கம்யூனிச அகிலங்களும் அதன் செயல்பாடு மற்றும் கலைப்பை பற்றியும்-3

 இரண்டாம் உலகப்போரும் பாசிச எதிர்ப்பு முன்னணியும் அதன் செயல்பாடுகளை புரிந்துக் கொள்ள வேண்டியதன் அவசியமும்.


இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் பிளவு மற்றும் பின்னடைவுக்கு அகிலத்தையும் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் மாவோவையும் ஸ்டாலினையும் காரணம் காட்ட முடியுமா?.

  • ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி காட்டிய தேசிய விடுதலையை சாதிக்க வேண்டும் என சிபிஐக்கு அகிலம் வழிகாட்டியது இது தவறா? சிபிஐ இதை செய்ததா?

  • பிரிந்து கிடக்கின்ற சக்திகளை ஒன்றிணைத்து பலமாய்ந்த கட்சியை கட்டுமாறு அகிலம் திரும்பத் திரும்ப வலியுறுத்தியது இது தவறா இன்று வரை இது சாதிக்கப்பட்டதா?

  • சோவியத் பாதை சீன பாதை விஷயத்தில் நீங்கள் எங்கள் பாதையை பின்பற்றாதீர்கள், உங்கள் நாட்டுக்கான பாதையை நீங்கள் தேர்ந்தெடுங்கள் என்று அகிலம் அறிவுறுத்தியது இது தவறா?

  • 1970-ல் தோன்றிய சிபிஐ (எம்எல்) கட்சி அழித்தொழிப்பு ஒரே வழியை முன் வைத்ததன் மூலம் அமைப்பு சிதறி போனதற்கு யார் காரணம்? அகிலமா அந்த கட்சியின் நிலைப்பாடா?

  • வர்க்க அமைப்பான வெகு மக்கள் அமைப்புகளை கட்டுவது திரிப்பு வாதம் என்று சிபிஐ(எம்எல்) கட்சி நிலைபாடு அகிலத்தின் நிலைப்பாட்டுக்கு எதிரானது அல்லவா? சீன பாதையை நம் பாதை சீன தலைவரே நம் தலைவர் என்று அன்று சொல்ல சொன்னது யார்? இது தவறல்லவா? அகிலம் இங்கே என்ன பங்காற்றியது?

  • அகிலம் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைகளை இங்குள்ள கட்சிகள் ஏற்று செயல்படுத்தியது உண்டா? அதேபோல் இங்குள்ள அமைப்புகளில் விமர்சனம் சுயவிமர்சனம் நடந்தது உண்டா அல்லது சீர் செய் இயக்கமாவது நடந்ததுண்டா?

  • ஜனநாயக மத்தியத்துவத்தை எந்த அமைப்பாவது கடைப்பிடித்ததுண்டா?
  • தன் இயல்பிலிருந்து நீங்கள் முறித்துக் கொண்டீர்களா?இன்னமும் பாதை பற்றிய விவாதித்துக் கொண்டிருக்கிறீர்களே இந்திய புரட்சிக்கான திட்டம் பற்றி விவாதித்ததுண்டா?

  • நீரினில் மீனா இருப்பதற்கு பதிலாக உழைக்கும் மக்கள் புறகணித்து நடுரோட்டில் நட்டமரமாய் நிற்கும் அமைப்புகளை பற்றி கவலைப்பட்டதுண்டா?
    • தனி ஒரு குழு புரட்சி சாதிக்க முடியுமா?

    இவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு அகிலத்தின் மீது பழி போடுவது என்ன நியாயம் கேட்க நாலு கேனையர்கள் இருக்கும் வரை இது போன்ற நபர்கள் இருக்கத்தான் செய்வார்கள். எம்மை பொறுத்தவரை அகிலம் சரியான வழிகாட்டலை அளித்தது என்பதுதான். குறிப்பாக ஜெர்மனியில் ஹிட்லரின் நேஷனல் சோசலிஸ்ட் பார்ட்டி தேர்தல் மூலமே ஆட்சிக்கு வந்தது தேர்தலுக்கு முன் அகிலம் நாட்டில் உள்ள எல்லா இடத்துசாரி குழுக்களும் ஒன்றுபட்டு பொது முன்னணி கட்டி தேர்தலில் போட்டியிடுங்கள் எனக் கூறியது. ஆனால் இடதுசாரி தீவிரவாதிகள் பொது முன்னணிக்கு வராமல் தேர்தலை புறக்கணித்தனர். இதன் விளைவு ஹிட்லர் ஆட்சிக்கு வந்தான் அகிலத்தின் வழிகாட்டல் செயல்படுத்தப் பட்டிருந்தால் ஹிட்லர் புறப்பட்ட இடத்திலேயே நின்று இருப்பான். உலகம் பேரழிவை சந்தித்திருக்காது.

இரண்டாம் உலகப் போர் துவங்குவதற்கு முன் வரைக்குமான கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆலோசனைகள் வழிகாட்டல்கள் வருமாறு:

  • பாசிசம் பற்றிய வரையறை.
  • பாசிசத்தை உள்நாட்டிலேயே தோற்கடித்தல்.
  • பாசிசம் உலக யுத்தத்துக்கான தயாரிப்புகளில் இறங்கியுள்ளது.
  • ஏகாதிபத்தியம் மற்றும் பாசிசத்தின் மைய நோக்கம் சோவியத்தை வீழ்த்துவது.
  • சோவியத் எதிர்ப்பு முன்னணி உருவாகாமல் தடுத்தல்.
  • எல்லா நாடுகளிலும் பாசிச எதிர்ப்பு முன்னணிகளை உருவாக்குதல்.
  • பாசிசக்தை வீழ்த்துவதற்காக தயாரிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக ஹிட்லருடன் அனாக்கிரமிப்பு ஒப்பந்தம் செய்து கொள்வது என்பதாக இருந்தது.

1939-ல் போலந்தின் மீது ஹிட்லரின் தாக்குதல் மூலம் இரண்டாம் உலக யுத்தம் சர்வதேச அளவில் மாறுதலை ஏற்படுத்தியது. உலகப் புரட்சி நிகழ்வு முறைகளும் இதனால் மாறியது. இதை ஒட்டி இரண்டாம் உலகப்போர் பற்றியும் அதன் மீதான கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை பற்றியும் அகிலம் தெளிவுபடுத்த வேண்டி வந்தது.

யுத்தம் பற்றிய பொதுவான நிலைப்பாடுகளை அகில முன் வைத்திருந்தாலும் இரண்டாம் உலகப் போர் பற்றி குறிப்பான ஆய்வை அகிலம் முன் வைத்தது.

முதல் உலகப் போர் நடந்த காலத்தில் பிரதான முரண்பாடு முதலாளித்து சக்திகளுக்கு இடையிலான முரண்பாடுதான். இந்த முரண்பாட்டை பயன்படுத்தி தான் சோவியத்தில் சோசலிச புரட்சி நடந்தேறியது. முதல் உலகப்போர் நாடு பிடிக்கும் சண்டையாகவும் சந்தை மறுபங்கிட்டுகாகவும் நடந்தது. அந்த போர்த்து தூங்கும்போது உலகில் எங்கும் எந்த நாட்டிலும் சோசியலிஸ்ட் அரசு இல்லை.

மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் உலகப் புரட்சி நிகழ்வு முறை பற்றி தெளிவான நிலைப்பாடுகளை முன்வைத்தது. உலக சோசலிச புரட்சியை துவக்கி வைத்தது. அக்டோபர் சோசலிச புரட்சி என்று முதலாளித்து நாடுகளில் நடைபெறும் சோசலிச புரட்சி காலனி நாடுகளில் நடைபெறும் தேசிய விடுதலைப் புரட்சி உலகப் புரட்சியின் பிரிக்க முடியாத அங்கங்கள் எனும் முதலாளிய நாடுகளில் ஒன்றுபட்ட தொழிலாளர் முன்னணி கொள்கையையும் காலனி நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி கொள்கையை கடைபிடிக்கும்படி அகிலம் கேட்டுக்கொண்டது. ஒவ்வொரு நாட்டிலும் இந்த கொள்கையை உருவாக்க அது கடும் முயற்சி செய்தது.

அகிலம் ஏகாதிபத்திய போர் அபாயம் பற்றியும் போருக்கு எதிராக சமாதானத்தை முன்வைத்து யுத்தம் ஒழிக என்று அறைகூவல் விட்டது. அன்றைய குறிப்பான உலக சூழல் பற்றியும் சர்வதேச வர்க்க சக்திகளின் உறவுகளில் இருந்தும் அகிலம் புதிய செயல் தந்திரத்தை முன்வைத்தது. யுத்தங்கள் அளவு கடந்து பலவிதமானவை வெவ்வேறு தன்மைகள் கொண்டவை சிக்கலானவை அவற்றின் விஷயத்தில் பொது மாதிரி அணுக கூடாது என்று லெனின் வழிகாட்டலை ஏற்று நிலைப்பாடுகளை முன்வைத்தது.

ஆட்சிமுறையும் வந்தது. இரண்டாம் உலகப்போர் துவங்கும் போது உலகில் இரண்டு முரண்பாடுகள் இருந்தது

1.ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையில் ஆனது.

2.ஏகாதிபத்தியத்துக்கும் சோசலிசத்துக்கும் இடையிலான முரண்பாடு.

இந்த இரு முரண்பாடுகளையும் திறமையாக கையாண்டு சோசலிசத்தை பாதுகாத்ததில் தான் ஸ்டாலின் மேதாவிலாசம் அடங்கி இருக்கிறது.

இந்த இரண்டு முரண்பாடுகளும் மலர்ந்தது பரஸ்பரம் பாதிப்பு நிலையில் இருந்தது. இரண்டு முதலாளித்துவ குழுக்களுக்கு இடையே ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் அதே நேரம் சோவியத் யூனியனையும் சோசலிசத்தையும் அழித்து மீண்டும் முதலாளியத்தை நிறுவும் நோக்கமும் இருந்தது.

இதனாலே உலகம் என் காலடியில் என்று கிளம்பி ஹிட்லரை எதிர்த்து சூரியன் மறையாத சாம்ராஜ்யம் கூட உடனடியாக வாய் திறக்கவில்லை.

சோவியத் யூனியனில் சோசலிசம் திடப்பட்டு இருப்பது உலகம் ஒரு தொழிலாளி வர்க்கத்துக்கு உற்சாகமூட்டும் என முதலாளிய சக்திகள் பயம் கொண்டனர். எனவே அவர்களின் நோக்கம் ஒன்றாக இருந்தாலும் அவர்களுக்குள் முரண்பாடு இல்லாமல் இல்லை. இரண்டாம் உலகப்போரின் தனித்தன்மை என்பது முதல் உலகப்போரை போல வெறும் மறுபங்கீட்டுகானது மட்டுமில்லை பாசிச இட்லர் உலகம் முழுவதையும் தன் காலடியில் கொண்டு வருவதற்கான குறிக்கோளை கொண்டிருந்தான். அவனை பயன்படுத்தி முதலாளி உலக சோசலிசத்தை அழிக்கும் குறிக்கோளையும் கொண்டிருந்தது.

எனவே பாசிசத்தை எதிர்ப்பதற்கான சூழல் இருந்தும் அது நடைபெறவில்லை.

ஏகாதிபத்தியங்கள் தங்களுக்கு இடையிலான பரஸ்பரம் முரண்பாடுகளை சோவியத் யூனியன் அழிப்பதன் மூலம் தீர்த்துக்கொள்ள முயன்றனர். ஹிட்லருக்கு எதிராக அவர்கள் வாய் திறக்கவில்லை. அதே நேரம் ஹிட்லரை சோவியத் யூனியனுக்கு எதிராக தூண்டிவிடுவதற்கு எல்லா வேலைகளையும் செய்து வந்தன. முதல் உலகப்போரில் எதிரி சக்திகள் உடனே போருக்கு தயாரானது. ஆனால் இரண்டாம் உலகப் போர் படிப்படியாக தொடங்கியது. திடீரென்று மூல வில்லை மெது மெதுவாக உலக பொருளை நோக்கி சென்று கொண்டிருந்தது. எத்தியோப்பியா மீது பாசிச இத்தாலி தாக்குதல் ஸ்பெயினில் பாசிஸ்டுகள் தலையீடு சீனா மீது ஜப்பான் தாக்குதல் ஆஸ்தியாவையும் செக்கையும் ஜெர்மனிகைப்பற்றுதல் என மெதுவாக நகர்ந்தது. போலந்தின் மீதான ஹிட்லரின் தாக்குதல் தான் இரண்டாம் உலகப் போரில் முழு துவக்கமாக இருந்தது. போலந்து மக்கள் பாசிச எதிர்ப்பு யுத்தம் நடத்தினர். போலந்து கம்யூனிஸ்ட் கட்சி பாசிசத்தை எதிர்த்து தேசத்தை பாதுகாப்போம் என மக்கள் யுத்தத்தில் இறங்கினர்.

சோவியத்தை நோக்கி ஜெர்மனிய உடனடி தாக்குதல் நடத்தும் என்று பிட்டனும் பிரான்சும் நினைத்த நிலை மாறி ஜெர்மனி முதலில் ஐரோப்பாவையும் பின் தங்கள் காலனி நாடுகளை கைப்பற்ற போகிறது என்பதை அறிந்து பிரிட்டனும் பிராசும் ஜெர்மனி மீது போர் பிரகடனும் செய்தனர். இரண்டாம் உலகப் போர் துவங்கியது ஆனாலும் அந்த நாடுகளில் ஆளும் கும்பல் பாசிசத்துக்கு எதிராக தீர்மானகரமான போரை நடத்த விரும்பவில்லை. போலந்துக்கு ஆதரவாக நாம் நிலை எடுத்தால் ஹிட்லர் சோவியத் நோக்கி செல்வான் என்று எண்ணினர். இந்த கும்பல் சோவியத்துக்கு எதிராக ஒப்பந்தம் செய்து கொள்ளவும் தயாராய் இருந்தனர். அதே நேரம் பாசிசத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் கம்யூனிஸ்டுகள் பாசிச எதிர்ப்பு போரை நடத்தி வந்தனர். மேற்கு அய்ரோப்பாவின் பல நாடுகளில் ஹிட்லர் கைப்பற்றிய அந்த நாடுகளில் படுகொலைகளையும் சூராடல்களையும் நடத்தினான். இதை கண்டு மக்கள் ஹிட்லர் மீது கடும் கோபம் கொண்டனர். இது அந்த நாட்டு ஆளுங்கும் கும்பலையும் பாதித்தது. விடுதலைப் போர் வளர்ந்தது.

பாசிச நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்நாட்டு போர் நடத்தி வந்தன. பாசிச ஆக்கிரமிப்பு உண்டான நாடுகள் தேசிய விடுதலைப் போரை நடத்தி வந்தன. யுத்த சூழல் பல நாட்டு கம்யூனிஸ்டுகளுக்கு நெருக்கடியை உண்டு பண்ணியது அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் அகிலத்துடன் ஆன அதன் உறவு சட்டவிரோதம் ஆக்கப்பட்டது. மிகவும் கடுமையான சிக்கலான சூழலில் கம்யூனிஸ்ட் அகிலமும் அதன் தலைவர்களும் இருந்தனர்.

1940-ல் இத்தாலிய படைகள் கிரிஸில் புகுந்தது ஜெர்மனியப்படைகள் பல்கேரியாவிலும் ருமேனியாவிலும் புகுந்தது இது சோவியத் யூனியன் தாக்க தொடக்க முனையாக இருந்தது. 1941 வாக்கில் ஐரோப்பா முழுவதும் ஜெர்மன் வசமானது. இதை ஒட்டி தேசிய விடுதலை யுத்தம் தீவிரவடைந்தது. பாசிச எதிர்ப்பு சக்திகளை ஒன்றுப்படுத்தும் பணி முதன்மையானது.

அமெரிக்கா பிரிட்டன் ஆகிய முதலாளிய நாடுகளின் சுதந்திரம் கூட சந்தேகத்துக்கிடமானது 1941 ஜூன் 22 அதிகாலை 3 மணிக்கு போர் பிரகடனம் எதுவும் செய்யாமல் ஜெர்மனியின் பீரங்கிகள் விமானப்படைகள் சோவியத் யூனியனின் எல்லை தாண்டி புகுந்தது இரு நாடுகளுக்கு இடையேயான பத்தாண்டு கால ஒப்பந்தம் மீறப்பட்டு துரோகம் இழைத்தது ஜெர்மனி. ஸ்டாலின் மற்றும் சோவியத் மக்களின் சமாதான முயற்சிகள் தோற்றுப் போய் சோவியத் மக்கள் தேசபக்த யுத்தத்தை ஆரம்பித்தனர் யூனியன் மீதான ஹிட்லரின் தாக்குதல் இரண்டாம் உலகப் போரில் மேலும் ஒரு புதிய கட்டத்தை அடைந்தது. பாசிசத்துக்கு எதிரான உலகம் மக்களின் ஆயுத போராட்டத்திற்கு சோவியத் யூனியன் தலைமை தாங்கியது. சோவியத்தை மையமாகக் கொண்டு எல்லா ஜனநாயகவாதிகளும் ஒன்றிணைந்தனர். சோவியத் கூட்டாளியாக பிரிட்டனும் அமெரிக்காவும் சேர்ந்து கொண்டது வெவ்வேறு அரசியல் சக்திகளால் அமைந்த சர்வதேச கூட்டணி வரலாற்றில் முதன்முதலாக அமைந்தது அமெரிக்கா மற்றும் பிரிட்டநோடனான சோவியத் கூட்டணி பற்றி அன்றைக்கு சர்ச்சை எழுந்தது ஒரு ஏகாதிபத்திய கூட்டணியுடன் மற்றொன்று எதிராக ராணுவ ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் சோவித்து ஆட்சியின் அடிப்படைகளுக்கு கேடு செய்யாமல் அதன் நிலையை வலுப்படுத்தவும் அதன் மீது ஏதேனும் ஒரு ஏகாதிபத்திய வல்லரசு தாக்குதலை பலவீனப்படுத்தும் வல்லதாய் இருக்கும் சந்தர்ப்பங்களில் கம்யூனிஸ்டுகள் இப்படிப்பட்ட கூட்டணி மறுக்க மாட்டார்கள் என்றும் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளை பயன்படுத்தி சோசலிசத்தை பலப்படுத்த வேண்டும் என்றும் லெனின் சொன்னார்.

பாசிஸ்ட் கூட்டணிக்கு எதிரான பொருள் சோவியத் யூனியன் பிற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியமாய் இருந்தது. பிரிட்டனும் அமெரிக்காவும் தங்கள் தேசிய நலன் அபாயம் காரணமாக சோவியத் யூனியனுடன் ஒத்துழைக்க வேறு வழி என்று ஒத்துக் கொண்டன.ஆயினும் இந்த நாடுகளின் ஆளும் கும்பலின் பெரும் பிரிவு ஹிட்லரையே ஆதரித்தது. அவற்றுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதே விரும்பியது இந்த கும்பல் ஆரம்பம் முதலே சோவியத்திற்கு எதிரான பிரச்சாரம் செய்து வந்தது. அவர்கள் வேறு கணக்குப்போட்டனர் சோவியத் ஜெர்மனியும் யுத்தத்தில் பலவீனம் அடையும் அதன் பிறகு தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தலாம் என்று இருந்தன. இதனால் அவர்கள் ஐரோப்பியாவில் இரண்டாவது போர்முனை திறக்க தாமதம் செய்தனர்.

ஆனாலும் சோவியத் எதிர்ப்பு முன்னணி உருவாகாமல் பாசிச எதிர்ப்பு முன்னணி அமைக்கப்பட்டதானது. வரலாற்றில் மிக முக்கிய விஷயமாகும். கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டு டிமிட்ரோ மனு ஹீல்ஸ்க்கு டோக்கிலியாட்டி என மூவருக்கும் வழிகாட்டும் பொறுப்பு அளிக்கப்பட்டது.

அகிலத்தின் செயற்குழு பின்வருமாறு வலியுறுத்தியது

  • சோவியத் யூனியன் மீதான ஹிட்லரின் தாக்குதல் சோசலிச தாயகத்துக்கு மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்கும் விடுதலை மற்றும் சுதந்திரத்திற்கும் கொடுக்கப்பட்ட அடியாகும் .

  • ஜெர்மன் பாசிசத்தில் இருந்து உலக மக்களை பாதுகாக்க வேண்டும்.

  • சோவியத் யூனியனின் நியாயமான யுத்தத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

  • ஹிட்லர் ஆதரவாளர்களை அம்பலப்படுத்த வேண்டும்.

  • யுத்தத்தில் ஒதுங்கி இருப்பதன் மூலம் ஜெர்மனிக்கு மறைமுக ஆதரவு அளிப்பதை எதிர்ப்பது .

  • எல்லாவித சோவியத் எதிர்ப்பு சதி சூழ்ச்சிகளை அம்பலப்படுத்துவது.

  • சோவியத் மக்களை காப்பதற்கு சர்வதேச போராட்ட கூட்டணி அமைப்பது என கூறியது இதுதான் நடந்தது.

உலக கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும் சோவியத் யூனியன் பாதுகாப்பதும் பாசிசத்தை வீழ்த்துவதுமே தற்போதைய கட்டத்தில் முக்கிய பணியாக கொண்டது ஏனெனில் யுத்ததில் சோவியத் யூனியனின் தோல்வி என்பது அந்த நாட்டு மக்களின் தோல்வி மட்டுமல்ல உலக சோசலிசத்தின் தோல்வியாக இருக்கும் என்பதால் எல்லா நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சோவியத்தை பாதுகாக்க எல்லா நடவடிக்கைகளும் மேற்கொண்டது.

பாசிஸ்டு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் நாட்டு பாசிஸ்டுகளை உள்நாட்டு யுத்தத்தின் மூலம் தூக்கி எறிதல் இதன் மூலம் சோவியத்திற்கு மிகப்பெரும் ஆதரவு அளித்தல் நம்முடைய பகைவன் நம்முடைய நாட்டிலே இருக்கிறான். பாசிஸ்ட் அடிமை சொந்தக்காரர்கள் தான் நமது பகைவர்கள் செஞ்சேனையின் வெற்றியும் நமது வெற்றியும் ஒன்றே. ஹிட்லர் கும்பலை ஆட்சியிலிருந்து தூக்கி எறிவோம் என ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி அரைக்கூவல் விட்டது.

தொடரும்....................



No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்