நடைமுறை பற்றி. - மாவோ பாகம் – 1
மார்க்சுக்கு முன்,பொருள்முதல்வாதம்,மனிதனின் சமுதாய இயல்புக்கு புறம்பானதாகவும் அவனுடைய வரலாற்று ரீதியான வளர்ச்சிக்குப் புறம்பானதாகவுமே அறிவைப் பற்றியபிரச்சனைகளை ஆய்வு செய்தது. ஆதலால்அறிவுசமுதாயநடைமுறையைச் சார்ந்திருக்கிறதுஎன்பதை, அதாவது அறிவு,உற்பத்தியையும்,வர்க்கப் போராட்டங்களையும் சார்ந்திருக்கிறதுஎன்பதைப்புரிந்துகொள்ள இயலாததாக இருந்தது.
அனைத்திற்கும்மேலாக மனிதனுடைய பொருளுற்பத்திக்கான நடவடிக்கையே மிகவும்அடிப்படையான நடைமுறைச் செயல்,அதுதான் அவனுடைய பிற நடவடிக்கைகள் அனைத்தையும் தீர்மானிக்கும் செயல் என்று மார்க்சியவாதிகள் கருதுகிறார்கள்.மனிதனின்அறிவு என்பது அவனது பொருளுற்பத்திக்கான செயலையே முதன்மையாகச் சார்ந்திருக்கிறது.
அதன் மூலமாகவே அவன் இயற்கையின்புதுமைத்தோற்றத்தையும்,தன்மைகளையும்விதிமுறைகளையும் படிப்படியாக அறிந்து கொள்கிறான்.மேலும் தனக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள உறவையும்,தனது பொருளுற்பத்திச் செயலின் மூலமாக மனிதர்களுக்கு இடையில் பல்வேறு நிலைகளில் சில உறவுகள் நிலவுவதையும் அவன் படிப்படியாக அறிந்துகொள்கிறான். இந்த அறிவுகள் எதையுமே உற்பத்திக்கான செயலுக்கு அப்பாற்பட்டமுறையில் புரிந்துகொள்ள முடியாது.வர்க்க வேறுபாடு இல்லாத சமுதாயத்தில் ஒவ்வொரு நபரும் சமுதாயத்தின் ஒரு உறுப்பினர் என்ற முறையில் பிற உறுப்பினர்களுடன் பொதுவானமுயற்சியில்ஒன்றிணைந்து, அவர்களுடன் திட்டவட்டமான உற்பத்தி உறவுகளைக் கொண்டு, மனித வாழ்வின் பொருட் தேவைகளை நிறைவு செய்வதற்கான உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். வர்க்க வேறுபாடுகள் நிறைந்த எல்லா சமுதாயங்களிலும்,சமுதாயத்தின் வெவ்வேறு வர்க்கங்களின் உறுப்பினர்களும் பல்வேறு வகையில் திட்டவட்டமான உற்பத்திஉறவுகளைக் கொண்டு, அவர்களுடைய வாழ்வுக்காக பொருட் தேவைகளை நிறைவுசெய்வதற்கு உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். மனித அறிவு வளருவதற்கு முதன்மையான ஊற்றுமூலம் இதுவேதான்.
உற்பத்திச் செயலுடன் மட்டும்; மனிதனின் சமுதாய நடைமுறை நின்றுவிடாமல், வர்க்கப் போராட்டம்,அரசியல் வாழ்வு,அறிவியல்,கலையியல் வெளிப்பாடுகள்;சுருங்கக் கூறின்,சமுதாய வாழ்வியலுள்ளவன் என்ற வகையில்,சமுதாயத்தின் நடைமுறை வாழ்வின் எல்லாத் துறைகளிலும் மனிதன் பங்கேற்கிறான்.இவ்வாறாக மனிதன் பொருளியல் வாழ்வின் மூலமாக மட்டுமின்றி,அரசியல் கலாச்சார வாழ்வின் மூலமாகவும் (இவை இரண்டும் பொருளியல் வாழ்க்கையோடு நெருக்கமாக இணைந்துள்ளன)பல்வேறு நிலைகளில் மனிதர்களுக்கு இடையிலான வெவ்வேறு உறவுகளை அறிந்துகொள்கிறான். இத்தகைய வேறுவகையானசமுதாயநடைமுறைகளில், குறிப்பாக வர்க்கப் போராட்டமானது அதன் பல்வேறுபட்ட எல்லா வடிவங்களாலும் மனிதனின் அறிவு வளர்ச்சியில் ஆழமான செல்வாக்கைச் செலுத்துகிறது.
வர்க்க சமுதாயத்தில் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் உறுப்பினராகவாழ்கிறார்கள்.ஒவ்வொரு சிந்தனையிலும் விதிவிலக்கின்றி ஒரு வர்க்கத்தின் முத்திரைகுத்தப்பட்டிருக்கின்றது.மனித சமுதாயத்தில் உற்பத்திக்கான செயல் கீழ் நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு படிப்படியாக வளர்கிறது.அதையொட்டி மனிதனின் இயற்கை அல்லது சமுதாய அறிவும் தாழ்ந்த நிலையிலிருந்து படிப்படியாக உயர்நிலைக்கும்அதாவதுமேலோட்டமான நிலையிலிருந்து ஆழமான நிலைக்கும் பகுதி நிலையிலிருந்து பன்முகப்பட்ட நிலைக்கும் வளருகிறது என்று மார்க்சியவாதிகள் கருதுகின்றனர். வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாக மனிதன் சமுதாய வரலாற்றைப் பற்றி ஒருதலைப் பட்சமாகவே புரிந்துகொண்டிருந்தான்.
ஏனெனில் ஒருபுறம் சுரண்டும் வர்க்கம் எப்பொழுதும் வரலாற்றை தனக்கேற்ற வகையில்சிதைத்து வந்திருப்பதும்,மறுபுறத்தில் சிறிய அளவிலான உற்பத்திமனிதனுடையகண்ணோட்டத்தைக் குறுக்கிவிட்டதும்தான் காரணம்.நவீன பாட்டாளி வர்க்கம் மிகப்பெரியஉற்பத்திச் சக்திகளுடன் (பெரிய தொழிற்சாலை)உயிர்த்தெழும் வரையில்,மனிதனால் சமுதாய வளர்ச்சியைப் பற்றி விரிவான வரலாற்று அறிவைப் பெற முடியவில்லை என்பதோடு,இந்த அறிவை ஓர் அறிவியல் தத்துவமாக, மார்க்சியம் என்னும் அறிவியலாக மாற்றவும்இயலவில்லை.
மனிதனின் புற உலகத்தைப் பற்றிய உண்மையான அறிவிற்கு அவனது சமுதாய நடைமுறைமட்டும்தான் ஒரே அளவு கோலாக இருக்கிறது என்று மார்க்சியவாதிகள் கருதுகிறார்கள்.
உண்மையில் நடைபெறுவது யாதெனில்,சமுதாய நடைமுறை நிகழ்ச்சிப் போக்கில் (பொருளுற்பத்தி,வர்க்கப் போராட்டம் அல்லது விஞ்ஞானப் பரிசோதனை)அவன் எதிர்பார்த்த பலனை அடையும் போதுதான் மனிதனின் அறிவு சோதிக்கப்பட்டதாகிறது.
ஒருவன் தன்னுடைய வேலையில் வெற்றியடைய விரும்பினால் அதாவது,எதிர்பார்த்த விளைவுகளை பெற விரும்பினால்,தனது கருத்துக்களை புறநிலை உலகின் விதிகளுடன் இசைவுடையவையாக செய்ய வேண்டும்;அவை இசைவாகாவிட்டால் அவன் நடைமுறைப்படுத்தும்போது தோல்வியடைவான். தோல்வியடைந்தபின்அவன்தோல்வியிலிருந்து தனது படிப்பினைகளைப் பெற்று புறநிலை உலகின் விதிகளுக்கு இசைவாக தனது கருத்துக்களை மாற்றி தோல்வியை வெற்றியாக மாற்ற முடியும். “தோல்வி என்பது வெற்றியின் தாய்” ”இடறிவிழுதல் அறிவில் எழுதல்” என்பனவற்றின் பொருள் இதுவே.அறிவு பற்றிய இயங்கியல் பொருள்முதல்வாதத் தத்துவம்,நடைமுறையைமுதன்மையான இடத்தில்வைக்கிறது.மனித அறிவை எந்த வழியிலும் நடைமுறையிலிருந்து பிரிக்க முடியாதுஎன்றுகருதுகிறது என்பதோடு,நடைமுறையின் முக்கியத்துவத்தை மறுக்கின்ற,நடைமுறையிலிருந்து அறிவைப் பிரிக்கின்ற தவறான தத்துவங்கள் அனைத்தையும் புறக்கணிக்கிறது.எனவே ”நடைமுறை (தத்துவ) அறிவைவிட உயர்ந்தது, ஏனெனில் அது எங்கும் எல்லாக் காலத்திலும் நிறைந்திருக்கும் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றிருப்பதுமட்டுமின்றி, கண்கூடான உண்மையாகவும் இருக்கிறது” என்று லெனின் கூறினார்.
இயங்கியல் பொருள்முதல்வாதம் பற்றிய மார்க்சியத் தத்துவத்திற்கு இரண்டு சிறப்பியல்புகள்உண்டு.ஒன்று அதன் வர்க்க இயல்பு;இயங்கியல் பொருள்முதல்வாதம் என்பது பாட்டாளிவர்க்கத்திற்கு சேவை செய்வது என்று வெளிப்படையாக பிரகடனம் செய்கிறது. மற்றொன்று, நடைமுறைப் படுத்துவதற்கான அதன் சாத்தியப்பாடு;தத்துவம் நடைமுறைப் படுத்துவதில் தங்கியிருப்பதை அது வலியுறுத்துகிறது; தத்துவம் நடைமுறையைஆதாரமாகக்கொண்டது;
மீண்டும் நடைமுறைப் படுத்துவதற்கே பயன்படுகிறதுஎன்றுவலியுறுத்துகின்றது; எந்த அறிவின் அல்லது தத்துவத்தின்உண்மைத்தன்மையையும் ஒருவர் கொள்ளும் அக உணர்ச்சிகளைக்கொண்டுதீர்மானிக்கப் படுவதில்லை;மாறாக சமுதாய நடைமுறையில்அவற்றில் விளையும் யதார்த்த பலனைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.சமுதாய நடைமுறை மட்டும்தான் உண்மைக்கு உரை கல்லாக இருக்க முடியும்.அறிவு பற்றிய இயங்கியல் பொருள்முதல் வாதத் தத்துவத்தின் முதன்மையான அடிப்படையான நிலைபாடாகஇருப்பது நடைமுறை பற்றிய அதன் நிலைபாடுதான்.ஆனால்,எவ்வாறு மனித அறிவு நடைமுறையிலிருந்த எழுந்துநடைமுறைக்குத் தொண்டாற்று கிறதுஅறிவு வளர்ச்சி எவ்வாறு நிகழ்கிறது என்பதை நாம் பார்த்தால் இதுதெளிவாகத் தெரியும்.
நடைமுறை நிகழ்ச்சியின்போது,மனிதன் முதன்முதலில் பல்வேறு விஷயங்களின் புதுமைத் தோற்றத்தை, தனித்தனி அம்சங்களை, விஷயங்களின் புற உறவுகளைத்தான் பார்க்கிறான்.
உதாரணமாக யேனானைச் சுற்றிப் பார்த்து அறிவதற்காக சிலர் வெளியிலிருந்து வருகிறார்கள். முதல் ஒன்றிரண்டு நாட்கள் அவர்கள் யேனானின் அமைப்பை, அதன் வீதிகளை, வீடுகளைப் பார்க்கிறார்கள்; பலரைச் சந்திக்கிறார்கள், கேளிக்கை விருந்துகள், மாலைக் கூட்டங்கள், மக்கள் கூட்டங்கள் ஆகியவற்றில் பங்குகொள்கிறார்கள்; பல்வேறு வகையான உரையாடல்களைக் கேட்கிறார்கள்;பலதஸ்தாவேஜூகளைப் படிக்கிறார்கள். இவையெல்லாம் விஷயங்களின் புதுமை தோற்றங்கள்;இந்த விஷயங்களின் தனித்தனி அம்சங்கள்,அந்த விஷயங்களுக்கு இடையே உள்ள புற உறவுகளாகவே இருக்கின்றன. இது புலக்காட்சி அறிவின் கட்டம் எனப்படுகிறது.புலன்களுக்கு புலப்பட்டதை மனதில் பதியச் செய்து கொள்ளும் கட்டம் இது.அதாவது,யேனானிலுள்ள குறிப்பிட்ட இந்த விஷயங்கள்பார்வையாளர்களின் புலன் உறுப்புகளில் செயல்பட்டு,புலன் அறிவைத் தூண்டி,மூளையில் பல பதிவுகளைத் தோற்றுவித்து,அத்தோடு இந்தப் பதிவுகளின் புற உறவுகளைப் பற்றியபொதுவானதோர்வரைபடத்தையும் தோற்றுவிக்கிறது; இது அறிதலின் முதற்கட்டமாகும். இக்கட்டத்தில் ஆழ்ந்த கருத்துக்களை உருவாக்கிக் கொள்ளவோ தர்க்க ரீதியான முடிவுக்கு வரவோ மனிதனால் முடியாது.
சமுதாய நடைமுறை தொடர்ந்து கொண்டிருக்கையில்நடைமுறையினூடே மனிதனுக்குப் புலப்படுத்தி,அவனுடைய மூளையில் பதிவை ஏற்படுத்திய விஷயங்கள் திரும்பத் திரும்ப பலமுறை நிகழ்கின்றன;பிறகு மனிதனுடைய அறிதலின் நிகழ்ச்சிப் போக்கில் மூளையில் ஒரு திடீர் மாற்றம் (துரிதப் பாய்ச்சல்)ஏற்படுகிறது.கருத்துக்கள்உருவாகின்றன.கருத்துக்கள் என்பவை விஷயங்களின்புதுமைத்தோற்றங்களாக இனியும் இருப்பதில்லை; அந்த விஷயங்களின் சாராம்சத்தை, அவற்றின் ஒட்டுமொத்தத் தன்மையை,அவற்றின் உள்ளுறவுகளை அந்தக் கருத்துக்கள்உட்க்கொண்டுஇருக்கின்றன.கருத்துக்களுக்கும்,புலக்காட்சி அறிவுக்கும் இடையில் அளவில் மட்டுமின்றி பண்பிலும் கூட வேறுபாடுஇருக்கின்றது.தீர்மானம்,ஊகித்தல் ஆகியவற்றின் மூலம் மேலும் முன்னேறிச் செல்வதன் மூலம் ஒருவரால் தர்க்க ரீதியான முடிவிற்கு வர முடிகிறது. “புருவத்தை நெரித்தால் புதிய உபாயம் தோன்றும்”என்ற மூன்று சாம்ராஜ்யங்களின் கதையில் கூறப்படுவதும்”யோசித்துப்பார்க்கிறேன்” என்று அன்றாட வழக்கில் நாம் கூறுவதும், நிறை குறைகளை எடைபோட்டுமுடிவிற்குவருவதற்காகவும்,ஊகிப்பதற்காகவும் மனிதன் தன் மூளையில் கருத்துக்களைப் பயன்படுத்துவதையேகுறிப்பிடுகின்றன. இது அறிவின் இரண்டாவது கட்டம்,பார்வையாளர் குழுவில் யேனானுக்கு வந்திருப்பவர்கள் பல்வேறு தகவல்களை சேகரித்துக்கொண்டு அவற்றைச் “சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்த்தபின்” “ஜப்பான் எதிர்ப்பு தேசிய ஐக்கிய முன்னணி பற்றிய கம்யூனிஸ்டு கட்சியின் கொள்கை ஆழமானது, நேர்மையானது, உள்ளத் தூய்மையுடையது” என்று தீர்மானிக்க முடியும். இந்தத் தீர்மானத்திற்கு வந்தபின்,நாட்டைக் காக்க ஒன்றுபடுவதில் அவர்களும் உண்மையானவர்களாக இருந்தால்,மேலும் ஒருபடி முன்னேறி “ஜப்பான் எதிர்ப்பு தேசிய ஐக்கிய முன்னணி வெற்றி பெறும்”என்ற முடிவுக்கு அவர்களால் வர முடியும்.ஒரு விஷயத்தைப் பற்றி மனிதனுக்கு அறிவை ஏற்படுத்தும் இந்தக்கட்டமே, கருத்தை உருவாக்கி, மெய் பொய்களை மதிப்பிட்ட, முடிவுக்கு வரும் இந்தக் கட்டமே,ஒரு விஷயத்தை அறிந்துகொள்ளும் நிகழ்ச்சிப் போக்கின் மிகவும் முக்கியமான கட்டம்; இதுதான் பகுத்தறிவுக் கட்டம். அறிவு பெறுவதில் உண்மையான கடமை என்னவெனில் புலக்காட்சி,அறிவினூடே சிந்தனையை அடைந்து, புறநிலையானபொருட்களின் உள் முரண்பாடுகளை விரிவாக, படிப்படியாக அறிந்துகொள்வது,அதன்விதிகளையும்,ஒரு நிகழ்ச்சிப் போக்கிற்கும் மற்றொன்றிற்கும் இடையிலான உறவுகளையும் அறிந்துகொள்வதாகும்.அதாவது தர்க்க ரீதியான அறிவை அடைவதாகும். மீண்டும் கூறினால், தர்க்க ரீதியான அறிவு புலக்காட்சி அறிவிலிருந்து வேறுபட்டது; புலக்காட்சிஅறிவானது, விஷயங்களின் தனித்தனி அம்சங்கள், புதுமைத் தோற்றங்கள், புற உறவுகளைப் பற்றியதாகும்.ஆனால் தர்க்க ரீதியான அறிவு என்பதோ விஷயத்தின் முழுமையை,சாராம்சத்தை,உள்உறவுகள் ஆகியவற்றை அடைவதற்காகப் பெரும் தூரம் தாண்டி முன்னேறு வதோடு, சூழ்ந்திருக்கும் உலகின் உள் முரண்பாடுகளை வெளிப்படுத்திக் காட்டுகிறது. எனவே தர்க்க ரீதியான அறிவு என்பது சூழ்ந்துள்ள உலகின் முழுமையான வளர்ச்சிப் போக்கையும் அதன் எல்லா அம்சங்களுக்கு இடையேயும் நிலவும் உள் உறவுகளையும் உட்கொண்டதாக இருக்கிறது.
நடைமுறையை ஆதாரமாகக் கொண்டு,மேலோட்டமான அறிவிலிருந்து ஆழ்ந்த அறிவிற்கு முன்னேறிச் செல்கின்ற,அறிவு வளரும் நிகழ்ச்சிப் போக்குப் பற்றிய இயங்கியல் பொருள்முதல்வாதத் தத்துவத்தை மார்க்சியம் தோன்றுவதற்கு முன் எவரும் வகுத்துத் தரவில்லை. மார்க்சியப் பொருள்முதல்வாதம்தான் முதல்முதலாக இந்தப் பிரச்சனையை சரியாகத் தீர்த்து வைத்தது.உற்பத்திப் போராட்டம்,வர்க்கப் போராட்டம் ஆகிய மீண்டும் மீண்டும் தொடரும் நிகழும்தனது சிக்கல் நிறைந்த நடைமுறையின் போது,சமுதாயத்தில்வாழும் மனிதன் புலக்காட்சி அறிவிலிருந்து தர்க்க ரீதியான அறிவிற்கு முன்னேறிச் செல்வதை, அறிவு பெறுதல் என்பது ஆழ்ந்த தன்மை பெறும் இயக்கத்தை, பொருள்முதல்வாத அடிப்படையிலும் இயங்கியல் ரீதியிலும் சுட்டிக் காட்டியதன் மூலம் மார்க்சியப் பொருள்முதல்வாதம் தான் முதன்முதலில் இப்பிரச்சனையைச் சரியாகத் தீர்த்து வைத்தது.
சடப்பொருள் பற்றிய அல்லது இயற்கையின் ஒரு விதியைப் பற்றிய பொதுக் கருத்து அல்லதுமதிப்பு பற்றிய பொதுக் கருத்து முதலியன,சுருங்கக் கூறினால் எல்லா அறிவியல் (சரியான,ஆழமான, மடத்தனமற்ற) பொதுக் கருத்துக்களும் இயற்கையை மேலும் ஆழமாக,உண்மையாக, முழுமையாகப் பிரதிபலிக்கிறது என்று லெனின் கூறினார். அறிதலின் வளர்ச்சிப் போக்கின் இரண்டு கட்டங்களில் ஒவ்வொன்றுக்கும், அதற்கே உரிய தனித் தன்மைகள் உண்டு என்று மார்க்சியம் - லெனினியம் கருதுகிறது; அறிவு முதற் கட்டத்தில், கீழ்நிலையில் புலக்காட்சி அறிவாகவும் இரண்டாவது கட்டத்தில், உயர் நிலையில் தர்க்க ரீதியானஅறிவாகவும் வெளிப்படுகிறது: ஆனால் இவை இரண்டும் அறிதலின் ஒன்றிணைந்த ஒரேநிகழ்ச்சிப் போக்கின் இரு கட்டங்களாகும். புலக்காட்சி அறிவும், பகுத்தறிவும் பண்பியல்ரீதியில் வேறுபட்டவை. ஆனால் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிந்திருப்பதில்லை:நடைமுறையின் அடிப்படையில்அவைஒன்றிணைந்திருக்கின்றன. புலப்படுவதை உடனடியாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதையும், எதைப் புரிந்துகொண்டோமோ அதைத்தான் மேலும் ஆழமாகப் பார்க்க முடியும் என்பதையும் நமது நடைமுறை நிரூபிக்கிறது.புதிய தோற்றங்களின் பிரச்சனையை மட்டும்தான் புலக்காட்சி அறிவு தீர்த்து வைக்கிறது;ஆனால் சாராம்சம் பற்றிய பிரச்சனையை தத்துவத்தால்தான் தீர்க்க முடியும்.இந்த இரண்டு பிரச்சனைகளின் தீர்வையும் நடைமுறையிலிருந்து அணு அளவுகூடப்பிரிக்க முடியாது.ஒருவர் எந்த விஷயத்தை அறிய விரும்பினாலும் அவருக்கு அத்துடன் தொடர்பு கொள்வதைத் தவிர அதாவது அதன் சூழ்நிலையில் வாழ்வதைத் தவிர(நடைமுறையில் ஈடுபடுவதை) வேறு வழியில்லை.
நிலவுடமைச் சமுதாயம் நிலவும்போது முதலாளித்துவ சமுதாயத்தின் விதிமுறைகளை முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியவில்லை;ஏனென்றால் முதலாளித்துவம் அப்பொழுது தோன்றியிருக்கவில்லை. அதற்குரிய நடைமுறை இல்லாமலிருந்தது; மார்க்சியம், முதலாளித்துவ சமுதாயத்தின் படைப்பாக மட்டுமே இருக்க முடியும். முதலாளித்துவத்தின் சுதந்திரமான போட்டா போட்டியின் யுகத்தில் வாழ்ந்த காரல் மார்க்சால் ஏகாதிபத்திய யுகத்திற்குரிய சில தனித் தன்மை வாய்ந்த விதிகளை முன்கூட்டியே ஸ்தூலமாக அறிந்து கொள்ள முடியவில்லை.ஏனென்றால் முதலாளித்துவத்தின் இறுதிக் கட்டமான ஏகாதிபத்தியம் அப்பொழுது தோன்றியிருக்கவில்லை. எனவே, அதற்குரிய நடைமுறை இல்லாமலிருந்தது: லெனினாலும் ஸ்டாலினாலும்தான் இந்தக் கடமையை நிறைவேற்றமுடிந்தது.
மார்க்ஸ்,எங்கெல்ஸ்,லெனின்,ஸ்டாலின்ஆகியோர்களால்தங்களுடைய தத்துவங்களை வகுத்தளிக்க முடிந்தது எவ்வாறு என்றால், அவர்களின் நுண் அறிவு ஒருபுறம் இருக்க, அவர்களின் காலத்தில் நிகழ்ந்த வர்க்கப் போராட்ட நடைமுறையிலும் விஞ்ஞானப் பரிசோதனைச் செயலிலும் அவர்களே நேரடியாகப் பங்கேற்றதே முதன்மையான காரணம்.
இந்தச் சூழ்நிலை இல்லாவிடில் எந்த நுண்ணறிவாளராலும் வெற்றிபெற்று இருக்க முடியாது.
“படிக்கட்டைத்தாண்டாமலேயேஅறிவாளி பரந்த உலக விவகாரங்களை அறிகிறான்”என்றபேச்சு,தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத பழங்காலத்திய வெறும் வெட்டிப் பேச்சாகும்.
தொழில்நுட்ப அறிவு வளர்ச்சி அடைந்திருக்கும் இன்றைய காலக் கட்டத்தில் இது பொருந்துவதாக இருந்தாலும் உலகம் முழுவதும் பரவலாகநடைமுறையில்ஈடுபட்டிருக்கும் மக்கள்தான் உண்மையின் நேரடியான அறிவுடையவர்கள் ஆவார்கள்.இந்த மக்கள் தமது நடைமுறையின் மூலம் “அறிவைப்”பெறும்பொழுது மட்டும்தான்,அந்த அறிவு எழுத்து மூலமாகவும்,தொழில்நுட்ப வழிகளின் மூலமாகவும் அறிவாளியிடம் கிடைக்கும் பொழுது மட்டும்தான் அவர் மறைமுகமாக “பரந்த உலக விவகாரங்கள் எல்லாவற்றையும் அறிகிறார்.”
நீங்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தையோ,அல்லது குறிப்பிட்ட விஷயங்களின் தொகுதியையோ நேரடியாக அறியவிரும்பினால், நடைமுறைப் போராட்டத்தில் நீங்களே
நேரடியாகப் பங்கு பெற்றாக வேண்டும். யதார்த்தத்தை மாற்றுவதற்கான, ஒரு குறிப்பிட்டவிஷயத்தை,குறிப்பிட்ட விஷயங்களின் தொகுதியை மாற்றுவதற்கான நடைமுறைப் போராட்டத்தில் நேரடியாக பங்கு பெற்றாக வேண்டும். இவ்வாறுதான் புதிய தோற்றங்கள் என்ற முறையில் அவற்றோடு நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்.யதார்த்தத்தை மாற்றுவதற் காக நீங்களே நேரடியாகப் பங்கெடுக்கும் நடைமுறைப் போராட்டத்தில்தான் அந்தவிஷயங்கள்,அல்லது விஷயங்களின் தொகுதியின் சாராம்சத்தை உங்களால் விண்டு பார்த்துப் புரிந்துகொள்ள முடியும்.அறிவை அடைவதற்கான இந்த வழியில்தான் ஒவ்வொருவரும் உண்மையில் செல்கிறார்கள்.ஆனால் விஷயங்களை வேண்டுமென்றே திரித்துப் புரட்டுபவர்கள்தான் இதற்கு நேர்மாறாக விவாதிக்கிறார்கள். “எல்லாம் தெரிந்த மேதாவிதான்” உலகத்தில் அதிகமான ஏளனத்திற்கு உரியவர்.சிறிது கேள்வி ஞானத்தில் அரைவேக்காட்டுஅறிவைப் பெற்றுக் கொண்டு,இவர் “உலகத்தின் ஆதார பூர்வமான முதலாம் நபராக” தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்;அவர் தன்னையே சரியாக எடைபோட்டு மதிப்பிட்டுக்கொள்ளவில்லை.என்பதைத்தான் இது காட்டுகிறது.அறிவு என்பது விஞ்ஞானம் தழுவிய ஒரு விஷயம்.இதில் நேர்மையின்மையோ செருக்கோ அனுமதிக்க முடியாதவை.இதில் உண்மையில் தேவையானவை இவற்றுக்கு நேர் எதிரானவை. நேர்மையும் அடக்கமும் ஆகும்.
நீங்கள் அறிவு பெற விரும்பினால்,யதார்த்தத்தை மாற்றும் நடைமுறையில் பங்கு பெற்றாக வேண்டும்.பேரிக்காயின் சுவையை நீங்கள் அறிய விரும்பினால் அதை நீங்களே தின்று ருசி பார்க்க வேண்டும். அணுக்களின் உள் அமைப்பையும் குணங்களையும் நீங்கள் அறிய விரும்பினால், அணுக்களின் கட்டமைப்பை மாற்றுவதற்காக நீங்கள் பௌதீக - ரசாயனப் பரிசோதனை செய்ய வேண்டும். புரட்சியின் தத்துவம், வழிமுறைகள் பற்றி நீங்கள் அறிய விரும்பினால், நீங்கள் புரட்சியில் பங்குபெற வேண்டும். உண்மையான அறிவு முழுவதும் நேரடியான அனுபவத்திலிருந்தே தோன்றுகிறது. ஆனால் மனிதன் எல்லா விஷயங்களிலும் நேரடியான அனுபவத்தைப் பெற முடியாது. உண்மையில் நமது அறிவின் பெரும்பகுதிமறைமுகஅனுபவத்திலிருந்தே வருகிறது. பண்டைகால அறிவு, அந்நிய நாடுகளின் அறிவு முழுவதும் இதற்கு உதாரணங்களாகும். பண்டைகால மக்களுக்கும், அந்நியர்களுக்கும் அந்த அறிவு நேரடியான அனுபவமாக இருந்தது. அல்லது இருக்கிறது;பண்டைக்கால மக்கள்,அந்நிய நாட்டவர்கள் ஆகியோரின் நேரடியான அனுபவம் என்ற வகையில் அந்த அறிவு “விஞ்ஞானரீதியான பொதுக்கருத்துக்கு” லெனின் குறிப்பிடும் தேவைகளைப் பூர்த்தி செய்திருந்தால் அல்லது செய்தால், புறநிலை யதார்த்தத்தை விஞ்ஞான ரீதியாகப் பிரதிபலித்தால் அது நம்பத்தக்கது; இல்லாவிட்டால் அந்த அறிவை நம்ப முடியாது.எனவே மனித அறிவு இரு பகுதிகளை மட்டும் கொண்டது;நேரடியான அனுபவத்திலிருந்து கிடைப்பது ஒன்று,மறைமுகமான அனுபவத்திலிருந்துகிடைப்பது மற்றொன்று.எனக்கு மறைமுக அனுபவமாக இருப்பதே மற்றொருவருக்கு நேரடி அனுபவமாக இருக்கிறது. எனவே, அறிவு என்பதை முழுமையாகப் பார்த்தால், எந்த வகைப்பட்ட அறிவையும் நேரடி அனுபவத்திலிருந்து பிரிக்க முடியாது. மனிதன் தன் புலன் உறுப்புகளால் தன்னை சூழ்ந்திருக்கும் யதார்த்தத்தை உலகத்தை புலக்காட்சியாக அறிவதால்தான் எல்லா அறிவும் தோன்றுகிறது.இத்தகைய புலன் அறிவை மறுப்பவன் நேரடி அனுபவத்தை மறுக்கிறான்அல்லது யதார்த்தத்தை மாற்றுவதற்கான நடைமுறையில் பங்கு கொள்வதை மறுக்கிறான்.
அவன் ஒரு பொருள்முதல்வாதியல்ல. இதனால்தான் “எல்லாம் தெரிந்த மேதாவியைக்” கேலிக்குரியவன் என்கிறோம்.“புலிக் குகையில் புகாமல் புலிக்குட்டியைப் பிடிப்பது என்பதுஎவ்வாறு முடியும்?”என்றொரு சீனப் பழமொழி உண்டு,மனிதனின் நடைமுறைக்கும் இந்தப் பழமொழி உண்மையில் பொருந்தும். அறிவு பற்றிய தத்துவத்திற்கும் இது உண்மையில்பொருந்தும். நடைமுறைக்கு புறம்பான அறிவு என்பது இருக்கவே முடியாது.
யதார்த்தத்தை மாற்றியமைக்கும் நடைமுறையிலிருந்து எழும் இயங்கியல் பொருள்முதல்வாத அறிதலின் இயக்கத்தை,அறிவு பெறுவதுபடிப்படியாக ஆழப்பட்டுவரும் இயக்கத்தை தெளிவுபடுத்துவதற்காக சில ஸ்தூலமான உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
பாட்டாளி வர்க்கம் தன் நடைமுறையின் முதற்கட்டத்தில் இயந்திரங்களை உடைத்து நொறுக்கியும் தானாக குமுறியெழுந்து போராடுவதுமான காலத்தில் முதலாளித்துவ சமுதாயத்தைப் பற்றிய அதன் அறிவு,புலக்காட்சி அறிவாகவே இருந்தது.முதலாளித்துவத்தின் புதிய தோற்றங்களின் சில அம்சங்களையும் புற உறவுகளையுமே அது அறிந்திருந்தது.
அப்பொழுது பாட்டாளி வர்க்கம் “தானேயான வர்க்கமாக”வே இருந்தது. ஆனால் இந்த வர்க்கம் தனது நடைமுறையில் இரண்டாவது கட்டத்தை அடைந்த போது உணர்வுப்பூர்வமாகவும் அமைப்பு ரீதியிலும் பொருளாதார,அரசியல்போராட்டங்களை நடத்தும் காலத்தில், முதலாளித்துவ சமுதாயத்தின் சாராம்சத்தை,சமூக வர்க்கங்களுக்கு இடையேயுள்ள சுரண்டல் உறவையும் தனக்கே உரிய வரலாற்றுக் கடமையையும் புரிந்துகொள்வதற்கு பாட்டாளி வர்க்கத்தால் முடிந்தது: அது அவ்வாறு செய்ய முடிந்ததற்கு காரணம் அதன் சொந்தநடைமுறையும், நீண்டகாலப் போராட்டத்தில் பெற்ற அதன் அனுபவங்களும்தான்.இதை மார்க்சும் எங்கெல்சும் எல்லா வகைகளிலும் விஞ்ஞான ரீதியில் தொகுத்து பாட்டாளி வர்க்கத்தின் கல்விக்காக மார்க்சியத் தத்துவத்தை உருவாக்கினார்கள்.இதற்குப் பிறகுதான் பாட்டாளி வர்க்கம் “தனக்கான வார்க்கமாக” மாறியது.
சீன மக்களும் ஏகாதிபத்தியத்தைப் பற்றி இதே வழியில்தான் அறிந்து கொண்டார்கள். முதற் கட்டத்தில் மேலோட்டமான புலக்காட்சி அறிவுதான் ஏற்பட்டிருந்தது. தாய்ப்பிங் சொர்க்க சாம்ராஜ்ஜிய இயக்கம்,யிஹோடுவான் இயக்கம் போன்ற கண்மூடித்தனமான அந்நிய எதிர்ப்புப் போராட்டங்கள் இதை எடுத்துக் காட்டுகின்றன.இரண்டாவது கட்டத்தில்தான் சீன மக்கள் பகுத்தறிவின்கட்டத்தை அடைந்தார்கள். ஏகாதிபத்தியத்தின் உள், வெளி முரண்பாடுகளைக்கண்டுகொண்டார்கள்.பரந்துபட்ட சீன மக்களைச் சுரண்டுவதற்காக,ஏகாதிபத்தியம் சீனத் தரகு வர்க்கத்துடனும் நிலவுடமை வர்க்கத்துடனும்கூட்டுச்சேர்ந்திருக்கிறது என்ற அடிப்படை உண்மையைக் கண்டுகொண்டார்கள்.1919ஆம் ஆண்டு மே 4ஆம் நாள் இயக்கத்தின் போதுதான் இந்த அறிவு ஏற்படத் துவங்கியது.
அடுத்து,நாம் யுத்தத்தைப் பரிசீலிப்போம்.ஒரு யுத்தத்தைத் தலைமையேற்று நடத்துகிறவர்கள் யுத்த அனுபவம் இல்லாதவர்களாக இருந்தால்,குறிப்பிட்டதோர் யுத்தத்தை நடத்துவதற்கான (உதாரணமாக கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற விவசாயப் புரட்சி யுத்தம்) உள்ளார்ந்த விதிகளை ஆரம்பக் கட்டத்தில் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. ஆரம்பக் கட்டத்தில் அவர்களுக்கு நன்கு சண்டை செய்யும் அனுபவம் கிடைக்கிறது. அவ்வளவுதான், வேறென்ன?
பல தோல்விகளையும் அடைகிறார்கள்.ஆனால்,அந்த அனுபவத்திலிருந்து (வெற்றி பெற்ற போராட்டங்களின் அனுபவத்திலிருந்தும்,குறிப்பாகத் தோல்வியடைந்த போராட்ட அனுபவங்களிலிருந்தும்)முழு யுத்தத்தில் உள்ளோட்டமான சரடை,அதாவது அக் குறிப்பிட்ட யுத்தத்தின் விதிகளை முழுமையாக அறிந்து கொண்டு, அதன் போர்த்தந்திரத்தையும்,செயல்தந்திரத்தையும் புரிந்துகொண்டு, அதன் பயனாக அவர்களால் யுத்தத்தை மேலும் நம்பிக்கையுடன் நடத்த முடிகிறது.அத்தகையதோர்தருணத்தில்,ராணுவத் தலைமைப்பொறுப்பை மாற்றி அனுபவம் இல்லாத ஒருவரிடம் ஒப்படைத்தால்,பிறகு அவரும் கூடயுத்தத்தின் உண்மையான விதிகளை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு முன்னால் தோல்விகள் பலவற்றைசந்திக்கவேண்டியிருக்கிறது. (அனுபவங்களைப் பெற வேண்டி யுள்ளது)
நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை.
1.காரல்மார்க்சால் முன்வைக்கப்பட்ட இயக்கவியல் பொருள்முதல்வாதத் தத்துவத்திற்கு முன்பு உலகில் முன்வைக்கப்பட்ட பொருள்முதல் வாதமானது,அறிவு மற்றும் அறிவின் வளர்ச்சியை மனிதர்களின் சமூக நடவடிக்கையைச் சார்ந்துள்ளது என்பதை புரிந்துகொள்ளவில்லை.
மார்க்சியஇயக்கவியல்பொருள்முதல்வாதம்தான் மனிதர்களின் அறிவு வளர்ச்சிக்கு மனிதர்களின் சமூக நடைமுறை அனுபவமே அடிப்படை என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியது. அதாவது உற்பத்திப் போராட்டம் மற்றும் வர்க்கப் போராட்ட நடைமுறை அனுபவங்களிலிருந்தே மனிதர்கள் சமூக அறிவைப் பெறுகிறார்கள் என்ற உண்மையை மார்க்சியம் வலியுறுத்துகிறது.
2.மனிதனுடைய பொருளுற்பத்திக்கான நடவடிக்கையின்மூலமேஇயற்கையைப் பற்றியஉண்மைகளை மேலும் மேலும் மனிதர்கள்அறிந்துகொண்டுஇயற்கையைப் பற்றிய அறிவைமேலும் மேலும்ஆழமாகப் பெறுகிறார்கள்.
3.விவசாயத்தில் ஈடுபட்ட மனிதர்கள் ஆரம்ப காலங்களில் விவசாயம் செய்தது போல தற்போது விவசாயம் செய்வதில்லை.மாறாக நவீன காலத்தில் விவசாயம் செய்வதற்கு தேவையான கருவிகளை புதிது புதிதாக நடைமுறை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடித்துஅதனை விவசாய உற்பத்தியில் பயன்படுத்துகிறார்கள்.விவசாயம் செய்யும் முறையிலும் புதிய புதிய முறைகளை கண்டுபிடித்து தற்காலத்தில் புதிய முறைகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்கிறார்கள். இத்தகைய புதிய முறைகளையும் புதிய கருவிகளையும் பயன்படுத்து வதற்கு விவசாய விஞ்ஞானிகள் விவசாயிகளுக்கு துணைபுரிகிறார்கள்.
4.பொருள் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களும் மனிதர்களுக்குத் தேவையான பல பொருட்களை புதிய புதிய பொருள்களை உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு புதிய புதிய பொருட்களை உற்பத்தி செய்து கொடுப்பதற்குதேவையானவிஞ்ஞானத்தை தொழிற்துறை விஞ்ஞானிகள் தொழிலாளர்களுக்கு தயாரித்து வழங்குகிறார்கள்.இவை அனைத்தும் தொழிற்துறைஉற்பத்திநடைமுறையில்விஞ்ஞானிகளும் தொழிலாளர்களும் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலமே புதிய மனிததேவைகளைபுதிதாககண்டுபிடித்து உருவாக்க முடிந்தது.
5.இதே போலவே சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் சமுதாய வர்க்கப் போராட்ட நடவடிக்கையில் உழைக்கும் மக்களும் உழைக்கும் மக்களுக்கு வழிகாட்டிய தலைவர்களும் தொடர்ந்து ஈடுபட்டு புதிய புதிய அனுபவங்களைப் பெற்று, அந்தஅனுபவங்களின் அடிப்படையில், புதிய புதிய வர்க்கப் போராட்ட முறைகளை கண்டுபிடித்துதொடர்ந்து புதிய புதிய முறையிலான வர்க்கப் போராட்டங்களை நடத்தியதன் மூலமே மனிதசமூகமானது புதிய புதிய வடிவங்களைப் பெற்று புதிய புதிய சமூகமாக மாறியது, புதிய புதிய சமுதாயமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆகவே சமூகத்தை புதிய சமூகமாக மாற்றவிரும்புபவர்கள் சமுதாயத்தைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால்உற்பத்திப் போராட்டம்,வர்க்கப் போராட்டம் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு அவர்கள் சமூகத்தில் நடைபெறும் வர்க்கப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு அதன் அனுபவத்திலிருந்துபுதியமுறையிலான போராட்ட வடிவங்களை கண்டுபிடித்துசெயல்படுத்த வேண்டும்.அவ்வாறு இல்லாமல் அரைத்த மாவையே அரைக்கும் வகையில்ஒரே வகையான போராட்டங்களை நடத்துவதால் சமூகத்தை மாற்ற முடியாது.இதுவரைஇந்தியாவில் சமூகத்தை புரட்சிகரமான முறையில் மாற்ற விரும்பியவர்கள்அடைந்ததோல்விகளுக்கு காரணம் நடைமுறை அனுபவத்திலிருந்து புதிய நடைமுறையை கண்டுபிடிக்கதவறியது ஆகும். வர்க்கங்களைப் பற்றி அதன் உணர்வுகளை புரிந்துகொள்ளவில்லை.
இத்தகைய வர்க்க ஆய்வின்றி தன்மனப் போக்கில் செயல்படுவதால் தோல்வி தவிர்க்க முடியாதுஎன்பதுதான் நடைமுறை உண்மையாகும்.
6.மனிதர்கள் பல்வேறுவிதமான நடைமுறைகளில் ஈடுபடுகிறார்கள்.ஆனால் இந்த நடைமுறைகளில் முதன்மையானது மனிதர்களின் பொருளுற்பத்தி நடவடிக்கையே ஆகும்.
இந்தபொருளுற்பத்தி நடவடிக்கைதான் மனிதர்களின் பிற நடவடிக்கைகள் அனைத்தையும் தீர்மானிக்கும் செயலாகும் என்று மார்க்சியவாதிகள் கூறுகிறார்கள்.ஏனெனில் மனிதர்கள் பொருளுற்பத்தில் ஈடுபடவில்லை என்றால்,மனிதர்களுக்கு தேவையான உணவு,உடை இருப்பிடம் போன்ற தேவைகள்மனிதர்களுக்கு கிடைக்காது.இத்தகைய தேவைகள்மனிதர்களுக்கு கிடைக்கவில்லை என்றால் மனிதர்கள் தொடர்ந்து உயிர்வாழ முடியாது. மனிதசமூகமே அழிந்துவிடும். ஆகவே மனித சமூகம் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கும், மனித சமூகம் வளருவதற்கும், மனிதர்களின் பொருளுற்பத்தி நடவடிக்கையானது முதன்மையானதாகவும்,அவசியமானதாகவும் உள்ளது என்பது ஒரு நடைமுறை உண்மையாகும்.
7.மனிதர்களின் அறிவு என்பது அவர்களின் பொருளுற்பத்தி நடவடிக்கையையே முதன்மையாக சார்ந்துள்ளது.மனிதர்கள்பொருளுற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலமே இயற்கையின் புதிய புதிய தோற்றங்களையும்,அதன்தன்மைகளையும்,இயற்கைஇயங்கும் விதத்தையும் படிப்படியாக அறிந்துகொண்டு தனது அறிவை மனிதர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள்.
8.மனிதர்கள் பொருளுற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடும் போதுதான்,தனக்கும் இயற்கைக்கும்இடையிலான உறவுகளையும்,பொருளுற்பத்தியில் ஈடுபடும் மனிதர்களுக்கு இடையிலானஉறவுகளையும்புரிந்து கொள்கிறார்கள்..
9.இயற்கைக்கும் தனக்கும் இடையிலான உறவைப் புரிந்து கொண்டு, இயற்கையை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்வதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்கிறான், உதாரணமாகஇயற்கையை மாற்ற உதவும் புதிய புதிய கருவிகளைக் கண்டுபிடித்து அதனை செயல்படுத்து வதன் மூலம் இயற்கையை கட்டுப்படுத்தி தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறான்.
10.மனிதர்கள் பொருளுற்பத்தியில் ஈடுபடும் போதுதான் மனிதர்களுக்கு இடையிலான உறவையும் புரிந்து கொள்கிறான்.வர்க்க வேறுபாடு இல்லாத புராதன சமுதாயத்தில் ஒவ்வொரு மனிதனும் திட்டவட்டமான பகையற்ற முறையில் உற்பத்தி உறவைஅமைத்துக்கொண்டுஉற்பத்தியில் ஈடுபட்டார்கள். ஆனால் வர்க்க வேறுபாடுகள் கொண்ட அனைத்து வகையான சமுதாயத்திலும் பகையானவர்க்கங்களாக இருந்த போதும் இந்த வர்க்கங்களுக்கு இடையே ஒரு திட்டவட்டமான உறவைக் கொண்டு கட்டுப்பாட்டோடு உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டே வர்க்கப்பகைமையைத்தீர்த்துக்கொள்ளவர்க்கப் போராட்டத்தில் ஈடுபடுகிறார் கள். இதன் மூலம் வர்க்க சமுதாயத்தில் ஒருபக்கம் உற்பத்தி நவீனமயமாகிறது,மறுபக்கத்தில் வர்க்கப் பகைமையின் காரணமாக வர்க்கப் போராட்டங்கள் தீவிரமடை கிறது.
11.ஒரு மனிதர் விவசாயத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவர் விவசாயநடைமுறையில் ஈடுபட வேண்டும்.அல்லது நடைமுறை அனுபவம் கொண்ட விவசாயிடம் அவரது நடைமுறை அனுபவத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.அந்த வகையில் விவசாயம் பற்றிய அறிவைப் பெறுவதற்கு விவசாய நடைமுறை அனுபவத்தைத் தவிர வேறு வழியில்லை. இத்தகைய நடைமுறை அறிவானது நேரடியான நடைமுறைஅனுபவமாகவும்இருக்கலாம் அல்லது மறைமுகமான நடைமுறை அனுபவமாகவும் இருக்கலாம்.அதாவதுநேரடியாக விவசாயத்தில் ஈடுபட்டு நேரடி அனுபவத்தின் மூலமும் விவசாயத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். அல்லது மறைமுகமாக வேறொரு விவசாயின் நடைமுறை அனுபவத்திலிருந்தும் மறைமுகமாகநாம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.இவ்வாறு நேரடியான நடைமுறை அனுபவமாக இருந்தாலும்,மறைமுகமான நடைமுறை அனுபவமாகஇருந்தாலும் இரண்டிற்கும் நடைமுறை அனுபவமே அவசியமானதாகும். இத்தகைய நடைமுறை அனுபவம் இல்லாமல் விவசாயத்தைப் பற்றி வேறு எந்த விஷயத்தைப் பற்றியோ அது பற்றிய அறிவையோ நாம் ஒருபோதும் பெறமுடியாது.
12.இதே போலவே சமூக மாற்றத்திற்கான அறிவை ஒருவரோ அல்லது ஒரு அமைப்போ தெரிந்து கொள்ள வேண்டுமானால்,அந்த நபரோ அல்லது அமைப்போ நேரடியான வர்க்கப் போராட்ட நடைமுறையில் ஈடுபட்டு அந்த நடைமுறை அனுபவத்திலிருந்து சமூகமாற்றத்திற்கான அறிவைப் பெறலாம். அல்லது பிற நாடுகளில் உதாரணமாக ரஷ்யாவில், பிற மக்களின், பிற அமைப்புகளின் வர்க்கப் போராட்ட அனுபவங்களை கேள்விப்பட்டோ அல்லது அறிந்துகொண்டோ சமூக மாற்றத்திற்கான அறிவைப் பெற முடியும்.தனது சொந்த வர்க்கப் போராட்டத்திலிருந்து நேரடியான நடைமுறை அனுபவம் கிடைக்கிறது.பிற நாடுகளில் நடைபெற்ற வர்க்கப் போராட்டத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் சமூக மாற்றத்திற்கான அறிவை மறைமுகமாக நாம் பெற முடியும். இவ்வாறு சமூக மாற்றத்திற்கான அறிவை நாம் வளர்த்துக்கொண்டு நாம் நடத்தும் வர்க்கப் போராட்டத்தில் இந்த அனுபவங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே நாம் இங்கு வர்க்கப் போராட்டத்தை சிறப்பாக நடத்தி சமூகத்தை மாற்ற முடியும்.இவ்வாறு நம்முடைய மற்றும் பிறருடைய வர்க்கப் போராட்ட அனுபவங் களிலிருந்துபாடம்கற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடாமல் இங்குள்ளகம்யூனிசத் தலைவர்கள் தன்மனப் போக்கிலும் அகநிலைவயப்பட்டும் செயல்பட்டுக்கொண்டுஇருப்பதால்தான் அவர்கள் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
13. மனிதர்கள் பொருளுற்பத்தி நடவடிக்கையில் மட்டும் ஈடுபடுவ தில்லை. வர்க்கப்போராட்டம், அரசியல்,கலை இலக்கியத்தை படைப்பது போன்ற பல்வேறு வகையான சமுதாய நடவடிக்கையிலும் மனிதர்கள் ஈடுபடுகிறார்கள்.இத்தகைய நடவடிக்கையின் மூலம்மனிதர்களுக்கு இடையிலானஉறவுகளைப் புரிந்து கொள்கிறார்கள்.இவ்வாறு சமூகத்தைப்பற்றிய அறிவை மனிதர்கள் பொருளியல் வாழ்வின் மூலமாக மட்டுமின்றி அரசியல் கலாச்சார வாழ்வின்மூலமாகவும் மனிதர்களுக்கு இடையிலான உறவுகளையும்,மனித சமூகத்தைப் பற்றிய அறிவையும் மனிதர்கள் பெறுகிறார்கள்.
14. மனிதர்களின் அறிவு வளர்ச்சியில் மனிதர்களின் பல்வேறு வகையான பொருளியல், அரசியல், கலாச்சார வாழ்வியல் செல்வாக்கு செலுத்துகிறது.
15.வர்க்க சமுதாயத்தில் ஒவ்வொரு மனிதரும் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் உறுப்பினராகவேவாழ்கிறார்கள். அதாவது வர்க்க சமுதாயத்தில் பொதுவான மனிதர்கள் யாரும் இல்லை. மாறாக மனிதர்கள் வர்க்கமாகவே இருக்கிறார்கள். அதாவது இங்கே மனிதர்கள் யாரும் இல்லை. வர்க்கங்கள் மட்டுமே உள்ளது.
16.மனிதசமுதாயத்தில் உற்பத்தியானது கீழ் நிலையிலிருந்து அதாவது பழமையானநிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு அதாவது நவீன நிலைக்கு வளர்ந்துகொண்டே இருக்கிறது.
அதன் காரணமாகவே மனிதனின் இயற்கை மற்றும் சமுதாயம் பற்றிய அறிவும் தாழ்ந்தநிலையிலிருந்து உயர் நிலைக்கும்,மேலோட்டமான நிலையிலிருந்து ஆழமான நிலைக்கும்வளர்கிறது என்று மார்க்சியவாதிகள் கூறுகிறார்கள். அதாவது உற்பத்தியில் ஏற்படுகின்றவளர்ச்சியானது, இயற்கை மற்றும் சமுதாயம் பற்றிய மனிதர்களின் அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கிறது.அதன் அடிப்படையில்மனிதர்கள் தொழில் நுட்ப அறிவையும் சமுதாயத்தை மாற்றுவதற்கான வர்க்கப் போராட்ட அறிவையும் வளர்த்துக் கொள்வதற்குவாய்ப்புகளை வழங்குகின்றது.
17.பொருளுற்பத்தி வரலாற்றில் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி தொழிற்சாலைகளை நிறுவி பல தொழிலாளர்களைஒருதொழிற்சாலைக்குள் கொண்டுவந்து முதலாளித்துவஉற்பத்தி நடைபெற்ற போதுதான் மனிதர்கள் சமுதாய வளர்ச்சி பற்றிய விரிவான அறிவைப் பெற்று சமுதாயத்தைப் புரிந்துகொள்ளவும் அதனை மாற்றியமைப்பதற்கான தத்துவ அரசியலான மார்க்சியத்தை ஒரு சமூக அறிவியலைப் படைக்க முடிந்தது.ஆகவே மார்க்சியம் என்பது காரல்மார்க்ஸ் என்ற தனிமனிதரின் சாதனை மட்டுமல்ல மனிதகுல வரலாற்றில் மனித சமூகத்தின் சாதனையும் ஆகும்.
18.பொருளுற்பத்தி,வர்க்கப் போராட்டம் அல்லது விஞ்ஞான பரிசோதனை ஆகியவை இணைந்ததுதான் சமுதாய நடைமுறையாகும்.இந்த சமுதாய நடைமுறையின் மூலமே மனிதர்கள் புற உலகைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டு அறிவை வளர்த்துக்கொள்கிறார்கள்.
19.பொருளுற்பத்தி நடவடிக்கை வர்க்கப் போராட்ட நடவடிக்கையின் மூலம் மனிதர்கள் விரும்புவதை அடையும் போதுதான் சமூகத்தைப் பற்றிய மனிதனது அறிவு சோதிக்கப்பட்டு உண்மையான அறிவாகிறது.
20.ஒருவன் தனது வேலையில் வெற்றியை அடைய விரும்பினால் அல்லது அவன் எதிர்பார்த்த விளைவுகளைப் பெறவிரும்பினால்,அவனது கருத்துக்கள் புற உலகின் விதிகளுக்கு இசைவுடையதாகச் செய்ய வேண்டும்.அவ்வாறு இசைவுடையதாக அல்லது பொருத்தமாக இல்லாவிட்டால் அவன் நிச்சயம் தோல்வியடைவான்.அந்தத்தோல்வியிலிருந்துபாடம்கற்றுக்கொண்டு அவனுடைய கருத்து அல்லது கொள்கை அல்லதுவழிமுறையானது தவறானதாகும்.என்பதை உணர்ந்து அந்த தவறை அவன் திருத்திக் கொண்டு புதிய கொள்கை அல்லது புதிய வழிமுறை வகுத்து செயல்படவேண்டும். இவ்வாறுஅவன் செய்யும் தவறுகளை திருத்திக்கொண்டு புதிய புதிய வழிமுறைகளை தொடர்ந்துமாறிமாறி செயல்படுத்துவதன் மூலமே நிகழ்ச்சிப் போக்கின் ஒரு கட்டத்தில் சரியான வழிமுறையைகண்டுபிடித்து அதனை செயல்படுத்தி வெற்றி பெற முடியும்.ஆகவேதான் தோல்வி என்பதுவெற்றியின் தாய் என்றார் மாவோ.
21. இந்திய பொதுவுடமையாளர்கள் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக்கொண்டுஇருக்கிறார்கள். இந்தத் தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அவர்களின் கொள்கை மற்றும் வழிமுறை களிலுள்ள தவறுகளை காண்பதற்கு எவ்விதமான முயற்சிகளிலும் ஈடுபட வில்லை. தொடர்ந்து அவர்களது தோல்விக்கானஅதேவழிமுறைகளையேபின்பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். புதியகொள்கைகளையும் வழிமுறை களையும்கண்டுபிடிப்பதற்கு முயற்சி செய்யாமல் அரைத்த மாவையே தொடர்ந்து அரைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.அவர்களதுகொள்கைகளும்வழிமுறைகளும்எதார்த்தத்திற்குப்பொருத்தமானதாகமாற்றியமைக்காததன் காரணமாகவே அவர்கள் தொடர்ந்துதோல்வியடைவதோடு மக்களின் செல்வாக்கை இழந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பானகதையாக அவர்களது அமைப்பு தேய்ந்துகொண்டு இருக்கிறது.
22. ஒரு மனிதன் அல்லது ஒரு அமைப்பு எப்போதுமே தோல்வியே சந்தித்துக்கொண்டு இருக்காது. தோல்வியிலிருந்து படிப்பினை பெற்று,சமூகத்தைப் பற்றி தான் இதுவரை அறிந்திராத புதிய விஷயங்களை நடைமுறை அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
அந்தப் புதிய விஷயங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இதற்கு முன்புதான் வகுத்துக்கொண்ட கொள்கை மற்றும் வழிமுறையில் இருந்த தவறுகளை புரிந்துகொண்டுஅந்தத் தவறுகளை முதலில் களைய வேண்டும்.பிறகு அது போன்ற தவறுகள் மீண்டும்ஏற்படாதவாறு புதிய கொள்கைகளையும்வழிமுறைகளையும் வகுக்க வேண்டும்.அந்த புதிய கொள்கைகளையும்வழிமுறைகளையும் அடிப்படையாகக் கொண்டு மீண்டும் நடைமுறையில்செயல்பட வேண்டும். அப்போதும் வெற்றி பெறவில்லை என்றால் மீண்டும் இந்தப் புதிய கொள்கைமற்றும்வழிமுறைகளிலுள்ள தவறுகளை இனம்காண வேண்டும்.இந்தப் புதிய தவறுகளை திருத்திமீண்டும் புதிய கொள்கை மற்றும் வழிமுறைகளை வகுத்துச் செயல்படவேண்டும்.இவ்வாறு மீண்டும் மீண்டும் புதிய வழிமுறைகளை கண்டுபிடித்துச் செயல்படுவதுதான் சமூக மாற்றத்திற்கான நமது அறிவை வளர்ப்பதற்கும் அதன் அடிப்படையில் சமூக மாற்றத்தில் வெற்றி காண்பதற்கான வழியாகும்.
23.நடைமுறை போராட்டம், அதிலிருந்து புதிய கருத்துக்களுக்கு வந்தடைவது, இந்த புதிய கருத்தின் அடிப்படையில் புதிதாக செயல்படுவது. இந்த புதிய செயல்பாட்டிலிருந்து புதியகருத்துக்களுக்கு வந்தடைவது இது போன்று நடைமுறை - கருத்துஉருவாக்கள் மீண்டும் நடைமுறை இந்த சுழற்சியின் போது ஒவ்வொரு சுழற்சியிலும்சமூகத்தைமாற்றுவதற்கானஅறிவு மேலும் மேலும் வளரும்.இந்த சுழற்சியில் தடை ஏற்படுமானால் அதாவது ஒரு குறிப்பிட்ட நடைமுறையே தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டு இருந்தால் வர்க்கப்போராட்டம் பற்றிய நமது அறிவு தேங்கிவிடும்.அதனால் வர்க்கப் போராட்டத்தின் மூலம் நாம்சாதிக்க விரும்புவதை நம்மால் ஒருபோதும் சாதிக்க முடியாது.இந்தியாவிலுள்ள பொதுவுடமையாளர்களால் இதுவரை எவ்விதமான சாதனைகளையும் அடைய முடியாததற்கு காரணம் இந்த சுழற்சியைப் புரிந்துகொண்டு அவர்களது கொள்கை மற்றும் நடைமுறையை யதார்த்தத்திற்கு பொருத்தமாகஅமைத்துக்கொள்வதற்கு முயற்சி செய்யாததே காரணம் ஆகும்.
24.நமது கருத்துக்கள் புறநிலை விதிகளுடன் ஒத்திசைவாக அதாவது பொருத்தமாக இருக்கவேண்டும்.அப்படி நமது கருத்துக்கள் இல்லை என்றால் அந்த கருத்தை நடைமுறைப்படுத்தும்போது நாம் தோல்வி அடைவோம்.ஆனாலும் அந்த தோல்வியிலிருந்துபடிப்பினை பெற்று தவறுகளை திருத்தி வெற்றியை நோக்கி முன்னேற முடியும், முன்னேற வேண்டும். ஆகவேதான் நமது ஆசான்கள் தோல்வி என்பது வெற்றியின் தாய் என்றார்கள்.
25.இந்தியப் பொதுவுடமையாளர்கள் இந்திய சமூகத்தைப் பற்றி பல்வேறுவிதமான கருத்துக்கள் கொண்டுள்ளார்கள்.சிலர் இந்த சமூகம் முதலாளித்துவ சமூகம் என்கிறார்கள் சிலர் அரைநிலப் பிரபுத்துவ அரைக்காலனி சமூகம் என்கிறார்கள், சிலர் புதிய காலனியசமூகம் என்கிறார்கள், இன்னும் சிலர் இந்திய சமூகம் ஏகாதிபத்தியம் என்கிறார்கள்.இவ்வாறு பல கருத்துக்கள் இருந்த போதும் இவை அனைத்தும் கருத்தளவிலிலேயே உள்ளது.இந்த கருத்துக்களில் எந்தக் கருத்து உண்மையானது என்று சோதித்துப் பார்க்கும் நிலையிலேயே உள்ளது. இதனை நடைமுறையில் சோதித்துப் பார்த்து உண்மை எது என்று கண்டுபிடிப்பதற்கு யாரும் முயற்சி செய்யவில்லை.அதன் காரணமாகவே இவற்றில் எந்த கருத்து சரியானது என்ற உண்மையை யாரும் அறிந்துகொள்ள முடியவில்லை.ஆனாலும் இவர்கள் அனைவரும் நடைமுறை வேண்டும் என்று வாய்கிழியப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் நடைமுறை என்றால் என்ன என்பதையே இவர்கள் யாரும் புரிந்துகொள்ள வில்லை.புறநிலை எதார்த்தம் பற்றிய உண்மையை அறிந்துகொள்வதற்கானசெயல்முறையே நடைமுறையாகும். நமது விருப்பங்கள் நோக்கங்களை அடைவதற்கான செயல்முறையே நடைமுறையாகும். இதற்கு மாறாக நமது விருப்பங்களை நிறேவேற்றாத செயல்களையே மீண்டும் மீண்டும் அரைத்தமாவையேஅரைத்துக்கொண்டிருக்கும் வகையில் செயல்படுத்திக் கொண்டு இருப்பதையே நடைமுறை என்று கருதி செயல்படுவதால் இதுவரை நாம் எவ்விதமான பயனும் பெறவில்லை. அப்படியே பெற்றாலும் அந்தப் பலன்கள் எல்லாம் தற்காலிக மானதாகவே இருப்பதை நாம் காணலாம்.உதாரணமாகபொதுக்கூட்டம் போடுவது ஆர்ப்பாட்டம் செய்வது அரசு அதிகாரிகளிடம் மனு கொடுப்பது போன்ற போராட்டங்களையே நடைமுறைப் பணியாக கருதி செயல்பட்டதால் நாம் அடைந்த பலன்களை குறிப்பிடலாம்.
26.அறிவு பற்றிய இயங்கியல் பொருள்முதல்வாதத் தத்துவமானது நடைமுறையை முதன்மையான இடத்தில் வைக்கிறது.அறிவையும் நடைமுறையையும் பிரிக்க முடியாது என்று இந்த தத்துவம் சொல்கிறது.நடைமுறையின் முக்கியத்துவத்தை மறுக்கின்ற நடைமுறையிலிருந்த அறிவைப் பிரிக்கின்ற தத்துவங்களை தவறான தத்துவம் என்று மார்க்சிய இயங்கியல் பொருள்முதல்வாத தத்துவம் சொல்கிறது.
27.மார்க்சிய இயங்கியல் பொருள்முதல்வாத தத்துவத்துற்கு இரண்டு சிறப்பியல்புகள் உள்ளது.ஒன்று அந்த தத்துவம் உழைக்கும் மக்களுக்கு வழிகாட்டி சேவை செய்கிறது. மற்றொன்று அதுநடைமுறையை அனுபவத்தை ஆதாரமாகக்கொண்டது. நடைமுறையில் எது உண்மையோ அந்த உண்மையை மட்டும் ஏற்றுக்கொண்டு அதன் கொள்கைகோட்பாடுகளை உருவாக்கிக் கொண்ட தத்துவமாகும்.ஆகவேதான் மார்க்சிய ஆசான்கள் மார்க்சியத்தை வறட்டுச் சூத்திரம் அல்ல,மாறாக நடைமுறைக்கு வழிகாட்டும் தத்துவமே மார்க்சியம் என்றார்கள்.
28.எந்த உண்மையையும் ஒருவர் மனதளவில் கொண்டிருக்கும் உணர்சிசியின் அடிப்படையில் தீர்மானிக்கக் கூடாது என்றும் மாறாக சமூக நடைமுறையிலிருந்தும் அதன் விளைவுகளிலிருந்து மட்டுமே உண்மை எது என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று மார்க்சியம் வலியுறுத்துகிறது.
29. அறிவின் வளர்ச்சிப் போக்கில் முதல் கட்டம் புலக்காட்சி அறிவுக் கட்டமாகும். மனிதன் சமூக நடைமுறையில் அதாவது உற்பத்திப் போராட்டம் மற்றும் வர்க்கப் போராட்டங்களில் ஈடுபடும் போது மனிதனுக்கு பல விஷயங்கள் புலப்பட்டுக்கொண்டே இருக்கும். அந்தவிஷயங்கள் எல்லாம் மூளையில் பதிவாகிக்கொண்டே இருக்கும்.திரும்ப திரும்ப பதிவாகிக்கொண்டிருக்கும் விஷயங்களின் காரணமாக மூளைக்குள் திடீர் பாய்ச்சல் ஏற்பட்டு கருத்துக்கள் உருவாகின்றது. அதாவது தனித்தனியான விஷயங்களை பகுத்தறிந்து கருத்துக்கள் உருவாகின்றன. இந்த கட்டத்தையே பகுத்தறிவு கட்டமாகும்.புலக்காட்சி அறிவுக் கட்டத்திற்கும் பகுத்தறிவுக் கட்டத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடு அளவில் மட்டுமல்லாமல் பண்பிலும் வேறுபாடு உண்டு. இத்தகைய பகுத்தறிவின் மூலமாகவே மனிதர்கள் சரியான கம்யூனிஸ்டுக் கட்சியின் தத்துவ அரசியல் முடிவுகள் சரியானது என்ற முடிவிற்கு வருகிறார்கள்.
30.புலக்காட்சி அறிவு என்பது புறநிலையிலுள்ள விஷயங்களை தனித்தனியாகப் பார்த்துப் பெறும்அறிவாகும். இவ்வாறு பார்க்கப்படும் விஷயங்களுக்கு இடையிலான உறவுகளை தொகுத்துப் பார்த்து விஷயங்களின் முழுமையை அல்லது சாராம்சத்தை தர்க்கரீதியாக பார்த்து முடிவிற்கு வருவது பகுத்தறிவாகும்.
31.நடைமுறையை ஆதாரமாகக் கொண்டு தான் மேலோட்டமான அறிவிலிருந்து ஆழமான அறிவுக்கு அறிவு வளர்ச்சியடைகிறது என்ற உண்மையை சொல்லுகின்ற தத்துவம்தான் மார்க்சிய, இயக்கவியல் பொருள்முதல்வாத தத்துவம் ஆகும்.
32.மனிதகுல வரலாற்றில் உற்பத்திப் போராட்டமும் வர்க்கப் போராட்டமும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்.இவ்விருவகையான சமூக நடைமுறை யிலும் மனிதர்கள் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டே இருப்பார்கள்.ஆகையால் மனிதர்கள் சமூகம் பற்றியஅறிவை இத்தகைய நடைமுறை அனுபவங்களிலிருந்து மேலும் மேலும் ஆழமாகப்புரிந்துகொள்வார்கள். குறிப்பாக சமூகத்தை புரட்சிகரமாக மாற்ற விரும்பும் மக்களின் முன்னணியினர் இந்த சமூகத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்வார்கள்,மேலும் இந்த சமூகத்தை மாற்றியமைப்பதற்கான வழிமுறைகள் பற்றிய அறிவையும் வளர்த்துக் கொள்வார்கள்.அதன் அடிப்படையில் நிலவுகின்ற பிற்போக்கு சமூகத்தை புரட்சிகரமாக மாற்றுவதற்கான புதிய புதிய வழிகளில் போராடி இறுதியில் சமூகத்தை மாற்றுவதில் வெற்றி பெறுவார்கள்.
33.சைக்கிள் மூலமாக பயணம் செய்து வந்த மனிதர்கள் தொடர்ந்து சைக்கிள் மூலமாகவே பயணம் செய்துகொண்டு இருக்கவில்லை. மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வது, ரயிலில் பயணம் செய்வது,ஆகாயவிமானம் மூலம் பயணம் செய்வது என்று புதிய புதிய முறைகளை கண்டுபிடித்து வேகமாகப் பயணம் செய்வதற்கான வழிகளை கண்டுபிடித்து பயணம் செய்வது போல,மன்னர்கள் மூலம் ஆட்சி நடப்பது என்ற முறையிலேயே அரசியல் ஆட்சிஇருக்கவில்லை, மன்னராட்சி முறையை கைவிட்டு பாராளுமன்ற ஆட்சிமுறைக்கு மனிதகுலம் மாறியது, பிறகு சோசலிச ஆட்சி முறைக்கு மாறியது.இத்தகைய மாற்றங்கள் தொடர்ந்து நடந்து இறுதியில்அரசின் அவசியம் இல்லாத கம்யூனிச முறைக்கு சமூகம் முன்னேறும்.இதற்குத் தேவையான நடைமுறை அறிவை மனிதகுலம் படிப்படியாக தனது சொந்த நடைமுறை அனுபவத்தின் மூலம் பெற்று வெற்றிவாகை சூடும்.ஆனால் இத்தகைய மாற்றங்கள் சமூகத்தில் நடைபெறாது என்றும் நடைபெறக் கூடாது என்றும் இந்தப் பிற்போக்கு சமூகத்தில் சலுகைகளை அனுபவித்து வருபவர்கள் சொல்லிக்கொண்டு அலைகிறார்கள்..
எடுத்துக்காட்டாக மன்னராட்சி காலத்தில் இருந்த மன்னராட்சி முறைதான் காலங்காலத்துக்கு இருக்கும் என்று மன்னராட்சி ஆதரவாளர்கள் கருதினார்கள்.அத்தகைய மன்னராட்சி ஒழிக்கப்பட்ட தல்லவா அதுபோலவே நிலவுகின்ற பாராளுமன்ற ஆட்சிமுறையையும் உழைக்கும் மக்கள் ஒழிப்பார்கள். உழைக்கும் மக்களின் உற்பத்திப் போராட்டம் மற்றும் வர்க்கப் போராட்டம் ஆகிய நடைமுறை அனுபவத்தில் ஏற்படும் அறிவு வளர்ச்சியின் காரணமாக இந்த சமூக மாற்றம் ஏற்படும். மனிதகுலம் பிற்போக்கிலேயே தேங்கிநின்றுவிடாது,அது முற்போக்கை நோக்கி முன்னேறிக்கொண்டே இருக்கும். இதுதான் சமூகத்தின் இயங்கியல் விதியாகும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment