ஜாதியின் இருப்பு

ஜாதியின் இருபிற்கான பல காரணங்கள் உண்டு அதில் இரு காரணங்களை மட்டுமே பேசுகிறேன்.

ஜாதிகளும் மதங்களும் உழைக்கும் வர்க்கத்தை பிரிப்பது என்பதால் அது நீடிக்கவே ஆளும் வர்க்கம் விரும்புகிறது.ஜாதிகளும் மதங்களும் மக்களின் வாழ்வாதார பிரச்சனையிலிருந்து அவர்களது  கவனத்தைத் திசை திருப்புவதால் ஆளும் வர்க்கம் இதனை ஆழமாக வேண்டி நிற்கிறது.ஜாதியின் ஓர் அம்சம் என்னவென்றால் தீண்டாமை. தீண்டாமை சட்ட விரோதமாகி சட்டம் கொண்டுவரப்பட்டது ஆனால் ஜாதி நிலைத்து நிற்பதற்கு ஜாதியத்தின் அடித்தளங்கள் விரிவாக்கப்படுத்தப்பட்டது. ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது ஜாதி அடையாளங்களை மீட்டுருவாக்கவே செய்கின்றது  ஜாதியை வலுப்படுத்தவும் செய்கிறது.

இன்று பொருளாதர ஏற்றம் பெற்ற எல்லா ஜாதியினரும் பார்பணிய (மேல்தட்டு) பழக்கவழக்கங்களைப் பின்பற்றி தங்களின் ஜாதியின் கீழாமையை விடுத்து தங்கள் தகுதிகளை உயர்த்துக் கொள்ளும்போது சாதி சமூகத்தின் உயர் குடியாக்கும் எனும் கருத்தமைவு பிறப்பால் பிராமணர் அல்லாதோர் தங்கள் பழக்க வழக்கங்களை வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொண்டு உயர்குடியாக மாற வேண்டும் என்ற எண்ணம் தகுதி உயர்வை ஏற்படுத்திக் கொண்டால் அவர்கள் அனைவரும் மேல் ஜாதியினராக மாறிவிட முடியும் என்ற நிலையில் ஜாதின் உண்மையான தன்மையை விடுத்து அதிலே தஞ்சம் புகும் மோசமான போக்கு நம்மக்களிடையே மேலோங்குகிறது. 

மேலும்

ஜாதி தோன்றியிலிருந்து இன்றுவரை பல்வேறு விதமான மாற்றங்களின் ஊடாக ஜாதியே வர்க்கமாக இருந்த காலம் மாறி இன்று ஒவ்வொரு ஜாதியிலும் ஒன்றுக்கு மேற்பட்ட வர்க்கங்கள் உள்ளதை காணலாம்.ஜாதிகளில் ஏற்பட்டு கொண்டிருக்கும்  வர்க்க மாற்றங்கள் நாம் வாழும் சமூகத்தில் சிறிது அசைவை கொடுத்துள்ளது. ஒரு ஜாதிக்குள் ஏற்பட்டால் வர்க்க மாறுதல்களை இயங்கியல் அளவில் காணும் பொழுது ஏகாதிபத்திய பொருளாதார நலன்களாலும் நில உடமை சமூகத்தாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள புறநிலை வர்க்கங்களாலும் உருவாகும் வர்க்க உணர்வை விட ஜாதி உணர்வு   மேலோங்கி உள்ளது.  வர்க்கமாக ஒன்றிணைவதில் பல சமூக தடைகள் இருப்பதை காண்கிறோம்.

1871 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களின் நலனும் பிரிவும் தொடங்கியது என்பேன். ஒரு சிலருக்கு நல்வாய்ப்பும் ஏன் ஜாதியின் கடைநிலையில் துன்புற்றுகிடந்த மக்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு அளிக்க சட்டமியற்றபட்டது. ஆனால் எல்லா மக்களும் கல்வி கற்க்கவோ வேலை பெறவோ முடியவில்லை ஏனெனில் சமுக ஏற்றதாழ்வான பொருளாதார நிலை.

கல்வி இட ஒதுக்கீடு சட்டம்-1935, இந்திய இந்திய அரசியல் சட்டம் பட்டியின ஜாதிகள் சட்டம்-1936, இப்படி கொணரபட்ட சட்ட வரைவுகள் மற்ற ஜாதிகள் மதராஸ் மாகாண பிராமணர் அல்லாதோர் சங்கம் 1870 மாக திரண்டனர். இன்று தேர்தல் அரசியலில் வாக்கு வங்கிகாக ஜாதி சங்கங்களும் ஜாதி கட்சிகளும் முக்கியத்துவத்தை பெற்றவுடன் லித்துகளுக்கான வாக்கு வங்கிகளை குறித்து வைத்து ளும்வர்க்க கட்சிகள் களமாடுகின்றன. தங்களை உயர்த்திக் கொள்ளவதன் பெயரில் கொடுமைகளை சகித்துக் கொண்டு தங்களின் எதிர்கால விடியலாக தேர்தல் காணும் தலித்துகள் சிக்கல்களுக்கான தீர்வு தேர்தல் அரசியலில் இல்லை என்பது அண்ணல் அம்பேத்கார் தொடங்கி மாயவதி இத்தியாதி நடந்தேறிக் கொண்டிருக்கும் தலித்களின் ஒடுக்குமுறைக்கு குரல்கொடுக்க கூட முடியாத அவலநிலையில் தலித் கட்சிகள் உள்ளன. ஆக ஜாதி ஒழிப்பதை விட ஜாதியின் பின் ஒளிந்துக் கொண்டு ஆளும்வர்க்கம் ஜாதிகட்சிகளை வளர்பதில் குறியாக இருக்கிறது என்பேன்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்