புரட்சிகர சூழ்நிலை இல்லையேல் புரட்சி சாத்தியமன்று-lenin

புரட்சிகர சூழ்நிலை இல்லையேல் புரட்சி சாத்தியமன்று, அதேபோன்று புரட்சிகர சூழ்நிலை ஒவ்வொன்றும் புரட்சியை எழச்செய்ய வேண்டுமென்பது இல்லை.அக நிலை மாறுதலும் இருக்கு வேண்டும், போதிய அளவு பலம் படைத்த புரட்சிகர வெகுசன செயலைமேற்கொள்ளும் புரட்சிகர கட்சியும் அவசியம்..புரட்சிகர சூழ்நிலை என்பதற்கான அறிகுறிகள் யாவை என்று மூன்று விதமான அடிப்படைகளை குறிப்பிடுகிறார் லெனின்

1). ஆதிக்கம் செலுத்தும் வர்க்கங்கள் தமது ஆதிக்கத்தை எந்த மாற்றும் இன்றி தொடர்ந்து நடத்தி செல்வதற்கு சாத்தியமற்றதாகுதல்;"மேல் வர்க்கங்களுக்கிடையே" ஏதேனும் ஒரு வடிவத்தில் நெருக்கடி ஏற்பட்டு ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தினுடைய கொள்கை நெருக்கடிக்கு உள்ளாகி, இதன் விளைவாக வெடிப்பு உண்டாக்கி, ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் அதிருப்தியும் ஆத்திரமும் இவ்வெடிப்பின் வழியே பீறிட்டெழுதல். புரட்சி நடைபெறுவதற்கு, பழைய வழியில் "அடிமட்ட வர்க்கங்கள் விரும்பாதது மட்டுமின்றி சாதாரணமாகப் போதாது; பழைய வழியில் வாழ மேல் மட்ட வர்க்ங்களுக்கு முடியாமற் போவதும் அவசியமாகும்.  2). ஒடுக்கப்படும் வர்க்கங்களுடைய துன்ப துயரங்களும் வறுமையும் வழக்கமாக இருப்பதை காட்டிலும் அதிகமாக கடுமையாகி விடுதல் ;3) மேற்கண்ட காரணங்களின் விளைவாக மக்கள் பெரும் திரளானரது  செயல்பாடு கணிசமாக அதிகரித்து விடுதல்; மக்கள் பெருந்திரளினர் "சமாதான காலத்தில்" தாம் சூறையாடப்படுவதற்கு மறுப்பு இல்லாமலே இடம் அளித்தவர்கள் ஆயினும் கொந்தளிப்பான காலங்களில் வரலாறு படைக்க வல்ல சுயேட்சை செயலில் இறங்கும்படி நெருக்கடி  நிலைமைகள் எல்லாவற்றாலும் மற்றும் "மேல் வர்க்கத்தாலும்கூட" இழுத்து விடப்படுகிறார்கள்.

தனிப்பட்ட கோஷ்டிகள் கட்சிகளின் சித்தத்தை மட்டுமின்றி தனிப்பட்ட வர்க்கங்களின் சித்தத்தையும் சார்ந்திராத இந்தப் புறநிலை மாறுதல்கள் இல்லாமல் பொதுவாக புரட்சி சாத்தியமன்று இந்தப் புறநிலை மாறுதல்கள் யாவும் சேர்ந்த ஒட்டு மொத்தமே புரட்சிகர சூழ்நிலை எனப்படுகிறது.

இவைதான் புரட்சி பற்றிய மார்க்சிய கருத்தோட்டங்கள் இவை மிகவும் பல தடவை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டவை மறுக்க முடியாதவனாக எல்லா மாற்றங்களும் ஏற்கப்பட்டவை ரஷ்யாவில் 1905 ஆம் ஆண்டின் அனுபவத்துக்கு குறிப்பாக சிறப்பாக மெய்பித்து காட்டப்பட்டவை (இயக்கவியல் பிரச்சனையைப் பற்றி லெனின்  பக்கம் 28 -29 ).


இயக்கவியல் பிரச்சினை பற்றி நூல் PDF ல் இந்த லிங்கில்



No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்