புரட்சிகர தலைவர் லெனின் -2

 ஆசான் லெனின் புரட்சிக்கான வழிகாட்டி

மார்க்சியம் வரலாற்று வழியில் முதலாளியத்துக்குச் சவக்குழி தோண்டி, வர்க்கங்களும் மனிதனை மனிதன் சுரண்டும் நிலையும் இல்லாத கம்யூனிச சமுதாயத்தைக் கட்டுவது தான் சர்வதேசத் தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையென வரையறுத்துக் கூறிய மார்க்சும், ஏங்கெல்சும் பாட்டாளி வர்க்கம் தன்னை விடுதலை செய்வதற்குகந்த மிகச் சிறந்த வழியையும் சுட்டிக் காட்டினர். அதாவது, தொழிலாளி வர்க்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை ஏற்று, விவசாய வர்க்கத்துடன் நெருக்கமான கூட்டேற்படுத்திக் கொண்டு, முதலாளி வர்க்கத்தின் அரசியந்திரத்தை உடைத்து நொறுக்கப் புரட்சிகர வன்முறையைப் பயன்படுத்த வேண்டும்; பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவ வேண்டும்; பாட்டாளிய ஆட்சியைப் பாதுகாக்கவும் கம்யூனிச நெறிகளின் அடிப்படையில் சமுதாயத்தை மாற்றியமைக்கவும் இவ்வரசை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும்.

தே போன்று, லெனின், ரஷிய நாட்டின் சமூகப் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து பல முடிவுகளுக்கு வந்தது உண்மைதான்.

ஆனால் உலகளாவிய சோஷலிச மாற்றம் நோக்கிய, புரட்சிக்கு வழிகாட்டுகிற புரட்சியின் பொதுக் கோட்பாடுகளை கண்டறிந்தவர் லெனின். லெனினியத்தின் மகத்துவம் இது. இதனையும், ஆழ்ந்த வாசிப்பு இல்லாத சாதாரண ‘அறிவுஜீவிகள்’ உணர வாய்ப்பில்லை.

லெனின் எப்போதுமே பிரச்சனைகளை இந்த சகாப்தத்தின் பிரச்னைகள் என்ற முழுமைத் தன்மையுடன் பார்த்தார்”என்று எழுதுகிறார்.

இதில் முக்கிய சில அம்சங்கள் அடங்கியிருக் கின்றன. முதலாளித்துவத்தின் இறுதிக் கட்டமாக தற்போதைய காலம் விளங்குகிறது.இது, பாட்டளி வர்க்கத்திற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, முதலாளித்துவ வர்க்கத்திற்கும், பாட்டாளி வர்க்கத்திற்கான இறுதிப் போராட்டத்தை நடத்திட எண்ணற்ற வாய்ப்புக்களை தவிர்க்க இயலாதவாறு இன்றைய நிலை நமக்கு ஏற்படுத்தி தருகிறது. இந்த இறுதிப் போராட்டமே, மனித விடுதலைக்கு இட்டுச்செல்லும். இதுவே லெனினிய சிந்தனைகளின் அடிப்படை.

வரலாறு உருவாக்கியுள்ள இன்றைய காலம், முதலாளித்துவத்தின் இறுதி கட்டம் என்ற அழுத்தமான இடத்திலிருந்துதான் லெனின் தனது அனைத்துச் செயல்பாடுகளையும் அமைத்துக் கொண்டார். புரட்சியை கனவு என்கிற நிலையிலிருந்து, புரட்சியை சாத்தியமான ஒன்றாக அணுகுகிற தனிச்சிறப்பு கொண்டது லெனினியம்.

புரட்சி என்ற விரிந்த பார்வையிலிருந்து அன்றாடப் பிரச்னைகளை அணுகும் கலையை லெனினியம் கற்றுத் தருகிறது.

முதலாளித்துவத்தை அழிக்கும் வல்லமையும் ஆற்றலும் கொண்டது பாட்டாளி வர்க்கமே என்ற முடிவுக்கு ஏற்கனவே மார்க்ஸ் வந்தடைந்தார். அதனை முதலாளித்துவம், போர்வெறி கொண்டு, நாடுகளை பங்குபோட்டுக்கொள்ளும் மூர்க்கத்தனத்தோடு, ஏகாதிபத்தியமாக வடிவெடுத்த சூழலில், பாட்டாளி வர்க்கப் புரட்சி என்ற கருத்தாக்கத்தை லெனின் வளமை கொண்டதாக மாற்றினார்.

புரட்சி எனும் சமூக சித்திரம் முதலாளித்துவத்தின் அழிவும், புரட்சியின் பிறப்பும் தவிர்க்க இயலாதது என்ற முடிவினை மார்க்சிய வழியில் வந்தடைந்த லெனின், அடுத்து சில கேள்விகளை எழுப்பினார். புரட்சி எனும் சமுக சித்திரத்தை தீட்டிடும் பணியினை யார் வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள்? எந்த வர்க்கம் புரட்சிக்கு .பாட்டாளி வர்க்கத்தின் இராணுவ அமைப்பானது, முக் கியமாக, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத் தின் இந்த மாபெரும் இலட்சியத்திற்காகத் தான் உருவாக் கப்படுகிறது. அடிைமைத்தளை களை உடைத்தெறியவும் பழைய உலகைத் தூக்கியெறியவும் கிளர்ந்தெழுகின்ற பாட்டாளி வர்க்கமும், புரட்சிகர மக்களும், புரட்சி இயக்கத்தினூடே, தமது சொந்த இராணுவ அமைப்பைக் கட் டாயம் கட்டியாக வேண்டும். ஏனெனில் ஒரு பெளதீகச் சக்தியை மற்றொரு. பெளதீகச் சக்தியினால்தான் வெல்ல முடியும்; முதலாளிகளின் ஆட்சியைத் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்க ஆட்சியை நிறுவுதல் என்ற வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற முடியும். ஆளும் வர்க்கமும் வரலாற்று அரங்கத்திலிருந்து தானாக வெளியேறச் சம்மதிக்காது. நிலைமை இப்படி இருக்க இந்த அமைப்பு முறையை கேள்வி கேட்காது இதற்குள்ளே சிக்குண்டு கிடக்க சொல்லும் நம்மிடைய் உள்ளவர்கள் மார்க்சியவாதிகளா என்பதே என் கேள்வி.

லெனின் வாரிசுகள் மார்க்சிய லெனினியத்தை கற்று தேற வேண்டும் இவை காலத்தின் கட்டாயம்.

லெனினும் தீவிரமாக இதனை எதிர் கொண்டார். பிற்போக்கு நிலப் பிரபுத்துவ, முதலாளித்துவ சித்தந்தங் களிலிருந்து பாட்டாளி வர்க்கம் தானாக மாறி புரட்சிகர வர்க்க உணர்வு பெற்றிடும் என்ற கருத்தை எதிர்த்துப் போராடியதோடு, இப்பிரச்னைக்கு ஒரு தீர்வினையும் லெனினியம் கண்டது. அதுதான்ஸ்தாபனம்எனப்படும் கட்சி அமைப்பு முறை. முதலாளித்துவ அரசு ஒரு மைனாரிட்டி அரசு. ஏனெனில் அது சமூகத்தில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் முதலாளித்துவ வர்க்கங்களைப் பாதுகாத்து வளர்த்தெடுக்கிறது. அந்த அரசு உழைக்கும் மக்களை கடுமையாக சுரண்டுவதற்கும் தன்னை பலப்படுத்தி கொள்வதற்கும் இடையறாமல் முயற்சிக்கிறது. அது மட்டுமல்லாது, பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமை வராமல் தடுத்து, அது புரட்சிகர சக்தியாக வளர்ந்திடாமல் தடுக்க, இடைவிடாமல் முயன்று வருகிறது. எனவே அரசு பற்றிய பிரச்னைகளும், அதனை பாட்டாளி வர்க்கம் கைப்பற்றும் பிரச்னைகளும் முக்கியமானதாக லெனினியம் கருதுகிறது.

மானுடம் அடிமைத்தனத்திலிருந்தும், சுரண்டலிலிருந்தும் விடுதலை பெற மார்க்ஸ் ஏங்கெல்ஸ் வடிவமைத்த தத்துவம் வழிகாட்டுகிறது. புரட்சி எனும் வரலாற்று கடமையை பாட்டாளி வர்க்கம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்படும் பிரச்சனைகளை தீர்த்திட லெனினியம் வழிகாட்டுகிறது.

தொடரும்....








No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்