உயிரின் தோற்றம் - இரு கருத்துகள்
பல நூற்றாண்டுகளாக உலகம் தட்டையானது என்றும், சலனமில்லாதது என்றும், சூரியன் பூமியைச்சுற்றி வருகிறதென்றும் கருதப்பட்டு வந்தது. இதுபோன்றே மேலோட்டமான பார்வை காரணமாகவே மனிதன் புழு, பேன், மீன் போன்ற உயிருள்ளவை, தாங்களாகவே சேற்றிலும், சாணத்திலும், பூமியிலும் தோன்றுகின்றன என்று நம்பினான். எதிர்பாராமல் கூட்டம் கூட்டமாக உயிர்ப் பிராணிகள் காணப்படும் இடங்களில் எல்லாம் இவ்வாறு அவை தாமாகவே தோன்றியிருக்க வேண்டுமென்றே மனிதன் நினைத்தான். இன்றுகூட விஞ்ஞான அறிவில்லாத மக்கள் புழுக்கள் சாணத்திலிருந்தும், பூச்சிகள் அழுக்கிலிருந்தும், பேன்கள் வியர்வையிலிருந்தும் தோன்றுகின்றன என்று நம்புகிறார்கள். சாணம், இறைச்சி, அழுக்கு இவற்றில் முட்டையிட்டு, அம்முட்டைகள் குஞ்சு பொரிப்பதால் இந்த ஜீவராசிகள் தோன்றுகின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது.
உயிரென்றால் என்ன? இயற்கை விஞ்ஞானத்தின் ஒருமிக முக்கியமான பிரச்சினை இது. படித்தவராயினும் சரி, இல்லாவிடினும் சரி, இக்கேள்விக்கு ஏதாவது ஒரு வகையில் விடையளிக்கத்தான் செய்கிறார். எந்த ஓர் உலகத் தத்துவமும் இக்கொள்கைக்கு விடையளிக்காமல் நிலைகொள்ள முடியாது.
புராதன காலமுதல் உயிரின் தோற்றத்தைப் பற்றி மனிதன் சிந்தித்து வருகிறான். இக்கேள்விக்கு விடைகாண்பதற்கு மனப்பூர்வமாக முயலாத தத்துவாசிரியனோ தத்துவமோ இல்லையென்றே சொல்லலாம். நமது அறிவு வளர்ச்சியின் ஒவ்வொரு காலகட்டத்திலும், இக்கேள்விக்கு பல்வேறு விடைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவையாவும், கருத்துமுதல் வாதம், பொருள்முதல் வாதம் என்ற இரண்டு உலகத் தத்துவங்களின் நீண்ட முரண்பாட்டைக் காட்டும்.
நம்மைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழ்நிலையை நாம் பொதுவாக இரு பிரிவாகக் காண்கிறோம். ஒன்று உயிருள்ளன. மற்றொன்று உயிரில்லாதவை. உயிருள்ளனவற்றில் ஆயிரக்கணக்கானவகைகளுள்ளன. அவற்றுள் விலங்குகளும், செடிகொடிகளும் அடங்கும். ஆனால் மிகச்சிறிய உயிரணு முதல் உயிர்களுள் சிறப்புவாய்ந்த மனிதன் வரை எல்லா உயிருள்ளனவற்றிற்கும் சோதனைப் பொருள் களினின்றும் வேறு பொதுவான ஏதோ ஒரு தன்மையுள்ளது. அதுதான் உயிர்.
ஆனால் உயிரின் தன்மை என்ன? அதன் சாரம் யாது.... மற்ற புற உலகப் பொருள்களைப் போல உயிரும் பொருளின் ஓர் உருவமா, அல்லது மனிதனது அறிவிற்கு அப்பாற்பட்டது, அவனது அனுபவத்தால் உணர முடியாததுமான பொருளற்ற ஆன்மா - வா?
உயிர் : பொருள்மயமானது என்றால் அதன் சலனத்தையும் அச்சலனத்தைக் கட்டுப் படுத்தும் விதிகளையும் நாம் கண்டுபிடித்து கட்டுப்படுத்தலாம். உயிர் குடிகொண்டுள்ள பொருள்களையும்கட்டுப்படுத்தலாம்; மாற்ற லாம். பொருளல்ல, மனிதன் அறிய முடியாத ஒரு சூட்சுமம் என்றால் நம்மால் அதனைக் கட்டுப்படுத்தமுடியாது.உயிரின் நடவடிக்கை களை ஒதுங்கி நின்று காணத்தான் முடியும். ஏனெனில் அதை இயக்குவது நாம் அறிய முடியாத ஒரு சக்தியல்லவா?
[*] பொருளில்லாத ஒரு சூட்சுமமே உயிரென்று ஆதிமுதல் கருதிவருகிறார்கள். ‘ஆன்மா', ‘பரமாத்மா', ‘தெய்வச்சித்தம்', ‘உயிராற்றல்' என்று பலவகையான பெயர்களால் அதனை அழைக்கிறார்கள். அவர்களது கருத்துப் படி பொருள் சலனமற்ற, உயிரற்ற சடம். இச்சடத்தினுள் உயிர் புகுந்தால் அதனை ஆட்டி வைக்கிறது. உயிர் பிரிந்தால் கூடு சக்தியிழந்து சடமாகிறது. சடத்துக்கு, இணைப்பும், உருவமும் அளிப்பது உயிர்தானென்று அவர்கள் கருதுகிறார்கள்.
உயிரைப்பற்றிய சமயங்களின் கொள்கை அடிப்படை மேற்கூறியதே. பல வேறுபாடுகள் மதத்துக்கும் மதத்துக்கும் இருந்தபோதிலும்
--------------------------------------------------------
l *கருத்துமுதல்வாதிகள்(idealisam) கருத்துமுதல்வாதிகள்: பொருளுக்கு இரண்டாவது இடம் கொடுத்து, கருத்துக்கு முதல் இடம் கொடுக்கும் தத்துவத்திற்கே கருத்துமுதல் வாதம் என்று பெயர். ஆத்மீக வாதம், மானலிக வாதம், மணம்முதல் வாதம், கற்பனா வாதம் என்று பலவாறாகச் சொல்லப்படும். உண்மையில் உள்ளது நம்மனம்தான். மனத்தின், எண்ணப் பிரதிபலிப்பே,உலகமும், புறத்தோற்றங் களும், எதார்த்த உலகம், பிரத்யட்ச வாழ்வு இயற்கை ஆகிய இவை அனைத்தும் நம் கருத்தில்தான் உள்ளன. நம் உணர்வில்தான் இருக்கின்றன என்பது கருத்துமுதல் வாதம் ஆகும்.
--------------------------------------------------------
அவையாவும், உயிர் என்பது கடவுளின் மூச்சு, அது சடத்தினுள்ளிருக்கும் வரைதான் அது இயங்கும்; உயிர்தான் சடம் வாழவும், வளரவும் காரணம் என்று போதிக்கின்றன. உயிர்மூச்சுப் போய்விட்டால் சடம் விழுந்துகிடக்கும்; அழுகும், நாறும் உயிர் கடவுளின் அம்சம்; ஆகையால் மனிதன் அதனைத் தன் அறிவால் உணரமுடியாது. அதை அடக்கியாளும் வல்லமையை என்றுமே மனிதன் பெறமுடியாது. எல்லா மதங்களும் உயிரைப்பற்றி மேற்கூறிய கொள்கைகளையே கொண்டு உள்ளன.
* பொருள் முதல் வாதம், மேற்கண்ட கொள்கைக்கு எதிரான முறையில் உயிர் என்றால் என்ன என்ற கேள்விக்கு விடைகாண முயல்கிறது.உலகிலுள்ளஇயற்கையனைத்தையும் போல் உயிரும் பொருளே. 'பொருளற்ற சூட்சுமம்' என்று உயிரைக் கற்பனை செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பொருளின் ஒரு சிறப்பான வடிவமே உயிர். அதன் தோற்றமும், சிதைவும் இயற்கை விதிகளுக்கு உட்பட்டவை. சோதனைகள் புற உலக அனுபவம், இயற்கையை ஊன்றி நோக்குதல் முதலிய வழிகளிலேயே உயிரின் தன்மையைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். இது பொருள் முதல்வாதிகளின் கருத்து.
மேற்கண்ட அனுபவ முறைகளின் மூலம் இயற்கையை ஆராயும் வழி பயனுள்ளது என்று உயிர்நூல் வளர்ச்சி நமக்குக் காட்டுகிறது. உயிரின் தன்மையையும் இம்முறை கொண்டே அறிந்து, கம்யூனிஸ அமைப்பைச் சிருஷ்டிக்கும் மனிதனது நலன்களுக்குகந்த முறையில் உயிருள்ள இயற்கையை
l * (Dialectical Materialism) இயங்கும் - இயல்: இயற்கையின் அடிப்படை மாறுதல்கள், உள்தொடர்புகள், பரிணாமம் ஆகியவற்றை ஆராயும் முறைக்கு இயங்கு-இயல் என்று பெயர். இயற்கையின் நிகழ்ச்சிகள், தோற்றங்கள் ஆகிய அனைத்தும் இடைவிடாது இயங்கிக் கொண்டும் மாறிக்கொண்டும் இருப்பதாக இயங்கு-இயல் எடுத்துக் காட்டுகிறது. எல்லாப் பொருள்களிலும் நடைபெறுகிற எதிர் சக்திகளின் மோதுதலின் காரணமாக, இயற்கையின் பரிணாம வளர்ச்சி ஏற்படுகிறது என்று இயங்கு-இயல் கருதுகிறது.
____________________________
கட்டுப்படுத்தி மாற்றியமைக்கலாம் என்ற நம்பிக்கையே, சோதனை அனுபவமுறை நமக்களிக்கிறது. உயிரை மனிதன் விஞ்ஞானமுறைகளின் மூலமாகவே அறிய முடியும் என்ற உண்மையை சமீப காலத்தில் உயிர்நூல் விஞ்ஞானிகள் அடைந்துள்ள வெற்றிகள் மெய்ப்பிக்கின்றன. அவ்வெற்றி களனைத்தும், கருத்துமுதல் வாதத்தின் தோல்விகளாகும். ஆனால் வெகுகாலமாக உயிர்களின் தோற்றத்துக்குக் காரணம் என்ன? என்ற கேள்விக்கு விஞ்ஞானத்தால் விடைகூற முடியாமல் இருந்தது. அதுவே கருத்துமுதல் வாதிகளுக்குக்கொண்டாட்டமாயிருந்தது. பெண், குழந்தையைப் பெறுகிறாள்; பசு, கன்றை ஈன்றெடுக்கின்றது; கோழி குஞ்சு பொரிக்கிறது; மீன் சிறு முட்டையினின்றும் தோன்றுகிறது; செடிகள் அதே வகை செடியின் வித்தினின்றும் முளைக்கின்றன. உயிருள்ள யாவும் தன்னினத்திலுள்ள மற்றொன்றிலிருந்து தோன்றுவதை நாம் காண்கிறோம். எப்பொழுதும் இவ்வாறே தோன்றிக் கொண்டிருந்திருக்க முடியாது. நம்முடைய உலகத்துக்கு ஆரம்பகாலம் ஒன்றிருந்தது. பலவகையானசெடிகொடிகளும், விலங்குகளும் முதன்முதல்எவ்வாறுஉலகில்தோன்றின இக்கேள்விக்கு மதங்கள் கூறும் பதில் இதுதான் : எல்லா உயிரினங்களும் கடவுளின் படைப்பு. இன்று வாழும் எல்லா உயிரினங்களின் மூதாதைகளும் கடவுளால் இன்று அவை காணப்படும் நிலையில் உண்டாக்கப்பட்டன. ஆதி மனிதனும் அவ்வாறே கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டான். ஆறு நாட்களில் கடவுள் உலகத்தையும் உலகிலுள்ள உயிருள்ளவையனைத்தையும் படைத்ததாக (யூதர்களுக்கும்கிறிஸ்தவர்களுக்கும் வேதமான பைபிள் நூல்) கூறுகிறது. செடிகளை மூன்றாம் நாளும், மீனையும், பறவைகளையும், ஐந்தாம் நாளும், விலங்குகளை ஆறாம் நாளும், மனிதனைகடைசியாககடவுள்படைத்தாரென்று அந்நூல் கூறுகிறது. முதலில் ஆணையும், அதன்பின்பெண்ணையும் படைத்தாராம். ஆதிமனிதனான ஆதாம் என்பவனைக் கடவுள் களிமண்ணால் செய்து தம்முடைய மூச்சைஊதிஆன்மாவைக்கொடுத்தாராம். இவ்வாறு இப்பொழுதிருப்பது போலவே ஆரம்பத்திலேயே உயிரினங்கள் யாவும் தோன்றின என்பது இயற்கையை மேலாழ்ந்தவாரியாக நோக்கி வந்த முடிவாகும். பல நூற்றாண்டுகளாக உலகம் தட்டையானது என்றும், சலனமில்லாதது என்றும், சூரியன் பூமியைச் சுற்றி வருகிற தென்றும் கருதப்பட்டு வந்தது. இதுபோன்ற மேலோட்டமான பார்வை காரணமாகவே மனிதன் புழு, பேன், மீன் போன்ற உயிருள்ளவை, தாங்களாகவே சேற்றிலும், சாணத்திலும், பூமியிலும் தோன்றுகின்றன என்று நம்பினான். எதிர்பாராமல் கூட்டம் கூட்டமாக உயிர்ப்பிராணிகள் காணப்படும் இடங்களில் எல்லாம் இவ்வாறு அவை தாமாகவே தோன்றியிருக்க வேண்டுமென்றே மனிதன் நினைத்தான். இன்றுகூட விஞ்ஞான அறிவில்லாத மக்கள் புழுக்கள் சாணத்தி லிருந்தும், பூச்சிகள் அழுக்கிலிருந்தும், பேன்கள் வியர்வையிலிருந்தும் தோன்று கின்றன என்று நம்புகிறார்கள். சாணம், இறைச்சி, அழுக்கு இவற்றில் முட்டையிட்டு, அம்முட்டைகள் குஞ்சு பொரிப்பதால் இந்த ஜீவராசிகள் தோன்றுகின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது. இந்தியாவிலும், பாபிலோனியாவிலும், எகிப்திலும், புராதன காலத்தில் எழுதப்பட்டநூல்கள், புழுக்கள், ஈக்கள் பேன் முதலியன இவ்வாறு தாமே தோன்றுவதாக கூறுகின்றன. அவ்வாறே தவளைகள், பர்ம்புகள், முதலைகள் முத்லியன நைல் நதியின் படுக்கையிலுள்ள மண்ணினின்றும் தோன்றுவதாக எகிப்திய நூல்கள் கூறும். இக்கதைகள் மதங்களின் கூற்றுகளை ஆதாரமாகக் கொண்டவை. உயிரற்ற பொருள்களிலிருந்து உயிருள்ள பிராணிகள் தோன்றுவது தேவதைகள் அல்லது பிசாசுகளின் திருவிளையாடல் என்று மதவாதிகள் போதித்தனர். புராதன கிரேக்கப் பொருள் முதல்வாதிகள் சிலர் இக்கூற்றை ஆட்சேபித்தனர். ஆனால் பிளாட்டோ என்ற ஆன்ம வாதியின் போதனைகள் தலைக்கேறியிருந்த காரணத்தால்,பொருள் முதல்வாதிகளின் எதிர்வாதம் மக்கள் செவியில் ஏறவில்லை. பலநூற்றாண்டுகளுக்கு அவருடைய சித்தாந்தமேதத்துவத்துறையில் ஆதிக்கம் செலுத்தியது. அவருடைய கொள்கை என்ன? “பிராணிகளின் உடலிலுள்ள பொருளுக்கு உயிரில்லை. ஆன்மா என்னும் சக்தி அதனுள் புகுந்தால்தான் அவை உயிருள்ளவையா கின்றன”. பிளாட்டோவின் இக்கருத்து, இப்பிரச்னையைத் தீர்ப்பதற்குத் தடையாக விருந்தது. இக்கருத்தை அரிஸ்டாடில் என்ற கிரேக்க தத்துவாசிரியர் மேலும் வலியுறுத்தி வளர்த்தார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு இக்கருத்துநிலைப்பெற்றிருந்ததது. உயிர்ப்பிராணிகள் திடீரென்று தோன்றுகின்றன என்பதை நிரூபிக்க அரிஸ்டாடில் பல உதாரணங்கள்காட்டினார். அதுமட்டுமில்லாமல், இந்நிகழ்ச்சிக்கு கொள்கை பூர்வமான விளக்கமும் கொடுத்தார். எல்லாப் பகுதிப் பொருள்களையும் போல, உயிருள்ள பிராணிகள் இயங்காத ஒரு மூலமும், இயங்கும் ஒரு மூலமும் சேர்ந்து உண்டானது என்று அவர் கருதினார். இயங்காத மூலம் - பொருள் இயங்கும் மூலம் - உருவம். உயிர்ப்பிராணிகள் எல்லாவற்றின் உருவமும், உடலின் சத்தான ஆத்மாவின் வெளித்தோற்றமே. அதுதான் உடலை உண்டாக்கி அதனை உண்மையாக்குகிறது. பொருளுக்கு உயிரில்லை. ஆனால் பொருள் உயிரின் அணைப்பில் ஒரு உருவமாகி, ஆத்மாவின் சக்தியால் இயங்கி, நிலைக்கிறது. உயிரின் தோற்றத்தைப்பற்றிய அவருடைய கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே பிற்கால, கிரேக்க, ரோமன் தத்துவங்கள் உருவாக்கப்பட்டன. பிற்காலத் தத்துவங்கள் உயிர் பிராணிகள் திடீரென்று தோன்றுகின்றன என்ற அரிஸ்டாடிலின் கொள்கையை ஏற்றுக்கொண்டன. அக்கொள்கையை விளக்க மேலும் மேலும் புதிய ஆன்மிக வாத தத்துவங்கள் தோன்றின. புதிய பிளாட்டினியர் என்ற தத்துவவாதிகள், “பொருள்களின் வடிவமாற்றங்களோடு உயிரளிக்கும் ஆவி சேருவதால் உயிர்ப் பிராணிகள் தோன்றுகின்றன. உயிர்ப் பிராணிகளின் உடலில் இயங்கும் ஆவி, "உயிர்ச்சத்து” என்பது என்று போதித்தனர். அவர்களுடைய ஆசிரியர் புளுடோனியஸ்தான் முதன்முதலில் “உயிர்ச்சத்து” என்ற சொல்லைத் தோற்றுவித்தார் என்று தோன்றுகிறது. இக்கருத்து இன்னும் சில பிற்போக்கு விஞ்ஞானிகளுக்கு உடன்பாடாகவேயுள்ளது. “உயிர் எப்படித் தோன்றியது!’ என்ற பிரச்சனைக்கு விடைகாண ஆதி கிறிஸ்தவர்கள் பைபிளின்துணையை நாடினர். எகிப்திய, பாபிலோனிய புராணக் கதைகளே, பைபிளில் காணப்படும் உலக சிருஷ்டிக் கதைக்கு ஆதாரம். கி.பி. ஐந்து, ஆறாம் நூற்றாண்டில் மதாசிரியர்கள் இக்கதைகளை, புதிய பிளாட்டானியக் கொள்கைகளுக்கு ஏற்றவாறு உருமாற்றி எழுதிவைத்தார்கள். உலகில் உயிர் தோன்றிய விதம்பற்றி பைபிளில் காணப்படும் கதைகளுக்கு ஆதாரம் இதுதான். நான்காம்நூற்றாண்டில் வாழ்ந்த பேசில் என்னும் கிறிஸ்தவ பிஷப், உலகம் ஆறு நாட்களில் படைக்கப்பட்டது என்னும் கொள்கையை விளக்கும்போது கடவுளுடைய கட்டளையால் உலகமே புற்பூண்டுகள், மரங்கள், வெட்டுக்கிளிகள், பூச்சிகள், தவளைகள், பாம்புகள், எலிகள், பறவைகள் முதலியவற்றைப் பெற்றெடுத்தது என்று கூறினார். அந்தக் கட்டளையை உலகம் இன்றும் நிறைவேற்றி வருகிறதாம். அவர் காலத்தில் வாழ்ந்த அகஸ்டின் என்னும் மிகச் செல்வாக்கு வாய்ந்த கத்தோலிக்க மதாச்சாரியர் (உயிர்கள் திடீரென்று தோன்றுகின்றன என்ற கொள்கையை விளக்கினார்) கடவுளுடைய இச்சையினால் திடீரென்று உயிர் தோன்றுகிறது. செத்த சடத்தினுள் கடவுளின் உயிர் மூச்சு நிறைந்ததும் அது உயிர்ப் பிராணியாகிறது. கண்ணுக்குத் தெரிய உயிர்வித்துகள் சடத்தை ஆட்டி வைக்கின்றன. இவ்வாறு ஒரு கொள்கையை உருவாக்குகிற கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளுக்கு ஏற்றவகையில் உயிரின் தோற்றத்தை அகஸ்டின் விளக்க முயன்றார். மத்திய காலம் (சுமார் 500 வருஷங்களுக்கு முன் வரை) முழுவதும் விஞ்ஞானத்துக்கு நேர்முரணான இக்கொள்கைகள்ஒப்புக்கொள்ளப்பட்டு வந்தன. மதக் கோட்பாடுகளோடு ஒத்துப்போகாத எந்தக் கொள்கையும் அக்காலத்தில் தலையெடுக்க முடியாது. மதமென்னும் சிப்பியின்றி கொள்கையென்னும் புழு வாழமுடியாது. இயற்கை விஞ்ஞானப் பிரச்சனைகள் புறக்கணிக்கப்பட்டன. அனுபவத்தையும், நேர்முகக் காட்சியையும் அடிப்படையாகக் கொள்ளாமல், பைபிளின் போதனைகளையும், மத வியாக்கியானங் களையும் உருவாக்கிக் கொண்ட காலம் அது. கீழ்த்திசை நாடுகளிலிருந்து கணிதம், வானநூல், வைத்தியம் போன்ற துறைகளைப் பற்றி மிகவும் சொற்பமான அறிவே மேல்நாடுகளுக்கு எட்டிற்று. அரிஸ்டாடிலின் நூல்கள் ஐரோப்பாவில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டன. முதன்முதலில் அவருடைய கருத்துகள் அபாயகரமானவை என்று மதவாதிகள் கருதினார்கள். ஆனால் அவற்றை, மதக்கோட்பாடுகளோடு ஒட்டவைக்க முடியு மென்று கண்டதும் அவர்கள் அரிஸ்டாடிலை, கிறிஸ்துவுக்கு முன்பு தோன்றிய சிறந்த விஞ்ஞான அறிஞர் என்றுதலைக்குமேல் துக்கிவைத்துக் கூத்தாடினார்கள். “மதவாதிகள் அரிஸ்டாடிலின் போதனைகளின் சாரத்தை விட்டுச் சக்கையைப் போற்றத் தொடங்கினர்' என்று லெனின் கூறினார். “அழியாத தெய்வீக ஆவி தான் பொருளுக்கு உயிரளிப்பது என்ற மதக் கொள்கைக்கும், உயிர் தானாகவே தோன்றுவது என்ற கொள்கைக்கும் அரிஸ்டாடிலின் போதனைகள் ஆதரவளிக் கின்றன என்பதைக் கண்டு, அந்த அம்சங்களை மட்டும் போற்றி வளர்க்கத் தொடங்கினார்கள். இதற்கு உதாரணமாகத் தாமஸ் அக்யூனாஸ் என்ற மத்தியால மத போதகரின் கொள்கைகளைப் பார்க்கலாம். "தெய்வீக மருத்துவர் என்ற பட்டம் பெற்ற இம்மதாச்சாரியரது கொள்கைகளை சிறந்த தத்துவமென்று கத்தோலிக்கர்கள் போற்றுகிறார்கள். “உயிரற்ற பொருள்களினுள் உயிர் புகுந்து கொள்வதால்தான், அவை உயிர்ப் பிராணிகள் ஆகின்றன’ என்பது அவரது கொள்கை. கடலுள் இருக்கும் சேற்றில் தவளைகள், பாம்புகள், மீன்கள் போன்ற நீர்ப் பிராணிகள்திடீரென்று தோன்றுகின்றன. பாவிகளைச் சித்திரவதை செய்யும் நரகத்திலுள்ள புழுக்கள், அழுகும் பாவத்திலிருந்து தோன்றுகின்றன. பேய், பிசாசு உண்டென்ற நம்பிக்கையும் அக்யூனா எலிக்கு உண்டு. பூதகணங்களும், கணத் தலைவனும் உண்டென்றே அவர் நம்பினார். இதன் உயிருள்ளவற்றில் தோன்றி அவற்றையே உணவாகக் கொண்டு வாழும் நுண்ணுயிரிகள் கடவுளால் மட்டுமின்றி, பூதங்கள் பேய்களின் சாகஸங்களாலும் படைக்கப்படலாம் என்று அவர் வாதித்தார். இதன் காரணமாக பேய், பிசாசுகளை ஏவிவிடும் ஏவல்காரிகள் எலிகளையும், விஷப் பூச்சிகளையும் உண்டாக்கி பயிர்களை அழித்தார்கள் என்று நம்பினார். மத்திய காலத்தில் இக் "குற்றத்திற்காக”ஏராளமான ஏவல்காரிகளையும், சூன்யக்காரிகளையும் ஆட்சியாளர்கள் விசாரித்துத்தண்டித்தார். தாமஸ் அக்யூனாஸின் போதனைகளால் மேல்நாடுகளில் கிறிஸ்தவ மதஸ்தாபனங்கள், ‘தெய்வீக ஆவி ஏறிக்கொள்வதன் மூலம் உயிரற்ற பொருள்கள் உயிர்பெறும்" என்ற கொள்கையை உருவாக்கிப் பிரச்சாரம்செய்தன.இக்கொள்கையைகீழ்த்திசை நாட்டு கிறிஸ்தவ மதஸ்தாபனங்களும் ஏற்றுக்கொண்டன. உதாரணமாக டிமிட்ரி என்ற ராஸ்டாவ் நகரத்தின் திருச்சபை அத்யட்சகர் நமக்கு அதிர்ச்சி தரும் வகையில் இக்கொள்கைக்கு உதாரணம் காட்டினார். “உலகத்தில் நோவா காலத்தில் ஒரு பிரளயம் தோன்றியது. அப்பொழுது அவன் தனது கப்பலில் சுண்டெலி, தேரை, தேள், சேவல், பாச்சா, கொசு முதலிய உயிரினங்களை ஏற்றிச் செல்லவில்லை. ஏனெனில் இவை சேற்றிலும், அழுகக் கூடிய பொருள்களிலும் இருந்து தோன்றியவை. இவையாவும் பிரளயத்தில் அழிந்தன. ஆனால் பின்பு, தமது உற்பத்தி ஸ்தானங்களிலிருந்து மீண்டும் தோன்றின” என்று அவர் எழுதினார்.
பொருள்களின் படிப்படியான பரிணாமத்தோடு எவ்விதத் தொடர்புமில்லாமல் தெய்வத்தின் செயலால் உயிர்ப்பிராணிகள் அனைத்தும் இன்றிருப்பது போலவே தோன்றின என்பது தான் இன்றுவரை கிறிஸ்தவ மதம் மட்டுமல்ல, எல்லாமதங்களின்கொள்கையுமாகும். நம்மைச் சுற்றியுள்ள இயற்கையில் வாழும் உயிரினங்களைக் குறித்து விரிவாக ஆராய்ந்த பின்னர், “உயிர் உயிரைத் தோற்றுவிப்பது, திடீரென்று உயிர் தோன்றுவது என்ற செய்கைகள் நடப்பதில்லை" என்ற முடிவுக்கு இயற்கை விஞ்ஞானிகள் வந்துள்ளனர். 17-ஆம் நூற்றாண்டின் மத்தியில் புழு, பூச்சி, ஊர்வன, தரையிலும் நீரிலும் வாழ்வன போன்ற சிக்கலான உடலமைப்புள்ள உயிரினங்கள், சம்பந்தப் பட்டவரை “உயிர்கள் திடீரென்று தோன்றலாம்” என்ற கொள்கை உண்மையல்ல என்று நிரூபிக்கப்பட்டது. பின்னர் கண்ணுக்குத் தெரியாத துண்ணுயிர்கள் விஷயத்திலும் இக்கொள்கை தவறென்று நிரூபிக்கப்பட்டது இவ்வாறு உயிர் திடீரென்று தோன்றிற்று, என்ற கொள்கை தகர்க்கப்பட்டபின் உயிரின் தோற்றம் பற்றிய மதவாதிகளின் கொள்கையின் அடித்தளமே ஆடிவிட்டது.19-ஆம்நூற்றாண்டில் இக் கொள்கையின் தலையில் மற்றோர் இடி விழுந்தது. பைபிளில் சொல்லப்பட்டது போல சகோதரர்கள், ஐ.ஐ.மெச்னிகாவ் ஆகியோர் நிரூபித்தனர். பரிணாம ஏணியில் மேல்படிகளில் நிற்கும் பிராணிகளும், மனிதனும் திடீரென்று தோன்றிவிடவில்லை. உலகத்தில் உயிர்களின் வளர்ச்சி என்ற வரலாற்றில்கடைசிக்கட்டத்தில்தோன்றியவையே இவை. இவை கீழ்த்தட்டிலுள்ள பிராணிகளின் பரிணாம வளர்ச்சியால் தோன்றியவையே.
· (Micro organism) நுண்ணுயிர்கள் இவை கண்ணுக்குத் தெரியாதவை, 500 மடங்கு பெரிதாக்கிக்காட்டும் பூதக்கண்ணாடி வழியே நோக்கினால்தான் தெரியும். இவை நம்மைச் சுற்றி தரையிலும், தண்ணீரிலும், காற்றிலும் உள்ளன. வியாதிக் கிருமிகளில் பல சிற்றுயிர்களே.
____________________________
ஒவ்வொரு பிராணி இனமும் தனக்குக் கீழுள்ள பிராணியின் பரிணாம வளர்ச்சியின் விளைவே. இவ்வாறு மிகச்சிறிய ஜீவ அனு முதல், மனிதன்வரை அனைத்தும் பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியே. கல்லிடைச் சின்னங்களை இயற்கை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். இவ்வாராய்ச்சியின் மூலம் பலகோடி வருஷங்களுக்கு முன்னால் உலகில் வாழ்ந்திருந்த செடிகளையும், பிராணிகளையும் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அக்காலத்தில் இருந்த உயிரினங்கள் இன்றிருப்பதுபோல இல்லை யென்றும், இத்தனை வகைப்பட்டவையும் இல்லையென்றும் நன்றாகத் தெரிகிறது. முற்காலத்தில் பிராணிகளின் அமைப்பும் சிக்கலானதாக இல்லாமல் எளிதாகக் காணப்படுகிறது. இவ்வாறு காலமென்னும் ஏணிப்படிகளின் வழியாகக் கீழே இறங்கி வருவோம். மிகமிகப் புராதன காலத்தில் தற்காலத்தில் காணப்படும் நுண்ணுயிர்களைப் போல, மிக நுணுக்கமான, சிறிய உயிரினங்களே இருந்தன. அவை மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்த காலம் உண்டு. இவ்வாறு இன்று உலகிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் மூதாதைகளான இந்நுண்ணுயிர்கள் எவ்வாறு தோன்றின? எந்தமூலங்களினின்றும் அவை பிறந்தன?
உலகிலுள்ள பொருள்களின் மாற்றங்களை விடுத்துத் தனியாக உயிரின் தோற்றத்தை விளக்க முற்படும் முறையை இயற்கை விஞ்ஞானம்ஒப்புக்கொள்ளவில்லை. பொருள்களின் மாற்றம் ஒரு கட்டத்தில் உயிரென்னும் புதிய பண்பைத் தோற்றுவிப்பது எப்படி? என்ற கேள்விக்கு விடை
கல்லிடைச் சின்னங்கள்: பழங்காலத்தில் வாழ்ந்த பல பிராணிகளும், செடி கொடிகளும் பல பூமிக்கடியில் புதைந்துவிட்டன. அவற்றின் மீதுள்ள மண்ணும், மணலும் இறுகிப் பாறையாகிவிட்டன. பிராணிகளின் எலும்புகள், பற்கள் முதலியன பாறை நடுவே பாதுகாக்கப்பட்டு,தற்செயலாக தோண்டும் போது அகப்படுகின்றன. இவற்றைக் கல்லிடைச் சின்னங்கள் (fossis) என்று அழைக்கிறோம்.
--------------------------------------------------------
கண்டுபிடிப்பதில் இயற்கை விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அதாவது உயிர்கள் எவ்விதம் தோன்றின என்ற கேள்விக்கு விடை காண முனைந்தனர். “டூரிங்குக்கு மறுப்பு” “இயற்கையின் இயங்கியல்' என்ற இரு நூல்களில் பிரடரிக் ஏங்கெல்ஸ், அவர் காலத்திலுள்ள இயற்கை விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலமாகக் கிடைத்த அறிவைப் பொதுமைப்படுத்தி விஞ்ஞான ரீதியில் 'உயிரின் தோற்றம் பற்றி ஒரு விளக்கம் தந்தார். மேலும் அப்பிரச்சினை குறித்து ஆராயும் முறைகளையும் வரையறுத்தார். அவர் காட்டிய பாதையில் ஆராய்ச்சிகள் நடத்தி சோவியத் உயிர்நூலார் வெற்றிபெற்றுள்ளனர். இயற்கை நிலைமைகளோடு எவ்விதத் தொடர்பும் இன்றி தானாகவே உயிர் தோன்ற முடியும் என்ற விஞ்ஞானத்திற்குப் புறம்பான கருத்தை அவர் நிராகரித்தார். உயிருள்ளனவற்றிற்கும், இல்லாதவற்றிற்கும் தொடர்பு உண்டு என்று அவர் நிரூபித்தார். உயிர் தோன்றும் முன்னால் இயற்கையில் , பொருள்கள் பல சிறு சிறு மாறுதல்கள் அடைந்து, ஒரு குறிப்பிட்ட சரித்திர நிலைமையில் உயிர் என்னும் புதிய பண்புடைய பொருள்களாக வளர்ச்சியுற்றன என்று விஞ்ஞானச் சான்றுகளின் துணைகொண்டு விளக்கினார்.
டார்வினது போதனையின் முக்கியச் சிறப்பு என்ன? உயிருள்ளவை இடையறாது
· (Darwinism) டார்வின் தத்துவம்: சார்லஸ் டார்வின் என்ற விஞ்ஞானி 1802-இல் பிறந்தார். "இயற்கையின் தேர்வு” என்ற நியதிப்படி முந்திய இனங்களிலிருந்து படிப்படியான மாறுதல், அதாவது பரிணாம வளர்ச்சியால் ஜீவராசிகள் தோன்றின என்று அவர் வலியுறுத்தினார் வாழ்வுப் போராட்டத்தில், தகுந்தவை தங்கி நின்றன, தகுதியற்றவை மறைந்தன என்பது அவரது சித்தாந்தம், ஜீவராசிகளின் மூலம், அல்லது 'இனங்களின் மூலம் என்ற சரித்திரப் பிரசித்திபெற்ற நூலை 1859-இல் வெளியிட்டார். நீர்ப்பாசியிலிருந்து, புழு பூச்சி முதலிய ஜீவ ராசிகள் அனைத்தும் பரிணாம நியதிப்படி தோன்றி இறுதியில் குரங்கு இனம் தோன்றியது. அந்தக் குரங்கின் மூதாதையான ஒரு பிரிவின் காலக்கிரம வளர்ச்சிதான் மனிதன், என்பது அவர் தத்துவம்.
--------------------------------------------------------
வளர்ச்சியுறுகின்றன; அதன் மூலம் புதிய செடிகளும்,பெரியபிராணிகளும்உண்டாகின்றன என்று டார்வின் போதித்தார். இது பொருள் முதல்வாத அடிப்படையில் கொடுக்கப்படும் விளக்கம், அவர் கையாண்ட முறை சரித்திர முறை உயிர்நூல் பிரச்சனைகளுக்கு சரித்திர முறையைப் பயன்படுத்தியது, டார்வினது ஆராய்ச்சிகளின் சிறப்பான அம்சமாகும். டார்வினது சீடர்களில் பலர் இம்முறையைப் பின்பற்றினாலும்,கருத்துமுதல்கொள்கைகளையும் விடாமல்பிடித்துக்கொண்டிருந்தனர். அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் பிரசித்திபெற்ற மெண்டல் - மார்கன் கொள்கை, இவ்வாறுகருத்துமுதல்வாதக் கொள்கையி னடியாகப் பிறந்ததே.
உயிரணுவினுள்ளிருக்கும் குரோமோசோம் என்ற பொருள்தான், வரவிருக்கும் பரம்பரைகளின் தன்மைகளை நிர்ணயிக்கிறது என்பதே அக்கொள்கை. அத்தகைய தன்மையை பரம்பரைப் பண்பு என்று அழைக்கிறார்கள்.இந்த குரோமோசோம் 'திடீரென்று உலகில் தோன்றி உயிரணுவினுள் நுழைந்து, அனாதிகால முதல் இன்றுவரை உயிர்களின் தன்மை மாறாமல் பரம்பரைப் பண்புகளைப் போற்றி வருகிறதாம்! ஆகையால் மெண்டல் மார்கன் - கொள்கையுடையவர்கள் உயிரின் தோற்றம் பற்றிய பிரச்சனையை மிகவும் சுலபப்படுத்திவிட்டார்கள்:ஆமாம், குரோமோசோம் திடீரென்று உலகில் வந்து குதித்தது எப்படி என்று கண்டு பிடியுங்கள். “உயிரின் தோற்றம்” விளங்கிவிடும்.
குரோமோசோமின்திடீர்பிரவேசத்தைப் பற்றியும் சிலவிஞ்ஞானிகள்“காரணம் கண்டுபிடித் துள்ளனர். கரி, நீர்வாயு, ஆக்ஸிஜன், நைட்ரஜன், பாஸ்பரஸ் ஆகிய ஐந்து மூலப்பொருள்களும் எப்படியோ ஒன்றுகூடி இப்பொருளைத்
六 சரித்திர முறை: ஒவ்வொரு பொருளையும் அது எவ்வகையான மாறுதல்களடைந்து அந்நிலையை அடைந்துள்ளது என்று ஆராயும் முறைக்கு சரித்திரமுறை என்று பெயர். + மெண்டல் மார்கன் கொள்கையுடையவர்கள்: மேற்கண்ட குரோமோசோம்தான் பரம்பரைப் பண்புகளை நிர்ணயிக்கின்றன; அவை சூழ்நிலைத் தாக்குதலால் மாறுவதில்லை என்ற கொள்கையில் நம்பிக்கையுள்ளவர்கள்.
அவ்வாறு உண்டான மிகவும் சிக்கலான அமைப்புடைய அணுக்கூட்டுt (Molecule) உடனே, உயிர்த்தன்மை பெற்றது. இதுதான் அவர்கள் தந்த விளக்கம். இந்த விளக்கம் ஒன்றையும் விளக்கவில்லை. குறிப்பிட்ட வாழும் நிலைமையில் உணவு கொள்ளவும், மூச்சு விடவும்,பரம்பரயை விருத்தி செய்யவும் ஆனதன்மைகள் எல்லா உயிர் பிராணிகளுக்கும் உண்டு. மிகச்சிறிய உயிர்பிராணிக்கும் இருக்கக்கூடிய இத்தன்மை திடீரென்று, தற்செயலாக எப்படி ஏற்பட்டது. இக்கேள்விக்குஇவ்விளக்கம்பதிலளிக்கவில்லை. “உயிரின்தோற்றம்இயற்கைவிதிகளுக்குட்பட்டது என்ற உண்மையை விட்டுவிட்டு நமது உலக வரலாற்றில் உயிர் தோன்றிய இந்த மிக முக்கியமான சம்பவத்தை “தற்செயலாக நடந்ததென்றுசொல்லும் விஞ்ஞானிகள் இக்கேள்விகளுக்கு கற்பனையில் விடைகாண முயல்கிறார்கள். தெய்வத்தின் சிருஷ்டி ஆர்வம் என்றும், கடவுளுடைய திட்டமென்றும் உயிரின் தோற்றத்துக்குக் காரணம் கூற அவர்கள்முயலுகிறார்கள். உதாரணமாக "உயிரென்றால் என்ன? - உயிரணுவின் பெளதீக அடிப்படை' என்ற நூலில் ஷ்ரோடிங்கர் என்பவரும் “உயிர் அதன் தன்மையும் தோற்றமும்” என்ற நூலில் அலெக்ஸாண்டர் என்பவரும் இன்னும் பல முதலாளித்துவ ஆசிரியர்களும் தெய்வம் உயிரைத் தோற்றுவிக்க எண்ணியதால்தான் உயிர் தோன்றியது என்று கூறுகிறார்கள். இத்தகைய கருத்து முதல்வாதக் கருத்துகளை எதிர்த்து உயிர்நூல் விஞ்ஞானிகள் நடத்தும் போராட்டத்திற்கும் மெண்டல்-மார்கன் கொள்கையில் நம்பிக்கையுள்ளவர்கள் இடையூறு விளைவிக்கிறார்கள். எந்த உலகக்கண்ணோட்டத்திற்கும், முக்கிய பிரச்சனையான, "உயிர்எப்படித் தோன்றியது'
1 அணுக்கூட்டு: அணுக்கள் பொருளின் மிகச் சிறிய துணுக்கு பல பொருள்கள் இரண்டு மூன்று அணுக்கள்சேர்ந்தே காணப்படுகின்றன. இவையே அணுக்கூட்டுகள் எனப்படுவன. இவ்வணுக்கூட்டுகள் நூற்றுக் கணக்கான அணுக்களால் ஆக்கப்பட்டிருப்பதால் அவை சிக்கலான அமைப்புடையவை ஆகின்றன.
என்ற கேள்விக்கு பொருள் முதல் ரீதியாகப் பதிலளிக்க முடியாது என்று மெண்டல் மார்கன் வாதிகள் கூறுகின்றனர். இது முற்றிலும் தவறானது. விஞ்ஞான ரீதியில் உண்மையான ஒரே ஒரு தத்துவமான இயங்கியல் பொருள் முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கேள்விக்கு விடைகாண முற்பட்டால், மெண்டல் மார்கன்வாதிகளின் கருத்தை நாம் தவறென்று நிரூபிக்கலாம். இயங்கியல் பொருள் முதல் வாதத்தின்படி உயிர், பொருளை அடிப்படையாகக் கொண்டது. எல்லாப் பொருள்களுக்கும் உயிரென்னும் தன்மை இல்லை. சிலவற்றிற்குத் தான் இத்தன்மை உள்ளது. உயிர், பொருளின் சலனத்தில் ஒரு சிறப்பான வடிவம். இது ஆதிமுதல் இருந்துவரும் தன்மையல்ல. உயிருள்ளபொருள்களுக்கும் உயிருள்ளன வற்றிற்கும் அடிப்படை வேறுபாடு இல்லை. உண்மையில் உணர்ச்சியின் ஒரு கட்டத்தில் புதிய பண்பாக உயிர் தோன்றிற்று. பொருள் நிலையாகஇல்லை.அதுசலித்துக்கொண்டிருக்கிறது; வளர்ச்சியடைகிறது, சலனப்போக்கில் சிக்கலான புதிய வழிகளில் இயங்குகிறது. வளர்ச்சியின்முன்னேற்றமடையாதகட்டங்களில், முன்பு அதற்கிருந்திராத புதிய பண்புகள் உண்டாகின்றன. உயிர் அத்தகைய பண்புகளில் ஒன்று. பொருளின் சலன விருத்தியின் ஒரு கட்டத்தில் அது தோன்றுகிறது. ஆகையால் உயிரின் தோற்றத்தை விளக்குவதற்குப் பொருளின் சலனத்தைப் பற்றிய சரித்திரம் முழுதும் நமக்குத் தெரியவேண்டும். பொருளின் சலனத்தின்சரித்திரத்தைத்தெரிந்துகொள்வதே, உயிரின் தோற்றத்தைத் தெரிந்துகொள்ளும் முறையாகும்.உயிர்திடீரென்றுஉதித்துவிடவில்லை. உயிர் திடீரென்று தோன்றுகிறது என்பவர்களது கூற்று சரியல்ல என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. மிகச்சிறிய நுண்ணுயிர்கள் கூட, உயிரற்ற பொருள்களோடு ஒப்பிடும்போது,மிகச்சிக்கலானஅமைப்புடையவை. அவை திடீரென்று தோன்ற முடியாது. அவற்றிலுள்ள பொருள்கள் வெகு நீண்டகாலமாக அடைந்து வந்தமாறுதல்களின் விளைவாகவே அவ்வுயிர்கள் தோன்றின. இம்மாறுதல்கள் லட்சக்கணக்கான வருஷங்களுக்கு முன் நிகழ்ந்தவை. அதாவது உலகம் பிள்ளைப்பருவத்தில் இருந்த பொழுது அன்று சொல்லலாம். உயிர் எவ்வாறு தோன்றிற்று என்பதற்கு விடைகாண இம்மாறுதல்களைப்பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டும். நம்முடைய உலகத்தின் ஆரம்பம், வளர்ச்சி பற்றிய சரித்திரத்தையும் கற்றறியவேண்டும். “உலகத்தில் மனிதனோ, உயிர்களோ வாழ முடியாத ஒரு நிலைமை இருந்தது என்பதை இயற்கை விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது.
சேதனப் பொருள்கள் தோன்றியது உலகம் தோன்றி வெகுகாலமான பின்புதான். அவை நீண்ட பரிணாம மாறுதல்களின் விளைவு” என்று வி.ஐ. லெனின் தமது “பொருள்முதல் வாதமும், நேர் அனுபவ சித்தாந்த விமர்சனமும்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். “உலகம், ஜொலிக்கும் தீப்பிழம்பாக ஒரு காலத்தில் இருந்தது என்பது நமக்குத் தெரியும். பின்பு அது படிப்படியாகக் குளிர்ந்தது. செடிகளும், பிராணிகளும் தோன்றின. பிராணிகளின் அமைப்பில் ஏற்பட்ட அபிவிருத்தி காரணமாக சிலவகை மனிதக்குரங்குகள் தோன்றின. இதன் பின்பே மனிதன் தோன்றினான்”, “அராஜகவாதமா? சோஷலிஸமா” என்ற நூலில் ஜே.வி. ஸ்டாலின் மேற்கூறியவாறு எழுதுகிறார். பரிணாமப்பாதை வழியேதான் உயிர் தோன்றியது என்பதை இந்த மேற்கோள் காட்டுகிறது. “பொதுவாகக் கூறுமிடத்து, இதுதான் இயற்கை வளர்ச்சியடையும் பாதை’ என்று ஸ்டாலின் முடிவு கட்டுகிறார். "இயற்கையின் இயங்கியல்’ (Dialectics of Nature) argålø ஏங்கெல்ஸின் நூல் வெளியாகுமுன்பே, (1875-ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கி 1895-இல் அவர் இறக்குமுன் எழுதியது.
· சேதனப் பொருள் (organic fatter): உயிருள்ளவற்றையும், அவற்றிலிருந்து கிடைக்கும் பல பொருள்களான எண்ணெய், கொழுப்பு, சர்க்கரை முதலியனவற்றையும் இச்சொல் குறிக்கும்.
1925-இல்தான் வெளியிடப்பட்டது). ஸ்டாலின் மேற்கூறிய கருத்தை வெளியிட்டார். அக்காலத்தில் விஞ்ஞானிகள் உயிர் தோன்றியதைப்பற்றி யாந்திரீகமான கருத்துகளைக் கொண்டிருந்தார்கள். ஆனால் தெளிவாக அதை எதிர்த்தவர்களும் இருந்தார்கள். உதாரணமாக ரஷிய விஞ்ஞானி கே.ஏ. டிமிரியஸேவ் 1912-இல் ‘விஞ்ஞான வரலாற்றிலிருந்து” என்ற கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதினார். “பிற பொருள்களின் சலனமுறைபோலவே உயிர்ப்பொருள்களின் சலனமும் இருந்திருக்க வேண்டும் என்ற உண்மையை நாம் ஒப்புக் கொண்டு ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பரிணாமக் கொள்கை உயிர்நூலுக்கு மட்டுமில்லாமல் எல்லா விஞ்ஞானத் துறைகளுக்கும் (பெளதீகம், ரசாயனம், வானநூல், பூமி இயல்) பொருந்துகிறது என்ற முடிவுக்கு நாம் வருகிறோம். அதே முறையில்தான் உயிரற்ற பொருள்,உயிருள்ளதாக மாறியிருக்கவேண்டும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.” இந்த நாட்டில் வெளியானநூல்களின் வி.எல். கோமராவ் எழுதிய “செடிகளின் தோற்றம்” என்ற நூல் குறிப்பிடத்தக்கது. உயிர் ஆதியற்றது என்ற கூற்றை அவர் மறுக்கிறார். விண்ணின் இடைவெளியில் எக்காலத்திலும் நுண்ணுயிர்கள்இருந்தனஎன்றஎண்ணத்தையும் அவர் மறுக்கிறார். “பொருளின் சிக்கலான பல மாறுதல்களின் தொடர்ச்சியில் ஒரு கட்டத்தில்தான் உயிர் தோன்றிற்று. இம்மாறுதல்களில் கரியால் ஆக்கப்பட்ட பொருள்களும், ஹைட்ரஜனும் முக்கிய பங்கு பெற்றுள்ளன என்று அவர் எழுதியுள்ளார். பொருள்களின் பரிணாம மாற்றக் கொள்கை சோவியத் விஞ்ஞானிகளால் மட்டுமல்லாமல், பல நாடுகளிலுமுள்ள விஞ்ஞானிகளால் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் மேல்நாட்டு இயற்கை விஞ்ஞானிகள் உயிர் தோன்றியதற்கு முன்புள்ள காலத்தில் நிகழ்ந்த மாறுதல்களுக்கு மட்டும் பரிணாம முறையை ஒப்புக்கொள்ளுகிறார்கள்.உயிர்தோன்றியதற்குப் பின்புள்ள காலத்தில் நிகழ்ந்த மாறுதல்களுக்கு இம்முறையைக் கையாண்டு விளக்கம் காண மறுக்கிறார்கள்.
உயிரற்ற பொருளின் பல சலனங்கள் காரணமாக உயிர் தோன்றும் கட்டத்தை ஆராயும்போது, அவர்கள் விஞ்ஞான முறையை உதறியெறிந்துவிட்டு 'சந்தர்ப்ப சேர்க்கையால் உயிர் தோன்றியது”, “மர்மமான பெளதிக சக்திகளால் உயிர் தோன்றியது” என்று வாதிக்கத் தொடங்குகிறார்கள். உயிரின் தோற்றத்தை விளக்குவதற்கு, பொருளின் மாறுதல்களின்பரிணாமத்தைவிளக்கவேண்டும்.
அம்மாறுதல்களின் காரணமாக எவ்வாறு உயிர் தோன்றியது என்று காட்டவேண்டும். இவ்வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்தையும் பூரணமாக நிரூபிக்க வேண்டும். இம்மாறுதல்களுக்கு அடிப்படையான விஞ்ஞான விதிகளையும், அவை எப்படி உயிரின் தோற்றமென்னும் பரிணாம மாற்றத்துக்கும் பொருந்தும் என்பதையும் நிரூபிக்க வேண்டும். இது நவீன இயற்கை விஞ்ஞானத்தின் கடமை.தொடர்ச்சியாக அடுத்த இதழில் வெளியாகும்.
மூலம் உயிரின் தோற்றம் நூல்- ஆசிரியர்-.ஏ.ஐ.ஓபரின் தமிழில் நா.வானமாமலை NCBH, முதற்பதிப்பு 2008.
இந்த நூலை PDF வடிவில் இந்தப் பகுதியில் சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும்
No comments:
Post a Comment