ரசிய புரட்சியும் நமக்கான வழிகாட்டுதலும்

 நமது நாட்டில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது ரசிய புரட்சியும் நமக்கான வழிகாட்டுதலும்

1917 நவம்பர் 7 உலக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவமுடைய நாள். அன்றுதான் ரசியாவில் ஜாரின் கொடுங்கோல் ஆட்சி தூக்கி எறியப்பட்டு உலகிலேயே முதல் முறையாக தோழர் லெனின் தலைமையில் உழைக்கும் மக்களின் முதல் அரசு ரசியாவில் அமைக்கப்பட்டது. ஆண்டைகளின் வரலாற்றை புரட்டி போட்டு அடிமைகள் என்று கருதப்பட்ட உழைக்கும் மக்களும் ஆட்சி அமைக்க முடியும்  என்று உலகுக்கு காட்டிய நாள். கூலிகளாகவும், பஞ்சப் பராரிகளாகவும் ஆளும் வர்க்கத்தால் ஏய்க்கப்படிருந்த கூட்டம் சொந்த நாட்டை ஆட்சி செய்வதை உலகுக்கு அறிவித்த நாள்.

தோழர் லெனின் தலைமையில் பாட்டாளிவர்க்கம் ஆட்சி அமைத்தவுடன், அதுவரை உழைக்கும் மக்களின் உதிரத்தை குடித்து கொள்ளையடித்து சேர்க்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்பட்டன. லட்சக்கணக்கான ஏக்கர்நிலங்கள் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகளுக்கு பிரித்துகொடுக்கப்பட்டன. தொழிற்சாலைகள் அனைத்தையும் நிர்வகிக்கும்பொறுப்புதொழிலாளிகளிடமே விடப்பட்டது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.முதல் உலகப்போரால் பாதிக்கப்பட்டுஅச்சத்திலிருந்த மக்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியை தந்தது.ஜாரினால்பிடித்துவைக்கப்பட்டிருந்த சிறு சிறு அண்டை நாடுகள் அனைத்திற்கும் அன்று முதல் விடுதலை வழங்கப்பட்டது. ரசியா முழு சுதந்திர நாடாக, சோசலிச நாடாக அறிவிக்கப்பட்டது.

முதல் உலகப் போருக்குப் பிறகு ஏகாதிபத்தியநாடுகளில் கூட வறுமையும் வேலையின்மையும் தலைவிரித்தாடிய போது,அவற்றின் வாடைகூட இல்லாமல் சோசலிசரசியாமண்ணுலகில் உழைக்கும் மக்களின் வாழ்வை உய்வித்து மலர்ந்தது. கொள்ளைச் சுரண்டலும் கொடூரஅடக்குமுறையும்முதலாளித்துவநாடுகளில் தலைவிரித்தாடியபோது, அச்சுரண்டல் அமைப்பை ஒழித்து, பாட்டாளிகளையேநாட்டின்எஜமானர்களாக்கி பாட்டாளிவர்க்க ஜனநாயகத்தை நிலைநாட்டிவளர்த்தது.பாட்டாளி வர்க்கப் புரட்சிகர கலாச்சாரத்தை சோசலிச ரசியாஉலகிற்குவழங்கியது.

சோவியத்தின் சாதனைகள் என்று நிறைய சொல்லலாம். எனினும் கல்வி தொடர்பான சோவியத் யூனியனின் இரண்டு உதாரணங்களை மட்டும் இங்கு பார்ப்போம்.ஜார்ஆட்சிகாலத்தில்ரசியாவில் கல்வி கற்றவர்களின் சதவிகிதம் காலனியாட்சி கால இந்தியாவை விட பின் தங்கியிருந்தது. புரட்சிக்கு பின்னர் இருபதேஆண்டுகளில்,குறிப்பாகஸ்டாலின் ஆட்சி காலத்தில் ரசியாவில் கல்வி கற்றிருந்தோரின்சதவிகிதம், இந்தியாவை காலனியாக்கி வைத்திருந்த, உலகிலேயே கல்வியில் முதல் இடத்தில் இருந்த பிரிட்டனை விட பத்துமடங்கு உயர்ந்திருந்தது.

 

உலகப் புரட்சியின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த சோசலிச ரசியா, தோழர் ஸ்டாலின் மறைவுக்குப் பின்னர் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றிய முதலாளித்துவப் பாதையாளர்களால் சீரழிக்கப்பட்டு பின்னர் சிதைந்து போனது.

இவற்றைக்காட்டிகம்யூனிசம்தோற்றுவிட்டதுஎன்றுஎக்காளமிட்டஏகாதிபத்தியவாதிகள், தோழர் ஸ்டாலின் மறைவுக்குப் பிறகான இத்தனை ஆண்டுகளில் உலகிற்கு வழங்கியவை என்ன? போர்கள், இனப்படுகொலைகள், பஞ்சம், பட்டினி,வேலையின்மை,வரைமுறையற்ற இயற்கைசுரண்டல், பேரழிவுகள், கொடிய தொற்றுநோய்கள், பிற்போக்கு கலாச்சார சீரழிவுகள்என்று உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கான உலகாக இல்லாமல். ஒரு சிலரின் தேவையை ஒட்டியே உலக மக்களின் எல்லா செல்வங்களையும் சூறையாடிக் கொண்டுள்ளது ஏகாதிபத்தியம்..

இதற்கான பணி ரசியாவில் எப்படி நடந்தேறியது

ரஷ்யாவில் 1883ம் ஆண்டில், முதல் மார்க்சிய குழு தோற்றுவிக்கப்பட்டது. 1895ல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 20 மார்க்சிய குழுக்கள் செயல்பட்டன. அரசியல் ரீதியாக வளர்ச்சியடைந்திருந்த தொழிலாளர்களுக்கு லெனின் இங்கு மார்க்சியத்தை போதித்தார். 1895ல் 20 மார்க்சிய குழுக்களையும் ஒன்றுபடுத்தி "தொழிலாளிவர்க்கத்தின்விடுதலைக்கான போராட்டசங்கம்" என்பதனைத் தோற்றுவித்தார் லெனின். இச்சங்கம் லெனின் காட்டிய வழியில் பொருளாதார கோரிக்கைகளுக்காக தொழிலாளர்கள் நடத்துகிற போராட்டத்தை, ஜார் ஆட்சியை எதிர்த்து நடைபெறும் அரசியல் போராட்டமாக வளர்த்தது ஒவ்வொரு நிகழ்ச்சியையும், சம்பவத்தையும், விஷயத்தையும் விளக்கிக் கூறி தொழிலாளர்களுக்கு அரசியல் பாடங்களைப் போதித்தது. தொழிலாளி வர்க்க இயக்கத்துடன் சோசலிசத்தை ஒருங்கிணைத்த முதல் அமைப்பு இந்தச் சங்கமே. புரட்சிகரமான தொழிலாளர்கட்சியைஸ்தாபிப்பதற்குரிய அடிப்படைப்பணிகளைச்செய்தது "தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்டசங்கம்.”தொழிலாளிவர்க்கத்தால் பூரணமாக ஆதரிக்கப்பட்டு இயங்கும் ஒருபுரட்சிகரமானகட்சிக்கு உண்மையான முதல் மூலாதாரமாக மார்க்சிய குழுக்களும், தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கானப் போராட்ட சங்கமும் விளங்கின என்றார் லெனின்.   

லெனினி கோட்பாடுகள் ரஷ்யப் புரட்சிக்காகஉருவாக்கப்பட்டகோட்பாடுகளாக சொல்வது தவறாகும் என்று இங்கே ஸ்டாலின் குறிப்பிடுகிறார். இடதுசாரிக் கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு என்ற நூலில் லெனின் ரஷ்யப் புரட்சியைப் பற்றிக் குறிப்பிடும்போது, ரஷ்யப் புரட்சியின் அனுபவமானது உலகம் முழுவதிலுமுள்ள நாடுகளுக்கும் பொருந்தும் என்பதை விளக்குவார். லெனின் மூன்றாவது அகிலத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட முன்னால் காலனி நாடுகளின்விடுதலைக்கானவழிகாட்டுதலை வழங்கியிருப்பார்.அந்த வழிகாட்டு தலைப் பின்பற்றியே மாவோவின் தலைமையிலானசீனக்கம்யூனிஸ்டுக் கட்சியானது சீனாவில் புரட்சி நடத்தி வெற்றிபெற்றது. ஆகவே லெனினியத் தத்துவமும்,அதன் நடைமுறைக்கான வழிகாட்டுதலும்அனைத்து நாடுகளில் செயல்படும் கம்யூனிஸ்டுகள் பின்பற்ற வேண்டியதுஅவசியமாகும்.யாராவதுலெனினியத்தை ஏற்கமறுத்து புறக்கணிக் கிறார்கள் என்றால் அவர்கள் நிச்சயமாக மார்க்சியத்தையேபுறக்கணிக்கிறார்கள் என்றே பொருளாகும். மார்க்சை சிலர் ஐரோப்பிய தத்துவவாதி என்கின்றனர். ஆனால் மார்க்ஸ் உழைப்பின் விடுதலையைப்பற்றிதனதுகருத்துக்களை முன்வைத்துள்ளார். உழைப்பு என்பது ஐரோப்பாவிற்கு மட்டும் உரித்தானது அல்ல. உலகம் முழுவதற்கும் உரித்தானதுதான் உழைப்பு ஆகும். இந்த உழைப்புதான் மனிதகுலம் வாழ்வதற்கும் வளர்வதற்கும் அடிப்படையாகும். இத்தகையஉழைப்புஅடிமைப்பட்டிருக்கிறது என்றும் இது முதலாளிகளால் அடிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்த உழைப்பை முதலாளிகளிடமிருந்து விடுதலை செய்வதன் மூலமே உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்ற தத்துவத்தைப் போதித்தவர் மார்க்ஸ். ஆகவே அவரது தத்துவம் உலக மக்களுக்கானதாகும். இதேபோலவே லெனினும் உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவே மார்க்சின் தத்துவத்தை வளர்த்தார். குறிப்பாக உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செய்யும் நிதிமூலதன ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டு வதற்கான தத்துவ அரசியல் வழிகாட்டியவர்தான் லெனின்

லெனினை ரஷ்யாவோடு குறுக்கிக் கொண்டு இந்தியப் புரட்சிக்கு லெனின் தேவையில்லை என்ற கருத்தைப் பிரச்சாரம்செய்பவர்கள்சந்தேகமில்லாமல் முதலாளித்து சீர்திருத்தவாத சந்தர்ப்பவஎதிர்த்துப்போராடவேண்டியதன்அவசியத்தைமறுப்பவர்கள் லெனினைமறுக்கிறார்கள். ஆகவேதான் இவர்களை ஏகாதிபத்திய சார்பு சந்தர்ப்பவாதிகள் என்கிறோம்”. 1840 லிருந்து 1850 வரையில் மார்க்சியத்தின்பால் காணப்பட்ட புரட்சிகரமான அம்சங்களை திரும்ப உயிர்ப்பித்து இருப்பதே லெனினியம் என்று வேறு சிலர் குறிப்பிடுகிறார்கள். 1850 க்குப் பிறகு மார்க்சியம் தன் புரட்சிக் கொள்கைகளைக் கைவிட்டு விட்டு, மிதமானதாகவும் புரட்சிகரமான தன்மை அற்றதாகவும் ஆகிவிட்டதற்கு மாற்றாக, லெனினியம் மார்க்சியத்தின் புரட்சிகரக் கூறுகளைஉயிர்ப்பித்ததாகக்குறிப்பிடுகிறார்கள். மார்க்சின் போதனைகளை இவ்விதம் மதிகெட்ட ரீதியில் கொச்சையான முறையில் இரண்டு பகுதிகளாக அதாவது, புரட்சிகரமான பகுதி என்றும், மிதமான பகுதி என்றும் பாகுபடுத்துவதைநாம்புறக்கணிக்கிறோம். இருந்த போதிலும் இந்த முற்றிலும் தகாத அதிருப்திகரமான நிர்ணயிப்பு கூட ஒரு துளி உண்மையை வெளியிடுகிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். என்ன அந்தத் துளி உண்மை? இரண்டாம் அகிலத்தைச்சேர்ந்த சந்தர்ப்பவாதிகளால் மறைக்கப்பட்ட மார்க்சியத்தின் புரட்சிகர சாராம்சத்தை லெனின் மீட்டெடுத்தார் என்பதே அந்தத் துளி உண்மையாகும். இது உண்மையில் துளி அளவிலானதே. முழுஉண்மைஎன்னவெனில்,மார்க்சியத்தை மீட்டெடுத்ததோடு மட்டுமின்றி முதலாளியத்தின் புதியநிலைமை களுக்கும் பாட்டாளி வர்க்கப் போராட்ட நிலைமைகளுக்கும் ஏற்ற விதத்தில் மார்க்சியத்தை மேலும் வளர்த்து அது ஒரு படி முன்னோக்கிக் கொண்டு சென்றது. (ஸ்டாலின்).

மார்க்சிய- லெனினியம் என்றால் என்ன?

லெனின் அவர்கள்,முதலாளித்துவம் அதன் இறுதிக் கட்டமான ஏகாதிபத்திய காலகட்டத்துபுரட்சிவீரர் மார்க்சியவாதி யாவார்.வேறுவார்த்தைகளில்சொன்னால்,அவர் ஏகாதிபத்திய யுத்தசகாப்தத்தை அறிந்துசோசலிசபுரட்சிக்குவழிகோலினார். தமதுகாலத்தின்மாறிய நிலைமைகளுக்கு ஏற்ப அவர் மார்க்சியத்தைப் உபயோகித்தார். இவ்வாறு, அவர் மார்க்சியத்தை லெனினியம் என்ற உயர்ந்த கட்டத்திற்கு வளர்த்தார்.

லெனின் அவர்கள் தமது முதல் கடமையாக, மார்க்சும், ஏங்கெல்சும் மறைந்த பின்னர், அவர்களுடைய வாரிசுகள் தாம் என்று தம்மைத்தாமே கூறிக்கொண்ட காட்ஸ்கி, பெர்ன்ஸ்டீன் போன்ற இரண்டாவது சர்வதேசியத்தின் தலைவர்களுடன் ஒரு மிகப்பெரும் சித்தாந்தப் போரை நடத்தினர். ஆனால், யதார்த்தத்தில் அவர்களுக்கும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவருக்கும் சம்பந்தா சம்பந்தமே கிடையாது. அவர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரின் புரட்சிப் போதனைகளைத் திரித்துப் புரட்டி எழுதினார்கள்.விஞ்ஞானசோசலிசத்தின் இம்மாபெரும் பிதாமகன்களின் புரட்சிகர உள்ளடக்கத்துக்கு முழுக்குப் போட்டு, அவற்றுக்குப் பதில் காட்ஸ்கி,பெர்ன்ஸ்டீன் என்ற இந்த அற்பர்கள் பாராளுமன்றப்பாதைமூலம்சோஷலிஸத்துக்குச் செல்லும் சமாதான மாற்றத் தத்துவங்களை விளம்பரம் செய்தார்கள். அவர்கள் புரட்சிகரக் கட்சிகளாக இருந்த இரண்டாவது சர்வதேசியத்தின் கட்சிகளை பாராளுமன்றக் கட்சிகளாக மாற்றி விட்டார்கள்.

வேறு வார்த்தைகளில் கூறினால்,அவர்கள் மார்க்ஸ்,ஏங்கெல்ஸ் இருவரின் புரட்சித் தத்துவங்களைத் திரித்து விட்டனர். எனவேதான் லெனின் அவர்களை திரிபுவாதிகள் என்று அழைத்தார். ஆக, மார்க்சியத்தின் அடிப்படை புரட்சிகர உண்மைகளைக் கண்டுபிடித்து, அவற்றை உறுதியாகவும், ஒளியுடனும் புதிபித்ததும் லெனினின் முதல் கடமையாக இருந்தது. இந்தக் கடமையை,இன்றும் பிரசித்தி பெற்று புகழுடன் விளங்கும் மார்க்சியத் தொன்னுால்களான 'அரசும் புரட்சியும்', 'பாட்டாளி வர்க்கப் புரட்சியும், துரோகி காவுட்ஸ்கியும்' போன்ற பிரகாசமான பல வாதப்பிரதிவாதப் படைப்புகள் மூலம் நிறைவேற்றினர்.

ஆனால், லெனின் ஒரு தத்துவ நிபுணர் மாத்திரமல்ல. அவர் ஒரு செயல் வீரனும்கூட, மார்க்சியக் களஞ்சியத்துக்கு அவர் வழங்கிய மிகப் பெரும் சாதனைகளில் ஒன்று யாதெனில் புதிய ரகக் கட்சியொன்றை அமைப்பது பற்றிய அவருடைய தத்துவமாகும்.இதன் பிரகாரம் அவர் உருவாக்கிய போல்ஷ்விக்கட்சி,அக்டோபர் புரட்சியை நடத்தும் ஆயுதமாகச் சேவை செய்தது,இது உருக்குப் போன்ற கட்டுப்பாடுடைய,புரட்சிகர மார்க்சியஉண்மைகளால் ஆயுத பாணியாகிய,சந்தர்ப்பவாதத்தி லிருந்து விடுதலைபெற்ற,ஜனநாயகமத்தியத்துவக் கோட்பாடுகளால் வழிநடத்தப்படுகின்ற, சுயவிமர்சனத்தை ஆயுதமாகக் கொண்ட பொதுமக்களுடன்நெருங்கியதொடர்புகளை உடைய ஒரு புரட்சிகரக் கட்சியாகும்.

இத்தகைய ஒரு கட்சியின் உதவியுடன்,லெனின் அவர்கள் உலகின் முதலாவது தொழிலாளர்வர்க்கப்புரட்சியைவெற்றிகரமாக வழிநடத்தி, உலகின் முதலாவது சோசலிச அரசை நிறுவினார்.

அது அடக்கி ஒடுக்கப்பட்ட உலக மக்கள் அனைவருக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது. இப்படிச் செய்தன் மூலம் லெனின் தத்துவத்தை நடைமுறையாக்கினர்;கனவைநனவாக்கினர். இத்துடன்,முதலாளித்துவ சமுத்திரத்தால் சூழப்பட்ட ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவி, பாதுகாப்பது சம்பந்தயான பல பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டார்.

ஆனாலும்,படித்தறிய முன்நிகழ்ச்சி ஒன்றும் இல்லாத முதல் முயற்சியின் போக்கில் எழுந்த பல பிரச்சினைக்குத் தீர்வுகாண அவர் போதிய காலம் வாழவில்லை. இருந்தும், அவர் மார்ச்சியத்தை ஒரு புதிய மட்டத்திற்கு உயர்த்திவிட்டார். அதுமுதல், மார்க்சியம் என்பது மார்க்சியம்-லெனினியம் என அழைக்கப்பட்டுகிறது.

இவை வழிகாட்டியாக கொண்டு புரட்சியை இன்று நடத்த முடியாமல் இருபதற்கு பல்வேறு காரணங்களை நமது தோழர்கள் கூறுவர் அதில் சிலவற்றை தொடர்ந்துக் காண்போம்.

மூன்றாம் அகிலத்தால் வழிகாட்டப்பட்டு கட்டப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதன் பணிகள் ஒரு புரட்சியை சாதிக்கவல்ல பணியை செய்யாமைக்கு அதன் முன்னிருந்த கடமைகளை சரியாக உள்வாங்காமையே எனலாம் அதனை பற்றி சில பார்ப்போம்.

நாம்சரியாகப்புரிந்துகொள்ளவேண்டுமென்றால் இரண்டாம் அகிலத்தில் காவுத்ஸகி போன்ற துரோகிகள் செய்த அந்தப் பெரும் துரோகத்தை இரண்டாம் அகிலத்தில் தவறுகளை களைந்து மூன்றாம் அகிலத்தை லெனின் எப்படி கட்டியமைத்தார்என்பதும்;ரசிய புரட்சிக்கு முன் அங்கிருந்த பல்வேறு மார்க்சிய விலகல் போக்குகளை லெனின் அம்பலப்படுத்தி ஒரு சரியான புரட்சிகர கட்சியின் அவசியம் அதன் பணியினை வரையறுத்து ரசிய புரட்சியை நடத்தினாரோ அதுபோன்று இங்கே ஒரு சரியான தலைவர் உதிக்கவே இல்லை  அதனை பற்றி தேடும் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி போக்கை ஆராய்வோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்ப கால வரலாற்று ஆவணங்களின்படி அவற்றின் செயல்பாடுகளை புரிந்து கொள்வதற்கு முயற்சிப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925 இல் தொடங்கப்பட்டாலும் அதன் செயல்பாடு என்பது ஒரே சீராக இருக்கவில்லை.

இன்று புரட்சிக்கும் பயங்கரவாதத்திற்கும் வித்தியாசம் புரியாதவர்கள்தான் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளனர் என்பேன். அவர்கள் அன்றைய பிரிட்டிஷ் காலகட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை திருப்பிப் பார்த்தால் இன்றைய அவர்கள் நிலை அவர்களுக்கே அருவருப்பாக இருக்கும். என்ன செய்ய வரலாற்று பக்கங்கள் தனது பணியை என்றும் தடை படுத்திக் கொள்வதில்லையே!.

புரட்சியின்விளிம்பில்இந்திய : ஆங்கிலேயர் ஆட்சியில் நுகத்தடியின் கீழ்கடும்துயரைஅனுபவித்தமக்களிடையே தேங்கிகிடந்த கடும்கோபம் முதன்முதலாக வெடித்து எழுந்தது நாட்டின் பல பகுதியில் பல்வேறு விதமானதன்னியல்பான போராட்டங்கள் ; போராட்டக்காரர்கள் மீது அரசின் துப்பாக்கிசூடு .... கல்கட்டாவில் மட்டுமே 150போலீஸ் மற்றும் ராணுவவாகனங்கள் தீக்கிரியாக்கப்பட்டன....30க்கும்மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் .... இதனை அடுத்துகடல்படைமையபொதுக்குழுவால் (..) விடுக்கப்பட்ட அழைப்பிற்கு இணங்க போராட்டத்தில் குதித்தது "ஆயிரக்கணக்கானோரைச்சுட்டுக்கொன்ற பிறகுதான் ஆங்கிலேயகனரககவச ஊர்திகள்தெருக்களைகைப்பற்றமுடிந்தது என" பிசி தத் கூறுகிறார் இவர் அந்த கிளர்ச்சி குழுவின் தலைவர்களில் ஒருவர். இதே போன்ற பல போராட்டங்களில்கலந்துகொண்டவர்களுக்கு பல்வேறு தண்டனைகளும் பல்வேறு அடக்குமுறைகளும்ஏவப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு மக்களின் கடுங்கோவத்திற்க்கு ஆளான ஆங்கிலேய அரசை தூக்கி எறிய வேண்டும் என்ற இந்திய மக்களின் மனநிலைஎரிமலையின்விளிம்பில்” எந்நேரமும் வெடித்தெழும் நிலையில் இருந்தது. 1945 நவம்பர் 21-22 ஆம் நாட்களில்கல்கத்தாநகரமே போர்கோலம் பூண்டிருந்ததுபிப்ரவரி 22, 1946 அன்று மும்பாயில்கடற்படையினர்ஆங்கிலேயே கடற்படையினுடையதுணைத்தலைவரின் முன்னணி கப்பல் உள்ளிட்டமும்பாயில் இருந்த ஏறக்குறைய 22 கப்பல்களைத் தங்கள்ளுடைய கட்டுபாட்டிற்க்குள் கொண்டுவந்தனர். 20,000 கடற்படைவீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்விமானப்படைவீரர்களும் ஆதரவு தெரிவித்தனர்இராணுவப்படை வீரர்கள்போராடும் கப்பல்படை வீரர்களை சுடமறுத்துவிட்டனர்இந்திய பொதுவுடைமை இயக்கமும் பல்வேறு போராட்டத்தைமுன்னெடுத்ததுஇதேகாலக்கட்டத்தில்இந்தியாவில்அன்றைய பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த பல்வேறு சக்திகளுக்கு 1917-ல் நடந்த ரஷ்யப்பாட்டாளிவர்க்கசோசலிசப்புரட்சியின்வெற்றியானதுபுதியபார்வையையும்புதியநம்பிக்கையையும்அளித்தது.அன்றையபிரிட்டிஷ்காலனியாட்சியில்இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல கம்யூனிசக் குழுக்கள் இரகசியமாக இயங்கி வந்தனவங்கத்தில் அனுசீலன் சமிதிஜுகந்தர்முசாபர் அகமதுகுழுமுதலானகுழுக்களும்மும்பையில்டாங்கேதலைமையிலானகுழுவும்சென்னையில்சிங்காரவேலர்தலைமையிலான குழுவும்ஐக்கிய மாகாணத்தில் சௌகத் உஸ்மானி தலைமை யிலான குழுவும்பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தில் குலாம் உசைன் தலைமை யிலான குழுவும் இயங்கி வந்தனஅன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசானது எல்லா வகையான கம்யூனிசக் குழுக்களையும் முற்றாகத் தடை செய்ததோடு, குறிப்பாக, லெனின் தலைமையிலான “போல்ஷ்விக்” சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டகம்யூனிஸ்ட்குழுக்களைத்தான்மிகத்தீவிரமாகஒடுக்கியது.ஏகாதிபத்திய எதிர்ப்பு கழகப் போதனை உயர்த்திப்பிடித்து துணிந்து போராடிய தொழிலாளர்கள் கடற்படை வீரர்கள் பல்வேறு மக்கள் பிரிவுகளின் போராட்டங்களை வன்மையாக கண்டித்தனர் நேருவும் பட்டேலும்.

அகிம்சையின் தூதுவர் காந்தி கண்மூடித்தனமாக வன்முறை கோரத்தாண்டவத்தை கட்டவிழ்த்து விட்ட அரசை கண்டிப்பதற்கு பதில் போராட்டக்காரர்களை கண்டித்தார்.ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்று மக்களுக்கு எதிரான  இந்த புனிதப் போரில் காங்கிரஸ் தலைவர்கள் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் தலையீட்டில் கூடசகித்துக் கொள்ளவில்லை, "கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எந்த ஒருவிஷயம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்துவது நாட்டில் உள்ள புரட்சிகர சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் மேற்கண்டிருக்கும் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை இடுவதாக அமையும் என்பதால் உள்நாட்டு இலாகா  உறுப்பினர் பட்டேல் அந்த கருத்தை வெறுத்து ஒதுக்கினார்".

"கம்யூனிஸ்டுகளிடம் கடைபிடிக்க வேண்டிய ஒரே ஒரு வழி அவர்களை விசாரணைஏதும்இன்றி சிறைவாசையில் வைப்பது தான் என்று பம்பாய் காங்கிரஸ் அரசாங்க தீர்மானித்தது என்றார்" திகைத்துப் போய் வேவெல்(கவர்னர்) கடிதம் எழுதுகிறார்.


இதே கட்டத்தில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளர் இருந்த பி.சி.ஜோசி  'காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும்' (1944) என்ற  தலைப்பில் எழுதியது:"எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் எங்களுடைய தாய் அமைப்பாகும். அதனுடைய தலைவர்கள் எங்களுடைய அரசியல் பிதாக்கள் ஆவார்". அவர் தன்னுடைய சொந்த கட்சி உறுப்பினர்களை கம்யூனிஸ்ட் காங்கிரஸ்சார் என்றே அழைத்தார்.இந்த தலைமையானது காங்கிரஸ் தலைவர்கள் மீது இருந்த மாயைகளை தகர்ப்பதற்கு பதிலாக அவர்களை உறுதிப்படுத்தியது.கம்யூனிஸ்டுகள் தனிநபர்களாகவும் குழுக்களாகவும் மக்களின் பக்கம் நின்று வீரத்துடன் அர்ப்பணிப்புடன் அவர்களுடைய பல்வேறு போராட்டங்களை தலைமை ஏற்று வழி நடத்தினர்.

ஆனால் முக்கிய அகவயக் காரணியாக விளங்குகிற ஒழுங்குபடுத்தப்பட்ட புரட்சியாளர் கட்சி இல்லாது போனால் புறவயமாக விளங்கிய புரட்சிகர சூழல் புரட்சிக்குவழிகோலாது எதிர் புரட்சிக்கும் பெரும் ரத்தகளறியை உருவாக்கிவிட்ட வகுப்புவாத அடிப்படையிலானதும் முற்றிலும்இயற்கையின் முரணாதுமான இந்தியாவின் பிரிவினைக்கும் நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் அனைத்து கட்டமைப்பு தடைகளையும் பேணி இரண்டு புதிய அரசுகளையும் முதலாளித்து ஏகாதிபத்திய அமைப்பிற்கு நெருக்கமாக ஒன்றிணைப்பதற்கு இட்டுச் சென்றது(39)அதிகாரம் மாற்றம் அடைந்தவுடன் இந்தியா உண்மையில் சுதந்திரமான இறையாண்மை  கொண்ட நாடாக மாறியதா? அதனுடைய வளர்ச்சிக்கும் கட்டமைப்புக்கு தடைகளாக விளங்கிய ஏகாதிபத்தியம் பெரும் மூலதனம் நிலப்பிரப்புதுவம் ஆகியவற்றை தூக்கி எறிவதற்கான புரட்சி நிறைவேறியதா? அல்லது தேசிய விடுதலைப் போராட்டத்தின் முனையை மழுங்கச் செய்யும் பொருட்டு, சர்தார் மோட்டார் சிங் "அரசியல் பசுக்கள்"எனக் கூறி அழைத்த ஏகாதிபத்திய எடுபிடிகளின் பின்னால் ஒளிந்து கொள்ளும் படியாக ஏகாதிபத்தியம் வெறும் தோற்றத்திற்காக பின் வாங்கியதா?

காலனிய மயமாக்கலுக்கு முந்தைய சமூகம் அழிக்கப்பட்ட பிறகு இந்திய மக்களை கொடூரமான வகையில் சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்கும் துணைபுரியும்பொருட்டுகாலனிவாதிகளால் கட்டிஎழுப்பப்பட்ட அமைப்பு முறையான காலனி சகாப்தத்தின் பழைய அமைப்புமுறை நாட்டின் புனர்வாழ்வுக்கு இட்டுச் செல்லக் கூடிய வகையில் அதனுடைய பொருளாதார சமூக அரசியல் ராணுவ தளங்கள் சுதந்திரமான இறையாண்மை கொண்ட இந்தியாவில்மறுவாய்ப்பு செய்யப்பட்டதா?

காலனி ஆட்சியின்போது இந்திய பொருளாதாரம்சுதந்திரமாக விளங்காமல் பிரிட்டன் பொருளாதாரத்திற்கு அடிமையாகவே நீடித்தது.பிரிட்டிஷ் மூலதனம் இந்திய பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையின்மீதும் ஆதிக்கம் செலுத்தி நமது மக்களின் ரத்தத்தை உறிஞ்சியது. அதிகாரமாற்றத்திற்குப் பிறகு இந்திய பொருளாதாரம் ஏகாதிபத்தியஅடிமைத் தளைகளிலிருந்து விடுதலை பெறவில்லை என்பதை சுட்டிக்காட்ட கீழ் வரும் உண்மை போதுமானவையே பெரும் வணிக மூலதனத்தின் பிடியானது விலகுவதற்கு பதிலாக மென்மேலும் இறுக்கமானது ஆங்கிலேய முதலாளித்துவவாதிகள்  இங்கு செழித்து வளருவதற்கு முழு சுதந்திரம் வழங்கப்படும் என்று அவர்களுக்கு 1946இல் நேரு உறுதி அளித்தார்.பற்பல அதிகாரப்பூர்வமான தீர்மானங்கள் வாயிலாகவும் பேச்சுக்கள் மற்றும் இன்ன பிறவற்றின் மூலமாகவும் இந்திய அரசாங்கம் ஏகாதிபத்திய மூலதனத்திற்கு வரவேற்பினை வழங்கியது.பரந்து விரிந்த கிராமப் பகுதிகளின் நிலவிய நிலப்பிரப்புத்துவஅல்லதுஅரைநிலப்பிரப்புத்துவ உறவுகளைப் பொருத்தமட்டில் அடிப்படை மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை. நிலப்பிரப்புத்தின் சில கோரவடிவங்கள்மட்டுமேகளையப்பட்டன. இந்தியாவில் ஜனநாயக புரட்சி அல்லது விவசாயபுரட்சி ஏதும் நடைபெறவில்லை.கிராமப்புறத்தில் உள்ள சொத்துடமை வடிவத்தில் மாற்றம் ஏதும் நிகழவில்லை”.

அதிகாரமாற்றத்திற்குப் பிறகு இந்திய அரசியல் சமூக அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சில சொற்களோடு நாம் நிறுத்திக் கொள்வோம்.புரட்சிகரகட்சி ஒன்று இல்லாது போன காரணத்தினால் இந்திய மக்களுடைய தேசிய விடுதலை போராட்டத்தின் குரல்வளைபெருமுதலாளியநிலப்பிரப்புத்துவ கூட்டணியின் முன்னோடிகளுடைய முழு ஒத்துழைப்புடன் மற்றும் பெரும்துணைகொண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளால் நெறிக்கப் பட்டது.(44)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பி.சி ஜோசி மற்றும் அவருடைய சகாக்கள் வகித்த துணைப் பாத்திரத்தின் உதவியோடு இந்திய வரலாற்றினுடைய போக்கின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்.இந்திய சமுதாயத்தில் பாரதூரமான மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை. பழைய ஆதிக்கவாதிகளால் கட்டி எழுப்பப்பட்டு நிர்வாக அமைப்பு நீடித்தது. காலனி நிர்வாகத்தின் இரும்பு சட்டமாக விளங்கிய ஆங்கிலேயர்களால் பயிற்றுவைக்கப்பட்ட ஐசிஎஸ்முன்பு போலவே தொடர்ந்தது. (47).

அதைத்தொடர்ந்து வந்து ஐஏஎஸ் தன்னுடைய அதிகார வர்க்கப் பணியின் கட்டமைப்பையும் பாணியையும் தக்க வைத்துக்கொண்டு சுதந்திர அரசாங்கத்தின் பொருளாதார வளர்ச்சி திட்டங்களுக்கான பரந்த பொறுப்புகளை ஏற்பதற்கு பதிலாக சட்டம் ஒழுங்கு குறித்த குறுகிய காலனி வாத செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்கு  ஏதுவானவகையில் எண்ணிக்கையையும் முன்னோக்குப் பார்வையையும் கொண்ட தேசிய நிர்வாக அமைப்பாக நீடிக்கிறது. (48)

இந்தியா விடுதலை அடையவில்லை எனினும் ஒரு முக்கிய மாற்றம் நடந்தேறியது. காலனி நாடாக இருந்த இந்தியா புதிய காலனி நாடாக மாறியது. தேசிய விடுதலை என்பது அமைதிப் பேச்சு வார்த்தைகள் மூலமாகவோ சமரச போக்கின் மூலமாக எடுகப்பட வேண்டிய விஷயம் அல்ல;அதைப் போராடி பெற்றே ஆகவேண்டும் மீண்டும் வலியுறுத்துவது என்றால் ஏகாதிபத்தியம் என்பது காலனி நாட்டில் இயங்கும் பாசிசமே. அதனுடைய வன்முறையை அதைவிட கூடுதலான வன்முறையைக் கொண்டு எதிர்க்கவும் வீழ்த்தவும் வேண்டும்.1857ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவின் முதலாம் விடுதலைப் போரில் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு இந்திய தேசபக்தர்கள்  தளையாப்படுத்தப்பட்டு சாலை ஓரமரங்களில் தூக்கிலிடப்பட்டனர். யூதர்களுக்கு நாஜிகள் இழைத்த கொடுமைகளை விட இது எவ்வகையில் குறைவானதாக இல்லை சாரத்தில் இதே வகைப்பட்ட எண்ணற்ற பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. நீண்ட காலணியாட்சிக்கு முன்னரும் பின்னரும் வாழ்வின் ஒவ்வொருதுறையிலும் சேர்ந்து விட்டிருந்த கழிவை அகற்றுவது நாட்டின் தேவையாக இருக்கிறது. ஒரு சுதந்திர இந்தியா என்றால் புதிய இந்தியா புத்துயிர் பெற்ற இந்திய அந்த இந்தியாவின் மக்கள் தங்கள் சொந்த விதியை தாங்களே மாற்றி வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் புத்தாக்கத்தை கொண்டுவர முடியும் (53).

இவைகளை கவனத்தில் கொள்ளாமலே இன்று இந்தியாவில் இடதுசாரி கட்சிகள் என்பது கம்யூனிசத்தின் பெயரால் முதலாளித்துவகும்பலின்ஒருபிரிவினராக ஆட்சியதிகாரத்தில் தங்களின் பங்கில் வாழ்ந்து கொண்டுள்ளனர்புரட்சி பேசும் புரட்சியாளர்களும் அதிகார வர்க்கத்துக்கு எதிரான மூலதனத்திற்கு எதிராக பெரும் முதலாளிகளுக்கு எதிரான வர்க்கப் போராட்டம் ஒழுங்கு அமைப்பதில் திறமையற்றவர்களாகஇருக்கின்றனர்கம்யூனிசத்திற்கு ஆளுக்கு ஒரு வகையாக விளக்கம் கொடுத்து மக்களை குழப்புகின்றர்.ஆகமக்கள்கம்யூனிசத்திற்கு பக்கம் வரத் தயங்குகின்றனர்.

இன்னும் சில போக்குகள்.

ஜோசி முதல் ரணதிவே வரையிலான வரலாறு அப்பட்டமான வலது சந்தர்ப்பத்தில் இருந்து தீவிர  இடதுசாரி துணிச்சல் வாதத்துக்கு பாய்ந்த வரலாறாகவும் தெலுங்கானா போராட்டம்போன்ற விவசாயப் புரட்சிக்கு துரோகம் இழைத்த வரலாறாகவும் இருந்தது.


ஏகாதிபத்தியத்தின் நேரடியான அல்லது மறைமுகமான ஆட்சியின் கீழ் உள்ள ஒரு நாட்டில் ஜனநாயக புரட்சியானது ஏகாதிபத்திற்கு எதிராகவும் நிலப் பிரபுவத்துக்குஎதிராகவும்நடத்தப்படுகிறது. ஆனால் சோசலிசபுரட்சியானது மூலதன ஆதிக்கத்திற்கு எதிராக நடத்தப்படுகிறது. அவைஇரண்டும்வெவ்வேறு கட்டங்களாக இருக்கின்றன.ஒன்று மற்றொன்றுக்கு முன்பு நடைபெறுகிறது.ஜனநாயகப் புரட்சியின் இலக்குகள் எட்டப்பட்ட பிறகுதான்சோசலிசபுரட்சி வெற்றிகரமாக நிறைவேற்றிடமுடியும்.இரண்டுபுரட்சியையும் ஒரே நேரத்தில் நிறைவேற்ற முடியும் என்பது வாய் சவடால்தானே தவிர வேற அல்ல.மாவோ கூறியது போல ஒற்றைப் புரட்சி குறித்தகோட்பாடு புரட்சி கிஞ்சிற்றும்தொடர்பில்லாத கோட்பாடே.

எனவே ரணதிவே அரசியல் மற்றும் அமைப்பு இரண்டிலும் புரட்சிக்கு பதிலாக குழப்பத்தை ஏற்படுத்தினார்.குறிப்பான நிலைமைகளை புறந்தள்ளி அவர் வீதிகள் சிறைச்சாலைகள் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் போன்ற எதுவாயினும் இங்கு அச்சமற்று வழிகாட்டுதல் போர் குணம்மிக்கநடவடிக்கை போன்றவற்றின் முன்னுறுத்துகின்ற துணிச்சல்வாத வழியை போதித்தார். குண்டுகளையும் அமிலபல்புகளையும் பயன்படுத்துவது தான் போர்குணம் மிக்க நடவடிக்கையின் முதன்மையான கூறாக விளங்கியது (106)

தான் நகர்ப்புற பகுதிகளில் இடதுசாரி துணிச்சல்வாதத்தை கடைப்பிடித்துக் கொண்டிருந்ததாகவும்கிராமப்பகுதிகளில்வலதுசந்தர்ப்பவாதபாதையைபின்பற்றியதாகவும் பின்னாளில் ரணதிவே ஒப்புக்கொண்டார். ஒன்று அல்லது இரண்டு அரசியல் தலைமை குழு உறுப்பினர்களை மட்டுமே சார்ந்திருந்த ரணதிவே கட்சியின் கொள்கைகளை தீர்மானிப்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில குழுக்களை களைப்பது அதற்கு பதிலாக தனக்கு விருப்பமானவர்களை கொண்டு புதிய மாநில குழுக்களை உருவாக்குவது மத்திய குழு மற்றும் அரசியல் தலைமை குழு உறுப்பினர்களுக்கு கண்டனம் தெரிவிப்பது போன்றவற்றை மேற்கொள்வதன் உரிமை தனக்குதானே எடுத்துக் கொண்டார். அவரது தலைமையின் கீழ் கட்சி இயங்கிய இரண்டுக்கும் மேற்கண்ட ஆண்டுகளில் மத்திய குழு கூட்டம் கூட்டப்படவே இல்லை அரசியல் தலைமை குழு கூட்டங்களும் மிக அரிதாகவே நடைபெற்றன (107)மே 16,1950தேதி சுய விமர்சனம்  சமர்ப்பித்தவுடன் அவர் இயன்றவரை தன்னைதானே தரம்தாழ்த்திக் கொண்டார். தான் கட்சியின் முதுகில் குத்தி விட்டேன் என்பதுதான் அவ்வரிக்கையின் சாரம்சமாக இருந்தது.(history of the Communist party of India. VII pp535-538).

கட்சியின் இரண்டாவது மாநாட்டில் மறுசீரமைப்பு கூட்டம் ஜூன் 1 வரை நடத்தினர் அதில் ராஜேஸ்வரராவ் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தது. ரணதேவ் காலத்தின் போது அரசின் தலைமை குழு உறுப்பினராக விளங்கிய ராஜேஸ்வரராவ் தெலுங்கானா போராட்டத்தின் தலைவராக இருந்தவர்.அவர் மாவோவின் புதிய ஜனநாயக கோட்பாட்டை ஆதரித்து ஜனநாயகம் மற்றும் சோசலிசபுரட்சிக்கான கட்டங்களை வேறுபடுத்திப்பார்த்தவர்.

அவரால்அமைக்கப்பட்டமையக்குழு மாவோவை  பாராட்டியதோடு ரணதிவே மாவோவை அவதூறுசெய்தும் துணிச்சல் வாத பாதையை முன்னுறுத்தி உருவாக்கி இருந்த இந்தியாவின் மக்கள் ஜனநாயக புரட்சிக்கான போராட்டத்தில் மூலயுத்தியையும் செயல்யுத்தியையும் இந்தியாவில் விவசாய பிரச்சினை குறித்து மற்றும் மக்கள் ஜனநாயகம் குறித்துஎன்ற மூன்று ஆவணங்களையும் திரும்பப்பெற்றது.கட்சி உறுப்பினர்கள் மற்றும் அனுதாபிகள் மத்தியில் சுற்று விடப்பட்டது. பழைய அரசியல் குழு தலைமையையும்அதனுடையசெயல்பாடுகளையும் கண்டித்தது. ஆங்கிலேய ஏகாதிபத்தியம் போலியான சுதந்திரத்தை இந்தியாவின் மீது திணித்தது என்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்துடன் நிதிமூலதனத்தின் நெருங்கிய உறவை கொண்டிருந்தது பெரு்முதலாளிகளுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டிருந்தது அதிகாரம் மாற்றத்திற்குப் பிறகு ஏகாதிபத்திய இளைய பங்காளிகளாக மாறினரே தவிர ஒட்டுமொத்த தேசிய முதலாளித்துவ வர்க்கத்தினர் அல்ல என்று கூறியது. சீனாவின் பாதைதான் இந்தியாவின் பாதை என்று சுட்டிக்காட்டப்பட்டுகிராமப்புற பகுதிகளில் கொரில்லாபோர்முறையை மேற்கொள்ள விடுதலைசெய்யப்பட்டதளப்பகுதிகளையும் விடுதலைப் பகுதிகளில் உருவாக்கி நாடு அளவில் அதிகாரத்தை கைப்பற்றும் நடவடிக்கை மேற்கொள்வதன் மூலமாக நாட்டை ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து விடுவிக்க நிலப்பிரப்புதுவத்தை ஒழித்து இந்திய புரட்சி நிறைவேற்ற முடியும் என்று அந்த கடிதம் மேலும் கூறியது.(letters of the new central committee to all party members and SYMPATHIZERS in Rao (Ed), pp 644). ஆனால் இன்று பாராளுமன்றம் மட்டுமே சோசலிசதிற்கான பாதை என்பதோடு பல்வேறு மார்க்சியம் அல்லாத போக்குகளையும் கட்சி அணிகளிடையே பரப்புகின்றனர்.

இந்திய பாராளுமன்றம்:- இந்திய அரசானது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை முன்னிறுத்தி, அதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளை(?) தேர்ந்தெடுத்து ஆளும் வர்க்கங்களுக்கு சேவைசெய்துவருகிறது.வெளித்தோற்றத்தில் பார்க்கும் பொழுது இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசமைப்பு போல் தோன்றினாலும், இங்கு மக்களுக்கு எந்தவித அதிகாரமும்இல்லை.வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மட்டுமே உரிமை உண்டு,அதற்குப்பிறகுதேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்மக்களுக்காக எந்தவேலையையும் செய்யவில்லை என்றாலோ, மக்கள்நலனுக்கு விரோதமானசெயலில்இறங்கினாலோ, அவரை ஒன்றும் செய்ய இயலாது. தேர்ந்தெடுக்கப்பட மட்டுமே உரிமை, அவர்களை திருப்பி அழைக்க எந்த வித உரிமையும் இல்லை.

முதலாளித்துவநலன்களைபிரதிநிதித்து வப்படுத்தும்கட்சிகள்,மேம்போக்காக தொழிலாளர்கள், விவசாயிகள், இதர உழைக்கும் மக்களின் சில சீர்த்திருத்த நலன்கள் குறித்து பேசினாலும் கூட அவைஆளும்வர்க்கங்களின் நலனுக்கு உட்பட்டே அதை செய்கின்றன. இந்த கட்சிகள் தற்போது நிலவி வரும் சமூக அமைப்பே (சுரண்டல் தன்மையுடைய) அத்தனை சிக்கல்களைத் தீர்த்து வைக்கும்என்றும்,தனிச்சொத்துடைமையை பிரதிநிதித்துவப் படுத்தும் முதலாளித்துவ சமூகமே மக்களின் நலன் காக்கும் சமூகம் என்று பறைச்சாற்றி ஆளும் வர்க்கங்களை தாங்கி பிடிக்கின்றன.வறுமை, வேலை இல்லாதநிலை, விலையேற்றம், ஊழல், இலஞ்சம், அரசின் அடக்குமுறை உள்ளிட்டகாரணங்களால்மக்களிடையே ஒரு எழுச்சிகரமான சூழல் உருவாகும் போது, சாதி, மத, இன, மொழி, வட்டார சிக்கல்களை முன்னுக்கு நிறுத்தி அடித்தட்டு மக்களிடையேபிளவுகளைஉருவாக்குகிறது. மேலும் ஆட்சியில் இருக்கும் கட்சியின் அணுகுமுறைதான் சமூக சிக்கல்களுக்கு காரணம் என்று கூறிபுதிய கட்சிகளை (முதலாளித்துவ நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும்) முன்னுக்கு கொண்டு வந்து அவர்களை ஆட்சி பீடத்தில் ஏற்றி தன்னுடைய வர்க்க நலன்களை முதலாளித்துவ வர்க்கம் காப்பாற்றி கொள்கிறது.இதன்மூலம்முதலாளித்துவமானது தன் மீது இருக்கும் எதிர்ப்பைதற்காலிகமாக மட்டுப்படுத்தி, திசைதிருப்புகிறது.தன்னுடையவீழ்ச்சியை, அழிவை தற்காலிகமாக தள்ளி வைக்கிறது.

காவுட்ஸ்கியை விமர்சனம் செய்த லெனின் "பாட்டாளி வர்க்கம் ஏகாதிபத்தியமுதலாளிகளைபுரட்சிகரமான முறையில் தூக்கி எறிய போராடிவருகிறதுஆனால்கவுட்ஸ்கியோ ஏகாதிபத்தியத்துக்கு அடி பணிந்து கொண்டு அதை சீர்திருத்த முறையில் முன்னேற்றவும் அதற்கு ஒத்துப் போகவும் போராடுகிறார் (லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 2 பக்கம் 95).. உழைக்கும் வர்க்கத்தையும் பறந்து பட்ட மக்களையும் புரட்சியில் வழிநடத்திச் செல்வதற்கு பாட்டாளி வர்க்ககட்சி போராட்டத்தின் அனைத்து வடிவங்களிலும்தேர்ச்சிபெற வேண்டும் வேறுபட்டவடிவங்களைஒன்றிணைக்கவும் போராட்டத்தின் நிலைமையில் மாறுவதற்குஏற்பஒருவடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு விரைவாக மாற்றிக் கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும். அமைதியான மற்றும் ஆயுதம்தாங்கிய பகிரங்கமான மற்றும் ரகசியமான சட்டப்படியான மற்றும் சட்டவிரோதமானபாராளுமன்றமுறையிலான மற்றும் மக்கள்திரள் போராட்டமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச போராட்டமாக இவ்வாறு எல்லாவிதமானபோராட்டவடிவங்களிலும் தேர்ச்சி பெற்று இருந்தால்தான் அது எந்த சூழ்நிலையிலும் வெல்லப் பட முடியாததாக இருக்கும் என்று மார்க்சிய லெனினிய வாதிகளாய் நாம் எப்போதும் கூறுகிறோம்.குறிப்பான தனித்தன்மைகளுக்குஏற்பபோராட்டத்தில் அனைத்து வடிவங்களிலும் முழுமையாகவும் திறமையாகவும் தேர்ச்சி பெற்றிருப்பதன் விளைவாக புரட்சி வெற்றியடைய முடியும்.

லெனின் தனது விமர்சனத்தை சரியாகவே சுட்டிக்காட்டிய படி காவுட்ஸ்கி போன்ற திருத்தல்வாதிகள் முதலாளித்துவ சட்டவாதத்தால் இழிவுக்கும் அவமதிப்புக்கும் உள்ளாக்கப்பட்டார்கள் தற்போதைய போலீஸ் சட்டத்தினால் அங்கீகரிக் கப்பட்ட நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு மொந்தை கூழுக்கு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி செய்யும் உரிமை விற்கப்பட்டுவிட்டது (லெனின்இரண்டாம் அகிலத்தின் தகர்வு தொகுதி 18 பக்கம் 314 ).

திரிப்புவாதிகள் பல்வேறு போராட்ட வடிவங்கள் குறித்து பேசினாலும் உண்மையில் அவர்கள் போராட்ட வடிவத்தை மாற்றுவது என்ற பெயரில் சட்டவாதத்தில் ஊன்றிநின்று பாட்டாளி வர்க்க புரட்சியின் குறிக்கோளையே கைவிட்டுவிடுகிறார்கள் இன்று லெனினியதிற்கு பதிலாக காவுட்ஸ்கியத்தை பின்பற்றுவதைதான் இது காட்டுகிறது.

திருத்தல்வாதிகள் லெனினுடைய "இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவக் கோளாறு" எனும் மாபெரும் படைப்பினை தங்களின் தவறான பாதையை நியாயப்படுத்துவதற்காக பயன்படுத்தி மார்க்சிய லெனினியத்தை குறுக்கி பயன்படுத்தி வருகின்றனர்.

உண்மையில் "இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவ கோளாறு" என்ற நூலில் சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கத்தின் முதன்மையான எதிரி அந்த சமயத்தில் காவுட்ஸ்கிய வகைப்பட்ட சந்தர்ப்பவாதம் என்பதை குறிப்பிட்டு இருந்தார் லெனின். மேலும் அவர் திருத்தல்வாதத்திலிருந்து முழுமையாகமுறியடித்துக்கொள்ளாதவரை புரட்சிகரப் போர் தந்திரங்கள் தேர்ச்சி பெறுவது எப்படி என்று பேச்சுக்கே இடம் இருக்க முடியாது என்பதைதிரும்பத்திரும்பவலியுறுத்தினார்.

இன்னொறு போக்கு ட்ராட்ஸ்கியம், பல்வேறு பிரச்சனைகளை பல்வேறு விதமாகவெளிப்படுகிறதுட்ராட்ஸ்கியம்; அது அடிக்கடி "தீவிர இடதுசாரி" முகமூடிஅணிந்து கொள்கிறது;ஆனால் அதன் சாரம் புரட்சியை எதிர்ப்பதும் புரட்சியை மறுப்பதுமேயாகும்.

பாட்டாளி வர்க்க புரட்சியையும் பட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் எதிர்ப்பது என்ற அடிப்படையில் ட்ராட்ஸ்கியம் இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதமும் உண்மையில் இரண்டும் ஒன்றாக இருக்கின்றன. அதனால்தான் ஸ்டாலின் திரும்பத் திரும்பட்ராட்ஸ்கியத்தைஒருவகையில் மென்ஸ்விஸயம்என்றும்காவுட்ஸ்கியதியம் என்றும் சமூகஜனநாயகம் என்றும் மேலும் எதிர்புரட்சிகர முதலாளிகளின் முன்னேறிய பிரிவு என்றும் கூறினார். திருத்தல்வாதம் சாரத்தில் புரட்சி எதிர்ப்பதாகவும் மறுப்பதாகவும்இருக்கிறது. திருத்தலவாதமும் காவுட்ஸ்கியமும் ஒரேகுட்டையில் ஊரிய மட்டைகள் என்பது மட்டுமல்ல; புரட்சி எதிர்ப்பதில் ட்ராட்ஸியத்தோடு ஒன்று சேர்கிறது என்பது தர்க்கரீதியான முடிவு.

ஓடுகாலி காவுட்ஸ்கி பற்றி தனது விமர்சினத்தில் லெனின் கூறினார்,    "1870களில் மார்க்ஸ் இங்கிலாந்தில் அமெரிக்க போன்ற நாடுகளில் சோசலிசம்சமாதானம் மாற்றம் பற்றிய சாத்திபாட்டை ஏற்றுக் கொண்டார் என்ற குதர்க்க வாதமும் இன்னும் சொல்லப்போனால் பச்சையாக மேற்கோள்களையும் குறிப்புகளையும் வைத்துக் கொண்டு செப்புவித்தை காட்டுகிறஏமாற்றுப்பேர்வழிகளின் வேலையாகும், மார்க்ஸ் முதலாவதாக இந்த சாத்தியப்பாட்டை விதிவிலக்கு என்றஅளவில் தான் ஏற்றுக்கொண்டார். இரண்டாவதாக அப்பொழுது ஏகபோக முதலாளித்துவம்அதாவதுஏகாதிபத்தியம் இருக்கவில்லை மூன்றாவதாக அப்போது இங்கிலாந்து அமெரிக்க போன்றநாடுகளில்இன்றுவளர்ந்துள்ளது போல முதலாளித்து அரசு இயந்திரம் முதன்மையான கருவியாக பணிபுரியக்கூடிய ராணுவம் இருக்க வில்லை" (லெனின் நூல் திரட்டு 23 பக்கம் 233).

தனது அடிப்படை பொருளாதாரக் குணாம்சங்களின் காரணமாக ஏகாதிபத்தியமானது சமாதானம் மற்றும் சுதந்திரத்தின் மீதான அதன்குறைவானபற்றுதலேனாலும் ராணுவவல்லாட்ச்சிகொள்கையின் அனைத்தும் தெளிவு வளர்ச்சியின் மீதான அதன் அதிகபட்ச பற்றுதலினாலும்பிரித்தாளப்படுகிறது என்று லெனின் கூறினார். சமாதானமுறைமாற்றமும் அல்லது பலாத்காரமுறை மாற்றம் என்ற கேள்வி பற்றிய விவாதத்தில் இதை கவனிக்க தவறுவது என்பது முதலாளித்துவத்தின்ஒருசாதாரண அல்லதுதோட்டக்காரனை போன்று அடிவருடியின் நிலைக் குத் தாழ்ந்து விடுவதாகும்" (லெனின் நூல் திரட்டு 23 பக்கம் 357).

உலக வரலாறு இதுவரை முதலாளித்து வத்தில் இருந்து சோசலிசம் சமாதான முறையில் மாற்றம் தானாகவே நடந்தேறியதாக எந்த முன்மாதிரியும் உருவாகவில்லை என்பது வரலாற்று உண்மை

முதலாளித்துவ பாராளுமன்றதின்பால் கடைபிடிக்கவேண்டிய சரியான அணுகுமுறைகுறித்துமார்க்சியலெனினியவாதிகளுக்கும்பிறசந்தர்ப்பவாதிகளுக்கும்மற்றும்திருத்தல்வாதிகளுக்கும் இடையே ஒரு அடிப்படை வேறுபாடு எப்போதும் வந்திருக்கிறது.

முதலாளிகளின்பிற்போக்குதன்மையை அம்பலப்படுத்தவும் மக்களுக்கு கற்றுக் கொடுக்கவும்  புரட்சிகரவலிமை சேகரித்துக்கொள்ளவும்உதவும்.குறிப்பான சூழ்நிலைகளில்  பாட்டாளி வர்க்கக் கட்சி பாராளுமன்ற போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும்  என்றும் பாராளுமன்றமேடையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிய லெனினியவாதிகள் புரிந்து செயல்பட வேண்டும்.  தேவைப்படும்போது இந்த சட்டப்பூர்வமான போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ள மறுப்பது தவறாகும்.  ஆனால் பாட்டாளி வர்க்க கட்சி ஒருபோதும் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு மாறாக  பாராளுமன்ற போராட்டத்தைகருதக்கூடாது,  அல்லது சோசலிசத்திற்கான மாற்றாக பாராளுமன்றபாதை மூலம்  சாதித்து விடலாம் என்று மாயையில் ஆழ்ந்து விடக்கூடாது.  அதாவது எல்லா சமயங்களிலும்வெகுஜனபோராட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

லெனின் கூறினார் "புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி மக்களை விழிப்படையச் செய்யும் பொருட்டு  முதலாளித்துவ பாராளுமன்றத்தில் பங்கெடுக்க வேண்டும்.தேர்தலின்போதும்பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கு இடையில் நடக்கும்போராட்டங்களின்போதும்  அவ்வாறு செய்ய முடியும். ஆனால் வர்க்கப் போராட்டத்தை பாராளுமன்ற போராட்டமாககுறுக்கிவிடுவது  பாராளுமன்ற  போராட்டத்தை உயர்ந்த பட்ச தீர்மானகரமானவடிவமாக்கி  அனைத்துப்போராட்டவடிவங்களையும்  இதற்கு உட்பட்டதாகவேஆக்குவதுஉண்மையில் பாட்டாளி வர்க்கத்துக்கும்  எதிராக முதலாளி வர்க்கதினத்தின் பக்கம் ஓடி விடுவதாகும்".  (லெனின் அரசியல் நிர்ணயசபைக்கான தேர்தலும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்  பக்கம் 36  ஆங்கில  பதிப்பு   மாஸ்கோ).

பாராளுமன்றவாதத்தின் நிழலை பின்தொடர்ந்துசென்றதற்காகவும்  அரசு அதிகாரத்தைகைப்பற்ற வேண்டிய புரட்சிகரகடமைகைவிட்டதற்காகவும்  லெனின் இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதிகளை கண்டித்தார். அவர்கள்  பாட்டாளி வர்க்க கட்சியை ஒரு தேர்தல் கட்சியாக  ஒரு பாராளுமன்றகட்சியாக  முதலாளிகளின்தொங்குசதையாக  முதலாளித்துவ  சர்வாதிகாரத்தை காக்கும்  ஒரு கருவியாகமாற்றிவிட்டார்கள்  பாராளுமன்ற பாதையை ஆதரிப்பதன் மூலம்  இரண்டாம் அகிலத்தின் திரிபுவாதிகள்அடைந்த கதியே  அவரை பின்பற்றுபவர்களும் அடைவார்கள் என்றார்.

அக்டோபர் புரட்சியின் ஊடாக உலகிற்கு சோசலிசத்தின் நன்மைகள் கலங்கரை விளக்காக ரஷ்ய புரட்சி எடுத்துகாட்டியது. ரசிய புரட்சியை அடிவொற்றி உலகில் உள்ள பல்வேறு மார்க்சிய லெனினிய புரட்சியாளர்கள் தமது நாட்டில் புரட்சி நடத்தினார்கள்.

அதாவது சீனாவிலிருந்து கியூபா வரை எல்லா நாடுகளிலும் நடைபெற்ற புரட்சிகள் விதிவிலக்கின்றி ஆயுதம் தாங்கி போராட்டத்தின் மூலமே ஏகாதிபத்திய எதிர்ப்பு ராணுவ ஆக்கிரமிப்புக்கும் தலையிட்டுக்கும் எதிராக போராடியதன் மூலமாக வெற்றி அடைந்திருக்கின்றன (மாபெரும் விவாதம் நூல் பக்கம் 695 புதுமை பதிப்பகம் வெளியீடு).

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு பல நாடுகளில் ஆயுதப் போராட்டம் மூலமாக தான் சோசலிச நாடுகள் நிறுவப்பட்டன .

ஆக நமது படிப்பினைகளை சீர் செய்ய பாட்டாளி வர்க்க புரட்சி போர்களின் வெற்றியிலிருந்து நமக்கு கிடைப்பதை புரிந்து கொள்ளவே .

ரண்டாம்அகிலத்தின் திருத்தல்வாதி களால் விளம்பரப்படுத்தப்பட்ட பாராளு மன்றபாதை என்ற கருத்து லெனினால் முறியடிக்கப்பட்டது நீண்டகாலத்திற்கு முன்பேசெல்லாக்காசாகி விட்டது.

நக்சல்பாரி எழுச்சியின் படிப்பினைகள்

1.நிலப்பிரபுத்துவம்,தரகுமுதலாளித்துவம்,அமெரிக்க ஏகாதிபத்தியம்சோவியத் சமூக ஏகாதிபத்தியம் ஆகிய நான்குமே இந்திய மக்களின் அடிப்படையான எதிரிகள்.

2.உழைக்கும் மக்களை ஒடுக்கும் அரசுயந்திரத்தை தூக்கியெறிய ஆயுதப் போராட்டம் ஒன்றே தீர்வு.

3.பாராளுமன்றம் என்பது பன்றிகளின் தொழுவம்

4.திரிபுவாதிகள் மற்றும் நவ திரிபுவாதிகளின் மக்கள் விரோதப் போக்கை சித்தாந்த ரீதியில் உறுதியாக அம்பலப்படுத்துவோம்என்ற பதாகையின் கீழ் பல புரட்சியாளர்கள் ஒன்றிணைந்தனர்

தோழர் சாருமஜூம்தார் தலைமையில் நவம்பர் 11,1967ல் கல்கத்தாவில் உள்ள ஷாஹித்மினார் மைதானத்தில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டம் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் அகில இந்திய ஒருங்கிணைப்புக்குழு மேலும் சாரு மஜூம்தாரைப் பொதுச் செயலாளராகக் கொண்டசி.பி..(மா.லெ) கட்சி உதித்தது.

அடக்கு முறைகளுக்கு அஞ்சாமல் மக்களின் விடுதலைக்காக தீரமுடன் போராடிய முற்போக்கு இயக்கங்களில் வரலாற்றில் நக்சல்பாரிகளுக்கு என்றைக்கும் முன்வரிசையில் இடம் உண்டு. படுகொலை செய்யப்பட்டவர்கள் ஒருபுறம் என்றால் அடக்குமுறைகளுக்குஆளானவர்கள்சித்திரவதைசெய்யப்பட்டவர்கள்ஆயுள்தண்டனைகளுக்குஆளாகி சிறைகளிலிலேயே தனது இளமைக்காலங்களைத் தொலைத்தவர்கள் என தனக்குள்ளே ஒரு மாபெரும் தியாகவரலாற்றை கொண்டிருக்கிறது இந்த நக்சல்பாரி இயக்கம்எல்லாதடைகளையும் கடந்து நக்சல்பாரி இயக்கம் மக்களை ஒளிமிகுந்த ஓர் வருங்காலத்திற்கு அது அழைத்துச் சென்றதா என்றால் அவர்களின் உயரிய அர்பணிப்பும் தியாகமும்சரியான மார்க்சிய லெனினிய புரிதல் இன்மையால் இடதுசாரி சாகசவாதத்தால் எதிரிக்கு ஏற்படத்த வேண்டிய பேரிழப்பிற்க்கு பதில் தன்னையே அழித்துக் கொண்டது. மார்க்சியத்தின் புரட்சிகர ஆன்மாவை நக்சல்பாரி இயக்கமானது நிகழ்ச்சி நிரலில் வைத்துஒடுக்கப்பட்ட மக்களுக்குபுரட்சிகரகட்சியின் தலைமை யளிக்கமுன்னெடுத்த இயக்கம்பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உயர்த்திப் பிடித்துபுரட்சியின் மூலம் சுரண்டும் வர்க்கஅரசைத்தகர்ப்பதுசோசலித்துக்கான அமைதிவழி மாற்றத்தை நிராகரித்துபுரட்சிகர பலாத்காரத்தை ஏற்றல்பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படையாக கம்யூனிஸ்ட் கட்சியைமாற்றியமைத்தல்புதியஜனநாயகப்புரட்சிதொழிலாளிவிவசாயிகள் கூட்டணி அமைத்தல்போன்றஅரசியல் நிலைப்பாடுகளைஅங்கீகரித்ததுஆனால்வலதுதிருத்தல்வாத போக்குகளுக்கு சித்தாந்தரீதியில் பலத்த அடி கொடுக்காமலும்கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்குவதற்கான நெறிமுறைகள் மூன்றாம்அகிலத்தினால் உருவாக்கப் பட்டதை கவனத்தில் கொள்ளாமலும் கட்சி தொடங்கிய காலத்தில் குருச்சேவ் திருத்தல்வாதத்தை எதிர்த்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவப் போராட்டமான மாபெரும் விவாதத்தின் நிலைப்பாடுகளைகிரகித்துக்கொள்ளாமலும் கட்சி கட்டப்பட்டதுகொரில்லாப் போரைத் தவிர மற்ற எல்லா போராட்ட வடிவங்களும் அமைப்பு வடிவங்களும் நிராகரிக்கப்பட்டன.இடதுகுறுங்குழுவாதத்தை புரட்சி வழியாக உயர்த்திப் பிடிக்கப்பட்டதுஇன்று ஒரு கட்சிக்கு பதிலாக பல குழுக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.இந்தசூழ்நிலையானது பாட்டாளி வர்க்கப் போராட்டம் சந்தித்துக் கொண்டு இருக்கும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையாகும்இந்த சூழ்நிலைகளை மாற்ற வேண்டியது கம்யூனிஸ்டுகளின்கடமையாகும்அனுபவத்தின் வாயிலாகவும்அரைகுறையாக கோட்பாடுகளை கிரகித்துக் கொண்டதன் மூலம் இன்று அறியப்படும் நிலைப்பாடுகளின் அடிப்படையில் செயல்படுத்தப்படும்நடைமுறைகள்மற்றும் ரசிய புரட்சியிக்கு முன்னும் பின்னும் எழுந்த திருத்தல்வாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்து லெனின் அவர்கள் கடுமையாக போராடிய அனுபவத்தைகிரகிக்காத நிலைஅதாவது ட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எழுந்த ஒவ்வொருபோக்கையும் எவ்வாறு லெனின் முறியடித்தார் என்பதைபார்க்காததன்மை ஆகியவற்றை தொகுப்பாகபார்க்கும்பொழுதுமுதலில்புரட்சியைவிடஒருபுரட்சிகர தத்துவத்தை நிலைநாட்டுவதுதான்முக்கியமானது என்பதை லெனினியமும் இந்திய கம்யூனிஸ்டுகளின் அனுபவமும் நமக்கு சுட்டிகாட்டுகிறதுஆகவே நமது தோழர்களின் உயரிய தியாகத்தை போற்றும் நாம்அதற்கு ஒரு ஒன்றுபட்ட புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி வேண்டும் என்பதனை உணரவேண்டும்அதற்காக நாம் மார்க்சிய தத்துவத்தை பயில வேண்டும்அதன் அடிப்படையில் இந்தியப் புரட்சிக்கான குறிப்பான பொதுத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதை உணர்ந்து நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

கம்யூனிஸ்டுகளாகிய நாம் வெறுமனே பொருளாதாரப் பிரச்சனைகளை மட்டும் எடுத்துக் கொண்டு நமது அணிகளுக்கும் மக்களுக்கும் போதனை அளித்து அரசியல்அதிகாரத்திற்காகப்போராடுவதோடு நாம் நின்றுவிடக் கூடாதுஅதற்கு மேலும் மார்க்சிய தத்துவம் மற்றும் கம்யூனிச பண்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும்நமது மக்களுக்கு மார்க்சியகம்யூனிசத்தை போதித்து மக்களை சித்தாந்தரீதியாக வளர்க்க வேண்டும்மேலும் நம்மிடையே கம்யூனிச பண்புகளை திட்டமிட்டு வளர்க்கவேண்டும்,கம்யூனிசபண்புகளுக்கு எதிரான தீயபண்புகள் நம்மிடம் இருக்குமானால் அதனை களைவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். மேலும் மக்களுக்குநாம்வழிகாட்ட வேண்டும்பல தியாகங்கள்செய்துபுரட்சிநடத்தியசோவியத்துரஷ்யகம்யூனிஸ்டுகட்சிக்குள்ளும்ஆட்சிக்குள்ளும்தனிவுடமைசிந்தனையின் அடிப்படையிலான தீயபண்பாளர்கள் உள்ளே நுழைந்து இருந்ததால்தான் பல லட்சக்கணக்கான மக்கள் ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்ட சோவியத்து அரசை மிகவும் எளிதாக வீழ்த்த முடிந்தது, என்ற வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் இதுவரை அடைந்துள்ள தோல்விகளுக்கு காரணம் தம்மிடமுள்ள குறைகள்தான் என்பதை உணரத் தவறுவதுதமது தோல்விகளுக்கு பிறரை காரணமாக காட்டிக்கொண்டு தமது தவறானவழியிலேயேசெல்வதுதம்முடைய தவறுகளை சுட்டிக்காட்டிதம்மை எதிர்த்துப்போராடுபவர்களின்மீது முத்திரை குத்தி அவர்களை எதிரிகளாக பாவித்து செயல்படுவதுஇது போன்று பல குறைகள் கம்யூனிஸ்டுகளாகிய நம்மிடம் காணப்படுகிறதுஇந்ததீய குணங்களிலிருந்து நாம் விடுபட வேண்டியது மிகமிக அவசியமாகும்

இந்திய கம்யூனிச அமைப்புகள் கடந்த காலத்தில் பல தவறுகள் செய்துள்ளது. அந்த தவறுகளை இப்போதும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றன. இந்த தவறுகளை ஒவ்வொன்றாக பரிசீலித்து, அந்த தவறுகளை களைந்திட நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து நடைமுறையில் செயல்படுவதன் மூலமே கம்யூனிச இயக்கமானது மக்களின் செல்வாக்கை பெற்று வளரும்.

கம்யூனிச அமைப்பில் சேர்ந்துவிட்டால் அவர் உடனடியாக புனிதமானவராக மாறிவிட மாட்டார். சமுகத்தில் மக்களிடையேயுள்ளதவறான கருத்துகள், சிந்தனைமுறை, பழக்கவழக்கங்களை நீண்டகாலம் பின்பற்றி அதன் பாதிப்புகளுக்கு உள்ளாகியே இருப்பார். இந்த தீயபழக்கவழக்கங்களிலிருந்து அவர் உடனடியாக மீண்டுவருவது மிகவும் சிரமமானதேயாகும். ஆகவே கம்யூனிச அமைப்பிலுள்ளவர்கள் அனைவரும்தவறேசெய்யாத உத்தமர்கள் என்று கருதுவது தவறானதாகும். கம்யூனிஸ்டுகளும் தவறு செய்வார்கள் என்ற உண்மையை நாம் எப்போதும் மறுக்கக் கூடாது.

இவ்வாறு கம்யூனிச அமைப்பில் செயல்படும் கம்யூனிஸ்டுகள் அவர்கள் தலைவர்களாகக்கூட இருக்கலாம். அவர்கள் தவறு செய்வதற்கு வாய்ப்பு தொடர்ந்து இருக்கும். ஆகவேதான் கம்யூனிஸ்டுகள் தவறு செய்யும் போது, அந்த தவறை கம்யூனிஸ்டு அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் சுட்டிக்காட்டி விமர்சிப்பதற்கு உரிமை உண்டு. கட்சித் தோழர்கள் மட்டுமல்லாமல் கட்சிக்கு வெளியே உள்ள பொதுமக்களுக்கும் அந்த உரிமை உண்டு என்றார், மாவோ. ஏனென்றால் கம்யூனிஸ்டுகள் மக்களின் சேவகர்கள். ஆகவே மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். இதற்கு மாறாக மக்களின் மீது அதிகாரம் செலுத்தும் ஆதிக்க சக்திகள் அல்ல, கம்யூனிஸ்டுகள் என்ற கருத்தை மாவோ நமக்கு தெளிவாகச் சொல்லிஉள்ளார். இந்த கருத்தை ஒவ்வொரு கம்யூனிஸ்டுகளும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு கம்யூனிஸ்டு தனக்காக மட்டும் பாடுபடக் கூடியவர் இல்லை. பரந்துபட்ட மக்களின்நலனுக்காகப் பாடுபடுபவர்தான் கம்யூனிஸ்டாக இருக்க முடியும். ஆகவே ஒரு கம்யூனிஸ்டிடம் தவறுகளும்குறைகளும் இருக்குமானால் அது உழைக்கும் மக்களையும் பாதிக்கும். ஆகவே உழைக்கும் மக்களின் நலன் கருதி ஒவ்வொரு கம்யூனிஸ்டும் தன்னிடமுள்ள குறைகளை பிற தோழர்கள்சுட்டிக்காட்டினால் உடனடி யாக களைந்துகொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகும். அதற்குத்தான் கம்யூனிச அமைப்பிற்குள் விமர்சனம், சுயவிமர்சனம் என்ற முறையை அமைப்புமுறையாக கம்யூனிஸ்டுகள்                 பின்பற்றுகிறார்கள்.நிலவுகின்றதனிவுடமை சமுதாயத்தில், தனிநபரின் அறிவு மற்றும் திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒருவர் அறிவு மற்றும் திறமை பெற்றவராக இருந்தால் பொருளாதாரரீதியில் செல்வத்தை வளர்த்துக்கொள்ள முடியும் என்றும், அவ்வாறு அறிவு, திறமை இல்லாதவரால் செல்வந்தராக ஆக முடியாது என்றும் அவர் வறுமையில் வாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற கருத்து இந்த தனிவுடமை சமூகத்தில்பரவலாக விதைக்கப் பட்டுள்ளது.இந்தசமூகத்தில் வாழ்ந்து வரும் குட்டிமுதலாளிய அறிவுஜீவிகள் இந்த கருத்துக்கு பலியாகி ஈகோ என்று சொல்லப்படும் தனிமனித அகம்பாவப் பண்பிற்கு ஆளாகிறார்கள். இவ்வாறு தனிமனிதஅகம்பாவப்பண்புகொண்டவர்கள் கம்யூனிச அமைப்பிற்குள் சேர்ந்து செல்வாக்குபெற்றகம்யூனிஸ்டுகளாகவும் இருக்கிறார்கள்.இவர்களில்பலர், தான் சொல்வதெல்லாம் சரியானது என்றும், தான்தவறே செய்யமாட்டோம் என்று கருதுகிறார்கள். இவர்கள் செய்யும் தவறுகளை யாராவதுசுட்டிக் காட்டினால் இவர்கள் அதனை பொருட்படுத் துவதில்லை. இவர்மீதுவைக்கும் விமர்சனங்களுக்குபதில்கொடுப்பதில்லை. மாறாகவிமர்சனம் வைத்தவரிடமிருந்து உறவைதுண்டித்துக்கொள்கிறார்கள்.அமைப்பிற்குள் இவர்களுக்கு செல்வாக்கு இருக்குமானால் அதனை பயன்படுத்தி இவர் மீது விமர்சனம் வைத்தவரை தனிமைப்படுத்தி ஒழித்துக்கட்டி விடுகிறார்கள்.இத்தகைய அகம்பாவம் பிடித்தவர்கள் கம்யூனிஸ்டுகளின் அமைப்புக் கொள்கையான விமர்சனம், சுயவிமர்சனம் என்ற முறையை பின்பற்ற மாட்டார்கள் என்பது நமது அனுபவமாக உள்ளது. விமர்சனம், சுயவிமர்சனம் என்ற கொள்கையை பின்பற்றுவதன் மூலம் ஒரு கம்யூனிச அமைப்பிற்குள் உள்ள தோழர்களிடையே ஒருவருக்கொருவர் நம்பிக்கை ஏற்படும். ஒரு தோழரின் மீது ஒரு விமர்சனம் வைக்கப்பட்டால் அவர் முகம் கோணாமல் அந்த விமர்சனத்திற்கு பதில் அளித்தால் அந்த தோழரின் மீது மற்ற தோழர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும், அந்த தோழரின் மீது நம்பிக்கை வளரும். ஆகவே விமர்சனம், சுயவிமர்சன முறையை பின்பற்றுவதன் மூலம் கம்யூனிச அமைப்பின் மீதுஅணிகளுக்கும், மக்களுக்கும் நம்பிக்கை அதிகரித்து அமைப்பிற்குள் ஒற்றுமை பலப்படும். ஆனால் கடந்த காலங்களில் கம்யூனிச அமைப்பிற்குள் விமர்சனம், சுயவிமர்சன முறை பின்பற்றப்படவில்லை. இதற்குத் தடையாக அமைப்பிற்குள் இருந்த குட்டிமுதலாளிய தான் என்ற அகம்பாவம் பிடித்த நபர்களே காரணமாகும். ஆகவே இன்றைய கம்யூனிஸ்டுகளிடம் தான் என்ற அகம்பாவப் பண்பு இருந்தால் அதனை உடனடியாக கைவிட வேண்டும். விமர்சனம், சுயவிமர்சன முறையைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொண்டு அதனை செயல்படுத்த வேண்டும். சில தனிநபர்கள் எவ்வளவு அறிவும் திறமையும் படைத்தவர்களாக இருந்தாலும் அந்த அறிவு, திறமையின் பலத்தைக் கொண்டு மட்டும் சமூகத்தை மாற்றிவிட முடியாது. வரலாற்றை படைப்பவர்கள் மக்களே என்ற மார்க்சிய கோட்பாட்டின் அடிப்படையில் ஒன்றுபட்ட உழைக்கும் மக்களின் போராட்டங்களின் மூலம் மட்டுமே சமூகத்தை மாற்ற முடியும் என்பதை இந்த குட்டிமுதலாளித்துவ அறிவுஜீவிகள் உணர வேண்டும்./….

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்