சந்தர்ப்பவாதம் அராஜகவாதம் -அரசும் புரட்சியும் நூலிலிருந்து

தோழர்களே அரசும் புரட்சியும் நூலை பற்றிய விவாதமும் அதன் பற்றிய என் தேடலும் .

அரசும் புரட்சியும் நூலை அனேகமாக வாசித்திருப்பீர் ஆனால் அரசை பாராளுமன்றம் போல் பயன்படுதுதல் பற்றிய விவாதம் சம்பந்தமாக எழுந்த கேள்விகளுக்கு பதில்களாக நான் தேடிய பகுதிகளை நூலிலிருந்து அப்படியே உங்கள் முன் இந்த நூல் லெனின் நூல் திரட்டு 2 ல் உள்ள பகுதியே. இங்கே நான் குறிப்பிட்டுள்ள பக்கங்கள் அந்த நூலின் தொடர்ச்சியே.... வாசிக்க விவாதிக்க அழைக்கிறேன் தோழர்களே.

(பக்கம் 379 லிருந்து தொடர்சியாக)

பழைய அரசுப்‌ பொறியமைவை ஒழிப்பது பற்றி மட்‌டுமே நாம்‌ சிந்திக்க வேண்டும்‌, முந்தியப்‌ பாட்டாளி வர்க்கப்‌ புரட்சிகளின்‌ ஸ்தூலப்‌ படிப்பினைகளை அலசி ஆராய்வதிலும்‌, அழிக்கப்பட்டதன்‌ இடத்தில்‌ எதை வைப்பது, எப்படி வைப்‌பது என்று பகுத்தாய்வதிலும்‌ பயனில்லை என்பதாய்‌ அராஐகவாதி வாதாடுகிறான்‌ (அராஜகவாதிகளில்‌ சிறந்தவர்களையே கூறுகிறேன்‌, ரெப்போத்கின்களைப்‌ போன்றோரைப்‌ பின்‌ தொடர்ந்து முதலாளித்துவ வர்க்கத்துக்கு வால்‌ பிடித்துச்‌ செல்வோரை அல்ல). ஆகவே, அராஜகவாதியின்‌ போர்த்தந்திரம்‌ வெகுஜன இயக்கத்தின்‌ நடைமுறை நிலைமைகளைக்‌ கணக்கில்‌ கொண்டு ஸ்தூலமான பிரச்சினைகளுக்குத்‌ தீர்வு காண்பதற்குரிய அஞ்சாநெஞ்சம்‌ கொண்ட புரட்சிகர முயற்சியின்‌ போர்த்தந்திரமாய்‌ இல்லாது, விரக்தியின்‌ போர்த்தந்திரமாகி விடுகிறது.

இரு தவறுகளையும்‌ தவிர்த்துக்‌ கொள்ள மார்க்ஸ்‌ போதனை செய்கிறார்‌. பழைய அரசுப்‌ பொறியமைவு அனைத்தையும்‌ அழித்திட உன்னதத்‌ துணிவோடு செயல்படும்படி அவர்‌ போதனை செய்கிறார்‌; அதேபோது பிரச்சினையை ஸ்தூலமாய்‌ வகுத்திட அவர்‌ போதனை செய்கிறார்‌: கம்யூனானது விரிவான ஜனநாயகத்துக்கு வழி செய்யவும்‌ அதிகாரவர்க்கத்தை வேரோடு வீழ்த்திடவும்‌ இந்த நடவடிக்கைகளை எடுத்து ஒரு சில வாரங்களுக்குள்‌ ஒரு புதிய, பாட்டாளி வர்க்க அரசுப்‌ பொறியமைவை அமைக்கத்‌ தொடங்க முடிந்தது. கம்யூனார்டுகளிடமிருந்து நாம்‌ புரட்சிகரத்‌ துணிவைக்‌ கற்றுக்‌ கொள்ள வேண்டும்‌; அவர்களுடைய நடைமுறை நடவடிக்கைகளில்‌ மெய்யாகவே அவசரமான, உடனடியாகவே சாத்தியமான நடவடிக்கைகளின்‌ உருவரையை நாம்‌ கண்டறிந்து கொள்ள வேண்டும்‌; பிறகு இந்தப்‌ பாதையைப்‌ பின்பற்றி நாம்‌ அதிகார வர்க்கத்தை அடியோடு அழிப்பதில்‌ வெற்றி பெறு வோம்‌.

அதிகாரவர்க்கம்‌ இவ்வாறு அழிக்கப்படுவதன்‌ சாத்தியப்‌பாடு பின்வரும்‌ உண்மைகளால்‌ உத்தரவாதம்‌ செய்யப்படுகிறது: சோஷலிசம்‌ வேலை நேரத்தைக்‌ குறையச்‌ செய்யும்‌, புது வாழ்வை மலரச்‌ செய்து மக்கள்திரளை உயர்‌ நிலைக்கு உயர்த்தி விடும்‌, விதிவிலக்கின்றி ஒவ்‌ வெொ௱ருவரும்‌ அரசுப்‌ பணிகளைச்‌ செய்யக்கூடியவர்களாய்‌ உயரும்‌ படியான நிலைமைகளை மக்கள்‌ தொகையில்‌ பெரும்பான்மையோருக்கு உண்டாக்கத்‌ தரும்‌. பொதுவில்‌ அரசின்‌ வ்‌வொரு வடிவமும்‌ அறவே உலர்ந்து உதிர்வதற்கு இவ்விதம்‌ வழி வகுக்கப்படும்‌.(பக்கம் 381)

நாடாளுமன்றத்தில்‌ பெரும்பான்மை பெறுவதன்‌ மூலமும்‌ நாடாளுமன்றத்தை அரசாங்கத்தின்‌ எஜமானனது நிலைக்கு உயரச்‌ செய்வதன்‌ மூலமும்‌ அரசு அதிகாரம்‌ வெல்வதே, கடந்த காலத்தைப்‌ போல இப்பொழுதும்‌ நமது அரசியல்‌ போராட்டத்தின்‌ குறிக்கோள்‌ (பக்கங்கள்‌ 726, 727, 732).

இது கலப்பற்ற படுமட்டமான சந்தர்ப்பவாதமே அன்றி வேறல்ல: சொல்லளவில்‌ புரட்சி பேசி, செயலில்‌ புரட்சியை நிராகரிப்பதே அன்றி வேரல்ல. பாட்டாளி வர்க்கத்தை இடைவழியில்‌ சந்திக்க விருப்பம்‌ கொண்ட... ஓர்‌ அரசாங்‌கம்‌ காவுத்ஸ்கியின்‌ சிந்தனைகள்‌ இதற்குமேல்‌ செல்ல முடியாதவை, “ஆளும்‌ வர்க்கமாய்‌ ஒழுங்கமைந்த பாட்‌டாளி வர்க்கம்‌ என்று கம்யூனிஸ்டு அறிக்கை பிரகடனம்‌ செய்த 1847ஆம்‌ ஆண்டுடன்‌ ஒப்பிடுகையில்‌ இது குட்டி முதலாளித்துவச்‌ கழிசடை நிலையின்‌ திசையில்‌ பின்னோக்கி ஓடுவதே ஆகும்‌.நாங்கள்‌ சோஷலிசத்தின்‌ துரோகிகளான இவர்களிடமிருந்து முறித்துக்‌ கொள்ளவே செய்வோம்‌. ஆயுத மேந்திய பாட்டாளி வர்க்கம்‌தானே அரசாங்கமாகவிடும் _பொருட்டு நாம்‌ பழைய அரசுப்‌ பொறியமைவை அடியோடு அழிப்பதற்காகப்‌ போராடவே செய்வோம்‌. இவை இரண்‌டும்‌ அறவே வேறானவை

அரசு அதிகாரத்தின்‌ வரம்புக்குள் சக்திகளின்‌ பரஸ்பரநிலையிலே பெயர்ச்சியை உண்டாக்கவும்‌, “நாடாளுமன்‌றத்தில்‌ பெரும்பான்மை பெறவும்‌, “நாடாளுமன்றத்தை அரசாங்கத்தின்‌ எஜமானனது நிலைக்கு உயரச்‌ செய்யவும்‌ பணி புரியச்‌ சித்தமாயிருக்கும்‌ லெகின்களும்‌ டேவிட்‌களும்‌, பிளெஹானவ்களும்‌ பத்ரேசவ்களும்‌ தெஸெரெத்‌ தேலிகளும்‌. செர்னோவ்களுமானோரின்‌ இனிய சகவாசத்தில்‌காவுக்ஸ்கி இன்பம்‌ காணட்டும்‌. யாவற்றையும்‌ முதலாளித்‌துவ நாடாளுமன்றக்‌ குடியரசின்‌ வரம்புகளுக்குள்ளேயே இருத்திக்‌ கொள்வதும்‌, சந்தர்ப்பவாதிகளுக்கு முற்றிலும்‌ ஏற்புடைத்ததுமான இந்த இலட்சியம்‌ மிக்கச்‌ சிறப்பனதே. ஆனால்‌ நாங்கள்‌ சந்தர்ப்பவாதிகளிடமிருந்து முறித்துக்‌ கொள்வோம்‌. வார்க்க உணர்வு கொண்ட பாட்டாளி வர்க்கம்‌ அனைத்தும்‌ எங்களுடன்‌ சேர்ந்து போராடும்‌-*சக்திகளின்‌ பரஸ்பர நிலையில்‌ பெயர்ச்சியை உண்டாக்குவதற்காக?” அல்ல, முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்துவதற்காக, முதலாளித்துவப்‌ நாடாளுமன்ற முறையை அழிப்பதற்காக, கம்யூனை முன்மாதிரியாகக்‌ கொண்ட ஜனநாயகக்‌ குடியரசு அல்லது தொழிலாளர்கள்‌, படையாட்களது பிரதிநிதிகளின்‌ சோவியத்துகளுடைய குடியரசுக்காக, பாட்டாளி வர்க்கத்‌தின்‌ புரட்சிகரக்‌ சர்வாதிகாரத்துக்காகப்‌ போராடும்‌.

சர்வதேச சோஷலிசத்தில்‌ காவுத்ஸ்கிக்கு வலப்புறத்தில்‌ ஜெர்மனியில்‌ சோஷலிஸ்டு மாத இதழ்‌ (லெகின்‌, டேவிட்‌, கோல்ப்‌, மற்றும்‌ ஸ்டானிங்‌, பிரான்டிங்‌ ஆகிய ஸ்காண்‌ டீனேவியர்களும்‌ அடங்கலான ஏனைய பலரும்‌); பிரான்சிலும்‌ பெல்ஜியத்திலும்‌ ழொரேசைப்‌ பின்பற்றுவோரும்‌?* வண்‌டர்வேல்டேயும்‌; இத்தாலியக்‌ கட்சியின்‌ டுராட்டியும்‌ திரெவெசும்‌ பிற வலதுசாரிகளும்‌; பிரிட்டனில்‌ ஃபேபியன்களும்‌ சுயேச்சையாளர்களும்‌ (*சுயேச்சைத்‌ தொழிற்‌ கட்சிஎப்பொழுதுமே, உண்மையில்‌, மிதவாதிகளைச்‌ சார்ந்ததாகவே இருந்துள்ளது); இன்ன பிறரும்‌ உள்ளனர்‌. இந்தக்‌ கனவான்கள்‌ எல்லோரும்‌ நாடாளுமன்ற வேலையிலும்‌ இவர்‌களுடைய கட்சிப்‌ பத்திரிகைகளிலும்‌ பெரும்‌ பங்கு, பல சந்தர்ப்பங்களில்‌ முதன்மையான பங்கு, ஆற்றுகிறவர்கள்‌/ இவர்கள்‌ பாட்டாளி வர்க்கச்‌ சர்வாதிகாரத்தை அறவே புறக்கணித்துவிட்டு, ஒளிவுமறைவற்ற சந்தர்ப்பவாதக்‌ (பக்கம்382)கொள்கையைப்‌ பின்பற்றுகிறவர்கள்‌. இந்தக்‌ கனவான்களின்‌ கண்களில்‌ பாட்டாளி வர்க்கச்‌ சர்வாதிகாரம்‌ ஜனநாயகத்துக்கு முரணானது இவர்களுக்கும்‌ குட்டிமுதலாளித்துவ ஜனநாயகவாதிகளுக்கும்‌ உண்மையில்‌ அடிப்படை வேறு பாடு எதுவும்‌ இல்லை.

இந்கச்‌ சூழ்நிலையைக்‌ கருத்தில்‌ கொண்டு பார்க்கையில்‌, இரண்டாவது அகிலம்‌, அதாவது அதன்‌ அதிகாரபூர்வமான பிரதிநிதிகளில்‌ மிகப்‌ பெருவாரியான பிரிவு, முழுக்க முழுக்க சந்தர்ப்பவாதத்தில்‌ மூழ்கிவிட்டது என்று முழு நியாயத்‌துடன்‌ முடிவு செய்யலாம்‌. கம்யூனின்‌ அனுபவம்‌ புறக்கணிக்‌கப்பட்‌டதோடு அல்லாமல்‌, திரித்துப்‌ புரட்டவும்‌ பட்டிருக்‌கிறது. பழைய அரசுப்‌ பொறியமைவை நொறுக்கி அதனிடத்தில்‌ புதிய ஒன்றை அமைக்கத்‌ தொழிலாளர்கள்‌ செயல்‌பட வேண்டும்‌, இவ்வழியில்‌ அவர்கள்‌ தமது அரசியல்‌ ஆட்‌சியை சமுதாயத்தின்‌ சோஷலிசப்‌ புனரமைப்புக்குரிய அடித்‌ளமாக்கிக்‌ கொள்ள வேண்டும்‌, இதற்குரிய தருணம்‌ அருகாமையில்‌ வந்து கொண்டிருக்கிறது என்கிற கருத்தைத்‌ தொழிலாளர்களுடைய மனதில்‌ பதிய வைப்பதற்குப்‌ பதிலாய்‌, உண்மையில்‌ இதற்கு தேர்‌ விரோதமான ஒன்றைத்‌தான்‌ இப்பிரதிநிதிகள்‌ வெகுஜனங்களுக்குப்‌ பிரசாரம்‌ செய்து, சந்தர்ப்பவாதத்துக்கு ஆயிரக்கணக்கான நுழைவிடங்கள்‌ விட்டுவைக்கும்‌ விதத்தில்‌ ““ஆட்டுயதிகாரம்‌ வெல்வதற்கான போராட்டத்தைச்‌'' சித்துரித்துள்ளனர்‌.

ஏகாதிபத்தியப்‌ போட்டியின்‌ விளைவாய்‌ விரிந்து வளர்ந்து விட்ட இராணுவ இயந்திரத்தைக்‌ கொண்ட அரசுகள்‌ இராணுவ பூதங்களாகி, உலகை ஆள வேண்டியது பிரிட்டனா, ஜெர்மனியா- இந்த நிதி மூலகனமா அல்லது அதுவா என்னும்‌ பிரச்சனையைத்‌ தீர்ப்பதற்காக இப்பூதங்கள்‌ இலட்‌சோப்‌ இலட்ச மக்களை அழித்தொழித்திடும்‌ ஒரு நேரத்தில்‌, அரசின்பால்‌ பாட்டாளி வர்க்கப்‌ புரட்சிக்குள்ள போக்கு குறித்த பிரச்சினையைத்‌ திரித்துப்‌ புரட்டுவதும்‌ மூடி மறைப்‌பதும்‌ மிகப்‌ பெரும்‌ பாத்திரம்‌ ஆற்றாது இருக்காது.

* கையெழுத்துப்‌ பிரதி பின்வருமாறு தொடர்கிறது:

அத்தியாயம்‌ 7

1905, 1917ஆம்‌ ஆண்டுகளின்‌ ருஷ்யப்‌ புரட்சிகளின்‌ அனுபவம்‌

இந்த அத்தியாயத்தின்‌ தலைப்பு குறிப்பிடும்‌ பொருள்‌  மிகப்‌ பெரிது, இதைப்‌ பற்றி பல புத்தகங்கள்‌ எழுத முடியும்‌, எழுத வேண்டும்‌. இந்தப்‌ பிரசுரத்தில்‌. இயற்கையாகவே  நாம்‌, அனுபவம்‌ அளித்திடும்‌ மிக முக்கிய படிப்பினைகளை, அரசு அதிகாரம்‌ குறித்துப்‌ புரட்சியில்‌ பாட்டாளி வர்க்கத்‌ அதுக்குள்ள பணிகளுடன்‌ நேரடியாய்‌ சம்பந்தப்பட்ட படிப்‌ பினைகளைப்‌ பரிசீலிப்பதுடன்‌ நிறுத்திக்‌ கொள்வோம்‌.

(கையெழுத்துப்‌ பிரதி இதோடு நின்றுவிடுகிறது. பர்‌.)

(மேலே பக்கம்- 379- 384 வரை) விவாதம் தொடரும்....











No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்