வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்பதுவிஞ்ஞான சிந்தனையின் வளர்ச்சிக்கு மார்க்சும் எங்கெல்சும் அளித்த மகத்தான பங்களிப்பு என்னவெனில் அவர்கள் பகுதியளவு கட்டியிருந்த பொருள்முதல்வாதம் எனும் மாளிகையை முழுமை செய்தனர் .அதாவது அதை சமுதாயம் பற்றிய ஆய்வுக்குள் விரிவாக்கினர்.
தத்துவஞான பொருள்முதல்வாதத்தை மார்க்ஸ் ஆழமாக்கி வளர்த்து நிறைவு பெற செய்தார்.இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலாகவும் விரிவாக்கினார்.அவரது வரலாற்றுப் பொருள்முதல்வாதம் விஞ்ஞான சிந்தனை கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது.
வரலாறு என்றால் மாறுதல். சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கிற மாறுதல் என்று அர்த்தம். சமுதாயத்துக்கு ஒரு வரலாறு உண்டு; அது தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கிறது.
தங்களுடைய வரலாற்றை மனிதர்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள். அதன் முடிவு எப்படிப் போனாலும் சரி,ஒவ்வொரு மனிதனும் தான் உணர்வு பூர்வமாய் விரும்பிய குறிக்கோளைப் பின்பற்றிச் செல்கிறார்கள். இப்படியே மனிதர்களின், பல சித்தங்கள் வெவ்வேறு திசைகளில் செயல்படுகின்றன.இவற்றால் வெளியுலகம் பலவகைகளில் பாதிக்கப்படுகின்றது.இதனால் கிடைக்கின்ற விளைவைத்தான் வரலாறு என்கிறோம்.
வர்க்கங்களை நிர்ணயிப்பது பொருளாதார நிலைமைகளே.இந்தச் சங்கிலித் தொடர் என்னென்ன வடிவங்களில் என்னென்ன நிலைமைகளில் வெளிபட்டுச் செயல்படுகிறது என்ற விசயத்தைத் திட்டமாகச் சொல்ல வெண்டும். எனவே நாம் சொல்கிறோம்.
1.கருத்துக்கள் என்பவை அரசியல் துறையில் வெளிபட்டு வாழ்க்கையின் நடைமுறை ஆகிறது.
2.அந்தக் கருத்துக்களுக்குப் பின் இருக்கிற வர்க்கப் போராட்டம் சமுதாயத் துறையில் வெளிபட்டுச் செயல்படுகின்றது.
3.பொருளாதார நிலைமைகள் பொருளாதாரத் துறையில் வெளிபட்டுச் செயல்படுகின்றன.
எனவே மார்க்சிய சிந்தனையைச் சரியாக அடையாளப் படுத்திப் புரிந்துகொள்ளுவதற்கு மார்க்சின் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் முக்கியமாகிறது.
லெனின் எழுதிய படி அவர்கள் சமூகவியலை ஒரு விஞ்ஞானம் ஆக்கினார்கள் காரணம் அவை சமூக உறவுகளின் வளர்ச்சியில் மறு நிகழ்வையும் ஒழுங்கு முறையையும் வெளிப்படுத்துவதே சாத்தியமாக்கி பல்வேறு நாடுகளில் அதே மாதிரியான அமைப்புகள் சமூக பொருளாதார அமைப்புகளை கருத்துருவாக்கங்கள் ஆக பொதுமைப்படுத்த உதவின அவற்றை ஒன்று சேர்க்கும் போது கூரை வெளிப்படுத்தவும் அதே சமயம் அவற்றின் வளர்ச்சியும் பிரத்தியேக நிலைமைகள் காரணமாக உள்ளார்ந்து கிடக்கும் வேறுபாடுகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு அளித்தன.
1850ம் ஆண்டுகளில் மார்க்ஸ் மிகவும் சிக்கலான சமூக பொருளாதார அமைப்பான முதலாளித்துவம் பற்றிய ஆரவாரமான ஆய்வு மேற்கொண்டார் தமது மூலதனம் நூலில் அவர் இந்த அமைப்பின் துவக்கம் இயக்கம் மற்றும் வளர்ச்சியை எடுத்துக் காட்டினார் இதனுள் எப்படி உற்பத்தி சக்திகளும் உற்பத்தி உறவுகளுக்கும் இதயம் சமூகங்களுக்கு இடையேயும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன என்றும் பொருள் உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் இதற்கு இசைவான அரசியல் உயர் கட்டுமானம் ஒரு சில கருத்துக்கள்ஒழுக்க நெறிகள் குடும்பம் மற்றும் அன்றாட உறவுகள் எழுகின்றன என்பதையும் அவர் நிலைநாட்டினார் மூலதனம் நூல் ஆக்கத்துடன் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஆதாரப் படுத்தப்பட்டதான விஞ்ஞான சமூகம் தத்துவம் ஆயிற்று.
சமுதாய வளர்ச்சியை ஆளுமை செய்யும் சக்தி எது என்று வெகு காலத்துக்கு முன்பிருந்தே மனிதர்கள் அறிய முயன்றார்கள் அப்பாவிகளான மனிதர்கள் கடவுளின் பக்கம் தமது சிந்தனையைத் திருப்பி கடவுளிடமிருந்து கருணையும் மன்னிப்பும் வரும் என்று காத்திருக்க வேண்டும் என்று மதமும் மத ஸ்தாபனமும் ஆலோசனை வழங்கின எல்லாம் வல்ல இறைவன் தனது கைகளில் மனிதர்களின் தலைவிதி ஏந்தி நின்றார். பணிந்து நின்று கீழ்படிந்து அடக்கத்துடன் தெய்வீக அருள் நலத்தை நம்பு என்று மத ஸ்தாபனம் போதிக்கிறது.
மார்ஸ்க்கு முந்திய மகத்தான பொருள்முதல்வாத தத்துவஞானிகள் இறுதியாக வந்தவரான லுதுவிக் பயர்பாக்ஸ் கருத்து முதல் வாதத்தையும் மதத்தையும் தீவிரமாக கண்டன விமர்சனம் செய்த அதே நேரத்தில் சமுதாய வரலாற்றில் அடித்தளமாக இருப்பது மதமே என்றும் மதத்தினுடைய வடிவங்களே சகாப்தத்தின் புறத்தோற்றத்தை நிர்மாணிக்கின்றன என்று கருதினார். சமுதாயம் மோசமாக இருக்கிறது என்றால் எந்த மதத்தை அடிப்படையாகக் கொண்டு சமுதாயம் விளங்குவது அந்த மதம் மோசமாக இருப்பதற்கு காரணம் என்று நினைத்தார் ஃபயர்பாக்ஸ்.
சமுதாயத்தில் நல்லதாக மாற்ற வேண்டுமானால் மோசமான மதத்தை உதாரணமாக கிருத்துவத்தை மாற்றி நல்ல ஒரு மதத்தை அந்த எடுத்துக் கொண்டு வரவேண்டும் என்றார் அவர் எனவே அன்பின் முழுநிறைவான மதம் எந்த ஒரு புதிய ஒன்றை பயன்படுத்தி மதத்தை அடிப்படையாகக் கொண்டு சமுதாயம் தானாக செம்மை அடையமுடியும் என்று எண்ணினார்.
வறுமைக்கு காரணம் தலைவிதியா என்று தேடிய பொழுது மனிதனின் அறியாமையால் தோற்றிவித்த மதம்தான் இன்று சிலரின் சுரண்டல் தேவைக்காக அந்த மதம் ஆட்டி படைத்துக் கொண்டுள்ளது என்றால் மிகையாகாது. இதனை தேடிய பயணம்தான் மனித குல விடுதலையை நாடி சென்றுள்ளது தோழர்களே....
உலகில் பல நூறு சித்தாந்தங்கள் தொகுக்கப்பட்டன.இச் சித்தாந்தங்கள் அனைத்திற்கும் இயங்கியல் பொருள் முதல் வாதத்திற்கும் இடையில் மாபெரும் வேறுபாடு உள்ளது . பிற சித்தாந்தங்கள் அனைத்தும் உலகிற்கு பல்வேறு வகையில் விளக்கம் கூறுவன. இயங்கியல் பொருள்முதல் ஒன்றே உலகை மாற்றியமைக்க வழி கூறும் நடைமுறை கொண்ட சித்தாந்தம் ஆகும்.
உலகை மாற்றி அமைக்கக்கூடியவர் பரந்துபட்ட மக்களே;உழைக்கும் பாட்டாளி மக்களாலேயே சாதிக்க கூடிய செயலாகும்.இவர்களுக்காக உருவாக்கப்பட்ட சித்தாந்தமே இயங்கியல் பொருள்முதல்வாதமாகும். மற்றைய சித்தாந்தங்கள் போல வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இயங்கியல் பொருள் முதல்வாதம் இருக்கவில்லை.
லெனினால் சோவியத் நாட்டிலும் சீனாவில் மாவோவினாலும் நடைமுறைப்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டது .அதனாலேயே தனது அழிவை நோக்கிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் இதை கண்டு அஞ்சுகின்றனர். கம்யூனிசம் என்ற வார்த்தையையும் புரட்சியையும் நசுக்க பல வழிமுறைகளை கையாளுகின்றனர்.
உலகில் மனித உயிரினம் தோன்றிய காலம் தொட்டு உணவுப்பொருட்கள் தேடுதல், தற்காப்பு , கருவிகள் ஆக்கல் முதலாக பொருள்முதல் வாழ்வே மக்கள் வாழ்ந்து வந்தனர். இயற்கையின் உற்பத்தியாக மனித இனம் பூமியில் வாழ்வதால் இயற்கையின் சீற்றத்திற்கு அஞ்சி இயற்கையை வழிபட்டு வந்தனர்.
உழைப்பு மனித இனத்தின் தனி சிறப்பாக விளங்கியது. வளர்ச்சியடைந்த கருவிகள் மிருக வேட்டை பிற கணக்குழுக்களுடன் மோதுவதில் வீரர்களாக விளங்குவர்களுக்கும் அவர் தம் கருவிகளுக்கும் கணக்குழு சார்ந்தவர் வீரவணக்கம் செலுத்தி வந்தனர் .
கருவிகளின் வளர்ச்சியோடு உற்பத்தியும் மேம்பட சமூகத்தையும் உற்பத்தி சாதனங்களையும் உடமையாக கட்டுப்படுத்தும் இறைவன் என மன்னன் தோன்றினான். அதைத்தொடர்ந்து வர்க்க சமுதாயம் நிலைபெற்றது . சமூக வளர்ச்சிப் போக்கில் மன்னனின் வர்க்க நலன் குறைபாடுகளையும் கண்டறிந்து சிந்தனையாளர்கள் மன்னனிலும் உயர்ந்த வடிவமாக கற்பனை கடவுளையும் மனித உருவிலே படைத்தினர். சமுதாயத்தில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் நிலவிய போதும் தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி தெய்வத்தின் முன் அனைவரும் சமம் அனைவருக்கும் ஒரே ஆத்மா உள்ளது என சமரச பேணுவதற்காக ”படைத்தவன் படி அளப்பான் | என்பது மட்டுமல்லாது “தெய்வ நீதி என்றும் நிலைத்து நிற்கும் “ என்ற கருத்துகளையும் நம்பிக்கையை யும் ஏற்படுத்தினர் .
மதங்களை தொட்டே பெரும்பாலான சித்தாந்தங்கள் தோன்றி மறைந்தன. பல இன்றும் நிலைத்து ஆதிக்கம் செலுத்துகின்றன. நமது கல்வி நிலையங்களில் இவை கற்பிக்கும் பல நியாயங்கள் ஒடுக்கும் வர்க்க நலனை கருத்தில் கொண்டதே என்பது குறிப்பிடத் தக்கவை.
மதங்களைப் போலவே அவற்றின் மற்றோர் தோழனாக சித்தாந்தங்களையும் அரசுகள் பேணி வளர்த்து வந்துள்ளன. மன்னர்கள் எல்லோரும் ஏதாவது ஓர் மதத்தை அண்டி இருந்தனர் என்பதை சாதாரணமாக விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.
இன்று முதலாளித்துவ நாட்டு சித்தாந்தங்கள் கருத்தியலாக மதத்தோடு இணைந்து நிற்கின்றன இன்றைய உற்பத்தி முறைக்கு துணை செய்து சுரண்டலுக்கு உதவுமாறு உற்பத்தியின் தொடர வழி செய்கின்றன சமுதாய அமைப்பை உயர்மட்டத்தில் நின்று நீதி படுத்தி விளக்கம் கூறுகின்றனர் உழைக்கும் வர்க்கத்தை இவற்றை அறியாத போதும் அடக்கி ஒடுக்கி அரசு எந்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சமாதானமாக கூறுகின்றனர் சாதகமாக இருக்கும் அவர்களது வன்முறைகளை சமூகநீதி என நீதி வழங்குகின்றனர்.
கருத்தியல்கள் மனிதச் சிந்தனையை சிறைப் பிடித்து வைத்திருப்பது நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் . நமது சிந்தனையை இன்றைய அரசால் பேணி பாதுகாக்கப்பட்டு அக் கருத்தே எங்கும் நீக்கமற நிறைந்து படிந்து உள்ளது . அவற்றை துடைத்தெறிந்து சரியான தெளிவான சிந்தனையை நம்மால் ஏற்படுத்திக் கொண்டால் மட்டுமே விஞ்ஞான கண் கொண்ட பார்வை நமக்கு கிடைக்கும்.
பல நூறு ஆண்டுகள்முன்னால் அறியாமையில் தோன்றிய கருத்துகள் இன்றும் மக்கள் மத்தியில் நீடித்திருப்பதற்க்கு காரணம் ஆன்மீக வாதிகளும் பிற்போக்கு அரசுமே காரணம் அல்லவா?
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தத்துவக் கண்ணோட்டம் இயக்கவியல் பொருள்முதல்வாதம்
பெரியாரின் தத்துவக் கண்ணோட்டம் மார்க்சியத்திற்கு முந்தைய கொச்சை பொருள்முதல்வாதம் சாரம்சத்தில் கருத்துமுதல்வாதம்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அரசியல் பொருளாதாரக் கண்ணோட்டம் வர்க்கப் போராட்டத்தை போதிக்கிறது பெரியாரின் அரசியல் பொருளாதார கண்ணோட்டம் வர்க்க சமரசத்தை போதிக்கிறது.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சோஷலிசம் விஞ்ஞான சோஷலிசம் பெரியாரின் சோசலிசம் கற்பனாவாத சோஷலிசம் .
இவை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் திராவிட இயக்கத்திற்கும் இடையிலான மார்க்சிய லெனினியத்திற்கும் பெரியாரியத்துக்கும் இடையிலான புரட்சியாளர்களுக்கும் சீர்திருத்த வாதிக்கும் இடையிலான அடிப்படையான வேறுபாடுகள்.
பெரியாரின் தத்துவ விளக்கமே இதை நிரூபிப்பதற்கு போதுமானதாகும் அதில் மனித அமைப்பு பற்றி பேசும்போது அவர் உலகில் உள்ள பொருள்கள் எல்லாமே பல்வேறு பொருள்களின் கூட்டுப் பொருள் என்றும் அவை அனைத்தும் இயங்குவது இயங்காத ஜீவன் உள்ளது ஜீவன் இல்லாதது என பிரிக்க முடியும் என்றும் கூறுகிறார் இந்த பகுப்பாய்வு முறை மார்க்சிய தத்துவ ஞானம் இயற்கை விஞ்ஞானம் நிரூபித்து உண்மைகளுக்கு எதிரானதாகும் பதினெட்டாம் நூற்றாண்டின் இயந்திர வகைப்பட்ட பொருள்முதல்வாதம் அதாவது இயக்கம் மறுப்பியல் கண்ணோட்டத்திற்கு உட்பட்டது இதையே நாம் கொச்சை பொருள்முதல்வாதம் என்கிறோம்.
பெரியார் மார்ஸ்க்கும் எங்கெல்சுக்கும் பிந்திய காலத்தைசேர்ந்தவர். விஞ்ஞான கண்டுபிடிப்புகள் இன்னும் பல படிகள் வளர்ந்த காலத்தை சேர்ந்தவர். என்றாலும் அவர் வளர்ந்த விஞ்ஞான கோட்பாடுகளையோ மார்க்சும் எங்கெல்சும் வகுத்து இயங்கியல் பொருள்முதல்வாத விதிகளையோ அறிந்து கொள்ளவில்லை, அவரைப் பொறுத்தவரை சமுதாய வரலாற்றில் தத்துவஞான துறையில் ஏற்பட்ட வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொள்ளாமல் பதினெட்டாம் நூற்றாண்டில் நிலையில் தன்னைப் பின் தள்ளி இருக்கச் செய்து கொண்டார். இதனால் அவருடைய தத்துவக் கண்ணோட்டம் முழுவதும் இய்யக்காமறுப்பியல் அடிப்படையில் அமைவது தவிர்க்கவே முடியாதவையே.
கடவுள் மத நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமானால் மனிதனாலேயே உருவாக்கப்பட்டது என்று ஆளும் மனிதன் மனிதனுக்கு அன்னியமாக நின்று மனிதன் மீது ஆதிக்கம் செலுத்தி வரும் முதலாளித்துவ உற்பத்தி முறை ஒழிக்கப்படவேண்டும் உற்பத்தி சாதனங்களில் தனியுடைமை ஒழித்து எல்லா உற்பத்தி சாதனங்களையும் சமுதாயமே தன் உடைமையாக்கிக் அவற்றை திட்டமிட்ட அடிப்படையில் உபயோகிப்பதன் மூலம் சமுதாயம் தன்னை தானே விடுவித்துக் கொள்ளும்அதாவதுசமுதாயத்தோடு விடுதலை பெற முடியும். அப்போதுதான் மனிதன் வெறுமனே நினைப்பதோடு மட்டுமல்லாமல் நினைப்பதை அவனே முடிப்பதாக முடியும். அந்த காலத்தில்தான் மதத்தில் இன்னும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்ற அந்நிய மயமான அந்த கடைசி சாத்தியம் அறிந்துகொள்ளும் அத்துடன் மதத்தின் பிரதிபிம்பம் தானே மறைந்துவிடும் ஏனெனில் அதற்கு பிரதிபலிப்பு எதுவும் இருக்காது.
ஆனால் இதை சாதிப்பதற்கு அதாவது சமுதாய சக்திகள் சமுதாயத்தின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது வெறும் அறிவு மட்டும் போதாது அதற்கு எல்லாவற்றையும் விட மிகவும் அவசியமான சமுதாய செயல்முறை தான் என்று ஏங்கெல்ஸ் சுட்டிக்காட்டுகிறார்அதாவது உற்பத்தி சாதனங்களில் தனியுடைமை ஒழித்து சமுதாய உடைமையாக்கிக் திட்டமிட்ட பொருள் உற்பத்தியின் கீழ் விடுதலை பெற்ற சமுதாயம் திட்டமிட்ட பொருள் உற்பத்தியில் விடுதலைப் பெற்ற சமுதாயத்தையும் சமுதாயத்தின் அங்கத்தவர்களையும் வழிநடத்துவதற்கு வெறும் அறிவு மட்டும் போதாது மாறாக தனியுடைமை சக்திகளுக்கு எதிரான போராட்டம் வர்க்கப் போராட்டம் என்ற சமுதாய செயல்முறை அவசியமாகும் முதலாளித்துவத்தை வர்க்கத்தை எதிர்த்து அதை தூக்கி எறிந்து முற்றாக ஒழித்துக் கட்டும் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தின் கீழ் மட்டுமே அதை சாதிக்க முடியும் இதுதான் அந்த சமுதாய செயல்முறையாகும்.
ஆனால்இங்கேபெரியாரின்நிலைசீர்திருத்தம்மட்டுமேஉண்மையில் வர்க்கப் போராட்டத்தை புறக்கணித்து விடுகிறார்
பதினெட்டாம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதம் பெரும்பாலும் இயந்திர வகைப்பட்டதாக இருந்தது ஏனென்றால் அப்பொழுது உயிரியல் ரசாயன விஞ்ஞானங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தது.இயந்திர வியல் அடிப்படை யில் தத்துவஞானிகள் விளக்கம் அளித்தனர் இவை இயக்க மறுப்பியலை தளமாக கொண்டிருந்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் விஞ்ஞானம் பல துறைகளிலும் வளர்ச்சி அடைந்தது குறிப்பாக மூன்று முக்கியமான மகத்தான கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன
1). உயிர்ச் செல் பற்றிய கண்டுபிடிப்பு,
2). சக்தி இடைவிடாது மாறிக் கொண்டே இருக்கிறது.
3). பரிணாம கோட்பாடு டார்வின் கண்டுபிடிப்பு, இவை இயந்திர வகைப்பட்ட பொருள் முதல்வாத குறைபாடுகளை களைந்து இயக்கவியல் பொருள்முதல்வாத கோட்பாடுகளை மார்க்சும் எங்கெல்சும் உருவாக்குவதற்கு இக் கண்டுபிடிப்புகள் இடமளித்தன.
பெரியாரின் தத்துவக் கண்ணோட்டம் இயந்திர வகைப்பட்ட பொருள்முதல்வாதம் என்று சொன்னோம் அவர் மனிதனின் உயிரியல் பண்பையும் சமூகவியல் பண்பையும் அறியாதவராக மனித உயிரின் இயக்கம் மனிதனின் குணாம்சம் மனிதனின் உணர்வு பேச்சு மற்றும் சிந்தனை பற்றி தத்துவ விளக்கம் அளிப்பது இதற்கு மேலும் சான்றாகும்.
மனிதன் பிறப்பில் இருந்து வேறுபடும் ஒரு உயிர் பிராணி அவன் பிற பொருள்களில் இருந்து வேறுபடும் ஒரு இயக்கம் வடிவத்தை உயிரியக்க வடிவத்தை கொண்டிருக்கிறான் உயிரில் இயக்கம் என்பது வளர்சிதை மாற்றம் கொண்டது இனப்பெருக்க சக்தி கொண்டது உறுத்துணர்ச்சியும்(Irritability) உலகின் மீது விளைவும் எதிர்வினையும் கொண்டது இப்பண்புகள் எவையும் இயந்திர இயக்கத்தில் இல்லை எனவே இயந்திர இயக்கத்தினோடு உயிருள்ள மனிதனை சமன்படுத்தி பேசுகிறார். இவை ஏற்புடையவை இல்லை.
பெரியார் கூறுகிறார் "உயிர் என்பது பொருள் தன்மையற்றது பொருள் தன்மையற்றது என்றால் இயங்கும் தன்மையுடையதாகும். இயங்கும் தன்மை உடையது என்றால் அதற்கு வேலை செய்து கொண்டிருக்கும் இயந்திரத்தை அல்லது இயங்கிக் கொண்டிருக்கும் தன்மை சொல்லலாம் .எது போல என்றால் ஒரு கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பது போலவும் ஒரு எஞ்சின் ஓடிக் கொண்டிருப்பது போலவும் ஒரு எஞ்சின் இயங்கிக் கொண்டிருப்பது போலவும் அசைவின் காரணமாக அதனுடன் இணைக்கப்பட்ட பல இயந்திர சாதனங்கள் இயங்குவது போல இயங்கும் தன்மை உயிருக்கு இருப்பதாக...." ( பெரியாரின் தத்துவ விளக்கம் பக்கம் 35-38).
பெரியாரைப் பொருத்தவரை ஒரு இயந்திரம் பல்வேறு பாகங்களை உருவாக்கப்பட்டிருப்பது போல மனிதன் ஒரு சரீர கூட்டமைப்பு ஆகும் இயந்திரங்கள் மின்சாரம் அல்லது டீசல் மூலம் இயங்குவது போல மனிதனின் ஆகராதிகள் மூலம் இயங்குகின்றன அவ்வளவுதான் பெரியாரின் தத்துவ கண்ணோட்டத்தில் மனிதன் உயிரியல் இயக்க வடிவம் எவ்வித முக்கியத்துவம் பெறவில்லை .அது மட்டுமன்றி மனிதனின் சமூகவியல் இயக்கம் கூட பெரியாரின் தத்துவ கண்ணோட்டத்தில் எவ்வித முக்கியத்துவம் பெறுவதில்லை மனிதன் பிற பொருள்களில் இருந்து வேறுபட்ட ஒரு உயிரினம் என்பது மட்டுமல்ல பிற உயிரினங்களிடமிருந்து வேறுபட்ட ஒரு சமூக பிரியாணியும் ஆவான் .அவன் ஒரு சமூக வாழ்க்கை வாழ்கிறான் அவனுடைய வாழ்க்கை உழைப்பு உற்பத்தி செய்யும் முறை உணர்வுபூர்வமான பாத்திரமாகி அவனுக்கே உரிய பண்புகள் ஆகும்.
அவனுடைய சமூக வாழ்க்கை பொருளாதார வாழ்க்கை கலாச்சார ஆன்மீக வாழ்க்கை என இரு பக்கங்களாக கொண்டிருக்கிறது. மனிதன் ஒரு உயிர் பிரியாணி என்ற முறையில் அவன் உயிரற்ற பிற பொருள்கள் இருந்து வேறுபட்ட முறையில் உயிரியக்க வடிவத்தை கொண்டிருப்பது போல அவன் ஒரு சமூக பிரியாணி என்ற முறையில் பிற உயிரினங்களிடமிருந்து வேறுபட்ட முறையில் சமூகவியல் இயக்க வடிவத்தையும் கொண்டிருக்கிறான்.
பெரியார் கூறுகிறார்,"இன்றைய தினம் மனித சமுதாயத்திற்கு ஒன்று கூடி வாழ்வதற்கு அரசனும் சட்டமும் தண்டனையும் இல்லாவிட்டால் பாதுகாப்புடனும் சாந்தியும் சமாதானமும் சிறிதாக இருக்க முடியுமா நாம் யாவரும் இந்த அளவுக்கு வாழ்வது அரசாங்கம் சட்டம் தண்டனை ஆகியவை பாதுகாப்பு நிலை மனித சமுதாய கூட்டு வாழ்க்கைக்கு இவை போதும் என்றாலும் ஒரு அளவுக்குதான் போதுமானதாகும்....(பெரியாரின் தத்துவம் நூல் பக்கம்..(17-19)
பகைவர்கங்கள் தத்தம் நலனுக்காக மோதிக் கொண்டதன் விளைவாக குறிப்பாக சுரண்டும் ஆதிக்க வர்க்கங்கள் எதிராக ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் மோதி இதன் விளைவாக சமுதாயம் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது என்பதே வரலாறு. ஆண்டைகளின் நலனுக்கு எதிராக அடிமைகள் மோதி இதன் விளைவாக ஆண்டான் அடிமை சமுதாயம் வீழ்ந்தது அதனை விட உயர்வான நிலப்பிரபுத்துவ சமூகம் தோன்றியது நிலப்பிரபுக்களுக்கு எதிரான பண்ணைஅடிமைகளின்போராட்டத்தால் நிலப்பரப்பு சமூகம் வீழ்ந்தது அதனிடத்தில் முதலாளித்துவ சமுதாயம் தோன்றியது.
முதலாளி வர்க்கத்தை எதிர்த்து பாட்டாளி வர்க்கம் போராட்டம் இதன் விளைவாக முதலாளித்துவ சமுதாயம் வீழ்ந்து சோசலிச சமுதாயம் மலர்ந்தது, இங்கெல்லாம் நாம் காண்பது என்னே அடிமைகளும் பண்ணையடிமைகள் தொழிலாளி வர்க்கமும் போராடியதன் விளைவாக ஓர் உயர்வான சமூகம் மலர்ந்தது.இவை கேடு விளைவிப்பதாக இல்லை எனலாம்.
மனிதனே அச்சுறுத்தி நேர் பாதையில் செலுத்துவதற்காக கடவுளையும் மதத்தையும் சமுதாய நலனில் அக்கறை கொண்ட பெரியோர்கள் படைத்தார்கள் என்று கூறும் பெரியார் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கும் மதத்திற்கும் தீவிரமான எதிரியாக திகழ்ந்தார் ஆனால் பெரியாரின் கடவுள் மறுப்பு கடவுள் மதம் தோன்றுவதற்கு நிலவும் காரணமாக இருக்கும் அடிப்படைகளுக்கு எதிராகத் இல்லை. ஏன் அதைப் புரிந்து கொண்டதாக கூட தெரியவில்லை.
கடவுளும் மதமும் சில பெரிய மனிதர்களால் படைக்கப்பட்டு பரப்பப்பட்டது என்று அதன் தோற்றம் வளர்ச்சி பற்றி பெரியார் கருதுகிறார் எனவே அதற்கு எதிரான பிரசாரங்கள் மூலமே கடவுளையும் மதத்தையும் ஒழித்துவிட முடியும் என அவர் நம்புகிறார் ஆனால் கடவுளும் மதமும் தோன்றுவதற்கும் அது நிலவுவதற்கான காரணம் அவ்வளவு எளிமையானது அல்ல.
"எல்லா மதங்களும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை கட்டுப்படுத்தும் புற சக்திகளைப் பற்றி அவர்களின் மனதில் ஏற்படும் வினோதமான பிரதிபிம்பமே மண்ணுலக சக்திகள் இயற்கை கடந்து சக்திகளின் வடிவத்தை ஏற்க்கும் ஒரு பிரதிபிம்பம்" என்று எங்கெல்ஸ் கூறினார்.
எனவே கடவுள் மத நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமானால் மனிதனாலேயே மதம் உருவாக்கப் பட்டது என்றாலும் மனிதனுக்கு அன்னியமாக நின்று மனிதன் மீது ஆதிக்கம் செலுத்திவரும் முதலாளித்துவ உற்பத்தி முறை ஒழிக்கப்படவேண்டும் உற்பத்தி சாதனங்களில் தனி உடைமையை ஒழித்து எல்லா உற்பத்தி சாதனங்களையும் சமுதாயமே தன் உடைமையாக்கிக் அவற்றை திட்டமிட்ட அடிப்படையில் உபயோகத்தின் மூலம் சமுதாயம் தன்னை தானே விடுவித்துக் கொள்ள வேண்டும் அப்போதுதான் சமுதாயத்தின் அங்கத்தினர்களும் சமுதாயத்தோடு விடுதலை பெறமுடியும் அப்போது தான் மனிதன் வெறுமனே நினைப்பதோடு மட்டுமல்லாமல் நினைப்பதை அவனை முடிக்க முடியும் அந்த காலத்தில்தான் மதம் இன்னும் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் என்ற கடைசி சக்தியும் மறைந்துவிடும்.
எனவே உண்மையிலேயே கடவுளையும் மதத்தையும் ஒழிக்க விரும்புபவர் ஒருவர் தனியுடமை ஒழித்து பொதுவுடமை சமூகத்தை வைப்பதையே நோக்கமாகக் கொண்டு முதலாளி வர்க்கத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை கட்டமைப்பு ஆக இருக்க வேண்டும்
ஆனால் பெரியாரை பொருத்த வரையில் அவருடைய நிலை இதற்குத் தலைகீழானதாகும் அவர் பல சமயங்களில் தனியுடமை ஒழிப்பிலும் சமூக தர்மத்திலும் நம்பிக்கையும் ஆர்வம் தெரிவித்து இருக்கிறார் என்பது உண்மை என்றாலும் , புதிய சமுதாயத்திற்கான வர்க்கப் போராட்டத்தை கடவுள் மத ஒழிப்புக்கான முன்நிபந்தனையாக எங்கும் கருதவில்லை மாறாக கடவுள் மத ஒழிப்பை வர்க்கப் போராட்டத்தின் கொள்வதன் மூலம் உண்மையில் வர்க்கப் போராட்டத்தை புறக்கணித்து விடுகிறார்
இதனால்தான் பெரியாரின் பொருள்களைப் பற்றிய விளக்கம் ஒவ்வொரு பொருளும் அவற்றின் உள் முரண்பாடுகளின் சுயமாக இயங்கிக் கொண்டும் மாறிக்கொண்டு உயிரியல் பண்பை பெற்றிருப்பதைக் காணமுடிகிறது மனிதன் உழைப்பு உற்பத்தி செய்யும் முறை உணர்வுபூர்வமான பாத்திரம் மாற்றுவது ஆகியவற்றால் மற்ற உயிரினங்களை விட வளர்ந்தும் வேறுபட்டும் ஒரு சமூக வாழ்க்கை பெற்றிருப்பது காண மறுக்கிறது.
No comments:
Post a Comment