இருவேறு இந்தியா-சிபி

இருவேறு இந்தியா-சிபி

முப்பது ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின்செல்வத்தையும் தற்போதைய செல்வத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியா ஒரு பணக்கார நாடு என்ற முடிவுக்கே நாம் வர வேண்டும். இது ஒரு பாதிதான். முப்பது ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே இருந்த இடைவெளியைத் தற்போதுள்ள இடைவெளியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் முழு உண்மை தெரியும். ஆம்! இந்தியாவின் ஏற்றத்தாழ்வு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் பெரியஇடைவெளியைக்கொண்டிருக்கிறது.

உலக வறுமையை அகற்றுவதற்கான ஆக்ஸ்ஃபாம்அமைப்பின் சமீபத்திய அறிக்கை அச்சுறுத்துகிறது. அதன்படி, இந்தியாவின் பணக்காரர்களின் சொத்தில் ஒவ்வொரு நாளும் ரூ.2,200 கோடி அதிகரிக்கிறது. உச்சத்தில் உள்ள ஒரு சதவீதத்தினரின் சொத்து மதிப்பு 39% அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், பொருளாதார ஏணியில் கீழ்பாதியில் உள்ள மக்கள்தொகையில் சரிபாதி மக்களின் வருமானம் வெறும் 3%தான் அதிகரிக்கிறது.

சுவிட்சர்லாந்தில்நடந்தஉலகப்பொருளாதார மன்றத்தின் உச்சி மாநாட்டுக்கு முன்னதாக இந்த அறிக்கை வெளியிடப் பட்டது. 2018-ல் மட்டும் உலக அளவில் பணக்காரர்களின்செல்வம் நாளொன்றுக்கு 12% அதாவது, ரூ.17,801 கோடி அதிகரித்திருக்கிறது. ஏழைகளாக இருக்கும் பாதிப்பேரின்செல்வமோ 11% குறைந்திருக்கிறது.

இந்தியாவில் 13.6 கோடி பேர், அதாவது மக்கள்தொகையில் 10% பேர் 2004 முதலாகக் கடனில் சிக்கியுள்ளதாக ஆக்ஸ்ஃபாம்அறிக்கை கூறுகிறது. அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வால் வறுமைக்கு எதிரான போராட்டத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்ப தாகவும், உலகெங்கும் மக்களின் கோபம் அதிகரித்திருப் பதாகவும் ஆக்ஸ்ஃபாம்கூறுகிறது.

இந்தியாவின் ஏழை மக்கள் தங்கள் அடுத்த வேளை சாப்பாட்டுக்காகப் போராடிக்கொண்டிருக்கும்போது,, ஒருசில பணக்காரர்கள் மட்டும் செல்வத்தைக் குவித்துக்கொண்டேபோவதுதார்மீகரீதியில் மிகவும் கொடுமையானதுஎன்கிறார் ஆக்ஸ்ஃபாம்அமைப்பின் செயல் இயக்குநர் வின்னி பையான்யீமா. “மேலே இருக்கும் ஒரு சதவீதத்தினருக்கும் மிச்சம் உள்ளோருக்கும் இடையிலான இந்த அசிங்கமான ஏற்றத்தாழ்வு தொடரும் என்றால், நாட்டின் சமூக, ஜனநாயக அமைப்பில் முற்றிலுமான சிதைவு ஏற்படும்என்று அவர் கூறுகிறார்.

உலக மக்கள்தொகையில் பாதி அளவான 380 கோடி பேரிடம் ஒட்டுமொத்தமாக எவ்வளவு சொத்து இருக்கிறதோ, அது எல்லாம் வெறும் 26 பேரிடம் இருக்கிறது என்பது எவ்வளவு கொடுமையானது. உலகின் மிகப் பெரிய பணக்காரரான அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸின் செல்வம் இந்திய மதிப்பில் ரூ.8 லட்சம் கோடியாக அதிகரித்திருக் கிறது. இவருடைய செல்வத்தில் நூற்றில் ஒரு பங்குதான் 11.5 கோடி மக்கள் தொகையைக்கொண்டஎத்தியோப்பியாவின் ஒட்டுமொத்த சுகாதார நிதிநிலை அறிக்கையின் தொகையும்.

இந்தியாவில் மேலே உள்ள 10% பேர்தான் ஒட்டுமொத்த தேசத்தின் 77.4% வளத்தை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சுருக்கிப் பார்த்தோம் என்றால், மேலே உள்ள 1% பேர் தேசிய வளத்தின் 51.53%-த்தை வைத்திருக்கிறார்கள். மக்கள்தொகையில் பெரும்பான்மை யினரும்,கீழ்மட்டத்தில் இருப்பவர் களுமான 60% பேர், தேசிய வளத்தில் வெறும் 4.8%ஐ மட்டுமே சொத்தாகக் கொண்டிருக்கின்றனர். செல்வத்தின் ஏணிப்படியில் மேலே இருக்கும் 9 பெருங்கோடீஸ்வரர்கள் கீழே இருக்கும் 50% பேரின் செல்வத்துக்கு இணையான செல்வத்தைக் கொண்டிருக்கின்றனர்என்கிறார் ஆக்ஸ்ஃபாமின் வின்னி பையான்யீமா.

அது மட்டுமல்லாமல், 2018-2022-க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் தினமும் 70 புதிய கோடீஸ்வரர்கள் உருவாவார்கள் என்றும் கணிக்கிறது ஆக்ஸ்ஃபாம்’. “அரசாங்கங்கள் ஒருபக்கம் மருத்துவம், கல்வி போன்ற பொதுச் சேவைகளுக்குக் குறைவாக நிதி ஒதுக்கி ஏற்றத்தாழ்வை எப்படி மேலும் அதிகமாக்குகின்றன என்பதையும், இன்னொரு பக்கம் பெருநிறுவனங் களுக்கும் பணக்காரர்களுக்கும் எப்படிக் குறைவாக வரி விதிக்கின்றன என்பதையும், வரி செலுத்தாமல் தப்பிப்பவர்களின் மேல் அரசு எப்படி நடவடிக்கை எடுக்கத் தவறுகிறது என்றும் ஆய்வுகள் நமக்குத் தெளிவூட்டுகின்றனஎன்கிறார் ஆக்ஸ்ஃபாம்இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் பெஹர். ‘ஆக்ஸ்ஃபாம்அமைப்பைப் பொறுத்தவரை கடந்த ஆண்டும் புதிதாக 18 பெருங்கோடீஸ்வரர்களை இந்தியா தந்திருக்கிறது. தற்போது இவர்களின் எண்ணிக்கை119.இவர்களின் ஒட்டு மொத்தச் செல்வமும் ரூ.28 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது. இந்தியாவின் பணக்காரர்களிடம் கூடுதலாக வெறும் 0.5% வரியை விதித்தால் மருத்துவத்துக்காக அரசு செலவிடும் தொகையில் கூடுதலாக 50% பணம் கிடைக்கும் என்றும் ஆக்ஸ்ஃபாம்கூறுகிறது.

மத்திய, அனைத்து மாநில அரசுகளின் ஒட்டுமொத்த வருமான, மூலதனக் கணக்கிலான செலவுத் தொகை ரூ.2,08,166 கோடி. இதில் மருத்துவம், பொதுச் சுகாதாரம், தண்ணீர் விநியோகம் ஆகியவற்றுக்குச் செய்யும் செலவுகள் அடக்கம். இது இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரூ.2.8 லட்சம் கோடி சொத்தைவிடக் குறைவானது. எப்போது மாறும் இந்தச் சூழல்? எப்படி மாறும் இந்தச் சூழல்?ஆக்ஸ்ஃபாம்பணக்காரர்கள்

 உலகின் பாதி மக்களின் செல்வமும் 26 நபர்களின் செல்வமும் சமம். எப்போது மாறும் இந்தச் சூழல்? ”

ஆக்ஸ்ஃபாம் அறிக்கையின் அடிப்படையிலே கட்டுரை எழுதப் பட்டுள்ளதால் இந்த ஆக்ஸ்ஃபாம் அறிக்கையின் குறிக்கோள் புரிந்தே நாம் செயலாற்ற வேண்டியுள்ளது. ஆக்ஸ்ஃபாம் அறிக்கை அரசின் உண்மை முகத்தை சுட்டுக்காட்டி உள்ளது அதே வேளையில் அவை மக்களின் இந்த ஏற்ற தாழ்வுக்கு அரசின் கொள்கைதான் என்கிறது. இந்த NGO அமைப்பின் பணியானது அரசை குற்றம் சுமத்தி அமைப்புமுறையை காக்கவே செய்கிறது. உண்மையில் இதற்க்கு காரண்மான அரசமைப்பை தூக்கி எறிய சொல்கிறது மார்க்சிய-லெனினியம் ஆனால் இங்குள்ள திருதல்வாதிகளோ இங்கே இந்த அமைப்பு முறையை பைய பைய சோசலிசமாக மாற்றி விடுவதாக பேசிக் கொண்டுள்ளனர். குறுங்குழுவாதிகளாகி போன புரட்சியாளர் களோ தனித்தனியாகி ஆளுக்கு ஒரு கட்சி என்றாகி; யாருமே இந்த பிரச்சினைக்கு தலைமை தாங்க திறனற்று கிடக்கின்றனர்..... சிந்திப்போம் சரியான மார்க்சிய வழியில் பயணிக்க...

இந்தியாவின் நிலைமைகளைப் பற்றியும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியா வின் அனைத்து பில்லினியர்களின் சொத்துக்களின் மதிப்பைக் கூட்டினால், அத்தொகை இந்திய அரசு போடும் ஆண்டு பட்ஜெட்டை விட அதிகமானது.

அதே போல இந்தியாவின் சொத்துமதிப்பு வரிசைப் பட்டியலில் முன்னணியில் இருக்கும் 1% பணக்கார இந்தியர்களிடம் இருக்கும் சொத்து, இந்தியாவில் ஏழ்மை நிலையில் இருக்கும் 70% மக்களின் சொத்துக்களை விட 4 மடங்கு அதிகமாக இருக்கிறது.

அதாவது சராசரியாக 80 கோடி மக்களின் சொத்துக்களுக்கு நிகரான சொத்தை விட 4 மடங்கு அதிகமான சொத்தை 1.2 கோடி பேர் வைத்துள்ளனர். இந்த மிகப்பெரும் இடைவெளி, இந்தியாவில் நிலவும் மிகப்பெரிய ஏற்றத் தாழ்வையும், அடித்தட்டு மக்கள் சுரண்டப்படும் அளவையும் பகிரங்கமாக கோடிட்டுக் காட்டுகிறது.

மேலும், இந்திய பில்லினியர்களில் முதல் 63 பேரின் மொத்த சொத்து மதிப்பானது, மத்திய அரசின் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொகையாகிய ரூ. 24,42,200 கோடியை விட அதிகம்.

இத்தகைய புள்ளிவிவரங்களோடு, நாளுக்கு நாள் பெருகிவரும் பொருளாதார ஏற்றத் தாழ்வைக் குறித்தும் பேசுகிறது அந்த அறிக்கை.

ஒரு பெரும் கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியின் ஒரு வருடச் சம்பளத்தை, வீட்டு வேலை செய்யும் ஒரு பெண் தொழிலாளர் சம்பாதிக்க 22,277 ஆண்டுகள் தேவைப்படும் என்கிறது இந்த அறிக்கை.

இந்த அறிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அம்பலப்படும் இத்தகைய பொருளாதார ஏற்றத் தாழ்வையும், சுரண்டலையும் கண்டு வெறும் வியப்போடும், குழப்பத்தோடும் கடந்து செல்கிறோம்.

பணம் என்பது வெறுமனே அச்சிடப்படும் ஒரு பொருள் அல்ல. அது சமூகத்திற்கான உற்பத்தியில் பங்கேற்கும் ஒவ்வொருவரின் உழைப்பும் உருவாக்கும் செல்வத்திற்கான ஒரு மாற்றீடு. ஓரிடத்தில் பணம் குவிகிறது என்றால், அது மற்றொரு இடத்தில் இருந்து சுரண்டப்படுகிறது என்றுதானே பொருள். 12 மணிநேரத்திலிருந்து 15 மணிநேரம் வரை சராசரியாக உழைக்கும் நம்மை விடக் குறைவாக உழைக்கும் வெகுசிலரிடம் மட்டும் செல்வம் குவிவது எப்படி ?

இது ஒரு புறமிருக்க., குறைந்தபட்ச கூலி, வேலை நிரந்தரம் போன்ற அடிப்படை உரிமைகளை உழைக்கும் மக்களிடமிருந்து சட்டங்கள் போட்டு பிடுங்கி வருகிறது மோடி அரசு. விவசாயிகளைப் பொருத்த வரையில், விளைபொருளுக்கு உரிய விலையை நிர்ணயிக்காமல், கொள்முதலை முறைப்படுத்தாமல் அவர்களது கோமணத்தையும் உருவிவிடுகிறது அரசு. இப்படி நம்மிடமிருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் திருடப்படும் இந்த வளங்கள் அனைத்தும் தான் இந்தப் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்புகளாக உயர்ந்து நிற்கின்றன. ஏழைகள் மற்றும் நடுத்தரவர்க்கத்தின் சொத்துக்களை பறிக்கும் வேலையைத்தான் முதலாளிகள் செய்கிறார்கள். இதனை புள்ளி விவரங்களோடு எடுத்துச் சொல்லி யிருப்பது கம்யூனிஸ்ட்டுகள் அல்ல, முதலாளித்துவத்தை சீரமைத்து பாதுகாக்க நினைக்கும், ஆக்ஸ்ஃபாம் போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களே. (மூலம்செய்திகளேமாற்றம்என்னுடையவை).மோடியும் அல்லும் பகலும் அயறது பாடுப்படுவது சில பெரும்முதலாளி களுக்காகதான்”.அந்த பெரு முதலாளிகளும் ஏகாதியபத்தியங்களின் வருகையும் அந்த பணம் புழங்கும் இந்தியாவை நோக்கிதான், இங்கே பசி பட்டினியை ஒழிக்க அரசிடமும் திட்டம் இல்லை வரும் வெளி நாட்டு நிறுவனங்களோ கொள்ளையை மட்டுமே கொள்கையாக ஓடோடி வந்துகொண்டிருக் கின்றன. இப்படி பட்ட இந்தியாவை சிறிது அறிதல் அவசியம் அன்றோ?

இரண்டு எதிரெதிர் துருவங்களில் நசிந்து கொண்டிருக்கும் நாடு இந்தியா. வளர்ச்சி, சாதனைஎன்று எழுப்பப்படும் கூச்சல்களுக் கிடையே பிளாட்பாரத்தில் வசிக்கும் மக்கள் அவதியில் இருக்கும் குழந்தைகள்என முரண்பாடுகள். எளிதில் குணப்படுத்தக் கூடிய வயிற்றுப்போக்கு போன்ற காரணங்களால்நமதுநாட்டில்,ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் மரிக்கின்றன. உயிர் பிழைப்பவரில் பாதிக் குழந்தைகள் போதிய ஊட்டச் சத்து இல்லாது வளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பவர்கள். பள்ளிக்கூடப் படிப்பைப் பாதியில் விட்டு வெளியேறும் மாணவர்கள் 40% பேர். 

இப்படியான புள்ளிவிவரங்கள் காட்டாற்று வெள்ளம்போல் பாயும். இந்த இழிவான நிலைக்குமுன்னால் வேறு எந்த நாடும் போட்டிக்கு நிற்க முடியாது.27 கோடி இந்தியர்கள் இரவுச் சாப்பாடு இல்லாமல் உறங்கச் செல்கின்றனர் என்று டாக்டர் மால்கம் ஆதிசேஷையா பல்லாண்டு களுக்குமுன்வேதனையோடுகுறிப்பிட்டிருந்தார். இன்றோ 14 கோடி பேர் இரண்டு வேளை உணவில்லாமல் வாழ்ந்து வருகின்றனர் நவீன தாராளமயம் உறக்கமற்ற இரவுகளை அதிகரித்து உதவுகிறது. அதுவும் இரண்டு இந்தியாவுக்கும் பொது. ஒரு பக்கம் லாப வேட்கையோடும், மூலதனத்தைப் பெருக்கும் வெறியோடும் கண்ணாடி தம்ளர்களில் திரவத்தின் மேற்பரப்பில் ஐஸ் கட்டி கிளிங் சத்தம் எழுப்ப இரவுகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. மறுபுறம் ஒதுங்க இடம் இன்றி, நிரம்பாத வயிறுகளோடு, எதிர்கால வாழ்வும் இருட்டிப் போன திசையில் வெறித்துப் பார்க்கும் கண்கள்.

கார்டியன் நாளேட்டில் ஜான் பில்கர் எனும் சிந்தனையாளர் எழுதி இருந்த கட்டுரை ஒன்று தி ஹிந்து ஆங்கில நாளேட்டில் வந்ததன் அடிப்படையில்(ஜனவரி 4-2017).

எந்த ஆட்சி வந்தாலும் ஏழை மக்களுக்கு விடிவுயில்லை ஏனெனில் இந்த ஆட்சி அமைப்பே வாங்கும் திறன் கொண்ட அல்லது நுகர்வுவெறி கொண்ட கூட்டத்தின் அடிப்படையில் (இன்றொரு இந்தியா) அதனை தன் கைக்குள் வைத்து கொள்ள பெரும் நிறுவனங்களும் அரசும் தன் முற்போக்கு முகமூடியுடன் உள்ளது, ஏழைகளை சோம்பேரிகள், உழைக்காமல் வாழும் கூட்டம் திருடர்கள் இப்படி என்னென்வோ சொல்லி அவர்களின் உழைப்பை மட்டும் மறக்காமல் சுரண்டி கொள்கின்றனர்.

இந்தியாவில் இன்றைக்கும் அதிக பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து வரும் விவசாயத்துறையை வளர்ப்பது பற்றி எந்த ஒரு வேலையையும் மோடி அரசு செய்யவில்லை.அதே நேரம் மோடி இன்னும் ஆறுமாதத்தில் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு அதிகமாகும் எனக் கூறினார். ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த ஓராண்டில் (2015) மட்டும் இந்தியா முழுக்க 16000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதில் பா..2014 இறுதியில் ஆட்சியைப் பிடித்த மகாராஷ்டிராவில் 4238 தற்கொலைகளுடன் முதலிடத்தில் உள்ளது. 

அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம்:

* இந்தியாவில் வெறும் 2.8 கோடி பேர் அமைப்பு சார் (Organized Sector) துறைகளில் வேலை செய்கின்றனர். இதில் 1.75 கோடி பேர் அரசு துறையிலும், 1.14 கோடி பேர் தனியார் துறையிலும் உள்ளனர். இவர்களுக்கு மட்டும் தான் ஓரளவு பணி பாதுகாப்பு உண்டு. அதையும் தனியாருக்கு தூக்கி கொடுக்கும் மோடியின் மக்கள் விரோத போக்கு எந்த இந்தியாவின் தேவைக்கு நீங்களே புரிந்துக் கொள்ளுங்கள்.

* 43.7 கோடி பேர் அமைப்பு சாரா துறைகளில் (Unorganized Sector) வேலை செய்கின்றனர். இவர்களுக்கு பணி பாதுகாப்பும் இல்லை, அடுத்த நாள் வேலை என்பதும் நிரந்தரம் இல்லை.

இந்திய அரசு இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக மாற்ற முயற்சி செய்தும், புதிய வேலைவாய்ப்புகளை முற்றிலுமாக நிறுத்தியும் உள்ளது. அதே நேரம் தனியார்துறையும் புதிய வேலைவாய்ப் புகளை பெரிய அளவில் கடந்த சிலஆண்டுகளாக உருவாக்கவில்லை. இந்தியாவின் வளர்ச்சி கொள்கை என்பது முதலீடு அதிகம் சார்ந்து உள்ள தொழிற்சாலைகளை கொண்டுவருவதில் உள்ளதே தவிர, தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படும் தொழிற்சாலைகளை கொண்டு வருவதில்இல்லை. அதிக முதலீடு சார்ந்து வரும் தொழிற்சாலைகளால் உருவாகும் வேலைவாய்ப்பு என்பது மிகவும் சொற்ப அளவிலேயே உள்ளது.

புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுவது குறைந்து வரும் இந்த நேரத்தில் இருக்கும் வேலைவாய்ப்புகள் காப்பற்றப்பட போராட வேண்டியுள்ளது.

அதே நேரம் மோடி தலைமையிலான இந்திய அரசோ பத்தாயிரத்திற்கும் அதிகமான நேரடி வேலைவாய்ப்பையும், மேலும் சில ஆயிரக்கணக்கான மறைமுக வேலைவாய்ப்பையும்கொடுத்து வந்த நோக்கியா நிறுவனம் சென்னை ஆலையை மூடும் பொழுது அதை தடுக்க எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது. தொலைபேசி உருவாக்கப் பணிகளில் மட்டுமே திறமையான பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்று வேலையின்றி நடுத்தெருவில் நிற்கின்றனர். வேலையிழப்பு மட்டுமின்றி, நோக்கியா மத்திய, மாநில அரசுகளுக்கு கட்ட வேண்டிய பல நூறு கோடி வரியையும் ஏமாற்றிவிட்டு சென்றுள்ளது. மிகவும் வலிமையான பிரதமர் எனசொல்லப்படும் மோடி இதை கண்டும் காணாமல் இருந்தார்.

மே 2014லிருந்து மே 2015வரையிலான ஒரு ஆண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 48% (51,600 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது(16). மோடியின் நெருங்கிய நண்பர் அதானி. அவரது தனிப்பட்ட வானூர்தியில் (Charted Flight) தான் மோடி 2014 தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். ஆஸ்திரேலியாவில் மூடப்படும் நிலையில் இருந்த நிலக்கரி சுரங்கத்தை எடுத்து நடத்த இந்தியாவின் பொதுத்துறை வங்கி வரலாற்றிலேயே பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் அளிக்க ஒப்புக்கொண்டதும் இவருக்கு தான். அதானி உள்ளிட்ட ஒரு சிலரின் வளர்ச்சியை ஒட்டு மொத்த நாட்டின் வளர்ச்சியாக காட்டுகின்றன இந்த புள்ளிவிவரங்கள், எப்படி என சொல்கின்றது பின்வரும் வரிகள்.

மொத்த தேசிய உற்பத்தி(GDP) என்பது எப்படி ஏமாற்றும் தன்மை கொண்டது என்பது குறித்து நானும் க்ளேடினும் வெளிப்படையாக பேசிக் கொள்வோம். பெரும்பாலான மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி இருந்தாலும், ஒரே ஒருவர் லாபமடைந் தாலும் கூட நாட்டின் மொத்ததேசியஉற்பத்திவளர்சியடையக்கூடும்.பணக்காரர்கள்மேலும்பணக்காரர்களாவார்கள், ஏழைகள் மேலும் எழைகளாவார்கள். ஆனால் புள்ளி விவரங்கள் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததாக காட்டும்”.– ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற நூலிலிருந்து (Confessions of a economic hit man – Book) இதை இன்னும் கூட விரிவாக பார்ப்போம். 2013-2014ஆம் ஆண்டில் இந்தியாவில் தனி நபர் வருமானம் (மொத்த தேசிய உற்பத்தியையும், மொத்த மக்கள் தொகை யையும் வகுத்து கிடைப்பது) 80,388 ரூபாய், இது 2014-2015ஆம் ஆண்டு 87,748 ரூபாய். இந்த புள்ளிவிவரப்படி 9.2% வளர்ச்சி. அதாவது அதானி, அம்பானி சேர்ந்த இலட்சம் கோடி ரூபாய்கள் இங்கு 100 கோடி மக்கள் தொகையால் வகுக்கப்பட்டு வரும் தொகை எல்லோரது கணக்கிலும் சேர்த்து (காகிதத்தில்) எல்லோரும் வளர்ந்ததாக, இந்தியா வளர்ந்ததாக ஒரு கானல் நீரை காட்டுகின்றது இந்தபொருளாதார புள்ளிவிவரங்கள்.

ஊழலே ஆட்சியாகஅதானியின் ஒரு இலட்சம் கோடி ரூபாய் பருப்பு விலை ஊழல். குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த பொழுது அதானி, அம்பானி நிறுவனங்களுக்கு இலாபம் சேர்க்கும் வகையில் 25,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது என மத்திய தணிக்கை குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. அதானி குழுமமும், எஸ்ஸார் குழுமமும் அதிக விலைக்கு மின்னுற்பத்தி பொருட்கள் வாங்கியதாக கூறப்படுபதில் 50,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் என தொடர்ந்து ஒவ்வொரு ஊழலாக வெளிவந்த வண்ணம் உள்ளன. இதில் மோடியின் நண்பர் அதானி நிறுவனம் தொடர்பான ஊழல்கள் அதிகம். ஊழல் என்பதுதான் பலனடைவதற்காக திட்டம் தீட்டுவது மட்டுமல்ல, தன்னைச் சார்ந்தவர்கள் பயனடைவதற்காக திட்டம் தீட்டுவதும், செயல்படுவதும் கூட ஊழல் தான்.ஆனால் ஊடகங்களோ மோடியின் ஆட்சியில் ஊழலேஇல்லை என சூடம் ஏற்றி சத்தியம் செய்கின்றன. தூங்குபவர்களை எழுப்பி விடலாம் தூங்குபவர்களைப் போல நடிப்பவர்களை நம்மால் எப்பொழுதும் எழுப்ப முடியாது. 

ஒருபக்கம் வாழ வழியற்ற மக்கள் இன்னொருபுறம் தின்னு கொழுக்கும் கூட்டம்ஆதாரம்:- இந்து ஆங்கில பத்திரிக்கை 

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்