ஆங்கிலேயர் ஆட்சிக்கு தேவையொட்டியே பல மாற்றங்கள் ஏற்பட்டன. அவர்களது சுரண்டல் வெவ்வேறு தளங்களில் அவர்களுக்கு உகந்த வகையில் நடத்தினர். ஆங்கிலேயர்கள் மிக நுட்பத்துடன் ஜாதியை கட்டமைப்பை தமக்கு வசதியான முறையில் கையாளவும் செய்தனர். ஆங்கிலேயர்கள் தேவையை ஒட்டி மேட்டுக்குடியினர் காலனி எஜமானர்களுக்கு நெருக்கமாகி ஆங்கிலம் கற்று அரசு பணிகளில் ஆதிக்கம் செலுத்தினர். அதில் முக்கியமாக பிராமணர், பிராமணர் அல்லாதோர் பிரிவினருக்கு இடையேயான முரண்பாடும் நவீன சமூகத்தில் எல்லா ஜாதிகளும் மேல்நிலை நோக்கிய வர்க்க அமைப்பு உருவாகியது ஒவ்வொரு ஜாதியிலும் வர்க்கங்களாக பிளவுண்டு கிடக்கிறது.(விரிவாகபின் வரும் பகுதியில் இதனை பற்றி பார்ப்போம்)....
ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பில் சுரண்டுவோர்க்கு உரியதாக உள்ள அதிகாரத்தை பேணும் பொருட்டு வடிவமைக்கப்பட்டதே ஜாதியம்.
அவ்வாறு ஜாதி தோன்றுவதற்கு முன்னரே ஜாதிகள் தோன்றுவதற்கான அடிப்படைகள் உருவாகிவிட்டது.
நிலவி வந்த வாழ்வியல் முறையில் (ஜாதியின்) வேற்றுமையில் ஒற்றுமையாக வாழும் இயங்கு நிலைக்கான கருத்தியலை தோற்றுவித்தது அந்தக் கருத்தியலை வழங்கியவர்கள் சனாதனவாதிகளே.
நிலபிரபுத்துவ அமைப்பை வடிவமைக்கும் கருத்தியலை கட்டமைப்பதில் கிபி 3-ஆம் நூற்றாண்டில் தொகுத்து வடிவமைக்கப்பட்ட மனுதர்ம சாஸ்திரத்திற்கு பெரும் பங்குண்டு. மேலும் வர்ணதருமத்தை பேணுவதற்காக பகவத்கீதை இறைவனால் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இவை கி.பி 3-4ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டு பின்னர் மகாபாரதஇதிகாச கதைகளுடன் இணைக்கப்பட்டது.
நிலப்பிரபுத்துவதிற்கு உடன்பாடான கடவுள் கோட்பாட்டையும் அதற்கான பக்தி கோட்பாட்டையும் வடிவமைத்திருந்த கீதையும் மனுஸ்மிருதியும் பண்பாட்டுத்தளத்தில் வலுவான மாற்றங்களை ஏற்படுத்தியது.
நிலப் பிரபுத்துவத்தை உறுதிப்படுத்த வடிவமைத்த சனாதனவாதிகளால் கட்டியமைக்கபட்ட மதபோதனைகளே இவை. கிபி 4-ஆம் நூற்றாண்டு தொடங்கி கிபி 8-ஆம் நூற்றாண்டில் சங்கரரின் அத்வைதம், பகவத் கீதை, மனுதர்மம் ஆகியவை நிலப்பிரபுத்துவ உறுதிப்பாட்டை நிலைநிறுத்தவும், பூசர்களானவர்கள்- பிராமணர்கள் என்ற மேல்நிலை ஆதிக்கத்திற்கு வழிகோறியது.
காலவோட்டத்தில் வேதங்களைப் போற்றவும் ஏற்பட்ட புதிய வர்க்கப் பிரிவு பிரதேசபூசர்களுடன் இணைந்து உருவான பிரிவுதான் பிராமணர்கள் ஆரியர்கள் என்ற கோட்பாடு.
பகவத்கீதை வடிவமைப்பதற்கு முந்திய ஆதிஇயற்கை கடவுள், குலதெய்வ கடவுளுக்கும் நிலப்பரப்புத்துவ தேவையொட்டி உறுதிப்பட்ட எல்லா தெய்வங்களையும் ஒன்றோன்று பொருந்தும் முறையில் பரம்பொருள் கோட்பாடுகள் கிபி 4-ம் நூற்றாண்டில் தோன்றி வளரலாயிற்று.
அதற்கான முழு முதற் பரம்பொருட் கோட்பாடு சங்கரின் அத்வைதம் உயர்வடிவம் பெற்றது. பல்வேறு குலக்கடவுள்களை உள்வாங்கி ஆறு கடவுளை ஏற்றுக்கொண்டு ஆறுமதங்களை சனாதன நெறிக்குரியனவாக வடிவப்படுத்தி அக்கடவுள்களை சங்கரர் தனது மடத்தில் எழுந்தருளவும் செய்தார். அவையெல்லாம் மாயையுடன் இயைந்த பிரபஞ்சத்துத் தேவர்களே.
இவ்வாறு நிலப்பிரபுத்துவ தேவையை ஒட்டி உறுதிபட்ட வேலை பிரிவினையை, மனுதர்மம், பகவத்கீதை, சங்கரர் அத்வைதம் ஆகியன சனாதன ஆன்மீக தலைமை வலுவடை செய்ததோடு. ஜாதிகள் ஒவ்வொன்றுக்கும் தத்தமது தொழில்களை மாறுபாடின்றிச் செய்தொழுகும் வாழ்நெறிக்கு தெய்வஅங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தன.
அவ்வர்ணாசிரம நெறியைச் சமூகம் பிறழ்வின்றித் தொடர்வதற்கான கண்காணிப்பை அரசருக்கான பணியாக்கி அதற்கு ஏதுவாகக் கடவுளின் மனித உருவாக அரசர்கள் விளங்குவார் என்ற கருத்தியலை சனாதனிகள் விதைத்தனர்.
வர்ணங்கள் தமக்குள் கலந்து தூய்மை கேட்டு உறுப்பெற்றவையே ஆயிரக்கணக்கான ஜாதிகள் என்று மனுதர்மம் சொல்வதும். இனக்குழு கடந்த மணஉறவுகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. இனக் குழுக்களுக்கிடையே அகமணத்திற்கு மேலாக புறமணமும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இவ்வாறாக நிலவுடமை சமூகம் உறுதிப்படுவதற்கு முன் இருந்த நிலை மாறி நிலப்பிரபுத்துவ அமைப்பை கட்டிக் காப்பதற்காக தெய்வீக அங்கீகாரம் பெற்ற அரசு தொழில் ரீதியாக உழைப்பவர்களை நிலத்துடன் இறுகப் பிணைக்கப்பட்ட வம்சாவழியாக அரசு கண்காணிப்பை மேற்கொண்டது.
இவ்வாறாக நிலப்பிரப்புதுவ சமூகத்தில் அரசர், பூசர்கள் (பிராமணர்) ஆகியோரும் கைவினை சாதிகள் மற்றும் பண்ணையடிமை ஜாதிகளை ஒடுக்கி வந்தனர்.
ஜஜ்மானிய முறை:- 1936 இல் வெளியிடப்பட்ட வில்லியம் வைசரின் ஒரு கிராம ஆய்வு, இந்தியாவின் சாதி அமைப்புக்குள் உள்ள உறவுகளை பொருளாதாரக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்வதற்கான முதல் குறிப்பிடத்தக்க முயற்சியாகும். இந்திய கிராமங்களில்ஜாதிகளுக்கு இடையில் நிலவும் சமூக உறவுகளை வைசர் ஆராய்ந்து அதனை 1936இல் இந்து ஜஜ்மானிய முறை எனும் நூலாக வெளியிட்டார். ஜாதிகள் பலவும் பரிமாற்ற உறவுகளைக் கொண்டிருந்தன.மேலும் கிராமசமூக அமைப்புப்படி நிலைப்பட்டிருந்தாலும் அதன் அடிநாதமான உயிர்ப்பு ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பதாகும். பல்வேறு ஜாதி ஜனங்களிடம் வேறுபாடுகள் உள்ளன.ஆனால் சார்ந்து இருந்ததால் அவர்களை ஒன்றிணைக்கிறது. இவர்களிடம் நிலவும் பரிமாற்றம் உள்ளார்ந்தும், வெளிப்படையாகவும் நிகழ்கிறது.இவர்களுக்கிடையில் சேவைகளும் ஊழியங்களும் நடக்கின்றன. அவை அனைத்தும் சமமானவை சுரண்டலற்றவை. இவை மக்களுக்கு பரஸ்பர நிறைவை தருபவை என்றுவைசர் சொல்லுவது போல ஒவ்வொருவரும் மற்றொருவருக்கு பணியாற்றுகிறர்.ஒருவருக்கு எஜமானாக இருப்பவர் மற்றொருவருக்கு சேவகராக இருக்கிறார்கள் (வைசர் 1969 p10).
இத்தகையஆய்வுகளுக்குப்பின்னர்1950,1960களில் கிராமப்புறங்களில் அசமத்துவத்தின் பல்வேறு வடிவங்கள் ஆய்வு செய்யப்பட்டன.இருப்பினும் அந்த ஆய்வுகளும் ஜாதிகளுக்கு இடையே நடந்த பரிமாற்ற உறவுகளும் அவை செயலில் கொண்டிருந்த ஒருங்கிணைப்பையும் ஆராய்ந்தன.
கிராமப்புற வாழ்வில் சமயம் சடங்குகள் சேர்ந்த மரபுகளே சமூகச் சட்டகத்தை பெரிதும்வடிவமைக்கின்றன.இருப்பினும் இவற்றுடன் நிலவுடமை போன்ற மதசார்பற்ற கூறுகளும் செயலாற்றுகின்றன.
முடிதிருத்துபவர்கள் மற்றும் தச்சர்கள் போன்ற சேவைகளை வழங்குபவர்கள், பரம்பரைத் தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும்,அவர்கள் ஒரு கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவருக்கும் அல்ல,மாறாக ஒரு குறிப்பிட்ட குடும்பம் அல்லது குடும்பங்களின் குழுமற்றும் வழங்குநர்கள்(கமீன் அல்லது காமின்)மற்றும் பெறுநர்களுக்கு இடையேயான உறவை மேற்கொள்கின்றனர். (ஜஜ்மான்) தலைமுறை தலைமுறையாக நீடித்தது. எனவே, இந்த அமைப்பு ஒரு முதலாளி-பணியாளர் மாதிரியை விட புரவலர்-வாடிக்கையாளர் மாதிரியை நிலைநிறுத்தியது,சேவை வழங்குநர்கள் பொதுவாக திறந்த சந்தையில் செயல்பட முடியாது.தங்களுக்குஇடையே,கமீன்கள் பண்டமாற்று அல்லது வேறு சில சம மதிப்பு பரிமாற்ற முறையின் அடிப்படையில் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வர்த்தகம் செய்தனர்.ஜஜ்மானி அமைப்பு கிராமங்கள் தன்னிறைவு பெற்ற பொருளாதார நிறுவனங்களாக இருக்க உதவியது, அவை வாழ்வாதாரத்திற்காக நிலையான முறையில் இயங்குகின்றன,மாறாக மற்ற இடங்களில் பொருளாதார உற்பத்தியின் வளர்ச்சி மற்றும் பரிமாற்ற நோக்கத்துடன் இயங்குகின்றன.
1950களின் பிற்பகுதியிலும் 1960களின் முற்பகுதியிலும் இந்த அமைப்பின் கல்விசார் ஆய்வுகள் ஏராளமாக இருந்தன. மேலும் இது 1970களில் இந்தியாவின் கிராமப்புறங்களில் இருந்ததாக இன்னும் தெரிவிக்கப்பட்டது. (ஆங்கில நூல் The Hindu Jajmani System).THE HINDU JAJMANI SYSTI A Sociology-ECONOMIC SYSTEM INTERRELATING MEMBERS OF A HINDU VILLAGE COMMUNITY IN SERVICES WILLIAM Hen Ricks WISER, M. A., Ph. D. (Co-author “Behind Mud Walls in India”LUCKNOW PUBLISHING HOUSE Lucknow, U. P. India 1936).
No comments:
Post a Comment