மார்க்சியம் என்பது இயக்கவியல் பொருள்முதவாதம் மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதம் என்ற தத்துவ அடிப்படையை கொண்டது.
ஆக ஈழ போரின் உண்மையை விளங்கிக் கொள்ள அதன் அரசியல் பொருளியல் சமூக பின்னணியை வரலாற்று அடிப்படையில் ஆய்வு செய்யாமல் தான் தெரிந்தவர்கள் அல்லது தான் சார்ந்த அமைப்பு சார்ந்தவர்கள் எழுதியவற்றை மட்டுமே நம்புவது கருத்துமுதல்வாதம் அவை மார்க்சிய இயங்கியல் இல்லை என்பேன்.
ஆக உண்மையில் மார்க்சிய மாணவர்களாக விவாததிற்கு அழைக்கிறேன்.
போரென்றால் வெற்றி மட்டுமே இல்லை தோல்வியையும் அதனுடன் கொண்டதே ஆக அதனுடன் பல தவறுகள் நடைபெறவும் சாத்தியம் உண்டு அதனை சரி செய்ய சரியான தலைமையால் மட்டுமே முடியும் ஆக கொடுங்கோளன் சிங்கள ஆட்சியாளரும் போராட்டகாரனையும் ஒன்றுபடுத்தி இகழ்வதை எந்தவகையிலும் ஏற்க முடியாது.
ஈழத் தமிழர்களின் அரசியல் தலைமைகளின் சத்தியாகிரக போராட்டத்திற்கு 1958 இனக் கலவரத்தின் மூலம் சிங்கள மேலாதிக்கு ஆட்சியாளர்கள் வன்முறை தான் வழி என்று பதில் அளித்தனர்.அதன் பின்னர் பல்வேறு சாத்வீக வடிவங்களிலும் தொடர்ந்து ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயத்திற்கான போராட்டங்களுக்கு அடக்குமுறை மூலமே சிங்கள ஆட்சியாளர்கள் எப்போதும் தீர்வு காண முனைந்தனர்.
தேர்வுக்கு வேறு வழி ஒன்றையும் கொண்டிராத தமிழ் ஆட்சியாளர்களை ஒரு கட்டத்தில் ஓரம் கட்டி விட்டு புறப்பட்டனர் தீவிரவாத தமிழ் இளைஞர்கள்.
1974 சிங்கள ஆட்சியாளர்களால் அடிக்கப்பட்டதும் 1981 இல் யாழ் நூலகம், நாச்சியார் கோயில், பூபாலசிங்கம் புத்தகசாலை, ஈழநாடு பத்திரிகை காரியாலயம் எனத் தேடித் தேடி எரித்த அழிக்கப்பட்ட தமிழர்கள் அறிவியல் பண்பாட்டு கருவூலங்கள் என இவ்விரண்டு துன்பவியல் வரலாற்று நிகழ்வுகள் தீவிரவாத இளைஞர்களை விடுதலைப் போராளிகளாக மாற்ற துணை செய்தன. 1983 இனக் கலவரம் முன்னெப்பொழுதும் இல்லாத அளவு தமிழ் இளைஞர்களை தீவிரவாத நடவடிக்கையில் நாட செய்தது. போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்ற சிங்கள பெரும்பான்மையின் குரல் ஜே ஆர் ஜெயவர்த்தன என்ற ஒரு சிங்கள அரசு தலைவனின் வாயிலிருந்து வெளிவந்தது. தமிழ் இளைஞர்களை சீண்டி போருக்கு அழைத்தது. அன்று தொடங்கிய ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பல வெற்றிகளையும் தோல்விகளையும் இழப்புகளையும் சந்தித்து.
ஒரு வீரம் செறிந்த போராட்டம் ஆயிற்று பல இளைஞர்களை மாவீரர்களாகியது சிலரை துரோகிகளாகிற்று, விடுதலை அமைப்புகளுக்கிடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்கிய அபாயகரமான நிலைக்க இட்டு சென்றது. இறுதியில் மக்கள் ஆதரவும் ஆயுத பலமும் அதிகமாகக் கொண்டிருந்த ஒரு போராளிகள் அமைப்பு தானே தனித்து ஈழப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்தது.
இதன் பயனாக ஆரம்பத்தில் போராட்டத்தில் தூய சிந்தனையுடன் இணைந்திருந்த மாற்று இயக்கத்திலிருந்த பல தமிழ் போராளிகள் தமக்கிடையே ஒற்றுமை குலைந்தனர். சிலர் இந்திய அரசுடன் சேர சில ஸ்ரீலங்கா அரசுடன் சேர்ந்தனர். சிலர் போராட்ட களத்திலும் அரசியல் களத்திலும் இருந்து ஒட்டுமொத்தமாக விலகிப் போயினர்.
நமது தோழர்கள் புலி எதிர்ப்பில் ஆதரவில் பிரிவினை கொண்டுள்ளனர் அவர்கள் புரிதலுக்காக கீழ்காணும் இணைப்பில் மூன்று நூல்களை இணைத்துள்ளேன் வாசித்து விவாதிக்க அழைக்கும் அதே வேளையில் சற்று போர் பற்றி மார்க்சிய புரிதலை உள்வாங்குங்கள் என்பேன்.
தோழர் லெனின் 'சோசலிசமும் போரும்' என்ற நூலில்,"இன்றைய போர் ஓர் ஏகாதிபத்திய போர். இந்த போர் இன்று நடைபெற்று வரும் போர் ஒரு ஏகாதிபத்திய போர் என்பது அநேக அனைத்து இடங்களிலும் ஒப்புக்கொள்ளப்படுகின்றது . எனினும் பெரும்பாலான இடங்களில் இந்த சொல்லின் பொருள் திரிக்கப்படுகிறது. அல்லது ஒரு சாராருக்கு மட்டுமே கொடுக்கப்படுகின்றது" என்கிறார்.
மேலும் "அதே நூலில் ஏகாதிபத்தியம் உள்ளவரை போரைத் தடுக்க முடியாது. சமூகம் வர்க்கமாக பிளவுண்டு கிடக்கும் வரை சமூகத்தில் போர் தவிர்க்க முடியாது".
"தேசியங்களுக்குள், அவற்றுக்கிடையில் நடைபெறும் போர்களை காட்டுமிராண்டித்தனமானவை, அதை முரட்டுத்தனமான கொடூரமானவை என்று கூறி சோசலிஸ்ட்கள் எப்போதுமே அவற்றை கண்டனம் செய்து வந்துள்ளனர். எனினும் போரை பற்றி நாம் கொண்டுள்ள போக்கு பூர்ஷ்வா சமாதானவாதிகளிடையே (சமாதானத்தின் ஆதரவாளர்கள் அது வேண்டும் என்று சரியானது என்று எடுத்துரைக்க அதற்கான வாதி போர் ஆகியோருடைய) போக்கினின்று அடிப்படையில் மாறுபட்டது .அராஜவாதிகளுடைய போக்கின்றும் அடிப்படையில் மாறப்பட்டது. நாட்டிற்குள் நடக்கும் வர்க்க போராட்டத்திற்கும் போர்களுக்கும் உள்ள தவிர்க்க முடியாத தொடர்பினை நாம் அறிந்து புரிந்து கொண்டுள்ளோம் என்ற விஷயத்தில் நாம் முன்னர் குறிப்பிட்டவர்களிட மிருந்து பூஷ்வா சமாதானவாதிகளிடமிருந்து மாறுபட்டவர்கள் வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டு சோசலிசம் படைக்கப்பட்டால் இன்றி போர்கள் ஒழிக்க முடியாது என்பதை நாம் அறிந்து கொண்டுள்ளோம். மேலும் உள்நாட்டுப் போர்களை அதாவது ஒடுக்கப்பட்ட வர்க்கம் ஒடுக்கும் வர்க்கத்தினை எதிர்த்து நடத்தும் போர்கள் , அடிமைகள் அடிமை உடைமையாளர்கள் எதிர்த்து நடத்தும் போர் ..... ஆகிய போர்கள் முற்றிலும் முறையானவை முற்போக்கானவை தேவையானவை என்று நாம் கருதுகிறோம். ஒவ்வொரு போரினையும் அதன் வரலாற்றியல் அம்சத்திலே (மார்க்ஸ் அவர்களுடைய முரண்பாட்டியல் பொருள் முதல் வாதத்தின் நோக்கு நிலையில் இருந்து) தனித்தனியாக ஆராய்ந்து அறிய வேண்டும் என்று நாங்கள் கருதுவதில்லை. அனைத்து போர்களும் தவிர்க்க முடியாத வகையில் வரும் குரூங்கள் கொடுமைகளும் வேதனைகளும் துயர்களும் கோரங்களும் இருந்தபோதிலும் முற்போக்காக இருந்து அதாவது மிகவும் தீங்கிழைத்து வந்த பிற்போகன ஸ்தாபனங்களை உதாரணமாக ஒரு தனி மனித தன்னிச்சையாக ஆட்சி அதிகாரத்தை ஒழிப்பதற்கு உதவி செய்த மனித வர்க்கத்தின் வளர்ச்சி நன்மையை பயத்த போர்கள் கொடுங்கோன்மை ஆட்சியை ஒழிப்பதற்கு உதவிய மனித வர்க்கத்தின் வளர்ச்சிக்கு நடந்த கடந்த கால போர்கள் எடுத்து பரிசீலனை செய்ய வேண்டும் ஆராய வேண்டும்" என்கிறார்.
ஏகாதிபத்திய காலகட்டத்தில் முதலாளித்துவமானது தேசியங்களை ஒடுக்கும் ஒடுக்கலின் மிகப்பெரிய ஒடுக்கல்காரனாக மாறிவிட்டது முன்னாள் முற்போக்கு இயல்புகளில் இருந்த முதலாளித்துவம் இப்போது பிற்போக்கு இயல்பு பெற்றுவிட்டது. நிலமானிய முறையை எதிர்த்து போராடிய போராட்டத்தில் தேசங்களை விடுவிக்கும் விடுதலையாளனாக இருந்த முதலாளித்துவம் இங்கே பிற்போக்கு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது என்கிறார் லெனின்.
தேசியங்களை ஒடுக்கி வரும் அனைத்துவித ஒடுக்கல்களையும் எதிர்த்து போரிடாமல் சோசலிஸ்ட்கள் தம்முடைய மாபெரும் லட்சியத்தை சாதிக்க முடியாது. ஆகவே ஒடுக்கும் நாடுகளில் உள்ள சமூக ஜனநாயக கட்சிகள் ஒடுக்கப்பட்ட தேசியத்தின் சுயநிர்ணய உரிமைக்காக அதன் அரசியல் பொருளியல் விசேஷமாக அதாவது அரசியல் வகை பிரிந்து போகும் உரிமை என்பதை ஏற்று அதற்கு ஆதரவாக முன் இருக்க வேண்டும் என்பது எவ்வித ஐயத்திற்கு இடம் இன்றி கோர வேண்டும். இந்த உரிமைக்காக நிற்காதவர் போர் வெறியன் ஆவான். (அதே நூல் பக்கம் 40).
பி.பி.சி செய்தியாளரின் பார்வையில் ஈழப் போர் PDF வடிவில்
மூள்ளிவாய்காலுக்கு பின் தொடரும் போராட்டம் PDF வடில் நூல்.pdf
புலிகளுடன் 28 நாட்கள் நூல் PDF வடிவில்
No comments:
Post a Comment