உயிர், மனித குலம் வளர்ச்சி

 உலகைப் பற்றிய விஞ்ஞான ரீதியான கருத்தே மார்க்சியம் நாம் வாழும் உலகம் அந்த உலகின் ஒரு பகுதியாகி மனித சமூகம் ஆகியவைகளில் பொது தத்துவம்.

காரல் மார்க்ஸ் பெயரில் இருந்து பிறந்ததுதான் மார்க்சியம் எங்கெல்சும் சேர்ந்து கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த தத்துவத்தை உருவாக்கினார். மனித சமுதாயம் இன்றைய நிலையில் இருக்க காரணம் என்ன ? அது ஏன் மாறுகிறது இன்னும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? என்பன போன்ற விவரங்களை கண்டு பிடிக்கும் வேலையில் அவர்கள்  ஈடுபட்டனர்.  நீண்ட ஆராய்ச்சியின் பலனாக இந்த மாற்றங்கள் வெளி இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் போன்று தற்செயலான அல்ல . இவை சில நியதிகளை பின்பற்றுகின்றன என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

மனித குலத்தின் வரலாறு

 

மார்க்சியம் என்பது நாம் வாழும் உலகையும்அதன் அங்கமான மானுட சமூகத்தையும் குறித்த ஒருபொதுவான கோட்பாடாகும்அல்லது சித்தாந்தமாகும்இந்த சித்தாந்தத்திற்கு அடிப்படை இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல் வாதம் என்ற தத்துவம் ஆகும்மார்க்சிய சித்தாந்தமானது மனித சமூகம் என்றால் என்னஅது ஏன் மாறுகிறதுஇதற்கு மேலும் என்னென்னமாற்றங்கள் மனிதகுலத்திற்கு ஏற்படப்போகிறதுஎன்பதைதொடர்ந்துகண்டறிவதற்குபயன்படும்சித்தாந்தமாகும்இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் தற்செயலானவை அல்லஅவை சில நுண்ணிய விதிகளின் அடிப்படையிலேயே மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை இயற்கை பற்றிய விஞ்ஞானங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறதுஅது போலவே சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களும் சில நூண்ணிய விதிகளின் அடிப்படையிலேயே ஏற்படுகிறது என்றும் அந்த பொதுவான விதிகளை மார்க்சியம் கண்டறிந்து சமூகத்தை மாற்ற விரும்புபவர்களுக்கு முன்னால் வைத்துள்ளதுசமூக மாற்றத்திற்கான பொதுவான காரணம் என்ன?  எந்த அடிப்படையில் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன என்ற பொதுஉண்மையை,  பொதுவான வழிகாட்டுதலையை,  பொதுவான கண்ணோட்டத்தை மார்க்சியம் வழங்குகிறது. இந்தபொதுவான கண்ணோட்டத்தை உள்வாங்கி அதன் அடிப்படையில் குறிப்பான சமூகத்தின் அல்லது குறிப்பான நாட்டின் சூழல்களை ஆய்வு செய்து குறிப்பாக சமூக மாற்றத்திற்கான கொள்கை திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று மார்க்சியம் வலியுறுத்து கிறதுஆகவே மார்க்சியமானது நிரந்தரமான வறட்டுசூத்திரங்களை முன்வைக்கவில்லை மாறாக குறிப்பான பிரச்சனைகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கான பொதுவானவழிகாட்டுதலையும் கண்ணோட்டத்தையும் வழங்குகிறது.

ஆக நமக்காண கல்வி அவசியம் ஆழமாக வேண்டும்.

உயிர் எப்படி தோன்றியது?-புராதன காலமுதல் உயிரின் தோற்றத்தைப்பற்றி மனிதன் சிந்தித்து வருகிறான். இக்கேள்விக்கு விடைகாண்பதற்கு மனப்பூர்வமாக முயலாத தத்துவாசிரியனோ தத்துவமோ இல்லையென்றே சொல்லலாம். நமது அறிவு வளர்ச்சியின் ஒவ்வொரு காலகட்டத்திலும், இக்கேள்விக்கு பல்வேறு விடைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவையாவும், கருத்துமுதல் வாதம், பொருள்முதல் வாதம் என்ற இரண்டு உலகத் தத்துவங்களின் நீண்ட முரண்பாட்டைக் காட்டும்.

நம்மைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழ்நிலையை நாம் பொதுவாக இரு பிரிவாகக் காண்கிறோம். ஒன்று உயிருள்ளன. மற்றொன்று உயிரில்லாதவை.

உயிருள்ளனவற்றில் ஆயிரக்கணக்கான வகைகளுள்ளன. அவற்றுள் விலங்குகளும், செடிகொடிகளும் அடங்கும். ஆனால் மிகச்சிறிய உயிரணு முதல் உயிர்களுள் சிறப்புவாய்ந்த மனிதன் வரை எல்லா உயிருள்ளனவற்றிற்கும் சோதனைப் பொருள்களினின்றும் வேறு பொதுவான ஏதோ ஒரு தன்மையுள்ளது. அதுதான் உயிர்.

ஆனால் உயிரின் தன்மை என்ன? அதன் சாரம் யாது.... மற்ற புற உலகப் பொருள்களைப் போல உயிரும் பொருளின் ஓர் உருவமா, அல்லது மனிதனது அறிவிற்கு அப்பாற்பட்டது, அவனது அனுபவத்தால் உணர முடியாததுமான பொருளற்ற ஆன்மா - வா?

உயிரினங்களின் தோற்றம் பற்றி எழுதிய சார்லஸ் டார்வின் மனித குல வரலாறு பற்றி வருங்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தனது முடிவுகளை மேலும் தெளிவுபடுத்தும்என்றுகூறினார்.ஆனால் டார்வின் மனிதன் குரங்கிலிருந்து உதித்தான் எனக் கூறியதாக அவசொல்பெற்றார். பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை தவறாக புரிந்து கொள்பவர்களே இதுபோல் அவர் மீது குற்றம்சுமத்துகின்றனர். நாம் குரங்கிலிருந்து பிறந்தவர்கள் அல்ல, குரங்கு நம் மூதாதையர் என்றால் ஏன் இன்னும்குரங்குகள்குரங்குகளாகஇருக்கின்றனஅதாவது நாமும் நம் கொள்ளுப்பாட்டனும் எவ்வாறு சமகாலத்துவராக இருக்க முடியும்? குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு தாத்தா பேரன் உறவு அல்ல பங்காளி உறவு.அதாவது சித்தப்பா மகன், பெரியப்பா மகன்உறவினாகும் ஒரே வம்ச விருத்தியில் பல கிளைகளில் இரு கிளைகள் குரங்குகளும்ஆதி மனிதர்களும் ஆகும்.

vமனிதர்,ஆதிமனிதர்,மனிதக் குரங்குகள் மற்றும்  இதர வாலில்லா குரங்குகள் இவற்றை ஹோமினாய்டியா(Hominoidea)பேரினத்தைசேர்ந்தவை.இன்னும் சில ஆய்வுகள் சில வேறுபட்டகருத்துக்களைமுன்வைத்துள்ளது.ஆதாரம் சுகி ஜெய்கரன் அவர்களின் மூதாதையரை தேடிய நூலிலின் அடிப்படையில் பேசியுள்ளேன்).


450கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியிருந்தாலும் இதில் உயிரினங்களின் வளர்ச்சி என்பது சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன்  அஸோயிக் (Azoic) காலகட்டம். 150 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் கடற்பாசி புழு, நுங்கு மீன் போன்ற புரோட்டோரோசாசிக்(Proterozoic)காலகட்டம்ஆகும்.ஊர்வன இன்னும் பல்வேறு வகையான அதன் மூதாதையர்கள் 60-27 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றின. மிஸோஸோயிக் (Mesozoic)  என அழைக்கப்படும் ஜுராசிக் டைனோசர் காலகட்டமானது 22.5 லிருந்து 4 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.

மாடு, யானையின் முன்னோடி, குதிரைகளின் முன்னோடி, பன்றி, வாலற்ற குரங்குகளின் முன்னோடி,மலரும்தாவரங்கள்,நாய்,கரடி போன்ற விலங்குகளின் முன்னோடிகள் தோன்றி மறைந்த காலகட்டமானது 7 கோடி லிருந்து 2.5 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.

முதுகெலும்புள்ள பல விலங்குகள் இன்றில்லாத வாழ்ந்த காலம் 0.3 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகும். கற்ககால மனிதன் (Pleistocene) காலக்கட்டம் 0.2 லிருந்து 0.3 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவர்கள். 30 லிருந்து 20 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பணியுககாலம், பழைய கற்கால மனித வளர்ச்சி காலம் ஆகும்.

 

இவ்வாறு மனிதனின் வளர்ச்சி போக்கை அறியும் நாம் மனிதன் மூலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் அவன் விலங்கினத்தை சேர்ந்தவன் என்பதில் ஐயமில்லை. அவன் ஹோமோ செபியன் (Homo sapien) எனும் இனத்தை சார்ந்தவன். ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்று அடிப்படையில் ஒரே இனத்தின் எந்த ஆணும் பெண்ணும் கூடி இனப்பெருக்கம் செய்ய முடியும். இயற்கையின் இந்த நியதிப்படி அனைத்து மனிதர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள்.விலங்கு இனங்களின் சில வகையினம் வேறு வகையினதுடன் சில வேளைகளில் சேரக்கூடும், னால் அவ்வாறு சேர்ந்தால் அவற்றை வேறாகத் தெரிந்துகொள்ளலாம்; அத்துடன் அவை அநேகமாகக் கலந்த உருப்பெறுவதில்லை. னால் மனித வகைகள் அல்லது இனங்கள் பொதுவாகக் கலந்து உருவாகக்கூடியன. இவ்வாறு இனங்கள் கலப்பதனால் மலட்டுத்தன்மை எங்காயினும் உண்டாவதாகத் தெரியவில்லை. இன்று தூயஇனவாதம் பேசும் பலர் மறந்தே போனயிடம் இன்று வெவ்வேறு இனமாக காணப்படும் இவர்கள் முந்தைய நகர்வுகளில் கலப்புற்றுப் பிறந்தவர்களேயென்பதை இதிலிருந்து தெளிவாக நாம் புரிந்துக் கொள்ள முடியும் மனிதகுலமான ஒரே தொப்பூல் கொடி உறவுதான் என்பதனை.

அறிவியல் ஆய்வுகள் மனிதர்கள் விலங்கினத்தின் ஒரு வகை ஆனால் சில சிறப்பம்சங்கள் தனி வகை என்பதை உணர்த்துகின்றன.

சுருக்கமாகச் சொல்வதானால், மனிதர்கள் விலங்குளிலும் பார்க்க எளிதாக வும், காலநிலைகள், மற்றும் காரணங்களால் அதிஎளிதாக இடம் பெயர்ந்துவிடுவர்; மனிதர் தம் உணவு, உடைகள், உதவிக்கு வேண்டிய கருவிகள், மிருகங்கள் ஆகியவற்றைத் தேவைக் கேற்றவாறு மாற்றிக் கொள்வர். இத்தகைய திறமையும் வாய்ப்பும் விலங்குகளுக்கு இல்லை. அநேகமாக, வெவ்வேறு உபகரணங்களும் அமைப்புகளுமுள்ள தொகுதியான மனிதர் உலகில் ஆர்ட்டிக்கண்டம் தவிர்ந்த எனைய பகுதிகளிலெல்லாம் வசிக்கின்றனர். தேபோல் விலங்குகளும் இவ்வாறு எங்கும் பரந்துள்ளன வென்று சொல்லமுடியாது. மனிதருடன் சென்ற ஒரு சில மிருகங்கள் மாத்திரம் பரந்துள்ளன. மிருகவகைகள் தனிப்பட்ட இயல்புகளுள்ள தாயகங்களில் மாத்திரம் வசிக்கின்றன. மனித இனங்கள் பெயர்ந்து செல்லும் ஆற்றல் காரணமாக, உலகமெங்கும் பரந்தும், ஒன்றுடன் ஒன்று சேர்ந்தும் கலந்தும் பின்னிப்பிணைந்து விடுகின்றன.இப்பொழுதுள்ள மனிதவகைகள் யாவும் மனித இயல்புகளையே பெற்றிருந்த ஒருவகைப் பூர்வீக மனிதரிலிருந்தே வந்தவை என்பதில் இப்பொழுது சந்தேகமில்லை; உலகில் இங்குமங்குமாக இவர்கள் இடம்பெயர்ந்து முறையாக அப்பூர்வீக மனிதவகையினரிலிருந்து தோன்றியவர்களே இப்பொழுதுள்ள மனிதவகையினர். அவ்வகையான நகர்வில் இப்பொழுதுள்ள ஆபிரிக்க நீக்ரோகள், ஐரோப்பிய வெள்ளையர்; வட சீனவிலுள்ள மஞ்சள்நிற மக்கள், மற்றும் உலகெங்கும் சிதறுண்டுள்ள பல்வேறு வகையினர் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதை அறியக் கூடியவாறு அந்நகர்வுகள் பற்றி ஆராய்ந்தால் பல குழப்பங்களுக்கு விடை கிடைக்கலாம் ஆனால் இங்கு நமது தேடல் மனித இனம் ஆதியில் தோன்றியதிலிருந்து இன்றைய வளர்ச்சிவரை புரிதலுக்கே..

19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இந்நூற்றாண்டின் ஆரம்பத்திலும் உயிருள்ளன யாவும் மிகவும் சிக்கலான அமைப்புடைய உயிருடைய இயந்திரங்கள் என்று விஞ்ஞானிகள் நம்பினர். புரோட்டோபிளாசம், ஒளிக்கதிர்களைப் போன்ற கயிறுகளால் இணைக்கப்பட்ட திடப்பொருள் என்று அவர்கள் விளக்கினர். இயந்திரத்தின் வேலை சக்கரங்கள், அசையும் தண்டுகள் இவைப் பொருத்தப்பட்டுள்ள அமைப்பைப் பொறுத்திருப்பதுபோல புரோட்டோ பிளாசத்திலும் அதன் பகுதிகள் பரஸ்பரம் தொடர்பு படுத்தப்பட்டிருக்கும் விதமே உயிரின் சிறப்பான தன்மையென்றும் புரோட்டோபிளாசத்தின் அமைப்பைக்குறித்த ஆராய்ச்சிகளின் மூலம் அதனை நன்றாக அறிந்து கொண்டால் உயிரின் ரகசியத்தை அறிந்துகொள்ளலாம் என்று அவர்கள் கருதினர்.

இத்தகைய யாந்திரீகமான கண்ணோட்டம் தவறென்பதை செயல்முறை ஆராய்ச்சி நிரூபித்தது. மிகவும் சிக்கலான அமைப்புடைய இயந்திரத்தோடுகூட புரோட்டோபிளாசத்தை ஒப்பிடுவது தவறாகும். ஏனெனில் அதில் அத்தகைய அமைப்பு இல்லை புரோட்டோபிளாசத்தில் உள்ள பொருள்கள் திரவநிலையிலுள்ள பொருள்களாகும். புரதங்க்ள், கொழுப்புகள் போன்ற உயர்ந்த அணுக்கூட்டு எடையுள்ளபொருள்களைக் கொண்ட கோயசர்வேட் துளிகள் அதனுள் உள்ளன. நார் போன்ற துணுக்குகளும், புரத அணுக்கூட்டுகளும், கோயசர்வேட் பொருளில் மிதக்கின்றன. இத்துணுக்குகள் அளவில் சிறியன. மைக்ராஸ்கோப் வழியாகப்பார்த்தாலும் தெரியாது. அதன் வழியாகப் பார்த்தால் தெரியக்கூடிய சில பொருள்களும் உண்டு. நியூக்ளியம், பிளாஸ்டிட் என்ற வகையான குறிப்பிட்ட அமைப்பும், புரதம் முதலிய கூட்டணுக்களால் ஆகியதுமான பொருள்களை புரோட்டோபிளாசத்திலிருந்து பிரித்தெடுக்கலாம்.

எத்தனையோசிக்கலான உள்ளுறவுகளின் வெளி உருவமே புரோட்டோபிளாசம். அது மாறும் அமைப்புடையது. உயிர் நிகழ்ச்சிகளின் இத்தன்மை மிகமுக்கியமானது. இயந்திரத்தின் அமைப்பிலுள்ள திட்டத்தோடு இதன் அமைப்பை ஒப்பிட முடியாது. அவ்விரண்டும் ஒவ்வொரு அம்சத்திலும் வேறுபடுகின்றன.

இயந்திரத்தின் தனிப் பகுதிகள் இடைவெளியில் எவ்வாறு அசைகின்றன என்பதைப் பொறுத்து இயந்திரத்தின் முழு வேலையும் நிர்ணயிக்கிறது. பகுதிகளின் இணைப்புதான் இயந்திரத்தின் சிறப்பான அம்சம். உயிர் நிகழ்ச்சிகள் இயந்திர அசைவுகளினின்றும் முற்றிலும் வேறுபடுபவை. முதன்முதலில் புரோட்டோபிளாசத்தினுள் அதன் பல பகுதிகளிடையே ரசாயனமாறுதல்கள் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. பகுதிகளுக்கிடையே இடைவெளியில் உள்ள இணைப்பு இயந்திரங்களில் முக்கியமாயிருப்பதுபோல புரோட்டோபிளா சத்தில் முக்கியமானதல்ல. அதனுள் நடக்கும் ரசாயன மறுதல்களில் முதலில் நடப்பது எது, அடுத்து நடப்பது எது என்ற கால இடைவெளி வரிசையே சிறப்பான அம்சமாகும். அம்மாறுதல்கள் அனைத்தின் முழுமையே, உயிருள்ளனவற்றை நிலைத்திருக்கச் செய்கிறது.

யாந்திரீக வாதிகளின் கருத்திலிலுள்ள தவறு என்ன? (உடலினுள் காணப்படும் நிகழ்ச்சிகளை இயந்திரத்தின் பகுதிகளுக்கு முழுதும் ஒப்பிடுபவர்கள்) யாந்திரிக வாதிகள்,

புரோட்டோபிளாசத்தையும் அதன் அமைப்பையும் இயந்திரத்தின் அசைவு நிகழ்ச்சிகளோடு ஒப்பிடுகிறார்கள். இவற்றிடையே உள்ள வேறுபாடுகளை அவர்கள் ஒப்புக் கொள்வதில்லை. இயந்திரத்திலுள்ள பகுதிகளின் இடை வெளியமைப்பைப் போலத்தான், புரோட்டோபிளாசத்தின் அமைப்பும் என்று அவர்கள் கருதுகிறார்கள். முன்கூறியதுபோல இடைவெளி மட்டுமல்லாமல் காலத்தையும் கருதி அமைப்பை மனதில் கொள்ளவேண்டும். உதாரணமாக ஒரு பொதுக் கூட்டம் என்றால், கேட்பவர்களெல்லாம் வரிசையாக அமர்வது மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக் குறிப்பைப் பின்பற்றி முன், பின்னாக பேச்சுகள் அமைவதும் முக்கியமல்லவா?

இயந்திரத்தைப் பொறுத்தவரை இடைவெளியில் பகுதிகள் பொருத்தப்படுவதே மிகவும் முக்கியமானது. ஆனால் சங்கீதத்தில் காலம் முக்கியமானது. காலத்தில் கூடுதல் குறைதல் இன்றி ஒரு குறிப்பிட்ட வகையில் ஒலிகள் இணைந்தால்தான் அது இசையாகும். சிறிதளவு கால அளவு மாறினும், இசையின் இனிமை கெட்டுபோகும். இவ்வாறு ஒவ்வொரு அமைப்பிலும் இடைவெளி அல்லது அமைப்பு முக்கியத்துவமடைகிறது.

சிக்கலான உள்ளமைப்பு புரோட்டோபிளாசத்தின் அமைப்பில் முக்கியமானதுதான். ஆனால் புரோட்டோபிளாசத்திலுள்ள நிகழ்ச்சிகளின் முன்பின் வரிசையும், ரசாயன நிகழ்ச்சிகளின் முழுமையான விளைவுகளுமே அதைவிட முக்கியமானது. தாவரம், காய்கறி, நுண்ணுயிர் ஆகிய எந்த உயிருள்ளதும், புதிய துணுக்குகளை சூழலினின்றும் பெற்ற, தன்னுள்ளிருந்து வெளிவிடும்வரைதான் உயிரோடிருக்கிறது. இப்பொருள் மாற்றத்தோடு சேர்ந்து சக்திமாற்றமும் நிகழ்கிறது. சூழலினின்றும் பல்வேறு கூட்டுப் பொருள்கள் உயிருள்ளனவற்றினுள் நுழைகின்றன. அவை அதனுள் பல மாறுதல்களடைகின்றன. உயிருள்ளனவற்றின் உடலில் என்ன பொருள்களால் உண்டாக்கப்பட்டிருக்கின்றனவோ, அப்பொருள்களாக அவை மாறுகின்றன. இதற்குத்தான் சீரணம்என்று பெயர். இதனோடு

சேர்ந்தாற்போல் இதற்கு எதிரிடையான மாறுதலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. உயிருள்ளனவற்றிலுள்ள கூட்டுப் பொருள்களும் மாறாமல் நிலையாக இருப்பதில்லை. அவை சிதைகின்றன. அது மெதுவாக நடக்கலாம்; அல்லது விரைவாக நிகழலாம். புதிதாக உடலில் சீரணமாக பொருள்களை கிரகித்துக் கொண்டு, சிதைந்த பொருள்கள் நீக்கப்படுகின்றன. சூழலினுள் செலுத்தப்படுகின்றன.

உயிருள்ளனவற்றினுள்ளிருக்கும் பொருள்கள் மாறாமல் இருப்பதில்லை. அவை சிதைந்தும், புதிய பொருள்களால் ஈடுகட்டப்பட்டும் வருகின்றன. இத்தகைய ரசாயனக் கூட்டு மாறுதல்களும், சிதைவு மாறுதல்களும் இடைவிடாமல் நிகழ்கின்றன. அவை ஒன்றிற்கொன்று நெருங்கிய தொடர்புடையவை.(பிறகு விரிவாக)

சற்று புரிதலுக்கு

400000 முதல் 300000 ஆண்டுகளுக்கு முன்பு. ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் நியாண்டர்தால் மனிதர்கள்.

150000 ஆண்டுகளுக்கு முன்பு முதல் நவீன மனிதர்கள் (ஹோமோ சேபியன்) 

80000 முதல் 14000 ஆண்டுகளுக்கு முன்பு - நவீன மனிதர்கள் மத்திய கிழக்குக்கு வருகை

13000 ஆண்டுகளுக்கு முன்பு சில 100 பேர் உள்ள குழுக்களாக மனிதர்கள் கிராமங்களில் வசிக்க பருவநிலை அனுமதிக்கிறது மத்திய கற்காலம் (மிஸோ லித்திக் ).
10000 ஆண்டுகளுக்கு முன்பு முதல் விவசாயிப் விவசாய புரட்சி தாவரங்களை விலங்குகளை பழக்கி வசப்படுத்துதல். புதிய கற்காலம் ( நியோ லித்திக்). கிராம வாழ்க்கை பரவுதல் குழுக்களிடையே முதன்முறையாக போர் இப்போதும் அரசு வர்க்கம் என்ற பிரிவினை தோன்றவில்லை.
10000 ஆண்டுகளுக்கு முன்பு முதல் விவசாயிப் விவசாய புரட்சி தாவரங்களை விலங்குகளை பழக்கி வசப்படுத்துதல். புதிய கற்காலம் ( நியோ லித்திக்). கிராம வாழ்க்கை பரவுதல் குழுக்களிடையே முதன்முறையாக போர் இப்போதும் அரசு வர்க்கம் என்ற பிரிவினை தோன்றவில்லை.
7000 ஆண்டுகளுக்கு முன்பு யூரேசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் கலப்பை பயன்படுத்தப் படுகிறது விவசாயம் வடமேற்கு ஐரோப்பா அடைகிறது. சில குழுக்களில் தலைவர் இருக்கிறார் ஆனால் வர்க்கங்களோ அரசுகளோ இல்லை.
6000 முதல் 5000 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய கிழக்கு நைல் நதிக்கரை  சமவெளிகளில் "நகரப் புரட்சி" சிலர் செம்பை பயன்படுத்துகின்றார்கள்.
5000 ஆண்டுகளுக்கு முன்பு (கிமு 3000) 
மெசபடோமியாவிலும் பழைய ராஜியமான எகிப்திலும் அரசுகள் உருவாக்கம். முதல் எழுத்துக்கள் வெண்கலம் கண்டுபிடிப்பு. சமூகம் வர்க்கங்களில் மதம் தொடர்பான படிநிலைகளில் கோவில்களில் தெளிவான பிரிவுகள்.
4500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்பு (கிமு 2500 முதல் 2000 வரை )சிந்து சமவெளி நகர அரசுகள் வளர்தல் மத்திய கிழக்கு ஒன்று படுத்த சர்கோன் முதல் பேரரசை உருவாக்குதல். மேற்கு  ஐரோப்பாவில் எகிப்திற்கு தெற்கே நூபிய நாகரிகம் தோன்றியிருக்கலாம். 
கிமு 3000 பலுக்கிஸ்தானில் வேளாண்மை சமூகம் 
கிமு 2500 -1700 ஆரம்ப நகரமாதல் முதிர்ச்சி அடைந்த நிலை.
கி மு 1600 -1500 பிற்கால ஹரப்பா.
கிமு  1500-500 ஆரியர மேச்சல் குடிகள்  வரவு மற்றும் புதிய கற்கால மற்றும் செம்பு காலக நாகரிகங்கள்(வேத காலம் மரபும்).
7000 ஆண்டுகளுக்கு முன்பு யூரேசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் கலப்பை பயன்படுத்தப் படுகிறது விவசாயம் வடமேற்கு ஐரோப்பா அடைகிறது. சில குழுக்களில் தலைவர் இருக்கிறார் ஆனால் வர்க்கங்களோ அரசுகளோ இல்லை.
4500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்பு (கிமு 2500 முதல் 2000 வரை )சிந்து சமவெளி நகர அரசுகள் வளர்தல் மத்திய கிழக்கு ஒன்று படுத்த சர்கோன் முதல் பேரரசை உருவாக்குதல். மேற்கு  ஐரோப்பாவில் எகிப்திற்கு தெற்கே நூபிய நாகரிகம் தோன்றியிருக்கலாம். 
இந்தியாவில்
சில புரிதலுக்கு

நில உடமை சமூகத்தில் வேளாண்மை வகைப்பட்ட கிராமங்களில் வேளாளர்கள் உடல் உழைப்பாளர்களாகவும்  நிர்வாகிப்பவராகவும் இருந்தனர்.

இந்த கிராம உற்பத்தி முறையில் மூளை உழைப்பாளர்களும் உடல் உழைப்பாளர்களும் ஆகிய இரு பிரிவினர் கொண்டதாக இருந்தது.கிராம நிர்வாகத்தையும் பொருளாதாரத்தையும் ஒழுங்கமைக்க புரோகிதர்களாக இருந்தனர். அதேபோல தொழில் பிரிவினை அடிப்படையில் கைவினைஞர்களும் சேவை பிரிவினரும் இதே நிர்வாக அமைப்பில் கட்டுண்டு கிடக்க வேண்டிய தேவை இருந்தது.அரசியல் அதிகாரம் கையில் இருந்த புரோகிதர்களும், வேளாளர்களும் கைவினைஞர்களின் உழைப்பையும் சேவை பிரிவினர் உழைப்பையும் ஒரு  வகையில் குத்தகை என்ற பெயரில் அபகரிக்க தொடங்கினர்.புரோகிதரும் வேளாளரும் தமக்கான உரிமை பாதுகாப்பது போலவே தொழில் பிரிவினர் தமக்குரிய தொழில் பிரிவின் ரகசியத்தையும் தனக்கான தேவையாக ரகசியமாக காக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.இந்த நேரத்தில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் நிலஉரிமை கொண்ட பிரிவினர் பெண்கள் உற்பத்தியில் இருந்து ஒதுக்கப்பட்டனர். சேவை தொழில் செய்பவரும் கைத்தொழில் செய்வதும் பெண்களை உற்பத்தியில் ஈடுபடுத்தினர் ஆக தங்களின் தொழில் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் தொழில் ரீதியான மேலாண்மையை தங்களுக்குள் நிர்வகித்துக் கொள்வதற்காகவும் இக்குழுவுக்குள்ளே தங்களுக்கான தொழில் வகுப்புகள் அகமண முறையைக் கட்டிக் காத்துக் கொண்டன. 
தொடரும்....













No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்