சோசலிசத்தின் சாதனைகள்-1

இன்றைய சமூகத்தில் பெண்கள் மீதான ஒடுக்கு முறை மற்ற உழைப்பு சுரண்டல் போலவே வெவ்வேறு வடிவங்களில் தொடரவே செய்கின்றன , இன்றை ஆட்சியாளர்கள் எல்லா வடிவ அடக்குமுறையில் பெண்களையும் விட்டு வைக்கவில்லை, அதாவது மூடக் கருத்துகள் பெண்கள் மீது திணிப்பதும் அதனை ஒட்டி அவர்களை ஒடுக்குவதும் ஒரு சமூக தேவையாக உள்ளது. நவீன அறிவியலும் நவீனமயமான வாழ்வும் இவற்றில் பலவற்றை வழக்கொழியச் செய்துவிட்டாலும் இந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பின்னால் இருக்கும் பார்வைகள் (மத சமூக கண்ணோட்டம்) பெரிதாக மாறிவிடவில்லை. அந்தப் பார்வைகள் வெவ்வேறு வடிவங்களில் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளவே செய்கின்றன.

இந்த அவலங்களுக்கு முடிவுகட்டி மாற்றி அமைத்து பெண்களை சமூகத்தில் சரிநிகர் சமனாக நடத்தி காட்டிய சோசலிச சோவியத் பற்றிய தெரிந்துக் கொள்வோம். இங்கே பேசும் பெண்ணியம் (பெரியார் வகைபட்டவையாக இருந்தாலும் ஏகாதிபத்திய வழியில் வந்தவையாக இருந்தாலும்) விடுதலைகானவை அல்ல. தேவைபட்டால் விரிவாக பேசுவோம் வேறொரு நேரத்தில் பேசலாம்.

சோவியத் ஆட்சியும் சமுதாயத்தில் பெண்கள் நிலையும்.
“அவர் தன் கணவருக்கு மனைவியாக, குழந்தைக்குத் தாயாக, முதலாளிக்குத் தொழிலாளியாக என்று தன் ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் வியர்வையாய் சிந்துகிறார். ஆலைத் தொழிலாளியாகட்டும், அச்சகம் அல்லது ஏதேனும் ஒரு நிறுவனம் ஆகட்டும், அங்கே வேலை செய்யும் தன் கணவருக்கு சமமாக வெளியே உழைத்துவிட்டு, பின் தன் குடும்பத்தையும் பராமரிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு முதலாளித்துவமானது பெண்களால் தாங்க முடியாத பாரத்தை அவர்கள் மேல் சுமத்தியிருக்கிறது” (பக்கம் 11)
“உழைக்கும் பெண்கள் தமக்குக் கிடைக்கும் சிறு ஓய்வு நேரங்களிலும் சமையல் வேலைகளால் அவதிப்படுவதை விடுவித்து, பொது உணவு விடுதிகளையும் சமூகச் சமையற்கூடங்களையும் கம்யூனிச சமுதாயம் ஏற்படுத்திக் கொடுக்கும்” (பக்கம் 16)
“அப்படிப்பட்ட பழைய குடும்ப முறையே பாட்டாளி வர்க்க விடுதலைக்கான உணர்வை இறுக்கித் திணறடிக்க வல்லது என்றும் உழைக்கும் ஆண், பெண்களிடையே எழுந்து வளரும் புரட்சி உணர்வை பலமிழக்க வைக்கும் என்றும் முதலாளிகள் நன்கு அறிவார்கள். குடும்பப் பராமரிப்பிற்காகவே உழைப்பாளர்கள் முதலாளிகளுடன் சமரசம் செய்துகொள்கின்றனர். குழந்தைகள் பசியால் வாடும் பொழுது முதலாளியின் எத்தகைய கொடுமையான நிபந்தனைகளுக்கும் உட்பட்டு பெற்றோர் அடிபணிந்து விடுகின்றனர்” (பக்கம் 19)
“வீட்டு வேலைகளிலிருந்து விடுபட்டாலும் கூட குழந்தைப் பராமரிப்பு என்ற ஒன்று இருக்கிறதே என்று நீங்கள் வாதிடலாம். இங்கும் சோவியத் அரசே இந்தப் பொறுப்பை ஏற்கும்” (பக்கம் 16)
“உழைக்கும் தாயானவள் தன் குழந்தைகளையும் மற்றவர்களது குழந்தைகளையும் வேறுபடுத்திப் பார்ப்பதை நிறுத்திவிடக் கற்றுக்கொள்ள வேண்டும். இங்கே இருக்கும் குழந்தைகள் எல்லாம் நம் குழந்தைகள், சோவியத் ரசிய உழைப்பாளர்களின் குழந்தைகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” (பக்கம் 23)
“பல நூற்றாண்டுகளாக மனித சமூகத்தால் கனவு காணப்பட்ட விண்ணுலகம் இம்மண்ணுலகிலேயே எழுந்து மலருவதை இதோ செங்கொடி அறிவித்துக்கொண்டிருக்கிறது!” (பக்கம் 24)
(கம்யூனிசமும் குடும்பமும் ! – அலெக்சான்ட்ரா கொலந்தாய் புத்தகத்திலிருந்து… சில பகுதிகள்)
________________________________________________
வெகுஜனங்களை அரசியலுக்குக் கொண்டுவருவது --பெண்களையும் அதே மாதிரியாகக் கொண்டுவராமல்-- முடியாது. ஏனென்றால் முதலாளித்துவத்தின் கீழ் மனிதகுலத்தின் பாதியளவிலிருக்கும் பெண்குலம் இரு மடங்கு ஒடுக்கப்படுகிறது. உழைக்கும் பெண்களும் விவசாயிப் பெண்களும் மூலதனத்தால் ஒடுக்கப்படுகிறார்கள் ஆனால் அதற்கும் மேலாக, முதலாளித்துவக் குடியரசுகளில், மிகவும் அதிகமான ஜனநாயகம் நிலவுகின்றவற்றில் கூட.
முதலாவதாக:- சட்டம் அவர்களுக்கு ஆண்களோடு சமத்துவம் கொடுக்கவில்லை என்பதால், அவர்களுக்குச் சில உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
இரண்டாவதாக:- அவர்கள் ”வீட்டுவேலை என்ற அடிமைத்தனத்தில்” .சிக்கியிருக்கிறார்கள். ஏனெனில் சமையலறையிலும் வீட்டிலும் அற்பமான, அழுக்குப் படிந்த, முதுகெலும்பை உடைக்க கூடிய, அறிவை மந்தப்படுத்துகின்ற உழைப்பு என்ற அடிமை வேலையை அவர்கள் அளவுக்கு மீறிச் செய்ய வேண்டியிருக்கிறது.
பெண்களுக்குச் சமத்துவம் மறுக்கப்பட்டு அவர்கள் ஒடுக்கப்படுவதன் மூலவேர்களை சோவியத் புரட்சி, போல்க்ஷிவிக் புரட்சி, பிடுங்கியதைப் போல உலகத்தின் வேறு எந்தக் கட்சியும், புரட்சியும் எந்தக் காலத்திலும் கனவில் கூட நினைத்தது கிடையாது. இங்கே சோவியத் ருக்ஷ்சியாவில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமத்துவம் இல்லாத நிலைமையில் (ஒரு) சுவடு கூட சட்டத்தில் விட்டுவைக்கப்படவில்லை. சோவியத் ஆட்சி விக்ஷேசமாகத் திருமணம், குடும்பம் பற்றிய சட்டங்களிலே இருந்த, அருவருப்பூட்டும் கேவலமான, பாசாங்குத்தனமான சமத்துவமற்ற நிலையையும், குழந்தைகளுக்கிடையே கூட சமமான அந்தஸ்து இல்லாத நிலையையும் அகற்றிவிட்டது.
பெண்கள் விடுதலையில் இது முதல் நடவடிக்கை மட்டுமே; ஆனால் முதலாளித்துவ குடியரசுகளில்---- அவற்றில் அதிக ஜனநாயகம் உள்ளவற்றையும் சேர்த்துக் கொண்டு----ஒன்றுலாவது இந்த முதல் முயற்சியைச் செய்வதற்குக் கூட துணிவு வரவில்லை.”புனிதமான தனிச் சொத்துரிமையைக்” கண்டு ஏற்படுகின்ற பயம்தான் இதற்கு காரணம்.
இரண்டாவதும், மிக முக்கியமானதுமான நடவடிக்கை நிலத்திலும் தொழிற்சாலைகளிலும் தனிச் சொத்துரிமையை ஒழிப்பதாகும். இந்த நடவடிக்கை, -- இது மட்டுமே-- தனித் தனியாக வீடுகளை நிர்வகிப்பதிலிருந்து விரிந்த அளவிலான சமூகப்படுத்தப்பட்ட குடும்ப சேவைகளுக்கு மாற்றுவதன் மூலம் “ வீட்டு அடிமைத் தனத்திலிருந்து” பெண்களை விடுதலை செய்து, அவர்களுடைய முழுமையான விடுதலைக்கு, உண்மையான விடுதலைக்கு வழி வகுக்கும்.
இந்த மாற்றம் கடினமானதே; ஏனென்றால் இதில் மிக ஆழமாக வேரூன்றிவிட்ட, உறுதியான, மரத்துப்போன, இறுக்கமான “ஒழுங்கமைப்பை” (அருவருப்பான, காட்டுமிராண்டித்தனமான முறை என்று சொல்வது உண்மையாகப் பொருத்தமாக இருக்கும்.) திருத்தியமைப்பது சம்பத்தப்பட்டிருக்கிறது. ஆனால் மாற்றம் ஆரம்பமாகிவிட்டது; இதற்கு விசை கொடுத்துச் செலுத்தி விட்டோம்.
இப்படிப்பட்ட இணையற்ற,நம்ப முடியாத அளவுக்குக் கடினமான ஆனால் மாபெரும் கடமையை உலகத்திலே மகத்தானதும் உண்மையிலேயே விடுதலையை ஏற்படுத்துவதுமான இந்தக் கடமையை முதல் முதலாகச் செய்கின்ற சோவியத் ருக்ஷ்சியாவுக்கு, இந்த சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தன்று, உலகத்தின் எல்லா நாடுகளிலுமுள்ள உழைக்கும் பெண்கள் எண்ணற்ற பொதுக் கூட்டங்களில் வாழ்த்துக்களை அனுப்புவார்கள். மூர்க்கத்தனமான,அடிக்கடி காட்டுமிராண்டித்தனமாகவும் மாறுகின்ற--- முதலாளித்துவ பிற்போக்குக்கு முன்னால் உறுதியிழக்க வேண்டாம் என்று உத்வேகமூட்டக்கூடிய அறைகூவல்கள் வரும். ஒரு முதலாளித்துவ நாடு எந்த அளவுக்குச் “சுதந்திரமானதாகவும்” “அதிக ஜனநாயகம்” உடையதாகவும் இருக்கின்றதோ அந்த அளவுக்கு அங்கேயுள்ள முதலாளித்துவக் கும்பல் அதிகக் காட்டுத்தனமாகத் தொழிலாளர் புரட்சியைத் தாக்கும். வட அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற ஜனநாயகக் குடியரசு இதற்கு உதாரணமாகும். ஆனால் தொழிலாளிகளில் பெரும்பான்மையினர் ஏற்கனவே விழிப்படைந்து விட்டார்கள். ஆசியாவிலும் கூட செயலற்ற, மந்தமான, தூக்க மயக்கமுடைய மக்கள் திரளினர் ஏகாதிபத்திய யுத்தத்தினால் முற்றிலும் விழித்துக் கொண்டு விட்டனர்.
உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் தேக்க நிலை உடைக்கப்பட்டு விட்டது. ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து மக்களினங்களுடைய விடுதலை, மூலதனம் என்ற நுகத்தடியிலிருந்து உழைக்கும் ஆண்கள் பெண்களுடைய விடுதலை என்ற பேரெழுச்சியை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது. நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் லட்ச்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்த இலட்சியத்தைத் தாங்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றார்கள்.
1921, மார்ச் 4 லெனின் நூல் திரட்டு.
தொகுதி 42,
பக்கங்கள் 368-370
சோவியத் ஆட்சியும் சமுதாயத்தில் பெண்கள் நிலையும்
பக்கங்கள் 26 -29
தொட்ரும்.............

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்