கட்சியின் வேலை பாணியினை சீர் செய்க மாவோ.
பிப்பரவரி1,1942. இன்று கட்சியின் பள்ளி துவங்குகிறது அதன் ஒவ்வொரு வெற்றிக்காகவும் வாழ்த்துகிறேன்.
நமது கட்சியினுடைய வேலைப் பாணியிலுள்ள சிக்கல்கள் குறித்து சிலவற்றை கூறலாம் என்று விரும்புகிறேன்.
ஒரு புரட்சிகர கட்சி ஏன் இருந்திட வேண்டும்? ஒரு புரட்சிகர கட்சியாக இருந்திட வேண்டியது தான் காரணம்,உலகமானது எதிரிகளைக் கொண்டுள்ளது;அவர்கள் மக்களை ஒடுக்குகின்றனர் ;அம் மக்கள்எதிரியினுடைய ஒடுக்குமுறையினை தூக்கி எறிந்திட விரும்புகின்றனர்.முதலாளிய மற்றும் ஏகாதிபத்திய காலகட்டத்தில் கம்யூனிஸ்ட்கட்சி போன்ற ஒரு கட்சியே தேவைப்படுகிறது.அதனைப் போன்ற ஒரு கட்சி இல்லாமல் எதிரியின் ஒடுக்கு முறையினை மக்களால் தூக்கி எறிந்து விடல் முற்றிலும் சாத்தியமற்றது. நாம் கம்யூனிஸ்டுகள்.எதிரியை தூக்கியெறி வதில் மக்களுக்கு வழி காட்ட விரும்புகிறோம். ஆகவே நமது படையின் அணிவகுப்புகளை சிறந்த முறையில் வைத்தாக வேண்டும். நாம் ஒழுங்காக அணிவகுத்து சென்றாக வேண்டும். நமது துருப்புகள் தேர்ந்தெடுத்த துருப்புகளாக இருக்க வேண்டும். இந்நிலைமைகள் இல்லாமல் எதிரி தூக்கியெறியப்பட இயலாது.
இப்பொழுது நமது கட்சி எதிர் நோக்குகின்ற சிக்கல் என்ன?
கட்சியின் பொதுவழியானது சரியானதே. எச்சிக்கலையும் அளிக்கவில்லை. கட்சி பணியானது பலன் உள்ளதாகவே இருந்து வருகிறது. கட்சிப் பல்வேறு வகைப்பட்ட நூறாயிரம் உறுப்பினர்களைக் கொண்டது. அவர்கள் எதிரிக்கு எதிராக அறுதிக் கடினமானதும் துன்பத்தரக் கூடியதுமான போராட்டங்களில் மக்களுக்கு தலைமை தாங்கி கொண்டிருக்கின்றனர்.இது ஒவ்வொருவருக்கும் ஒளிவு மறைவின்றியும் சந்தேகத்துக்கு இடம் இன்றியும் உள்ளது.அப்படியானால் நமது கட்சியானது இன்னமும் எந்த ஒரு சிக்கலை எதிர்கொண்டுஇருக்கிறதாஇல்லையாநமது கட்சி சிக்கலை எதிர்நோக்கி கொண்டிருக்கிறது என்று கூறுகிறேன்.ஓர் உறுதியான பொருளில் சிக்கலானது முற்றிலும் தீவிரமாக உள்ளது அந்த சிக்கல் என்னநமது தோழர்களது பலரின் உள்ளங்களில் உள்ள ஏதோ ஒன்று முற்றிலும் சரியல்ல எனவும் முற்றிலும் முறையானது அல்ல எனவும் எவரது கருத்திலும் தென்படுகிறது வேறு சொற்களில் சொல்வதானால் பயிலுதல் குறித்த நமது பாணியிலும் கட்சியின் உள் மற்றும் வெளி உறவுகளில் உள்ள நமது பாணியிலும் நமது எழுத்து பாணியிலும் இன்னமும் ஏதோ ஒரு தவறு உள்ளது.பயிலுதல் குறித்த பாணியில் ஏதோ ஒரு தவறு உள்ளது என்பதை அகவய (Subjectivism) நோய் என நாம் பொருள் கொள்கிறோம்.கட்சி உறவுகளில் உள்ள நமது பாணியில் ஏதோ ஒரு தவறு உள்ளதை குறும்குழுவிய (Sectarianism)நோய் என பொருள் கொள்கிறோம்.எழுத்து பாணியில் ஏதோ ஒரு தவறு உள்ளதை சலிப் பூட்டும் வகையிலான கட்சி எழுத்து என்நோயாக பொருள் கொள்கிறோம்.இவை அனைத்துமே தவறானவை.அவைகள் கெட்ட காற்றுகள் ஆனால் அவைகள் குளிர் காலத்தில் வானம் முழுக்க வீசுகின்ற வாடைக்காற்றுகள் போல் இல்லை.அகவயம், குறுங்குழுவாதம் மற்றும் கட்சியின் சலிப்பூட்டும் எழுத்து இனிமேலும் ஆதிக்கத்தி்லுள்ள பாணிகளாக இல்லை. ஆனால் வெறுமனே குறுகிய எல்லைக்குட்பட்ட எதிர்காற்றின் புயல்வீச்சுகளே. விமானம் தாக்கும் குகைகளில் இருந்து வந்தக்கெட்டகாற்றுகளே(சிரிப்பு). அது மிக மோசமானது எவ்வாறாகினும் அதனைப் போன்ற காற்றுகள் கட்சிக்குள் இன்னும் வீசிக்கொண்டுதான்இருக்கின்றன. அவைகளை உருவாக்குகிற வழிகளை நாம் அடைத்து வைக்க வேண்டும். நமது முழு கட்சியும் இவ்வழிகளை அடைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். கட்சியின் பள்ளிக்கூடமும் அவ்வாறே செயல்படவேண்டும்அகவியம்,குறுங்குழுவியம் சலிப்பூட்டும் கட்சியின்எழுத்து(stereotypedpartywriting) ஆகிய மூன்று கெட்டகாற்றுகள் தங்களின் வரலாற்று மூலங்களை கொண்டுள்ளன. அவை முழு கட்சியிலும் இனி மேலும் ஆதிக்கத்தில் இல்லை என்றாலும் இன்னமும் நம்மிடையே குழப்பத்தை உருவாக்கி தாக்குகின்றன.ஆகவே அவற்றை எதிர்ப்பதும் பயில்வதும் அலசி ஆராய்வதும் தெளிவாகுவதும் இன்றிய மையாதது .
பயிலுதலும் பாணியை சீர் செய்யும் வண்ணம் அகவியத்தை எதிர்த்துப் போராடுவீர் கட்சி உறவுகளில் உள்ள பாணியை சீர் செய்யும் வண்ணம் குறுங்குழவியத்தை எதிர்த்து போராடுவீர். எழுதும் பாணியை சீர் செய்யும் வண்ணம் கட்சியின் சலிப் பூட்டும் எழுத்துக்களை எதிர்த்து போராடுவீர் நம்முன் உள்ள கடமை அத்தகையதே.
நாம் எதிரியினை தோற்கடிக்க செய்யும் கடமையினை நிறைவேற்றுவதற்கு கட்சிக்குள் இருக்கும்இப்பாணிகளை சீர் செய்யும் கடமையினை நாம் கட்டாயம் நிறைவேற்றிட வேண்டும். பயிலுதல் குறித்த பாணியும் எழுத்தும் பாணியும் கூட கட்சியின் வேலைப்பணியேயாகும். நமது கட்சியின் வேலை பாணி முழுவதுமாக சரியாகப் பட்டவுடன் நாடும் முழுவதும் உள்ள மக்கள் நமது எடுத்துக்காட்டிலிருந்து கற்றுக்கொள்வர்.அதே வகையிலான மோசமான பாணியை கொண்டு கட்சிக்கு வெளியே இருப்போர் நல்லவர்களாகவும் நாணயம்மானவர்களாகவும்இருப்பார்களானால் நமது எடுத்துக்காட்டில் இருந்து கற்றுக் கொண்டு தங்களின் தவறுகளை சரிசெய்வார்.இவ்வாறு முழு தேசம் மாறுதலுக்கு ஆளாகும் நமது கம்யூனிஸ்ட் அணிவரிசையில் சிறந்த ஒழுங்கில் இருந்து சரியான வழியில் அணிவகுகின்ற வரை நமது துருப்புகள் தேர்ந்தெடுத்த துருப்புகளாக இருக்கும் வரை நமது ஆயுதங்கள் சிறந்த ஆயுதங்களாக இருக்கும் வரை எந்த ஓர் எதிரியும் சக்தி மிக்க தாயினும் தூக்கி எறியப்படயியலும்.
இப்பொழுது அகவியம் பற்றி பேசுகிறேன்.
அகவியம் என்பது முறையற்ற பாணியில் பயில்வதே ஆகும்.அது மார்க்சிய லெனியதிற்கு எதிரானது.கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒவ்வாதது. நாம் விரும்புவது என்னவெனில் மார்க்சிய லெனினிய பயிலுதல் பாணியேயாகும்.பயிலுதல் பாணி என நாம் அழைப்பது வெறும் பள்ளிக்கூடங்களில் உள்ள பயிலுதல் பாணியை எனப் பொருள் கொள்ளவில்லை. மாறாக முழு கட்சியில் உள்ள பயலுதலையே பொருள் கொள்கிறோம்.
அதுநமது தலைமை அமைப்புகளில் உள்ள தோழர்கள்,அனைத்துஊழியர்கள், கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் சிந்தனையின் வழிமுறை குறித்த சிக்கலே ஆகும்.அச்சிக்கல் மார்க்சிய லெனினியத்தை நோக்கி நமது எண்ணப் போக்கைப் பற்றிய சிக்கலே ஆகும்.சரியான பொருளில் அது அசாதாரணமான சிக்கலே ஆகும்.உண்மையில் முதன்மை முக்கியத்துவம் வாய்ந்தது.மடத்தனமான சில கருத்துக்கள் மக்கள் பலரிடையே பயன்பாட்டில் உள்ளன.எடுத்துக்காட்டாக ஒரு கோட்பாட்டாளர் என்றால் என்ன ஓர் அறிவுஜீவி என்றால் என்ன கோட்பாட்டையும் நடைமுறையும் இணைப்பது என்றால் என்ன ஆகியவை பற்றிய மடத்தனமான கருத்துக்கள் உள்ளன.
முதலாவதாக நமது கட்சியின் கோட்பாட்டு மட்டம் உயர்வாக உள்ளதா தாழ்வாக உள்ளதா என கேட்போம். அண்மையில் மார்க்சிய லெனினிய படைப்புகள் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதிகமான மக்கள் அவற்றை வாசித்து வருகிறார்கள் அது மிகச்சிறந்ததே. ஆனால் இதன் விளைவாய் நமது கட்சியின் கோட்பாட்டு மட்டம் பெரும் அளவில் உயர்ந்து விட்டது என நாம் கூற இயலுமா ?
இப்பொழுது உள்ளம் மட்டம் முன்பை விட ஓரளவு உயர்வாக உள்ளது என்பது உண்மையே. ஆனால் நமது கோட்பாட்டு அரங்கமானது சீனப் புரட்சிகர இயக்கத்தின் செழுமையான உள்ளடக்கத்தோடு மிகவும் அதிக அளவில் பொருந்தாமல் உள்ளது.இரண்டின் ஒப்பீடான கோட்பாட்டுத் தரப்பு மிகவும் பின்தங்கி கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது. பொதுவாக கூறுகையில் நமது கோட்பாடானது நமது புரட்சிகர நடைமுறைக்கு வழிகாட்டுவதற்கு தலைமை தாங்க வேண்டும் என்பது ஒரு புறம் இருக்க நமது புரட்சிகர நடைமுறையின் வேகத்திற்கு இன்னமும் தொடர இயலாமல் உள்ளது.நாம் நமது பல்வேறு வகையிலான வளமான நடைமுறையை முறையான கோட்பாட்டு தளத்திற்கு இன்னமும் உயர்த்தவில்லை.நாம் புரட்சிகர நடைமுறையின் அனைத்து சிக்கல்களையும் முக்கியமானவற்றையும் கூட இன்னும் ஆராயாமல் அவற்றை கோட்பாட்டு தளத்திற்கு உயர்த்தாமல் உள்ளோம்.சற்றே சிந்திப்பீர் நம்மில் எத்தனை பேர் சீனாவின் பொருளியல் அரசியல் ராணுவ விவகாரங்கள் அல்லது பண்பாடு பற்றி பெயர் சொல்லக் கூடிய அளவிற்கு கோட்பாடுகளை உருவாக்கியுள்ளனர் நம்மில் எத்தனை பேர் பட்டை தீட்டப்படாத முழுமையுறாத கோட்பாடுகளை அல்லாமல் அறிவியல் ரீதியான விரிவான கோட்பாடுகள் என கருதப்படுகின்றவாறு உருவாக்கியுள்ளனர்? குறிப்பாக பொருளாதார கோட்பாட்டு தளத்தில் சீன முதலாளித்துவமானது அபினிப்போர் முதற்கொண்டு நூற்றாண்டு கால வளர்ச்சியை கொண்டுள்ளது.எனினும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் எதார்த்தங்களோடு ஒத்திசைகிற உண்மையிலே அறிவியல் ரீதியான தனி ஒரு கோட்பாட்டு படைப்பு உருவாக்கப்படவில்லை எடுத்துக்காட்டாக சீனாவின் பொருளாதார சிக்கல்கள் குறித்த பயிலுதலில் கோட்பாட்டு மட்டம் ஏற்கனவே உயர்வாக உள்ளது என நாம் கூற இயலுமாநிச்சயமாக இல்லை நாம் மாபெரும் மார்க்சிய லெனினிய நூல்கள் பலவற்றை வாசித்துள்ளோம்.ஆகையால் நாம் கோட்பாட்டாளர்களைக் கொண்டுள்ளோம் எனக் கூறிக் கொள்ள இயலுமாநம்மால் முடியாது.ஏனெனில் மார்க்சிய லெனினியம் என்பது ஏங்கெல்ஸ் லெனின் ஸ்டாலின் ஆகியோரால் நடைமுறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கோட்பாடாகும்.அவர்களின் பொதுமுடிவானது வரலாறு மற்றும் புரட்சிகர எதார்த்தத்தில் இருந்து வரையப்பட்டதுஅவர்களின் படைப்புகளை வெறுமனே வாசித்து அவற்றின் கோட்பாட்டு ஒளியில் சீன வரலாறு மற்றும் புரட்சியின் எதார்த்தங்களைப் பயில்வதற்கு முன் செல்லாமல் இருப்போமானால் கோட்பாட்டின் அடிப்படையில் கவனமாக சீனப் புரட்சிகர நடைமுறையின் மூலம் சிந்திப்பதற்கு எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்போமானால் நம்மை மார்க்சிய கோட்பாட்டாளர்கள் என அழைத்துக் கொள்வதற்கு மிகவும் அளவு கடந்த துணிவாக இருந்திட கூடாது.சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்ற அடிப்படையில் சீனாவின் சிக்கல்களுக்கு நமது கண்களை மூடிக்கொண்டு புறத்தொடர்பு இல்லாத முடிவுகளை அல்லது மார்க்சிய எழுத்துக்களில் இருந்து கொள்கை நெறிகளை மனப்பாடம் மட்டுமே செய்ய இயலவோமானால் உண்மையில் நமது சாதனைகள் கோட்பாட்டு அரங்கத்தில் மிகவும் அற்பத்தனமாக இருக்கும்.ஒரு நபர் மார்க்சிய பொருளியல் அல்லது தத்துவத்தை மனப்பாடம் செய்வது முதல் அத்தியாயத்தில் இருந்து பத்தாம் அத்தியாயத்தில் வரை பேச்சளவில் ஒப்பிக்க இயன்று அவற்றை செயல்படுத்த முழுமையாக முடியாமல் இருப்பாரானால் அவர் மார்க்சிய கோட்பாட்டாளர் என கருதப்பட இயலுமா?இல்லை.அவ்வாறு அவர் கருதப்பட இயலாது என்ன வகையான கோட்பாட்டாளர்களை விரும்புகிறோம்? மார்க்சிய லெனினிய நிலைப்பாடு,நோக்கு நிலை,வழிமுறை ஆகியவற்றுக்கு ஏற்ப வரலாறு மற்றும் புரட்சியின் செல் திசையில் ஏழும் நடைமுறை சிக்கல்களைச்சரியாக பொருள் விளங்கி சீனாவின் பொருளாதார அரசியல் ராணுவ பண்பாடு மற்றும் இதர சிக்கல்களில் அறிவியல் விளக்கங்கள் மற்றும் கோட்பாட்டு ரீதியான தெளிவுகளை அளிக்கஇயலுகின்றகோட்பாட்டாளர்களையே விரும்புகிறோம் ஒரு நபர் இவ்வகையான கோட்பாட்டாளராக இருப்பதற்கு மார்க்சிய லெனினியசாரம் மார்க்சிய லெனினிய நிலைப்பாடு, நோக்கு நிலை மற்றும் வழிமுறை மற்றும் காலனிய புரட்சி சீனப்புரட்சியாகிவை பற்றிய லெனின் ஸ்டாலின் ஆகியோரின் கோட்பாடுகள் பற்றிய உண்மையான உட்கிரகிப்பைக் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும்.அவர் அவற்றை சீனாவின் நடைமுறை சிக்கல்களைத் துருவிப் பார்ப்பதில் அறிவியல் ரீதியாக பகுப்பாய்வதிலும் செயல்படுத்தி சிக்கல்களை குறித்து வளர்ச்சியின் விதிகளை கண்டுபிடிக்க ஏதுவாக இருந்தாக வேண்டும்.அத்தகைய கோட்பாட்டாளர்களே உண்மையில் நமக்குத் தேவையாக இருக்கின்றனர்.
நமது கட்சியின் மையக் குழுவானது இப்போது சீன வரலாறு பொருளியல் அரசியல் ராணுவ விவகாரங்கள் பண்பாடு ஆகியவை பற்றி தீவிரமான பயிலுதலில் மார்க்சிய லெனினிய நிலைப்பாடு நோக்கு நிலை மற்றும் வழிமுறையின் எவ்வாறு செயல்படுத்துவது என்பதை கற்குமாறு விரிவான தகவலின் அடிப்படையில் ஒவ்வொரு சிக்கலையும் பருண்மையாக அலசி ஆராய்ந்து அதன் பின் கோட்பாட்டு முடிவுகளை வகுக்குமாறும் நமது தோழர்களுக்கு அறை கூவுகின்ற ஒரு முடிவை மேற்கொண்டுள்ளது நாம் இப்போது பொறுப்பை சுமந்தாக வேண்டும்.
(மாவோயின் தேர்ந்தெடுத்த படைப்புகள்-3, பக்கம் 40 லிருந்து). தொடரும்..அடுத்த இதழில்
No comments:
Post a Comment