பாலஸ்தீன கவிதைகள்

 பாலஸ்தீன கவிதைகள்

இஸ்ரேல் ஆக்கிரமித்த பிரதேசங்கள் பலஸ்தீனர்களின் சொந்தப் பிரதேசங்களே என்பதை இஸ்ரேல் மக்களே தெளிவாக அறிந்தவர்களே. ஆகவே, பலஸ்தீனர்களை ஒழித்துக்கட்டும் முயற்சியில் இஸ்ரேல் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறது.காஸா பகுதிகல் மட்டுமின்றி சிரிய, லெபனான் கிராமங்களிலும் அகதிகள் முகாம்களிலும் விமானத் தாக்குதல்களும், இராணுவநடவடிக்கைகளும்மிகவும்அதிகரித்துள்ள. மேலும் போராட்ட இயக்கத்தை அழித்தொழிக்கும் தனதுமுயற்சியில் உதவுவதற்கு அண்டை நாடுகளை இஸ்ரேல் நிர்ப்பந்தித்கிறது.

பலஸ்தீனக்கவிஞர்கள்மீதும்,எழுத்தாளர் மீதும் திணிக்கப்பட்ட கட்டுப்பாட்டை நாம் இந்தப் பின்னணியில் வைத்தும் நோக்க வேண்டும்.

பலஸ்தீனப் போராட்ட இயக்கத்தின் எழுச்சியுடன் இப்பிரச்சாரம் தோல்வியடைந்தது. குறிப்பாக 1967ம் ஆண்டு யுத்தத்திற்குப் பின்னர். அன்றைய கவிதைகளிலிருந்து சில

சலீம் ஜுப்றன்

சலிம் ஜீப்ருன் மூக்கியமான ஒரு பலஸ்தீனக் கவிஞர். இவரது கவிதைகள் இறுக்கமும் செறிவும் மிக்கவை.

 

துரத்தப்பட்டவன்

எல்லையின் ஊடே சூரியன் நடக்கும் துப்பாக்கிகள் மெளனமாய் இருக்கும் துல்கறம்மில், ஒர் வானம்பாடி, தன் காலைப் பாடலைப் பாடத் தொடங்கும் பின்னர் எழுந்து கிப்புற்ஸ் நகரப் பறவைகளோடு விருந்து உண்ணப் பறந்து செல்லும்

தனித்த ஓர் கழுதை யுத்தம் நிகழும் எல்லையின் குறுக்கே ஆறுதலாக நடந்து செல்லும், காவல் வீரர் கவனியாதிருப்பர்.

னால் எனக்கோ,

என் தாய் நாடே, துரத்தப்பட்ட உன் மகனுக்கோ, உன் வானத்துக்கும் என் கண்களுக்கும் இடையே ல்லாச் சுவர்களின் பெரும் தொடர் இருந்து காட்சியை மறைக்கும்.

தூக்கில் தொங்கும் ஓர் அராபியன்

தூக்கில் தொங்கும் இந்த அராபியன் சிறுவர்கள் வாங்கி விளையாடத் தக்க மிகமிக அழகியவிளையாட்டுப் பொம்மை

, நாஜீ முகாம்களில் இறந்தோரின் ஆன்மாக்களே, தொங்கும் இம் மனிதன் பெர்லினில் பிறந்த ர் யூதன் அல்ல

தொங்கும் இம்மனிதன் என்போல் ர் அராபியன். உங்கள் சகோதரர்கள் அவனைக் கொன்றனர் சியோனில் வாழும் உங்கள் நாஜீ நண்பர்கள்.

       ========================

எனது நண்பனைப் பற்றி எமது மண்ணிலே அதிகம் பேசுகின்றனர் எப்படி அவன் சென்றான்? எப்படி அவன் திரும்பவே இல்லை?

எப்படி அவன் தன் இளமையை இழந்தான்?

துப்பாக்கி வேட்டுகள் அவன் மார்பையும் முகத்தையும் நொறுக்கின,

தயவு செய்து மேலும் விபரணம் வேண்டாம் நான் அவனது காயங்களைப் பார்த்தேன். அதன் பரிமாணங்களைப் பார்த்தேன். நான் நமது ஏனைய குழந்தைகள் பற்றி எண்ணுகிறேன். குழந்தையை இடுப்பில் ஏந்திய ஒவ்வொரு தாயையும் பற்றி எண்ணுகிறேன்.

அன்புள்ள நண்பனே அவன் எப்போது வருவான் என்று கேட்காதே.

மக்கள் எப்போது கிளர்ந்தெழுவார்கள்

என்று மட்டும் கேள்.

எங்கள் மண்ணிலே

அவனது கதையைக் கூறுகின்றனர். அவன் ஓடி மறைந்த போது அவனது தாயிடம் விடைபெற வில்லை

நண்பர்களைச் சந்திக்க வில்லை

அச்சத்தைத் தணிக்கும் செய்தி எதனையும் விட்டுச் செல்லவில்லை வழிபார்த்திருக்கும் அவனது தாயின் நீண்ட இரவுக்கு விளக்கேற்றும்

ஓர் சொல்லைத்தானும் அவன் கூறிச் செல்லவில்லை அவனது தாயோ ஆகாயத் தோடும் அவனது தலையணை அவனது பெட்டிஎன்பவற்றோடுமே பேசுகின்றாள்.

அவள் தன் துயர்நிலையில் அரற்றுவாள்.

இரவே

நட்சத்திரங்களே

கடவுளே

முகில்களே பறந்து செல்லும் என் பறவையைக் கண்டீர்களா? சுடரும் இரு தாரகை அவனது கண்கள் இரண்டு பூக் கூடைகள் அவனது கரங்கள் அவனது மார்பு

நிலவுக்கும் நட்சத்திரங்களுக்கும் தலையணை யாகும் காற்றும் மலரும் ஆடும் ஊஞ்சல் அவனது கேசம் பிரயாணத்துக்கு இன்னும் தகுதி பெறாத பிரயாணியைக் கண்டீர்களா? உணவு எடுத்துக் கொள்ளாது அவன் சென்று விட்டான் பசி வரும் போது அவனுக்கு யார் உணவளிப்பார்? அன்னியனான அவனுக்கு வீதி அனர்த்தங்களில் யார் அனுதாபம் காட்டுவார்?

என் மகன்

என் மகன்

இரவே தாரகைகளே தெருக்களே முகில்களே அவளுக்குச் சொல்லுங்கள்

எம்மிடம் விடையில்லை கண்ணீரை சோகத்தை கஷ்டங்களை விட பெரியது காயம் உண்மையை நீ தாங்கமாட்டாய் ஏனெனில் உனது மகன் இறந்து விட்டான் தாயே கண்ணிரை முடித்து விடாதே கண்ணிருக்குத் தேவை இருப்பதால் ஒவ்வொரு மாலை நேரத்துக்கும் அதில் கொஞ்சம் வைத்திரு

மரணத்தினால் பாதைகள் நெரிசலடையும் போது உன் மகன் போன்ற பிரயாணிகளால் அவை மறிக்கப்படுகின்றன நீ உன் கண்ணிரைத் துடைத்து முன்னர் இறந்த அன்புக்குரிய அகதிகளின் நினைவுச் சின்னங்களாக

எமது கண்ணீரில் சிறிதை எடுத்துக் கொள்வாய்.

உனது கண்ணீரை முடித்து விடாதே பாத்திரத்தில் சிறிது கண்ணிரை வைத்திரு சிலவேளை

நாளை அவனது தகப்பனுக்காக அல்லது அவனது சகோதரனுக்காக அல்லது அவனது நண்பன் எனக்காக நாளைக்கு எங்களுக்காக

இரு துளிக் கண்ணீரை வைத்திரு…..

++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்