குடும்பம் ஆண் பெண் நிலை

"இன்றைய சமுதாய அமைப்பில் குடும்பங்களில் ஒற்றுமையில்லை; அமைதியில்லை, மகிழ்ச்சியில்லை. வறுமையும் துன்பமும் போராட்டமுமே நிறைந்துள்ளது. என்று பொதுவாக யாரும் கூறுவதைக் கேட்கலாம்.

மனிதன் பிறக்கும்போது நல்லவன்; இரக்கம். அன்பு உடையவன், களங்கமற்றவன், என்று கூறுபவர் பின் சமுகத் துன்பங்களைப் பார்த்துவிட்டு மனிதனது தலைவிதி, மிருகசுபாவம், அறியாமை, கடவுளை மறந்தமை, முற்பிறவிப் பயன் என்றெல்லாம் விளக்கம் கூற முனைகின்றனர்.உண்மையில் இந்த நிலைக்கு காரணத்தை புரிந்துக் கொள்ளாமல் காலம்காலமாக பேசப்படும் மத சிந்தனையை முன்னிலை படுத்தும் போக்கு. ஆனால் இந்நிலை ஏற்பட்டதற்குரிய அடிப்படைக் காரணங்களை சமுக விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து பார்ப்பவர், தீர்வுகாண முயல்பவரே உயர்ந்த மனிதராவர்.

குடும்பங்களில் அமைதியின்மையையும் மனத்துன்பங்களும் உழைக்கும் தொழிலாளர்களது வாழ்வில் மட்டுமல்லது உற்பத்திச் சாதனங்களைக் கொண்ட முதலாளிகள், சிறு உடைமையாளர் குடும்ப வாழ்விலும் காணலாம்.

உடலுழைப்பில் ஈடுபடாத முதலாளிகள், பணத்தையும் ஆதிக்கத்தையும் வைத்துக் கொண்டு இன்பத்தைத்தேடி அலைகிறார்கள். அவர்கள் நிரந்தரமான மகிழ்ச்சி (Happiness) யையோ, அமைதியையோ தம் வாழ்விலும் காண்பதில்லை. அவர்கள் இன்பமென்று காண்பதெல்லாம் ஒருவித சென்சேஷனே (Sensation)-உணர்வுக் கிளர்ச்சியே. அதையே மகிழ்ச்சி யென்று எண்ணி மயங்குகின்றனர். நிரந்தர சந்தோசம் வேறு, சென்சேஷன் வேறு என்பதை அவர்கள் உணரத் தவறி விடுகின்றனர்.

முதலாளிகளும் தொழிலாளரது சமுதாயத்திலேயே வாழவேண்டிய வராகின்றனர். சமுதாய அமைப்பிலுள்ள குறைபாடுகளிலிருந்து அவர்களும் தப்பிவிடமுடியாது. ஏழைகளது அசுத்தம், நோய்கள், துன்பங்கள் அவர்களையும் பாதிக்கவே செய்யும். ஒடுக்கப்ட்ட வர்க்கத்தவரும் பணக்காரரை, முதலாளிகளை அமைதியாக வாழவிடப் போவதில்லை. சுவாசிக்கும் காற்றையும் தண்ணீரையும் தாமே அசுத்தப் படுத்தும் போது முதலாளிகளும் அவறால் ஏற்படக்கூடிய தீமைகளிலிருந்து தப்பிவிடமுடியாது. பண்ட உற்பத்தியிலும் போட்டா போட்டி முதலாளிகளிடமே ஏற்படுகிறது. பெரிய மீன் சிறிய மீனை விழுங்கும் போட்டி. இதனால் ஏற்படும் பொறாமை, கழுத்தறுப்பு அவ்வர்க்கத்தவரிடையேயும் பொச்சரிப்பையும் அமைதியின்மையையும் ஏற்படுத்து கின்றன

சமுதாயத்தில் சமத்துவமும் சம நீதியுமின்றி சுதந்திரமும் மகிழ்வும் ஏற்படமுடியாது. உழைப்பிலே, உற்பத்தி உறவிலே இன்றைய சமுக அமைப்பில் சமத்துவத்தையும் சமநீதியையும் காணமுடியாது, வேலைப் பிரிவினையால், வர்க்கப் பிரிவினையால் ஏற்பட்ட இந்த ஏற்றத் தாழ்வு குடும்பங்களின் மகிழ்வையும் அமைதியையும் முழுமையான வாழ்வையும் பாதிக்கிறது.

"ஒரு சமுதாயத்தின் தன்மையை அளவிடவேண்டுமாயின் அங்குள்ள பெண்களின் நிலைமையை அறிந்தாலே போதும்" என்று ஏங்கெல்ஸ் கூறினர்.

பெண் "பின்தூங்கி முன் எழுபவள்'- ஆண்தலையெடுத்த சமுதாயத்தில் அதிகநேரம் உழைக்க வேண்டியவளாகிறாள். இங்கும் வேலைப் பிரிவினையைக் காணலாம். வீட்டைப் பேணல், சமையல் செய்தல், குழந்தை வளர்ப்பு, துணி தோய்த்தல் ஆகியவை பெண் இனத்திற்குரிய வேலைகளாக திணிக்கப்படுகின்றன. முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த மேல் நாடுகளிலும் இதே நிலைமையே உள்ளது. பெண் வெளியே சென்று உழைக்கும் போதும் இவ்வேலைகள் அவளது "கடமைகள்" ஆகவே ஒதுக்கப்படுகின்றன.

இவ்வாறு பெண்களின் உழைப்பு வீட்டு எஜமானன கணவனால், குடும்பத்தால் சுரண்டப்படுகிறது. உழைப்பு சுரண்டப்படும்போது ஏற்படும் உறவை பகைமை உறவு என்று நாம் கொள்கிறோம். இந்நிலையில் கணவன மனைவி உறவும் சுமூக உறவாக இருக்க முடியாது.

இரண்டாவதாக, வாழ்நிலையே சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்ற கோட்பாட்டைக் கொண்டவர்கள் நாம். குடும்பத்தில் கணவனது உற்பத்தி உறவு, உற்பத்தி முறை ஒன்றாக இருக்கும். கணவன் தொழிற்சாலையிலோ, வாணிப நிலையத்திலோ, அரச நிறுவனங்களிலோ தன் உழைப்பு நேரத்தைக் கூலிக்கு விற்பவனுக இருக்லாம். அவனது சிந்தனை, உணர்வு நிலைகள் வேறாக இருக்கும். குடும்பத்திற்கும் மதத்திற்கும் அடிமையாக வீட்டிலே கடமைகளைப் புரியும் மனைவியின் சிந்தனை, உணர்வு நிலை வேறாக இருப்பது தவிர்க்கமுடியாது. இவ்வாறு வேறுபட்ட உற்பத்தி உறவு, உற்பத்தி முறைகளினுலும் சிந்நனைகள் வேறுபட்ட நிலையில் குடும்பங்களில் ஒற்றுமை, அமைதி ஏற்பட முடியாது

தொழிலாளர்கள் பலநூறுபேர் ஒரே தொழிற்சாலையில் வேலை செய்வதால் ஒன்று திரண்டு தம் கூலி அடிமை நிலக்கு எதிராக வர்க்க உணர்வும் பெற்றுப் போராட முடிகிறது. பெண்கள் தனித்தனி குடும்பங்களில் பிரிந்து கிடப்பதால் ஒன்றுதிரண்டு போராட முடியாதவர்களாகின்றனர். மேல் நாடுகளில் பெண்களின் விடுதலை இயக்கங்கள் அரசிடம் சில உரிமைகள் வேண்டியே குரல் எழுப்புகின்றன. தம் அடிமைத் தனத்தை முற்றாக ஒழிக்கத் தக்க புதிய சமுதாயத்தை வேண்டிய போராட்டத்தை நடத்த அவர்கள் முயல்வதில்லை.

மூன்றாவது, கூலிக்காக உழைப்பைச் சந்தையில் விற்க நேரும் நிலையில் விருப்பமில்லாத, கட்டாய உழைப்பில் ஈடுபடுவதால் ஏற்படும் அந்நிய மாதல் நிலையாகும்.இங்கு மனிதன் முதலாளியின் குறிக்கோள்களை நிறைவு செய்யும் சாதனமாக மாறிவிடுகிறான். குறிக்கோள்களை படைப்பாளி தீர்மானிப்பதாக இல்லை. தொழிலாளி உற்பத்தியின் ஒர் அம்சமாகி உருவாக்கும்பண்டம், உபரி மதிப்பை உற்பத்தி செய்யும் சாதனமாகிறான். உற்பத்திச் செயலிலிருந்தே பிரிக்கப்படுகிறான்; யந்திரத்தின் ஒரு பகுதியாகி விடுகிறான். நாள் முழுவதும் உழைத்த போதும் உழைப்பிற்கேற்ற பண்டங்கள், தான் உற்பத்தி செய்த பண்டங்களே கிடைக்காததாலும் அந்நியமாகிறான். மனித உழைப்பை உறிஞ்சிய பண்டமே சமுக உறவுகளைத் தீர்மானிப்பதாக மாறி விடுகிறது.

இத்தகைய நிலையைக் கீழ்க் காணும் கதை நன்கு விளக்கும்.

"அப்பா, குளிர் தாங்க முடியவில்லை, அடுப்பில் கொஞ்சம் நிலக்கரி போடு"

'கரி இல்லை, மகனே" "ஏன் கரியில்லை, அப்பா'

கரி வாங்கப் பணமில்லை"

"ஏன் பணமில்லை அப்பா" "வேலையில்லை. அதனால் பணமில்லை" "ஏனப்பா, வேலையில்லை" "அதிக கரி உற்பத்தி செய்து விட்டோம். விற்க முடியவில்லை என்று முதலாளி வேலையிலிருந்து நீக்கி விட்டான்'

தொழிலாளி அதிகம் உற்பத்தி செய்ய, அவன் நுகர்வது: குறைந்து கொண்டே போகிறது. அவன் உற்பத்தி செய்த. பண்டத்திற்கே அவன் அந்நியமாகிருன்.  

போட்டா போட்டியே முதலாளித்துவ அமைப்பின் தனிச்சிறப்பு" நிலை என்று கூறுவர். இப் போட்டாபோட்டி சமுதாயம் முழுவதும் ஊடுருவி நிற்கிறது. முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் உபரி மதிப்பில் பெறும் பங்கிற் காக நடைபெறும் போட்டி, உபரி மதிப்பை ஏகபோக மாக்கிக் கொள்ள பேராசைக்காரர்களான முதலாளிகளிடையே நடைபெறும் போட்டி, வேலையற்ற பட்டாளம் நிறைந்த சமுகத்தில் உழைப்புச் சக்தியை விற்பதற்குப் பாட்டாளிகளிடையே நடைபெறும் போட்டி. கல்வியில், விளையாட்டில்,பண்ட விற்பனையில்,கலை இலக்கியப் படைப்புகளில் எல்லாம் போட்டா போட்டி நிகழ்வதைக் காணலாம். இந் நிலைகளால் இன்றைய சமுக அமைப்பில், உற்பத்தியில், விநி யோகத்தில், பரிமாற்றத்தில் கூட்டுறவு ஏற்படுத்த முடியாது உள்ளது. போட்டா போட்டி, பகைமை, பொறாமை, பேராசை ஆகியன சமுகத்தில் நிலவுகின்றன.அடுத்த வீட்டுப் பொருட்களைப் பார்த்து அவற்றிலும் சிறப்பாகத்தான் பெற வேண்டும் எனப் பொறாமையோடு மனைவி போட்டி போடுகிறாள். கணவனுக்கு இவற்றைக் காட்டிப் பகைமையை மேலும் வளர்க்கிறாள்.

இத்தகைய நிலைகளினால் மனித வாழ்வின் நிறைவை, முழுமையான மகிழ்ச்சியை, மனிதசாரத்தை உழைப்பவன் மட்டுமல்ல உழைக்காத முதலாளிகளும் காண முடியாதவர்கனாக உள்ளனர்.

இயற்கையிலேயே மனிதன் சுயநலமானவன், தனிமை யானவன், உலக வாழ்வே வேதனை மிக்கது, வாழ்க்கைப் பாதை கரடு, முரடானது என்று பரவலாகப் பொதுமைப் படுத்திக்கூறப்படுவதையும் நாம் கேட்கிருேம்.முன் கூறியபடி இன்றைய சமுக அமைப்பிலுள்ள குறைகளாலும் மனிதன் அந்நிய நிலைக்கு ஆட்படுத்தப் பட்டதாலுமே மனித வாழ்வு கசப்பானது என்று கூறுகின்றனர்.

இச்சமுதாய அமைப்பு பாட்டாளி வர்க்கத்தால் நிட்சய மாக உடைக்கப்படும். தனிச் சொத்துடைமை அழிக்கப்படும். கூலி உழைப்பு என்ற அந்நிய நிலை அழிக்கப்படும். மக்கள்சமுகம் மீண்டும் கூட்டு உற்பத்தியில் ஈடுபடும். கூட்டு விநியோகமும் கூட்டு பரிமாற்றமும் ஏற்படுத்தப்பட்டு மனித வாழ்வு பற்றிய இழிநிலைக் கூற்றுகள் ஒழிக்கப்படும். இன்றைய இக்கேவல நிலையிலும் அருகிக் காணப்படும் உயர்ந்த மனித உணர்வுகளாகிய அன்பு, கருணை, இரக்கம், காதல், கூட்டுணர்வு ஆகியவை புதிய சமுதாயத்தில் முழுமை பெறுவதைக் காணலாம்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்