதாக அமைய வேண்டும். எல்லோருக்குமான கலை, இலக்கியம் என்று எதுவும் இருக்க முடியாது. அடுத்த ஆண்டுத் தேவைகள் இன்றைய தேவைகளுக்கு மாறுபட்டவையாகவே இருக்கும். அத் தேவைகளைப் பூரணப்படுத்துபவையாகவே கலை, இலக்கியம் அமைதல் வேண்டும்.

சோஷலிச சமுதாயத்தில் கலைஇலக்கியம் தனிமனித படைப்பை மீறி கூட்டுப்படைப்பாக மாறுகிறதுசமுதாய இயங்கியலே முன் வைத்து புதியபுதிய             கலைஇலக்கியங்கள் அவ்வக்கலைத் தேவையை யொட்டி படைக்கப்படுகின்றனஅல்லது முன்னைய கலைஇலக்கியங்களில் உடனுடன் மாற்றங்கள் செய்யப்படுகின்றனஎல்லோருக்குமான கலைஇலக்கியம் என்று கூறுவது நிலவுடைமைமுதலாளித்துவக் கோட்பாடாகும்மார்க்ஸின் இயக்கவியல் பொருள்முதல்வாத சித்தாத்தத்தை இக்கோட்பாடு முற்றாக நிராகரிக்கிறதுசமுதாயத்தை குட்டையாக தேக்கிவைக்க விரும்புவோரது சித்தாந்தமே இதுவாகும்புராண இதிகாசங்கள்வியாசர்கம்பன்இளங்கோபாரதி ஆகியோரில் இன்றும்   மேலெழுந்த வாரியாகஅடிப்படை அமைப்பை மறந்து ஆராய்ந்து எழுதுவோர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்தே பெருகி வருகின்றனர்இவர்கள் வர்க்கப் போட்டங்கனயும் மனிதனையும் மறந்து பாத்திரங்களின் குணாம்சங்களை ஆராய்ந்துகலைஉருவ நயங்களைக் கூறிநம்மை ஏமாற்றி நமது சிந்தனகளை திசை திருப்ப முயல்கின்றனர்இவர்கள் நிலவுடைமைமுதலாளித்தவ அமைப்புகளின் தரகர்கள்இவர்கள் பற்றி ஒடுக்கப்பட்டமக்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டுல் பாட்டாளிகளின் போராட்ட வளர்ச்சியைத் தேக்கும் எதிர்ப்புரட்சிவாதிகளே இவர்களாவர்.

தேவைப்பட்டால் பின்னர் பேசுவோம்...

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்