ரசிய புரட்சியும் நமது படிப்பினைகளும்

ரசிய புரட்சி தின வாழ்த்துகள் தோழர்களே.
அடிமைபட்டுகிடந்த மக்கள் விடுதலை பெற்றதோடு தங்களை தாங்களே ஆளவும் முடியும் என்று உலக நாடுகளுக்கு உணர்த்திய நாள்.

அந்த நாளை எதிர்நோக்கி இந்நாட்டில் உள்ளவர்கள் அவர்களின் செயல்களை வரலாற்றுவழியில் புரிந்துக் கொள்வதோடு நமது நாட்டில் செய்ய வேண்டியவை செய்ய தவறியவற்றை சுயவிமர்சனத்தோடு முன் வந்து உழைக்கும் ஏழை எளிய மக்களும் மகிழ்ச்சியாக வாழ ஒரு உலகம் உள்ளது என்று உரக்க சொல்லுவோம் இன்நாளில் தோழர்களே.

நவம்பர் புரட்சி நடந்து 107 ம் ஆண்டை நெருங்கும் இன்று நாம் அந்த படிபினையிலிருந்து கற்றதும் பெற்றதும் என்றால் பல உள்ளன அதனை பற்றி 
ஏகாதிபத்திய சகாப்தத்தில் பாட்டாளி வர்க்கப் புரட்சிசம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டனர்;ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பது சம்பந்தமான தத்துவ நடைமுறைப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டனர். என்கிறார் மாவோ.
லெனின் புரட்சிக்கு முந்திய எழுத்துகள் ஒவ்வொன்றும் புரட்சிக்கான வழிகளை தேடிய அதே நேரத்தில் புரட்சிக்கு விரோதமான வற்றையும் மிக தெளிவாக அம்பலப்படுத்தினார். ஒரு புரட்சிகர கட்சிக்கான எல்லா வகையினங்களையும் தெளிவுப்படுத்தியதோடு ஒரு புரட்சிகர கட்சியை தோற்றுவித்தார் அவை புரட்சியை சாதித்ததோடு உலகிற்கு ஓர் கலங்கரை விளக்காக வழிகாட்டியது.
நமது நாட்டில் மட்டுமல்ல இன்று புரட்சிகர கட்சி அதன் செயல் உலகெங்கும் காணவில்லை எனலாம்.
லெனின் வழிகாட்டிய எல்லாவற்றையும் மறுத்து இங்கு நாம் மார்க்சிய லெனினியம் பேசிக் கொண்டுள்ளோம்.
(1). ஒன்றுபட்ட புரட்சிகர கட்சியில்லை
(2). மார்க்சியம் அல்லாத போக்குகளை அம்பலப்படுத்தி மார்க்சிய லெனினியத்தை போதிக்க வேண்டிய கட்சிகளே மார்க்சியம் அல்லாத போக்கிற்கு பலியாகி கிடக்கிறது.
(3). பல்வேறு இடதுசாரி என்போர் ஆளுக்கொரு திட்டம் ஆளுக்கொரு பாதையில் பயணித்துக் கொண்டு மக்களை புரட்சிகர பணியில் ஒன்றினைக்க வேண்டியவர்கள் பிரித்து தனித்தனியாக இயங்கி கொண்டும் ஒருதருக்குகெதிராக மற்றவர்கள் குற்றம் சுமத்து உழைக்கும் மக்களுக்கு சரியான பாதையில் கொண்டு செல்லாமல் குறுங்குழுவாதிகளாகவும் திருத்தல்வாதிகளாக இருந்துக் கொண்டு நாம் லெனினை எப்படி எப்பொழுது புரிந்துக் கொள்வது?

(4). லெனின் மட்டுமல்ல அதன் தொடர்ச்சியாக சோசலிசத்தை நிர்மானிக்கும் பணியில் ஈடுபட்ட ஸ்டாலினும் வழங்கிய படிபினைகள் நமது தோழர்கள் ஏன் உள்வாங்கவில்லை அல்லது அவர்களின் வழியில் பயணிக்க முடியவில்லை?

 மார்க்ஸிஸம்,லெனினிஸத்தின் வளர்ச்சி வரலாற்றில் மிக முக்கியமான பிரச்சினை ஒன்று இக்கட்டுரை யில் எழுப்பப்பட்டுள்ளது.

இக்கட்டுரை மார்க்ஸிஸம்லெனினிஸத்தின் வளர்ச்சி வர லாற்றை மூன்று கட்டங்களாகப் பிரித்து, அவற்றை மூன்று மைல்கற்களாக வருணிக்கின்றது. அக் கட்டுரையிலிருந்து ஒரு மேற்கோள்:- ‘மார்க்ஸும்,ஏங்கெல்ஸும் விஞ்ஞான சோஷலிஸ தத்துவத்தை ஸ்தாபித்தனர். லெனினும்,ஸ்டாலினும் மார்க்ஸிஸத்தை வளர்த்து,ஏகாதிபத்திய சகாப்தத்தில் பாட்டாளி வர்க்கப் புரட்சிசம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டனர்;ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பது சம்பந்தமான தத்துவ நடைமுறைப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டனர்.தோழர் மாஒசேதுங் அவர்கள் மார்க்ஸிஸம்-லெனினிஸத்தை வளர்த்துஇன்றைய சகாப்தத்தில் பாட்டாளி வர்க்கப் புரட்சி சம்பந்தமானபல பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டார்; பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சியை தொடர்ந்து நடத்துவது பற்றிய தத்துவ, நடைமுறைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டார். இவை மார்க்ஸிஸத்தின்சோஷலிஸத்தின் கீழ் வர்க்கங்களும் வர்க்கப் போராட்ட மும் இருக்கின்றனவா, இல்லையா என்ற கேள்விக்கு, இருக்கின்றன என்று பதிலளித்ததுதான்.

மேற்குறிப்பிட்ட கட்டுரை இக்கேள்வியை பின்வருமாறு தெளிவாகப் போடுகின்றது:- " "சோஷலிஸ் சமுதாயத்தில்,குறிப்பாக உற்பத்தி சாதனங்களின் உடைமை முறையில்  சோசலிச மாற்றம் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட பின்னர்,இன்னும் வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும் இருக்கின்றனவா? சமுதாயத்தில் நிலவும் வர்க்கப் போராட்டங்கள் எல்லாம் இன்னும் அரசியல் அதிகாரத்துக்காகப் போரிடும் பிரச்சினையை மையமாகப் கொண்டிருக்கின்றனவா? பாட்டாளி வர்க்க சர்வாதிகார நிலைமைகளில் நாம் இன்னும் புரட்சி நடத்த வேண்டுமா? யாருக்கு எதிராக நாம் புரட்சி நடத்தவேண்டும்? இந்தப் புரட்சியை நாம் எப்படி நடத்தவேண்டும்?

மார்க்ஸும், ஏங்கெல்ஸும் தமது காலத்தில் இந்த வரிசை வரிசையான, முக்கியமான தத்துவப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது சாத்தியமல்ல. பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர்,தூக்கியெறியப்பட்ட முதலாளி வர்க்கம் இன்னும் பாட்டாளி வர்க்கத்திலும் பார்க்க பலமுடையதாகவே இருக்கும்; அதிகார அரங்கிற்கு மீள எப்பொழுதும் முயன்ற வண்ணம் இருக்கும் அதேவேளையில், சிறு உற்பத்தியாளர்கள் முத லாளித்துவத்தையும்,முதலாளி வர்க்கத்தையும் இடைவிடாது தோற்றுவித்துக் கொண்டே இருப்பர்;இவ்வாறு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஒரு அச்சுறுத்தல் எதிர்நோக்கியபடியே இருக்கும்; இந்த எதிர்ப் புரட்சி அச்சுறுத்தலை சமாளித்து, வெற்றிபெற வேண்டுமானல்,ஒரு நீண்ட கால கட்டத்துக்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பலப்படுத்துவது அவசியம்;இதற்கு வேறு வழியில்லை என லெனின் அவர்கள் தீர்க்கதரிசனமாகக் கண்டார்.

மார்க்ஸும், ஏங்கெல்ஸாம் பாட்டாளி வர்க்கப் புரட்சி பற்ரி பிரச்சினையை எழுப்பினர்; பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய பிரச்சினையையும் அவர்கள் எழுப்பினர். லெனின் இத்தத்துவத்தை வளர்த்து,மகத்தான நவம்பர் புரட்சியை நடத்துவதன் மூலம் நடைமுறைப்படுத்தினர்.சோவியத் யூனியன் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் யதார்த்தம் ஆகிய முதல் நாடாயிற்று.

மார்க்ஸும்,ஏங்கெல்ஸும் தம்முடைய காலத்தில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் காண்பதுசாத்தியமல்ல. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், தோற்கடிக்கப்பட்ட முதலாளி வர்க்கம்,அதைத் தோற்கடித்த பாட்டாளி வர்க்கத்திலும் பார்க்க பலமுடையதாக இருக்கும்; அது அதிகார அரங்கிற்கு மீள முயன்றவண்ணம் இருக்கும்; சிறு உற்பத்தியாளர்கள் இடை விடாது முதலாளித்துவத்தையும் முதலாளி வர்க்கத்தையும் தோற்றுவிப்பர் என்பதை லெனின் உணர்ந்திருந்தார்.

அரசு அதிகாரம் சம்பந்தமா பிரச்சினை என்று சொல்வது சரியா என்பதே இன்றுள்ள பிரச்சினை ஆகும்.

லெனின் 'பாட்டாளி வர்க்கப் புரட்சியும் துரோகி காவுட்ஸ்கியும்என்ற தமது நூலில் இப்பிரச்சினையை மிகவும் தெளிவு படுத்தியுள்ளார்.இந் நூலில் லெனின் அவர்கள்,முதலாளித் துவத்திலிருந்து கம்யூனிஸத்துக்குச் செல்லும் காலகட்டம் என்பது ஒரு முழுமையான வரலாற்று சகாப்தம்;இந்த வரலாற்று சகாப்தம் பூராவும்,கம்யூனிஸம் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்,தோற்கடிக்கப்பட்ட முதலாளி வர்க்கம் அதிகார அரங்கிற்கு மீள முயல்வது திண்ணம்; இந்த முயற்சிகளை செயலாக்க முயல்வதும் நிச்சயம் என்று கூறினார்.

காவுட்ஸ்கி முதலிய பழைய காலத் திரிபுவாதிகள் சோவியத் யூனியனில் சோஷலிஸப் புரட்சி நடத்துவதை எதிர்த்தார்கள்.அவர்களுடைய தத்துவம் உற்பத்தியே அனைத்தும் என்ற தத்துவம் என அழைக்கப்பட்டது. இவ்வாறு,அவர்கள் ரஷியாவில் முதலாளித்துவ உற்பத்தி வளர்ச்சி யடையாத காரணத்தால்,சோஷலிஸப் புரட்சி அசாத்தியம்;அக்டோபர் புரட்சி ரஷியாவில் முதலாளித்துவத்திற்கு மாத்திரம் வழியமைக்கும்;ரஷியாவில் முதலாளித்துவ உற்பத்தி சக்திகள் ஒரு குறிப் பிட்டமட்டத்தை அடைந்த பின்னர்தான்,அது இயற்கையாகவும்,சமாதானமாகவும் சோஷலிசமாகமலரும் என்று வாதாடினர்.இதுதான் சோஷலிசத்துக்குச் செல்லும் சமாதான மாற்றம் பற்றிய அவர்களுடைய தத்துவமாகும்.

இந்த அபத்தமான தத்துவத்தை காவுட்ஸ்கி 1918ல் 'பாட் டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி"என்ற தனது பிரசுரத்திலும்,ரஷிய கட்சிக்குள் நிர்க்கதியான நிலையிலுள்ள பொல்ஷி விக்குகள்' என்ற தனது கட்டுரையிலும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.பின்னர், ஸினேவியேவ், ட்ருெஸ்கி, புக்காரின் ஆகியோர் சோஷலிச புரட்சியையும், சோஷலிச நிர்மாணத்தையும்,ஒரு நாட்டில் சோஷலிசம் கட்டிய மைக்கப்பட முடியும் என்ற தத்துவத்தையும் எதிர்க்க,இந்த பழைய காலத் திரிபுவாதிகளின் தத்துவத்தை உபயோகித்தனர், கம்யூனிஸ்ட் சர்வதேசியத்தின் செயல் கமிட்டியின் 7வது கூட் டத் தொடரில், ரஷியாவில் சோஷலிஸ் உற்பத்தியின் மேம் பாட்டை இன்று அல்ல, 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு பின்னர்தான் காட்டமுடியும் என்று கூறினன் ட்ரோட்ஸ்கி.

இந்த அபத்தத்தை ட்ரோட்ஸ்கி பிரகடனம் செய்தபோது ஸ்டாலின் அவனைப் பாரதூரமாக மறுத்துரைத்தார்.காரணம்,முதலாளித்துவ நாடுகளில் காணும் தனியுடைமை முறையிலும்பார்க்க சோஷலிஸ உடைமை முறை மேலானது,சிறந்தது என்பது அதி ஆரம்பத்திலேயே-புரட்சியின் பின் தனியுடைமை முறை ஒழிக்கப்பட்டு,பொது உடைமை முறை ஸ்தாபிக்கப்பட்ட உடனேயே-நிரூபிக்கப்பட்டுவிட்டது.

ட்ரோட்ஸ்கியின் போலித் தத்துவம், உற்பத்தி நன்கு வளர்ச்சி அடையாத காரணத்தால், அக்டோபர் புரட்சி சோஷலிஸத்துக்கு அல்ல,முதலாளித்துவத்துக்குத் தான் வழிகோலும் என்று சமூக ஜனநாயக பொருளாதாரவாதி சுகானேவ் முன்வைத்த அதே தத்துவம்தான் என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டினர்




No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்