தேர்தல்பற்றி மார்க்சிய லெனினிய கண்ணோட்டம்-01

தேர்தல்பற்றி மார்க்சிய லெனினிய கண்ணோட்டம்-01

தோழர்களே இலக்கு இதழாசிரியர்களான நாங்கள் நடந்து முடிந்த தேர்தலில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி/குழுவின் பணியை புரிந்துக் கொள்ள ஆசான் லெனின் நூல்களையே தேடினோம் அதன் அடிப்படையில் இங்கே தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கட்சி இயக்கமும் செய்தவற்றையும் செய்ய மறந்தவற்றையும் தொகுத்து நூலாக கொணரவுள்ளோம்.

அதற்கு முன்னர் மார்க்சிய ஆசான்கள் தேர்தலை பற்றி என்ன சொல்லியுள்ளனர் அதனை உங்கள் முன் விவாதிக்க வைக்க நினைக்கின்றோம். அதன் ஊடாக பல்வேறு அறிக்கைகள் கூட்டங்கள் மேடைகள் எல்லா பேச்சின் வர்க்க தன்மை மற்றும் நாம் எந்தளவிற்கு விமர்சன தெளிவு பெற்றுள்ளொம் அதன் அடிப்படையில் இந்த விவாதம் நீடிக்கும் தோழர்களே. 

நூல் விரைவில் வரும் இலவசமாக பிடிஎப்பில் பெற்று வாசித்து விவாதிக்க அழைக்கிறோம் தோழர்களே!

லெனின் சொன்னவையே கீழே (பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடுகாலி காவுத்ஸ்கியும் நூலிலிருந்து)

"தூய ஜனநாயகம்" எனும் மாயை (The Illusion of Pure Democracy):-காவுத்ஸ்கி, முதலாளிகள், தொழிலாளர்கள் என எந்த வர்க்கப் பாகுபாடும் இல்லாமல் ஒட்டுமொத்த மக்களுக்கும் பொதுவாகப் பொருந்தக்கூடிய ஒரு "தூய ஜனநாயகம்" இருப்பதாக வாதிட்டார். இதை லெனின் அப்பட்டமான மார்க்சிய விரோத நிலைப்பாடு என விமர்சித்தார்.

வர்க்கப் பார்வையின்றி ஜனநாயகம் இல்லை: லெனினின் கூற்றுப்படி, முதலாளித்துவ சமூகத்தில் எந்தவொரு அரசியல் கருத்தாக்கத்தையும் (சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம்) வர்க்கப் பார்வையின்றிப் பேசுவது முதலாளித்துவத்திற்குச் செய்யும் சேவையாகும்.

அரசு என்பது ஒரு வர்க்கக் கருவி: அரசு என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான கருவியே தவிர, அது சமூகத்திற்கு அப்பாற்பட்ட பொதுவான நடுவர் அல்ல. எனவே, ஒரு வர்க்க அரசு வழங்கும் ஜனநாயகமும் அந்த ஆளும் வர்க்கத்தின் நலனைச் சார்ந்ததாகவே இருக்கும்.

 முதலாளித்துவ ஜனநாயகம்: சிறுபான்மை யினருக்கான ஜனநாயகம்:- முதலாளித்துவ நாடுகளில் நடைமுறையில் உள்ள ஜனநாயகத்தை காவுத்ஸ்கி புகழ்ந்தபோது, லெனின் அதன் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டினார்.

சட்டமும் நடைமுறையும்: முதலாளித்துவ ஜனநாயகத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று எழுதப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அது பணக்காரர்களுக்கான ஜனநாயகமாகவே செயல்படுகிறது.

பத்திரிக்கை சுதந்திரம்: முதலாளித்துவ அமைப்பில் "பத்திரிக்கை சுதந்திரம்" என்பது அச்சுக்கூடங்களையும் காகித ஆலைகளையும் யார் விலைக்கு வாங்கியிருக்கிறார்களோ (அதாவது பெரும் முதலாளிகள்), அவர்களுக்கான சுதந்திரமே ஆகும். ஏழைத் தொழிலாளி தனது கருத்தை லட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு செல்ல அவனிடம் செல்வமோ சாதனங்களோ இருப்பதில்லை.

கூட்டம் கூடும் உரிமை: அரசியல் சட்டத்தில் கூட்டங்கள் நடத்தச் சுதந்திரம் அளிக்கப்படுகிறது. ஆனால், நகரத்தின் சிறந்த பொதுக் கட்டிடங்களும் அரங்குகளும் முதலாளிகளின் சொத்துகளாகவே இருக்கின்றன.

லெனின் சுருக்கமாக, முதலாளித்துவ ஜனநாயகம் என்பது "சிறுபான்மையினருக்கான (சுரண்டுபவர்களுக்கான) ஜனநாயகம் மற்றும் பெரும்பான்மையினர் மீதான (உழைப்பவர்கள் மீதான) ஒடுக்குமுறை" என்று வரையறுத்தார்.

தேர்தல்பற்றி மார்க்சிய லெனினிய கண்ணோட்டம்- நூலிலிருந்து கீழே

அறிமுகம்

தோழர்களுக்கு வணக்கம்

இன்று இந்திய கம்யூனிச கட்சி/ இயக்கங்கள் பல்வேறுவிதமான போக்கில் உள்ளன. சிபிஅய் தொடங்கி அதன் வழி தோன்றலான சிபிஎம்மும் மார்க்சிய ஆசான்களான லெனின் ஸ்டாலின் மாவோவினை பின் பற்றி ஒரு புரட்சியை சாதிக்க வல்ல கட்சியாக இல்லாமல் ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் 20 காங்கிரசில் எடுத்த முடிவை ஏற்றதனால் அவை பாட்டாளி வர்க்க புரட்சியை கைவிட்டு 2ஆம் அகிலத் தலைவரின் (காவுத்ஸ்கிய வாதத்தை) நிலைபாட்டை ஏற்று புரட்சிக்கு பதிலாக சரணாகதி பாதை மேற்கொண்டனர். அந்த திருத்தல்வாதம் ஒட்டுமொத்த கட்சியையும் புரட்சி என்ற வார்த்தையை உச்சரிப்பது கூட வெறுப்படைய செய்யும் வகையில் பயிற்று விட்டதோடு பாராளுமன்றததில் பங்கெடுபதன் மூலம் சாதித்துவிடலாம் என்ற முதலாளித்துவ பாதையை கையில் எடுத்து அணிகளை அடையாள போராட்டதிற்காக போராடும் அமைப்பாக சீரழித்துவிட்டது

இந்த இதழானது தேர்தல் பற்றி இங்குள்ள இடதுசாரிகள் என்பவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் புரட்சியாளர்கள் என்று பேசி கம்யூனிஸ்ட் கட்சி இயக்கங்களின் பெயரில் இயங்குபவர்கள் எல்லோரும் கொண்டுள்ள நடைமுறை சார்ந்தவற்றை ஒரு மார்க்சிய கண்ணோட்டத்தில் விமர்சிப்பதற்காகவே இந்த இதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

 முதற்கண் இந்த இதழ் மார்க்ஸ், ங்கெல்ஸ் லெனின் மற்றும் மாவோ ஆகியோரின் நேரடி தத்துவார்த்த போராட்டங்களும் வழிகாட்டலும் சமூக விஞ்ஞான அடிப்படையில் அவர்களுடைய எழுத்து  ஆதாரங்களின் அடிப்படையில் தேர்தலை பற்றி விரிவாக பார்ப்போம். அதாவது, ஜெர்மனியில் உள்நாட்டு போர் என்ற பகுதியில் மிகத் தெளிவாக பாரீஸ் கம்யூன் நடைமுறைகளை பற்றி விளக்கி இருப்பார் மார்க்ஸ், அதனை மிகத் தெளிவாக லெனின் அரசும் புரட்சியும்” நூலில் எடுத்து தொகுத்து எழுதியிருப்பார். அதேபோல 1905 ரஷ்ய புரட்சி புரட்சிக்கான தயாரிப்பில் ரஷ்யாவில் ஏற்பட்ட இரண்டு வித போக்குகளை அம்பலப்படுத்தி லெனின் பாராளுமன்றத்தை பயன்படுத்துவதா? அல்லது அதனைப் பற்றி புரிந்து கொள்வதற்கு என்ன வகையான தந்திரத்தை கையாளுவது என்பதை தெளிவுபடுத்தி இருப்பார். அதனையே பிறகு அரசும் புரட்சி என்ற நூலில் மிகச் சிறப்பாக தெளிவுபடுத்தி எழுதியிருப்பார். பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடுகாலி காவுத்ஸ்கியும் நூலில் பாராளுமன்றத்திற்குள் காவுத்ஸ்கி விழுந்துவிட்டதையும் அவர் முதலாளித்துவத்தை உயர்த்திப்பிடிப்பதையும் சுட்டி காட்டி இருப்பார். இறுதியாக லெனின் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்றத்தை புறக்கணிப்பதை பற்றி எழுதும்போது இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவ கோளாறு என்ற பகுதியில் சட்டமுறையில்லான நடைமுறைக்காக பாராளுமன்றத்தை அம்பலப்படுத்துவதும் அதற்கான பணியை கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டியதை பற்றி விளக்கியிருப்பார். மேலும் மாவோ குருசேவ் பற்றி விமர்சித்தார் இன்று உலகெங்கும் அன்றைய நவீன திருத்தல்வாதி குருசேவை பின்பற்றுவோர்களே!

இன்று உலகெங்கும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளதை காணலாம் ஆனால் அவைகள் மேற்காணும் ஆசான்களின் விமர்சனங்களின் அடிப்படையில் ஒவ்வொறு கட்சியின் நடைமுறையில் நுணுக்கி ஆராய்ந்து  பார்க்கும் பொழுது பாராளுமன்ற தேர்தல் என்பது என்ன? அதனை ஒரு கம்யூனிஸ்டுகள் எப்படி கை கொள்வது என்பதை தெளிவுபடுத்தி மார்க்சிய ஆசான்கள் முன் வைத்துள்ளதை இங்குள்ள கம்யூனிஸ்டுகள் புரிந்து கொண்டாதாகவே இல்ல என்பதே நம் முன் உள்ள கேள்வி!.

இதனை நாம் மூன்று விதமாக பிரிக்களாம். முதலில் சிபிஐ, சிபிஎம் மற்றும் லிபரேஷன் போன்ற தேர்தலில் நேரடியாக பங்கெடுக்கும் கட்சிகள். இவர்கள் கொண்டுள்ள நடைமுறை என்ன என்பது! அவர்களுடைய தொழிற்சங்கமாகட்டும் மற்ற அவர்களின் வெகுஜென அமைப்புகள், எல்லாம் ஒற்றை நோக்கம் கொண்டவை ஆட்சியை கைபற்றுவதே அவர்களின் எல்லாவகை போராட்டமும் தேர்தலுக்குள் முடங்கிக் கொள்வது அல்லது அவர்கள் போராடுவது பாராளுமன்ற தேர்தல் நோக்கதிற்காமட்டுமே. ஆக தேர்தலே முழு நிகழ்ச்சி நிரலினை கொண்டு செயல்படுகின்றனர். உண்மையாலுமே அவர்கள் மார்க்சிய லெனின் ஆசான்கள் சொன்னவற்றை புறகணித்து விட்டனர் அல்லது அவர்கள் சந்தர்ப்பவாதாமாக் புரிந்து செயல்படுகின்றனர். ஆகவே இவர்கள் மார்க்சிய லெனினிய தத்துவ வழிகாட்டுதல் இன்றி சொந்த நடைமுறையின் காரணமாய் இவர்கள்  தோல்வி கண்டுள்ளனர் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கின்றனர். தேர்தல் நிலைப்பாட்டில் இவர்கள் வலதுசாரி பிரிவான முதலாளித்துவத்தின் பக்கம் நின்று கொண்டுள்ளனர். இவர்கள் சிவப்பு துணி அணிந்த முதலாளித்துவ சேவகர்களே!

 அதே நேரத்தில் புரட்சி பேசும் பல்வேறு குழுக்கள் அதன் இயக்க வரலாறு 50 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில்; இந்த இயக்கங்களின் அனுபவம் என்னே? இவர்கள் உண்மையாலுமே புரட்சிகானவர்கள்தானா என்ற கேள்வி எழுகிறது! மேலும் இவர்களின் சாதனை என்ன? மேற்காணும் யாவரும் தத்துவார்த்த ரீதியாக மார்க்சிய லெனினியத்தை முழுமையாக உள்வாங்கமை இவர்களுடைய மோசமான நிலைக்கு காரணமாக உள்ளது.

மார்க்சியமோ, தனிச்சிறப்பான கூறுகளுக்கும்,பருண்மையான நிலைமைகளுக்கும் ஒருங்கிணைந்த வழியையையும் தீர்வையும் கோருகிறது. அதற்கு மாறாக, சந்தர்ப்பவாத அரசியலையே நடைமுறையாகக் கொண்டவர்கள் வெவ்வேறு பிரச்சினைக்கு வெவ்வேறு தீர்வுகளைக் கூறும் தத்துவங்களைக் கலவையாக்கி, இதுதான் “மண்ணுக்கேற்ப மார்க்சியம்” என்கின்ற அளவிற்கு தரம்தாழ்ந்துள்ளதையும் காணலாம்.

மாவோ ஒரு முறை சொன்னது போல் மார்க்சியம் என்பதே பொதுத்தன்மையைக் குறிப்பான தன்மையுடன் இணைப்பதாகவும்.அந்தந்த நாடுகளில் உள்ள குறிப்பான தன்மைகளுக்கு ஏற்ப பொதுவான தன்மைகள் பொருத்தப்பட வேண்டுமே தவிர,குறிப்பான தன்மைகளுக்கு முதன்மை கொடுத்து பொதுத்தன்மைகளை மறந்துவிடக்கூடாது. ஆனால் இங்கோ பலர் இது போன்ற பொதுத்தன்மைகளை புறக்கணித்து விடுகின்றனர். இங்குள்ள சிலரின் கோட்பாடு மட்டுமல்ல அவர்களுக்கு மார்க்சியமே அவர்களின் ஒவ்வொருவரின் தேவைகளை ஒட்டி மார்க்சியம் தனித்தனியாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். மார்க்சியத்தில் ரஷ்யா மார்க்சியம் ,சீனா மார்க்சியம் ஏன் தமிழகம் மார்க்சியம் என்று கோட்பாடுகள் இல்லை. அந்தந்த நாட்டின் பொதுத் தன்மையைக் குறிப்பான குறிப்பான தன்மையுடன் இணைப்பதாகும்.

ஒவ்வொரு நாட்டின் விடுதலைக்கான பாதைகள் மாறுமே தவிர ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியா மார்க்சியம் என்பதில்லை.ரஷ்யாவின் குறிப்பான சூழலுக்கு ஏற்ப அங்கு ஆயுத ரீதியிலான குறுகிய கால எழுச்சிப் பாதை மேற்கொள்ளப்பட்டது.

இதோ மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் அரசு இயந்திரத்தை தேர்தல் கருவியாக்கிய பிரதமர் — 12 ஆண்டுகால அதிகார துஷ்பிரயோகம் செய்வதையும் அதன் பின்னணியை விவரமாக வாசித்தேன் அதை சற்று நமது விவாதத்திற்கு கொண்டு வந்தால், இங்கு மட்டும் என்னவாம்? சிபிஐ, சிபிஎம் மற்றும் லிபரேசன் போன்ற வெகுஜன ஸ்தாபனம் கொண்டுள்ளோர் அந்த ஸ்தாபனத்தின் நோக்கம் பணி  என்னவாக உள்ளது? இதுவரை லெனின் சுட்டிக்காட்டி சென்ற கட்சி புரட்சிக்கான சரியான பணியாற்றவில்லை. இன்னொறு பக்கம் தேர்தல் காலங்களில் தங்களின் எதிர்ப்போயோ அல்லது ஆதரவையோ தெரிவித்து விட்டு அப்பப்பொழுது அடையாள போராட்டங்களை நடத்தி தங்களின் இருப்பை காத்துக் கொள்ளும் கட்சிகள் இயக்கங்கள் இந்த ஆளும் வர்க்கத்தின் உழைக்கும் மக்கள் விரோத செயல்களை முடக்க ரசியாவில் சீனாவில் அமைக்கப்பட்ட சோவியத் அல்லது கம்யூன் பற்றி இதுவரை சிந்திக்கவும் இல்லை அதற்கான பணியினை கணக்கில் கொள்ளவும் இல்லை.

உழைக்கும் மக்களை ஒருங்கிணைக்க அவர்களின் பிரச்சினைக்கு இந்த தேர்தல் மூலம் தீர்வில்லை அதற்கு மாற்று பாதை எவை என்பதனை உலகில் பாரிஸ் கம்யூன் தொடங்கி ரசியாவிலும் சாதித்து காட்டியதை இவர்கள் இதுவரை ஏன் செயல்முறை படுத்த முன் வரவில்லை?

ஆகவே “சாமியை பூஜீக்கும் பூஜாரிபோல் மார்க்சிய சொல்லாடல்களை பேசி காலம் கடத்துவதனால் ஒரு பயனும் இல்லை மார்க்சிய வேடதாரிகளே!” மார்க்சிய ஆசான் களின் வழிகாட்டுதல்களை கோட்பாடுகளை ஏற்று நம் நாட்டிற்கான விடுதலைக்கான பாதை தேர்தலில் இல்லை உழைக்கும் மக்களின் அதிகாரத்தில்தான் உள்ளது அதற்கான பாதையை நடைமுறையில் மக்களுக்கு புரிய வைக்க முன்வராத எவரும் கம்யூனிஸ்டுகளா?

தோடர்ந்து விவாதிப்போம்

தோழமையுடன்

இலக்கு இணைய இதழ் ஆசிரியர் குழு

23 ஏப்ரல் 2026

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்