சமூக மாற்றத்திற்கும் பண்பாட்டுக்குமான இடைவினையைப் புரிந்துகொள்ளும் அதே வேளையில், இச்சமூக மாற்றச் செயல் முறையில் பாதிக்கப்படும் மக்களுக்கான சரியான புதிய பண்பாட்டினை உருவாக்கும் சிந்தனைக் கருவூலங்களை உருவாக்க வேண்டியது புரட்சியை நேசிப்போரின் கடமையாகும்.
உலகமயமாக்கலுக்கும் தாராளமயமாக்கலுக்கும் ஆதரவான நிலைப்பாடு பண்பாட்டின் வழி மிகப் பெரிய அளவில் நுழைந்து சமூகச் சீரழிவை வேகப்படுத்திகொண்டிருக்கும்சூழ்நிலையில்நாம்இன்றுவாழ்கின்றோம். பண்பாடு. உலகமயமாக்கலின் முகமூடியாகவும் அதே நேரத்தில் அதன் வாளாகவும் செயல்படுகிறது. முதலில் அது மேலாதிக்கம் செலுத்தும் வகையிலும் இரண்டாவதாக, அது பன்னாட்டு மூலதன விரிவாக்கத்திற்கு உதவிடும் வகையிலும் செயல்படுகிறது.
மேலும், இதைப் புரிந்து கொள்வதற்கு பண்பாடு என்பது எந்த அர்த்தத்தில் இங்கே குறிக்கப்படுகிறது. மேலாதிக்கம் என்பதற்கு பொருள் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கே பண்பாடு என்பதை வெறும் கலை. இலக்கியம் மட்டுமே என்று புரிந்து கொள்ளக்கூடாது. அது மக்கள் சமூகத்தின் வாழ்வுமுறைகள் அனைத்தையும் குறிக்கிறது. நமது உடைகள். உணவு பழக்கங்கள். நாம் வாழும் வீடு எல்லாமே பண்பாட்டின் வெளிப்பாடுகள்.
வாழ்க்கையின்வெற்றி,அழகுபற்றியநமதுகருத்துக்கள்எல்லாமே பண்பாட்டின் வெளிப்பாடுகள், கலை, இலக்கியம் இந்த அர்த்தங்களைவெளிப்படுத்துகிறது. அவற்றிற்கு உருவகம் கொடுக்கிறது. நல்ல கலை இந்த அர்த்தங்களை கேள்விக்கு உட்படுத்துகிறது.
மேலும் பண்பாடு நமது குடும்பங்களில் சமூக குழுக்களில், கல்வி நிலையங்களில் தொடர்பு ஊடகங்களின் மூலமாக ஒரு விமர்சனமற்ற முறையிலும் உணர்வுபூர்வமற்ற முறையிலும் நம்மை வந்து அடைகிறது.
இதை மேலும் புரிந்து கொள்வதற்கு பண்பாட்டிற்கும் அரசின் கொள்கைக்கும் மேலாதிக்கத்திற்கும்உள்ளஉறவைபுரிந்துகொள்ளவேண்டும். உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் அடிப்படையில் அந்நிய மூலதனத்திற்குள்ள சில தடைகளையும் கட்டுப்பாடுகளையும் அகற்றுவதையே நோக்காக கொண்டவை.
தொழில் முதலாளிகளின் மிக உச்ச லாபத்திற்கு உரிமை அளிப்பதே இதன் அர்த்தமாகிறது. இப்படிப்பட்ட சுதந்திரமான சந்தையில் அதிக ஆதாரங்களை உடையவர்களே, குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களும் பெரும் முதலாளிகளுமே பெரும் ஆதாயம் அடைவார்கள், ஏழைகள் பாடோ சொல்ல வேண்டியதில்லை.
ஆளும் வர்க்கம் அதன் அதிகாரத்தை முழுச் சமூகத்தின் மீதும் இரண்டு விவாதங்களில் செலுத்துகின்றன.
ஒன்று - ஆளும் வர்க்க அரசு, மற்றும் அதன் அங்கங்களான காவல்துறை, இராணுவம். சட்டங்கள் மூலமாக பலாத்காரத்தை பிரயோகிக்கின்றன.
இரண்டாவதாக ஆளும் வர்க்கத்தின் இந்த அதிகாரம், ஆளப்படுபவர்களின் ஒப்புதலோடு அல்லது பலத்காரமாக திணிக்கப்பட்டோ அவர்கள் மீது செலுத்தப்படுகிறது.
முதலாளித்துவ சமூகத்தின் உறவுகளை அதன் அடிப்படையான கூறுகளான மூலதனத்திற்கும் உழைப்பிற்கான இடைவினையை புரிந்து கொள்வதன் வழிதான் உணரமுடியும். இந்த சமூக உறவுகள் பல்வேறு அமைப்புகள். நிறுவனங்களில் பொதிந்துள்ளன. மத நிறுவனங்கள். அரசியல் கட்சிகள். தொழிற்சங்கங்கள். வெகுஜன அமைப்புகள், கல்வி நிறுவனங்கள். சுகாதார அமைப்புகள், பண்பாட்டு ஸ்தாபனங்கள் போன்றவற்றில் இவை வேர்விட்டுள்ளன.
இதுதானே காலனியாதிக்கத்தின் அர்த்தமும் பிரிட்டனின் காலனியாக நாம் இருந்தபொழுது நமது சந்தைகள் அவர்களுக்காக திறந்துவிடப்பட்டது. அவர்களுக்கு தேவையான எந்த கச்சா பொருளையும் அவர்களே எடுத்துச் செல்லலாம். அவர்கள் நிர்ணயித்த விலையில் எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் நினைத்த கம்பெனிகளை திறந்து கொள்ளலாம். அவர்களுக்கு வேண்டிய எந்த பொருளையும் இங்கே விற்கலாம். காலனி ஆதிக்கம் பலாத்காரத்தோடு அதிகாரத்தை கைப்பற்றியது.
உலகமயமாக்கல் இன்று பண்பாட்டின் ஊடாக நடந்தேறி வருகிறது. மின்னணு (electronic) ஊடகங்களின் மூலமாக தொலைக்காட்சி மூலமாக இது ஊடு பரவுகிறது.
நமது மத்தியதர வர்க்கத்தின் கலாசாரதை புரிந்து கொள்ள முயற்சிப்போம். தங்களுக்கு தேவையான மிக முக்கியமான தேவைகளையும் புறந்தள்ளிவிட்டு மற்றொரு பொருளை அடைவதற்கான முயற்சியே நுகர்வியம் - consumerism.
ஒரு டெலிவிஷன் அல்லது வாஷிங்மிஷின் வாங்குவது என்பது அடிப்படையில் நுகர்வியம் ஆகிவிடாது.ஆனால், இதைப் பெற்றிடும் முயற்சியின் போது, அதைவிட ஒரு முக்கிய செலவை, தேவையை புறக்கணிக்கும் பொழுது (உதாரணத்திற்கு ஒழுகும் வீட்டை சரி செய்ய அல்லது மகளின் கல்விக்கான செலவை தள்ளிவிடும்போது நுகர்வியம் ஆகிறது.
தேவையற்ற போலித் தேவைகளை உருவாக்கி கொள்வது - தான் வாழும் சமூக குழுக்களிடையே ஒரு பொருளை உபயோகிக்கும் திருப்தியில்தான் நுகர்வியம் அடங்கி உள்ளது.
உலகமயமாக்கல் இப்படிப்பட்ட நுகர்வுப் பொருட்களை பெரும் அளவிலும் தரத்திலும் அதிகரிக்கச் செய்வதும். வரவேற்பதும் இந்த பகுதியினருக்கு அவசியமாகிறது.
உலகமயமாக்கல் இங்கே இவர்களின் தேவையையொட்டி நியாயப்படுத்தப்படுகிறது.
இதைத் தவிர உலகமயமாக்கல் சில குறிப்பிட்ட விழுமிய கட்டமைப்புக்களை (value structures) கொண்டு வருகிறது. ஒருவன் செல்வந்தனாக இருப்பது மிக உன்னதமாக கொள்ளப்படுகிறது.
எப்படியாயினும் செல்வம் சேர்ப்பது - எந்த வகையிலேனும் சேர்ப்பது என்பது வெற்றியின் அளவுகோலாக உள்ளது. இந்த விழுமியங்கள் வர்க்கங்களை கடந்து ஆட்டிப்படைக்கிறது. அது சமூகத்தின் எல்ல பிரிவினரையும் சென்று தாக்குகிறது. அவர்களை பாழ்படுத்தி துரிதமாகவும் மிக விரைவிலும் செல்வந்தனாக மாறுவதற்கான போட்டியில் அவர்களை தள்ளி விடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஊழல் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதியாக மாறியுள்ளது.
இன்று TV, இருந்த இடத்தில் எல்லோர் கையிலும் உள்ள சிமார்ட் போன் என்ன செய்துக் கொண்டுள்ளது என்பதனை நான் பேசுவதை விட கனவுகளிலில் வாழ சொல்லும் சின்னதிரை என்றால் குழந்தைகளையும் இந்த ஸ்மார்போன் எப்படி ஆட்கொண்டுள்ளது குழந்தைகளை வளர்க்கும் பெற்றோருக்கு தெரியும்.
நவீன வாழ்வில் தொலைக்காட்சி/ஸ்மார்க் போன் இன்றைய அதிவேக தகவல் தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி ஆழவேர்விட்டுள்ளது எங்கும். தனிமனிதர்களின் வாழ்க்கை, நடத்தை, உளச்சார்பு என்பவற்றில் அது மிகுந்த செல்வாக்கினைச் செலுத்துவதுஇறது.
அறிவியலின் அற்புதமாத்தான் இவை, தேசங்களின் எல்லைகளைக் கடந்து, உலக கிராமமாக இன்றை வாழ்வை மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
உண்மையில் தொலைக்காட்சி அனுபவம் எப்படி உள்ளது?
மின்சாரக் கனவுகள்- அறிவியல் - சமூக மேம்பாட்டுக்கான ஆக்க சக்தியாக விளங்கவேண்டிய தொலைக்காட்சி, வெறும் மின்சாரக் கனவாகக் கலைந்து போகும் துயரம் மிகமிகக் கொடுமையானது. தொலைக்காட்சியோடு கைகோர்த்தபடி ஸ்மார்ட்போன் இன்று நம் வீட்டுக்குள் - அறைக்குள் குடியேறி விட்டது. கண்டறியாதன கண்டு,மறந்தனவெல்லாம் வாய்த்த மகிழ்ச்சியில் கனவுப் பயணங்களாகத் தொடர்கின்றன. தமது இருப்பே கேள்வியான அவலங்களைமறந்துபோக, வீடியோ தரும் கனவுகளை யதார்த்தமாய்க் கண்டுகளிக்கும் இந்நிலை நம்மை எங்கே கொண்டுபோய் விடும்?
தொலைக்காட்சியைப் பார்ப்பதென்பது இன்று ஒரு சடங்காகப் போய்விட்டது. மிக அத்தியாவசியமான ஒன்றாக, எதைப்பார்ப்பது எதைத் தவிர்ப்பது என்ற கட்டுப்பாடுகள் எதுவுமின்றி. எதையாவது பார்த்துக் கொண்டிருத்தல் என்றாகிவிட்டது.
நமது நிலை.?
திறந்த பொருளாதாரக் கொள்கையின் வழி, எல்லாமே திறந்து விடப்பட்ட நிலை. இந்த விதச் சமூகச் சீரழிவு அம்சங்களைப் பொறுத்தவரை மட்டும் தாராள மனித உரிமை கிடைக்கிறது. ஒரு விதத்தில் மக்கள் இவ்வாறான மயக்கங்களுக்குட் கிடப்பது பலருக்கும் விருப்பமான சங்கதியாகவும் அமைகின்றது. சர்வதேச ரீதியில் நவகுடியேற்ற வாதத்தின் செயற் பாட்டிற்கு இந்த ஊடகம் பெரிதும் துணை போகிறது. தேசிய மட்டத்தில் மக்கள் விழிப்புணர்வு மழுங்கப்பட இது மயக்க மருந்தாகிறது.
என்ன செய்யலாம்?
மக்கள் விழிப்புணர்வுக்கான வழிகளைக் கண்டாலன்றி உய்வதற்கு வேறுவழியில்லை. வர்த்தக நோக்கம் ஒன்றையே கொண்ட தொலைக்காட்சிப் பெட்டி உற்பத்தியாளர் தொடக்கம், தொலைக்காட்சி நிலையத்தார் வரை, சினிமா உற்பத்தியாளர் முதல் விநியோகத்தர் வரை நமக்க உதவப் போவதில்லை.
தனி மனிதரின் குறையாக இதனைச் சொல்லிச் சொல்லி இந்த நோய்க்குச் சமூக அங்கீகாரம் தரும் நமது அவலமே முதலில் உணரப்படவேண்டியது. ஒரு விழிப்புணர்வுள்ள சமூகத்தில் இந்த மாயச் சரக்குகள் விற்பனையாக முடியுமா?
‘உலகில் மிகச் சிறந்த கல்வி வாய்ப்புகளைப் பெற்றவர்கள், கணித மூளை கொண்டவர்கள். என்றெல்லாம் பெருமைப்படும் நமது சமூகம் அடிப்படையான பண்பாட்டு உணர்வை இழந்து போனமையை உணர்ந்து கொள்வதில் இனியும் காலந் தாழ்த்துதல் முடியாது. இழந்துபோன மனித முகங்களை மீட்டெடுப்பதில் விழிப்புணர்வு கொண்ட மக்கள் முதலில் ஒன்றிணைந்து கொள்ளவேண்டும். இவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த இழிந்த கனவுக்காட்சிகள் தொடர்பான விமர்சனக் கல்விக்கான ஏற்பாடுகளைக் காணவேண்டும்.
கூட்டாக ஒரு திரைப்படத்தை வீடியோவிற் கண்டு - அதன் உள்ளடக்கம் - அது சொல்லும் செய்தி - சொல்லப்பட்ட விதம் என்பவற்றைப்பற்றி, அடிப்படையான வினாக்களை எழுப்பி, மனித மாண்பும் சமூக விழுமியங்களும் அங்கு எவ்வாறு சிதைக்கப்படுகின்றன என்பது உணரப்படல் வேண்டும். இவ்வாறாகக் கூடிக்காணும் விழிப்புணர்வு நாளடைவில் சமூக முழுமையையும் தொற்றிக் கொள்ளும்போது பண்பாட்டு மேன்மை இயல்பாய்க் கைகூடும். காண்பதில் தாமாக நல்லதை எடுக்கட்டுமே எனும் எல்லாம் திறந்த மேம்பாடு என்பது, வக்கிரமான சமூக உருவாக்கத்திற்கே வழிவகுக்கும்.
அடுத்தது - நாமாக இந்த ஊடகத்தைப் பயன்படுத்தி, நல்லது இது எனக்காட்டும் முயற்சி. இன்று இந்தக் காட்சிச் சாதனங்கள் மட்டுமன்றி, இந்தக் காட்சிகளை ஆக்கும சாதனங்களும் கூட நம் வசம் உண்டு. பூப்புச் சடங்கிலிருந்து செத்த வீடுவரை காட்சிப் படுத்தல்கள் விமரிசையாக நடக்கின்றன. அங்கும் கூட இந்த இழிந்த சினிமா வக்கிரங்களின் பின்னணியின் ஆதிக்கத்தையே காண முடியும். இவை புரிந்துக் கொள்ள மக்களோடு இயைந்து பயணித்தல் அவசியம் அன்றோ?வாழ்வைச் சினிமா ஆக்கும் அவலமே மிஞ்சும் அல்லவா?.
பண்பாட்டுப் புலங்களில் அற்புதமான கலைப்படைப்புகள், காலத்தால் அழியாதனவாய் நிலை பெறுதலும் கண்கூடு. இவையெல்லாம் வழிகாட்ட இனி ஒரு விதி செய்யும் உறுதியைக் கொள்வோம்.
தொடரும்....
No comments:
Post a Comment